Search

Eelamaravar

Eelamaravar

Month

December 2015

உலகமே அழித்த ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை என்ன?

no justice for Sri Lanka’s war victims 2இலங்கையில் மூன்றாவது யுத்தத்திற்கு தயாராகிறது சர்வதேசம்!

இலங்கையில் மூன்றாவது யுத்தம் ஒன்றை முன்னெடுப்பதற்கு சர்வதேசம் தயாராகிவரும் நிலையில் வடகிழக்கு தமிழ் பேசும் மக்கள் கடந்த அரை நூற்றாண்டுகளாக செய்த தியாகங்கள் இழப்புக்கள் துன்பங்களுக்கெல்லாம் அவர்களுக்கு கிடைத்தது என்ன?

தனது ஆயுத பலத்தின் ஊடாக இலங்கையில் தன்னிச்சையான சுதந்திர தேசம் ஒன்றை உருவாக்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்களின் இன்றைய நிலை என்ன?

தமிழ் மக்களின் போராட்டம் வெற்றி பெற்றதா? அல்லது தமிழர்களின் போராட்டம் அவர்களது இலக்கை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து கொண்டிருக்கின்றதா?

என்ற பல கேள்விகளுடன் தமிழ் மக்களின் இன்றைய நிலை குறித்து ஆராய வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.

2009-மே-19ற்கு பின்னர் தமிழர்களின் மனநிலை

யுத்தம் நிறைவடைந்த ஆறு ஆண்டுகளில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வானது பல்வேறு சந்தேகங்களுக்கு உட்படுத்தப்பட்டதோடு தமிழர்களுக்கான இனப்பிரச்சினைத் தீர்வு ஒன்றை இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு தராது என்ற நிலைப்பாட்டிலேயே பெரும்பாலான தமிழ் மக்கள் இருந்தனர்.

காரணம் அப்போது இருந்த இலங்கை அரசாங்கம் யுத்த வெற்றியின் மமதையில் இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்றே இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்தது.

மறுபக்கம் யுத்தம் தமிழர் தேசத்தில் ஏற்படுத்திய அழிவுகளும் அதனால் ஏற்படுத்தப்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்புக்களும் தமிழ் மக்களை அவர்களது அரசியல் தீர்வு குறித்து சிந்திக்க விடவில்லை.

யுத்தத்தின் முடிவு ஒருகட்டத்தில் தமிழ் மக்களை விரக்தியின் விளிம்புக்கே தள்ளியிருந்தது, அத்தோடு அது தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் நிலைக்கு கொண்டுபோயிருந்தது.

பலர் யுத்தம் தமிழர்களை 1970ம் ஆண்டு காலத்திற்கு இழுத்துச் சென்று விட்டது என்று கூறினர். சிலர் தமிழிழ விடுதலைப் புலிகள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தையாவது பெற்றிருக்கலாம் என்றனர்.

இன்னும் சிலர் சந்திரிக்காவின் தீர்வையாவது ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்றனர். இன்னும் சிலர் நாம் எதையுமெ பெறாது எல்லாத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கின்றோம் என தங்களை தாங்களே நொந்துகொண்டனர்.

இவ்வாறு யுத்தத்தின் முடிவு தமிழர் போராட்டத்தின் நோக்கத்தையே சிதறடித்திருந்தது.

ஆனால் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தமிழர்களின் போராட்டத்திற்கான ஒரு அதிகாரப் பகிர்வினை பெற்றுக் கொள்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தும் தமிழ் மக்கள் தங்களது ஒருங்கிணைந்த செயற்பாடுகளற்ற நிலையில் தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான தீர்வு குறித்த ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்காது பல கொள்கைகளை கொண்ட பல அமைப்புக்களாக பிரிந்து நிற்கின்றமையானது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை பெறுவதற்கான செயற்பாடுகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

குறிப்பாக இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையை பிராந்திய ரீதியாக பார்க்கும் சர்வதேசமும் அதனுடன் இணைந்து செயற்படும் இலங்கை அரசும் தமிழர் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளது.

இதன் காரணமாக தமிழர்கள் மிது ஒரு அரசியல் தீர்வை திணிக்க சர்வதேசமும் இலங்கையும் எத்தனித்து வருகின்றது.

இதன் செயற்பாடுகளே தற்போது இலங்கையில் நடைபெற்று வருகின்ற நல்லிணக்க செயற்பாடுகளாகும்.

நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் இலங்கை அரசாங்கம் அதிகாரத்தை பகிர்வதற்கு பதிலாக அதிகாரத்தை குவிக்கின்ற செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றது என்று கூறியிருந்தார்.

உண்மையில் நல்லாட்சி அரசும் சர்வதேச நாடுகளும் இந்தியாவும் இணைந்து இலங்கையில் அதிகாராத்தை குவிக்கின்ற செயற்பாடுகளையே முன்னெடுத்து வருவதாக தெரிகின்றது.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் தென்னாபிரிக்க நல்லிணக்க செயற்பாடுகள்

இலங்கையில் சர்வதேச நாடுகளினால் கொண்டு வரப்பட்ட ஆட்சி மாற்றமானது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற ஒப்பந்தத்தின் பிரகாரம் கொண்டு வரப்பட்டதுடன் அதற்கான உத்தரவாதத்தை அண்மையில் நடைபெற்ற ஜெனிவா மனிதவுரிமைகள் பேரவை வழங்கியுள்ளது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வரைவு ஒன்றை முன்வைத்துள்ள சர்வதேசம் குறித்த வரைவானது தென்னாபிரிக்கவில் நெல்சன் மண்டேளாவினால் முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்க செயற்பாடுகளை கொண்டதாகவும் அமையுமென தெரிவித்துள்ளது.

இதனை இலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான” நீதியின் நிலைமாற்ற செயற்பாடுகள்” எனவும் சர்வதேசம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு அமைய குறித்த நல்லிணக்க செயற்பாடுகளை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் செயற்படுத்த வேண்டுமென்ற கால அவகாசத்தை சர்வதேசம் இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தெரிகின்றது.

இதன் விளைவுகளே இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள கலந்துரையாடல் அமைச்சு உட்பட அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கான குழு, விடுதலைப் புலி சார்பு அமைப்புக்கள் மீதான தடை நீக்கம், வடகிழக்கு உள்ளிட்ட தென்னிலங்கை பகுதிகளில் உள்ள மக்கள் மத்தியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகள் போன்றவற்றை கூறலாம்.

இலங்கை அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கையின் அரை நூற்றாண்டு கால தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண வேண்டும் என்ற நோக்குடன் பிரிக்கப்படாத இலங்கைக்குள் இந்தியாவின் அணுசரணையுடன் தீர்வு ஒன்றை பெறவேண்டுமென்ற நிலைப்பாட்டுடன் சர்வதேசத்திடம் சரணாகதியடைந்ததன் விளைவே சர்வதேசத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த நல்லிணக்க செயற்றிட்டமென தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இந்திய அரசாங்கத்தின் தலையீடு காரணமாகவே இவ்வாறான நிலைப்பாட்டை சர்வதேச நாடுகள் எடுக்க காரணமெனவும் சொல்லப்படுகின்றது.

எனவே வாய்ப்பைப் பயன்படுத்தி சர்வதேச பிராந்திய உறவைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் எடுத்துள்ளது.

இதன் காரணமாகவே மிகவும் அவசர அவசரமாக தன்னுடைய நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

குறித்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அதனுடன் தொடர்புபட்ட நிறுவனங்களும் தற்போது களத்தில் குதித்துள்ளன.

எனவே தமிழர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சர்வதேசத்தினால் முன்வைக்கப்பட்ட இந்த நல்லிணக்க செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் ஆதரவுடன் முன்னெடுத்தே தீரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

சர்வதேசத்தினால் முன்வைக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “நீதி நிலைமாற்றத்திற்கான” இந்த செயற்றிட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையினால் பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான செயற்றிட்டங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றது.

இலங்கை மீதான மூன்றாவது யுத்தத்திற்கு தயாராகும் சர்வதேசம்

இலங்கையில் தனது மூன்றாவது யுத்தத்தை முன்னெடுப்பதற்கான சகல முன்னாயத்தங்களையும் சர்வதேசம் பூர்த்தி செய்துள்ளது. இன்னும் சில மாதங்களுக்குள் சர்வதேசத்தின் மூன்றாவது யுத்தம் இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது என்ன சர்வதேசத்தின் மூன்றாவது யுத்தம் என பலரும் சிந்திக்கலாம். உண்மையில் இலங்கையில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் செயற்பாடுகளை சரிவர உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு சர்வதேசம் இலங்கை மீது தொடுத்தள்ள புலனாய்வு யுத்தம் குறித்து தெரியும்.

இலங்கை தொடர்பில் சர்வதேசம் ஒரு நிகழ்ச்சி நிரலை கொண்டு செயற்பட்டு வருகின்றது. அதனை நடைமுறைப்படுத்த தனது முழுவளத்தையும் பயன்படுத்த சர்வதேசம் பின்நிற்காது.

இதையே சர்வதேசத்தின் மூன்றாவது யுத்தமென்று சொல்ல வேண்டியுள்ளது.

அதாவது இலங்கையில் தனது முதலாவது யுத்தத்தை முள்ளிவாய்க்காலில் நிறைவு செய்த சர்வதேசம் தமிழர்களின் பேரம் பேசும் சக்தியை இல்லாதொழித்ததோடு சர்வதேசம் தனது இரண்டாவது யுத்தத்தை ராஜபக்ச அரசாங்கத்தை உடைத்தெடுப்பதில் மேற்கொண்டுடிருந்ததோடு சிங்கள தேசத்தையும் பலவீனப்படுத்தியிருந்தது.

இந்த இரண்டு யுத்தங்களின் ஊடாக பிராந்தியத்தில் தங்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்த தமிழர் தரப்பையும் இலங்கை அரசாங்கத்தையும் பலவீனப்படுத்தி இரண்டு தரப்பினரையும் தங்களிடம் சரணாகதியடைய வைத்த சர்வதேசம் தனது மேலாதிக்கத்தை இலங்கையில் நிலைநாட்டியுள்ளது.

ஏற்கனவே தங்களுடன் இணங்கி செயற்பட மறுத்த விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பின்நின்று செயற்பட்ட இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள், பின்னர் தனக்கு கட்டுப்பட்டு நடக்க மறுத்த சீன அரசாங்கத்துடன் உறவை வைத்துக் கொண்டிருந்த ராஜபக்ச அரசாங்கத்தை உடைத்தெறிந்து தனது மேலாதிக்கத்தை இலங்கையில் நிலைநிறுத்தியுள்ளது.

இந்நிலையில் இனிமேல் இலங்கை அரசாங்கம் தங்களது கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடாது என்பதற்காக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காண்பதற்குறிய உபாயத்தீன் ஊடாக தனது மூன்றாவது யுத்தத்தை இலங்கை மீது தொடுத்து இலங்கையை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு சர்வதேசம் தயாராகி வருகின்றது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் தமிழ் சிங்கள தரப்புக்கு அப்பாற்பட்ட சக்தியொன்று செயற்படுகின்றது என்பதை முதலில் எல்லோரும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

இதன் காரணமாகவே தமிழர்களினால் இறுதி யுத்தத்தை வெல்ல முடியாமல் போனது என்பதோடு முள்ளிவாய்க்கால் அழிவைக் கூட எங்களால் தடுத்து நிறுத்த முடியாமல் போனது.

எவ்வாறு இறுதி யுத்தத்தை தமிழர் தரப்பால் நிறுத்த முடியாமல் போனதோ அதேபோனறு சர்வதேசத்தினால் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் மூன்றாவது யுத்தத்தையும் தமிழர் தரப்பாலோ அல்லது சிங்களத் தரப்பாலோ தடுக்க முடியாது என்பதை தமிழர்களாகிய நாம் புரிந்து கொண்டு செயற்படுவதே உத்தமம்.

அதாவது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு தமிழர்கள் முதலில் தங்களை பலப்படுத்த வேண்டும் அத்தோடு தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த சக்தியாக உருப்பெற்று சர்வதேசத்துடன் இணங்கிச் சென்று எமக்கான நியாயமான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பதே இப்போதைக்கு புத்திசாலித்தனமான விடயமாகவிருக்கும்.

அதைவிடுத்து தமிழர்கள் பல அமைப்புக்களாக பிரிந்து ஒவ்வொரு விதமான கருத்துக்களுடன் எதிரும் புதிருமாக செயற்படுவோமாக இருந்தால் எப்படி எமக்கு முள்ளிவாய்க்கால் அழிவை தடுக்க முடியாமல் போனதோ அதேபோன்று தமிழர்கள் மீது திணிக்கப்படப் போகும் அரசியல் தீர்வையும் தடுக்க முடியாமல் போகும்.

எனவே அரசாங்கமோ அல்லது சர்வதேசமோ அல்லது இந்தியாவோ கொண்டு வருகின்ற நல்லிணக்க அரசியல் தீர்வு செயற்பாடுகளை தமிழர் தரப்புக்கள் ஒன்றிணைந்து பங்குபற்றி அதில் எமக்கு சாத்தியமான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு அழுத்தம் கொடுப்பதே தமிழர் விடிவிற்கு சாத்தியமான பாதையாக அமையும்.

அதை விடுத்து தமிழர்கள் அமைப்பு ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் பிரிந்து நின்று தனிநபர் அடையாளங்களுக்குள் அகப்பட்டு தங்களது சொந்த நலன்களுக்காகவும் கட்சி நலன்களுக்காகவும் செயற்படுவோமாக இருந்தால் தமிழர்களின் போராட்டம் இன்னும் முப்பது வருடங்களுக்கு தொடரும் என்பதுடன், தமிழர்கள் தங்களது தேசிய அடையாளங்களை தொலைத்து விட்டு தேட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதே யதார்த்தம்.

கூட்டமைப்பு – சிவில் சமூகம் – புலம்பெயர் சமூகம் இணைய வேண்டிய கட்டாயம்

சர்வதேசத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள இந்த மூன்றாவது யுத்தத்தில் சிங்கள தேசம் தனது கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு நிற்பதை காணக்கூடியதாகவுள்ளது.

இன்று சிங்கள தேசம் தன்னை சர்வதேசத்திடம் இருந்து காத்துக் கொள்வதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

ஆனால் பல ஆண்டுகளாக தனது விடுதலைக்காக போராடி விலைமதிக்க முடியாத தியாகங்களையும் இழப்புக்களையும் கொடுத்த தமிழர் தேசம் மிகவும் பலவீனமான முறையில் வெறுமனே ஒரு கட்சி அரசியலுக்குள் முடங்கி கிடக்கின்றது.

தமிழர்கள் இந்த உலகின் தேசிய இனம், ஆனால் தமிழர்கள் ஒரு தேசிய இனத்திற்கான கட்டமைப்புக்களை கொண்டிருக்கவில்லை என்பதே வேதனையான விடயமாகவுள்ளது.

விடுதலைப் புலிகள் தங்களை தாங்களே ஆளுகின்ற வகையிலான ஒரு தேசிய இனத்திற்கான கட்டமைப்புக்களை கொண்டிருந்தார்கள் என்பது உண்மை.

ஆனால் அது அழிக்கப்பட்டதன் பின்னர் தமிழர்கள் அவ்வாறான முயற்சியொன்றிற்கு இன்றுவரை செல்லவில்லை என்பதே உண்மை.

வடகிழக்கைப் பொறுத்தமட்டில் தற்போதைக்கு மக்களின் பெரும்பான்மையைப் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சிவில் சமூக பிரதிநிதிகளும் இணைந்து தமிழர் தேசியத்திற்கான கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.

அதேபோன்று புலத்தில் உள்ள தமிழர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தமிழர் தேசியத்திற்கான கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி இரண்டு சக்திகளும் ஒருங்கிணைந்து தமிழர்களின் இனப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விடயங்களுக்கு ஒரு தேசிய கொள்கையொன்றை வகுத்து அதனை இன்றைய சர்வதேச ஒழுங்குகளுக்கு அமைய கொண்டு செல்வதற்கான நிகழ்ச்சி நிரலை வகுத்து செயற்படுவதே இந்த பூமிப்பந்தில் தமிழர்கள் மீண்டும் ஒரு தேசிய இனமாக தலைதூக்குவதற்கு வழியமைத்து கொடுக்கும்.

இவ்வாறான ஒருங்கிணைவின் மூலமே தமிழர் தரப்பு சர்வதேச தரப்புக்களையும் சிங்களத் தரப்பையும் சமாளித்துக் கொண்டு தமிழர்களின் தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பதற்கு செயற்பட முடியும்.

இல்லையேல் தமிழர்கள் பிரிந்து நின்று ஆளுக்கு ஆள் ஒவ்வொரு கருத்துக்களை சொல்லிக்கொண்டு சர்வதேசத்தினால் முன்வைக்கப்படுகின்ற தீர்வுகளை பரிசீலிக்காமல் இருந்தால் மீண்டும் தமிழர்கள் முள்ளிவாய்க்காளில் இழந்ததை போன்று தமது இனத்திற்கான விடுதலையின் இலக்கை அடைவதற்கான வரலாற்றுச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டார்கள் என்ற பழிச் சொல்லுக்கும் ஆளாக நேரிடும்.

ஒன்றுமட்டும் உண்மை யாழ்ப்பாணத்தில் இன்று உருவாகியுள்ள தமிழ் மக்கள்  பேரவையாக இருந்தாலும் சரி, தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரி அல்லது வேறு தமிழ் கட்சிகளாக இருந்தாலும் சரி தமிழர் விடுதலைக்கு அப்பால் ஒருவரை ஒருவர் வெட்டி ஓட நினைத்தால் கால ஓட்டத்தில் காணாமல் போவார்கள் என்பது மட்டும் உண்மை.

-தீரன்

எல்லாளன் வாழ்க! – திருக்குறள் பாவலர் தமிழ்மகிழ்நன்

prabakaran birthday wishes 2015எல்லாளன் இருக்கின்றார் எல்லாரும் அறிக

ஈழத்தின் இடர்நீக்க  ஈங்கெழுந்தார் தெளிக!

“இல்லையினி எல்லாளன்” என்று சொல்லு மெதிரி

இடந்தேடி ஓடும்நாள் இனிவிரைவில் வருமே!

வெல்வதற்கே வந்த வேங்கை வீரரவர் வெல்வார்!

வினைமுடிக்கும் பேராற்றல் வள்ளுவத்தாற் பெற்றார்!

ஒல்லும்வாய் அவரறிவார் ஓர்நாளில் ஈழம்

உருவாக்கி ஒண்டமிழால் அரசாண்டு வாழ்வார்!

 

துன்புற்றுத் துடிதுடித்துத் தொல்லையுறும் தமிழர்

துயர்துடைக்க விலங்கொடிக்கத் துடித்தெழுந்து புலிகள்

வன்படையைக் கட்டமைத்தே வாகைசூடி வாழ்வார்!

மண்ணோடு கடலோடு வான்முழுதும் வெல்வார்!

இன்னலையே இன்பமென ஏற்றபுலித் தலைவன்

எல்லாளன் வாழ்நாளில் ஈழமிங்கு விளையும்!

இன்புறவே தமிழரினி இறையாண்மை பெறுவார்

ஈகஞ்செய் மாவீரர் இசைபோற்றி வருவார்!

 

முல்லைப்போர் முடிவல்ல மூடர்காள்! புலிகள்

முன்காலை எடுத்துவைத்து முன்னேறும் பொழுதில்

நில்லாது சிங்களர்நீர் நீள்முதுகு காட்டி

நிலைகுலைந்து நெடுமரமாய் வீழ்பொழுதில் சொல்வீர்!

“எல்லாளன் போலில்லை மாவீரர்” என்றே!

இறுதிப்போர் தமிழீழ வெற்றிப்போ ரென்றே!

சொல்லுமுல கெல்லாமும் சூழ்ந்ததற மென்றே!

தொல்லைதீர புலிமுடியை சூடுவது மன்றே!

 

அல்லவைதேய்ந் தறம்பெருகும்! அருள்மறையே சொல்லும்!

அமிழ்தனைய தமிழ்ப்பெண்டிர் அழகுமுழு தழிந்து

அல்லற்பட் டாற்றாது அழுதகண்ணீர் நெருப்பாய்

அருந்தமிழ்க்கு எதிர்நின்ற அறக்கொடிய ரழிக்கும்!

நல்லறத்தை நிலைநாட்ட ஞாலமுதற் றமிழே

நல்லரசன் எல்லாளன் நாற்படையை யெழுப்பி

வெல்லும்வாய் காட்டிபுலி வெற்றிபெற வைக்கும்

விறல்வே ந்தன் தமிழீழம் வெல்கயென சொல்லும்!

 

எல்லாளன் இருக்கின்றார் எல்லாரும் கேட்பீர்!

எடுத்தவினை முடிக்காமல் இறந்துபட மாடடார்!

எல்லாளன் எழுங்காலம் ஈழமெழும் காலம்!

எதிரிகளின் எக்காள இசைமுடியுங் காலம்!

எல்லாளப் பெருங்சோழன் எழுகதிரா யெழுவான்

இனங்காக்க எதிரியினை ஈங்கவனே  அழிப்பான்!

எல்லாளன் புலிக்கொடியே ஈழமெங்கும் பறக்கும்!

இன்னலறு இனியதமிழ் ஈழமினிப்  பிறக்கும்!

 

எல்லாள ஈடில்லா   யெம்மிறையே வாழ்க!

என்றென்றும் தமிழன்னை ஏற்றமுற வாழ்க!

கல்தோன்றி முன்தோன்றாக் காலத்தே தோன்றி

கழகத்தால் வளர்தமிழைக் கைக்கொண்டோன் வாழ்க!

நல்லாண்மைத் திறத்தாலே நாடாண்டு வாழ்க!

நல்லாட்சி நன்றாற்ற நலமோடு வாழ்க!

பல்லாண்டு வாழ்க!தமிழ்ப் பண்போங்க என்றும்

படையோடு வலிவோடு பார்போற்ற வாழ்க!

 

திருக்குறள் பாவலர் தமிழ்மகிழ்நன்

அகரமுதல இணையம்

இலங்கை அரசியலும் அமெரிக்க-இந்திய-சீன நலன்களும் – ஈழத்தமிழரின் எதிர்காலமும்

usa hopper-diplomacy(இலங்கை அரசியல் ஒருபுறம் இந்து சமுத்திரம் சார்ந்த அமெரிக்க-இந்திய நலன்களோடும், ஐதேக ரணில்-சிறிசேன நலன்களோடும் மறுபுறம் அதே இந்து சமுத்திரம் சார்ந்த சீன நலன்களோடும், ராஜபக்ஷ குடும்ப நலன்களோடும் பின்னணிப் பிணைந்து இரு அணி போட்டி அரசியலாக நகர்ந்து செல்கிறது.

தெற்கு-தென்கிழக்கு பிராந்தியத்துக்கான அமெரிக்க பாதுகாப்பு பிரதி உதவிச் செயலாளார் காலநிதி ஏமி சீரைட் சில தினங்களுக்கு முன் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்போது இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஓர் அம்சமாக இலங்கைக்கான பங்கைப் பற்றி இன்றைய இலங்கை அரசாங்கத்துடன் விளக்கியிருந்தார் என செய்திகள் கூறுகின்றனர்.

அதாவது இந்து சமுத்திர பாதுகாப்பை இலங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்பது சீனா சார்பாக இலங்கை நடந்து கொள்ளக்கூடாது என்பதுடன் அது அமெரிக்க சார்பாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்டதாகும். இந்தவகையில் இலங்கையின் வெளிநாட்டு அரசியல் முற்றிலும் இந்து சமுத்திர அரசியலாக உள்ளது. இதில் ரணில்-சிறிசேன அரசாங்கம் தமது சொந்த அதிகார நலனையும் மேற்படி அமெரிக்க-இந்திய நலனையும் ஒருபுறம் இணைத்தும் அதேவேளை சீனாவோடு நட்பைப் பேணவும் விரும்புகிறது.

மறுபுறமாக சீனா ராஜபக்ஷ குடும்பத்திற்கு ஊடாக இலங்கையில் அரசியல் ஆதிக்கத்தைப் பெற்று தனது இந்து சமுத்திர நலனை விரிவாக்க விரும்புகிறது. மூன்று வாரங்களுக்கு முன் கோத்தபாய ராஜபக்ஷ சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு அங்கு சீன உயர் இராணுவ அதிகாரிகளுடன் உரையாடியுள்ளார். ராஜபக்ஷ குடும்பம் சீனாவிற்கு உதவுவதன் மூலம் இலங்கையில் தமது குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்புகிறது.

இதுதான் இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டு அரசியலின் அச்சாணியாகும். இதில் ஈழத் தமிழர்கள் தமக்கென்று ஒரு நிலைப்பாடற்றவர்களாய் அதேவேளை அச்சாணிக்கான உருளைகளாக பயன்படுத்தப்படுகிறார்கள். இப்போது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் ராஜபக்ஷாக்கள் பதவியில் இல்லாவிட்டாலும் அரசியல் அச்சில் பலமான பாகமாகவே உள்ளனர் என்பதாகும்.

இதன்படி பார்த்தால் இந்து சமுத்திர அரசியலின் மையம் ராஜபக்ஷ குடும்பம் என்பது தெளிவாகிறது. இலங்கையில் பதவியில் இருக்கும் ரணில்-சிறிசேன அணி அதிகம் வெளிநாட்டுப் பலத்தில் தங்கியுள்ளது. அதேவேளை அவர்களின் பின்பு பலமான தலைவர்கள் அந்த அணிக்கு இல்லை. மாறாக ராஜபக்ஷ குடும்பம் பலமான தொடர் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய சங்கிலித் தொடரான தலைவர்களைக் கொண்டிருக்கிறது. ராஜபக்ஷ சகோதரர்கள் நால்வரும் மகிந்த ராஜபக்ஷவின் புதல்வர்கள் இருவர் என இந்த சங்கிலித் தொடர் மிகவும் நீளமானது. இதனை தெளிவாக ஆராய்வோம்.

ராஜபக்ஷக்கள் பதவியில் இல்லாவிட்டாலும் அடுத்து பதவிக்கு வரக்கூடிய மாற்றாக மட்;டுமன்றி அரசியலில் மிகவும் பலமான ஒரு குடும்பமாகவும் உள்ளனர். அதாவது இலங்கை அரசியலில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு இணையான பலங்கொண்ட குடும்பங்கள் எதுவும் இல்லை. ரணில் குடும்ப வாரிசு இல்லாதவர். சிறிசேன அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தைச் சாராதவர். அவர் தற்செயலாக அரசியலில் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளினால் தந்திரோபாய ரீதியில் தூக்கி நிறுத்தப்பட்டிருக்கும் ஒருவர்தான். அவருக்கு என்று சொந்த பலம் எதுவும் கிடையாது. பண்டாரநாயக்க குடும்பம் அரசியல் பலத்தை முற்றிலும் இழந்துவிட்டது. சந்திரிகாவின் பின்பு அது தன் குடும்ப ஆதிக்கத்தை வேரோடு இழந்துவிடக்கூடிய நிலையே உண்டு. அதாவது சந்திரிகா பண்டாரநாயக்காவின் மகன் விமுத்தியை அரசியலில் நிறுத்தி ஸ்தாபிப்பதற்கான நிலை சுதந்திரக் கட்சிக்குள் காணப்படவில்லை.

இந்நிலையில் ராஜபக்ஷ குடும்பம்தான் இலங்கை அரசியலில் பலம் உள்ள குடும்பமாகவும் அதுவும் ஆசிய வல்லரசாக தன்னை உயர்த்தி வரும் சீனாவுடன் நிபந்தனையற்ற ஒட்டுறவைக் கொண்ட குடும்பமாகவும் காணப்படும் நிலையில் அதன் அரசியற் களத்தில் உறுதியானது. எனவே அத்தகைய ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியற் குடும்ப பின்னணியைப் பற்றி இங்கு நாம் விரிவாக அறிந்திருத்தல் அவசியமாகும். அப்போதுதான் நாம் எதிர்காலம் பற்றிய எமக்கான பதையை இலகுவாக வகுக்க முடியும்.

ளுறுசுனு.பண்டாரநாயக்கா ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் இரண்டாவது இடத்தில் இருந்தார். ஆனால் முதலாம் இடத்தில் இருந்து டி.எஸ்.செனநாயக்கா தனக்குப் பின் பண்டாரநாக்காவை தலைமைத்துவத்திற்கு வரவிடாது தனது மகன் டட்லி செனநாயக்காவை தலைவராக்க இருப்பதை அறிந்த பண்டாரநாய்க்கா 1951ஆம் ஆண்டு ஐதேகவில் இருந்து விலகி சுதந்திரக் கட்சியை அமைத்தார். அப்போது பண்டாரநாயக்காவிற்கு வலக்கரமாக இருந்து புதிய கட்சியை ஆரம்பிக்க உதவியவர் மகிந்த ராஜபக்ஷவின் தந்தையான டொன் ஆல்வின் ராஜபக்ஷ ஆவார்.

இங்கு செனநாயக்க குடும்பத்திற்கும், பண்டாரநாயக்க குடும்பத்திற்கும் இடையிலான குடும்ப ஆதிக்கப் போட்டிதான் சிங்களவரின் அரசியலாக அமைந்தது. இதில் செனநாயக்க குடும்பம் கொழும்பை வாழ்விடமாகக் கொண்ட கரையோர சிங்களக் குடும்பமாக இருந்தது. இவர்கள் சாதியால் கொய்கமச் சாதியைச் சேர்ந்த ‘நாயக்க’ பிரிவினராகவும், அதேபோல பண்டாரநாயக்க குடும்பம் கொய்கமவைச் சாதியைச் சேர்ந்த இன்னொரு நாயக்க பிரிவாக இருந்தது. இதில் பண்டாரநாயக்க குடும்பம் செனநாயக்க குடும்பத்தைவிட உயர்நிலை நாயக்க குடும்பமாகும். இந்த இரு நாயக்க குடும்பங்களும் இடையேயான சாதிக் குடும்ப போட்டி சிங்கள அரசியலில் ஆழமான இடத்தை பிடித்திருந்தது. அதாவது பண்டாரநாயக்காவின் வீட்டிற்கு செனநாயக்காவின் குடும்பத்தினர் செல்லும் போது பண்டாரநாயக்காவின் தந்தை செனநாயக்க குடும்பத்தவரை உட்கார வைத்து கதைக்காமல் நிற்க வைத்து கதைக்கும் வழக்கமே 1930களில் இருந்துள்ளது. அந்தளவிற்கு அந்த குடும்பங்களுக்கு இடையே சாதி குடும்ப ஆதிக்கப் போட்டி பெரிதும் இருந்துள்ளதை உணரலாம். இவ்வாறு கரையோர சிங்களவர் மத்தியில் குடும்ப ஆதிக்கப் போட்டி இருந்த அதேவேளை கரையோர சிங்களவருக்கும் கண்டிச் சிங்களவருக்கும் இடையே கண்டி-கரையோர சிங்களவர் என்ற போட்டியும் இருந்தது.

இதனால் டி.எஸ.செனநாயக்கா கண்டிச் சிங்களவர் மத்தியில் திருமண உறவை மேற்கொண்டு கண்டிய தொடர்பை வலுப்படுத்த விரும்பினார். இதைப் பார்த்து அப்படியே அதைப் பின்பற்றி பண்டாரநாயக்காவும் கண்டியில் திருமணத்தை மேற்கொண்டார். டி.எஸ்.செனநாயக்க கண்டியில் திருமணம் செய்த பெண் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் பண்டாரநாயக்க திருமணம் செய்த பெண்ணான ஸ்ரீமாவோ கண்டியில் உயர் குலத்தைச்; சேர்ந்தவர். ஸ்ரீமாவின் குடும்பம் ‘றதுல’ குடும்பம் என அழைக்கப்படும். ‘றதுல’ குடும்பம் கண்டி மன்னனின் ஆட்சியில் தலையாய பிரதானி குடும்பத்தைச் சேர்ந்தது. அதாவது மன்னனின் கீழ் முதலமைச்சர் அந்தஸ்தில் உள்ள குடும்பமாகும்.

இப்படி இரண்டு குடும்பங்களுக்குமான போட்டியில் பண்டாரநாயக்க குடும்பம் ராஜபக்ஷ குடும்பத்தை இணைத்துக் கொண்டது. அதாவது ராஜபக்ஷ குடும்பம் தென் மாகாணத்தில் தலையாய குடும்பமாகும். இதேவேளை செனாநாயக்க குடும்பம் விஜயவர்த்தன, ஜெயவர்த்தன குடும்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஜெயவர்த்தன குடும்பத்தின் நீட்சிதான் ரணில் விக்ரமசிங்க ஆவார்.

பண்டாரநாயக்க குடும்பத்தை அரசியல் ஆதிக்கத்தில் இருந்து அகற்றுவதற்காக இருதடவைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக இருக்க முடியாது என்ற ஏற்பாட்டை ஜே.ஆர்.ஜெயவர்த்தன இலங்கை அரசியல் யாப்பில் ஏற்படுத்தினார். அது வெற்றி பெற்றுள்ளது. அனுரா பண்டாரநாயக்க திருமணம் செய்யாததனாலும், சந்திரிகா நாயக்க குடும்பத்திற்கு வெளியே ‘சலாகம’ சாதியினரான விஜேயகுமாரரணதுங்கவை திருமணம் செய்து கொண்ட நிலையிலும் பண்டாரநாயக்க குடும்ப வாரிசு அரசியல் சங்கிலித் தொடர் பலவீனமாக இருந்ததை உணர்ந்த ஜெயவர்த்தன மேற்படி இருதடைக்கு மேல் ஒரு ஜனாதிபதியாக இருக்க முடியாது என்ற ஏற்பாட்டின் மூலம் பண்டாரநாயக்க குடும்பத்தின் அரசியல் ஆதிக்கத் தொடர்ச்சியை அறுத்திடலாம் என நம்பினார். ஒருவகையில் ஜே.ஆர். எதிர்பார்த்ததற்கு மாறாக ‘சலாகம’ சாதியில் திருமணம் செய்த சந்திரிகாவை விஜேயகுமாரரணதுங்காவின் மரணத்தின் பின் பண்டாரநாயக்க குடும்பம் மீண்டும் சேர்த்துக் கொண்ட நிலையில் சந்திரிகா ஜனாதிபதியாக முடிந்தது. அதேவேளை சந்திரிகா ‘சலாகம’ சாதியில் திருமணம் செய்த பின் தன் கணவரின் சாதி-குடும்ப அந்தஸ்து குறைந்த பெயரை மனதில் கொண்டு தனது பெயரை சந்திரிகா விஜேயகுமாரரணதுங்க என அழைக்காமல் சந்திரிக பண்டாரநாயக்க விஜேயகுமாரதுங்க என அழைத்தார்.

விஜேயகுமாரரணதுங்க என்ற பெயரில் ‘ரண’ என்ற பெயர் சாதி அடையாளத்தை குறிப்பதாகும். ஆதனால் அந்த ‘ரண’ என்பதை நீக்கி விஜேயகுமாரதுங்க என அழைத்தார். இந்தளவிற்கு பெயர் பயன்பாட்டோடு சாதி குடும்ப பயன்பாடும் இணைக்கப்பட்ட ஒரு அரசியலாக சிங்கள அரசியல் உள்ளது.

இந்நிலையில் ராஜபக்ஷ குடும்பம் தென்மாகாணத்தில் அதியுர் சாதி அந்தஸ்து கொண்ட குடும்பமாகும். கரையோரச் சிங்களவர்களில் பண்டாரநாயக்க குடும்பம் மன்னராட்சிக் காலத்தில் ‘பிரதானி’ அந்தஸ்தைக் கொண்ட குடும்பமாகும். ஆனால் ராஜபக்ஷ குடும்பம் தென் மாகாணத்தில் உள்ள ‘றுகுணு இராஜ்ஜியத்தில்’ குறுநில மன்னர் அந்தஸ்தைக் கொண்ட குடும்பமாகும். ராஜபக்ஷ என்ற பெயரில் இந்த மன்னர் குல அந்தஸ்து இருக்கிறது. ஆனால் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இக்குடும்பம் பெரிதும் பின்தள்ளப்பட்டுவிட்டது.

எப்படியோ சிங்கள அரசியல் கலாச்சாரத்தில் இக்குடும்பத்திற்கு முக்கியத்துவம் உண்டு. மகிந்த ராஜபக்ஷ தன்னை ‘துட்டகைமுனுவோடு’ இணைத்து 2005ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இப்பின்னணியைக் கொண்ட ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியின் ஸ்தாபனத் தலைவர்களுள் ஒருவரான டொன் ஆல்வின் ராஜபக்ஷவின் புதல்வாரன மகிந்த ராஜபக்ஷ பண்டாரநாயக்க குடும்பத்தை மீறி ஜனாதிபதியாகுவது சாத்தியப்பட்டது. அதுவும் இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக இருக்க முடியாது என்ற தடையின் பின்னணியில் பிரதமாக இருந்த மகிந்த ராஜபக்ஷ அனுரா பண்டாரநாயக்காவை தாண்டி பதவிக்கு வர முடிந்தது. அவர் பதவிக்கு வந்த பின்பு அனுரா பண்டாரநாயக்க காலமான பின்னணியில் பண்டாராநாயக்க குடும்பம் தனது வேரை கட்சிக்குள் அடியோடு இழந்துவிட்டது. இந்நிலையில் ராஜபக்ஷ குடும்பம் தனிப்பெரும் குடும்பமாய் தன்னை நிலைநிறுத்தி விட்டது. இந்த குடும்ப ஆதிக்கப் போட்டியில் தனது கட்சிக்குள் பலத்தை இழந்த பண்டாரநாயக்க குடும்பத்தின் இறுதி வாரிசான சந்திரிகா ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து ராஜபக்ஷவை வீழ்த்துவதில் வெற்றி பெற்றிருந்தாலும் ராஜபக்ஷ குடும்பத்தின் வாரிசு சங்கிலித் தொடருக்கு நிகராக பண்டாரநாயக்க குடும்பத்தின் சங்கிலித் தொடர் அரசியலில் அமையவில்லை.
மேலும் ரணிலின் பின்பு செனநாயக்க, ஜெயவர்த்தன குடும்ப இறுதிச் சங்கிலித் தொடரும் அறுந்து போய்விடும்;. இந்நிலையில் பலமான குடும்பமாக ராஜபக்ஷ குடும்பமே உள்ளது.

கடந்த வாரம் இலங்கை இராணுவத்தின் அதியுர் இராணுவ அதிகாரிகள் 8 பேர் ராஜபக்ஷவை சந்தித்து உரையாட முடிந்திருப்பது இராணுவத்தில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு இருக்கக்கூடிய பலத்தைக் காட்டுகிறது. இராணுவத்திலும், புலனாய்வுத்துறையிலும், பொலீசிலும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு திடமான பலம் உண்டு. இப்பின்னணியில் ஆசிய வல்லரசாக எழுச்சிபெறும் சீனாவின் கேள்விக்கு இடமற்ற ஆதரவு இராஜபக்ஷ குடும்பத்திற்கு இருப்பதால் அவரின் அரசியல் பலம் இப்போது பதவியில் இருப்பவர்களின் அதிகார பலத்தைவிட பெரிது என்றே கூறவேண்டும். அதேவேளை ராஜபக்ஷ சிங்கள வாக்குக்களால் பெரிதும் ஆதரிக்கப்பட்ட ஒருவர். அவரது தோல்வி தமிழ் வாக்குக்களாலேயே நிர்ணயமானது. எனவே சிங்கள மக்கள் மத்தியிலான அவரது அரசியல் பலம் திடமாகவே உள்ளது.

இப்பின்னணியில் ராஜபக்ஷ குடும்ப அரசியல் இலங்கை அரசியலில் குறைத்து மதிப்பிட முடியாத இடத்தில் இருப்பதினால் அமெரிக்க-இந்திய-சீன அரசியல் இந்த விளிம்பில் சுற்றும் ஓர் அரசியலாகவே அமையும். இதற்கு ஊடாக இலங்கையின் எதிர்கால அரசியலை எடைபோட்டு ஈழத்தமிழர்கள் தமக்கான தெளிவான பாதையை வகுக்க வேண்டும். எப்படியோ ஈழத்தமிழர் இன்றி மேற்படி இந்த அரசியல் போட்டியில் யாரும் ஜெயிக்க முடியாது. அந்தளவிற்கு எமக்கு இருக்கக்கூடிய பலத்தை உணர்ந்து எமது எதிர்காலத்தை நாம் திட்டமிட வேண்டும்.

– சாணக்கியமுனிவன்-

ஈனப்பிழைப்பு நடத்தும் கனடா நக்கி தங்கவேலு, UK சிறிவாஸ்

nakkeran thangavelu
விக்னேஸ்வரன் அப்படி என்னப்பா தப்பு செய்தார்?

பொய்த்தேசியம் பேசி, எண்ணற்ற பொய் வாக்குகளை அள்ளிவீசி, தமிழ் மக்களிடம் வாக்குகளைப் பெற்று சிங்கள தேசத்திற்குக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டணி, குறிப்பாக சம்பந்தன், சுமந்திரன் மாவை மற்றும் இவர்கள் கைக் கூலிகளாக புலம் பெயர் தேசங்களில் பிழைப்பு நடத்தும் கனடா நக்கீரன், UK சிறிவாஸ் போன்றவர்கள் ஓன்று சேர்ந்து கீழ்த்தரமாகப் பேசி, விக்னேஸ்வரன் மீது சேறடித்து அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு முயற்சிப்பது ஏன்? இவர்கள் விக்கி மீது வீசும் சேறு இவர்கள்மீதே பட்டுத் தெரிக்கின்றது..

விக்னேஸ்வரன் பதவியிலிருந்து மக்களுக்காகக் குரல் கொடுப்பது யாருக்கு வலிக்கிறது? அவரைப் பதவியிலிருந்து அகற்ற முயல்பவர்கள் யார்?

அப்படி அவர் என்ன கேட்கிறார்?

ஆண்டாண்டு காலமாக ஏமாற்றப்பட்டு வரும் மக்களுக்கான ஒரு நியாயமான அரசியல் தீர்வு வேண்டும் என்கிறார், இது தப்பா? இது ஏன் உங்களுக்கு வலிக்குது?

”பயங்கரவாதத்தின் மீது யுத்தம்” என்ற பெயரில் இலங்கையில் அரங்கேற்றப்பட்டது ஒரு தமிழின அழிப்பு என்று மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.. அது தப்பா? இது ஏன் உங்களுக்கு வலிக்குது?

வடக்கிலிருந்து ராணுவத்தை அகற்று என்று கேட்டார்.. இது தப்பா? இது ஏன் உங்களுக்கு வலிக்குது?

தமிழ் தேசியத்தில் அக்கறையுள்ள இளைஞர்களை தமிழ் அரசியலுக்குள் கொண்டு வாருங்கள் என்று கேட்கிறார்.. இது தப்பா? இது ஏன் உங்களுக்கு வலிக்குது?

தமிழ் மக்களை வைத்து அரசியல் பண்ணும் சிங்கள அரசியல்வாதிகளை, குறிப்பாக ரணிலை நேரடியாகவே விமர்சித்தார்.. இது தப்பா? இது ஏன் உங்களுக்கு வலிக்குது?TNA Leader Sampanthan

உள்ளூர் விசாரணை மூலம் தமிழ் மக்களுக்கான நீதி என்றுமே கிடைக்காது. சர்வதேச விசாரணைமூலம்தான் உண்மை கண்டறியப்பட முடியும், தமிழ் மாகளுக்கான நீதி கிடைக்க முடியும் என்று தீர்மானம கொண்டுவந்தார்… இது தப்பா? இது ஏன் உங்களுக்கு வலிக்குது?

தமிழ் மக்கள மீது நடத்தப்பட்ட, நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அநியாயத்தை மும் மொழிகளிலும் சிங்களவர்களும் புரிந்து கொள்ளும் விதமாக பேசுகிறார்.. ஆவணங்களை மும் மொழிகளிலும் தயாரிக்கிறார். அவற்றை ஐ.நாவிற்கும் அனுப்பி வைக்கிறார்.. … இது தப்பா? இது ஏன் உங்களுக்கு வலிக்குது?

மூடிய கதவிற்குள் வெளிநாட்டு அதிகாரிகளுடன் பேசுபவற்றை மக்களுக்குக் கூறிகிறார். இது தப்பா? இது ஏன் உங்களுக்கு வலிக்குது?

” வடக்கை விட்டு வெளியேறு” என்று நாம் கேட்கும் அதே ராணுவத்துடன் சேர்ந்து என்னால் உணவருந்த முடியாது என்று மைத்திரியின் அழைப்பை மறுதலித்தார். இது தப்பா? இது ஏன் உங்களுக்கு வலிக்குது?

மக்களே! ” தமிழ் மக்கள் பேரவை” என்பது காலத்தின் கட்டாயம். இதை விக்னேஸ்வரன் உருவாக்கவில்லை. சம்பந்தன் சுமந்திரன் மாவை போன்று, தமிழ் மக்கள் தலையில் மிளகாய் அரைத்து அரசியல் பண்ணும் ” தமிழ்த் தலைமைகள்” என்று சொல்லப்படுவோர்தான் உருவாக்க வைத்தார்கள்.

விக்னேஸ்வரன், ஒரு தமிழ் அரசியல்வாதி எப்படி தமிழ் மக்களுக்கான அரசியல் செய்யவேண்டுமோ அதைத்தான் செய்கிறார். தமிழனாக தமிழ் உணர்வோடுதான் நடக்கிறார்.sumanthiran

சிங்களத்துடன் சேர்ந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்தப்போகும் அடுத்த ” அரசியல் யாப்பு மாற்ற” சதிக்கெதிராக செயற்படாவிட்டால், நம் சுயநிர்ணயம் என்பது முற்று முழுதாக சிங்களனிடம் அடைவு வைக்க சம்பந்தன் குழு அனுமதி வழங்கிவிடும்.

தமிழர் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களுக்காக இயங்கும் ஒரு அரசியல் கட்சியாக இருந்தால், தமிழ் மக்களுக்காக, அம்மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பை விமர்சிக்கவோ அல்லது அதைப் பார்த்தது பயப்படவேண்டிய தேவையோ இல்லை. ஆனால் இவர்கள் தமிழ் மக்கள் பேரவையை ”சதி” என்று விமர்சிப்பதிலேயே இத்தமிழர் தேசிய கூட்டணி என்பது தமிழர்களுக்கான ஒரு கட்சி அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் மக்காள்!

ஆகவே நீதியின் குரலாக ஒலிக்கும் விக்னேஸ்வரனை அகற்ற முயலும் கூட்டமைப்பின் துரோகச் செயல்களை இனியும், கண்டும் காணாதிருப்பதை விடுத்து, விக்னேஸ்வரன் எழுச்சியை அடக்க முயலும் சுமந்திரன் சதியை முறியடிப்போம்! விக்கிக்கு நம் ஆதரவை வழங்குவோம்! அனைவரும் ஓன்று சேர்ந்து அவர் கையைப் பலப்படுத்தவேண்டியதுதான் இப்போதைக்கு நாம் செய்யவேண்டியது.

நன்றி – தமிழ் தமிழ்தீ

பிரபாகரன் வந்தா குடுப்பம் !

Tamil Diaspora co operationsஅண்ணை வந்தா குடுப்பம்!

முள்ளவாய்க்கால் இனப்படுகொலையின் பின் ஆயிரக்கணக்கான போராளிகள் சரண் அடைந்தார்கள்,பல வருடங்களின் பின் வருடக்கணக்கான சித்திரவதைகளின் பின் புனர்வாழ்வு என்ற பெயரில் விடுதலை செய்வதாக நாடகமாடிய சிங்கள அரசு அவர்களை நிரந்தர நோயாளிகளாகவே வெளியே அனுப்பி வைத்தது.வெளியில் வந்த முன்னாள் போராளிகள் குறிப்பாக பெண் போராளிகள் இன்று நாளாந்தம் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழினியின் அவலச்சாவு சிறந்ததொரு உதாரணமாகும்.

முன்னாள் போராளிகளுக்கான நிரந்தர வாழ்வாதாரத்திற்கான திட்டங்களுடன் அன்று தேசியத்தலைவர் தமிழீழத்தில் ஆட்சி நடத்தியபோது புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்த சிலரிடம் பெரும் மணத்தைக்கொடுத்து வர்த்தக நிலையங்கள் ஆரம்பிக்கவும்,பங்களாக்களாக்களை வாங்கவும் ஏற்பாடு செய்திருந்தார்.இன்று அந்தச் சொத்துக்களை வைத்துக்கொண்டு ஆடம்பர வாழ்வினை நடத்திக்கொண்டிருக்கும் சிலரிடம் உதவிகள் என்று செல்லும்போது தலைவர் எங்களிடம் அப்படிச் சொல்லவில்லை,அவர் வந்து கேட்டால் நாம் என்ன சொல்வது என்று வினாத் தொடுக்கின்றார்களாம்.

அட வெண்ணைங்களா அவரது நல்லாட்சியிற்தானே செஞ்சோலை,காந்தரூபன் அறிவுச்சோலை,வெற்றிமனை போன்ற அமைப்புக்களை ஏற்படுத்தி அவர்களின் நல்வாழ்க்கைக்கு வழி சமைத்தார்.இயக்கப்பணத்தை பூதம் காப்பதுபோல் காத்துக்கொண்டிருக்கும் தனவந்தர்கள் அதுபோன்ற அமைப்புக்களை ஏற்படுத்தியாவது உதவிகள் செய்யலாமே?ஒரு சிலருக்கு இந்தப்பதிவு பாதிப்பை ஏற்படுத்தலாம்.அண்ணர் பெயரைச் சொல்லி ஊரையும் உலகத்தையும் ஏமாற்றாமல் செயற்படுங்கள்.இல்லையேல் இந்தப்பாவம் நிச்சயமாக நாளை உங்கள் குடும்பத்தையும் பாதிக்கும்.

– ஆறுமுகம் தங்கவேலாயுதம்

அப்போது ஆயுதங்களுடன் போராடியவர்கள் இப்போது பசி வேதனையுடன் போராடுகின்றனர்

ex ltte members 22போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த போதிலும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவர்கள் சாதாரண மக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மிகப் பாரிய பிரச்சினை.

இவ்வாறு சண்டே லீடர் வாரஇதழில், Tharidu Jayawardana, Idunil Ussgoddarachchi, Udaya Karthikan, R Indumathi ஆகியோர் இணைந்து எழுதியுள்ள Then They Held Guns, Now They Battle Hunger Pangs

கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

சிறிலங்காவின் குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த போது செல்வியும் தனது ரி-56 ரக துப்பாக்கியைத் தூக்கியெறிந்தார். இதன் பின்னர் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்து சமூக வாழ்வை வாழவேண்டும் என அவர் விரும்பினார்.

போர் முடிவடைந்த கையோடு சிறிலங்கா அரசாங்கத்தால் நிர்வகிக்கப்பட்ட புனர்வாழ்வு முகாமில் 2009ன் நடுப்பகுதியில் செல்வியும் இணைந்து கொண்டார். இவர் தனது எதிர்கால வாழ்வு சிறப்பானதாக மாறும் என்கின்ற நம்பிக்கையுடனேயே புனர்வாழ்வு பெறச் சென்றிருந்தார். ஒன்றரை ஆண்டுகள் புனர்வாழ்வுப் பயிற்சியை நிறைவு செய்த செல்வி அங்கிருந்து வெளியேறிய போது இவரது ஆசைகள் இன்னமும் அதிகரித்திருந்தன.

இவர் தனது புனர்வாழ்வுக் காலத்தின் பின்னர் தனது சொந்த ஊரான கிளிநொச்சிக்கு திரும்பினார். இவர் தனது கிராமத்திற்குத் திரும்பிய போது 24 வயதான புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியாகத் திரும்பவில்லை. மாறாக இளமை வயதின் கனவுகள் இவருள் நிறைந்திருந்தது. தனக்கென வீடு, கணவன் மற்றும் பிள்ளைகள் என இவரது புதிய கனவுகளும் புதிய நம்பிக்கைகளும் அதிகரித்திருந்தன.

ஆனால் இவளது சொந்த கிராமத்தவர்கள் இவளை ஏற்க மறுத்த போது இவள் அதிர்ச்சியடைந்தாள். சிலர் இவள் கொடிய யுத்தத்தை நடத்திய தமிழ்ப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி என நோக்கினர். ஏனையவர்கள் இவள் சிறிலங்கா அரசாங்கத்தால் மூளைச்சலவை செய்யப்பட்ட பெண் எனக் கருதினர். ஆகவே ஒட்டுமொத்தத்தில் எல்லோரும் இவளை ஏற்க மறுத்தனர். சிலர் இவளை ‘விலைமகள்’ எனவும் அழைத்தனர்.

‘என்னைப் பொறுத்தளவில் எமது சமூகத்தின் படி ஒரு பெண்ணானவள் திருமணம் செய்யாது, குழந்தை பெறாது வாழமுடியாது. அப்படி வாழ்ந்தால் அவளது வாழ்வு முழுமை பெறாது. ஆனால் ஒவ்வொருவரும் என்னை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்’ என கண்ணீருடன் செல்வி கூறினாள்.

2006ல் செல்வி தனது 19வது வயதில் புலிகளுடன் இணைந்து கொண்டாள். போராளியாக இருந்த இவளது சகோதரன் யுத்தத்தில் இறந்ததால் இவள் தன்னைப் புலிகளுடன் இணைத்துக் கொண்டாள். இதன் பின்னர் யுத்தம் நிறைவடையும் வரை இவளும் அமைப்பில் பணியாற்றினாள்.

‘மக்கள் மத்தியில் எங்கள் மீது நிறைய சந்தேகங்கள் உள்ளன. ஆனால் இவர்கள் நினைக்குமளவுக்கு நாங்கள் கெட்டவர்கள் அல்ல. புனர்வாழ்வுக் காலத்தில் நாங்கள் மிகவும் நன்றாகவே கவனிக்கப்பட்டோம்’ என செல்வி கூறினார்.

செல்வியின் விருப்பம் தனிப்பட்ட ஒன்றல்ல. கெட்டவாய்ப்பாக, இது புனர்வாழ்வு பெற்ற 12000 முன்னாள் போராளிகள் மத்தியில் காணப்படும் பொதுவான ஆதங்கமும் விருப்பமும் ஆகும்.

‘எமது புனர்வாழ்வுக் காலத்தில் எமக்கு நிறைய உணவுகள் வழங்கப்பட்டன. ஆனால் எதுவும் எமக்குப் பயனளிக்கவில்லை’ என ஜெயந்திநகர் கிளிநொச்சியைச் சேர்ந்த மணிமேகலா தெரிவித்தார். ‘நாங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் நாங்கள் தொழில் அற்றவர்களாக இருக்கவில்லை. தொழில் வாய்ப்புக்கள் அதிகம் காணப்பட்டன. ஆனால் தற்போது எமக்கென பொருத்தமான தொழில் வாய்ப்புக்கள் காணப்படவில்லை. இந்நிலையில் நாங்கள் எவ்வாறு வாழமுடியும்?’ என சில ஆண்டுகள் போராளியாக இருந்த பின்னர் போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்திடம் சரணடைந்த 34 வயதான மணிமேகலா தெரிவித்தார்.

‘சிவில் பாதுகாப்பு படையில் சில தொழில்வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும் அவை எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனது கணவர் மத்திய கிழக்கிற்கு தொழில் தேடி சென்றுள்ளார். ஆனால் இன்னமும் அவருக்கு தொழில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. நான் சிறிய வேலைகளில் ஈடுபட்டு மாதம் 7000 ரூபா சம்பாதிக்கிறேன். ஆனால் இது போதுமானதல்ல’ என மணிமேகலா தெரிவித்தார்.

இவ்வாறான துன்பங்களை அனுபவிக்கின்ற போதிலும் தற்போது நாட்டில் அமைதி நிலவுவது மகிழ்ச்சியைத் தருவதாகவும் மணிமேகலா தெரிவித்தார்.

மாற்றுவலுவுடைய முன்னாள் போராளியான சத்யனும் சமாதானத்தையே விரும்புகிறார். இவர் 1993லிருந்து புலிகள் அமைப்பில் இணைந்து பணியாற்றினார். 1996ல் இவர் தனது ஒரு காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கண்ணிவெடியில் இழந்தார். இவர் யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஒரு ஆண்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டார்.

‘நான் புனர்வாழ்விலிருந்து விடுவிக்கப்பட்ட போது ரூபா 250 வழங்கப்பட்டது. இந்தப் பணத்தைச் செலுத்தி முச்சக்கர வண்டியில் கிளிநொச்சியிலுள்ள எனது வீட்டிற்குச் சென்றேன். நான் வீட்டிற்குள் நுழைந்த போது என்னிடம் ஒரு சதமேனும் இல்லை’ என்கிறார் சத்யன்.

தம் மீது குத்தப்பட்ட புலி முத்திரையை அழிப்பதென்பது இலகுவான காரியமல்ல எனவும் முன்னாள் போராளிகள் அனைவரும் இந்த முத்திரையுடனேயே தற்போதும் வாழ்வதாகவும் சத்யன் கூறினார். ‘நான் செயற்கைக் கால் ஒன்றைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு மானியமாக ரூ.50,000 வைப் பெறவேண்டும். இதற்கு கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் அவசியம். ஆனால் இந்த விண்ணப்பப் படிவத்தில் சிறிலங்கா அரசாங்கத்திற்கோ அல்லது இராணுவத்திற்கோ எதிராக பணியாற்றியிருக்கக் கூடாது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் எனது பின்னணியின் காரணமாக கிராம அலுவலர் விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்திட தயங்குகிறார்’ என சத்யன் ஆதங்கப்பட்டார்.

கிளிநொச்சியில் வாழ்ந்து வரும் சத்யன் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களைப் பராமரிப்பதற்காக கூலித்தொழிலில் ஈடுபடுகிறார். இவர் தனது குடும்பத்திற்காக வீடான்றைக் கட்டுகிறார். ஆனால் இந்த வீடு எப்போது முழுமை பெறும் என்பது நிச்சயமில்லை. இவர் முச்சக்கரவண்டியை வைத்திருக்கிறார். இவரால் மாற்றுவலுவுடையோருக்கென தயாரிக்கப்பட்டுள்ள சிறப்பு வாகனத்தை கொள்வனவு செய்ய முடியவில்லை. ஏனெனில் இது மிகவும் விலைகூடியது.

‘கிராமத்தில் இடம்பெறும் பொது நிகழ்வுகளில் பங்குபெற எனக்கு ஆசை. ஆனால் என் மீது புலி முத்திரை குத்தப்பட்டுள்ளதால் அவற்றில் என்னால் பங்குபெற முடியவில்லை’ என சத்யன் தெரிவித்தார்.

தமது சொந்தக் கிராமத்தவர்கள் முன்னாள் போராளிகளான தம்மை சாதாரண கண்ணோடு நோக்கவில்லை என ஆதங்கப்படுகிறார்கள்.

‘2008ல் திருமணம் செய்த பின்னர் புலிகளுடன் இணைந்தேன். திருமணம் செய்தவர்களை போரில் ஈடுபடுத்துவதில்லை எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் ஏழு நாள் பயிற்சி வழங்கப்பட்ட பின்னர் நான் முன்னணி போர் அரங்கிற்கு அனுப்பப்பட்டேன்’ என தினேஸ் கூறினார்.

புலிகளுடன் குறுகிய காலமே தான் பணியாற்றியிருந்ததால் ஆறு மாதங்களில் தன்னை விடுதலை செய்வதாக அதிகாரிகள் கூறியபோதிலும் இரண்டரை ஆண்டுகளின் பின்னரே தான் விடுவிக்கப்பட்டதாக தினேஸ் தெரிவித்தார்.

2008ல் மன்னாரில் இடம்பெற்ற யுத்தத்தின் போது தினேசின் சகோதரிகளில் ஒருவர் கொல்லப்பட்டார். இவரது தந்தையார் 2007ல் புற்றுநோயால் இறந்தார். இவரது குடும்பச் சூழலின் காரணமாக தினேஸ் தனது கல்வியை இடைநிறுத்திவிட்டு தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றினார்.

போர்க்காலத்தில் இருந்தது போன்று வன்னியின் நிலை தற்போதில்லை என்பதே முன்னாள் போராளிகள் அனைவரினதும் கருத்தாகும். அதாவது தற்போது வன்னியில் மோசமான சூழல் நிலவுவதாகவும் ஒழுக்கமற்ற செயல்கள் அதிகரிப்பதாகவும் முன்னாள் போராளிகள் கூறுகின்றனர்.

‘புலிகள் இருந்த காலத்தில் எவரும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடவில்லை. அனைவரும் பிரபாகரனுக்கு பயந்து விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. தற்போது மாலை ஆறு மணிக்குப் பின்னர் எந்தவொரு பெண்களும் வீதியால் நடந்து செல்ல முடியாது’ என்பது முன்னாள் போராளிகளின் ஆதங்கமாகும்.

வன்னிப் பகுதியில் தொழிற்சாலை ஒன்றை நிறுவி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கினால் இளைஞர்களுடன் தொடர்புபட்ட பிரச்சினைகள் குறைவடையும் என தினேஸ் உணர்கிறார்.

வடிவேல் 13 ஆண்டுகள் புலிகள் அமைப்பில் பணியாற்றிய போது ஏப்ரல் 17, 2009ல் தனது கண்பார்வையை இழந்தார். இவர் புலிகளின் முக்கிய தளபதி ஒருவரின் பாதுகாப்பாளராக கடமையாற்றியிருந்தார்.

‘புனர்வாழ்வு முகாமில் நாங்கள் மிகவும் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டோம். ஆனால் எமக்கென எந்தவொரு தொழிற்பயிற்சிகளும் வழங்கப்படவில்லை. நான் விடுவிக்கப்பட்ட பின்னர், அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் கால் துடைப்பான்கள் தயாரிக்கக் கற்றுக்கொண்டோம். ஆனால் இதில் வருவாயைப் பெற முடியவில்லை. பின்னர் சமையலாளராகப் பணியாற்றினேன். தற்போது சிறிய உணவகத்தை நடாத்தி வருகிறேன். ஆனால் தற்போது பெருமளவில் உணவகங்கள் நிறுவப்பட்டுள்ளதால் இவர்களுடன் போட்டியிடுவது மிகவும் கடினமாக உள்ளது’ என வடிவேல் தெரிவித்தார். இவர் ஒரு பிள்ளைக்குத் தந்தையாவார்.

இராணுவத்துடன் நட்பாக நடந்து கொள்ள இவர் விரும்புகிறார். ஆனால் அரசாங்கமானது இதுவரையில் வடிவேல் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு எவ்வித உதவிகளையும் வழங்கவில்லை. முன்னாள் போராளி என முத்திரை குத்தப்படுவதை வடிவேல் விரும்பவில்லை. ஒவ்வொருவர் மத்தியிலும் சிங்களவர் அல்லது தமிழர் என்கின்ற இனப்பாகுபாடு காணப்படுகிறது. ஆகவே இந்தப் பிரச்சினை மீண்டும் இடம்பெறக் கூடாது என்பதையே வடிவேல் விரும்புகிறார். ‘நான் அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை. எமக்கு இன்னுமொரு யுத்தம் வேண்டாம்’ என வடிவேல் மேலும் கூறினார்.

சமூகப் பணியாளர்கள், சமூகத் தலைவர்களின் கருத்தின் பிரகாரம் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் தற்போதும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

‘மூன்று முக்கிய விடயங்கள் காணப்படுகின்றன. முதலாவது முன்னாள் போராளிகள் இராணுவத்தினரின் முகவர்களாக நோக்கப்படுகின்றனர். இவர்கள் உளவாளிகள் என்கின்ற அவப்பெயரைச் சம்பாதிக்கின்றனர்.

இரண்டாவதாக, புலிகளின் காலத்தில் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு தற்போது உயிருடன் உள்ள போராளிகள் இவர்களால் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு போரில் இறந்தவர்களின் குடும்பங்களால் அவமதிக்கப்படுகின்றனர்.

மூன்றாவதாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட பெண் போராளிகள் கறைபடிந்தவர்கள் என கிராமத்தவர்களால் ஓரங்கட்டப்படுகின்றனர்’ என கிளிநொச்சியைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய எஸ்.கே.டானியல் தெரிவித்தார்.

‘விவசாயத்தில் ஈடுபட்டவர்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இதில் எவ்வித பயனுமில்லை. புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களில் 2000 பேர் வரை சிவில் பாதுகாப்பு படையில் வேலைக்கு இணைக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் தற்போதும் தொழில் தேடுகின்றனர்’ என டானியல் குறிப்பிட்டார்.

‘ஆசிரியர் ஒருவர் புலிகள் அமைப்பில் இணைவதற்கு முன்னர் எட்டு ஆண்டுகள் வரை பாடசாலை ஒன்றில் சேவையாற்றியிருந்தார். இவர் தனது வேலைப் பத்திரத்தைப் பெறுவதற்காக அதிபரிடம் சென்றபோது அவர் அதனைக் கொடுக்க மறுத்துவிட்டார். புலிகள் அமைப்பில் பணியாற்றியதே இதற்கான காரணமாகும். பிறிதொரு சந்தர்ப்பத்தில் யோகப் பயிற்சிக்காக இந்தியாவிற்குச் செல்வதற்கு முன்னாள் போராளி ஒருவர் விரும்பினார். ஆனால் இவருக்கான கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது’ என டானியல் சுட்டிக்காட்டினார்.

போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த போதிலும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவர்கள் சாதாரண மக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மிகப் பாரிய பிரச்சினையாகும்.

‘நாங்கள் அனைத்தையும் போரில் இழந்துவிட்டோம். இவ்வாறானதொரு போர் மீண்டும் ஏற்படக்கூடாது. நீங்கள் எவ்வாறு எங்களை அழைப்பதென்பது ஒரு பிரச்சினையல்ல. ஆனால் தயவுசெய்து எங்களை தனிமைப்படுத்தி விடாதீர்கள்’ என புனர்வாழ்வு பெற்ற ஒருவர் கேட்டுக் கொண்டார்.

இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

‘Tamil Makkal Peravai Will Be A Watchdog of Tamil Politics’

TPC-1‘Tamil Makkal Peravai Will Be A Watchdog of Tamil Politics’

The Chief Minister of Sri Lanka’s Tamil-majority Northern Province, C V Wigneswaran, has clarified that the Tamil Makkal Peravai (TMP), which he has floated, is not a rival to the Tamil National Alliance (TNA), but is a non-partisan, civil society watchdog meant to see that the basic interests of the Lankan Tamils are upheld by their leaders and not compromised for…

[NIE ] – more …


Then They Held Guns, Now They Battle Hunger Pangs

by Tharidu Jayawardana, Idunil Ussgoddarachchi, Udaya Karthikan and R Indumathi She gave up the T-56, her constant companion for over three years when the bloody war ended. Selvi wanted a clean break. When she walked into a government run rehabilitation camp in mid-2009, Slevi, harbored faint hopes for a better life. When she left the rehabilitation camp a

[sunday leader] Read More »


What’s the Deal with Sri Lanka’s War Crimes Court?

Several weeks ago, Chandrika Kumaratunga announced that Sri Lanka would set up a special court to deal with alleged wartime abuses. Kumaratunga is the chairperson of the Office for National Unity and Reconciliation (ONUR); she served as President of Sri Lanka from 1994-2005. The news about a special court came as a surprise to many people. When the initial…

The Diplomat – Dec 29 18:18 GMT – more …


Q&A WITH TAMIL POET R. CHERAN ON POETRY IN THE FACE OF OPPRESSION

The first of Tamil poet and professor R. Cheran’s escapes was in July 1979, the day the Sri Lankan government enacted the Prevention of Terrorism Act (PTA) and immediately began arresting members of the country’s second largest ethnic group — including him and his roommates. A university student in the historic Tamil city of Jaffna at the time, he addressed the…

[The Alignist ]- more …


Sri Lanka: Year 2015 in review

An annual review of the political conjuncture of Lanka to be useful to overseas readers must deal with six matters: (a) the still fluid situation in governmental and state power, (b) the deal with the UN Human Rights Commission on investigation of war crimes, (c) indeterminacy in economic direction, (d) an economic relationship with India in the context of…

[SAAG ] – more …


House hunt in Sri Lanka: Seeking the place my father once called home

As Dakshana Bascaramurty was growing up in Canada, her father would reveal almost nothing about his past life in rural Sri Lanka. So when fate took her to the island country, she knew she had to search for the place he left behind. My father never read to me when I was a kid, but could sometimes be persuaded to tell a bedtime story from memory, drawn from a stock of…

[Globe and Mail]- more ..

தமிழர்களுக்கான தீர்வில் வெளிப்படைத்தன்மை வேண்டும் ! சம்பந்தர் சொல்ல மறுப்பது எதற்காக?

அப்படி எதுவும் இருந்தால் தானே சொல்லுவதற்கு,  சம்பந்தர் 2016 இல் பாடை ஏறிவிடுவார் அதைத் தான் தீர்வு வரும் வரும் என்று சொல்கின்றார் போலும் !

அதன் பின் குட்டிக் கதிர்காமர் சுமந்திரன் தமிழரசுக்கட்சியை ஏப்பம் விட்டுவிடுவார் அது இப்பவே சிங்களக் கட்சியாகத்தானே செயல்படுகின்றது!

இனி வலம்புரிக்கு

tna traitors SMS 3தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடர் நேற்றையதினம் நடைபெற்ற போது தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட வரைபு ஒன்றை தயாரிப்பதற்கான நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டமை காத்திரமான பணி எனலாம்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்ன? என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் தயாரிப்பதே பொருத்து டையதாகும். இந்தப் பணியை எங்களிடம் உள்ளதுறைசார் நிபுணர்களைக் கொண்டு எங்கள் மண்ணில் இருந்தவாறே தயாரிப்பதென்பது தமிழ் மக்களின் ஆழ்ந்த எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்வதாக அமையும் என நம்பலாம்.

அதேநேரம் தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் கட்சியோ அல்லது கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுத் தலைமையோ அல்ல என்பதை தமிழ் மக்கள் பேரவை மிகத் தெட்டத்தெளிவாகக் கூறியுள்ளது.

இருந்தும் தமிழ் மக்கள் பேரவையை ஒரு அரசியல் கட்சியாகப் பார்க்கின்ற செயல் மக்களின் ஜனநாயகச் செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பதாகும். இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

அரசியலுக்கு அப்பால் தமிழ் மக்களின் நலன் களை பேணும் வகையில் அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாக மாறி வருவதைக் காண முடிகிறது. மக்கள் இயக்கம் பலமானதாக- வலிமையான தாக இருக்கும் போது தமிழ் அரசியல் தலைமைக ளின் செயற்பாடுகள் ஆரோக்கியமானதாக அமைவது தவிர்க்க முடியாதது.

அதேவேளை தமிழ் மக்கள் பேரவையின் உதயம் இனப்பிரச்சினைக்கான தீர்வை எந்த வகையிலும் பாதித்து விடக் கூடாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் நலன்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடு எந்த வகையில் அரசியல் தீர்வை பாதிக்கும் என்பதை சம்பந்தர் சொல்ல மறந்தமை எதற்காக? என்ற கேள்வி எழுவதும் நியாயமானதே.

2016ஆம் ஆண்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது சம்பந்தர் கூறியிருந்தார்.

நல்லது.

2016இல் தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்த்து வைக்கக் கூடியதான தீர்வு கிடைக்குமாக இருந்தால் அது மிகப்பெரும் பேறு எனலாம். அதற்காக நாம் அனைவரும் பாடுபடவேண்டும். அதேசமயம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை அரசு வழங்கவுள்ள தீர்வுத்திட்டம் என்ன? அதில் இருக்கக்கூடிய அம்சங்கள் என்ன என்பதை தமிழ் மக்கள் அறிய நினைப்பதில் எந்த பிழையுமில்லை.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்கான தீர்வை அறிவது அவர்களின் சுதந்திரம். இதை விடுத்து தீர்வுத் திட்டத்தை இப்போது வெளியிட்டால் சிங்கள மக்கள் குழம்பி விடுவார்கள் என்றால், சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளாத தீர்வை இலங்கை அரசு அதிரடியாகத் தமிழர்களுக்குத் தரப்போகிறதா என்ன?

ஆக, சிங்கள மக்கள் எதிர்ப்பார்கள்; விமல் வீரவன்ஸ குழப்புவார் என்பதெல்லாம் தமிழ் மக்களின் பிர ச்சினைக்குத் தீர்வு காண்பதில் இருந்து இலங்கை அரசு தப்பித்துக் கொள்வதற்குக் கையாளும் தந்திரம்.

சிங்களவர்கள் எதிர்ப்பார்கள்; விமல் வீரவன்ஸ எதிர்ப்பார் என்றால் இந்த யுகத்தில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாமல் போகும். எனவே இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பதில் வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியம்.

இங்கு தமிழ் மக்களுக்கோ சிங்கள மக்களுக்கோ தீர்வுத்திட்டத்தை மறைப்பது மோசமான செயல். அதற்குள் எந்த இராஜதந்திரமும் இருக்க முடியாது என்பதால் தீர்வு என்ற விடயத்தில் வெளிப்படைத் தன்மை மிகவும் அவசியமாகும்.Mavai senathirajah tamil arasu kadchi

தமிழ் மக்கள் பேரவையின் உதயத்தால் பயம் கொண்டோரின் கூக்குரல் பாரீர்

தமிழ் மக்களின் ஒரே பலம் ஒற்றுமை என்பதை எவரும் மறந்து விடக் கூடாது. அந்த ஒற்றுமை குலைந்து போகுமாக இருந்தால், அதனால் பாதிக்கப்படுவது தமிழ் மக்கள்-தமிழினம் என்ற உண்மையையும் நாம் இவ்விடத்தில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனினும் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் ஒற்றுமையைக் குலைத்து அதில் இருந்து பதவியைப் பெற்றுக் கொள்ள நினைக்கின்ற கொடுமை நடந்தேறுகின்றது.

அண்மையில் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பை மதத்தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் இணைந்து அமைத்தனர். அந்த அமைப்பினர் இது ஓர் அரசியல் கட்சியோ மாற்றுத் தலைமையோ இல்லை அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ் மக்களின் நலன்களை கவனிக்கின்ற அமைப்பு என்று வெளிப்படையாகக் கூறிய போதிலும், இல்லை இது அரசியல் கட்சிதான்; மாற்றுத் தலைமைதான் என்று ஒரு சிலர் விடாப்பிடியாக நிற்கின்றனர்.

தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சி அல்ல என்று மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் வெளிப்படையாகக் கூறியுள்ளனர். தமிழ் மக்கள் பேரவையில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் இது அரசியல் கட்சி அல்ல தமிழ் மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் அமைப்பு என்று பட்டவர்த்தனமாகத் தெரிவித்துள்ளனர்.

இருந்தும் தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட்டு விடக் கூடாது; அவர்கள் ஒற்றுமைப் பட்டால் எங்கள் அரசியல் பிழைப்பு அம்போ என்றாகிவிடும் என்று பயம் கொண்டவர்கள் தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சி என்று விமர்சிக்கின்றனர்.

இங்குதான் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் பிரித்தாளும் தந்திரம் வெளிப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தருக்கு பின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியில் சிலர் தாமே என்று கற்பனை செய்து கொண்டு அதற்கேற்றால் போன்ற சூழமைவை ஏற் படுத்துவதற்காக சூழ்ச்சி செய்கின்றனர்.

இந்தச் சூழ்ச்சித் தனங்களை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எம்மைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் ஒற்றுமைப் பலம் உயர வேண்டுமாயின் வடக்கின் முதல்வர் விக்னே ஸ்வரனும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரும் சந்தித்து தமக்குள் இருக்கக்கூடிய கருத்து முரண்பாடுகளை நிவர்த்திக்க வேண்டும்.

எனினும் பதவி ஆசை பிடித்த அரசியல்வாதிகள் சிலர், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரும் முதல்வர் விக்னேஸ்வரனும் சந்திப்பதை தடை செய்ய முயற்சிப்பர் என்பதும் உண்மை.

எதுவாயினும் தமிழ் மக்கள் பேரவையின் எதிர் காலப் பணி நிச்சயம் அந்த அமைப்பின் நோக்கத்தை வெளிப்படுத்தும். அதுவரை பொறுத்திருந்து பார்க்கமுடியாதவர்கள் கூக்குரல் இடட்டும். அதைப் பற்றி கவலை கொள்ளத்தேவையில்லை.

உண்மையும் நீதியும் எங்குள்ளதோ அங்கு இறை ஆசியும் தூய பணியும் வெற்றியும் இருக்கும் என்பதே உண்மை.

User Comments
User Comments

தமிழ் எங்கள் உயிர் என்றால் எங்கள் தார்மீகக் கடமை என்ன?

தமிழுக்கு அமிழ்து என்று பெயர். அமிழ்து என்பதை திரும்பத்திரும்பச் சொல்லிப் பாருங்கள். அமிழ்து என்பது தமிழ் என்று ஒலிப்பதை உணர்வீர்கள். இதனால்தான் தமிழும் அமிழ்தும் ஒன்று என்றாயிற்று. எங்களின் உயிராக இருக்கக்கூடிய தமிழ் இன்று எத்துணை துயரங்களைச் சந்தித்துள்ளது. ஒரு காலத்தில் தமிழர்கள் தமது உரிமைக் காக, பேரினவாதத்துடன் மட்டுமே போராட வேண்டியிருந்தது. ஆனால் இன்று நிலைமை அதுவன்று. தமிழ் வாழ்வதற்காக இன்று பலருடன் போராட வேண்டிய துர்ப்பாக்கியநிலை இருக்கிறதே அது தான் மிகப்பெரிய துன்பம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு சுயநல வாழ்வு வாழுகின்ற அர்ப்பத்தனங்கள் எந்தவித கூச்சமுமின்றி அரங்கேறியுள்ளபோது, பாவம் தமிழினம் என்று சொல் வதைத்தவிர வேறு எதுவும் நமக்குத் தெரியவில்லை. நடந்து முடிந்த போராட்டங்களில் பின்பான எங்கள் நிலைமை எப்படி உள்ளது என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். எங்களின் இனம் மீண்டும் தழைப்பதற்கான வழி வகைகள் ஏதேனும் தெரிகிறதா?

நாட்டின் தலைநகரில் இருந்து கொண்டு தமிழ் அரசியல் வியாபாரம் நடந்தேறுகின்ற போதிலும் எங்கள் புத்திஜீவிகள், சமூக அக்கறை கொண்டவர்கள் மெளனமாகவே இருந்து விடுகின்றனர். இத்தகையதொரு ஆபத்தான சூழ்நிலையில் இருந்து தமிழினம் தப்பிப் பிழைத்து தலைநிமிர வேண்டுமாயின் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தங்களின் உரிமையை ஜனநாயக ரீதியில் பெறுவதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

நம் அரசியல் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நாம் நம்பி அனைத்துப் பொறுப்பையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டால்; அரசியல் தலைகளுக்கு பேரம் பேசுகின்ற இந்தக் காலகட்டத்தில் எங்கள் நிலை என்னவாவது.

ஆகையால் அன்புக்குரிய தமிழ் மக்களே! எல்லாக் காலமும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பது மடமைத்தனம். அதேநேரம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டாக வேண்டும் என்று இலங்கை அரசுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்கின்ற இந்த வேளையில், நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டும். இந்தத்தீர் வோடு எங்கள் மக்கள் இந்த நாட்டில் நிம்மதியாக- சுதந்திரமாக வாழ்வதற்கு வழி காணப்பட வேண்டும்.

இதற்காகவே தமிழ் மக்கள் பேரவை உதயமாகியிருக்கிறது. அரசியலில் இறங்கினால்தான்-தேர்தலில் நின்றால்தான்-கட்சி அமைத்தால்தான் தமிழ் மக்களின் உரிமை பற்றி பேசமுடியுமா என்ன?

தமிழ் மக்களின் பொது அமைப்பாக இருந்து கொண்டும் உரிமைக்காக குரல் கொடுக்க முடியும். இந்திய தேசத்துக்கு விடுதலை பெற்றுக் கொடுத்த அண்ணல் காந்தி அரசியல் நடத்தினாரா என்ன?

ஆக, அரசியலில் இருந்து கொண்டு அதன் மூலமே பேரம் பேச முடியும் என்ற பிழையான கற்பிதங்களை காட்டியதன் பயனாக, தமிழ் மக்கள் பேரவை என்ற மக்கள் அமைப்பை அரசியல் கட்சியாகப் பார்க்கின்ற துரதிர்ஷ்டம் நடந்து கொண்டிருக்கிறது.

எதுவாயினும் அன்புக்குரிய புத்திஜீவிகளே! தமிழ்ப் பற்றாளர்களே! தமிழ் மக்கள் பேரவைக்கு உங்கள் ஆலோசனைகளைக் கொடுத்து ஒரு வலுவான நடைமுறைக்குச் சாத்தியமான-நிரந்தரமான அரசியல் தீர்வை உருவாக்குங்கள். அதனை சிங்கள மக்கள் மத்தியிலும் எடுத்துச் சென்று அன்புக்குரிய சிங்கள மக்களே! இலங்கைத் தீவில் நாங்கள் சுதந்திரமாக வாழ்வது உங்களுக்கு இடைஞ் சலா? என்று கேளுங்கள்.

உங்களுக்குரிய உரிமைகள் எங்களுக்கு இருப்பதை நீங்கள் எதிர்ப்பது நியாயமா? என்று வினவுங்கள்.

எங்களின் நியாயமான தீர்வுத்திட்டம் இதுதான். இதை நிறைவேற்ற உங்கள் ஆதரவைத் தாருங்கள். நீங்களும் நாங்களும் சேர்ந்து இலங்கைத் திருநாட்டை வளப்படுத்துவோம் என்று கூறுங்கள்.

வலம்புரி

தமிழ் மக்கள் பேரவை எதனுடைய தொடக்கம்?

tna traitors 8சம்மந்தரின் தெரிவே விக்கினேஸ்வரன். தனது தெரிவே தனக்கு எதிராகத் திரும்புவது என்பது ஒரு தலைமைத்துவத்தின் தோல்விதான். என்பதால்தான் விக்கினேஸ்வரன் கட்சிக்கு வெளியே சென்று கருத்துக்கள் கூறியபோதெல்லாம் சம்பந்தர் பேசாமல் இருந்துவந்தார்.

சுமந்திரனும் விக்கினேஸ்வரனும் பகிரங்கமாக மோதியபோதும் சம்மந்தர் பேசாமல் இருந்தார். விக்கினேஸ்வரனை வெளிப்படையாக எதிர்ப்பதை அவர் ஓரளவுக்குத் தவிர்த்து வந்தார். எனினும் கடந்த மாதம் அவர் மட்டக்களப்பில் வைத்து தனது மௌனத்தை கலைத்தார்.

விக்கினேஸ்வரன் விரும்பினால் தலைமைப் பொறுப்பை ஏற்கலாம் என்ற தொனிப்பட அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். அதன் மூலம் தலைமைப் பொறுப்பை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் நோக்கம் தனக்குக் கிடையாது என்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முற்பட்ட அதேசமயம் விக்கினேஸ்வரன் விரும்பினால் அவர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம் என்ற ஒரு செய்தியையும் சம்பந்தர்; உணர்த்த முற்பட்டார். அது ஏறக்குறைய ஒரு பொறிதான். விக்கினேஸ்வரன் சம்மந்தரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் தலைமைப் பொறுப்பை நோக்கி முன்னகர வேண்டியிருக்கும். ஏற்கவில்லை என்றால் தலைமைப் பீடத்திற்கு எதிராக கருத்துக் கூறுவதை நிறுத்தவேண்டியிருக்கும். கடந்த இரு ஆண்டுகளாக விக்கினேஸ்வரன் தனது தலைமைத்துவத்தை போதியளவு நிரூபித்திருக்கவில்லை. அப்படிப்பட்ட பொறுப்புக்களின் மீது ஆசை கொண்ட ஒருவராகவும் அவர் காணப்படவில்லை. அப்படிப்பட்ட ஆசைகள் இல்லை என்பதனால்தான் அவர் தலைமைத்துவத்துக்கு எதிராக வெளிப்படையாகப் பேசி வந்தார். எனவே அவர் தலைமைப் பொறுப்பை ஏற்கப் பின்னடிப்பார் என்ற ஒரு எதிர்பார்ப்போடுதான் சம்மந்தர் ஒரு பொறியைத் வைத்தார்.

விக்கினேஸ்வரன் அதற்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை. ஆனால் ஒரு செயல் மூலம் மறைமுகமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்.தமிழ் மக்கள் பேரவைக்கு தலைமை தாங்கியதன் மூலம் அவர் சம்பந்தருக்கு சூசகமாக பதில் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையானது கட்சிசார்பற்றது என்றும் எல்லாக் கட்சிகளுக்குமான ஒரு பொது இடையூடாட்டத் தளம் என்றும் கூறப்படுகிறது. அதற்குள் தமிழ் சிவில் சமூக அமையத்தைச் சேர்ந்தவர்கள் உண்டு. ஆனால் அதற்காக தமிழ் சிவில் சமூக அமையமும் பேரவையும் ஒன்றல்ல என்று சம்மந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள். தமிழ் சிவில் சமூக அமையத்தில் இந்து நிறுவனங்களின் ஊடாட்டம் குறைவு.

ஆனால் பேரவைக்குள் அப்படியல்ல. பேரவைக்குள் முக்கியஸ்தர்களாகக் காணப்படும் சிலர் தீவிர இந்துமத நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். கஜேந்திரகுமார் பேரவைக்குள் காணப்படுகின்றார். ஆனால் அதற்காக அவருடைய கட்சி நிலைப்பாடே பேரவையின் நிலைப்பாடும் அல்ல என்று காட்ட பேரவை முயற்சிக்கின்றது. விக்கினேஸ்வரன் தலைவராகக் காணப்படுகின்றார். ஆனால் அதற்காக பேரவைக்குள் வடமாகாண சபையும் அடங்கும் என்றும் கூறமுடியாது. விக்கினேஸ்வரனைப் போன்று சிந்திக்கும் பலர் கூட்டமைப்புக்குள் உண்டு. ஆனால் அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. ஏனெனில் கட்சிகள் சார்பாக ஒவ்வொருவரையும் சிவில் அமைப்புக்கள் சார்பாக ஒவ்வொருவரையும் இதில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அதனால்தான் கூட்டமைப்புக்குள் இருந்த ஏனைய அதிருப்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

எனவே மேற்கண்டவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் பேரவையானது தன்னை கட்சிசாரா ஒரு பொது இடை ஊடாட்டத் தளமாகவே காட்டிக்கொள்ள முற்படுகிறது. ஆனால் அவர்களுடைய எல்லாப் பிரயத்தனங்களையும் மீறி பேரவையானது ஒரு அணிக்கு எதிரான சேர்க்;கையாகவே பார்க்கப்படுகிறது. சம்மந்தன் ூ சுமந்திரன் அணிக்கு எதிரான ஒரு சேர்க்கையாகவே அது பார்க்கப்படுகின்றது. அது மெய்யாகவே ஒரு கட்சி சாராப் பொதுத் தளமாக வளர்ச்சிபெறுமா இல்லையா என்பது அதன் எதிர்கால நடவடிக்கைகளிலேயே தங்கியிருக்கிறது. ஆனால் தற்பொழுது அரங்கில் உள்ள கட்சிகளின் செயற்பாடுகளில் திருப்தியுறாத ஒரு போக்கின் விளைவே பேரவை எனலாம். யாழ்ப்பாணத்தில் வெளிவரும் இரண்டு பத்திரிகைகள் பேரவைக்கு ஆதரவாகக் காணப்படுகின்றன. ஒரு பத்திரிகை எதிராகக் காணப்படுகின்றது.

அதன் முதல் அமர்வில் பங்குபற்றியவர்களில் செயற்பாட்டாளர்களின் தொகை ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்பட்டது. ஏறக்குறைய தமிழ் சிவில் சமூக அமையத்தைப் போல எனலாம். தமிழ் சிவில் சமூக அமையத்திலும் செயற்பாட்டாளர்களின் தொகை ஒப்பீட்டளவில் குறைவு. அது கீழிருந்து மேல் நோக்கிக் கட்டி எழுப்பப்பட்ட ஒரு சிவில் அமைப்பு அல்ல. பெருமளவிற்கு மேலிருந்து கீழ் நோக்கி கட்டி எழுப்பப்பட்ட ஒரு பிரமுகர் சபைதான். அது உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் மனோகணேசன் யாழ்ப்பாணம் வந்திருந்தார். தானும் ஒரு பிரஜைகள் குழுவை மேல் மாகாணசபையில் அமைக்கப் போவதாகக் கூறினார். அப்பொழுது நான் அவரிடம் சொன்னேன் இது அதன் மெய்யான பொருளில் ஒரு பிரமுகர் சபையே என்று. ஆனால் அது அன்றைய காலகட்டத்தின் தேவையும் கூட. ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிக்காலத்தில் வெற்றிவாதத்தின் கீழ் அதற்கொரு பெறுமதியான பாத்திரம் இருந்தது. அந்நாட்களில் பிரமுகர்கள்தான் ஓரளவுக்குத் துணிச்சலாகப் பேச முடிந்தது. அவர்களுக்குத்தான் அவர்களுடைய பதவிநிலை காரணமாகவும் பிரபல்யம் காரணமாகவும் சமூகப் பெறுமானம் காரணமாகவும் ஒருவித பாதுகாப்பு இருந்தது. வன்னியில் இருந்து வந்தவர்களும் ஏற்கனவே அரசியலில் தீவிர நிலைப்பாட்டோடு இருந்தவர்களும் அரசியலில் அஞ்ஞாத வாசம் செய்த காலகட்டம் அது. வன்னியில் இருந்து வந்தவர்கள் அரசியல் கதைத்தால் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படாம் என்ற ஒரு அச்சம் அப்பொழுது நிலவியது. தாங்கமுடியாத தோல்வியினாலும் அவமானத்தினாலும் கூட்டுக்காயங்களினாலும் துவண்டுபோய்க் கிடந்த ஒரு சமூத்தின் மத்தியில் சிவில் சமூக அமையமானது துணிச்சலோடு அனைத்துலக சமூகத்திற்குக் கேட்கக்கக் கூடிய விதத்தில் தமிழ் மக்களின் நியாயங்களை உரத்துக் கூறியது. அந்நாட்களில் பிரமுகர்களாக இருந்தவர்களால்தான் அவ்வாறு பேசக் கூடியதாக இருந்தது. அதே சமயம் லலித், குகனைப் போன்றவர்கள் காணாமல் போகக் கூடிய ஒரு சூழலும் நிலவியது.எனவே அன்றைக்கு இருந்த பயங்கரமான சூழ்நிலையின் பின்னணியில் வைத்தே தமிழ் சிவில் சமூக அமையத்தின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ள வேண்டும்.

இது ஒரு விதத்தில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட உடனடுத்த காலகட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பெற்ற கவனிப்புக்கு நிகரானது. புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட உடனடுத்த காலப்பகுதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது ஏதோ ஒரு நம்பிக்கையை ஓரளவுக்காயினும் கட்டி எழுப்ப முற்பட்டது. ஆனால் பின்வந்த ஆண்டுகளில் காலத்தின் தேவைக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வதிலும் செயற்படுவதிலும் அந்த அமைப்பு போதிய வெற்றியைப் பெறத் தவறியது.

தமிழ் சிவில் சமூக அமையமும் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான ஒரு காலகட்டத்தில் அதிகம் கவனிப்புக்குரியதொன்றாக மேலெழுந்தது. இவ்வாண்டு ஜனவரி மாதம் ஆட்சி மாற்றத்தின் பின் சிவில் வெளி ஒப்பீட்டளவில் அதிகரித்தபொழுது அவ்வமைப்பானது தன்னை அதிகமதிகம் செயற்பாட்டு ஒழுக்கத்திற்குரியதாக தகவமைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் கொள்கைப் பிடிப்புள்ள ஒரு கருத்துருவாக்க சிவில் அமைப்பு என்பதற்கும் அப்பால் ஒரு செயற்பாட்டு இயக்கமாக அந்த அமைப்பால் வெற்றிபெற முடியவில்லை.

இத்தகையதொரு பின்னணியில் தமிழ் சிவில் சமூக அமையத்துள் அங்கம் வகிக்கும் பல சிவில் அமைப்புக்களும் இப்பொழுது தமிழ் மக்கள் பேரவைக்குள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆட்சி மாற்றத்தின் பின்னரான அதிகரித்துவரும் சிவில் ஜனநாயக வெளிக்குள் செயற்பாட்டு இயக்கங்களுக்கான தேவை அதிகரித்து வரும் ஒரு பின்னணியில் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சிவில் சமூக அமையத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக இதைக் கருதத் தேவையில்லை. ஆனால் ஏற்கனவே இருக்கின்ற கட்சிகள் சிவில் அமைப்புக்கள் போன்றவற்றின் போதாமைகளின் விளைவே பேரவை எனலாம். ஆயின் ஏற்கனவே இருக்கும் கட்சிகளும், அமைப்புக்களும் செய்யத் தவறிய ஏதோ ஒன்றை மக்கள் பேரவை செய்யப் போகிறதா?

அதன் முதலாவது அமர்வில் பங்குபற்றியவர்களில் பெரும்பாலானவர்களின் அரசியல் மற்றும் செயற்பாட்டு ஒழுக்கங்களை வைத்துக் கணித்தால் அந்த அமைப்பானது ஒரு செயற்பாட்டு இயக்கமாக மேலெழுவதற்குரிய அடிப்படைகள் பலவீனமாகவே காணப்படுகின்றன. அதேசமயம் தமிழ் சிவில் சமூக அமையத்தைப் போலவே பேரவையும் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கவல்ல ஓர் அமைப்பாக மேலெழுவதற்கான வாய்ப்புக்களே அதிகமாகத் தெரிகின்றன. ஆனால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் தன்னுள் கொண்டிருக்கும் ஓர் அமைப்பானது எப்படி அதே அரசியல் கட்சிகளுக்கு எதிராக அழுத்தத்தைப் பிரயோகிக்கப் போகிறது? அல்லது இதை வேறுவிதமாகக் கேட்டால் யாருக்கு எதிராக அழுத்தத்தைப் பிரயோகிக்கப் போகிறது? இக்கேள்விகளுக்கான விடைகள் யாவும் ஓரிடத்தையே வந்து சேரும். அதாவது சம்மந்தன் ூ சுமந்திரன் அணிக்கு எதிரான ஓர் அழுத்தப் பிரயோக அமைப்பாகவே பேரவை நடைமுறையில் செயற்பட வேண்டியவரும். ஆனால் இதை சில அரசியல்வாதிகளின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஒர் அமைப்பு என்று குறுக்கிக் கொள்வதை விடவும் அதைவிட பரந்தகன்ற கோட்பாட்டு தளத்தில் வளர்த்தெடுப்பதே தமிழ்மக்களின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை முக்கியமானது.

அதாவது ஈழத்தமிழர்கள் ஒரு தேசமாகச் சிந்திக்கவேண்டுமா? இல்லையா? என்ற கோட்பாட்டுத்தளமே அது. ஈழத்தமிழர்கள் ஒரு தேசமாகச் சிந்திக்கும் போதுதான் தமிழ்த்தேசியத்தின் அடிப்படைகளைப் பலப்படுத்த முடியும். தமிழ் மக்களை இலங்கை அரசாங்கமும் உலக சமூகமும் ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால்தான் பொருத்தமான ஒரு தன்னாட்சி அதிகாரக் கட்டமைப்பைப் பற்றி சிந்திக்கவும், உரையாடவும் முடியும். அப்படியொரு நிலைமை உருவானால்தான் ஒற்றையாட்சி கட்டமைப்புக்கு வெளியே சென்று அரசியல் அமைப்பை மீள வரைய முடியும். ஒற்றையாட்சிக்கு வெளியே சென்று சிந்தித்தால்தான்; இலங்கைத்தீவின் அரசியல் அமைப்பை ஆகக் கூடிய பட்சம் பல்லினத்தன்மைமிக்கதாக மீள வரைய முடியும். வரப்போகும் ஜனவரி 09 இல் இருந்து நாடாளுமன்றமானது அரசியல் அமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு பின்னணியில் தமிழ் மக்கள் ஒரு தேசமாகச் சிந்திப்பதற்குரிய அடிப்படைகளை பலப்படுத்தினால்தான் அரசியல் அமைப்பு நிர்ணய சபையை உரிய தயாரிப்புக்களோடு எதிர்கொள்ள முடியும். எனவே பேரவையின் தோற்றத்தை கூட்டமைப்பின் தலைமைக்கு எதிரானது என்று வியாக்கியானப்படுத்துவதை விடவும் ஒரு தேசமாகச் சிந்திப்பதற்குரிய ஒரு இடை ஊடாட்டத் தளத்தைக் கட்டி எழுப்பும் முயற்சி இது என்று பார்ப்பதே நல்லது.

அதேசமயம் கூட்டமைப்பின் தலைவர்களும் கொழும்பில் உள்ள சிங்களத் தலைவர்களும் உலக சமூகமும் இது விடயத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம் இருக்கிறது. தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்கள் தோன்றுவதற்கான ஒரு தேவை எப்பொழுதும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கிறது என்பதுதான் அது. இந்த அமைப்புக்கள் சில சமயம் பின்னாளில் காலாவதியாகக் கூடும். ஆனால் அந்த வெற்றிடத்தை வேறொரு புதிய அமைப்பு நிரப்பும். அதாவது தமிழ்தேசிய உணர்வு எனப்படுவது காலத்துக்குக் காலம் தன்னை ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும்.

– நிலாந்தன்

Up ↑