Search

Eelamaravar

Eelamaravar

Month

January 2016

தமிழ் மக்கள் பேரவை வெளியிட்ட தமிழ் மக்களின் அரசியல் தீர்வு நிகழ்வு

தமிழ் மக்கள் புத்திஜீவிகள் தமிழ் மக்கள் சார்பில் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நன்மையளிக்கும் அரசியல் வழிமுறையை முன்வைப்பதனை பிழையான விடயம் என எவரும் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூற முடியாது மேற்கண்டவாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் தமிழ் மக்கள் பேரவை வெளியிட்ட தமிழ் மக்களின் அரசியல் தீர்வு திட்ட வரைபை தமிழ் மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தும் நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.tcp wicki

இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் மக்கள் பேரவையினர் குழு அமைத்து குழுவில் அங்கம் வகிக்கும் எமது அங்கத்தவர்கள் படித்து, ஆய்ந்தறிந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சம்பந்தமான ஒரு திட்ட வரைவைத் தயாரித்துள்ளார்கள்.

வேலைப்பழுக்கள் காரணமாக என்னால் எந்தவொரு கூட்டங்களிலும் கலந்து கொள்ள முடியவில்லை. எனினும் எனது மாணவர் திரு.புவிதரன் தலைமையில் இக்குழு தனது கடமைகளைச் செய்தமை மனமகிழ்வை அளிக்கின்றது.

இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்வதைத் தடுக்கும் முகமாக எங்கள் வடமாகாணசபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் ஒரு கூட்டம் நடத்தி எனக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா சம்பந்தன் அவர்கள் மக்கள் மட்டத்திலே அரசியல் ரீதியான சிந்தனைகளை ஏற்படுத்தி, அரசியல் யாப்பு பற்றிய தமது கருத்துக்களை மக்கள் எடுத்துக் கூற வழியமைப்பது வரவேற்கத்தக்கதே என்று கூறிய பின்னர் கூட எமது மதிப்புக்கும் அன்புக்கும் பாத்திரமான சிலர் சேர்ந்து இப்பேர்ப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது விந்தையாக இருக்கின்றது.

இவை தமிழ் மக்கள் பேரவைக்கு எதிரான நடவடிக்கைகளா? அல்லது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான நடவடிக்கைகளா? என்று புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேராதரவாளர்கள் பலர் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கின்றார்கள் என்பதை இவர்கள் அறியவில்லையோ என்று எண்ண வேண்டியுள்ளது.

இன்று காலை எமது தெருக்கள் சம்பந்தமான விடயங்களைப் பரிசீலிக்கும் எமது உறுப்பினர் திரு.சிவயோகம் அவர்கள் என்னைச் சந்தித்து நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகப் போவதைத் தாங்கள் விரும்பவில்லை என்று கூறினார்.

எங்கள் நடவடிக்கைகள் எந்தத் தருணத்திலும் கூட்டமைப்புக்குப் பாதகமாக அமையாதென்றும் அனுசரணையாகவே அமையும் என்ற உறுதி மொழியை அவருக்கு வழங்கினேன்.

அத்துடன் நாளை வடமாகாணசபையும் திட்ட வரைவொன்றைத் தயாரிக்கக் குழு கூடுகின்றது. அது என் தலைமையில் கூடுகின்றது.

2013ம் ஆண்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் எங்கள் வரைவு தயாரிக்கப்படும்.

எது எவ்வாறிருப்பினும் தமிழ் மக்களின் எதிர்காலமே எமது கரிசனையாகும். இன்று வெளியிடப்பட இருக்கும் திட்ட வரைவு மட்டுமே தமிழ் மக்களின் ஒரேயொரு தீர்வு என்று நாங்கள் கூறவில்லை. கூறவும் முடியாது.

பலவிதமான தீர்வுகளைப் பலரும் முன்வைக்கலாம். ஆனால் இதுவரை காலமும் எமது அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் தீர்வுத் திட்டங்களை உருவாக்கி மக்களிடையே பரப்பி மக்களின் கருத்துக்களை அறிய எவருமே முன்வந்ததில்லை.

தமிழ் மக்கள் பேரவை அத்தகையதொரு மகத்தான கைங்கரியத்தில் ஈடுபட்டிருப்பது சிலருக்கு ஒரு வேளை மனத்தாக்கத்தைக் கொடுத்திருக்கலாம். நாங்கள் அதைச் செய்யவில்லையே என்ற ஒரு மனக் குறையை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஆனால் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய கருத்துரைகள், தீர்மானங்கள் கட்சி ரீதியாக மட்டுமே வெளிவரவேண்டும் என்று எதிர்பார்ப்பது வருத்தத்திற்குரியது.

மக்களுக்காகக் கட்சிகள் இருக்கின்றனவே ஒளிய கட்சிக்காக மக்கள் இருக்க முடியாது. கட்சிகள் மக்கள் மனமறிந்து நடந்து கொள்ள வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் நலம் சார்ந்த விடயங்களில் மக்களின் மனமறிய முற்படாமல் தான்தோன்றித்தனமாகச் செயற்படக் கூடாது.

கடந்த கால கட்சி அனுபவங்களை முன்வைத்து தமிழ் மக்களின் வருங்கால வாழ்வைப் பாழடித்து விடாதீர்கள் என்று யாவரிடமுந் தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழ் மக்கள் பேரவை கட்சியாக மாற்றப்படமாட்டாது, அரசியல் ரீதியாகச் செயற்படமாட்டாது என்ற உத்தரவாதம் தந்த பின்னரே நான் இதில் கலந்து கொண்டேன்.

தமிழ் மக்களின் புத்திஜீவிகள் மக்கள் சார்பாக நடவடிக்கைகள் எடுத்து தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய அரசியல் வழிமுறைகளை எடுத்தியம்புவது எந்த வித்திலும் பிழையென்று யாராலும் கூற முடியாது.

உண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் மற்றைய சகல கட்சிகளும் சேர்ந்து தமிழ் மக்கள் பேரவையை ஊக்குவிக்க வேண்டுமேயொழிய எதிர்ப்பைத் தெரிவிக்கக் கூடாது.

கட்சிக்கான விசுவாசம் என்பது சிலரின் கண்களை மூடிவிட்டது. ஆனால் வடகிழக்கு மாகாண மக்களின் வருங்காலமே முக்கியம். வழி வழியாக வரவிருக்கும் எமது வாரிசுகளின் வருங்கால வாழ்க்கையே எமக்கு முக்கியம். அதற்காக எந்த ஒரு கடினமான பாதையில் பயணிக்கக்கூட நாங்கள் தயங்கக் கூடாது.

அரசாங்கங்கள் தயாரிக்கும் அரசியல் யாப்பில் தமிழ் மக்களின் தேவைகள், அபிலாசைகள், நோக்குகள், உரிமைகள் யாவையும் உள்ளடக்கப்படாவிடில் அத்தகைய அரசியல் யாப்பு ஒரு போதும் நன்மை பயக்கப் போவதில்லை.

உதாரணத்திற்கு 1981ம் ஆண்டில் பேசப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளே எமக்குப் போதும் என்று கட்சி ரீதியாக நாங்கள் கூறினால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் வலியுறுத்தல்களுக்குக் கட்டுப்பட்டு திணறிக் கொண்டிருக்கின்றது. அரசங்தத்தினுள் பிளவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் “எதைத் தந்தாலும் தாருங்கள் நாம் அதை ஏற்றுக் கொள்வோம்” என்ற மனோ பக்குவம் எங்களிடம் இருப்பது சரியென்று எனக்குப் படவில்லை.

எமது அபிலாசைகள், நோக்குக்கள், உரித்துக்கள், எதிர்பார்ப்புக்கள் என்பன பெரும்பான்மையின மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். சர்வதேச அமைப்புக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். இவற்றை நாங்கள் எமது சரித்திர ரீதியான பின்னணியிலிருந்தே கூறுகின்றோம்.

நாம் எமது நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையான மக்களே. அண்மைக் காலங்களில் அரச உள்ளீடுகளால் மக்களின் பரம்பல் மாறுபட வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டிருப்பினும் தமிழ்ப் பேசும் மக்கள் வடகிழக்கில் பெரும்பான்மையான மக்களே.

இதனைச் சென்ற நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அப்போதிருந்த இந்நாட்டின் பெரும்பான்மையின மக்கட் தலைவர்கள் கூட ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

தமிழ்ப் பேசும் மக்கள் 2000 வருடங்களுக்கு மேல் வடகிழக்கு மாகாணங்களில் நிலைபெற்றிருக்கின்றார்கள். சோழர் காலத்தில் 10ம் நூற்றாண்டில் மட்டும் வந்த வந்தேறு குடிகள் அல்ல அவர்கள்.

எமது தொடர் பாரம்பரியம் 2000 வருடங்களுக்கு மேலானது. இதனை மனதில் நிறுத்தி வடகிழக்கு மாகாணங்களில் வாழும் எமது மக்களின் சரித்திர ரீதியான உரிமைகளைப் பாதுகாக்கும் வண்ணம் அரசியல் யாப்பு அமைய வேண்டும் என்பதே எமது அவா.

அவற்றை மனதில் முன்னிறுத்தியே இன்றைய வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது என்று தயாரிப்புக் குழு கூறியுள்ளது. அதனைப் பரிசீலித்துப் பாரப்பது எமது கடப்பாடாகும்.

சில இடங்களில் முரண்பாடுகள் காணப்படலாம். ஒவ்வாத தன்மை எழக்கூடும். மேலதிக ஏற்புக்கள் தேவை என்று மனதிற்குப் படலாம். இவை அனைத்தும் மக்களால் பரிசீலிக்கப்பட்டுத் தயாரிப்புக் குழுவிற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

நான் கூட அவ்வாறான எனது கருத்துக்களை வெளியிடுவேன். இந்த வரைவை யார் தயாரித்தார்கள் என்பதிலும் பார்க்க எந்தளவுக்குக் குறித்த வரைவு எமது தமிழ் மக்களின் உள்ளக் கிடக்கைகளை எதிர்பார்ப்புக்களைப் பிரதிபலிக்கின்றது என்பதே முக்கியம்.

எமது மக்கள் மனமறிய முதல் அடி எடுத்து வைத்து விட்டோம் என்பது தான் இன்றைய நிகழ்வின் முக்கியத்துவம். வரைவில் சில இடங்களில் மாற்றுச் சொற் பிரயோகங்கள் அமைய இடமளித்து குறிப்புரைகள் தரப்பட்டுள்ளமை இவ்வரைவின் சிறப்பம்சமாகும்.

அத்துடன் அரசியல் யாப்பு தயாரிக்கத் தொடங்கமுன் தமிழ் மக்கட் பிரதிநிதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு பூர்வாங்க உடன்பாடு இடம் பெற வேண்டும் என்பதும் ஒரு சிறப்பம்சமாகும்.

எமது வரைவு முற்றிலும் மாற்றப் பட வேண்டும் என்று கூட மக்கள் விரும்பலாம். அத்தகையதொரு நிலை வந்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்வோம்.

காரணம் இந்த செயற்பாட்டில் வெளிப்படைத்தன்மை அவசியம். ஜனநாயக வழிமுறை அவசியம். தமிழர் நலம் பேணும் ஆத்மார்த்த எதிர்பார்ப்பும் அவசியம். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, மக்கள் நலம் தேடும் ஒரு புனித கைங்கரியத்தில் நாம் யாவரும் ஈடுபட்டுள்ளோம் என்பதை நாம் மறத்தலாகாது.

வரைவு பற்றி நான் ஏதும் இத்தருணத்தில் கூற வேண்டிய அவசியமில்லை. அதைப் பற்றித் தயாரிப்புக் குழு அங்கத்தவர்கள் பேசுவார்கள்.

ஆனால் ஓரிரு கவனிப்புக்களை நான் கூற வேண்டிய கடப்பாடு உடையேன். ஆங்கிலத்தில் உயவயடலளவ என்று ஒரு சொல் இருக்கின்றது. அதாவது ஒரு செயற்பாட்டைக் கூடிய விரைவில் நடைபெற வைக்கும் ஒரு பொருள் என்று அர்த்தம்.

எமது தமிழ் மக்கள் பேரவை பல நல்ல நடவடிக்கைகளுக்கு முன்னோடியாகப் பரிணமித்துள்ளது. எமது தமிழ் மக்களிடையே அரசியல் யாப்பு ரீதியான சிந்தனைகளை மேலோங்கச் செய்துள்ளது.

அதாவது வெறும் கட்சி அடிப்படையில் சிந்திக்காது தமிழ் மக்களின் தூரகால நலம் பற்றிச் சிந்திக்க வைத்துள்ளது.

எமது தமிழ் மக்கள் பேரவை எந்தக் கட்சிக்குஞ் சார்பாகவோ எதிராகவோ நடக்க முன்வராததால் அவர்கள் வெளிக்கொண்டு வந்திருக்கும் வரைவை மக்கள் யாவரும் சுதந்திரமாகவும் இதய சுத்தியுடனும் பரிசீலிக்க வழி வகுத்துள்ளது.

பல்கட்சியினர் பலர் சேர்ந்து கலந்துறவாடியதால் கட்சிகளுக்கு அப்பால் நின்று கடமையாற்ற வழி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்து அரசியல் ரீதியாக இதுவரை செயற்பட்ட தமிழ் மக்களின் கட்சிகள் யாவும் மக்கள் மனோநிலைக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய ஒரு நிலையை எழுப்பியுள்ளது.

அரசியல் யாப்பு மாற்றங்கள் எவ்வளவு முக்கியமானவை, எத்துணை தொடர் விளைவுகள் கொண்டவை, எந்தளவு கடமையுணர்ச்சியுடனும் கண்ணியத்துடனும், கரிசனையுடனும் பரிசீலிக்கப்பட வேண்டியவை என்பது இப்பொழுது சகலராலும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

மூன்றாவதாக பெரும்பான்மை தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்குச் செயலுரு கொடுத்துள்ளது இன்றைய வரைவு என்று கூறலாம்.

அதாவது எமது தேர்தல் மேடைகளில் சில சொற்களைப் பாவித்துக் கைதட்டல் வாங்கிய காலம் போய் அச்சொற்களின் தாற்பரியம் என்ன, தகைமைகள் என்ன, தத்துவங்கள் என்ன என்றெல்லாம் அலசி ஆராய ஒரு சந்தர்ப்பம் அளித்துள்ளது தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள்.

ஆகவே சொற்களுக்குச் செயலுரு கொடுக்கத் துணைபுரிந்துள்ளது தமிழ் மக்கள் பேரவை. தேசியம் என்றால் என்ன, சுயாட்சி என்றால் என்ன, சமஷ்டி என்றால் என்ன என்று மக்கள் கேட்டு அவற்றிற்கான பதிலைப் பெற்றுக் கொள்ள வழி அமைத்துத் தந்துள்ளது தமிழ் மக்கள் பேரவை.

மேலும் அரசாங்கமானது யாவரிடமும் புதிய அரசியல் யாப்பு வரைவிற்கான கருத்தறியும் ஒரு செயற்பாட்டில் தற்போது ஈடுபட்டிருக்கும் போது எமது செயற்பாடுகள் அதற்கு ஒத்திசைவாக நடந்தேறி வருவது திருப்தியை அளிக்கின்றது.

எந்த ஒரு தனி நபரும், சங்கமும், மக்கள் குழுவும், ஏன் கட்சிகளுங்கூட தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்படும் கருத்தாவணத்தை அடிப்படை ஆவணமாகப் பாவிக்க நாம் வழி அமைத்துக் கொடுத்துள்ளோம்.

மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எமது தமிழ் மக்கட் தலைவர்கள் கூட தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்து என்ன என்பதை ஆராய்ந்தறிந்து அதனை வெளிக்கொண்டு வரவுந் தயங்காதிருப்பது எமக்கு மன மகிழ்வைத் தருகின்றது.

எமது செயற்பாடு தமிழ்ப் பேசும் மக்கள் கருத்தறிந்து செயற்படும் ஒரு நிலைக்கு அரசாங்கத்தை அழைத்துச் சென்றால் அதுவே எமது வெற்றியென்று கருதலாம்.

பதின்மூன்றாவது திருத்தமே தீர்வு, அதற்கு மேல் எதுவுந் தரமுடியாது, சமஷ்டியை வழங்க முடியாது என்றெல்லாம் கூறும் ஆளுங்கட்சி அவற்றிற்கப்பால் சென்று எமது மக்கள் மனம் அறிய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

கட்சிகளை மையமாக வைத்து இப்பிரச்சனையை அணுகாமால் களநிலையை அறிந்து கருத்துக்கு முதலிடம் கொடுத்து சர்வதேச தமிழ்ப் பேசும் மக்களின் ஒருமைப்பாட்டுடனும்,

எமது தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் அதாவது வடகிழக்கு மாகாணத் தமிழரும், முஸ்லீம்களும், மலையக மக்களும் நிலையான ஒரு அரசியல் தீர்வைப் பெற எமது இந்த கைங்கரியமானது வழி வகுக்கட்டும் என்றார்.

இங்கே அழுத்தவும் தீர்வுத்திட்ட முன்வரைவுனை படிப்பதற்கு

NYT confines justice to US paradigm

no justice for Sri Lanka’s war victims 2NYT confines justice to US paradigm[TamilNet]

New York Times being happy about genocidal Colombo’s President Maithripala Sirisena righting “Rajapaksa government’s tilt toward China” is of no concern to Eezham Tamils. But whether Rajapaksa or Sirisena, the USA refusing to see genocide and imposing the ‘Sri Lanka’ paradigm on the genocide-affected nation of Eezham Tamils is the core injustice to world Tamils as well as to peoples of similar plight in world humanity. Justice cannot come through fundamentally unjustifiable resolutions spearheaded by the USA at the UNHRC that failed to recognize even the name Tamil, commented Tamil activists for alternative politics in the island, responding to NYT editorial “Time for Justice in Sri Lanka.” Full story >>


Civil society misses target [TamilNet]

From pre-Mu’l’livaaykkaal to present times, while there is a very obvious pattern in the genocidal miseries faced by the nation of Eezham Tamils, designed and executed from outside of the island, the civil society misses target and misleads the people by talking of Sirisena and Wickramasinghe, commented Tamil activists for alternative politics in the island. They were responding to the latest statement coming from the civil society passing the blame on the ‘mixed signals’ coming from Sirisena and Wickramasinghe in implementing the 2015 Geneva resolution. The struggle outlook of the civil society is fundamentally wrong in basing their discourse on the flawed US-set agenda at Geneva. The civil society will not be passing any message to world humanity without pinpointing the role of the ultimate culprits and addressing them to their face, the activists said. Full story >>

Wounds of war cannot be healed without justice – NYT[TamilNet]

Asserting as unacceptable Sri Lanka’s President Sirisena’s statement that his government will not act in “haste” to move forward the justice process demanded by the U.N. resolution of last October, the New York Times in today’s editorial said, “[t]roubling allegations of torture under Mr. Sirisena’s watch — which his government denies — must be addressed. Military leaders who oversaw the bloody operations that killed as many as 40,000 Tamil civilians in the final months of the war remain in command, and have even been promoted. A dangerous anti-Muslim campaign by Singhalese nationalists is threatening to further fray Sri Lanka’s ethnic fabric.” Full story >>

UN should refer Sri Lanka to ICC, or setup criminal tribunal, says Boyle[TamilNet]

Condemning Sri Lanka’s President’s rejection of any international involvement in investigating alleged war crimes committed during Sri Lanka’s civil war, Professor Francis Boyle, an expert in International Law and who teaches at the University of Illinois College of Law, said “Sri Lanka’s President Sirisena himself has now driven the proverbial stake through the heart of the genocidal Vampire of a GOSL domestic mechanism dressed up with the fig-leaf of meaningless international participation,” and added, “[i]f the reference of the GOSL to the International Criminal Court by the U.N. Security Council is still stymied by a threatened veto…the UN must establish an International Criminal Tribunal for Sri Lanka as a “subsidiary organ” under U.N. Charter article 22.” Full story >>


Sri Lanka’s missing thousands: one woman’s six-year fight to find her husband

andhya Eknaligoda has had a date at court in Homogoma, Sri Lanka, every month for the past six years. The 52-year-old counts the number of appearances at more than 90 and they are aimed at securing one thing – finding her husband. Journalist and cartoonist Prageeth Eknaligoda disappeared without a trace on 24 January 2010 after a mysterious telephone call led him…

[The Guardian ] more …


Authorities Arrest Son of Ex-Leader in Sri Lanka

Sri Lankan authorities arrested a son of former President Mahinda Rajapaksa on money-laundering charges on Saturday, the government’s latest attempt to prosecute members of the previous administration, many of whom have been under investigation since Mr. Rajapaksa’s election defeat last year. The police said Mr. Rajapaksa’s 27-year-old son, Yoshitha, a…

[New York Times ] – more …


Domestic war crimes probe: Lack of clarity as Government tries balancing act

With local council elections only six months away, according to his own agenda, President Maithripala Sirisena dropped a bombshell last week. He declared that foreign judges and prosecutors should not be involved in investigations into allegations of war crimes by troops and Tiger guerrillas. It was only a week earlier he declared that local polls would be held in…

[Sunday Times] – more …


Those Who Killed Media Freedom Still At Large

 We have been talking about media freedom for a long time now. Many a time, those in power had tried to intimidate journalists through abducting them, and by killing them. Some journalists escaped from this merciless treatment, fled the country seeking refuge overseas leaving their loved ones in Sri Lanka. They sacrificed their whole lives for the fight against…

[Sunday Leader ] more …


Patriotism Vs Racism

 Someone said that patriotism in Sri Lanka is sacrificing one’s neighbour to salvage your motherland! Sri Lanka has seen the ugly head of racism and Sinhalese chauvinism trying to make a comeback during the recent past. One would ask whether Sri Lanka would head back to a tribal past, a primitive society based on ethno-religious lines, instead of pursuing on becoming…

[Sunday Leader] more …

அமெரிக்காவின் சதிகளும் இலங்கையின் புதிய அரசியல் சாசனம் எனும் பூதமும்

USA WAR CRIMES2009 போரை நடத்திய அமெரிக்கா அதன்பின் தொடர்ந்து தமிழர்களின் கோரிக்கையினை அழிக்கும் வேலையினை செய்து கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதிதான் வடக்கு மாகாணத் தேர்தலும், வருடந்தோறும் ஐநாவில் நடக்கும் அயோக்கிய அமெரிக்க தீர்மானமெனும் நாடகங்களும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கோரிக்கையினை சிதைத்து வந்த அமெரிக்கா ஒட்டுமொத்தமாக தமிழர்களின் அரசியல் வெளியை முடிவுக்கு கொண்டுவர விரும்பி செய்வதுதான் இலங்கையில் இயற்றப்படவிருக்கும் புதிய அரசியல் சாசனம்.

அதாவது போர் முடிந்த பின் 2010 நவம்பர் 8 ல் அமெரிக்க கடற்படையின் போர் பயிற்சி கல்லூரியில் ’இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் எதிர்காலம்’ எனும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

அதில் அமெரிக்காவின் சார்பாக பேசிய அமெரிக்காவின் உயரதிகாரி இராபர்ட் கெப்லான் (Robert Kaplan).21ஆம் நூற்றாண்டில் இந்திய பெருங்கடலின் அவசியம் குறித்து பேசிகிறார். அதில் அவர் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கடலில் இருக்கும் இலங்கையில் அரசியல் சூழலை நமதாக்கும் பட்சத்தில் இந்த பெருங்கடலின் பெரும் பகுதியை நமது கட்டுக்குள் கொண்டு வரமுடியும். அதற்காக இலங்கையில் நிலவும் முரண்பாடுகளை வெகு விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து இலங்கையோடு இராணுவ மற்றும் பொருளாதார ஓப்பந்தங்கள் செய்துகொள்ளவேண்டுமென்றும் அதற்கேற்றபடி அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை வடிவமைக்கவேண்டுமென்றும் பேசுகிறார். இந்த உரை புத்தகவடிவிலும் வெளிவந்திருக்கிறது. அதற்கு இந்தியாவின் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சசிதரூர்தான் விளக்கவுரை எழுதியிருக்கிறார்.

இதனையடுத்து அமெரிக்க தீர்மானங்கள் வரிசையாக ஐநாவில் வருகிறது. இதன் மூலம் இலங்கையின் அரசியலை அமெரிக்கா கட்டுப்படுத்த ஆரம்பிக்கிறது. இந்நிலையில் இராசபக்சேவின் சீனா சார்பு நிலைப்பாடு இடைஞ்சலை கொடுக்க இராஜபக்சேவை இந்தியாவின் மூலம் மாற்றிவிட்டு அந்த இடத்தில் அமெரிக்க சார்பு சந்திரிக்கா மற்றும் இரணிலை மையப்படுத்தி மைத்திரிபால சிறீசேனா அமரவைக்கப்படுகிறார்.usa hopper-diplomacy

அதன்பின் ஐநாவில் பான்கீ மூனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஜெப்ரி பெல்ட்மேன் எனும் அமெரிக்க அதிகாரி இலங்கைக்கு வருகை தருகிறார். அவர் வடக்கு மாகாண முதல்வர் மற்றும் இலங்கை அதிபர் இருவரிடமும் அரசியல் தீர்வை நோக்கி நகருங்கள் என்று மிரட்டும் தொனியில் பேசிவிட்டு செல்கிறார்.அதன்பின் அமெரிக்காவின் உயரதிகாரிகள் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்கிறார்கள். இதில் அமெரிக்காவிற்கான ஐநாவின் நிரந்தர உறுப்பினர் சமந்தா பவர் நவ.18-21 மற்றும் தாமஸ் செனான் டிச.14-16 ஆகியோரது வரவு ஈழத்தமிழர்களின் அரசியல் வெளியை இல்லாத செய்துவிடுகிறது.

சமந்தா பவர் இலங்கையின் புதிய அரசியல் சட்டம் இயற்றப்படவேண்டுமென்றும் அதன் மூலம் தமிழர்களின் பிரச்சனையை சர்வதேச அளவில் இல்லாமல் செய்யமுடியுமென்றும் உயர் மட்டளவில் பேசிவிட்டு செல்கிறார்.

அடுத்தாக வந்த தாமஸ் செனான் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மேற்கொள்ளப்பட வேண்டிய இராணுவ ஓப்பந்தங்கள் குறித்தும் சீனாவின் பிடிக்கு மீண்டும் போகாமலிருக்கவும் வேண்டிய வேலையை செவ்வனே செய்துவிட்டு போகிறார்.

இந்த இருவரின் வருகைக்கு பின் அமெரிக்காவுக்கான இலங்கை தூதர் அதுல் கேஸ்கெப் (Atul Keshap) புதிய அரசியலமைப்பை அனைத்து தரப்பும் ஏற்றுக்கொள்ள செய்ய வேண்டி சிங்கள் மற்றும் தமிழ் தரப்புகளை சந்திக்கிறார்.tna traitors 5

இப்படி இலங்கையின் அரசியலை கிட்டதட்ட முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒரு தீர்வும் இல்லாமல் செய்யும் வேலையை அமெரிக்கா மிகச் சாதுர்யமாக செய்துகொண்டுள்ளது.இதற்கு ஒத்து ஊதுவதற்கு சம்பந்தன், சுமந்திரன் போன்ற தமிழ் தரப்பும், சர்வதேச வெளியில் இதனை கொண்டுசெல்ல சிங்கள ரத்னா ’ஹிந்து’ பத்திரிக்கையும் வேலைசெய்ய ஆரம்பித்திருக்கிறது. இன்று கூட கோபாலாகிருஷ்ண காந்தி என்ற நபரின் கட்டுரையை அது வெளியிட்டிருக்கிறது. அதில் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமென்றும் தமிழர்கள் ஒன்றை இலங்கைக்குள் அரசியல் திர்வை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்றும் இந்தியாவின் பழைய பல்லவியை மீண்டும் வெற்று பேச்சை பேசியிருக்கிறார்.

இப்படி நாலாப்பக்கமும் தமிழர்களின் அரசியல் வெளியை முற்றும் முழுதாக இல்லாமல் செய்யும் வேலையை செய்யும் அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் சதிகளை முறியடிக்க வேண்டிய காலகட்டத்தில் தமிழர்கள் நாம் இருக்கிறோம். ஆகவே அதற்குண்டான செயல்களில் தமிழர்கள் உடனடியாக ஈடுபடவேண்டும்.

Kondal SamyBruce Fein

தமிழர்களின் ஓகக் கலையை மீட்போம்!

தமிழ்ச் சித்தர்கள் உலகிற்கு வழங்கிய ஒப்பற்ற ஓகக்கலைகளின் தமிழ்ப்பெயர்களை அறிவோம் !!

tamil yoga

தமிழர்களின் ஓகக் கலையை மீட்போம்! தமிழ்ச் சித்தர்கள் உலகிற்கு வழங்கிய ஒப்பற்ற ஓகக்கலைகளின் தமிழ்ப்பெயர்களை அறிவோம் !!

இத்தனை காலங்கள் நம்முடைய கலைகளை வடநாட்டு ஆரியர்கள் சமஸ்கிருத பெயர் சூட்டி அவர்கள் கலைகளாகவே மாற்றினர். தமிழகத் தமிழர்களும் இந்த ஓகக் கலைகள் யாவும் தமிழர்களுடைய கலைகள் அல்ல அவை ஆரியக் கலைகள் என்றே நம்பி வந்தனர். அதனால் இக்கலைகளின் தமிழ்ப் பெயர்களை மீட்க எந்த நடவடிக்கையும் தமிழ் ஆசிரியர்களே எடுக்க வில்லை என்பது வேதனையான விடயம். மேலும் சமஸ்கிருத மொழியில் ஓகக் கலைகளை சொல்லிக் கொடுப்பது தான் மேன்மையான அறிவு என்றும் கருதினர் சில தமிழ் ஆசான்கள்.

தமிழில் சொல்லிக் கொடுத்தால் அது எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்வார்கள் அதனால் தங்கள் தொழில் பாதிக்கப்படும் என்றும் சிலர் கருதினர். ஆரியர்களும் அவ்வாறே புரியாத மொழியில் ஓகக் கலைகளை மக்களுக்கு சொல்லிக் கொடுத்து வந்தனர். அதனால் ஒட்டுமொத்த ஓகக் கலைகளுக்கும் தாங்கள் தான் உரிமைதாரர்கள் என்றும் கூறிவருகின்றனர் ஆரிய மதத்தினர். இந்நிலையில் தமிழ்நெறி வாழ்வியல் ஆசான் திரு. குப்பு அசித்தர் தமிழர்களின் ஓகக் கலைகளின் பெயர்கள் முழுவதையும் இப்போது மீட்டு நமக்கு தந்துள்ளார் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். தமிழர்கள் யாவரும் இனி ஓகக் கலைகளை தங்கள் தாய்மொழியிலேயே எளிதில் பயிலலாம். இக்கலைகள் குறித்த ஐயங்களை திரு குப்பு அசித்தர் அவர்களை தொடர்பு கொண்டும் தெளிவடையலாம்.
#தமிழ்வாழ்க
————————–————————–——

ஓக இருக்கைகளின் தமிழ்ப் பெயர்களுக்கு இணையான பிற மொழிப் பெயர்கள் பட்டியல்

இயற்கை – NATURE

தமிழ்ப் பெயர்கள் , வடமொழிப் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள்

1. ஞாயிறு வணக்கம் – சூரிய நமசுகாரம் – SALUTE TO THE SUN
2. ஒற்றைக்கால் ஞாயிறு வணக்கம்- ஏகபாத சூரிய நமசுகாரம் – SALUTE THE SUN ON ONE LEG
3. அரை நிலாவிருக்கை – அர்த்த சந்திராசனம் – CRESCENT POSTURE
4. மலையிருக்கை – மேரு ஆசனம் – MOUNTAIN POSTURE
5. மலை நிமிர்வு இருக்கை – தாடாசனம் – MOUNTAIN ERECT POSTURE

நிலைத்திணை / பயிர் உயிரிகள் – PLANTS

6. தாமரை இருக்கை – பத்மாசனம் – LOTUS POSTURE
7. எழும்பு தாமரை இருக்கை – உத்தித பத்மாசனம் – RAISED LOTUS POSTURE
8. பூட்டிய தாமரை இருக்கை – பத்த பத்மாசனம் – LOCKED LOTUS POSTURE
9. நாணல் முதுகு இருக்கை – பச்சிமோத்தாசனம் – BACK ERECTING POSTURE
10. மரவிருக்கை – டோலாசனம் – TREE POSTURE
11. மூங்கில் வளைவு இருக்கை, கை கால் இணைவிருக்கை / – பாத அசுதாசனம் – HAND AND FOOT POSTURE

விலங்கு – CREATURES

நீர் உயிரிகள் – AQUATICS

12. தவளை இருக்கை – பெக்காசனம் – FROG POSTURE
13. மீன் இருக்கை – மச்சாசனம் – FISH POSTURE
14. சுறவம் இருக்கை – மகராசனம் – SHARK POSTURE
15. முதலை இருக்கை – மக்கராசனம் – CROCADILE POSTURE
16. சங்கு இருக்கை /
உடல் முறுக்கும் இருக்கை – வக்ராசனம் – SEA SHELL POSTURE
17. ஆமை இருக்கை – கூர்மாசனம் – TORTOISE POSTURE 18. கை நீட்டிய ஆமை இருக்கை விக்சேபம் கூர்மாசனம் – HAND STRETCHED TORTOISE POSTURE

ஊர்வன – REPTILES

19. தேள் இருக்கை – விருச்சிக ஆசனம் – SCORPION POSTURE
20. பாம்பு இருக்கை – புசங்காசனம் – SERPENT POSTURE

நடப்பன – VERTEBRATE

21. ஆமுகவாய் இருக்கை – கோமுகாசனம் – COW FACE POSTURE
22. ஆவினிருக்கை – கோவாசனம் – COW POSTURE
23. பூனை இருக்கை – பில்லியாசனம் – CAT POSTURE
24. ஒட்டகவிருக்கை – உசர்ட்டாசனம் – CAMEL POSTURE
25. நாய்முக இருக்கை – அதோமுக சுனங்கனாசனம்- DOG FACE POSTURE
26. புலி இருக்கை – வியாகராசனம் – TIGER POSTURE
27. அரிமா இருக்கை – சிம்மாசனம் – LION POSTURE
28. மிடுக்கான குதிரை இருக்கை – கம்பீர அசுவினி தீரனாசனம்- BRA
29. முயல் இருக்கை – சசாங்காசனம் – RABBIT POSTURE
30. நரி இருக்கை – மார்சரி ஆசனம் – FOX POSTURE

பறப்பன – AVES & INSECTS

31. வெட்டுக்கிளி இருக்கை – சலபாசனம் – GRASSHOPPER (LOCUST) POSTURE
32. அரை வெட்டுக்கிளி இருக்கை – அர்த்தசலபாசனம் – SEMI GRASSHOPPER POSTURE
33. மயிலிருக்கை – மயூராசனம் – PEACOCK POSTURE
34. புறாவிருக்கை – கப்போட்டாசனம் – DOVE POSTURE
35. பறக்கும் புறாவிருக்கை – உடுத்தாஉவா கப்போர்ட்டா- FLYNG DOVE POSTURE
36. கொக்குவிருக்கை – பக்காசனம் – CRANE POSTURE
37. ஒற்றைக்கால் கொக்குவிருக்கை – ஏகபாத பக்காசனம் – SINGLE FOOTED CRANE POSTURE
38. கலுழன் இருக்கை – கருடாசனம் – EAGLE POSTURE
39. சேவல் இருக்கை – குக்குடாசனம் – COCK POSTURE
40. நிற்கும் மயிலிருக்கை – கடுடா மயூராசனம் – STANDING PEACOCK POSTURE
41. வாத்து இருக்கை – அம்சாசனம் – DUCK POSTURE

நடனம் – DANCE

42. நடன இருக்கை – நடனாசனம் – POSTURE OF NATARASA
43. களிக்கூத்து – ஆனந்த தாண்டவம் – PLEASURE DANCE POSTURE
44. கூத்தரசன் இருக்கை – நடராச ஆசனம் – KING OF DANCE POSTURE
45. வீர அடைவு இருக்கை – வீர அனுமான் ஆசனம் – BRAVE STEP POSTURE

முத்திரை – GESTURE

46. ஓக முத்திரை – யோகமுத்ரா – OGAM GESTURE
47. பெரு முத்திரை – மகாமுத்ரா – GREAT GESTURE
48. படையல் முத்திரை – அஞ்சலி முத்ரா – HOMAGE GESTURE
49. குதிரை மலவாய் முத்திரை – அசுவினி முத்ரா – HORSE’S ANAL GESTURE
50. ஆறுமுக முத்திரை – சண்முக முத்ரா – HEXAGON GESTURE

கருவிகள் – TOOLS

51. நாற்காலி இருக்கை – உட்கட்டாசனம் – CHAIR POSTURE
52. அரசரிருக்கை – பூரண உட்கட்டாசனம் – THRONE POSTURE
53. சக்கரவிருக்கை – சக்ராசனம் – WHEEL POSTURE
54. அரைசக்கரவிருக்கை – அர்த்தகடி சக்கராசனம் – SEMI WHEEL POSTURE
55. வில்லிருக்கை – தனுராசனம் – BOW POSTURE
56. காதருகுவில்லிருக்கை – ஆகர்ண தனுராசனம் – EXTENDED BOW POSTURE
57. படகிருக்கை / நாவாய் இருக்கை – நவாசனம் – BOAT POSTURE
58. முக்கோணவிருக்கை – திரிகோனாசனம் – TRIANGLE POSTURE
59. பரிமாற்ற முக்கோணவிருக்கை – பரிவர்த்த திரிகோனாசனம்- TRANSFER TRIANGLE POSTURE
60. கலப்பை / ஏர் / உழவிருக்கை – அலாசனம் – PLOUGH POSTURE

தொழில் – ACTIVITIES

61. வழிபாட்டிருக்கை – சசாங்காசனம் – WORSHIP POSTURE
62. வீரவிருக்கை – வீராசனம் – BRAVE POSTURE
63. நெற்றிக்கண் வழியன் இருக்கை – வீரபத்ராசனம் – GLABELLA VIEW POSTURE
64. அம்மி அரைக்கும் இருக்கை – உபவிசுட்டகோணாசனம் – GRINDING POSTURE
65. காலணிதையலிருக்கை – பத்ராசனம் – SHOEMAKER POSTURE
66. தேரோட்டி இருக்கை – சாரதாசனம் – CHARIOT RIDER POSTURE
67. தலை முழங்கால் இருக்கை, பூத்தொடுக்கும் இருக்கை / – சானுசீராசனம் – HORIZONTAL U POSTURE , MAKING GARLAND POSTURE.

உடல் உறுப்புகள் – ORGANS OF HUMAN BODY

68. இணை காலடி இருக்கை – சமபாதாசனம் – PARRALLEL FOOT POSTURE
69. ஒரு காலூன்றி இருக்கை – நின்ற பாதாசனம் – SINGLE LEG POSTURE
70. கோண இருக்கை – கோணாசனம் – ANGLED POSTURE
71. விலாப்பக்க கோண இருக்கை – பார்சுவ கோணாசனம் – RIBSIDE ANGLED POSTURE
72. மண்டிவல்லிருக்கை – வச்சிராசனம் – FIRM KNEELING POSTURE
73. மழலை இருக்கை – பாலாசனம் – CHILD POSTURE
74. கிடைநிலை வல்லிருக்கை – சுப்த வச்சிராசனம் – SUPINE ANKLE POSTURE
75. குந்தி கைகூப்பு இருக்கை – உட்கட்டாசனம் – PERCH AND SALUTE WITH STRETCHED ARMS ABOVE HEAD
76. கை கூப்புகை தாமரை இருக்கை- பர்வட்டாசனம் – OVERHEAD RAISING OF ARMS AT LOTUS POSTURE
77. மாற்று அமர் இருக்கை – அர்த்தமத்ச்யேந்தராசனம் – CONTRA SITTING POSTURE
78. பூட்டிய கோணவிருக்கை – பத்தகோணாசனம் – LOCKED ANGLE POSTURE
79. நீள்காலடி இருக்கை – உத்தான பாதாசனம் – RAISED FOOT ERECT
80. ஓகத்துயில் – யோக நித்ரா – OGAM SLEEP
81. அரை உடல் இருக்கை – விபரீதகரணி – HIP STAND POSTURE
82. முழு உடல் இருக்கை – சர்வாங்காசனம் – SHOULDER STAND
83. பாதி முழு உடல் இருக்கை – பர்வதாசனம் – SEMI SHOULDER STAND
84. மேடை இருக்கை – பீடாசனம் – STAGE POSTURE
85. பகுதலை இருக்கை – அர்த்த சிரசாசனம் – SEMI INVERTTED
86. தலை இருக்கை – சிரசாசனம் – INVERTTED POSTURE

தூய்மை – CLEANSING

87. வளிகழித்தலிருக்கை – பவன முக்தாசனம் – WIND RELEASING TECHNIQUE
88. வளி எழுப்பிக்கட்டுவிருக்கை – உட்டியானபந்தம் – FLYUP LOCK
89. குடல் சுழற்றியிருக்கை – நௌலி – BOWEL CIRCULATING POSTURE

90. மூச்சொழுக்கம் – பிராணாயாமம் – ORDER OF BREATH
91. தலை தூய்மை – கபாலபாதி – CLEANSING OF BRAIN
92. துருத்தி மூச்சு – பசுதிரிகா – BELLOW BREATH
93. சீழ்க்கை – சீத்காரி – WHISTLING
94. நீர்த் தூய்மை – சலநேதி – WATER CLEANSING
95. குளிர் சீழ்க்கை – சீத்தளி – COOL WHISTLE
96. மூலக்கட்டு – மூலபந்தம் – ANAL CONTRACTION
97. நாடித் தூய்மை – நாடி சுத்தி – CLEANSING OF PULSE
98. தேனீ ஒலி – பிராமரி – HONEY BEE HISSING
99. கண் தூய்மை – திராடகா – EYE CLEANSING
100. பல்லிடுக்கில் காற்றுறிஞ்சல் – சதந்தா – INHALING THROUGH CLEANCHED TEETH

101. உள் மூச்சு – அனுலோமம் – INHALING
102. வெளி மூச்சு – விலோமம் – EXHALING
103. தொண்டை ஒலி – உச்சயி – HISSING OF PHARYNX

நிறைவு நிலை – PACIFICATION

104. இயல்பிருக்கை – சுகாசனம் – AT EASE POSTURE
105.. அமைதி இருக்கை – சவாசனம், – LYING RELAX POSTURE

– Kuppu Asitthar தமிழர் வாழ்வியல் நெறி ஆசான் குப்பு அசித்தர், அலைபேசி எண் – 8124264844

நன்றி – தூய தமிழ்ச்சொற்கள்

Sri Lanka constitution: What’s in it for the Tamils?

usa hopper-diplomacySri Lanka constitution: What’s in it for the Tamils?

SRI LANKA’S new government, which is taking steps to draw up a new constitution, is likely to cheat Tamils out of a political system that reflects their aspirations. Restrictions imposed by the government on the constitution-making process even before it has begun signal that Tamils will remain under-privileged citizens unless they mount a concerted challenge to the…

[Asian Correspondent ]- more …


Time for Justice in Sri Lanka

Just a little over a year ago, voters in Sri Lanka rallied to elect a new president, with high hopes that he would usher in a new era of government accountability and bring healing to a country fractured by the brutal civil war that ended in 2009. President Maithripala Sirisena has taken bold steps to fulfill those hopes since his election last January. But the…

[New York Times ] – more …


Sri Lanka In 2016: New Constitution Offers Hope Of Addressing Old Grievances – Analysis

The peace that was attained after a bloody war that terminated in the comprehensive defeat of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in May 2009 has been sustained through 2015 in Sri Lanka. Not a single incident of killing was recorded in 2015, a trend evident since November 2009, barring one incident on April 11, 2014, in which a Security Forces (SFs) team that…

[Eurasia Review] – more …


SL police shields military culprits of rape in East[Tamilnet]

While evidence at the crime scene pointed to the occupying Sinhala navy personnel of the ‘SLNS Vidura’ naval base as culprits of the alleged abuse and brutal murder of 6-year-old Tamil boy Tharshan Kugathasan, who was dumped into an abandoned well near the Vidura camp at Champoor on Monday, the Sinhala police of genocidal Colombo was attempting to shield the criminals, the resettled Tamil villagers told TamilNet on Wednesday. The detection dogs brought by the SL police were sniffing towards the Navy camp. In the meantime, a Tamil girl, who was sexually abused by three Sinhala soldiers at Chanthi-ve’li in Batticaloa five years ago at the age of eight, is still fearing for the lives of herself and family members. One of the abusers was still deployed in the area. Her father seeking justice was subjected to ‘grease devil’ attack and had to leave the island on employment. Full story >>


Mark February 04 as Black Day: Families of forced disappeared[Tamilnet]

The kith and kin of Eezham Tamils, who are reported missing after being captured by the occupying military of genocidal Sri Lanka, on Thursday demanded the Tamil politicians, Northern Provincial Council and the Eezham Tamil civil society to publicly denounce genocidal Colombo on February 04 on the so-called independence day of ‘Sri Lanka’ observing the day as a Black Day. Grassroots organisations, including the Citizens’ Committee of Mannaar, condemned the SL Prime Minister Ranil Wickramasinghe and the SL Minister of Health Rajitha Senaratne for their recent attempts to classify thousands of Eezham Tamils missing at the hands of the Sinhala military as dead. Full story >>

சர்வதேச சமூகத்தின் தொடரும் முண்டுகொடுப்புக்களே சிங்களத்தின் உறுதி மீறல்களுக்கு காரணம்!

tna war crimesஒப்பந்தங்களை கிழித்தெறிவதும் உடன்படிக்கைகளை மீறுவதும் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடுவதும் சிங்கள அரசுகளின் தேசிய குணங்களாகவே மாறிப்போய்விட்டன என்பதனை நல்லாட்சி அரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கää ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆகியோரும் நிரூபித்துள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களின் ஆதரவுடன் இயங்கிய துணை ஆயுதக்குழுவினராலும் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகளின் குடும்பத்தினர் இருக்கிறார்களா இல்லையா என்ற பரிதவிப்புடனேயே அவர்களின் விடுதலைக்காக போராடிவருகின்றார்கள். இந்நிலையில் அவர்களின் நெஞ்சில் இடிவிழுவது போல் ரணில் விக்கிரமசிங்க பேசியிருப்பது தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

காணமல் போனோர் தொடர்பாக இதுவரை இருபதாயிரத்திற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பல்வேறு காலகட்டத்தில் செய்யப்பட்டுள்ள போதிலும் இவற்றில் ஒன்றிற்கேனும் இதுவரை உரிய தீர்வு காணப்படவில்லை. 2009 மே 18 இற்கு முன்னர் தமிழ் இளைஞர் யுவதிகள் கைதுää கடத்தல்கள் மூலம் காணாமலாக்கப்பட்ட சு10ழ்நிலையில் இறுதிப் போரின் போதும் அதன்பின்னரும் இராணுவத்திடம் குடும்பத்தவர்கள் முன்னிலையில் ஒப்படைப்பு செய்யப்பட்டவர்கள் மற்றும் புலிகள் என்ற பொய்க் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளவர்களென பல்லாயிரம்பேரின் கதிகுறித்து பதிலுரைக்க வேண்டியது சிங்கள அரசின் கடமையாகும்.

இந்நிலையில் தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கலை நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போது காணாமல் போனவர்களில் அதிகாமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என ரணில் கூறியிருப்பதானது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பல ஆண்டுகளாக முடிவின்றித் தொடரும் காணாமல் போனோரின் விவகாரத்தை முடித்து வைப்பதுதான் நோக்கமாயின் அவர்களுக்கு மரணம் சம்பவித்த சந்தர்ப்பத்தினையும் அதற்கு காரணமானவர்கள் குறித்தும் வெளிப்படுத்தி குற்றவாளிகள் தண்டிக்கபடுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதுமே உரிய வழிமுறையாகும்.usa hopper-diplomacy

ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சானது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதாக இருந்க்கின்றதென்றால் மைத்திரிபால சிறிசேனாவின் பேச்சு சிங்கள ஆட்சி அதிகாரத்தின் கீழ் தமிழர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்பதனை மீண்டும் ஒருதடவை இடித்துரைத்துள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை. அது குறித்த விசாரணைகள் முற்றிலும் உள்நாட்டு விசாரணையாகவே அமையும். இலங்கை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வெளிநாட்டு நிபுணர்கள் தேவையில்லை. வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டுவரவும் ஒருபோதும் இணங்க மாட்டேன். எமது நாட்டு நீதித்துறையில் எமக்கு நம்பிக்கையுள்ளது. வெளிநாடுகளில் அரசியலமைப்பு மனித உரிமைகள் போன்ற பல்வேறு துறைகளில் நிபுணர்களாக இருக்கும் இலங்கையர்களை விசாரணைக்காக வரவழைக்கலாம். இவ்விடயத்திலும் சர்வதேச தலையீட்டுக்கு ஒரு போதும் இணங்கப்போவதில்லை. சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா லண்டன் பி.பி.சி. வானொலிக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட இலங்கையில் நடைபெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணையில் கொமன்வெல்த் நாடுகள் உள்ளிட்ட வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் நிபுணர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கியதுடன் அதனை ஏற்றுக்கொண்டு முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக சர்வதேச சமூகத்தின் முன்பாக உறுதிமொழி வழங்கியிருந்த நிலையில் மைத்திரியின் இப்பேச்சானது வழக்கமான சிங்களத் தலைமையின் இயல்பினை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள்ää போர்க்குற்றங்கள் உள்ளடங்கலான இனப்படுகொலைக் குற்றங்களுக்கு மூல காரணமாக விளங்கும் சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும்ää நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இனவழிப்பு போர் காலத்தைப் போன்று இன்றும் தொடர்வதற்கு சர்வதேச சமூகத்தினது பொருளாராதார இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டுகொடுப்புக்களும் ஒரு பக்கச்சார்பான தலையீடுகளும் தொடர்வதே காரணமாகும்.

இந்துமகா சமுத்திரத்தின் மையப்புள்ளியில் இலங்கைத் தீவு அமைந்துள்ள காரணத்தினால் இயற்கையாக அமையப்பெற்ற கேந்திர முக்கியத்துவமும் உலக நாடுகளின் இராணுவ பொருளாதார கேந்திர நலன்களும் ஒரே புள்ளியில் இணைந்திருப்பதை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சித்துவரும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் பொய்யான வாக்குறுதிகள் மூலம் அனைத்துலக ஆதரவினை தக்கவைப்பதுடன் நின்றுவிடாது அவர்களை தமிழர்களின் தேசிய அபிலாசைக்கு எதிராகத் திருப்பிவிடும் கைங்கரியத்திலும் ஈடுபட்டுவருகின்றனர்.

சிங்களத்தின் இரட்டை வேடமும் சர்வதேச சமூகத்தின் பாராமுகமும் தொடர்வதற்கான ஏது நிலையினை தமிழ் அரசியல் தலைமைகளின் கையாலாகத்தனமே ஏற்படுத்தியுள்ளது. தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை ஆகிய தமிழர்களின் மூலாதாரக் கோட்பாட்டின் அடிப்படையிலான தீர்விற்கு மாற்றான ஒரு தீர்வை இணக்க அரசியலின் பெயரால் தாயகத் தமிழ் அரசியல் தலைமையும் சில புலம்பெயர் தலைமைகளும் ஏற்கத்தயாராகியுள்ளமையே தமிழர்களின் தேசிய அபிலாசைகள் குழிதோண்டிப் புதைக்கபடும் ஏது நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழர் தரப்பை பலவீனப்படுத்தி எமது தேசிய அபிலாசைகளை குழிதோண்டிப் புதைப்பதற்கும் அனைத்துலக சமூகத்தை ஏமாற்றுவதிலுமே ரணில்-மைத்திரி அரசு அதீதகவனம் செலுத்திவருகின்றது. அரசியல் பொருளாதார கேந்திர நலன்களுக்காக சர்வதேசம் ஏமாந்து போவதற்கோ அல்லது ஏமாந்து போவதாக காட்டிக்கொள்வதற்கோ தயாராக இருக்கலாம். ஆனால் இழப்பதற்கோ விட்டுக்கொடுப்பதற்கோ எதுவுமே மிச்சம்மீதியில்லாத கையறு நிலையில் நின்றுகொண்டிருக்கும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் தரப்பாகிய நாம் எதிர்பார்ப்பது இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதியாகும்.

-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

மாகாணத்தின் அதிகாரங்களை மத்திய அரசு கையாள்வது எமது படுக்கையறையில் அந்நியர் படுத்திருப்பதற்கு சமன்

wicki province rightsபல இழுபறிகளின் பின்னர் இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தைக் கூட்டியிருப்பதற்காக எங்கள் அரசாங்க அதிபரைப் பாராட்டுகின்றேன். மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் பொதுவான தாற்பரியத்தை நாங்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்த போது இப்பேர்ப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திற்கான தேவை இருக்கவில்லை. ஏனெனில் மாவட்டச் செயலாளர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் மாகாணசபையின் கண்காணிப்பின் கீழேயே அப்போது கடமையாற்றினார்கள். அதன் பின்னர் ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்தில் இரட்டை நிர்வாகச் செயற்பாட்டை உருவாக்கும் வண்ணம் மாவட்டச் செயலாளர்கள் மத்திக்குக் கீழ் கொண்டு வரப்பட்டனர்.

இதனால் மாகாண சபைகளுக்கு இலங்கை இந்திய உடன்பாட்டின் கீழ் ஒற்றையாட்சியின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரப்பகிர்வு பாதிக்கப்பட்டது. முக்கியமாக வட, கிழக்கு மாகாணங்களுக்குகென்றே இனப்பிரச்சினையைத்தீர்க்க அதிகாரப்பகிர்வானது 13 ஆவது திருத்தச் சட்டத்தினால் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஒற்றையாட்சி என்றதால் ஜனாதிபதியின் உடன்பாட்டினால் வழங்கப்பட்ட உரித்தை மீளப்பெறக்கூடியதாகவிருந்தது. மாவட்ட செயலாளர்களைத் திரும்பவும் மத்திய அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்ததால் நிர்வாகத்தில் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கின. அதை நிவர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் காலத்தில் HA/DG/D/DP என்ற 1996 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மத்தியையும் மாகாணத்தையும் ஒருங்கிணைத்து நிர்வாகத்தை முன்நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. உண்மையில் திரும்பப்பெற்ற உரித்தை மாகாணங்களுக்கே திருப்பி அளித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை.

ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு மாகாணம் சார்பில் முதலமைச்சரும் மத்தி சார்பில் அமைச்சர் அல்லது அல்லது சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருமே இணைத்தலைவரர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அமைச்சருக்குப் பதிலாக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் என்று அதில் குறிப்பிடும் போது அது ஒரு குறைபாடாகவே சட்டப்படி தெரிந்தது. மாகாண முதலமைச்சர் ஒருவர் அமைச்சர் என்ற ரீதியில் சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் ஒருவராவார். மத்திய அமைச்சர் என்பவரும் அவ்வாறே. அவர்களுக்கு நடைமுறைப்படுத்தும் அதிகாரம் உண்டு. (They have executive powers). ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டவாக்கத் தகைமையையே கொண்டவர்கள் (They are legislators) அவர்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்குபற்றி மக்கள் குறைகளைத் தெரியப்படுத்த வேண்டுமே ஒளிய நடைமுறைப்படுத்தும் பணியினை ஏற்றிருக்கும் முதலமைச்சர் அமைச்சர் என்பவர்களுடன் இணைத்தலைவர்களாக இருக்க முடியாது

வைத்திய கலாநிதி சிவமோகனும் காதர் மஸ்தானும் என்னுடைய நண்பர்கள். அவர்களை நான் குறைகூறவில்லை. அவர்கள் மட்டுமல்ல இங்கிருக்கும் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைத்தலைவர்களாகப் பங்குபற்றினாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் சட்டத்திற்கு ஆட்சேபனை உண்டு. இப்பேர்ப்பட்ட விடயங்களை உச்ச நீதிமன்றத்துக்கா எடுத்துச் செல்வார்கள்? ஆகவே இவை பற்றிப் பேசாது விடுதலே உசிதம். அப்படியாயின் இணைத்தலைவர்கள் பற்றிக் குறிப்பிடுவது ஏனென்று நீங்கள் வினவலாம். அதற்குக் காரணம் உண்டு. இன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய அமைச்சர்களின் கோரிக்கைக்கு அமைய மாகாணசபைகளைக் கிள்ளுக்கீரைகளாக உபயோகிக்க எத்தனிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் வருகின்றார்; மற்றும் சர்வதேச கவனிப்பு எம்பால் ஈர்க்கப்பட்டுள்ளது என்பதற்காக அரசாங்கம் இதுகாறும் வாளாதிருந்துவிட்டு அரசியல் ரீதியாக அவசர அவசரமாக இக்கூட்டங்களை நேரக்கட்டுப்பாடுகளுடன் நடத்த முன்வந்திருப்பது புரிகின்றது. –

ஆனால் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒன்றை வெறுமனே மத்திய அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு நடத்தலாம் என்று நினைப்பது தவறானது. ஒருங்கிணைப்பு என்றால் இருசாராரையும் சேர்த்து வைப்பது. யாரையும் யாரையும் நாங்கள் ஒருங்கிணைக்கின்றோம் என்பதைப் பார்க்க வேண்டும். இது மற்றைய மாகாணங்களில் அத்தனை பெரிதாகப் பார்க்கப்பட மாட்டாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் மத்தியில் இருக்கும் அரசாங்கமும் மாகாணத்தில் இருக்கும் அரசாங்கமும் வேறு வேறு கட்சிகளைச் சேர்ந்திருப்பதால் மத்தியும் மாகாணமும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளைக் கொண்டு செல்வது வடமாகாணத்தில் மிகவும் முக்கியமாக இருக்கின்றது. ஆகவே மத்தியையும் மாகாணத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தும் நபர்கள் இணைத்தலைவர்களாக இருந்து நடத்தினால்தான் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் சட்டவலுப்பெற்றிருக்கும். தனியாக அரசாங்க அமைச்சர்களையோ சட்டவாக்கப் பொறுப்பில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களையோ மட்டும் இணைத்தலைவர்களாகக் கொண்டு ஒரு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை நடத்த முடியாது. நடத்தினால் அது ஒருங்கிணைப்புக் குழு கூட்டமாகாது.

நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்ட மத்தியின் அமைச்சரும் சட்டவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் நடத்தும் ஒரு கூட்டம் ஒருங்கிணைப்புக் கூட்டமாகவே கருதப்படமாட்டாது. அங்கு ஒருங்கிணைப்பு நடைபெற வேண்டுமானால் மாகாணம் சார்பாக நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்ட ஒருவர் அமர்ந்தே தீர வேண்டும். இப்பொழுது எல்லோரும் இதை உணர்ந்து கொண்டுள்ளார்கள் என்று நம்புகின்றேன். இதனால்தான் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நான் தொடக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஈடுபட்ட போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தேன். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒருங்கிணைப்புக் குழுவானது மகிந்த சிந்தனைகளை நடைமுறைப்படுத்தவே நியமிக்கப்பட்டுள்ளது என்று கூறி அதனை நடைமுறைப்படுத்தவே என்னை நியமித்துள்ளதாகக் குறிப்பிட்டதைக் கண்டித்து வடமாகாணம் மகிந்த சிந்தனையை ஏற்கவில்லை என்றும் 38 பேரில் 30 பேர் அச்சிந்தனையை ஏற்காதவர்கள் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்ற கருத்தையும் வெளியிட்டு நடைபெறுஞ் செயற்திட்டங்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தால் நாங்கள் பங்கு பற்றுகின்றோம் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.

அண்மையில் தற்போதைய ஜனாதிபதிக்கும் இது சம்பந்தமான விடயங்களை 13.01.2016 அன்று விளக்கிக் கடிதம் எழுதியிருந்தேன். இன்னமும் அவரின் பதில் கிடைக்கவில்லை. ஒருவேளை சட்டத்திற்குப் புறம்பான விதத்தில் அரசியல் காரணங்களுக்காக நியமனங்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதை ஜனாதிபதி உணர்ந்து கொண்டுள்ளாரோ தெரியவில்லை. நாம் புறக்கணிக்கப்பட்டு மத்தியால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் இந்தக் கால கட்டத்தில் இதனை ஆவணப்படுத்த வேண்டும் என்ற காரணத்திலேயே இதனை இப்பொழுது குறிப்பிட்டேன். அடுத்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருவோம். ஜனாதிபதிக்குக் காடுகளின் மத்தியில் கனமான காடழிப்பு நடந்து காட்டு நிலங்கள் பறிபோகின்றன என்பதை அவருக்குத் தெரியப்படுத்தியதன் பயனாக அவரால் ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காடுகளை வெட்டித் துப்புரவு செய்தல் –

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் செய்தல் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காடுகள் துப்புரவு செய்யப்படுவதனால் சுற்றாடலுக்கு பாரிய அழிவு ஏற்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. இந்த நிலைமையின் பேரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக தொடர்புடைய அதிகாரிகளின் அனுமதியுடனோ, இல்லாமலோ தற்போது செய்யப்படும் அனைத்து காடுவெட்டுதல்கள் / துப்புரவாக்குதல்களை உடனடியாகச் செயற்படும்வண்ணம் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னர் இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகள்/ மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உரிமங்கள் / அனுமதிப்பத்திரங்களை மீள செல்லுபடியாக்குதல் மற்றும் புதிதாக உரிமங்கள் / அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கு எதிர்காலத்தில் அலுவலர்களின் குழுவொன்று நியமிக்கப்படுவதுடன், அந்த புத்திஜீவிகள் குழுவின் விதந்துரைகளுக்கமைய மேற்குறித்த விடயங்கள் தொடர்பில், தொடர் நடவடிக்கையெடுப்பதற்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். எமது மாகாணசபை உறுப்பினர் இரவிகரனே இவைபற்றிய விபரங்களை முதன் முதலில் எனக்களித்தார். மாகாணக் காணிகள் பறிபோகாது, விலை போகாது இருக்க யாவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இரவிகரன் இது சம்பந்தமாக எடுத்த சகல நடவடிக்கைகளுக்கும் என் பாராட்டுகள் உரித்தாகுக. எமது சில அலுவலர்கள் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து எமது மாகாணசபைகளின் உரித்துகளைப் பறித்தெடுத்துக் கொடுக்க விழைவதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால்தான் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்குப் பங்கம் ஏற்படுத்தும் விதத்தில் ஜனாதிபதி பிரேமதாச நடந்து கொண்டமை கண்டனத்திற்கு உரியதாகக் காணப்படுகின்றது. அவரின் அன்றைய செயல் வடக்கிற்கும் கிழக்கிற்குமே பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதானல்தான் மாகாண வனத்திணைக்களம், வனவிலங்குகள் திணைக்களம் ஆகியன வேறு சில திணைக்களங்களுடன் சேர்த்து மாகாணத்தின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று கோரிவருகின்றோம். சுயநிர்ணய உரிமை என்றெல்லாம் கூறிவரும் நாங்கள் இதனைக் கவனத்திற்கு எடுக்க வேண்டும். எமது நிலங்கள் பறிபோவதற்கும்; எமது வனங்களும் விலங்குகளும் பாதிப்படைவதற்கும் எமது வளங்கள் சூறையாடப்படுவதற்கும் நாங்கள் ஒத்திசைவாளர்களாக இருந்து நடக்க முடியாது என்ற காரணத்தினால்தான் நாங்கள் சுயநிர்ணய உரிமை வேண்டி பற்றுறுதியுடன் செயல்படுகின்றோம். சுயநிர்ணய உரிமையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் மத்தி தனக்கென ஏற்றுக் கொண்ட பல விடயங்களையும் மாகாணத்திற்குக் கையளிக்க வேண்டியிருக்கும். இதனால்தான் ஐக்கிய நாடுகளில் இருந்து வந்த உயர் அதிகாரிகளுக்கு இது பற்றி விளக்கி வருகின்றேன். எமக்குரிய மாகாண உரித்துகளை மத்தி எடுத்துப் பிரயோகிப்பது என்பது அந்நியர் ஒருவர் எமது சயன அறையில் வந்திருந்து அங்கு உறைந்திருக்க உரிமை கொண்டாடுவதற்கு ஒப்பானதாகும்.

இன்று திவிநகும பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. திவிநகும என்பதும் மாகாண அதிகாரங்களை மத்திக்கு எடுத்த ஒரு செயல்பாடே. மத்தியின் உள்ளீடல்கள் முற்றிலும் நிறுத்தப்பட்ட மாகாணத் தன்னாட்சியைத் தானே கொண்டு நடத்த வேண்டும் என்பதே எமது மக்களின் எதிர்பார்ப்பு. முக்கியமான சில விடயங்கள் மட்டும் மத்தியிடம் இருக்கலாம். விரைவில் இது சம்பந்தமான ஒரு தீர்மானம் அரசியல் ரீதியாக எடுக்கப்படும். அதற்கிடையில் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகின்றது.
கூடுமான வரையில் அலுவலர்கள் தங்கள் அமைச்சுகள், திணைக்களங்கள் பற்றிய மிகச் சுருக்கமான அறிக்கைகளைத் தந்து ஒருங்கிணைப்புக் குழுவிடம் அனுமதி கோரும் விடயங்கனை முன்னிறுத்தி அவற்றிற்கான அனுமதி பெறுவதே சாலச் சிறந்தது. முன்னைய கூட்டங்கள் போல் காலத்தை விரயமாக்கும் விதத்தில் ஒவ்வொரு அலுவலரும் தமது திணைக்களங்கள் பற்றி விலாவாரியாக விளக்கம் அளிப்பது தேவையற்றதாகவே எனக்குப் படுகின்றது.

மற்றைய இணைத்தலைவர்கள் இது பற்றி உங்கள் கருத்தையும் தெரியப்படுத்துங்கள். உறுப்பினர்களின் உரித்தில் நாங்கள் கை வைப்பதாக இதை எடுக்கக் கூடாது. காரணம் அலுவலர்கள் விலாவாரியாக விளக்கம் அளிப்பதில்தான் எமது உறுப்பினர்களின் கேள்விகள், கவனங்கள் எழுவன என்று கூற முடியாது.

அந்தந்தத் தலையங்கம் வெளிப்படுத்தப்படும் போது அது சம்பந்தமான ஏதோ ஒரு விடயம் பற்றி உறுப்பினர்கள் கேள்விகள் கேட்பதை நாங்கள் ஒருவரும் கட்டுப்படுத்த மாட்டோம். அலுவலர்களின் விளங்கங்கள் தமது ஆவணங்களின் அடிப்படையில் ஏற்கனவே எம்முன் இருப்பதால் ஆவணங்கள் தரப்பட்ட பின்னர் தேவையான விபரங்களை எமக்குத் தந்துதவினால் நன்மை பயக்கும். நேரக்கட்டுப்பாட்டையும் நாங்கள் கடைப்பிடிக்கலாம் என்று கருதுகின்றேன்.

“போர்க்களத்தில் ஒரு பூ” படத்துக்கு தடை கோரி இசைப்பிரியாவின் தாயார், சகோதரி வழக்கு

இலங்கை போரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் தாயார் டி.வேதரஞ்சனி, மூத்த சகோதரி தர்மினி வாகிசன் ஆகியோர் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த ஷோபா என்ற இசைப்பிரியா இலங்கை இராணுவத்தினரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.

இந்த கொடூர சம்பவத்தை மையமாக வைத்து, ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் கே.கணேசன் என்பவர் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை ஏ.சி.குருநாத் செல்லசாமி என்பவர் தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் கொடூரமாக கற்பழிப்பு உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இந்த படத்தை பொதுமக்களுக்கு திரையிட்டு காட்ட அனுமதிக்க முடியாது என்று சென்சார் போர்டு கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மேல்முறையீட்டு மனுவையும் சென்சார் போர்ட்டு மேல்முறையீட்டு குழு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், இலங்கை போரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் தாயார் டி.வேதரஞ்சனி, மூத்த சகோதரி தர்மினி வாகிசன் ஆகியோர் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த வழக்கு மனுவில் தர்மினி வாகிசன், ‘’நானும் என் தாயார் வேதரஞ்சனியும், 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது, இங்கிலாந்து நாட்டிற்கு வந்து விட்டோம். நான் என் 3 குழந்தைகளுடன் வசிக்கிறேன்.

இந்த நிலையில், என் தங்கை இசைப்பிரியா என்ற ஷோபா போர்க்களத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கொண்டு போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகள் மூலம் தெரிந்துக் கொண்டோம்.

அந்த திரைப்படத்தில், என்னையும், என் தங்கை இசைப்பிரியாவையும் போராளிகள் என்று சித்தரித்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது போராளிகளை உலக நாடுகள் தீவிரவாதிகள் என்று அழைக்கின்றனர்.

இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட பலர் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் நாகரீகமாகவும், மரியாதையுடனும் வாழ உரிமை உள்ளது. அதே உரிமை எங்களுக்கும் உள்ளது. ஆனால், இந்த திரைப்படம் வெளியானால், எங்கள் குடும்பத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்திய நாட்டின் சட்டத்தின், கற்பழிக்கப்பட்ட பெண்ணின் எந்த ஒரு அடையாளத்தையும் ஊடகங்கள் மூலம் வெளியிடக்கூடாது. அவ்வாறு வெளியிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தின் இயக்குனர் கணேசன், தயாரிப்பாளர் குருநாத் செல்லசாமி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும், வழக்கு விசாரணையை பெப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.porkalathil oru poo

கணவனை இழந்தை விட பல மடங்கு வேதனை தலைவனை இழந்ததே! முன்னாள் போராளி

என் இனிய உறவுகளே, என்னை உங்களுக்கு தெரிகிறதா? எனது குரல் உங்களுக்கு கேட்கிறதா? மௌனித்து கைகால் கட்டப்பட்டு ஒரு கூண்டுப் பறவையாக இருந்த நான் எனது குரலை ஓங்கி ஒலிப்பதன் மூலமாவது உங்கள் உள்ளங்கள் தட்டி எழுப்பப்படுமா?ex ltte members 22

எமது மக்களிற்காகவும் மண்ணிற்காகவும் போராட புறப்பட்ட தன்மானமுள்ள ஒரு முன்னாள் பெண் போராளி நான்.

பல வருடங்களாக மக்களுக்கான மகத்தான பணியை செய்துவந்தவள் நான். எனது கணவரும் ஒரு விடுதலைப் போராளியாக இருந்து இந்த மண்ணிற்கான உன்னதமான பணியாற்றியவர். அதனால் எனது கணவரையும் இழந்துவிட்டேன்.

இந்நிலையில் எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு காரணம் எனக்கு உதவ வேண்டும் என்பதற்காகவல்ல. எமது தமிழ் மக்களுக்கான தீர்வுகள் பற்றி நடுநிலையாக சிந்தியுங்கள். உங்களால் முடிந்தவரை கணவரை யுத்தத்தில் இழந்த பெண்களுக்கு உதவுங்கள். அவர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை உருவாக்கி கொடுங்கள்.

எமது தலைவனைப்பற்றியும் அவரின் உயர்ந்த பண்புகள் பற்றியும் எழுத தமிழில் உள்ள வார்த்தைகள் போதாது என்றே சொல்ல்வேண்டும். எமது தலைவனின் காலத்தில் ஈழத்தில் பிச்சைக்காரரர்கள், அநாதைகள் கணவரை இழந்த பெண்கள் என எவரும் நாதியற்று இருக்கவில்லை.

எம் தலைவனை இழந்தோம் என்று ஒரு வரியில் சொல்லிவிடமுடியாது. தமிழ் இனமே ஒப்பற்ற தலைவனை இழந்துவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். எனது கணவரை இழந்த வேதனையிலும் பல மடங்கு வேதனை எம் தமிழ்த் தலைவனை இழந்ததால் அடைந்தேன்.

எம் இனம் இன்று நாதியற்ற நிலையில் அல்லாடிக்கொண்டுடிருக்கின்றது. எம் தலைவனால் தமிழருக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பார்கள் என உருவாக்கப்பட்டு மிகப்பெரும் வெற்றியை ஈட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழருக்கு இதுவரை தீர்வுகள் எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

ஆனால் தமது கட்சிக்குள்ளேயே முறுகல் நிலையை உருவாக்கி ஒற்றுமையற்று செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. சில அரசியல்வாதிகள் சுயலாபம் கருதி செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தமக்குள்ளேயே நீயா நானா பெரிது என போட்டி;யிட்டு மக்களால் அமோக வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டவர்களை வீழ்த்த வேண்டும் என முயற்சித்துக்கொண்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

நான் பெரிது நீ பெரிது என்றில்லாமல் நாடு பெரிது என வாழுங்கள் என்று எம் தலைவன் அடிக்கடி கூறுவார். அந்த சிந்தனை இன்று அருகிவருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை பலப்படவேண்டும். சில ஊடகங்களும் நடுநிலையற்ற தன்மையில் செயற்படுவதுடன் தனிப்பட்ட தமது நலனை கருத்தில் கொண்டு ஊடக தர்மத்தை மீறி தனிப்பட நபர்களை உண்மைக்கு புறம்பாக விமர்சிப்பதும் கேவலப்படுத்துவதுமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. உண்மைக்கு புறம்பான செய்திகளை திரிவுபடுத்தி எந்தவிதமான கூச்சமுமின்றி வெளியிடுகின்றன.

ஊடகங்கள் நடுநிலையற்று செயற்படுகின்றபோதும் மக்கள் நடுநிலையானவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை உணர ஊடகங்கள் தவறிவிடுகின்றன.

இவ்வாறான ஊடகங்களின் செயற்பாடுகளை நாம் கண்டிக்கவேண்டும். மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காகவும் அவர்களது உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவும்தான் தமிழ் ஊடகங்களும் தமிழ் அரசியல்வாதிகளும் உரக்க குரல் கொடுக்க வேண்டும்.

தமிழ்த் தேசியத்தை சீர்குலைப்பதற்காக மக்களை பிழையான வழியில் வழிநடத்த முயலும் ஊடகங்களின் கருத்துக்கள்; மக்களால் நிராகரிக்கப்படும் என்பதில் எந்தவித ஜயமுமில்லை.

தனிநபர்களை உண்மைக்கு புறம்பாக கொச்சைப்படுத்தும் ஊடகங்களை கண்டித்து குரல் கொடுங்கள். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமை, தமிழ் மக்களின் முதலமைச்சர் இருவருமே எமது மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க தேவையானவர்கள்.

சம்பந்தன் ஐயாவிடம் அரசியல் நுணுக்கமும் நீண்ட அரசியல் வரலாறும் முதலமைச்சரிடம் நீதிநியாயமான தன்மையும் எவருக்கும் பேரம் போகாத தன்மையும் இருப்பதை எவரும் மறுத்துவிடமுடியாது.tna traitors 5

இரண்டுமே எமக்கு தேவை. தமிழ்த் தேசியத்தை சிதைக்க எவரும் எவருக்கும் துணைபோகாதீர்கள். தன்மானத் தமிழர்களாகிய நீங்கள் எவருக்கும் விலை போகாதீர்கள். பணத்திற்கும் சுகபோகத்திற்கும் ஆசைப்பட்டு விலைபோவதைவிட ஒவ்வொரு தமிழ் மகனும் தமது அடிப்படை உரிமைக்காகவாவது குரல் கொடுத்து அகிம்சை வழியில் போராடுவது மேலானாது.

எமது உயிரைவிட மேலானது தன்மானம். தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்.

அது மாத்திரமின்றி இன்றைய எமது சமூகத்தில் கணவரை இழந்த பெண்கள் மிக முக்கிய பேசுபொருளாக இருக்கிறார்கள். கணவரை இழந்த ஒரு பெண்ணை எமது சமூகம் பரிதாபமாகவும் பரிகாசமாகவும் பார்ப்பது மிகமுக்கியமானதொரு பிரச்சினையாகும்.

கணவரை இழந்த பெண்களை எவரும் பரிதாபமாகவோ பரிகாசமாகவோ பார்க்காதீர்கள் என்பதே எனது தயவான வேண்டுகோள். கணவரை இழந்த பெண்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை அரவணைத்து அவர்களுக்கு வழிகாட்டிவிட வேண்டிய மாபெரும் பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது.

யுத்தம் என்கின்ற கொடிய அரக்கனால்தான் அநேகமான தமிழ்ப் பெண்கள் தமது வாழ்வை தொலைத்து நிற்கிறார்கள். இந்த நாதியற்று நிற்கும் பெண்களுக்கு கைகொடுங்கள். இன்றைய சமூகத்தில் ஒரு பெண் வேலை தேடி வெளியே செல்லும்போது சமூக பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏனெனில் விடுதலை போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தியதால் பல பெண்கள் தமது கல்வியையும் சொத்து சுகங்களையும் இழந்திருந்தார்கள். இந்நிலையில் தானாக உழைத்து தன்னம்பிக்கையுடன் தனது சொந்தக்காலில் நிற்க ஒரு பெண் ஆயத்தமாகும் போதும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறாள்.

நம்பிக்கைக்குரிய பாதுகாப்பிற்குரிய இடங்களாக அவள் எண்ணிச்சென்ற இடங்களிலேயே தமது சுயலாபம் கருதியே அவளுக்கு வேலைவாய்ப்பை கொடுக்க சில நிறுவனத்தினர் முனைகிறார்கள்.

அவ்வாறு வேலைக்கு சென்ற இடங்களில் அவர்களுடன் ஒத்திசைந்து ஒரு பெண் வேலை செய்யாவிடின் அவளை வெருட்டி கணவரை இழந்ததால் விசரி, விபச்சாரி என்ற தீய பட்டங்களை கொடுத்து சமூகத்தை நம்பவைக்க மாபெரும் முயற்சி எடுத்துவருகிறார்கள்.

தன்மானத்துடன் வேலை செய்யவேண்டும் என சென்ற பெண்களை அதாவது தன்மானத்தை இழக்காமல் துணிவுடன் எதிர்த்து போராடும் பெண்களை சில நிறுவனங்களில் ஆண் காவலாளிகளை கொண்டு விரட்டியடிக்கப்பட்டதை என் கண்களால் நேரடியாக கண்டன.

அவர்களது குடும்ப கௌரவத்தை அழிக்க முற்படுகிறார்கள். எனவே ஒரு கணவரை இழந்த பெண் நாதியற்று வாழும் போது வெருட்டப்பட்டு மௌனிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறாள். ;ஏனெனில் அவளது சுய கௌரவம் அவளுக்கு மேலாகிறது. ஒரு பெண் எழுத்தாற்றல் உள்ளவளாயின் அவளது சுதந்திரமான எழுத்துக்களை கூட எழுத முடியாமல் நசுக்கிவிடுகிறார்கள்.tna traitors

என் உறவுகளே இவை அனைத்தும் என் நேரடி அனுபங்களே. இதனைவிட எழுத்தில் வடிக்கமுடியாத துன்ப துயரங்களை காலத்தின் கோலத்தில் என்றோ ஒருநாள் மனம் திறப்பேன்.

வெளிநாடுகளிற்கு செல்லக்கூடிய வாய்ப்புக்கள் பலதடவைகள் ஏற்பட்டும் சென்றுவிடாமல் எனது கொள்கைகளுக்காகவும் இலட்சியத்திற்காகவும் எமது மக்களின் துயரங்களை கண்ணுற்று அவர்களில் ஒருத்தியாக இருந்து துன்பங்களை அனுபவிப்போம் என நினைத்து எம் மண்ணிலேயே வாழ்ந்துவரும் நான் உங்களிடம் விடுக்கும் வேண்டுகோள்.

புலம்பெயர் தமிழர்களே,உதவும் கரங்களே, புத்திஜீவிகளே எம் இனத்திற்காக குரல் கொடுங்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்களுக்கும் அரவணைக்க நீங்கள் இருக்கிறீர்கள் என்ற புதுநம்பிக்கை அவர்களுக்கு உருவாகட்டும்.

அவர்களுக்கு நிரந்தரவாழ்வாதாரத்தை மேற்கொள்ளக்கூடிய வகையில் பல உதவும் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தொழிற்சாலைகளை நிறுவி பாதுகாப்பான சூழலுடன் தன்மானத்துடன் சொந்தக்காலில் நிற்கக்கூடிய வகையில் கௌரவமான வேலைவாய்ப்பை அவர்களுக்கு வழங்கி உங்கள் பணத்தையும் பெருக்கிக்கொள்ளுங்கள்.

முன்னாள் ஆண்பெண் போராளிகளை கௌரவத்துடன் வேலை செய்யக்கூடிய வசதி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுங்கள்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள். ஆறுவருடங்களுக்கு முன்னர் சென்று பழைய வாழ்வை மீட்டிப்பாருங்கள். எம் தலைவனின் நிர்வாகக்கட்டமைப்புக்களை எண்ணிப்பாருங்கள். புலம்பெயர் உறவுகளிடமிருந்து உதவியாக பெற்ற பணத்தில் எமது மக்களுக்காக அவர் ஆற்றிய சேவைகள் உன்னதமானது.

உங்களில் பலர் வன்னி மண்ணிற்கு விஜயம் செய்திருப்பீர்கள். அந்த நாட்களை எண்ணிப்பாருங்கள். உங்களிடம் ;எனது உருக்கமான வேண்டுகோள். மற்றவர்களுக்கு எப்படி எந்தவகையில் உதவவேண்டும் என்று வழிகாட்டிச்சென்றுள்ள எம் தலைவனின் வழியை பின்பற்றுங்கள்.

தற்போதைய ஆட்சி மாற்றம் எமக்கு இதுவரை எந்த தீர்வையும் பெற்றுத்தராவிடினும் தனிப்பட்ட வகையில் எளிமையும் மென்போக்கும் கொண்டவராக ஜனாதிபதி மைத்திரி செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

ஆகவே பயமின்றி மனிதாபிமான பணியாற்றமுன்வாருங்கள் என்பதே என் தயவான வேண்டுகோள்;. எனக்காக நான் எதனையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. என மக்களுக்கான என்வேண்டுகோளை நிறைவேற்றுங்கள்.

துவாரகா

கருத்துப்படம் Cartoonest ajiy – aswin

Up ↑