Search

Eelamaravar

Eelamaravar

Month

September 2015

என் மகள் பயங்கரவாதியா??ஆவணப்படம்.காணொளி

என் மகள் பயங்கரவாதியா?? ஆவணப்படம்.  My Daughter The Terrorist LTTE Documentary 2

Filmmaker Beate Arnestad with the mother of DarshikaMy Daughter The Terrorist LTTE Documentary

ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையில் காவியமான மாவீரர்களின் வீரவணக்கநாள்

கிளிநொச்சி படைத்தளம் தாக்கியழிக்கப்பட்ட ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையில் காவியமான 293 மாவீரர்களின்  ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

kilinochchi-unceasing-waves-2-lttes

27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது “ஓயாத அலைகள் 2” படை நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின்போது 2000 வரையான படையினர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் படுகாயமடைந்தனர். பெருமளவான போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், படை ஊர்திகள் என்பன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.

கிளிநொச்சிப் பகுதி சிறிலங்கா படைகளின் வல்வளைப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட “ஓயாத அலைகள் – 2” நடவடிக்கையின் வெற்றிக்காக 400 வரையான போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.

இவ்வெற்றிச் சமரில் முக்கிய பங்கேற்று ஊடறுப்பு அணி ஒன்றின் தலைவியாகச் சென்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் செல்வி, லெப்.கேணல் ஞானி போர்முனையில் தாம் நின்றிருந்த இடம் மீது செல் போடுங்கோ !!

எங்களைப் பார்க்க வேண்டம் எனக் கூறி எதிரிக்கு பேரழிவை ஏற்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தவர்கள் !!!!

 

திலீபனுடன் 12 நாட்கள் காணொளி

thileepan 12 days journeyதிலீபனுடன் 12 நாட்கள் காணொளி

தியாகதீபம் தீலிபனின் தியாகம் வீண் போகப் போவதில்லை

28 ஆண்டுகள் நிறைவடைகின்ற காலகட்டத்தில் தியாக தீபம் திலீபனது நினைவு நாளும், விட்டுச் சென்ற கனவுகளும் ஈழத்தமிழர்களது இதயங்களில் ஏதோ ஒரு வகையில் இன்றும் நெருப்பாய் எரிந்தவாறு உள்ளது. திலீபனது கனவுகள் நனவாகவில்லை. தமிழருக்கு விடிவு கிடைக்கவில்லை. திலீபனது ஐந்து கோரிக்கைகள் எவையும் நிறைவேறவில்லை.praba quotes thileepan

தமது இலட்சியப் பயணத்தில் இம்மியளவும் விலகாது உண்ணா நோன்பை மேற்கொண்டு 12 ஆவது நாளில் தனது இன்னுயிரை ஈகம் செய்த இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபனது உயிர்த்தியாகம் உன்னதமானது, மகத்துவமானது மனித குலத்தினால் போற்றப்படக் கூடியது.

1987 செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி இலட்சிய வெறியுடன் புறப்பட்ட தியாக தீபம் திலீபன் இந்திய அரசை நோக்கி ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரான் வீதியில் உண்ணா நோன்பு விரதத்தை ஆரம்பித்து செப்ரெம்பர் மாதம் 26 ஆம் திகதி முற்பகல் வேளையில் கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் தன்னுயிரை ஈகம் செய்தார். தியாக தீபம் திலீபனது 28 ஆவது ஆண்டு நினைவு நாளை தமிழினம் நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் நாள் இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட ஒப்பந்தம் ஈழத் தமிழர்களின் வாழ்வில் சீர் குலைவை ஏற்படுத்தியிருந்தது. ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் இந்தியா எப்போதும் தமிழினத்துக்கு அனுசரணையாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாது தமிழகத் தமிழ் மக்களும் கொண்டிருந்தனர்.இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இலங்கை அரசியலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதுடன், தமிழர்களின் போராட்டங்களும் பல்வேறு வடிவங்களை எட்டியது.

1987 ஆம் ஆண்டு மே மாதம் அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் மேற்கொள்ளப்பட்ட வடமராட்சி (லிபரேசன் ஒபரேசன்) நடவடிக்கையின் பின்னர் இந்தியாவின் அரசியல் தலையீடு இலங்கையில் தவிர்க்க முடியாததாகிவிட்டிருந்தது.விடுதலைப்புலிகள் அமைப்பை தனது வழிக்குள் கொண்டு வந்து, தமது காலடியில் வைத்திருக்க விரும்பியது இந்தியா.இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி சில உறுதிமொழிகளை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியிருந்தாலும் அவற்றை நிறைவேற்றவில்லை.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஈழத்தமிழர் சம்பந்தமான விடயங்கள் எதுவும் பெரிதாகக் குறிப்பிடவில்லை என்பதை விடுதலைப் புலிகள் அமைப்பு சுட்டிக் காட்டியிருந்தது.இந்தியா மூலமாகத் தமிழருக்கு விடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை தியாக தீபம் திலீபனின் சாவுடன் தமிழர்கள் மத்தியில் இருந்து அகன்று போனது.
திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி அன்று நல்லூர் வீதியில் நீர் கூட அருந்தாமல் உண்ணா நோன்பை ஆரம்பித்திருந்தார். இந்தியா மீது ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்புப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன் செப்ரெம்பர் மாதம்26 ஆம் திகதி வீரசுவர்க்கமடைந்தார்.

12 நாள்கள் வரை தான் முன்வைத்த கொள்கையில் வழுவாது உறுதி கொண்ட தூய்மைப் போராளி உண்ணா நோன்பு மேற்கொண்டபோது, இந்திய அரசு திலீபன் முன்வைத்திருந்த ஐந்து கோரிக்கைகளையும் இம்மியளவேனும் கவனத்திலெடுக்காது தனது கபடத்தனத்தை வெளிக் காட்டிக் கொண்டிருந்தது.

திலீபன் தான் முன்வைத்த ஐந்து கோரிக்கைகளில் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பு இருப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை. தமிழருக்குப் பாதகமான நடவடிக்கையை ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு தீவிரமாக மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதே அவரது பிரதான கோரிக்கையாக இருந்தது. திலீபனின் ஐந்து கோரிக்கைகளும் பின்வருமாறு அமைந்திருந்தன.

1. மீள் குடியமர்தல் என்ற போர்வையில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக நடைமுறைப்படுத்தப்படும் குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
2. சிறைக் கூடங்களில் இராணுவப் பொலிஸ் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுவிக்கப்பட வேண்டும்.
3. அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்.
4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.
5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக நிறுவப்படும் பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.

இந்த ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து அகிம்சை வழியில் நின்று உயரிய இலட்சியத்துடன் போராடி உயிர் நீத்த திலீபன் ஒரு வரலாற்று நாயகனாவார். அவர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நல்லூர் வீதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு வந்து இணைந்து கொண்டனர். மக்கள் ஆதரவுடன் தியாகதீபம் திலீபன் தனது உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்த வேளையில் இந்திய அரசு திலீபனது ஐந்து கோரிக்கைகள் மீது அக்கறை கொள்ளவேயில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களைப் பறித்தெடுப்பதில் இருந்த வேகம் திலீபன் முன்வைத்த கோரிக்கைகள் மீது இருக்கவேயில்லை.

திலீபனின் உண்ணாவிரதத்தை தோற்கடிப்பதிலும், தடுப்பதிலும் இந்திய அமைதிப்படை முழு மூச்சாகச் செயற்பட்டது. ஆனால் அதைத் தடுக்க முடியவில்லை.காந்தி தேசம் எனப் புகழ்பாடும் இந்தியா திலீபனின் அகிம்சைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி தவறான போராட்டம் என தப்புக் கணக்குப் போட்டது. இந்திய தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் உண்ணாவிரதப் போராட்டம் எந்த வகையில் குறைந்தது என எண்ணிய இந்தியா, காந்தி நீர் அருந்தித்தானே நோன்பிருந்தார். திலீபன் நீர் குடிக்காதது காந்திய வழியா? எனக்கூறி அவமானப்படுத்தியது.

இந்திய தேசம் திலீபனது உண்ணா விரதப் போராட்டத்தின் இறுதி நாள்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்ற வேளையில் திலீபனின் அறப் போரைக் கண்டு கொள்ளாது சாவடையட்டும் என நாள்களை எண்ணிக் கொண்டிருந்தது.உலகத்துக்கே அகிம்சையை போதித்ததாகப் பறைசாற்றும் இந்தியாவைப் பின்பற்றி அதே அகிம்சையை ஆயுதமாக வைத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என விடுதலைப்புலிகள் நம்பினர்.

இந்த நம்பிக்கையுடன்தான் தமிழர்களுடைய அடிப்படைப் பிரச்சிகைளைத் தீர்ப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைமையின் கட்டளைக்கமைவாக செயல் வடிவம் கொடுப்பதற்கு முன்னின்ற போராளியாக தியாக தீபம் திலீபன் முன்வந்தமையானது மக்களின் விடிவுக்கான போராட்டத்தில் தனக்கும் ஒரு முக்கிய பங்கு இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துக் காட்டியது.

யாழ்ப்பாணம் ஊரெழுவை சொந்த இடமாகக் கொண்ட திலீபன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்காக தமது சொந்த வாழ்க்கையையே இளவயதில் தூக்கி எறிந்து விட்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டவன். மருத்துவ பீடத்துக்குத் தெரிவாகிய நிலையில் அதனை நிராகரித்து மக்களின் விடுதலைப் போராட்டத்தில் இரண்டறக் கலந்து கொண்டு அணிவகுத்து நின்றவன்.

1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி பிறந்த திலீபன் தனது 24 ஆவது வயதில் உண்ணா நோன்பைக் கடைப்பிடித்தார். தியாகம் என்றால் திலீபன். திலீபன் என்றால் தியாகம் என்று கூறுகின்ற அளவுக்கு திலீபன் மேற்கொண்ட போராட்டம் அதி உச்சமானது, உன்னதமானது. வார்த்தைகளால் வடிக்க முடியாதது. என்றென்றும் திலீபனின் தியாகம் வீண்போய் விடக்கூடாது.

ஆயிரம் ஆயிரம் மக்கள் நல்லூரான் வீதியில் நடக்கின்றபோது, 12 நாள் நடந்த யாகத்தில் ஆகுதியான திலீபனின் நாமத்தை உச்சரிக்கின்றபோது, அந்தப் பன்னிரண்டு நாள் வரையில் இந்தியாவின் ஏமாற்றுத்தனத்தையும், முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப்போரின்போது இந்தியா இலங்கை அரசுக்குச் செய்த பேருதவிகளையும், தமிழினத்தை அழிப்பதற்கு உறுதுணையாக இருந்ததையும் நினைக்கும் போது இரத்தக் கண்ணீரைத் தான் வடிக்க முடியும்.

– மூனாத்தானா-[ உதயன் ]

*

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் தியாகி திலீபன் நினைவு நாள் இன்று[ வலம்புரி]

மக்கள் புரட்சி வெடிக்கட் டும்…! சுதந்திர தமிழீழம் மல ரட்டும்…!! என முழக்கமிட்டு நல்லூரில் உண்ணா நோன்பில் இருந்தான் அந்த மாவீரன். 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாய மான நேர்மையான ஐந்து அம்சகோ ரிக்கைகளை முன்வைத்து 15. 09.1987 தொடக்கம் சாகும் வரை உண்ணாவிரதம் மேற் கொண்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்.பிராந்திய அரசி யல்துறைப் பொறுப்பாளர் திலீ பன் உண்ணா விரதப் போராட் டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணி த்தியாலங்களை முடித்துக் கொண்ட வேளையில் 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தினான்.

ஈழத் தமிழ் மக்கள் சார்பி லான கோரிக்கைகளை 13-09- 1987 அன்று இந்தியா உயர் ஸ்தானிகரின் கையில் நேரடியாகக் கிடைக்கக்கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் கொடு த்திருந்தார்கள் ஆனால் 15-09-1987 வரை எந்தப் பதிலும் தூதுவரிடமிருந்து கிடைக்காத காரணத்தினால் சாகும்வரை உண் ணாவிரதமும் மறியல் போராட்ட மும் நடத்துவதேயென தமிழீழ விடு தலைப் புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் 13-09-1987 அன்று தீர்மானிக்கப் பட்டது. அதன்படிதான் திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பித்தது.

1.பயங்கரவாதத் தடைச் சட்டத் தின் கீழ் இன்னும் தடுப்புக் காவ லில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
2.புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3.இடைக்கால அரசு நிறுவப் படும் வரை “புனர்வாழ்வு\” என்று அழைக்கப்படும் சகல வேலைக ளும் நிறுத்தப்பட வேண்டும்.
4.வடக்கு – கிழக்கு மாகாணங் களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத் தப்பட வேண்டும்.
5.இந்தியா அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும் பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள் பாடசாலைகள்

ஆகியவற்றில் குடி கொண்டுள்ள இராணுவ பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும். என்ற ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணா விரதத்தை ஆரம்பித்தார்.

வல்லாதிக்க அரசுகளின் மௌ னத்தால் பதினொரு நாட்கள் பார்த்தீபனின் வேட்கை தொடர்ந் தது, பதினோராவது நாள் உயிரு டன் இருக்கிறாரா இறந்து விட் டாரா என்றே தெரியாத அளவுக்கு இருந்தார் திலீபன். அனிச்சையாக அவரது உடல் அசைவதன் மூலமே அவர் இன்னும் தோழர். திலீபன் உயிருடன் இருக்கிறார் என்று தெரிந்தது. அவர் கோமா நிலை யில் இருந்தார். பெரிய கட்டில் ஒன்றை கொண்டுவந்து அதில் அவரை மாற்றினார்கள்.அப்போது தான் அவர் படுக்கையிலேயே சிறுநீர் கழித்திருந்ததை பார்த்தார்கள். திலீபனுக்கு வேறு உடை மாற்றி னார்கள். “ஓ மரணித்த வீரனே! உன் ஆயுதங்களை எனக்குத் தா. உன் சீருடைகளை எனக்குத் தா ” என்ற பாடல் ஒலிக்கிறது அந்த பாடலைக் கேட்டுக் கொண்டே கோமாவில் விழுந்தார்.

அந்த இரவு அழுதுகொண்டே விடிந்தது. தொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பரு க்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் சரியாக காலை 10.58 இற்கு வீர மரணம் அடைந்தான். அதிகாரத் துவம் அவனை சாகவிட்டுவிட்டது. ஆனால் அதுவே பெரும் கிளர்ச்சி யாக உருவெடுத்தது. மீண்டும் அந்த மக்களை ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு வழி வகுத்தது. திலீபனின் மரணம் மனிதநேயம் தழைக்கும் இடத்தில்தான் அகிம்சை வெல்லும் உலகுக்கு உணர்த்தியது.

என்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக் கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார் பட்டுவிட்டதை என் கண்கள் பார்க் கின்றன. நான் திருப்தி அடைகி றேன். இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன். ஆனால், நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழ வைத் துக் கொண்டுள்ளது. நான் நேசி த்த தமிழீழ மண் ணில் வாழ் கின்ற ஒவ்வொரு மக்க ளும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயா ராக வேண் டும். நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான். நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன்.

ஆனால் பெரும் பணியை உங் களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல் லாவற்றிலும் மேலாக என் தலை வன் பிரபாகரன் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரண மாகக் கிளர்ந்தெழவேண்டும். மாபெரும் மக்கள் புரட்சி வெடிக் கட்டும்! இப் புரட்சி நாள் என்னு யிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும். எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப்போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும். என தனது இறுதி உரையில் கூறுகின்றான் காந்திய தேசத்திற்கு அகிம்சையை கற்பி த்த பார்த்தீபன்.

அவன் வார்த்தைகள் இன் றும் உலகை சுடுகின்றன. தனது இனத்துக்கு நீதி வேண்டி பன்னிர ண்டு நாட்கள் உணவின்றி உயிர் துறந்துள்ளான். இந்த மாபெரும் தியா கம் வேறு எங்காவது இந்த உல கின் மூலையில் நடந்துள்ளதோ? சற்று நில் தமிழினமே உனது வரலாற்றை உன் பெருமையை அறிந்து செல்! எங்களிலும் இப் படியொருவன் இருந்துள்ளான். நாங்கள் திலீபனின் பரம்பரை. இளைஞர் சமுதாயமே உன்வய தில் தான் அவனும் உயிர் துறந் தான். இதை உணர்ந்து செயற் படு. திலீபன் மட்டுமல்ல ஆயிரமா யிரம் போராளிகள் உனக்காக உயிர் துறந்து கனவுகளுடன் காத் திருக்கிறார்கள்.

தியாக தீபம் திலீபன் , கேணல் சங்கர் வீரவணக்கம்

Thileepan-Shankar

வரலாற்று நாயகன் தியாகி திலீபன்

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் தமிழீழம் மலரட்டும்”praba quotes thileepan

இது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு தனித்துவமான நாயகனாகத் தடம்பதித்து நடைபயின்ற தியாகி திலீபன் தனது உண்ணாநோன்புப் போராட்டத்தின் மூன்றாம் நாளில் அங்கு கூடியிருந்த பல்லாயிரம் மக்களின் முன்பு உரையாற்றி முடித்தபோது வெளியிட்ட இறுதி வரிகள். இவை வெறும் வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட வண்ண வரிகளல்ல! ஆவேசத்தில் பொங்கிய அடுக்குத் தொடருமல்ல.

இதய நாளங்களில் இரண்டற ஊறிக்கிடந்த உணர்வுப் பிழம்பிலிருந்து தெறித்த நெருப்புச் சரங்கள்! ஒவ்வொரு வினாடியும் சிறிது சிறிதாக உயிர் உருகிக்கொண்டிருந்தபோதும் இரும்பாய்ச் செறிந்துவிட்ட இலட்சிய உறுதியின் கொந்தளிப்பின் இடியோசைகள். எம்மைப் பாதுகாப்பது என்ற பேரில் அந்த மண்ணில் கால் பதித்த இந்தியா எம்மை அழிக்க வாளை ஓங்கியபோது தடுத்து உடைக்க எழுந்த உணர்ச்சிக் கனல்!

நல்லூர் வீதியில் ஒலித்த அந்த வார்த்தைகள் ஒவ்வொரு தமிழரினதும் உணர்வில் கலந்து இதயநாதமாகியது. விடுதலை காண எதையும் விலைகொடுக்கும் உணர்வாய் மாறி எமது உள்ளங்களை நிறைத்தது.

1987 செட்டெம்பர் 15 அன்று மாலைதான் அன்னையொருத்தி பொட்டிட்டு ஆசி வழங்க திலீபன் நல்லூர் ஆலய வீதியில் அமைக்கப்பட்ட மேடையில் ஏறி தனது உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆரம்பித்தான். ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தான். அவன் மலையைப் புரட்டவேண்டும் எனக் கேட்கவுமில்லை? கடலைக் குடைந்து அமுதம் தரும்படி கேட்கவும் இல்லை. அவன் கேட்டதெல்லாம் போர் நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி ஜே.ஆர். ஜெயவர்த்தனா நயவஞ்சகமான முறையில் எமது மண்ணை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும்படி கேட்டான். புனர்வாழ்வு என்ற பேரில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதையும் பாதுகாப்பு என்ற பேரில் புதிய பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படுவதையும் நிறுத்தும்படிதான் கேட்டான். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்ட நிலையில் சிங்கள ஊர்காவற்படையின் ஆயுதங்களைக் களையும் படி கேட்டான். அரசியல் கைதிகளை விடுவிக்கும்படி கேட்டான்.

இந்தியா காதில் வாங்க மறுத்தது? இலங்கை தனது ஆக்கிரமிப்பை தொடர்ந்தது. திலீபனின் உண்ணா நோன்புப் போராட்டம் வெடித்தது.

நாட்கள் ஒவ்வொன்றாக நகர்ந்தன. மெல்ல உடல் தளர ஆரம்பித்து. எனினும் மூன்றாம் நாள் மக்களுக்குத் தனது உரையை வழங்குகிறான்.

தானும் தன் முன்னால் வீரச்சாவடைந்த போராளிகளும் வானத்திலிருந்து மலரப்போகும் தமிழீழத்தைக் காண்போம் என்கிறான்.

நாட்கள் நகர நகர மரணம் அவனை நெருங்கிக்கொண்டிருக்கிறது,
இந்திய இராணுவ அதிகாரிகள் வந்து ஆசை வாரத்தை காட்டுகிறார்கள். அசைந்துகொடுக்கவில்லை திலீபன். மிரட்டிப் பார்க்கிறார்கள் அஞ்சிவிடவில்லை திலீபன். இந்திய வானொலி மூலம் பொய்களைப் பரப்புகின்றனர். பொருட்படுத்தவில்லை திலீபன்.

தலைவர் பிரபாகரன் மேடைக்கு வருகிறார். வாஞ்சையுடன் தம்பி திலீபனின் தலையை வருடுகிறார். “நீ முன்னால் போ. நான் பின்னால் வருகிறேன்” என வாழ்த்துகிறார் தலைவர். திலீபன் ஒரு புன்னகையால் தன் தலைவனின் கட்டளையை ஏற்கிறான். 10ம் நாள் மாலை வீரமகன் நினைவிழக்கிறான். மெல்ல மெல்ல அவன் ஹோமா நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

26 செப்டெம்பர் 1987 பன்னிரண்டாம் நாள் தியாகி திலீபனின் உயிர் பிரிகிறது. வடபகுதி முழுவதுமே நல்லூரில் திரண்டுவிட்டது போல் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில ஒருவனை இழந்துவிட்டதாக வேதனையில் துடிக்கின்றனர். அன்னையரின் அலறலும் கன்னியரின் விம்மலும் வானைப் பிளக்கிறது. ஆண்களின் கண்ணீர் வீதியில் வெள்ளமாகப் பாய்ந்து மண்ணை நனைக்கிறது. ஒட்டுமொத்த மக்களின் கோபம் காற்றையே அனல் கக்க வைக்கிறது.

எங்கும் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகள் திலீபனின் தியாக நெருப்பில் தோய்ந்து இந்திய வஞ்சனையை வீதி வீதியாகப் போட்டு மிதிக்கின்றன.

தமிழ் மக்களுக்காக உயிரைக் கொடுத்த அவன் தமிழ் மாணவர்களுக்காகத் தன் உடலையும் கொடுக்கிறான்.

ஆம்! அவன் விருப்பப்படியே அவனின் உடல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கு வழங்கப்படுகிறது.

அவன் வாழ்ந்தபோதும் தியாகி! அவனின் செத்த வித்துடலும்கூட ஒரு தியாகக் கொடையாக வரலாறு படைத்தது.

உயிரையும் உடலையும் தன் தாயக மண்ணுக்கும் தாயக மக்களுக்கும் தந்துவிட்டு என்றும் வாழும் இறவாப் பேறு பெற்றான் திலீபன்!

ஆனால் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காகப் படையிறக்குவதாகச் சொல்லி இலங்கையில் கால் பதித்த இந்தியா ஜே.ஆர். செய்த இன ஒடுக்குமுறைக் கொடூரத்தைத் தானே பெறுப்பேற்று தன்னை அம்பலப்படுத்தியது. காந்தி தேசம் என்று மார்தட்டும் பாரதம் காந்தீய வழியில் நியாயம் கோரியபோது அதற்குக் காதுகொடுக்க மறந்து ஒரு மாவீரனை அணுவணுவாகச் சாகவிட்டு மாறாத அவமானத்தைத் தேடிக்கொண்டது. தமிழ் மக்களின் தாயக விடுதலை வேட்கைக்கு எதிராக 1987 ஒக்டோபர் 10ல் போர்ப்பிரகடனம் செய்தது இந்தியா.

உலகிலேயே முதல் முதலாக ஒரு உழைப்பாளி மக்கள் அரசியல் அதிகாரம் சோவியத் யூனியனில் உருவான அந்தப் புனிதமான ஒக்டோபர் 10 இந்தியப் பிராந்திய வல்லரசுக் கனவால் கறைப்படுத்தப்பட்டது. தமிழர் தாயகத்தின் பெருநகரங்களிலிருந்து தொலை தூரக் கிராமங்கள் வரை இந்தியப் படைமுகாம்கள் நியமிக்கப்பட்டன. எங்கும் சோதனைச் சாவடிகள் அடிக்கடி சுற்றிவளைப்புகள், முகமூடியணிந்த தலையாட்டிகளின் காட்டிக்கொடுப்புகள், காரணமற்ற கைதுகள், சொல்லொணாக் கொடுமையான சித்திர வதைகள், சிறையிடல்கள், பரந்து செறிந்த படுகொலைகள் எனப் பாரதத்தின் ஆக்கிரமிப்பில் எமது குருதி வழிந்துகொண்டிருந்தது.

செக்மென்ற் ஒன்று, இரண்டு, மூன்று, எனப் பெரும் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டும் எடுத்த இலக்கை எட்டமுடியாமல் பெருந்தோல்வியுடன் அவமானம் சுமந்து இந்தியப்படை வெளியேறியது.

அன்று ஆயுத ஆக்கிரமிப்புப் போரில் விடுதலைப் புலிகளை வெல்லமுடியாத இந்தியா இன்றுவரை தமிழ்மக்களுக்கு எதிராக ராஜதந்திரப் போரை தொடர்கிறது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போர் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவை எனச் சகல களங்களிலும் இந்திய அரசு தமிழ் மக்களைக் கழுத்தறுக்கும் வகையில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. ஆனால் தமிழ் தலைவர்களில் ஒரு சிலர் இந்தியாவே தஞ்சம் என அடிவருடி அவர்களின் வஞ்சக நாணயக் கயிற்றில் ஆடி எமது உரிமைப்போராட்டத்தைப் பலவீனப்படுத்தி வருகின்றனர். எமக்கு இந்தியா தீர்வு பெற்றுத் தரும் என்ற மாயையை உருவாக்கி எமது மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

அவர்கள் தியாகி திலீபனை மறந்துவிட்டார்கள் என்பதே உண்மை! அவர்கள் அவனின் உயிர்க்கொடையின் மேன்மையை நினைக்கவில்லை என்றுதான் அர்த்தம். ஆனால் வரலாற்று நாயகன் திலீபன் எமது மக்களின் உணர்வில் கலந்துவிட்டவன். எமது விடுதலை வேட்கைக்கு எண்ணெயாக ஊடுவி ஒளியேற்றும் கருவி அவன். அவன் என்றும் எம்மில் கலந்திருப்பான்.

-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்

தியாக தீபம் திலீபன் நினைவாக-தேசியத் தலைவர்

praba quotes thileepan

  • ஈடு இணையற்ற ஒரு மகத்தான சாதனையை திலீபன் புரிந்தான்
  • திலீபனின் தியாகம் இந்தியமாயையைக் கலைத்தது. தமிழீழதேசிய உணர்வைத் தட்டியெழுப்பியது. இந்தத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.

தமிழீழ தேசியத் தலைவர்-மேதகு வே.பிரபாகரன்

வெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலிகளின் முக்கிய தளபதி, போராளிகள் ?

LTTE leader with Tiger commanders and officials, paying homage to the fallen Black Tigers on the attack on Sri Lankan Vanni SF HQ.வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும்.

1.ஆதவன்

2.அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),

3.அம்பி ( செயற்பாடு தெரியாது)

4.அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),

5.ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)

6.பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்),

7.பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ),

8.V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )

9.Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)

10.பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )

11.பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )

12.பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)

13.பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),

14.பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )

15.பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்களை பராமரித்தவர்)

16.பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)

17.பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )

18.Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)

19.எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )

20.எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )

21.வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )

22.கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)

23.கரிகரன் ( செயற்பாடு தெரியாது)

24.இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )

25.இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)

26.இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)

27.இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )

28.இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)

29.இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)

30.இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )

31.இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)

32.இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)

33.இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)

34.இசைபிரியா ( ஊடக பிரிவு)

35.ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)

36.ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )

37.காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)

38.கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)

39.கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)

40.கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)

41கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )

42.கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)

43.கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)

44.குயிலன் ( இராணுவ புலனாய்வு)

45.குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)

46.குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)

47.குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)

48.லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )

49.மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )

50.மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )

51.மலரவன் (நிர்வாக சேவை )

52.மனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி)

53.மணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி)

54.மாது ( திருகோணமலை இராணுவ பிரிவு )

55.மிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி )

56.மோகன் அங்கிள் (கடற்புலிகள் )

57.முகிலன் (இராணுவ புலனாய்வு)

58.முகுந்தன்/ஐந்து ஒன்பது=code ( வட போர் முனையில் தீபனின் பிரதி )

59.நடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்)

60.நாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் )

61.நளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி )

62.நளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு )

63.நேயன் (புலனாய்வு)

64.நீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை )

65.நிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய் )

66.நிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்தார்)

67.நிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் )

68.பஞ்சன் புலனாய்வு (மகாதேவன் ஞானகரன்) (முக்கியஸ்தர்களில் ஒருவர் )

69.பரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்)

70.Dr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு)

71.Lt.Col.பிரபா (புலனாய்வு பிரிவு)

72.பூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு)

73.பூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)

74.பிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி)

75.புலித்தேவன் (சமாதான செயலகம்)

76.புலிமைந்தன் (யோகியின் சாரதி)

77.புரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க )

78.புரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு)

79.ரூபன் ( ஏற்பாடுகள் பொறுப்பாளர்)

80.ராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி )

81.ராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை)

82.புதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்)

83.Col.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை)

84.Col.ரமேஸ்(சிரேஷ்ட இராணுவ தளபதி)

85.ரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்)

86.ரஜித்தன் (மணலாறு மாவட்டம் )

87.ரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்)

88.S.தங்கன் (சுதா ) சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி)

89.சக்தி (வனப் பிரிவு ஒரின்கினைப்பாளர்)

90.சத்யன் ( வளப் பாதுகாப்பாளர்)

91.செல்வராசா (யாழ் மாவட்ட தளபதி )

92.சிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்)

93.சின்னவன் (புலனாய்வு)

94.சித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி)

95.Lt.Col.சுடரவன் (இராணுவ புலனாய்வு)

96.Lt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு)

97.திலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்)

98.திலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் )

99.துவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்)

100.வாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது)

101.வீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்)

102.Lt.Col.வைதி (இராணுவ புலனாய்வு)

103.Lt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு)

104.வேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான் பாண்டியன் படை அணி)

105.வேல்மாறன் (கேணல் பிரபாவின் பாதுகாப்பாளர்)

106.வினிதா (நடேசனின் மனைவி )

107.வீமன் (கட்டளை தளபதி)

108.விபுலேந்திரன் (நிதிப் பிரிவு)

109.யோகன் / சேமணன் (அரசியல் துறை)

110.யோகி (முரண்பாட்டு ஆய்வு நிறுவன பொறுப்பாளர்)

வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் தாக்குதல் வீரவணக்க நாள்

இந்த தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் 10 கரும்புலி மாவீரர்கள் வீரச்சாவடைந்து வீரகாவியம் படைத்துள்ளனர்.

Up ↑