Search

Eelamaravar

Eelamaravar

Month

January 2016

பெப்ரவரி 4: வடக்கு கிழக்கு தாயகப்பிரதேசம் முழுவதும் உயரப்பறக்கட்டும் கறுப்புக்கொடிகள் !!!

பெப்ரவரி 4: வடக்கு கிழக்கு தாயகப்பிரதேசம் முழுவதும் உயரப்பறக்கட்டும் கறுப்புக்கொடிகள் !!! – வவுனியா பிரஜைகள் குழு கோருகின்றது.srilanka flag

தமிழ்மொழி பேசும் மக்கள், தமது பூர்வீக வாழ்விடங்களான வடக்கு கிழக்கு தாயகப்பிரதேசத்தில் ‘சமஸ்டி’ அதிகாரத்துடன் எப்போதும் வாழத்தகுதியுடைய தனித்துவமான ஒரு தேசிய இனம், பெரும் வலிகள் – இழப்புகளுக்கு பின்னரும்கூட அத்தகையதொரு சுயாட்சி அதிகார அலகுக்காக தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்ற தனித்துவமான ஒரு தேசிய இனம் என்ற விடுதலை உணர்வு உந்துதலோடு,ஒவ்வொரு பிரஜையையும் சிறீலங்கா அரசாங்கத்தின் மனிதகுலப்படுகொலைகளை, தம்மீது கட்டவிழ்த்து விடப்படும் மீறல்களை, வன்முறைகளை, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச சமுகத்துக்கு பகிரங்கப்படுத்தும் அடையாளமாக, பெப்ரவரி 4 அன்று தத்தமது இல்லங்கள், வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள் தோறும் கறுப்புக்கொடிகளை உயரப்பறக்கவிடுமாறு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

பெப்ரவரி 4: சிறீலங்காவின் 68வது சுதந்திரநாளை புறக்கணித்து, வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கரிநாளாக’ அனுஸ்டிப்போம் என்று ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும்’ சங்கங்கள் விடுத்துள்ள அறிவிப்புக்கு தமது முழுமையான ஒத்துழைப்பு நடவடிக்கைகளை வழங்குவதாக தெரிவித்து ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர்’ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த ஊடக அறிக்கையின் முழுவிவரமும் வருமாறு:
ஊடக அறிக்கை:
31.01.2016

‘சமஸ்டி’ அதிகாரத்துடன் தனித்துவமாக வாழத்தகுதியுடையது தமிழ் தேசியக்குடியினம் !!! பெப்ரவரி 4: வடக்கு கிழக்கு தாயகப்பிரதேசம் முழுவதும் உயரப்பறக்கட்டும் கறுப்புக்கொடிகள் !!!

தமிழ்மொழி பேசும் மக்கள், தாங்கள் பிறந்து வாழ்ந்து வளப்படுத்திய நிலத்தின் பாதுகாப்புக்கும், அந்த நிலத்தில் உயிர் வாழ்வதற்கு தேவையான சீவனோபாய செயல்பாடுகளுக்கும், நீண்டகால தனிமனித விருத்திக்கும் – பாதுகாப்புக்கும் உத்தரவாதமற்ற – அச்சுறுத்தலான சூழலில் தான், இலங்கைத்தீவில் அதிலும், தமது பூர்வீக வாழ்விடங்களான வடக்கு கிழக்கு தாயகப்பிரதேசத்தில் தற்காலத்திலும்கூட சீவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

சமஸ்டி ஆட்சிக்கு தகுதியுடைய ஒரு தேசிய இனத்தினர், தமக்கென்று பொதுவான இராணுவ பாதுகாப்பு இல்லாத சூழலில், எந்தவேளையிலும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் ‘கடித்துக்குதறப்பட்டு விடுவோம். வேட்டையாடப்பட்டு விடுவோம்’ என்ற பீதியுடன் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கின்றார்கள்.
சிறீலங்கா அரசாங்கத்தின் மாபெரும் இனப்படுகொலைக்குள் அகப்பட்டு, எஞ்சிப்பிழைத்திருக்கும் தமிழ் தேசியக்குடியினம், தமது பாரம்பரிய பண்பாட்டு நிலத்தில், தமக்கேயுரிய மொழி கலை கலாசார மரபுரிமைகளை நிலைநிறுத்த முடியாமல் நித்தமும் உழன்றுகொண்டிருப்பவர்கள்.

கல்வி, கலை, கலாசாரம், தொழில், உணவு உற்பத்தி, பொருளாதாரம், வாழ்க்கைத்தரம், பழக்க வழக்கங்கள் என்று குடும்ப அலகு முதல் சமுக கட்டமைப்பு வரையாக சிதிலமாக்கப்பட்டுள்ள தமது வாழ்வியல் முறைமைகளை மறுபடியும் தகவமைத்துக்கொள்ள சமகாலத்திலும் கடுமையாக போராடிக்கொண்டிருப்பவர்கள்.
தமது பாரம்பரிய பண்பாட்டு நிலத்தில், ‘ உயிர் வாழ்தல்’ என்பதே அவர்களுக்கு எப்போதும் போலவே மிகப்பெரிய போராட்டமாகவே இருக்கிறது.

  • சிறீலங்கா அரசின் ஆக்கிரமிப்பு படைகளால் தமக்குரிய பூர்வீக நிலபுலங்களிலிருந்து துரத்தப்பட்டவர்கள், தற்காலத்திலும்கூட தங்களுக்கு உரித்துடைய அந்த வாழ்விடங்களுக்கு திரும்ப முடியாமல் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
  • இலங்கையில் குடியியல் சமுகங்களுக்கு மோசமான பாதிப்புகளையும், ஆபத்துகளையும் உண்டுபண்ணியுள்ள சிறீலங்கா அரசின் ஆள்கடத்தல் மற்றும் தடுத்து வைத்தல் சம்பவங்கள் தொடர்பில் ‘பொறுப்புக்கூறல் – பரிகாரநீதி’ வழங்கல் செயல்பாட்டு முன்னெடுப்புகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
    ‘கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள்’ தொடர்பில் நியாயம் கோரும் குடும்பங்களுக்கும், ‘மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகள் குற்றங்களினால்’ பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் ‘நீதி மற்றும் இழப்பீடுகள்’ வழங்கப்படவில்லை.
  • இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு ‘சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருந்தோர், படுகொலை செய்யப்பட்டோர், அவர்களில் எஞ்சிப்பிழைத்திருப்போர்’ பற்றிய பிரஜைகளின் பெயர் விவரங்கள் இதயசுத்தியுடன் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
  • சர்வதேச போர் நியமங்களையும், மனித உரிமைப் பிரகடனங்களையும் மீறி சிறீலங்கா அரசானது நடத்தி முடித்துள்ள போரில், தான் நிகழ்த்தியுள்ள மனிதகுலப்படுகொலைகளுக்கும், மீறல்களுக்கும் உரிமை கோரவில்லை.

சிறீலங்கா அரசு பெரும் சத்தமாக தான் நடத்திய கொடும் தமிழ் இன அழிப்புப்போரை பகிரங்கமாக நிறுத்தியுள்ளபோதிலும்கூட, ‘தமிழ்மொழி பேசும் மக்களின் பாரம்பரிய பண்பாட்டு கிராமங்களுக்கு சிங்கள மொழிப்பெயர்களை சூட்டுதல், அந்த மக்களின் மதவழிபாட்டுத்தலங்களை அழித்து புத்தமதவழிபாட்டு தூபிகளையம் விகாரைகளையும் தோற்றுவித்து அவர்களின் வாழ்விடங்களை பௌத்த மயமாக்குதல், தொடர்ந்தும் தமது இராணுவ வல்வளைப்புச்சூழமைவுகளுக்குள் அந்த மக்களை வாழ நிர்ப்பந்தித்தல்’ என்று, முன்கொண்டுசெல்லும் நன்கு கட்டமைக்கப்பட்ட ‘உள்குத்து அன்றி ஊமைக்காய’ தமிழ் இன அழிப்பு – இனக்கலப்பு நடவடிக்கைகளை ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’ வன்மையாக கண்டிப்பதோடு,மிகவும் நூதனமாக – சூசகமாக முன்னெடுக்கப்படும் சிறீலங்கா அரசின் ஆழஊடுருவி மூலங்களை சிதைக்கும், இன அழிப்பு நடவடிக்கைப்போக்கை விழிப்புநிலையுடன் எதிர்கொள்ளுமாறும் தமிழ் சமுகத்தை ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’ எச்சரிக்கின்றது.srilanka flag feet

இத்தகைய அபாய சூழலில், பெப்ரவரி 4: சிறீலங்காவின் 68வது சுதந்திரநாளை புறக்கணித்து, வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கரிநாளாக’ அனுஸ்டிக்கும், ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும்’ சங்கங்களின் முடிவுக்கு, ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’ தனது முழுமையான ஒத்துழைப்பு நடவடிக்கைகளை வழங்குகின்றது.

தமிழ்மொழி பேசும் மக்கள், தமது பூர்வீக வாழ்விடங்களான வடக்கு கிழக்கு தாயகப்பிரதேசத்தில் ‘சமஸ்டி’ அதிகாரத்துடன் எப்போதும் வாழத்தகுதியுடைய தனித்துவமான ஒரு தேசிய இனம், பெரும் வலிகள் – இழப்புகளுக்கு பின்னரும்கூட அத்தகையதொரு சுயாட்சி அதிகார அலகுக்காக தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்ற தனித்துவமான ஒரு தேசிய இனம் என்ற விடுதலை உணர்வு உந்துதலோடு,ஒவ்வொரு பிரஜையும் சிறீலங்கா அரசாங்கத்தின் மனிதகுலப்படுகொலைகளை, தம்மீது கட்டவிழ்த்து விடப்படும் மீறல்களை, வன்முறைகளை, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச சமுகத்துக்கு பகிரங்கப்படுத்தும் அடையாளமாக, பெப்ரவரி 4 அன்று தத்தமது இல்லங்கள், வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள் தோறும் கறுப்புக்கொடிகளை உயரப்பறக்கவிடும் அதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும், நகரின் முக்கியப்பகுதிகளில் கறுப்பு பட்டியணிந்து காலையிலிருந்து மாலைவரை நடத்தப்படும் அடையாள உண்ணாவிரதப் போராட்டங்களிலும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
என்று அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.srilanka flag down

தாயகம், தேசியம், தன்னாட்சி உறுதிப்படுத்தப்படவேண்டும் – தமிழ் மக்கள் பேரவை வலியுறுத்து

tamilpeoplescouncil.orgதமிழர்களின் தேசம் என்ற அங்கீகாரம், அவர்களின் சுயநிர்ணய உரிமை, இறைமை, கூட்டாட்சி அதிகாரம் பாரம்பரிய தாயகம் ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில் அரசியலமைப்பு ஆக்க முயற்சிக்கு முன் எட்டப்படவேண்டிய அரசு தொடர்பான தொலை நோக்குப் பார்வையானது ஓர் உடன்படிக்கை வடிவில் (பொஸ்னியாவில் கைச்சாத்திடப்பட்ட டேய்டன் உடன்படிக்கை, வட அயர்லாந்து பிரச்சினை தொடர்பில் கைச்சாத்திடப்பட்ட குட் ஃப்ரைடே உடன்படிக்கை போன்றவொரு உடன்படிக்கை) சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கிடையில் கைச்சாத்திடப்படவேண்டியது அவசியமாகும் என்று தமிழ் மக்கள் பேரவை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள தனது இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வைகண்டடைவது தொடர்பிலான உப குழுவின் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

“எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான சிங்கள பௌத்த சமூகமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் இந்த உடன்படிக்கையை தன்னிச்சையாக கிழித்தெறிந்தால் வேறு மாற்று வழிகள் எதுவும் இல்லாத விடத்து தமிழ் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஏற்பாடும் இந்த உடன்படிக்கையில் உள்வாங்கப் பட வேண்டும்” என்றும் தமிழ் மக்கள் பேரவை அழுத்தி உரைத்திருக்கிறது.

இவ்வுடன்படிக்கயானது மூன்றாம் தரப்பொன்றால் (அமெரிக்கா, இந்தியா போன்ற அரசொன்றால்) அல்லது ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உடன்படிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இந்த வரைபு வலியுறுத்துகிறது.

அத்துடன் இவ்வுடன்படிக்கையானது பொறுப்புக் கூறல் மற்றும் நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளின் விடுவிப்பு, காணாமல் போகச் செய்யப்பட்டோரின் பிரச்சனைகள், இராணுவமய நீக்கம், அரசால் செய்யப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்கள், பாதுகாப்பு துறை மறுசீரமைப்பு, குற்றங்கள் மீள நிகழாமை தொடர்பான உறுதியளிப்பு தொடர்பிலானவை போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் உடன்பாடுகளை எட்டிய ஓர் உடன்படிக்கையாக இருக்க வேண்டும். என்றும் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓர் புதிய பல்தேசிய இலங்கை அரசு ஒன்று தோற்றம் பெறும் பொருட்டு சிங்கள பௌத்த சமூகத்துக்கும் ஏனைய மக்கள் கூட்டங்களுக்கும் இடையே ஓர் சமூக ஒப்பந்தம் ஒன்று தேவை என்றும் தமிழ் மக்கள் பேரவைவையின் வரைபில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இந்த வரைபின் முழு விபரமும் வருமாறு:

தமிழ் மக்கள் பேரவையானது அரசியல் தீர்வு ஒன்று தொடர்பில் மக்கள் மத்தியில் கலந்தாய்வு ஒன்றை நடத்துவதற்கு உதவும் வகையில் அரசியல் தீர்வு தொடர்பிலான முக்கிய வரையறைகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றைத் தருமாறு பணித்து 27 டிசம்பர் 2015 அன்று ஓர் உபகுழுவை நியமித்தது.

பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூக குழுக்களின் பிரதிநிதிகளும் இவ் உப குழுவில் இடம் பெற்றனர். 2016ஜனவரியில் இடம்பெற்ற பல சுற்று கலந்துரையாடல்களின் பின்னர் இந்த உப குழுவானது இவ்வறிக்கையை பேரவையின் கவனத்திற்கும், அதனைத் தொடர்ந்து மக்கள் கலந்துரையாடலுக்குமாக சமர்ப்பிக்கின்றது.

அரசியலமைப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு முன் அரசியல் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதன் தேவைப்பாடு. புதியதோர் அரசியல் தீர்வு ஒன்றை கண்டறிவது என்பதுவெறுமனே புதியதோர் அரசியலமைப்பை எழுதுவதன் மூலம் எட்ட முடியாது.

இலங்கை ஓர் சிங்கள பௌத்த தேசிய அரசாக இருப்பதே தேசிய இனப்பிரச்சினையின் மூலவேர் ஆகும். தற்போதைய இலங்கை அரசில் (அரசு என்பது அரசாங்கத்தில் இருந்து வேறுபடுத்தி அணுகப்படுகின்றது) முழு அரசும் ஒரு தேசத்தோடும் ஒரு மக்கள் கூட்டத்தோடும் அடையாளப்படுத்தப்படுகின்றது.

இங்கு அரசானது ஓர் அதிகாரப் படிநிலையை கொண்டிருப்பதும் அவ் அதிகாரப் படிநிலையில் சிங்கள பௌத்த அரசு முதல் நிலையில் இருப்பதுமே இங்கு பிரதான பிரச்சனையாகும். இந்த அதிகாரப் படிநிலையானது ஒற்றையாட்சி முறைமையின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது.

தெற்கில் இருக்கும் இரண்டு பெரிய கட்சிகளும் ஒற்றையாட்சியின் பாற்பட்ட சிங்கள பௌத்த அரசு என்ற கருத்தியலில் உறுதியாக இருக்கின்றனர். இந்த கருத்தியல் தமிழ் அரசியல் அபிப்பிராயத்தின் எந்த வகையினருக்கும் ஏற்புடையதல்ல.

ஆகவே தான் அரசு தொடர்பில் எல்லோராலும் பகிர்ந்து கொள்ளப்படும் ஓர் அடிப்படை பார்வை இல்லாது, ஓர் அரசியலமைப்பு ஆக்க முயற்சியில் நாம் ஈடுபட முடியாது என்று நாம் சொல்கின்றோம்.

இலங்கையானது ஓர் மதசார்புப்படி முறையற்ற அரசாக உருவாவதற்கு சிங்கள பௌத்த சமூகமானது இலங்கையின் பல்வேறு மக்கள் கூட்டங்களுக்கிடையே ஓர் சமூக ஒப்பந்தம் ஒன்று தேவை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வொப்பந்தம் ஊடாக ஓர் புதிய பல்தேசிய இலங்கை அரசு ஒன்று தோற்றம் பெற வேண்டும். இதன் அர்த்தம் யாதெனில் தமிழ் மக்களினது தனித்துவமும் அவர்களது சுய நிர்ணய உரிமையும் முஸ்லிம், மலையக தமிழ் மக்களின் அரசியல் விருப்பார்வங்களும் அங்கீகரிக்கப்படல் ஆகும்.

1978அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் தோல்வியடைந்தமைக்கான காரணம், அது ஒற்றையாட்சி முறைமைக்குள் இருந்தமை மட்டுமல்லாது சிங்கள பௌத்த தேசத்தை உச்சத்தில் கொண்டிருந்த ஓர் அதிகாரப் படிநிலையுடன் கூடிய அரசிற்குள் உள் வாங்கப்பட்டமையாலும் என்பது விளங்கிக் கொள்ளப் பட வேண்டும்.

இந்த அதிகாரப் படிநிலையோடு கூடிய அரசு என்ற கருத்தியல் நிலை மாறாவிட்டால் சமஷ்டி அரசியலமைப்பு வந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படாத ஒன்றாகவே இருக்கும்.

இதன் காரணமாகவே அரசியலமைப்பு ஏற்பாடுகளை பற்றி நாம் பேசத் தொடங்க முன்னர் தமிழ் மக்கள் கூட்டத்தினது தனித்துவமும் சுயநிர்ணய உரிமையும் ஓர் அரசியல் உடன்படிக்கை ஒன்றின் மூலம் அங்கீகரிக்கப் பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

இத்தகையதொரு சிந்தனை நெறியில் இருந்து தான் புதிய அரசியலமைப்பின் ஏற்பாடுகளை பற்றி பேச முடியும். இத்தகைய சிந்தனை மாற்றம் இல்லாதவிடத்து கடந்த கால அரசியலமைப்பாக்க முயற்சிகள் போன்றே இம்முறையும் அரசியலமைப்பாக்க முயற்சி பெரும்பான்மைவாத தன்னிச்சையான முயற்சியாக அமைந்து விடும்.

அரசியலமைப்பு ஆக்க முயற்சிக்கு முன் எட்டப்படவேண்டிய அரசு தொடர்பான தொலை நோக்குப் பார்வையானது ஓர் உடன்படிக்கை வடிவில் (பொஸ்னியாவில் கைச்சாத்திடப்பட்ட டேய்டன் உடன்படிக்கை, வட அயர்லாந்து பிரச்சினை தொடர்பில் கைச்சாத்திடப்பட்ட குட் ஃப்ரைடே உடன்படிக்கை போன்றவொரு உடன்படிக்கை) சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கிடையில் கைச்சாத்திடப்படவேண்டியது அவசியமாகும்.

இவ்வுடன்படிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களில் தமிழர்களின் தேசம் என்ற அங்கீகாரம், அவர்களின் சுயநிர்ணய உரிமை, இறைமை, கூட்டாட்சி அதிகாரம் பாரம்பரிய தாயகம் ஆகியன உள்ளடங்கும்.

எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான சிங்கள பௌத்த சமூகமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் இந்த உடன்படிக்கையை தன்னிச்சையாக கிழித்தெறிந்தால் வேறு மாற்று வழிகள் எதுவும் இல்லாத விடத்து தமிழ் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஏற்பாடும் இந்த உடன்படிக்கையில் உள்வாங்கப் பட வேண்டும்.

இவ்வுடன்படிக்கயானது மூன்றாம் தரப்பொன்றால் (அமெரிக்கா, இந்தியா போன்ற அரசொன்றால்) அல்லது ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உடன்படிக்கையாக இருக்க வேண்டும்.

அரசியலமைப்பு ஒன்று உள்நாட்டு சட்டத்தோடு மட்டுப்படுவதாக கருதப்படுவதால், இவ்வுடன்படிக்கை மூலமாக மூன்றாம் தரப்பொன்றின் பங்குபற்றலை உள்வாங்குவதானது எட்டப்பட்ட அரசியல் தீர்வின் நிலைத்தகு தன்மையை ஓர் சர்வதேச வெளித் தரப்பு ஒன்றின் உத்தரவாதத்தின் ஊடாக நிலை பெறச் செய்ய உதவும்.

மேலும் இவ்வுடன்படிக்கையானது பொறுப்புக் கூறல் மற்றும் நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளின் விடுவிப்பு, காணாமல் போகச் செய்யப்பட்டோரின் பிரச்சனைகள், இராணுவமய நீக்கம், அரசால் செய்யப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்கள்,

பாதுகாப்பு துறை மறுசீரமைப்பு, குற்றங்கள் மீள நிகழாமை தொடர்பான உறுதியளிப்பு தொடர்பிலானவை போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் உடன்பாடுகளை எட்டிய ஓர் உடன்படிக்கையாக இருக்க வேண்டும்.

மேற் சொன்ன விடயங்களில் முன்னேற்றம் இல்லாமல் அரசியலமைப்பு விவகாரங்களை பற்றிய திறந்த பாதுகாப்பான உரையாடல் ஒன்று வடக்கு கிழக்கில் நடை பெற முடியாது.

அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கான முன்மொழிகள்,

இலங்கை அரசின் தன்மை

1.1. இலங்கை ஓர் பல்தேசிய, கலாசார, மொழித்துவ, மத அரசாகும். அது தனது அங்கத்துவ மக்கள் கூட்டங்களையும் , சமூகங்களையும்கொண்டமைந்தது ஆகும். மத்தியும் மாநிலங்களும் மக்கள் கூட்டங்களின், சமூகங்களின் பன்மைத்துவத்தை மதித்து, அங்கீகரித்து, பாதுகாக்கும் கடப்பாட்டை கொண்டவை.

1.2. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் ஏனைய சமூகங்கள் பல்தேசிய இலங்கையை உருவாக்குகின்றன.

1.3. 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ்த் தேசத்தின் பாரம்பரிய தாயகமாக இருக்கும் காரணத்தினால் அதன் ஆள்புலபரப்பாக அமையப் பெறும்.

1.4. தமிழ் மக்கள் பாரதீனப்படுத்த முடியாத சுயநிர்ணய உரிமையைக் கொண்ட மக்கள் கூட்டமாவர். தனது சுயநிர்ணய உரிமையை ஏற்று அங்கீகரிக்கும் இடத்து பிளவுபடாத ஒற்றுமையான இலங்கை அரசிற்கு தமிழ் மக்கள் தமது பற்றுறுதியை வெளிப்படுத்துகின்றனர்.

இறைமை

2.1. இறைமை தனித்துவாமான மக்களுக்குரியதும் பாரதீனப்படுத்த முடியாததும் ஆகும். முழு சமஷ்டி அரசின் இறைமையும் அதன் அங்கத்துவ மக்கள் கூட்டங்களின் இறைமை மூலம் உய்த்தறியப்படுவதாகும்.

2.2. சட்டவாக்க இறைமையானது மத்திய பாராளுமன்றத்தாலும் மாநில சட்டவாக்க அவைகளாலும் தமக்கென அரசியலமைப்பால் குறித்தொதுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலமாக தனித்துவமாக பிரயோகிக்கப்படும்.

2.3. நிறைவேற்று அதிகார இறைமையானது மத்திய அரசாங்கத்தின் பிரதம மந்திரியாலும் அமைச்சரவையாலும் மாநில அரசாங்கத்தின் முதலமைச்சராலும் மாநில அமைச்சரவையாலும் அரசியலமைப்பில் விதந்துரைக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு ஏற்ப பிரயோகப்படுத்தப்படும்.

2.4. நீதித்துறை சார் இறைமை அதிகாரங்கள் அரசியலமைப்பு நீதிமன்றத்தாலும் மத்திய, மாநில நீதித்துறையாலும் அவற்றுக்கென விதந்துரைக்கப்பட்ட நியாயாதிக்கங்களுக்கு ஏற்றவாறு பிரயோகிக்கப்படும்.

2.5. இவ்வரசியலமைப்பால் விதந்துரைக்கப்படும் அடிப்படை உரிமைகள் யாவற்றையும் மத்திய மாநில அரசாங்கங்கள் மதித்து, பாதுகாத்து அவை மக்களால் அனுபவிக்கப்படுவதை உறுதி செய்யப் படுதலும் வேண்டும்.

மத்தியாலோ மாநிலத்தாலோ அரசியலமைப்பால் விதந்துரைக்கப்பட்ட வழிகளால் அன்றி அடிப்படை உரிமைகள் சுருக்கப்படவோ, நிராகரிக்கப்படவோ, மட்டுப்படுத்தவோ முடியாது.
2.6. வாக்குரிமயானது மத்திய பாராளுமன்றம், மாநில சட்டவாக்க சபை தேர்தல்களிலும், பொது ஒப்பங்கோடல்களிலும் 18வயது நிரம்பிய ஒவ்வொரு பிரஜைக்கும் உரியதாகும்.

2.7. ஒவ்வொரு மாநில அரசும் தனது மாநிலத்திற்குட்பட்ட சிறுபான்மையினரது அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் கடப்பாடுடையது.

அரசியலமைப்பின் மீயுயர்வுத் தத்துவம் மத்தியினதும் மாநிலத்தினதும் அதியுயர் சட்டமும் அத்திபாரமுமாக அரசியலமைப்பு இருக்கும். மத்தியினதும் மாநிலத்தினதும் அனைத்து செயற்பாடுகளும் அரசியலமைப்போடு இயைந்ததாக இருத்தல் வேண்டும்.

மொழி, மதம், பிரஜாவுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள்

4.1. இலங்கை ஒரு மதச் சார்பற்ற குடியரசாக இருக்கும். அரசு அனைவரினதும் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை மதிப்பதோடு எல்லா மதங்களையும் சரிசமனாக நடாத்தும்.

4.2. சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகியன அரசின் உத்தியோகபூர்வ மொழிகளாக இருக்கும்.

4.3. வடக்கு கிழக்கில் தமிழும் ஏனைய இடங்களில் சிங்களமும் நீதிமன்ற மொழியாகவும் பொது ஆவணங்களின் மொழியாகவும் இருக்கும்.

4.4. தமது மொழி, நிர்வாக மொழியாக இல்லாதவிடத்தும் அனைத்து பிரஜைகளும் தமது மொழியில் நீதிமன்றத்தையும் பொதுச் சேவையையும் பெற்றுக் கொள்ள உரித்துடையவர்கள் ஆவார்கள்.

4.5. 04 பெப்ரவரி 1948 அன்று இலங்கையை இயல்பாக வதிவிடமாகக் கொண்ட அனைவரும் அவர்களது வழித் தோன்றல்களும் இலங்கைப் பிரஜாவுரிமைக்கு உரித்துடையவர்கள் ஆவார்கள். பிறப்பால், பதிவால் பிரஜா உரிமை என்ற வித்தியாசம் இருக்க மாட்டாது.

4.6. சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச பொருத்தனையின்அண்மித்த பிரதியாக அமையும் அடிப்படை உரிமைகள் சாசனம் ஒன்று அரசியலமைப்பில் இருத்தல் வேண்டும்.

இவை நீதிமன்றங்களால் வழக்காடப்படக் கூடிய உரிமைகளாக இருக்க வேண்டும். தென்னாபிரிக்க அரசியலமைப்பில் இருப்பதற்கு ஒப்பான பொருளாதார, சமூக, கலாசாரம் சார் உரிமைகளும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

ஆட்சி முறைமை

5.1. இலங்கை ஓர் சமஷ்டி குடியரசாக இருக்கும்.

5.2. அதில் இரண்டு மட்டத்திலான அரசாங்கம் இருக்கும்: மத்தி மற்றும் மாநிலம்.

5.3. சமஷ்டியின் கூறுகளாக மாநிலங்கள் இருக்கும். அத்தகைய மாநிலங்களில் ஒன்றாக தற்போதைய 1978 அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை கொண்ட வடக்கு கிழக்கு மாநிலம் அமையப் பெறும்.

5.4. மத்திய அரசாங்கமானது வெஸ்ட்மினிஸ்ரர் முறையிலான ஆட்சி முறையில் இருத்தல் வேண்டும்.

5.5. அரசாங்கத்தின் இரு மட்டத்திலும் உள்ள தேர்தல் முறைகள் ஜெர்மனியில் இருப்பது போன்ற கலப்பு தேர்தல் முறையை பின்பற்றியதாக இருக்க வேண்டும்.

5.6. சமஷ்டி அரசின் சனாதிபதி பாராளுமன்றின் இரண்டு அவைகள் மற்றும் மாநிலங்கள் அவையின் உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் கல்லூரியொன்றினால் தெரிவு செய்யப்படுவார்.

5.7. தத்தமது சட்ட வரையறைகளின் ஊடாக மாநிலங்கள் தமது ஆட்சி முறைகளை சமஷ்டி அரசியலமைப்போடு முரண்படாத வகையில் உருவாக்கிக் கொள்ளலாம்.

5.8. 1978 அரசியலமைப்பின் 17ஆவது திருத்தத்தை ஒட்டிய அரசியலமைப்பு பேரவை ஒன்று இருத்தல் வேண்டும்.

குறிப்பு:

அ) வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தனித்துவத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம். முஸ்லிம் சமூகத்தால் இணைந்த வடக்கு கிழக்கில் தமது குழு சார் உரிமைகளை நிறுவன ரீதியாக பாதுகாப்பதற்கு எடுக்கும் முன்வைப்பு எதுவாயினும் அது தொடர்பில் அவர்களுடன் கலந்தாய்வு செய்யத் தயாராக இருக்கின்றோம் என பற்றுதியுடன் கூறிக் கொள்கிறோம்.

ஆ) வடக்கு கிழக்கில் வாழும் சிங்கள பிரஜைகள் யாவரும் அரசியலமைப்பில் உள்ள உரிமைகள் யாவற்றினையும் வடக்கு கிழக்கில் அனுபவிக்கும் உரித்துடையவர்கள் ஆவர். மேலும் வடக்கு கிழக்கு மாநிலத்தால் மேலதிகமாக வழங்கப்படும் மனித உரிமைப் பாதுகாப்பு அவர்களுக்கும் உரித்துடயதாக இருக்கும்.

இ) அதேவேளையில் தமது வாழ்விடங்களில் அவர்களது ஒன்றுபட்ட அக்கறையை பாதுகாப்பதற்கான அமைப்புமுறைசார் உரிமைகளுக்கான வழிமுறைகளை நோக்கிய மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்கான எமது அர்ப்பணிப்பை நாம் வெளிப்படுத்துகின்றோம்.

இது தொடர்பில் மலையக அரசியல் கட்சிகளுடனும் சிவில் சமூகங்களுடனும் வேலை செய்வதற்கு நாம் முழுமையாக எம்மை அர்ப்பணிக்கின்றோம்.

மத்திய மட்டத்திலான பகிரப்பட்ட ஆட்சி

இரண்டாவது அவை

6.1 செனட் என்று அழைக்கப்பட வேண்டிய இரண்டாவது அவையில் அனைத்து மாநிலங்களும் சமமான பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்கும். ஒவ்வொரு மாநில சட்டவாக்க சபைகளும் விகிதாசார வாக்கு அடிப்படையில் தலா 9 உறுப்பினர்களை செனட் அவைக்கு தெரிவு செய்யும்.

6.2 ஒவ்வொரு சட்டமூலமும் ஜனாதிபதியினால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பாக கீழவை மற்றும் செனட் அவை ஆகிய இரண்டு சபைகளினாலும் நிறைவேற்றப்பட வேண்டும். ஏதேனும் சட்டமூலமானது செனட் அவையினால் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அது சட்டமாக ஆக்கப்பட முடியாது.

6.3 ஒரு சட்டமூலமானது தமது மாநிலத்தின் நலன்களுக்கு குறிப்பாக குந்தகமாக அமைவதாக வடக்கு – கிழக்கு மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கருதுமிடத்து குறித்த சட்டமூலமானது அதன் இரண்டாவது வாசிப்புக்காக விடப்படலாகாது.

ஒரு சட்டமூலமானது வடக்கு கிழக்கு மாநிலத்தின் நலன்களுக்கு குறிப்பாக குந்தகமாக அமைகின்றதா என்பது தொடர்பான விடயமானது பிணக்கிற்குட்படுத்தப்படும் போது, அது தொடர்பிலான விவாதமொன்றைத் தொடர்ந்து அவைத்தலைவர் குறித்த விடயம் தொடர்பில் முடிவெடுக்க முடியும்.

அவைத்தலைவரின் குறித்த தீர்மானமானது அரசியலமைப்பு நீதிமன்றினால் மீளாய்வுக்குட்படுத்தப்பட முடியும்.

மாநில ஆளுநர்

7.1 முதலமைச்சரின் ஆலோசனையின்மீது ஆளுநரானவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட வேண்டும்.

7.2 ஆளுநரின் பதவியானது அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் சம்பிரதாயபூர்வமானதாகும்.

7.3 மாநில சட்டவாக்க சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெறும் உறுப்பினரை முதலமைச்சராக ஆளுநர் நியமிக்க வேண்டும். முதலமைச்சர் மாநில அமைச்சர்களை நியமிக்க வேண்டும்.

மத்தியினதும் மாநிலத்தினதும் அதிகாரங்கள்

8.1. அரசாங்க அதிகாரங்கள் மத்திக்கும் மாநிலத்திற்கும் இடையே பகிரப்படும்.

8.2. சமஷ்டி நிரல் என அழைக்கப்படும் நிரல் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை கொண்டமையும்.

8.3. சமஷ்டி நிரலில் இல்லாத அனைத்து அதிகாரங்களும், மாநில நிரலில் நிரல்படுத்தப்பட்டுள்ள அதிகாரங்கள் உள்ளடங்கலாக, மாநிலத்தின் அதிகாரங்கள் ஆகும்.

8.4. மத்தியும் மாநிலமும் தத்தமது அதிகார தத்துவங்களில் மீயுயர்வானவை.

குறிப்பு:

கீழே காணப்படும் மாநில நிரல் வடக்கு கிழக்கிற்கு இருக்க வேண்டிய அதிகாரங்கள் எவை என்ற பார்வையில் முன் வைக்கப்படுகின்றது. பல்கூறு சமஷ்டி ஏற்பாட்டிற்கு நாம் எதிரானவர்கள் அல்ல என்றாலும் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே அளவான அதிகாரங்கள் இருக்க வேண்டுமா (சமச்சீரான சமஷ்டி) என்பது தொடர்பில் நாம் இங்கு கருத்துக்கூறவில்லை.

வடக்கு கிழக்கு மாநிலத்தைப் போலல்லாது இலங்கையின் வேறெந்தப் பாகமும் சுயாட்சியைக் கோரவில்லை. மேலும் நாங்கள் இலங்கையின் மற்றைய மாநிலங்கள் குறைந்த அதிகாரங்களை வைத்திருப்பது போலல்லாது வடக்குக் கிழக்கு மாநிலமானது சமச்சீரற்ற அதிகூடிய அதிகாரங்களை அனுபவிப்பதை அங்கீகரிக்கின்றோம்.

மாநில நிரல்

காணி

சுகாதாரமும் சுதேச மருத்துவமும்

உயர்கல்வி, பல்கலைக்கழகங்கள் உள்ளடங்கலாக கல்வியும் கல்விச் சேவைகளும்

கமத்தொழிலும் கமநலசேவைகளும்

நீர்ப்பாசனம்

விலங்குவேளாண்மை

கண்டமேடு மற்றும்பொருளாதார வலயம் உள்ளிட்ட வரலாற்றுநீர்ப்பரப்புகள் மற்றும் ஆள்புலநீர்ப்பரப்புக்கள் உள்ளடங்கலான கரையோரவலயங்களுடன் தொடர்புபட்ட மீன்பிடித்தொழில், கனிப்பொருள்கள், சுரங்கங்கள் உள்ளடங்கலான பொருளாதார வளங்கள்.

மாநிலத்திற்குள்ளான வனங்கள், சரணாலயங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

கைத்தொழில்களும் கைத்தொழில் அபிவிருத்தியும்

எரிபொருள், மின்சாரம் மற்றும் மின்வலு வழங்கல்

சுரங்கங்களும் கனியவளங்களும் குவாரிகளும்

போக்குவரத்து

மாநில கணக்கெடுப்பும் புள்ளி விபரவியலும்

விமான நிலையங்களும் துறைமுகங்களும் இறங்குதுறைகளும்

ஆறுகளும் நீர்நிலைகளும்

வீதிகளும் பெருந்தெருக்களும்

வீடமைப்பும் நிர்மாணத்துறையும்

நகர திட்டமிடலும் அபிவிருத்தியும்

கிராமிய அபிவிருத்தி

உள்ளுராட்சிமன்றங்கள்

கூட்டுறவுகள்

மாநிலத்திற்குள்ளான உணவு விநியோகமும் பகிர்ந்தளிப்பும்

சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு

பொது ஆற்றுகைகள் உள்ளடங்கலாக கலாச்சாரச் செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல்,

தொலைக்காட்சி உள்ளடங்கலான ஒலிபரப்பும் ஊடகமும்

நிவாரணங்கள், புனர்வாழ்வு, புனர்நிர்மாணம்

சமூகப் பாதுகாப்பு

காவல்துறையும் சட்டமும் ஒழுங்கும். (மீன்பிடி உரித்துகளையும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கும் கரையோர வளங்களை பாதுகாக்கும் பொருட்டும் காவல்துறை ஒரு கரையோரப் பாதுகாப்பு பிரிவொன்றை ஸ்தாபிக்கமுடியும்)

சீர்திருத்தும் நிலையங்கள் மற்றும் சிறுவர் நன்னடத்தை நிறுவனங்களின் நிர்வாகம்

மாநில பொதுச்சேவைகள்

விளையாட்டுத்துறை

மாநிலத்திற்குள்ளான கூட்டிணைக்கப்படாத சங்கங்களையும் மன்றங்களையும் ஒழுங்குபடுத்தல்

மாநிலத்தின் கடன்

உள்நாட்டு மற்றும் சர்வதேச கடன் மற்றும் உதவி பெறுதல் (சர்வதேச கடன் பெறுதலின் போது குறித்த வரையறையை மீறும் பட்சத்தில் மத்தியின் ஒருங்கியைவு தேவைப்படும்)

மாநிலத்துக்கான வெளிநாட்டு நேரடி முதலீடு, சர்வதேச நன்கொடைகள், அபிவிருத்திக்கான உதவிகளை ஒழுங்குபடுத்தலும் ஊக்குவித்தலும்.

மாநில நிதி மற்றும் கடன் நிறுவனங்கள்

மதுவரி தீர்வைகள்

பிராந்தியத்தின் மொத்த மற்றும் சில்லறை விற்பனைகள் மீதான விற்பனைப் புரள்வுவரிகள் பெறுமதி சேர்க்கப்பட்ட வரிகள்.

தேசிய லொத்தர்கள் தவிர்ந்த பந்தய வரிகளும், பரிசுப்போட்டிகளும், லொத்தர்களும் மீதானவரிகள்.

மோட்டார் வாகன உரிமம் மற்றும் கட்டணங்கள்.

மோட்டார் வாகன மற்றும் ஆதன விற்பனைகள் மீதான முத்திரைக் கட்டணம்.

நீதிமன்றங்களினால் அறவிடப்படும் தண்டப்பணங்கள்

நீதிமன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் மீதானமுத்திரைக் கட்டணம் உள்ளடங்கலாக நீதிமன்ற கட்டணங்கள்.

இறைவரியினை மதிப்பிடுதல், அறவிடுதல் உள்ளடங்கலான காணி வரி அறவீடு மற்றும் வரி அறவிடும்; நோக்கங்களுக்காக காணி பதிவேடுகளை பேணுதலும்.

கனிப்பொருள் உரிமைகள் மீதானவரிகள்.

மாநில கணக்காய்வு

மாநில நிரலில் குறித்துரைக்கப்பட்டவிடயங்கள் தொடர்பில் சட்டங்களை ஆக்குதல்.

மாநில நிரலில் குறித்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தண்டப்பணம்

மாநில மட்டத்திலான திட்டமிடல்

மாநிலத்துக்கான சட்ட சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள்

தொல்பொருள் மற்றும் பாரம்பரிய அமைவிடங்கள், நூதனசாலைகள், சுவடிகள்

மாநிலத்துக்குள்ளான நிர்வாகம்

மாநிலத்துக்குள்ளான நீதிநிர்வாகம்

மாநில திரட்டுநிதியம்.

மத்திய நிரல்

பாதுகாப்பு, மத்திய பந்தோபஸ்து மற்றும் ஆயுதப்படைகள்.

மத்திய புலனாய்வுத் திணைக்களம் சமஷ்டி நிரலுக்குட்பட்ட எல்லா விடயங்கள் தொடர்பிலான காவல்துறை அதிகாரங்கள்.

குடிவரவு, குடியகல்வு

வெளி விவகாரங்கள்

தேசிய குடிசன மதிப்பும் புள்ளி விபரமும்

நாணயமும் வெளிநாட்டு நாணய மாற்றும், சர்வதேச பொருளாதாரத் தொடர்புகள் நாணயக் கொள்கை.

மத்திய அரசுக்கான பொதுக்கடன்கள்

மத்திய அரசுக்கான வெளிநாட்டுக் கடன்கள்

வங்கி மற்றும் நிதியில் நிறுவனங்களின் ஒழுங்குபடுத்தல்கள்.

காப்புறுதி

பங்குப் பரிவர்த்தனையும் எதிர்காலச் சந்தை வாய்ப்பும்

மத்திய அரசின் கணக்காய்வு

தனியாட்களினதும் கம்பனிகளினதும் கூட்டுத்தாபனங்களினதும் வருமானம் மூலதனம் செல்வம் என்பவற்றின் மீதானவரிகள்.

மாநில வரிகள் தவிர்ந்த மத்திய அரசுக்கான மொத்த விற்பனை வரவு வரிகளும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரிகளும்

இறக்குமதி ஏற்றுமதி தீர்வைகள் உள்ளிட்ட சுங்கத் தீர்வைகள்

மத்திய அரசினால் அல்லது மத்திய திரட்டு நிதியினால் செலுத்தப்படக் கூடிய ஓய்வூதியம்

அணுசக்தி

தேசிய மின் உற்பத்தி பராமரிப்பும் முகாமைத்துவமும்

சர்வதேச போக்குவரத்து மத்திய அரசின் போக்குவரத்து மற்றும் மத்திய அரசின் புகையிரதப் போக்குவரத்தும்

விமானப் போக்குவரத்து

மத்திய அரசின் அதிவேக நெடுஞ்சாலைகள்

கடலோர வலயம் தொடர்பிலான கடலோரப் பாதுகாப்பு வரலாற்று நீர்ப்பரப்புகள், ஆட்புல நீர்ப்பரப்புகள் உள்ளடங்கலாக பொருளாதார வலயங்கள் கண்ட மேடுகள் உள்ளடங்கலாக, சர்வதேச கப்பற் தொழிலும்; கப்பல் போக்குவரத்தும்

மத்திய அரசுக்கான தேர்தல்கள்

தபால் மற்றும் தொலைத்தொடர்புகள்

மத்திய அரசின் பொதுச்சேவைகள் மற்றும் மத்திய அரசின் பொதுச்சேவைகள் ஆணைக்குழு

மருந்துகள், நஞ்சுகள் மற்றும் போதைவஸ்துகள்

நீதி நிர்வாகம்

மத்திய அரசுக்கான கைத்தொழில் ஆராய்ச்சியும் பயிற்சியும்

தரநிர்ணயம் மேம்பாடு சம்பந்தமான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள்

ஆக்கவுரிமைகள், புத்தகக்காட்சிகள், வடிவமைப்புகள், பதிப்புரிமை, புலமைத்துவ வியாபாரக் குறிகள், வணிகக் குறிகள்.

ஏகபோகவுரிமை இணைப்புகள்

மத்திய தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு

மத்திய தொல்பொருள்கள் மற்றும் நூதனசாலைகள்

மத்திய விளையாட்டுத்துறையின் நிர்வாகம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி

இயற்கை அழிவு, பேரிடர் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தலையீடு செய்தல்

தொழில் தரம் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள்

பிரஜாவுரிமை

காணி

9.1 காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ‘அரச காணி’ என வரையறுக்கப்பட்டவை மாநிலங்களிற்கு உரித்தாகும்.

9.2 மத்திய நிரலின் கீழான விடயங்கள் தொடர்பில் நியாயமாக தேவைப்படும் காணிகள் தவிர தற்போது மத்தியின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகள் அனைத்தும் மாநிலங்களுக்கு உரித்தாகும்.

இது தொடர்பில் பிணக்கு ஏதும் இருப்பின் அப்பிணக்கானது மத்தியஸ்தத்திற்கு விடப்பட்டு இறுதியாக அரசியலமைப்பு நீதிமன்றினால் தீர்க்கப்படலாம்.

9.3 தற்போது மத்திய நிரலில் இல்லாத விடயம் ஒன்று தொடர்பான அரச காணி மத்தியின் கட்டுப்பாட்டில் இருப்பின் அது மாநிலத்தைச் சேரும்.

9.4 மத்தியின் கட்டுப்பாட்டில் அல்லது ஆட்சியில் உள்ள தனியார் காணிகள் அனைத்தினதும் உடமை அவற்றின் சட்டபூர்வ உரித்தாளரிற்கு கையளிக்கப்படல் வேண்டும்.

9.5 காணி கைமாற்றம், காணி அபிவிருத்தி, காணிச் சீர்திருத்தம், காணி பயன்பாடு, காணி விற்பனை, உள்ளடங்கலாக காணி தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு மாநிலங்களிற்கு பூரண உரித்து உண்டு.

9.6 நடைமுறையில் இருக்கும் சட்டங்கள், ஒழுங்கு விதிகள் அல்லது சுற்று நிருபங்கள் போன்றவை மாநிலத்திற்கு உரித்தாகிய காணி அதிகாரங்கள் தொடர்பில் முரணாக இருக்குமிடத்து அவை வலிதற்றவையாகும்.

9.7 மாநிலத்தினுள் உள்ள காணி ஒன்றை மத்திய நிரலில் உள்ள விடயம் ஒன்றிற்கு பயன்படுத்த மத்தி விரும்புமிடத்து, அதனை மத்திய அரசாங்கம் மாநிலத்திடம் கோரலாம். இது தொடர்பில் பிணக்கு ஏதும் இருப்பின் அப்பிணக்கானது மத்தியஸ்தத்திற்கு விடப்பட்டு இறுதியாக அரசியலமைப்பு நீதிமன்றினால் தீர்க்கப்படலாம்.

9.8 மத்திய நிரலில் உள்ள விடயம் ஒன்றிற்கு மாநிலத்தினால் காணி ஏதாவது வழங்கப்பட்டிருக்குமிடத்து மத்திய அரசாங்கம் அத்தேவைக்கு மாத்திரமே அதனைப் பயன்படுத்தலாம்.

உள்ளூராட்சி மன்றங்கள்

10.1 உள்ளூராட்சி சபைகளின் கட்டமைப்பு, அதிகாரங்கள், அமைவு போன்றவை தொடர்பில் மாநிலம் சட்டங்களை இயற்றும்.

10.2 அவ்வுள்ளூராட்சி சபைகள் குறிக்கப்பட்ட மாநிலத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்பதுடன் அச்சபைகள் சட்டத்தின் பிரகாரம் ஒதுக்கப்பட்ட விடயங்களை செயற்படுதுவதுடன் அவ்விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்ட மாநிலத்தின் முகவராகவும் தொழிற்படும்.

10.3 உள்ளூராட்சி சபைகள் உட்பட நிர்வாக அலகுகளின் எல்லை நிர்ணயம் தொடர்பில் மாநிலங்கள் அதிகாரமுடையதாக இருக்கும்.

பொலிஸ், சட்டம் மற்றும் ஒழுங்கு

11.1 பொது ஒழுங்கு உள்ளிட்ட சட்டம் மற்றும் ஒழுங்கும் பொலிஸ் அதிகாரங்களும் மாநிலங்களின் அதிகாரங்களாக இருக்க வேண்டும். ஆயினும் கொழும்புத் தலைநகரப் பிராந்தியத்துக்கும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே உள்ளிட்ட அதன் சுற்றுப்புறங்களுக்குமாக மத்திக்கும் ஒதுக்கப்படலாம்.

11.2 ஒவ்வொரு மாநிலத்திலும் பொலிஸ் படையொன்று இருக்க வேண்டும் என்பதுடன் அது மாநிலத்துக்குள் பொது ஒழுங்கைப் பேணுவதற்கும்; அத்தகைய குற்றங்களைத் தடுத்தல், கண்டுபடித்தல் புலன்விசாரணை செய்தல் மற்றும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் வழக்குரைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கும் பொறுப்பாக இருத்தல் வேண்டும்.

11.3 பொலிசுக்குள் கரையோரப் பாதுகாப்பு பிரிவொன்று உருவாக்கப்படுவதுடன் குறித்த பிரிவானது மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மீன்பிடி உரிமைகளை உறுதிப்படுத்தவும் கரையோர வளங்களைப் பாதுகாக்கவும் வேண்டும்.

11.4 மத்திய அரசுக்கான நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், கண்டுபிடித்தல் புலன்விசாரணை செய்தல் மற்றும்; வழக்குரைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கும் சர்வதேச குற்றங்கள் மற்றும் தலைநகரப் பிராந்தியத்தில் இடம்பெறும் குற்றங்கள் போன்றவற்றுக்கு பொறுப்பாக மத்திய புலனாய்வுத் திணைக்களமொன்று உருவாக்கப்படுதல் வேண்டும்.

11.5 ஒவ்வொரு மாநிலத்திலும் பொலிஸ் ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படுவதுடன் மத்திய அளவில் மத்திய பொலிஸ் ஆணைக்குழுவொன்றும் உருவாக்கப்படல் வேண்டும்.

11.6 மத்திய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான அங்கத்தவர்கள் அரசியலமைப்புச் சபையினால் நியமிக்கப்பட வேண்டும். மாநில பொலிஸ் ஆணைக்குழுவிற்கான அங்கத்தவர்கள் மாநில நல்லாட்சிச் சபையினால் நியமிக்கப்பட வேண்டும்.

11.7 மாநில அரசுக்குள்ளாக ஒரு கடுமையான நிலை ஏற்படுகின்ற போது இராணுவத்தை நிலைநிறுத்த வேண்டி, குறித்த மாநில அரசின் முதலமைச்சர் மத்திய அரசின் ஜனாதிபதியின் தலையீட்டைக் கோரலாம்.

இரண்டு வாரங்களுக்கிடையில் மாநில சட்டவாக்க சபை குறித்த முடிவினை பலப்படுத்தாது விட்டால் முதலமைச்சரின் வேண்டுகோள் காலாவதியாகிவிடும்.

வெளியுறவுக் கொள்கை

12.1 வெளியுறவுக் கொள்கை மத்திய நிரலுக்குரிய விடயமாக இருக்கும். எப்படி இருப்பினும் மாநில நிரலுக்குரிய விடயம் ஒன்று வெளியுறவுக் கொள்கைத் தீர்மானத்திற்குரிய விடயமாக உள்ளபோது, மாநில அரசின் அத்தியாவசிய நலன்கள் மற்றும் அதிகாரங்கள் தொடர்பிலான குறித்த விடயம் பற்றி வெளியுறவுக் கொள்கைத் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது மாநில அரசு அதில் பங்கெடுக்கும்.

மாநில அரசுகளின் அதிகாரங்கள் பற்றியதாக ஒரு விடயம் உள்ளபோது, மாநில அரசின் பங்களிப்பு காத்திரமானதாக இருத்தல் வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மாநில அரசுகள் பொருத்தமான வகையில் சர்வதேச இணக்கப்பாடுகளில் பங்கெடுக்கும்.

12.2 வடகிழக்கு மாநில அரசு தனது பொருளாதார, கல்வி, கலாச்சார நலன்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசுக்குரிய தூதுவராலயங்கள் உயர் ஸ்தானிகராலயங்களில் தனக்கான ஒரு அலகினை ஏற்படுத்திக் கொள்வதற்கான உரித்தினைக் கொண்டிருக்கும்.

பொதுச் சேவை

13.1 பிரதம செயலாளர், முதலமைச்சரின் செயலாளர், அமைச்சர்களின் செயலாளர்கள் ஆகியோர் முதலமைச்சரினால் மாநில அமைச்சரவையின் ஆலோசனையுடன் நியமனம் செய்யப்படுவர்.

13.2 மாநிலத்தின் அதிகாரத்திற்குட்பட்ட விடயங்களை மேற்கொள்வதற்கு மாநில பொதுச் சேவைகள் ஒன்று ஏற்படுத்தப்படும்.

13.3 அரசியலமைப்பின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பொதுச் சேவைகள் ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படும். ஒவ்வொரு மாநில பொதுச் சேவைகளிற்கான ஆட்சேர்ப்பு, நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு, பதவி விலக்கல், ஒழுக்காற்று கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு இவ்வாணைக்குழு பொறுப்பாக இருக்கும்.

மாநில பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மாநில நல்லாட்சிக்கான அவையின் பரிந்துரையின் மீது முதலமைச்சரினால் நியமிக்கப்படுவர்.

13.4 மாநிலத்திற்குட்பட்ட கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோரின் நியமனங்கள், இடமாற்றம், மற்றும் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடுகள் என்பவற்றை மாநில பொதுச் சேவைகள் ஆணைக்குழு கொண்டிருக்கும்.

மேற் குறித்த உத்தியோகத்தர்கள் பிரதம செயலாளர் அல்லது மாநில அரசாங்கத்தின் ஊடாக மத்திய அரசினால் ஒதுக்கப்பட்ட பல்வேறுபட்ட செயற்பாடுகளையும் மேற்கொள்வர்.

13.5 மத்திய பொதுச் சேவைகள் ஆணைகுழு மத்திய அரசாங்கத்தின் செயற்பரப்பினுளடங்கும் மத்திய நிரலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தும்.

13.6 மத்திய பொதுச் சேவைகளிற்கான ஆட்சேர்ப்பு, நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு, பதவி விலக்கல், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற்கு மத்திய பொதுச் சேவைகள் ஆணைக்குழு பொறுப்பாக இருக்கும்.

மத்திய பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையின் மீது பிரதம மந்திரியால் நியமிக்கப்படுவர்.

ஆட்சேர்ப்புக் கொள்கை

14.1 மத்திய பொதுச் சேவைகளுக்கும் பாதுகாப்பு படைக்குமான ஆட்சேர்ப்பானது முழு நாட்டினதும் இன விகிதாசாரத்தினைப் பிரதிபலித்தல் வேண்டும்.

14.2 மாநில பொதுச் சேவைகளுக்கும் காவல்துறைக்குமான ஆட்சேர்ப்பானது அப்பிராந்திய இன விகிதாசாரத்தினைப் பிரதிபலித்தல் வேண்டும்.

கல்வி

15.1 கல்வி என்னும் விடயமானது மாநிலங்களுக்கு பாரப்படுத்தப்படல் வேண்டும். இது ஆரம்ப, இடைநிலை மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளடங்கலான மேல்நிலைக் கல்வி ஆகியவற்றையும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் சார் கல்வி போன்றவற்றை வழங்கும் நிறுவகங்களையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.

15.2 ஏதேனும் பாடசாலை, பல்கலைக்கழகம் அல்லது வேறு ஏதேனும் மேல்நிலைக் கல்வி நிறுவகம் என்பனவற்றை ஆரம்பிப்பதோ அல்லது கொண்டு நடாத்துவதோ மாநிலங்களின் விடயப்பரப்புக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.

15.3 கல்வி நிறுவகங்களில் ஆளணியினரை வேலைக்கமர்த்தல் மற்றும் அவர்கள் மீதான ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு போன்றவை மாநில கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்படுதல் வேண்டும்.

அரசிறை சமஷ்டி

16.1 மாநிலங்கள்; தமது அதிகாரங்களை சுயாதீனமாக பிரயோகிக்ககூடியதாக இருப்பதை அரசிறை ஏற்பாடுகள்; உறுதிப்படுத்த வேண்டும்.

16.2 அரசிறை சமநிலைப்படுத்துகை மற்றும் சமாந்திர சமத்துவம் ஆகியவற்றை அமுல்ப்படுத்துவதற்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்படும் போது வடக்குக் கிழக்கில் போரினால் ஏற்பட்ட தாக்கம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

16.3 அரசிறை உறவுகள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்திற்கு பிணிக்கும் தன்மை வாய்ந்த சிபாரிசுகளை மேற்கொள்ளும் அதிகாரங்களைக் கொண்ட மத்திய நிதி ஆணைக்குழு உருவாக்கப்படல் வேண்டும்.

16.4 வடக்குக் கிழக்கு மாநிலமானது சர்வதேசத்திடமிருந்து நேரடியாக கடன் மற்றும் உதவி பெறுவதற்கான அதிகாரங்களைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதுடன் வடக்கு கிழக்கின் கடன் சுமையானது மத்திய அரசாங்கத்தின் பொறுப்புடைமையாக இல்லாத வேளையில் மத்திய அரசாங்கத்தில் தலையீடு இன்றி சர்வதேச உதவிகளை நேரடியாகப் பெறுவதற்கான உரிமையையும் கொண்டிருத்தல் வேண்டும்.

கடன்பெறுதலானது மத்திக்கு தாக்கம் ஒன்றை ஏற்படுத்தும் தருணத்தில் மாநிலமானது மத்திய அரசாங்கத்துடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.மத்தி – மாநிலத்திற்கிடையிலான பிணக்குகளைத் தீர்த்தல்

அரசியலமைப்பு நீதிமன்றம்

17.1 அரசியலமைப்பு தொடர்பான சகல விடயங்கள் சம்பந்தமாக தீர்ப்பு வழங்குவதற்கான முழுமையான நியாயதிக்கத்தை கொண்டதாக அரசியலைப்பு நீதிமன்றமொன்றானது இருக்க வேண்டும் என்பதுடன் அடிப்படை உரிமைகள் மற்றும் எழுத்தாணை நியாயாதிக்கம் தொடர்பான இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றமாகவும் அது அமைந்திருக்க வேண்டும்.

17.2 மத்திய பாரளுமன்றம் மற்றும் மாநில சட்டவாக்க மன்றங்களினால் ஆக்கப்படும் சட்டவாக்கங்களை நீதிமுறை மீளாய்வு செய்கின்ற நீதிமன்றமாகவும் அரசியலமைப்பு நீதிமன்றம் அமைந்திருக்க வேண்டும்.

17.3 அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு மேற்கொள்ளப்படும் நியமனங்களானவை இலங்கையின் பன்மைத்துவ தேசியத் தன்மையை பிரதிபலிப்பதாக அமைந்திருத்தல் வேண்டும்.

17.4 பிரதமர் மற்றும் மாநிலங்களின் முதலமைச்சர்களைக் கொண்ட அமையமானது (Colloquium) புலமைவாய்ந்த சட்டவாளர்களிலிருந்து 9 உறுப்பினர்களை அரசியமைப்பு நீதிமன்றத்துக்கு நியமனஞ் செய்ய வேண்டும்.

முதலமைச்சர்களும் பிரதமரும் முறையே மாநில நல்லாட்சி பேரவையினதும் அரசியலமைப்புச் சபையினதும் ஆலாசனைகளின் பேரில் செயற்பட வேண்டும்.

17.5 வடக்கு-கிழக்கு மாநில முதலமைச்சரானவர் சமஷ்டி ஏற்பாடுகளின் சமச்சீரற்ற தன்மையின் அடிப்படையில் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு 3 உறுப்பினர்களை நியமித்தல் உரித்துடையவராதல் வேண்டும்.

வடக்கு-கிழக்கு மாநிலம் தொடர்பான வழக்கொன்றின் தீர்ப்பில் வடக்கு கிழக்கு மாநில முதலமைச்சரால் பிரேரிக்கப்பட்ட 3 நீதிபதிகளில் குறைந்தது 2 பேராவது ஒத்துப் போயிருத்தல் வேண்டும்.

17.6 பாராளுமன்றம் அல்லது மாநில சட்டசபையினால் சட்டம் ஒன்று ஆக்கப்படும் போது அதன் அரசியலமைப்புக்கமைவாந்தன்மை பற்றி எவரேனும் ஒரு பிரஜை அரசியலமைப்பு நீதிமன்றில் வழக்கிடலாம்.

நீதித்துறை

18.1 ஒவ்வொரு மாநில அரசுக்கும் ஒரு மேன்முறையீட்டு நீதிமன்றம் இருக்க வேண்டும். முதனிலை நீதிமன்றங்கள், மேல் நீதிமன்றங்கள், நியாய மன்றங்கள் மற்றும் நீதி நிறுவனங்கள் கையாண்ட வழக்குகள், வழக்குரைப்புகள் மற்றும் விடயங்கள் தொடர்பில் மேன்முறையீடு, மீளாய்வு மற்றும் முன்னிலை மீட்பு செய்வதற்கான நீதிமன்றாகவும் முதனிலை நீதிமன்றங்கள், மேல் நீதிமன்றங்கள், நியாய மன்றங்கள் மற்றும் நீதி நிறுவனங்கள் விடுகின்ற சட்ட மற்றும் நிகழ்வுப் பிழைகளை சீர் செய்கின்ற மேன்முறையீட்டு நியாயாதிக்கத்தை கொண்ட நீதிமன்றாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் செயற்படும்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் எழுத்தாணை நியாயாதிக்கம் தொடர்பில் மாநிலத்துக்குள் முதனிலை நீதிமன்றாகவும் செயற்படும்.

18.2 பாராளுமன்றமும் மாநில சட்டவாக்க சபையும் சட்டத்தால் அளிக்கப்படுகின்ற தத்துவங்கள் தொடர்பில் முதனிலை மற்றும் மேன்முறையீட்டு அதிகாரங்களை பிரயோகிக்கின்ற நீதிமன்றமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் விளங்கும்.

18.3 மத்திக்கான நீதித்துறை உயர் நீதிமன்றத்தை மாத்திரம் கொண்டதாகவும் அது மேன்முறையீட்டுக்கான ,றுதி நீதிமன்றமாகவும் விளங்கும்.

18.4 மாநிலத்துக்கான மாநில முதலமைச்சருடன் கலந்துரையாடி நல்லாட்சிக்கான மாநில அவையினால் நியமிக்கப்படும் மாநில நீதிச்சேவை ஆணைக்குழு தன்னகத்தே மேன்றையீட்டு நீதிமன்றத் தலைவரோடு மேன்முறையீட்டு நீதிமன்றின் அடுத்த ,ரண்டு சிரேஷ்ட நீதிபதிகளைக் கொண்டிருக்கும்.

18.5 மாநிலத்தக்கான ஏனைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளையும் அதன் கீழ்நிலை நீதிமன்ற நீதிபதிகளையும் நியமிக்கின்ற பொறுப்பினை மாநில நீதிச்சேவை ஆணைக்குழுவானது கொண்டிருக்கும். நீதிபதிகளுடைய ,டமாற்றம் தொடர்பில் மாநில நீதிச்சேவை ஆணைக்குழுவானது மத்திய நீதிச்சேவை ஆணைக்குழுவோடு கலந்துரையாடல் செய்யும்.

நல்லாட்சிக்கான மாநில சபை

19.1 முக்கியமான அரசாங்க பதவிகள், அரசாங்க அமைப்புக்களிற்கான நியமனங்கள் சுயாதீனமாக இருப்பதை உறுதிப்படுத்த நல்லாட்சிக்கான மாநில சபை ஒன்று இருத்தல் வேண்டும்.

19.2 அமைவு : முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர்,மாநில சபையின் முதல்வர், முதலமைச்சராலும், எதிர்கட்சித் தலைவராலும் கூட்டாக நியமிக்கப்படும் திறமை வாய்ந்த துறை சார் நிபுணர்கள் எட்டுப் பேரும் கொண்டதாக அமையும். மேற்கூறிய எட்டு சிவில் அமைப்பைச் சார்ந்தவர்களில் ஆகக் குறைந்தது மூன்று பெண்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

19.3 சபையின் பொறுப்பானது :மாநில நீதிச் சேவை ஆணைக்குழு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், பொது சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு,மாநில மன்றாடியார்,மாநில பொலிஸ் ஆணையாளர்,மாநில மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவற்றிற்கு உறுப்பினர்களை நியமித்தல்.

மாநில சட்டமா அதிபதி

20.1 நல்லாட்சிக்கான மாநில சபையினால் பரிந்துரைக்கப்படும் ஒருவர் முதலமைச்சரினால் மாநில சட்டமா அதிபதியாக நியமிக்கப்படுவார். அவர் மாநில சட்ட சபையினால் நிறைவேற்றப்படும் சட்டங்கள் அரசியலமைப்பிற்கு அமைவான தன்மை பற்றிய ஆலோசனைகளை முதலமைச்சருக்கு வழங்குவார்.

20.2 பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் சட்டங்கள் எதுவும் அரசியலமைப்புக்கு முரணானதாகக் கருதுமிடத்து மாநில சட்டமா அதிபதி முதலமைச்சருடனான கலந்தாலோசனையின் பின்னர் அரசியலமைப்பு

அவசர கால அதிகாரங்கள்.

21.1 மாநில அரசாங்கம் ஒன்று சமஷ்டியில் இருந்து பிரிவதற்கான மாநில நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்றும் அவ்வாறான பிரிவு உடனடியானதொன்று என மத்தியின் தலைவர் திருப்திப்படுமிடத்து,

அவர் அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்தலாம். அவ்வாறு பிரகடனப்படுத்துமிடத்து ஆளுநர் நிறைவேற்று அதிகாரங்களையும் மற்றும் முதலமைச்சரினதும் மாநில அமைச்சரவையினதும் அதிகாரங்களையும் அந் நிலமைகளுக்கு ஏற்றவாறு, கையகப்படுத்தலாம்.

21.2 அவசரகால நிலைப் பிரகடனமெதுவும் அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் தன்னியக்கமாகவே பிரகடன தினத்தில் இருந்து ஒரு மாத காலத்தினுள் மீளாய்விற்கு உட்படுத்தப்படல் வேண்டும்.

அரசியலமைப்பு நீதிமன்றம் அவசரகால நிலைப் பிரகடனம் சரியானது எனக் தீர்மானிக்குமிடத்து மத்திய அரசின் தலைவர் மாநில சட்ட சபையைக் கலைத்து அவசரகால நிலைப் பிரகடனத் தினத்தில் இருந்து ஆறு மாத காலப்பகுதியினுள் தேர்தலை நடாத்துதல் வேண்டும்.

அவசரகால நிலைப் பிரகடனம் நியாயப்படுத்த முடியாது என அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்மானிக்குமாயின் அவசர கால நிலை உடனடியாக அதன் சட்ட அந்தஸ்தையும் வலுவையும் இழந்து விடும்.

21.3 மேலே கூறியவாறு அவசரகால நிலை வலுவிழந்ததும், முதலமைச்சரும் மாநில அமைச்சரவையும் தொடர்ந்து பதவியில் இருப்பதோடு அவர்கள் இடைக்காலப் பகுதியில் நடைபெற்ற எந்த செயல், செயற்பாடுகளுக்கும் கட்டுப்பட மாட்டார்கள்

மத்தி-மாநிலங்கள், மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு

22.1 மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலங்களுக்கும் மத்திக்கும் இடையேயும் ஏற்படும் பிணக்குகளை கலந்தாலோசித்து சுமூகமான தீர்வு காண்பதற்கு விசேட சபைகளும் ஏற்பாடுகளும் செய்யப்படல் வேண்டும்.

22.2 பிணக்குகளைத் தீர்ப்பதற்கான வெளி ஒன்றை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசினால் முதலமைச்சர்களின் நிரந்தர மாநாடு ஒன்று கூட்டப்படல் வேண்டும்.

22.3 கல்வி, போக்குவரத்து போன்ற விடயங்களிற்கு தேவை ஏற்படும் இடத்து விசேட சபைகள் உருவாக்கப்படலாம்.

அரசியலமைப்புத் திருத்தங்கள்

23.1 மாநில த்தின் புவிசார் ஆள்புலம், மாநிலத்தின் அதிகாரம் மற்றும் பிராந்தியம் தொடர்பான அனைத்து விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றம் அரசியல் அமைப்பில் மாற்றம் எதனையும் முன்மொழியுமிடத்து அத்திருத்தங்கள் பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன் அனைத்துப் மாநிலங்களினதும் சட்டவாக்க சபைகளிலும் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவும் வேண்டும்.

மேலே விபரிக்கப்பட்டவாறு மத்தியில் ஏதாவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு அத்திருத்தம் ஏதாவது ஒரு மாநிலத்தில் அல்லது மாநிலங்களில் நிறைவேற்றப்படாது விடின் அம் மாநிலத்திற்கு அல்லது மாநிலங்களுக்கு ஏற்புடையதாகாது.

23.2 ஏனைய அரசியலமைப்புத் திருத்தங்கள் பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படின் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்..

வடகிழக்குப் மாநில ஆட்சி நடைமுறைக்கான சில முன் மொழிவுகள்.

மேலே குறிப்பிடப்பட்டது போல் தங்கள் மாநிலங்களில் ஆட்சியினைக் கொண்டு நடாத்துவதற்கு அந்தந்த மாநிலங்கள் ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும்.

சட்டவாக்க சபையிலும், மாநில அமைச்சரவையிலும் ஆகக் குறைந்தது 1/3 பங்கு ஆசனம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

முதலமைச்சர் தவிர்ந்த ஆகக் கூடுதலாக 14 அமைச்சர்களைக் கொண்ட மாநில அமைச்சரவை. உப அமைச்சர் அல்லது அது போன்ற அமைச்சர்கள் இடம் பெற மாட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையால் தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களுக்கு என வகுக்கப்பட்ட நியமங்களுக்கு அமைவாக உருவாக்கப்பட்ட மாநில மனித உரிமைகள் ஆணைக்குழுவால் கண்காணிக்கப்படுவதுமாகியதும் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வலுவாக்கக் கூடியதுமான பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளை உள்ளடக்கிய மாநில மனித உரிமைகள் பட்டயம் ஒன்று ஏற்படுத்தப்படும்.

மக்களின் ஆலோசனைகளுடன் சாதி பாகுபாட்டை இல்லாதொழிப்பதை வலியுறுத்தும் நடவடிக்கைகள் மாநிலத்தின் வழிகாட்டும் கோட்பாடுகள் ஆவணத்தில் உள்ளடக்கப்படல் வேண்டும்.

ஊழலுக்கெதிரான இந்திய செயற்பாட்டாளர்களால் முன் வைக்கப்பட்ட இந்திய ஜன் லோக்பல் சட்டமூலத்தை மாதிரியாகக் கொண்ட சுயாதீன பிரஜைகள் குறைகேள் அதிகாரி நியமிக்கப்படுவார்.

நிலையான அபிவிருத்தியையும் பசுமை வளர்ச்சியையும் உறுதிப்படுத்தக்கூடிய அதிகாரங்களை உடைய சுயாதீன பிராந்திய சுற்றுப் புறச்சூழல் அதிகாரசபை ஏற்படுத்தப்படும்

இங்கே அழுத்தவும் தீர்வுத்திட்ட முன்வரைவுனை படிப்பதற்கு

தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்கள் தலித் எதிர்ப்பு மாவட்டங்களாக இருப்பது ஏன்?

தமிழ்நாட்டில் ஜாதிய வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்படுவது தலித்துகள் என்கின்றன புள்ளிவிவரங்கள்
tamilnadu_dalit_houses_burnt

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் இருக்கும் குருவித்துரை கிராமத்தில் இந்த ஆண்டு பொங்கல் திருவிழாக் கொண்டாட்டங்களின்போது தலித்துகளுக்கும் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஜாதிமோதலை நேரில் சென்று விசாரித்த ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையம், அந்த குறிப்பிட்ட கிராமத்தை வன்கொடுமைகள் நடக்க வாய்ப்புள்ள கிராமமாக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது.

இந்த கிராமத்திற்கு நேரில் சென்று விசாரித்த அந்த ஆணையத்தின் துணை இயக்குநர் பி ராமசாமி இந்த பரிந்துரையை செய்திருந்தார். அவர் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை தனது பதவியில் இருந்து ஓய்வுபெற்றார்.

பிபிசி தமிழோசைக்கு செவ்வியளித்த அவர் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் தலித் வன்கொடுமை ஆபத்திருக்கும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மாநிலத்தின் பெரும்பான்மை மாவட்டங்கள் தலித் வன்கொடுமை ஆபத்திருக்கும் மாவட்டங்களாக நீடிப்பதற்கான காரணங்கள் குறித்தும் அதை போக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும்

அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த விரிவான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

பிபிசி தமிழ்

தமிழர்களின் தூக்கம் தொலைத்தார் மகிந்த! சிறையில் தூக்கம் தொலைத்தார் யோசித்த

mahinda-tear for son

ஜனாதிபதி மகிந்தவின் மகன் யோசித்த ராஜபக்ஸ சிறை சென்றிருக்கிறார். அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்று நம் முன்னோர்கள் சொன்ன வாக்கு பொய்யில்லை என்பதை நிரூபிக்கும் முகமாக இலங்கையில் சில மாற்றங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.

தமிழ் மக்கள் போரின் கொடுமையில் உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி மருந்தின்றி ;செத்துசெத்து பிணங்களாக விழுந்த போது போது உலக நாடுகள் அனைத்தும் கைகட்டி வேடிக்கை பார்த்து நின்றன.

தம்மை காப்பாற்ற எவரும் வரமாட்டார்களா தமிழனுக்கு தீர்வுகள் எதுவும் கிடைக்காத என இறுதிக்கணம் வரை ஏங்கியபடியே ஒவ்வொரு தமிழனும் தனது சொந்த மண்ணில் மரணித்தான்.

மரணத்தை முத்தமிடப்போகின்ற தமிழனின்; இறுதி நிமிடத்திலும் சர்வதேசம் தம்மை காப்பாற்றும் என்ற ஒரு சிறிய எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த எதிர்பார்ப்பிலும் இடி விழுந்தது. எவருமே தமிழ்மக்களை காப்பாற்ற முன்வரவில்லை. கள்ளங்கபடமற்ற பிஞ்சு பாலகர்களும் செத்துமடிந்த போதும் உலக நாட்டவர் எவருக்கும் தமிழ் மக்கள் மீது இரக்கம் வரவில்லையா என தவிக்க மட்டுமே தமிழ் மக்களால் முடிந்தது.srilanka flag feet

உலகம் முழுவதும் பேசப்படுவதற்காக மட்டும் தான் தமிழன் பிறந்தானேயன்றி சுதந்திரமான மனிதனாக அடிப்படை உரிமைகளையாவது பெற்று வாழ்வதற்காக அவன் படைக்கப்படவில்லை.

ஊடகங்கள் அனைத்திலும் தமிழன் செய்தியாகினான். இயற்கையின் அழகை பார்த்து ரசிப்பது போல் தமிழனுடைய இரத்தமும் சதையும் மற்றவர்கள் பார்த்து ரசிப்பதற்காகவோ, அல்லது பரிதாபப்படுவதற்காகவோ மட்டுமே உரியனவாகின.

யுத்தம் முடிந்து; உயிருடன் மீண்டு வந்த பலரை சிறைச்சாலைகள் அரவணைத்தன. பல கைதுகள் இடம்பெற்றது. தமிழனாக பிறந்த குற்றத்திற்காக பலர் கைது செய்யப்பட்டார்கள்.mahinda1

அனைத்தையும் பார்த்து அழமட்டும்தான் முடிந்தது. தமிழர்களின் அகிம்சைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாகி அதுவும் மௌனித்து விட்ட நிலையில் ஒவ்வொரு தமிழனாலும் இரத்தக்கண்ணீர் மட்டும் தான்விட முடிந்தது.

எந்த தமிழ்மகனாவது தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என குரல் கொடுத்துவிட்டால் அவர்களின் குரல்வளையும் நசுக்கப்பட்டது. அவர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள்.

யுத்தம் காவு கொண்டவர்கள் போக எஞ்சிய எச்சங்களும் உயிரை கையில் பிடித்தபடியே துயரத்துடன் பல நாட்களை கழிக்க வேண்டியிருந்தது.

தமிழர்களின் தூக்கம் தொலைந்து பல தசாப்தங்களாகிவிட்டது. எனினும் போரின் கதாநாயகர்களாக இருந்த சரத் பொன்சேகாவும் மகிந்த ராஜபக்ஸ குடும்பமும் வெற்றிக்களிப்பில் மிதந்தனர்.

தனது நாட்டிலேயே தமது உரிமைக்காக போராடிய சகோதர இனத்தை அழித்தமைக்கு அவர்கள் அந்நிய நாட்டவனை அழித்தமை போன்று வெற்றிவிழா கொண்டாடினர்.

தமது மக்களின் இரத்தக்கண்ணீருக்கு விடை கிடைக்காத என ஏங்கிக்கொண்டிருந்தான் தமிழன். தமது நாட்டு மக்களாகிய தமிழ் மக்களின் சாவில் சந்தோசத்தை அடைந்த இலங்கை நாட்டின் தலைமைகளுக்கு அந்த வலியின் வேதனைகளை புரிய வைக்க தொடங்கியது காலம்.

தமிழ் மக்கள் பலர் தம் பிள்ளைகளையும் கணவரையும் பறி கொடுத்து அனுபவித்த அதே கொடுமையை போர் வெற்றியின் சிறிது காலங்களிலேயே சரத் பொன்சேகா அனுபவித்திருந்தார்.

Yoshitha Rajapaksa,
Yoshitha Rajapaksa,

பட்டம் பதவி அனைத்தும் இழந்து சிறை சென்றார். அவரது மனைவி பிள்ளைகள் குடும்பத்தலைவன் சிறை சென்றார் என அழுதழுது ஊடகங்களில் தம் துயரத்தை வெளிப்படுத்தினர். அவர்களை அரவணைக்க ஒரு சில சிங்கள ஊடகங்கள் மட்டுமே உதவின. தமிழ் பெண்களின் அதே தவிப்பை புத்தர் அவர்களுக்கு வரமாக கொடுத்தார்.

சிறைவாசம் அவருக்கு ஒரு படிப்பினையை கொடுக்கட்டும் என புத்தர் எண்ணியிருப்பார். அதுதான் போதாதென்று புத்தர் பெருமான் தொடர்ந்தும் தனது மகிமையால் தீயவர்களுக்கு சிறந்த படிப்பினை ஏற்படுத்தி தமிழர்களை காக்க திருவுளங் கொண்டாரா என வியக்கும்படி இலங்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

அரசனை நம்பி புருசனை கைவிட்டது போல் ஆட்சிக்கதிரையில் இருந்த அரசன் மகிந்த சோதிடத்தை நம்பி ஆட்சிக்கதிரையில் இருந்து விழுந்துவிட்டார்.

தமிழர்களை காக்க சிங்கள மதக்கடவுளான புத்தரே திருவுளங் கொண்டுவிட்டார் என எண்ணி ஒவ்வொரு தமிழனும் கண்கலங்கினான். அடுத்தடுத்த மாற்றங்களாக யோசித்த ராஜபக்ஸவின் கைது இடம்பெற்றுள்ளது.

மகிந்த குடும்பமே சிறைவாசலில் ஏங்கித்தவித்து கண்ணீர் விட்டதை கண்டு ஒவ்வொரு தமிழனும் கண்ணீர் விடுகிறான். அந்தக்கண்ணீர் எத்தகையது தெரியுமா?

தம் சகோதர இனமான அதிமேதகு முன்னாள் ஜனாதிபதியின் மகன் சிறை சென்றமைக்காகவேயாகும். இது சாதாரண விடயமா? யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பார்கள்.

Yoshitha Rajapaksa,
Yoshitha Rajapaksa,

தம் பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கும் கணவனை இழந்த பெண்களுக்கும் தூக்கம் தொலைக்க வைத்த மகிந்தவின் மகனிற்கு சிறைச்சாலையில் தூக்கம் போய்விட்டதாம்.

எனினும் மனித நேயமுள்ள ஜனாதிபதி மைத்திரி, மகிந்த குடும்பத்திற்கு பைத்தியம் பிடிக்காமல் பார்த்துக்கொள்வார் என தமிழர்கள் எண்ணுகிறார்கள்.

இலங்கையின் ஆட்சியாளர்களே இதுவரை காலமும் தமிழர்கள் அடக்கி வைக்கப்பட்டமை போதும் தீர்வுகளை விரைந்து கொடுங்கள் என்பதை சிங்களவர்களின் கடவுளான புத்தரே உணர்த்தி வருகிறார்.

தற்போதிருக்கும் ஆட்சியாளர்கள் இனிமேலாவது கண் திறப்பார்களா என்பதே தமிழர்களின் தற்போதைய ஏக்கங்களாகும்.

துவாரகா

நல்லாட்சி கட்டுகதைகள்: வடக்கு, கிழக்கிற்கு 65,000 உலோக வீடுகள்

tamils No Rehabilitationவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த நான்கு வருடங்களில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு பல்வேறு ஒப்பந்தக்காரர்களிடம் இருந்தும் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி பகுதியில் விலைகோரல்களை கேட்டிருந்தது. சிவில் சமூக அமைப்புகளினால் விடுக்கப்பட்ட அறிக்கையொன்று (ஆங்கிலம், சிங்களம் அல்லது தமிழில் இங்கு கிடைக்கும்) இந்தத் திட்டம் பற்றி முக்கிய கரிசனைகளை எழுப்புகின்றபோதிலும், கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில மேலதிக விடயங்களும் அங்கு உள்ளன.

மாகாண அல்லது மாவட்ட அதிகாரிகளினால் அதிக அறியப்படாத இந்த திட்டமானது ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளதாக உறுப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய உலோக உற்பத்தி பெருநிறுவனமான ஆர்சிலர் மிட்டல் முன்கூட்டி கட்டமைக்கப்பட்ட உலோக வீடுகளை விநியோகிப்பதற்கும் நிறுவுவதற்கும் போட்டியிடுவதாக கூறப்படுவதுடன், அமைச்சர் அதில் அதிக விருப்பத்தைக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

இதேநேரம், விலைமனுக்கோரல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே மேற்படி நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது (விலைக்கோரல்கள் கோரப்பட்டதுடன், டிசம்பர் மாத இறுதிப்பகுதியில் அது முடிவுக்கு வந்திருந்தது). இங்கு எழும் பல பாரதூரமான பிரச்சினைகள் இருக்கின்றன:

  • முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட உலோக வீடுகளானது வடக்கு மற்றும் கிழக்கிற்கு ஒவ்வாதது என்று சொல்வது குறைமதிப்பீட்டுரையொன்றாக இருக்கக்கூடும். இந்தத் திட்டத்தின் எந்தவொரு அம்சம் பற்றியும் சம்பந்தப்பட்ட சமூகத்தினருடனோ அல்லது உள்ளூராட்சி அதிகாரிகளுடனோ கூட எந்தவொரு ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. இந்த விநியோகஸ்தர் சார்ந்த தீர்வுகள் மற்றும் வடிவமைப்புகளின் பொருந்தும்தன்மை மற்றும் ஏற்புடையத்தன்மை தொடர்பில் முன்னோடி பரிசோதனைகள் எதுவும் நடத்தப்படவில்லை என்பதுடன், அவ்வாறு செய்வதற்கு ஒப்பந்தக்காரர் மீது எந்த பொறுப்பும் இருப்பதாக தெரியவுமில்லை.
  • உள்ளூர் பொருட்கள் மற்றும் நிபுணத்துவத்தை பயன்படுத்துவதிலும் பார்க்க இறக்குமதி செய்யப்பட்ட உள்ளீடுகள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதானது உள்நாட்டு பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் என்பதுடன் மட்டுமல்லாது, இந்த மாதிரியான பாரியதொரு வீடமைப்புத் திட்டமொன்றை உருவாக்க எதிர்பார்க்கப்படக்கூடிய தேசிய மற்றும் உள்ளூர் பொருளாதாரத்துக்கான எந்தவொரு சாதகமான பக்க விளைவுகளையும் இல்லாது செய்துவிடும்.
  • இந்த திட்டத்தின் கீழான வீடொன்றுக்கு இலங்கை நாணய மதிப்பில் தலா 2 மில்லியன் (20 இலட்சம்) ரூபா செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதே பிராந்தியத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வீடமைப்புத் திட்டங்களிலும் பார்க்க இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாகும். இது ஒப்பந்தக்காரருக்கு இலாபமாக அமையும் அதேநேரம், ஏற்கனவே அதிகரித்து காணப்படும் பொது தேசிய கடனை மேலும் அதிகப்படுத்துவதற்கு மட்டுமே வழிவகுக்கும்.

உரிமையாளர் சார்ந்த அணுகுமுறைகளானது மலிவானது, மிகவும் இணங்கத்தக்கது மற்றும் அதிக சாதகமான சமூக அனுகூலங்களைக் கொண்டது என்று இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஆரம்ப கட்டம் உட்பட இலங்கையிலுள்ள பல தசாப்தகால அனுபவம் சுட்டிக்காட்டும் போது அரசாங்கம் எதற்காக ஒப்பந்தக்காரர் சார்ந்த அணுகுமுறையொன்றுக்கு சலுகையளிக்கிறது?

ஆம், இந்திய வீடமைப்புத்திட்டம் உட்பட அண்மைய உரிமையாளர் சார்ந்த திட்டங்கள் பல பிரச்சினைகளைக் கொண்டிருந்தன. குறிப்பாக கடன்சுமை பிரச்சினைகள் காணப்பட்டன. ஆனால், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாறாக அரசாங்கம் எதற்காக ஒப்பந்தக்காரர் சார்ந்த அணுகுமுறையொன்றை அரவணைக்கிறது? உண்மையில், ஒப்பந்தக்காரர் சார்ந்த, முற்றிலும் பங்கேற்பில்லாத, உள்ளூர் மற்றும் தேசிய பொருளாதாரத்துக்கு கணிசமான செலவொன்றை ஏற்படுத்தும் அணுகுமுறையொன்றை நியாயப்படுத்துவதற்கு இந்தப் பிரச்சினைகள் பயன்படுத்தப்படுவதாகவே தெரிகிறது. மக்களை மையப்படுத்தியதும் பங்கேற்றல் கொண்டதுமான வீடமைப்புத் திட்டங்களுக்கு பதிலாக விநியோகஸ்த்தர் சார்ந்த தீர்வுகள் சலுகையளிக்கப்படுவது ஏன்? இந்தத் திட்டம் உண்மையில் யாருக்கு பயனளிக்கப்போகிறது?

பாரியளவிலான பொது வீடமைப்பு தொடர்பில் வியக்கத்தக்க வளமான வரலாறும் அனுபவமும் இலங்கைக்கு இருக்கிறது. ஆனால், அரசுக்கான நீண்டகால செலவினங்கள் உட்பட சமூக அல்லது பொருளாதார பரிமாணங்களுக்கான குறுகிய சிந்தனையுடன் கொழும்பின் ஏழை மக்களை மோசமாக வடிவமைக்கப்பட்ட உயர்ந்த கட்டிடங்களுக்குள் உள்ளடக்குவதில் முன்னைய அரசாங்கம் இவை அனைத்தையும் அலட்சியப்படுத்தியதைப் போன்றே இந்த நல்லாட்சி அரசாங்கமும் சரியாக அதே காரியத்தைத்தான் செய்கிறது.

குவேனி என்பவர் எழுதி The fabrications of Yahapalanaya: 65,000 metal houses for the North & East என்ற தலைப்பில் கிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் வௌிவந்த கட்டுரையில் தமிழாக்கம்.

கலப்பு நீதிப்பொறிமுறையை நிறுவுதல் செயற்பாட்டாளர்கள் அறிக்கை!

srilanka flag down

பொறுப்புக் கூறல் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்களைக் கண்டித்து வடக்கு கிழக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த 23 பொது அமைப்புக்கள் மற்றும் 121 சிங்கள, தமிழ், முஸ்லிம் செயற்பாட்டாளர்களால் நேற்று அறிக்கையொன்று வௌியிடப்பட்டது. அறிக்கையின் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வில் இலங்கை உட்பட ஏனைய நாடுகளின் ஏகோபித்த சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்ட ஜெனீவாப் பிரேரணையை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கமானது அன்று வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கும் விதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் (BBC சிங்கள சேவை, 21 Jan. 2016/ Frontline, 14 Jan, 2016) வெளியிட்ட கருத்துக்களை சிவில் சமூக அமைப்புக்களும், செயற்பாட்டாளர்களுமான நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இப்பிரேரணையின் துணை அனுசரணையாளர் என்ற ரீதியில் இலங்கை அரசாங்கமானது பிரேரணையின் வரையறைகளை மிகவும் துல்லியமாக பேரம் பேசக்கூடிய ஒரு நிலையில் இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பிரேரணையின் உள்ளடக்கங்களுக்கான கலந்தாலோசனைகளின்போது இலங்கை அரசாங்கம் எடுத்துக்கொண்ட நிலைப்பாட்டின் காரணமாக பிரேரணை சமரசமான பிரேரணையாக உருவெடுத்தது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. சமரச பிரேரணையை நிறைவேற்றுவதற்காக வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து கூட தற்பொழுது இலங்கை அரசாங்கம் பின் வாங்குகிறது போலவே தோன்றுகின்றது. உருவாக்கப்படவிருக்கும் நீதிப்பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளோ, வல்லுனர்களோ பங்குகொள்ள மாட்டனர் என ஜனாதிபதி சிறிசேன மேற்கண்ட செவ்விகளில் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். BBC சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி சிறிசேன இலங்கையின் தற்போதைய நீதித்துறையிலும், விசாரணை கட்டமைப்புக்களிலும் தான் முழு நம்பிக்கை வைத்திருப்பதாக மேலும் குறிப்பிட்டிருந்தார். அந்தச் செவ்வியில் இலங்கைக்கு வெளிநாட்டு ஆதரவு தேவைப்படுமெனின் அவ்வாதரவு பொருளாதார அபிவிருத்திக்காகவே கோரப்படும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் செவ்வியைத் தொடர்ந்து ஓரிரு நாட்களிலேயே ஜானதிபதியின் செவ்வியினால் ஏற்பட்ட சேதத்தை தணிக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை அரசாங்கமானது ஜெனீவாவில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு கட்டுப்பட்டே செயற்படும் என சனல் 4 பேட்டியொன்றில் தெரிவித்தார். ஜெனீவாப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட தினத்திலிருந்தே ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையே காணப்படும் இந்த முன்னுக்குப் பின் முரண் நிலையானது பொது வெளியில் ஜெனீவாப் பிரேரணை தொடர்பாக அரசாங்கத்தின் கருத்துப்பரிமாற்றத்தின் ஒரு அங்கமாகவே விளங்குகின்றது.

முற்றிலும் உள்ளக நீதிப்பொறிமுறையொன்று நம்பகத்தன்மையற்றது என்பது இலங்கையில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோரின் கருத்தாகும். கடந்தகாலங்களில் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களும், இன்னும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் குற்றச்செயல்களும் திட்டமிட்ட விதத்திலேயே நடந்தேறி வந்ததுடன் – வருவதுடன், இந்தக் குற்றங்களை இழைத்த – இழைக்கும் பாதுகாப்பு கட்டமைப்புக்களும் கூடவே நீதித்துறையும், சட்டம் சார்ந்த கட்டமைப்புக்களும் தொடர்ந்தும் மாறாமலே காணப்படுகின்றன. சித்திரவதைகள், எதேச்சையான தடுப்புக்காவல், சட்டவிரோத கைதுகள், பாலியல் வன்முறைகள் ஆகிய மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இலங்கையில் திட்டமிட்ட வகையில் நிகழ்ந்து வரும் நிலையில் இதன் பின்னணியில் நீதி மற்றும் சட்டத்துறைகளின் மௌனமானது அந்தக் கட்டமைப்புக்கள் மீது எவ்விதத்திலும் நம்பிக்கையூட்டுவதாக அமையவில்லை. மேலும், இவ்வாறான பல்லாயிரக்கணக்கான வழக்குகள் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தேங்கி நிற்பதோடு, ஒரு சில வழக்குகளில் மாத்திரமே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டும் தீர்ப்புக்கள் வழங்கப்பட்டும் உள்ளன. ஆகையினாலே, இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக வழக்குத்தொடரல் முதற்கொண்டு நிலைமாற்று நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு வல்லுனர்களின் பங்குபற்றலை உறுதிசெய்தல் இப்பொறிமுறை மீது மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டோரின் நம்பிக்கையை வென்றெடுக்க முக்கிய காரணியாக அமையும். மேலும், இந்த நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு வல்லுனர்களின் பங்குபற்றலானது திறன், நிபுணத்துவம் சார்ந்தது மட்டுமன்றி அதற்கும் அப்பால் விருப்பு – சம்மதம் தொடர்பானது என்பதனையும் புரிந்து கொள்ளுதல் முக்கியமானது. நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளையும், சட்ட வல்லுனர்களையும் உள்ளடக்க 2015ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் இலங்கை அரசாங்கம் சம்மதித்தபோது பொறுப்புக்கூறல் தொடர்பாக இவ்வரசாங்கம் தீர்க்கமாக செயற்படும் என்றே எண்ணத் தோன்றியது. அன்று அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து இன்று பின்வாங்குதல் பொறுப்புக்கூறல் தொடர்பாக செயற்படுவதற்கு இவ்வரசாங்கத்துக்கு இருக்கும் ஆர்வத்தை கேள்விக்குட்படுத்துகின்றது.

இலங்கை அரசாங்கமானது ஜெனீவா பிரேரணைக்கு அமைவாக இலங்கையில் நிலைமாற்று நீதி பொறிமுறையை வடிவமைப்பதற்கு ஆலோசனைகளை ஆரம்பித்திருப்பதாக கூறும் நிலையில், ஜனாதிபதி சிறிசேனவின் இக்கருத்துக்கள் அந்த ஆலோசனை செயல்முறைகளை வெகுவாக பலவீனப்படுத்துவதுடன், அவ்வாலோசனை முயற்சிகளின் பலனை கேள்விக்குறிக்கு உள்ளாக்குகின்றன. மேலும், இந்தப் நீதிப்பொறிமுறைகளை உருவாக்க அரசாங்கம் ஏற்கனவே வரைபு சட்டங்களை உருவாக்கியுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் அரசாங்கம் மேற்கொண்டு வருவாதாகக் கூறும் ‘ஆலோசனைகள்’ வெறும் கண்துடைப்பு செயற்பாடுகளோ என எமக்கு எண்ணத் தோன்றுகின்றது.

மேலும், மேற்கண்ட அதே BBC செவ்வியில் ஜனாதிபதி சிறிசேன, பதவியேற்ற பின்னும் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களை நிராகரித்தமையும், அவருக்கு முன்னமைந்த ஜனாதிபதி போன்றே மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றம் சுமத்துவோர் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு சார்பானவர்கள் என்ற கருத்தை முன்வைத்ததும் மிகவும் வருத்தத்துக்குரியது.

மேலும், யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த “தேசிய பொங்கல் விழா” நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் தற்போது இறந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். உணர்ச்சியற்ற இக்கூற்றானது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வேதனையை பன்மடங்காக்கியிருக்கும். அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கத்தின் அசமந்த போக்கை வெளிச்சமிட்டு காட்டுகின்றது. பிரதமர் இதே கருத்தை தொடர்ந்து வந்த தனது சனல் 4 செவ்வியிலும் குறிப்பிட்டிருந்தார். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பிரதமரிடம் இவ்வாறான தகவல்கள் இருப்பின் அவற்றை அவர் ஏன் உரிய வழிமுறைகளூடாக வெளிப்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகின்றது. மேலும், குறைபாடுகள் நிறைந்த பரணகம ஆணைக்குழுவை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கைவிடுமாறு கோரியிருந்தும் அரசாங்கமானது அவ்வாணைக்குழுவை தொடர்ந்தும் நடாத்திச் செல்ல முடிவெடுத்துள்ளமையானது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கமானது நேர்மையாக செயற்பட விரும்பவில்லை என்பதற்கு சான்றாகும்​

இது போன்றே, அரசாங்கம் அரசியல்கைதிகள் தொடர்பாக தானே வழங்கிய வாக்குறுதிகளையும், காலக்கெடுகளையும் நிறைவேற்றாத நிலையில் உலக பொருளாதார அவை கூட்டத்தொடரில் பங்குபற்றியிருந்த பிரதமர் தமது அரசை பொறுத்தவரை இலங்கையில் அரசியல்கைதிகள் காணப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

மேற்கூறிய சகலவற்றையும் கருத்தில் கொள்ளும்போது, இலங்கை அரசாங்கம் 2015 ஐப்பசி மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு தான் துணை அனுசரணையாளராக நின்றது சர்வதேசத்தில் தனது நிலையையும் இருப்பையும் தக்கவைக்க மேற்கொண்ட வெறும் வெளிநாட்டு கொள்கை தந்திரமே என அஞ்சுகிறோம். இந்த நிலையில், இலங்கை அரசாங்கமானது 2015 ஐப்பசி நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பாகவும், குறிப்பாக கலப்பு நீதிப்பொறிமுறையை நிறுவுதல் தொடர்பாகவும் தனது நிலைப்பாட்டை கொள்கை அறிக்கையாக வெளியிடுமாறு உடனடியாக கேட்டுக் கொள்கின்றோம். இலங்கை அரசாங்கமானது ஜெனீவாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற பொறுப்புடையதாக செய்ய வேண்டியது உள்நாட்டு, வெளிநாட்டு பங்குதாரர்களின் கடமை என்பதே எமது எண்ணம்.

அமைப்புகள்

Centre for Human Rights and Development (CHRD)
Centre for the Promotion and Protection of Human Rights (CPPHR), Trincomalee
Ceylon Tamil Teachers’ Union
Ceylon Teachers Union (CTU)
Dabindu Collective
Documentation Centre for Justice
Families of the Disappeared (FoD)
Jaffna Economists Association
Jaffna University Employees Union
Jaffna University Teachers Association (JUTA)
Mannar Citizens Committee (MCC)
Mannar Women’s Development Federation (MWDF)
Muslim Women’s Development Trust (MWDT)
National Fisheries Solidarity Movement (NAFSO)
National Movement for Release of Political Prisoners
North-East Coordinating Committee on Disappearances
Right to Life (R2L)
Tamil Civil Society Forum (TCSF)
Tamil Lawyers Forum
The Social Architects (TSA)
TheCommission for Justice and Peace of the Catholic Diocese of Jaffna
Uyiroli – Brightness of Life Organisation
Vavuniya Citizens Committee

தனி நபர்கள்

Amalanayaki – Karadiyanaru
Ajantha Mary Mariyathas
Anne Dulanjali
Arththi Ravivarman
Gowthaman – Attorney-at-Law
Brito Fernando
Gayathri. D
Chamila Thushari
Lishanthini
T. Balamurukan
Emil Van Der Poorten
Eswary Sritharan – Member, Women’s Rural Development Society (WRDS), Jaffna
Jeyantha
Ushananthini – Akkaraipattu
Gajen Mahendra
Gangeswary – Akkaraipattu
Gayan Amila
Hemalatha Kathirkamanathan
Herman Kumara
Subashini
Indirany Ramu
Thushithra
Jensila Majeed
Juwairiya Mohideen
Gnaneshwaran – Attorney-at-Law
Guruparan – Attorney-at-Law
Nihal Ahamed
Nirushiya
S. Ratnavale – Attorney-at-Law
Kalani Subasinghe
Karunanithy Rasapatham
Kumaran Nadesan
Kurushanthan Mahaluxmy
Laxsujany Sivakumar
Gratien – Attorney-at-Law
Jayakumar
Malathi – Akkaraipattu
Marisa de Silva
Mayalagu Sivakumar
Mylvaganam Kesavan
Concy
Kandeepan – Attorney-at-Law
Nadarajah Thayaharan
Nagarasa Kamalathas
Navaranjini Nadarajah
Nirmal Fernando
Nirmala Mahenthiran
Noylin Judith
Arulamma – Akkaraipattu
Arulseeli
M. Mujeebur Rahman
N. Singham
Philip Dissanayake
Premila Naguleswaran
Priyatharshini
Rajani Chandrasekeram
Ramu Mahendran
Ramu Thevamanokaran
Ranjini Kannathasan
Rashomi Silva
Rehan Fernando
Fr. B. Terrence Fernando
Fr. E. Ravichandran
Fr. E. Sebamalai
Fr. Elil Rajan
Fr. Jeyabalan Croos
Fr. L. Gnanathicam
Fr. M. Sathivel
Fr. Nehru
Fr. R. Augustine
Fr. Roy Fernando SJ
Fr. S.D.P. Selvan
Fr. Sarath Iddamalgoda
Fr. V. Yogeswaran
Jude Sutharshan
Kusum Kumarasiri
Nishantha Goonarathne
Sr. Christine Fernando
Sr. Helen Fernando HF
Sr. Nichola
Romesh Madumadawa
Ruki Fernando
Ruwani Fernando
Annalaxmy – Akkaraipattu
Jothilingam
Linda
Mariyaratnam
Nivetha
Sunthareswaran
Vijayakumar – Attorney-at-Law
Sachitra Hansi
Sara Puvaneswaran
Seethalaxmy Thirunavukarasu – President, Women’s Rural Development Society (WRDS), Jaffna
Shamini Vipulan – Programme Assistant, Child Probation
Shanka P. Dharmapala
Shehan de Alwis
Sheila Richards
Sherine Xavier
Shreen Saroor
Sinthujah Jeyakumar
Siritunga Jayasuriya
Sivam Prabaharan
Ravivarman
Thamilchelvi Thayaharan
Tharmalingam Ganesh
Tharsan Selvarasa
Tharshini Somasekaram
Thissanthini Thiruchelvam
Thurka Krishnasamy
Ginogini – Akkaraipattu
Inthirani – Akkaraipattu
Puvitharan – Attorney-at-Law
Subramaniam
S. Niranjan – Attorney-at-Law
Vani Simon – Akkaraipattu
Vanitha Mahendran
Vasanthagowri P. – Teacher
Vasuki Jeyasankar
Vasuky Rajendra
Vindaya Shashikala
Vino Mahenthiran

மாற்றம்

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 05

‘ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு உயிரைக் கொடுக்கத் துணிந்தவனையும் உழைப்பை கொடுப்பவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது. உயிரைக் கொடுக்கத்துணிந்தவன் தன்னுடைய செயற்பாட்டுக்கான வெகுமதியை எதிர்பார்க்க மாட்டான். அவனுடைய எதிர்பார்ப்பு ஆகக் கூடிய பட்சம் தன்னுடைய செயற்பாட்டுக்கான அங்கீகாரம் என்ற அளவில் தான் இருக்கும்.srilanka flag down

ஆனால் உழைப்பை கொடுப்பவன் அப்படியல்ல. அவனுடைய எதிர்பார்ப்பு அங்கீகாரம் என்ற அளவைத்தாண்டி பட்டம், பதவி, புகழ் என்று நீண்டதாக இருக்கும்.’

0000

புலத்தில் திறக்கப்பட்ட இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கான களமுனை

0000

முள்ளிவாய்க்காலுக்கான களமுனைகளை 26.07.2006 இல் திருகோணமலை மாவிலாற்றிலும் 10.07.2007 இல் மன்னார் பண்டிவிரிச்சானிலும் சிறீலங்கா அரசாங்கம் திறந்தது. அனைவருக்கும் தெரியும். அவற்றின் நகர்வுகள் மற்றும் அவற்றின் முடிவுகள் அனைத்துமே அனைவருக்கும் தெரியும்.

ஆனால் சத்தமின்றி யுத்தமின்றி 28.06.2007 இல் பாரிசிலே விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஒரு களமுனை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் திறக்கப்பட்டது பலருக்குத் தெரியாது.

மகிந்த ராஜபக்சவுக்கு முன் சிறீலங்காவில் ஆட்சியில் இருந்த சந்திரிகா குமாரதுங்காவின் அரசாங்கம் லக்ஸ்மன் கதிர்காமரை முன்நிறுத்தி இராஜந்திர போர்முனை ஒன்றை திறந்து விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக்கி வெற்றிகண்டது. ஆனால் இந்த வெற்றி விடுதலைப்புலிகளின் வளர்ச்சியையோ புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் இருந்த அவர்களது ஆதரவுத்தளத்தையோ எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

1995இல் விடுதலைப்புலிகளுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏற்பட்ட தோல்விகளும், யாழ்ப்பாண இடப்பெயர்வும் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவுத்தளத்தை சிதைக்கும் என்று சந்திரிகா அரசாங்கம் எதிர்பார்த்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக மக்கள் தங்களது அமோக ஆதரவை விடுதலைப்புலிகளுக்கு தந்தார்கள்.

‘விடுதலைப்புலிகள் கொலைகாரர்கள். பணம் பறிப்பவர்கள். பிள்ளை பிடிப்பவர்கள் பாசிஸ்டுகள்’ என்று ஒத்தோடிகளை வைத்து கூவி கூவி சிறீலங்கா அரசாங்கம் பிரச்சாரங்களை செய்த போதிலும் அவற்றை மக்கள் செவி மடுக்கவில்லை.

‘விடுதலைப்புலிகளின் இருப்பும் அவர்களது பலமும் தான் பௌத்த சிங்கள பேரினவாதிகளை அச்சப்பட வைத்ததுடன், அவர்களது இனச்சுத்திரிப்பு, இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு தடையாகவும் இருந்தது’ என்ற உண்மையை நூற்றுக்கு 80 வீதமான புலம் பெயர்ந்த மக்கள் உணர்ந்திருந்தார்கள். அதனால் சந்திரிகா அரசாங்கத்தால் அவர்கள் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை.

சந்திரிகாவும் மகிந்தவும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும் இரண்டு பேருக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருந்தன. சந்திரிகா தனது தந்தையினதும் தாயினதும் ரஷ்ய-சீன சார்பு பாரிம்பரியத்துக்கு மாறாக மேற்குலக சார்பாளராக இருந்தார்.

ஆனால் மகிந்தவோ தன்னை உண்மையான சிறீலங்கா சுதந்திரக் கட்சி பாரம்பரியத்தில் வந்த சீன -ரஷ்ய ஆதரவாளராக காட்டிக்கொண்டார். ஆனால் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தார். அவர் ஒரு நல்ல நடிகர். ‘விடுதலைப் புலிகளை ஒழிக்க எந்தச் சாத்தானுடனும் நான் கூட்டுச் சேருவேன்’ என்று சொன்ன ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் -அதாவது ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான வாரிசு அவர்தான்.

சீனா தன்னுடைய ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைக்கான கடல்வழிப் போக்குவரத்துக்கு விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று கருதியது. அமெரிக்கா இந்து சமூத்திர பிராந்தியத்தின் மீதான தனது ஆளுமைக்கு அச்சுறுத்தலான அமைப்பாக அவர்களைப் பார்த்தது. இந்தியா தனது பிராந்தியமேலாதிக்க கொள்கைக்கு தடையாக இருக்கும் அமைப்பாகவும் தன்னுடைய போலித் தேசியவாத கொள்கைக்கு ஆப்பு வைக்கக் கூடிய அமைப்பாகவும் விடுதலைப்புலிகளை கருதியது.

உலக பெருமுதலாளித்துவ சக்திகள் இந்தியாவையும் சீனாவையும் உள்ளடக்கிய தங்களுடைய பெரும் சந்தைக்கு விடுதலைப்புலிகளின் வளர்ச்சி சிக்கலை தோற்றுவிக்கும் என்று கணிப்பிட்டன. மொத்தத்தில் உலக பெரு முதலாளித்துவ அதிகார வர்க்கம் ஒன்று சேர்ந்து மகிந்தவை முன்நிறுத்தி தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்தி முடித்து.

இந்த யுத்தத்தை திட்டமிட்டதும் வழிநடத்தியதும் உலக உளவு அமைப்புக்களும் உலக பெருமுதலாளித்துவ அமைப்புக்களின் பொருளாதா இராணுவ கொள்கை வகுப்பு மற்றும் திட்டமிடல் அமைப்புக்களும் ஆகும்.

இதனாலேயே மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் முன்னைய ஆட்சிக்காலங்களில் இருந்து வேறுபட்ட விதத்தில் புதிய நிழல் யுத்த களமுனையொன்று பாரிசில் திறக்கப்பட்டது. பாரிஸ் தான் நீண்ட காலமாக விடுதலைப்புலிகளின் புலம் பெயர்ந்த ஆதரவு தளத்தை நிர்வகிக்கும் தலைமை இடமாக இருந்ததால் இந்த களமுனை இங்கு திறக்கப்பட்டது.

சந்திரிகா அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிரான தனது இராஜதந்திர போரை சர்வதேச நாடுகளை குறிவைத்து நடத்தியது. ஆனால் மகிந்த அரசோ புலம் பெயர்ந்த தமிழ் மக்களை குறிவைத்து இந்தப் போரை நடத்தியது.

28.06.2007 அன்று பாரிசின் 8 வது நிர்வாகப் பிரிவிலுள்ள பிரபலமான 5 நட்சத்திர தங்கும் விடுதி ஒன்றில் இந்த களமுனையை திறப்பதற்கான ஒரு நாள் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் பேசு பொருள் அல்லது தலைப்பு ‘பங்கரவாதிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லாதொழிப்பதற்கான திட்டமிடலும் சவால்களும்’.

இந்தச் சந்திப்பில் சிறீலங்கா தரப்பில் 2 அமைச்சர்கள் 2 அதிகாரிகள் (இதில் ஒருவர் பிரித்தானியாவை சேர்ந்த சர்வதேச கொள்கை வகுப்பு மூலோபாய அமைப்பொன்றின் உறுப்பினர்) 2 இராஜதந்திரிகள் உட்பட 6 பேரும் புலம் பெயர்ந்த சிங்கள அமைப்புகளின் சார்பில் 4 பேரும் (இதில் ஒருவர் முன்னாள் ஜேவிபி உறுப்பினர்) தமிழ் ஒத்தோடிகள் 5 பேரும் கலந்து கொண்டனர்.

காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரை நடைபெற்ற இந்த சந்திப்பில் முதலில் விடுதலைப்புலிகளை அழித்தொழிக்க வேண்டிய தேவை, அதற்கு சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றிய விளக்கம் என்பன வந்திருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் புலம் பெயர்ந்த கட்டமைப்புகள் அவற்றின் செயற்பாடுகள் அவற்றிக்கு தலைமை தாங்குபவர்கள் பற்றியும் விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்த பின்பும் அவர்களால் எப்படி செயற்பட முடிகிறது என்பவை பற்றியும் ஆராயப்பட்டது.

மதிய உணவுக்குப் பின்பு விடுதலைப்புலிகளின் ஆதரவு தளத்தை சிதைப்பதற்கு வகுக்கப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் அவற்றை செயற்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளுக்கொன்று புலம்பெயர்ந்த நாடுகள் ஒவ்வான்றிலும் மக்களை அணி திரட்டுவதிலும் அவர்களிடமிருந்து நிதியாதாரத்தை பெறுவதிலும் நீண்ட அனுபவமும் ஆற்றலும் உள்ள பல மூத்த செயற்பாட்டாளர்கள் இருக்கிறார்கள்

விடுதலைப்புலிகளின் அனைத்து செயற்பாட்டாளர்களிடமும் தங்களது சக செயற்பாட்டாளரைப் பற்றி பொது இடத்தில் குறைகூறும் விமர்சிக்கும் பழக்கம் கிடையாது. விடுதலைப்புலிகளுக்கு பாதகத்தை உண்டாக்கும் எந்தக் கருத்தையும் அவர்கள் எந்த இடத்திலும் தெரிவிக்க மாட்டார்கள். அது போன்ற எந்தச் செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபடமாட்டார்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவுத்தளம் என்பது தமிழ் சங்கங்கள் தமிழ்சோலை மற்றும் தமிழாலயம் முதலான பாடசாலைகள், விளையாட்டுக்கழகங்கள், ஊடக கட்டமைப்பு என்பவற்றிலேயே தங்கியிருக்கிறது.

ஐரோப்பாவில் உள்ள விடுதலைப்புலிகளின் இராஜதந்திர செயற்பாடுகள் ஜெனிவாவை தளங்கொண்டே இயங்குகின்றன. என்கின்ற விடயங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு இவற்றை எப்படி உடைப்பது அல்லது மாற்றி அமைப்பது என்று ஆராயப்பட்டது.

மூத்த செயற்பாட்டளார்களை மக்களிடம் இருந்து அந்நியப் படுத்தி மக்கள் அவர்களை வெறுக்கும் அல்லது அவர்களுடன் தொடர்பு கொள்ள அஞ்சும் சூழ்நிலையை உருவாக்குவது. இதன் மூலம் மக்களை அணிதிரட்டும் நிதிமூலங்களை திரட்டும் விடுதலைப் புலிகளின் ஆற்றலை கணிசமாக குறைக்கலாம் அல்லது மட்டுப்படுத்தலாம் என்று கூறப்பட்டது. இதற்கு இந்த மூத்த செயற்பாட்டாளர்கள் மீது தொடர்சியாக பலமுனைகளில் பொய்யான தகவல்களை உள்ளடக்கிய அவதூறு பரப்பரை மேற்கொள்வது.

முதல் செயற்பாட்டின் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் இயக்க செயற்பாட்டாளர்கள் தங்களது சக செயற்பாட்டாளர்களை அல்லது முன்னாள் செயற்பாட்டாளர்களை மக்கள் மத்தியில் குறிப்பாக பொது வெளியில் விமர்சிப்பது தூற்றுவது போன்ற செயற்பாட்டை செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பது- இதை தியாகி துரோகி என்ற ஒரு நீண்ட அரசியல் செயல் திட்டமாக நடைமுறைப்படுத்துவது. இதன் மூலம் விடுதலைப்புலிகள் பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் ஒழுக்கமானவர்கள் கட்டுப்பாடானவர்கள் என்ற பிம்பத்தை உடைப்பது.

உப அமைப்புக்கள் என்று விடுதலைப்புலிகளால் அழைக்கப்படும் தமிழ் பாடசாலைகள் தமிழ் சங்கங்கள் விளையாட்டுக்கழகங்கள் என்பவற்றுக்குள் ‘தலைவர் வாழ்க போராட்டம் வாழ்க’ என்று அதி தீவிர தேசியம் பேசிக்கொண்டு ஊடுருவி அவற்றுக்குள் தியாகி துரோகி அரசியலை புகுத்துவது. குறிப்பாக தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்கும் இளவயதினர் மற்றும் குழந்தைகளின் மனங்களில் இந்த தியாகி துரோகி அரசியலை படிப்படியாக திணிப்பது. இதன் மூலம் தமிழ் தேசிய செயற்பாடுகளில் இளைய தலைமுறையின் ஒன்று பட்ட துடிப்பான செயற்பாடுகளை பிளவு படுத்தி திசைதிருப்பி வலுவிழக்கச் செய்வது.

சுவிசில் மக்களின் வலுவான ஆதரவுடன் இடம்பெற்று வந்த விடுதலைப்புலிகளின் இராஜதந்திர செயற்பாட்டுத் தளத்தை ஐரோப்பிய ஒன்றித்தின் ஆதரவைப் பெறுவதற்கு சுவிசில் வேலை செய்து ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி, பெல்ஜியத் தலைநகருக்கு அந்த தளத்தை மாற்றுமாறு ஆலோசனை வழங்குவது. தமிழ் மக்கள் குறைவாக வாழும் அந்த நாட்டில் இந்தச் செயற்பாடுகளை முடக்குவதற்கான வேலைகளை செய்வது.

இந்த நான்கு வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு சமூக வலைத்தளங்களையும் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் பத்தி எழுத்தாளர்களையும் இனங்கண்டு பயன்படுத்துவது.

ஆகிய முடிவுகளுடன் இந்த ஒரு நாள் சந்திப்பு நிறைவுற்றது.

மகிந்தவுக்கு எதிரான புலம்பெயர்ந்த சிங்கள ஊடகவியலாளர்கள் மூலமாக பெறப்பட்ட இந்தத் தகவல்கள் ஒன்றுக்கு இரண்டு தடவை வெவ்வேறு தரப்புகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டு தகுந்த ஆதாரங்களுடன் ஒரு அறிக்கையாக தொகுக்கப்பட்டு 15.07.2007 அன்று தேசியத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

17.07.2007 அன்று இந்த அறிக்கை வன்னிக்கு கிடைத்ததாகவும் அதை தேசியத்தலைவரிடம் சேர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதை பெற்றுக்கொண்டவர்கள் அதை அனுப்பியவர்களுக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

– சிவா சின்னப்பொடி

(தொடரும்)

Sri Lanka’s Independence Day- a Black Day for Tamils

srilanka flag downHow do Native American people really feel each time the 4th of July is celebrated in the United States? A friend of mine has a shirt featuring an Indian warrior with the words, “Fighting Terrorism Since 1492” and that seems to define both the irony and insanity of the USA’s never ending boastful celebration of its own ideals.

Each time a society comes to view itself as superior to to others, it has entered its own downfall. This seems especially true of both the U.S. and Sri Lanka.

The day Sri Lanka’s gained independence from British rule, 4th February 1948, was a black day for Eelam Tamils. This minority culture in the north of this island nation labored for self preservation for three decades, from ’48 through ’78 … amid an atmosphere of state terrorism and violence.

Support for the Tamils has always flowed across the sea from India. Their cause for liberation which was in the end painted as ‘terrorism’ was in fact the product of a desperate struggle for equality and the survival of their very culture.

For more than a half century, the Tamil nation has endured severe oppression by the Sri Lankan Sinhalese State which represents both the government, and about 85% of the country’s ethnic makeup. Through systematic discriminatory legislation and a series of violent atrocities against the Tamil people, there has been no independence tied to the 4th of February for Tamils.

Read More ……….Tim King Salem-News.com

வடக்கு கிழக்கில் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பதாக அறிவிப்பு

srilanka flag downஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை தமிழ் பேசும் மக்களின் பூர்வீக வாழ்விடங்களான வடக்கு கிழக்கு மாகாணங்களில் கரிநாளாக அனுஸ்டிப்பதாக ”கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கண்டறியும் சங்கங்கள் அறிவித்துள்ளன.

பெப்ரவரி 4 ஆம் திகதி ஸ்ரீலங்காவின் 68 ஆவது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கு இன்னும் ஒருவாரம் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த, கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கங்களின் பிரதிநிதிகள் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கூடிக் கலந்தாலோசித்து குறித்த முடிவை அறிவித்துள்ளன.

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…..

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழு வருடங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் சிறீலங்கா அரசாங்கமானது, ‘ஆட்கடத்தல் மற்றும் தடுத்துவைத்தல்’ சம்பவங்கள் தொடர்பில் ‘பொறுப்புக்கூறல் மற்றும் பரிகாரநீதி’ வழங்கல் செயல்பாட்டு முன்னெடுப்புகளை இன்றுவரையும் இதயசுத்தியுடன் மேற்கொள்ளாத நிலைமைகளை கண்டித்தும் – வலியுறுத்தியும்,

சிறீலங்காவின் 68வது சுதந்திர தினமாகிய பெப்ரவரி 4 அன்று, வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் சமநேரத்தில் கறுப்பு பட்டியணிந்து காலையிலிருந்து மாலை வரை அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும், நாடு முழுக்கவும் சிறைச்சாலைகளுக்குள் உள்ள தமிழ் அரசியல் கைதிகளும் சமநேரத்தில் அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினரிடம் தமது உறவுகளை ஒப்படைத்த கண்கண்ட சாட்சிகளாகவும், பொலிஸ் மற்றும் முப்படைகளும் சந்தேகத்தின் பெயரில் விசாரணைக்காக தமது உறவுகளை வலிந்து கூட்டிச்சென்றதை நேரில் கண்ட உறவுகளாகவும் தாங்கள் உள்ளதாகவும்,

இராணுவத்தின் எந்தப்பிரிவிடம்? எந்த அதிகாரியிடம்? அல்லது எந்த இராணுவச்சிப்பாய்யிடம்? எந்த இடத்தில்? எச்சந்தர்ப்பத்தில்? எப்போது தமது உறவுகளை கையளித்தோம்? அல்லது தமது உறவுகளை எங்கு? எப்படி? எப்போது? அழைத்துச்சென்றனர்? என்பதை தம்மால் மிகத்தெளிவாக கூறவும் – அடையாளம் காட்டவும் முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள்,

இந்த நாட்டில் இரகசிய முகாம்கள் காணப்பட்டிருப்பதற்கான மறுதலிக்க முடியாத வகையிலான ஆதாரங்கள் உள்ளதாகவும், ஐக்கியநாடுகள் சபையின் நிபுணர் குழுவும் – கண்காணிப்புக்குழுவும், இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளும் இதனை உறுதிசெய்துள்ளனர் என்றும், அவ்வாறாயின்…

தமது உறவுகள் இதுநாள் வரையும் எந்த இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்?
.அந்த இரகசிய முகாம்கள் இலங்கையின் எந்தெந்த பகுதிகளில் செயல்படுத்தப்பட்டன?
அந்த இரகசிய முகாம்களை நிர்வகித்துக்கொண்டிருந்தவர்கள் யார்?
கையளிக்கப்பட்ட, கைதுசெய்யப்பட்ட, கடத்தப்பட்ட தமது உறவுகளை சித்திரவதைகளுக்கு உட்படுத்தி படுகொலை செய்தவர்கள் யார்?
சர்வதேச போர் நியமங்களையும், மனித உரிமைப் பிரகடனங்களையும் மீறி தமது உறவுகளை படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை?
மனிதத்துவத்துக்கு எதிரான இவ்வாறான வன்முறைகள் குற்றங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘நீதி மற்றும் இழப்பீடுகள் எவ்வாறானவை?

தொடர்பில் தமக்கு துரிதமானதும், நீதியானதுமான பதிலை, பொறுப்புக்கூறலை தெரிவிக்குமாறும்,

குறித்த இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு ‘சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருந்தோர், படுகொலை செய்யப்பட்டோர், அவர்களில் எஞ்சிப்பிழைத்திருப்போர்’ பற்றிய தமது உறவுகளின் பெயர் விவரங்கள் இதயசுத்தியுடன் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

கூடவே, காணாமலாக்கப்பட்டவர்களில் பெருமளவானோர் இறந்திருக்கலாம் என்றால், ‘அவ்வாறு இறந்தவர்கள் யார்? எஞ்சியிருப்போர் எங்கிருக்கின்றார்கள்?’ என்பது பற்றியும் உடனடியாக பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்தி,

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்களுக்கு கையொப்பமிட்டு மகஜர் ஒன்றையும் ”கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கண்டறியும் சங்கங்கள் இன்று (28.01.2016) அனுப்பி வைத்துள்ளன.

மகஜரின் முழுவிவரமும் இணைக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்கள்,

ஜனாதிபதி,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு,
இலங்கை.People burning the Sri Lankan flag

ஊடாக,

கௌரவ இரா.சம்பந்தன் அவர்கள்,
தலைவர்,
தமிழ் தேசியக்கூட்டமைப்பு,

வடக்கு கிழக்கு மாகாணங்கள்.
ஜனாதிபதி அவர்களே!

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ‘ஆட்கடத்தல் மற்றும் தடுத்துவைத்தல்’ சம்பவங்களினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இருபது ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் அன்றாட வாழ்வை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் நகர்த்திக்கொண்டு வருகின்றோம்.

இவ்வாறான எமது குடும்பங்களில் பெண்களை தலைமைத்துவமாகக்கொண்ட குடும்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. அத்தகைய குடும்பங்களை சேர்ந்த அங்கத்தவர்கள் கல்வி, சுகாதாரம், உணவு, உடை, பராமரிப்பு, பாதுகாப்பு, தொழில், பொருளாதாரம் என்று நாளாந்த அத்தியாவசிய தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத அவலநிலையில் துன்பப்பட்டுக்கொண்டிருப்பதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள் என்று நம்புகின்றோம்.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ‘அவசரகால தடைச்சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம்’ ஆகியவற்றை முற்றுமுழுதாக வரமுறைகளுக்கு அப்பால் பயன்படுத்தி, சோதனைச் சாவடிகளிலும், வீடுகளிற்கு நேரடியாக வருகைதந்தும், சுற்றிவளைப்புகளின் போதும் சந்தேகத்தின் பெயரில் எமது வாழ்க்கைத் துணைவர்களையும், பிள்ளைகளையும் கைதுசெய்து, பொலிஸ் மற்றும் முப்படைகளும் தம்மோடு வலிந்து அழைத்துச் சென்றிருந்தன. மக்கள் நடமாட்டம் நிறைந்த வீதிகளிலும், மக்கள் ஒன்றுகூடும் பொதுஇடங்களிலும் பலர் பார்த்திருக்க வெள்ளைவான்களிலும் கடத்திச்சென்றிருந்தனர்.

2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் யுத்தம் உக்கிரகட்டத்தை அடைந்திருந்தவேளை உயிரைக்கையில் பிடித்தவாறு இராணுவத்தின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் கடல்நீரேரியூடாக வட்டுவாகல் பாலத்தை அடைந்தோம். அதனை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாரிய சோதனைச் சாவடியினை கடந்து செல்வதற்காக நீண்ட வரிசையில் முட்கம்பிகளுக்கிடையில் காத்துக்கொண்டிருந்தபோது,

அவ்விடத்தில் இராணுவத்தினரின் பகிரங்கமான வேண்டுகோளுக்கும் வாக்குறுதிக்கும் அமைவாக, விரும்பியோ விரும்பாமலோ தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் ஈடுபட்டிருந்த எமது உறவுகளை அருட்தந்தை ஜோசப் பிரான்சிஸ் ஆண்டகையின் முன்னிலையில் கையளித்திருந்தோம். அதன்பின்னர் எமது உறவுகளை இராணுவத்தினர் பேருந்துகளில் ஏற்றிச்சென்றதை எமது கண்களாலே பார்த்துக்கொண்டிருந்தோம்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழு வருடங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில், மேற்படியான சந்தர்ப்பங்களில் பொலிஸ் மற்றும் முப்படைகளாலும் வலிந்து அழைத்துச்செல்லப்பட்ட எமது உறவுகளை ஒரு தடவையேனும் சந்திப்பதற்கு கூட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என்பது பற்றிய தகவலை அறிந்துகொள்வதற்கான அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளை தேடிக்கண்டறிவதற்காக நாங்கள் நடத்தாத ஜனநாயக போராட்டங்கள் இல்லை. கோரிக்கை விடுக்காத மனித உரிமைகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இல்லை, அரசியல் சார்ந்த உள்@ர் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இல்லை.

இராணுவத்தினரிடம் எமது உறவுகளை ஒப்படைத்த கண்கண்ட சாட்சிகளாகவும், பொலிஸ் மற்றும் முப்படைகளும் சந்தேகத்தின் பெயரில் விசாரணைக்காக எமது உறவுகளை வலிந்து கூட்டிச்சென்றதை நேரில் கண்ட உறவுகளாகவும் நாங்கள் உள்ளோம்.

இராணுவத்தின் எந்தப்பிரிவிடம்? எந்த அதிகாரியிடம்? அல்லது எந்த இராணுவச்சிப்பாய்யிடம்? எந்த இடத்தில்? எச்சந்தர்ப்பத்தில்? எப்போது எமது உறவுகளை கையளித்தோம்? அல்லது எமது உறவுகளை எங்கு? எப்படி? எப்போது? அழைத்துச்சென்றனர்? என்பதை எம்மால் மிகத்தெளிவாக கூறவும், அடையாளம் காட்டவும் முடியும்.

முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இதுவரையில் 23ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகளை தெரிவித்து சாட்சியங்களையும் பதிவு செய்துள்ளோம். ஆயினும் எமது உறவுகள் எங்கே? அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? என்பது பற்றிய எமது தேடல்களுக்கு, நியாயமான கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு தரப்படவில்லை.

இதனால் நாங்கள் உள்நாட்டு செயல்முறைகளிலும், உள்நாட்டு ஆணைக்குழுக்களிலும் நம்பிக்கை இழந்தவர்களாகவே உள்ளோம்.

இம்மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள், ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பெருமளவானோர் இறந்திருப்பதற்கான வாய்ப்புகளே அதிகமுள்ளன. அவர்களுக்கு என்ன நடந்திருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது’ என்று அசாதாரணமாக கூறியுள்ளமையானது மீளாத்துயரிலிருக்கும் எமக்கு மிகுந்த மனஉளைச்சலையும் வலியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நாட்டில் இரகசிய முகாம்கள் காணப்பட்டிருப்பதற்கான மறுதலிக்க முடியாத வகையிலான ஆதாரங்கள் உள்ளன. ஐக்கியநாடுகள் சபையின் நிபுணர் குழுவும் – கண்காணிப்புக்குழுவும், இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளும் இதனை உறுதிசெய்துள்ளனர். அவ்வாறாயின்…

எமது உறவுகள் இதுநாள் வரையும் எந்த இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்?

02.அந்த இரகசிய முகாம்கள் இலங்கையின் எந்தெந்த பகுதிகளில் செயல்படுத்தப்பட்டன?

03.அந்த இரகசிய முகாம்களை நிர்வகித்துக்கொண்டிருந்தவர்கள் யார்?

04.கையளிக்கப்பட்ட, கைதுசெய்யப்பட்ட, கடத்தப்பட்ட எமது உறவுகளை சித்திரவதைகளுக்கு உட்படுத்தி படுகொலை செய்தவர்கள் யார்?

05.சர்வதேச போர் நியமங்களையும், மனித உரிமைப் பிரகடனங்களையும் மீறி எமது உறவுகளை படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை?

06.மனிதத்துவத்துக்கு எதிரான இவ்வாறான வன்முறைகள் குற்றங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘நீதி மற்றும் இழப்பீடுகள் என்ன?

என்பவை பற்றியெல்லாம் எமக்கு மிகத்தெளிவாக பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்.

குறித்த இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு ‘சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருந்தோர், படுகொலை செய்யப்பட்டோர், அவர்களில் எஞ்சிப்பிழைத்திருப்போர்’ பற்றிய எமது உறவுகளின் பெயர் விவரங்கள் இதயசுத்தியுடன் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

கூடவே, காணாமலாக்கப்பட்டவர்களில் பெருமளவானோர் இறந்திருக்கலாம் என்றால், ‘அவ்வாறு இறந்தவர்கள் யார்? எஞ்சியிருப்போர் எங்கிருக்கின்றார்கள்?’ என்பது பற்றியும் உடனடியாக பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

மேற்குறித்த எமது நியாயமான கோரிக்கைகளுக்கு, ஜனநாயக பண்புகளை மதித்து நல்லாட்சியை முன்னெடுப்பதற்கு முழுமனதுடன் முயற்சித்துக்கொண்டிருக்கும் தங்களிடமிருந்து துரிதமானதும், நீதியானதுமான பதிலை, பொறுப்புக்கூறலை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.

-நன்றி-

இப்படிக்கு,

கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கங்கள் – வடக்கு கிழக்கு மாகாணங்கள்

28.01.2016

Up ↑