Search

Eelamaravar

Eelamaravar

Month

August 2013

வீரவணக்கம்: புரட்டாசி மாதம் வீரகாவியமான மாவீரர்கள்

ltte veeravanakam 2
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

புரட்டாசி  மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

 ***********

September 1st

September 2nd

September 3rd

September 7th

September 8th

September 9th

September 10th

September 11th

September 15th

September 16th

September 18th

September 19th

September 22nd

September 23rd

September 24th

September 25th

தண்டனை எனக்கும் தேசியத்தலைவரின் மகன் சாள்ஸின் வேண்டுகோள்.

விடுதலை புலிகள் அமைப்பில் பல கட்டுபாடுகளும் ஒழுங்கங்களும் கண்டிப்புகள் இருந்தமையால் உலகம் வியக்கும் தமிழீழ மரபியல் இராணுவமாக வளர்ந்தது யாவரும் அறிந்த விடயம்…

SRI LANKA-UNREST-TIGERS-POLITICS

கேணல் சாள்ஸ் அன்ரனி வீரவணக்கம்

எம் அமைப்பில் சில தவறுகளுக்கு முன்னுதாரணமாகவும் இனிமேல் அந்த பிழைகள் ஏற்படாதவாறு திருத்திக் கொள்ளப்படவும் சில தண்டனைகள் வழங்குவது வழமை….

பொறுப்பாளரால் சில தண்டனைகளை வழங்குவதும் குறும்புத் தனத்துடன் போராளிகள் செய்து முடிக்கும் நிகழ்வும் ஓர் சுவாரஸ்யம் அதை அனுபவித்தவர்கள் மனங்கள் இதை படிக்கும் போது சில ஞாபகங்கள் வரலாம் ….

அப்படியாக ஓர் சம்பவத்தை பகிர்கிறேன்….

இம்ரான் பாண்டியன் படையணியில் ( பாதுகாப்பு பிரிவில் ) இருந்து கடற்புலி பாசறைக்கு சில பயிற்சிகளுக்காக சில போராளிகள் அதில் கணணிப்பிரிவிற்கு பொறுப்பான தீபன் ( இவரே சாள்ஸ்சுக்கு வலது பக்கத்தில் ) மற்றும் 2000ம் ஆண்டு அப்பாச்சி கனரக ஆயுதத்தால் டோறா அடித்த தமிழரசன், மணிவண்ணன் உட்பட பல போராளிகளுடன் சாள்ஸ் கூட வந்திருந்தார், அதிலிருந்த போராளிகளுக்கு சாள்ஸ்சும் மிக நீண்ட நாள் நெருக்கம்….

நீச்சல், மற்றும் இயந்திரங்கள் என நீடித்த பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்போது கடல்சார் சண்டைப்படகு இயந்திரத்தை கற்பிக்கும் பொறுப்பு விமல் மாஸ்ரரிடம் வழங்கப்பட்டது. அவரும் தன் கடமையை செய்தார்.

இயந்திரத்தை கற்பித்து அதை ஒரு நாள் முழுவதும் எல்லோரும் ஒட்டிப் பார்த்து உங்களுக்கு தெரியாத விடயங்களை பின்பு கேளுங்கள் பின்பு கரைய படகு ஏறியவுடன் நண்ணீரில் இயந்திரத்தை சுத்திகரித்து விட்டு விடுங்கள் அல்லது உப்பு பிடிக்கும் என கூறிவிட்டு சென்றார்.

இவர்களும் கடலில் ஒட்டி பார்த்து மாலை ஆனதும் படகு கரையில் ஏற்றப்பட்டு இவர்களின் கொட்டிலுக்கு அண்மையில் விடப்பட்டது. இவர்கள் நண்ணீரில் இயந்திரத்தை சுத்திகரிக்க மறந்து விட்டார்கள். அது இயந்திரத்தின் மேல் பாகங்கள் உப்பு படிந்து இருந்தது.
( பெற்றொல் இயந்திரம் என்பதால் அவதானம் மிக முக்கியம் – தொடர் இலத்திரனியல் இணைப்புக்கள் உள்ளமையால் )

அன்று நடந்த தவறுக்கு….
நீண்ட நாளின் பின் கடலில் என்பதினாலும் கடல்காற்றின் சுவாசமும் கடலில் இருந்து கரை ஏறினால் சூடு மணலின் வாட்டும் வெயிலின் உடல் களைப்பு அடைய செய்தமையும், கடல்நீரில் விழுந்து குளித்து எழும்பி வந்தமையும் அது மேலும் பசியை அதிகரித்தமையுமே காரணமாக உழலில் மேலும் களைப்பை அதிகரித்து சோர்வடைய செய்தது …..

விமல் மாஸ்ரர் வந்து இயந்திரத்தை பார்த்தது விட்டு அனைவரையும் அழைத்து அவர்களின் பிழைகளை கூறினார் பின்.
இயந்திரத்துக்கு அதனால் ஏற்படும் விளைவுகளை விளங்கபடுத்தினார்.

பின்பு தங்கள் செய்த பிழைக்கு என்ன தண்டனை செய்ய என அனைவரும் ஒருமித்து கேட்டார்கள்.

இயந்திரந்திரத்தில் படிந்த உப்பை நாவினால் தொட்டுக்கொள்ளவும் என கூறினார்.

பின்பு ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்து ஒவ்வொருவராக செல்லும் வேளை சாள்ஸ்சும் இடையில் நின்றார்.

அதைப் பார்த்த விமல் மாஸ்ரர்

சாள்ஸ் நீங்கள் இங்கு வாருங்கள் என அழைக்க…

சாள்ஸ்சும் சென்றார்,

நீங்கள் வேண்டாம் என கூறினார்.

மன்னிக்கவும், நானும் அந்த தவறுக்கு உரியவன் நானும் அந்த தண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றான்.

வேண்டாம்…. சொன்னா கேளுங்கள் என்றார் விமல் மாஸ்ரர்

அப்போது சாள்ஸ் அப்படியானால் அவர்களுக்கும் ஏன் தண்டனை வழங்கப்படுகிறது…?

மெளனமாக இருந்தார் விமல் மாஸ்ரர்….

( ஏனைய நண்பர்கள் போல் பழகி கூட வந்த போராளிகள் ” தம்பி ” என்றுதான் செல்லமாக அழைப்பர் சாள்ஸை காரணம் ஓரிரு வயது குறைந்தவன் சாள்ஸ்.. )

தம்பி நீ இரு, நாங்கள் செய்கிறோம் என்றனர்.

நான் தண்டனை செய்யாமல் இருந்தால் அப்பா கூட என்னை மன்னிக்கமாட்டார்
தண்டனையில் எனக்கும் பங்கு இருக்கு ஆதலால் நானும் சென்று தண்டனையைப் பெறுவேன் என வழங்கபட்ட தண்டனையை அவனும் ஒருவனாய் ஏற்றான்…

பின் தண்டனை முடிந்து இயந்திரத்தை சுத்திகரித்து கையளித்தார்கள் அனைவரும்….

மீண்டும் ஒரு நாள் கழித்து வந்த போராளிகளுடன் தன் பாசறை நோக்கி பறந்து சென்றான்.

இதுதானா தேசியத்தலைவர் புதல்வன் என கடற்புலிகள் போராளிகள் மத்தியில் பேச்சுக்கள் அந்த வட்டுவாகல் முதல் சாலை வரை உலாவந்தன…

இன்னோர் காவியத்துடன் சந்திக்கும் வரை …..

– இசைவழுதி ( தமிழீழப் பறவை கனடாவில்….)

தேசக்காற்று

1995.09.22 நாகர் கோவில் படுகொலை

Naakarkovil bombing

நாகர் கோவில் பாடசாலையில் சிங்கள வான் வல்லூறுகளின் தாக்குதலின் பலியான மாணவசெல்வங்க்களை நெஞ்சம் மறக்குமா…?

யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 1995.09.22 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது சிங்கள வான் படைகளின் ” புக்காரா ” குண்டுவீச்சால் பிச்செறியப்பட்ட புறாக்களின் அவலச்சாவை நெஞ்சம் தான் மறக்குமா…?

தலைவாரி, பொட்டுவைத்து, பள்ளி சென்று வா என்று அம்மா அனுப்பிவைக்க, பத்திரமாக படித்துவிட்டு வீடு திரும்பி வா என அப்பாவும் சொல்லி அனுப்ப, வெள்ளை நிற பள்ளிக்கூட ஆடைகளை அணிந்து உல்லாசமாக, உற்சாகமாகச் பாடசாலை சென்ற அந்த மாணவச் செல்வங்கள் மீது குண்டுபோட சிங்கள இனவெறியனுக்கு எப்படித் தான் மனம் வந்ததோ தெரியவில்லை.

பாவம்! பள்ளிக்குச் செல்லும் பிள்ளை அன்று வீடு திரும்ப மாட்டாள் என அம்மாவுக்கு முன்னரே தெரியாமல் போய்விட்டது. பாடசாலை சென்ற பையன் இனி வீட்டிற்கு பிணமாகத் தான் வருவான் என அப்பா நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

|| நாகர் கோவில் மாணவர் மீதான வான் தாக்குதல்….

இலங்கை புக்காரா ரக விமானங்கள் பாடசாலை என்று கூடப்பாராமல் குண்டுகளை சரமாரியாக வீசிச் சென்றது. அதில் 21 பாடசாலை மாணவர்கள் ஸ்தலத்திலேயே உடல்சிதறி துடிதுடித்து பலியானார்கள்.

உலகே உலகே ஒரு தரம் ….

பாடசாலையில் எஞ்சியிருந்த மாணவர்கள் தங்கள் உயிரைப் பாதுகாப்பதற்காக பாடசாலையை விட்டு சிதறி நாலா பக்கமும் ஓடியதைக் கண்ணுற்ற சிங்கள இனவெறியன் கிராமத்தின் எல்லாஇடங்களிலும் கண்டபடி குண்டு மழைகளை சரமாரியாக பொழிந்து தள்ளினான். அதன் காரணமாக வீதியில் விடுகளில் இருந்த பொதுமக்களும் பலியாகினார்கள் எங்கும் புழுதியுடன் கரு மேகம் சூழ்ந்தவண்ணம் இருந்தது.

வீரம் வீசும் எங்கள் மண்ணில் …

அந்தக்கொடூரத் தாக்குதலில் மாணவர்கள், பொதுமக்கள் வயது வேறுபாடுன்றி பலர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், காயப்பட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லக்கூட வாகனவசதி கூட இல்லாத நிலையில் எத்தனையோ பேர் உயிரிழக்கவேண்டிய பரிதாபம் ஏற்பட்டது. ஓலத்தின் குரல்கள் அந்த விதிகளில், தெருக்களில் ஏன் அந்த கிராமத்தையே நிறைத்தது.

|| நாகர் கோவில் படுகொலை நினைவில்…

சில மாணவர்கள் சிறிய காயங்களுக்கு உள்ளாகி இருந்தாலும், இரத்தப்போக்கு காரணமாக ஆசிரியரின் மடியில் பிணமானர்கள். சில ஆசிரியர்கள் மனநலம் பாதிப்படைந்தனர்.

ஒரு சில மணிநேரங்களில் அயற்கிராமங்களில் இருந்த வாகனங்களை கொண்டு வந்து காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் இடைவழியில் எத்தனையோ உயிர்கள் பிரிந்தன.

கருவறை பற்றி எரிய பிள்ளை மடிந்த சோகம், அப்படியாக அன்று அந்த கிராமத்தில் நடந்த இனக்கருவழிப்பு இன்றும் தன இயல்பை முழுவதுமாக இழந்த நிலையில் அந்த மண் மயான பூமியாக காட்சியளிப்பதை எம்மவர்களால் மறக்கத்தான் முடியுமா…?

நாகர் கோவில் மண்ணில் 22.09.1995 அன்று எம்மைவிட்டு பிரிந்து சென்ற மாணவர்களின் நினைவை சுமந்து வண்ணம் பயணிக்கின்றோம். எமது இனத்தைக் கருவறுக்க, சிங்கள இனவாதிகள் மாணவர்களைக் குறிவைத்தனர். கள்ளம் கபடம் ஏதுமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட மாணவச் செல்வங்கள் அணிந்திருந்த வெள்ளை சீருடைகளில் எல்லாம் இரத்தக் கறைகள்!

தமது குண்டு வீச்சில் 21 தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டோம் என்ற இறுமாப்பு சிங்கள வான்படைக்கு, கொன்றது பச்சை குழந்தையானாலும் சரி, அல்லது பிறந்து 3 நாள் ஆன குழந்தையானாலும் சரி, கொல்லப்பட்டது தமிழன் தானே என்று அவனுக்கு திருப்தி.

|| உறவை இழந்த ஒரு சகோதரனின் உள்ளத்திலிருந்து ….

இள வயதில் மடிந்த உங்களை
இன்றும் நினைத்து அழுகின்றோம்
பதினேழு ஆண்டுகள் கடந்தாலும்
பாசத்துடன் நினைவு கூருகின்றோம்!.

பள்ளி சென்ற உங்களோடு பலரை
அள்ளி எடுத்தான் ஒருநொடிப்பொழுதில்
அந்நியனின் “புக்காரா” வடிவில் காலனவன் அன்று
முப்பொழுதும் நினைத்து வாடுகின்றோம் என்றும்!

எங்களை விட்டு பிரிந்து சென்ற
உங்களின் நீங்கா நினைவுகளோடு….

ஆயினும் தொடராய் எத்தனை எத்தனை இப்படியான துயிர் தமிழீழ மண்ணில் செஞ்சோலை முதல், சிங்களவனின் வரம்பு எல்லை மீறிய இனவழிப்பின் உச்சம் முள்ளிவாய்க்கால் வரை சென்றும் வாய் மூடி கிடக்கிறது உலகம்.

தமிழீழத்திலே சிங்கள இனவெறியால் பலியாகிய ஆயிரம் ஆயிரம் உயிர்களின் ஆன்மாக்களின் குமுறலையும் கண்ணீரையும் குருதியையும் பிசைந்து அழியாத சுவடுகள் ஆகிப்போன 21 பூக்களின் உடல்கள் செங்குருதியில் மிதந்த அந்த கோர சம்பவத்தின் நினைவில் தமிழீழ தேசம் …

இன அழிப்பில் படுகொலையான எம் உறவுகளுக்கு எம் சீரம் தாழ்ந்த கண்ணீர் பூக்களை அவர் பாதம் தன்னில் வைத்து செல்கின்றோம்.

பலிகாகிய உறவுகளை நெஞ்சிருத்தி எம் தேசத்தில் இருள் மேகம் விலகி சுதந்திர உதயத்தைக் காண மலரப்போகும் தமிழீழத்தை ஒளிரவைக்க ஒன்று படுவோம் தமிழினமே …

– மீட்டல்களுடன் தேசக்காற்று.

நாகர்கோவில் மண்ணில் செங்குருதியில் மாணவ செல்வங்கள்…

1995.09.22 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது சிங்கள வான் படைகளின் குண்டுவீச்சால் பிச்செறியப்பட்ட பாடசாலை தளிர்கள் …

கண்ணீருடன் கசியும் இதயத்துடன் ….

செல்வன் மயில்வாகனம் கணகநாதன்

செல்வன் இராமநாதன் கோபிதரன்

செல்வன் சுந்தரலிங்கம் பழனி

செல்வன் நாகமுத்து செந்தில்வேல்

செல்வன் கிருஷ்ணகுமார் தவசீலன்

செல்வன் இராசரத்தினம் உமாகாந்தன்

செல்வி அல்போன்ஸ் அமலவிஜி

செல்வி இரவிந்திரராசா அமிர்தா

செல்வி இராசரத்தினம் கவிதா

செல்வி இராமநாதன் மேதினி

செல்வி மார்க்கண்டு நாகலோஜினி

செல்வி பாலச்சந்திரன் ரஜிதா

செல்வி தாமோதரம் சகுந்தலா

செல்வி இராமச்சந்திரன் சங்கீதா

செல்வி சிதம்பரப்பிள்ளை சசிருபி

செல்வி செல்வகுலசிங்கம் செல்வதி

செல்வி குகசரவணமலை தர்சினி

செல்வி சுந்தரலிங்கம் தர்சினி

செல்வி பூலோகராசா துஷாந்தினி

செல்வி நவரத்தினசாமி உமாதேவி

செல்வி தர்மலிங்கம் துஷந்தினி

லெப்.கேணல் ராஜன் உட்பட்ட மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்

மாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர் லெப்.கேணல் ராஜன் உட்பட்ட ஒன்பது மாவீர்களின்  நினைவு நாள்

lt_col_rajan2

27.08.1992 அன்று யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம் பெற்ற மோதலில்

மேலாளர்கள்(அதிகாரிகள்) பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர்

லெப்.கேணல் ராஜன் (றோமியோநவம்பர்)-(சோமசுந்தரம் சற்குணம் – மாதகல், யாழ்ப்பாணம்)

கப்டன் கணேசன் (கணேஸ்)-(புண்ணியமூர்த்தி ரகு – கந்தளாய், திருகோணமலை)

கப்டன் வன்னியன்-(கணபதிப்பிள்ளை கணநாதன் – துணுக்காய், முல்லைத்தீவு)

லெப்டினன்ட் தயாபரன் (பார்த்தீபன்)-(சிவசுப்பிரமணியம் சிவசொரூபன் – யோகபுரம், முல்லைத்தீவு)

லெப்டினன்ட் அருளையன் (பிரதீப்)-(சாமித்தம்பி மகிந்தன் – புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் இளங்கோ (யோகராஜா)-(பாஸ்கரன் பிரபாகரன் – தையிட்டி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கலைச்செல்வன் (குகன்)-(இரமயநாதன் புனிதராசன் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மதியழகன்-(நடராசா பூவிலிங்கம் – புலோப்பளை, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அறிவழகன்-(நாகலிங்கம் சிவகுமார் – கும்பிழான், யாழ்ப்பாணம்.)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.lt_col_rajan

Lt-Col-Rajan

முன்னாள் யாழ் மாவட்டத் தளபதி, சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி, அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளன் லெப்.கேணல் ராஜன்.

அன்றையநாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது. அன்று காலைதான் ராஜன் எம்மைவிட்டுப் பிரிந்தான்.

முதல்நாள் மாலை, பண்டத்தரிப்பில் நின்ற போராளிகளைப் பார்க்க வந்த ராஜனிடம், எதிரியின் படையணி ஒன்றின் மீதான சிறியதாக்குதல் திட்டம் ஒன்றைக் கூறினர் கோபியும் தோழர்களும்.

எதிரியின் புதிய நில அக்கிரமிப்பை கண்டு குமுறிக்கொண்டிருந்த ராஜன் உடனடியாக ஒப்புதல் தந்துவிட, சிறிதாய்த் திட்டமிடப்பட்டிருந்த அந்தத் தாக்குதலுக்கான ஒழுங்குகள் இரவோடிரவாக நடந்து முடிந்தன.

திட்டம் மிகவும், சிறியதாகவும், சுலபமானதாகவும் எதிர்பார்க்கப்பட்டதால், திட்டம்பற்றி அதில் நின்றவர்களைத் தவிர வேறு எவருக்கும் எதுவுமே தெரியாது போய்விட்டது.

திட்டத்தின் வெற்றி பற்றிய “வோக்கி”ச் செய்தியை எதிர்பார்த்தபடி காந்திருந்தான் ராஜன்.

கிளைமோர் சத்தம் கேட்டவுடன் கோபி… கோபி… என்று கூப்பிட்டும் தொடர்பில்லாமற்போனது.

தலையில் காயத்துடன் கோபியைக் கண்டதும் அவன் வழமையான போர்க்களத்து ராஜனாய் மாறிப்போனான்.

என்ன நடந்ததோ? இரவு கிளைமோர் வைத்தவர்கள் கவனமின்றி நிற்க எதிரி கண்டானோ? இல்லை எம்மவர் ஏதேனும் “வோக்கி”யில் மாறிக் கதைத்துவிட்டனரோ? வேவு பார்த்தோர் தவறோ? வேறு பிழைகளோ?

கோபியின் அணியைச் சூழ்ந்து எதிரிகள். தனி ஆளாய் உள்ளே புகுந்த ராஜன், எல்லோரையும் பின்னுக்கு அனுப்பி விட்டு… அவன் வரவில்லை.

கணேஸ், கிங்ஸ்லி என்று எட்டுப் பேருடன் ஒன்பதாவது ஆளாய் ராஜனும் வரவில்லை.

ராஜன் இல்லை என்ற செய்தி மெல்லப்பரவ அதிர்ந்து துடித்தது தமிழீழம்.

அவன் மீது கொள்ளை அன்பை வைத்திருந்த தலைவர், உயிராய்ப் பழகிய நண்பர்கள், அவனால் உருவான போராளிகள், அவனைக் காத்த மக்கள் என்று தமிழீழம் அழுது துடித்தது.lt_col_rajan1

ராஜன்-றோமியோ நவம்பர்.

எங்கள் போராளிகள் மனத்தில் நிறைந்துவிட்ட இனியபுயல், இறுகிய பாறை.

அடிக்கடி ரவைகளால் தைக்கப்பட்டு, பிய்பட்டு, இரத்தம் கொட்டி, தழும்புகளால் நிறைந்த தேகம்.

அவனது மனம் மட்டும் தளரவில்லை அது இறுகிப் பாறையாய் உருவாகியிருந்தது.

1987ன் தொடக்கப் பகுதியில் ஓர் இருண்டபொழுது. யாழ். காவல்துறைய நிலைய தங்ககமும் தொலைத்தொடர்புக் கட்டடமும் கோட்டைக்குத் துணைாய் நிமிர்ந்து நின்றன.

அதைநோக்கி இருளோடு இருளாய் நகரும் புலிவீரர்கள்

அதில் ஒருவானாய் ராஜன்.

தன் கை ஆயுதத்தைத் தான் பார்க்க முடியதாக காரிருள்.

பின்னால் நிற்பவரின் மூச்சுச் சுடும்.

வியர்வைாற் குளிக்கும் தேகம்.

தாகம் தண்ணீருக்காய் மட்டுமல்ல, அதற்கும் மேலாய், உயர்வாய்,

தாகம் தணிக்க உயிர்கொடுக்கத் தயங்காத வேகம், உறுதி,

இது எம் தாயகம், எங்கள் பூமி.

இங்கு அந்நியனுக்கு என்ன வேலை?

இன்று வெல்வோம்.

அந்நியன் பாடம் படிப்பான்.

அக்காலத்தில் அவன் காரைநகர் கடற்படைக் காவலரண் பொறுப்பாளன். அதற்கு முந்திய சண்டையிலெல்லாம் தன் முத்திரையை ஆழமாய்ப் பதித்திருந்தான். கிட்டண்ணை அவனைக் கவனித்து வைத்திருந்தார். இந்தச் சண்டைக்கென கிட்டண்ணையால் அழைக்கப்பட்டிருந்தான். ராதா அண்ணை தலைமையில் உள்நுழைந்த குழுவில் ராஜனும் ஒருவன்.

உள்நுழைந்தோருக்கு குறுகியதாயும், வெளியில் நிற்போருக்கு நீண்டதாயும் அமைந்த இரவு விடிந்தபோது…

தனது படைவீரர்களை “யாழ்ப்பாணக் காடுகளில்” தேடிக்கொண்டிருந்தது சிறிலங்கா அரசு.

யாழ்ப்பணத்திற் காடுகளைத் தேடிக்கொண்டிருந்தது உலகு.

தன் நண்பர்கள் சிலரையும் தன் கைவிரல்கள் இரண்டையும் இழந்த பின் மருத்துவமனையில் இருந்து அந்தச் சண்டையில் தனது பட்டறிவையும் மீட்டுக்கொண்டிருந்தான் ராஜன்.

இந்திய படைக் காலம், அந்த இரும்பை உருக்காக உருவாக்கிய நாட்கள்.

இந்தியக் காலத்தில் ராஜனின் நாட்கள் வீரம் செறிந்தவை. அவன் நின்று பிடித்த வெறும் குருட்டாம்போக்கு மட்டுமல்ல. வீரம், விவேகம், உச்ச வழிப்பு, அன்புக்கினிய எம்மக்களின் அரவணைப்பு இவைதான் அவனைக் காப்பாற்றிய கவசங்கள். தொடர்ச்சியான முற்றுகைக்குள் – தொடர்ந்த தூக்கமற்ற இரவுகள்.

முற்றுகை ஒன்றிலிருந்து பாய்ந்தோடித் தப்பித்து வந்த நாளின் மறுநாட்காலை ஒருவாரக் கசகசப்புத்தீர குளித்துவிட்டு நொண்டிக்கொண்டு வந்தான். அன்புத் தோழனின் மடியில் ஈரம் ஊறிய காலை முள்ளெடுக்கக் கொடுத்துவிட்டு இருந்தவன் அப்படியே தூங்கிப்போனான் பாவம்.

எத்தகு நெருக்கடிகளிற்கு நடுவிலும், உறுதிதளராத இரும்பு மனம். அதிகம் பேசாதவன். போர்க்களத்திற் பேசுபவான். உறுதியாய்த் தன்னம்பிக்கையுடன், சகபோராளிகளை இலகு நிலையில் வைத்திருக்கும் நகைச்சுவையுடன்.

இந்தியச் சண்டையின் தொடக்க நாட்கள். எமது பொன்னாலைப் பனைவெளியூடாக எதிரியின் பாதச்சுவடுவகள். பட்டறிவு குறைந்த எமது வீரன் ஒருவனிடம் இயந்திரத்துப்பாக்கி. அவனது சூடுகள் உயர்ந்து மேலாய், மிக மேலாய் வீணாகிப்போயின. இதைக்கண்ட ராஜன் “டேய் தம்பி ஆமி இன்னும் பனையிலை ஏறேல்லை. கொண்டா ஜிபிஎம்ஜி யை”. ஆயுதம் கைமாற ஒரு சூட்டுத் தழும்பினைப் பதித்து வைக்கிறது.

பொன்னாலையில் கால் கிழிந்து, இந்தியாவில் விழுப்புண் ஒழுங்காக மாறமுதல் நாட்டுக்கு என்று துடிதுடித்து புறப்பட்டு, மீன்பிடிப்படகில் தீவுக்கு வந்து, இங்கு வந்தால், எங்கும் இந்தியத் தலைகள் தடங்கள்.

“எங்கட ஆட்கள் எங்கே” என்று எல்லாச் சனத்தையும் கேட்டுத்திரிந்து சந்தித்தான்.

யாழ்ப்பாணத்தில் எங்கும் படை முகாம்கள் நிறைந்திருந்த காலத்தில் ராஜன் வந்து சேர்ந்ததும் இந்தியப் படையினர் பிரச்சினையை வேறுவிதமாகச் சந்தித்தார்கள். அவனது உறுதி அவர்களை திணறவைத்தது.

அரைத்தூக்கம் கலையாத அதிகாலைப்பொழுது, ஊரில் உள்ள நாய்கள் எல்லாம் குரைக்கத் தொடங்க, உடலில் உள்ள இரத்தம் எல்லாம் ஒன்றாகிச் சூடாகிப்பாயும்.

“டேய் தும்பன், வெற்றி, எழும்புங்கோடா”

“ரங்கன்”

“அண்ணை நான் முழிப்புத்தான்”

“வெளிக்கிடுங்கோ…”

சிரிப்புத்தான் வரும். என்னத்தை வெளிக்கிடுவது? ஜீன்ஸ் போட்டபடி, கோல்சர் கட்டியபடி வெறுநிலத்திற் படுக்கை, தலைமாட்டில் ஆயுதம் வைக்கவென விரித்திருக்கும் சாரத்தை எடுத்துச் சூருட்டி இடுப்பில் கட்டினால் சரி.

“சரி வெளிக்கிட்டாச்சு.”

நாய்கள் குரைக்கும் சத்தம் நகர நகர, அது படையினரின் நகர்வை நிழலாய்க்காட்டும்.

முன்படலை பிசகென்று பின்வேலியால் பாய, காலில் நெருஞ்சி குத்தும். முந்தநாள் வாங்கிய செருப்பு நேற்றைய ரவுண்டப்பில் தவறிப்போனது நினைவுக்கு வரும்.

விரைவாய் சத்தமின்ற – சத்தமின்றி விரைவாய் அல்லது உள்ளே ரவுண்டப்புக்குள்ளே.

ராஜன் அருகில் இருந்தால் அனைவருக்கும் நம்பிக்கை. எப்படியும் ரவுண்டப்பை உடைக்கலாம்.

“கட்டாயம் உடைக்கலாம். ஒருத்தரும் பயப்படாதேங்கோ”

“டேய் தும்பன் நீ முன்னுக்குப் போய் எத்தனை வாகனம் நிக்குதெண்டு பார். கண்டிட்டான் எண்டால் அடியாமல் வராத”

“ரங்கனும், வெற்றியும் அங்காலைபோய் அடுத்த சந்தியைப் பாருங்கோ. டேய் ரங்கன் ஜி-3 ரவுண்ஸ் தட்டுப்பாடு சும்மா அடிக்காதை”

“தம்பி நீங்கள் என்ன கிறனைட்டோ வைத்திருக்கிறியள். பயப்படாதேங்கோ. என்னோடை நில்லுங்கோ. நான் சொல்லேக்கை கிறனைட் அடிக்கவேணும்”

“அம்மா எல்லோரும் இதில குவிஞ்சு நிண்டால்தான் கட்டாயம் காணுவான். நீங்கள் பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு உள்ளுக்குப் போங்கோ, இந்தாங்கோ கோப்பையையும் கொண்டு போங்கோ.”

கொஞ்சநேரத்தின் பின் கேட்கும் வெடிச்சத்தங்கள் ஓயும்போது, தேநீர் கொடுத்த அம்மா “ஆர் பெத்த பிளையளோ முருகா காப்பாத்து” என வேண்டிக் கொண்டிருக்கும்போது,

இரண்டு றோட்டுக்கடந்து நின்று வரும் ஆட்களிடம் சைக்கிள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் ராஜனும் அவனின் ஆட்களும்.

கிறனைட்டுடன் வந்த சின்னப்பொடியன் “ராஜண்ணை நான் உண்மையாய்ப் பயந்திட்டன். இனிப்பயப்பட மாட்டன். நான் அடிச்ச கிறனைட்டில் ஆமி செத்திருப்பானே?” என்று கேட்டுக்கொண்டிருப்பான்.

அவர்களின் அநேக நாட்கள் இப்படித்தான் விடியும்.

இன்னொரு காலைவேளையில், படுத்திருந்த வீட்டு ஒழுங்கையால் தெருவுக்கு வர, முன்னால் இந்தியப் படை அணி. மற்றவர்கள் காணமுதல் ராஜன் கண்டுவிட்டான். “இண்டைக்குப் பொழுது சூடாகத்தான் விடிஞ்சிருக்கு. நான் இதில வைச்சுத் தொடங்கிறன். நீங்கள் இரண்டு பேரும்மற்றப் பக்கத்தாலை வாங்கோ”. இராணுவம் நிற்கும் செய்தியை அலாதியாய்ச் சொல்வதுடன், அந்தக் கணத்திலேயே திட்டமும் தாக்குதலும். எத்தகையை சூழ்நிலையிலும் ஆபத்தை எதிர்கொள்ள கொஞ்சமும் தயங்காத நெஞ்சுறுதி. பல கட்டங்களில் ராஜன் சாவின் விளிம்பில் ஏறி நடந்து வந்துள்ளான்.

எமது மண்ணில் அந்நியன் இயல்பாய்த் திரிவதா? அமைதியாய் வாழ்வதா? என்று குமுறுவான். அவன் அடிக்கடி கூறும் வார்த்தைகள். “மச்சான் உவங்களை இப்படியே விடக்கூடாது. இண்டைக்கு ரெண்டு ஆமி எண்டாலும் கொல்லவேணும்.”

ஒரு நாள் பண்டத்தரிப்பு முகாம். “என்ன வெடிச்சத்தம்?” என இந்தியப்படையினர் மக்களை விசாரித்துக் கொண்டிருக்கையில் ராஜனும் தும்பனும் தங்கள் பிஸ்டலை இடுப்பில் வைத்த பின்னர், இறந்த படையினரின் துப்பாக்கிகளை ஆளுக்கொன்றாய் எடுத்தபடி சைக்கிளில்…

சுழிபுரம் சந்தி முகாம் அருகே, இந்திய படையினர் ஜீப் ஊர்தியுடன் செத்தபடி கிடக்க….

எம் போராளி காசிமை இழந்த பின்னர், நடு நெஞ்சில் துப்பாக்கி ரவை துளைத்த ராஜனைத் தூக்கிக்கொண்டு வந்தனர் தும்பனுடன் நகுலனும், நித்தியும்.

இந்திய அடிவருடிகள் முகாமிட்டிருந்த சுன்னாகம். இருபுறமும் படைக் காவல். அதனுள்ளே கும்மாளமிட்டனர் எம்மினத்தின் அவமானச் சின்னங்கள். திட்டமிட்ட பெரிய தாக்குதல். அதிக ஆட்கள். முதல்நாள் சாலையைக்கடக்க முடியாமல் ஒத்திவைத்த தாக்குதல். அடுத்த நாள் முயற்சி செய்தபோது,

இரவு சுற்றுக்காவல் படையினரை எதிர்கொள்ள, எல்லாமே பாழ்.

ராஜனை இருட்டுக்குள்ளால் இழுத்தவந்து குப்பியைக் கழட்ட, வந்தது நூல்மட்டுமே.

“மச்சான் சுபாஸ் பிறண் அடி கொளுவியிட்டுது.” எனக்கு பெரிய காயம்… இந்தமுறை சரிவராது… எல்லோரும் சாகாமல் இவர்கள் இரண்டு பேரையும் கொண்டுபோங்கோ.

சொன்னவர் பின்னர் கரைச்சல் தாங்காமல் மயங்கிப்போனார்.

“ஐயோ ராஜண்ணை…” என்று சூட்டும் ரங்கனுமாய் வாய்க்குள் விரலைவிட்டுத் தோண்டி,

தேங்காய் எண்ணை பருக்கு, தேங்காய் உடைத்து பால் பிழிந்து பருக்கி, காரில் வைத்து, ஸ்ராட் ஆகவில்லை என்று கத்தி, பிறகு வேலிவெட்டி பாதை செய்து, தள்ளு தள்ளு என்று, தள்ளிக்கொண்டு போய். உள் ஒழுங்கை வீட்டில் வைத்து, நீர்வேலிச் சனத்தை காவலுக்கு விட்டு,

அந்தநாள் விட்டு அடுத்த நாள், வாதரவத்தைக்குப் போய்ச்சேர, ராஜனும், முரளியும் மயக்கம் தெளிய, லோலோ மயங்கிப்போய், பின்னர் போய்விட்டான். எம்மைவிட்டு போயேவிட்டான்…

அவனது தோழர்களின் இழப்புக்கள் ஒன்வொன்றின் போதும் அவன் அமைதியாய்க் குமுறுவான். கண்கள் வெறிக்க அவன் பாறையாய் இறுகுவான்.

ராஜனது இளமைக்கால நண்பன் தெய்வா, பள்ளிக் காலத்திலிருந்து ஒன்றாய்க் கடலுக்குத் தொழிலுக்குப் போய்வந்து…, படித்து பந்து விளையாடி…, இயக்கத்திற்கு வந்து…, ஒரே படகில் இந்தியா போய்…, கூமாட்டி பயிற்சி முகாமில் ஒன்றாய் இருந்து…, மலைக்கு மூட்டை சுமந்து…, கழுதை கலைத்தது…, பணிஸ்மன்ற் வாங்கி…., பயிற்சி முடித்து…, கரைக்கு வந்து…, எல்லாம்வரை ஒன்றாய் இருந்த தெய்வா பிரிந்துவிட்டான். கடலில் ஓட்டியாய்ப் போனவன் வரவில்லை. அவன் வரவில்லை என்று மாதகல் அழுதது. ராஜன் அழவில்லை. அந்தப் பாறை இறுகியது.

ராஜனும் தும்பனும் பிரிந்தது கிடையாது. ராஜன் என்றால் தும்பன். தும்பன் என்றால் ராஜன். துப்பாக்கிகள் பங்கிடும்போது “தும்பனுக்கு கையேலாது எம்-16 தான் வேணுமம்மான்.” ராஜன் சொல்ல சூடுபட்டு உடைந்து வளைந்த கையை தும்பன் மேலும் வளைத்து வந்து வாங்கிவிட்டு மறைவாய் போய் பெரிதாய்ச் சிரித்தார்கள்.

ஒன்றாய்ச் சாப்பிட்டு, அடிபட்டு, கலைபட்டு ராஜனின் உயிருடன் இணைந்த நட்பு. சுன்னாகத்தில் காலில் இரண்டு வெடிபட்டு காயம் மாறி இந்தியாவில் இருந்து வந்தபோது, தும்பன் இல்லை என்ற செய்தி அவனுக்குத் தெரிந்துதானிருந்தது.

இந்தியப் படையினரின் சூடுதானா? விபத்தா என எல்லோரையும் ஓடிஓடிக்கேட்டு ஓய்ந்திருந்தவேளையில், தும்பன் இல்லாத ஏழாலைக் கிணற்றுக்கட்டு, வாழைத்தோட்டங்கள், பனங்கூடல்கள், கலைபட்டு பாய்ந்தவேலிகள், துரையண்ணை வீட்டு ஊஞ்சல்கள் என்று எல்லாமே வெறுமையாய்த் தெரிய ரங்கன் அழுவான். ராஜன் அழமாட்டான். அந்தப் பாறை இறுகியது.

ரங்கன் சைக்கிள் உழக்க “பாரில்” ராஜன். சுட்டுவிரல் விசைவில்லையொட்டியபடி, கொஞ்சம் அழுத்தினால் ரவைபாயும், எங்கும் போகும் சைக்கிள். சடசட என்று வெடிகேட்கும், சைக்கிள் ஒன்றுடன் கொஞ்ச ரவையும் செலவாகும்.

“தப்பியது ரங்கனால்” என்பான் ராஜன். “ராஜண்ணை இல்லையென்றால் நானில்லை” என்பான் ரங்கன்.

மாவிட்டபுரத்தில் வைத்து வரிசையாய் வந்த மொட்டை ஜீப்புக்கு அடிக்க நல்லாய் நடந்த சண்டை நெடுமாறன் வீரச்சாவடைய, ரங்கன் காயம்பட திசைமாறியது.

திருச்சியில், “ராஜண்ணை… ராஜண்ணை” என்று ரங்கன் உரத்துக்கூவி அழுது துடித்து மௌனித்தபோதும் யாழ்ப்பாணத்தில் நின்ற ராஜன் அழவில்லை. பாறை இறுகியது.

மாதகலில் தன்னுடன் நின்ற ஏழுபேரை வைத்து பெருங்கூட்டமாய் வந்த இந்தியப் படையினரை அடித்துக்கொன்று, கலைத்து, பெருந்தொகையாய் ஆயுதங்கள் அள்ளிவந்தபோது, எல்லா நாளும் ராஜனுடன் திரிந்த வெற்றி திரும்பிவரவில்லை.

ஆயுதங்கள் எல்லாம் அப்படியே குவிந்து கிடக்க, காயப்பட்ட தம்பியையும், வெற்றியின் உடலையும் குப்பிளானில் பின்ற கிளியிடம் அனுப்பிவிட்டு, ஆயுதங்களிற்கு காவலாய் நின்றபோது ராஜன் அழவில்லை. அந்தப் பாறை இறுகியது.

இந்தியா போனது. தமிழீழ வீடெங்கும் மகிழ்ச்சிக் குரல்கள், தெருவெங்கும் புலிவீரர். மிச்சமாயிருந்தன இந்திய எச்சங்கள். புலனாய்வுப் பணியில் ராஜன்.

அவனது மனம் விடுதலைப் போரையும், அதனுடன் இணைந்தவற்றையும் தவிர வேறொன்றைப் பற்றியும் எண்ணியதே கிடையாது. இப்படித்தான் ஒரு நாள் பள்ளியில் அவனுடன் படித்தவள். இயக்கத் தொடர்பில் அறிமுகமாகி பழகிக் கடிதமொன்றில் என்னவோ எழுதி அவனிடம் அனுப்பிவிட்டு காந்திருந்தாள் பாவம்.

கடிதத்தைப் படித்தவன் பக்கத்தில் நின்றவனுடன் நேரே போய்க் கடிதத்தைக் கிழித்துக் கொடுத்துவிட்டு “போராட்டம் தவிர வேறொன்றும் நான் நினையேன்” என்றான்.

தன் ஆசைமகன் போகும் ஊர்தியையென்றாலும் பார்போமென்று தாய்க்கிழவி றோட்டில் கால்கடுக்க காந்து நிற்க, இவன் மாதகலில் தான் போன வேலையை முடித்து திரும்பி வருவான்.

சிறிலங்காவுடன் சண்டை தொடங்கியது. ராஜன் ஒய்வின்றிச் சுழன்றான். அடிக்கடி அண்ணைச் சந்தித்தான். எல்லா இடமும் திரிந்தான். ஒவ்வொரு பங்கருக்கும் ஒவ்வொரு மண்மூட்டைக்கும் இடம் சொன்னான்.

மயிலிட்டியில் பெருஞ்சமர். ராஜன் ஊண் உறக்கமின்று நின்று வழிநடத்தினான். மழையாய்ப் பொழியும் செல்கள் – ரவைகள். மயிலிட்டிச் சண்டையில் மட்டும் இரண்டு தடவைகள் குண்டுச்சிதறல்கள் அவனைத் துளைத்துச் சென்றன. ஓய்வில்லை – அங்கு நடந்து கொண்டிருந்த சண்டையில் இருந்து அவனால் ஒதுங்கியிருக்க முடியவில்லை.

கோட்டை முற்றுகை இறுக இறுக எங்கள் தளபதிகளின் தூக்கமற்ற இரவுகள் பெருகிக்கொண்டிருந்தன. மணியந்தோட்டத்திலிருந்து பொன்னாலைவரை நின்ற இளம் போராளிகள் ராஜனைக் கண்டு சிரிப்பர். இரவில்லை, பகலில்லை, ஓய்வில்லை, உணவில்லை, தன்னைப் பிழிந்து முற்றுகைக்கு உரம் கொடுத்தான். பாணுவின் உற்ற துணையாய் முற்றுகைக்குத் துணை நின்றான்.

எம்மால் உள்ளிறங்க முடியாமல்போய்விட்ட, இரண்டாவது கோட்டை உட்புகல் நடவடிக்கை முடிந்து விடிந்தபோது, “றோமியோ நவம்பர்” என்று பாணுவின் “வோக்கி” கூப்பிட்டபோதும் பதிலில்லை.

மானிப்பாய் மருத்துவமனையில் பேச்சு மூச்சின்றி கிளி, ஜவான் ஆகியோருக்கு இடையில் கந்தல் துணிபோற் சுருண்டு கிடந்தான்.

காயம் மாறி கொஞ்சம் தேறி எழும்பி வந்தவன். இப்போது சாள்ஸ் அன்ரனி சிறிப்புப் படையணியில்.

இந்தக் காலம் ராஜனை ஒரு சிறந்த நிர்வாகியாக உருவாக்கியது. பால்ராஜின் துணைவனாய் நின்று படைப்பிரிவை உருவாக்குவதில் பெரும்பங்காற்றினான். சகல போராளிகளுடனும் அன்புடன், கண்டிப்புடன் நடைபெற்ற கடுமையான பயிற்சிக் காலம்.

தமிழீழத்தின் எல்லா இடங்களிலிருந்தும் வந்திருந்த போராளிகள்.

குடும்பத்தைப் பிரிந்து வந்தவர்களிற்கு தாயாக, தந்தையாக, நண்பனாக ஆசானாக.

தமிழேந்தி அண்ணனிடம் காசுவாங்கி, இல்லையென்றால் ஊரில் கடன்வாங்கி, அதுவும் முடியாவிட்டால் வீட்டுக்குப் போய் பொருட்களைத் தூக்கி, அண்ணன் வணிகத்திற்கும் வைத்திருக்கும் பொருட்களை அள்ளி ஊர்தியில் ஏற்றி…

எப்படியோ போராளிகளைத் தனது பிள்ளைகளாய் உயிராய் பார்த்தான். கவனித்தான்.

வன்னி போர்க் களம். எங்கள் வன்னிக் காடுகளை எதிரியின் பல்லாயிரம் படைகள் ஊடறுத்துவர முற்பட்ட “வன்னிவிக்கிரம” பெரும் படைகொண்டு ராஜன் மோத எதிரிப்படை திணறியது. சுட்டுவீழ்த்தப்பட்ட ஹெலிகப்டர் துண்டுகளை அள்ளி எடுத்து அனுப்பிய பின்னரும் தொடர்ந்தது சண்டை.

எல்லாப் பக்கங்களாலும், பூவரசங்குளம் சந்திக்கு வந்து ஏறிய எதிரிகளை எதிர்கொண்டனர் எம்வீரர்கள். கடும் சண்டை.

வானை நோக்கி நின்றவைகளும் நிலம் நோக்க, அனைத்து ஆயுதங்களையும் ஏந்திய கரங்களும் உறுதியாய் நிற்க, ஓடினான் எதிரி.

கொஞ்ச நாள் இடைவெளியில் எதிரியின் இன்னொரு முயற்சி. வவுனியாவல் நகர்ந்து தோற்ற எதிரி, இம்முறை மன்னார் பக்கமாய்…

இம்முறை சண்டை கொஞ்சம் கடுமையாய்.. எமது வீரர்களை இருபுறமும் சூழ்ந்தபடி எதிரி. ராஜனை உணர்ச்சிவசப்பட வைக்கும் சண்டை.

எதைப்பற்றியும் யோசிக்காது எதிரியின் முகம் தெரியும் தூரத்தில் நின்று மோதிய, ராஜனின் விரல் இல்லாத உள்ளங்கையை உடைத்தபடி ஒரு ரவை, இன்னொரு ரவை அதே கையில் நடுவில்.

மிக அருகில் எதிரியின் துப்பாக்கிகள் சடசடக்க உறுதியாய் எதிர்த்து நின்றனர் தோழர்கள்.

உள்ள ஆயுதங்கள் எல்லாம் கொண்டுபோய், அடிஅடி என்று அடித்து ஆமியைக் கலைத்துவிட்டு, மயங்கிக்கிடந்தவனை, இழுந்து வந்து சேர்த்தான் ரூபராஜ்.

அன்று ராஜன் திரும்பி வந்தது, நம்பமுடியாத அதிசயம். அவன் மயங்கி வீழ்ந்து கிடந்தபோது, எதிரி மிக அருகில். மிக அருகிலேயே நின்றிருந்தான்.

ஆனையிறவு பெரும் போர்க்களம். ஒன்வின்றிப் பம்பரமாய் ராஜன்.

சென்றி நிற்கும் பங்கருக்குள், பசீலன் பொயின்ரில், சமையற் கொட்டிலில், சந்தியில் இருந்த மெடிக்ஸ் வீட்டில், எங்கும் நின்றான். எல்லா நேரமும் நின்றான்.

கட்டைக்காட்டில் ஆமியின் கவச ஊர்தி தகர்ந்தாலும், ஆர்.பி.ஜிக்கு ரோமியோ நவம்பர்.

புல்லாவெளியில் ஆட்டிலறி செல்விழுந்து இரண்டுபேர் செத்து ஐந்து பேர் காயமென்றால் மெடிக்ஸ் வானுக்கு றோமியோ நவம்பர்.

மெடிக்ஸ் வானை போகவிடாமல் கெலி நின்றால் கலிபர் அனுப்பவும் றோமியோ நவம்பர்.

குணாவின் குறூப்பிற்கு அனுப்பிய காக்குகளுக்கு சாக்குஊசி வேணுமெண்டால் றோமியோ நவம்பர்.

வீரர் வீழ்ந்து வியூகம் உடைந்து எதிரிப்படை முன்னேறும்வேளையில் தனித்த வீரரை ஒன்றாய்ச் சேர்நது எதிரியைத் தடுக்கும்வேலைக்கும் றோமியோ நவம்பர்.

எல்லாவற்றிற்கும் நின்றான். எல்லாப் பாரத்தையும் தானாய்ச் சுமந்தான்.

எப்படிப்பட்டவனை நாம் இழந்துவிட்டோம்.

பட்டறிவு மிக்க போர்த்தளபதியாய் ராஜன் நின்றபோதும் அவன் போர்க் களத்திலிருந்து தள்ளியே வைக்கப்பட்டிருந்தான். எங்கள் தலைவரின் பெருங்கனவுகளின் உறைவிடமாக ராஜன் இருந்தான். யாழ்ப்பாணச் சண்டையில் ஈடுபட்டிருந்த குழுக்களுக்கு உணவு வழங்கல் செய்யும் வேலையை அவனிடம் வலிந்து கொடுத்திருந்ததன் காரணம் அவனை யுத்த களத்திற்கு முன்முனையிலிருந்து எட்ட நிற்க வைப்பதற்கன்றி, வேறில்லை.

பட்டறிவு மிக்க வீரன்.

அவனது பட்டறிவுகள் மெய்சிலிர்க்கும் கதைகள்.

ஓய்வில்லாக் கடும் உழைப்பாளி.

அவன் மறையும்போது தலைவரின் பெரும் கனவில் உருவான மேலாளர்கள்(அதிகாரிகள்) பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளன். சிறந்த போர் பட்டறிவுகளை முன்னரே பெற்றிருந்த அவன். இங்கு எல்லா இடமும் இருந்து பொறுக்கி எடுத்த வீரர்களைப் பயிற்றுவித்தான். தன் அனுபவங்களை பிழிந்தெடுத்துக் கொடுத்தான். போர்க்கலை நுட்பங்களைக் கற்றான், கற்பித்தான். நேர்த்தியான வேலைத்திட்ட ஒழுங்கமைப்பை, கண்டிப்பை, அன்பை, கடும்பயிற்சியை,

வியூகங்கள், வழங்கல்கள், வரைபடம்… என்று எல்லாவறறையும் கற்றான். கற்பித்தான்.

ராஜன் அமைதியானவன். தன் செயல்களினால் மட்டும் தன்னை அடையாளம் காட்டியவன். ஆம் செயல்களினால் மட்டும்.

எந்த வேலையாக இருந்தாலும் ராஜன் அதிகம் பேசுபவனல்ல. ஏதாவது படையத் திட்டம் தீட்டப்படும் வேளைகளில், பேசாது பார்த்தடி, கேட்டபடி இருக்கும் ராஜன் , திட்டம் தீட்டப்படுவது நிறைவுறுவதற்கு முன்னால் உள்ள இடைவெளியில் பேசுவான். குறிப்பிட்ட திட்டம் செயல் வடிவம் பெறும்போது அவனது யுக்தியின் பெறுமதி தெரியும்.

தனது கடமையைச் முழுமைமாகச் செய்வதில் தன்னை வெளிப்படுத்துவான். எந்தச் வேளையிலும் மற்றைய ஒருவரைக் குறை செல்வதைக் காண்பதரிது. “கடமையைச் செய், பயனை எதிர்பாராதே” என்பதற்கு எடுத்துக்காட்டாய் கர்ம வீரனாய் விளங்கினான்.

அவனது வரலாறு முழுமையாக எழுதப்பட்டால், அது பெரும் காவியமாகும். படைய வல்லுநர்களால் மட்டுமல்ல, மருத்துவ வல்லுநர்களாலும் நம்பமுடியாத அதிசயமாய் அவன் வரலாறு திகழும்.

எண்ணற்ற தாக்குதல்கள், எண்ணற்ற தோழர்கள், அவன் செய்தவைகள், அவன் பெற்ற பட்டறிவுகள் எண்ணி முடியாதவை. எழுத்தில் அடங்காதவை.

ச.பொட்டு (பொட்டம்மான்)
புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்
தமிழீழ விடுதலைப் புலிகள்

லெப்.கேணல் தூயமணி உட்பட்ட மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்.

Lt.Col.Thooyamaniவவுனியா புளியங்குளம் பகுதியில் 22/08/1997 அன்று ஜெயசிக்குறு படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியை முறியடித்து வீரகாவியமான லெப்டினன்ட் கேணல் தூயமணி அவர்களின் வீரவணக்க நாள்

முறியடிப்பு சமரின் போதும் விடியலுக்காக தங்கள் இன்னுயிரை ஈர்ந்து தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.

லெப்.கேணல் தூயமணி ( வைத்தியநாதன் சிவநாதன் – கிளிநொச்சி )
கப்டன் கற்கோடன் ( சின்னத்தம்பி சத்தியானந்தன் – மட்டக்களப்பு )
வீரவேங்கை கலைச்சுடர் (நந்தகுமாரி) ( முருகையா சிவரூபி – யாழ்ப்பாணம் )
வீரவேங்கை நிலவன் ( பரமேஸ்வரன் ஆனந்தகுமார் – யாழ்ப்பாணம் )
லெப்டினன்ட் நடனக்குமார் ( சிவஞானம் ஜெயராம் – மட்டக்களப்பு )
லெப்டினன்ட் நக்கீரன் ( கிருஸ்ணபிள்ளை சிறீஸ்வரன் – அம்பாறை )2ம் லெப்டினன்ட் நித்தியா ( கந்தையா ராகினி – வவுனியா )
லெப்டினன்ட் மான்விழி ( தங்கவேல் ராஜி – யாழ்ப்பாணம் )
லெப்டினன்ட் திராவிடன் ( பத்மநாதன் விஸ்ணுகாந்தன் – மட்டக்களப்பு )
லெப்டினன்ட் இளமாறன்( உமேந்திரக்குருக்கள் கார்த்திகைத்தீபன் – யாழ்ப்பாணம் )
2ம் லெப்டினன்ட் வேலவன் ( ஆசீர்வாதம் சசிதரன் – யாழ்ப்பாணம் )
2ம் லெப்டினன்ட் அன்பு ( திலகேந்திரன் ஸ்ராலின் விஜயபாஸ்கர் – யாழ்ப்பாணம் )
வீரவேங்கை யாழ்மொழி ( முருகையா சிவகௌரி – கிளிநொச்சி )

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கும்  ஏனைய மாவீரர்களிற்கும்  எமது வீரவணக்கங்கள்.

கேணல் ராயு 11ம் ஆண்டு வீரவணக்கம்

Colonel Raju - Kuyilan

கேணல் ராயு வீரவணக்கம்

*

*

அக்கினிச் சுடர்கள்

அக்கினிச் சுடர்கள்

இறுவெட்டு : அக்கினிச் சுடர்கள்

இசை : எஸ் பி . ஈஸ்வரநாதன் , இசைபிரியன்

பாடல் வரிகள் : புதுவை இரத்தினதுரை, நாவண்ணன் , கு.வீரா ,

பாடியவர்கள் : எஸ் ஜி . சாந்தன் , ஜெயா சுகுமார் , திருமலை சந்திரன் , நிரோஜன் , இளந்தீரன் , செம்பருத்தி , தனேந்திரன் , கலைமாறன் , மணிமொழி , கிருபாகரன் , வித்தகி.

வெளியீடு : தமிழீழ விடுதலைப்புலிகள் – தமிழீழம் .

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்

ltte women wingsவிடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் பலாலிப்பகுதி காப்பரண் தொகுதிகளில் பெண் போராளிகளுக்கென தனித்த பகுதிகளை ஒதுக்கியிருந்தார். கோழியின் சிறகுகளுள் குஞ்சுகள் இருந்த காலம் முடிந்துபோனது. குஞ்சுகளின் காலம்.

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985 ஆவணி 18

வீடுகளும், தோட்டங்களும், தோப்புக்களுமாகவுள்ள பலாலிப் பகுதியில் எந்த மதிலுக்குப் பின்னால் எந்த வாழை மரங்களிடையே எந்த வடலியின் மறைவில் எப்போது சிறிலங்கா இராணுவம் வந்துநிற்கும் என்று எவருக்கும் தெரியாது. இரவு, பகல் என்றில்லாமல் எப்போதுமே விழிப்பாக இருக்க வேண்டிய இடம் அது. பலருக்கு இதுவே முதற்களம். இது பெண் போராளிகளின் பகுதி என இராணுவத்தால் இனங்காணப்பட்ட இடங்களிலே ஓயாமல் முன்னேறுவதும் தொந்தரவுத் தாக்குதலும் தான். இத்தகைய தொடர் சம்பவங்களால் சோர்வடையாமல் பெண் போராளிகளுக்குத் தெம்பூட்டியது, தலைவர் அவர்கள் சொல்லிவிடுகின்ற நம்பிக்கையான வார்த்தைகளும் உத்திகளும் தான்.

1990ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் பாரிய முன்னேற்ற முயற்சியொன்றை படையினர் மேற்கொண்டனர். கப்டன் அஜித்தாவின் வழிநடத்தலில் பெண் போராளிகள் நான்குமணி நேரமாக எதிர்ச்சமராடி முன்னேற்ற முயற்சியை முறியடித்தனர். எதிரிகள் பலரை வீழ்த்தியதோடு, எம் – 203 பிஸ்ரல் உட்பட வேறுசில ஆயுதங்களையும், ஒரு இராணுவத் தின் சடலத்தையும் கைப்பற்றினர். முதன் முதலாக தனித்துப் போரிட்டு, பகைவரின் ஆயுதம் எடுத்த சமரைத் தலைமையேற்று நடத்திய பெருமை கப்டன் அஜித்தாவுக் குரியது.

1986ஆம் ஆண்டில் மன்னார் சிறிலங்கா காவல்நிலையம் மீதான தாக்குதல், தள்ளாடியிலிருந்து முன்னேறி வந்த சிறிலங்காப் படையினரை அடம்பனில் இடைமறித்துத் தாக்குதல். 1987இல் யாழ். தொலைத் தொடர்பு நிலையம் மீதான தாக்குதல், மயிலியதனைச் சிறுதளம் மீதான தாக்குதல் என ஆண் நபாராளிகளின் வழிநடத்தலில் களங்களாடி, சிறிது சிறிதாக போராற்றலை வளர்த்துக்கொண்டிருந்த பெண் போராளிகளுக்கு, இந்திய இராணுவக் காலம் திறந்த பல்கலைக்கழகமானது.

கல்லுண்டாய், வட்டுக்கோட்டை, சித்தன்கேணி, சங்கானை, சண்டிலிப்பாய், தொட்டிலடி, பொன்னாலை, மாசியப்பிட்டி, கோப்பாய், நீர்வேலி போன்ற பல இடங்களில் இந்திய இராணுவத்தினரின் ஏராளமான தாக்குதல்களை எதிர்கொண்டு பதிலடி கொடுக்கும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது. சூழலை நன்கறிந்த, போர் அனுபவமுள்ள ஆண் போராளிகளுடன் நான்கைந்து பேர் கொண்ட சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து சமராடிய நாட்கள் அவை.

முன்னேறி வந்த இந்திய இராணுவம் கல்லுண்டாய் வெளியில் தளம் அமைத்து நிலை கொண்டது. லெப்.கேணல் ஜொனியின் தலைமையில் பெண்போராளிகளும் புறப்பட்டார்கள் தளத்தைத் தாக்கியழிக்க. இரண்டு இரவுகள் முயன்று, மூன்றாம் நாளிரவு பலத்த எதிர்ப்புக்களின் நடுவே தளத்தை நெருங்கினர். காப்புகளற்ற வயல் வெளிகளில் புலிகள். வரம்புகளைவிட்டு தலையை உயர்த்தியவர்களின் நெற்றிகளில் விழுந்தது சூடு. கடும் மோதலின் பின் தளத்தைத் தகர்த்து, எதிரிகளின் ஆயுதங்களை அள்ளி எடுத்தவர்கள், ஒருவரை மற்றவர் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள். மூன்று நாட்களாகச் சேற்றுவயலில் கிடந்ததால் உடல் முழுவதும் சேறு.

பெண் போராளிகளிடம் வந்த லெப். கேணல் ஜொனி,

” பிள்ளையள் போய் குளித்துவிட்டு கொஞ்சம் ஓய்வெடுங்கோ. அடுத்த சண்டைக்குப் போகவேண்டும். ”

என்று சொல்லி முடிப்பதற்கிடையில் வந்தது செய்தி, ” சங்கானைக்கு ஆமி வந்திட்டான். ”

இராணுவத்தோடு மட்டுமல்ல போராட்டம்; இயற்கையோடும் தான்.

1990ஆம் ஆண்டு. பலாலிப் பகுதியில் நிலைகொண்டிருந்த பெண் போராளிகளில் ஒரு பகுதியினர் கொக்காவிலிலுள்ள சிறிலங்கா படைத்தளத்தைத் தாக்கவென வன்னிக்கு வந்துவிட்டனர். பெண் போராளிகளுக்குரிய இலக்குகள் தலைவர் அவர்களால் தனித்துப் பிரிக்கப்பட்டன.

சண்டை தொடங்கியது. தமக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகைவரின் காப்பரணை மின்னல் வேகத்தில் அழித்து உள்நுழைந்தனர் பெண் போராளிகள்.

” நான் ஆமியின்ரை பொயின்ரில நிக்கிறன் ” வானலையில் வந்தது மேஜர் சஞ்சிகாவின் குரல். அடுத்தடுத்த காப்பரண்களைக் கைப்பற்றவேண்டிய ஆண் போராளிகளின் அணிக்குப் பொறுப்பாகப்போன தளபதியால் நம்பமுடியவில்லை. ஆனால் சஞ்சிகா
இப்படிச் செய்யக்கூடியவர்தான் என்பதும் இவருக்குத் தெரியும். உண்மையிலேயே மேஜர் சஞ்சிகாவின் அணி உள்நிற்பதை உறுதிசெய்த தளபதி, பக்கக் காப்பரண்கள் பிடிபடாத நிலையில் ஒரு அணி தனித்து நிற்பதன் ஆபத்தை உணர்ந்து தாக்குதலை வேகப்படுத்தினார். களங்களில் சஞ்சிகா ஒரு புயல்தான்.

அந்நிய இராணுவங்களாலும் சமூக விரோதிகளாலும் சூழப்பட்டிருக்கும் இடமொன்றில் ஒரு பெண் இரகசிய ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மிகவும் சிரமம். ஈழத்தின் தெற்குப்பகுதியின் இந்நிலையைப் புரிந்துகொண்ட விடுதலைப்புலிகளின் மகளிர் பிரிவினர் தம்மை யாரென இனங்காட்டிக் கொள்ளாமல் இயங்கிக்கொண்டிருந்தனர். லெப். அனித்தாவும் தன்னை வெளிப்படுத்தாமல் தாயகத்துக்கான பணிகளில் ஈடுபட்டார்.

அனித்தாவின் வேலை மட்டக்களப்பு மாவட்டமெங்கும் விரிவாக்கப்பட்டது. இருவேறு பண்பாடுகளைக் கொண்ட தமிழ், இஸ்லாமிய சமூகத்தவரிடையே பொதுவான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்களின் எளிமையான வாழ்வைப் புரிந்துகொண்டு அவர்களுள் ஒருவராகி நிதானத்துடனும் கவனத்துடனும் செயலாற்றத் தொடங்கினார்.

இந்திய இராணுவ வருகையின் பின் அனித்தாவின் செயற்திறன் அம்பாறைக்கும் தேவைப்பட்டது. வேலைகள் விரிவாக்கப்பட்டன. எடுத்த பணியை முடிப்பதற்காகப் பல தடவைகள் பல படைத்தளங்களைக் கடந்து அம்பாறைக்கும் மட்டக்களப்புக்குமாக அவர் போய்வரவேண்டியிருந்தது.

தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் பகைத்தளங்களைக் கடந்து போய் வருகின்ற அனித்தா 1988.11.28 அன்று காட்டிக்கொடுக்கப்பட்டு, தேசத் துரோகிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படும் வழியிலேயே சயனைட் அருந்தி தன்னை அழித்துக்கொண்டார்.

ஈழத்தின் தெற்கில் உதிர்ந்த முதல் வித்து லெப். அனித்தா.

கள்ளீச்சையிலிருந்து வெலிகந்த நோக்கிக் காவல் உலாப்போகும் சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் செய்வதென முடிவெடுக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில போராளிகளைக்கொண்ட குழுவின் தலைவி யாக மேஜர் வளர்மதி, குழுவில் ஒருவராக 2ம் லெப். நிலா.

நிலாவும் வளர்மதியும் உயிர் நண்பிகள். இருவரின் உரையாடலிலும் நகைச்சுவை இழையோடும்.

இருநாள் பயணம். தேவையான உணவுப் பொருட்கள், ஆயுத தளபாடங்களோடு பயணம் தொடர்ந்தது. அருவிகள், மலைகள் கடந்து நீண்ட பயணத்தின் முடிவில், தாக்குவதற்காக நிலையெடுத்தனர். ஊர்திகளில் வந்த சிறிலங்காப் படையினர் மீது இருபது நிமிடங்கள்வரை நீடித்த தாக்குதலில், கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்களைக் கைவிட்டு ஏனையோர் காடுகளுக்குள் தப்பியோடினர். படையினரின் ஜீப் ஒன்றும், உழவு இயந்திரம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டது. எல்.எம்.ஜி உட்பட கைப்பற்றப்பட்ட ஆயுதங்களோடு மாவீராங்கணையான 2ம் லெப்.நிலாவின் வித்துடலையும் சுமந்தபடி, மறுபடி மலைகள், அருவிகள் கடந்து தொடர்ந்தது பயணம்.

காரிருளில் தம்மை உருமறைத்த படி இருளோடு இருளாக வயல் வரம்புகளுடன் சில உருவங்கள் ஊர்ந்தன. பூநகரியிலிருந்த சிறிலங்கா படையினரின் தேடொளிகள் உயிர் பெற்றதும் அவை மண்ணோடு ஒன்றின. தேடொளி வேறுதிசை திரும்பியதும் மறுபடி ஊர்ந்தன. எனினும் ஐயங்கொண்ட படையினர் ரவைமழை பொழிந்தனர்.

ஓசையேதும் எழுப்பாமல், காயப்பட்ட தோழிகளைத் தமது தங்ககம்வரை சுமந்துவந்த வேவுப்புலிகள் அவசர முதலுதவிச் சிகிச்சையில் இறங்கினர்.

நீர் தேங்கி நிற்கும் வயல்களில், இரவுகளில் ஊர்ந்து போவதால் உடல் முழுவதும் சேறு அப்பும். சென்றபணி முடித்துத் திரும்பும்வரை சேறுதான் அவர்களுக்குப் போர்வை.

நல்ல குளிர் இரவுகளில் பூநகரிக் கடலை நீந்திக் கடந்து படையினரின் கண்களில் படாமல் கரையேறி, நாகதேவன்துறை கடற்படைத் தளத்தைக்கூட தம் வேவுக் கண்களிலிருந்து விட்டுவைக்க வில்லை இவர்கள்.

தனித்த வேவுப்பாதை. கப்டன் தேனுஜாவின் கனவு அது. அவர் விழிமூடி ஒரு வருடத்தில் நனவானது. பூநகரிப் படைத்தளம் மீது ||தவளைகளெனப் || புலிகள் பாய்ந்தபோது தனித்தனியாக தாம் எடுத்த வேவுப் பாதைகளால் கப்டன் துளசிராமும் லெப்.கேணல் முகுந்தாவும் அணிகளை வழி நடத்தி களம் புகுந்தனர்.

1992.03.01 அன்று தரைப்படையிலிருந்து முப்பது பெண்போராளிகள் கடலுக்குள் குதித்தார்கள்.

தலைவர் அவர்கள் கடற்புலிகளுக்குரிய பயிற்சித் திட்டங்களை வரையறுக்கும் போது நீச்சற்போட்டி ஒன்று வைத்தார். ஆண்கள் மூன்று கடல்மைல்களையும், பெண்கள் இரண்டு கடல்மைல்களையும் அடிப்படையில் முடித்திருக்கவேண்டும். ஆனால் நீச்சலுக்கான விருதைப் பெறுவதாயின், ஆண்கள் ஐந்துகடல்மைல்களையும், பெண்கள் மூன்று கடல் மைல்களையும் நீந்தி முடிக்கவேண்டும்.

பெண்கள் ஐந்து கடல் மைல்களை நீந்தி முடித்தார்கள். தலைவர் அவர்களிடமிருந்து சிறப்புப் பரிசுகளை பெற்றுக் கொண்டார்கள்.

1995ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதத்தில், சிறிலங்கா கடற்படையின் முன்னாள் மாலுமிகள் உட்பட நூற்று இருபத்தெட்டுப் பயணிகளைச் சுமந்து வந்த ” ஐரிஷ்மோனா ” கடற்புலிகள் மகளிர் படையணியால் வழிமறிக்கப்பட்டு, முல்லைத்தீவுக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டது. கடற்புலிகளின் இலக்கு ” ஐரிஷ்மோனா ” அல்ல. இது இறால், இறாலை மகளிர் படையணி தக்கவைத்துக் கொண்டது.

இறால் தேடி சுறாக்கள் புறப்பட்டன. தேடிவந்த சிங்களக் கடற்படையினரின் இரண்டு சுப்படோரா படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன. நவீன ராடர் கருவிகளும், நவீன பீரங்கிகளும் கைப்பற்றப்பட்டன. இருபது படையினரைக் காணவில்லை என சிங்கள அரசின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்தனைக்கும் ஏதுவான இறாலை கடற்புலிகள் மகளிர் படையணி தன் தூண்டிலில் தக்கவைத்திருந்தது கடற்சமரில் முத்திரை பதித்திருந்தது.

காடு. பெருங்காடு. சிறுத்தைகள் போல் ஓசையின்றி நகர்ந்தார்கள் அவர்கள். ஒட்டவெட்டிய முடி, பார்வையில் கூர்மை, பலமான உடலமைப்பு, பார்த்தாலே தெரியும் இவர்கள் எமது சிறப்புப் படையணியினர் என்பது.

முன்னணியில் நகர்ந்த மேஜர் மாதங்கிக்கு வெளிப்புறத்தே நடக்கும் பெருஞ் சண்டையின் ஓசைகள் கேட்டுக் கொண்டிருந்தன. மணலாற்றிலுள்ள ஐந்து படைத்தளங்கள் ஒரேநேரத்தில் விடுதலைப்புலிகளால் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. சிறிலங்கா இராணுவத்தினரும் மிக விழிப்புடன் இருந்ததால், வெளிப்புறக் காப்பரணிலேயே கடும் மோதல் வெடித்திருந்தது.

மேஜர் மாதங்கியின் அணியோ தளத்தினுள் ஊடுருவி, ஆட்லறி ஏவு தளத்தைக் குறிவைத்து நகர்ந்து கொண்டிருந்தது. போகும் வழியிலேயே சண்டை தொடங்கிவிட்டது. இடைவழியில் இவர்களைக்கண்ட இராணுவம் சுட, இவர்களும் சுட்டவாறே நகர்ந்தனர். முடிந்தவரை சண்டையைத் தவிர்க்க முயன்றும், முடியாமல் போனதால் சண்டையிட்டபடியே ஆட்லறித் தளத்தினை நெருங்கியது அணி. இவர்கள் சுட்டுவீழ்த்த, புற்றீசல் போல் படையினர் வந்துகொண்டேயிருந்தார்கள்

ரவைகள் முடியும்வரை சண்டை நடந்தது. ரவைகள் முடிந்த பின்பும் சண்டை தொடர்ந்தது. சுடுகலன்களும் கைகளாலும் கால்களாலும் சிங்கள இராணுவத்தினரை அடித்து வீழ்த்தியவாறும், இழுத்து விழுத்தி மரங்களோடு மோதியவாறும் நிலைமையைத் தொடர்ந்தும் தம் கட்டுப்பாட்டில் வைத்தபடியே, ஆட்லறியைத் தகர்த்தார்கள் இவர்கள்.

பெறுமதிமிக்க நூற்று எழுபத்தைந்து வீராங்கணைகளின் உயிர்கள், ஐநூற்று அறுபத்தாறு தூக்கமற்ற இரவுகள், மழைக் காலங்களில் நனைந்தவாறும், நீர் நிறைந்த பதுங்கு குழிகளோடும் கழிந்த நாட்கள், வெயில் காலங்களில் நாவரண்டு மர இலைகளில் வழியும் பனிநீரையும் விடாது சேகரித்துக் குடித்த நாட்கள், சிறிலங்கா படையினர் நகரும் திசைகளிலெல்லாம் பதுங்கு குழிகளை அமைத்தவாறே நகர்ந்த நாட்கள், நீண்ட தொலைதூர சுமைதாங்கிய நடைப் பயணங்கள், ஓயாத சண்டைகளால் உண்டான உடற்களைப்பு எல்லாவற்றையும் கடந்து ஓயாத விழிப்புடன் 2ம் லெப். மாலதி படையணி போரிட்டது || ஜெயசிக்குறு | எதிர் நடவடிக்கைக்களத்தில்.

நெடுங்கேணியில் ஆரம்பமாகி, புளியங்குளம், புதூர், மன்னகுளம், மாங்குளம், வன்னிவிளாங்குளம் என்றுபோய் கடைசியில் அம்பகாமம்வரை களம் நீண்டு அகன்றது. போரனுபவம் மிக்க பழையவர்கள், போர்க்களத்தில் வைத்தே புதிய போராளிகளுக்குச் சண்டை பழக்கிய களம் அது. மறுபடி மறுபடி சிறிலங்கா படையினரின் பதுங்கித் தாக்கும் அணிகள் ஊடுருவ முயன்றுகொண்டேயிருக்கும். இரவுபகல் என்றில்லாது எந்நேரமும் விழிப்புடனிருக்கும் 2ம் லெப்.மாலதி படையணிப் போராளிகளின் சுடுகுழல்கள் கனன்று கொண்டேயிருக்கும்.

அப்போதுதான் குறுகியகால படைய தொடக்கப் பயிற்சியை நிறைவுசெய்த புதிய அணியினர் அம்பகாமத்துக்கு வந்திருந்திருந்தனர். 1998ஆம் ஆண்டின் ஜுன் மாதம், ஏற்கனவே இருதடவை சிறிலங்காப் படையினரை இவர்கள் எதிர்கொண்டிருந்தனர். இன்று மூன்றாம் முறையாக இராணுவம் முன்னேறியது.

படையினர் முன்னகர்வதை, காப்பரண்களிலிருந்து குறிப்பிட்டளவு தூரம் முன்னே அவதானிப்பு நிலையில் நின்ற 2ம் லெப்.இன்குறிஞ்சி கண்டு, சுடத் தொடங்கிவிட்டார். இவரைத் தொடர்ந்து பின்னே காப்பரணில் நின்ற தர்சினி, மேஜர் வாணி முதலானோரும் தாக்கத் தொடங்கிவிட்டனர்.

இவர்கள் பின்னே வரும்படி கத்தியதையும் கருத்திலெடுக்காமல், அவதானிப்பு நிலையைவிட்டு வெளியேறாமல் தனியாக நின்று, தனது ரவைகள் முடியும்வரை சுட்டு விட்டு, நெஞ்சில் பட்ட காயத்துடன் எழும்பி ஓடிவந்து காப்பரணில் விழுந்தவர், விழிமூடிப் போனார்.

அச்சம் சிறிதுமற்ற அந்தப் புதிய போராளியின் துணிச்சல் 2ம் லெப். மாலதி படையணியின் அன்றைய நாளை பெறுமதியாக்கி விட்டிருந்தது.

உலக வரலாற்றின் இரண்டாம் நோர்மன்டித் தரையிறக்கம் அது. இம்முறை அது குடாரப்புவில் 2000.03.26 அன்று அதிகாலையில் தமிழீழ விடுதலைப்புலிகளால் நிகழ்த்தப்பட்டிருந்தது.

தரையிறங்கிய வேகத்திலேயே, தொண்டமனாற்றிலிருந்து ஆனையிறவுநோக்கி நீண்டு கிடக்கும் கடல்நீரேரியைக் கடந்து, பளைக்கும் முகமாலைக்கும் இடையிலான யாழ்.நெடுஞ்சாலையை ஊடறுத்து நிலை கொண்டன புலியணிகள். நீரேரியின் கரையிலிருந்து நெடுஞ்சாலையை நெருங்குவதற்குச் சற்று முன்புவரை, ஆனையிறவைப் பார்த்தபடி 2ம்லெப்.மாலதி படையணியும், அவர்களைத் தொடர்ந்து நெடுஞ்சாலையை வெட்டிக்கடந்து கிளாலிநோக்கிப் பார்த்தபடியும் மறுபடி வெட்டிக்கடந்து சாவகச்சேரி நோக்கிப் பார்த்த படியுமாக மேஜர் சோதியா படையணியும், தொடர்ந்து சாவகச்சேரியைப் பார்த்தபடியே லெப்.சாள்ஸ் அன்ரனி படையணியும், சிறப்பு எல்லைப்படை வீரர்களும் 2ம் லெப்.மாலதி படையணியின் பிறிதொரு அணியும் நிலை கொண்டிருந்தன.

நெடுஞ்சாலையைக் கடந்து கவிழ்ந்த U வடிவில் மேஜர் சோதியா படையணி தனித்து நின்றது. வேம்பொடுகேணி பாடசாலை, புகையிரதப்பாதை எல்லாமே இவர்களின் கட்டுப்பாட்டில். 2000.04.02 அன்று ஆனையிறவுத் திசையிலிருந்து முன்னேறி உள்நுழைந்த சிறிலங்காப் படையினரை 2ம் லெப். மாலதி படையணி சம்பலாக்கிவிட்டிருந்தது. இனி எந்நேரமும் தமது பகுதியில் ஒரு தாக்குதல் நிகழலாமென சோதியா படையணி விழிப்புடன் நின்றது. ஏற்கனவே 2000.03.27 அன்று படையினர் செய்த முன்னேற்ற முயற்சி யொன்றை இவ்விடத்தில் நின்ற லெப். சாள்ஸ் அன்ரனி படையணியினர் முறியடித்துமிருந்தனர். இன்று 10ஆம் திகதி. படையினர் பாரிய நகர்வொன்றை ராங்குகளைப் பயன் படுத்திச் செய்தனர். பாடசாலைக்கு அப்புறமும் இப்புறமுமாக இரு வரிசையில் இராணுவம் முன்னேற, இவர்களின் அணி மூன்று கூறுகளாக வெட்டப்பட்டது. எங்கு பார்த்தாலும் ராங்குகள். சுழல்மேடைகள் சுழலச் சுழல, பீரங்கி வாய்கள் புகைகக்க, எங்கும் பாரிய வெடிப்பொலிகள். கொப்புகள், கற்கள், மண் எல்லாம் மேலுயர்வதும் விழுவதுமாக களத்தில் அனல் வீசத்தொடங்கியது.

செல்வியின் காப்பரணருகே, அது காப்பரண் என்பதை இன்னமும் கவனிக்காத ராங்கொன்று நின்று முழங்கிக்கொண்டிருந்தது. கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்த செல்விக்கு, ஒவ்வொரு காப்பரணின் தொடர்பும் அற்றுப் போய்க்கொண்டிருந்தது. கூடநின்ற இலக்கணாவை ராங்கிக்கு கைக்குண்டை வீசுமாறு கூறிவிட்டு, இல்லாமல்போன தொடர்புகளை எடுக்க முயன்றுகொண்டிருந்தார்.

முதலில் வீசப்பட்ட குண்டு சற்று சறுக்கிப்போனாலும், இரண்டாவது குண்டு தன் பணியைச் செவ்வனே செய்ததால் ராங்கியினால் நகரமுடியவில்லை.

சேதமுற்ற ராங்கியினைச் சீர்செய்யவென உள்ளிருக்கும் படையினர் வெளிவர முயற்சிப்பதும், இவர்கள் சுடுவதும் அவர்கள் தலையை உள்ளிழுத்துவிட்டு மறுபடி வெளிவர முயற்சிப்பதும், இவர்கள் சுட்டு வீழ்த்துவதுமாக, ஒருநாள் காலை தொடங்கிய சண்டை மறுநாள் காலை முடிவுக்கு வரும்வரை அந்த ராங்கியை மீட்க இராணுவத்தால் முடியவில்லை.

மலையான மலையெ, பெரும் பலமெனப் படையினரால் நம்பப்படுகின்ற ராங்கியொன்று, தனித்து நின்ற இரு பெண் புலிகளால் அன்று வெற்றிகொள்ளப்பட்டது.

ஓயாத அலைகள் – 02, 03 நடவடிக்கைகளால் தமிழீழத்தின் பாரிய நிலப்பரப்பை விடுதலைப்புலிகள் மீட்டிருந்தனர். ஒன்பது வருடங்களாக சிங்கத்தின் குகையாகக் கிடந்த ஆனையிறவு மறுபடியும் தமிழ்மக்களின் சொத்தாக மாறியதில் சிங்கள அரசு சினத்தோடு இருந்தது.

ஆனையிறவைப் பிடிக்கும் அவாவில் மறுபடியும் சிறிலங்காப் படையினர் முன்னேற முயல்வர் என்பதை உய்த்துணர்ந்த தலைவர் அவர்கள், திட்டமொன்றைத் தீட்டினார். எழுதுமட்டுவாள், முகமாலை, கிளாலி, நாகர்கோவில் என நீண்டுகிடக்கும் போராளிகளின் முன்னரங்குகளைப் பாதுகாக்கும், பலப்படுத்தும் திட்டம் அது.

திட்டத்தைச் சுமந்தபடி லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி படைப்பிரிவு களமிறங்கியது. காப்பரண்களில் நின்ற 2ம் லெப்.மாலதி படையணிப் போராளிகளும், மேஜர் சோதியா படையணிப் போராளிகளும், வேலைசெய்து கொண்டிருந்த பெண் போராளிகளுக்கு (லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி படைப்பிரிவு பெண் போராளிகளை மட்டுமே கொண்டது) காப்பு வழங்கிக் கொண்டிருந்தனர். வேலை முடிந்தது. 2001.04.24 காலை விடிந்தது. 5.30 மணியளவிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உடைப்பை ஏற்படுத்திய சிறிலங்காப் படையினர், வேகமாக உள்நுழைந்து ஒரு கிலோமீற்றர் தூரம்வரை போய், பெட்டிவடிவில் போராளிகளைச் சுற்றி
வளைத்தனர்.

தொடங்கியது கடும் சண்டை. படையினரின் கைகளில் விழுந்த காப்பரண்களைப் போராளிகள் கைப்பற்றியபடியே போக, பின்னாலேயே படையினரும் வந்து புகுந்துவிடுவர். மறுபடியும் காப்பரண்களை மீட்டபடி போராளிகள் போக, பின்னால் வேறு படையினர் வந்து புகுந்துவிடுவர். பதினான்கு தடவைகளுக்கு மேல் படையினரிடமும் போராளிகளிடமும் காப்பரண்கள் கைமாறிக்கொண்டிருந்தன.

லெப்.கேணல் குட்டிசிறி மோட்டார் மகளிர் படையணியின் எறிகணை செலுத்திகள், முன்னரங்கக் காப்பரணில் நின்று சமராடியபடியே ஆதரவுச் சூடுகளைக் கேட்கும் போராளிகள் சொல்கின்ற ஆள்கூறுகளுக்கு அமைவாக, எறிகணைகளை ஏவிக்கொண்டிருந்தன. முன்னேறிய சிங்களப் படையினர் இப்போது எறிகணை செலுத்தியை நெருங்கிக் கொண்டிருந்தனர்.

சாதாரணமாக, சமர்க்களத்திலிருந்து பாதுகாப்பான தூரத்துக்கு அப்பால்தான் எறிகணை செலுத்தி இடம் மாற்றப்படும். எறிகணை செலுத்தும் குழுவினர், தமது போர் உத்தியில் மாற்றம் செய்தனர். முன்னரங்கப் போராளிகளுக்கான ஆதரவுச்சூடு வழங்குவதை இடைநிறுத்தாமல் தொடர்ந்து செய்யும்படியே, சூழவந்த படையினரைத் தமது சுடுகலன்களால் தாக்கத் தொடங்கினர். எறிகணைகளை ஏவி, ஏவி பீரங்கிவாய் சிவந்தது. பீரங்கியைப் பகைவரிடமிருந்து பாதுகாக்க சுடுகலன்களும் சிவந்தன. பின்னரங்கில் போர் தீச்சுவாலை கக்கியது. மூன்றாம் நாளின் முடிவில், இழப்புக்களுக்கு ஈடுகொடுக்க முடியாத இராணுவம், முற்றுகை வளையத்தை விலக்கிக்கொண்டு தப்பியோடத் தொடங்கியது. பகைவர் உள்நுழைந்த பாதைகள் யாவற்றையும் எஞ்சிய போராளிகளும் எல்லைப்படை வீரர்களும் இணைந்து மூடிவிட, உள்நிற்கும் இராணுவத்துக்கு முன்புறமும் போராளிகளின் தாக்குதல், முதுகுப்புறமாகவும் தாக்குதல்.

கலைந்து செல்லும் பட்டிபோல கண்ணில் பட்ட திசைகளாலெல்லாம் முன்னரங்க காப்பரண் வரிசையைக் கடந்து ஓட முற்பட்ட இராணுவத்தினரின் கால்கள் பறந்தன. விழுந்தவரின் உயிர்களும் பறந்தன. தப்பியோடும் திசையெல்லாம் வௌ;வேறு வடிவங்களில் வைக்கப்பட்டிருந்த மிதிவெடிகள், பொறிவெடிகள், சூழ்ச்சியமைப்புகள் எல்லாம் வெடிக்க, லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி கூட தமிழீழத்தையே நினைக்கும் தலைவனின் உழைப்புத் தெரிந்தது.

குறிப்புகள் :….

(அ) 1985.08.18 அன்று இந்தியாவின் திண்டுக்கல்லில் உள்ள சிறுமலைக் காட்டில், விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் முதலாவது பாசறை ஆரம்பமானது. எனினும், பெண்களை அரசியல்மயப்படுத்தலும், போராட்டத்தில் பெண்கள் உள்வாங்கப்படலும் இதற்கு முந்தைய ஆண்டுகளிலேயே ஆரம்பித்துவிட்டன,

(ஆ) கபட் ன் அஜிதத்தா வீரசச்சாவு 1990.12.22 கட்டுவனில்,

(இ) லெப்.கேணல் ஜொனி வீரச்சாவு 1988.03.13 தேவிபுரத்தில்,

(ஈ) மேஜர் சஞ்சிகா வீரச்சாவு 1990.11.03 மாவிட்டபுரத்தில்,

(உ) 2ம் லெப். நிலா வீரச்சாவு,

(ஊ) வேவுப் புலிகள் வீரச்சாவு
கப்டன் தேனுஜா 1992.07.14 கறுக்காய்தீவில்…..
கப்டன் துளசிராம் 1993.11.11 பூநகரியில்…
லெப்.கேணல் முகுந்தா 1997.06.19 குறிசுட்டானில்,

(எ) இரண்டு சுப்படோராக்கள் தாக்கப்பட்டது 1995.08.29 அன்று,

(ஏ) 2ம் லெப் இன்குறிஞ்சி வீரச்சாவு 1998.06.16 அம்பகாமத்தில்.

– மலைமகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் இதழ் ( ஆடி – ஆவணி 2005 )

நினைவழியாத் தடங்கள் – 10:தீச்சுவாலைக் களத்தில்

விடுதலைப்புலிகளின் இராணுவ வல்லமையை இயலாமைக்குட்படுத்தும் நோக்குடன் சிங்களப்படையால் முன்னெடுக்கப்பட்டது தீச்சுவாலை படைநடவடிக்கை. இத்தீச்சுவாலைக்கு எதிரான படைநடவடிக்கையை தலைவர் எவ்வாறு கையாண்டார் என்று எழுதிய போது அவரின் கருத்துக்கமைவாக போராளிகள் சண்டையில் எத்தகைய அர்ப்பணிப்புக்களைச் செய்து, செயற்பட்டு அவரின் எண்ணத்தை நிறைவேற்றினார்கள் என்பதை எடுத்தியம்பும் சில சம்பவங்களைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.mukamalai attack

தீச்சுவாலை முறியடிப்புத் திட்டத்திற்கமைவாக முன்னணியில் ஒரு காவலரண் வரிசை பின்னுக்கு இரண்டாவது காவலரண் வரிசை என இரண்டு தடுப்பு காவலரண் வரிசைகள் அமைக்கப்பட்டன. முன்னணி தொடர் நிலைக்கு முன்னுக்கு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டதுடன் தொடர் காவலரண்களை இணைத்து மண் அணையும் மறைப்பு வேலியும் அமைக்கப்பட்டன. காவலரண்களுக்கு இடையில் மண்ணணையின் உட்புறமாகவும் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டன. முன்னணி தொடர் நிலைக்கு முன்னுக்கு (கண்ணிவெடிகளைத்தாண்டி) இரவு வேளைகளில் மட்டும் எல். பி என்று சொல்லப்படும் மூவர் கொண்ட சிறிய அணி முன்னணி நிலையில் இருந்து கிட்டத்தட்ட 100 மீற்றர் முன்னால் நிறுத்தப்படுவர் (எதிரியின் நகர்வை அவதானித்ததும் பகுதித்தளபதிக்கு அறிவிப்பார்கள்) முன்னணி காவலரண் வரிசைக்கு தளபதி தீபன் அவர்களும்,இரண்டாவது காவலரண் வரிசைக்கு தளபதி பால்ராஜ் அவர்களும் பொறுப்பாக இருந்தனர். தளபதி பானு, ராயு ஆகியோர்கள் பீரங்கிகளை ஒருங்கிணைத்தார்கள்.

தீச்சுவாலைக்கு எதிராகக் கிளாலிப்பகுதியில் நடைபெற்ற தாக்குதலை வழிநடாத்திய தளபதியின் அனுபவத்தினூடு இப்பதிவு பயணிக்கப்போகின்றது. கிளாலிப்பகுதியில் நின்றது சோதியா படையணியாகும்.

அதிகாலை 4 மணிக்கு தீபண்ணை கட்டளைமையத்திலிருந்து தொடர்பு கொண்டு “இன்றைக்கு உனக்கு கிடைக்கும்” என்ற செய்தியை வோக்கியில் பரிமாறி இராணுவம் நகரப்போகின்றான் என்பதை பகுதித்தளபதிகளிற்கு உறுதிப்படுத்துகின்றார். அத்துடன் எல்லோரும் தொடர்புடன் இருக்கின்றார்களா? என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்கின்றார். பகுதிகளில் உள்ள எல்லா பொறுப்பாளர்களின் வோக்கிகளும் தொடர்புகளை சரிபார்க்கின்றன.

கிளாலிப்பகுதியின் முன்னணி தொடர்காவலரணுக்கு முன்னுக்கு 130 மீற்றர் தூரத்தில் பகுதித்தளபதியின் நேரடித்தொடர்புடன் விடப்பட்ட எல்.பி அணியின் தொடர்பும் சரிபார்க்கப்படுகின்றது. அவர்களும் ‘இன்னும் ஒன்றும் கிடைக்கவில்லை’ என 4.15 மணிக்கு உறுதிப்படுத்தினர்.

தொடர்ந்து பாரிய சண்டையை எதிர்பார்த்து அணிகள் தயார்ப்படுத்தப்பட்டிருந்தாலும் இடையிடையே இப்படித்தான் இராணுவம் நகருவான் என எதிர்பார்த்து காத்திருந்து நடைபெறாமல் போன சந்தர்ப்பங்களும் உண்டாகையால் வழமைபோலவே காத்திருந்தனர்.

4.45 மணியளவில் எல்.பி யில் நின்ற பெண் போராளிகள் வோக்கியில் தொடர்பு கொண்டு, மிகவும் இரகசியமான குரலில் ‘தங்களிற்கு முன்னால் உள்ள பற்றைகளில் முறித்துச் சத்தம் கேட்கின்றது அண்ணை’ என தெரியப்படுத்தினர். உடனடியாகவே அவர்களை லைனுக்குத் திரும்பிவருமாறு கூறினார் பகுதித்தளபதி. ஆனால் அப்பெண் போராளிகளோ ‘இல்லை அண்ணை, கொஞ்சம் எட்டத்திலதான் சத்தம் கேட்குது. இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பார்த்துவிட்டு வருகின்றோம்’ என பதிலளித்தனர். மீண்டும் 5.35 மணிபோல் தொடர்பு கொண்டு ‘ஆமி கிட்ட வந்திட்டா……..’ என்று சொல்லி முடிப்பதற்குள் வோக்கியில் துப்பாக்கிச்சத்தங்கள் கேட்க தொடர்பு துண்டிக்கப்படுகின்றது. ‘ஆம்‘ தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை தொடங்கிவிட்டது.

கிளாலிப்பகுதியில் சண்டை தொடங்கி சிறிது நேரத்திலேயே முன்னணிக்காவலரண் வேலியை உடைத்துக் கொண்டு உள் நுழைந்த இராணுவம் 53 வது டிவிசனின் ஒரு தொகுதி, இரண்டாவது காவலரண் வேலியைத் தாண்டிச் சென்று நிலையெடுத்தான். இது அவனது பிரதான உடைப்பு, இது தவிர கிளாலிக்கடற்கரை, மற்றும் அதிலிருந்து 150 மீற்றரில் இருந்த ஆற்றுப்பிரதேசத்தால் என இரண்டு சிறிய உடைப்புக்களையும் செய்திருந்தான். கிளாலிப்பக்கத்தில் பிரதான உடைப்பிற்குள்ளால் நகர்ந்த இராணுவம் வெடிபொருள் விநியோக இடம் மற்றும் தற்காலிக மருத்துவமனை அமைந்திருந்த பங்கர்களிற்கு அருகில் வந்துவிட்டதால், அங்கு நின்ற போராளிகளும் அருகில் இருந்த பகுதி கட்டளை மையத்தில் இருந்த அணிகளுடன் ஒன்றாகினர்.

பொழுது புலர்ந்தபோது இராணுவம் உள்ளுக்கு வந்து கண்டிவீதிக்கு இடது பக்கம் இருக்கும் கிளாலிப்பக்கமும் றோட்டுக்கு வலதுபக்கமான கண்டல்பக்கமும் இரண்டு தனித்தனி பெரிய ‘பொக்ஸ்’ அடித்துவிட்டான் என்பது புலனானது. குறிப்பாக கட்டளைத்தளபதி தீபன் அவர்களின கட்டளை மையத்தைச்சூழவும் எதிரி முன்னேறியிருந்தான். மொத்தத்தில் முன்னணிக் காவலரண் வரிசைக்கான அனைத்துத் தளபதிகளின் கட்டளை மையங்களையும்தாண்டி இராணுவம் முன்னேறியிருந்தான். இதில் கிளாலிப்பகுதிக்கட்டளை மையம் ஒரு மணல் பிட்டியில் இருந்ததால் அதை சரியாக இனம்காணாத இராணுவம் அதை கைப்பற்றும் நோக்குடன் அந்தப்பகுதிக்குள் நகர்ந்தான்.

அதேவேளை கிளாலி கடற்கரையாலும் அதிலிருந்து 150 மீற்றர் வலதுபக்கத்தாலும் உடைத்த இராணுவம் கடற்கரைப்பகுதியை கைப்பற்றுவதற்கான தாக்குதலை ஆரம்பிக்கின்றான். உடைபட்ட பகுதிக்காவலரண் போராளிகளும் மற்றக்காவலரண்களில் நின்ற போராளிகளுடன் இணைந்து, மோட்டரையும் இணைத்து, பக்கவாட்டால் மேலதிக காவலரண்களை இராணுவம் கைப்பற்ற விடாது தாக்குதலை மேற்கொள்கின்றனர்.

அதேவேளை கண்டிறோட்டிற்கு வலது பக்கமான கண்டல் பக்கமாக உடைத்த இராணுவம் இரண்டாவது காவலரண் வேலியைத்தாண்டி ‘பொக்ஸ்‘ வடிவில் நிலையெடுத்தான். கண்டி வீதிக்கு இடது வலது பக்கமான கிளாலிப்பக்கம் உடைத்த இராணுவமும் இரண்டாவது காவலரண் வரிசையை ஊடறுத்து ‘பொக்ஸ்‘ வடிவில் நிலையெடுத்திருந்தான். இப்போது களமுனை மூன்று துண்டுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

இராணுவத்தின் நோக்கமானது இரண்டு பக்கத்தாலும் புலிகளின் இரண்டாவது காவலரண் வேலியைத்தாண்டி ஊடறுத்து விட்டு, இரண்டாவது காவலரண் வேலியை அடிப்படையாக வைத்து இருபகுதி இராணுவமும் கைகோர்ப்பதாகும் . இதனால் தளபதி தீபன் உட்பட அத்தனை தளபதிகளும் படையணிகளும் தங்களது பொறிக்குள் மாட்டிவிடும் என திட்டமிட்டனர். ஆனால் இரண்டாவது தொடர்காவலரண் பகுதியால் நகர்ந்து இருவரும் கைகோர்ப்பதை தடுத்து பின்னணி நிலையில் கட்டளைத்தளபதி பால்ராஜ் தலைமையில் இருந்தவர்கள் சண்டையைத் தொடங்கினர்.

அதேநேரம் கிளாலிப்பகுதிக் கட்டளைமையத்தை நோக்கி நகர்ந்த இராணுவத்தின் மீது சினைப்பர், மற்றும் ஏ.கே.எல்.எம்.ஜி கனரக ஆயுதத்தாலும் தாக்குதலை மேற்கொள்ள, கிட்டத்தட்ட 22 பேருக்கு மேல் கொல்லப்பட்டு பலர் காயப்பட்டதுடன், தனது நகர்வை நிறுத்தி காயப்பட்டவர்களையும் இழுத்துக் கொண்டு அருகில் இருந்த பண்ட்(மண்அணை) பாதுகாப்பெடுத்து கட்டளைமையத்தின் மீது தாக்குதலை தொடுத்துக்கொண்டிருந்தது இராணுவம்.
இதேநேரத்தில் சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத்தளபதி வீரமணி, துணைத்தளபதி கோபித் ஆகியோரின் தலைமையிலான அணிகளும் உடைந்த பகுதிகளை மூடுவதற்கான தாக்குதலை மோட்டாரின் துணையுடன் முன்னெடுக்கத் தொடங்கினர்.

இராணுவம் புலிகளின் முன்னணி காவலரண் நிலையைத்தாண்டி பின்னுக்கு இரண்டு கிலோமீற்றருக்கு மேல் சென்று விட்டது. இராணுவம் தங்களைத் தாண்டியதைப்பற்றி ஒரு பொருட்டாக எடுக்காமல் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. இதை எதிரி எதிர்பார்க்கவில்லை. தளபதி வீரமணி, கோபித், கிளாலித்தளபதி, தளபதி துர்க்கா போன்ற பிரதான தளபதிகளின் கட்டளை மையங்களை இலக்கு வைத்து நகர்ந்த இராணுவம், தாக்குதல்களை நடாத்தியபோதும் அவர்களின் கட்டளையை செயலிழக்க வைக்க முடியவில்லை.

அங்கிருந்த போராளிகள் கட்டளைமையத்தை இராணுவம் செயலிழக்கவைக்கமுடியாத வண்ணம் தரைவழித் தாக்குதலை நடாத்திக் கொண்டு மோட்டரையும் இணைத்து தங்களின் தளபதிகள் தொடர்ந்து அணிகளை வழிநடாத்த வழிவகுத்தனர். ஆங்காங்கு கள நடவடிக்கைக்காகப் பின்னணியில் நின்ற போராளிகளும் மோட்டாருக்கு இலக்குகளை கொடுத்து எதிரி நின்ற இடங்களில் எல்லாம் தாக்குதலை மேற்கொண்டனர்.

தலைவர் சொன்னது மாதிரியே ‘ஒருவரும் இடங்களை விட்டு நகராமல்’ முன்னணி காவலரண் வேலியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து எதிரியை உள்ளே மடக்கியழிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தனர். சமநேரத்தில் தளபதி பால்ராஜ் தலைமையிலான அணியினரும் இராணுவத்தினரின் மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களின் இலக்கை அடையவிடாமல் கட்டுப்படுத்தினர்.

கிளாலிப்பகுதியில் உள்நுழைந்த இராணுவம் கிளாலிப்பகுதி அணிகளை சுற்றிவளைக்கும் நோக்கில் நகர்ந்தது. அப்படி கிளாலியால் நகர்ந்த ஒரு இராணுவத்தொகுதி தளபதி துர்க்காவின் கட்டளைமையத்திலும் தாக்குதலைத் தொடங்கியது. எதிரியின் கடுமையான தாக்குதலால் ஒரு கட்டத்தில் தளபதி துர்க்காவின் குறோஸ் (தொலைத்தொடர்பு சாதனத்தின் அன்ரனா) அறுந்து தொடர்பற்றுப் போய்விட்டது. அவர் வோக்கியில் பகுதிக்கட்டளைத் தளபதியை தொடர்புகொண்டு, தனது நிலையைச் சொல்லி தனது முகாமைச் சுற்றிச் செல் அடிக்குமாறு கூறினார். ஆட்லறி பீரங்கிகளை இணைத்து செறிவான செல்த்தாக்குதலை மேற்கொண்டு, தரைவழித்தாக்குதலையும் தொடுக்க பலத்த இழப்புக்களுடன் அந்த கட்டளைமையத்தை விட்டு பின்நகர்ந்தது இராணுவம்.

அதேநேரம் கிளாலி கடற்கரைப் பக்கத்தால் முன்னேறிய இராணுவத்தை சோதியா படையணி சினைப்பர் போராளியின் துப்பாக்கி கட்டுப்படுத்தி பலத்தை இழப்பை ஏற்படுத்தியது. கடற்கரைப்பகுதியால் வந்த இராணுவம் வெட்டையைக்கடந்து மறைப்புகள் உள்ள இடத்திற்கு வரவேண்டும். மறைப்புக்குள் வரவிடாமல் கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர். அதில் இராணுவத்துக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கடும் தாக்குதலை மேற்கொள்ள காலை 9 மணிக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் இராணுவம் பின்வாங்கிவிட்டது.

அதேநேரம் சாள்ஸ் அன்ரனி படையணியினர் கிளாலியை நோக்கி முன்னணி காவலரண் வரிசையால் பிடித்துக் கொண்டு வர, கிளாலிப்பகுதியில் இருந்தும் முன்னணிக்காவலரண் வரிசையால் பிடித்துக் கொண்டு செல்ல, மாலை 6 மணியளவில் இராணுவம் கிளாலிப்பகுதியை விட்டு ஓடிவிட்டான். கிளாலியை நோக்கி வந்த அணிகளுடன் கிளாலிப்பக்கத்திலிருந்து சென்ற அணிகளும் தொடர்பு கொண்டு முன்னணி காவலரண் வேலியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

மறுநாள், நடுப்பகுதியில் தரித்திருந்த இராணுவத்தை அழிப்பதற்கான சண்டை மாலை முடிவடைய அப்பகுதியில் இருந்தும் இராணுவம் ஓடிவிட்டான். மறுநாள் மீதமிருந்தது கண்டல்ப்பக்கம்.

கண்டல்பக்கத்தில் தாக்குதலுக்குப் பொறுப்பாக இருந்த சோதியா படையணித்தளபதி லெப்கேணல் சுதந்திரா காவலரண் பகுதியில் இருந்து பின்வாங்காமல் தாக்குதலை 55 வது டிவிசன் படையணிகளை எதிர்த்து முன்னெடுத்தார். ஒரு கட்டத்தில் அவரது கட்டளை மையம் சுற்றி வளைக்கப்பட்டு இறுக்கமான சண்டை நடைபெற்றது. இராணுவம் கட்டளைமையத்தை நெருங்கிக் கொண்டிருந்தான்.நிலமை கைமீறச்சென்ற அந்த சந்தர்ப்பத்தில் ‘என்னையும் சேர்த்துச் செல்லடியுங்கோ இனி ஒண்டும் சரிவராது’ எனக்கூறினார். அந்தப்பகுதிக்கு கடுமையான செல்த்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது இராணுவம் பலத்த இழப்பைச் சந்தித்தது. அதில் அவரும் வீரச்சாவடைந்தார்.

மூன்றாம் நாள் இராணுவம் முழுமையாகப் பின்வாங்கி ஓடிவிட்டது. பின்னர் கிளாலிப்பக்கம் எல்.பி நின்ற போராளிகளின் இடத்திற்குச் சென்று பார்த்தபோது அந்த மூவரின் உடல்களும் அந்த இடத்திலேயே இருந்தது. ஒட்டு மொத்தமாக தீச்சுவாலை நடவடிக்கை வெற்றிக்காக நூற்று நாற்பத்தியொரு பேர் வீரச்சாவைத்தழுவிக் கொண்டனர்.

முப்படைகளின் துணையுடன் ஆட்லறி மற்றும் மோட்டாரின் ஆதரவுடன் விசேட தாக்குதல் பிரிவுகளை உள்ளடக்கி பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் பங்கெடுத்த இந்த நடவடிக்கையை சில நுாற்றுக்கணக்கான போராளிகளைக் கொண்டு முறியடித்ததற்கு தலைவரின் வழிநடத்தலும் போராளிகளின் ஓர்மம் மிக்க செயற்பாடுகளுமே அடிப்படையாக அமைந்தன. தலைவர் சொன்னது போலவே நிலைகளில் இருந்து பின்வாங்காமல் இறுக்கமாக நின்று தாக்குதலை முகங்கொடுத்ததன் விளைவே இந்த வெற்றியாகும்.

நினைவழியாத் தடங்கள் – 09:தீச்சுவாலை வெற்றி.

வாணன்

முதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.

காங்கேசன்துறை துறைமுகத்தில் 16.08.1994 அன்று வீரகாவியமான முதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

BT Capt Ankayakanni

காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் கட்டளைக் கப்பல் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவை 16.08.1994 அன்று கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியினால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டன.

எட்டரை மணிநேரத்தில் சுமார் 35 கி.மீட்டர்கள் தூரத்தை நீந்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அடைந்த கப்டன் அங்கயற்கண்ணி சிறிலங்கா கடற்படையின் மேற்படி கடற்கலங்கள் தாக்கி மூழ்கடித்து கடலன்னை மடிதன்னில் கலந்து தமிழர் நெஞ்சமேல்லாம் நிறைந்தார் காவல் தெய்வமாகி…

Bt Cap.Angkaiyarkannni

கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி

இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

Up ↑