karuna-traitor

முன்னாள் பிரதியமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பயன்படுத்திய வாகனம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக கருணா இன்று அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.karuna-1

மேலும், கைது செய்யப்பட்டுள்ள கருணா இன்று பிற்பகல் வேளையில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கருணா அதிலிருந்து விலகி, மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து கொண்டார்.

மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலததில் அவருக்கு பிரதியமைச்சர், மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் போன்ற முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதுkaruna traitors

விநாயகமூர்த்தி முரளிதரனை டிசம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று நிதி மோசடி விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்டபோது இவர் கைது செய்யப்பட்டார்.

விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் 800 மில்லியன் ரூபா பெறுமதியான அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு இவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.

விநாயகமூர்த்தி முரளிதரன் குறித்த அரச வாகனத்தை மீள அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

**
கருணா குழுவுடன் இணைந்து பல கொலைகளைச் செய்துள்ளேன்? நேரடிச் சாட்சி!

கருணா குழு­வி­ன­ருடன் இணைந்து கிழக்கு மாகா­ணத்தில் பல கொலை­களை தான் செய்­த­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் கொலை வழக்கின் அரச சாட்­சி­யான முன்னாள் பொலிஸ் கான்ஸ்­டபிள் பிரித்­தி­விராஜ் மனம்­பேரி நேற்று கொழும்பு மேல் நீதி­மன்றில் தெரி­வித்தார்.

ரவிராஜ் கொலை வழக்கின் இரண்­டா­வது பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ர­ணி­யான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அசித் சிறி­வர்­த­னவின் குறுக்கு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே குறித்த சாட்­சி­யளர் மேற்­படி சாட்­சி­யத்தைப் பதிவு செய்தார். இந்த விட­யத்தை சாட்­சி­யாளர் வெளி­பப்­டுத்­திய போது மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரிய கடும் எதிர்ப்­பினை முன்­வைத்­ததால் மன்றில் சிறிது நேரம் வாதப் பிர­தி­வா­தங்கள் நீடித்­தன.

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் மற்றும் அவ­ரது மெய்­பா­து­கா­வ­ல­ராக இருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் லக்ஷ்மன் ஆகி­யோரை படு­கொலை செய்த விவ­காரம் தொடர்­பி­லான சாட்சி விசா­ர­ணைகள் நேற்று கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி மணி லால் வைத்­திய தில­கவின் நேரடி கண்­கா­ணிப்பில் சிறப்பு ஜூரிகள் முன்­னி­லையில் ஆரம்­ப­மா­னது. முத­லா­வது சாட்­சி­யா­ள­ரான அரச சாட்­சி­யாக மாற்­றப்­பட்ட பொலிஸ் கான்ஸ்­டபிள் பிரித்­தி­விராஜ் மனம்­பேரி முத­லா­வது சாட்­சி­யாக நேற்றும் சாட்­சி­ய­ம­ளிக்க ஆரம்­பித்தார்.

பிர­தி­வாதி சட்­டத்­த­ர­ணி­க­ளான அசித் சிறி­வர்­தன மற்றும் அனோஜ பிரே­ம­ரத்­னவின் குறுக்குக் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்­த­வாறு அவர் அளித்த சாட்­சியம் வரு­மாறு :

அசித்: 2005 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியின் கிழகில் பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் கீழ் சேவை­யாற்­றிய காலப்­ப­கு­தியில் கருணா குழு­வுடன் இணைந்து நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டீரா?

பதில்: ஆம்

அசித்: அந் நட­வ­டிக்­கைகள் எவ்­வா­றா­னது என விளக்­க­மு­டி­யுமா?

பதில்: அர­சாங்­கத்தின் நிர்­வா­கத்­துக்கு உட்­பட்ட, உட்­ப­டாத பகு­தி­களில் புலிகள் அமைப்­புக்கு எதி­ராக கருணா குழு­வி­ன­ருடன் இணைந்து தாக்­கு­தல்­களை நடத்­து­வது. அவர்­களை கொலை செய்­வது.

அசித்: நீர் கூறு­வது அனைத்தும் உண்மை என்­பது தானே உம்­மு­டைய நிலைப்­பாடு?

பதில்: ஆம்

அசித்: இவ்­வ­ழக்கின் குற்றம் மற்றும் சதி தொடர்பில் நீர் கூறி­வதும் அப்­ப­டி­யானால் உண்மை தானா?

பதில்: ஆம்

அசித்: உம்மை பொறுத்­த­வரை இரு நிலைப்­பா­டுகள் உள்­ளன. ஒன்று, ரவிராஜ் கொலையை வெளியே கூறா­மைக்கு உயிர் அச்­சு­றுத்தல் காரணம். மற்­றை­யது, கொல்­லப்­பட்­டது ரவிராஜ் தான் என்­பதை நீர் வானொலி ஊடா­கவே அறிந்­துள்ளீர். அப்­ப­டித்­தானே?

பதில்: ஆம்

அசித்: நீர் பொய் சாட்சி கூறு­கின்றீர் என நான் பரிந்­து­ரைக்­கின்ரேன்.

பதில்: அதனை நான் நிரா­க­ரிக்­கின்றேன்.

அசித: ரவி­ராஜை கொல்லப் போகும் திட்டம் உமக்கு ஏற்­க­னவே தெரியும் தானே?

பதில்: இல்லை.

அசித்: கடந்த 2015.2.26 அன்று நீர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு வழக்­கிய வாக்கு மூலம், அதா­வது நீர் உண்­மை­களை மட்­டுமே கூறி­ய­தாக கூறும் வாக்கு மூலத்­துக்கு அமைய ரவி­ராஜை சாமி கொலை செய்ய தீட்­டிய திட்டம் உமக்கு தெரிந்­துள்­ளது. அது தொடர்பில் நீர் வாக்கு மூலம் அளித்­துள்ளீர். ?

(இதன் போது எழுந்த சிரேஷ்ட சொலி­சிட்டர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரிய அக்­கேள்­விக்கு எதிர்ப்பு தெரி­வித்தார். வாக்கு மூலத்தை மன்றில் வாசித்து காட்­டு­வ­தற்கும் இடம்­கொ­டுக்கக் கூடாது என்றார்)

அசித் : ரவி ராஜ் கொலை இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் நீர் பொலிஸ் சேவையில் இருந்­தீரா?

பதில்: ஆம்

அசித்: அப்­ப­டி­யானால் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரின் பொறுப்­புக்கள் உமக்கும் இருந்­தது?

பதில்: ஆம்

அசித்: அப்­ப­டி­யானால் நீர் சாட்­சியம் அளிக்கும் போது கூறினீர், ரவி ராஜ் கொலையின் முக்­கிய பிர­தி­வா­தி­க­ளான சாமி சரண் ஆகியோர் கொழும்பில் அதி உயர் பாது­காப்பு வல­யத்தில் தங்­கி­யி­ருந்­த­தாக. அப்­ப­டி­யானால் அது தொடர்பில் நீர் உமது உயர் அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்­தீரா?

பதில்: இல்லை.

அசித்: ரவிராஜ் கொலைக்கு அவர்கள் தயா­ரா­னமை நீர் அறிந்­தி­ருந்தீர். அப்­படி இருந்தும் ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரை கொலை செய்யப் போவதை ஏன் நீர் அறி­விக்­க­வில்லை.?

பதில்: என்­னிடம் புலி இயக்க முக்­கி­யஸ்தர் ஒரு­வரை கொல்லப் போவ­தா­கவே கூறினர்.

அசித்:இல்லை. நீர் ரவி­ராஜை கொல்லப் போகும் திட்­டத்தை முன் கூட்­டியே அறிந்­தி­ருந்தீர். ஆகவே தான் பொலி­சா­ருக்கு வழங்­கிய வாக்கு மூலத்தில் சாமி தன்­னிடம் கூறி­ய­தாக அந்த விட­யத்தை கூறி­யுள்ளீர்?

பதில்: ஞாபகம் இல்லை.

அசித்: சரி, ரவிராஜ் கொலைக்கு முன்னர் உளவு பார்த்­த­தாக ஏதும் தக­வல்­களை சாமி கூரி­னாரா?

பதில்: ஆம், ரவி­ராஜின் வீட்டுப் பகு­தியில் சோதனை நட­வ­டிக்கை ஒன்­றினை சாமி, சரண், டூசேன், பிரசாத், வஜிர,சென­வி­ரத்ன ஆகியோர் இணைந்து முன்­னெ­டுத்­த­தாக கூறினார்.

( இதன் போதும் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் தமது எதிர்ப்பை முன்­வைத்­த­தை­ய­டுத்து, நீதி­பதி மணி லால் வைத்­திய திலக, அந்த சோதனை நட­வ­டிக்­கையில் சாட்­சி­யாளர் நேர­டி­யாக பங்­கேற்­ராரா என கேள்­வியை தொடுத்தார். அதற்கு சாட்­சி­யாளர் இல்லை என பதி­ல­ளித்­தை­ய­டுத்து அது தொடர்பில் கேள்வி கேட்க அனு­ம­தி­ய­ளிக்க மறுத்தார்.)

அசித்: உமக்கு பிறகு சாட்­சி­ய­ளிக்­க­வுள்ள 2 ஆவது சாட்­சி­யா­ளரை தெரி­யுமா?

பதில்: ஆம்

அசித்: மூன்­றா­வது சாட்­சி­யா­ளரை தெரி­யுமா?

பதில்: ஆம்

அசித்: 2006.11.09 ஆம் திகதி நீரும், ஏனைய இரு சாட்­சி­யா­ளர்­களும் சேர்ந்து தொழில் நுட்ப கல்­லூரி சந்­தியில் ரவி­ராஜை கொலை செய்ய முயன்ற போது அவ்­வி­டத்தில் மோட்டர் சைக்­கிளில் இருந்தீர் தானே?

பதில்: இல்லை. அதனை மறுக்­கின்ரேன்.

அசித்: ரவிராஜ் கொலைக்கு முன்­ன­ரேயே, கொலை செய்­யப்­பட்ட தினம் நீர் செலுத்­திய மோட்டர் சைக்கிள் உமக்கு தரப்­பட்­டது.

பதில்: இல்லை

கேள்வி: தலை கவசம் கூட ஒரு வாரத்­துக்கு முன்பே உம்­மிடம் கொடுக்­கப்­பட்­டது என நான் யோசனை செய்­கின்றேன்.

பதில்: அதனை நிரா­க­ரிக்­கின்றேன்.

அசித்: நீர் கருணா குழு­வுடன் இணைந்து செய்த குற்­றத்தை மறைக்க பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக பொய் சாட்சி கூறு­கின்றீர் என் நான் பிரே­ரிக்­கின்றேன்.

பதில்: நிரா­க­ரிக்­கின்றேன்.

அசித்: ரவி­ராஜின் கொலை இடம்­பெற்ற தினம் சாமி உம்மை எங்கு வரச் சொன்னார்?

பதில்: பொரளை கனத்தை அருகே

அசித்: கனத்தை என்­பது மிக விசா­ல­மான பகுதி. அதன் முன்­பாக ஒரு சுற்று வட்டம் உள்­ளது. அந்த சுற்­று­வட்டம் ஊடாக 5 பாதைகள் பிரிந்து செல்­கின்­ரன?

பதில்: ஆம்

அசித்: அப்­ப­டி­யாயின், கனத்தை அருகே வரு­மாறு சாமி கூறி­யதும் நீர் எப்­படி சரி­யாக, மாதா வீதிக்கு மிக அருகில் போய் நின்றீர்? ஏற்­க­னவே உமக்கு பாதை அறி­விக்­கப்­ப­டாமல், சதி தெரி­யாமல் இருப்பின் எப்­படி அது சாத்­தி­ய­மாகும்?

பதில்: இல்லை. சாமி வரச் சொன்­ன­தா­லேயே அங்கு சென்றேன்.

அசித்: அங்கு சாமி, சரண் வந்­த­னரா?

பதில்: ஆம். கறுப்பு முச்­சக்­கர வண்­டியில் சாமி சரண், டூசேன் ஆகியோர் வந்­தனர்.

அசித்: வேறு யார் வந்­தனர்?

பதில்: பச்சை மற்றும் கிறீம் நிர முச்­சக்­கர வண்­டி­க­ளில்­பி­ர­தி­வா­திகள் வந்­தனர். கிறீம் நிற முச்­சக்­கர வண்­டியில் கடற்­ப­டையைக் குறிக்கும் எழுத்­துடன் கூடிய இலக்­கத்­த­கடு காணப்­பட்­டது.

அசித்: அந்த முச்­சக்­கர வண்­டி­களில் வந்தோர் யார்?

பதில்: ஞாபகம் இல்லை

அசித்: ஞாபகம் இல்லை என்­பது பொய். கறுப்பு முச்­சக்­கர வண்டி மட்­டுமே வந்­தது. அதில் கருணா குழு­வினர் வந்­துள்­ளனர்.?

பதில்: இல்லை மறுக்­கின்றேன்.

அசித்: சாமி, சரண், டூசேன் ஆகியோர் இந்த வழக்கில் தற்­போது இல்­லா­ததால் நீர் தப்­பித்­துக்­கொள்­வ­தற்­காக இவ்­வாறு பொய்­யான சாட்­சியம் அளிக்­கின்ரீர்?

பதில்: இல்லை. அதனை மறுக்­கின்ரேன்.

அசித்: மட்­டக்­க­ளப்பில் கருணா குழு­வினர் பல கொலை­களை செய்­துள்­ளனர்?

பதில்: ஆம்

அசித்: கருணா குழு­வி­ன­ருடன் இணைந்து நீரும் பல கொலை­களை செய்­துள்ளீர்?

பதில்: ஆம்

(இதன் போது அந்த கேள்­விக்கு பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் கடும் எதிர்ப்பை வெளி­யிட்டார். புலிகள் இயக்­கத்­தி­ன­ரையே கொலை செய்­த­தா­கவும் பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ர­ணியின் கேள்வி தவ­றா­னது என வாதிட்டார். இதன் போது ஏனைய பிர­தி­வா­தி­களின் சட்­டத்­த­ர­ணி­க­ளான ரசிக பால­சூ­ரிய மற்றும் அனோஜ பிரே­ம­ரத்ன ஆகி­யோரும் எழுந்து அசித் சிறி­வர்­த­ன­வுடன் சேர்ந்து தொடர் வாதங்­களை முன்­வைத்­தனர். பிரதி சொலி­சிர்ரர் ஜெனரல் தேவை­யில்­லாமல் குருக்­கீடு செய்­வ­தா­கவும் கேள்வி சரி­யா­னதே எனவும் பதிலும் கிடைத்­து­விட்­ட­தாக அவர்கள் கூறினர். வாதப் பிர­தி­வாதம் முற்­றிய நிலையில் பொது­வாக கொலை­களை செய்­தீரா என எப்­படி வினவ முடியும் என பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் பிர­தி­வா­தி­களின் சட்­டத்­த­ர­ணி­க­ளிடம் கேட்டார். இதன் போது சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அனோஜ பிரே­ம­ரத்ன, கடத்­தப்­பட்ட சீனி முத­லாளி, மேலும் பல தன்மிழ் அப்­பா­விகள் யார் என கேள்வி எழுப்­பினார். அதற்குள் தலை­யிட்ட நீதி­பதி மணி லால் வைத்­திய திலக வாதத்தை நிறை­வுக்கு கொண்­டு­வந்து சமா­தா­னப்­ப­டுத்­தினார்.

இத­னை­ய­டுத்து மூன்­றா­வது பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ர­ணி­யான அனோஜ பிரே­ம­ரத்ன சாட்­சி­யா­ள­ரான பிரித்தி விராஜ் மனம்­பே­ரியை குறுக்கு விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தினார்.

அனோஜ: சாமியின் அறி­வு­றுத்தல் படி போகும் போது யாரையோ ஒரு மனி­தரை கொல்லப் போவதை நீர் அறிந்­தி­ருந்­தீரா?

பதில்: புலிகள் இயக்க உறுப்­பினர்.. என இழுக்கும் போதே

அனோஜ: புலிகள் இயக்­கமோ, ஐ.எஸ். அமைப்போ, போகோ ஹராமோ ஏதோ ஒரு அமைப்பை சேர்ந்த ஒரு மனி­தனை கொல்லப் போவதை அறிந்­தி­ருந்­தீரா?

பதில்: ஆம்.

அனோஜ: நீர் இவ்­வ­ழக்கில் மன்­னிப்பு பெற விதிக்­கப்­பட்ட நிபந்­த­னையைத் தானே தற்­போது இப்­படி சாட்சி சொல்­வது. இதனைப் பெற சட்ட மா அதி­ப­ருக்கு நீர் நன்றி தெரி­வித்­தீர்­தானே?

( இக்­கேள்­வியின் போது பிரதி சொலி­சிர்ரர் ஜெனரல் மீள தமது எதிர்ப்பைத் தெரி­வித்தார்.)

அனோஜ: அர­சுக்கு பக்கச் சார்­பாக சாட்­சி­ய­ளிப்­ப­தாக கூரினீர் தானே? அது தானே நிபந்­தனை?

பதில்: ஆம்

( கனம் நீதி­ப­தி­ய­வர்­களே, அரசின் சார்­பாக சாட்­சியம் அளிப்­ப­தாக அவர் கூற­வில்லை. அர­சாங்­கத்­துக்கு பக்கச் சார்­பாக வாக்கு மூலம் அளிப்­ப­தா­கவே அவர் நிபந்­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.)

அனோஜ: உமக்கு நிபந்­தனை பிணை கடந்த 2015.10.05 அன்று கிடைத்­தது?

பதில்: ஆம்

அனோஜ: கஞ்சா தூள் 160 கிலோ விற்­பனை செய்த வழக்கில் குற்­றத்தை ஒப்புக் கொண்­டது அதன் பின்னர் தானே?

பதில்: ஆம்

அனோஜ: குறித்த வழக்கில் இரு சாட்­சிகள் விசா­ரிக்­கப்­பட்ட பின்­ன­ரேயே நீர் குற்­றத்தை ஒப்புக் கொண்டீர். அதன் பின்­ன­ரேயே உமக்கு தண்­டமும் 10 வருட ஒத்தி வைக்­கப்­பட்ட தண்­ட­னையும் வழங்­கப்­பட்­டது. இதன் போது சட்ட மா அதிபர் சார்­பிலும் உமக்கு குரைந்த பட்ச தண்­ட­னையே கோரப்­பட்­டது. இவை­ய­னைத்தும் இவ்­வ­ழக்கில் அரச சாட்­சி­யாக சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்­கான நிபந்­த­னை­யல்­லவா?

பதில்: இல்லை.

( இதன் போது பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ரொஹந்த கடும் ஆட்­சே­பனை வெளிட்டார்.)

அனோஜ: நீர் கிழக்கில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹனின் கீழ் எப்­போது கட­மை­யாற்­றினீர்?

பதில்: எனக்கு ஞாப­கத்தில் உள்­ளதன் படி 2005 ஜன­வரி முதல் டிசம்­ப­ருக்கு உட்­பட்ட காலப்­ப­கு­தியில்

அனோஜ: 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிர­பல சீனி வர்த்­தகர் நட­ராஜா ஸ்ரீ ஸ்கந்­த­ரா­ஜவை கடத்­தி­யமை தொடர்பில் நீர் 2008 ஆம் ஆண்டு கைது செய்­யப்­பட்­டாரா?

பதில்: ஆம்

அனோஜ: சட்ட மா அதிபர் அது தொடர்பில் குற்றம் சாட்­டி­யுள்ளார் தானே?

பதில்: ஆம்

( இதன் போது அது குறித்து வேறு ஒரு வழக்கு இடம்­பெ­று­வதால் அவ்­வ­ழக்­குக்கு சாட்­சி­யா­ளரின் சாட்சியாளரின் பதில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அதில் அவர் ஒரு பிரதிவாதி என்பதல் அவருக்கு பாதக நிலைமை ஏர்படலாம் எனவும் சுட்டிக்கடடப்பட்டது. அதனால் அக்கேள்விகள் தவிர்க்கப்படல் வேண்டும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரலினால் கோரப்பட்டது. எனினும் சிரேஷ்ட சட்டத்தரணி அனோஜ பிரேமரத்ன, சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் தமக்கு அக்கேள்விகளை தொடுக்க முடியும் என்பதையும், அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதையும் எடுத்துக்காட்டி குறுக்கு விசாரணைகளை தொடர்ந்தார்)

இந் நிலையில் நேற்றைய தினம் மாலை 4 மணியளவில் வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்த நீதிபதி மணி லால் வைத்திய திலக இன்று காலை10.30 க்கு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். அதுவரை பிரதிவாதிகளை கொழும்பு விளக்கமறியல் சிறையிலும் முதலாவது சாட்சியாளரை மெகசீன் சிறையிலும் விஷேட பாதுகப்புக்கு மத்தியில் தடுத்து வைக்க நீதிபதி உத்தர்விட்டார்.

நன்றி : வீரகேசரி