Search

Eelamaravar

Eelamaravar

Month

June 2013

லெப் கேணல் டேவிட் வீரவணக்கம்

Lt.Col.David

கடலில் கலந்த….. டேவிட்.

தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்துவிட்ட தென்றல்.

விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன்காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில் ஒருவன்.

தமிழீழத்தின் விடுதலைப் போராட்டம் , எல்லாக் காலங்களிலும் , கடல் பிரயாணங்களை முதன்மைப் படுத்துவதாக அமைந்தது. எத்திசையும் கடலால் சூழப்பட்ட எம்தாயகத்தின் , தாக்கமுள்ள நகர்வுகள் கடல் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது விடுதலைப் போராட்டத்தில் , கடல் பயணங்கள் பிடித்திருந்த இடத்தின் , அதே அளவு இடத்தை , எமது கடல் சரித்திரத்தில் டேவிட் பிடித்திருந்தான்.

அவனது இளமையிலேயே கடல் அவனை அழைத்தது. அவது குடும்பநிலை அவனை கடலுக்கு அனுப்பியது.

” இயக்கம் கடலிலும் பிரயாணம் செய்ய வேண்டிவரும் ” என்ரகாலம் போய் , ” இயக்கத்தின் பியானம் கடலில்தான் ” என்று வந்துவிட்ட 83ல் , இயக்கத்திற்க்காய் கடலில் இறங்கினான்.

தமிழீழத்தின் ஒவ்வொரு கரையிலும் கால் பதித்தான். நீண்ட பெரும் கடற்பரப்பு , கடற்பரப்பில் புள்ளியாய் நகரும் படகு , படகினைப் போல் பலமடங்கு விரிந்து , எழுந்து , விழுங்கவரும் அலைகள். சமுத்திர ராட்சதனின் அலைவாய் மூடமுதல் , விரைந்து , தத்திப்பாய்ந்து வெளியேறி , திரும்பிப்பார்க்கும் லாவசம். திரும்பிப்பார்வை நேரே நோக்க அடுத்த பெரும் அலை.

படகினை பலமடங்கு வேகத்துடன் துரத்தி உமிழும் பீரங்கிவாய்கள். அவற்றின் பல்முக நகர்வுகளிலும் தப்பி , தத்திச் செல்லும் வேகம். பின்னால் வரும் எதிரியின் கை அதிகமாய் நெருங்கின் , நின்று – நிதானித்து இயந்திரத்துப்பாக்கியை இயக்க ஆணையிடும் உறுதி , அந்தக் கணத்தில் எதிரி அடையும் அதிர்ட்சி டேவிட்டை பல தடவைகள் கரை சேர்த்துள்ளது.

அவனது கடல் பயணங்கள் மெய்சிலிர்க்கும் பல அனுபவங்களைக் கொண்டது. அவனது ஆசான்களும் , நல்ல நண்பர்களும் கடலிலேயே கலந்து விட்டனர். அப்போதெல்லாம் கூட , அவன் கடலில் நிலைத்துநின்றான். அவனது தப்பியோடும் லாவகமும் , தேவையின் பொது எதிர்த்து நின்று எதிர்கொள்ளும் நெஞ்சுறுதியுமே அவனை நிற்கவைத்தது.

இன்று இயக்கத்தின் வசமுள்ள பெருமளவு ஆயுதங்களுக்கு டேவிட்டைத் தெரியும்.

ஆம்…! அவை எமது கைகளுக்கு கிடைப்பதற்கு கிடையில் டேவிட் இருந்திருப்பான்.

அனேகமாக எப்போதுமே நாம் கரையில் காணும் டேவிட்டைக் கடலில் சந்திக்கமுடியாது. ஒருங்கிணைந்த சிந்தையுடன் , தன்னை நம்பி படகில் ஏறிய ” நீந்தத் தெரியாத சுமைகளுக்கு ” உத்தரவிடும் டேவிட் , கடுமையான வசைகளால் ஓட்டிமாரை கட்டுப்படுத்தும் மாலுமி. கடலில் டேவிட்டை , டேவிட்டாகப் பார்ப்பது கடினம்.

எப்போதாவது மிக அபூர்வமாக , சீரான , நேவியில்லாத , ஒதுக்குப்புறக்கடலில் , நல்ல நிலவும் சேர்ந்தால் அவனது படகு நிற்கும். இயந்திரச் சத்தத்தை மேவி அவன் குரல் ஒலிக்கும், ” கடல் மேல் பிறக்கவைத்தான்…. ” அவனது குரல் இனிய சங்கீதம் இல்லைத்தான் , ஆனாலும் அவன் பாடினால் நின்று , நிதானித்துக் கேட்கவைக்கும் வசீகரம். அந்த வசீகரம் அவனது குரலுக்கா…? அல்லது அவன் பாடும் பாடல்களுக்கா…?

அவனது குரலில் ; பாடல் கம்பீரம் பெறுவதும் தெரியும். அந்தக் குரலுக்கு , அவன் தெரிவு செய்யும் பாடல்களை விட , வேறுபாடல் எடுபடாதென்பதும் புரியும்.

அவனைத் தெரிந்த , அவனுடைய பழகாத எல்லோராலும் கூறப்படும் , எண்ணப்படும் , எண்ண வடிவங்களுக்கு அபபர்ப்பட்ட போராளி. அநேக போராளிகளைப் போல் அவனுக்கும் ” பழஞ்சோறு குழைத்துக்கையில கொடுக்கும் அம்மா “ ” ஆமியின் வெடி கேட்டும் சிறுபற்றை சரசரக்காமல் தேத்தண்ணி செம்புடன் அண்ணனை , அண்ணனின் தோழர்களை தேடும் தங்கைகள். “ வீட்டின் நிலையை எண்ணுவதா ? நாடா ? என்ற கேள்விக்கு எப்போதுமே குழப்பமிலாத பதிலைத் தன்வசம் வைத்திருந்த போராளி. மிக நெருக்கமான நண்பர்களிடம் மட்டும் ” தங்கச்சியவை ” என்று கூறிக் கண்கலங்கும் அண்ணன்.

எப்பேற்பட்ட வேலையாக இருந்தாலும் அவ் வேலையின் முக்கியத்துவம் விளங்கவைக்கப்பட்டால் , அந்த வேலையை செய்து முடிக்கும்வரை அவன் ஓய்வதும் அபூர்வம். அவனது நினைவுகள் மீட்டப்படும் பொது திரும்பத்திரும்ப அவனது அக்குணநலனே எவருக்கும் முன்னிற்கும்.

தமிழீழத்தின் கடற்பரப்பில் மட்டுமல்ல , தமிழீழத்தின் தரைப்போர் வாழ்க்கையிலும் அவன் சாத்த்தவை அதிகம். அதிலும் வடமராட்சியில் நடைபெற்ற அநேகமான சண்டைகளில் அவனது சுவடுகள் பதிந்திருந்தன.

இந்திய இராணுவத்திற்கு முந்தைய போர்வாழ்வில் , ஒப்பரேஷன் லிபறேசனுக்கு முன்பும் பின்பும் வடமராட்சியில் அவன் பங்கு அதிகம்.
ஒப்பரேஷன் லிபறேசனுகென ஆமி புறப்பட்டதிலிருந்து , நெல்லியடி முகாமிற்குள் மில்லர் புகுந்தது வரை அவன் ஓயவில்லை.

இந்திய இராணுவ யுத்தம் ஆரம்பித்த காலத்தில் தமிழ்நாட்டில் தங்கியிருந்தவன். யுத்தம் ஆரம்பித்து , கொழுந்துவிட்ட நேரத்தில் தள்ளியிருக்கமுடியாமல் , ஒரு கட்டுமரத்தில் வந்து சேர்ந்தான். இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் வடமராட்சியில் இயக்கத்தை உயிர்த்துடிப்புடன் வைத்திருந்ததில் , அவன் ப[அங்கு மிகப் பெரியது.

அனேகமாக இயக்கத்தின் எல்லாத் துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்தவன். அரசியல் ? அவன் அரசியல் வித்தகன் இல்லைத்தான் எனினும் , தான் ஏந்திய துப்பாக்கி எதற்காக என்பதில் குழப்பமில்லாதவன். மக்களுடன் பழகும் போதினில் அந்த மக்களில் ஒருவனாக நின்று சிந்திக்கத் தெரிந்தவன்.

எல்லாத் தலைமறைவுக்கால வாழ்க்கையிலும் , மக்களால் பாதுகாக்கப்பட்டவன். டேவிட் நின்றால் ஆமி பார்த்துச் சொல்வதற்க்கென ஒரு முதியோர் படையே திரளும்.

அவன் உலவும் ஊர்களில் சிறுகுழந்தைக்கும் அறிமுகமாகிவிடும் முகராசி. சிறுவர்களை ஒரு தடவை சந்தித்தால் , மறுதடவை சந்திக்கும்போது அவர்களை பெயர் சொல்லி அழைக்கும் நட்புணர்வு அல்லது அவர்கள் வெட்கத்தில் முகம் சிவக்க இவன் ஒரு பெயர் வைத்திருப்பான். சிறுவர்கள் என்றல்ல எவருடனுமே நட்பைப் பேணுவதில் தனித்துவமானவன் , பழைய நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் தனிமையான ஆர்வமுள்ளவன்.

எப்போதோ ஒருமுறை ” வண்டி விடப்பட்ட கரையில் “ லாம்பு வெளிட்சத்தில் சாப்பாடு கொடுத்தவரை யாழ்ப்பாணத்தில் கண்டு ” என்னைத் தெரியேல்லையே , கலுவன் கேணியில றால் கரியோட புட்டு சாப்பிட்டனாங்கள் எல்லே ” என்று கேட்டு அசத்துவான்.

பழைய நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்தால் , மறந்துவிட்ட திரும்பக் கிடைக்காத நினைவுகளை மீட்டுவது டேவிட்தான். இவனது நட்பைப் பேணும் பண்பால் பலராலும் விரும்பபட்டவன். சிலவேளைகளில் வேலை நேரங்களிலும் ” நட்பைப் பேணப்போய் ” வாங்கிக்கட்டிக் கொண்டு தலையைச் சொறிவான்.

இயக்கம் மிக அரிதாகச் சந்தித்த ” எல்லா வேலைகளிலும் வல்லுனர்களாக விளங்கக்கூடிய ” சிலரில் டேவிட் ஒருவன். ஆனால் கடல் என்பது ” பெரிய கடலாக ” இருந்தது. அதில் இயக்கத்தின் கடற்பிரிவு மிகச்சிறியதாக இருந்ததால் அவனால் காதலி விட்டுவிட்டு வரமுடியவில்லை. அவனது குறைந்த பாடசாலைக் கல்வியின் போதும்கூட பெரிய திட்டமிடல் திறன் இருந்தது. அது புரிந்தவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

அவனது எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் அவனுக்கு களம் கிடைக்கவில்லை. கடல் அவனை மறித்துவைத்திருந்தது.

ஒரு மிக முக்கிய கடற்பயணம் , தவை பெரியது , டேவிட் தேவையான ஒழுங்குகளை வழமைபோல் சரிபார்க்கிறான். கடல் தெரிந்தவர்கள் கடலில் ஓடத்தயங்கும் காலநிலை , ஆனாலும் பிரயாணம் அவசியமானதாகவும் , ஒத்திவைக்க முடியாததாகவும் இருந்தது.

கடலைத் தவிர எல்லாமே வழமைபோலத்தான். வழமையான தடபுடல் ,ம் வேகமான பிக்கப்….. , பெரிய நம்பிக்கை விதையை நெஞ்சில் விதைத்துவிட்டு டேவிட் ஆயத்தமாகிறான். வழமையாக ஓடித்திரியும் நேவியையும் காணவில்லை. எல்லாமே நம்பிக்கையுடன் இருக்கிறது. வண்டி புறப்படும் , அதுவும் டேவிட் நேரில் புறப்படும் காரணம் சொல்லப்படாவிட்டாலும் , வழமைபோலவே ஊகித்துக் கொண்டு வழியனுப்புகிறார்கள். டேவிட்டை அன்புடன் வளர்த்துப் பாதுகாத்த மக்கள் – அவனுடன் மிக அன்பாகப் பழகியவர்களில் நல்லாய்க் கடல் தெரிந்தவர்கள் அன்று கரைக்கு வரவேயில்லை…..

படகு நீரில் இறங்கியது ” குழந்தைப்பிள்ளையைக் கையிலே பிடித்துக் கூட்டிச் செல்லும் வாஞ்சையுடன் “ இரு கரையிலும் ஆட்கள் வரிசையாய் நின்று , படகினை கடலுக்குள் இழுத்துச் செல்கிறார்கள். இடுப்பளவு தண்ணீரில் இறங்கிய பின்னர் , அணியத்தில் நின்ற அரி தடியால் ஊன்ற படகு தள்ளாடி , நகர , அண்ணார்ந்து நின்ற இயந்திரவால்கள் தண்ணீரில் குளிக்க , எல்லாம் வழமைபோலவே.

” நல்லாய் செவிச்போட்ட இயந்திரம் ஒரு இழுவையில் ஸ்ராட் வர “ இருட்டில் நின்ற தோழர்களும் , மக்களும் வண்டியில் நின்றவர்களுக்கு ” தெரியாது என்று தெரிந்தும் ” கையை உயர்த்தி மேல அசைகிறார்கள். வண்டியில் நின்றவர்களும் கையசைத்திருப்பார்கள்….?

ஒரு இயந்தியம் கொஞ்சத்தூரம் ஓடிப்போய் நின்று தயாராகையில் , ” துணியில் பொத்தி ரோச்லைட் அடிப்பதும் ” தெரிகிறது.

அல்பா , அல்பா…..

என்னமாதிரி….?

பிரச்சினையில்லை குதிரைக்கு சாப்பாடு கொடுக்கினம்…..

கரிகாலனின் பதில் வோக்கியில் கேட்கிறது.

பின் ஒவ்வொரு இயந்திரமாக சத்தமிட படகு நகராமலேயே இயந்திர சத்தம் அதிகரித்து குறைந்தது , மிக அதிகரித்து , தணிவது கேட்கிறது.

படகு வழமைபோல் வலப்புறமாய் வட்டமிட்டு , நிழலாய் நகர்கிறது. ” எப்போதும் போல் , ‘ தேவையும் கடலும் தவிர ‘ மற்ற எல்லாம் வழமைபோல் ”

நீரைக்கிழித்து , வெண்நுரை கிளப்ப , அலையில் எழும்பிப்பாய்ந்தது….. படகு புறப்பட்டுவிட்டது. அதிகரித்த சத்தமும். கரையில் கூடிய கூட்டமும் , சிறிது சிறிதாய் மறைய, கடல் தெரியாதவர்களின் திருப்திப் பெருமூச்சுடன் “ கலந்தபோது , ” வண்டி வெளிகிட்டு விட்டது. ”

இயந்திர சத்தம் கரைவடஹ்ர்க்கு முன்னரே கரையிலுள்ள வோக்கி.

அல்பா…… அல்பா….. என அழைத்தது.

” தண்ணியடிக்குது தானே வோக்கியை அது தான் லோக் ரியூப்பிலை வைத்திட்டினம் போல ” எனக் கூறிவிட்டு , முயற்சியைக் கைவிடும் போதும் கூட , இயந்திர சத்தம் கேட்டுக்கொண்டுதானிருக்கிறது.

நேரம் கரைய , முகாமுக்குத் திரும்ப நினைக்கும் வேளையில் , துரத்து முகாம் வோக்கியில் ஒரு அவசர அழைப்பு. ” வோக்கியில் அல்பா தொடர்பெடுத்து….. ”

” என்னவாம் “…..

” கிளியரில்லை , சரியாக விளங்கேல்லை பிறபோ…… பிறபோ…… என்று அவியல் கூப்பிட்டமாதிரியிருந்தது…..

” சொல்லு “….

” போட்வெடித்திட்டு , வண்டி அனுப்புங்கோ , ஏன்டா மாதிரிக் கிடந்தது. அவையளின்ர கிளியரில்லை , ஒண்டும் விளங்கேல்லை “……

” ஆர் கதைச்சது…..”

” டேவிட் அண்ணை மாதிரித்தான் கிடந்தது , ஒண்டும் விளங்கேல்லை ….. ”

அடுத்த படகினை ஆயத்தம் செய்தவேளை , இயந்திரம் எடுக்க பிக்க[ விரைந்த வேளை , உறுதியற்ற வோக்கிச் செய்தியை நம்புவதா , இல்லையா என்று யோசித்தவேளை , நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. அலை விரித்துக் கொண்டிருந்தது.

” சன்னதம் கொண்டு நின்றது கடல். தேடபோகும் படகினை , தேடப்போகவென மர்ரபடகை , தயாராக வைக்கக் , வைக்கும் கடல்…!

நேரம் செல்லச்செல்ல ” வேக்கிச் செய்தி பிரமையோ ? “ எனநினைக்க வைக்கும் , வெறுமையுடன் காத்திருக்கும் வேளையில் , தேடப்போன படகின் வோக்கி அழைக்கிறது.

அரியைக்கண்டிட்டம் , தூரத்தின் இன்னொமொரு ஆள் தெரியுது….

என்னமாதிரி….. என்னமாதிரி என்ற வோக்கிக்கு பதில் சொல்லாமல் தேடும் படகு கரைநோக்கி வர. ” படகில் அரியுடன் ரட்ணா ”

” என்ன நடந்தது ? ”

” போட பிரிஞ்சிட்டுது , நடுவாலை முறிஞ்சு அணியம்தனிய , கடயார்தனிய ரெண்டாகப் போச்சு ”

” மற்றாக்கள் என்ன மாதிரி ? டேவிட் அண்ணை என்ன மாதிரி ? ”

” இருட்டுக்குள் எல்லோரையும் கூபிட்டு டேவிட் அண்ணை ஒன்றாக்கினவர் , எல்லோரையும் நீந்தச்சொல்லிவிட்டுப்போட்டு , அவர் கரிகாலனைக் கூப்பிட்டு தன்னட்டை எடுத்தவர்.

முழுவிடயங்களையும் சொல்லமுடியாது அறியும் – ரட்னாவும் மயங்கிவிட்டார்கள்.

மீட்க்கப்பட்ட இருவரும் உப்பு நீரால் உதடுகள் வெடித்து. , முகம் புண்ணாக்கி , ” கோலம் கெட்டுப்போய் ” இருந்தார்கள்,

படகுகள் போயின , வந்தன. செய்தி கேள்விப்பட்ட சனமெல்லாம் கரைமுழுக்கக் கூடி நின்று தேடினர். படகுகளின் தேடுதலுக்கு மேலாக , டேவிட்டின் திறமையில் எல்லோரும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

” முதலும் இரண்டு நாள் கடலுக்கு கிடந்தது , வந்து சேர்ந்தவன் தானே ”

” மன்னாரிலை ஒருக்கா இரண்டு பொம்பிளைப் பிள்ளையளைத் , தனியக் கொண்டுவந்து சேர்த்தவனெல்லெ…”

டேவிட்டின் நீச்சல் திறமையில் எலோருக்கும் நம்பிக்கை இருந்தது.

” உந்த மட்டு மட்டு நீச்சல் பொடியல் வந்து சேர்ந்திட்டாங்களாம் டேவிட் ஏன் வரமாட்டான் ? ”

எல்லோரும் நம்பிக்கையுடன் காத்திருந்த போதும் , அறி வைத்தியசாலியில் கூறிக்கொண்டிருந்தான். ” எங்களை நீந்தச்சொல்லிப்போட்டு கரிகாலனைத் தான் , இழுத்துக் கொண்டு நீண்டவர் ”

படகில் சென்றவர்களில் ” கடலுடன் கொஞ்சமும் பரிச்சயம் இல்லாத , நீச்சல் தெரியாதவன் ” கரிகாலன் மட்டும் தான்.

எல்லோரும் நம்பிக்கையுடன் இருந்த போதும் , அரியையும் – ரட்னாவையும் தவிர வேறு எவரும் வரவில்லை…..

கரிகாலன் வரவில்லை…..

டேவிட்டும் வரவில்லை …..

டேவிட் பங்குகொண்ட தாக்குதல்கள்…

* 1985ம் ஆண்டு மன்னார் போலிஸ் நிலையத்தாக்குதல் நடைபெற்றபோது , தாக்குதற் குழுவை படகில் ஏற்றி மறுகரைக்கு ( மன்னார் தீவுக்குள் ) கொண்டு சேர்க்கும் கடற்புலிகள் குழுவின் உதவிப்பொறுப்பாளராக இருந்தார். படகில் சென்று பாதுகாப்பாக இறங்குவதே தாக்குதலின் முதல் வெற்றி எனக் கருதப்பட்டது. இத்தாக்குதல் முடிந்த பின்பு அப்போதைய மன்னார்த் தளபதி லெப் கேணல் விக்ரர் அவர்களார் டேவிட் பாராட்டப்பட்டார்.

* 1987ம் ஆண்டில் ஆனையிறவு முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சிறிலங்கா இராணுவம் முன்னேற முயன்றபோது கிட்டு அண்ணா தலைமைதாங்கிய தாக்குதலின் பொது வீரமரணமடைந்த லெப் அங்கிளின் குழுவில் ஒருவராக சண்டை செய்து தோளில் காயமடைந்தார்.

* 1987ம் ஆண்டு யாழ் தொலைத்தொடர்பு நிலையத்தாக்குதலில் ( 8 இராணுவத்தினரைக் கைது செய்தபோது ) ” 50 கலிபர் ” குழு ஒன்றுடன் சென்று சண்டையில் ஈடுபட்டார்.

* 1989க் ஆண்டு நெல்லியடியில் இந்திய இராணுவக் காவலரண் மீதான தாக்குதலின் போது அத்தாகுதற் குழுவின் இரண்டாவது பொறுப்பாளராகச் சென்றார்.

* 1990ம் ஆண்டு வடமராட்சிக் கடலில் சிறிலங்காக் கடற்படையின் தாய்க்கப்பல் மீது நடாத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் ( கடற்கரும்புலிகள் : மேஜர் காந்தரூபன் – கப்டன் வினோத் – கப்டன் கொலின்ஸ் ) நடவடிக்கையினை தலைமை தாங்கியவர் இவரே.

– ச . பொட்டு
( புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் – தமிழீழ விடுதலைப்புலிகள். )

விடுதலைப்புலிகள் இதழ் ( ஐப்பசி – கார்த்திகை : 1991 )

ஈழப்போர் – 4 ஆட்டிலறிகளின் போர்

ஈழப்போர் வரலாற்றில்: இலகுரக விமானங்களை வைத்து, வான் ஆதிக்கத்திலும் பலமான நிலையில் இருந்து உலகில் வேறெங்கும் நிகழாத வரலாற்றுப் பதிவை உருவாக்கிய பிரபாகரன் எனும் பிம்பம்col raju artlery

மூன்றாம் கட்ட ஈழப்போருக்கும் நான்காம் கட்ட ஈழப்போருக்கும் இடையில் நிலவிய போர்நிறுத்த காலத்தில், ஒரு மென்தீவிர யுத்தம் நடந்தது யாவரும் அறிந்ததே. அந்தக் காலகட்டத்தில், இருதரப்புமே ஆட்டிலறிகள், மோட்டார்கள், கொண்டு மோதிக் கொள்ளாவிட்டாலும், தமது புலனாய்வுப் பிரிவுகள் மூலம் மோதிக் கொண்டன. துப்பாக்கிகள் மூலமும் மறைமுகமாக சண்டையிட்டன. ஒருவரையொருவர் போட்டுத் தள்ளின. ஆழ்கடலில் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன. கடற்படைக் கப்பல்கள் மீதான கரும்புலித் தாக்குதல்களும் நடந்தன. அதேவேளை, கொழும்பிலும் பிற பகுதிகளிலும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகளை வேட்டையாடும் சம்பவங்களும் நடந்தன. இந்த மென்தீவிர யுத்தத்தின் பிற்காலத்தில், குறிப்பாக, 2005 டிசெம்பரில், சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், கிளைமோர் தாக்குதல்களும் இடம்பெற்றன. இது தனியே இராணுவத்தினர் மீது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மட்டும் நடக்கவில்லை, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இடம்பெற்றன.

மாவிலாறு அணைக்கட்டைப் புலிகள் மூடிய பின்னர், அதனைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அது நான்காவது கட்ட ஈழப்போரின் தொடக்கம் எனலாம். அத்துடன், ஆட்டிலறி தாக்குதல்களும், விமானக்குண்டு வீச்சுகளும் ஆரம்பமாகின. ஆனாலும், போர்நிறுத்த உடன்பாடு நூலிழையில் தொங்கிக் கொண்டிருந்தது. கடைசியாக, 2006 ஓகஸ்ட் 11ம் திகதி, முகமாலை முன்னரங்கில் விடுதலைப் புலிகள் தொடுத்த பாரிய தாக்குதலை அடுத்து, நான்காவது கட்ட ஈழப்போர் அதிகாரபூர்வமாக வெடித்தது.

ஈழப்போர் வரலாற்றில், மிகவும் நீண்டதும், போரிடும் தரப்பினருக்குப் பாரிய இழப்புகளை ஏற்படுத்தியதுமான மூன்றாம் கட்ட ஈழப்போர், விடுதலைப் புலிகளை சமபலம் கொண்ட சக்தியாக, இலங்கை அரசை ஏற்க வைத்ததுடன் நிறைவுக்கு வந்தது. இந்தப் போர் மற்றும் அதில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான புள்ளிவிபரங்கள் முன்னைய பகுதியில் விபரிக்கப்பட்டது.

2002 பெப்ரவரியில், போர்நிறுத்த உடன்பாடு முறைப்படி கையெழுத்திடப்பட்ட பின்னர், 2006 ஜுலையில் மாவிலாறில் போர் வெடிக்கும் வரை, ஒரு நீண்ட அமைதியையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கிட்டத்தட்ட, நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, போரற்ற அந்த அமைதி நிலை நீடித்தது.

அதனை முழுமையான அமைதி நிலை என்று கூறமுடியாது – இன்னொரு போருக்கான ஆயத்தநிலை என்று உறுதியாக கூறலாம்.

ஆரம்பத்தில், அமைதியான சூழல் நிலவிய போதும், பின்னர் மெல்ல மெல்ல ஒரு நிழல் யுத்தத்தினுள் அந்த அமைதிக்காலம் நுழைந்தது. ஒரு கட்டத்தில் அது ஒரு மென்தீவிர யுத்தமாக மாறியது. கடைசியாக அந்த அமைதியை முறித்துக் கொண்டு நான்காவது கட்ட ஈழப்போர் வெடித்தது. போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்த போதிலும், இருதரப்புமே தம்மைப் போருக்குத் தயார்படுத்திக் கொண்ட அமைதிக்காலம் அது. அந்தக் காலகட்டத்தில், இராணுவத் தலைமையக புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டும் மற்றொரு ஆய்வு அறிக்கை ஒன்று வெளியானது. அந்த ஆய்வை செய்திருந்தவர் மருத்துவ கலாநிதி ருவான் ஜெயதுங்க.

இலங்கையில் போரிடுவோரை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட, போர் அழுத்தங்களின் உளவியல் முகாமைத்துவம் (Psychological Management of Combat Stress – A Study Based on Sri Lankan Combatants) என்ற ஆய்வே அது.

அந்த ஆய்வுக்காக, இராணுவத் தரப்புக் கொடுத்த புள்ளிவிபரங்களின் படி, மூன்று கட்ட ஈழப்போர்களிலும் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை 17,066 ஆகும். அந்தக் காலகட்டத்தில், 9220 அதிகாரிகளும், 20,266 படையினருமாக, மொத்தம், 29,486 படையினர் காயமடைந்து, உடல் உறுப்புகளை இழந்ததாக அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் தரப்பில் அந்தக் காலகட்டத்தில் 17,903 பேர் மரணமானதாகவும், அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், இராணுவத் தலைமையகத்தினால், அண்மையில் ஆங்கில ஊடகவியலாளர் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, காணாமற்போனவர்களையும் சேர்த்து, மூன்றாம்கட்ட ஈழப்போரின் முடிவில் கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை 18,123 ஆகும்.

(ஈழப்போர் -1 இல்- 1031 பேர்,
ஈழப்போர்-2 இல் 4535 பேர்,
ஈழப்போர் -3 இல் 12,557பேர்).

இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது, காணாமற்போனவர்களை கொல்லப்பட்டவர்களாக இராணுவத்தரப்பு கணிக்கவில்லை.

இதனால், மூன்று கட்ட ஈழப்போர்களிலும் காணாமற்போனதாக அறிவிக்கப்பட்ட, 3718 படையினரையும் உள்ளடக்காமலேயே, அந்த ஆய்வுக்காக, 17,903 படையினர் கொல்லப்பட்டதான தரவு வழங்கப்பட்டுள்ளது என்று கருதலாம். இந்த ஆய்வுக்காக வழங்கப்பட்ட தரவிலும், அண்மையில் வழங்கப்பட்ட தரவுக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனால், காணாமற்போன படையினர் இதில் உள்ளடக்கப்படாது போனால் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதை காணலாம். அதுபோலவே, மூன்று கட்ட ஈழப்போர்களிலும், படுகாயமடைந்து அங்கவீனமடைந்த படையினரின் மொத்தத் தொகை, 29,486 என்று கூறுகிறது இந்த ஆய்வு. ஆனால், இராணுவத் தலைமையகம் அண்மையில் வழங்கிய, ஈழுப் போர்கள் பற்றிய தனித்தனியான புள்ளிவிபரங்களின்படி, மூன்று கட்ட ஈழப்போர்களிலும் படுகாயமடைந்த படையினரின் மொத்த எண்ணிக்கை, 15,606 ஆகும்.ltte artlery

(ஈழப்போர் -1இல்- 180 பேர்,
ஈழப்போர்-2 இல் 2671 பேர்,
ஈழப்போர் -3 இல் 12,755 பேர்).

இதன்படி, ஆய்வு அறிக்கைக்கு வழங்கப்பட்ட தரவுக்கும், இந்த்த் தரவுகளுக்கும் இடையில் மிகப் பெரிய வேறுபாடுகள் உள்ளதைக் காணலாம். இதில் சரியான எண்ணிக்கை எது என்று, சுயாதீனமான தரப்புகளால் முடிவுக்கு வருவது முடியாத காரியம்.

இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போன்று, போர் தொடர்பாக கடந்த காலங்களில் வழங்கப்பட்ட புள்ளிவிபரங்களுக்கு இடையில் பெரியளவில் முரண்பாடுகள் இருந்தன என்பதே முக்கியமானது.

மூன்றாம் கட்ட ஈழப்போருக்கும் நான்காம் கட்ட ஈழப்போருக்கும் இடையில் நிலவிய போர்நிறுத்த காலத்தில், ஒரு மென்தீவிர யுத்தம் நடந்தது யாவரும் அறிந்ததே. அந்தக் காலகட்டத்தில், இருதரப்புமே ஆட்டிலறிகள், மோட்டார்கள், கொண்டு மோதிக் கொள்ளாவிட்டாலும், தமது புலனாய்வுப் பிரிவுகள் மூலம் மோதிக் கொண்டன.

துப்பாக்கிகள் மூலமும் மறைமுகமாக சண்டையிட்டன. ஒருவரையொருவர் போட்டுத் தள்ளின.

ஆழ்கடலில் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன.

கடற்படைக் கப்பல்கள் மீதான கரும்புலித் தாக்குதல்களும் நடந்தன.

அதேவேளை, கொழும்பிலும் பிற பகுதிகளிலும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகளை வேட்டையாடும் சம்பவங்களும் நடந்தன.

இந்த மென்தீவிர யுத்தத்தின் பிற்காலத்தில், குறிப்பாக, 2005 டிசெம்பரில், சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், கிளைமோர் தாக்குதல்களும் இடம்பெற்றன.

இது தனியே இராணுவத்தினர் மீது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மட்டும் நடக்கவில்லை, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இடம்பெற்றன.

மாவிலாறு அணைக்கட்டைப் புலிகள் மூடிய பின்னர், அதனைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அது நான்காவது கட்ட ஈழப்போரின் தொடக்கம் எனலாம்.

அத்துடன், ஆட்டிலறி தாக்குதல்களும், விமானக்குண்டு வீச்சுகளும் ஆரம்பமாகின.

ஆனாலும், போர்நிறுத்த உடன்பாடு நூலிழையில் தொங்கிக் கொண்டிருந்தது.

கடைசியாக, 2006 ஓகஸ்ட் 11ம் திகதி, முகமாலை முன்னரங்கில் விடுதலைப் புலிகள் தொடுத்த பாரிய தாக்குதலை அடுத்து, நான்காவது கட்ட ஈழப்போர் அதிகாரபூர்வமாக வெடித்தது. அந்தப் போர் 2009 மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கும் வரை, ஓயாமல் நடந்தது.prabakaran with artlery

முகாலையில் புலிகள் தொடுத்த போர், யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாகும். அதற்காக புலிகள் மண்டைதீவு, அல்லைப்பிட்டி பகுதிகளி0லும் தரையிறங்கினர். ஆனால், முகமாலை முன்னரங்கை உடைத்து எழுதுமட்டுவாள் வரை, முன்னேறிய புலிகளால் கிளாலிப் படைத்தளத்தை வீழ்த்த முடியாது போனது. அதுபோலவே மண்டைதீவு, அல்லைப்பிட்டியிலும் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியாது போனது. அதனால், புலிகளின் யாழ்ப்பாணம் மீதான தாக்குதல் திட்டம் பிசுபிசுத்துப் போய் கைவிடப்பட்டது. எனினும், நான்காவது கட்ட ஈழப்போரில் வடமுனையில் – நாகர்கோவில், எழுதுமட்டுவாள், கிளாலி இராணுவ வேலியை கடைசிவரை பாதுகாப்பதில் விடுதலைப் புலிகள் உறுதியாக இருந்தனர். ஆனையிறவைப் படையினர் கைப்பற்றும் வரை அதைத் தக்கவைத்துக் கொண்டனர்.

நான்காவது கட்ட ஈழப்போரில், கிழக்கில் மூதூரைக் கைப்பற்றும் ஒரு தாக்குதலையும் புலிகள் நடத்தினர். ஆனால், சில நாட்களிலேயே அந்த முயற்சியும் படையினரால் முறியடிக்கப்பட்டது. இருவாரங்களுக்கு முன்னர், புத்தளம் கருவெலகஸ்வெவ பகுதியில் நடந்த வாகன விபத்தில் மரணமான, கேணல் ரவீந்திர ஹன்துன்பத்திரன இந்த முறியடிப்பில் முக்கிய பங்கு வகித்தவர். அப்போது மேஜராக இருந்த அவரது தலைமையிலான 2வது கொமாண்டோ படைப்பிரிவு தான், காலாற்படையினருடன் இணைந்து மூதூர் பிரதேசத்தில் புலிகளிடம் இழந்த பிரதேசங்களை மீட்டது.

நான்காவது கட்ட ஈழப்போரின் முக்கியமான ஒரு விடயம், விடுதலைப் புலிகளின் ஆட்டிலறிகள் கிழக்கிற்கும் பரவலாக்கப்பட்டது தான்.

122 மி.மீ, 130 மி.மீ, 152 மி.மீ ஆட்டிலறிகளை விடுதலைப் புலிகள் திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் நிறுத்திச் சண்டையிட்டது ஈழப்போர் வரலாற்றில் அதுவே முதல்முறை.

புலிகள் திருகோணமலைத் துறைமுகம், கடற்படைத் தளங்கள் மீது ஆட்டிலறிக் குண்டுகளை பொழிந்தபோது. அரசாங்கம் ஆடிப் போனது உண்மை.

அதுபோலவே இன்னொரு விடயம், விடுதலைப் புலிகளின் விமானப்படை.

சில இலகுரக விமானங்களை வைத்து, வான் ஆதிக்கத்திலும் பலமான நிலையில் இருப்பதாக ஏற்படுத்திக் கொண்ட பிம்பம், அரசின் போர்த்திட்டத்தில் கணிசமான தாக்கங்களை ஏற்படுத்தியது. இன்றுவரை உலகில் அரசு இல்லாத அமைப்பு ஒன்று விமானப்படையை வைத்திருந்து, குண்டுகளை வீசியதான வரலாறு பதிவாகவில்லை. நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், இனிமேல் உலகில் வேறெங்கும் அப்படியொரு வரலாற்றுப் பதிவு உருவாகும் என்று எதிர்பார்ப்பதும் கடினம். நான்காவது கட்ட ஈழப்போர், இரண்டு தரப்புமே நவீன தொழில்நுட்பங்களையும், தந்திரோபாயத் தாக்குதல்களையும் கொண்டதாகவே தொடங்கியது. இருதரப்புமே, மரபுவழிப் படையணிகளைக் கொண்டிருந்த போதிலும், மரபுசாரா முறைகளில் சண்டைகளை நடத்தவே விரும்பினர்.

புலிகளைப் பலவீனப்படுத்த இராணுவத்தரப்பு, கெரில்லா பாணியில் தாக்குதல்களை நடத்தியது.

தமது பக்க சேதங்களைக் குறைத்து, படைபலத்தைக் கட்டிக்காக்க புலிகளும் அதனை விரும்பினர்.

ஈழப்போர்- 4 கிட்டத்தட்ட ஒரு ஆட்டிலறிகள், மோட்டார்களின் யுத்தமாகவே இருந்தது.

ஈழப்போர் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதளவுக்கு இந்த பீரங்கிச் சமர் அமைந்தது.

போரிடும் தரப்பினருக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றிய புள்ளிவிபரங்களில் இருந்து இதன் தாக்கத்தை உணர்ந்து கொள்வது இலகுவானது.

சுபத்ரா

புலிகளைச் சமபல நிலைக்கு உயர்த்திச் சென்ற ஈழப்போர்-3

ஈழப்போர் -1, 1983 தொடக்கம் 1987 வரை 4 ஆண்டுகளும், இந்திய – புலிகள் போர் 1987 தொடக்கம் 1990 வரை சுமார் இரண்டரை ஆண்டுகளும், ஈழப்போர் -2, 1990 தொடக்கம் 1994 வரையான கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளும், ஈழப்போர் -4, 2006 தொடக்கம் 2009 வரையான சுமார் 3 ஆண்டுகளும் நீடித்தது. ஒரு வகையில் சொல்லப் போனால், இருதரப்பையுமே முடிவில் களைப்படைய வைத்த போர் என்றால் அது, ஈழப்போர் -3 தான். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக நடந்த போர், மக்களையும் சரி போரில் ஈடுபட்ட தரப்பினரையும் சரி சலிப்படைய வைத்தது. கொழும்பில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை விடுதலைப் புலிகள் சாதகமாக அணுகியதற்கு இதுவும் ஒரு காரணம்.

ltte artleryசெப்ரெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், ஏற்பட்ட சர்வதேச அரசியல் சூழல் தான், விடுதலைப் புலிகளை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் பேச வைத்ததாக கருதப்பட்டாலும், நீண்டபோரில் ஏற்பட்ட ஒரு சலிப்புணர்வு அதற்கு முக்கிய காரணம் என்பது மறுக்கமுடியாதது. ஈழப்போர் -3 தான் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாத சக்தியாக உலகினால் உணர வைத்தது. இந்த ஏழு ஆண்டுகாலப் போர் ஒருபோதும், தொடர்ச்சியாக எந்தவொரு பக்கத்துக்கும் சாதகமானதாக அமைந்து கொள்ளவில்லை.

இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட, போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு, குறிப்பாக அரசபடையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான். முன்னைய போர்களில் இருந்து இது வித்தியாசமான பரிமாணத்தை அடைந்திருந்தது. காரணம் விடுதலைப் புலிகள் மரபுவழிப் படையணிகளைக் கொண்ட ஒரு இராணுவமாக மாறியது இந்தக் காலகட்டத்தில் தான்.

சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் பூநகரிப் படைத்தளத்தை விலக்கிக் கொள்ளும் விவகாரத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டு, முறிந்து போன நிலையில், விடுதலைப் புலிகளே போர்நிறுத்த உடன்பாட்டில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக அறிவித்தனர். திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரணசுறு, சூரய ஆகிய பீரங்கிப் படகுகளை கடற்புலிகள் தாக்கியழித்ததுடன் ஆரம்பமானது இந்த மூன்றாவது கட்ட ஈழப்போர்.

1995 ஏப்ரல் 19ம் திகதி வெடித்த மூன்றாம் கட்ட ஈழப்போர், 2002 பெப்ரவரி 22ம் திகதி அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திடும் வரை தொடர்ந்தது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் இந்தப் போர் நீடித்தது. விடுதலைப் புலிகள் சந்தித்த – இலங்கையில் நடந்த ஐந்து கட்ட போர்களிலும், மிகவும் நீண்டது இது தான்.

ஈழப்போர் -1, 1983 தொடக்கம் 1987 வரை 4 ஆண்டுகளும், இந்திய – புலிகள் போர் 1987 தொடக்கம் 1990 வரை சுமார் இரண்டரை ஆண்டுகளும், ஈழப்போர் -2, 1990 தொடக்கம் 1994 வரையான கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளும், ஈழப்போர் -4, 2006 தொடக்கம் 2009 வரையான சுமார் 3 ஆண்டுகளும் நீடித்தது. ஒரு வகையில் சொல்லப் போனால், இருதரப்பையுமே முடிவில் களைப்படைய வைத்த போர் என்றால் அது, ஈழப்போர் -3 தான். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக நடந்த போர், மக்களையும் சரி போரில் ஈடுபட்ட தரப்பினரையும் சரி சலிப்படைய வைத்தது. கொழும்பில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை விடுதலைப் புலிகள் சாதகமாக அணுகியதற்கு இதுவும் ஒரு காரணம்.

செப்ரெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், ஏற்பட்ட சர்வதேச அரசியல் சூழல் தான், விடுதலைப் புலிகளை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் பேச வைத்ததாக கருதப்பட்டாலும், நீண்டபோரில் ஏற்பட்ட ஒரு சலிப்புணர்வு அதற்கு முக்கிய காரணம் என்பது மறுக்கமுடியாதது.

ஓயாத போர், குண்டு வீச்சுகள், ஷெல் தாக்குதல்கள், பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்ட பின்னடைவுகள், நோய்கள் என்று வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களிடையே சோர்வை ஏற்படுத்தத் தொடங்கியது.

இந்தச் சோர்வு விடுதலைப் புலிகள் மத்தியிலும் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.

அந்தச் சூழலைச் சமாளித்துக் கொள்ள – தற்காலிக நிம்மதியை ஏற்படுத்திக் கொடுக்க ஒரு ஓய்வு தேவைப்பட்டது.

சர்வதேச அரசியல் சூழமைவுகளும், கொழும்பின் ஆட்சிமாற்ற அறிகுறிகளும் சாதகமாக அமைந்து போனது விடுதலைப் புலிகளுக்கு அதிஷ்டமே.

ஆனால், இந்த அதிஷ்டமே பின்னர், துரதிஷ்டமாகவும் மாறியது.

விடுதலைப் புலிகளின் பெருந்தோல்விக்கு இந்த தற்காலிக அமைதியே வழிவகுத்தது என்பதையும் மறுக்க முடியாது.

ஈழப்போர் -3 தான் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாத சக்தியாக உலகினால் உணர வைத்தது. இந்த ஏழு ஆண்டுகாலப் போர் ஒருபோதும், தொடர்ச்சியாக எந்தவொரு பக்கத்துக்கும் சாதகமானதாக அமைந்து கொள்ளவில்லை.

திருகோணமலையில் பீரங்கிக் கப்பல்கள் மூழ்கடிப்பு, குறிப்பிட்ட சில படைமுகாம்கள் மீதான தாக்குதல்களில் கிடைத்த வெற்றி, வடக்கில் இரண்டு அவ்ரோ விமானங்களை வீழ்த்தியது, வடக்கில் படைநகர்வு முறியடிப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலம், விடுதலைப் புலிகளின் கை ஆரம்பத்தில் ஓங்கியிருந்தது. ஆனால், அந்த நிலை நீண்டகாலத்துக்கு நிலைக்கவில்லை. வெலிஓயாவில் ஐந்து இராணுவ முகாம்களைத் தாக்கியழிக்கும் புலிகளின் திட்டம் பெரும் தோல்வியாக அமைந்ததுடன், புலிகள் பக்கம் சாந்திருந்த வெற்றி மெல்ல மெல்ல அரசபடைகளின் பக்கம் மாறத் தொடங்கியது. இதன் ஒரு கட்டத்தில் யாழ்ப்பாணத்தைப் புலிகள் இழந்து போனது, அவர்களின் பெரிய பின்னடைவாக மாறியது. இதனால் போரின் மையம் – கட்டளை அமைப்புகள் அனைத்தும் வன்னிக்கு கைமாறியது. இறுதிவரை அந்த நிலையே தொடர்ந்தது.

யாழ்ப்பாணத்தை இழந்த பின்னர், அரசபடைகள் வெற்றி மிதப்பில் இருக்க முல்லைத்தீவு படைத்தளத்தை அடித்து வீழ்த்திய புலிகள் மீண்டும் தமது நிலையைத் தக்கவைத்துக் கொண்டனர். இலங்கையின் வரலாற்றில், இரண்டு மூன்று நாட்களுக்குள், சுமார் 1500 பேருக்கும் அதிகமான போரிடும் தரப்பினர் கொல்லப்பட்ட முதல் தாக்குதலாக அது அமைந்தது. புலிகளின் அந்த வெற்றியை சமனிலைப்படுத்தும் அடுத்த நடவடிக்கையை படைத்தரப்பு தொடங்கியது. முல்லைத்தீவுக்குப் பதிலாக கிளிநொச்சியைப் பிடித்துக் கொண்டது. தொடர்ந்து அது ஏ-9 வீதிக்கான சமராக மாறிய போது, மீண்டும் கிளிநொச்சியைப் புலிகள் பிடித்துக் கொண்டனர். ஆனாலும், தென்முனையில் மாங்குளத்தைக் கடந்து சென்ற அரசபடையினர், ஏ-9 வீதியை முழுமையாகப் பிடித்து விடுவரோ என்று அஞ்சப்பட்ட சூழலில், புலிகள் ஓயாத அலைகள் -3 நடவடிக்கை மூலம் இழந்துபோன பெரும் பிரதேசங்களை கைப்பற்றிக் கொண்டனர். அத்துடன் போரின் போக்கு விடுதலைப் புலிகளுக்கு சார்பாகத் திரும்பியது.

ஆனையிறவுப் பெருந்தளத்தையும் தள்ளிக் கொண்டு முகமாலை வரையும் முன்னேறிய புலிகள், பின்னர் யாழ்ப்பாண நகரின் எல்லை வரை வந்து நின்றனர். அந்த நெருக்கடியில் இருந்து படைத்தரப்பு ஓரளவுக்கு மீண்டு கொண்டாலும், மூன்றாவது கட்ட ஈழப்போர் புலிகளை ஒரு பலமான நிலைக்கே கொண்டு சென்றது. அக்னிகீல என்ற பெயரில் வடக்கில் அரசபடையினர் மேற்கொண்ட படைநகர்வு பெருந்தோல்வியாக முடிந்த போக, மூன்றாவது கட்ட ஈழப்போர் புலிகளை மேலாதிக்க நிலைக்கு கொண்டு சென்றிருந்தது. இந்த மூன்றாம் கட்ட ஈழப்போரில், இலங்கை இராணுவத்தினரின் தரப்பில், 420 அதிகாரிகளும், 9028 படையினருமாக மொத்தம் 9448 பேர் கொல்லப்பட்டதாக கூறுகிறது இராணுவத் தலைமையகத்தின் அதிகாரபூர்வ தகவல். இந்தக் காலகட்டத்தில், 93 அதிகாரிகளும், 2625 படையினருமாக, மொத்தம் 2718 இராணுவத்தினர் காணாமற் போயினர்.

காணாமற்போன படையினரும் கொல்லப்பட்டவர்களாகவே கருதப்படுவதால், ஈழப்போர்-3 இல், இலங்கை இராணுவம் 11,746 படையினரை இழந்துள்ளது. மேலும் இந்தப் போரில், 492 அதிகாரிகளும், 11,906 படையினருமாக, மொத்தம் 12,398 படையினர் படுகாயமடைந்தனர்.

மூன்றாம் கட்ட ஈழப்போரில், 349 கடற்படையினர் கொல்லப்பட்டனர். மேலும், 254 கடற்படையினர் இந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுடனான சண்டைகளில் காணாமற்போயினர். காணாமற்போன படையினரையும் சேர்த்து, இந்த ஏழு ஆண்டுகாலப் போரில், இலங்கைக் கடற்படை, 603 படையினரை இழந்துள்ளது. இந்தப் போரில் படுகாயமடைந்த 241 கடற்படையினரில் 24 பேர் மட்டுமே தொடர்ந்து சேவையாற்றக் கூடிய நிலையில் இருந்தனர். ஏனைய 217 பேரும் ஓய்வுபெற்றுச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கை விமானப்படையும், ஈழப்போர் -3 இல், கணிசமான இழப்புகளை சந்தித்தது.

விடுதலைப் புலிகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி பல விமானங்களை வீழ்த்தியதால், ஈழப்போர்களின் வரலாற்றிலேயே அதிக இழப்புகளை இந்தக் காலகட்டத்தில் தான் விமானப்படை சந்தித்தது. 208 விமானப்படையினர் ஈழப்போர் -3 இல் கொல்லப்பட்டதுடன் மேலும் 116 பேர் காயமடைந்தனர். ஈழப் போர் -3 இல் முப்படைகளையும் சேர்ந்த- காணாமற்போனவர்கள் உள்ளடங்கலாக, 12,557 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 12,755 பேர் இந்தப் போரில் படுகாயமடைந்தனர். இந்தப் போரில் கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த படையினரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாக உள்ளதைக் காணலாம்.

ஈழப்போர் -1 இல் முப்படையினர் தரப்பிலும் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1031 பேர், காயமடைந்தவர்கள் 180. ஈழப்போர் முப்படையினரின் தரப்பில், 4535 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2671 பேர் படுகாயமடைந்தனர்.

முதலிரு கட்டப் போர்களிலும், கொல்லப்பட்ட மற்றும் நிரந்தர காயங்களுக்குள்ளானவர்களின் எண்ணிக்கைகளுக்கு இடையில், இருந்த வேறுபாட்டுக்கும், ஈழப்போர் -3இல் இந்தக் கணக்கிற்கும் இடையில் பாரிய வேறுபாட்டைக் காணலாம்.

ஈழப்போர்-1 இல் கண்ணிவெடிகளை மையப்படுத்திய போரில், பெரும்பாலும் மரணங்களே நிகழ்ந்தன, படுகாயங்களுடன் தப்பியோர் மிகக்குறைவு.

ஈழப்போர் -2 துப்பாக்கிகள், கனரக ஆயுதங்களுடன் நடத்தப்பட்ட சமர். அதில், கிட்டத்தட்ட, ஒன்றுக்குப் பாதி என்றளவில் மரணங்களும் நிரந்தர பாதிப்புள்ள காயங்களும் படையினருக்கு ஏற்பட்டன.

ஈழப்போர் -3 ஒரு மரபுரீதியான போராகவே இடம்பெற்றது.

ஆட்டிலறிகளும், மோட்டார்களும் இந்தப் போரில் முக்கிய பங்கெடுத்தன.

இதனால், கொல்லப்பட்ட படையினருக்குச் சமமான எண்ணிக்கையினர், போர்க்களத்தில் இருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்தப்படும் காயங்களுக்கு உள்ளாகினர். விடுதலைப் புலிகள் தரப்பில், இந்தக் காலகட்டத்தில், 1995இல் 1508 பேரும், 1996இல், 1380 பேரும், 1997இல், 2112 பேரும்,1998இல், 1805 பேரும், 1999இல் 1549 பேரும், 2000இல், 1973 பேரும், 2001இல் 761 பேரும் உயிரிழந்தனர். விடுதலைப் புலிகள் தரப்பில் மூன்றாவது கட்ட ஈழப்போரில் மொத்தம் 11,088 பேர் உயிரிழந்ததாக கூறுகிறது அதிகாரபூர்வ தகவல்.

ஆக,

இருதரப்பிலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் படி, மூன்றாவது கட்ட ஈழப்போரில், ஏற்பட்ட மரணங்களுக்கு இடையில் மிகப்பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதைக் காணலாம்.

மூன்றாம் கட்ட ஈழப்போரில் முக்கியமான இரண்டு விடயங்கள் கடற்புலிகளும், ஆட்டிலறிகளும். புலிகளின் இந்த இரண்டு பிரிவுகளும் இந்தக் காலகட்டத்தில் தான் அசுரத்தனமான வளர்ச்சி கண்டன. அது அரச படையினரை பெரிதும் நெருக்கடிக்குள்ளாகியது மட்டுமன்றி போரின் போக்குகளையும் திசைமாற்றி விட்டிருந்தது.

****

புலிகளை மரபுவழிச் சமர்களுக்கு தயார்படுத்திய ஈழப்போர் – 2

இரண்டாம் கட்ட ஈழப்போர் பரந்தளவிலான சமர்கள், சண்டைகளைக் கொண்டதாகவே இருந்தது. அவ்வப்போது வழிமறிப்புச் சண்டைகளுடன் நடந்து வந்த இந்தப் போர் 1991 ஜுலையில் ஆனையிறவுத் தளம் மீது புலிகள் நடத்திய முற்றுகைச் சமருடன் புதிய கட்டத்துக்கு நகர்த்தப்பட்டது. அந்த முற்றுகையை உடைக்க, படைத்தரப்பு மேற்கொண்ட ‘ஒப்பரேசன் பலவேகய‘ என்ற நீண்ட படை நடவடிக்கை, இரண்டு மரபுவழி இராணுவங்களின் சமராக அதை எடைபோட வைத்தது. அப்போது விடுதலைப் புலிகள் தம்மை ஒரு மரபுவழிப் படையைக் கொண்ட இராணுவமாக உரிமை கோரியிருந்தாலும், அது ஒரு அரைநிலை மரபுவழிப் படையாகவே செயற்பட்டது என்பதே உண்மை.

ஏனென்றால், விடுதலைப் புலிகளிடம், அப்போது ஒரு மரபுவழி இராணுவத்துக்குரிய படைபலமோ, ஆயுத வளங்களோ இருக்கவில்லை. குறிப்பாக, குறுந்தூர மோட்டார்களும், உள்ளூரில் கவசவாகனமாக மாற்றியமைக்கப்பட்ட புல்டோசர்களும் தான் அவர்களிடம் இருந்தன. ஆனால் மரபுவழி இராணுவம் ஒன்றிடம், நெடுந்தூர ஆட்டிலறிகளும், கவசவாகனங்களும், டாங்கிகளும் இருக்க வேண்டும்.

ltte artlery 3

விரிவான ஆய்வில்,

இந்தியப்படையினரின் வெளியேற்றத்தை அடுத்து, ஒரு சில மாதங்கள் மட்டுமே வடகிழக்கில் அமைதி நிலை நீடித்தது. இந்தியப்படையினரின் வெளியேற்றத்தின் யாழ்.குடாநாட்டையும், வடக்கின் பெரும்பாலான பகுதிகளையும் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். பிறேமதாச அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் மெல்ல மெல்ல முறிந்து, மீண்டும் தொடங்கியது யுத்தம்.

1990 ஜுன் 10ம் திகதி மட்டக்களப்பில் தொடங்கிய மோதல் தான் ஈழப்போர் -2 ஆக வெடித்தது. முதலாம் கட்ட ஈழப்போரிலும், இரண்டாம் கட்ட ஈழப்போரிலும், விடுதலைப் புலிகள் முழுமையாக கெரில்லாப் போரையே நடத்தினர். ஆனால், இரண்டாம் கட்ட ஈழப்போர் விடுதலைப் புலிகளை ஒரு அரை மரபுவழிப் படையாக மாற்றியது.
கிழக்கில் முற்றிலும் கெரில்லாப் போரை நடத்திய விடுதலைப் புலிகள், வடக்கில், இராணுவ முகாம்களை சுற்றிவளைத்து, படையினரை முடக்கினர்.

கிழக்கில் புலிகளும் படையினரும், ஒருவரையொருவர் பதுங்கித் தாக்குவதையும் தப்பி ஓடுவதையும் வழக்கமாக்கிக் கொள்ள, வடக்கிலோ அதற்கு நேர் எதிர்மாறான போர் வியூகம் அமைக்கப்பட்டது. படையினரை முகாம்களுக்குள் முடக்கி வைத்திருப்பது, அத்தகைய முகாம்களை தாக்கியழிப்பது என்று புலிகள் செயற்பட்டனர். அதேவேளை, படையினரோ புதிய இடங்களைப் பிடித்து கட்டுப்பாட்டு பிரதேசத்தை விரிவாக்கவும், புலிகளின் தாக்குதலில் இருந்து தமது இருப்பை பாதுகாக்க, அவ்வப்போது முகாம்களுக்கு வெளியே வந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்பட்டனர். புலிகள் பலமடைந்து வந்ததை உணர்ந்த படைத்தலைமை, அவர்கள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்துவதைத் தவிர்ப்பதற்காக, தற்காப்புக்கான தாக்குதல்களை அவ்வப்போது நடத்திக் கொள்ள வேண்டியிருந்தது.

இரண்டாம் கட்ட ஈழப்போர் பரந்தளவிலான சமர்கள், சண்டைகளைக் கொண்டதாகவே இருந்தது. அவ்வப்போது வழிமறிப்புச் சண்டைகளுடன் நடந்து வந்த இந்தப் போர் 1991 ஜுலையில் ஆனையிறவுத் தளம் மீது புலிகள் நடத்திய முற்றுகைச் சமருடன் புதிய கட்டத்துக்கு நகர்த்தப்பட்டது. அந்த முற்றுகையை உடைக்க, படைத்தரப்பு மேற்கொண்ட ‘ஒப்பரேசன் பலவேகய‘ என்ற நீண்ட படை நடவடிக்கை, இரண்டு மரபுவழி இராணுவங்களின் சமராக அதை எடைபோட வைத்தது. அப்போது விடுதலைப் புலிகள் தம்மை ஒரு மரபுவழிப் படையைக் கொண்ட இராணுவமாக உரிமை கோரியிருந்தாலும், அது ஒரு அரைநிலை மரபுவழிப் படையாகவே செயற்பட்டது என்பதே உண்மை. ஏனென்றால், விடுதலைப் புலிகளிடம், அப்போது ஒரு மரபுவழி இராணுவத்துக்குரிய படைபலமோ, ஆயுத வளங்களோ இருக்கவில்லை.

குறிப்பாக, குறுந்தூர மோட்டார்களும், உள்ளூரில் கவசவாகனமாக மாற்றியமைக்கப்பட்ட புல்டோசர்களும் தான் அவர்களிடம் இருந்தன. ஆனால் மரபுவழி இராணுவம் ஒன்றிடம், நெடுந்தூர ஆட்டிலறிகளும், கவசவாகனங்களும், டாங்கிகளும் இருக்க வேண்டும். மரபுப் போர் பாணியில் புலிகள் பல சமர்களைச் செய்திருந்தாலும், இரண்டாம் கட்ட ஈழப்போரில், அவர்கள் முழுமையான மரபுப் போர்ப்பலத்தை பெறவில்லை. ஆனால், இரண்டாம் கட்ட ஈழப்போரில் புலிகளின் கடற்தாக்குதல் பலம், திடீரெனப் பெருகியது படைத்தரப்புக்குப் பெரும் அச்சுறுத்தலான விடயமாக மாறியிருந்தது.

வடக்கில் ஆனையிறவு, சிலாவத்துறை, பூநகரிப் படைத்தளங்கள் மீது விடுதலைப் புலிகள் இந்தக் காலத்தில் நடத்திய பெரும் சமர்கள் இறுதி வெற்றியை அவர்களுக்குக் கொடுக்காத போதிலும், கடல்வழி உதவியின்றி இனிமேல் எந்தவொரு படைத்தளங்களையும் வடக்கில் பாதுகாக்க முடியாது என்ற உண்மையை உணர்த்தியது. மரபுரீதியான தாக்குதல் உத்திகளைக் கையாண்டு புலிகள் நடத்திய இந்தச் சமர்களும், விடுதலைப் புலிகளின் தளங்களை அழிப்பதற்காக படையினர் யாழ்ப்பாணம், வன்னி, மணலாறு பிரதேசங்களில் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகளும் பெரும் ஆளணிச் சேதங்களை இருதரப்பிலும் ஏற்படுத்தின. இந்த பெருஞ்சமர்களின் போது, இருதரப்பும் பெருமளவிலான வெடிபொருட்களைப் பயன்படுத்தின.

1990 ஜுன் 10ம் திகதி தொடங்கிய இந்த இரண்டாம் கட்ட ஈழப்போர், 1994 நவம்பரில் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்து, போர் தவிர்ப்பு உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்படும் வரை நீடித்தது. கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் நீடித்த இரண்டாம் கட்ட ஈழப்போரில், இலங்கை இராணுவத்தின் தரப்பில் 140 அதிகாரிகளும், 3399 படையினருமாக மொத்தம் 3539 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 19 அதிகாரிகளும், 586 படையினருமாக மொத்தம் 605 இராணுவத்தினர் காணாமற்போயினர். காணாமற்போனவர்களும் கொல்லப்பட்டதாகவே தற்போது கணக்கிடப்படுவதால், ஈழப்போர் 2 இல் இலங்கை இராணுவத்தின் தரப்பில் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4144 பேராகும். இந்தக் காலகட்டத்தில், 80 அதிகாரிகளும், 2449 படையினருமாக மொத்தம், 2529 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். இந்த எண்ணிக்கை, போரினால் நிரந்தர காயங்களுக்கு உள்ளானவர்களாகும். குணமடைந்தவர்கள் இதில் அடங்கவில்லை.

இரண்டாம் கட்ட ஈழப்போரில், இலங்கைக் கடற்படை தரப்பில் 117 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 136 கடற்படையினர் காணாமற் போயினர். காணாமற் போனவர்களையும் சேர்த்து, கடற்படை இந்தப் போரில் 253 பேரைப் பறிகொடுத்தது. இந்தக் காலகட்டத்தில் மோசமாக காயமடைந்த 74 கடற்படையினரில், ஒரே ஒருவர் மட்டுமு தொடர்ந்து சேவையாற்றக் கூடிய நிலையில் இருந்தார். ஏனைய அனைவரும் ஓய்வுபெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடற்புலிகளின் தாக்குதல்களால், தான் ஈழப்போர் 2 இல் கடற்படை அதிக இழப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கை விமானப்படையும், ஈழப்போர் 2 இல் சில விமானங்களை இழந்தது. அதன் காரணமாகவும், தரையில் போர் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட விமானப்படையினர், புலிகளின் தாக்குதல்களில் சிக்கியதாலும், ஈழப்போர் -2 இல் விமானப்படை தரப்பில் 138 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 68 விமானப்படையினர் படுகாயமடைந்தனர். இரண்டாம் கட்ட ஈழப்போரில் கொல்லப்பட்ட பொலிசார் இந்தக் கணக்குகளில் உள்ளடக்கப்படவில்லை.

ஈழப்போர்- 2இன் தொடக்கத்தில் கிழக்கில் விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 300இற்கும் அதிகமான பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பொலிசார் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன, பொலிசாரும் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்றனர். இந்த நடவடிக்கைகளின் போது, ஈழப்போர் 2இல் நூற்றுக்கணக்கான பொலிசாரும் கொல்லப்பட்டதுடன், பல நூற்றுக்ணக்கானோர் காயமடைந்தனர். எனினும், அதுபற்றிய சரியான விபரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்த மூன்றரை ஆண்டுகாலப் போரில், காணாமற்போனவர்களையும் சேர்த்து, முப்படையினரின் தரப்பில், 4535 பேர் கொல்லப்பட்டனர். மேலும் முப்படைகளையும் சேர்ந்த 2671 பேர் இந்தப் போரில் படுகாயமடைந்தனர். இந்தப் போரில், விடுதலைப் புலிகள் தரப்பில் கொல்லப்பட்டவர்கள் பற்றிய துல்லியமான மதிப்பீடுகள் இல்லாவிட்டாலும், அவர்கள் வெளியிட்ட மாவீரர் பட்டியல் ஒன்றின் படி, 1990இல், 965 பேரும், 1991இல், 1622 பேரும், 1992இல், 792பேரும், 1993இல், 928 பேரும், 1994இல், 378 பேரும், உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி, ஈழப்போர் 2ல், விடுதலைப் புலிகள் தரப்பில் 4685 பேர் மரணமாகியுள்ளனர். இது முற்றிலும் சரியான கணக்காக இருக்க வாய்ப்பில்லை. ஒரு தோராயமான கணக்குத் தான். விடுதலைப் புலிகள் தரப்பில் இந்தக் காலகட்டத்தில் காயமடைந்தவர்கள், நிரந்தரப் பாதிப்பை அடைந்தவர்கள் எத்தனை பேர் என்ற விபரமும் இல்லை. அதேவேளை. படைத் தலைமையகம் வெளியிட்ட தகவல்கள் முற்றிலும் சரியானதாக இருக்கும் என்றும் கருதுவதற்கில்லை. எவ்வாறாயினும் இருதரப்பினதும் அதிகாரபூர்வ தகவல்களின் படி, இரண்டாம்கட்ட ஈழப்போரில் கொல்லப்பட்ட படையினர் மற்றும் புலிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாகவே இருந்துள்ளதை இந்தப் புள்ளிவிபரங்கள் எடுத்துணர்த்துகின்றன.

தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளர் இயக்குனர் மணிவண்ணன் காலமானார்

Dir Manivannan memoryபிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் (வயது 59) மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார்.

 Dir Manivannan

என் சடலத்தின் மீது புலிக்கொடி போர்த்த வேண்டும்!- மணிவண்ணனின் கடைசி ஆசை

manivannan_1

சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மணிவண்ணன், அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறியிருந்த நிலையிலேயே இன்று மரணமடைந்துள்ளார்.

நூறாவது நாள், 24 மணி நேரம், கோபுரங்கள் சாய்வதில்லை, அமைதிப்படை என தமிழில் 50 படங்களை இயக்கியவர் மணிவண்ணன். 400 க்கும் அதிகமான படங்களில் நடித்தும் உள்ளார்.

அண்மையில்தான் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த அமைதிப்படை-2 படம் வெளியாகி இருந்தது.

திமுக தலைவர் கருணாநிதியின் கதை வசனத்தில், ‘பாலைவன ரோஜாக்கள்’ என்ற படத்தையும் அவர் இயக்கி உள்ளார்.

இதுவரை ஈழத் தமிழருக்காக குரல்கொடுத்து வந்த தலைமகனின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். அன்னாரது குடும்பத்தினருக்கு ஈழத்தமிழினம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59.

சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள ஆர்.வி.ஆர். ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் மணிவண்ணன் குடும்பத்துடன் வசித்துவந்தார். இன்று பகல் 12 மணிக்கு வீட்டில் இருந்தபோது, முதுகு வலிப்பதாக கூறியவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.. அடுத்த நிமிடம் மயங்கி கீழே சாய்ந்து உயிரிழந்தார்.

குடும்பம்

மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும், ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மணிவண்ணன், அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறியிருந்த நிலையிலேயே இன்று மரணமடைந்துள்ளார்.

50 படங்களை இயக்கியவர்

கோபுரங்கள் சாய்வதில்லை இவரது இயக்கத்தில் வெளியான முதல் படமாகும். தொடர்ந்து இளமை காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்னதம்பி பெரியதம்பி, அமைதிப்படை, 24 மணி நேரம், ஆண்டான் அடிமை உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார்.

400 க்கும் அதிகமான படங்களில் நடித்தும் உள்ளார்.

அண்மையில்தான் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த அமைதிப்படை-2 படம் வெளியாகி இருந்தது.

இவர் இயக்கிய ‘பாலைவன ரோஜாக்கள்’ திமுக தலைவர் கருணாநிதியின் கதை வசனத்தில் வெளியானது.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனர்

பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவிடம் சேர்ந்து உதவி இயக்குனராக பணிபுரிந்த மணிவண்ணன், பின்னர் தனியாக திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள், டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதையும் எழுதி உள்ளார்.

இறுதிச் சடங்கு

மணிவண்ணனின் மறைவுக்கு தமிழ் திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்இ நடிகைகள் உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

நெசப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அவரது இறுதி சடங்கு நாளை நடக்கிறது.

Dir Manivannan 2

தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளர்

ஆரம்பக் காலங்களில் திமுக அபிமானியாக இருந்த மணிவண்ணன், பின்னர் வைகோ மதிமுகவை தொடங்கிய போது அவருக்கு ஆதரவளித்தார்.

தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளரான மணிவண்ணன், முள்ளிவாய்க்கால இறுதிப்போருக்கு பின்னர், சீமானின் நாம் தமிழர் கட்சி மேடைகளில் முழங்கி வந்தார். மேலும் பல்வேறு ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களிலும் பங்கேற்று வந்தார்.

கோவையை சேர்ந்தவர்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். அந்த மண்ணுக்கே உரிய நக்கல், நையாண்டி மணிவண்ணனிடம் தூக்கலாக காணப்படும்.

என் சடலத்தின் மீது புலிக்கொடி போர்த்த வேண்டும்!- மணிவண்ணனின் கடைசி ஆசை

நடிகர் சத்யராஜ் உடன் இணைந் அமைதிப்படை, மணிவண்ணனின் திரையுலக வாழ்வில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இப்படத்தின் விழா ஒன்றில் பேசிய மணிவண்ணன், ‘’நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன்.

தமிழ்நாட்டில் பிறந்துவிட்டதால், ஈழ உணர்வோடு வாழ்கிறேன். என் மரணத்திற்கு பிறகு சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொண்டு ஓடி வருவார்கள். அவர்களிடம் என் உடலை ஒப்படைக்கக்கூடாது.

என் உடம்பை சீமானிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அவர்தான் இறுதிச்சடங்கு செய்யவேண்டும்.

என் சடலத்தின் மீது விடுதலைப்புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை’’ என்று கூறினார்.

****

இயக்குநர் மணிவண்ணன் மறைவு கலை உலக பகுத்தறிவுப் போராளி மறைந்தார்!: வைகோ இரங்கல்

காலத்தால் அழியாத காவியங்கள் பலவற்றை இயக்கியவரும், தலைசிறந்த சிந்தனையாளருமான மணிவண்ணன் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாகத் தாக்கிற்று. தாங்க முடியாத அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளானேன்.

எழுத்திலும் பேச்சிலும், அனைவரையும் வசீகரிக்கும் பேராற்றல் பெற்ற மணிவண்ணன், நடிகராகவும் முத்திரை பதித்தார்.

தமிழ் இன மீட்சிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட கலை உலகப் போராளி மணிவண்ணன், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்காகத் துணிச்சலுடன் ஆதரவுக்குரல் எழுப்பி வந்தார். தமிழ் ஈழ விடுதலைக்கான பயணத்தில் இன்னும் அளப்பரிய பணிகளைச் செய்யும் எண்ணமும், திறமும் கொண்டு, இந்த இலட்சிய ஏந்தல் உழைத்திடும் வேளையில், இயற்கை அவரைப் பறித்துக் கொண்டதை எண்ணுகையில், வேதனை மேலிடுகிறது.

திராவிட இயக்கத்தில் சோதனைகளை எதிர்கொண்டு நான் போராடியபோது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உருவான தொடக்க காலத்தில், இயக்குநர் மணிவண்ணன் எழுத்திலும், மேடைப் பேச்சிலும், தோள்கொடுத்துத் துணைநின்று, ஆதரித்த பண்பும் பாங்கு, என்றும் என் எண்ணத்தில் நிலைத்து இருக்கும். ஆண்டுகள் பலவாக அவருடன் பழகிய உன்னதமான நாள்களை நான் எப்படி மறக்க முடியும்?

அவரது மறைவு, பகுத்தறிவு இயக்கத்துக்கு, கலை உலகுக்கு, தமிழ் ஈழப் போர்க்களத்துக்கு ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து கண்ணீரில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரை நேசிக்கும் அனைத்துத் தமிழ் உள்ளங்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீரைக் காணிக்கை ஆக்குகின்றேன்.

‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச்செயலாளர்
15.06.2013 மறுமலர்ச்சி தி.மு.க.
****
கனடாவில் இனமான இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் இரங்கல் நிகழ்ச்சி.
Dir Manivannan 3

தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 15.06.2013 அன்று இழந்துவிட்டது.

இவரின் இரங்கல் நிகழ்வு கனடாவில் நடைபெறும் விபரம் பின்வருமாறு.

இடம்: கனடா கந்தசாமி கோவில் – 733 Birchmount Rd, Scarborough, Ontario
காலம்: ஜுன் 17, ஞாயிறு மாலை 5 மணி.

ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு என்று வெளிப்படையாகவும் உறுதியாகவும் கூறுபவர். சுயநல வாழ்வு எனும் குறுகிய வட்டத்திற்குள் தனது நீண்ட வாழ்வை சிறைப்படுத்திக் கொள்ளாமல் உயர்ந்த வாழ்வு வாழ்ந்தார். தனது இனப்பற்றாலும் தேசப்பற்றாலும் தமிழ்ச் சமூக மேன்மைக்காக இறுதிவரை சேவையாற்றினார். ஈழத் தமிழ் மக்கள் விடுதலை அடையவேண்டுமென்ற உயரிய எண்ணத்திற்கு தனது அறிவாற்றல், செயலாற்றல் அனைத்தையுமே ஒருங்கிணைத்து தேசப் பணிபுரிந்தார்.

ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட தமிழ் இனத்தின் விடியலிற்காக தனது தேசப்பணியை உறுதியோடு முன்னெடுத்தார். கொடிய நோயினால் இவரது உடல் தளர்ந்து போயிருந்தாலும் உள்ளத்தில் சுதந்திர உணர்வு நிரம்ப இளமை மிடுக்குடன் மிளிர்ந்த இவர் இறுதிவரை தமிழ் மண்ணிலும், மக்களிலும் பற்று மிகுதியுடன் வாழ்ந்தார்.

ஈழத் தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் சிறீலங்கா இனவெறி அரசு பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்களை கண்மூடி தனமாக கொன்று குவித்தது .இவ் விவாகரத்தில் சிறீலங்கா அரசு நடந்து கொள்ளும் விதத்தை கண்டித்து தமிழ் நாட்டில் தனது மூச்சு இருக்கும்வரை ஓங்கி குரல் கொடுத்தார் .தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் இனமான இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் அர்ப்பணிப்பு என்றும் அழியாச் சுடர்விளக்காய் எரிந்து நிற்கும்.

”நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன், என் சடலத்தின் மீது விடுதலைப்புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை” என்று அன்று இனமான இயக்குனர் கூறிய வார்த்தைகள் அவர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் வைத்திருந்த உணர்வுகளை கோடிட்டு காட்டுகின்றது.

தமிழருக்கு நிரந்தர தமிழீழ தாயகம் விரைவிலே மலரும் என்ற உறுதியோடு தேசத்தின் விடுதலை மீதும், எமது இனத்தின் பற்றோடும் உறுதியோடும் இறுதி மூச்சு வரை செயற்பட்டு வந்த இனமான இயக்குனர் மணிவண்ணன் அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலை இத்துடன் தெரிவிக்கின்றோம்.

இனமான இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் இழப்பால் துயருறும் குடும்பத்தார், நண்பர்கள் அனைவரின் துயரிலும் நாம் பங்கு கொள்கிறோம்.

மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 416.830.7703
மின்னஞ்சல்: info@ncctcanada.ca
முகநூல்: facebook.com/canadianncct
***

மணிவண்ணன் தமிழ் மக்களுக்காக வீரத்துடன் குரல் கொடுத்த மாமனிதன் – யாழ்ப்பாண மக்கள் பேரவை
ஜூன் 16, 2013

தமிழ்த் தேசிய உணர்வாளரும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளரும் தமிழ் மக்களில் அக்கறையுடையவருமான மணிவண்ணன் அவர்கள் திடீர் மரணமடைந்த செய்தி யாழ்.குடாநாட்டு மக்களை ஆழ்ந்த துயரமடைய வைத்துள்ளதாக யாழ்ப்பாண மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கின்ற இந்த நேரத்தில் தமிழ் மக்களுக்காக வீரத்துடன் குரல் கொடுத்த மாமனிதன் ஒருவர் இன்று எங்கள் மத்தியில் இல்லை என்பதை நினைக்க எங்கள் உள்ளம் அழுகிறது. இவரின் இழப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் மேற்படி பேரவை தெரிவித்துள்ளது.

ஈழத் தமிழ் மக்களுக்காக இந்தியாவிலும் புலம்பெயர் நாடுகளிலும் குரல் கொடுத்த மணிவண்ணன் அவர்களுக்கு தமது கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குவதாக தெரிவித்துள்ள குடாநாட்டு மக்கள் பேரவை, அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரின் துயரத்தில் தாங்களும் பங்கெடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் அன்னாரின் இழப்பால் ஆழ்ந்த கவலையடைந்திருக்கும் திரை ரசிகர்களுக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கும் யாழ்ப்பாண மக்கள் பேரவை தமது அனுதாபங்களையும் தெரிவித்திருக்கின்றது.

மணிவண்ணன் மரணித்த செய்தி அறிந்த யாழ்ப்பாண மக்கள் பேரவை அவருக்கு வணக்கம் தெரிவித்து நேற்று சனிக்கிழமை இரவு வெளியிட்ட அஞ்சலிச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிங்கள இனவெறியர்களின் கடும்போக்குவாதத்திற்குள் சிக்கித் தவித்த தமிழ் மக்களை சிங்களத்தின் பிடியிலிருந்து மீட்க வேண்டுமென்று பெரும் விருப்பு கொண்டு செயற்பட்ட அமரர் மணிவண்ணன் அவர்கள் திடீர் மரணமடைந்த செய்தியானது எங்களை ஆழ்ந்த கவலையடைய வைத்துள்ளது. ஈழத்தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்த மாமனிதன் ஒருவர் இன்று எங்கள் மத்தியில் இல்லை என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தான் ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக இருந்த போதிலும் சினிமாவிற்கு அப்பால் ஈழத்தமிழ் மக்களை நேசித்த பெருமனிதன். தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழ் மக்கள் சிங்களவர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டமை கண்டு அவர் பொங்கியெழுந்தார். தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டுமென்று உரத்த குரல் எழுப்பினார்.

மணிவண்ணன் அவர்களின் சிந்தனைகள் ஏனையோரை விட அவரை வித்தியாசமான மனிதனாக மாற்றியது. அவர் எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தார். தமிழ் மக்களைப் போன்று தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர் ஆழமாக நேசித்தார். தான் இறந்தால் தனது உடலுக்கு தமிழீழ தேசியக் கொடியாகிய புலிக்கொடி போர்த்துமாறு அவர் புலம்பெயர் சமூகத்தினர் முன் உரையாற்றும் போது உணர்ச்சிப் பெருக்கோடு கூறியமையானது அவரின் போராட்ட ஆதரவையும் தமிழ் மக்கள் மீதான அன்பையும் வெளிப்படுத்தியிருந்தது.

இந்த வேளையில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் எங்களை விட்டுப் பிரிவது எங்களுக்கு பெரும் இழப்பாகும். அதிலும் மணிவண்ணன் அவர்களின் இழப்பானது அவரின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் போன்று தமிழ் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

மணிவண்ணன் அவர்கள் எந்த இலட்சியத்தை நேசித்தாரோ, அவர் தமிழ் மக்கள் தொடர்பாக எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாரோ அந்த இலட்சியங்களையும் அவரின் சிந்தனைகளையும் நிறைவேற்றுவதே நாம் அவருக்கு செய்கின்ற இறுதி வணக்கமாகும்.

“இலட்சிய வீரர்கள் வீழ்வதுமில்லை. தமிழரின் போராட்டம் தோற்பதுமில்லை”

தமிழ் மக்கள் பேரவை.
யாழ்ப்பாணம்.
15.06.2013

14.06.2003 சர்வதேச கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள்

14.06.2003 அன்று சர்வதேச கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினர் விடுதலைப் புலிகளின் எண்ணெய்க் கப்பல் மூழ்கடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

bt 14 6 2003கடற்கரும்புலி மேஜர் நிமால் (நிமல்)
தங்கராசா செல்வக்குமார்
கிளிநொச்சி

கடற்கரும்புலி மேஜர் மணியரசன்
முத்துலிங்கம் லவக்குமார்
வவுனியா

கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன்
துரை கைலேஸ்வரன்
யாழ்ப்பாணம்

கடற்கரும்புலி லெப்.கேணல் கதிர்
செல்வரட்ணம் சசிந்திரன்
யாழ்ப்பாணம்Aalakkadal 2  BT Maj Nimal 1 BT Maj Valuvan 1 BT Maj Maniyarasan 1 Lt Col-Kathir

BT Maj Valuvan BT Maj Maniyarasan BT Maj Nimal

ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

Aalakkadal

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

ltte veeravanakam 2

கடற்கரும்புலி – மேஜர் இளங்கோ / ஜீவரக்ஞ்சனின் வீரவணக்க நாள்

BT Maj Iango

மூசும் அலை ஏறி போய் வெடித்தவன்…

யாழ் – காரைநகர் சிறிலங்கா கடற்படைத் தளத்தினூள் ஊடுருவி தரித்து நின்ற இரு ” சவட்டன் ” ரோந்துப்படகினையும் ஒரு ” பேபி டோறா ” படகினையும் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீசச்சாவைத் தழுவிய ” கடற்கரும்புலி – மேஜர் இளங்கோ / ஜீவரக்ஞ்சனின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.

ltte veeravanakam 2

கடற்புலிகளின் துணைத் தளபதி : லெப் கேணல் சாள்ஸ் வீரவணக்கம்

Lt-Col-Charls

அன்றொரு காலம் …

சிங்களக் கடற்படையின் படகுகளைக் கண்டால் எங்களது சாதாரண படகுகள் கடலில் நிற்காது , நிற்கமுடியாது.

சண்டைகளுகென்றே தயாரிக்கப்பட்ட நேவிப்படகுகளின் வேகத்திற்கு , அவற்றில் பொருத்தப்படிருக்கின்ற சக்தி வாய்ந்த ஆயுதங்களின் தாக்குதலுக்கும் ஈடுகொடுக்க எங்களது சாதாரண படகுகளால் முடியாது என்பதால் துரத்தில் கண்டவுடனேயே ஓடி மறைந்துவிட வேண்டும் , வேறு வழியில்லை. எங்களது படகுகளை அழிப்பது அவர்களின் இலக்கு என்பதுடன் , கலைப்பது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காகவும் இருந்தது.

ஆனால் இன்று , அந்நிலை நேர்மாறாக மெல்ல மெல்ல மாறி வந்துவிட்டது.

தரையைப்போல கடலிலும் சிங்களப்படையை துரத்தித் தாக்கி அழிக்கலாம் எனச் சொல்லித் தந்தவனும் , முதன் முதலாக மட்டுமல்ல தொடராகவும் அதனைச் செய்து காட்டியவனும் தான் எங்கள் சாள்ஸ்.

1991 இன் இறுதியில் அது ஆரம்பித்தது.

நயினாதீவிலிருந்து ஊர்காவற்துறைக்கு கடல்ரோந்து புரிகின்ற நேவிப்படகுகளை வழிமறித்து தாக்க சாள்ஸ் முடிவெடுத்தான்.

தளபதி கங்கையமரனின் துணையோடு வேவு பார்த்து , தாக்குதல் திட்டம் வகுத்து , தாக்குதல் குழுக்களை ஒழுங்கு படுத்தி , ஆயுதங்களோடு படகுகளைத் தயார் செய்து தானே கட்டளையதிகாரியாகி வியூகம் அமைத்துச் சென்று கடற்சன்டையை வழி நடத்தினான் சாள்ஸ்.

கனோன் பீரங்கிகள் , 50 கலிபர்கள் மிகையான கனரகத் துப்பாக்கிகளுடன் , அதிவேக ஓட்டம் கொண்ட நேவியின் சண்டைப்படகுகளை 50 கலிபர் , ஜி . பி . எம் . ஜியுடன் சாதாரண துப்பாக்கிகளை மட்டுமே கொண்ட எங்களது மீன்பிடிப் படகுகள் துரத்தித் தாக்கின.

சிங்களக் கடற்படையை புலிகளின் படகுகள் கலைத்து விரட்டிய முதல் வரலாறு அது.

எதிரியின் படகொன்று மூழ்கடிக்கப்பட்டதுடன் , எல்.எம்.ஜி ஒன்றும் கைப்பற்றப்பட்ட போதும் இழப்பேதுமில்லை எங்களுக்கு.

இதற்க்கு முன்னர் நெடுந்தீவிற்கும் குறிகட்டுவானிற்கும் இடையிலுள்ள கடலில் சாள்ஸ் நடத்திய ஒரு கண்ணிவெடித்தாக்குதல் குறிப்பிடத்தக்கது.

இரவு முழுவதும் ஆழ்கடலுக்குள் இறங்கி நின்று , அலைகளின் நடுவில் அவன் கண்ணிவெடியை விதைத்துவிட்டு வர , மறுநாள் காலை அதில் சிக்கிய எதிரியின் படகொன்றை அலைகள் விழுங்கிகொண்டன என்பதுடன் சிங்களக் கடற்படையின் வடபிராந்தியத் தளபதி கொமாண்டர் சமரவீர படுகாயமடைந்தார் என்பதும் , 7 படையினர் கொல்லப்பட்டதும் முக்கியமானது.

உடைந்த படகையும் ஆயுதங்களையும் கடலுக்கடியிலிருந்து மீட்ட பின்னர்தான் சாள்ஸ் அடுத்த வேலைக்குப் போனான்.

1992 இன் துவக்கத்தில் , தாளையடிக் கடலில் எதிரியின் ” சவட்டன் ” விசைப்படகு மீது தானே கொமாண்டராகி நின்று ஒரு பகற்பொழுது தாக்குதலை நடத்தினான் சாள்ஸ். எங்களது நான்கு வீரர்களை நாம் இழந்ததுடன் அவனுக்கும் காலில் காயம் ஏற்ப்பட்டது அந்தச் சண்டையில்.

ஆனையிறவுக் கடல் நீரேரியில் எதிரியின் நீருந்து விசைப்படகொன்றை மூழ்கடித்து , பிப்ரி உட்பட பல ஆயுதங்களை கைப்பற்றிய கடற் கண்ணித் தாக்குதல்….

அதே நீரேரியில் எதிரியின் ரோந்துப்படகுத் தொடரைத் தாக்கி பல ஆயுதங்களைக் கைப்பற்றிய இன்னொரு சண்டை…..

மாதகல் கடற் பிரதேசத்தில் , விசைப்படகொன்றை மூழ்கடித்த மற்றொரு கண்ணிவெடித் தாக்குதல்….

பூநகரி கல்முனைக்கருகே உள்ள மாந்தீவில் , சிங்களப்படையின் கரையோரக் காவலரணைத் தகர்த்து , துப்பாக்கிகளோடு எதிரியின் சடலங்களையும் எடுத்து வந்த அதிரடித் தாக்குதல்….

இவ்வாறாக கடற்புலிகளின் கடற் சண்டைத் திறன் வளர்த்த ஒவ்வொரு தாக்குதலுக்கு பின்னாலும் இருந்த உந்துவிசை அவன்.

அவனிடம் ஒப்படைக்கப்படுவது என்ன வேலையாக இருந்தாலும் அந்த வேலையோடு தன்னையே கலந்து செய்துமுடிக்கும் தன்மை அவனுடையது.

வெற்றிகரமான கடற்சண்டைகளின் முன்னோடித் தளபதி மட்டுமல்ல , அவனொரு சிறந்த தொழிநுட்பவியலாளனுமாவான்.

வேலையில்லாத வேளையில்லாதவன் அவன். ஓய்வுக்கு ஒய்வு கொடுத்திருந்த உழைப்பாளி. ஒய்வு நேரங்களில் மூளைக்கு வேலை கொடுத்து எதையாவது ஆய்வு செய்துகொண்டிருப்பான்.

கைவசம் உள்ள வளங்களைக் கொண்டு புதிது புதிதாக எதயாவது கண்டுபிடிக்க வேண்டுமென்றோ அல்லது கஷ்டப்பட்டுச் சிரமத்துடன் நாம் செய்கின்ற வேலைகளை இலகுவாகவும் வேகமாகவும் செய்து முடிக்கக்கூடிய வழிகளைப் பற்றியோ அல்லது இப்படியான ஏதோ ஒரு விடயத்தைப் பற்றியே தான் அவனது ” ரெக்னிக்கல் மூளை ” எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கும்.

” முயற்சி செய்து பார்த்துவிட்டோ அல்லது முயற்சி செய்து பாராமலேயோ ஏதோ ஏதோ ஒரு சாட்டுச் சொல்லிக்கொண்டு இது சாத்தியப்படாது என்று நாங்கள் ஒதுக்கி வைத்து விடுகின்ற வேலைகளை தானாகவே பொறுப்பெடுத்து வெற்றிகரமாகச் செய்து முடித்துவிடுவான் அந்தப் பொறியியலாளன் ” என்றான் ஒரு கடற்புலித் தோழன்.

கடற்புலிகளின் தொழில்நுட்ப வளர்ச்சியும் சாள்ஸின் அறிவாற்றலும் ஒன்றோடொன்று இறுகப் பிணைக்கப்பட்டிருந்தது.

வோக்கி கதைக்க ” குறொஸ் ” செய்ய வேண்ரும் என்றாலும் சரி ” கொம்யூனிக்கேசன் செற் ” ருக்கு தேவையான உதிரிப்பாகம் என்றாலும் சரி என்னவாகத்தான் இருந்தாலும் அது வேண்டும் இது வேண்டும் என்று எதிர்பார்க்காமல் உள்ளூரில் கிடைக்கக் கூடியவற்றைக் கொண்டே செய்து முடித்து விடுவது தான் மற்றைய தொழில்நுட்பவியலாளருக்கும் இவனுக்கும் இடையிலுள்ள வேறுபாடு.

கடற்புலி வீரர்களுக்கான படகுப் பயிற்சிக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்தான் அந்த சிறந்த படகோட்டுனன். புயலுக்கும் சூறாவளிக்குமிடையில் ஆர்பரித்தெழும் கடல் அலைகளுக்கும் நடுவில் படகை நீண்ட தூரத்திற்கு செலுத்தக் கூடியதான பயிற்சியை அளித்து பெண்புலிகள் உட்பட திறமையான ஓட்டிகளை சாள்ஸ் உருவாக்கித் தந்தான். இப்போது அவனில்லை , ஆனால் அந்தப் பட்டரை இனி எப்போதும் புதியவர்களை தயார் செய்து கொண்டே இருக்கும் , அவனது நினைவுகளோடு….

சண்டை முனைகளில் நிலவும் போர்ச் சூழ்நிலைகளால் தடங்கங்கள் ஏற்ப்பட்டு , எமக்கு உணவு வராமல் விட்டு விடுவது அடிக்கடி நடக்கும்

லெப்.கேணல் மகேந்தி, லெப்.கலைமாறன், லெப். இளங்கோ, லெப்.குட்டிமணி வீரவணக்க நாள்

Lt Col Mahenthi withமன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் 10/06/2006 அன்று மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவடைந்த மன்னார் களமுனை படைத்துறை தளபதி லெப்ரினன்ட் கேணல் மகேந்தி உள்ளிட்ட 4 மாவீரர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.

ஒருமணி ஒலிக்கையில்….

மன்னார் மாவட்ட படைத்துறைத் தளபதி
லெப்.கேணல் மகேந்தி
இராசு மகேந்திரன்
கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் கலைமாறன்
சுப்பிரமணியம் நந்தகுமார்
வெள்ளாங்குளம், மன்னார்

லெப்டினன்ட் இளங்கோ
இராசரத்தினம் விவேகானந்தன்
கைதடி, நாவற்குழி, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் குட்டிமணி
மணியம் மகேஸ்வரன்
யோகபுரம், மல்லாவி

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

இதேநாள் மட்டக்களப்பு மாவட்டம் திகிலிவெட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் குறிசூட்டுத்தாக்குதலில்
குடும்பிமலை பகுதி அரசியற்துறைப் பொறுப்பாளர்
கப்டன் ரமணிதரன்
வடிவேல் கங்கநாதன்
திகிலிவெட்டை, மட்டக்களப்பு

என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் மகேந்தி என்று அழைக்கப்படும் கெருடாவில் சாவகச்சேரியைச் சொந்த முகவரியாகவும் உதயநகர் மேற்கு உதயநகர் கிளிநொச்சியை தற்போதைய முகவரியாகவும் கொண்ட இராசு மகேந்திரன்,

கலைமாறன் என்று அழைக்கப்படும் மன்னார் வெள்ளாங்குளத்தை சொந்த முகவரியாகவும் வெள்ளாங்குளம கணேசபுரத்தை தற்போதைய முகவரியாகவும் கொண்ட
சுப்பிரமணியம் நந்தகுமார்,

இளங்கோ என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் கைதடி நாவற்குழியை சொந்த முகவரியாகவும் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு மூங்கிலாறு ரகுபதி குடியிருப்புத்திட்டத்தை தற்போதைய முகவரியாகவும் கொண்ட இராசரத்தினம் விவேகானந்தன்,

குட்டிமணி என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டம் 2 ஆம் யுனிட் யோகபுரம் மல்லாவியைச் சேர்ந்த மணியம் மகேஸ்வரன் ஆகிய போராளிகளே வீரச்சாவைடைந்துள்ளனர்.

லெப்.கேணல் மகேந்தி 1980 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு நடந்த ஆனையிறவுச் சமரில் வீரச்சாவை தழுவிய லெப். கேணல் சூட்டி இவரது சகோதரன் ஆவார். 1996 இல் யாழ்ப்பாணம் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட போது ஊடுருவல் தாக்குதலை நடத்தியிருந்தார்.

யாழ். செல்லும் படையணியின் தளபதியாக விளங்கிய இவர், அக்கால கட்டத்தில் யாழ். குடாநாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினருக்கு சிம்ம செர்ப்பனமாக விளங்கினார். ஓயாத அலைகள் 03 இராணுவ நடவடிக்கையின் போது யாழ். பகுதிகளை கைப்பற்றும் சமரில் முக்கிய பங்காற்றியிருந்தார்.

முதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி ,மேஜர் நிதன் ,கப்டன் சாதுரியன் வீரவணக்க நாள்

06-10-1997 அன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த ‘ஜெயசிக்குறு’ நடவடிக்கைப் படைகளின் விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

BT Thandikkulam attack

கரும்புலி கப்டன் சாதுரியன்
நடராசா அரசரட்ணம்
மட்டக்களப்பு

கரும்புலி மேஜர் யாழினி
சிவசுப்ரமணியம் ராகினி
யாழ்ப்பாணம்

கரும்புலி மேஜர் நிதன் (பர்வதன்)
மாணிக்கம் அருள்ராசா
மட்டக்களப்பு

ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 16ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

முதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி மற்றும் கரும்புலி மேஜர் நிதன் , கரும்புலி கப்டன் சாதுரியன் 

BT-Maj-Yalini

BT-Maj-Nithan BT-Capt-Sathooriyan

தாண்டிக்குளம் – நொச்சிமோட்டை தாக்குதல்…
புளியங்குளம் பற்றிய இராணுவ அபிலாசைகளுடன் படைத்தலைமை இருந்த வேளை , படையினருக்கு ஒரு பேரிடி தாண்டிக்குளத்தில் விழுந்தது. 10.06.1997 அன்று தாண்டிக்குளம் – நொச்சிமோட்டைப் பகுதிகள் மீது உள்நுழைந்து தாக்கும் ஒரு அதிரடித்தாக்குதலை புலிவீரர்கள் நிகழ்த்தினர். ஆக்கிரமிக்கப்பட்ட பாதிப்பகுதி மீது புலிகள் தாக்குவர் என்பதை படையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தாக்குதலுக்காக புலிகள் தெரு செய்த இடங்களை சிங்களத் தளபதிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஓமந்தையையும் அதற்க்கு வடக்காகவும் புலிகள் தாக்குதலை எதிர்பார்த்திருந்த படையினருக்கு வவுனியாவின் வாசலிலேயே அடி விழுந்தது அதிர்ச்சியூட்டும் தாக்குதலாய் அமைந்துவிட்டது.

திருவுடலில் வெடி சுமந்து …

ஐயசிக்குறுய் படையின் கட்டளை தலைமையகம் தாண்டிக்குலத்திலேயே அமைந்திருந்தது. சண்டைகளுக்குத் தேவையான வெடிபொருட்களும் – மருத்துவ சாமான்களும் இந்தப்பகுதியிலேயே களஞ்சியப்படுத்தபப்ட்டிருந்த ஆட்லறி குண்டுகள் – மோட்டார் எறிகணைகள் – யுத்த ராங்கி குண்டுகள் என்பன ஐயசிக்குறுய் பூதத்தின் பிரதான உணவுகளாக இருந்தன. பூதத்தை பட்டனை போட்டு அதன் இயக்கத்தை மந்தப்படுத்தும் தந்திரத்தை புலிகள் கடைப்ப்பிடித்தனர். இத் தாக்குதலில் பலாயிரம் எறிகணைகளும் , பல நூறு யுத்த ராங்கி குண்டுகளும் தீயில் அழிந்தன. பல இராணுவ வாகனங்கள் அழிக்கபப்ட்டன. சில கைப்பர்ரபப்ட்டன. இதேசமயம் குறைந்த 400 படையினர் கொல்லப்பட்டு , 570 ற்கு அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.  தாக்குதல் வலையத்திற்க்குள் சிக்குப்பட்ட படையினருக்கு உதவ உலங்கு வானூர்த்திகளில் வந்திறங்க சிங்களக் கொமாண்டோக்கள் முயன்றனர்.

தம்பி நிதனோடு தங்கை யாழினி எங்கள் சாதுரியன்

இந்த முயசியில் ஒரு ” எம் . ஐ . 24 ” உலங்கு வானூர்த்தி கடும் சேதத்திற்கு உள்ளானது. ஓமந்தைப் பகுதிகளில் இருந்து உதவிக்கென நொச்சிமோட்டைப் பகுதிக்குள் நூலைய முயன்ற படையினர் மீது தாக்குதல் நடத்தபப்ட்டது. இதில் இரண்டு ராங்குகள் அழிக்கப்பட்டன. குறைந்தது 24 மணிநேரமாக தாண்டிக்குளம் –  நொச்சிமோட்டைப் பகுதிகள் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தன.

முதல் பெண் தரைக் கரும்புலி மேஜர் யாழினி விபரணம்

ஐயசிக்குறுய் படைக்கு விழுந்த முதலாவது மரண அடியாக தாண்டிக்குளம் தாக்குதல் அமைந்துவிட்டது. ” புலிகள் காட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றனர் ” என்ற அரசின் பிரச்சாரத்தின் மத்தியில் , தப்பிப்பிழைத்த தாண்டிக்குளம் படையினர் சிலர் தங்களை உருமாற்றி – சிவிலியன் உடையணிந்து – வவுனியாவுக்குள் ஓடினர் என்று செய்திகள் வெளிவந்தன. இப்பெரும் தாக்குதலின் போது மூன்று கரும்புலிகள் உட்பட 80 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்.

– விடுதலைப்புலிகள் இதழ் ( வைகாசி – ஆனி : 1997 )

Up ↑