Search

Eelamaravar

Eelamaravar

Month

May 2015

கப்டன் திவாகினி

கப்டன் திவாகினி தொலைத் தொடர்பாளராய் பணி ஆரம்பித்து நிர்வாகப் பணியும் இடையிடையே போர்களப்பணியும் ஆற்றியவள். அலைகள் விரிந்து ஓயாத அலை மூன்று வீச்சம் கொண்ட தருணத்தில் ஆட்பற்றாக்குறை நிவர்த்தியாய் தருணத்திற்குப் பொருத்தமாய் எல்.எம்.ஜி (L.M.G) கனரக இயக்குநராய் வேவுப்புலியாய் வேண்டிய விதமாய் அடையாளப்பட்டுக் கொண்டவள்.

Cap Thivakini

இயல்புச் சுபாவத்தில் தனித்த கலவை அவள். அதிகம் நெருங்கிக் கொள்ளாதவர்களுக்கு அவள் கடுமை அடிதடி அடாவடி. நெருங்கியவர்களுக்கு காரியவதி கண் பார்த்தால் கை செய்யும் நுட்பக்காரி அன்னியையும் பொன்னியாக்கும் கைவரிசைக்காரி.

மனமுண்டானால் இடமுண்டு என்பதற்கு உதாரண புருசி.

கூட்டுப்பணி எனில் குழப்பம்தான். தனித்த பணியே தடம் வைத்திருக்கிறது. தொடக்க காலத்தில் மனமொப் பாத பணியாகில் இஞ்சி தின்ற குரங்காய் அவள் செய்கைகள் வெளிப்படினும் கட்டளைக்குக் கீழ்பணிந்து காரியம் நடக்கும். பெறுபேற்றில் அது வெளிப்பட்டிருக்கும். மனமொப்பிவிட்டாலோ வானத்திற்குமாய் குதிப்பு நடக்கும். பணிக்கப்பாலும் பறப்பு நடக்கும்.

நிர்வாக பணிகளில் நீண்டகாலம் அடக்கப்பட்டு விட்டதாய் அங்கலாய்த்தவர்களுக்கு ஓயாத அலைகள் மூன்று அலைக்கரம். அத்தனை பேருக்குமான சண்டைக்கள வாய்ப்பைத் திறந்து விட்டது என்று குறிப்பிடும் அளவிற்குஅநேகமான நிர்வாகப் பணியாளருக்கு வாய்ப்புக் கொடுத்த வள்ளன்மை கொண்டது. திவாகினிக்கு ஓயாத அலைகள் மூன்றுதான் போர்கள வாய்ப்பை கொடுத்த முதற்களம் அல்ல. ஏலவே ‘சத்ஜெய” களத்தில் அணித்தலைவியாயும் கொம்பனி மேலாளரின் உதவியாளராகவும் பணியாற்றிய அனுபவமிருந்தது. அதிகாரிகள் கற்கைநெறிக்காய் தெரிவாகி கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் (1997) “ஜெயசிக்குறு” ஜெயம் என்ற போது கற்றுக் கொண்ட காட்டுப்vபயிற்சிகளைக் கொண்டு களமாடிய அனுபவமுமிருந்தது. எனினும் சத்ஜெயக் களமோ ஜெசிக்குறுக் களமோ அவளிற்கு அவ்வளவாய் சரிப்பட்டு வரவில்லை.

ஓயாத அலைகள் மூன்றே அவளது போர்முகத்தை வெளிப்படுத்தியது. ஆட்பற்றாக்குறை மட்டுமன்றி அது அதுபற்றிய அறிவு கொண்டோர் அருந்தலாய் இருந்த நெருக்கடியான அக்காலமதில் நிலமை புரிந்து “இடனறிந்து” துணிந்த போர்குணமே அவளது நிமிர்வு.

அத்தியாயம் முடிந்தாய்அரணிட்டு இறுமார்ந்திருந்த பகுதிகளை அடுத்தடுத்து விடுவித்தபடியே சீறிக்கொண்டிருந்த வீச்சக் காற்றில்விடுவிக்கப்பட்ட பகுதிகளை தக்கவைத்துக் கொள்ளதக்க தற்காப்பு வேண்டும் விதமாய் நீண்டுகொண்டேயிருந்தது. அப்போது பல மைல்கள் பல பத்துப் பேருமின்றி ஒரு சில கனரகங்களையும் மன ஓர்மத்தையுமே மாற்றாய்க் கொண்டிருந்த காலம் அது.

திவாகினி எல்.எம்.ஜி பற்றி தான் சுயமாய் அறிந்துகொண்டே சிற்றறிவோடு துணிவாய்ப் பணியேற்றாள். வேண்டும்போது வேவுப் புலியாயும் மாறிப் போனாள். மணலாறு, கலகலப்பையாறு, பப்பாசிப் பொயின்ற், சத்துருக்கொண்டான், சேமடு என்று எல்.எம்.ஜி யோடு பவணி வந்தாள். மரையடித்த குளத்திற்கு பணி நகர்ந்தபோது அணித் தலைவியாய், வேவுப் புலியாய் கனரகம் வேண்டிய போது கனரக இயக்குநராய் களமிறங்கினாள். ஓயாத அலைகள் மூன்று வடபோர்முனை நோக்கி திரும்பியபோது அவள் உற்சாகம் மென்மேலும் கரைபுரண்டு கொண்டது. விடுவிப்புச் செயற்பாட்டு அணியாயும் அழைப்பு வந்தது சொந்த மண்ணிற்கே. சொந்த மண்ணின் சுகம்! உணர்ந்து கொண்டர்களுக்குப் புரியும். திவாகினியும் விதி விலக்கல்ல.

மருதங்கேணி மையப்பகுதி வீடு விக்கப்படாது சீறிச்சினந்து கொண்டிருக்கையில் உள்நுழைந்து உற்சாகம் தந்தவள். முகாவில், இயக்கச்சி, பளை என்று பணிசெய்து முகமாலையில் தரித்து நின்றபோதுதான் அது நிகழ்ந்தது.

04.05.2000 “சட்” சிறிய சத்தம். நிலையிலிருந்தவளிடம் நிசப்தம்! ஓய்விலிருந்தபோது அது நிகழ்ந்தது. அவள் முகமாலை மண்ணை முத்தமிட்டுக் கொண்டாள்.

”ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின்”

”தகுந்த காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வானாயின் அவன் உலகமெல்லாம் பெற நினைத்தானாயினும் பெறலாம்” என்ற திருவள்ளுவரின் திருவரிகள்கப்டன் திவாகினியின் பட்டறிவாய் படிப்பினையாய் பதிவாகியது.

”நான் வீரச்சாவடைந்த பின் என் இக்குறிப்பினை வாசிக்கும் யாராக இருந்தாலும் என் ஆசைத் தங்கையை என் வழியில் அழைத்து வாருங்கள்.”

புதிதாய் பிறக்கும் புலிகளுக்குள் அவள் ஆன்ம வரிகள் அர்த்தம் கொள்ளும்.

நினைவுப்பகிர்வு:- அகநிலா.
எரிமலை இதழிலிருந்து…..

கரும்புலி மேஜர் அரசப்பன் வீரவணக்க நாள்

கரும்புலி மேஜர் அரசப்பன் வீரவணக்க நாள் இன்றாகும்.

BT Maj Arasappan

மட்டக்களப்பு மாவட்டத்தில் 29.05.1999 அன்று தேசத்துரோகி ‘ராசிக்’ மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் அரசப்பன் ஆகிய கரும்புலி மாவீரரின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

2000 ம் ஆண்டு வைகாசி மாதம் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம்

ltte veeravanakam 2



2000 ம் ஆண்டு சித்திரை மாதம் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம்

சிறைச்சாலையில் வீரமரணம் அடைந்தார் சுந்தரம் சதீஸ்

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் கடந்த 14ம் திகதி ‘வீரமரணம்’ அடைந்தார் சுந்தரம் சதீசு .

satheesh_death_prisonசுந்தரம் சதீஸ் இளவயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல ஆண்டுகள் போராடி விடுதலைக்காக உழைத்தவர். பின் பல வருடங்களாக பயங்கரவாத தடுப்புப்பிரிவால் சிறைவைக்கப்பட்டு விடுதலை செய்யப்படாமல் கைதியாகவே மரணித்துப்போனார்.

விடுதலைக்காக சிறையிலிருந்து அர்ப்பணித்த சுந்தரம் சதீசுக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்து வணக்கம் செலுத்தியுள்ளனர். 36 வயதுடைய கொடிகாமத்தைச் சேர்ந்த சுந்தரம் சதீஸ் எனும் முன்னாள் போராளி கடந்த 13ம் திகதி குளித்துக் கொண்டிருந்த நிலையில் கிணற்றடியில் வழுக்கி விழுந்துள்ளார்.

இதன் போது இவரின் உடல்நிலையைக் கண்டுகொள்ளாத சிறை அதிகாரிகள், சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னரே வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 14ம் திகதி கொழும்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கரும்புலி மேஜர் குமலவன்

நெருப்பு நினைவுகளுடன்……..

Major Kumalavan
Major Kumalavan

”அம்மா இனி இருக்கேலாது, நான் இயக்கத்திற்குப் போகப்போறன்” என்று மகன் சொன்னபோது அம்மா அதிர்ச்சியடையவில்லை.

அவன் இப்படித்தான் அடிக்கடி விளையாட்டாகச் சொல்லுவான். பின் அம்மாவையே கட்டிப்பிடித்துக் கொண்டு சிரிப்பான். அம்மாவிற்கு பிள்ளை தன்னைவிட்டுப் போய்விடான் என்ற நம்பிக்கை. சிரித்தாள்.

பாவம் – அன்று அவன் முகத்தில் சிரிப்பில்லாது இறுக்கம் இருந்தது. உண்மையாகவே பேசினான்.

“இயக்கத்திற்குப் போனால் திரும்பி வரமாட்டன்” … “ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன்” இதைக்கேட்டதும் பெற்றவள் உள்ளம் பதறிப்போனாள். என்னென்றுதான் தாங்குவாள் தன் ஆசைமகனின் பிரிவை. நெஞ்சிற்குள் வெடித்த கலவரம் கண்களையும் கலங்கச்செய்ய அவள் எதையும் புரியாதவளைப்போல பாவனை செய்து பேசாதிருந்துவிட்டாள். அவனுக்கும் அம்மாவை விட்டுப் பிரிய விருப்பமில்லைத்தான். ஆனாலும் ஊரில் தினமும் நடக்கின்ற அவலங்கள் ஒவ்வொன்றும்தான் அவனின் நெஞ்சை மெல்ல மெல்லக் கலக்கின.

பள்ளிக்கூடம் செல்கின்ற வேளைகளிலோ வயலிற்குள் வேலையில் ஈடுபட்டிருக்கும் பொழுதுகளிலோ ஊரில் விளையாடிக்கொண்டிருக்கும் நேரங்களிலோ கேட்கின்ற அவலமான வெடியோசை அடுத்தகணம் நடுங்கிக்கொண்டு ஓடும் ஊர். உயிர்காக்க ஓடுபவர்களையே வழிமறித்து வெறித்தனம் புரியும் இராணுவங்கள், எல்லாம் சின்ன வயதினிலே இருந்து அவனின் மனதில் பதிந்த விடயங்கள்.

கிராமம் அமைதியாகத்தான் இருந்தும் அடிக்கடி சோகங்களும் அவலங்களும் ஆங்காங்கே தலையெடுக்கும். ஊருக்குள் நுழைகின்ற வாசலில் இருக்கும் பாலத்தடியில் வைத்து கிளைமோர் தாக்குதல்கள் ஏதாவது இயக்கம் செய்துவிட்டுச் சென்றால். அந்த இழப்பின் ஆத்திரத்தில் கிராமங்கள் மீது சிப்பாய்கள் குதிப்பார்கள். யாரும் எதுவும் பேசமுடியாது. கைகட்டி நடுங்கியபடி நிற்பார்கள். ஆத்திர வெறியோடு ஊருக்குள் நுழைகின்ற இராணுவம் சில உயிர்களை சுலபமாய் பறித்துச் செல்லும். ஊரே ஒப்பாரி வைக்கும், சோகத்தில் மூழ்கும். பின் வழமைக்குவர மறுபடி அவலம் வரும். அன்று பகல் பொழுது மயங்கிவிடும் ஒரு வேளை ஊரெங்கும் பரபரப்பு, பதட்டம். எல்லோரையும் கைதுசெய்து பாலத்தடிக்கு இழுத்து வந்தார்கள். திருதிருவென விழித்து விழிகளில் மருட்சியுடன் வந்தவர்களிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஏற்கனவே பிடிக்கப்பட்டு கைகள் கட்டப்பட்ட இருவர் ஊர் மக்கள் முன்னிலையில் உயிரோடு ரயர் போட்டு எரிக்கப்பட்டார்கள்.

அந்த ஜீவன்களின் உயிர் வாழ்வதற்கான துடிப்பும்… அதில் இருந்து தப்புவதற்கு தவித்த தவிப்பும்… மெல்ல மெல்ல உடல் கருக உயிர் பிரிந்ததும் எல்லாரையும் கோபப்பட வைத்தது. ஆனால் எதுவும் செய்ய இயலாதவர்களாய் நின்றார்கள். அப்ப இவன் சின்னப் பொடியன்.

சிப்பாய் ஒருவன் வெறி நிறைந்த பார்வையோடு, “இப்படித்தான் ஒங்களிற்கும்” என்றுவிட்டு சிரித்தான். அட்டகாசமாகச் சிரித்தான். இந்த வரிகள்தான் அவன் இதயத்திலும் வானத்திலும் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொலித்தன. எங்களை நாங்களே பாதுகாக்க வேண்டும் என்ற முடிவுக்கு அந்தப் பிஞ்சுமனம் வருகின்றது. அதனால்தான் அவன் தன் பாசங்களை பிரிந்து மனதைக் கல்லாக்கி கசிகின்ற நினைவுகளோடு புலிகளின் பாசறைக்குள் புகுந்தான்.

குமலவன்… 1980.09.12 இல் சிவப்பிரகாசம் கமலா தம்பதிகளின் இரண்டாவது புதல்வனாக பழுகாமத்தில் பிறந்தவன். ஒரு அண்ணணும் ஒரு தம்பியும் இரண்டு தங்கைகளும் அவனது உடன் பிறந்த உறவுகள். அழகான குடும்பம், வறுமையென்று சொல்வதற்கில்லை. நாட்டின் சூழ்நிலை அவனை போராடத் தூண்டியது.

மட்டக்களப்பு காட்டு பயிற்சிப் பாசறை ஒன்றில் தன் பயிற்சிகளை முடித்த அவன், அடுத்தடுத்து மட்டக்களப்பில் நிகழ்ந்த மூன்று முகாம் தாக்கியழிப்புக்களில் கலந்துகொண்டான். வன்னி நோக்கி தாக்குதல் அணிகள் புறப்பட்டபோது இவனும் அணிகளோடு சேர்ந்து வன்னி வந்தான்.

களங்களில் ஓயாமல் உழைத்துக்கொண்டிருந்த அவனது கால்கள் வலித்தாலும் அதைவிட சின்ன வயதிலே அவனது மனதில் பதிந்துபோன ஆக்கிரமிப்பாளர்கள் ஏற்படுத்திய காயங்கள் அதிகமாக வலித்தன.

வயல் வேலை செய்து குடும்பம் நடத்திக்கொண்டிருந்த சித்தப்பா வயலுக்குள்ளேயே செல்லடிக்கு இறந்து போனமை, வீட்டில் விசேட கொண்டாட்டம் என்றால் ஊரிற்கு வெளியே இராணுவமுகாம் தாண்டிச் சென்று சந்தையில் பொருட்கள் வேண்டி வரவேண்டும். அண்ணன்தான் உடுப்புகளும் பொருட்களும் வேண்டுவதற்குப் போவான். இந்த நேரங்கள் எல்லாம் பிடித்து விசாரிப்பதும் அடிப்பதுமாக இராணுவம் தந்த வேதனைகள். எந்த நேரமும் நிம்மதி இழந்த பதட்டமும் இருக்கின்ற ஊர், இந்த நினைவுகளே அவனுக்கு பாரமாய் கனத்தன. அதுவே ரணமாய் வலித்தது, அவன் நெஞ்சில் அணையாது தீயாய் எரிந்தது.

வன்னிக்கு வந்ததும் அவன் எண்ணத்தில் இருந்தவற்றை தலைவருக்கு எழுதினான். பதிலுக்காகக் காத்திருக்கும் நாட்களில ஜெயசிக்குறு நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் அணிகளோடு சேர்ந்து சமரிட்டான். எல்.எம்.ஜீ (L.M.G) கனரக ஆயுதம்தான் இவனது ஆயுதம். அந்த ஆயுதத்தோடுதான் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நடவடிக்கைகளில் அதிகமாய் ஈடுபட்டிருக்கிறான்.

ஜெயசிக்குறு எதிர்ச்சமர் களத்தில் ஒருநாள் எதரியின் பெரிய முன்னேற்ற நடவடிக்கை ஒன்றை முறியடிப்பதற்காய் ஒவ்வொரு போராளிகளும் கடுமையாக சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். சண்டையின் ஒரு கட்டத்தில் குமழவன் நிலை எடுத்திருந்த புற்றிற்கு அருகாக எறிகணைகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. பெரிய மரக்கொப்புகளும் மண்ணும் அவனை முழுமையாக மூடியிருந்தாலும் சில கணநேரம் இயங்க முடியாதுபோன அவனும் அவனது ஆயுதமும் மறுபடியும் இயங்கத் தொங்கின. அந்த இறுக்கம் நிறைந்த களச்சூழலில் அவனின் தளராது உழைப்பும் அன்றைய வெற்றிக்கு வழியமைப்பதாகவே இருந்தது.

ஜெயசிக்குறு களமுனையிலேயே கள அறிக்கையாளனாக அவனது பணி மாற்றப்பட்டது. அந்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில்தான் அவன் இத்தனை நாள் காத்திருந்த கரும்புலி அணிகளுடன் இணைவதற்கான அனுமதி கிடைத்தது.

சின்ன வயதில் இருந்தே நெஞ்சிற்குள் ஆழப்பதிந்துபோன சோகங்களிற்கும் அவலங்களிற்கும் முடிவு காணுவதற்காய் அயராது உழைத்தவன் 20.05.2000 அன்று ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையின் தொடர் வெற்றிக்காய் கோப்பாய் மண்ணிலே வீரகாவியமானான்.

”இயக்கத்திற்குப போனா திரும்பி வரமாட்டன். ரங்கண்ணா மாதிரி கரும்புலியாத்தான் வெடிப்பன்”. சிறுவயதில் அவன் உரைத்த வரிகள் இப்போதும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.

நினைவுப்பகிர்வு:- துளசிச்செல்வன்.
விடுதலைப்புலிகள் (மார்கழி 2004 – தை 2005) இதழிலிருந்து

பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்கம்

Brigadier Balraj

சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது!

நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே…. ஒரு போராளியின் குருதியில் இருந்து…..(உண்மைச் சம்பவம்) war crime1

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும்.

அந்த மண்ணிலே மடிந்து போன பல போராளிகளோடு அவர்கள் அனுபவித்த வலிகளும், துயரங்களும், உண்மைகளும் அவர்களோடே மறைந்து கிடக்கின்றன..! அவர்களோடு, அவர்களின் வலிகளோடு இறுதி நேரத்திலிருந்து தப்பி வந்த சில போராளிகளின் மனதில்தான் அந்தத் துயரமான வலி நிறைந்த என்றுமே அழியாத காட்சிகள் பதிவாகி இருக்கின்றன… அப்படியான பதிவுகளில் எல்லோர் மனங்களிலும் மிகுந்த வலிகளை உருவாக்கி, இதயத்தினை உருக்கி கண்ணீர் வரவழைக்கும் பதிவுகளில் இந்தப் படத்தினில் இருக்கும் போராளியின் படமும் ஒன்று!

இந்தப் புலிவீரன் துன்புறுத்திக் கொல்லப்படும் போது அருகினில் இருந்து காப்பாற்ற முடியாத வலிகளோடு துடித்துக் கொண்டிருந்த மற்றுமொரு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு உன்னதமான போராளியின் வலிகள் நிறைந்த வாக்குமூலமே வார்த்தைகளாக கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது.

“எனது தமிழ் உறவுகள் அனைவருக்கும்… என் மனதில் என்றும் அழியாத ரணங்களாக இருக்கும் பல உண்மைகளில் சிலவற்றை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்றே சிறை மீண்டு முகமும், முகவரியும் இன்றி கண்ணீருடன் இங்கே கூறுகின்றேன்.

இந்தப் படத்திலே இருக்கும் என் தோழனை சிங்களக் காடையர்கள் கொடுமைப்படுத்திக் கொலை செய்ததை நேரில் பார்த்தவன் நான்!, இவன், முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தின் சுற்றிவளைப்பில் என்னோடு அகப்பட்டு, இந்த வீரனை மட்டும் மூன்று நாட்களாக தென்னை மரத்திலே கட்டி வைத்து சாப்பாடு தண்ணீர் கூட கொடுக்காமல் தினமும் சித்ரவதை செய்து பட்டினி போட்டான் சிங்களக் காடையன்.

இவன் துன்புறுத்தப்பட்டு வந்த மூன்று நாட்களும் இவனின் வாயிலிருந்து “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வார்த்தைகள் வந்ததனாலே, இந்த வீரன் மிகவும் துன்புறுத்தப்பட்டான்.
எவ்வளவு வலிகள் கொடுக்கப்பட்ட போதும், இவன் மண்டியிடவேயில்லை..! இதனை சகித்துக் கொள்ள முடியாத சிங்களக் காடையர்கள், அங்கம் அங்கமாக கூரிய கத்தியினால் கீறி இவனை துன்புறுத்தி கொடுமைப்படுத்தினார்கள்.

ஒவ்வொரு கீறல் விழும் போதெல்லாம் “அண்ணன் வாழ்க, தமிழீழம் மலர்க” என்றே கூறிக் கொண்டிருந்தான். இறுதியில் இந்த வீரனின் வீரத்தினைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்களக் காட்டுமிராண்டித் தளபதி கொன்று விடும்படி சைகை காட்டவே… இவனின் கழுத்திலே அந்தக் கூரிய கத்தியினை வைத்து சடார் என இழுத்து விட்டான் ஒரு காட்டுமிராண்டிச் சிங்களவன். தொண்டைக்குழி அறுபட்டு இரத்தம் சீறி அவனின் உயிர் அவனை விட்டுப் பிரிவதை மிகுந்த வலிகளோடு பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர கைகள் கட்டப்பட்டிருந்த எம்மைப் போன்ற போராளிகளால் எதுவுமே செய்யமுடியாமல் நாதியாற்றுப் போனோம். கொலை செய்தபின் இவனின் உள்ளாடைக்குள் எமக்கே தெரியாமல் இவன் மறைத்து வைத்திருந்த புலிக்கொடியினை எடுத்து இவனின் மேல் போர்த்தி விட்டனர் சிங்களக் காட்டுமிராண்டிகள்..!war crime 2

எங்கள் அனைவரினதும் தாக்குதல்களுக்குரிய பொறுப்பினை ஏற்று நடத்திய தளபதிதான் இந்த மாவீரன்!

இந்த மாவீரன், சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல களங்களைக் கண்ட சிறந்த வேவுப்புலி வீரனாவான்!
2008 முதல் 2009 வரையிலான காலப்பகுதியிலே முக்கியமான ஒரு தளபதியின் மெய்பாதுகாப்பாளனாக இருந்து செயற்பட்டவன். சிறு வயதினிலேயே போராட்டத்தில் இணைந்ததனால் தலைவர் மீதும், தாய்மண்ணின் மீதும் மிகுந்த பற்றுடையவன் இவ்வீரனை கொடுமைகள் செய்து கொலை செய்வதை எங்களால் பார்க்க மட்டும்தான் முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்ய முடியாத கைகள் கட்டப்பட்ட நிலையில் நாம் இருந்தோம். இந்த மாவீரனின் உயிர் பிரியும் நேரத்தில் கூட இவனின் உதடுகளிலிருந்து “அண்ணன் வாழ்க”, “தமிழீழம் மலர்க”, “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வீர வார்த்தைகளுடனேயே இவனின் உயிரும் அடங்கிப் போனது!

இந்த வீரனின் உயிர் பிரியும் நேரங்களை நான் மட்டும் பார்க்கவில்லை. அந்த இடத்தில் நான் உட்பட பதிமூன்று போராளிகள் இருந்தோம். அதில் ஐந்து பெண் போராளிகள். அவர்களை எங்களிடம் இருந்து பிரித்துச் சென்று விட்டார்கள். அந்தச் சகோதரிகளின் நிலை இதுவரை என்னவென்று தெரியாது!

இந்தப் படத்தினைப் பார்க்கும் போதெல்லாம் என் உயிர் வலிக்கின்றது. என் ஆயுள் வரை மாறாத வலிகளை இந்தப்படமும், இதற்குரிய சம்பவங்களும் எனக்குள் ஏற்படுத்தியிருக்கின்றது”!

(கண்கள் கலங்கியபடி)

“என் உயிர்த்தோழனே! எங்கள் அண்ணன் வளர்த்த புலிக்குட்டி நீ! உனக்கு நிகழ்ந்த கொடுமைகளை நினைத்து என் இதயம் கொதிக்கிறது. நீயும் நானும் ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒன்றாக உறங்கிய காலங்களும்… பகைவனைக் கொன்றொழித்த அந்த வீரச்சமர் புரிந்த காலங்கள் அனைத்தையும் நினைக்கும் போது என் இதயம் அழுது வெடிக்கின்றது தோழனே!!! என் தோழனே! நீ இறுதியாக உரைத்த வார்த்தைகள் நிச்சயம் நிறைவேறும்!”

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

என என் இதயத்தை கனக்க வைத்தார், பெயர் குறிப்பிட விரும்பாத அந்த உன்னதமான விடுதலைப் போராளி!

■ மேற்குறிப்பிட்ட வீரனைப் பற்றிய சுருக்கமான சில பதிவுகள்.

இவன் சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்ததனால் விடுதலைப் போராட்டத்தின் போரியல் மரபுகளை விரைவினிலேயே கற்று, கானகன் என்ற பெயருடன் விடுதலைப் போராளியாக வெளியேறினான் .

துடிப்பு மிக்க இளைஞனாகவும், துணிச்சல் மிக்க வீரனாகவும் தான் பார்த்து வந்த அனைத்துக் காட்சிகளையும் தன் நினைவுகளில் பதிவு செய்து பல வருடங்கள் கழித்தாலும், அந்தக் காட்சிகளை அப்படியே உண்மைத் தன்மையுடன் விபரிக்கும் இவனின் நினைவாற்றலைக் கண்டு வியந்து போன இவனின் தளபதிகள், இவனின் நினைவாற்றலுக்கு ஏற்றால் போல் இவனை வேவுப்படையணியின் விசேட கொமாண்டோ பயிற்சில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டனர்.

தளபதிகளின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட கானகன், விசேட வேவுப் பயிற்சியினை கச்சிதமாக முடித்துக் கொண்டு வேவு நடவடிக்கைகளிலும் சிறப்பாகச் செயற்பட்டு வந்ததோடு… ஒரு நாள் யாரும் எதிர்பாராத சமயத்தில் வேவுக்குச் சென்று இடையூறாக இருந்த சிங்கள இராணுவப் படையினர் ஐவருடன் தன்னந்தனியாகப் போராடி அந்த ஜந்து இராணுவத்தினரையும் கொன்று அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி தனது வேவு நடவடிக்கையின் வீர வரலாற்றினை பதிவு செய்தான். இந்த விடயத்தினை அறிந்த தேசியத் தலைவர் அவர்கள் கானகனுக்கு “புயல்வீரன்” என்ற பெருமைமிகு பெயரினைச் சூட்டி கௌரவப்படுத்தினார்.

இவனின் தனித்துவமான வீரதீரச் செயல்களினால் படிப்படியாக உயர்ந்து “இராதா வான்காப்புப் படையணியின்” சிறப்பு வேவுப் பிரிவின் தளபதியாக உயருமளவிற்குப் பெயர் பெற்றான்.
மேலும், சில குறிப்பிட்ட காலப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் அதி முக்கிய தளபதிகளில் ஒருவரான “றட்ணம் மாஸ்ரர்” அவர்களுக்கு மெய்ப்பாதுகாவலனாகவும் பணியாற்றியுள்ளான்.

பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவின் காலப்பகுதியில் மன்னார் மாவட்டக் கட்டளைத் தளபதியாக இருந்த பால்ராஜ் அண்ணாவின் துணைக் கட்டளைத் தளபதியாகவும் திறம்படச் செயற்பட்டு வந்தான்.

இந்த மாவீரனைப் போலவே பல போராளிகள் முள்ளிவாய்க்காலின் இறுதி நேர யுத்தத்தில் இறுதி வரை நின்று தாய் மண்ணிற்காகவே போராடி உயிர் துறந்து வெளியுலகிற்குத் தெரியாமலேயே மக்களோடு மக்களாக மண்ணிற்குள் புதையுண்டு போயுள்ளார்கள். சிலர் அடையாளம் தெரியாதளவிற்கு எரிக்கப்பட்டு பின் அடையாளமே தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டனர்.

இந்தப் புண்ணிய வீரர்களைப் பெற்றெடுத்த தாய்மார்களும், உறவினர்களும் இன்னும் இன்றுவரையும் தேடியே வருகின்றனர். தாய் மண்ணின் விடிவிற்காய் இறுதி வரை நின்று போரிட்டு உயிர் துறந்த மாவீரர்களுக்கு நாமும் அவர்களுக்குரிய தகுந்த மரியாதையினைக் கொடுக்காமலும், அவர்களின் வீர வரலாற்றினை தெரிந்து கொள்ளாமலும் இன்றுவரையும் மறந்தே வாழ்ந்து வருகின்றோம்.

இந்தப் புண்ணிய வீரர்களின் வீரச்சாவானது சாதாரண நிகழ்வாகிப் போய் விடக்கூடாது என்பதற்காகவும், இவர்களின் வீரவரலாறுகள் யாரும் அறியாமல் மறைந்து அழிந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அவர்களுக்குரிய மரியாதையினையைக் கொடுத்து கௌரவப்படுத்தி வெளியுலகிற்குத் தெரியப்படுத்துகின்ற வகையில் இந்தப் புண்ணியவான்களின் உயிர் பிரியும் போது இவர்களோடு இறுதி வரை நின்று உயிர் தப்பி வந்த போராளிகளும், மக்களும்தான் இவர்களைப் போன்ற மாவீரர்களின் உண்மை விபரங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்திக் கௌரவிக்க வேண்டும்.

எமக்காகவும், எம் மண்ணின் விடிவிற்காகவும் இறுதிவரை நின்று போராடி உயிர் துறந்தவர்களை நாம்தான் கௌரவித்து… அவர்களுக்குரிய மரியாதையையும் வழங்க வேண்டும்.

– வல்வை அகலினியன்.

முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்

v.prabaharan v

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.

மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”

வரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம்

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ !
veeravanakkam 2
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் ?

கடைசிப் போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார்? எப்போது, எங்கே ,எப்படி வீழ்ந்தார்?

leader-Prabakaran-tribute-2

முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்

mullivaikkal

Up ↑