Search

Eelamaravar

Eelamaravar

Month

May 2013

தேசியத் தலைவர் வே.பிரபாகரன் குடும்ப படங்கள்

prabakaran family 31

***

https://www.facebook.com/Pirabhaakaran

https://www.facebook.com/pages/Prabakaran/

Leader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம்

prabhakaran family /தலைவரின் குடும்ப படங்கள்

Leader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம்

தமிழீழ தேசியத் தலைவரின் புரட்சிகர சித்தாந்தம்

anita-prabakaran interview

English Tamil Eelam National Leader Hon.V.Pirapaharan’s revolutionary socialism

Pdf tamil version   Anita Pratap’s interview V.Pirapaharan 1984 TAMIL

இக்கட்டுரையின் முழுக்கருத்திலும் உடன்பாடு இல்லாவிட்டாலும்  தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் உருவான புரட்சிகர சோசலிசத் தமிழீழம் என்ற சித்தாந்தம் காலப்பொருத்தம் கருதி வாசகர்களுக்காக பிரசுரம் செய்கிறோம்.

2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற அனைத்துலக செய்தியாளர் மாநாட்டில் திறந்தவெளிப் பொருளாதாரம் தொடர்பாக தமிழீழ தேசியத் தலைவர் தெரிவித்த கருத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு சோசலிச சித்தாந்தத்தை தலைவர் அவர்கள் கைவிட்டார் என்று உருத்திரகுமாரன் குழுவினர் கூறுவதுதான் இதில் இன்னும் வேடிக்கையாக உள்ளது.

தேசியத் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு பத்தாண்டுகள் நிறைவில் ஒரு பார்வை-காணொளி

சோசலிசம் என்றால் என்ன?

இதற்கு எவ்வாறான வரைவிலக்கணத்தை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கொடுத்தார்?

திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகள் தொடர்பாக 2002ஆம் ஆண்டு தலைவர் அவர்கள் விடுத்த அறிவித்தல் அவரது சிந்தனையில் உருவான புரட்சிகர சோசலிச சித்தாந்தத்திற்கு முரணானதா?

இவற்றுக்கான பதில்களை நாம் வேறு எங்கும் தேடி அலையத் தேவையில்லை. இவற்றை தலைவர் அவர்களின் உரைகள் – செவ்விகள் போன்றவற்றிலும், தலைவரின் சிந்தனைக்கு தத்துவார்த்த வடிவம் கொடுக்கப்பட்டு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வெளியீடுகளிலும், தலைவர் அவர்களின் தமிழீழ சுதந்திர சாசனமாக விளங்கும் ‘சோசலிசத் தமிழீழம்’ PDF ltte Freedom Charter for Tamil Eelam என்ற ஆவணத்திலும் நாம் காணலாம்.National Leader Hon.V.Pirapaharan’s Freedom Charter for Tamil Eelam

இவை பற்றி நாம் விரிவாக ஆராய்வதற்கு முன்னர் திறந்தவெளிப் பொருண்மியம் தொடர்பாக பொதுவுடமை (கம்யூனிசம்) சித்தாந்தத்தின் தந்தையாக விளங்கும் கார்ல் மார்க்ஸ், சோசலிசப் (சமவுடமை) புரட்சியின் பிதாமகனாக விளங்கும் விலாடிமிர் லெனின் ஆகியோரின் கருத்துக்களை இங்கு சுருக்கமாகப் பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

திறந்தவெளிப் பொருண்மியம் என்பது இன்று முதலாளித்துவத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக காணப்படுவது மறுக்க முடியாதது. சந்தை வணிகத்தில் ஆட்சியாளர்களின் தலையீடுகளை எதிர்க்கும் இக்கோட்பாடே மேற்குலகின் தாராண்மை சனநாயக ஆட்சியமைப்புக்களுக்கு அடிநாதமாக விளங்குகின்றது. அதேநேரத்தில் கார்ல் மார்க்ஸ் கனவுகண்ட பொதுவுடமை சமுதாயமாக இருந்தாலும் சரி, லெனின் அவர்களால் தத்துவார்த்த வடிவம் கொடுக்கப்பட்ட சமவுடமைப் புரட்சிச் சித்தாந்தமாக இருந்தாலும் சரி, இவற்றுக்கு அடிநாதமாகவும் திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாடே விளங்குகின்றது. இதுதான் அரசியல் சித்தாந்தத்தில் திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாடு வகிக்கும் நகைமுரண் வகிபாகமாகும்.

எவ்வளவு தூரத்திற்கு வர்க்க முரண்பாடுகளுக்கும், சுரண்டல்களுக்கும் திறந்தவெளிப் பொருண்மியம் வித்திடுகின்றதோ, அதே அளவிற்கு ஒடுக்கப்படும் மக்களின் புரட்சிக்கு வித்திடும் தன்மையையும் அது கொண்டுள்ளதை கார்ல் மார்க்ஸ் அவர்கள் புரிந்து கொண்டிருந்தார். இதனால்தான் 09.01.1848 அன்று பிறசெல்சில் நடைபெற்ற பிறசெல்ஸ் சனநாயக ஒன்றியத்தின் மாநாட்டில் உரையாற்றும் பொழுது திறந்தவெளிப் பொருண்மியம் தொடர்பாக பின்வருமாறு மார்க்ஸ் அவர்கள் குறிப்பிட்டார்:

“சகோதரத்தின் பெயரில் ஒரே தேசத்திற்குள் எவ்வாறான வகுப்பு வேறுபாடுகளை திறந்தவெளிப் பொருண்மியம் தோற்றுவிக்கின்றது என்பதை நாம் ஏற்கனவே நிரூபித்துவிட்டோம்.

அந்த வகையில் உலகில் உள்ள தேசங்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் தன்மையையே திறந்தவெளிப் பொருண்மியம் கொண்டுள்ளது… இது பழமை
வாய்ந்த தேசங்களிடையே பிளவை ஏற்படுத்தி பாட்டாளி – முதலாளி வர்க்க முரண்பாடுகளை உச்சநிலைக்கு இட்டுச் செல்கின்றது.

ஒற்றை வார்த்தையில் கூறுவதானால் சோசலிசப் புரட்சிக்கு திறந்தவெளிப் பொருண்மியம் வித்திடுகின்றது.

இந்தப் புரட்சிகர எண்ணத்துடனேயே திறந்தவெளிப் பொருண்மியத்தை நான் ஆதரிக்கிறேன்.” இதே கருத்தையே 17.10.1921 அன்று திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாடுகளை உள்ளடக்கிய சோவியத் ஒன்றியத்திற்கான புதிய பொருண்மியக் கொள்கைகளை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றும் பொழுது லெனின் அவர்களும் வெளியிட்டார்.

திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைளை அமுல்படுத்துவதன் மூலம் புரட்சிகர பட்டாளி வர்க்கத்தை தோற்றுவித்து அதன் ஊடாக சமூகத்தில் புரட்சிகர பொருண்மிய மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்பதே லெனினின் கருத்தாக இருந்தது:

“நிகழும் போரில் யார் வெற்றி பெறுவார்கள், எவர் பயனடைவார்கள் என்பதுதான் இப்பொழுதுள்ள கேள்வி: நாம் திறந்து விடும் கதவாலும், மேலும் பல கதவுகளாலும் (எமது பிரசன்னத்தின் மத்தியிலும், எமக்குத் தெரியாமல் திறக்கும் கதவுகளாலும்) நுழையும் முதலாளிகளா? அல்லது ஆட்சியிலிருக்கும் பாட்டாளி வர்க்கமா? இதனால் பயனடையப் போகின்றது என்பதுதான் கேள்வி… அதேநேரத்தில் முதலாளித்துவம் பயனடையும் பொழுது தொழில் உற்பத்தியும் வளர்ச்சி கண்டு பாட்டாளி வர்க்கம் பலமடைவதற்கு வழிகோலும் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.”

அதாவது திறந்தவெளிப் பொருண்மியம் சரியான முறையில் கையாளப்பட்டால் அது சமூகப் புரட்சிக்கு வித்திட்டு வர்க்க முரண்பாடுகளும், சுரண்டல்களும் நீங்கிய சுபீட்சமான சமுதாயம் தோற்றம் பெறுவதற்கு வழிகோலும் என்பதே கார்ல் மார்க்ஸ் அவர்களினதும், விலாடிமிர் லெனின் அவர்களினதும் கருத்தாக இருந்தது.

சரி, இது பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம்.

1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த ‘சண்டே’ எனப்படும் இந்திய ஆங்கில சஞ்சிகை தலைவரின் சித்தாந்தம் பற்றி வினவியது. அதற்கு ஒற்றை வசனத்தில் தலைவர் பதிலளித்தார்:

“கேள்வி: உங்களின் சித்தாந்தக் கோட்பாடு என்ன?

பதில்: புரட்சிகர சோசலிசம்.

கேள்வி: எப்படியோ ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ்வகையான நாடாக அமையுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப் பெறும். சோசலிசம் என்பதன்மூலம் சமத்துவமான சமூக அமைப்பை நான் கருதுகிறேன். இதில் மனித சுதந்திரத்திற்கும், தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதமுண்டு. எல்லாவித ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான சனநாயகமாக அது திகழும். தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து தமது கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புக்கள் கிடைக்கின்ற ஒரு சுதந்திர சமூகமாகத் தமிழீழம் அமையும்…”

இச்செவ்வி மூலம் 1984ஆம் ஆண்டிலேயே ஒரு செய்தியை தெளிவாக தலைவர் அவர்கள் எடுத்துரைத்தார். அதாவது தனது புரட்சிகர சோசலிச சித்தாந்தம் என்பது ஈழத்தமிழர்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் திறந்த வெளிப் பொருண்மியக் கொள்கைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதே அது.

திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளுக்கு அடிநாதமாக விளங்குவது மனிதவுரிமைகள் என்று மேற்குலக நாடுகளில் போற்றப்படும் மனித சுதந்திரமும், லிபெற்றி (liberty) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தனிநபர் உரிமைகளும் ஆகும்.

தலைவர் அவர்களின் செவ்வி வெளிவருவதற்கு ஓராண்டுக்கு முன்னர் 1983ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார வெளியீட்டு வாரியத்தின் பதிப்பாக ‘அரச பயங்கரவாதமும் ஆயுதப் புரட்சியும்’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை பாலா அண்ணை வெளியிட்டார். அதில் தலைவரின் புரட்சிகர சோசலிசம் தொடர்பாகவும், அதில் பொதிந்துகிடக்கும் மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தையும் பின்வருமாறு அவர் விளக்கினார்:

“எமது இயக்கத்தை ஆரம்பித்து, அதனைக் கட்டுக்குலையாது கட்டுப்பாட்டுடன் கட்டி வளர்த்து வரும் பெருமை, எமது தலைவர் பிரபாகரனையே சாரும். இவரே இன்று எமது இயக்கத் தலைவராகவும், தளபதியாகவும் இருந்து கொண்டு இயக்கத்தை வழிநடத்தி வருகிறார்.

இன ஒடுக்குமுறையால் எழுந்த சமூக, அரசியல், பொருளாதாரப் புறநிலைகள் தமிழ்த் தேசியவாத எழுச்சியை ஈழத்தமிழரிடையே வலுப்பெறச் செய்தன. ஆரம்பத்தில் அதே தேசியவாதத்தால், தேசாபிமானத்தால் உந்தப்பட்டு ஆயுதப் போராட்டத்தில் குதித்த நாம், காலப்போக்கில் ஒரு புரட்சிகர சித்தாந்தத்தையும், அதனால் நெறிப்படுத்தப்பட்ட கொள்கைத் திட்டம் – செயற்திட்டத்தின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் உணர்ந்து கொண்டு, ஒரு விடுதலை இயக்கத்தை கட்டுக்கோப்பாக அமைத்து, ஒரு புரட்சிகர கொள்கைத் திட்டத்தை நெறிப்படுத்துவதற்கும், நாம் வரித்துள்ள ஆயுதப் போராட்ட வடிவங்களுக்கு வலுவேற்றி தேசிய விடுதலையுடன் சோசலிசப் புரட்சியையும் முன்னெடுத்துச் செல்லவும், மார்க்சி-லெனினிச தத்துவத்தை இன்றியமையாததாக ஏற்றுக் கொண்டோம். இந்த அரசியல் விழிப்புணர்வால் நாம் புரட்சிகர சோசலிசத்தை எமது புரட்சிச் சித்தாந்தமாக வரித்துக் கொண்டோம்.“

அதாவது, சரியான முறையில் கையாளப்படும் திறந்தவெளிப் பொருண்மியம் எவ்வாறு சமூகப் புரட்சிக்கு வித்திட்டு சமூகத்தில் சுபீட்சமான சூழலுக்கு வழிவகுக்கும் என்று கார்ல் மார்க்ஸ், விலாடிமிர் லெனின் ஆகியோர் கருதினார்களோ அதே வழியிலேயே தனது புரட்சிகர சோசலிச சித்தாந்தத்திற்குள் திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாட்டை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களும் உள்ளடக்கினார்.

தலைவர் அவர்களின் புரட்சிகர சோசலிசம் என்பது வைதீக மார்க்சியவாதிகள் முன்வைத்த உழுத்துப் போன அரச இயந்திரத்தின் பிடிக்குள் சிக்கித் திணறும் பொருண்மியக் கொள்கைகளை அடியோடு நிராகரித்தது. அதேநேரத்தில் பொருண்மிய சுதந்திரத்தின் போர்வையில் சமூகத்தில் சுரண்டல்களும், முரண்பாடுகளும் வலுவடையும் சூழல் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்யும் வகையிலும் தலைவர் அவர்களின் புரட்சிகர சோசலிச சித்தாந்தம் அமைந்தது.

அதாவது தலைவரின் புரட்சிகர சோசலிசம் என்பது அரச கட்டுப்பாடுகள் இன்றி தமிழீழ மக்கள் சுதந்திரமாக தமது பொருண்மிய வாழ்வைக் கட்டியெழுப்பும் விதத்திலும், அதில் காத்திரமான பங்கை புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் முதலீட்டாளர்கள் வகிப்பதற்கு இடமளிக்கும் வகையிலும் அமைந்தது. இதுதான் மலரும் சோசலிச தமிழீழத்தில் மனித சுதந்திரத்திற்கும், தனிமனித உரிமைகளுக்கும் உத்தரவாதம் இருக்கும் என்று 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் தலைவர் அவர்கள் விடுத்த அறிவித்தலின் அர்த்தபரிமாணமாகும்.

தமிழீழத் தேசியத் தலைவரின் இந்நிலைப்பாடு பாலா அண்ணையால் தத்துவார்த்த வடிவம் கொடுக்கப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் 1985ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தலைவரின் சுதந்திர சாசனமாக விளங்கும் சோசலிச தமிழீழம் எனும் ஆவணத்தில் உள்ளது. அதில் திறந்தவெளிப் பொருண்மியம் தொடர்பாகவும், புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களின் பங்கு பற்றியும் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

“மத்திய அரசின் குறுகிய வட்டத்திற்குள் அல்லாது சனநாயக ரீதியில், சுயாதீனமான முறையில் தேசிய பொருளாதாரத் திட்டம் வகுக்கப்படுவதையும், செயற்படுத்தப்படுவதையும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஊக்குவிக்கும். தமிழீழத்தின் சமூக-பொருளாதார புனரமைப்பில் பொதுமக்கள் சகல மட்டத்திலும் பங்குகொள்ள எமது விடுதலை இயக்கம் வாய்ப்பளிக்கும். தேசிய செல்வம் சமத்துவமாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்பதை உறுதியளிக்கும் அதேவேளை, தேசிய பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் முயற்சிகளில் வெளிநாடுகளில் வதியும் தமிழீழத் தேசாபிமானிகளுக்கு சகல சந்தர்ப்பங்களும் அளிக்க எமது இயக்கம் தீர்மானித்திருக்கின்றது.”

இவ்வாறு திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளை தன்னகத்தே கொண்டுள்ள தலைவரின் சுதந்திர சாசனத்தின் ஆங்கில வடிவம் பின்வருமாறு தெரிவிக்கின்றது:

The LTTE will not adopt a rigid centralised planning but opt for liberalisation and democratisation in the framing and implementing national economic programmes. LTTE will encourage people’s participation at all levels in the socio-economic transformation of the nation. Concept of self-management and self-reliance will be governing principles in shaping policies towards economic progress. While ensuring equal distribution of national wealth, the LTTE will provide incentives for expatriate Tamil patriots to contribute to the development of the national economy.”

தலைவரின் சுதந்திர சாசனமாக விளங்கும் சோசலிச தமிழீழம் என்ற ஆவணத்தின் ஆங்கில மொழியாக்கத்தின் மேற்கண்ட பகுதியில் குறிப்பிடப்படும் லிபரலைஸ்சேன் (liberalisation) என்ற சொற்பதம் திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாட்டை உள்ளடக்கிய புரட்சிகர சோசலிச சித்தாந்தத்தையே விளித்து நிற்கின்றது. இதுவே தனது சுதந்திர சாசனம் வெளியிடப்பட்டு பதினேழு ஆண்டுகள் கடந்த பின்னர் 2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற அனைத்துலக செய்தியாளர் மாநாட்டில் திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகள் தொடர்பாக தலைவர் வெளியிட்ட கருத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

இதனைத்தான் ‘நாங்கள் திறந்தவெளிப் பொருண்மியத்தை ஆதரிக்கின்றோம் (We are for free trade)’ என்று தலைவரின் கருத்தை ஆங்கிலத்தில் பாலா அண்ணை மொழிபெயர்த்துக் கூறியதன் அர்த்தமாகும்.

உருத்திரகுமாரனின் நாடுகடந்த குழுவின் பரப்புரை செய்வது போன்று புரட்சிகர சோசலிச சித்தாந்தத்தைக் கைவிட்டு திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாட்டை தலைவர் தழுவிக் கொள்ளவில்லை. மாறாக தலைவரின் புரட்சிகர சோசலிசச் சித்தாந்தம் என்பது திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாட்டை உள்ளடக்கியதாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்ற நாள் முதல் இருந்து வந்துள்ளது.

இதனால்தான் 1980களில் யாழ்ப்பாணக் குடாநாடு தமது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொழுது சுயசார்பு பொருண்மியத்திற்கு அடித்தளமிட்ட அதேவேளை, திறந்தவெளிப் பொருண்மியத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் ஊக்குவித்தார்கள். இதனைத்தான் 1990ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை நிர்வாகத் தலைநகராகக் கொண்டு தமிழீழ நடைமுறை அரசை நிறுவிய பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் செய்தார்கள்.

இதுதான் 1995ஆம் ஆண்டின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசின் மையம் வன்னிக்கு நகர்ந்த பொழுதும் நடந்தது. இதுதான் 2002ஆம் ஆண்டு போர்நிறுத்தம் ஏற்பட்டதும் கிளிநொச்சியை நிர்வாகத் தலைநகராகக் கொண்டு தமிழீழ நடைமுறை அரசை தமிழீழ விடுதலைப் புலிகள் விரிவாக்கம் செய்த பொழுதும் நடந்தது.

அதாவது சோசலிச தமிழீழம் என்ற சுதந்திர சாசனத்தை எழுதுவதோடு மட்டும் தலைவர் நின்றுவிடவில்லை. தனது சுதந்திர சாசனத்தில் குறிப்பிட்டப்பட பொருண்மிய விடுதலை, பெண் விடுதலை, சாதிய விடுதலை, மத சார்பின்மை, மலையக தமிழர்களின் உரிமைகள் உட்பட பலதரப்பட்ட திட்டங்களை தனது நெறியாட்சியில் இயங்கிய தமிழீழ நடைமுறை அரசில் தலைவர் அவர்கள் நடைமுறைப்படுத்தினார்.tamileelam freedom charter

http://tamileelamfreedomcharter.org/

காற்றோடு காற்றாகக் கலந்த சமுத்திரகுமாரி அங்கயற்கண்ணி

யாழ்ப்பாணம் வேலணை தான் அங்கயற்கண்ணி பிறந்த ஊர். யாழ்ப்பாணமும் அதை ஒட்டியுள்ள சப்த (ஏழு) தீவுகளும் சேர்ந்ததுதான் யாழ் குடா நாடு. அனலைத் தீவு, எழுவைத் தீவு, காரைத் தீவு, நயினாத் தீவு, புங்குடு தீவு, மண்டைத் தீவு, வேலணைத் தீவு – என்று அந்தத் தீவு வரிசையில் ஏழாவதாக வருகிறது வேலணை.
வேலணையில் அங்கயற்கண்ணி குடும்பத்துக்குச் சொந்தமான காணி இருந்தது. அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு சிங்கள ராணுவத்திடம் இழந்த பிறகு யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியிலுள்ள கொக்குவில்லுக்குக் குடிபெயர்ந்தது அவளது குடும்பம். கொக்குவில் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் சாலையில் உள்ளது. அங்கே குடிபெயர்ந்தபோது அங்கயற்கண்ணிக்கே கூடத் தெரியாது அந்தச் சாலை வழியாக இல்லாமல் கடல்வழியாகத் தான் காங்கேசன் துறை நோக்கிய தனது பயணம் அமையப் போகிறது என்பது.

 

முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி 

கடலால் சூழப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தின் கடற்கரைகள் வினோதமானவை. ஒவ்வொரு கரைக்கும் ஒவ்வொரு சுபாவம். பிரபாகரன் பிறந்த வல்வெட்டித் துறை கடற்கரை அலையே இல்லாது ஏறக்குறைய ஒரு கடல் நீரேரி போல ஆர்ப்பாட்டம் இல்லாமல் பிரபாகரன் போலவே அமைதியாக இருக்கும். வேலணை அதற்கு நேர்மாறான கடற்கரை. நீண்ட வெண்மணற்பரப்பு உயர உயரமான சீற்றத்துடன் எழுகிற அலைகள் – என்று வேலணை ஒரு ஆவேசக் கடற்கரை.

கொக்குவில்லுக்கு வரும் முன்பே ஓங்கி அடிக்கிற வேலணையின் கடல் அலைகளைப் போலவே நீச்சல் பயிற்சிக்காக அங்கே அடிக்கடி வந்துசென்ற பெண் கடற்புலிகளாலும் கவரப்பட்டாள் அங்கயற்கண்ணி. அந்தப் போராளிகள் அந்தப் பகுதி மக்களுடன் இயல்பாகப் பழகியதும் அவர்களுக்கு இருக்கிற கஷ்டங்களைக் கேட்டுக் கொண்டதும் அதற்கு என்ன தீர்வு என்று தங்களுக்குள் பேசிக் கொண்டதும் அவளை அவர்கள்பால் ஈர்த்தது.

இன்றைக்கு நமது தமிழக மீனவர்களுக்கு இருக்கிற உயிராபத்து அன்றைக்கு வேலணை பகுதி மீனவர்களுக்கும் இருந்தது. மீன் பிடிக்கச் செல்பவர்கள் இலங்கைக் கடற்படையின் அச்சுறுத்தலாலோ தாக்குதலாலோ பாதி வழியிலேயே எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கண்கலங்கத் திரும்பிவருவது அடிக்கடி நடக்கிற சம்பவமாக இருந்தது. தங்களது வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலையே அந்த மக்கள் அஞ்சி அஞ்சிச் செய்யவேண்டிய அவலநிலை. வயிற்றுப் பிழைப்புக்கான தங்கள் தொழிலை இயல்பாகச் செய்யமுடியாத நிலையில் அந்த மக்கள் கண்ணீரோடும் வறுமையோடும் காலந்தள்ளுவதைப் பார்த்தவள் அங்கயற்கண்ணி.

சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காமல் ஆட்டு மந்தையைப் போல் அடைபட்டுக் கிடக்கவில்லை அங்கயற்கண்ணியின் இதயம். அவர்களது கண்ணீர் துடைக்கப்பட வேண்டுமானால் ஆயுதம் ஏதுமில்லாத அப்பாவி மக்கள்மீது ஆயுதப் பிரயோகம் செய்யும் இனவெறி பிடித்த கடற்படைக்குப் பாடம் புகட்டவேண்டும் என்று நினைத்தாள். அதற்கான ஒரே வழி கடற்புலிகள் அமைப்பில் இணைவதுதான் என்று உறுதியாக நம்பினாள். கொக்குவில்லுக்கு வந்தபிறகு அங்கயற்கண்ணி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்ததன் பின்னணி இதுதான்.

வேலணையில் தன் குடும்பத்துக் காணியெல்லாம் பறிக்கப்பட்டபோதே திருப்பி அடிக்கவேண்டும் – என்கிற எண்ணம் வேர்விட்டிருக்க வேண்டும் அங்கயற்கண்ணிக்குள்! கடற்புலிகள் அமைப்பில் சேர்ந்தவுடனேயே தான் கரும்புலியாக இருக்க விரும்புவதைத் தெரிவித்தவள் அவள். கொலைவெறி பிடித்த திமிங்கலம் போல் தங்கள் கடல்பகுதியில் நடமாடும் சிங்கள இனவெறி கடற்படையின் கப்பல்களில் ஒன்றையாவது தகர்க்கவேண்டும் – என்பதுதான் அவளது கனவாக இருந்தது.

வேலணையில் இருந்தபோதும் சரி கொக்குவில்லுக்கு வந்த பிறகும் சரி இருட்டியபிறகு வெளியே போவதென்றால் தாயின் துணையின்றிப் போகத் துணியாதவள் கயல். தாயின் அரவணைப்பில் குழந்தையாகவே இருந்தவள். இயக்கத்தில் அவள் சேர்ந்ததை அவளை அறிந்த எவராலும் நம்பமுடியவில்லை.

இயக்கத்தில் சேர்ந்ததிலிருந்தே போட்டிகளில் முதலிடம் தொடர்ந்து குழுத் தலைவி – என்று முன்னணியிலேயே இருந்தாள் அங்கயற்கண்ணி. தொடக்கத்தில் லெப்டினென்ட் கேர்னல் பாமாவின் தலைமையில் கடற்கண்காணிப்பில் ஈடுபட்ட குழுவில் அவளும் இடம்பெற்றிருந்தாள். மரபு வழிப் போரில் விடுதலைப் புலிகள் எவ்வளவு திறன் படைத்தவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்திய பூநகரி படைத்தளம் மீதான ‘தவளைப் பாய்ச்சல்’ தாக்குதலின் போது பாமா அங்கயற்கண்ணியை உள்ளடக்கிய குழு கடற் கண்காணிப்பில் வெற்றிகரமாக ஈடுபட்டது.

அங்கயற்கண்ணியின் ஈடுபாடும் ஆற்றலும் மிக விரைவிலேயே அவளை ‘கேப்டன்’ நிலைக்கு உயர்த்தின. அங்கயற்கண்ணி கேப்டன் அங்கயற்கண்ணியாக அறிவிக்கப்பட்டாள். கரும்புலிகளுக்கான கடும் பயிற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாள். அங்கயற்கண்ணி இயக்கத்தில் சேர்ந்ததுதான் தெரியும் அவள் குடும்பத்துக்கு! விரும்பி கரும்புலியாகி இருக்கிறாள் என்பது தெரியாது எவருக்கும்!

இயக்கம் கொடுக்கும் விடுமுறையில் ஒருமுறை தாயைப் பார்க்க கொக்குவில்லுக்கு வந்தாள் அங்கயற்கண்ணி. நன்றாகப் படிக்கவேண்டும் – என்று தம்பிகளுக்கு அறிவுரை சொன்னாள். தன்னைப் பற்றிக் கவலைப்பட்ட தாயிடம் ‘என்னைப் பற்றிக் கவலைப்படாதே! நான் காத்தோடு காத்தா போயிடுவேன் அம்மா’ என்று அவள் சொன்னதற்கு எவ்வளவு ஆழமான அர்த்தம் இருக்கிறது என்பதை அப்போது எவரும் உணரவில்லை.

காத்தோடு காத்தாக கேப்டன் அங்கயற்கண்ணி இரண்டறக் கலந்ததுஇ 1994 ஆகஸ்டு மாதத்தில். இந்திய சுதந்திர தினத்தன்று அவளது இறுதிப்பயணம் தொடங்கியதுஇ அன்று நள்ளிரவே அந்தப் பயணம் முடிவடைந்தது.

அன்று 1994 ஆகஸ்ட் 15ம் நாள். காங்கேசன் துறை துறைமுகத்தில் 45 அடி ஆழ கடல்நீரில் நிறுத்தப்பட்டிருந்த வடபிராந்தியத்துக்கான தலைமைக் கட்டளைக் கப்பலான ‘அபித’ தான் அவளது இலக்கு. மெலிந்த சரீரம் அவளுக்கு. 60 கிலோ கூட இருக்காது அவளது எடை. அவளது இலக்கோ 6300 டன் எடை கொண்ட ராட்சசக் கப்பல்.

326 அடி நீளமும் 51 அடி அகலமும் கொண்ட அந்தக் கப்பல் வட பிராந்தியத்துக்கான நடமாடும் தலைமையகமாகவே இருந்ததால் மிகவும் சக்தி வாய்ந்த ராடார்கள் அதில் பொருத்தப் பட்டிருந்தன. வலுவான ஆயுதங்களைத் தாங்கியிருந்தது அது. அப்படியொரு அதி சக்தி வாய்ந்த கப்பலை அழிக்கத் தேவையான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளிடம் இல்லை என்பதால் அந்தக் கப்பலைத் தொட்டுப்பார்க்கக்கூட புலிகளால் இயலாது என்று உறுதியாக நம்பியது சிங்களக் கடற்படை. அங்கயற்கண்ணி என்கிற உயிராயுத வடிவில் ஆழ்கடல் வழியே ஆபத்து வந்துகொண்டிருப்பதை அவர்கள் அறியவேயில்லை.

தாக்குதலுக்காக அங்கயற்கண்ணி புறப்பட்ட கடற்கரையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் 17 கடல் மைல். (ஏறத்தாழ 35 கிலோமீட்டர்.) சிறிது தூரம் வரை படகில் சென்றாலும் கடற்படை மோப்பம் பிடித்துவிடக்கூடும் என்பதால் மொத்தத் தொலைவையும் நீந்தியே கடப்பது என்று முடிவு செய்திருந்தாள் அங்கயற்கண்ணி. ‘கவலையே படாதீங்க… பத்திரமாப் போவேன்.. இலக்கை அடிக்காமத் திரும்பமாட்டேன்’ என்று புறப்படும் போது உறுதியுடன் சொன்னாள் தனக்குப் பிரியாவிடை கொடுத்த தோழிகளிடம். அவளது குரலில் ஒலித்த ‘ஓர்மம்’ (வைராக்கியம்) அவர்களை வியக்கவைத்தது.

சக பெண் கடற்புலிகளில் சிலர் அவளுடன் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நீந்திச் சென்றனர். ஆழ்கடல் வரை சென்று அவளை வழியனுப்பினர். அவளைப் பிரிய மனமின்றி அவள் நீந்திச் செல்வதைக் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அவள் தங்கள் பார்வையிலிருந்து மறைந்தபிறகே திரும்பினர் அவர்கள்.

மாலையில் தொடங்கியது அங்கயற்கண்ணியின் கடற்பயணம். கடற்கரையில் அமர்ந்து அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவளது தோழிகள். அத்தனை பேரின் மனத்திலும் அங்கயற்கண்ணி நீந்திச் சென்ற காட்சி மட்டுமே படர்ந்திருக்கவேண்டும். அந்த இரவில் அவர்களுக்கு சற்றுத் தள்ளி கடல் மட்டுமே அலைகள் வழியாகப் பேசிக் கொண்டிருந்தது.

கடலின் இன்னொரு முனையில் காங்கேசன் துறையை சுமார் எட்டரை மணி நேர நீச்சலுக்குப் பின் எட்டியிருந்தாள் அங்கயற்கண்ணி. எட்டரை மணி நேரத்தில் 17 கடல் மைலை நீந்திக் கடக்க வைத்தது அவளது உடல் வலிமையாயிருக்க வாய்ப்பில்லை… அது அவளது மன வலிமை!

ஆகஸ்ட் 16ம் தேதி அதிகாலை 12.35 மணி….. அங்கயற்கண்ணி என்கிற உயிராயுதம் காங்கேசன்துறை துறைமுகத்தில் வெடித்துச் சிதறியது. சுமார் 50 கிலோ எடையே இருந்த அந்த உயிராயுதத்தின் தாக்குதலில் 6300 டன் எடை கொண்ட ‘அபித’ வெடித்துச் சிதறியது. அதன் பாதுகாப்புக்காக அருகில் நின்றிருந்த பீரங்கிக் கப்பலான டோரா கப்பல் ஒன்றும் உடன்கட்டை ஏறுவதைப் போல் அபிதவுடன் சேர்ந்து சாம்பலானது.

அதிர்ந்து போனது சிங்களக் கடற்படை. எந்தத் தாக்குதலாலும் தகர்க்க முடியாது என்று அவர்கள் நினைத்த கட்டளைக் கப்பல் அவர்கள் கண்ணெதிரிலேயே தீப்பிழம்பாக எரிந்துகொண்டிருந்தது. அவர்களது கனவுக் கோட்டைகளில் ஒன்று – அபித. அந்தக் கோட்டை அவர்களது கண் முன்னாலேயே ஜலசமாதி ஆகிக்கொண்டிருந்தது.

காங்கேசன்துறையில் அபித கப்பல் தகர்க்கப்பட்ட வெடிச்சத்தம் பல மைல் தூரத்துக்குக் கேட்டது. கடலின் இன்னொரு முனையில் அங்கயற்கண்ணியை வழியனுப்பிவிட்டுக் காத்திருந்த பெண் போராளிகள் 35 கிலோமீட்டர் தூரத்திலிருந்து பெருத்த அதிர்வுடன் ஒலித்த அந்தப் பேரொலியைக் கேட்டவுடன் ‘கட்டளைக் கப்பல் அவுட்’ என்று உரக்க முழங்கினர். அது ஒரு நொடி கூட நீடிக்கவில்லை. அடுத்த நொடியே நினைத்துக்கூட பார்க்கமுடியாத அந்தச் சாதனையை உயிரைக் கொடுத்து நிறைவேற்றியிருக்கும் தங்கள் சகோதரி அங்கயற்கண்ணியின் நினைவில் ஆழ்ந்தனர் அவர்கள். கண்கலங்க ஓடிப்போய் கடற்கரையில் நின்றனர் அந்த நள்ளிரவில்… எங்கேயிருந்து அங்கயற்கண்ணி விடைபெற்றாளோ அந்தக் கடற்கரையில் கண்ணீரோடு நின்றனர்.

‘உங்கள் தோழி சமுத்திரகுமாரி ஆகிவிட்டாள் அவளை என் மடியில் ஏந்தியிருக்கிறேன்’ – என்று சொல்வதைப் போல் கூப்பிடு தூரத்தில் உரத்த குரலில் பேசிக் கொண்டேயிருந்தது அலைகடல். வரலாறும் அங்கயற்கண்ணியை அப்படித்தான் அழைக்கிறது – ‘கடலன்னையின் பெண்குழந்தை’ என்று!

50 கிலோ ஆயுதம் ஒன்று 6300 டன் அசுரனைத் தகர்த்த இந்த வீர வரலாறுஇ கோலியத்தை வீழ்த்திய டேவிட் கதையை வாசித்த எவரையும் அது உண்மையாகவே நடந்திருக்குமோ என்றுகூட யோசிக்கவைத்திருக்கும்.

இனப்படுகொலைதான் செய்கிறது இலங்கை – என்பது தெரிந்தே சிங்கள இனவெறி அரசுக்கு ஆயுதங்களை அள்ளி அள்ளிக் கொடுத்த ஈவிரக்கமற்ற அத்தனை நாடுகளுக்கும் அண்ணல் காந்தியைப் போல் தன்னுடைய வாழ்வையே செய்தியாக அனுப்பிவைத்தவள் அங்கயற்கண்ணி. ‘இனப்படுகொலை செய்கிற இலங்கைக்கு நீங்கள் மேலும்மேலும் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தாலும் எம் மக்களைக் காக்கப் போராடும் எங்களுக்கு ஆயுதமே வராது தடுத்தாலும் உயிராயுதம் இருக்கிறது எங்களிடம்… எச்சரிக்கை’ என்பதே அந்தச் செய்தி. எக் காலத்துக்கும் பொருந்தக்கூடியது அந்த எச்சரிக்கை.

அங்கயற்கண்ணி சமுத்திரகுமாரியாக சரித்திரம் படைத்து உயிர் துறந்தது கொக்குவில்லில் அவளது தாய்க்குத் தெரியவந்தது. இரவில் தன் துணையில்லாமல் வெளியே போகப் பயப்படும் அந்தப் பிள்ளை 35 கிலோமீட்டர் தூரத்தை நீந்தியே கடந்திருக்கிறாள் – என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. ‘பருந்துகிட்ட இருந்து குஞ்சுகளைக் காப்பாற்றும் தாய்க் கோழி மாதிரி வேலணையிலிருந்து நான் பாதுகாப்பாகக் கூட்டி வந்த பிள்ளை’ என்று சொல்லிச் சொல்லி அழுதாள். அந்தப் பருந்து எது என்பதை உணர்ந்தவர்கள் பெண் குழந்தைகளைக் கூட விட்டுவைக்காத அந்த பௌத்தப் பருந்துகளுக்கு அங்கயற்கண்ணி என்கிற கோழிக்குஞ்சு பாடம் புகட்டியிருப்பதை எண்ணி வியந்தனர்.

‘நல்லூரில் திருவிழா நடக்கிற நேரம்தான் நான் சாகணும்’ என்று அங்கயற்கண்ணி அடிக்கடி சொன்னதை நினைத்து அவளது தோழிகளான கடற்புலிகள் அழுதனர். ஏன் அப்படிச் சொல்கிறாள் – என்று புரியாமல் விளக்கம் கேட்டார்களாம் அவர்கள். அதற்கு அங்கயற்கண்ணி சொன்ன பதில் அவளது உயிர்த்தியாகத்தை விட உயர்ந்தது.

‘நல்லூரில் திருவிழா நடக்கிற நேரத்தில்தான் கச்சான் வித்த காசு அம்மாகிட்ட இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் ஒவ்வொரு வருஷமும் என் நினைவு நாளுக்கு வீட்டுக்கு விசாரிக்கப் போகும் பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவால் நல்ல சாப்பாடு கொடுக்க முடியும்’ என்று அங்கயற்கண்ணி சொன்னபோதே கண்கலங்கி அவளை அணைத்தவர்கள் அவள் இறந்த பிறகு அதைச் சொல்லிச் சொல்லி அழுதார்கள். எந்த அளவுக்கு அவளுக்குள் வைராக்கியம் இருந்ததோ அந்த அளவுக்கு அவளிடம் அன்பும் பரிவும் இருந்தது என்பதை அந்த வார்த்தைகள் உணர்த்தின. (கச்சான் – என்பது வறுத்த வேர்க்கடலை.)

உலகின் எந்த இலக்கியத்திலும் இப்படியொரு இதயத்தைப் பிழியும் பதிவு இருக்க வாய்ப்பேயில்லை. தன் மரணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஆண்டுதோறும் தன் நினைவுநாளுக்கு வீட்டுக்கு விசாரிக்கச் செல்வோருக்கு நல்ல சாப்பாடு கிடைக்கவேண்டும் அதற்கு வசதியாக – தாயின் கையில் காசு புழங்குகிற ஒரு பருவத்தில் தான் இறக்கவேண்டும் – என்று நினைக்கிற மனம் எங்காவது எவருக்காவதோ எங்கோ ஓர் இலக்கியத்தில் ஏதோ ஒரு கதாபாத்திரத்துக்கோ இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? எங்கள் இனத்தின் இன்னொரு அடையாளமாகவே இன்றுவரை திகழும் எங்கள் குலக்கொழுந்து அங்கயற்கண்ணியைத் தவிர வேறெவருக்கும் அப்படியொரு கவலை எழுந்திருக்க வாய்ப்பேயில்லை.

நெல்லியடியில் அமைந்திருந்த அரக்கர்களின் முகாமைத் தகர்த்த மாவீரன் மில்லரில் தொடங்கி முப்பது பேருக்கு மேற்பட்ட கரும்புலிகள் இலங்கைக்கு சர்வதேசமும் வாரிவழங்கிய ஆயுதங்களைத் தங்கள் உயிராயுதத்தால் தகர்த்து எறிந்திருந்தார்கள் அங்கயற்கண்ணிக்கு முன்பே. அவர்கள் அனைவரும் ஆண்கள். அவர்களின் பட்டியலில் பெருமிதத்துடன் தன்னை அவள் இணைத்துக் கொண்டாள் முதல் பெண் கரும்புலியாக!

கரும்புலிகளின் பாடலாக இன்றைக்கும் உலகமெங்கும் ஒலிக்கிறது ஒரு உருக்கமான பாடல்.

‘கரும்புலி என்றொரு பெயர்கொண்டு
கடும்பகை தகர்க்கிற வெடிகொண்டு
பெரும்படை அணி இன்றிப் போகின்றோம்
எங்கள் உயிராலே பகை வென்று சாகின்றோம்!

எங்களின் சாவொரு வரலாறு
அதில் எழுதிய வெற்றிகள் பலநூறு
இங்கிது போல் வீரம் வேறில்லை
உயிர் ஈதலே அறத்துக்கு மேல் எல்லை’
என்று தொடங்குகிற அந்தப் பாடல் கண்ணீராலேயே எழுதப் பட்டிருக்கும் ஒரு உருக்கக் கவிதை.

இப்படியொரு கவிதையை வார்த்தைகளால் எழுதாமல் தன் வாழ்க்கையால் எழுதியவள் அங்கயற்கண்ணி. ‘காத்தோடு காத்தாகப் போயிடுவேன் அம்மா’ என்று அன்று அவள் சொன்ன வார்த்தைகளின் அழுத்தத்தை என்றைக்கும் எழுதமுடியாது எந்தக் கவிஞனாலும்!

அங்கயற்கண்ணியின் தியாகம் எதனோடும் எவரோடும் ஒப்பிடமுடியாத உயிர்த் தியாகம். பல நூறாண்டுகள் அவள் பேசப்படுவாள் வணங்கப்படுவாள் போற்றப்படுவாள். காங்கேசன்துறையின் காற்று வெளிகளிலும் யாழ்ப்பாணத்துக் கடல்வெளிகளிலும் என்றென்றும் காற்றோடு கலந்து நிற்பாள் அந்த சமுத்திரகுமாரி. அவளைப் போன்ற எண்ணற்ற மாவீரர்களின் உயிர்மூச்சுதான் ஈழ விடுதலையின் மூச்சுக் காற்றாக உலவிக் கொண்டிருக்கிறது இன்றைக்கும்! அந்தக் காற்றுக்கு வேலிபோட இயலுமா – இலங்கைப் பகைவர்களாலும் இந்தியக் கயவர்களாலும்!

– புகழேந்தி தங்கராஜ்

பிரபாகரன் கண்ட உலக சாம்ராஜ்ஜியம் ஒரு பார்வை..

prabakaran eelamமகா அலெக்சாண்டரும், நெப்போலியனும் தொடாத சிகரங்களைத் தொட்டவன் பிரபாகரன்…

இது முள்ளிவாய்க்கால் நினைவுகளின் நான்காவது ஆண்டு பருவம்..

பிரபாகரன் எங்கே.. என்ற கேள்விக்கு அவர் இருக்கிறார்… இல்லை.. என்ற இரண்டு கருத்துக்களையும் ஒரே நேரத்தில் பரப்பியது யார்..

மேலை நாடுகளா.. இல்லை இந்தியாவா.. தமிழர்கள் இதுவரை விடை காணவில்லை.. தேடவும் இல்லை..

ஆனால் ஒரு விளக்கு மெல்ல மெல்ல முள்ளிவாய்க்காலின் புதர்களுக்குள் ஒளியை வீசியபடி முன்னேறிக் கொண்டிருக்கிறது..

இப்போது அந்த விளக்கு பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் முகத்தில் ஒளியடிப்பது வரை முன்னேறியிருக்கிறது.. அது மேலும் நகரும்..

ஏனென்றால் அந்த விளக்கைக் கையில் வைத்திருப்பவன் வேறு யாருமல்ல..

விடுதலைப் போராட்டத்தின் கடைசி நேரத் தலைவிதியை நிர்ணயித்தவன் அவனே.. அவன் தனது அடுத்தகட்ட நோக்கத்திற்காக விளக்கை கச்சிதமாக நகர்த்திச் செல்கிறான்..

இந்த மர்மக்கதைகளால் நமக்கு ஆகப்போவது எதுவும் இல்லை..

ஆனால் ஒரு கேள்வி…

இவ்வளவுக்குப் பிறகும் சிங்கள இனவாத அரசு மாறியதா.. இல்லை.. தமிழரின் குடியிருப்புக் காணிகளையே கொள்ளையிட அது முன்னேறிக் கொண்டிருக்கிறது..

இந்தியன் மாறியிருக்கிறானா.. இல்லை.. முன்னைய காலத்தைவிட அவன் மேலும் மேலும் தனது இதயத்தை இரும்பாக்கிச் செல்கிறான்..

ஏன்..

தீமையைச் செய்யும்வரைதான் வில்லனுக்கு வாழ்வு.. ஆகவே அவன் அதைத் தொடர்ந்தபடி முன்னேறுகிறான்.

இந்தியா – சிறீலங்கா இரண்டும் ஈழத் தமிழர்கள் மீதான பழிவாங்கலை மேலும் மேலும் இறுக்கிச் செல்வதன் காரணம் இதுதான்… இது மேலும் தொடரும்..

இது நின்றால் இருவரும் இறந்து கிடக்கும் காட்சியை இயல்பாகக் காணலாம்..

இது எதிரியின் கையில் இருக்கும் விளக்கின் கதை.

விளக்கு எதிரியின் கைகளில் மட்டுமா இருக்கிறது.. இல்லை நமது கையிலும் இருக்கிறது..

கடந்த நான்கு ஆண்டுகளாக முள்ளிவாய்க்காலில் என்ன நடந்ததென பூச்சாண்டி காட்டுவதற்காக வீசப்படும் எதிரியின் விளக்குப் பக்கமாகவே நமது விளக்குகளையும் அடித்துக் கொண்டிருக்கிறோம்.

அதனால் நமது அறிவியல் விளக்கு வெளிச்சமின்றிக் கிடக்கிறது.. இனியாவது அதைக் கொஞ்சம் எதிர்ப்பக்கமாக திசை திருப்ப வேண்டும்..

ஏனென்றால் பிரபாகரனின் வெற்றியை அடையாளம் காண்பதற்கு அந்தத் திருப்புகை அவசியம்.

அப்படித் திருப்பினால் பின்வரும் உண்மைகளை நீங்கள் காண்பீர்கள்..

உலகம் போற்றும் மாபெரும் வீரன் மகா அலெக்சாண்டர் ஏற்படுத்திய சாம்ராஜ்ஜியம் இப்போது எங்கே..?

அவனுக்கு அடுத்து உலகத்தின் பெரிய வீரன் நெப்போலியன் என்கிறார்கள்.. அவன் கைப்பற்றிய நிலங்கள் எல்லாம் எங்கே..?

எதுவுமே இல்லை.. அவர்கள் விட்ட பிழை என்ன.. அவர்கள் பிடித்த நிலங்களில் அவர்களுடைய மக்கள் வாழவில்லை..

பிரபாகரனும் மகா அலெக்சாண்டர், நெப்போலியன் போன்ற வீரன்தான்.. ஆனால் அவர்களால் சாதிக்க முடியாத ஒரு வெற்றியை பிரபாகரன் சாதித்திருக்கிறார்.

பிரபாகரனின் சாம்ராஜ்ஜியம் இன்று உலகம் முழுவதும் வியாபித்து, அழிக்க முடியாத பேரரசாக பொன்னொளி வீசி இலங்குகிறது.

தமிழீழம் என்ற போராட்டத்தை உலகத்திற்குக் காட்டி, மறுபுறம் உலகத்தையே தனது இனத்தின் தாயகமாக்கியிருக்கிறார் பிரபாகரன்.

தனது இனத்திற்காக தனித்தனி நாடுகளை உருவாக்கிய வீரர்களையே இதுவரை எழுதிய வரலாறுகள் பேசுகின்றன.

ஆனால்..

உலகத்தையே தனது இனத்திற்கான நாடாக்கிய வீரன் எங்காவது இருக்கிறானா என்று தேடுவீர்களானால் ஒரேயொருவன் மட்டும் இருப்பான் அவன் வேறு யாருமல்ல வேலுப்பிள்ளை பிரபாகரன்தான்..

கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்று வசதி மிக்க உலக நாடுகள் எல்லாம் இன்று ஈழத் தமிழனின் நாடுகளாகிவிட்டன.

வாழ்க்கைத்தரத்தில் அவன் ஆசியக் கண்டத்தின் அளவுகளை எல்லாம் பல மடங்கு தாண்டிவிட்டான்.

கல்வி அறிவில் தொட முடியாத சிகரங்களை எல்லாம் தொட்டுவிட்டான்.

மகா அலெக்சாண்டரும், நெப்போலியனும் கட்டிய சாம்ராஜ்ஜியங்கள் அவர்கள் மக்களால் வாழப்படாத காரணத்தால் அழிந்தே போயின..

ஆனால் பிரபாகரன் கண்ட உலக சாம்ராஜ்ஜியமோ அவன் மக்களால் வாழப்படுவதனால் அழியாத பேரரசாக உலகப்பந்தில் உருவாகிவிட்டது.

” யாதும் ஊரே யாவரும் கேளிர் ” என்றான் கணியன் பூங்குன்றன்.. அதுவே எமது வாழ்க்கையின் இறுதி இலக்கு என்றான் ஆதித் தமிழன்..

இன்று உலகின் பணக்கார நாடுகளில் உள்ள எல்லா ஊர்களிலும் ஈழத் தமிழன் வாழ்கிறான்..

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற இலக்கை அவன் எட்டியும் தொட்டுவிட்டான்..

இந்த உன்னதத்திற்குள் தன் இனத்தை உந்தி நகர்த்தியவன் யார்..?

அவன்தான் :prabhakaran

             உலகத்தின் ஈடு இணையில்லாத ஒரேயொரு வீரன் தங்கத் தமிழன் தம்பி பிரபாகரன்..

தமிழன் உள்ள மட்டும் அவனுக்கில்லை மரணம்.. ஏனென்றால்

தமிழன்தான் பிரபாகரன்…!

பிரபாகரன்தான் தமிழன்..!

தமிழா கோழை போல அழாதே.. மகிழ்ச்சி கொள்..! எழுச்சி கொள்..! உனக்காக உலக சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறான் உன் தலைவன் பிரபாகரன்..

விளக்கை மாற்றி வீசு.. உன் பெருமையை உணர்ந்து கொள்.. மற்றவை பின்னர்..

அலைகள்-கி.செ.துரை 15.05.2013

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி வரலாறு

Charles Anthony Brigade Full Docmentry

PDF –Charles-Anthony-Brigade-Full-Docmentry

Charles Anthony Brigade Full Docmentry 2

ltte unceasing waves 3-ஓயாத அலைகள் 3 (நிழற்படத் தொகுப்பு)

Sooriya puthavarkal சூரியப் புதல்வர்கள் மாவீரர் நாள்

Black tigers part 1 -நெருப்பு மனிதர்கள் பாகம் 1

Sooriya puthavarkal-சூரியப் புதல்வர்கள் மாவீரர் நாள் 99

சூரியப் புதல்வர்கள் மாவீரர் நாள்

போராடும் இனத்தின் கவிஞன் போராட்டத்துடனேயே இருப்பான்

puthuvai

PDF-erimalai-dec-2002-about-puthuvai

கரும்புலி மேஜர் மறைச்செல்வனின் வீர வரலாறு.

Bt Maj Maraiselvan

அது 1999ஆம் ஆண்டின் மழைக்காலம். சினந்து அழும் சின்னப்பிள்ளையாய் விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. மழைநேரம் காட்டின் தரையமைப்பு எப்படி மாறிப்போயிருக்குமோ அந்த மாற்றம் அனைத்தும் நிறைந்த காட்டிற்குள்ளால் பெய்து கொண்டிருக்கும் மழையில் நனைந்தபடி காட்டு மரங்கள் சிந்தும் நீர்த்துளிகளால் விறைத்த படி ஒரு அணி காட்டை ஊடறுத்து வேகமாக நடந்து கொண்டிருந்தது.

அவர்களின் வலுவிற்கு அதிகமான சுமைகள். அவற்றோடும் மணலாற்றில் இருந்து காடுகளிற்குள்ளால் கனகராயன்குளம் நோக்கி சளைக்காமல் நடந்து கொண்டிருந்தார்கள். அந்த அணி வீரர்களிலே மிக உயர்ந்தவனும் அகன்ற நெஞ்சுடனும் ஓர் உருவம். நீண்ட கால்கள், பெருத்த கைகள், குழம்பிப்போன தலைமயிர், அடுக்கான பல்வரிசையில் சற்று மிதந்து நிற்கும் ஒரு பல், பொதுநிறம், கண்குழிக்குள் அலையும் கண்கள் எங்கோ, எதையோ தேடிக்கொண்டிருந்தன. இப்படி அடையாளங்களோடு ஒருவன், அவன்தான் அந்த அணியை வழிநடத்திச் செல்லும் அணித்தலைவன் மறைச்செல்வன்.

அவனது நெஞ்சிற்குள் எத்தனையோ ஏக்கங்கள். அதை முகத்தில் சிறிதும் வெளிக்காட்டிவிடாது தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு அணிகள் எட்டவேண்டிய இலக்கு நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தான். இடையில் எதிர்ப்பட்ட தடைகளைத் தாண்டிச்செல்ல அதிக நேரம் தாமதமாக வேண்டியிருந்தது. தொலைத்தொடர்புக் கருவி அவனை அழைத்தது. ஏதோ கதைத்தான். “இன்னும் இலக்குகளை ஏன் அடையவில்லை. தாக்குதல் தொடங்கி விட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் ஏராளம். அதைத் தெரிந்தும் “நாங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் குறித்த இடத்தில் நின்று தொடர்பு எடுக்கின்றோம்” என்று கூறிவிட்டு உடனேயே தொடர்பைத் துண்டித்தான். போய்ச் சேரவேண்டிய இடத்திற்கும் அவர்கள் நிற்கும் இடத்திற்கும் இடையே நீண்ட அந்தக் காட்டுப் பகுதியைக் கடக்க அவர்களிற்கு அந்த நேரம் போதாது. அதுவும் படை முகாம்களைக் கடந்து போக வேண்டியிருந்தது.

வேகமாக எல்லோரும் நடந்தார்கள். அந்தக் காட்டுப்பகுதி அவனுக்குப் பழக்கமானது. மரங்கள் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்திருந்தான். ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையில் அவன் பங்கெடுத்திருந்த போது அதே இடங்களில் பலநாட்கள் கண்விழித்து நின்றிருக்கின்றான்.

அந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் அவன் தன் தோழர்களைப் பிரிந்து தேம்பி இருக்கின்றான். அப்போதெல்லாம் “உந்த ஆட்லறியை உடைக்கவேணும்” என்று மனதினுள் குமுறிக்கொள்வான். அது அவனிற்கும் அந்த மரங்களிற்கும்தான் தெரியும்.

தொடர் சண்டைக் காலத்தில், காவலரணில் கடந்த நாட்களில் ஆட்லறி ஏறிகணைகள் சினமும் வெறுப்பும் ஊட்டுபவையாகவே இருந்தன. ஒன்றாய் பதுங்கு குழியில் இருந்து விட்டு தண்ணீர் எடுத்து வரவென வெளியில் சென்ற அவனிலும் அகவை குறைந்த தோழன் திரும்பி வரமாட்டான்… அவன் எறிகணை வீச்சில் வீரச்சாவு அடைந்தோ, அல்லது விழுப்புண் பட்டோ இருப்பான்.

காணாத தோழனைத் தேடிச்சென்று இரத்த வெள்ளத்தில் காணும் வேளைகளையெல்லாம் சந்தித்தவன். இதற்கு காரணம் அந்த ஆட்லறிகள். அதை உடைக்க வேணும் என்று மனதிற்குள் அப்போதே முடிவெடுத்துக் கொண்டான். அதற்காகவே தலைவருக்குக் கடிதம் எழுதி அனுமதி பெற்றுத் தன்னையே வருத்திப் பயிற்சி எடுத்து இப்போது கரும்புலியாய் இலக்குத்தேடிப் போகின்றான். அவன் முதலில் நடந்த இடங்களை மீண்டும் காணுகின்ற போது மயிர் சிலிர்த்தது. நடையை விரைவுபடுத்தி வேகமானார்கள். பொழுது கருகின்ற நேரம் தான் அந்த இராணுவ முகாமிற்கு அண்மையாக வந்திருந்தார்கள். இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக முடியவேண்டும். தேசம் வேண்டி நிற்பது அதுவே.

வன்னியில் பெரும் நிலங்கள் பகை வல்வளைப்பால் குறுகிக்கொண்டிருந்த காலம். நகரங்களையும் தெருக்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் நாடு இழந்துகொண்டிருந்தது. இந்த அச்ச சூழலில்தான் “வோட்டசெற்” 01, 02 என்று அம்பகாமம் பகுதியில் முன்னேறி சில காவலரண்களையும், எம்மவர்களின் சில வித்துடல்களையும், எதிரிப்படை கைப்பற்றியிருந்தது. வன்னியில் மக்கள் திகைத்து நிற்கின்ற சூழலில், நெருக்கடி நிறைந்ததாய் உணர்ந்த அந்த நாட்களில் தலைவரோ உலகிற்குப் புலிகள் பலத்தை உணர்த்தும் நடவடிக்கைக்கான தாக்குதலில் இவர்களுக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்திருந்தார். தேசத்திற்கும் போராட்டத்திற்கும் இடையூறும் நெருக்கடிகளும் வரும் போது தான் இவர்களது பணி தேசத்திற்குத் தேவைப்படுகின்றது. அவர்களும் அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற துடிப்போடுதானே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

கண்டி வீதியைக் கடக்கவேண்டும். கண்டி வீதியைக் கடக்கின்ற போது அந்த அகன்ற தார்ச்சாலை மலைப்பாம்பென நீண்டு வளைந்து கிடந்தது. அதைக் குறுக்கறுத்து எதிரியின் கண்ணில் சிக்காது கடந்தார்கள். ஒரு புறம் அவர்கள் தேடி வந்த இலக்கு கனகராயன்குள படைமுகாம், மறுபுறம் வவுனியா. இரண்டையுமே மறைச்செல்வன் திரும்பத் திரும்ப பார்த்தான். வவுனியாவைப் பார்க்கின்ற போது வேறுபல பழைய நினைவுகள் அவனை சூழ்ந்தன.

வவுனியா, அதுதான் அவன் பிறந்து வளர்ந்த இடம். அதற்கும் மன்னாருக்குமான நீளுகின்ற அந்தத் தெருக்கள்… நினைவுகள் மீள் ஒளிபரப்புச் செய்தன. மன்னார் வவுனியா நெடுஞ்சாலையிலே அன்றொரு நாள் நாற்பத்தினான்கு அப்பாவித் தமிழ் மக்கள் சுட்டும் வெட்டியும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அவர்களது உயிரிழந்த சடலங்கள் ஆங்காங்கே வீதிகளிலே எரிந்தும் எரியாமலும் கிடந்தன.

இந்தச் சேதி உள்ளுர் செய்தி ஏடுகளில் பரவலாக வந்தபோது முகம் காணாத சொந்தங்களிற்காக இரங்கி சில கண்ணீர்த் துளிகள் சிந்தப்பட்டன. அப்பாவி மக்கள் படுகொலை என்று கண்ணை உறுத்தும் வகையில் பெரிய எழுத்தில் வெளிவந்த அந்தச் துயரம் மறுநாளே செய்தி ஏடுகள் போல மறைந்துபோனது. அது இன்னொரு துயரச் செய்தியை அவனுக்குக் காவி வந்தது. அது அவர்களது குடும்பத்தில் பெரிய இடியாக விழுந்தது. எல்லோரையும் போல அவர்களால் அந்தத் துயரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என்னென்றுதான் தாங்குவது. ஊர்திகளை ஓட்டி குடும்பத்தைத் தாங்கிய அப்பாவை இழந்து இனி எப்படி அவர்களது வாழ்க்கை! சின்ன வயசில் அது அவனுக்குப் பெரிய இழப்பு. அப்பாவை நினைத்து நினைத்து விம்முவான். அழுவான். யார்தான் என்ன செய்யமுடியும். சிறிய குடும்பம். அவனும், அக்காவும், அம்மாவும்தான். ஒவ்வொருவரது முகத்திலும் பெரிதாய் துயரம் குந்திக்கொண்டிருந்தது. யாராலும் ஆற்றிவிட முடியாத அந்தச் துயரத்தோடு அவர்களது குடும்பம் நாளும் நாளும் அல்லற் பட்டுக்கொண்டேயிருந்தது.Bt Maj Maraiselvan 2

அம்மாவும் இவர்களுக்குத் துணையாக நின்று, மாடுகள் வளர்த்து ஒருவாறு குடும்பத்தை நடத்திச் சென்றாள். இவன் சின்ன வயதில் குழப்படிக்காரனாகவே இருந்தான். காலையில் எழுந்து மாட்டுப்பட்டிக்குச் சென்று பால் கறந்துவிட்டு மாட்டுச்சாணம் அள்ளிப் போட்டுவிட்டே அவசர அவசரமாய் பள்ளிக்கு ஓடுவான். வந்து புத்தகங்களை வைத்துவிட்டு மாடு மேய்க்கப் போய்விடுவான். மாடு மேய்ப்பதும் வரம்புகளிலும் வயல் வெளிகளிலும் ஓடி விளையாடுவதிலும் இவனது பொழுதுகள் கழியும். அதுவே இவனுக்குச் மகிழ்ச்சி. அந்த வயல்கள் இவனோடு கொண்ட சொந்தத்தின் அடையாளமாக சின்னச் சின்ன சிராய்ப்புக் காயங்களும் இப்போதும் மாறாத அடையாளங்களாய் இருக்கிறன.

ஊருக்குள் வரும் போராளிகளைப் பார்த்து ஆசைப்பட்டிருக்கின்றான். ஆனால் அவர்களோடு சேர்ந்து கொள்ளச் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவனது இலட்சிய ஆசைகள் நெருப்பாய் எரிய அதை மறைத்து அம்மாவோடு செல்லம் கொஞ்சுவான். வளரவளர அந்த வேட்கை அவனைவிட வளர்ந்தது. இராணுவக் கட்டுப்பாட்டில் அவனது கிராமத்தில் போராளிகள் அலைகின்ற அலைச்சல் அவர்கள் சுமக்கும் வேதனையான நாட்கள் எல்லாம் அவனைப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்ற தீரத்தை ஏற்படுத்தின. பள்ளிப்பருவத்திலே அவன் போராட்டத்தில் இணைந்துகொண்டான். வயதுக்கு மீறிய வளர்ச்சி உடல் மட்டுமல்ல, அவனது எண்ணங்களும் செயற்பாடுகளும் அப்படியானதே. உயர்ந்த எண்ணங்களும் தூர நோக்கும் கொண்ட அவன் எதிலும் துடிதுடிப்பும் முன்னிற்கும் தன்மையும் கொண்டவன். தாக்குதல் களங்கள் அவனை இன்னும் இன்னும் பட்டை தீட்டின.

கண்டி வீதியைக் கடந்து நடந்தான். அன்று 81 மில்லிமீற்றர் மோட்டரையும் தூக்கிக்கொண்டு நடக்கிறபோது அவனுக்கு மட்டும் தெரியக்கூடிய வெப்ப மூச்சோடு, அவனுக்கு மட்டும் கேட்டக்கூடிய சத்தத்தில் ஆட்லறியை உடைக்கவேணும் என்று மனம் சுருதி தப்பாது துடித்தது. நினைவுகள் கனத்தன. ஓயாத அலைகள் மூன்று ஆரம்பமாகி அடிக்கின்ற வேகத்திற்கு கனகராயன்குளம் மீது கரும்புலி அணிகள் ஆட்லறிப் பிரிவினருடன் இணைந்து தாக்க தொடங்கினர். சிறிதும் எதிர்பாராத இத் தாக்குதலில் எதிரி திகைத்து திக்குமுக்காடினான். அவனது ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியது. கட்டளைத் தளபதியாகவிருந்த சிங்களத் தளபதிகளுக்கு கரும்புலிகளின் வெடியதிர்வு சாவாய்க் கதவில் தட்டியது.

அந்தப் பெரிய சமர் அங்கே ஒரு நொடியில் மாறியது. தளபதிகள் மூட்டை முடிச்சுக்கட்ட எதிரிப்படை பின்வாங்கியது. எமது இடங்கள் எங்கும் அகல அகலப் பரப்பி நின்ற எதிரிப்படை உடைந்தகுளம் வற்றுவதைப்போல மிக வேகமாக ஓடியது. அந்தச் சாதனையை எதுவித இழப்புக்களும் இல்லாது நடத்தி விட்டு மறைச்செல்வன் தலைமையிலான கரும்புலி அணி வெற்றிகரமாகத் தளம் திரும்பியது.

வட போர்முனையில் ஓயாத அலைகள் அடித்தபோது தென்மராட்சியில் பல இடங்களிலும் இவனது செயற்பாடுகள் இருந்தன. எப்போதும் தாயகத்தைப் பற்றியே நினைத்துக்கொண்ட அந்த வீரன் நாகர்கோவிற் பகுதியில் இலக்கொன்றிற்காய் விரைந்து கொண்டிருந்தபோது, இலக்கை நெருங்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டுக்கொண்டிருக்கவும் எதிரிப்படை தாக்குதலை தொடங்கவும் சரியாக இருந்தது. இழப்புக்கள் எதுவும் இல்லாது பல தாக்குதல்களையும் நிகழ்த்தி தாய்நாட்டிற்காக வெற்றியைக் கொடுத்தவன் 10.05.2000 அன்று நாகர்கோவில் மண்ணிலே வீரகாவியமானான்.

ஆட்லறியை உடைக்கவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த அந்த தேசப்புயல் துடிப்பிழக்கின்ற போது தன் சாவிலே ஒரு சேதியை இந்தத் நாட்டிற்குச் சொல்லிவிட்டுப்போனது. அழுதுகொண்டிருந்தால் அடிமைகளாவோம், துணிவாய் எழுந்து நின்றுவிட்டால் வாழ்வோம். அல்லது வீரராய்ச் சாவோம் என்று.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ”

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

 

தரையிறங்கும் கழுகும், இலவுகாக்கும் கிளியும்

மாலைதீவில் படைத்தளங்களை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பது தொடர்பான தகவல்கள் அண்மைக் காலங்களில் அரசல் புரசலாக ஊடகங்களில் வெளிவந்த வண்ணமிருந்த நிலையில் இவற்றை உறுதி செய்யும் வகையில் மாலைதீவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட உள்ள ஒப்பந்தத்தின் நகல் கடந்த வாரம் வெளிவந்துள்ளது.obama vs mahinda

மாலைதீவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் இராணுவச் சேவைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் 2010 செப்ரெம்பர் மாதம் 22ஆம் நாளன்று கைச்சாத்தாகிய பொழுது அதன் அடுத்தபடியாக படைத்தளங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டது.

இதனை உறுதி செய்யும் வகையில் மாலைதீவில் அமெரிக்கப் படைத்தளங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தின் நகல் வெளிவந்துள்ளது. இந்நகல் வெளியிடப்பட்டது என்று கூறுவதை விட அது கசிய விடப்பட்டது என்று கூறுவதே பொருத்தமானது. இதனை யார் கசிய விட்டார்கள் என்பது பற்றி ஆராய்வதோ அன்றி அதனைக் கசிய விட்டதால் எவருக்கு என்ன இலாபம் உண்டு என்று ஆராய்வதோ இங்கு அனாவசியமானது.

மாறாக இந்நகல் வெளிக்கொணரும் செய்திதான் இங்கு முக்கியமானது. உலகில் வல்லாதிக்கம் செலுத்த முற்படும் வல்லரசுகளாக இருந்தாலும் சரி, தத்தமது பிராந்தியங்களில் ஆதிக்கம் செலுத்த முற்படும் பிராந்திய வல்லரசுகளாக இருந்தாலும் சரி, கடல்வழி சுதந்திரம் என்பது அவற்றின் இருப்பிற்கும், பாதுகாப்பிற்கும் இன்றியமையாதது.

அதிலும், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலகை தாராண்மைத்துவ ஒழுங்கமைப்புக்குள் கொண்டு வந்து தனது பொருண்மிய நலன்களை விரிவாக்கம் செய்யும் மூலோபாயத்துடன் இயங்கி வரும் அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்து சமுத்திரத்தில் கடல்வழிச் சுதந்திரம் பேணப்படுவது அத்தியாவசியமானது. இதனால்தான் நீண்ட காலமாகவே அமெரிக்காவின் கழுகுப் பார்வை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பொதிந்துள்ளது.

‘இந்து சமுத்திரத்தை எவர் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்களோ, அவர்களின் ஆதிக்கத்தின் கீழ் ஆசியா இருக்கும்? என்கின்றார் அமெரிக்காவின் நவீன கடல்வழி மூலோபாயங்களின் பிதாமகனாக விளங்குபவரும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கடற்போர் வியூகிகளில் ஒருவராக திகழ்ந்தவருமான அட்மிரல் அல்பிரட் தயர் மாகன்.

சோவியத் ஒன்றியத்துடன் பனிப்போரில் ஈடுபட்ட காலத்திலேயே இந்து சமுத்திரப் பிராந்தியத்தை தனது கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பகீரத பிரயத்தனங்களில் அமெரிக்கா இறங்கியது. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவுடன் பிரித்தானியா சாம்ராச்சியம் சரியத் தொடங்க, அதன் எதிர்வினையாக மேற்குலகில் ஏற்பட்ட பொருண்மிய பின்னடைவுகளை சீர்செய்வதும், பிரித்தானியாவின் பிடி நழுவிப்போன கீழைத்தேய நாடுகளில் தனது பொருண்மிய நலன்களை நிலைநாட்டுவதுமே அமெரிக்காவின் அன்றைய மூலோபாயமாக இருந்தது.

ஆனால் அதற்கு பெரும் தடையாகவும், சவாலாகவும் விளங்கியவர் இந்திரா காந்தி அம்மையார். தென்னாசியப் பிராந்தியத்தில் பாரத தேசத்தின் நலன்களுக்கு குந்தகம் விளைவிக்கும் சகல வெளித்தலையீடுகளையும் பகைமை நடவடிக்கைகளாக வரையறுத்து இந்திரா காந்தி அம்மையார் வகுத்த ‘இந்திரா கோட்பாடு’ அன்று இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு அமெரிக்கா எடுத்த முயற்சிகளுக்கு பெரும் தலையிடியாக இருந்தது என்றால் மிகையில்லை. இதனையும் மீறி ஈழத்தீவில் தளம் அமைப்பதற்கு அமெரிக்கா எடுத்த முயற்சிகளே 1980களில் தமிழீழ தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதங்களையும், போர்ப் பயிற்சிகளையும் அளித்து ஜெயவர்த்தனாவை மண்டியிட வைத்து தனது கட்டுக்குள் கொண்டு வருதற்கு இந்திரா காந்தி அம்மையார் எடுத்த நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக அமைந்தது.

ஆனாலும், இந்திரா காந்தி அம்மையாரின் மறைவுடன் ‘இந்திரா கோட்பாடு’ அவரது புதல்வர் ராஜீவ் காந்தியால் கைவிடப்பட, அமெரிக்காவுடன் படிப்படியாக நல்லுறவை இந்தியா ஏற்படுத்திக் கொண்டது. ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில் முகிழ்த்த இவ் உறவு, சந்திரசேகரின் ஆட்சியில் மேம்படுத்தப்பட்டது. எவ்வாறு முதலாவது வளைகுடா யுத்தத்தின் பொழுது தென்னிலங்கையில் அமெரிக்கப் போர் விமானங்கள் எரிபொருட்களை நிரப்புவதற்கு பிரேமதாசாவின் அரசாங்கம் ஒத்துழைப்பு நல்கியதோ, அவ்வாறான ஒத்துழைப்பை சந்திரசேகரின் அரசாங்கமும் வழங்கியது. இந்நல்லுறவு நரசிம்மராவின் ஆட்சியில் விரிவடைந்தாலும், வாஜ்பாயின் ஆட்சியில் அது மந்தகதியை எட்டியது.

இவ்வாறு மந்தகதியில் காணப்பட்ட அமெரிக்க – இந்திய நல்லுறவு, 2004ஆம் ஆண்டு சோனியா காந்தியின் தலைமையிலான கொங்கிரஸ் கட்சி டில்லியின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து மீண்டும் உத்வேகம்பெற்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இன்று அமெரிக்காவும், இந்தியாவும் பங்காளிகள். அணுசக்தி ஒத்துழைப்பாக இருந்தாலும் சரி, பொருண்மிய ஒத்துழைப்பாக இருந்தாலும் சரி, இராணுவ ஒத்துழைப்பாக இருந்தாலும் சரி எல்லா விடயங்களில் இன்று அமெரிக்காவின் தாளத்திற்கு சுருதி மாறாமல் இந்தியா ஆடுகின்றது.

ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் ஜெனீவாவில் இரண்டு தடவைகள் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தமையும், டில்லி விடுத்த கோரிக்கைளை ஏற்று அதன் வீச்சை வோசிங்டன் நீர்த்துப் பெறப்போகச் செய்தமையும் இதற்கு மிகச்சிறந்த சான்றுகள் எனலாம். இப்படியானதொரு பின்புலத்திலேயே தற்பொழுது மாலைதீவில் படைத்தளங்களை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

அடிக்கடி அரசியல் குழப்பங்களை எதிர்நோக்கும் ஒரு நாடு மாலைதீவு. அங்கு ஏற்பட்ட குழப்பங்கள் பிராந்திய வல்லரசு என்ற வகையில் இந்தியாவிற்கு நெடுங்காலமாகவே தலையிடியை கொடுத்து வந்துள்ளன. இந்நிலையில் இப்பொழுது மாலைதீவில் அமெரிக்கா காலூன்றத் தயாராகுவது இந்தியாவைப் பொறுத்தவரை ஒத்தடமும், ஆசுவாசமும் அளிக்கும் செய்தியாகவே அமைகின்றது.

மாலைதீவில் தரையிறங்கும் அமெரிக்கக் கழுகு இன்னும் சிறிது காலத்தில் ஈழத்தீவிலும் தரையிறங்கிவிடும் என்பதில் எவருக்கும் எவ்வித ஐயமும் இருக்க முடியாது. இன்று மாலைதீவில் அமெரிக்கா காலூன்றுவதற்கு அடிப்படையாக இருப்பது 2010ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட இராணுவ சேவைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தமாகும். இவ்வாறான ஒப்பந்தத்தை 2007 பங்குனி மாதம் 5ஆம் நாளன்று சிறீலங்காவுடன் அமெரிக்கா ஏற்படுத்திக் கொண்டது.

இவ் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் ரணிலின் ஆட்சியில் 2002ஆம் ஆண்டிலேயே எடுக்கப்பட்டிருந்தாலும், வாஜ்பாயின் தலைமையிலான அப்போதைய இந்திய அரசாங்கத்தின் எதிர்ப்புக் காரணமாக அது பிற்போடப்பட்டது. பின்னர் சோனியா பச்சைக்கொடி காட்ட, 2007ஆம் ஆண்டு அவ் ஒப்பந்தத்திற்கு மகிந்தர் உயிர்கொடுத்தார். இதன் தொடர்ச்சியாக இன்னும் சிறிது காலத்தில் மாலைதீவு போன்று ஈழத் தீவிலும் படைத்தளங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை மகிந்தருடன் அமெரிக்கா ஏற்படுத்தும் என திடமாக எதிர்பார்க்கலாம்.

இதற்கான சமிக்ஞைகள் 2009 மார்கழிமாதம் 7ஆம் நாளன்று அமெரிக்க செனெட் சபையின் வெளியுறவுக் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் காணப்படுகின்றன. தற்பொழுது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக விளங்கும் ஜோன் கெரி அவர்களின் மேற்பார்வையிலேயே இவ் அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஈழத்தீவில் அமெரிக்காவிற்கு உள்ள நலன்கள் பற்றியும், இவற்றைத் தக்கவைப்பதற்கு கையாளப்பட வேண்டிய யுக்திகள் பற்றியும் இவ் அறிக்கை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றது.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

“ஏற்கனவே இருக்கக்கூடிய மனிதநேய மற்றும் அரசியல் கரிசனைகளுடன் அமெரிக்க நலன்களைப் பேணுவதில் சிறீலங்காவிற்கு இருக்கும் பூகோள-கேந்திர வகிபாகம் பற்றிப் பெரும்பாலும் அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் குறைத்தே மதிப்பிட்டு வந்துள்ளனர். ஐரோப்பாவையும், மத்திய கிழக்கு முதல் சீனா உள்ளடங்கலாக முழு ஆசியப் பிராந்தியத்தையும் இணைக்கும் இந்து சமுத்திரத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிப் பாதையில் சிறீலங்கா அமைந்துள்ளது. கடல்வழி வணிகத்தை சீர்குலைக்கக்கூடிய பயங்கரவாத நடவடிக்கைகளையும், கடற்கொள்ளை நடவடிக்கைகளையும் தடுக்கும் பொதுவான கரிசனை அமெரிக்காவிற்கு மட்டுமன்றி இந்தியாவிற்கும், சீனாவிற்கும் உண்டு.

சிறீலங்காவின் வகிபாகம் என்பது கடல்வழிப் பாதைகளோடு மட்டுமன்றி உலகின் மிகப் பெரும் சனநாயக நாடாக விளங்கும் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இன்றியமையாததாக உள்ளது. சிறீலங்காவில் நிலவக்கூடிய இனமுரண்பாடுகள் இந்தியாவின் உறுதிநிலையை, அதிலும் அறுபது மில்லியன் தமிழர்கள் வசிக்கும் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் உறுதிநிலையை பாதிக்கக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் எமது உறவுக்கான கரிசனைகளில் உள்ளடக்கப்பட வேண்டும்.

சிறீலங்காவை அமெரிக்கா இழந்து விட முடியாது. இதற்காக சிறீலங்காவுடனான உறவை ஒரே இரவில் நாம் மாற்றியமைக்க வேண்டியதோ அல்லது அதன் அரசியல்-மனிதநேய தவறுகளை அலட்சியம் செய்ய வேண்டியதோ இல்லை. மாறாக சிறீலங்காவை எமது கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய வகையில் எம்மிடம் உள்ள ஆற்றல்களை விரிவாக்கம் செய்வதற்கான புதிய அணுகுமுறை கையாளப்பட வேண்டும்.

எமது உறவின் பொருண்மிய, வணிக, பாதுகாப்பு அம்சங்கள் ஊடாகப் பயன்பெறக்கூடிய பன்முகப்பட்ட மூலோபாயம் கைக்கொள்ளப்பட வேண்டும். இவ் அணுகுமுறை நாம் விரும்பும் அரசியல் மாற்றங்கள் ஏற்படுவதற்கும், அதன் ஊடாக இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் கேந்திர நலன்கள் பேணப்படுவதற்கும் வழிகோலும். வெறுமனவே தமிழர்கள் செறிந்து வாழும் வடக்குக் கிழக்கிற்கு நிதியுதவி அளிப்பதோடு மட்டும் நின்றுவிடாது சிங்களவர்கள் வாழும் பகுதிகளிலும் முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்க மூலோபாயம் அமைய வேண்டும்.”

ஈழத்தமிழர்களின் அரசியல் வேட்கையாக விளங்கும் தனியரசுக் கோரிக்கையைப் புறந்தள்ளி விட்டு மகிந்தரின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலான அரசியல் தீர்வையும், போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணையையும் அமெரிக்காவும், அதன் நேசநாடுகளும் வலியுறுத்துவதன் அர்த்தபரிமாணங்களை நாம் புரிந்து கொள்வதற்கு ஜோன் கெரி அவர்களின் தலைமையில் வெளியிடப்பட்ட அறிக்கையின் மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகள் போதுமானது.

ஆறு தசாப்தங்களுக்கு மேலாக கொழுந்துவிட்டெரியும் ஈழத்தமிழர்களின் தனியரசுக்கான வேட்கையை அதிகாரப் பரவலாக்கம் எனும் நீரை ஊற்றுவதன் மூலம் அணைத்து விட்டு ஈழத்தீவில் காலூன்றுவதே அமெரிக்காவின் இப்போதைய யுக்தியாகும்.

ஈழத்தீவில் அமெரிக்கா படைத்தளங்களை அமைப்பதையிட்டுக் கொள்கையளவில் மகிந்தருக்கு ஆட்சேபனை கிடையாது. தானும், தனது குடும்பமும் சிறீலங்காவின் ஆட்சிக்கட்டிலில் நிரந்தரமாக அமர்ந்து கொள்வதற்கு அமெரிக்காவின் பிரசன்னம் வழிவகுக்கும் பட்சத்தில் அதனை ஆரத்தழுவி வரவேற்பதற்கு மகிந்தர் தயாராகவே இருக்கின்றார். இதனால்தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் உக்கிரமடைந்திருந்த 2007ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் இராணுவ சேவைகளை பகிரும் ஒப்பந்தத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டார்.

ஆனால் அமெரிக்கா எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வு தென்னிலங்கைச் சிங்களவர்களின் வாக்கு வங்கியை தான் இழக்கும் சூழலுக்கு வழிகோலும் என்ற அச்சமும் மகிந்தருக்கு உண்டு. தவிர அமெரிக்கா விதந்துரைக்கும் திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளை அமுல்படுத்துவது ஏற்கனவே பாமர சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பொருண்மிய நெருக்கடிகளை மேலும் அதிகரித்துத் தானும், தனது குடும்பமும் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பப்படும் புறநிலையை தோற்றுவிக்கும் என்ற அச்சமும் மகிந்தருக்கு உள்ளது.

அதேநேரத்தில் அமெரிக்காவை எதிர்ப்பதன் ஊடாகவோ, அன்றி சீனாவுடன் ஒட்டி உறவாடுவதன் மூலமோ தான் நினைத்ததை நீண்ட காலத்திற்கு சாதிக்க முடியாது என்பதும் மகிந்தருக்கு நன்கு தெரியும். வடகொரியா விடயத்தில் அண்மையில் அமெரிக்காவிற்கு பக்கபலமாக சீனா எடுத்த நிலைப்பாடு இதனையே உறுதி செய்கின்றது. கடந்த காலத்தில் சூடானையும், லிபியாவையும் கைவிட்டது போன்று தன்னையும் என்றோ ஒருநாள் சீனா கைவிடும் என்பது மகிந்தருக்கு நன்கு தெரியும்.

இப்படியாக திரிசங்கு நிலையில் இருக்கும் மகிந்தருக்கு ஒரேயரு தெரிவுதான் உள்ளது: அமெரிக்காவின் காலில் மண்டியிடுவதுதான் அது. இதற்கான புறநிலையை தோற்றுவிப்பதற்காகவே இப்பொழுது அமெரிக்கா குத்தி முறிகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த உப்புச்சப்பற்ற தீர்மானங்களுக்கு அடிப்படையாக விளங்குவது இதுதான். எப்பொழுது மகிந்தர் அமெரிக்காவிடம் மண்டியிடுகின்றாரோ அப்பொழுதே ஈழத்தமிழர் பிரச்சினையில் அமெரிக்காவின் கரிசனையும் முடிவுக்கு வந்து விடும்.

சீனாவும், அமெரிக்காவும் மோதும் நாள் வரும் பொழுது தமிழீழம் அமையும் என்ற கனவில் மிதந்து மாடமாளிகைகளில் ஒய்யாரமாக சுதந்திர சாசனம் எழுதும் நாடங்களில் விருந்துண்டு திளைத்து உலகத் தமிழர்கள் களைத்துப் போக, அமெரிக்காவிடம் மண்டியிட்டு ஈழத்தீவில் தமிழீழ தேசத்தின் அடையாளத்தை நிரந்தரமாக அழிக்கும் கைங்கரியத்தை மிகவும் கனக்கச்சிதமாக சிங்களம் அரங்கேற்றப் போகின்றது.

அதாவது இப்பொழுது மாலைதீவில் தரையிறங்கும் கழுகு விரைவில் ஈழத்தீவிலும் களமிறங்கும் பொழுது ஈழத் தமிழர்களின் கதி இலவுகாத்த கிளியின் நிலைக்கே மாறப் போகின்றது. முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் உறவுகளின் உயிர்கள் காவுகொள்ளப்பட்ட பொழுது அதனை தடுத்து நிறுத்த முடியாது கையறு நிலையில் இருந்தது போன்ற நிலையையே மீண்டும் ஒரு தடவை உலகத் தமிழினம் எட்டப் போகின்றது.

இந்நிலையை நாம் தவிர்க்க வேண்டுமாயின் சனநாயகப் போராட்டம், இராசதந்திரப் போராட்டம் போன்ற மாயைகளிலிருந்து மீண்டெழுந்து தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் எமது போராட்ட மூலோபாயங்களை செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொழும்பிலும், காலியிலும், அம்பாந்தோட்டையிலும் அமெரிக்கா படைத்தளங்களை அமைப்பதையிட்டு நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை: அது சிங்கள மக்கள் கையாள வேண்டிய பிரச்சினை. ஆனால் அதற்காக ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் பலியிடப்படுவது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

– சேரமான்

நன்றி: ஈழமுரசு

முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்

leader-Prabakaran-tribute-2

வரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம்

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் ?

கடைசிப் போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார்? எப்போது, எங்கே ,எப்படி வீழ்ந்தார்?

mullivaikkal
முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்

black tigers

maaveerarkal

Up ↑