“தனித் தமிழ்நாடும் தனித் தமிழீழமும் எம் இரு கண்கள்” என்று சூளுரைத்து, வாழ்நாளெல்லாம் தமிழின விடுதலைக்காகவே உழைத்த புலவர் மகிபை பாவிசைக்கோ (74 ) பெங்களூருவில் (13-12-2016) அன்று காலமானார்.

இவர் சிவகங்கை மாவட்டம் ம‌கிபாலன்பட்டியை சேர்ந்தவர். கடந்த 1942-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி 12 வயதிலே தமிழில் பாட்டு இயற்றி திகழ்ந்ததாலும், தமிழின் மீதான காதலினாலும் தன‌து பீர் முகமது என்ற பெயரை பாவிசைக்கோ என மாற்றிக் கொண்டார்.

சிறுவயதிலே ஏராளமான‌ கவிதைகளை இயற்றிய புலவர் மகிபை பாவிசைக்கோ சிறுகதை,திரைக்கதை, நாவல், நாடகம், கட்டுரை, திறனாய்வு என பல்துறைகளிலும் சிறந்து விளங்கினார். கல்லூரி காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தொடங்கி தன் வாழ்நாள் முழுவதும் தமிழ்மொழிக்கான‌ போராட்டங்களிலும், தமிழர் உரிமை போராட்டங்களிலும் பங்கேற்று பலமுறை சிறைக்கு சென்றார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரது ‘தென்மொழி’ஏட்டில் பத்திரிகையாளராக இணைந்தார். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் குடியேறிய இவர் தமிழர்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். தமிழுக்காக‌வே வாழ்ந்து, தமிழருக்காகவே உழைத்து களம் பல கண்டார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக தோள்கொடுத்து நின்று, பெரும் பணிகளை ஆற்றினார். விடுதலை புலிகள் அமைப்புக்காக நாடகங்களை நடத்தி நிதி திரட்டி பிரபாகரனிடம் கொடுத்தார்.

காலந்தோறும் தொடரும் கர்நாடகத் தமிழர்களின் அனைத்து இன்னல்களிலும் புலவரின் பாடல்கள் தெறிக்கும். எழுதுவதோடு நிற்காமல், போராட்ட களங்களிலும் முன்னால் நின்றார்.கடந்த மாதத்துக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு, பெங்களூரு ஜெயதேவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி புலவர் மகிபை பாவிசைக்கோ இன்று காலமானார். இவரது பிரிவால் கர்நாடகாவில் உள்ள தமிழ் அமைப்பினரும், மக்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

புலவர் மகிபை பாவிசைக்கோவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நண்பர்கள் பலர் வரவிருக்கிறார்கள். அதுவரை புலவரின் உடல் பனிப்பேழையில் வைக்கப்பட்டு, அவருடைய பிறந்த நாளான 15.12.2016 அன்று அலசூரையடுத்த இலக்குமிப்புரக் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரத்தின் அடையாலமாக வீரத்தமிழீழத் தாய்நாட்டின் வீரக்கொடியானது புலவர் பாவிசைக்கோ அவரின் பூத உடல்மீது போற்றப்பட்டது.

மேட்டூர் கேளத்தூர், புலியூர் புலிகள் பாசறையில் பயன்படுத்திய வீரக்கொடி.

அண்ணன் தளபதி ரொய் தமிழீழத்தில் காயப்பட்டு சிகிச்சைக்காக தமிழகத்தில் இருந்து வீரமரணம் அடைந்தபோது தளபதி ரொய் மீது தளபதி பொண்ணம்மான் கைகளால் போர்த்தப்பட்டு வீரவணக்கம் செய்யப்பட்ட வீரகொடி.

இப்பொழுது புரட்சி புலவர் மகிபை பாவிசைக்கோ அவர்கள் மீது போர்த்தப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழால்..தமிழருக்காக..காலம் முழுவதும் வாழ்ந்த புலவர் மகிபை பாவிசைக்கோவின் இறப்பு, கர்நாடகத் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு. அவர் கண்ட கனவை, விட்டு சென்ற கடமையை நாம் தொடர்வோம்.

**
தனித்தமிழ் இயக்க முன்னோடி புலவர் மகிபை பாவிசைக்கோ காலமானார்: பிறந்த நாளான இன்று பெங்களூருவில் உடல் அடக்கம்

தனித் தமிழ் இயக்க முன்னோடியும், உலகத் தமிழர்களின் உரிமைக்காக பாடுபட்டவருமான‌ புலவர் மகிபை பாவிசைக்கோ (74) பெங்களூருவில் காலமானார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ம‌கிபாலன்ப‌ட்டியில் கடந்த 1942-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி புலவர் மகிபை பாவிசைக்கோ பிறந்தார். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த இவரது இயற்பெயர் பீர் முகமது. 12 வயதில் தமிழில் புலமை பெற்று பாட்டு இயற்றியதால், தன‌து பெயரை மகிபை பாவிசைக்கோ என மாற்றிக் கொண்டார். சொந்த ஊரில் தொடக்கக் கல்வியை முடித்த இவர், திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை நக்கீரர் கழக திருவள்ளு வர் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார்.

சிறுவயதில் கவிதைகளை எழுதத் தொடங்கிய‌ பாவிசைக்கோ, சிறுகதை, திரைக்கதை, நாவல், நாடகம், கட்டுரை, திறனாய்வு என பல்துறைகளிலும் சிறந்து விளங்கினார். கல்லூரி காலத்தில் இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளார்.

புரட்சிகர சிந்தனையாளர்

தொடக்கத்தில் திராவிட இயக்க கருத்துகளால் ஈர்க்கப்பட்ட இவர், பின்னாளில் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தனித்தமிழ் சிந்தனையில் ஈடுபாடு கொண்டார். அதிகாரத்துக்கு எதிரான புரட்சிகர கருத்துகளை எழுதிய இவர், பெருஞ்சித்திரனாரின் ‘தென்மொழி’ ஏட்டில் பத்திரிகையாளராக பணி யாற்றினார். பின்னர் முஸ்லிம் முரசு, செம்பரிதி, ஒருமைத் தூதன், வஞ்சி மாலை உள்ளிட்ட பத்திரிகைகளில் பொறுப்பாசிரியராகவும் இருந்தார்.

தனித்தமிழ் இயக்க செயல்பாடு களினால் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் குடியேறி னார். அங்கு தமிழ் மொழி பாது காப்பு போராட்டங்களையும், தமிழர் நலப் போராட்டங்களையும் முன் னின்று நடத்தியுள்ளார். தமிழ் தேசிய அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், ஈழப் போரட்டத்துக்காக ‘விடுதலைப் புலிகள்’ நாடகத்தை நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார்.

பெரியார், பெருஞ்சித்திரனார், பாவேந்தர் பாரதி தாசன் உள்ளிட்ட தமிழக ஆளுமைகள் மட்டுமில்லாமல் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் பிரபாகரன், ஆண்டன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருடன் நெருங்கிப் பழகினார். நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தியபோது அவரை மீட்க பெரிதும் உதவினார்.

தன்மான தமிழர் பேரவை, தனித் தமிழ் சேனை உள்ளிட்ட‌ கர்நாடக தமிழ் அமைப்புகளின் நிறுவனத் தலைவராகவும் இயங்கினார்.

பிறந்த நாளில் உடல் அடக்கம்

பாவிசைக்கோவுக்கு ஒரு மாதத் துக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை யில் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்து வதற்காக இவரது உடல் இன்று காலை லிங்கராஜாபுரத்தில் வைக்கப் படுகிறது. பிற்பகல் 2.30 மணியள வில் ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டு அல்சூர் திருவள்ளுவர் சிலை அருகே இறுதி அஞ்சலி செலுத்தப் படுகிறது. அங்கிருந்து லட்சுமிபுரத் தில் உள்ள கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டு தமிழ் முறைப்படி, அவரது பிறந்த நாளில் (இன்று) அடக்கம் செய்யப்பட உள்ளது.

Advertisements