Search

Eelamaravar

Eelamaravar

Month

June 2015

Writings of Tamil Tiger Women

ltte women motorbikeTranslations of some of the writings of iyakkam women —Writings of Tamil Tiger Women Iyakkam

I will wait …

by Samarvili(In “Velichcham” Pearl issue marking 25 years of publication, 2001. Note: Kin in this poem refers to fellow comrades.)

Midnight…
Vultures surrounded the village.
Dozing villagers sacrificed to the demon.
My eyes blinded in anger.
A silent war within me.
Have I not been called a terrorist?
Do I not have Tamil Eelam blood?
I joined the list of the disappeared.
My name in hand-cuffs
Together with our departed kin
I will wait for freedom.

***

காத்திருப்பு

-சமர்விழி (வெளிச்சம் பவழ இதழ், 2001)

நள்ளிரவில்
வல்லூறுகளின் சுவடுகள்
கிராமத்தை வளைத்தன
ஒருகணம் கண்ணயர
நரபலி எடுப்போன்
மனிதர்களை காயப்படுத்தினான்.
என் விழிகளும் குருடாகின.
ஆன்மாவை இறுகப்பொத்தி
சில நிமிடங்கள்
என்னில் மௌனப்போர்
பயங்கரவாதத்தின் சாயம்
எனக்கும் பூசப்பட்டதல்லவா
என்னில் ஓடுவது
கலப்பற்ற தமிழீழ இரத்தமல்லவா
மறுநாள்
காணாமல் போன
எனது பெயரும்
விலங்கிடப்பட்ட எனது கையும்
விடுதலைக்காய் காத்திருக்கும்
பிரிந்த உறவுகளுடன் இணைந்து.

Tamiltigerwomen.com/

எம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய போராளிகள்…

ஆழக்கடலில் கரைந்த மாவீரங்கள்

சமாதான காலத்தில் சிறீலங்கா கடற்படையினரின் யுத்த நிறுத்த மீறலால் சர்வதேசக் கடற்பரப்பில் 14.06.2003ம் ஆண்டு அன்று விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டபோது ஆழக்கடலில் கரைந்த உறவுகள்….

M.T-Soysin ltte ship

எம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய போராளிகள்…

international sea lttes

கப்பல் கப்டன் நிர்மலன்
சீவ் ஒவிசர் கதிர்
2ம் ஒவிசர் வீரமணி
3ம் ஒவிசர் கன்னியநாடன்
றேடியோ ஒவிசர் கஜேந்திரன்
சீவ் எஞ்சினியர் அன்புக்குமரன்
2ம் எஞ்சினியர் கடற்கரும்புலி வள்ளுவன்
3ம் எஞ்சினியர் கடற்கரும்புலி நிமால்
எலக்ரிக் எஞ்சினியர் வீரநாதன்
போஸன் கடற்கரும்புலி மணியரசன்
ஏபிள் சீமன் செழியன்
நாட்டுப்பற்றாளர் மோகன்

மாமனிதர் பேராசிரியர் துரைராசா வீரவணக்க நாள்

இறந்தும் இறவா மாமனிதர் – பேராசிரியர் அ. துரைராஜா

Mamanithar Alagiah Thurairajah

இறந்தும் இறவா மாமனிதர் பேராசிரியர் அ. துரைராஜா ஆம் நீங்கள் வாசிப்பது நிஜம்தான் இறந்தும் இறவா மாமனிதர் என்ற அடைமொழி கற்பனையாக இருந்தாலும் அவ் அடைமொழி பேராசிரியர் அ.துரைராஜாவின் பெயரின் முன்னால் இருக்கும்போது அது உயிரோட்டமாகவே இருக்கின்றது. அவ்வாறான மாமனிதரை இன்றைய அவரது நினைவு தினத்தில் நினைவு கூறுவது சாலப்பொருத்தமாக இருக்கும்.

பேராசிரியர் துரைராஜா 1934 ஆம் ஆண்டு பெரும் தலைவர்களை உலகுக்கு வழங்கி பெருமைபட்டுக் கொள்ளும் கார்த்திகை மாதம் 10 ஆம் திகதி வேலுப்பிள்ளை அழகையாவுக்கும்,செல்லமாவுக்கும் மகனாக யாழ்ப்பாணத்தின் மூளை என்றழைக்கபடும் வடமராட்சி பிரதேசத்தில் உடுப்பிட்டியில் அவதரித்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலும், பின் தனது உயர்கல்வியை பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியிலும் பயின்றிருந்தார்.

பேராசிரியர் அவர்கள் உயர்தரத்தில் கணித பிரிவில் முதல் மாணவனாக 1953 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவானார். அன்றைய காலகட்டத்தில் கொழும்பில் இயங்கிய இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடத்தில் குடிசார் பொறியற் கற்கைநெறியை 1957 ஆம் ஆண்டு நிறைவு செய்து விஞ்ஞானப்பட்டம் பெற்றார். அதன் பின்னர் மேற்படி பல்கலைக்கழகத்திலேயே 1958 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை குடிசார் பொறியியல் விரிவுரையாளராக கடமையாற்றினார்.

பின்னர் 4 மாதங்கள் பொதுச்சேவை திணக்களத்தின் இளம் உதவி பொறியலாளராக பணிபுரிந்தார். தொடர்ந்து ‘கேம்ப்ரிச்’ பல்கலைக்கழகத்துக்கு ‘ஸ்கொலர்ஷிப்பில்’ சென்ற பேராசிரியர் Kenneth H. Roscoe அவர்களின் கீழ் ஆராய்ச்சி மாணவனாக அக்டோபர் 1958 இலிருந்து 1961 டிசம்பர் வரை மணல்துறை சார்ந்த ஆராய்ச்சிகளுக்காக பணியாற்றியிருந்தார்.

இவ் ஆராய்ச்சிகளின் பயனாக ‘துரை விதி’ எனும் மணல்துறை சார்ந்த விதியொன்றை நிறுவினார். இன்றும் குடிசார் பொறியியலில் கற்பிக்கப்படும் Cam- clay locus ஆனது துரை விதியிலிருந்தே பெறப்படுகின்றது. இறுதியாக 1962ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது பி‌எச்‌டி பட்டத்தை நிறைவு செய்திருந்தார்.

பின் சிறிது காலம் பிரித்தானிய கம்பெனியான ‘Terreasearch’ என்ற நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பி இலங்கை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து கொண்டார். அதன் பின் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் 1971 ஆம் ஆண்டு பேராசிரியராக இணைந்து கொண்டார்.Mamanithar Prof.Alagiah Thurairajah

பேராதனை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இணைந்துகொள்ள முன்னர் ‘வாட்டர்லூ’ பல்கலைக்கழகத்தின் வருகைதரும் விரிவுரையாளரகாவும் இருந்துள்ளார்.பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடத்தின் பீடாதிபதியாகவும் மே 1975 தொடக்கம் செப்டெம்பர் 1977 வரையும், பெப்ரவரி 1982 தொடக்கம் பெப்ரவரி 1985 வரையான இருவேறுபட்ட காலங்களில் பணியாற்றியுள்ளார்.

மேலும் பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைகழகத்தின் வருகை தரு விரிவுரையாளராகவும் அக்டோபர் 1977 முதல் டிசம்பர் 1978 வரை பணியாற்றியுள்ளார். அதன் பின் இலங்கை திறந்த பல்கலைக்கழக பொறியியற்பீடத்தின் பீடாதிபதியாக ஏப்ரல் 1987 முதல் ஆகஸ்ட் 1988 வரை பணியாற்றினார்.

அதன் பின் 1988 செப்டெம்பர் மாதம் போர்ச்சூழல் காரணமாக எவரும் வரத்தயங்கிய தருணம் துணிச்சலுடன் யாழ் பலகலைக்கழகத்தின் துணைவேந்தராக, ‘பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு’ யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கபடும் என்ற கொடுத்திருந்த வாக்குறுதியுடன் பதவியேற்றுக்கொண்டார்.

ஆனாலும் பேராசிரியரின் கனவு 36 வருடங்களின் பின்பே இவ்வருடம் மாசி மாதம் கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீட அங்குரார்ப்பண நிகழ்வுடன் பூர்த்தியாகியுள்ளது. பேராசிரியர் அவர்கள் 1994 ஆம் ஆண்டு கொடிய நோயின் பிடியில் அகப்படும் வரைக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக அளப்பெரும் சேவை புரிந்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலம் தனது .வதிவிடமான வடமராட்சியின் வதிரி பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு வல்லை வெளியினூடாக போர் மேகங்கள் சூழ்ந்திருந்த காலங்களில் 30 ற்கும் மேற்பட்ட கிலோமீட்டர்கள் தூரத்தை மீதி வண்டியினூடே பயணித்திருந்தார் .

பேராசிரியர் அவர்கள் பேராதனை பல்கலைக்கழத்தில் இருந்த காலத்திலேயே தற்போது காணப்படும் அக்பர் பாலம் நிர்மாணிக்கபட்டது. இப்பாலம் சிங்கள பேராசிரியர் ஒருவர் விட்ட சவாலை ஏற்று மகாவலிகங்கைக்கு குறுக்கே ஒரேயொரு தூணை எழுப்பி பேராசிரியரின் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டது. மேலும் பேராசிரியர் நினைவாக பேராசிரியர் துரைராஜா கிண்ணம் எனும் சுற்றுபோட்டி வருடாவருடம் பேராதனை, கொழும்பு, மொரட்டுவ பல்கலைகழகங்களுக்கிடையில் இன்றும் இடம்பெற்றுவருகிறது.

சிறந்த ஒழுக்க சீலராகவும், பழகுவதற்கு இனிமையானவரான பேராசிரியர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்திருந்தார். மேலும் பேராசிரியர் துரைராஜாவின் மாணவன் என்றால் அதற்கு ஒரு தனிமதிப்பு இன்றும் உள்ளது. தமிழர்கள் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக பேரளவு உதவிகளை இக்கட்டான காலகட்டத்தில் செய்ததால்தான் பேராசிரியர் இன்று மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

90 களில் யாழ்ப்பாணம் பொருளாதார சிக்கலில் தவித்திருந்த பொழுது, எல்லாத்தரத்திலான எல்லா வகையிலான கல்வியாளர்களையும் தொழில் நுட்பவியலாளர்களையும் தொழிலாளர்களையும் நிர்வாகிகளையும் சிவில் சமூகவியலாளர்களையும் ஒன்றிணைத்து பொருளாதார அபிவிருத்திக்கான எதிர்கால திட்டமிடலை மேற்கொண்டிருந்தார்.

தமிழர் நல்ல கல்வியைப் பெறவேண்டும் என்பதற்காக பல்கலைக்கழக கல்வி முறையில் தொழிலாளர் கல்வி வெளியார் கற்கைபோன்றவற்றை அறிமுகப்படுத்தி யாழ்ப்பாண சமூகத்தை பல்கலைக் கழகம் வரைகொண்டு வந்தவர். வடக்குக் கிழக்கு தமிழர்களில் பெரும்பான்மையானோர் விவசாயிகளாக இருப்பதால் விவசாய பீடத்தை கிளிநொச்சியில் நிறுவினார்.

பேராசிரியர் மணவாழ்க்கையில் ராஜேஸ்வரியை கரம்பிடித்து இல்வாழ்க்கையின் பேறாக தம்பதியினருக்கு 3 மகள்களும் 2 மகனும் உள்ளனர். நல்ல மனிதர்களை இவ்வுலகம் நீண்ட நாட்கள் தன்னுடன் வைத்திருப்பதில்லை போலும் பேராசிரியரை இன்றையநாளில் இருபது வருடங்களுக்கு முன் தன்னுடன் 1994ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி அழைத்துகொண்டது.

பேராசிரியர் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம்,. இலங்கை சிவில் பொறியிலாளர்கள் அமைப்பு, தேசிய விஞ்ஞான அக்கடமி என்பவற்றின் தலைவராகவும் இருந்து அளப்பெரும் சேவைகள் ஆற்றியுள்ளார்.

1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற அனர்த்தங்களில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி முற்றிலுமாக சிதைவடைந்திருந்தபோது, வெளிநாடுகள் சென்று கல்லூரியின் நிலையினை எடுத்துரைத்து அங்குள்ள பழையமாணவர்களை ஒன்று திரட்டி நிதி சேகரித்து இன்றைய உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி நிமிர்ந்து நிற்பதற்கு பேராசிரியரே துணை புரிந்தார்.

இன்றும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் நூலகம் அமைந்த கட்டிடதொகுதி பேராசிரியரின் பெயராலேயே பேராசிரியர் துரைராஜா கட்டிடதொகுதி என்றே அழைக்கபடுகிறது.

முருகவேல் சண்முகன்

 

 

லெப்.கேணல் அம்மா (அன்பு)

Lt.Col.Amma

முல்லை மாவட்டம் சுதந்திரபுரம் – வள்ளிபுனம் கிராமங்களில் 10.06.1998 அன்று சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட வான் குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வழங்கற் பகுதிப் பொறுப்பாளர் லெப். கேணல் அம்மா / அன்பு உட்பட ஏனைய போராளிகளின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் அன்பு / அம்மா அவர்களின் வீரப்பிறப்பும் வீரவரலாறும்…..

வீரம் விளையும் தமிழீழ மண்ணில் திருநெல்வேலி நகரிலே வைத்திலிங்கம் நாகம்மா தம்பதிகளின் ஆறாவது புதல்வனாக 1965.09.03ம் நாளன்று அம்மா என்றழைக்கப்படும் வைத்திலிங்கம் திருக்கேதீஸ்வரன் வீரப்பிறப்பெடுத்தான். இவனை வீட்டாரும் உற்றாரும் “ரவி” என்று செல்லமாக அழைப்பார்கள், தனது ஆரம்ப கல்வியை திருநெல்வேலியில் அமைந்திருந்த பரமேஸ்வராக் கல்லூரியில் உயர் கல்வியை யாழ். மத்திய கல்லூரியிலும் கற்றான். இவன் சிறந்த பண்பாளனாகவும் பணியாளனாகவும் விளங்கினான். கல்லூரியின் சாரணர் இயக்கமும் இவனை நெறிப்படுத்தியது. அத்துடன் இவன் ஒரு பல் தொழினுட்ப வல்லுனனாகவும் விளங்கினான்.

1986ம் ஆண்டளவில் ஈழ விழுதளைப் பணிகளில் ஈடுபட்டு 1986ம் ஆண்டு தனது இருபத்தோராவது வயதிலே தன்னை முழுமையாகப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டான். தமிழீழத்தில் சாவகச்சேரியில் நடைபெற்ற முதலாவது பயிற்சிப் பாசறையில் தனது போர்ப்பயிற்சியினை முடித்துக் கொண்ட இவன் அவ்வாண்டிலேயே தேசியத் தலைவரையும் சந்தித்தான்.

போராட்ட ஆரம்ப காலங்களில் நாவற்ற்குழிப் பகுதியில் சிறிலங்கா இராவுவத்தினருடனான மோதல்களில் பங்காற்றியதுடன், உணவு வழங்கலிலும், போர் ஆளணி ஒழுங்குபடுத்துவதிலும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டான். பின்னர் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு இடம்பெற்ற காலத்தில் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற தாக்குதல்களிலும் கலந்து கொண்டான். அக்காலப்பகுதியில் தமிழ்ச்செல்வன் அண்ணையுடன் இவனும் சக போராளிகளும் இணைந்து யாழ்ப்பணத்தில் இருந்த எம்மக்களையும் போராளிகளையும் வன்னியில் இருந் எமது தேசியத் தலைவருடன் இணைக்கும் தொடர்புப்பாலமாய் செயற்பட்டார்கள். இந்திய இராணுவ வெளியேற்றத்திற்கு இச் செயற்பாடுகள் ஒரு காரணமுமாய் அமைந்திருந்தது. இரண்டாம் ஈழப்போர் ஆரம்பித்த வேளையில் பலாலி இராணுவத் தளத்தில் முன்னணிப் போர் நிலைகளுள் ஒன்றான “வண் வ்ண்” நிலையில் நின்று சிறப்பாக பணியாற்றினான்.

அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரத்தினாவால் தீபாவளி நாளன்று தொடக்கி வைக்கப்பட்ட பலாலி இராணுவத்தின் ஆக்கிரமிப்பான “ஒப்பரேசன் ஜெயசக்தி” நடவடிக்கைக்கு எதிரான போரில் தீவிரமாகப் போராடி காலில் விழுப்புண் அடைந்தான். பின்னர் யாழ் மாவட்டத் துணைத் தளபதியாகவும் ஆவண ஆயுதக் காப்புப் பணிகளிலும் பொறுப்பாகச் செயற்பட்டான். அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத் தளபதியாக அம்மா விளங்கினான். அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி தொடங்கப்பட்ட வேளையில் இவன் அதிகாரிகள் பயிற்சியும் பெற்றிருந்தான் யாழ் மாவட்ட தளபதியாக இருந்த காலத்தில் நடந்த பல சமர்களில் துணிச்சலுடன் பங்காற்றி வெற்றிகள் பலவற்றை விடுதலைப் புலிகளுக்குப் பெற்றுத் தந்தான். பலாலி கிழக்குப் புறமான காவலரண்கள் மீதான தாக்குதலில் சிறப்பாக பங்காற்றி கையில் விழுப்புண் அடைந்தான் இத்தாக்குதலில் தனது உற்ற நண்பர்களான மேஜர் டொச்சனையும் கப்டன் வீமனையும் சக போராளிகள் சிலரையும் இழந்தான்.

1994ம் ஆண்டில் வழங்கல் பகுதிப் பொறுப்பாக நியமிக்கப்பட்டான். வன்னி மண்ணில் குறிப்பாக முல்லைப் படைத்தள வெற்றி தொடக்கம் ஜயசிக்குறூய் (ஜெயசிக்குறூய்) ஓராண்டு வெற்றி விழா நாளிற்கும் மேலாக வழங்கல் பணி இவனால் திறமையாக மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கைக்கு வழங்கல் பகுதி போராளிகளும் பணியாளர்களும் தமது கடின உழைப்பினை வழங்கியிருந்தனர். இதற்கான பாராட்டினை தமிழீழத் தேசியத் தலைவரிடமிருந்து பெற்றிருந்தான் அதுமட்டுமன்றி தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இறுதிவரை செயற்பட்டு வந்தமை குறிபிடத்தக்கது.

தனது இதயத்தின் ஒகு மூலையில் தன்னை நேசித்தருக்கு இடம் கொடுத்திருந்த அம்மா என்ற பெரு வீரனின் இருதிவீர வரலாற்று வரிகள் அவனது உதிரத்தால் வழங்கலின் மையத்தில் 1998.06.10ம் நாளன்று எழுதப்பட்டத்து.

நினைவுபகிர்வு:- வே. கடலரசன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதித்துறை,தமிழீழம்.

PDF-லெப்.கேணல் அம்மா (அன்பு)

லெப். கேணல் டேவிட்

கடலில் கலந்த….. டேவிட்……

தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்துவிட்ட தென்றல்.

விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன்காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில் ஒருவன்.

தமிழீழத்தின் விடுதலைப் போராட்டம், எல்லாக் காலங்களிலும், கடல் பிரயாணங்களை முதன்மைப் படுத்துவதாக அமைந்தது. எத்திசையும் கடலால் சூழப்பட்ட எம்தாயகத்தின், தாக்கமுள்ள நகர்வுகள் கடல் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது விடுதலைப் போராட்டத்தில், கடல் பயணங்கள் பிடித்திருந்த இடத்தின், அதே அளவு இடத்தை, எமது கடல் சரித்திரத்தில் டேவிட் பிடித்திருந்தான்.

அவனது இளமையிலேயே கடல் அவனை அழைத்தது. அவது குடும்பநிலை அவனை கடலுக்கு அனுப்பியது.

”இயக்கம் கடலிலும் பிரயாணம் செய்ய வேண்டிவரும்” என்ரகாலம் போய், ”இயக்கத்தின் பியானம் கடலில்தான்” என்று வந்துவிட்ட 83ல், இயக்கத்திற்க்காய் கடலில் இறங்கினான்.

தமிழீழத்தின் ஒவ்வொரு கரையிலும் கால் பதித்தான். நீண்ட பெரும் கடற்பரப்பு, கடற்பரப்பில் புள்ளியாய் நகரும் படகு, படகினைப் போல் பலமடங்கு விரிந்து , எழுந்து, விழுங்கவரும் அலைகள். சமுத்திர ராட்சதனின் அலைவாய் மூடமுதல், விரைந்து , தத்திப்பாய்ந்து வெளியேறி, திரும்பிப்பார்க்கும் லாவசம். திரும்பிப்பார்வை நேரே நோக்க அடுத்த பெரும் அலை.

படகினை பலமடங்கு வேகத்துடன் துரத்தி உமிழும் பீரங்கிவாய்கள். அவற்றின் பல்முக நகர்வுகளிலும் தப்பி, தத்திச் செல்லும் வேகம். பின்னால் வரும் எதிரியின் கை அதிகமாய் நெருங்கின், நின்று – நிதானித்து இயந்திரத்துப்பாக்கியை இயக்க ஆணையிடும் உறுதி , அந்தக் கணத்தில் எதிரி அடையும் அதிர்ட்சி டேவிட்டை பல தடவைகள் கரை சேர்த்துள்ளது.

அவனது கடல் பயணங்கள் மெய்சிலிர்க்கும் பல அனுபவங்களைக் கொண்டது. அவனது ஆசான்களும், நல்ல நண்பர்களும் கடலிலேயே கலந்து விட்டனர். அப்போதெல்லாம் கூட, அவன் கடலில் நிலைத்துநின்றான். அவனது தப்பியோடும் லாவகமும், தேவையின் பொது எதிர்த்து நின்று எதிர்கொள்ளும் நெஞ்சுறுதியுமே அவனை நிற்கவைத்தது.

இன்று இயக்கத்தின் வசமுள்ள பெருமளவு ஆயுதங்களுக்கு டேவிட்டைத் தெரியும்.

ஆம்…! அவை எமது கைகளுக்கு கிடைப்பதற்கு கிடையில் டேவிட் இருந்திருப்பான்.

அனேகமாக எப்போதுமே நாம் கரையில் காணும் டேவிட்டைக் கடலில் சந்திக்கமுடியாது. ஒருங்கிணைந்த சிந்தையுடன், தன்னை நம்பி படகில் ஏறிய ”நீந்தத் தெரியாத சுமைகளுக்கு” உத்தரவிடும் டேவிட், கடுமையான வசைகளால் ஓட்டிமாரை கட்டுப்படுத்தும் மாலுமி. கடலில் டேவிட்டை, டேவிட்டாகப் பார்ப்பது கடினம்.

எப்போதாவது மிக அபூர்வமாக, சீரான, நேவியில்லாத, ஒதுக்குப்புறக்கடலில், நல்ல நிலவும் சேர்ந்தால் அவனது படகு நிற்கும். இயந்திரச் சத்தத்தை மேவி அவன் குரல் ஒலிக்கும், ”கடல் மேல் பிறக்கவைத்தான்….” அவனது குரல் இனிய சங்கீதம் இல்லைத்தான், ஆனாலும் அவன் பாடினால் நின்று, நிதானித்துக் கேட்கவைக்கும் வசீகரம். அந்த வசீகரம் அவனது குரலுக்கா…? அல்லது அவன் பாடும் பாடல்களுக்கா…?

அவனது குரலில்; பாடல் கம்பீரம் பெறுவதும் தெரியும். அந்தக் குரலுக்கு, அவன் தெரிவு செய்யும் பாடல்களை விட, வேறுபாடல் எடுபடாதென்பதும் புரியும்.

அவனைத் தெரிந்த, அவனுடைய பழகாத எல்லோராலும் கூறப்படும், எண்ணப்படும், எண்ண வடிவங்களுக்கு அபபர்ப்பட்ட போராளி. அநேக போராளிகளைப் போல் அவனுக்கும் ”பழஞ்சோறு குழைத்துக்கையில கொடுக்கும் அம்மா” ”ஆமியின் வெடி கேட்டும் சிறுபற்றை சரசரக்காமல் தேத்தண்ணி செம்புடன் அண்ணனை , அண்ணனின் தோழர்களை தேடும் தங்கைகள்.” வீட்டின் நிலையை எண்ணுவதா? நாடா? என்ற கேள்விக்கு எப்போதுமே குழப்பமிலாத பதிலைத் தன்வசம் வைத்திருந்த போராளி. மிக நெருக்கமான நண்பர்களிடம் மட்டும் ” தங்கச்சியவை ” என்று கூறிக் கண்கலங்கும் அண்ணன்.

எப்பேற்பட்ட வேலையாக இருந்தாலும் அவ் வேலையின் முக்கியத்துவம் விளங்கவைக்கப்பட்டால் , அந்த வேலையை செய்து முடிக்கும்வரை அவன் ஓய்வதும் அபூர்வம். அவனது நினைவுகள் மீட்டப்படும் பொது திரும்பத்திரும்ப அவனது அக்குணநலனே எவருக்கும் முன்னிற்கும்.

தமிழீழத்தின் கடற்பரப்பில் மட்டுமல்ல, தமிழீழத்தின் தரைப்போர் வாழ்க்கையிலும் அவன் சாத்த்தவை அதிகம். அதிலும் வடமராட்சியில் நடைபெற்ற அநேகமான சண்டைகளில் அவனது சுவடுகள் பதிந்திருந்தன.

இந்திய இராணுவத்திற்கு முந்தைய போர்வாழ்வில், ஒப்பரேஷன் லிபறேசனுக்கு முன்பும் பின்பும் வடமராட்சியில் அவன் பங்கு அதிகம்.
ஒப்பரேஷன் லிபறேசனுகென ஆமி புறப்பட்டதிலிருந்து, நெல்லியடி முகாமிற்குள் மில்லர் புகுந்தது வரை அவன் ஓயவில்லை.

இந்திய இராணுவ யுத்தம் ஆரம்பித்த காலத்தில் தமிழ்நாட்டில் தங்கியிருந்தவன். யுத்தம் ஆரம்பித்து , கொழுந்துவிட்ட நேரத்தில் தள்ளியிருக்கமுடியாமல், ஒரு கட்டுமரத்தில் வந்து சேர்ந்தான். இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் வடமராட்சியில் இயக்கத்தை உயிர்த்துடிப்புடன் வைத்திருந்ததில், அவன் ப[அங்கு மிகப் பெரியது.

அனேகமாக இயக்கத்தின் எல்லாத் துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்தவன். அரசியல்? அவன் அரசியல் வித்தகன் இல்லைத்தான் எனினும் , தான் ஏந்திய துப்பாக்கி எதற்காக என்பதில் குழப்பமில்லாதவன். மக்களுடன் பழகும் போதினில் அந்த மக்களில் ஒருவனாக நின்று சிந்திக்கத் தெரிந்தவன்.

எல்லாத் தலைமறைவுக்கால வாழ்க்கையிலும், மக்களால் பாதுகாக்கப்பட்டவன். டேவிட் நின்றால் ஆமி பார்த்துச் சொல்வதற்க்கென ஒரு முதியோர் படையே திரளும்.

அவன் உலவும் ஊர்களில் சிறுகுழந்தைக்கும் அறிமுகமாகிவிடும் முகராசி. சிறுவர்களை ஒரு தடவை சந்தித்தால், மறுதடவை சந்திக்கும்போது அவர்களை பெயர் சொல்லி அழைக்கும் நட்புணர்வு அல்லது அவர்கள் வெட்கத்தில் முகம் சிவக்க இவன் ஒரு பெயர் வைத்திருப்பான். சிறுவர்கள் என்றல்ல எவருடனுமே நட்பைப் பேணுவதில் தனித்துவமானவன், பழைய நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் தனிமையான ஆர்வமுள்ளவன்.

எப்போதோ ஒருமுறை ”வண்டி விடப்பட்ட கரையில்” லாம்பு வெளிட்சத்தில் சாப்பாடு கொடுத்தவரை யாழ்ப்பாணத்தில் கண்டு ”என்னைத் தெரியேல்லையே, கலுவன் கேணியில றால் கரியோட புட்டு சாப்பிட்டனாங்கள் எல்லே” என்று கேட்டு அசத்துவான்.

பழைய நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்தால், மறந்துவிட்ட திரும்பக் கிடைக்காத நினைவுகளை மீட்டுவது டேவிட்தான். இவனது நட்பைப் பேணும் பண்பால் பலராலும் விரும்பபட்டவன். சிலவேளைகளில் வேலை நேரங்களிலும் ”நட்பைப் பேணப்போய்” வாங்கிக்கட்டிக் கொண்டு தலையைச் சொறிவான்.

இயக்கம் மிக அரிதாகச் சந்தித்த ”எல்லா வேலைகளிலும் வல்லுனர்களாக விளங்கக்கூடிய” சிலரில் டேவிட் ஒருவன். ஆனால் கடல் என்பது ”பெரிய கடலாக” இருந்தது. அதில் இயக்கத்தின் கடற்பிரிவு மிகச்சிறியதாக இருந்ததால் அவனால் கடலை விட்டுவிட்டு வரமுடியவில்லை. அவனது குறைந்த பாடசாலைக் கல்வியின் போதும்கூட பெரிய திட்டமிடல் திறன் இருந்தது. அது புரிந்தவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

அவனது எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் அவனுக்கு களம் கிடைக்கவில்லை. கடல் அவனை மறித்துவைத்திருந்தது.

ஒரு மிக முக்கிய கடற்பயணம் , தவை பெரியது, டேவிட் தேவையான ஒழுங்குகளை வழமைபோல் சரிபார்க்கிறான். கடல் தெரிந்தவர்கள் கடலில் ஓடத்தயங்கும் காலநிலை, ஆனாலும் பிரயாணம் அவசியமானதாகவும் , ஒத்திவைக்க முடியாததாகவும் இருந்தது.

கடலைத் தவிர எல்லாமே வழமைபோலத்தான். வழமையான தடபுடல் வேகமான பிக்கப்….. , பெரிய நம்பிக்கை விதையை நெஞ்சில் விதைத்துவிட்டு டேவிட் ஆயத்தமாகிறான். வழமையாக ஓடித்திரியும் நேவியையும் காணவில்லை. எல்லாமே நம்பிக்கையுடன் இருக்கிறது. வண்டி புறப்படும் , அதுவும் டேவிட் நேரில் புறப்படும் காரணம் சொல்லப்படாவிட்டாலும், வழமைபோலவே ஊகித்துக் கொண்டு வழியனுப்புகிறார்கள். டேவிட்டை அன்புடன் வளர்த்துப் பாதுகாத்த மக்கள் அவனுடன் மிக அன்பாகப் பழகியவர்களில் நல்லாய்க் கடல் தெரிந்தவர்கள் அன்று கரைக்கு வரவேயில்லை…..

படகு நீரில் இறங்கியது ”குழந்தைப்பிள்ளையைக் கையிலே பிடித்துக் கூட்டிச் செல்லும் வாஞ்சையுடன்” இரு கரையிலும் ஆட்கள் வரிசையாய் நின்று , படகினை கடலுக்குள் இழுத்துச் செல்கிறார்கள். இடுப்பளவு தண்ணீரில் இறங்கிய பின்னர், அணியத்தில் நின்ற அரி தடியால் ஊன்ற படகு தள்ளாடி, நகர, அண்ணார்ந்து நின்ற இயந்திரவால்கள் தண்ணீரில் குளிக்க, எல்லாம் வழமைபோலவே.

”நல்லாய் செவிச்போட்ட இயந்திரம் ஒரு இழுவையில் ஸ்ராட் வர” இருட்டில் நின்ற தோழர்களும், மக்களும் வண்டியில் நின்றவர்களுக்கு ”தெரியாது என்று தெரிந்தும்” கையை உயர்த்தி மேல அசைகிறார்கள். வண்டியில் நின்றவர்களும் கையசைத்திருப்பார்கள்….?

ஒரு இயந்தியம் கொஞ்சத்தூரம் ஓடிப்போய் நின்று தயாராகையில், ”துணியில் பொத்தி ரோச்லைட் அடிப்பதும்” தெரிகிறது.

அல்பா , அல்பா…..

என்னமாதிரி….?

பிரச்சினையில்லை குதிரைக்கு சாப்பாடு கொடுக்கினம்…..

கரிகாலனின் பதில் வோக்கியில் கேட்கிறது.

பின் ஒவ்வொரு இயந்திரமாக சத்தமிட படகு நகராமலேயே இயந்திர சத்தம் அதிகரித்து குறைந்தது , மிக அதிகரித்து , தணிவது கேட்கிறது.

படகு வழமைபோல் வலப்புறமாய் வட்டமிட்டு, நிழலாய் நகர்கிறது. ”எப்போதும் போல், ‘தேவையும் கடலும் தவிர‘ மற்ற எல்லாம் வழமைபோல்”

நீரைக்கிழித்து , வெண்நுரை கிளப்ப, அலையில் எழும்பிப்பாய்ந்தது….. படகு புறப்பட்டுவிட்டது. அதிகரித்த சத்தமும். கரையில் கூடிய கூட்டமும், சிறிது சிறிதாய் மறைய, கடல் தெரியாதவர்களின் திருப்திப் பெருமூச்சுடன் ” கலந்தபோது, ”வண்டி வெளிகிட்டு விட்டது.”

இயந்திர சத்தம் கரைவடஹ்ர்க்கு முன்னரே கரையிலுள்ள வோக்கி.

அல்பா…… அல்பா….. என அழைத்தது.

“தண்ணியடிக்குது தானே வோக்கியை அது தான் லோக் ரியூப்பிலை வைத்திட்டினம் போல” எனக் கூறிவிட்டு , முயற்சியைக் கைவிடும் போதும் கூட, இயந்திர சத்தம் கேட்டுக்கொண்டுதானிருக்கிறது.

நேரம் கரைய, முகாமுக்குத் திரும்ப நினைக்கும் வேளையில், துரத்து முகாம் வோக்கியில் ஒரு அவசர அழைப்பு. “வோக்கியில் அல்பா தொடர்பெடுத்து…..”

“என்னவாம்”…..

“கிளியரில்லை, சரியாக விளங்கேல்லை பிறபோ…… பிறபோ…… என்று அவியல் கூப்பிட்டமாதிரியிருந்தது…..

“சொல்லு”….

“போட்வெடித்திட்டு, வண்டி அனுப்புங்கோ, ஏன்டா மாதிரிக் கிடந்தது. அவையளின்ர கிளியரில்லை, ஒண்டும் விளங்கேல்லை”……

“ஆர் கதைச்சது….”

“டேவிட் அண்ணை மாதிரித்தான் கிடந்தது, ஒண்டும் விளங்கேல்லை …..”

அடுத்த படகினை ஆயத்தம் செய்தவேளை , இயந்திரம் எடுக்க பிக்க[ விரைந்த வேளை , உறுதியற்ற வோக்கிச் செய்தியை நம்புவதா , இல்லையா என்று யோசித்தவேளை , நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. அலை விரித்துக் கொண்டிருந்தது.

”சன்னதம் கொண்டு நின்றது கடல். தேடபோகும் படகினை, தேடப்போகவென மற்றப் படகை, தயாராக வைக்க, வைக்கும் கடல்…!

நேரம் செல்லச்செல்ல “வேக்கிச் செய்தி பிரமையோ ?” எனநினைக்க வைக்கும், வெறுமையுடன் காத்திருக்கும் வேளையில், தேடப்போன படகின் வோக்கி அழைக்கிறது.

அரியைக்கண்டிட்டம் , தூரத்தின் இன்னொமொரு ஆள் தெரியுது….

என்னமாதிரி….. என்னமாதிரி என்ற வோக்கிக்கு பதில் சொல்லாமல் தேடும் படகு கரைநோக்கி வர. ” படகில் அரியுடன் ரட்ணா ”

”என்ன நடந்தது ? ”

”போட பிரிஞ்சிட்டுது , நடுவாலை முறிஞ்சு அணியம்தனிய , கடயார்தனிய ரெண்டாகப் போச்சு”

”மற்றாக்கள் என்ன மாதிரி ? டேவிட் அண்ணை என்ன மாதிரி ? ”

”இருட்டுக்குள் எல்லோரையும் கூபிட்டு டேவிட் அண்ணை ஒன்றாக்கினவர் , எல்லோரையும் நீந்தச்சொல்லிவிட்டுப்போட்டு , அவர் கரிகாலனைக் கூப்பிட்டு தன்னட்டை எடுத்தவர்.

முழுவிடயங்களையும் சொல்லமுடியாது அறியும் – ரட்னாவும் மயங்கிவிட்டார்கள்.

மீட்க்கப்பட்ட இருவரும் உப்பு நீரால் உதடுகள் வெடித்து., முகம் புண்ணாக்கி,” கோலம் கெட்டுப்போய் ” இருந்தார்கள்,

படகுகள் போயின , வந்தன. செய்தி கேள்விப்பட்ட சனமெல்லாம் கரைமுழுக்கக் கூடி நின்று தேடினர். படகுகளின் தேடுதலுக்கு மேலாக, டேவிட்டின் திறமையில் எல்லோரும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

”முதலும் இரண்டு நாள் கடலுக்கு கிடந்தது, வந்து சேர்ந்தவன் தானே”

”மன்னாரிலை ஒருக்கா இரண்டு பொம்பிளைப் பிள்ளையளைத், தனியக் கொண்டுவந்து சேர்த்தவனெல்லெ”

டேவிட்டின் நீச்சல் திறமையில் எலோருக்கும் நம்பிக்கை இருந்தது.

”உந்த மட்டு மட்டு நீச்சல் பொடியல் வந்து சேர்ந்திட்டாங்களாம் டேவிட் ஏன் வரமாட்டான் ?”

எல்லோரும் நம்பிக்கையுடன் காத்திருந்த போதும் , அறி வைத்தியசாலியில் கூறிக்கொண்டிருந்தான்.” எங்களை நீந்தச்சொல்லிப்போட்டு கரிகாலனைத் தான், இழுத்துக் கொண்டு நீண்டவர்”

படகில் சென்றவர்களில் ”கடலுடன் கொஞ்சமும் பரிச்சயம் இல்லாத , நீச்சல் தெரியாதவன்” கரிகாலன் மட்டும் தான்.

எல்லோரும் நம்பிக்கையுடன் இருந்த போதும், அரியையும் – ரட்னாவையும் தவிர வேறு எவரும் வரவில்லை…..

கரிகாலன் வரவில்லை…..

டேவிட்டும் வரவில்லை …..

டேவிட் பங்குகொண்ட தாக்குதல்கள்…

* 1985ம் ஆண்டு மன்னார் போலிஸ் நிலையத்தாக்குதல் நடைபெற்றபோது, தாக்குதற் குழுவை படகில் ஏற்றி மறுகரைக்கு (மன்னார் தீவுக்குள்) கொண்டு சேர்க்கும் கடற்புலிகள் குழுவின் உதவிப்பொறுப்பாளராக இருந்தார். படகில் சென்று பாதுகாப்பாக இறங்குவதே தாக்குதலின் முதல் வெற்றி எனக் கருதப்பட்டது. இத்தாக்குதல் முடிந்த பின்பு அப்போதைய மன்னார்த் தளபதி லெப் கேணல் விக்ரர் அவர்களார் டேவிட் பாராட்டப்பட்டார்.

* 1987ம் ஆண்டில் ஆனையிறவு முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சிறிலங்கா இராணுவம் முன்னேற முயன்றபோது கிட்டு அண்ணா தலைமைதாங்கிய தாக்குதலின் பொது வீரமரணமடைந்த லெப் அங்கிளின் குழுவில் ஒருவராக சண்டை செய்து தோளில் காயமடைந்தார்.

* 1987ம் ஆண்டு யாழ் தொலைத்தொடர்பு நிலையத்தாக்குதலில் (8 இராணுவத்தினரைக் கைது செய்தபோது) ”50 கலிபர்” குழு ஒன்றுடன் சென்று சண்டையில் ஈடுபட்டார்.

* 1989க் ஆண்டு நெல்லியடியில் இந்திய இராணுவக் காவலரண் மீதான தாக்குதலின் போது அத்தாகுதற் குழுவின் இரண்டாவது பொறுப்பாளராகச் சென்றார்.

* 1990ம் ஆண்டு வடமராட்சிக் கடலில் சிறிலங்காக் கடற்படையின் தாய்க்கப்பல் மீது நடாத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் (கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ்) நடவடிக்கையினை தலைமை தாங்கியவர் இவரே.

நினைவுப்பகிர்வு:- ச.பொட்டு
(புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர், தமிழீழ விடுதலைப்புலிகள்)
விடுதலைப்புலிகள் (ஐப்பசி, கார்த்திகை 1991) இதழிலிருந்து தேசக்காற்று.

லெப். கேணல் சரிதா

மாவீரர்கள் காலத்தால் அழியாத சிரச்சீவிகள் சுதந்திர சிற்பிகள் தங்களது அழிவின் மூலம் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்கள்.

மன்னார் பாலம்பிட்டிக் களமுனை மிகக் கடுமையாகவும் ஆக்ரோசமகவும் இருந்தது. ஸ்ரீலங்கா படைகளின் எறிகணைகள் மழைபோல் பொழிந்த வண்ணம் இருந்தன கொத்துக்குண்டுகளுக்கும் குறைவில்லை. எங்கும் புற்றீசல்கள் போல படையினர் சளைத்திடாத தமிழீழத்தின் மகளிர் படையணியான . மேஜர் சோதிய படையணி பொருத்திக்கொண்டு இருந்தது. பெண்களை இளக்கமாக நினைத்த ஸ்ரீலங்கா படைகளுக்கு அண்ணனின் புலித்தங்கைகள் சரியான படம் புகட்டிக்கொண்டு இருந்தார்கள் . குறைந்த அளவு பெண்போராளிகள் பலநூறு இராணுவத்துடன் போர்புரிந்துகொண்டு இருந்தார்கள். நேரம் சென்றுகொண்டு இருந்தது படைகளுக்கு சாதகமாக மாறிக்கொண்டு இருந்தது .

அக்கா!… அல்பா பகுதியை உடைச்சுக்கொண்டு ஆமி வந்துட்டான்.
இது ஒரு பெண் போராளியின் குரல்.

நேரம் நண்பகல் பதினோரு மணியாக இருந்தது.

எத்தனை நிலை (பொசிசன் ) உடைச்சிட்டான் ?…
எவ்வளவவு ஆமி இருக்கும் ?…
இது அந்த மகளிர் கட்டளை தளபதியின் குரல் …

ஒரு … 60 – 70 பேர் இருக்கும் அக்கா.

நீங்கள் எத்தனை பேர் ?….

என்னுடன் 3 பேர் அக்கா ஒரு பிரச்சனையும் இல்லை வலப்பக்கமும் இடப்பக்கமும் உடைக்க விடாமல் மற்ற பிள்ளைகள் சண்டை பிடிக்கினம்.

நீங்கள் 3 பேரும் உள்ளுக்குள் வர விடாமல் சண்டை பிடியுங்கோ. இப்ப ஒரு அணியை உங்களுக்கு உதவிக்கு அனுப்புகிறேன். அப்படியே சண்டை பிடியுங்கோ நாங்கள் உள்ளுக்கு வந்தவனை பொக்ஸ் அடிச்சு (பெட்டி வடிவ வியூகம்) ஒருத்தனையும் தப்பவிடாமல் கொல்லுவம் என்றாள். அந்த பெண் தளபதி சிறிதும் பதட்டம் இன்றி.

உதவிக்கு அனுப்பப்பட்ட அணி சென்று சேரும் போது 2 பெண் போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள் ஒரு போராளி மட்டுமே போரிட்டுக்கொண்டு இருந்தாள். களமுனை மிகக்கடுமையாக இருந்தது . இப்போது இராணுவமும் அதிக தூரம் போராளிகளின் நிலைகளுக்குள் வந்து விட்டான். நிலைமை கை மீறிக்கொண்டிருந்தது. அந்த நேரம் உதவி அணியும் வரவில்லை.

உடனடியாக வெவ்வேறு நிலைகளில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட சிறிய அணியுடன் முறியடிப்பு சமரில் இறங்கினாள்.

சோதியா படையணியின் தாக்குதல் தளபதி லெப் கேணல் சரிதா /தர்மா ஸ்ரீலங்கா படைகளின் அத்தனை ஆயுதங்களும் பெண் போராளிகளின் மன உறுதியின் முன் மௌனிக்க ஆரம்பித்தன சீற்றத்துடன் புறப்பட்ட சிங்கங்கள் தமிழ் பெண்புலிகளின் முன் மண்டியிடத் தொடங்கின. இன்னும் ஒரு காவலரண் தான் மீளக்கைப்பற்ற வேண்டி இருந்தது . சண்டை தொடர்ந்தது அந்நேரம்.

அந்த நிகழ்வு நடந்தது தர்மாவை எதிரியின் குண்டுச் சிதறல்கள் மிகப்பலமாக தாக்கியதில் தர்மா தூக்கி வீசப்பட்டாள்.

சில நிமிடங்களில் களமுனையில் சிங்களவனின் கை ஓங்கியது. ஆனால் அது அதிக நேரம் நீடிக்கவில்லை தர்மாவின் கட்டளை புலியின் உறுமலாய் ஒலித்தது அந்த உறுமல் ஒலித்த வேகத்தில் பெண்புலிகள் பாய்ந்து சென்றனர். ஓலமிட்டபடி சிங்கங்கள் கால் தெறிக்க இறந்த தமது சகாக்களையும் விட்டு விட்டு ஓடித்தப்பினர். களமுனை அமைதியானது. அன்றைய வெற்றியின் நாயகிகளாக பல பெண்புலிகள் வீரச்சாவு அடைந்து இருந்தனர். எராளமான சிங்கள படையினர் இறந்து இருந்தனர். அவர்களின் உடலங்கள் ஆங்கங்கே சிதறிக்கிடந்தன. அந்த வெற்றியை கண் ணுற்றவாறு. அந்த சமர்க்களத்தின் தளபதி லெப் கேணல் சரிதா மயக்கமுற்றாள்.

தமிழீழத்தின் யாழ்ப்பாண மாவட்டடத்தில் அமைந்துள்ள வட்டுக்கோட்டை அதன் தெற்கே உள்ள அராலி மத்தியில்அமைந்துள்ள ஊரத்திக்கிராமம், மேற்கே காரைநகர் தொடக்கம் ஊர்காவல்த்துறை வரை ஆழம் குறைந்த கடல்ப்பகுதியையும் , தெற்கே பரந்த வயல் வெளியையும் கொண்டது மழைக்காலத்தில் பச்சை ஆடையில் அழகிற்கு அழகு சேர்ப்பாள் ஊரத்தி என பெயர் சூட்டப்பட்டது.

1991 அக்கிராமத்தின் மத்தியில் அம்மன் கோவில் ஒன்று உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த கோவில் அது அக்கோவில்தான் ஊரில் உள்ள அத்தனை பேரும் , ஒன்று கூடும் இடம். கோவில் அருகே சிறுவர் பாடசாலையுடன் இணைந்த வாசிகசாலை (இப்போது இடம் மாற்றப்பட்டுள்ளது) உள்ளது.

அங்கே 1982ம் ஆண்டு காலப்பகுதியில் அப்பப்போ போராளிகள் வந்து சென்றார்கள். அப்போதுதான் தர்மாவுக்கு போராளி களுடன் தொடர்பு ஏற்ப்பபட்டது. ஈ பி ஆர் எல் எப் , புளொட் மற்றும் ரெலோவுடன் , அப்போது அவரின் வயது 12 வயது குறைவாக இருந்தாலும் நாட்டுபற்று அளப்பெரிதாக இருந்தது.

இப்படி இருக்கும் போதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதி லெப் சீலன் அண்ணா வீரச்சாவு அடைந்தார். அவர் நினைவாக தனது தம்பிக்கு சீலன் அண்ணாவின் பெயர் சூட்டினாள். இக்காலப்பகுதியில் ரஞ்சன் என்ற போராளியின் தொடர்பு ஏற்ப்பட்டது. அதன் பின்புதான் தர்மாவின் வாழ்வில் முதலான மாற்றம் ஏற்ப்பட்டது. தர்மா ரஞ்சன் என்ற போராளியிடம் தான் விடுதலைப் புலிகளில் (அக்காலப்பகுதியில் ரைகர். பெரிஸ் என்பார்கள்) இணையப்போவதாக கூறினாள்.

அதற்கு அவர் உங்களுக்கு வயது குறைவு அதோட எங்களின் அமைப்பில் பெண்கள் பிரிவு இல்லை நீங்கள் தொடர்ந்து படியுங்கோ காலம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றார். தர்மாவுக்கு ஏமாற்றமாக இருந்தது.

ஆனாலும் அவளது இயக்க கனவு தொடர்ந்தது 1987ம் ஆண்டு இந்தியா ஆக்கிரமிப்பு படையினர் தமிழீழத்தினை முற்றுகையிட்டனர். மானிப்பாயின் சுதுமலையில் தமிழீழத்தேசியத்தலைவர் செய்த வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடனத்தில் தர்மாவின் குடும்பமே கலந்து கொண்டது. தர்மாவின் கரத்தை பற்றியவாறு நானும் நின்றேன். அன்று தான் என் வாழ்வில் கிடைத்தலுக்குரிய பேறு பெற்றேன் எங்கள் தமிழீழக் கடவுள் தலைவனை கண்டேன் .

பிரகடனம் முடிந்து ஊர் திரும்ப வீதியில் ஏறினோம். இந்திய ஆமியின் வாகனங்கள் தொடராக சென்றன மக்கள் ஆரவாரமாகக் கை அசைத்தனர். நானும் எனது கைகளை தூக்கினேன். என்னை கை காட்ட விடாது தர்மா தடுத்துவிட்டார். நான் தர்மாவின் முகத்தை பார்த்தேன். அந்நேரம் அருகில் நின்ற போராளி ஒருவர் இப்ப கை காட்டுங்கோ பின்னர் வருவதை நீங்களே அனுபவியுங்கோ என்றார். தர்மாவின் தடுத்தலும் போராளியின் சொல்லும். இந்த இரண்டுக்குரிய அர்த்தமும் அப்போது எனக்கு விளங்கவில்லை பின்னர் புரிந்தது. (இந்திய இராணுவம் எமது மக்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்த போது)

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் உண்ணாவிரத அறப்போராட்டம் தொடங்கியது. பன்னிரண்டு நாட்களும் தர்மா திலீபன் அண்ணாவின் மேடையில் முன்றலில்த் தான் இருந்தாள். அவரின் வீரச்சாவின் பின் தர்மா விட்ட கண்ணீர் இப்போதும் என் மனக்கண்ணில். திலீபன் அண்ணாவின் வீரச்சாவை தொடர்ந்து தமிழீழத்தில் பதட்டம் அதிகரித்தது அந்நேரம் போராளிகளின் தொடர்பும் விட்டுப்போனது. ஆனாலும் தர்மாவின் போராட்ட செயல்பாடுகள் நிற்கவில்லை.
அது தீவிரம் பெற்றது.

1987. 10.01 எனக்கு இன்றைக்கும் பசுமையாக அன் நிகழ்வு இருக்கின்றது. தர்மவைச்சுற்றி என் நேரமும் இருக்கும் சிறுவர் பட்டாளத்தை அவசரமாகக் கூட்டினாள். அவளின் முதலாவது சொல் இடியாகத் தாக்கியது சாவுக்கு பயந்தவர்கள் இக்குழுவில் இருந்து இந்த நொடியே வெளியேறுங்கள் , துணிந்தவர்கள் இருங்கள் என்றாள்.

எங்கள் சிறுவர் குழுவின் தலைவி தர்மா தான். நான் அதன் செயலாளராக இருந்தேன்.

அமைதிநிலவியது ….

அங்கிருந்து சுமார் ஏழுபேர் வெளியேறினார். நான் அமைதியாக அவள் முகத்தை பார்த்தேன். என்னுடன் தர்மா உட்பட பதினைந்து பேர் இதில் ஒன்பது பெண்கள் தர்மா பேசத்தொடங்கினாள் :

இதில் இருக்கிற பலர் ஏற்க்கனவே பல இயக்கத்துடன் தொடர்பாக இருந்தீர்கள் ஆனால் இப்ப எங்களுக்கு தெரியும். டைகர்ஸ் தான் உண்மையான இயக்கம் என்று. எனவே நாங்களா இப்படியே குழுவாக இருந்து டைகர்ஸ் போராளிகளின் தொடர்பு கிடைத்தவுடன் இப்படியே இணையவேண்டும்.

இதில் உங்களுக்கு சம்மதமா?…. என்றாள்.

ஒருமித்த குரல் எல்லோரும் ‘ ஓம் ‘ என்கிறார்கள்.
அங்கே கூடி இருந்தவர்கள் எல்லோரும் ஒருமனதாக அக் குழுவிற்கு தமிழீழ மக்கள் படை என்று பெயர் இட்டனர். சுருக்கமாக ரிபி என அழைத்தனர் ரிபியுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு தேவையான உதவிகளை ரிபியினர் செய்து கொடுத்தனர்.

ரிபி குழுவில் இருந்தவர்களின் வயதை நினைத்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் ! ஆக குறைந்த வயது எட்டு கூடிய வயது பதினெட்டு.

தர்மாவின் வயது பதினேழு.

தர்மாவைபற்றி எழுதும் எனது வயது பதினொன்று.

தர்மாவின் சிறப்பான வழிநடத்தலில். நாங்கள் இயங்கிக்கொண்டு இருந்தோம். எங்களுக்கு ஆச்சரியம் ஊட்டும் விதமாக எமது இயக்கத்தின் தொடர்பு கிடைத்தது. உணவு வழங்குதல் இந்தியபடைகளுக்கு தெரியாமல் போராளிகளை கூட்டிச் செல்லுதல் இரண்டுமே தான் எங்களுக்கு போராளிகள் தந்தார்கள்.

அதன் பின்னர் இரவு காவல் கடமையிலும் எமது அமைப்பை இணைத்தனர். இந்திய படைகள் எமது மண் மீது அநியாயமான போரை தொடுத்தபோது தர்மா இயக்கத்தில் இணையும் தனது முடிவைத் தெரிவித்தபோது போராளிகள் மறுத்துவிட்டனர். இல்லை தங்கச்சி நீங்கள் இப்ப செய்யற பணியைச் செயுங்கோ நாங்கள் தேவையான போது உங்களை கூ ப்பிடுகி றோம் என்கிறார்கள்.

1989 ஆண்டு தர்மாவுக்கு மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு வந்தது. படிப்பைத் தொடர்ந்த படித்து கொண்டு தனது போராட்டக் கடமைகளை தர்மா செய்தாள்.

தர்மாவின் குடும்பம் மிகவும் வறுமைப்பட்டது ஆனால் எந்நேரமும் போராளிகளை ஆதரித்து அவர்களுக்குத் தம்மாலான உதவிகளை செய்து கொண்டு இருப்பார்கள். தர்மாவின் குடும்பம் பெரிது செல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் நான்காவது பிள்ளைதான் தர்மா. இவள் பின்னே மூவர் அவளது இயற்பெயர் இலங்கேஸ்வரி. வட்டுக்கோட்டை மத்திய கல்லுரியில் கபோத சாதராணம் ( O/L ) வரை கல்வி கற்றாள். மதம் என்ற முட்டாள் தனமான கருத்தை எதிர்ப்பாள்.

தர்மாவின் குறிப்பேட்டில் இருந்து 04/09 /1989 அராலி யாழ்ப்பாணம்,

மதம் தமிழனின் எழுச்சியை அடக்க
அந்நியர்கள் விதைத்த
அழகான விச விதைகள்
மதம்
தமிழை மெல்ல
கொல்லும் விஷம்
அந்நிய மோகத்தை விடு
எங்கள் அன்னைத் தமிழே
உயிரென தொழு…

தர்மாவின் குறிப்பேட்டில் இருந்து பெறப்பட வரிகள் அவை.

தர்மா 1995 ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்தாள். தனது ஆரம்ப பயிற்சியை வன்னிக்காட்டில் பெற்றாள். முல்லைத்தீவுப் படைத்தளத்தை வீழ்த்திய ஓயாத அலை ஒன்று தொடக்கம்… அவள் கண்ட களங்கள் ஏராளம்…. சத்ஜெய , கிளிநொச்சி ஊடறுப்புத் தாக்குதல் , ஜெசிக்குறு தொடக்கம் ஓயாத அலை இரண்டு ஓயாத அலை மூன்று இதில் ஆனையிரவுப் படைத்தளம் மீட்கப்பட்டது. உட்பட தீச்சுவாலை எதிர்ச்சமர். …. இப்படியே அவள் களம் நீண்டது…. தர்மா ஓய்வின்றி களத்தில் சுழன்றாள்.

ஒருமுறை இவளுடன் இரண்டு போராளிகள் ஜெசிக்குறு களமுனையில் பிறிதொரு காவலரண் நோக்கிச் செல்லும் போது , கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது மின்னல் தாக்கி மூவரும் மயக்கம் அடைந்தனர் . இரண்டு நாட்கள் மயக்க நிலை, பல கருத்துக்கள் அங்கே நிலவிய போதும்….

மேஜர் சோதியா படையணி சிறப்புத்தளபதி பிரிகேடியர் துர்க்க அக்கா தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னார்.

தர்மாவுக்கு ஆபத்து ஏதோ நடந்திருக்கு தேடிப்பருங்கோ என்று. எதேர்ச்சையாக அவ்வழியே வந்த ஆண் போராளிகளினால் இவர்கள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர் .

தர்மாவின் குறிப்பேட்டில் இருந்து 10.03 1998

ஜெசிக்குறு களமுனை
அப்பா ஆயிரம்
அறிவுரைகளை ஊட்டினாலும்
ஒன்றை ஆணித்தரமாய்க் கூறினாய்
மனிதரை நேசி தமிழைச் சுவாசி.

தர்மாவுக்கு தலைவரின் பணிப்பின் பேரில் துர்க்கா அக்காவினால் கள ஒய்வு வழங்கபட்டது.

2001 ஆண்டு ஓர் நாள் முகமாலையில் சண்டை ஆரம்பித்தது. புதுக்குடியிருப்பில் நின்ற தர்மா உடனே முகமாலை கள முனைக்குச் சென்றாள். அந்நேரம் அங்கே வந்த துர்க்கா அக்காவினால் அனுமதி இன்றி கள முனைக்கு வந்ததால். தண்டனையாக நடந்து புதுக்குடியிருப்புக்கு செல்லுமாறு பணித்தார். நடந்து வந்த தர்மாவை பளைப்பகுதியிலிருந்து வாகனத்தில் ஏற்றி வந்தார் துர்க்கா அக்கா.

நான் கேட்டேன் ‘தர்மா அக்காவை ஏன் உங்களுக்கு தண்டனை வழங்க பட்டது’ ?… என்று. அதற்கு தர்மா அக்கா சொன்ன. ‘எங்கட குடும்ப நிலையை கருத்தில் கொண்டு தலைவர் என்னை சண்டைக்கு விட வேண்டாம் என்று சொன்னார். அதுதான் அனுமதி இல்லாமல் சண்டைக்கு போனதுக்கு அக்கா தண்டனை தந்தா’ என்றார் தர்மா.

‘இதுக்கு வருதப்படுகிரிங்களா ?’ என்று நான் கேட்ட போது. ‘அனுமதி இன்றி களமுனை செல்வது பிழை என்றால் இந்த பிழையை நான் தொடர்ந்து செய்வேன்.’ என்றா தர்மா.

தர்மா எப்போதும் களமுனையில் வாழ்ந்தவள். ஒய்வின்றி உழைத்த போராளி, யுத்தத்தின் மூலமாக தமிழீழத்தை மீட்கலாம் என்ற அசையாத நம்பிக்கை கொண்டவள். தலைவரையும் நாட்டையும் தமிழர்களையும் உயிருக்கும் மேலாக நேசித்த போராளி.

08.05.2008 அன்று மன்னார் பாலம்பிட்டி களமுனையில் விழுப்புண் அடைந்து. 08.06.2008 அன்று கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனையில் தனது தாயான சிவபாக்கியத்தின் மடியில் தலை சாய்த்திருந்து கதைத்துக் கொண்டுடிருக்கும் போது வீரச்சாவடைந்தாள்.

இறுதிவரை களமுனையே வாழ்வாக கொண்டு வாழ்ந்த தர்மா தனது அன்பு நண்பியும் சோதியா படையணி துணைத் தளபதியுமான லெப் கேணல் செல்வி வீரச்சாவடைந்து, சரியாக பதின்நான்காம் நாள் வீரச்சாவு அடைந்தாள்.

கிளிநொச்சி துயிலும் இல்லத்தில் லெப் கேணல் செல்வி அக்காவின் விதைகுழி வரிசையில் சரியாக பதின்நான்காவது ஆளாக விதைக்கப்பட்டாள் லெப் கேணல் தர்மாவாக.

புனிதத்தின் சுவடாக ஒளிர்வாய் எம்மினத்தின் விடியலுக்காய் !….

என்றும் சோதியா படையணியின் தாக்குதல் தளபதி லெப் கேணல் தர்மாவிற்கு வீரவணக்கம் செய்து அவர் சுவட்டின் வழியில் நாமும் பயணிப்போம்.

முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்

பொன். சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974)

ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.

சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார்.

மேலும்…

புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக முன்னால் போராளிகளின் அவலங்கள் குறும்படம்

புலம்பெயர்ந்து வாழும் அனைத்து எங்கள் உறவுகளும், எங்கள் உயிரையும், உரிமையையும் காக்க ஆயுதம் தூக்கி போராடிய எங்கள் போராளிச் செல்வங்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும்.tamils struggle army

எங்களுக்காக போராடியாவர்களுக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள் ..

விடுதலை புலிகளின் பணங்களை கொள்ளை அடித்து விட்டு சொகுசாக வாழும்…. புலம்பெயர்ந்தவர்கள் இவர்களுக்கு உதவ முன்வருவார்களா ?

புலிகள் தயாரித்த நீர்மூழ்கி ஏவுகணைகள்

நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் தாமே வடிவமைத்து இயக்கி வந்ததாக இந்தோனேசிய ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. இசுரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளே கடலுக்கு அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத் தாக்கக்கூடிய ரோப்பிடோக்களைத் (Roppitokkal) தயாரிப்பதில் வல்லவர்கள்.LTTE underwater vehicles 7

தொழில் நுற்பத்தில் பன்மடங்கு வளர்சியடைந்திருக்கும் இந் நாடுகளுக்கு இணையாக விடுதலைப் புலிகள் உள்ளூர் பொருட்களைப் பாவித்து இவ்வகையான நீர்மூழ்கி ஏவுகணைகளைத் தயாரித்துள்ளனர் என அது மேலும் கருத்துத் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ் என்று சொல்லப்படும், படு பயங்கரமான வெடி மருந்துகளை இவர்கள் இந்த ஏவுகணைகளில் பொருத்தியுள்ளனர். குறிப்பாகச் சொல்லப்போனால், இவ்வகையான ஏவுகணையின் தாக்குதலில் சிக்கும் எந்தக் கப்பலும் சுக்கு நூறாகிவிடும். விடுதலைப் புலிகள், ஆரம்ப காலத்தில் தற்கொலைப் படகுகள் மூலமே இலங்கை கடற்படையினரைத் தாக்கி வந்தனர். 2002ம் ஆண்டுக்குப் பின்னரே இவர்கள் நீர்மூழ்கி ஏவுகணகளைச் செய்ய கற்றுகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.ltte boat ltte misile 2

மேற்குலக நாடுகள் உற்பத்திசெய்யும் நீர்மூழ்கி ஏவுகணைகள், தமது இலக்கை அறிந்து, அதனை துரத்திச் சென்று தாக்க வல்லது. அதுபோல இல்லை என்றாலும், எதிரியின் கப்பலை நோக்கி ஏவுகணையை தரையில் இருந்தே கட்டுப்படுத்தக்கூடிய தொழில் நுற்பத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர் எனவும் அறியப்படுகிறது.ltte misile

தமது வசதிகளுக்கு ஏற்ப, ரிமோட் கன்றோலர் மூலம் இயக்கக்கூடிய நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் துல்லியமாக தயாரித்துவைத்திருந்துள்ளனர். இலங்கை இராணும் புலிகளின் கடற்படை முகாம் ஒன்றை 2009ம் ஆண்டு அதிரடி நடவடிக்கை ஒன்றின் மூலம் திடீரெனக் கைப்பற்றியது.

அங்கே காணப்பட்ட, நீர்மூழ்கி ஏவுகணைப் பார்த்து இராணுவம் அதிர்ந்துபோயுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. தெற்காசியாவில் இவ்வகையான பாரிய சக்திகொண்ட நீர்மூழ்கி ஏவுகணைகளைக் கொண்ட ஒரே இயக்கம், புலிகளாகத்தான் இருக்கவேண்டும் என இந்தோனேசிய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது இலங்கை அரசானது, தனக்குத் தேவையான துப்பாக்கி ரவைகளைக்கூட பிற நாடுகளிடம் இருந்தே தருவித்துவரும் நிலையில், விடுதலைப் புலிகள் இதுபோன்ற கனரக ஆயுதங்களை மிக இலகுவாக உற்பத்திசெய்யக் கற்றுக்கொண்டனர் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்க விடையமாகும்.ltte submarine

இப்போது புரிகின்றதா? … ஏன் ஈழ போரில் இருபது கோழை நாடுகளின் துணைக்கொண்டு எம் வீர புலிகளை வீழ்த்தினர் என்று …… தமிழ் வழி ராணுவ கல்வியின் திறமைகளை பார்த்தீரா மார்தட்டி சொல்லுங்கள் “நாம் தமிழர்கள்” என்று “விடுதலை புலிகளின் வழிதோன்றல்கள்” என்று. தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

Up ↑