Search

Eelamaravar

Eelamaravar

Month

January 2013

விடுதலைப்பேரொளி ,தலைவர் பிரபாகரன் பற்றிய முழுமையான விபரணம்

viduthalaiperoli-history of prabakaran

pdf–விடுதலைப்பேரொளி

மேலும்

தலைவர் வே.பிரபாகரன் வரலாற்றுப் பதிவுகள்

திருமதி அடேல் பாலசிங்கம் பார்வையில் பிரபாகரன்

Adele Balasingham

தமிழில்

PDF  Prabakaran in my view tamil-adle balasingam

****

அடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன்

எமது வீட்டிற்கு திரு.பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார்.
https://eelamaravar.files.wordpress.com/2010/07/balafamily.jpg

அப்பொழுது 1998ம் ஆண்டின் மத்திய காலம்,
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நாயகனான திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனை அறிந்து பழகி, சேர்ந்து வாழ்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த நீண்ட காலகட்டத்தில், தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் கொண்டிருந்த உறவும், அதனால் அவருடன் சேர்ந்து பகிர்ந்த ஆழமான அனுபவங்களும் அவரைப் புரிந்து கொள்ள ஏதுவாக அமைந்தன. அதாவது, இலங்கைத் தீவின் அரசியற் தலைவிதியை நிர்ணயிக்கும் வல்லாற்றலுடைய ஒரு மாமனிதனின் மிகவும் சிக்கலான ஆளுமையை புரியக் கூடியதாக இருந்தது. இந்த இருபது ஆண்டுகால உறவு, தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு சகாப்தம் எனச் சொல்லலாம்.

மேலும்

*************

ஆங்கிலத்தில்

PDF
Prabakaran in my view-adle balasingam

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை நினைவு நாள்

velluppilai thiruvenkadamஒரு நாட்டினது அல்லதுஇனத்தினது வரலாற்றை அறிவதற்கும் அளவிடுவதற்கும் ஆராய்சியாளர்கள் நாடுவது சான்றுகளேயாகும். இவை புரதான கட்டிடங்கள, சிற்பங்கள், கோயில்கள், ஓவியங்கள், ஏட்டுச் சுவடிகள், நூல்கள், நாணயங்கள், கல்வெட்டுக்கள், எனப்பலவகைப்படும். இவைகள் யாவும் தொல்லியற்சான்றுகள் எனப்படும். இவை வரலாற்று மூலங்களாய் நின்று அந்தநாட்டின் அல்லது மறைந்த சாம்ராஜ்சியங்களின் தொன்மையை பெருமையை அறியவைக்கும் சான்றுகளாகின்றன. இவ்வகையில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர்கோவில் எனப்படும் ‘தஞ்சைப்பெருங்கோவில்’ என்பது ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த இராஜஇராஜசோழனதும் சோழ சாம்ராஜ்சியத்தினதும் அன்று வாழ்ந்த தமிழரின் பெருமையையும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும் சான்றாக என்றும் விளங்குகின்றது.

இவ்வகையில் ஈழத்தமிழரின் வரலாற்றில் ‘வல்வைப்பெருங்கோவில்’ எனப்படும் வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத ஸ்ரீவைத்தீஸ்வரன் கோவிலும் அதனை அமைந்த சந்ததியினரும் பெரும்வரலாற்றைப் படைத்தவர்களாகவும். அதன்மூலம் ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களாகவும் மாற்றமடைந்து காணப்படுகின்றனர்.

‘இன்றைய சம்பவங்களே நாளைய சரித்திரங்கள்’ இவ்வகையில் நமது கண்முன்னே நடந்த சரித்திரமாய் பெரும் சகாப்த்தமாய் விரிந்த வர்தான் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். இவருடைய ஆட்சிமுறை உலகையே வியப்பில் ஆழ்த்தியது. இராணுவம், கடற்படை, வான்படை, காவல்துறை நுண்கலை, கல்வி சமயம், இலக்கியம், கட்டிடக்கலை, என பலதுறைகளையும் இன்னும் பலதையும் உள்ளடக்கிய ஆட்சிமொழியாகத் ‘தமிழ்மொழி’யே அவர்காலத்தில் ஈழத்திலே அரசோட்சியது.

நானூற்றி ஐம்பத்திரண்டு (452) வருடங்களுக்குமுன் 1561 இல் நாற்பத்திரண்டு வருடங்களாக யாழ்ப்பாணத்தை அரசாண்ட 7ம்செகராச சேகரன் என்னும் ‘முதலாம்சங்கிலி’ மன்னன் பலத்தபோராட்டத்தின் பின் அந்நியரான போர்த்துக்கேசரிடம் தனது அரசைப்பறி கொடுத்தான். இவனே உலகத் தமிழினத்தின் இறுதித் தமிழ் மன்னன் ஆவான்.

எங்களுக்கு ஒரு தெய்வத்தை பெற்று தந்தவர் அல்லவா நீங்கள்.. உங்கட மகனால நாம் நிம்மதியா வாழுவோம். நாம் விலை போக மாட்டோம். தமிழீழம் அடைந்தே தீருவோம்.. இது சத்தியம்.” மாதந்தையின் இறுதி நிகழ்வில் ஒரு ஈழத்தாயின் சபதம்

வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் எண்ணியபடி ஈழத்தமிழர்களுக்கென தனியான நிலப்பிரதேசம், தனியான நிர்வாகப்பிரிவு, தனியான படைப்பிரிவு, தனியான தேசியக்கொடி, என்பனகொண்டு தனிஅரசாகவும் தனித்துவ மாகவும் இறமைகொண்ட ஈழத்தினை அரசாண்டவர். இவருடைய ஆட்சியின் தாக்கம் இந்தியஉபகண்டம், தென்னாசியா என்பவற்றைக் கடந்து சர்வதேசம் வரை வியாபித்திருந்தது. இதன்மூலம் பாடு பொருளாகவும் பேசுபொருளாகவும் மட்டுமின்றி உலகவிற்பன்னர்கள் பலரும் பார்ப்பதற்கு விரும்பிய இவரின் அதிசயவாழ்க்கை ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டியதாகின்றது. ஏனெனில் அதிசயமான அசுரசாதனைகளையும் பெரும் அரசியல் மாற்றங்களையும். இவர் தனது காலத்தில் செய்திருந்தார். குறிப்பாக தான் ஆட்சிபுரிந்த தமிழ்ஈழத்தின் அயல்நாடுகளான இந்தியா சிறிலங்கா என்பவற்றின் ஆட்சியாளர் யார்? என்பதை தீர்மானிக்கும் வல்லமையையும் பெற்ற King maker ஆகவும் இவர் திகழ்ந்தார்.

‘தேமதுரத்தமிழேசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ என்ற ‘மகாகவி’பாரதியின் கனவை நனவாக்கியவர் உலகத்தில் ‘மேதகு’ வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருவர்தான்.

1973 மார்ச் 22இல் சிங்கள அரசால் நேரடியாக குறிவைக்கப்பட்ட ‘பிரபாகரன்’ மீது ஐந்து வருடங்களின் பின் 1978 மே 19 இல் இலங்கைப் பராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட புலித்தடைச்சட்டத்தின் மூலம் ஸ்ரீலங்காஅரசால் பகிரங்க போர்ப்பிரகடனம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து சிறிதும் பெரியதுமான பல படையெடுப்புக்களை பிரபாகரன் என்னும் தமிழீழ அரசுமீது ஸ்ரீலங்கா மேற்கொண்டபோதும் எம்முயற்சியும் பலனளிக்கவில்லை. இறுதியில் ஐநாவின் ஆதரவுடன் பன்னாட்டுப் படைகளின் உதவியுடனும் ஈராக்மீது அமெரிக்கா தொடுத்த போரில் ‘மன்னர்’ சதாமின் ஆட்சியினை அகற்றியது. அதே போல ஐநாவின்செயலாளர், செயலாளரின் செயலாளர், பன்னாட்டு உலக இராணுவ வல்லுனர்கள் மற்றும் பிராந்திய உலகவல்லரசுகளும்; இணைந்;;து ‘பிரபாகர’ ஆட்சியை எம்மண்ணில் இருந்து அகற்றின.

எனினும் ஆறுஇலட்சம் மக்கள்படையை தன்னகத்தே வைத்திருந்த சதாமை உயிருடன் கைதுசெய்தது போல் நவீன’தமிழ்சக்கரவர்த்தி’ யான பிரபாகரனை இன்றுவரை கைதுசெய்ய முடியவில்லை. இறுதியாக 2009 மே 19 இல் பிரபகரனது கட்டுப்பாட்டில் இருந்த கரையா(ர்) முள்ளிவாய்க்காலில் அவரை அழித்துவிட்டதாக ஒருஉடலைக் காட்டி ஸ்ரீலங்காஅரசாங்கம் பிரச்சாரம் செய்தது. எனினும் அதனை நம்ப யாரும் தயாராகஇருக்கவில்லை.

இந்நிலையில் எப்பொழுதும் போல் ‘யார் இந்தப் பிரபாகரன்’? என்னும் கேள்வி உலகளாவியரீதியில் எழுந்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் எனவும் பதில் இலகுவாகியது! ஆனால் அதன்பின்னால் இருந்த மர்மம்? பிரபாகரனிடம் எழுந்த அந்த சத்தியஆவேசம்! அவரை உருவாக்கிய காரணங்கள் எனப்பல கேள்விகள் உருவாகின. இவற்றுக்கான விடையைத் தேடினால் விஸ்வரூபமாகத் தெரிவது தான்’திருவேங்கடம் வேலுப்பிள்ளை’அப்பா. ஆம் அத்தனை கேள்விகளுக்கும் ஒரேபதில் இவர்தான்.

இவர் ஓருசாதாரண மனிதர் அல்ல! இவருக்குள் மறைந்திருந்த பல சிறப்புக்களும் திறமைகளும் பிரபாகரன் ஊடாக வெளிவந்தன. அதனால்தான் சர்வதேசத்தில் தமிழுக்கு முகவரி தந்து உலகத் தமிழினத்தின் தேசியத் தலைவராக உயர்ந்த தனயன் பிரபாகரனிற்க்கு தந்தையாகி இன்று தமிழினத்திற்;கே ‘மாதந்தை’ ஆனார்.

பிரபாகரனைப்பற்றி அறியவேண்டும் என்றால் முதலில் வேலுப்பிள்ளை அப்பாவைத்தான் நாம் புரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் ஒருமனிதனை உருவாக்குவதில் ‘பரம்பரை மரபணுக்களும் சமூகச் சூழலுமே’ பெரும்பங்கு வகிக்கின்றன. என வேலுப்பிள்ளை அப்பாவை எனக்கு சுட்டிக்காட்டிய ‘பேராசிரியரும் மூத்த சமூகவிஞ்ஞானியுமான ‘கார்த்திகேசு சிவத்தம்பி’ யின் கூற்று இவ்விடத்தில் கட்டாயம் குறிக்கப்படுதல் வேண்டும்.

அவ்வகையில் ‘பிரபாகரன்’ என்னும் மாபெரும் சகாப்தத்தை ஆராய்வதற்கு உறுதியான கல்வெட்டுச்சான்று போல் இருந்தவரே வேலுப்பிள்ளை அப்பாதான்.

வேலுப்பிள்ளைஅப்பா 1918 இல்வெளிவந்த ‘யாழ்ப்பாண வைபவ கௌமுதி’புத்தகத்தில் குறிக்கப்பெற்ற ‘திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை’ அவர்களின் வழிவந்தவர். இப்பரம்பரை வழியில் இவரதுபெயரை ஏழாவதாக நாம் காணலாம். ஆனால் வல்வெட்டித்துறையின் மூத்தவரலாற்று அறிஞரான மறைந்த அரு.செங்கல்வராசா எழுதிவைத்த பதிவுகள் மற்றும் 1850 – 1880 களில் யாழ்ப்பாணத்தில் பிரபல்யம் பெற்றிருந்த சட்டத்தரணியும் அன்று பிரபல்யமாயிருந்த ‘பிறிமன்’ (freeman) பத்திரிகையின் பதிப்பாசிரியருமான திரு. கூல்ட் (Gould) பற்றி வல்வை ந. அனந்தராஜ் எழுதிய ‘கூழ் நியாயம்’ மற்றும் பா.மீனாட்சிசுந்தரம் எழுதிய’வரலாற்றில் வல்வெட்டித்துறை’ எனும் நூல்களின் மூலமும் வல்வெட்டித்துறையில் கிடைத்த வேறுசில ஆவணங்களின் மூலமும் இவரின்வம்சத்தில் இவருடைய பெயர் பன்னிரண்டா வதாகவும் இவருடைய புகழ்பெற்ற மைந்தனான தமிழரின் ‘தேசியத்தலைவர்’ ஆன பிரபாகரனது பெயர் பதின்மூன்றாவதாகவும் காணப்படுகின்றது. இவ்வாறு பதிவிற்குள்ளாக்கப்பட்டுள்ள இவர்களது வம்சமானது வாழையடி வாழையாக பெரும்வரலாறாகவே வளர்ந்து வந்துள்ளமை கண்கூடானது.

வல்வெட்டித்துறையின் தலையாரிக் குடும்பமாகவும் யாழ்ப்பாணத்தின் முன்ணணிக்குடும்பமாகவும் தமிழீழத்தின் முதன்மைக் குடும்பமாகவும் உயர்ந்த இவர்களது குடும்பத்தவரின் வாழ்வு போலவே ‘மாதந்தை’ என போற்றப்படும் திரு.வேலுப்பிள்ளை அப்பாவுடைய வாழ்வும் போற்றுதற் குரியது. 17ம் 18ம் 19ம் 20ம் 21ம் நூற்றாண்டுவரை தொடர்ச்சியாக ஐந்து நூற்றாண்டுகள் தம்மை அடையாளப்படுத்திவரும் அற்புதமான குடும்பத்தில் வந்த ஏனையவர்களைப் போலவே இவரும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பனவற்றின் ஊடாக மிளிர்ந்து அன்பு அடக்கம் அஞ்சாமை ஆளுமை என்பனவற்றின் மூலம் வாழ்வாங்கு வாழ்பவர் ஆகின்றார்.

தனது குடும்பப்பெருமைகளை தவிர்த்து இறுதிவரை தனது பெயரிலேயே வாழ்ந்து வந்தது தான் இவரின் மிகப் பெரிய சிறப்பாகியது. சிறிய செயல்களையே பெரிதுபடுத்தும் இவ்வுலகில் மிகப்பெரும் சக்தி வாய்ந்த தனதுமைந்தனுடைய ‘பிரபாகரன்’ என்னும் பெயரை எவ்விடத் திலும் பயன்படுத்தாத இவரின்பண்பினை வியப்பதற்கு வார்த்தைகளேதுமில்லை.

‘நான் என்னுடைய சுகத்தையெல்லாம் அர்ப்பணித்து நாட்டுக்காக (தமிழ்இனத்திற்காக) வாழப்போகிறேன். என்னை என்னுடைய வழியில் போகவிட்டு விடுங்கள்.’ என 1971 செப்டம்பரில்; கூறிய பதினேழுவயது நிறையாத தனதுமகன் பிரபாகரனிடம். ‘எங்களிற்கு கொடுத்து வைக்கவில்லை உன்னைப்போல் இனத்திற்காக அர்ப்பணித்து வாழுவதற்கு’ சந்தேசமாகச்செய்’ ஆனால் நான் ஒரு அரசாங்கஊழியன். எனவே நீயும்நானும் இனி இணைந்து வாழமுடியாது.’ எனக்கூறி போராடப்புறப்பட்ட மகனிற்கு வீட்டைவிட்டு வெளியேற 1971இலேயே விடையளித்தவர்தான் இந்தத்தந்தை. அதனால் தான் இவர் ‘மாதந்தை’ இதனைவேறு எந்தத்தந்தையாலும் எக்காலத்திலும் செய்யமுடியாது. இவ்வாறான இந்தத்’தந்தையின்ஆசி’ தான் மைந்தனை உலகம் போற்றும் ‘உத்தமன்’ ஆக்கியது.

மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு நாள்

January 5th

மாமனிதர் குமார் பொன்னம்பலம் வீரவணக்கம்

விடுதலையின் வழிகாட்டி பிரபாகரன் -பொட்டு

pottu about prabakaran Pdfவிடுதலையின் வழிகாட்டி பிரபாகரன் -பொட்டு

கேணல் சாள்ஸ் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்

மன்னாரில் காவியமான விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ்(அருள்வேந்தன்) உட்பட்ட நான்கு மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

05.01.2008 அன்று மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில், படைய புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (சண்முகநாதன் ரவிசங்கர் யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சுகந்தன் (சிவபாலன் கிரிதரன் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் காவலன் (சின்னத்தம்பி கங்காதரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வீரமாறன் (பரராஜசிங்கம் சுதன் – முல்லைத்தீவு)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

Col Charles

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.

முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு அவர்களின் வீரவரலாறு- காணொளிகள்

kiddu

கேணல் கிட்டுவின் நினைவினைச் சுமந்து-காணொளிகள்

*******

*********

ஈழவிம்பகம்

***********

Up ↑