sritharan-mp-traitorகடந்த வாரம் சிறிதரன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை கனகபுரம் மாவீரர் துயிலிமில்லத்திலும் ஒலிபரப்புச் செய்திருந்தார். அவ் உரையானது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 1990 இலிருந்து 2007 இல் ஆற்றிய உரைகளில் இருந்து பிரதியெடுத்தது என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்படுகிறது.
தேசியத் தலைவரின் உரைகளும் சிறிதரன் செய்த மாற்றங்களும் (?) கீழே தரப்படுகிறது.

“எமது இனத்தின் இருப்பிற்காக, தமது இன்னுயிரை ஈகம் செய்த உன்னதமானவர்களை, எமது நெஞ்சத்தின் நினைவாலயத்தில் நாம் நினைவு கூரும் நன்நாள்.” ( தலைவர் 2002)
தமிழ் இனத்தின் இருப்பிற்காக, தமது இன்னுயிரை ஈகம் செய்த உன்னதமானவர்களை, தமது நெஞ்சத்தின் நினைவாலயத்தில் தமிழர்கள் நினைவு கூரும் நாள். (சிறியர் 2016)
“தமிழீழ தேசம் சுதந்திர தாகம் கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். எமது மண்ணின் விடிவிற்காகவும் எமது மக்களின் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகஞ்செய்த எம்மினிய வீரர்களை எமது இதயக் கோவில்களில் நாம் நெஞ்சுருகிப் பூசிக்கும் திருநாள்.” (தலைவர் 2003)

“தமிழர்நிலம் சுதந்திர தாகம் கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். தமிழர் மண்ணின் விடிவிற்காகவும் தமிழர் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகஞ்செய்த எம்மினிய வீரர்களை தமிழர்தம் இதயக் கோவில்களில் தம் நெஞ்சுருகிப் பூசிக்கும் திருநாள்.” (சிறியர் 2016)

“தமது உன்னதமான உயிருக்கும் மேலாக, தமது தேசத்தின் விடுதலையை அதியுன்னதமானதாக நேசித்து, அந்த உயரிய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிக்கொண்ட எமது மாவீரர்களை நாம் போற்றி வணங்கும் நன்னாள்.”

(தலைவர் 2004) சிறியர் 2016 ஈயடிச்சான் “தமிழீழ தேசம் சுதந்திர தாகம் கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். எமது மண்ணின் விடிவிற்காகவும் எமது மக்களின் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகஞ்செய்த எம்மினிய வீரர்களை எமது இதயக் கோவில்களில் நாம் நெஞ்சுருகிப் பூசிக்கும் திருநாள்.”
(தலைவர் 2003)

“தமிழர் நிலம் சுதந்திர தாகம் கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். தமிழர் மண்ணின் விடிவிற்காகவும் தமிழர் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகஞ்செய்த எம்மினிய வீரர்களை தமிழர் தம் இதயக் கோவில்களில் தம் நெஞ்சுருகிப் பூசிக்கும் திருநாள்.” (சிறியர் 2016)

“ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள்.” (தலைவர் 2012)
சிறியர் 2016 ஈயடிச்சான்

“இந்த உலகத்தைத் துறந்து, இளமையின் இனிமையான உணர்வுகளைத் துறந்து, சாதாரண வாழ்வின் சகலவற்றையும் துறந்து, எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்.” ( தலைவர் 2006)

“இந்த உலகத்தைத் துறந்து, இளமையின் இனிமையான உணர்வுகளைத் துறந்து, சாதாரண வாழ்வின் சகலவற்றையும் துறந்து தமிழ் மக்களுக்காகவும் அவர்களின் உயிர்வாழ்விற்காகவும் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு தமிழர்கள் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்தும் நாள்.” ( சிறியர் 2016)

“சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள்.” (தலைவர் 2005)

“சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய உத்தமர்களை தமிழர்கள் நினைவு கூரும் புனித நாள்.” (சிறியர் 2016)
“விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.” (தலைவர் 2002)

“விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது வீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.” (சிறியர் 2016)

“எமது மாவீரர்களின் வீரஞ்செறிந்த போராட்ட வாழ்வையும் அவர்களது ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் இத் திருநாளில்” (தலைவர் 2004)

“எமது மாவீரர்களின் வீரஞ்செறிந்த போராட்ட வாழ்வையும் அவர்களது ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் இத் திருநாள் தமிழர்களின் வரலாற்றில் புனித நாள்” (சிறியர் 2016)

“நீங்காத நினைவுகளாக எம்மோடு ஒன்றிக் கலந்துவிட்ட உணர்வுகளாக, காலத்தால் சாகாது என்றும் எம்முள் உயிர்வாழும் இம் மாவீரர்களை இன்று கௌரவிப்பதில் தமிழீழ தேசம் பெருமை கொள்கிறது. மாவீரர் நினைவாக ஈகச்சுடரை ஏற்றும்பொழுது அந்த எரியும் சுடரில் அந்தத் தீ நாக்குகளின் அபூர்வ நடனத்தில், அந்த அற்புதமான படிமத்தில், நான் ஒரு தரிசனத்தைக் காண்கிறேன்.

அக்கினியாக பிரகாசித்தபடி ஆயிரமாயிரம் மனித தீபங்கள், நெருப்பு நதிபோல ஒளிகாட்டி, வழிகாட்டிச்செல்லும் ஒரு அதிசயக்காட்சி திடீரென மனத்திரையில் தோன்றி மறையும். (தலைவர் 2000)

“நீங்காத நினைவுகளாக எம்மோடு ஒன்றிக் கலந்துவிட்ட உணர்வுகளாக, காலத்தால் சாகாது என்றும் எம்முள் உயிர்வாழும் இம் மாவீரர்களை இன்று கௌரவிப்பதில் தமிழர் தாயகம் பெருமை கொள்கிறது. மாவீரர் நினைவாக ஈகச்சுடரை ஏற்றும்பொழுது அந்த எரியும் சுடரில் அந்தத் தீ நாக்குகளின் அபூர்வ நடனத்தில், அந்த அற்புதமான படிமத்தில், தமிழர்கள் தங்களுக்காக ஈகம் புரிந்த பிள்ளைகளின் தரிசனத்தைக் காண்கின்றார்கள்.

அக்கினியாக பிரகாசித்தபடி ஆயிரமாயிரம் மனித தீபங்கள், நெருப்பு நதிபோல ஒளிகாட்டி, வழிகாட்டிச்செல்லும் ஒரு அதிசயக்காட்சி ஒவ்வொரு தமிழர் மனத்திரையிலும் திடீரென தோன்றி மறையும். (சிறியர் 2016)

“மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள். சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.” (தலைவர் 1997)

“மாவீரர்களைப் புனிதர்களாகவே தமிழர்கள் கௌரவிக்கிறார்கள். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள். சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணித்தவர்கள். இதனை ஒரு புனிதமான துறவறமாகவே தமிழர்கள் கருதுகிறார்கள். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை தமிழர்கள் புனிதர்களாகவே பூசிக்கிறார்கள்.” (சிறியர் 2016)

“எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது. இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள்: சுதந்திரச் சிற்பிகள்: எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்ல. அவன் ஒரு இலட்சியவாதி. ஒரு உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன், தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன். மற்றவர்களின் விடிவுக்கக, விமோசனத்திற்காக வாழ்பவன். சுய நலமற்ற, பற்றற்ற அவனது வாழ்க்கை உன்னதமானது, அர்த்தமானது, சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறன். எனவே, விடுதலைவீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள். அசாதாரணமான பிறவிகள்.

ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வு அல்ல. அந்தச் சாவு, ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்வகளைப் பற்றிக்கொள்கிறது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிவிடுகிறது.” (1990 மாவீரர் தின உரை) –traitor sritharan mp

“தமிழர்களின் வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, தமிழர் போராட்டத்தின் உயிர்மூச்சாக தமிழர்களின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது. இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள்: சுதந்திரச் சிற்பிகள்: எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள். ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்ல. அவன் ஒரு இலட்சியவாதி. ஒரு உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன், தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன். மற்றவர்களின் விடிவுக்கக, விமோசனத்திற்காக வாழ்பவன். சுய நலமற்ற, பற்றற்ற அவனது வாழ்க்கை உன்னதமானது, அர்த்தமானது, சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறன். எனவே, விடுதலைவீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள். அசாதாரணமான பிறவிகள்.

ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வு அல்ல. அந்தச் சாவு, ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்வகளைப் பற்றிக்கொள்கிறது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிவிடுகிறது.” (சிறியர் 2016)

-கலையழகன் கரிகாலன்

Advertisements