traitor sritharan mpஇராணுவ புலனாய்வுதுறைக்கும் – சிறிதரனுக்கும் இடையிலான உடன்படிக்கை

ஏழு வருடங்கள் கடந்த நிலையில் விடுதலைப் புலிகள் இல்லாத ஒரு சூழமைவில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இம் முறை மாவீரர் நாள் நிகழ்வுகள் வெளிப்படையாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. அதுவும் இதுவரை காலமும் இராணுவப் பிடியிலிருந்த சில துயிலுமில்லங்கள் அவர்களால் விடுவிக்கப்பட்டு அவை துப்பரவாக்கப்பட்டு அவற்றில் மாவீர்கள் நினைவு கூரப்பட்டுள்ளனர்.

மக்கள் இதுவரை தமது உள்ளத்தில் அடக்கி வைத்திருந்த உணர்வுகளை கிடைத்த வெளியில் உச்சமாக பயன்படுத்தியுள்ளனர் என்றே எண்ணத் தோன்றுகின்றது. மக்கள் பெருந்திரளில் கூடி இவ்வாறு தமது உறவுகளை நினைவுகூர்ந்தமை பல மட்டங்களில் அதிர்வுகளை தோற்றுவிக்கவும் தவறவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அகோர முகம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு பகிரங்கமாக மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கான தயார் நிலையில் இருந்ததாகத் தெரியவில்லை.

நடந்த நிகழ்வுகளை வைத்து நோக்கும்போது இலங்கை புலனாய்வுப் பிரிவினருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நெருங்கிய உறவை/தொடர்பை பேணுகின்றனர் என்ற எண்ணத்தை வலுப்பெறச் செய்வதாகவே தோன்றுகின்றது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோ, பேச்சாளர் சுமந்திரனோ, பிற கட்சித் தலைவர்களோ இந் நிகழ்வுகள் தொடர்பாக எதுவித கருத்துக்களையும் வெளியிடவுமில்லை. எந்தவொரு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுமில்லை. அவைத் தலைவர் சிவஞானம் உட்பட பல பிரமுகர்கள் தத்தமது அலுவலகங்களுடன் நிகழ்வுகளை மட்டுப் படுத்திக் கொண்டனர்.

இந் நிகழ்வுகளின் மூலம் பெரும் பிரபலத்தை பெற்றவராக விளங்குபவர் யாழ் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன். உத்தேச அரசியலமைப்பில் தமிழர்களுக்கான தீர்வுத் திட்டத்திற்கு பங்கம் ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சத்தில் அல்லது பெருந்தன்மையில் ”எழுக தமிழ்” நிகழ்வில் இவர் முகம் காட்டாதிருந்தார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

இம்முறை மாவீரர் நாளை அனுஷ்டிப்பது தொடர்பான தீர்மானத்தை வடமாகாண சபையில் சபை உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தவிசாளர் சீ.வீ.கே. சிவஞானம் முன்னதாக புறந்தள்ளியிருந்தார். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை வீடுகளிலும் ஆலயங்களிலும் அமைதியான முறையில் இறந்தவர்களை நினைவு கூருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இவற்றிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு எவ்வாறு இருந்தது என்பது புலனாகின்றது. இதில் மாகாணசபை உறுப்பனர்கள் சிவாஜிலிங்கம் மற்றும் ரவிகரனின் பங்கு கவனத்திற்கப்பாற்பட்டது. ஏனெனில் இருவரும் வழமையாகவே ஒவ்வொரு வருடமும் மாவீரர் தினத்தை அனுஷ்டித்து வருபவர்கள்.

‘எழுக தமிழ்’ நிகழ்வின் பின்னரான சூழமைவு

‘எழுக தமிழ்’ நிகழ்வின் தொடர் நிகழ்வுகளானவை சிறீலங்கா புலனாய்வுப் பிரிவின் நிகழ்ச்சி நிரலில்மாற்றங்கள் நிகழ்ந்துள்ளமையை புலப்படுத்துகின்றது.

புரட்டாதி 24 இல் நிகழ்ந்த ‘எழுக தமிழ்’ நிகழ்வை தொடர்ந்து 26 இல் தியாகி திலீபனின் 29 ஆவது ஆண்டு நிகழ்வு வெளிப்படையாக அவரது சமாதி இருந்த இடத்தில் நினைவு கூர்வது கண்டும் காணாமல் விடப்பட்டது. இதனை ஏற்பாடு செய்தவர்கள் “ஜனநாயகப் போராளிகள்” கட்சியினர். பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், மாவை சேனாதிராஜா போன்றோர் பங்பெடுத்திருந்தனர்.

மேற்படி திலீபனது நினைவு நாளுக்கும் மாவீரர் நாளுக்குமிடையில் இரு மாத இடைவெளி இருந்தது. இவ் இடைவெளி கொடிகாமம், கோப்பாய், தேராவில், வல்வெட்டித்துறை மாவீரர் துயிலுமில்லங்களிலுள்ள இராணுவத்தை அகற்றி அவற்றை விடுவித்து துப்பரவு செய்து திட்டமிட்ட வகையில் சிறப்பான முறையில் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கு ஏற்ற ஒழுங்குகளை செய்வதற்கு போதிய கால அவகாசத்தை கொண்டிருந்தது.

கிளிநொச்சியில் திடீரென தோன்றிய ‘போலித் தேசியத் தலைவர்?’

ஆனால் கிளிநொச்சியில் தேசியத் தலைவர் போல தோற்றம் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இதில் அக்கறை கொள்ளவில்லை என்பதை விட இராணுவப் புலனாய்வுப் பிரிவின் நிகழ்ச்சி நிரலில் அவ் விடயம் இல்லை என்றே தோன்றுகின்றது.

இப்பிரிவின் நிகழ்ச்சித் திட்டத்தின் படி தமிழ் மக்களுக்கென ஓரளவுக்காவது உண்மையான, நேர்மையான தீர்வை கோரும் தரப்பு பலவீனப்படுத்தப்பட வேண்டும். தமது எண்ணங்களிற்கு செயல்வடிவம் கொடுப்பவரின் பலத்தை உறுதி செய்தாக வேண்டும். இதனால் போலித் தேசியத் தலைவர் ஒருவர் அப்பிரிவால் உருவாக்கம் செய்யப்படுகின்றார்.

அப்பாவி மக்கள் எப்போதுமே ஏமாந்து விடுவர் என சிறீலங்கா புலனாய்வுப் பிரிவு பலமாக நம்புகிறது போலும். 2008 வரை தேசியத் தலைவர் மாவீரர் நாள் உரைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்டு தொகுத்து தனது உரையாக பாராளுமன்றில் நிகழ்த்திய உரையின் காட்சி கனகபுரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் ஏற்பாட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 2008 வரை இவ்வாறு ஒரே நேரத்தில் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களது மாவீரர் நாள் உரை அகலத் திரைகளில் சகல மாவீரர் துயிலுமில்லங்களிலும் காண்பிக்கப்படுவது வழக்கம்.

பொது மக்களது மனநிலை!

மாவீரர் நாளுக்கு இரண்டு தினங்களே இருந்த நிலையில் துப்பரவுப் பணிக்காக மக்கள் திடீரென அழைக்கப்பட்ட போது திரண்டு சென்று அந்த உன்னத பணியில் அவர்கள் ஈடுபட்டனர். உண்மையில் இதனை ஏற்பாடு செய்தவர்களிற்கு கூட அதிர்ச்சியாக இருந்திருக்கலாம்.

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவோ அல்லது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அழைத்திருந்தால் கூட மக்கள் இதே போல திரண்டு சென்றிருப்பர். ஏனெனில் தமது பிள்ளைகளை இழந்த துயரத்தை வெளிப்படுத்த ஓர் இடைவெளி அவர்களிற்கு தேவையாகவுள்ளது. எதிர்பார்க்கப்பட்டது போல மாவீரர் தினத்தன்றும் மக்கள் திரண்டு சென்று தமது உள்ளக் கிடக்கைகளை வெளிப்படுத்தினர்.

மக்கள் எதனை மையப்படுத்தி கூட்டமைப்பை ஆதிரிக்கிறார்கள் என்பதையும் மக்களது ஆழ்மனதில் என்ன உள்ளது என்பதையும் இந் நிகழ்வுகள் மூலம் தெளிவாக அவதானிக்க முடிந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக மக்களது உணர்வுகளை பயன்படுத்துபவர்களது நிலைப்பாடுகள் வேறுவிதமாகவே அமைந்துள்ளது. வெறும் தேர்தல் வெற்றிகளுக்கான வியுகங்களாகவே இவை காணப்படுகின்றன. சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த நிலையாகவே மக்களது நிலை காணப்படுகின்றது

2009 இற்கு பின்னரான மாவீரர் தினங்கள்!

மாவீர் துயிலுமில்லங்கள் வன்வளைப்புகளுக்குள்ளாக்கப்பட்ட பின் 2009 முதல் அவர்களது தியாகங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ச்சியாகவும் உணர்வு ரீதியிலும் மாவீரர் தினங்களை பல்வேறு அடக்கு முறைகளிற்கு முகம் கொடுத்தபடி அனுஷ்டித்து வருகின்றனர். மாவீரர்களது பெற்றோரும் அமைதியான முறையில் தமது இல்லங்களில் தத்தமது செல்வங்களை நினைவுகூருவது வழக்கமாகவுள்ளது. என்றுமில்லாதவாறு இம் முறை பொதுவெளியில் துயிலுமில்லங்களில் மாவீரர்களை நினைவுகூர முடிந்தமை ஒருவகையில் உறவினர்களுக்கு ஆறுதலளிக்கக் கூடிய விடயமே.

மாவீரர்களும் தாயகமும்!

மாவீரர்கள் மரணிக்கும் போது தமது தாயகக் கோட்பாட்டை இறுகப்பற்றியபடியே மரணித்தனர் என்பதை எவரும் மறுக்க முடியாது. ”புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற கோசத்துடன் அவர்கள் மரணிக்கும் பல ஒளிநாடாக்களை இன்றும் காணலாம்.

ஆனால் தாயக நிலம் முழுமையான வன்வளைப்புக்குள்ளாகியுள்ள சூழமைவில் அதை மீட்பதற்கு எந்தவோர் எத்தனமும் மேற்கொள்ளாது நடாத்தப்படும் இது போன்ற நிகழ்வுகள் ஒரு சிலரின் அரசியல் தேவைகளுக்கும் அதன் மூலமான தனிப்பட்ட நலன்களுக்கும் உதவக் கூடும்.

ஆனால் தேசிய விடுதலையை முழு மூச்சாக வரித்து உயிர் துறந்த மாவீரர்களுக்கோ ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கோ ஒரு போதும் பயன் தரப் போவதில்லை. என்றைக்கு தமிழர் தேசம் முழுமையாக விடுதலையடைகின்றதோ அதன் பின்னரான மாவீர் தினமே மாவீரர்களுக்கான உண்மையான திருநாளாக அமையும்.

நன்றி: செவ்வேள்mp sritharan traitor tnpf sritharan-mp-traitor sritharan mp sritharan-mp-fraud

Advertisements