2004 ம் ஆண்டு தை, மாசி காவியமான விடுபட்ட மாவீரர்கள்
27.02.2007 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் பொது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட
கடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்
பெருமாள் சுதாகரன்
இரணைப்பாலை, முல்லைத்தீவு
என்ற கடற்கரும்புலி மாவீரரின் 6ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்
பிரிவு: கடற்கரும்புலி
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: அருமைச்சேரன்
இயற்பெயர்: பெருமாள் சுதாகரன்
பால்: ஆண்
ஊர்: இரணைப்பாலை
மாவட்டம்: முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.02.2007
நிகழ்வு: 27.02.2007 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் பொது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமகனுக்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
பிரபாகரன் எல்லாம் ஒரு தலைவனா ? ஒரு நல்ல தந்தையாக இல்லை ! ஒரு நல்ல மகனாக இல்லை ! நல்ல கணவனாக இல்லை !
எங்கள் அப்பா
அப்பா!
எல்லா அப்பாக்களையும்
போல்
நீயும்
இருந்திருந்தால்
என்
தாத்தாவும்
பாட்டியும்
இந்நேரம்
முசிறியில்
மூச்சோடு
இருந்திருப்பார்கள்!
அப்பா!
எல்லா
அப்பாக்களையும்
போல்
நீயும்
இருந்திருந்தால்
என்
அக்கா
அமெரிக்காவிலும்
என்
அண்ணன்
கனடாவிலும்
நான்
இலண்டனிலும்
சொகுசாகப்
படித்துக்
கொண்டிருப்போம்!
என்
அப்பாவா நீ
இல்லையப்பா
நீ
நீ
நீ
எங்கள்
அப்பா!
எங்கள் என்பது…
அக்கா
அண்ணன்
நான்
மட்டும்
இல்லை!
எங்கள் என்பது…
செஞ்சோலை
காந்தரூபன்
செல்லங்கள்
மட்டும்
இல்லை!
எங்கள் என்பது…
உலகெங்கிலும்
உள்ள
என்
வயது
நெருங்கிய
என்
அண்ணன்கள்
என்
அக்காள்கள்
என்
தங்கைகள்
என்
தம்பிகள்
அனைவருக்குமானது!
ஆம்…அப்பா!
நீ
எங்கள்
அனைவருக்குமான
‘ஆண் தாய்’
அப்பா!
அதனால்தான்
சொல்கிறேன்…
நான்
மாணவனாக
இருந்திருந்தால்
என்
மார்பில்
மதிப்பெண்களுக்கான
பாதகங்கள்
பார்த்திருப்பாய்!
நான்
மானமுள்ள
மகனாய்
இருந்ததால்தானே அப்பா
என்
மார்பில்
இத்தனை
விழுப்புண்கள்
பார்க்கிறாய்!
சிங்கள வீரர் ஒருவரது
மனைவியின்
வயிற்றில்
வளர்ந்த
கருவுக்கும்
கூட
கருணை காட்டிய
அப்பா!
உன்
பிள்ளை
உலக
அறமன்றத்துக்கு
முன்
ஒரே
ஒரு
கேள்வி
கேட்கிறேன்!
பன்னிரெண்டு
வயது
பாலகன்
துப்பாக்கி
தூக்கினால்
அது
போர்க்
குற்றம்!
பன்னிரெண்டு
வயது
பாலகன்
மீது
துப்பாக்கியால்
சுட்டால்…
இது
யார்க்
குற்றம்!
என்னைச் சுட்ட
துப்பாக்கியில்
எவர்
எவர்
கைரேகைகள்!
உலக
அறமன்றமே!
உன்
மனசாட்சியின்
கதவுகளைத்
தட்டித்
திறக்க
உலகெங்கிலுமுள்ள
பாலச்
சந்திரர்கள்
அதோ
பதாகைகளோடு
வருகிறார்கள்!
பதில்
சொலுங்கள்!….
-அறிவுமதி-
நன்றி: பாவலர் அறிவுமதி
இணையத் தமிழ்
22.02.1998 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினரின் தரையிறங்கும் கடற்கலம் ‘பபதா’ வலம்புரி ஆகியன மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட
கடற்கரும்புலி லெப்.கேணல் கரன்
பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன்
மட்டக்களப்பு
கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன்
செல்வராசா தவராசா
யாழ்ப்பாணம்
கடற்கரும்புலி மேஜர் தமிழினியன்
நடராசா கிருபாகரன்
யாழ்ப்பாணம்
கடற்கரும்புலி மேஜர் தமிழ்நங்கை (நைற்றிங்கேல்)
துரைராசா சத்தியவாணி
கிளிநொச்சி
கடற்கரும்புலி மேஜர் சுலோஜன் (மாமா)
குமாரசிங்கம் விஜஜேந்திரன்
திருகோணமலை
கடற்கரும்புலி மேஜர் குமரேஸ்
துரைராசா செல்வகுமார்
வவுனியா
கடற்கரும்புலி கப்டன் ஜனார்த்தினி
கைலாயநாதன் சுகந்தி
முல்லைத்தீவு
கடற்கரும்புலி கப்டன் வனிதா
கந்தையா புஸ்பராணி
முல்லைத்தீவு
கடற்கரும்புலி கப்டன் மொறிஸ் (தமிழின்பன்)
தர்மபாலசிங்கம் தயாபரன்
யாழ்ப்பாணம்
கடற்கரும்புலி கப்டன் மேகலா
தங்கராசா தமயந்தி
யாழ்ப்பாணம்
கடற்கரும்புலி கப்டன் நங்கை
பட்டுராசா கௌசலா
யாழ்ப்பாணம்
ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
21.02.2001 அன்று முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட
கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி (பூங்கதிர்)
நல்லநாதன் பவானி
வவுனியா
பிரிவு: கடற்கரும்புலி
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: கஸ்தூரி (பூங்கதிர்)
இயற்பெயர்: நல்லநாதன் பவானி
பால்: பெண்
ஊர்: வவுனியா
மாவட்டம்: வவுனியா
வீரப்பிறப்பு: 30.03.1980
வீரச்சாவு: 21.02.2001
நிகழ்வு: 21.02.2001 அன்று முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்
துயிலுமில்லம்: முள்ளியவளை
மேலதிக விபரம்: மேற்படி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது
இதேநாளில் முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையின் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட
கடற்கரும்புலி மேஜர் விடுதலை
கந்தையா இந்திராணி
யாழ்ப்பாணம்
பிரிவு: கடற்கரும்புலி
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: விடுதலை
இயற்பெயர்: கந்தையா இந்திராணி
பால்: பெண்
ஊர்: யாழ்ப்பாணம்
மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 11.04.1975
வீரச்சாவு: 21.02.2001
நிகழ்வு: 21.02.2001 அன்று முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையின் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்
துயிலுமில்லம்: விசுவமடு
மேலதிக விபரம்: மேற்படி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது
ஆகிய கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
கனடாவைப் பொறுத்தவரையில், இந்த விவகாரத்தை விவாதிக்க ஏப்ரல் வரை பொறுத்திருக்கத் தேவையில்லை, உடனடியாக அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அடம் பிடிக்கிறது. பிரித்தானியா இதில் வெளிப்படையாக செல்வாக்கு எதையும் செலுத்தாது போனாலும், கனடாவின் நிலைப்பாட்டிலேயே அதுவும் இருப்பதாகத் தோன்றுகிறது. இன்னொரு பக்கத்தில், கொமன்வெல்த் உச்சிமாநாட்டை நடத்தும் வாய்ப்பு இலங்கையிடம் இருந்து பறிக்கப்பட்டால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாளில் அதை நடத்துவதற்கு தான் தயார் என்று மொறிசியஸ் கூறுகிறது. இந்தநிலையில் தான், நிலைமை மோசமடைவதைத் தடுக்கின்ற அவசர முயற்சியில் இறங்கியுள்ளார் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ். அவரது லண்டன் பயணத்துக்கு இது தவிர வேறெந்தக் காரணமும் இல்லை. ஏனென்றால், பிரித்தானிய அரசுடன் அவர் பேசும் திட்டங்கள் ஏதும் இருக்கவில்லை. பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் இம்மாதம் முதலாம் திகதி வரை கொழும்பில் தான் இருந்தார். அவர் நாடு திரும்பிய ஒரு வாரத்துக்குள் பிரித்தானியாவுக்கு ஓடிப் போக வேண்டிய தேவை இல்லை. ஏற்கனவே ஜெனிவா கூட்டத்தொடர் அரசாங்கத்தை மிரட்டிக் கொண்டிருக்கும் நிலையில், கொமன்வெல்த் விவகாரமும் சேர்ந்து கொண்டிருப்பது, அரசாங்கத்தின் தலைவலியை இரட்டிப்பாக்கி விட்டுள்ளது.
இனி,
நவம்பர் மாதம் இலங்கையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு மெல்ல மெல்ல கேள்விக்குறியாகி வருகிறது. கனடா எழுப்பிய போர்க்குரல், இந்த மாநாட்டைக் கொழும்பில் நடத்துவதா இல்லையா என்று ஆராயும் கட்டத்தை நோக்கி நகர்த்திருப்பது, இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு ஆபத்தான கட்டம் என்றே சொல்லலாம். ஏனென்றால், கடந்த 2011ம் ஆண்டு பேர்த்தில் நடைபெற்ற கொமன்வெல்த் உச்சி மாநாட்டின் போது, அடுத்த மாநாட்டை கொழும்பில் நடத்தலாம் என்று இயல்பானதொரு சூழலில் முடிவு எடுக்கப்படவில்லை. அப்போதே கனடா எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கி விட்டது. ஆனாலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முன்னேற்றத்தை காட்ட வேண்டும், இல்லையேல, மாநாட்டைப் புறக்கணிப்பேன் என்ற எச்சரிக்கையோடு தான், பேர்த்தில் இருந்து புறப்பட்டுச் சென்றிருந்தார் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர்.
2009இல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த சில மாதங்களில், ரினிட்டாட் அன் டுபாகோவில் நடந்த கொமன்வெல்த் உச்சி மாநாட்டின் போது, எடுக்கப்பட்ட முடிவை பேர்த்தில் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் பெரும் பாடுபட வேண்டியிருந்தது. அதுமட்டுமன்றி கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமைக்காக, அவுஸ்ரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகருடன் அம்பாந்தோட்டை கடுமையாகப் போட்டியிட்டுத் தோற்றுப் போனது. இதற்காக கோடிக்கணக்கான ரூபா பணத்தைக் கொட்டி பிரசாரங்கள் செய்யப்பட்ட போதும், அம்பாந்தோட்டையில் கொமன்வெல்த் போட்டிகளை நடத்தும் இலங்கை அரசாங்கத்தின் கனவு கருகிப் போனது தான் மிச்சம். இதுபோன்றதொரு நிலை இம்முறை கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கும் வந்து விடுமோ என்ற கலக்கம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது போலத் தெரிகிறது.
ஏனென்றால்,
கடந்தவாரம் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் திடீரென லண்டனுக்கு மேற்கொண்ட பயணம், அரசாங்கத்தின் இந்த அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கொமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு எதிராக, கனடா போர்க்கொடி தூக்கத் தொடங்கியதுமே, ஜனாதிபதியின் வெளிவிவகார ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன லண்டனுக்குச் சென்று விட்டார். அங்கு அவர், தொடர்ச்சியாக கொமன்வெல்த் செயலகத்துடன் பேச்சுக்களை நடத்தியதுடன், உறுப்பு நாடுகள் மத்தியில் இலங்கைக்கு ஆதரவான நிலையை ஏற்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார். இருந்தபோதிலும், வரும் ஏப்ரல் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில், இலங்கை விவகாரத்தை – குறிப்பாக, மாநாட்டை கொழும்பில் நடத்துவதா என்பதை விவாதிக்கும் விடயம், நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படுவதை அவரால் தடுக்க முடியவில்லை.
கனடாவின் கடும் அழுத்தம் காரணமாகவும், பிரித்தானியா போன்ற நாடுகளின் பின்புல ஆதரவு காரணமாகவும் இலங்கையால் எதுவும் செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. கொமன்வெல்த் செயலராக இருக்கும் கமலேஷ் சர்மா ஒரு முன்னாள் இந்திய இராஜதந்திரி. அவர் இலங்கைக்கு சார்பாக நகர்வுகளை மேற்கொண்டாலும் கூட, கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவில் எடுக்கப்படும் முடிவை அவரால் மாற்ற முடியாது. அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. எனவே தான், இந்த விவகாரம் கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படுவதை இலங்கை கடுமையாக எதிர்த்தது.
கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவில் அவுஸ்ரேலியா, பங்களாதேஷ், கனடா, ஜமைக்கா, மாலைதீவு, சியராலியொன், தன்சானியா, ட்ரினிடாட் அன் டுபாகோ, வனாடு ஆகிய நாடுகள் உள்ளன. இதில் மாலைதீவு இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஏனைய நாடுகள் தான் இந்த விடயம் குறித்து ஆலோசிக்கப் போகின்றன. இதில் சீனா, ரஸ்யா பாணியில், இலங்கைக்கு உறுதியான – கண்மூடித்தனமான ஆதரவை வழங்கக் கூடிய நாடுகள் என்று எதுவும் இல்லை . ஆனாலும் அவுஸ்ரேலியா தனது நலன் கருதியும், பங்களாதேஷ் சார்க் அமைப்பு நாடு என்ற வகையிலும் இலங்கைக்கு ஆதரவாக நிற்கலாம்.
ஏனைய நாடுகளின் நிலை கேள்விக்குறிதான்.
எனவே தான், அவசரமாக லண்டனுக்குப் பறந்து போனார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். அவர் கொமன்வெல்த் செயலர் கமலேஷ் சர்மாவைச் சந்தித்து, இலங்கை விவகாரத்தை நிகழ்ச்சி நிரலில் சேர்த்தற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அது மட்டுமன்றி, பேர்த்தில் 2011இல் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுக்கு இது முரணானது என்றும் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனாலும், கனடா தொடர்ந்து கொமன்வெல்த் செயலகத்துக்கு அழுத்தம் கொடுத்தபடியே தான் உள்ளது.
கனடாவைப் பொறுத்தவரையில், இந்த விவகாரத்தை விவாதிக்க ஏப்ரல் வரை பொறுத்திருக்கத் தேவையில்லை, உடனடியாக அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அடம் பிடிக்கிறது. பிரித்தானியா இதில் வெளிப்படையாக செல்வாக்கு எதையும் செலுத்தாது போனாலும், கனடாவின் நிலைப்பாட்டிலேயே அதுவும் இருப்பதாகத் தோன்றுகிறது. இன்னொரு பக்கத்தில், கொமன்வெல்த் உச்சிமாநாட்டை நடத்தும் வாய்ப்பு இலங்கையிடம் இருந்து பறிக்கப்பட்டால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாளில் அதை நடத்துவதற்கு தான் தயார் என்று மொறிசியஸ் கூறுகிறது.
இந்தநிலையில் தான், நிலைமை மோசமடைவதைத் தடுக்கின்ற அவசர முயற்சியில் இறங்கியுள்ளார் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ். அவரது லண்டன் பயணத்துக்கு இது தவிர வேறெந்தக் காரணமும் இல்லை. ஏனென்றால், பிரித்தானிய அரசுடன் அவர் பேசும் திட்டங்கள் ஏதும் இருக்கவில்லை. பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் இம்மாதம் முதலாம் திகதி வரை கொழும்பில் தான் இருந்தார். அவர் நாடு திரும்பிய ஒரு வாரத்துக்குள் பிரித்தானியாவுக்கு ஓடிப் போக வேண்டிய தேவை இல்லை. அதேவேளை, கொமன்வெல்த் செயலர் கமலேஷ் சர்மாவும் கூட, கடந்த ஞாயிறு அன்று கொழும்பு வந்திருந்து மகிந்த உட்பட முக்கிய பல பிரமுகர்களுடன் பேச்சு ந்டத்துவதற்கு திட்டமிட்டிருந்த சூழ்நிலையில் அவரைச் சந்திக்க அவசரப்பட்டு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் லண்டன் சென்றது இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியின் தீவிரத்தை உணர்த்துகிறது.
கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சியிலேயே அவர் இறங்கியதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், அவரது இந்த முயற்சி எந்தளவுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை. அதேவேளை, கனடாவை அடுத்து, இலங்கைக்கு சிக்கலாக உள்ள மற்றொரு நாடு பிரித்தானியா. கொழும்பில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டில், பங்கேற்பதா இல்லையா என்று பிரித்தானியா இன்னமும் முடிவெடுக்காத நிலையிலேயே உள்ளது. பிரித்தானியா புறக்கணித்தால், அது மிகப் பெரிய விவகாரமாகும்.
ஏனென்றால்,
பிரித்தானியாவின் கொலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளின் கூட்டமைப்புத் தான் இந்த கொமன்வெல்த். இதனால் தான், கொமன்வெல்த் மாநாட்டை பிரித்தானியாவின் முடிக்குரிய ஒருவர், பெரும்பாலும் மகாராணி அல்லது அவரால் முடியாது போனால், இளவரசர் சாள்ஸ் தொடக்கி வைப்பது வழக்கம். இந்தநிலையில், கொழும்பில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் முடிவை பிரித்தானிய அரசாங்கம் எடுக்குமேயானால், அதில் மகாராணி அல்லது அவரது பரம்பரையைச் சேர்ந்த பிரதிநிதி பங்கற்பாரா என்ற கேள்வியும் உள்ளது.
பிரித்தானியா புறக்கணித்தால், மகாராணியும் பங்கேற்கமாட்டார், அவரை பிரித்தானிய அரசாங்கம் தடுத்து விடும் என்று சிலர் தப்புக்கணக்குப் போடுகின்றனர். இந்த விடயத்தில் பிரித்தானிய மகாராணியின் முடிவின் மீது, அந்த நாட்டு அரசினால் செல்வாக்குச் செலுத்த முடியாது. கடந்த மாதம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பான ஒரு விவாதம் இடம்பெற்றது. அதில் உரையாற்றிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட், இதனைத் தெளிவாக கூறியிருந்தார். மகாராணியின் பயணத்தை அரண்மனையும், கொமன்வெலத் செயலகமும் தான் முடிவு செய்யும் என்றும், அதில் பிரித்தானிய அரசாங்கத்தினால் தலையிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கொழும்பில், நடக்கும் மாநாட்டில், பிரித்தானிய மகாராணி பங்கேற்பதை உறுதிப்படுத்துவதற்கு முன்னர், கொமன்வெல்த் அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ள மிகப்பெரிய தடையைத் தாண்ட வேண்டும். இந்தத் தடையைத் தாண்டினால் தான், கொமன்வெல்த் மாநாட்டைக் கொழும்பில் நடத்த முடியும். ஏற்கனவே ஜெனிவா கூட்டத்தொடர் அரசாங்கத்தை மிரட்டிக் கொண்டிருக்கும் நிலையில், கொமன்வெல்த் விவகாரமும் சேர்ந்து கொண்டிருப்பது, அரசாங்கத்தின் தலைவலியை இரட்டிப்பாக்கி விட்டுள்ளது.
தொல்காப்பியன் இன்போ தமிழ்
நிலை: 2ம் லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: சுரேந்தினி
இயற்பெயர்: அமராவதி பொன்னையா
பால்: பெண்
ஊர்: திருகோணமலை
மாவட்டம்: திருகோணமலை
வீரப்பிறப்பு: 05.12.1972
வீரச்சாவு: 18.07.1991
துயிலுமில்லம்: முள்ளியவளை
மேலதிக விபரம்: மேற்படி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது
வலிகாமத்தின் வடபகுதியில் அமைந்த அழகிய கிராமம்தான் இளவாலை. விவசாயிகளின் கை வண்ணத்ததில் பசுமை குறையாது செழிப்புடன் விளங்கியது. தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக பல ஆண், பெண் போராளிகளைத் தந்து புகழிபூத்த மண்ணது. அந்த மண்ணில் பிறந்ததாலோ என்னவோ ஜனந்தினியும் அச்சம் சிறிதும் இன்றி ஆயுதம் கரத்தில் ஏந்தி களம் பல கண்டு வீரச்சாவை புகழுடன் தழுவிக் கொணடவள்.
இளவாலையைச் சேர்ந்த பரமானந்தம் தம்பதிகளுக்கு மூன்று சகோதரர்களுக்கு ஒரே ஒரு அன்புச் சகோதரியாக ஜனந்தினி மலர்ந்தாள். ஒரேயோரு பெண் குழந்தை என்று பெற்றோரும் இனத்தவர்களும் மிகச் செல்லமாக ஜனந்தினியை வளர்த்தார்கள். அவளை நல்ல முறையில் கற்பித்து ஆளாக்க வேண்டுமென பெற்றோர் பெருவிருப்புக் கொண்டனர். அவர்களின் விருப்பத்துக்கமைய தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை ஜனந்தினி ஆரம்பித்தாள். கல்வியில் அவள் கொண்ட விருப்பு அவளை ஆவலுடன் படிக்கத் தூண்டியது. ஒவ்வொரு வகுப்பிலும் தங்குதடையின்றி சித்தியேய்தினாள். இவளின் கல்வித்திறமையை பார்க்க கொடுத்து வைக்காமல் தந்தையார் இவளது சிறு வயதிலிலேயே காலமாகிவிட தாயின் அன்பான அரவணைப்பில், அவள் கொடுத்த ஊக்கத்தில் கல்விப் பொதுத் தராதர சாதரண பரீட்சையில் திறமைச்சித்திகள் பல பெற்று சித்தியெய்தினாள். உயர் வகுப்பை உன்னதமாகப் படித்துத் தேறிவிடவேண்டுமென உறுதியான எண்ணதுடன் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த வேளை அவளது எண்ணத்தைக் கலைத்தது சிறிலங்கா இராணுவத்தில் தமிழர் மீதான தாக்குதல்கள்.
சிங்கள இராணுவம் தமிழர் மீது கேரத் தாக்குதல்கள் மாத்திரம் மேற்கொள்ளவில்லை. ஒரு இன அழிப்பையே மேற் கொண்டிருந்தனர். அத்தோடு தமிழரின் முன்னேற்றத்துக்கான கல்வியை திட்டமிட்டு அழிக்க முற்பட்டனர். அவர்களின் கொடூரத்தனமான குண்டு வீச்சுக்கு அடிக்கடி தமிழ்ப் பிள்ளைகள் படிக்கும் கல்விக் கூடங்கள் இலக்காகி சிதறின. இராணுவ நடவடிக்கைகளால் சேதமுறாத பள்ளிக்கூடங்களே தமிழ் மண்ணில் இல்லை என்று சொல்லலாம். கல்வியில் மேன்மை அடைய வேண்டுமென பெருவிருப்புக் கொண்டிருந்த ஜனந்தினியின் மனதை இது பெரிதும் பாதித்தது. தமிழ் மக்களின் உயிரினும் மேலான பொக்கிசமான கல்வியை பயில வாய்ப்பில்லாத நிலையை உருவாக்கிய அந்த எதிரிமீது ஜனந்தினி உள்ளூரக் கோபம் கொண்டாள். கல்வி… கல்விக்குத் தடையாய் இருக்கிற இந்தப் பேய்களை…… கோபத்தில் குமுறியவள் எதிரியை ஒழிக்க 1995 ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அணியில் போராளியாக இணைந்து கொண்டாள். 30 வது பயிற்சி முகாமில் தனது ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டாள். பயிற்சியின் நுட்பங்களை மிக இலகுவாக புரிந்து கொண்டு பொறுப்பாளர்களின் நன் மதிப்பை பெற்றுக் கொண்டாள். பயிற்சி முடிந்து வெளியேறும் போது சுரேந்தினி என்னும் போராளியாக வெளிவந்தாள். பயிற்சி முடிந்த பின் மற்றைய போராளிகளுடன் உயிர் காக்கும் சேவையான மருத்துவப் பகுதிக்கு அந்தத் துறையைப் பயில்வதற்காக அனுப்பப்பட்டாள். அந்த மருத்துவக் கல்லூரி பயிற்சியும் சுரேந்தினிக்கு பெரும் அக மகிழ்வினைத் தந்தது. போருக்கு பக்கபலமான பெரிய சேவை மருத்துவச் சேவை. போரில் காயப்படும் போராளிகளின் உயிரைக் காப்பாற்றுவதும் குணமடையச் செய்து எதிரியை அழிக்க மீண்டும் களம் அனுப்பும் பாரிய பணியை மருத்துவ பிரிவுவல்லவா செய்து கொண்டிருக்கின்றது. அந்தச் சேவையில் விருப்புடன் செயலாற்றியதாலோ என்னவோ சுரேந்தினியின் முகம் எந்த நேரமும் சாந்தமாக அமைதியாக இருக்கும். சக போராளிகளுக்கு எந் நேரமும் எந்த வித உதவி என்றாலும் சிறிதும் தயங்காமல் இன்முகத்துடன் செய்து முடிப்பாள். கோபம் என்பதை இவளிடம் காணவே முடியாது. மருத்துவத் துறையில் மிகவும் திறமையாகவும் கடமை உணர்வுடனும் செயற்பட்டாள்.
தான் மாத்திரம் திறமையாக இருந்தால் போதாது மற்றவர்களும் திறமைசாலிகளாக வரவேண்டும் என்பதற்காக தான் கற்ற அறிவினை மற்றவர்களுக்கும் எடுத்து விளக்குவாள். தமிழர் வாழ்வைக் குலைத்து இனத்தின் குரல் வாளையை முறுக்கி நறுக்கிவிட வென சிங்கள இராணுவத்தால் சூரியக்கதிர் 01 என நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இரவு பகல் பாராது கண்விழித்த போராளிகளைக் காப்பாற்றுவதில் கடமை உணர்வில் ஈடுபட்டாள். அவளது சேவையைப் பெற்று எத்தனையோ போராளிகள் மீண்டும் களம் ஏறினார்கள். மருத்துவம் என்கின்ற அந்தப் புனித சேவையில் அவள் தொடர்ந்து ஈடுபட்டாள். சூரியக்கதிர் 01 நடவடிக்கையை அடுத்து முல்லைச் சமர் களத்தில் அவளது மருத்துவப் பணி தொடர்ந்தது. போர்களத்திற்கு மிக அருகே அவள் பணிவிடம் அமைந்திருந்தது. எதிரியின் வெறி கொண்ட தாக்குதலுக்கு சுரேந்தினி குறியானாள். அவள் உடல் தளர்ந்தது. மெல்ல மெல்ல மண்ணில் சரிந்தாள். தமிழர் தம் போர்க்காவியம் படைத்த முல்லைமண் அவள் உடலைத் தழுவிக் கொண்டது. அவள் மாவீரர் ஆனாள்.
இவளின் அன்பான நெருக்கமும் திறமையான செயற்பாடுகளும் இவளது சக போராளிகளுக்கு எந்நாளும் அவளை நினைவு கூரச் செய்யும். அவள் விட்டுச் சென்ற பாதையில் உறுதியுடன் விரையும் கால்கள் வெகுவிரைவில் தமிழீழம் வென்றெடுக்கும்.
Recent Comments