jeyalalitha-appollo-setup-1

ஜெ மறைவு: அசாதாரண வேகத்தில் நடந்த ஆட்சி மாற்றம் எழுப்பும் கேள்விகள்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் ஐந்தாம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் காலமான பிறகு, புதிய முதலமைச்சரின் பதவியேற்பு என்பது மிக விரைவாகவும், அமைதியாகவும் நடந்தேறியதும், ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டத்தில் அவரால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் அவரது சடலத்துக்கு அருகில் நின்றுகொண்டிருந்ததும் தமிழக அரசியல் அரங்கில் பலத்த கேள்விகளையும் சலசலப்புகளையும் உருவாக்கியிருக்கிறது.

டிசம்பர் 4ஆம் தேதியன்றே முதல்வரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அன்று இரவே அப்பலோ மருத்துவமனைக்கு வந்தார் சசிகலாவின் அண்ணன் வி. திவாகரன். இதற்கு அடுத்த நாளான டிசம்பர் 5ஆம் தேதி அப்பலோ மருத்துவமனையிலேயே அமைந்திருக்கும் கூட்ட அரங்கில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. ஆனால், இது குறித்து அக்கட்சியின் சார்பில் எந்தவித அறிக்கையோ, விளக்கமோ அளிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் என்னவிதமான வாக்குறுதிகள் வாங்கப்பட்டன, என்னென்ன அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன என்பவை குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் இல்லாத நிலையில், அன்று மாலை 6 மணியளவில் மீண்டும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடக்குமென தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில்தான் அன்று இரவு 11. 30 மணிக்கு ஜெயலலிதா காலமானதாக நள்ளிரவு 12.20 மணியளவில் அப்பலோ மருத்துவமனை ஒரு அறிக்கை மூலம் அறிவித்தது.

அதுவரை மருத்துவமனையில் இருந்த மூத்த அமைச்சர்களான ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டனர். பிறகு சசிகலாவும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அண்ணா, எம்ஜிஆர் மறைவுக்குப் பின்

அதிகாலை 1. 30 மணியளவில் ஆளுனர் மாளிகையில் நடந்த ஒரு நிகழ்வில் தமிழகத்தின் முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் முழு அமைச்சரவையுடன் பதவியேற்றார்.

இதற்கு முன்பாக, சி.என். அண்ணாதுரை, எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய இரண்டு பேரும் தமிழக முதல்வர்களாகப் பதவியிலிருக்கும்போதே உயிரிழந்திருக்கின்றனர். அந்த இரண்டு தருணங்களிலுமே இடைக்கால முதல்வராக நெடுஞ்செழியன் ஆளுனரால் நியமனம் செய்யப்பட்டார். அண்ணாதுரை பிப்ரவரி 3, 1969ல் உயிரிழந்த நிலையில், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பிப்ரவரி 9ஆம் தேதியன்று, முறைப்படி அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. அதில் மு.கருணாநிதி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

1987 டிசம்பரில் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் காலமான போதும், இடைக்கால முதலமைச்சராக நெடுஞ்செழியனுக்கு ஆளுனர் குரானா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

விவரங்கள் வெளிவராத சட்டமன்ற உறுப்பினர் கூட்டம்

ஆனால், ஜெயலலிதா உயிரிழந்த பிறகு டிசம்பர் ஆறாம் தேதி அதிகாலை 1.50 மணியளவில் ஆளுனர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஓ. பன்னீர்செல்வம் தான் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வுசெய்யப்பட்டிருப்பதாக கடிதம் அளித்ததையேற்று அவருக்கு முதல்வராகப் பதவியேற்பு செய்யவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது, முதல்வர் பதவிக்கு வேறு யாருடைய பெயரும் பரிசீலிக்கப்பட்டதா என்ற விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்ட நடராஜனுடன் பேசிய மோடி

மேலும், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டதும் அவரது உடல் அருகே முந்தைய காலகட்டங்களில் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து ஓரம்கட்டப்பட்ட சசிகலாவின் உறவினர்கள் பலரும் நின்றிருந்தனர்.

சசிகலாவின் கணவரான எம். நடராஜன் அருகிலேயே இருந்தார். பிரதமர் நரேந்திர மோதி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது நடராஜனிடமும் சில வினாடிகள் பேசியது பலருக்கும் ஆச்சரியமளித்தது.

அதேபோல, ஜெயலலிதாவின் உடலுக்குப் பின்பாக சசிகலாவின் அண்ணன் மகனான டிவி மகாதேவன் நின்றுகொண்டிருந்தார்.

இது தவிர, சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி, அவரது பிள்ளைகளான விவேக், பிரியா, சசிகலாவின் அண்ணன் மகன் சுந்தரவதனத்தின் மகள் பிரபா, அவரது கணவர் டாக்டர் சிவகுமார் உள்ளிட்டவர்களையும் பிரதானமாக அங்கே காணமுடிந்தது.

இவர்களில் பலரும் பல்வேறு காலகட்டங்களில் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2011 டிசம்பரில் தனக்கு எதிராக சசிகலாவின் குடும்பத்தினர் சில முயற்சிகளில் ஈடுபடுவதாகக் கருதிய ஜெயலலிதா அவரை தனது போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து வெளியேற்றினார்.

சசிகலாவை கட்சியிலிருந்தும் நீக்கினார் ஜெயலலிதா.

சசிகலா நீக்கம் குறித்து படிக்க: அதிமுகவிலி்ருந்து சசிகலா நீக்கம்

அதற்குப் பிறகு அவரது அண்ணன் திவாகரன் கைதுசெய்யப்பட்டார். வி. மகாதேவனது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. அவரது வீட்டில் சோதனைகளும் நடத்தப்பட்டன.

ஆனால் பின்னர் சசிகலா தனது தனது உறவினர்கள் என்றும் நண்பர்கள் என்றும் கூறிக்கொண்டு, சிலர் ஜெயலலிதாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது மிகப்பெரிய துரோகம் என்றும், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் தனக்குத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தவறு செய்த உறவினர்களின் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வதாக சசிகலா அறிக்கை மூலம் தெரிவித்திருந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு , அவரை அதிமுகவிலிருந்து நீக்கி, ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்வதாகத் தெரிவித்தார்.

சசிகலா நீக்கம் குறித்து படிக்க: சசிகலாவுடன் ஜெயலலிதா சமரசம்

இதற்கு பல வருடங்களுக்கு முன்பாகவே சசிகலாவின் கணவர் நடராஜன் அதிமுகவிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். வழக்குகள் தொடரப்பட்டு, அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் மீதெல்லாம்கூட வழக்குத் தொடரப்பட்டது.

இந்த நிலையில்தான் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் சசிகலாவின் உறவினர்கள் தென்பட்டது கட்சிக்கு உள்ளும் வெளியிலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு, தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிடம் பேசிய சசிகலாவின் நடராஜன், எம்.ஜி.ஆர். இறந்த பிறகு யார் என்பதை முடிவுசெய்யும் இடத்தில் தாங்கள் இருந்ததாகவும் அந்தத் தகுதி ஜெயலலிதாவுக்கு இருக்கிறது என்று கண்டறிந்ததாகவும் குறிப்பிட்டார். எம்.ஜி.ஆரின் கடைசி தொண்டன் இருக்கும் வரை கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அதிமுகவின் சட்டமன்றத் தலைவரான ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் தலைமைப் பதவி குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்காத நிலையில், சசிகலாவின் கணவரான நடராஜன் தெரிவித்த இந்தக் கருத்து பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

அதிமுகவை கட்டுப்பாட்டில் வைக்க பாஜக விரும்புமா ?

ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை, சசிகலா தனியாக எந்த ஒரு நிகழ்விலும் பங்கேற்றதில்லை. ஆனால், மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமிக்கு அஞ்சலி செலுத்த சசிகலா நேரில் வந்தார். ஆனால், இதனை வைத்து மட்டும் சசிகலா கட்சியின் முகமாக மாறுவார் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.

“தற்போதைய சூழலில் கட்சிக்குள் சசிகலாவின் ஆதிக்கத்திற்கு எந்த சவாலும் கிடையாது. தற்போது முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக தன்னை கட்சிக்குள் உறுதிப்படுத்திக்கொள்ள முயல்வாரா என்பது பதில் இல்லாத கேள்வி” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். மணி.

மாநிலங்களவையில் அதிமுகவுக்கு உள்ள 13 இடங்களின் ஆதரவு ஆளும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு எப்போதும் தேவைப்படும். அதனால், அதிமுகவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க மத்தியில் ஆளும் பா.ஜகவும் தொடர்ந்து முயற்சி செய்யும்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் 50 இடங்களை வைத்திருப்பதோடு சட்டமன்றத்தில் 134 இடங்களுடன் ஆட்சியிலும் இருக்கும் அதிமுகவை இப்போதைக்குக் கட்டுப்படுத்துவது யார் என்பது இதுவரை தெளிவாகவில்லை. கட்சியின் பொதுக்குழு, செயற்குழு போன்றவை எப்போது கூடும் என்ற அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு யார் வாரிசு, அதிமுகவை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இதுவரை கிடைக்கவில்லை.

முரளீதரன் காசி விஸ்வநாதன்

***

ஜெயலலிதாவின் மரணத்தில் 15 மர்மங்கள்!

01- மிக நன்றாக இருந்தவர் 2மாதங்களுக்கு முன்பு திடீரென இரவோடு இரவாக மருத்துவமனையில் மர்மமாக அனுமதி.

02- சாதாரண காய்ச்சல் தான் 2 நாட்களில் வீடு திரும்புவார் என தகவல்.

03- தினம், தினம், ஒவ்வொரு நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக மாறி, மாறி அறிவிப்பு.

04- 3மாதம் ஆனபோதும் கூட எவரையும் பார்க்க கடைசிவரை அனுமதிக்கவில்லை.
இது யாருடைய உத்தரவு??

05- 3மாதம், கட்சி , மற்றும் அரசு யாருடைய கட்டுப்பாட்டில் இயங்கியது?

06- அனைத்து ம் சரியாகிவிட்டது சராசரி உணவை சாப்பிட தொடங்கி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டார் 2நாளில் நலமுடன் வீடு திரும்பவுள்ளார் என்று சொன்னீர்களே…??

07- கடைசி வரை சிகிச்சை எடுக்கும் ஒரு புகைப்படம் கூட வெளியிடவில்லையே ஏன்?

08- இறப்பதற்கு முன்பே தமிழகம் முழுவதும் உள்ள எல்லா அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு உடனடியாக ஒன்று கூடி புதிய முதல்வரை தேர்வு செய்தனர்.

09-அமைச்சர்களும் எந்த குழப்பமின்றி இலாகா நியமிக்கப்பட்டு உடனடியாக எப்படி பதவியேற்க முடிந்தது?

10- ரத்த உறவான அவரது அண்ணன் மகளை கூட மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் மிரட்டி வீட்டுக்கு செல்ல சொன்ன காரணம் என்ன?

11- தந்தி டிவி மரணத்தை முன் கூட்டியே அறிவித்ததும், அதை உடனே திரும்பபெற்றதும் யாரால், ஏன்?

12- இறந்து அரை மணி நேரம் கூட ஆகாத இந்த துக்கத்திலும் இவ்வளவு தெளிவாக ஆளுநரை சந்தித்து முதல்வராக பதவியேற்பு நிகழ்சி நடத்தியது எப்படி ?

13- கைது நேரத்தில் பேச முடியாமல் குழுங்கி குழுங்கி அழுது கொண்டே உறுதிமொழியை பாதியிலேயே நிறுத்திவிட்டு பதவியேற்ற நீங்கள் தற்போது சிறப்பாக அழுகையின்றி உறுதி மொழி எடுக்க எவ்வாறு முடிந்தது??

14-காலையில் இருந்து இந்த இரவு் வரையும் கூட மருத்துவமனை முன்பாக பட்டினியாக அழுது உருண்டு கிடப்பதில் பஞ்சபராரி பாமர மக்களை தவிர ஒரு பண முதலை கூட தென்படவில்லையே எப்படி.??

15- இன்னும் கேள்விகள் ஆயிரம் உள்ளது எனது சார்பில் அல்ல..

முதல்வர் மீது மாசில்லா அன்பு கொண்டு வாக்களித்த எம் வெள்ளந்தி பாமர தமிழ்மக்கள சார்பாக.

சொட்டு கண்ணீர் வடிக்க ஆளில்லை அருகில்……

கண்ணீர் வடிப்பவர்களுக்கு இடமில்லை அருகில்……..

ஆதாயமடைந்தவன் எவனும் அழவில்லை…….

அழுபவன் யாரும் ஆதாயமடைந்தவனல்ல….

மீண்டும் வந்துவிடுவார் என்ற பயத்தினால் நேற்றுவரை அழுதார்கள்……

மீண்டு வரமாட்டார் என்ற தைரியத்தில் அழவில்லை ஒருவரும்………

****

“ஜெயலலிதாவிற்கு விசம் கொடுத்தது கொலை செய்தது சசிகலாதன்”! வக்கீல் கிருஷ்ணமூர்த்தி! வீடியோ 

***

தமிழச்சி சொன்னது உண்மை? நாடகமாடியது அப்பலோ! வெளிவரும் ஆதாரங்கள்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2 மாதத்திற்கு முன்னதாக தமிழச்சி தமிழக முதல்வர் ஏறகனவே இறந்துவிட்டதாகவும், அப்பலோ மருத்துவமனை பொய் நாடகமாடுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் தமிழச்சி கூறியது முழுவதும் உண்மையாகியுள்ளது.

தமிழக முதல்வர் இறந்துவிட்டார். ஆனால் இதுவரையில் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார் என உறுதிப்படுத்தும் ஒரு புகைப்படம் கூட வெளிவரவில்லை..

சமீபத்தில் இவர் சிகிச்சை பெறுவதாக சொல்லப்பட்ட புகைப்படங்களும் போலியானது என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது..

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழச்சி , பேஸ்புக்கத்தில் பல பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வந்தார். சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் மரணம் குறித்து இவர் தமிழக போலீசாருக்கு எதிராக பல பரபரப்பான கருத்துகளை கூறி வந்தார்.

அதன்பின், ஜெயலலிதான் உடல் நிலை குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பல காவல் நிலையங்களில், அவர் மீது ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் தமிழச்சி தனது முகநூல் பக்கத்தில் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாட்டுக்குள் பதட்டத்தை ஏற்படுத்தி கலவரத்தை உருவாக்கி ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த வேண்டும்” என்ற மத்திய அரசு திட்டத்திற்கு தமிழர்கள் துணை போக வேண்டாம்.

தமிழக மக்களின் பதட்ட நிலையை தவிர்க்க வேண்டுமானால், ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்த்து ஜெயலலிதாவை நேரடி தொலைக்காட்சியில் காட்ட உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவின் இதயத்துடிப்பு இயந்திரத்தின் செயற்பாட்டை காட்ட வேண்டும்.

கடந்த இரண்டு மாதங்களாக ஜெயலலிதாவை யாரிடமும் காட்டாத மர்மத்தின் நோக்கத்தை குறித்து இனி ஆராயத் தேவையில்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையை தவிர்க்க வேண்டுமானால்…

ஜெயலலிதாவையும் அவருடைய இதயத்துடிப்பு இயந்திரத்தையும் காட்டுவதன் மூலம் “அம்மா உயிரோடுதான் இருக்கிறார்” என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் மத்திய அரசுவின் சூழ்ச்சிக்கு தமிழர்கள் பலியாக நேரிடும்!” என்று தெரிவித்திருந்தார் அவர் கூறியது போலவே ஜெயலிலதா இறந்துவிட்டார்.

மத்திய அரசின் சூழ்ச்சிக்கு துணைப்போன அப்பலோவின் அனைத்து நடவடிக்கைகளும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத்தொடங்கியுள்ளன.

இருப்பினும் தற்போது தமிழக முதல்வர் இறந்துவிட்டதனை கேள்விப்பட்டு கொந்தழிக்கின்ற தமிழகத்தின் நிலையை பார்த்து மீண்டும் அப்பலோ போலியான அறிக்கைகளை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது.

ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால் தமிழச்சி ஜெயித்துவிட்டார் ..ஜெயலிலதா இறந்துவிட்டார்.. இனி தமிழகத்தின் கதி????

அதாவது தமிழக முதல்வர் இறந்துவிட்டதாக வந்த தகவல் பொய் என்று.
அதனை காட்டும் ஆதாரம்..jeyalalitha-appollo-setup-3 jeyalalitha-appollo-setup-2 jeyalalitha-appollo-setup

Advertisements