Search

Eelamaravar

Eelamaravar

Month

February 2016

இந்த ஆட்சியை குழப்ப வேண்டாம் என மேற்குலம் இந்தியாவும் கோருகிறது: கஜேந்திரகுமார்

usa hopper-diplomacyஇந்த ஆட்சியை நாம் விரும்பியே கொண்டு வந்துள்ளோம். இதனை குழப்ப வேண்டாம் என மேற்குலகமும், இந்தியாவும் எங்களிடம் கோருகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தல் கூட்டத்தில் வவுனியாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு தீர்வுத் திட்டத்தை நாம் பெற்றுக் கொண்டாலும் கூட அது எந்தளவிற்கு நின்று பிடிக்கும் என்ற கேள்வி இருக்கிறது. ஒரு தலைப்பட்சமாக சிங்கள இனம் இதை மீறவெளிக்கிட்டால் என்ன செய்வது. ஏனெனில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அரசாங்கம் மீறும் போது அதனை கண்காணித்து ஆதரவு வழங்கிய சர்வதேச சமூகம் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது போல இங்கும் வருமா என்ற கேளவியும் இங்குஎழுப்பப்பட்டது.

குறிப்பாக அரசியலை எப்படி பார்க்க வேண்டும் என்றால் பலத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும்.samantha power

விசேடமாக இன்று இருக்கின்ற அரசியல் நிலமைகள் குறிப்பாக சர்வதேச அரசியலை எடுத்து பார்த்தால் ஆட்சி மாற்றம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி ஏற்ப்பட்ட பின்னர் மேற்கு தூதரகங்கள், இந்தியா போன்ற நாடுகள் எங்களிடம் கேட்பது இந்த ஆட்சியை குழப்ப வேண்டாம்.

அராங்கத்திற்கு அதிக நெருக்கடியை கொடுக்க வேண்டாம். எனென்றால் இருந்த ஆட்சி மிகவும் மோசமான ஆட்சி. ஆனால் தற்போது வந்துள்ள ஆட்சி மேற்குலகமும், இந்தியாவும் விரும்பிய ஆட்சி. அதனால் தயவு செய்து குழப்ப வேண்டாம் என கேட்கிறார்கள்.

ஆனால், குழப்புவது எமது நோக்கமல்ல. எமது நோக்கம் மஹிந்தா ராஜபக்ஸவை மீண்டும் கொண்டு வருவதல்ல. எங்களுக்கும் சில தேவைகள் இருக்கின்றது. அந்த தேவைகளை சர்வதேச சமூகம் எமது நியாயமான விடயங்களை விளங்கிக் கொண்டு ஒரு தீர்வைப் பெற்றுத் தாருங்கள். நாங்கள் சில விட்டுக் கொடுப்புக்களை செய்துள்ளோம்.

உங்கள் நாடுகளில் உள்ள சமஸ்டி முறையையே நாம் கோருகின்றோம். நாங்கள் உலகத்தில் இல்லாத ஒரு ஆட்சியை கேட்கவில்லை. ஆகவே இங்கு உண்மையில் பிரச்சனைரயாக இருப்பது சிங்கள தேசியவாதம். இந்த நியாயமான பிரச்சனைகளை புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்காக நாம் ஒன்றுபட்டு அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் மற்றும் ஜனநாயக ரீதியாக குரல் கொடுக்க வேண்டும். தமிழ் மக்கள் ஒன்றுபட்டு இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பு காட்ட வெளிக்கிட்டால் அது உங்களுக்கு ஒரு இடைஞ்சலாக இருக்கும்.

சிங்கள மக்களை அது குழப்பும். அவர்கள் மத்தியில் குழப்பம் வந்தால் மீண்டும் அரசியல் மாற்றம் வரலாம். ஆகவே, இதை எல்லாவற்றையும் சரியாக விளங்கிக் கொண்டு உங்களுடைய அரசாங்கமாக நீங்கள் கூறும் இந்த அரசாங்கத்திற்குள் உங்களுக்கு உள்ள செல்வாக்குகளை பயன்படுத்தி எமது நியாயமான கோரிக்கை தீர்த்து தாருங்கள் என்றே சர்வதேசத்திடம் கோருக்கின்றோம். அதற்கான ஒரு மக்கள் இயக்கமாகவே இந்த தமிழ்
மக்கள் பேரவை கட்டியெழுப்பப்படும் எனவும் தெரிவித்தார்.​

செங்கை ஆழியான்! தமிழிலக்கியத்தின் அழிக்க முடியாத அடையாளம்!

இலங்கையின் கல்வித்துறையிலும் இலக்கியப் பரப்பிலும் பாரியதொரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ளார் செங்கை ஆழியான்.

kunarasaஈழத்து இலக்கியத்துறை பற்றி ஆராய்கின்ற போது அங்கு செங்கை ஆழியானை புறந்தள்ளி வைத்து விட முடியாது. ஈழத்து இலக்கியம் எழுச்சி பெறத் தொடங்கிய காலப் பகுதியிலிருந்து இன்று வரை அத்துறையில் மிகப்பெரும் வகிபாகத்தைக் கொண்டிருந்தவர் அவர்.

இலங்கையின் தமிழிலக்கியம் எனக் கூறுகின்ற போது தமிழ் நாட்டு இலக்கியப் படைப்புகளே இங்கு முழுமையான ஆதிக்கம் செலுத்திய காலப் பகுதியொன்று இருந்தது.

இந்திய தமிழிலக்கியப் படைப்புகளின் ஆதிக்கத்துக்கு முன்பாக சிறுகதைகளையும் நாவல்களையும் படைத்து ஈழத்து தமிழிலக்கியத்துக்கு முகவரியைத் தேடித் தந்தோரில் செங்கை ஆழியானும் குறிப்பிடத்தக்க ஒருவர்.

தமிழக இலக்கியப் படைப்புகளில் மேட்டுக்குட்டி மக்களே கதாநாயகர்கள் என்றிருந்த நிலைமையை ஜெயகாந்தன் போன்றோர் மாற்றியமைத்ததைப் போன்று, ஈழத்துத் தமிழிலக்கியத்திலும் நலிவடைந்த மக்கள் கூட்டத்தினரை கதாநாயகர்களாகத் தவழ விட்டு புதுமை படைத்தவராக செங்கை ஆழியான் விளங்குகிறார்.

இலத்திரனியல் ஊடகங்கள் தாக்கம் செலுத்துவதற்கு முற்பட்ட காலப்பகுதியில் சிறுகதை, நாவல், கட்டுரை என்றெல்லாம் ஏராளமாகப் படைத்ததன் விளைவாக ஈழத்து இலக்கிய நெஞ்சங்கள் மத்தியில் செங்கை ஆழியானுக்கென்று தனியான ஒரு இடமுண்டு.

அரசாங்க உயரதிகாரியாக அவர் பணியாற்றிய பிரதேசங்களின் மண் வாசனையை அவரது படைப்புகளில் தாராளமாக சுவாசிக்க முடியும். அவர் சந்தித்த சமுதாயத்தின் நலிவுற்ற வர்க்கத்தினரையே தனது படைப்புக்களில் கதாபாத்திரங்களாக தவழ விட்டார்.

சமூகப் பிரக்சை கொண்ட ஒரு படைப்பாளியால் மாத்திரமே இவ்வாறான இலக்கிய சிருஷ்டிகள் எப்போதும் சாத்தியமானவை. சமுதாயத்தில் எமது பார்வைக்குத் தென்படாத அம்சங்களையெல்லாம் தனது படைப்புக்களால் வெளிக்கொண்டு வந்ததன் காரணமாகவே ஈழத்து இலக்கியத்துறையில் செங்கை ஆழியான் என்றும் யுகபுருஷராகப் போற்றப்படுகிறார்.

கல்விப் புலத்தில் அவர் ஆற்றியுள்ள பங்களிப்புகளும் எண்ணிலடங்காதவையாகும். மாணவர்களுக்குப் பெரும் பயன் தருகின்ற புவியியல் பாடநூல்களை அவர் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்துள்ளார். பொது உளச்சார்பு, வரலாறு தொடர்பான நூல்களையும் செங்கை ஆழியான் எழுதியுள்ளார்.

நிருவாக சேவை அதிகாரியாகவும், இலக்கியப் படைப்பாளியாகவும் பணிபுரிகின்ற காலப்பகுதியில் கல்வித்துறை சார்ந்த நூல்களையும் அவர் வெளியிட்டு வந்தமை உண்மையிலேயே பெரும் சாதனைதான். செங்கை ஆழியானின் நூல்களால் பயன் பெற்ற மாணவர் கூட்டத்தை எண்ணிக் கணக்கிட முடியாது.

செங்கை ஆழியான் பல்வேறு, பதவிகளை அலங்கரித்து வந்துள்ளார். பல்கலைக்கழகப் பதிவாளராக, உதவி அரசாங்க அதிபராக, மாநகர சபை ஆணையாளராக, பல்கலைக்கழக விரிவுரையாளராக, ஆசிரியராக அவர் பல்வேறு பதவிகளை வகித்த போதிலும், இலக்கியத்துறையிலிருந்து ஒருபோதுமே விலகியதில்லை.

படைப்பாளி ஒருவனின் உண்மையான இலக்கியப் பற்றுதல் இதுதான். அதேசமயம் தனது கடமை மீது மிகுந்த கரிசனை கொண்டவராகவும் எளிமையானவராகவும் அவர் விளங்கினார். எண்ணிக்கையில் அடங்காத அன்பு நெஞ்சங்களை தன்வசம் ஈர்த்துக் கொண்டதற்கான காரணமும் இதுதான்.

மூன்று தசாப்தகால யுத்த காலத்தின் போது இலக்கியப் பணிபுரிவதிலும் பல்வேறு தடைகளும் நெருக்கடிகளும் அச்சுறுத்தல்களும் வடக்கு, கிழக்குப் பிரதேசத்தில் எதிர்கொள்ளப்பட்டன. அன்றைய வேளையில் மக்களின் வாழ்வியல் நிலைகளை எழுத்துரு வடிவில் கொண்டு வருவதில் இருபுறத்திலும் அச்சுறுத்தல்கள் இருந்தன.

ஊடகவியலாளர்கள் மாத்திரமன்றி இலக்கியவாதிகளும் கூட வடக்கு, கிழக்கு மண்ணில் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே பணிபுரிந்த காலப்பகுதியை மறந்து விட முடியாது. அவ்வேளையில் இலக்கியவாதிகளும் வரம்புக்குள் நின்றபடியே படைப்பிலக்கியப் பணி புரிய வேண்டிருந்தது.

எனினும் செங்கை ஆழியானின் பேனா என்றுமே ஓய்ந்தது கிடையாது. எதிரும்புதிருமாக இரு புறத்தாலும் அச்சுறுத்தல்கள் எதிர்நோக்கப்பட்ட போதிலும் அவர் எழுதிக் கொண்டேயிருந்தார்.

அதேசமயம் யுத்த காலப் பகுதியில் தனது மண்ணிலிருந்து எங்குமே புலம்பெயர்ந்து விடாமல் யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ச்சியாகப் பணியாற்றி வந்த கர்மவீரராகவே அவரைப் பார்க்க வேண்டியுள்ளது.

தனது உயிரினும் மேலாக மண்ணையும் இலக்கியத்தையும் நேசித்த மனித நேயன் ஒருவன், எம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டான்.

தமிழுலகம் எத்தனையோ அறிஞர்களையும் கலைஞர்களையும் சந்தித்து வந்திருக்கிறது. எனினும் அத்தனை பேருமே எம் உள்ளங்களில் தடம் பதித்துச் சென்றதில்லை. சொற்பமானோரே எம்மத்தியில் தமது அடையாளங்களை விட்டுச் செல்கின்றனர்.

அவ்வாறானோரில் ஒருவரே செங்கை ஆழியான். அன்னாரின் இழப்பு உள்ளத்தில் உண்மையான வலியை ஏற்படுத்துகிறது.

பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்

ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியான் என்று அழைக்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா இன்று காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தனது 75 ஆவது வயதில் அவர் இயற்கை எய்தினார்.

1941 ஜனவரி 25ஆம் நாள் யாழ்ப்பாணம்- வண்ணார்பண்ணையில் பிறந்த க.குணராசா, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று நிர்வாக சேவை அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

செங்கை ஆழியான் என்ற புனைபெயரில் ஏராளமான படைப்புகளை எழுதியதன் மூலம் இவர், ஈழத்து வாசகர்கள் மட்டுமன்றி, உலகெங்கும் தமிழர்களால் அறியப்பட்டவர்.

சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்களை மட்டுமன்றி, வரலாறு, புவியியல் நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

நந்திக்கடல், சித்திரா பௌர்ணமி, ஆச்சி பயணம் போகிறாள், முற்றத்து ஒற்றைப் பனை, வாடைக்காற்று, காட்டாறு, இரவின் முடிவு, ஜன்ம பூமி, கந்தவேள் கோட்டம், கடற்கோட்டை, கிடுகு வேலி போன்ற நாவல்களை இவர் வெளியிட்டுள்ளார்.

பூதத்தீவுப் புதிர்கள், ஆறுகால்மடம் ஆகிய சிறுவர் புதினங்களையும், ஈழத்துச் சிறுகதை வரலாறு என்ற ஆய்வு நூலையும் செங்கை ஆழியான் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாண அரச பரம்பரை, நல்லை நகர் நூல், மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம், களம்பல கண்ட யாழ் கோட்டை உள்ளிட்ட பல வரலாற்று நூல்களையும், இவர் எழுதி வெளியிட்டார்.

இவர் எழுதிய சிறுகதைகள். மல்லிகைச் சிறுகதைகள் – 1, மல்லிகைச் சிறுகதைகள் – 2, சுதந்திரன் சிறுகதைகள், மறுமலர்ச்சிச் சிறுகதைகள், ஈழகேசரிச் சிறுகதைகள், முனியப்பதாசன் கதைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகள் போன்ற சிறுகதைத் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.

கடற்புலிகள் வரலாறு -காணொளி

sea tigers logo

மேத்யூலீக்காக குரல் கொடுப்பார்களா?

mathew leeஐ.நாவின் ஊழல்களையும், குறிப்பாக தமிழீழப்படுகொலையில் பங்குபெற்றதைக் குறித்தும் அம்பலப்படுத்திக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர் மேத்யூலீ ஐ.நாவில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

இவர் பணியாற்றிய இன்னர்-சிட்டி பிரஸ் பத்திரிக்கை ஐ,நாவின் நடவெடிக்கைகளைக் குறித்து விமர்சனப்பூர்வமாகவும், அதன் நம்பகமற்றத் தன்மைகொண்டவர்களையும் அம்பலப்படுத்திக்கொண்டிருந்தது.

ஐ.நாவின் பத்திரிக்கையாளர் குழுவின் தலைவருக்கு இலங்கையின் அதிகாரி பலிதகொஹன்னா லஞ்சமாக வாடகை என்கிற பெயரில் பணம் கொடுத்தது முதல், ஈழப்படுகொலையில் ஐ.நா இழைத்த குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை மூடி மறைக்க முயன்ற தருணத்தில், அந்த அறிக்கையின் மிக முக்கிய பக்கங்களை எடுத்து அம்பலப்படுத்தினார்.

இலங்கையைப் பற்றி தொடர்ந்து குரல் எழுப்பியவர் இவர். ஐ.நாவிற்கு சங்கடமேற்படுத்தும் வகையில் இவரது கேள்விகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது.

சேனல்4 காணொளியை ஐ.நாவில் திரையிட ஐ.நா அதிகாரிகள் அனுமதிக்கவில்லை , மாறாக, இலங்கை சேனல்4ற்கு எதிராக எடுத்த பொய் காணொளி திரையிடப்பட்டதை கண்டித்தும் இவர் கேள்வி எழுப்பியவர்…

விஜய்நம்பியாரின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தியதில் இருந்து , கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை மறைத்த தகவல் வரை ஐ.நாவின் செயல்பாடுகளை உலகிற்கு கொண்டுவந்த அச்சமற்ற ’போராளி’ பத்திரிக்கையாளர்.

பான் -கி-மூனிற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்புகள் என பல்வேறு விவரங்களை உலகிற்கு அம்பலப்படுத்தி தமிழர்களுக்கு பெரும் துணையாக இருந்த மாத்யூலீக்கு தமிழர்கள் எவ்வகையான ஆதரவை வழங்கப் போகிறார்கள் ? குறைந்த பட்சம் ஐ.நாவிற்கு எதிர்ப்பினை பதிவு செய்வார்களா?..

விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டுகிறோம், விமர்சனம் செய்கிறோம் என்று இலக்கிய-படைப்பாளி-அறிவுசீவிகள் முதல் பலர் களம் இறங்கிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் ‘இலங்கையின் குற்றங்கள்’ , ‘சர்வதேசத்தின் குற்றப்பங்களிப்புகள்’ ஆகியவற்றை சமரசமின்றி உலகிற்கு அம்பலப்படுத்தும் இதுபோன்ற போராளிகளே தமிழினத்திற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கு தேவையானவர்கள்.

இவரது குரல் நசுக்கப்படுவதற்கு எதிராக தமிழகத்தின் அறிவுசீவிகள் , படைப்பாளிகள், இலக்கியவாதிகள் குரல் கொடுப்பார்களா?…

கருத்துச் சுதந்திரமற்றவர்கள் என்று புலிகளுக்கு எதிராக பக்கம் பக்கமாக எழுதிய கனவானகள் , ஐ.நாவின் இந்த அயோக்கியத்தனத்திற்கு எதிராகவும் பேசுவார்களா?

ஈழம் என்று பேசினால் தங்களது தரம் தாழ்ந்துவிடும் என்று நகர்ந்து செல்லும் பல்வேறு அறிவிசீவிகள் மேத்யூலீ ஆச்சரியமானவராகவே தோன்றுகின்றார்.

என்.ஜி.ஓக்களின் தாயகமாக விளங்கும் ஐ.நாவினை எதிர்த்து குரல் கொடுக்க மறுக்கும் தமிழகத்தின் அறிவுசீவிகளின் பின்னனியில் இயங்குவதும் என்.ஜி.ஓக்கள் என்பதை புரிந்து கொள்வது கடினமன்று.

மேத்யூலீக்காக குரல் கொடுப்பார்களா? இல்லையா என்று இவர்களது நேர்மையை அறிந்துகொள்ள முயல்வோம்.

UN DPI stands exposed after summarily expelling ICP’s Matthew Lee

UNOUN DPI stands exposed after summarily expelling ICP’s Matthew Lee [Tamilnet]

UN Department of Public Information (UN-DPI) last Friday summarily expelled, without due process, UN accredited journalist Matthew Russell Lee, who is well known for his independent and critical coverage on matters related to the injustices committed by the UN officials in New York since 2005. Mr Lee has been continuously questioning the UN officials whenever they were attempting to conceal the demand for independent international investigations on Tamil genocide under the carpet. The ICP journalist was behind bringing out leaked UN documents during the times of the war exposing the casualty figures. After May 2009, he was systematically exposing the tip of the iceberg findings of UN shielding the genocidal SL State through his sharp observation of the workings from within the UN premises itself as an independent journalist. Full story >>

Latest Reports:
Feb 28 19:04   Photo   Three Tamil political prisoners on hunger strike a..
Feb 27 21:31   Photo   Uprooted Tamils in Jaffna to launch occupy movemen..
Feb 26 23:40   Photo   UN DPI stands exposed after summarily expelling IC..
Feb 25 21:33   Photo   Colombo continues with ‘Sinhala-only’ circulars, T..
Feb 24 23:30   Photo   Maithiripala deploys ‘Mahaweli’, monks, military t..
Feb 23 21:53   Photo   What is left of the Left sans the Tamil national q..
Feb 22 16:52   Photo   17 political detainees go on hunger-strike in two ..
Feb 22 02:04   Photo   UN officials aid, abet rape of Tamil women by SL m..
Feb 21 23:18   Photo   Veteran drama artist Maamanithar S.T. Arasu passes..
Feb 20 23:01   Photo   Tamil solidarity with Kurds to go beyond IS-US par..
Feb 19 22:39   Photo   Political prisoner detained without charges for 7 ..
Feb 18 21:19   Photo   Genocidal military rapists harass Tamil female tea..
Feb 17 22:55   Photo   Colombo accelerates demographic genocide along bor..
Feb 16 23:43   Photo   Colombo silently consolidates military positions f..
Feb 15 23:49   Photo   Sinhalese from South grab temple lands of Eezham T..


American Presidential Election And Sri Lanka’s International Investigation – Dr. S. I. Keethaponcalan

All Republican Party candidates would be sympathetic toward states that have to deal with terrorist threat and would probably understand human rights violations of state parties. Also, all Republican Party candidates, in terms of foreign policy, are excessively Middle-East oriented. Therefore, a Republican president in the Oval Office in January, would pay very little…

[Eurasia Review ] more …


Sri Lanka northern province CM asks for Indian help for a federal solution

Mr. Wignewswaran said he believed that India would intervene again in Sri Lanka as they had come to the assistance of the Tamils in politically sensitive situations in the past. India might ‘intervene’ again in Sri Lanka to help the Tamil minority and provide a federal solution to the ethnic reconciliation problem, a media report quoted the country’s Northern…

[PTI ] more …


Sri Lanka’s Victims Demand And Deserve Credible Justice

The regime has changed, but the system remains the same; how can we expect justice from them?,” asked a Tamil nun who survived the brutal conflict between the Sri Lankan Government and the Tamil Tigers in Vavuniya district in Sri Lanka’s Northern Province. Her sentiments echo a growing sense of skepticism shared by many in the country’s north and east in the…

[Sunday Leader]- more …

துரைரட்ணம் என்னும் ஒரு அசிங்கத்தை அம்பலப்படுத்துவது !

R Thurai fb comment 2 சாதித் திமிராளர்களின் கடைந்தெடுத்த ஆயுதம்: “சாதியைச் சாடல்!” – என்.சரவணன்

சாதியச் சாடல் என்பது எங்கெங்கும் மலிந்து விரவிக்கிடக்கிறது. தோழர் ரவிக்குமாரின் மீது இரா. துரைரட்ணம் நிகழ்த்தியுள்ள சாதிய வசவைக் கண்டிப்பது நம்மெல்லோருடைய கடமை. இத்தகைய சாதிய வசவுகளை பயன்படுத்துவோருக்கான பாடமாக இது இருக்கவேண்டும்.

ஏற்கெனவே எனக்கும் இத்தகைய வசவு நிகழ்ந்தபோது பலர் அதனைக் கண்டுகொள்ளவில்லை. என் போன்றவர்களை பாதுகாப்பதை விட அத்தகைய வசவாலர்களைப் பாதுகாப்பது வசதியாக பலர் கருதினார்கள். ஓடி ஒளிந்தார்கள். இப்படி தனிமைப்படுத்தலுக்கு ஆளாவது நம் போன்ற தலித்துகளுக்கு புதியதல்ல. பழகிவிட்டது. ஆனால் அந்த சூழலையும் எனது தனிமையையும் மறக்க இயலாது.

இன்று தோழர் ரவிக்குமாருக்கு நிகழ்ந்திருக்கிறது. இப்படி ஆயிரம் ஆயிரம் பேருக்கு பொதுத்தளங்களில் தினசரி நிகழ்கிறது. தோழர் ரவிக்குமார் போன்றோர் பிரமுகர்களாக இருப்பதால் உடனடியாக கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது வெறும் ரவிக்குமார் சம்பந்தப்பட்ட விடயம் இல்லையென்பதாலும், ரவிக்குமாரோடு நின்றுவிடப்போவதில்லை என்பதாலும் நாம் இது விடயத்தில் நமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிடுவது முக்கியமானது.

ரவிக்குமார் முகநூலில் பதிவு செய்திருந்த “இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம்” என்கிற பதிவொன்றிற்கு கீழ் நடந்த உரையாடலில் பின்னூட்டமிட்ட துரைரட்னம் “பற நாயே” என்று மோசமாக சாதியத்தை கக்கியிருக்கிறார்.

ஒருவரையோ அல்லது ஒரு சமூகக் குழுவையோ சொல்லால் அதி கூடியபட்சம் புண்படுத்த வேண்டுமென்றால் உச்ச ஆயுதமாக சாதிய வசவு இருக்கிறது. இன்று அது மேலும் மேலோங்கி வளர்ந்துமிருக்கிறது. அப்படிப்பட்ட வசவுகளில் பெண்ணுருப்பயையும், தாயையும் சாடி புண்படுத்தும் வசவுகள் தூசனங்களாக ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளன. அதற்கடுத்தபடியாக பெரும் பாத்திரம் வகிப்பது சாதிய அடையாள வசவுகள் தான். எப்படி நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள பெண்ணாதிக்க சொல்லாடல்கள் ஆணாதிக்கத்துக்கான கருவிகளில் ஒன்றாக இருக்கிறதோ அது போல தான் சாதியாதிக்கத்தின் நிலைப்புக்கும் சாதிய வசவுகள் ஒரு முக்கியமான காரணியாக இருக்கின்றது.

தமது வெறுப்பையும், சகிப்பின்மையையும், ஆத்திரத்தையும், எதிர்ப்பையும் வெளிக்காட்ட இந்த சாதியச் சாடல் இன்று ஊன்றி நிலைபெற்றிருக்கிறது. ஒருவரை, அல்லது ஒரு குழுவை/குழுமத்தை உணர்வு ரீதியில் கீழிறக்கி அகமகிழ வேண்டுமென்றால் இன்று இதோ சாதி இருக்கிறது.

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த சாதிய சாடலுக்கு ஆளாபவர் சம்பந்தப்பட்ட சாதியாகவோ ஏன், ஒடுக்கப்பட்ட சாதியாகவோ கூட இருக்கவேண்டியதில்லை. யாராகவும் இருக்கலாம். ஆக எந்த ஒருவரையும் இலகுவாக உச்சபட்சமாக உணர்வுரீதியில் தாக்குதலை நிகழ்த்த வேண்டுமென்றால் அது சாதிய வசவால் தான் முடியும் என்று உயர்சாதி மனம் சொல்கிறது. இதிலும் உள்ள வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே சாதிய அவமானங்களுக்கும், சாதிய சாடலுக்கும் ஆளாகிய சாதியினர் கூட இன்னொரு ஒடுக்கப்பட்ட சாதியின் மீது அதே அளவான வசவை நிகழ்த்துவது தான்.

மேல்சாதி ஆண்மனம் என்பது மேலதிகமாக பெண்பாலுறுப்பை, அல்லது பெண் பாலுறவை சாடுகின்ற தூஷணத்தையும் இந்த சாதிய சாடலுடன் கோர்த்து சொல்லும் போது அதற்கு மேலதிக பலம் கிடைப்பதாக நம்புகிறது. அதையே நிறைவேற்றியும்விடுகிறது.R Thurai fb comment

“கீழ்சாதி வெறுப்பு” கட்டமைக்கப்பட்டதென்பது வெறும் தற்செயல் நிகழ்வல்ல. சாதி இருப்புக்கு அது தேவைப்படுகிறது. உயர்சாதி கட்டுக்கோப்புக்கும், அது புனைந்துள்ள அகமண உறுதிக்கும் அது அத்தியாவசியமானது. அடுத்த தலைமுறையின் சாதிமீறளுக்கு எல்லைபோட இந்த புனைவு மிக அவசியமானது. கூடவே… ஒன்று கீழானது என்று சொல்வதற்கூடாக இன்னொன்று (நம்மது) மேலானது என்று நம்பிக்கையூட்டவேண்டும். “அவங்கள் நல்ல ஆக்கள் இல்ல…” என்கிற உரையாடலை நானே கூட எத்தனையோ சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறேன். இந்த போக்கை பலமூட்டவேண்டும் என்றால் அதனை திரும்ப திரும்ப செய்தும் திரும்பத் திரும்ப செய்தும், புனைந்தும் நிலைநாட்ட வேண்டும். கீழ்சாதி, இழிசாதி, எளியசாதி, குறைந்தசாதி, இழிசனர் என்று தான் சமூகத்தில் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்சமூகத்தில் மனைவி கூட “பெண்சாதி” தான். யாழ்ப்பாண பேச்சு வழக்கில் சாதாரண பொருட்களின் தர நிர்ணயம் கூட சாதியாகத் தான் பார்க்கப்படுகிறது. “உது என்ன சாதி” என்பதை புழக்கத்தில் இருப்பதை நாம் கண்டிருக்கிறோம்.

உயர்சாதிகளையும், அது கட்டமைத்துள்ள கருத்தாக்கங்களையும், அது சமூகத்தில் திணித்திருக்கிற புனைவுகளையும், ஐதீகங்களையும், மீண்டும் மீண்டும் திரும்பக்கூரலுக்கூடாக எற்படுத்திவிடிருக்கிற கற்பிதங்களையும் இனங்கண்டுகொள்வது அவசியமாகிறது. இந்த புனிதங்களை உடைத்தல் (De-canonization) என்கிற அரசியல் செயற்பாட்டில் ஒரு அங்கமாக ஒடுக்கப்படும் சாதியினர் மீதான வசவுகளையும், இழிவு செய்யும் போக்கையும் களையும் ஒரு பணியும் நம்முன் உள்ளது.

சாதிமறுப்பு, சாதியெதிர்ப்பு, சாதியுடைப்பு ஆகிய செயற்பாட்டின் முன்நிபந்தனையாக இரண்டு காரியங்கள் நம்முன் உள்ளன. ஒன்று ஒன்று இந்த கட்டமைப்பை கட்டவிழ்ப்பது மற்றது கட்டுவது. அதாவது நமக்கான விடுதலை கருத்தமைவை கட்டுவது. இந்த கருத்துடைப்பதும், கருத்தமைப்பதும் வெவ்வேறாகவோ, ஒன்றன்பின் ஒன்றாகவோ பயனிக்கவேண்டியவை அல்ல. இணைந்தே மேற்கொள்வது, தலித் விடுதலைக்கு வழிவகுக்கும்.tamilarasu kadchi mavai

எனவே சாதியாக அனைத்தையும் நிர்ணயிக்கும் போக்குக்கு சமூகம் பழக்கப்படுத்தப்பட்டிருப்பதும் வெறும் தற்செயல் அல்ல. நிறுவனமயப்பட்ட சாதியமைப்பின் உறுதிக்கு எப்போதும் இது அவசியப்பட்டுகொண்டேயிருக்கும். சாதியத்தின் நவீன வடிவம் நேரடி தீண்டாமையில் தங்கியிருக்கவில்லை. நவீன சாதியம் இந்த சாதி வசவுகள், சாதியச் சாடல்கள், அகமணமுறை, சாதியப் பெருமிதம் போன்ற வடிவங்களில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது தோழர்களே.

இதில் உள்ள மிக அவலகரமான நிலை என்னவென்றால் சமூக மாற்றத்துக்காக பணிபுரியும், முற்போக்கு பேசும் பலரும் கூட இந்த சாதிய வசவுகளை தெரிந்தோ தெரியாமலோ கையாண்டு வருகிறார்கள். ஆழப்புரையோடிபோயுள்ள இந்த “சாதிய வசவு கற்பிதம்” அவ்வளவு ஆழமாக நம்மை சூழ இருக்கும் செயற்பாட்டாளர்கள் வரைக்கும் தலையில் ஏற்றப்பட்டுள்ளது என்பது மறுப்பதற்கில்லை. சாதியத்தின் இந்த நுண்ணரசியலை மிகத் தெளிவாக புரிந்தவர்களால் மாத்திரமே பிரக்ஞைபூர்வமாக இதிலிருந்து விடுபட முடிகிறது.

சக்கிலியர், பறையர் பள்ளர், நளவர் போன்ற சாதிய அடையாளங்கள் இன்று மற்றவர்களை இகழத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

துரைரத்தினத்தை மன்னிப்பு கோரச்சொல்லி சேரன் போன்றவர்கள் வேண்டுகோள் விடுத்தும் கூட சற்றும் குற்ற உணர்வில்லாமல் துணிச்சலுடன் தொடர்ந்து வம்பிழுதத்தை குறித்த விவாதத்திலிருந்து காணக் கூடியதாக இருந்தது. அப்படி என்றால் அவருக்கு போதிய அளவு நமது எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் கட்டாயம் பதிவு செய்து அவரை புறக்கணிப்பதும் புறக்கணிக்கச் செய்வதும் தேவையாக இருக்கிறது தோழர்களே.

நமது மலையகம்

தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்றாக நாங்கள் இருப்போம்’ என எந்த நம்பிக்கையில் சொல்கிறீர்கள்?

seemanகடலூரில் வேட்பாளர்களை அறிவித்த கையோடு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்குத் தயாராகிவிட்டார் `நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். நாம் சென்றபோது, கட்சியின் வரைவு அறிக்கை தயாரிக்கும் வேலையில் இருந்தார்.

“சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டீர்கள். முதல்முறையாக திருநங்கை ஒருவர், உங்கள் கட்சி சார்பாக ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார். இந்த யோசனை எப்படி வந்தது?’’

“இதற்கு எனத் தனியாக யோசிக்கவில்லை. அரசியல் தளத்தில் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்கள் மேலே வர வேண்டும் என விரும்புகிறோம். மண்பானை செய்பவர்கள், துணி வெளுப்பவர்கள் எல்லாம் இந்த மண்ணின் மூத்த குடிகள். அவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் இல்லை. வேற்றுமொழி பேசுபவர்களுக்குக் கொடுத்த அங்கீகாரத்தை இவர்களுக்குக் கொடுக்கவில்லை. இந்தியா விடுதலை அடையும்போது 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். இன்று மக்கள் தொகை 120 கோடியைத் தாண்டியும் அந்த எண்ணிக்கை அப்படியே தொடர்வது வேதனையானது. ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என இருப்பதை, மூன்று தொகுதிகளுக்கு ஓர் உறுப்பினர் என மாற்றும்படி கேட்கிறோம். இப்படிச் செய்தால் நாடாளுமன்றம் செல்லும் ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களின் பிரச்னையை அவர்களே தீர்த்துக்கொள்வார்கள். மற்றவர்கள் பேசவேண்டிய அவசியம் இருக்காது. அதனால்தான் சேலத்தைச் சேர்ந்த தேவி என்கிற திருநங்கையை ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவித்தேன்.”

“தென்மாவட்டத்தைச் சேர்ந்த நீங்கள் கடலூரில் போட்டியிடப் போகிறீர்கள். அந்த மாவட்டத்தைத் தேர்வுசெய்ய என்ன காரணம்?’’

“தென்மாவட்டங்களில் நான் எங்கு போட்டியிட்டாலும், அங்கு சாதி என்ன என்ற கேள்வி எழும். `ஓட்டு வரும் என்பதற்காக நிற்கிறான்’ என்பார்கள். தமிழர்களுக்கான பொதுத்தலைமை என்பது அரை நூற்றாண்டு காலமாக தமிழ்ச் சமூகத்தில் இல்லை. பெருந்தலைவர் காமராஜர் இந்தியத் தமிழராகத்தான் இருந்தார். தமிழ்நாட்டின் தமிழராக அவர் இல்லை. நான் முதலில் தமிழன்; பிறகுதான் இந்தியன். அந்த அடிப்படையில் என் இன முன்னோடிகள், அரசியலுக்கு வரும்போது எல்லாம் சாதி அடையாளத்தோடு பார்க்கப்பட்டார்கள். என் அய்யா மருத்துவர் ராமதாஸாக இருக்கட்டும், அண்ணன் திருமாவாக இருக்கட்டும், கொங்கு நாடு ஈஸ்வரன், சரத்குமார், கார்த்திக், ஜான் பாண்டியன் என என் இனம் சார்ந்த பிள்ளைகள் வரும்போது என்ன சாதி எனக் கேட்கிறார்கள். தமிழ் இனம் சாராத கருணாநிதியிடமோ, எம்.ஜி.ஆரிடமோ, ஜெயலலிதாவிடமோ என்ன சாதி என யாரும் கேட்பது இல்லை. அப்படிக் கேட்டிருந்தால் அவர்களால் வார்டு கவுன்சிலராகக்கூட வந்திருக்க முடியாது.

234 தொகுதிகளிலும் விஜயகாந்தால் வேட்பாளர்களை நிறுத்த முடியும். ஆனால், ராமதாஸ், திருமாவளவனால் அது முடியாது. அப்படியானால், தமிழர்களை தொகுதிக் கட்சிகளாகக் குறுக்கி அழுத்தியது இந்தத் திராவிடக் கட்சிகள்தான். முன்னோர்களின் படிப்பினையை முழுமையாகக் கண்டு உணர்ந்துவிட்டோம். எங்கு எல்லாம் என் இனம் இருக்கிறதோ, அங்கு எல்லாம் என் அரசியல் பரவவேண்டும் என நினைக்கிறேன். அதனால்தான் நான் கடலூரில் போட்டியிடுகிறேன்.”seeman 2

“ `தமிழர்கள், தமிழர்களாக இணைய வேண்டும்’ என்கிறீர்கள். அப்படியானால் தமிழர்களிடம் மட்டும்தான் வாக்குக் கேட்பீர்களா?’’

“தமிழர் அல்லாதவர்கள் எனக்கு ஓட்டுப் போடக் கூடாது என்று நான் எப்போதுமே சொல்லவில்லை. ஒட்டுமொத்த மக்களுக்குமான அரசைத்தான் ஏற்படுத்த விரும்புகிறேன். இந்த மண் சார்ந்த மனிதன்தான் ஆள வேண்டும் என்கிறோம். இத்தனை ஆண்டுகாலமாக அந்த உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. எல்லோரும் தமிழர் நலனுக்காக இறுதிவரை போராடுவோம் எனச் சொல்கிறார்கள். தமிழர் நலனில் மிக முதன்மையான உரிமை என்பது, அவர் நிலத்தை அவரே ஆள்வதுதான். அந்த உரிமையை நீங்கள் என்னிடம் கொடுத்துவிட்டால், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு, கூடங்குளம் அணு உலை நிர்மாணம், மீத்தேன் வாயு பிரச்னை என எதுவுமே நடந்திருக்காதே? இந்தியாவில் இத்தனை மலைகள் இருக்கும்போது என் மலையை மட்டும் ஏன் வந்து குடைய வேண்டும்? தகப்பன் இல்லாத வீடுபோல, நல்ல தலைவன் இல்லாத நாடு தறிகெட்டுத்தான் போகும்.”

“தமிழர் என்ற முழக்கத்தை முன்வைப்பதால் மற்றவர்கள் வாக்கு உங்களுக்குக் கிடைக்கும் என நம்புகிறீர்களா?’’

“என் இன விடுதலைக்கு, என் மக்களின் நலனுக்காக நான் போராடும்போது எனக்கு வலிமை கொடுக்கவேண்டிய தார்மீகக் கடமை, இங்கே வளமுடன் வாழும் மாற்று மொழிக்காரர் களுக்கு இருக்கிறது. பிறமொழியாளர்கள் வாக்கு எனக்கு வரவில்லை என்றால், தமிழர்களின் வாக்கும் அந்த மொழி பேசும் வேட்பாளர்களுக்குக் கிடைக்காது என்ற நிலை வரவேண்டும். சோனியாவை ஏன் பிரதமராக நாடாள அனுமதிக்கவில்லை? காரணம், அவர் வேறு தேசத்தவர். பிற தேசத்துக்காரர்கள் ஆளக் கூடாது என்பது தேசப்பற்று என்றால், என் நிலப்பரப்பை நான் ஆளாமல் வேறு ஒருவர் ஆள்வதை எதிர்ப்பது மட்டும் எப்படி பாசிசம் ஆகும்?”

“தமிழகத்தில் மொழிவழி சிறுபான்மை மக்கள் இரண்டறக் கலந்து வாழ்கிறார்கள். உங்கள் பேச்சு அந்த மக்களிடையே கசப்புஉணர்வை ஏற்படுத்தாதா?

“இது எப்படி கசப்புஉணர்வை ஏற்படுத்தும்? இந்த மண்ணில் வாழ்கிற உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஆள்கிற உரிமை எங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. என் வீட்டில் நான் வாழ வேண்டும் எனப் பேசுவதே இனவாதம் என்றால், நீங்கள்தான் உண்மையான இனவெறியர்கள். ஈழத்தில் ஐம்பதாயிரம் பேர் இறந்தார்களே… சொத்து, சுகத்துக்காகவா இறந்தார்கள்? என் இனம் அடிமைப்பட்டுப் போய்விடக் கூடாது என்ற உயரிய நோக்கத்துக்காக இறந்தார்கள். செம்மரக்கட்டை கடத்தப்போனார்கள் என இருபது பேரைச் சுட்டுக் கொன்றது சந்திரபாபு நாயுடு அரசு. கோதாவரி நதியில் குளிக்கப்போனவன் செத்துப்போய்விட்டான் என அதற்கு வருத்தம் தெரிவிக்கிற மோடி, இருபது பேர் இறந்ததற்குப் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் நாதியற்றவன் தமிழன்.”

“தமிழர் என்ற வாதத்தைத் தீவிரமாக முன்வைக்கும்போது, நதிநீர் பங்கீடு, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட விவகாரங்களை நாளை எப்படி உங்களால் சுமுகமாகக் கையாள முடியும்?’’

“நதிநீர் பங்கீடு என்பதே சுத்தப் பைத்தியக்காரத்தனம். காவிரி, முல்லைப் பெரியாறு சிக்கல் நீடித்தால்தான் இந்தியா ஒன்றாக இருக்கும். தீர்க்கப்பட்டுவிட்டால் இந்தியா இரண்டாகிவிடும். தமிழன் என்றால் கன்னடனுக்குக் கோபம் வர வேண்டும். மலையாளி, தெலுங்கனுக்கும் தமிழன் என்றால் கோபம் வர வேண்டும். ஏற்கெனவே இங்கு திராவிட நாடு கேட்டுப் போராடியிருக்கிறார்கள். இவர்கள் சண்டை இல்லாமல் ஒன்றாகிவிட்டால் இந்தியா பிளவுபட்டுவிடும். அதனால்தான் இந்தப் பிரச்னைகள் எல்லாம் தீர்க்கப்படாமல் திட்டமிட்டு நீட்டிக்கப்படுகிறது.”

“ஐம்பது ஆண்டுகளாக மாநிலத்தை ஆளும் முதலமைச்சர்களை தரகர்கள் எனச் சொல்கிறீர்கள். இது சரியா… முறையா?’’

“வேறு எப்படிச் சொல்வது? ஆற்று மணலை அள்ளுபவர்களோடு உங்களுக்கு என்ன வேலை? பி.ஆர்.பி கல்லை உடைத்தார் என்றார்கள். அவர் ஏழுமுறை சிறந்த குடிமகன் விருதை குடியரசுத் தலைவர் கையால் வாங்கியிருக்கிறார். கல்லை உடைப்பவர் எப்படி ஏழு முறை விருது வாங்க முடிந்தது? கால் நூற்றாண்டாக கல்லை உடைத்தார் என்றால், இவரிடம் வாங்கித் தின்ற புரோக்கர் யார்? வைகுண்டராஜன் தாது மணல் அள்ளுகிறார் என்றால், அவரிடம் வாங்கித் தின்னாதவர் யார்? படிக்காசு மணல் அள்ளுகிறார், ஆறுமுகசாமி மணல் அள்ளுகிறார் என்றால், இவர்களிடம் வாங்கித் தின்பது யார்? `பெப்சி, கோக் வேண்டாம்’ எனப் போராடும் மக்கள் மீது ஏன் தடியடி நடக்கிறது? இந்த நிறுவனங்களோடு இவர்களுக்கு என்ன கூட்டு? அனைத்து அரசுத் துறைகளிலும் கமிஷன் வாங்குகிறார்கள். இல்லை எனச் சொல்லச் சொல்லுங்கள், நான் கட்சியைக் கலைத்துவிடுகிறேன். எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்த ஜெயலலிதா அரசு, தண்ணீரை மட்டும் ஏன் பத்து ரூபாய்க்கு விற்கிறது? தண்ணீரை இலவசமாகக் கொடுத்தால் இவர்களுக்கு கமிஷன் கொடுக்கும் தனியார் முதலாளி பாதிக்கப்படுவான். அப்படியானால், இவர்களைத் தரகர் என்றுதானே சொல்ல முடியும்? முதலமைச்சர் சிறிய தரகர், பிரதமர் பெரிய தரகர். அவ்வளவுதான் வித்தியாசம்.”

“ `தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்றாக நாங்கள் இருப்போம்’ என எந்த நம்பிக்கையில் சொல்கிறீர்கள்?’’

“திராவிடக் கட்சிக்கு இன்னொரு திராவிடக் கட்சி மாற்றாக இருக்க முடியாது. கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் ஆட்களை மாற்றிக்கொண்டால் சரியாகிவிடுமா? திராவிடக் கட்சிகளுக்கு ம.தி.மு.க எப்படி மாற்றாக இருக்க முடியும்? தே.மு.தி.க என்ற பெயரில் கொள்கையே தெரியாத முன்னேற்றக் கழகம் ஒன்று இருக்கிறதே, அதுவா மாற்று? அவருக்கு என்ன கொள்கை எனக் கேளுங்கள். தி.மு.க என்பது விஷப் பாம்பு. அது போட்ட குட்டிகளுக்கு விஷம் இருக்காதா? தனிமனிதன் மாற்று அல்ல; தத்துவம்தான் மாற்று.”

“மக்கள் நலக் கூட்டணியை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா?’’

“மாற்று என்பது தொடக்கத்தில் இருந்து வர வேண்டும். மதுவை ஒழிக்க வேண்டும் என அண்ணன் வைகோ சொல்கிறார். மதுக்கடைகளைத் திறக்கும்போது அவர் எங்கே இருந்தார்? மதுக்கடை வியாபாரத்தை இரண்டு கட்சிகளும் நடத்தும்போது மாறி, மாறி கூட்டணிவைத்து பதவியை அனுபவித்தார்களா இல்லையா? 2ஜி ஊழல் நடக்கும்போது கூட்டணியைத் தாங்கிப் பிடித்தார்களா இல்லையா? கொள்ளையடித்தால் என்ன? கொள்ளையடிக்கும்போது கூட இருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். ஊழல் நடக்கும்போது வேடிக்கை பார்த்துவிட்டு இப்போது பேசுவது எப்படி சரி? கடந்த பத்து ஆண்டுகளாக இனத்துக்கு தி.மு.க செய்த துரோகத்துக்கு அண்ணன் திருமா வக்காலத்துவாங்கிப் பேசியது எப்படி சரி?”

“கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக வாக்கு கேட்டீர்கள். இந்த முறை தனித்துப் போட்டி என்கிறீர்கள். மக்களிடம் குழப்பம் வராதா?’’

“ஒரு குழப்பமும் வராது. ஜெயலலிதாவை முதலமைச்சராக்கவோ, பிரதமராக ஆக்க வேண்டும் என்றோ நான் வாக்கு கேட்கவில்லை. இனத்தை அழித்த துரோகிகளுக்கு எதிராக, அவருக்கு ஆதரவாக நின்றேன். கடந்த காலத்தில் நேதாஜி, ஹிட்லரின் உதவியை நாடியதுபோலத்தான். எங்கள் தலைவரே, பிரேமதாசாவிடம் உதவி கேட்டார். இது ஒரு யுத்தத் தந்திரம். அன்றைக்கு நாங்கள் தனித்து நிற்கும் வலிமையைப் பெறவில்லை. அப்போது அந்தப் படையணியோடு இணைந்து சண்டை போட்டோம். அவர்கள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பிரசாரம் செய்யாமல், காங்கிரஸ், பா.ஜ.க போட்டியிட்ட இடங்களில் அ.தி.மு.க-வை ஆதரித்தோம். இடதுசாரிகளுக்கு ஓட்டு கேட்டோம். விஜயகாந்த் கட்சிக்கு 15 தொகுதிகளில் ஆதரித்து பிரசாரம் செய்தோம். ஜெயலலிதாவை மட்டும் ஆதரித்தோம் என்பதே தவறானது.”

“சரி… தேர்தல் களத்தில் உங்களுடைய எதிரி என யாரை நினைக்கிறீர்கள்?’’

“இரண்டே எதிரிகள்தான். ஒருவர் கருணாநிதி; இன்னொருவர் ஜெயலலிதா. காங்கிரஸ், பா.ஜ.க-வை எல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்!”

விகடன்

வெளிநாட்டில் ஒரு கதை உள்நாட்டில் இன்னொரு கதை

samantha powerநிலத்தின் தன்மை யாருக்கு உண்டென்ற உண்மையை பாரதி மிகத் தெளிவாகக் கூறியுள்ளான். மண்ணின் தன்மை பயிருக்கும் அவற்றின் விளைபொருளுக்கும் உள்ளது போல மண்ணின் தன்மை மனிதர்களுக்கும் இருக்கவே செய்கிறது.

இதனாலோ என்னவோ ஊர்க்குணம் என்று நாம் கூறிக்கொள்வதுண்டு. சில ஊர்களுக்கு புதிதாகப் போகின்றவர்கள் அல்லது புதிய இடத்தில் கூடியிருப்பவர்கள் அந்த இடத்தின் தன்மைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வர்.

உதாரணத்துக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற போதும் கொழும்பில் இருக்கின்ற போதும் ஒத்த குண இயல்பைக் கொண்டிருக்க மாட்டார். யாழ்ப்பாணத்தில் ஒருவிதம்; கொழும்பில் இன்னொரு விதமாக நடந்து கொள்வார். இதேபோல அரச அலுவலகங்களில் வேலை செய்கின்றவர்கள் வெளியில் ஒருவிதமாகவும் அலுவ லகத்தில் இன்னொரு வடிவத்திலும் செயற்பட்டுக் கொள்வர்.

இவற்றுக்கு மேலாக, சிலர் தமக்கு உதவி பெறு கின்றபோது கடுமையான ஆலாவர்ணங்கள் செய்து தங்கள் காரியத்தை முடித்துக்கொள்வர்.
மற்றவர்கள் யாரேனும் உதவி கேட்டால் அதை மிகச் சாதாரணமாக தட்டிக்கழித்து விடுவர். இப்படியாக ஒவ்வொரு தன்மை.
இதை நாம் சொல்லும்போது ஐயா! பத்திரிகைக் காரர்கள் மட்டும் ஒரேகொள்கை கொண்டவர்களாக்கும் என்று நீங்கள் முணுமுணுப்பதும் தெரிகிறது.

பத்திரிகையாளர்களும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றால் போல் அந்தச் செய்தி வந்தது எனக்குத் தெரியாது; செய்தி விடயங்களில் நான் தலையிடுவதே இல்லை; அப்படியா செய்தி வந்தது; இருக்காதே! இப்படியான வார்த்தைகளைக்கூறி கடினமான வேளைகளில் தங்களைப் பாதுகாத்துக் கொள் வதும் உண்டு.
எனினும் மக்களுக்கு எல்லாம் நன்கு தெரியும் என்பதுதான் உண்மை.

இது ஒருபுறமிருக்க சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்ற இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, போர்க்குற்ற விசாரணை நடத்த உள்ளோம் என்று கூறியுள்ளதுடன் போர்க் குற்ற விசாரணையை சர்வதேசத்தின் பங்களிப்பு டன் செய்வோம் என்றும் உறுதிப்படுத்திய அவர் ஆறுமாத காலத்துக்குள் போர்க்குற்ற விசாரணை ஆரம்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இங்குதான் நிலத்தின் தன்மை தெரிகிறது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமர வீர, இலங்கையில் இருக்கும்போது போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்க குறைந்தது இரண்டு வருடங்கள் தேவை என்று கூறியிருந்தார். அதே அமைச்சர் மங்கள சமரவீர இப்போது அமெரிக்காவில் வைத்து ஆறு மாதத்துக்குள் போர்க்குற்ற விசாரணை ஆரம்பிக்கப்படும் என்கிறார். இதேவேளை போர்க்குற்ற விசாரணையின் போது சர்வதேச நீதிபதிகள் தேவையில்லை என்று இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகிறார்.

இதை இலங்கையில் வைத்து அது ஜனாதிபதி மைத்திரியின் தனிப்பட்ட கருத்து என்று கூறாத அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவில் வைத்துக் கூறுகிறார் அது ஜனாதிபதியின் தனிப்பட்ட கருத்து என்று. ஆக, நாட்டுக்கு நாடு கருத்துக்கள் மாறுபடுவதன் பின்னணியிலும் நிலத்தின் தன்மை உண்டோ அல்லது இலங்கையில் பிறந்து ஆட்சிபீடத்தில் அமர்ந்தால் உள்நாட்டில் ஒருகதை வெளிநாட்டில் இன்னொரு கதை என்ற இயல்பா? என்பதை இன்னும் ஆறுமாதங்களில் கண்டுகொள்ளலாம்.tamilarasu kadchi mavai

தமிழர்களின் ஒற்றுமையில்தான் எதிர்காலம் தங்கியுள்ளது

தமிழ் மக்களுக்கு நல்லாட்சி தரக்கூடிய தீர்வு என்ன என்பது இந்த ஆண்டுக்குள் தெரிந்துவிடும். 2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வு என்பதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் பரிபூரண நம்பிக்கையோடு உள்ளார்.

இவை எல்லாம் நடந்தேறுமா? என்பதைப் பார்ப்பதற்கு இன்னமும் பத்து மாதங்கள் போதுமானவை. நம்மை பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் இலங்கை அரசாங்கம் எதனையும் தரப்போவதில்லை என்பதே உண்மை.

காலகாலமாக எங்களை ஏமாற்றி வந்த ஆட்சியாளர்கள் இப்போது கூட்டுச் சேர்ந்து ஏமாற்றப் போகி ன்றனர். ஜனாதிபதி மைத்திரி – பிரதமர் ரணில் என்ற தேசிய அரசாங்க சாயல் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சாதகமானதாக இருந்த போதிலும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் எவ்வாறு காலம் கழிப்பது என்பது பற்றியே தேசிய அரசு கூடி ஆராயும் என்பது தான் உண்மை.

இலங்கை அரசாங்கத்தை நம்பி எங்கள் பிரச்சினை தீரும் என்று யாரேனும் நம்பினால் அதைவிட மடமைத் தனம் வேறு எதுவுமாக இருக்க முடியாது. இதை நாம் கூறும்போது, அப்படியானால் இனப்பிரச்சினைக்கு தீர்வே இல்லையா? என்ற கேள்வி உங்களிடம் எழுவது நியாயமானதே.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் அதற்கான ஒரேவழி இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுப்பதாகும்.

சர்வதேச அழுத்தம் என்பது இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதன் ஊடாக அமைய வேண்டும்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடக்குமாக இருந்தால், இலங்கை அரசு தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு தானாக முன்வரும்.

அதேநேரம், இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படக் கூடாது என கோ­மிடும் பேரினவாதிகளும் தங்கள் கொக்கரிப்பை கைவிட்டு பெட்டிப்பாம்பாகி விடுவர்.
எனினும் சர்வதேச விசாரணை என்பதை எங்கள் தமிழ்த் தலைமை இலங்கை அரசுக்காக விட்டுக்கொ டுத்து விட்டமைதான் எங்கள் இனத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு.

சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் மெத்தனப்போக்கை கொண்டிருந்த போது, இலங்கை ஆட்சியாளர்கள் கூறிய முதல் வாசகம் மின்சார நாற்காலியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­வை காப்பாற்றினோம் என்பதுதான்.

அப்படியானால், சர்வதேச விசாரணை நடந்திருந்தால் முன்னாள் ஜனாதிபதிக்கு மின்சார நாற்காலியில் இருத்தி தண்டனை வழங்கப்படும் என்பது இன்றைய ஆட்சியாளர்களின் கூற்றில் இருந்து நிரூபண மாகிறது. எனினும், இதுபற்றி எங்கள் தமிழ்த் தலைமை அலட்டிக்கொள்ளாமல் இருப்பதுதான் தமிழ் மக்கள் செய்த பாவச்சுமை எனலாம்.

எது எப்படியாயினும் இன்று இருக்கக் கூடிய சூழ் நிலையில் தமிழ் மக்களின் ஒற்றுமை ஒன்றுதான் எங்களுக்கான தீர்வைப் பெற்றுத்தரக்கூடிய சக்தியாக உள்ளது.
இருந்தும் தமிழ் மக்களின் ஒற்றுமை, அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கினால் அடிபட்டுப் போகிறது. இத்தகைய அரசியல்வாதிகளின் துரோகத்தனத்தை அரங்கேற்றி வைப்பதில் அரசியலில் நுழைந்து பதவி பெறத்துடிக்கும் சிலர் கடுமையாகப் பாடுபடுவதுதான் மிகப்பெரும் கொடுமைத்தனம்.

இத்தகைய கொடுமைத்தனத்தை வேரறுக்க தமிழ் மக்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாகச் செயற்பட திடசங் கற்பம் பூணவேண்டும். அப்போதுதான் கயமைத்தனங்கள் அடிபட்டு உரிமை கிடைக்க வழியேற்படும்.tna traitors 2

வடக்கின் அபிவிருத்திபற்றி மாகாண சபையில் பேசுங்கள்

வடக்கு மாகாண அரசின் சமகாலப் பணிகள் கொண்ட ஒரு பட்டியலை வடக்கு மாகாண அரசு தயாரித்துக் கொள்ள வேண்டும். இன்று இருக்கக் கூடிய சூழ்நிலையில் வடபுலத்து மக்களின் அடிப்படைத் தேவைகள்கூட இன்னமும் பூர்த்தியாக்கப்படவில்லை. மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்ற உண்மைகளுக்கு அப்பால், வட மாகாண அரசு செய்ய வேண்டிய கட்டாயப் பணிகள் உண்டு.

இதைச் செய்ய வேண்டியது மாகாண அரசின் தலையாய கடமையாகும். எனினும் வடக்கு மாகாணசபை கூடியபோதெல்லாம் அங்கு பேசப்பட்டவை எவை என்பது பற்றி நாம் சொல்லாமலே மக்கள் மிகத் தெளிவாக அறிந்து வைத்துள்ளனர்.

வடக்கு முதலமைச்சருக்கு உபாதை கொடுத்து அவரை சுயமாக வெளியேற்றுவதில் சபை உறுப்பினர்கள் சிலர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மாகாண சபையை கூட்டினால் சபையை எப்படிக் குழப்புவது என்று முற்கூட்டியே ஹோட்டல் களில் சந்தித்து எடுத்த முடிவுகளை சபையில் முன் வைத்து கலாட்டா செய்து எந்தப் பிரயோசனமும் இல்லாமல் செய்வதைத் தவிர வேறு எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.

யுத்தம் முடிந்த பின் அமைந்த தமிழர் அரசிடம் இருந்து தமிழ் மக்கள் எதிர்பார்த்தவை ஏராளம். எனினும் தமிழர் அரசு எப்படி நடத்தப்படுகிறது என்பது மரியாதைக்குரிய முதலமைச்சரோடு சபை உறுப்பினர்கள் சிலர் எங்ஙனம் நடந்து கொள்கின்றனர் என்பதை தமிழ் மக்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

இதற்கான தண்டனைகளை தேர்தல் வரும் போது மக்கள் வழங்குவர் என்பதில் ஐயமில்லை. வட பகுதி தமிழ் மக்கள் ஒருவரை ஏற்றுக்கொண்டால் அவரை எச்சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். அதேநேரம் தமிழ் மக்கள் யாரையேனும் வெறுத்துவிட்டால் பின்பு அவர்கள் தலையால் நடந்தாலும் தமிழ் மக்களின் மனங்களில் இடம்பிடிக்க முடியாது.

இந்த வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை ஈழத்தமிழ் மக்கள் தங்களின் தலைவனாக ஏற்றுக்கொண்டுள்ளனர். அவரின் நேர்மையும் உறுதியான பேச்சும் பதவி மீது ஆசை கொள்ளாத அரசியல் பண்பாடும் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

இந்த நிலையில் அவருக்கு எதிராக யார் செயற் பட்டாலும் அவர்களை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அவரை எதிர்க்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் ஒருசில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கியமான ஹோட்டலில் விருந்து உண்டு முதலமைச்சருக்கு எதிராக திட்டம் தீட்டும் மாகாண சபை உறுப்பினர்களை தமிழ் மக்கள் நன்கு இனம் கண்டுள்ளனர். இதற்கு மேலாக எங்கள் அரசைக் குழப்புவதில் சிறுபான்மை சார்ந்த உறுப்பினர் ஒருவர் வேகமாக செயற்படுகின்றார் என்ற செய்தி தமிழ் மக்களை கடுமையாகத் தாக்கியுள்ளது.

இதற்கு மேலாக வடக்கு மாகாண சபையை குழப்புவதில் பின்னணியாகச் செயற்படுவது யார் என்பதையும் நம் மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.

ஆக, முதலமைச்சரை எதிர்ப்பதாக நினைத்து செயற்படும் முன், தமிழ் மக்களின் நலன்களைக் கருதாமல் யாரோ ஒரு அரசியல்வாதியை நம்பி செயற்படுவதுதான் மிகப்பெரும் அறியாமை.

அறியாமையில் நடக்கின்ற செயற்பாடுகளை நிறுத்தி வடக்கு மாகாண முதலமைச்சருடன் இணைந்து வடக்கின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்வதில் வடக்கு மாகாண அரசு ஈடுபடுமாக இருந்தால் நிச்சயம் இவர்களை தமிழ் மக்கள் என்றும் நன்றியோடு நினைப்பர்.

எனவே நடந்தது நடந்தவையாக இருக்க நடப்பது நல்லதாக அமையட்டும் என்பதற்கு இணங்க வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஒற்றுமைப்பட்டு முதலமைச்சருடன் இணைந்து பணி செய்ய முன்வர வேண்டும். இதுவே தமிழ் மக்களின் பெருவிருப்பாகும்.

வலம்புரி

பலாலி விமான நிலைய விரிவாக்கம் ஏன் அவசரப்படுகிறது இந்தியா?

srilanka india partnersபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் திட்டத்தைச் செயற்படுத்துவதில், அரசாங்கம் மட்டுமன்றி இந்தியாவும் கூட, அதிகளவு ஆர்வத்தைக் காட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த விடயத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று கடந்த வாரம் ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு கூறியிருந்தார், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி.

அவரது இந்தக் கருத்து, வடக்கு மாகாணத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நிர்வாக கட்டமைப்பு இருக்கின்ற போது, அதன் கருத்துக்களைப் புறக்கணித்துச் செயற்படுகின்ற முன்னுதாரணமாக இந்த விவகாரம் மாறிவிடும் சூழலையே பிரதிபலித்திருக்கிறது.

விமான நிலையங்கள், துறைமுகங்கள் என்பன மத்திய அரசின் அதிகார எல்லைக்குள் தான் வருகின்றன. எனவே, விமான நிலைய விரிவாக்கத்தில், மாகாண அரசின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை மத்திய அரசாங்கமே முடிவுகளை எடுக்கலாம் என்பது உண்மை தான்.

ஆனாலும், மத்திய அரசுடன் மாகாண அரசாங்கம் இணைந்து பயணிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம், இந்த விடயத்தில் எதிர்மறையாகச் சிந்திக்கத் தலைப்படுவது அபத்தமானது.

அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடத்தப்பட்ட வடக்கின் அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தின் போதே, பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு, எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

முதலில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதற்குப் பின்னரே விமான நிலைய அபிவிருத்தி பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இதற்குப் பின்னர் தான், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி, வடக்கின் முதலமைச்சர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும், கிட்டத்தட்ட இந்தத் திட்டம் கைவிடப்படாது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். எனினும், முதலமைச்சரின் கரிசனைகள் கவனத்தில் கொள்ளப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

பலாலி விமான நிலைய விரிவாக்கம் என்பது, தனியே அபிவிருத்தியுடன் தொடர்புடைய விடயம் மட்டுமல்ல. அதனைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் காலம்காலமாக வாழ்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரமாகவும் உள்ளது.

அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களை அகதி முகாம்களில் குடியமர்த்தி விட்டு விமான நிலையத்தை அமைப்பதன் மூலம் அபிவிருத்தியைப் பெற்று விட முடியுமா என்ற கேள்வியே இப்போது எழுப்பப்படுகிறது.

அதைவிட, விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு முதலமைச்சர் மட்டுமன்றி, அனைத்துக் கட்சிகளின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுமே எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த சமூகமும் இந்த திட்டத்தை எதிர்த்து நிற்கின்ற ஒரு சூழலில் தான் அதனைப் புறக்கணித்துக் கொண்டு, பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தைத் தொடரும் எத்தனிப்பில் அரசாங்கம் இறங்கியுள்ளது.

இந்த திட்டத்தை மேற்கொள்வதில் இந்திய அரசாங்கமும் தொடர்புபட்டுள்ளது, இந்த விவகாரத்தை இன்னும் சிக்கலானதாக மாற்றியிருக்கிறது.

இந்தியா இந்த விடயத்தில் தொடர்புபட்டிருப்பதால், இலங்கை அரசாங்கத்தின் நிலை பலமாக இருக்கிறது என்பது உண்மையே.

இந்தியா இந்த விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை தனது வர்த்தக மற்றும் பாதுகாப்பு நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளவே முற்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கொழும்பு வந்திருந்த போதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கம் செய்வதன் மூலம், தென்னிந்திய நகரங்களுக்கான விமான சேவைகளை மேற்கொள்ளலாம் என்பதே இரு நாட்டு அரசாங்கங்களினதும் திட்டம்.

தென்னிந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை விரிவாக்குவதன் மூலம், சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கலாம் என்றும் வர்த்தக தொடர்புகள் அதிகரிக்கும் என்றும் இந்தியா எதிர்பார்க்கிறது.

அதைவிட, பலாலி விமான நிலையத்தை எந்தவொரு அவசர தேவைக்கும் பயன்படுத்தக் கூடியதான தயார் நிலையில் வைத்திருப்பதற்கும் இந்தியா விரும்புகிறது.

ஏற்கனவே, சந்திரிகா குமாரதுங்க ஆட்சியில் இருந்த காலகட்டத்திலும், பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதைகளை தரமுயர்த்திக் கொடுத்திருந்தது இந்தியா.

இப்போது அதன் அடுத்தகட்டமாக, இராணுவ விமான நிலையமாக உள்ள பலாலி விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக மாற்ற, அதன் செயற்பாடுகளை விரிவாக்குவதற்கான உதவியை இந்தியாவே வழங்கப் போகிறது.

இதுகுறித்து ஆராய்வதற்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் குழுவொன்றும் விரைவில் யாழ்ப்பாணம் செல்லவுள்ளது.

இப்படியான சூழ்நிலையில் தான் வடக்கு மாகாணசபையிடம் இருந்தும் தமிழ் மக்களிடம் இருந்தும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

ஆனால், இந்தியாவோ இலங்கையோ இந்த எதிர்ப்பை எந்தளவுக்கு கவனத்தில் கொண்டு செயற்படப் போகின்றன என்பது கேள்விக்குரிய விடயம். ஏனென்றால், இரண்டு நாடுகளின் அரசாங்கங்களுக்கும் இந்த திட்டம் தேவையாக உள்ளது.

இந்தக் கட்டத்தில் தமிழ் மக்களின் எதிர்ப்பையோ, தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையின் எதிர்ப்பையோ கண்டுகொள்ளும் நிலையில் இருநாடுகளும் இல்லைப் போலவே தெரிகிறது.

பலாலி விமான நிலையத்தை விரிவாக்கி, வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்த முனையும் இந்தியா, ஏன் இன்னமும் கப்பல் வழிப் போக்குவரத்தை மீள ஆரம்பிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்கிறது?

கடந்த ஆண்டு மார்ச் மாதம், இந்தியப் பி்ரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்திருந்த காலகட்டத்தில், தலைமன்னார் – தூத்துக்குடி கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த உடன்பாடு ஒன்றைக் கையெழுத்திட புதுடில்லி அவசரமாக அழுத்தம் கொடுத்தது.

ஆனால், தலைமன்னார் இறங்குதுறையில் போதிய வசதிகள் இல்லை என்றும், அங்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்த பின்னர் குறுகிய காலத்தில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கலாம் என்றும் இலங்கை அரசாங்கம் கூறியது.

பயணிகள் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிப்பதாக நரேந்திர மோடியின் பயணத்தின் போது இணக்கப்பாடு காணப்பட்டது. இந்த இணக்கப்பாடு ஏற்பட்டு ஒருவருடமாகியுள்ள நிலையிலும் கூட, தலைமன்னார்- தூத்துக்குடி கப்பல் சேவையை ஆரம்பிக்க இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதற்கு அவசரம் காட்டாத இந்தியா, பலாலி விமான நிலைய விரிவாக்கத்தில் மட்டும் கூடுதல் அக்கறை கொள்வது கேள்விகளை எழுப்ப வைக்கிறது.

தமிழ் மக்களின் நலன்களைப் புறக்கணித்து இந்தியா இந்த விடயத்தில் தனது நலனை முன்னிலைப்படுத்த முனைகிறதா என்ற சந்தேகங்களும் எழுகிறது.

இந்த விடயத்தில் இந்தியா எடுக்கும் முடிவு முக்கியமானதாக பார்க்கப்படும். ஏனென்றால், இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகவே இந்தியா மாகாணசபை முறையை 13வது திருத்தத்தின் மூலம் உருவாக்கிக் கொடுத்தது.

இன்னமும் கூட, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப்பகிர்வு 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் என்றே இந்தியா கூறி வருகிறது.

அவ்வாறு உருவாக்கப்பட்ட வடக்கு மாகாணசபையின் கருத்துக்களை புறக்கணித்து இந்தியா இந்த திட்டத்தை முன்னெடுக்க முனைந்தால், அது 13வது திருத்தச்சட்டத்தின் ஊடான அதிகாரப் பகிர்வையும் கேள்விக்குள்ளாக்கும்.

அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் மத்திய அரசுடன் இணைந்து மாகாணசபை செயற்பட வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்பார்ப்பதன் பின்னணி, இதுபோன்ற சிக்கலைக் கையாள்வதற்கான உத்தியா என்றும் கூடச் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

பலாலி விமான நிலைய விரிவாக்கம் என்பது ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வாதாரத்தின் மீது தான் கட்டியெழுப்பப்படும் என்றால், அந்த திட்டத்தை தோற்கடிக்கும் வழிமுறைகள் பற்றியும் தமிழ் மக்கள் சிந்திக்க முற்படுவதில் தவறில்லை.

-சத்ரியன்

Up ↑