Search

Eelamaravar

Eelamaravar

Month

December 2012

வீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். தை மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

January 29th

எரிந்துபோகாத எழுத்துக்கள் முத்துக்கு​மாரனின் நினைவாக

ஈழம் காக்க ஈகம் செய்த ஈகியர்கள் வீரவணக்கம்

*************

January 16th

பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு

 January 16th

**************

January 9th

லெப்.கேணல் இம்ரான், பாண்டியன் வீரவணக்க நாள்

வீரவேங்கை சுயந்தன் வீரவணக்க நாள்

*********

January 8th

மேஜர் சோதியா வீரவணக்க நாள்

கப்டன் பண்டிதர் வீரவணக்க நாள்

***********

January 6th


மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை வீரவணக்கம்

************

January 5th

மாமனிதர் குமார் பொன்னம்பலம் வீரவணக்கம்

****

********
2007,2008 தை வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்…

*****
ltte veeravanakam

சுனாமி (ஆழிப்பேரழிவு) 8ம் ஆண்டு நினைவு கூருவோம்

சுனாமி பேரலை அனர்த்தத்தின் 8 ம் ஆண்டு நினைவு இன்று. ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம். இக்கொடூர பேரலையில் உயிர் நீத்த எமது அனைத்து உறவுகளையும் நினைவு கூருவதுடன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.

கடலை நம்பி வாழ்ந்த மக்களை கடலே கொன்றொழித்த சுனாமிப் பேரலை 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் நாள் இந்தோனேசியாவின் சுமாத்திராதீவில் பெரும் குமுறலாக எழுந்து இந்தோனேசியா தமிழீழம், சிறிலங்கா, தமிழ்நாடு உட்பட்ட சில நாடுகளை தாக்கி மிக நீண்ட கடற்கரையோர நிலங்களை அழிவுசெய்து சில மணிநேரத்திலேயே அடங்கிப்போனது. தமிழீழத்தில் முல்லைத்தீவு அம்பாறை மட்டக்களப்பு யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் கரையோரப்பிரதேசங்கள் சுனாமிப்பேரலையால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கடலால் அள்ளுண்டு போயினர்.இதில் முல்லைத்தீவில் அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டனர். தமிழீழத்தில் பலிகொள்ளப்பட்ட மக்களின் தொகை இருபதாயிரம் ஆகும்.

உலகின் கண்துடைப்பிற்காக சிறி லங்கா இனவெறி அரசு சில உதவிகளை அனுமதித்தது. ஆனால், முழுமையான மீள்கட்டுமானத்திற்கான வேலைகளைத் தடுத்தே வந்தது.ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களை மனித நேயத்தைப் புதைத்துவிட்டு நோக்கிய சிறி லங்காவைப் பற்றி எடுத்துக் கூறினால் அதுவே ஒரு பெரும் தொடராகி விடும். சிறி லங்கா அரசாங்கமோ “மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்க, மாடேறி மிதித்தவன் மேல் மரத்தைத் தறித்து வீழ்த்துவதற்கு” ஒப்பான காழ்ப்புணர்வு கொண்ட வேலைகளையே செய்தது.

ஆனால் ஆழிப் பேரலையின் அழிவிற்குப் பின்னர் தனிநாட்டிற்குரிய பண்போடு அன்று எப்படித் தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டார்களோ அதேபோன்று அர்ப்பணிப்பு உணர்வுடன் தமிழரிற்காக வேறு யாரால் செயற்பட முடியும்? 2004 ஆம் ஆண்டு மீட்புப் பணியில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் பணிகளை வெளிநாடுகளில் உள்ள பல ஊடகங்களும் பாராட்டின. முல்லைத்தீவிற்கு 03 சன. 2005 அன்று அழிவுகளைப் பார்வையிட சென்ற அன்றைய யுனிசெப் தலைமை இயக்குநர் கரோல் பெலாமி தமிழீழ விடுதலைப் புலிகளின் மீட்புப் பணியையும் நிவாரண வழங்கலில் உள்ள திட்டமிடலையும் வெகுவாகப் பாராட்டினார்.அமெரிக்காவில் ~சிக்காக்கோ றைபியூன|; பத்திரிகை 07.01.05 அன்று தமிழீழ நிர்வாகத் திறமையைப் பட்டியலிட்டதுடன் தனிநாட்டிற்குரிய செயற்பாடுகளைக் கொண்டதெனவும் விபரித்தது இங்கு சுட்டிக்காட்ட வேண்டியது .

தமிழீழ விடுதலையை , தமிழ் மக்களின் சுதந்திரத்தை வென்றெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் தமது உயிர்களை அர்ப்பணித்து போரிட்டினர் . சிங்கள இனவெறி அரசின் கண்மூடித்தனமான எறிகணைகளால் , நச்சுக் குண்டுகளால் தமது உயிர்களை மட்டும் காவி கடலோரம் ஓடிச் சென்ற தமிழ் மக்கள் நீர் நிறைய மலை போல அவர்களின் உடல்கள் குவிந்தன . அதுவே 2009 இல் சிங்கள அரசு மற்றும் சில வல்லரசு நாடுகள் தமிழர்களை அழிக்க உருவாக்கிய செயற்கை சுனாமி .

நிச்சயமாக சுனாமியால் ஏற்பட்ட காயம், வடு இன்னும் மாறாமல் மக்கள் மனதை விட்டு நீங்காமல் பதிந்துவிட்டது. நம்மால் சொத்தை இழந்தவர்களுக்கு பண உதவி புரியலாம். ஆனால் தன் சொந்தத்தை இழந்து உயிருடன் ஜடமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் நம் மக்களுக்கு, இறந்து மண்ணுக்குல் மறைந்து போன நம் உறவுகளுக்கு நம்முடைய பிரார்த்தனைகளை தவிர வேறென்ன அதற்கு ஈடாக கொடுக்க முடியும்.
எமது விடுதலைக்காக வித்தாகி சென்ற எமது உறவுகளுக்கு நாம் அவர்கள் எந்த லெட்சியத்துக்காக தமது உயிர்களை அர்ப்பணித்தார்களோ அதற்காக நாம் தொடர்ந்து உழைப்போம் என உறுதி எடுப்போம் .

பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும் பல்லாயிரக் கணக்கானோரைக் காவுகொண்ட ஆழிப்பேரலையின் 8 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று தயவுசெய்து அனைத்து புலம்பெயர் உறவுகளும் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக ஒவ்வொரு வீட்டிலும் சுடர் ஏற்றி மற்றும் பிரார்த்தனைகளையும் , இறைவன் வழிபாடுகளையும் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி
Volksrat der Eelam Tamilen – Deutschland e.V.
http://www.vetd.org

****

சுனாமி (ஆழிப்பேரழிவு)  நினைவு நாள்

இன்று

இந்தோனேசிய சுமாத்திராத் தீவின் வடமேல் ஆழ்கடலில் ஏற்பட்ட புவினடுக்கத்தினால் பொங்கியெழுந்த பேரலை இந்து சமுத்திரத்தின் கரையோரப் பிரதேசங்களை தாக்கியது.

தெற்கு தென்கிழக்காசிய நாடுகளை தாக்கிய இப்ப பேரலை 250676-ற்கு மேற்பட்டோரை காவு கொண்டதோடு மிகப் பெரும் பொருள் அழிவையும் ஏற்படுத்தியது.

இந்தோனேசியாவில் 184135-ற்கு மேற்பட்ட உயிரழிவுகள் ஏற்பட்டன.

இலங்கைத்தீவில் தமிழீழப் பிரதேசங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்தோர் 38195-ற்கு மேற்பட்டோர்.

மாவட்ட ரீதியாக-

யாழ்ப்பாணம்: 1256
முல்லைத்தீவு: 2902
கிளிநொச்சி: 32
திருகோணமலை: 984
மட்டக்களப்பு: 2975

உலகையே உலுக்கிய இச் சோக வரலாற்றால் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் நிவாரணங்களை நேரடியாக அனுப்பி வைத்து. சிங்களப் பேரினவாதம் இச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களுக்கு நிவாரணங்கள் முழுமையாக கிடைக்காமல் தடை ஏற்படுத்தியதோடு, உலகத்தலைவர்கள் நேரில் சென்று பார்ப்பதற்கும் தடை விதித்தது.

————————————————————-

ஆழிப் பேரலை புகட்டிய பாடம் எமக்கு நாம் தான் என்பதே!

பெரும்பகுதி கடலால் சூழப்பட்ட தமிழர் தாயகத்தில் ஆழிப் பேரலையினால் ஏற்பட்ட அழிவு பேரழிவு தான். இந்த இயற்கை அனர்த்தம் பற்றி புத்தாயிரமாம் ஆண்டில் புதிய மனித சமூகம் நன்கறிந்துள்ளது. தமிழரைப் பொறுத்தவரையில் உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்றவர்கள் ஆகையால் ஆழிப்பேரலை பற்றிய அறிவியல் ரீதியான தேடலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதே எமது மக்களை எதிர்காலத்தில் காப்பாற்றுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய முடியும்.

ஆழிப் பேரலை ஊழித் தாண்டவமாடி எமதுறவுகளைக் காவு கொண்டு ஜந்தாண்டுகள் கடந்த நிலையிலும் பேரழிவைக் கண்ட எமது மக்களிற்கு உலக சமூகம் அனுப்பிய முழுமையான உதவிகள் சென்றடையாமலே போனதை வெளி உலகம் நன்கறிந்தும் அது பற்றி அக்கறையாக நியாயக் குரல் எழுப்பவில்லை.

நெடுங்காலப் போரின் வலியைச் சுமந்த மக்களிற்கு 2002 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சிறு ஆறுதல் கிடைத்திருந்த வேளையில்தான் இயற்கைப் பேரழிவும் ஏற்பட்டது. 26.12.2004 அன்று தமிழர் தாயகத்தின் மாதகல் தொடக்கம் அம்பாறை உகந்தை வரையிலும் குறுகிய நேர இடைவெளிக்குள் பேரழிவு ஏற்பட்டது. போரினால் தொடரழிவுகளைச் சந்தித்தவர்கள் இயற்கையின் அழிவுகளாலும் உடைந்து போனார்கள். ஏன் இப்படிக் கொடுமை நிகழ்ந்ததென மனம் பேதலித்து அங்கலாய்த்தவர்களின் மீள் வாழ்விற்கு உலக சமூகம் வழங்கிய உதவிகளையும் சிறி லங்காப் பேரினவாத அரசாங்கம் தடுத்தது. இயற்கை அழிவுகளையும் தனது தமிழின அழிவிற்கான ஒரு பகுதி வேலையாகவே சிறி லங்கா அரசாங்கம் நோக்கியது. அத்தகைய, நோக்கத்துடன் தான் துயர் மிகுந்த அந்த வேளையிலும் கூட தலைவர் பிரபாகரன் ஆழிப் பேரலையில் சிக்குண்டார் என்றெல்லாம் பொய்ப் பரப்புரைகளைச் செய்தது. இப்படியான கொடுமையான சிந்தனை காலியில் நடந்த ஒரு சம்பவத்துடன் ஒப்பிடக் கூடியது தான்.

சிறி லங்காவில் காலி மாவட்டமும் ஆழிப் பேரலையால் வெகுவாகப் பாதிக்கப் பட்டிருந்தது. இந்த இயற்கை அநர்த்தம் கோர தாண்டவமாடிக் கொண்டிருந்த வேளை அதற்குள் சிக்குண்ட இளம்பெண் ஒருவர் உயிரிற்காகப் போராடிக் கொண்டிருந்தார். அந்த இளம் பெண்ணைக் காப்பாற்றுவது போல பாசாங்கு செய்த ஒருவர் அவரைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினார். (இது நடந்தது சிங்கள தேசத்தில். சிங்கள அளம் பெண்ணிற்கு, சிங்கள நபரால்) அது போன்ற கொடுமையான சிந்தனையோடு தான் தமிழரைச் சிங்களப் பேரினவாதிகள் நோக்கினார்கள்.

தலைவர் பிரபாகரனோ பேரழிவை அடுத்து அனுதாபச் செய்தியொன்றை வெளியிட்டார். ‘ஆற்ற முடியாத துயரத்திலும் வேதனையிலும் துடிக்கின்ற எமது மக்களிற்கு எமது அன்பையும் ஆறுதலையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோன். அது போலவே தமிழ்பேசும் தாயக மண்ணிலும் தென்னிலங்கை கடலோரப் பகுதிகளிலும் தமது உற்றார் உறவினரைப் பலிகொடுத்து ஆறாத துயரில் ஆழ்ந்திருக்கும் இஸ்லாமிய, சிங்கள சகோதரர்களிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபம் உரித்தாகுக. தென்னாசிய நாடுகளிலும் இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் உயிரிழப்புக்களைச் சந்தித்து துயருறும் மக்களின் சோகவுணர்விலும் பங்கு கொண்டு எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றேன்.”

இது தலைவர் பிரபாகரனின் அனுதாபச் செய்தி. அத்துடன் மட்டும் நின்றுவிடாமல் தாயகத்தில் என்னென்ன உதவிகள் மக்களிற்குச் செய்ய வேண்டுமோ அவற்றை தாராளமாகவே செய்யுமாறு போராளிகளிற்கும் தளபதிகளிற்கும் தலைவர் பிரபாகரன் பணித்தார்.

தளபதிகளும் போராளிகளும் பாதிக்கப்பட்ட எமது மக்களிற்குத் தாராளமாகவே உதவினார்கள். சிறி லங்கா அரசாங்கமோ ~மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்க, மாடேறி மிதித்தவன் மேல் மரத்தைத் தறித்து வீழ்த்துவதற்கு| ஒப்பான காழ்ப்புணர்வு கொண்ட வேலைகளையே செய்தது. இதில் அன்றைய சிறி லங்காவின் ஜனாதிபதியான சந்திரிகா இடையறாது அக்கறையாச் செயற்பட்டார். வெளிநாடுகளின் தலைவர்களை ஏன் ஐ.நா.வின் அன்றைய பொதுச் செயலாளர் கோபி அனானைக் கூட விடுதலைப் புலிகளின் ஆழுகைக்கு உட்பட்ட பிரதேசத்திற்குள் செல்லவிடாது தடுத்தார்.

உலகின் கண்துடைப்பிற்காக சிறி லங்கா சில உதவிகளை அனுமதித்தது. ஆனால், முழுமையான மீள்கட்டுமானத்திற்கான வேலைகளைத் தடுத்தே வந்தது.

ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களை மனித நேயத்தைப் புதைத்துவிட்டு நோக்கிய சிறி லங்காவைப் பற்றி எடுத்துக் கூறினால் அதுவே ஒரு பெரும் தொடராகி விடும்.

போரினால் நெடுங்காலத் துயர் சுமந்தவர்களிற்கு ஆழிப் பேரலை பேரழிவை ஏற்படுத்தியது. ஆழிப் பேரலையினால் பாதிக்கப்பட்ட தமிழர் மீண்டும் ஆற்றப்பட முன்னரே சிறி லங்கா போரைத் தொடங்கியது. இப்பொழுது முழுமையாக தமிழினத்தைத் துவம்சம் செய்வதற்கானதாக சிறி லங்கா அரசால் மூர்க்கத்தனமாக இன ஒதுக்கல் முன்னெடுக்கப் படுகின்றது. தமிழரை அவர்களின் தாயகத்தில் முழுமையாக அழித்து விடுவதற்கான இறுதி நடவடிக்கையாக அது தமிழர்களை வதைத்து வருகின்றது. எப்படி ஆழிப் பேரலை ஏற்பட்டபோது எமக்கு நாமே என்று பணி செய்தோமோ அதே போன்றுதான் இன்றைய காலகட்டத்திலும் நாமே அவற்றை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

2004 ஆம் ஆண்டு ஆழிப் பேரலை வருவதற்கு முன்னர் தமிழர் தாயக மண்ணில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவுகள் ஏற்பட்டன. மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தனர். அதனை நினைவூட்டுவது போல இன்று தாயக மக்கள் மழை வெள்ளத்தால் அவதியுறுகின்றனர்.

கிளிநொச்சியில் இருந்து மடுவிற்கு, மடுவில் இருந்து மல்லாவிக்கு, மல்லாவியில் இருந்து மாங்குளத்திற்கு, மாங்குளத்தில் இருந்து முள்ளியவளைக்கு, முள்ளியவலையில் இருந்து உடையார் கட்டிற்கு என மாறி மாறி இடம் பெயர்ந்து ஈற்றில் முள்ளிவாய்க்கால் கொடும் வதையோடு துன்பக்கடலில் துயருடன் வாழும் மக்களிற்கு வெள்ளமும் பாதிப்பினையே கொடுக்கின்றது. இக் கொடுமையில் பரிதவிக்கும் எமது உறவுகளிற்கு நாம்தான் துணையாக இருக்க முடியும்.

வளம்மிக்க வன்னி மண்ணில் போர் தீவிரம் மாகி இனத்தையே காழப்படுத்தியுள்ளது இதனால் வடுக்களைச் சுமந்தபடி வாழும் மக்களின் சுயபொருளாதாரக் கட்டமைப்பும் சிதைத்துள்ளது. பச்சை மிளகாய் ஒரு கிலோ ஐநாறு ரூபாய், கத்தரிக்காய் ஒரு கிலோ முன்னூற்றி அறுபது ரூபாய், வெண்டிக்காய் ஒரு கிலோ நானூறு ரூபாய், பூசனிக்காய் ஒரு கிலோ இருநாறு ரூபாய் என என்றுமில்லாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளது. கொடிய வதைமுகாம் அவலம் , மழை வெள்ளம் என மக்களின் வாழ்வு பேரவலத்திற்குள் தள்ளப் பட்டுள்ளது.

இத்தனையும் நடக்கின்ற போதும் ஈவீரக்கமின்றி அந்தமக்களை கொடுமைப்படுத்தி வருகிறது சிறி லங்கா அரசாங்கம். ஆயினும் புலத்து மக்கள் இன்னும் என்ன செய்து கொண்டுள்ளனர் என்ற கேள்வி யாரிக்கு வரவில்லை என்றாலும் அவலத்தில் வாழும் மக்களிற்கு வருவது தவிர்க்க முடியாததே. ஆனால், இப்போது வன்னியில் வாழும் மக்களை சிந்தியுங்கள் எவ்வளவு துயர்? ஆழிப் பேரலையை இந்த மாதம் 25/26 மீண்டும் நினைவு படுத்தும் நாள் நெருங்குகின்ற போதும் வன்னியின் வடுக்களைச் சுமந்தமக்களை நினைத்துப்பார்ப்போம்?

எல்லாத் துயரிற்கும் ஓர் முடிவு வேண்டுமல்லவா? எனவே எமதினம் தொடர்ந்து போராடினால் தான் முடிவையும் விடிவையும் காண முடியும். கடலடிப் பூகம்பம் கடலைத் தாண்டி ஆழிப் பேரலை வந்தது. சோறு தந்த கடலே தந்த துயரைப் பொறுக்கலாம் மன்னிக்கலாம். மீண்டும் கடலுடன் உறவாடலாம்.

குழந்தைகள் பெண்களென வயது வேறுபாடின்றி ஈழத் தமிழரை அறுபது ஆண்டுகளிற்கும் மேலாக சிங்களப் பேரினவாதிகள் அழித்தே வருகின்றனர். ஆழிப் பேரலையிலும் கொடுமையாகவே சிங்களப் பேரினவாதிகளின் கொடூர நடவடிக்கைகளை தமிழர் பார்க்கின்றனர்.

ஆழிப் பேரலையின் அழிவிற்குப் பின்னர் தனிநாட்டிற்குரிய பண்போடு எப்படிப் புலிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டார்களோ அதேபோன்று அர்ப்பணிப்பு உணர்வுடன் தமிழரிற்காக வேறு யாரால் செயற்பட முடியும்? 2004 ஆம் ஆண்டு மீட்புப் பணியில் ஈடுபட்ட புலிகளின் பணிகளை வெளிநாடுகளில் உள்ள பல ஊடகங்களும் பாராட்டின. முல்லைத்தீவிற்கு 03 சன. 2005 அன்று அழிவுகளைப் பார்வையிட வந்த யுனிசெப் தலைமை இயக்குநர் கரோல் பெலாமி புலிகளின் மீட்புப் பணியையும் நிவாரண வழங்கலில் உள்ள திட்டமிடலையும் வெகுவாகப் பாராட்டினார்.

அமெரிக்காவில் ~சிக்காக்கோ றைபியூன|; பத்திரிகை 07.01.05 அன்று தமிழீழ நிர்வாகத் திறமையைப் பட்டியலிட்டதுடன் தனிநாட்டிற்குரிய செயற்பாடுகளைக் கொண்டதெனவும் விபரித்தது.

ஆழிப் பேரலையின் பின்னான மீள்கட்டுமான வேலைகளை நேரில் பார்த்தவர்களால் தான் புலிகளின் பணிகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. இதன் காரணமாகவே சிங்களப் பேரினவாத அரசு வெளிநாட்டவர் புலிகளின் ஆழுகைக்குள் செல்வது உண்மைகளை அறிய உதவும் என்று தடுத்தது.

எனவே, ஆழிப் பேரலையின் பின்னான செயற்பாடுகளை வைத்தும் யார் மனிதாபிமானச் செயற்பாட்டாளர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். புலம் பெயர்ந்தவர்களே பல வழிகளிலும் உதவுகின்றீர்கள். அறிவியல் ரீதியாகவும் உங்களை வளர்த்து கடலெல்லை அதிகமாக உள்ள எமது நாட்டில் ஆழிப் பேரலையால் அழிவேற்படாமல் பாதுகாப்பது பற்றியும் கவனியுங்கள். பேரலையால் அள்ளுண்ட உயிர்களை எண்ணி!

சுவிசிலிருந்து கனகரவி- 26.12.2010

ஜோசப் பரராஜசிங்கம்,வி.நவரத்தினம் நினைவுதினம்

25 .12.2005மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் வீரவணக்கம்

நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மனைவியுட்பட மேலும் எழுவர் காயமடைந்தனர். இவர் தீவிர விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று அறியப்படுபவர்

***

22.11.2006 நாட்டுப்பற்றாளர் வி.நவரத்தினம் வீரவணக்கம்


வி.நவரத்தினம் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” விருது தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 22.11.2006அன்று இழந்துவிட்டது. அமரர் வி. நவரத்தினம் அவர்கள் அற்புதமான இலட்சியவாதியாகத் திகழ்ந்தார். தான் அணைத்துக்கொண்ட இலட்சியத்திற்காக நூற்றாண்டொன்று முழுவதும் தனது வாழ்வை அர்ப்பணித்தார்.

***

16.12.2011 நாட்டுப்பற்றாளர் அன்டனி பிரான்சிஸ் சந்தியோகு

https://i0.wp.com/www.sangathie.com/uploads/images/2011/12/Mama%20New%20Big.jpg

30 வருடங்களுக்கும் மேலாக தாயக விடுதலைப் போராட்டத்திற்கு தனது முழு அர்ப்பணிப்பையும் கொடுத்தவர் தான் காலஞ்சென்ற ஊடக இல்லத் தலைவர் நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் சந்தியோகு.ஒவ்வொரு கணமும் தாயக சிந்தனையோடு விடுதலை உணர்வோடு சொல்லுக்கு முன்னர் செயலில் தனது தாயக கடமையை காட்டிய உயிர் இன்று துயில் கொள்கின்றது.

*****

 15.12.2011

15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் திருச்சியில் தீக்குளித்து ஈகைச்சாவடைந்தார்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். மார்கழி மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

எம்.ஜி. இராமச்சந்திரன்,லெப்.கேணல் அப்பையா அண்ணை நினைவுதினம்

24.12.1987 எம்.ஜி. இராமச்சந்திரன் நினைவு நாள்

தமிழக முதல்வர் எம்ஜிஆருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே இருந்த பிணைப்பு மற்றும் ஈழப் போராட்டத்துக்கு எம்ஜிஆர் அளித்த நிபந்தனையற்ற வெளிப்படையான ஆதரவு போன்றவை உலகமறிந்தது.

**

 24. 12. 1997 லெப்.கேணல் அப்பையா அண்ணை வீரவணக்கம்


எமது இயக்கத்தின் மூத்த அங்கத்தவர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது இன்றுவரை எமது தேசம் தவித்திருந்தது.

தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் கொள்ளுப்பாட்டனின் 190வது பிறந்தநாள்

SRI LANKA-UNREST-TIGERS-POLITICS

தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கொள்ளுப்பாட்டனும் வல்வெட்டித்துறையின் சமூகசிற்பியுமான மேதகு திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளையின் 190வது பிறந்தநாள் (19.12.2012) இன்றாகும். காலத்தைவென்று நிற்கும் அவரின் வாழ்கைச்சரிதமும் அவர் மறைவின்போது (24.10.1892) பாடப்பட்டு அழியாத வரலாற்றுசான்றாக நிற்கும் சமரகவியும்!…..

thirumaniyar vengadasalapillai

வல்வெட்டித்துறையின் சமூகச்சிற்பி
திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை!…..

1867 ஆம் ஆண்டு சங்கத்தாபனம் செய்து வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தவரே திருமேனியார் வெங்கடாசலம் பிள்ளையவர்கள். இவர் வல்வெட்டித்துறையின் முதன்மைக்குடியாக புகழ்பெற்ற கடல்வணிகக்குடும்பத்தில் உதித்த ஐயம்பெருமாள் வேலாயுதர் வழிவந்த’திருமேனியாரின்’மைந்தனாக மாதேவியாரின் வயிற்றிலிருந்து 1822ஆம் ஆண்டு மார்கழி மாதம் 19ம் திகதி வியாழக்கிழமை அவதரித்தார். இது கலியப்பதம் 4924 இற்கும் சாலிவாகன சகாப்தம் 1745 இற்கும் சமமாகிய சித்திராபானு ஆண்டு மார்கழித்திங்கள் 6ம் நாள்ஆகும். இவர் பிறந்த கிரகநிலையானது சிங்கஇலக்கணத்திற்கு உரியதாகும். சோதிடநூற்ப்படி சூரியன் என்னும் கிரகத்திற்கு இராசிச்சக்கரத்தில் உள்ள ஓருவீடு சிம்மம். சூரியன் நவக்கிரகங்களிற்கு நாயகராக விளங்குபவர் மட்டுமல்ல. பால்வீதியில இருக்கும் பல்லாயிரம் நட்சத்திரகூட்டங்களிலும் சூரியக்குடும்பமே மிகவும் பெரியது. உலகின் பேரொளியாகவும் யாரும் அண்டமுடியாத அக்கி;னிக்கோளமாகவும் விளங்குவதும் சூரியக்கிரகமே ஆகும். கிரகம் என்பது இருத்தல் என பொருள்படும். இத்தகைய சூரியனின் பார்வை பெற்ற சிங்க இலக்கணத்தில் பிறந்த இவருடைய முன்னோர்களும் பின்னோர்களும் பெருமைபெற்ற வரலாறுடையவர்கள்.

இவ்வாறு பெருமைமிகு குடும்பத்தில் அவதரித்த இவரின் பிறப்பை நூறுவருடங்களிற்கு முன்வாழ்ந்த வல்வெட்டித்துறையின் மூத்ததமிழ் அறிஞரும் வல்வெட்டித்துறை வைத்திலிங்கப் புலவரின் சகமாணவரும் உடுப்பிட்டி சிவசம்புப்புலவரின் மாணாக்கனுமான பொன்னையா உபாத்தியாயர் என்றழைக்கப்பட்ட புலவர் நா.பொன்னம்பலம்பிள்ளை அவர்கள் பின்வருமாறு சிறப்புறபாடியுள்ளார்.

மல்லிகை முல்லை மலரிருவாட்சியாம்
நல்லபைந்தருநிறை நந்தவனமுஞ்
சூழ்ந்திடவதிவளந் துலங்குமிவ்வல்வையில்
ஆழ்ந்திடு கடல்சூழ்வணிகனின் மாக்கள்
வல்வினைப்பிறவியா மறிகடல்நீந்தி
எல்லையில்லா பேரின்பந்துய்ந்திட
கருமேனிகொள்ளாக் கரையறுபுண்யத்
திருமேனிவள்ளல் செய்தவத்துதித்த
தருவேங்கிடநிதித் தாரைபொழிகைத்
திருவெங்கடாசல சீதெந்தரியசிகாமணி!

திருமேனியாருடைய முதல்மைந்தனாக அவதரித்த இவருக்கு குழந்தைவேற்பிள்ளை தம்பிப்பிள்ளை, தம்பையா, இராமசாமி, அப்பாச்சாமி, என ஐந்து இளைய சகோதரர்;களும் ஒரு சகோதரியும் இருந்தனர். இதனால் மூத்தவர் என்கின்ற காரணப்பெயர் கொண்டு ‘பெரியதம்பியார்’ என அழைக்கப்படலானார். இளமைப்பருவம் முதல் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவரும் தமது பரம்பரைத்தொழிலான கடல்வணிகம் மூலம் பெரும்பொருள் ஈட்டியவர்களில் முதன்மையானவர். உரியபருவம் வந்ததும் வள்ளியம்மை எனும் மாதரசியை திருமணம் முடித்து குடும்பஸ்தரான இவருக்கு வேலுப்பிள்ளை, திருமேனிப்பிள்ளை, அருணாசலம் என மூன்று ஆண்மக்களும் ஆச்சிப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை பொன்னம்மா என மூன்று பெண்மக்களும் வாரிசாக இன்று அடையாளம் காணப்பட்டுள்ள போதும் இவருக்கு மேலும் பலகுழந்தைகள் என செவிவழிக்கதையுள்ளது.

ஆரம்பத்தில் தென்கிழக்காசிய நாடான மலேசியாவின் துறைமுகநகரங்களான பினாங். போர்ட்வேலோ, பன்கூர், கிள்ளான் என்பவற்றுடன் அரிசி வர்த்தகத்தில் இவர் ஈடுபட்டார். இக்காலத்தில் தென்னிலங்கைநகரான காலியில் அமைந்திருந்த சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் பல திருப்பணிகளை மேற்கொண்டதுடன் அதன் புனருத்தானபணிகளிலும் பெரும்பங்காற்றினார். 1850 – 1870 காலப்பகுதியில் இந்தியாவின் தென்மேற்கு மாநிலமான மலையாளநாடென்று அழைக்கப்பட்ட இன்றையகேரளாவிற்கும் யாழ்ப்பாணத்திற்;குமான புகையிலை வியாபாரமானது பெருவிருத்தியடைந்தது. தந்தைவழியில் கப்பல் உரிமையாளராகவும் சிறந்த கடலோடியாகவும் இருந்ததனால் மலையாளத்தேச வியாபாரிகளினாலும் இந்தியாவின் நாட்டுக்கோட்டை செட்டிகளினாலும் யாழ்ப்பாணத்தில் கொள்வனவு செய்யப்படும் புகையிலையையும் அதன் உற்பத்திப்பொருட்களான சுருட்டையும் ஏனைய நுகர்வுப்பொருடகளையும் மலையாளநாட்டின் கொச்சினிற்கும் திருவாங்கூருக்கும் ஏற்றிச்சென்று கொடுப்பதன்மூலம் அதிகவருவாயைப் பெருக்கினார்.

1856ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு சொந்தமான “king of atlantic” என்ற கப்பல் திருகோணமலைக்கு வடக்காக முல்லைத்தீவுக்கு கிழக்கே வங்கக்கடலில் மூழ்கிவிட்டது. ஆங்கிலேயரின் கட்டிடநிர்மாணப்பணிகளிற்காக கொண்டு வரப்பட்ட சுண்ணாம்பு மூடைகளுடனேயே அக்கப்பல் மூழ்கியிருந்தது. பலநாட்களாக அதனை மீட்கமுயற்சிசெய்த கப்பலின் உரிமை யாளரான ஆங்கிலேயர்கள் செய்வதறியாது மூழ்கியநிலையிலேயே அதனைவிற்றுவிட முடிவு செய்தனர். ஆங்கிலேயநாட்டிலிருந்து இலங்கைவரை பயணம்செய்த இரட்டைப்பாய் மரக்கப்பலான அதனை மூழ்கியநிலையிலேயே விலைக்குவாங்கிய வெங்கடாசலம்பிள்ளை எல்லோரும் ஆச்சரியப்படும்படியாக அதனை நீரிலேமிதக்கவிட்டார். கப்பற்சாத்திரம் என்னும் மாலுமி சாஸ்திரத்திலும் வானசாஸ்;திரத்திலும் பூரணஅறிவுகொண்ட இவர் இதற்காக பலநாட்கள் முல்லைத்தீவில் கள்ளப்பாடு என்னும் கடற்கரைப்பிரதேசத்தில் தங்கியிருந்து மேற்படிமூழ்கிய கப்பலை மீட்டெடுக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் தன்னிடம் இருந்த சுழியோடிகள் மூலமாக கப்பலில் இருந்தபொருட்களை சிறிதுசிறிதாக வெளியேஎடுத்தார். கப்பலில் ஏற்றப்பட்டிருந்த சுண்ணாம்புமூடைகளை கடலில் இட்டு கப்பலின் பாரத்தைக்குறைத்தார். பின்னர் மூழ்கிய கப்பலுடன் நேராகப்பிணைக்கப்பட்டு மிதந்து கொண்டிருக்கும் பாரியமரக்குற்றிகளை பக்கவாட்டாக நகர்த்துவதன் மூலம் மூழ்கிய கப்பலை நீர்மட்டத்திற்கு கொண்டு வந்து ஆங்கிலேயரும் மெச்சும் வகையில் தமிழரின் பொறி;முறை அறிவினைப் பயன்படுத்தி வெற்றி கண்டார். ‘அத்திலாந்திக் கிங்’ என்னும் அக்கப்பல் மூழ்கியதும் அதிலிருந்த சுண்ணாம்பு மூடைகளை வெளியே கொண்டு வரமுடியாமல் அச்சுண்ணாம்புகள் அவ்விடத்திலேயே கடலில் இடப்பட்டன. முல்லைத்தீவிற்கு அண்மையில் வங்காளவிரிகுடாக்கடலில் இன்றும்கூட ‘கப்பல்தட்டு’ என அவ்விடம் அழைக்கப்படுகின்றது.

இக்காலத்தில் தன்னைப்போன்ற கடல்வணிகனான ‘மாநாயக்கன்’ னின் மகளான கண்ணகியின் பெயரில் சிறுகொட்டிலாக இருந்த ‘வற்றாப்பளை கண்ணகி அம்மன்’ ஆலயத்தை கற்கட்டிடமாக இவர் புனரமைத்ததுடன் கோயிலுக்கு அண்மையில் பக்தர்கள் தங்குவதற்காக ஓருமடத்தையும் தனது பெயரில் இவர்அமைத்திருந்தார்;. அத்துடன் கள்ளப்பாட்டில் இருந்து வற்றாப்பளைவரை உள்ள வீதியின் இருமருங்கிலும் ஒவn;வருவருடைய வருணாச்சிரதர்மங்களிற்கு ஏற்றதான மடங்களை அமைத்து பக்தர்கள் தங்கிச்செல்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்தினார். (யாழ்பாணவைபவக்கொளமுதி பக்கம்) சிலவருடங்களிற்கு முன்புவரை வற்றாப்பளை கண்ணகிஅம்மன் கோயில் முன்றலில் இவர் பெயரில் அமைந்திருந்த யாத்திகர்களிற்கான தங்குமடம் அடையாளம் காணக்கூடியவாறு காணப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது. முறையான வீதிப்போக்குவரத்துகள் அற்ற அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கடற்பயணம் செய்துவரும் பக்தர்கள் வற்றாப்பளை கண்ணகியம்மனை வழிபடும் வசதிகளையும் இவ்வாறு ஏற்படுத்திக்கொடுத்தார். அத்துடன் கள்ளப்பாட்டில் பிள்ளையார் கோயிலொன்றையும் அமைத்திருந்தார். பாய்க்கப்பல் மூலமாகவும் நடந்தும் கதிர்காமம் செல்லும் யாத்திரிகள் ஓய்வெடுப்பதற்காக கள்ளப்பாடு கடற்கரையில் ஓருமடத்தினையும் அமைத்; திருந்தார் அக்காலத்தில் கள்ளப்பாடு கடற்கரையில் வேறுகல்லிலானகட்டிடங்கள் ஏதுமற்ற நிலையில் இவரால் கொள்வனவு செய்யப்பட்ட ஒரேகாணியில் இவை இரண்டும் அமைந்திருந்ததனால் அப்பிள்ளையார் கோவில் ‘மடத்தடிப்பிள்ளையார்’ கோவில் என அழைக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் சிதைவடைந்த அப்பிள்ளையார் கோவில் உள்ளூர்மக்களினால் புனரமைக்கப்பட்டதன் பின்பு இன்று கள்ளப்பாடு பிள்ளையார்’ கோவில்என அழைக்கப்படுகின்றது.

மீழ்க்கப்பட்ட கப்பலை வல்வெட்டித்துறைக்கு கொண்டு வந்து தமது பரம்பரை வாடியில் (வாடி என்பது கப்பல்கள் மற்றும் படகுகளை உற்பத்திசெய்யவும் அவைகளைப் பழுதுபார்க்கவும் பயன்படுத்தும் இடமாகும்) அதனைச்சீரமைத்து மீண்டும் கடற்பிரயாணம் செய்யும் வகையில் மாற்றியமைத்தார். இவ்வாறான அவருடையவாடியமைந்திருந்த இடமே இன்றைய முத்துமாரியம்மன் கோவிலுக்கு வடக்காக அமைந்திருக்கம் வாடியெழுங்கைப் பகுதியாகும். ‘அத்திலாந்திக் கிங்’ என அழைக்கப்பட்ட இக்கப்பல் கெச் (ketch) சுக் கப்பல் எனப்படும் வகையைச்சேர்ந்தது. இவ்வகைக்கப்பல்களின் பாய்மரங்களின் உயரம் அதுவரை இலங்கை இந்தியா போன்ற கீழைத்தேசநாடுகளில் கட்டப்பட்ட சமஅளவு கொண்ட பாய்மரங்கள் போலன்றி முன்னிருக்கும் பாய்மரம் எப்பொழுதும் உயர்ந்ததாகவே காணப்படும். இதனால் பருவக்காற்றுக்களின் மூலம் நகரும் இவ்வகைக்கப்பல்கள் ஏனையகப்பல்களை விடவிரைவாக நகரும் தன்மை கொண்ட வையாக விளங்கின. இவ்வாறு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட கப்பலைவாங்கி திருத்தியதன் மூலம் ஆங்கிலேயரின் கப்பல் கட்டும் நுட்பட்தையும் நன்கு அறிந்து கொண்டார். இத்தகைய பட்டறிவின் மூலம் தமிழரின் பாரம்பரிய கப்பல் கட்டும் முறையினைச் சீர்திருத்தினார். இதன் மூலம் புகழ்பெற்றிருந்த வல்n;வட்டித்துறையின் கப்பல்க்கட்டும் கலையினை மேலும் மொருகூட்டினார். இவ்வாறு எமது நாட்டின் கடலையும் அது தொடர்பாக இவருக்கு இருந்த நுண்ணிய அறிவையும் பொதுச்செயலில் இவருக்கு இருந்த பரந்த மனப்பாங்கையும் கண்ட ஆங்கிலேயரும் தமது கடல்பயணத் தேவைகளுக்காக பலசமயங்களில் வல்வெட்டித்துறையில் வாழ்ந்த இவரின் உதவியைப் தொடர்ந்து பெற்றுக்கொண்டனர். இதுபற்றிய சிறுகுறிப்பொன்று முருகர் குணசிங்கம் என்பவரால் எழுதப்பட்ட ‘இலங்கையில் தமிழர் முழுமையான வரலாறு’ என்ற புத்தகத்தில் 343 ஆம் பக்கத்தில் காணப்படுகின்றது. அது பின்வருமாறு

‘திரு சாண்டஸ்(sanders) உடன் சாவகச்சேரியிலிருந்து போதகர் ஹன்ட்(HAND) இரு வினாவிடை உபதேசிமார் ஒரு ஆசிரியர் என நான்குசுதேசிகளும் ஆனி 16ந் திகதி வல்வெட்டித் துறையிலிருந்து மட்டக்களப்புக்கு பயணித்து எமது மத்தியநிலையமான புளியந்தீவில் தங்கினர்.’ எனத் தொடர்ரும் இக்குறிப்பானது 1864ம் ஆண்டிற்கு உரியது. இது அமெரிக்க கிறிஸ்தவ மிசனரிமாருடைய (A.C.M) report voi.7 reei 451 – 1857 – 1871 batticaola 20oct1864 என காணப்படுகின்றது. 1864 இல் வல்வட்டித்துறையின் எசமானாக அன்று விளங்கிய இவரைவிட வேறு யாரால் இது முடியும்.

தந்தையிடமிருந்து இரண்டு கப்பல்களை மட்டுமே பெற்றிருந்த இவர் சிவன்கோயிலைக் கட்ட ஆரம்பித்த காலத்தில் 12 கப்பல்களுக்கு சொந்தக்காரராக இருந்தார். என 1967ம் ஆண்டு வெளியிடப்பட்ட சிவன்கோயில் குடமுழுக்கு விழா மலரில் 17ம் பக்கத்தில் வல்வையின் மூத்த எழுத்தாளரும் விழாமலரின் ஆசிரியருமாகிய பண்டிதர் சங்கரவைத்திலிங்கம். எழுதியுள்ளமை இங்கே நினைவூட்டத்தக்கது.

பன்னிரண்டு கப்பல்களிற்கு அதிபதியாக இருந்த வெங்கடாசலம் பிள்ளையவர்கள் 1852இல் பிரிட்டன் பர்மாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பர்மாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகத்திலும் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டியவர்களில் இவரே முதன்மையானவர். இவரால் ‘கெச்சுக்கப்பல்கள்’ வல்வெட்டித்துறையில் கட்டப்படத்தொடங்கி யதும் பர்மா வியாபாரம் மேலும் சூடுபிடித்தது. ஆரம்பத்தில் இங்கிருந்து சென்ற கடலோடிகளும் வியாபாரிகளும் அங்கே தரித்திருந்து அரிசியையும் நெல்லையும் கொள்வனவு செய்வதினால் கப்பல்கள் அங்கிருந்து திரும்புவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்த்;து செல்லும் கப்பல்களில் உடனடியாகவே பொதிகளை ஏற்றக்கூடியவாறு எம்மவர்கள் சிலரை அங்கேயே தங்கவைத்தார். இவர்கள் எப்பொழுதும் ‘மேலாளர்’களாக பர்மாவில் தங்கியிருந்து உற்பத்தியாளர்களிடமும் வியாபாரிகளிடமும் பேரம்பேசி குறைந்த விலைகளில் அரிசியை வாங்கி மூட்டைகளாக ;கட்டி தயாராகவைத்திருப்பர். வல்வெட்டித்துறையில் இருந்து செல்லும் கப்பல்கள் உடனடியாக அவைகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் வல்வெட்டித்துறைக்கு திரும்பிவிடும். இவ்வாறு மேலாளர்களாக இவரால் அனுப்பப்பட்ட ஊழியர்கள் தங்குவதற்காக ‘அரக்கனில்’ ஓர்இடத்தை வாங்கி மடம், கிணறு என்பவற்றுடன் அவ்விடத்தில் ஒருமுருகன் கோவிலையும் இவர் உருவாக்கினார். 1853 முதல் பர்மாவுடனான அரசி வர்;தகத்தை இவர் ஆரம்பித்தது முதல் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தபலரும் இவ்வியாபாரத்தில் குதித்தனர்;. இவ்வாறாக வல்வெட்டித் துறைக் கடலோடிகளின் அதீததொடர்பினால் பர்மாவின் அரக்கன். இறங்கூன் மோல்மீன் போன்ற துறைமுகங்களில் இருந்து வல்வெட்டித்துறைக்கு நேரடியாகவும. விரைவாகவும் வரும் கடற்பாதை ஒன்று அடையாளம் காணப்பட்டது. ஆரம்பத்தில் கோரமண்டலக்கரை என அழைக்கப்படும இந்தியாவின் கிழக்குக்கரை துறைமுகங்களை ஒட்டியே பர்மாவை வல்வெட்டித்துறைக் கப்பல்கள் சென்றடைந்தன. இப்புதிய கடற்பாதை இவரால் கண்டுபிடிக்கப்பட்டவுடன் வங்காளவிரிகுடாவின் 9364 அடி ஆழமுள்ள இக்கடற்பகுதியை வல்வெட்டித்துறைக் கப்பல்கள் சர்வசாதாரணமாக ஊடறுத்து பயணம் செய்தன. பதினோராம் நூற்றாண்டில் இராஜேந்திரசோழனது காலத்தில் ‘சோழர்களின் ஏரி’ என வங்கக்கடல் வர்ணிக்கப்பட்டதுண்டு. அதனையும்விட அதிகமாகவே 19ம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதியிலும் 20 நூற்றாண்டின் முன்னரைப்பகுதியிலும் வல்வெட்டித்துறை கப்பல்கள் வங்காளவிரிகுடாவை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன. இத்தகையநிலைக்கு ஈழத்தமிழரின் ‘கடலாளுமையை’ வளர்த்த பெருமை பெரியவர்’ வெங்கடாசலம்பிள்ளையையே சாரும்.

இந்தியாவின் நாட்டுக்கோட்டைச் செட்டிகளுடனும் ஆந்திராவின் சிறந்தவியாபாரிகளான நாயுடுக்களுடனும் வர்த்தகத்தொடர்புகளை இவர் வைத்திருந்தார். பர்மாவின்புகழ்பெற்ற தேக்கு மரங்களையும் புட்டரிசி என்னும் சிறந்தரகஅரிசினையும் தனது கப்பல்களில்; கொண்டுவந்து பெரும்பொருள் ஈட்டியதுடன் தானதர்மங்கள் செய்வதிலும் முன்னின்றார். அத்துடன் எமது மக்களின் உணவுத்தேவையினை பூர்த்திசெய்வதிலும் பெரும் பங்காற்றினார். இவ்வாறு பல கப்பல்களை வைத்திருத்திருந்து கடல்வணிகம் செய்த இவரின் கப்பல்கள்.

அரு(ர)க்கன்போர்மான் வந்தேரிரங்கூன்
காக்கை நாடு வங்காளஞ் சென்னை
கூடலூர் கொற்றங் குடிநாகைத்தலம்
திண்டுக்கல்காரைக்கால் புதுச்சேரி
பறங்கிப்பேட்டை பம்பாய்குற(றி)ச்சி
மலையாள மாலபள்ளிதூத்துக்குடி
கொச்சிகள்ளிக்கோடு கொல்லம்
தகைசெறி திருவனந்தபுரம் கொழும்பு
மானார்(நகர்) திருகோணமலை மட்டக்
களப்பெனும் பலபதி அனனபூரணிஅம்மா

ஆகிய இடங்களிற்கு சென்று வர்த்தகத்தில் ஈடுபட்டன. என கெச்சுக்கப்பலின் தண்டயைல் ஆகப்பணியாற்றிய நா.வேலுப்பிள்ளையின் சமரகவியில் (1904) குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காலத்தில் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில்மணியமாக விளங்கிய இவர் கோயிலின் சுற்று மதிலைக்கட்டியதுடன் கோவிலுக்கு தெற்குப்புறமாக ஒரு குளத்தையும் வெட்டு வித்தார். பன்னிரண்டு கப்பல்களுக்கு அதிபதியாக விளங்கிய இவரிடம் கப்பல் தண்டையல் (கப்ரன்) சுக்கானியர் (மாலுமிகள்) பண்டாரங்கள் (சமையல்காரர்) கிலாசுகள் (பாய்மரம்கட்டுவோர்) எனப்பலர் வேலைசெய்தனர். அதுபோல் கப்பலுடன் சம்மந்தப்பட்ட பொருட்களை ஏற்றுவது இறக்குவது எனத் தொழில் புரிந்த பலரும் கப்பலுக்கு தேவையான கயிறுகள் திரிப்போர் மற்றும் கப்பல் வாடியில் வேலை செய்வோர் என ஏறத்தாழ 300 பேர்களுக்கு மேல் இவரிடம் ஊழியம் புரிந்தனர். இவ்வாறு இற்றைக்கு 150 வருடங்களுக்கு முன் ஊரில் இருந்த 300பேருடைய குடும்பத்தினரின் வாழ்க்கையினை இவர் தாங்கியுள்ளார். 1946ம் ஆண்டில் எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டு கணக்கெடுப்பின்படி வல்வெட்டித்துறை மக்களின் மொத்தத்தொகை 6015பேர் என 30.7.1950 இல் வித்துவான் வ.மு கனகசுந்தரம் வீரகேசரிவார வெளியீட்டில் எழுதிய ‘வல்வெட்டித்துறை வரலாறு’ என்னும் கட்டுரை தெரிவிக்கின்றது. இதில் சைவர்கள் 5035 பேரும் கிறிஸ்தவர்கள் 85 பேரும் உள்ளடக்கப்பட்டிருந்தனர். அப்படியானால் அதற்கு 100வருடங்களுக்கு முன் எத்தனைபேர் வல்வட்டித்துறையில் வாழ்ந்திருப்பர். அவர்களில் 300குடும்பத்தில் எத்தனை அங்கத்தவர்கள்? எனக் கணக்கெடுத்தால் அம்மக்களுக்கான இவரின் சேவை என்பதை அர்ப்பணிப்பென்றோ அல்லது அளவிடற்கரியது என்றோ கூறலாகாது. அம்மக்களுக்கு அனைத்துமே இவராகத்தான் இருந்திருக்கும். அதனால்தான் தன்னிடம் வேலை செய்தவர்களுக்கு எசமானாக விளங்கியது போலவே ஊர் மக்களனைவருக்கும் இவர் எசமானகவே கருதப்பட்டு ‘எசமான்’ என அம்மக்களால் அழைக்கப்படலானார். இன்றும் கூட அவர் வாழ்ந்த வீடு ‘எசமான்வீடு’ என்றே அழைக்கப்படுகிறது. இதன்மூலம் வல்வெட்டித்துறை மக்களினை வழிநடத்தும் தலைமைப்பதவி இயல்பாகவே கைவரப்பெற்றார். அவர் மறைந்து நூற்றியிருபது வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அவரை குறிப்படும்போது ‘எசமான்’ எனவும் அவருடைய வழிவந்த குடும்பத்தினரை ‘எசமான் குடும்பத்தினர்’ எனவும் அளவிறந்த மரியாதையுடன் வல்வெட்டித்துறை மக்கள் இன்றும் அழைக்கின்றனர். என்பதனைக் கொண்டே அந்தமண்ணில் அவருடைய ஆளுமையானது அழிக்க முடியாதவாறு எவ்வளவுதூரம் ஆழவேருன்றி இருக்கின்றது என்பதனை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஒரு கிராமத்தின் அல்லது பட்டினத்தின் முதல் மனிதராக முன்னுரிமை பெற்றிருந்த வெங்கடாசலம்பிள்ளை அவர்களின் வாழ்வில் 1867ஆம் ஆண்டு பாரிய மாற்றம் உண்டாயிற்று. வல்வட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் ‘தர்மகர்தா’ என்னும் கோயில் மணியமாக அக்காலத்தில் கடமையாற்றிவந்த இவர் கண்டகனவில் ‘இவரது தந்தையார் வல்வட்டித்துறையில் சிவபிரானுக்கு கோயில் ஒன்றை எடுத்துத்தருமாறு பணித்திருந்தார். இவரது தந்தையராகிய ‘திருமேனியார்’ மறையும் போது வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் தர்மகர்த்தாவாக இருந்தவர். இவற்றுடன் அவருடைய பூட்டனாரான திரு. ‘வேலர்’ ஆரம்பித்து வைத்த நெடியகாட்டு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் கோவில். புட்கரணிப்பிள்ளையார் கோவில். மற்றும் வைகுந்தப் பிள்ளையார் கோவில் எனும் நான்கு கோயில்களுக்கும் மணியமாக இருந்து பெருந்தொண்டு ஆற்றியவர்.

அக்கனவினைக்கண்ட நாள்முதலாய் பெரியதம்பியார் இதேநினைவிலேயே இருக்கலானார். சிவன்கோவிலை எங்கே அமைப்பது என தவிக்கலானார்! இக்காலத்தில் இவரிடம் ஊழியம் புரிந்த கம்பர்மலையைச்சேர்ந்த ஒருவர் தனது வேலைமுடிந்து தினமும் முத்துமாரியம்மன் கோவிலுக்கு தெற்குப்புறமாக அமைந்திருந்த கற்களும் பற்றைகளும் பலவித செடிகொடிகளும் மரங்களும் வளர்ந்திருந்த நடைபாதைவழியூடாக வீட்டுக்கு திரும்பிச்செல்வது வழக்கம். மின்சாரவசதியற்ற அக்காலத்தில் முன்னிரவில் சிறுபற்றைகளினுடாக நடந்து செல்லும் அவர் ஒருநாள் அப்பகுதியில் நின்ற கொன்றை மரத்தடியில் சிறிய வெளிச்சம் ஒன்றைக்கண்டார். தொடர்ந்து சிலநாட்கள் இவ்வாறு தான்கண்ட விபரத்தை தனது எசமானான வெங்கடாசலம்பிள்ளையிடம் அவர்கூறினார். நம்பமுடியாத வெங்கடாசலம்பிள்ளையும் அடுத்தநாள் அந்த ஊழியரையும் உடனழைத்துக் கொண்டு அவ்விடத்துக்கு சென்றுபார்த்தார். ஆம் அந்த ஊழியர் காட்டிய இடத்தில் நின்ற கொன்றைமரத்தடியில் பசுவின் சாணம் எரிந்து கிடக்கக்கண்டார். அத்துடன் கொன்றை மரத்தின்பூக்கள் எல்லாம் அதனைச்சுற்றி விழுந்திருக்கவும் கண்டார். அவ்விடத்தில் நின்று நிமிர்ந்து பார்த்தபோது நேர்வடக்காக இருந்த முத்துமாரியம்மன் கோவில் மூலஸ்தானத்தைக் கண்டார். தந்தையார் கனவில் சொன்ன பொருளைப்புரிந்து கொண்ட வெங்கடாசலம்பிள்ளையும் அவ்விடத்திலேயே சிவபிரானுக்கு கோயில் கட்டமுடிவெடுத்தார்.

கடலோடுவதால் கிடைத்த பெரும் செல்வத்தில் திளைத்த வல்வெட்டித்துறையில் திரும்பிய இடமெல்லாம் கோயில்களே இன்றுபோல் அன்றும் காணப்பட்டன. எனினும் அவைகiளில் பெரும்பாலனவை பிள்ளையார் கோவில்களாகவும் வைரவர் கோயில்களாகவுமே காணப்பட்டன. முழுமுதற்கடவுளான சிவபிரானை வழிபடுவதாயின் பருத்தித்;துறையில் இருந்த பசுபதீஸ்வரர் கோவிலுக்கே வல்வெட்டித்துறை மக்கள் செல்ல வேண்டியிருந்தமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

கப்பல்வணிகம் மூலம் பெரும்பொருள்ஈட்டி புகழ்பெற்ற வர்த்தகராயும் பெரும்தனவந்தராயும் இருந்த வெங்கடாசலம்பிள்ளை முன்பிருந்த சைவநாயன்மார்கள் போன்று எக்கணமும் முழுமுதற் கடவுளாம் சிவபிரானை நினைத்து அவருக்கு கோயில் கட்டும் முடிவில் செயற்படலானார். கொன்றைமரத்தில் ஜோதி தோன்றியஇடத்தில் கோயில் அமைப்பதற்கு கொன்றை மரங்கள் நிறைந்திருந்த அம்மன்கோவிலுக்கு தெற்காகவும் புட்கரணிப்பிள்ளையார் கோவிலுக்கு மேற்காகவும் அமைந்திருந்த 60 பரப்புக்காணியை விலைக்கு வாங்கிக்கொண்டார். இந்நிலப்பகுதி வெங்கடாசலம்பிள்ளையின் பெரியதந்தையாராகிய ‘மணியகாரர்’ புண்ணியமூர்த்தியாருக்கே சொந்தமாக இருந்தது. அந்நிலப்பகுதியில் கற்பாறைகள் அதிகமாகக்காணப்பட்டன. ஊருக்கே எசமானாக வழிவந்து வாழ்ந்து காட்டிய குடும்பத்தில் வந்த பெரியவர் ஆனாலும் இறைவனுக்கு ஊழியம் புரியும் அடியவனாகி தனது கையினாலேயே பெரும் பாறைகளைப்புரட்டியும் தகர்த்தும் ‘புட்கரணி’ என்னும் அந்நிலத்தைச் செம்மைப்படுத்தினார். ‘புட்கரணிp’ என்பது தாமரை அல்லது தாமரைக்குளம் எனத்தமிழில் பொருள் தருவதால் அதற்கு அண்மையில் அமைந்திருந்த பிள்ளையார் கோவில் புட்கரணிப்பிள்ளையார் என அழைக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் பின்நாட்களில் புட்கரணி என்பது ‘புட்டணி’ என திரிபடைந்துள்ளது. முன்பு தாமரைக்குளம் என்னும் கருத்தில் புட்கரணிக்குளம் என அழைக்கப்பட்டகுளம் ஈற்றில் தூர்ந்த காலத்தில் தூர்ந்த அல்லது தீர்ந்த எனும் காரணப்பொருள் தரும் ‘தீரு’ என்னும் சொல்லடை வில் எனப்படும் குளத்துடன் கூடி தீருவில் என அழைக்கப்பட்டுள்ளது. பின்னாட்களில் ஒரேபொருள்தரும் வில் ஸ்ரீ குளம் என்பன இணைந்து தீருவில் என அழைக்கப்படவேண்டிய அக்குளம் தீருவில்க்குளம் எனவும் குளம் அமைந்துள்ள அப்பகுதி தீருவில் எனவும் இன்று அழைக்கப்படுகின்றது.Sivan-Kovil

இவ்வாறு முத்துமாரியம்மன்கோவிலுக்கு தெற்கில் இருந்த மடத்தில் வாழ்ந்த இவர் அங்கிருந்தபடியே சிவபிரானுக்கு கோவில் அமைக்கும் வேலையில் இரவும்பகலும் தன்னை ஈடுபடுத்தினார். இவர் 1867ம் ஆண்டு கோயில் கட்டுவதற்காக ஆரம்பிக்கப்படும் சங்கத் தாபனத்தைச் செய்து கோயிலைக்கட்ட ஆரம்பித்தார். இவ்வாறு கோயில்கட்ட ஆரம்பித்த வேளையில் தான் அதுவரை வகித்துவந்த வல்வட்டித்துறை முத்துமாரியம்மனகோவில் நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்யையார்கோவில் வைகுந்தப்பிள்ளையார்கோவில் புட்கரணிப் பிள்ளையார்கோவில் என்னும் கோயில்களில் மணியம் என்று அழைக்கப்பட்ட ‘அறங்காவலர் பதவியினை தனது ஒன்றுவிட்ட சகோதரனான ஆறுமுகத்தார் முருகுப்பிள்ளையிடம் ஒப்படைத்துவிட்டு சிவபிரானுக்கு கோயில் கட்டுவதில் தனது முழுநேரத்தையும் செலவிடலானார்.

கோயில் என்பது இந்துக்களின் வணக்கத்தலங்களைக் குறிக்கும் பொதுப்பெயராக விளங்கியபோதும் கோவில் என்பது சிதம்பரத்தின் சிறப்புப்பெயராகும். பல்லவர்காலமான கி.பி 7ம் நூற்றாண்டு தொடக்கம் இன்றுவரை காசி, இராமேஸ்வரம், சிதம்பரம் ஆகிய தலங்களே சிவனுடைய தலங்களில் பெருமைபெற்றவையாக விளங்குகின்றன. காசியிலும் இராமேஸ் வரத்திலும் இறந்தவர்களுக்கான அந்திமக்கிரியை செய்யப்பட்டவர்கள் முத்தியை அடைவார்கள் என்பது ஜதீகம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிதம்பரத்தில் நடராஜப்பெருமானை தரிசித்தவர்களே முத்தியடைவார்கள் என்னும் நம்பிக்கையே இவ்வாலயத்தின் பெரும் சிறப்பிற்கு காரணமாகும்.

இவ்வாறு பெருமைபெற்ற சிதம்பரம்கோயிலினை அடியொற்றியதாக மூன்றுவீதிகள் கொண்டதாகவும் பிருதிவிலிங்கம், தேயுலிங்கம், அப்புலிங்கம், வாயுலிங்கம், ஆகாயலிங்கம் என்னும் ஐவகைலிங்கங்களை தனித்தனியாக அமைத்;தார். மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் பாணலிங்கம் மற்றும் அண்ணாமலைஈஸ்வரர்இ மகாவிஸ்ணு என பல வகைத்தெய்வங்களுடன் நவக்கிரகங்களும் வைவநாயன்மார்களான திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திநாயனார் மாணிக்கவாசகசுவாமிகள் என்பவர்களுக்கும் தனித்தனியாக விக்கிரகங்களை பிரதிஸ்டை செய்தே இக்கோயிலினை பெரியவர் வெங்கடாசலம்பிள்ளை அவர்கள் அமைததிருந்தார்.

இச்சிவன்கோவிலின் மூலஸ்தானத்தில் பிரதிஸ்டை செய்யப்பட வேண்டிய மூலலிங்கமான பாணலிங்கத்தை காசியில் இருந்து நேரடியாக கடல்வழிமூலம் வல்வெட்டித் துறைக்கு கொண்டுவந்து பிரதிஸ்டைசெய்தார். ‘பாணலிங்கத்திற்கு’ இயற்கையிலேயே பூணூல் அணிவது போன்ற இரேகைஅமைப்பு படர்ந்திருக்கும். ஆயிரம்கல் சிவலிங்கத்திற்கு ஒரு ஸ்படிகலிங்கம் சமன் 12இலட்சம் ஸ்படிகலிங்கங்களிற்கு ஒரு பாணலிங்கம் சமனாகும். பாணலிங்கம் வடித்தெடுக்கப்படுவதில்லை. பிரமா. விஷ்ணு முதலியதேவர்கள் பூஜித்த புண்ணியநதிகளான கங்கை. யமுனை. நர்மதை போன்றவற்றில் இலிங்கவடிவில் இயற்கையாகவே உருண்டோடீவரும் சிறப்பு வாய்ந்தவையே பாணலிங்கமாகும்.’

இவ்வாறு காசிவரை சென்று இப்புனிதலிங்கத்தைக் கொண்டுவந்தவர் பெரியவர் வெங்கடாசலம்பிள்ளையின் ஒன்றுவிட்ட சகோதரனான ஆறுமுகத்தார் விஸ்வநாதபிள்ளையாகும்;. இங்குகூறப்பட்ட ஆறுமுகத்தாரும் பெரியவர் வெங்கடாசலம்பிள்ளையின் தந்தையான திருமேனியாரும் உடன்பிறந்த சகோதராகள்; ஆவார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பாணலிங்கத்தை மட்டுமல்லாது உற்சவமூர்த்தியாகிய நடேசர் மற்றும் சந்திரசேகரர் ஆகியேரின் திருவுருவங்களையும் விஸ்வநாதபிள்ளையவர்கள் காசியில் இருந்து வல்வெட்டித்துறைக்கு மிகுந்த பொருட்செலவில் கொண்டுவந்துள்ளார். இங்கு கூறப்படும் விஸ்வநாதபிள்ளையின் மகனான சரவணமுத்துப்பிள்ளை அவர்களே பின்நாட்களில் சிவன்கோவிலுக்கு தங்கத்தகடுமருவிய தூபியை இயற்றுவித்தார். என1884 ஆம் ஆண்டு வெளிவந்த வைத்திலிங்கப்புலவருடைய ‘சைவாபிமானி’ பத்திரிகை தெரிவிக்கின்றது இவ்வாறு காசிக்கு சென்று சிவலிங்கத்தைக் கொண்டு வந்த கப்பலின் பெயர் ‘அன்னபூரணி’ என்பதாகும். இதனால் இக்கப்பல் பின்னர் ‘காசிஅன்னபூரணி’ என அழைக்கப்பட்டது. விஸ்வநாதர் வாழ்ந்திருந்த வீட்டின் பெயரும் ‘அன்னபூரணி’ ஆகும். வல்வெட்டித்துறை கிழக்குவீதியில் இலக்கம் 84 இல் அமைந்திருக்கும் இக்காணியின் பெயரும் ‘விஸ்வநாதர் வளவு’ என்பதாகும். விஸ்வநாதபிள்ளையின் மகனான சரவணமுத்துப்பிள்ளையின் மறைவின்பின் அவர்மனைவியாகிய ‘சின்னத்தங்கம்’; உடைய காலத்திலும் மேற்கூறப்பட்ட கப்பல் வர்த்தகத்தில் ஈடுபட்டமை தெரியவருகின்றது. வைத்தீஸ்வரர் கோவிலில் அமைந்திருக்கும் இன்றைய நடேஸர்மண்டபம் மேற்படி சின்னத்தங்கத்தினுடைய பெயரிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிவராத்திரி இலிங்கோhச்;ஸவம் இராஜராஜேஸ்வரி அம்மன் எட்டாந்திருவிழா (கைலாசவாகனம்) கார்த்திகை இறுதிசோமவாரம் என பல விசேஸநாட்கள் இவரின் சந்ததியி னரால் இன்றுவரை சிறப்பாக இக்கோவிலில் நடத்தப்பெறும் திருநாட்களாகும்.

இவ்வாறு சிவன்கோவிலை சிறப்புறஅமைத்து வரும் வேளையில் 1877ம் வருடம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரும் பஞ்சமும் வாந்திபேதிநோயும் ஏற்பட்டது. இறப்புக்கள் வேகமாக அதிகரிக்க உணவுப்பொருட்கள் கிடைப்பதே அரிதாகியது. பசியாலே பலர் பரிதாபமாக இறந்தனர். இக்காலத்தில் பர்மாவிலும் இந்தியாவின் பலபகுதிகளில் இருந்தும் அரிசி மற்றும் உணவுத்தானியங்களை கொண்டு வந்து குடாநாட்டு மக்களின் பஞ்சத்தைப் போக்குவதில் பெரியவர் திரு.வெங்கடாசலம் பெருமுயற்ச்சி செய்தார். யாழ்ப்பாணமக்களிடைய வியாபார நோக்கில் வந்து குடியேறிய பல செட்டிமாரும் சுதேச பணமுதலைகளும் வறியோரை மேலும் வாட்டி தமது பணப்பைகளை நிரப்ப முற்பட்டபோது தனது சேமிப்புக்கிடங்கில் இருந்த அனைத்து அரிசியையும் தனது கப்பல்களில் வரும் அரிசியையும் பஞ்சமென வந்தவர்களுக்கு இல்லையெனாது அள்ளிக்கொடுத்து ‘கஞ்சித்தொட்டித்தர்மம’; செய்தவள்ளல் இவர்.; இதன்மூலம் தன்பொருள் எல்லாம் இழந்தார். இதனால்கோயில் கட்டுவதிலும் பலசிக்கல்கள் பொருளாதார ரீதியாக ஏற்பட்டன. எனினும் இவருடைய தம்பியார் குழந்தைவேலு இராமசாமி மற்றும் ஒன்றுவிட்ட சகோதரன் விஸ்வநாதபிள்ளை என்பவர்களின் உதவியுடன் தனது தந்தையின் சொல்போலவே வல்n;வட்டித்துறை மண்ணில் சிவபிரானுக்கு உரியகோவிலை சிறப்பாகக்கட்டிமுடித்தார்.

காசியில் இருந்து பாணலிங்கமாக கொண்டுவரப்பட்ட இலிங்கேஸ்வரர் வல்வெட்டித்துறை கோயிலில் பிரதிஸ்டை செய்யப்பட்ட பின் ‘வைத்தீஸ்வரப்பெருமான்’ என்னும் பெயரைப்பெற்றார். இவருடன் எப்பெழுதும் கூடஎழுந்தருளியிருக்கும் அம்பிகையின் பெயர் ஆரம்பத்தில் தையல்நாயகி என அழைக்கபட்டபோதும் (வைத்திலிங்கப்புலவரின்; ஊஞ்சற்பாட்டு) பிற்க்காலத்தில் வாலாம்பிகை என மாற்றமடைந்துள்ளது. (இதுமேலும் ஆய்வுக்குரியது). இதனால் இன்று ‘வாலாம்பிகாசமேத ஸ்ரீவைத்தீஸ்வரப் பெருமாள்’ தேவஸ்தானம் என இக்கோயில் அழைக்கப்படுகின்றது.

கோயில் கட்டிமுடித்தபின் 08.06.1883 (சுபானுவருடம் வைகாசிமாதம் 27ம் திகதி வெள்ளிக்கிழமை) முதலாவது நூதனபிரதிஸ்டா கும்பாபிஷேகம் நடத்தப்பெற்றது. அக்காலத்தில் இலங்கையில் பிரபல்யமிக்கவராக விளங்கிய நா.குமாரசாமிக்குருக்களின் தலைமையில் மிகச்சிறப்பாக நடத்தப்பெற்ற இக்கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அன்றே ஆறுகாலப் பூசையையும் ஆரம்பமாயிற்று. புலோலியைச்சேர்ந்த சண்முகக்குருக்கள் கோவிலின் முதலாவது பூசகராக நியமிக்கப்பட்டார்.

சைவ ஆகமவிதிப்படி ஆலயற்களில் நடைபெறும் இப்பூசைகளை ‘ஆறுகாலப்பூசைகள்’ என்பர் இவை பின்வருமாறு.

அதிகாலைப்பூசை 5.45 மணி அதிகாலை
காலைப்பூசை 9.30 மணி அதிகாலை
மத்தியானப்பூசை 11.45 மணி நண்பகல்
மாலைமுதற்காலப்பூசை 6.00 மணி பிற்பகல்
மாலைஇரண்டாம்காலப்பூசை 7.30 மணி முன்னிரவு
அர்த்தசாமம் 8.30 மணி.

இக்கோவிலில் நடைபெறும் மகோற்;ஸவம் எனப்படும் பிரமோற்ஸவம் 16 நாட்கள் என கணிக்கப்பட்டதெனினும் மகோற்ஸ்சவம் எனப்படும் இத்திருவிழாக்காலம் முழுமையாக முடிவுற மூன்று வாரங்களாகும். இக்கோயிலில் தனியாக சூரியபூசை நடைபெறுவது போலவே சூரியக்கதிர்கள் வலிமைபெற்று இக்கோவிலின் மூலஸ்தானத்தில் மீது நேரடியாகவிழுகின்ற நிலையில் தெளிவான வானத்துடன் சூரியவெப்பம் மக்களை வாட்டாத பங்குனி மாதத்திலேயே மகோற்சவநாட்கள் பெரியவரால் தெரிவுசெய்யப்பட்டு இன்றுவரை நடைபெற்று வருகின்றன.

கொடியேற்றத்திருவிழாவிற்கு முதல்நாளில் சிவன்கோவிலின் பிரதமகுரு கோவிலின் இடது புறத்தில் அமைந்திருக்கும் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்று ‘ஊரின்குலதெய்வமான’ முத்துமாரியம்மனிடம் மகேற்சவத்தைச் செய்வதற்;கு அனுமதியையும் ஆசியையும் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு நடைபெறுகின்றது. சிவனுக்கு தனிக்கோயில் அமைத்த பெரியவர் முத்துமாரி அம்மன் கோவில் தர்மகத்தாவாக இருந்தவேளையிலேயே சிவன்கோயிலை நிர்மாணிக்க ஆரம்பித்தார். அப்பெருந்தாயின் அனுமதியைப்பெற்றே இன்றும் வல்வெட்டித்துறை மக்கள் எக்காரியத்தையும் செய்வர். ‘அவள் அனுமதியின்றி எக்காரியமும் செய்தல் கூடாது. அனுமதி யின்றிச் செய்தால் அக்காரியம் சித்திக்காது’ என்பது பலகாலமாக வல்வெட்டித்துறை மண்ணில் தொடர்ந்து வரும் பெருநம்பிக்கையாகும். இதனை உறுதிப்படுத்தும் தக்கசான்றாக இந் நிகழ்வை நாம்கொள்ளலாம். மறுநாள் மாணிக்கவாசகர் ஊர்முழுக்கச் சென்று சிவன்கோவிலின் கொடியேற்றத்திற்காக கட்டியம் கூறுவார். தொடர்ந்து வரும் அமவாசைத்திதியன்று சிவபிரானின் கொடியேற்றத்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும் அன்றுமுதல் மூன்று நாட்களுக்கு விநாயகப்பெருமானின் சக்தியை அதிகரிக்க விசேடபூசையும் தொடர்ந்து வரும் மூன்று நாட்களுக்கு முருகப்பெருமானுக்கும் வள்ளிதெய்வானைக்குமுரிய விசேடவழிபாடும் நடைபெறும். தொடர்ந்து வரும் நாட்களில் மகாயாகத்துடன் வசந்தமண்டபத்தில் சிவபெருமான் வாலாம்பிகை விநாயகர் முருகன் சண்டேஸ்வரர் என்பவர்களுக்கான விசேடபூசைகளுடன் மூலமூர்த்திக்கு சந்திரசேகரப்பட்டமும் வழங்கப்படும். இவ்வாறு தொடரும் மகோற்சவநாட்களில் பங்குனிப்பூரணை நாளுக்கு முன்நாளில் தேர்த்திருவிழாவும் இறுதிநாளான பூரணைநாள் காலையில் வெள்ளியிலான இடபவாகனத்தில் கோவிலுக்கு ஒருமைல் கிழக்குத்திசையில் அமைந்திருக்கும் ஊறணி தீhத்தக்கடற்கரையான வங்கக்கடலில் சுவாமி தீர்த்தமாடுவார். பின்னர் நெடியகாடு; திருச்சிற்றம் பலப் பிள்ளையார் கோவிலில் தங்கயிருந்து இரவு முழுநிலவில் உமையவளுடன் கல்யாண சமோதரராய் ஆலயம் திரும்புவார். அதன்பின் கொடியிறக்கம் நடைபெறும். இதற்கு அடுத்தநாள்; சிவபெருமான் உமாதேவி சுந்தரமூர்த்திநாயனார் பங்குகொள்ளும் ஊடல் திருவிழா நடைபெறும்.

அடுத்தநாள் சண்டேஸ்வரருக்கு சிறப்பான அலங்காரங்களுடன் குறிப்பாக உற்சவ மூர்த்திக்கு அணியப்பட்ட ஆபரணங்களையும் சண்டேஸ்வரருக்கு அணிவித்து இறைவன் வீதிஉலா வந்தவாகனம் என்னும் விமானத்தில் சிறப்பான அலங்காரங்களுடன் சண்டேஸ்வரர் வீதிஉலா வருவார்;. இறுதியில் ஆலவட்டம் கொடி என்பனவற்றுடன் மேளதாளம் நாதஸ்வரம் முழங்க சண்டேஸ்வரரை மையப்படுத்தி கோயில்வாசலில் சுற்றிச்சுற்றி வருதல் கண்கொள்ளாக் காட்;சியாகும். இறுதிநாளில் வைரவர்மடை எனக்கூறப்படும் வைரவர்பூசை நடைபெறும். இத்திரு நாளில் ஆலயத்தின் காவல்தெய்வமாக விளங்கும் வைரவருக்கு நடைபெறும் விசேட பூசையுடன் மகோற்ஸவகாலம் முடிவடையும்.

16வருடங்கள் தனது திரண்டசெல்வத்தையெல்லாம் செலவழித்து ஆகமவிதிகளிற்கு அமைய வல்n;வட்டித்துறை மக்களுக்காக வைத்தீஸ்வரப்பெருமான் பெயரில் கோவில் அமைத்த ‘பெரியதம்பியார்’ என்னும் திரு. வெங்காடசலம்பிள்ளை பிறப்பிலே கடல்வணிகராகப் பிறந்திருந்தார். எனினும் சிவன்கோவிலை பிரதிஸ்டாபிஷேகம் செய்தபின் சிவதீட்சை பெற்று உருத்திராட்சமாலை அணிந்து நாள்முழுதும் மேலாடையற்ற உடலில் திருநீறணிந்து எந்த நிலையிலும் சிவமந்திரம் ஓதும் சிவனடியாராகவே மாறியவர். அவ்வாறே தன் இறுதிநாள்வரை கழித்தவர்

வல்வெட்டித்துறை மக்களிற்;கும் அதன் அயலூர் மக்களுக்கும் தன்திரண்ட செல்வங்களை எல்லாம் அள்ளிக்கொடுத்த வள்ளல் திரு.வெங்கடாசலம்பிள்ளை அம்மக்ககளின் அருட்கொடை க்காக ஆண்டவனின் சன்னிதானத்தையும் அமைத்துக்கொடுத்தார். இவரின் அள்ளிக் கொடுக்கும் வள்ளண்மையை ‘வல்வைக்கலித்துறை’ பாடிய எமது அயலூரவரான உடுப்பிட்டி யைச்சேர்ந்த சிவசம்புப்புலவர் உயர்ந்தும் வியந்தும் பாடியுள்;ளார். 1829 – 1910ம் ஆண்டுகளை தனது வாழ்க்கைக்காலமாக கொண்டிருந்த உடுப்பிட்டி சிவசம்புப்புலவர் நாவலரின் கடினநடைப் பிரசங்களையும் எளியநடையில் சாதாரணமக்களும் விளங்கும்படி விளக்கிக்கூறும் அற்புத சொல்லாட்சி மிக்கவர். இத்தகைய சிறப்புமிக்க இவர் வல்வட்டித்துறை வைத்தீஸ்வரன்கோவில் பிரதிஸ்டை செய்யப்பட்டதன்பின் பாடிய வல்வைக்கலித்துறையில்.

*****************

நீதிமரபிற்றிருத் தொண்டரோடு திகழும் பத்திச்
சோதிமலர்முக வெங்கடாசலத்துங்க வள்ளல்
பாதிமதிச் சடையான் தேவி யோடு பயிலத்தந்த
சேதிமமொன்றையும் வல்வைச் சீரைத் தெரிந்திடவே

விண்ணியல்செல்வத்தின் மண்ணியல் செல்வமிதக்கத்துய்க்க
புண்ணிய சீலத்திருவெங்கடாசலப் பூபன்வந்து
நுண்ணியவான் குலத்தார் வாழும் வல்வை நகரினூடங்
கொண்ணியல் போக நகர் வேறிங்கியாவதி சைந்திடவே

கார்காமர் கண்டத்து நம் வைத்தியேசர் கருணையினாற்
தீர்காயுளு மிட்டிசித்தியுமெய்திச் செறிந்தருள
நீர்க்காகலெலா முத்த சங்கினமுர்ந்து நிறைந்த வல்வை
ஊர்க்காவவலர்வைகிலெங்களுக்கே பெரிநூதியமே!………..

எனப்பாடியுள்ளமை 19ம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியில் வல்வெட்டித்துறையில் வாழ்ந்த மக்களின் சிறப்பையும் அவர்;களுடைய முதல்வனாகவும் முழுமையானவராகவும் திகழ்ந்த வெங்கடாசலம்பிள்ளையின் சீரையும் சிறப்பையும் தெரிந்துகொள்ள இதுஒன்றே போதுமானது அல்லவா!………. வல்வெட்டித்துறையில் வைத்தீஸ்வரர்கோவிலை அமைத்ததுடன் அபிஸேக ஆராதனைகளை புரியும் அந்தணப்பெருமக்கள் தமது குடும்பத்துடன் தங்கி வாழ்வதற்காக கோயிலின் தெற்குவீதியில் குடிமனை ஒன்றையும் அமைத்துக் கொடுத்தார். இதேபோல காலம் தவறாது கோவிலில்; தேவாரதிருவாசகங்களை பாடும் ‘ஓதுவார்’ களுக்காக கோவிலின் தென்மேற்கு மூலையில் ஒரு குடிமனையையும் அமைத்திருந்தார். இன்றும் கூட ‘ஓதுவார் வீடு’ என்பது சிதைந்தநிலையிலும் அடையாளம் காணக்கூடியவாறே காணப்படுகின்றது. இவ்வாறு ஆலயத்தின் நித்தியகருமங்களிற்கு இடையூறுநேராது கவனித்துக்கொண்டார்

கோவிலின் நித்தியபூசைகளின் போது நாதஸ்வரகானம் இசைப்போர் சிவமந்திரத்திற்கு கட்டியம்கூறும் மேளம் அடிப்போர் மற்றும் ஆஸ்தானவித்துவான்களை இந்தியாவில் இருந்து வரவழைத்து கோவிலுக்கு அண்மையில் தனக்குரிய காணியில் அவர்களை குடியமர்த்தினார். (இக்காணியிலேயே பின்நாட்களில் ‘குமரகுரு மீன்பதனிடும் நிலையம்’ அமைந்திருந்தது) அத்துடன் எப்பொழுதும் தெய்வங்களையே மயக்கும் ஆஸ்தான புல்லாங்குழல் விற்பன்ரையும் சேவைக்கு அமர்த்தி இருந்தார். மக்களுக்கு அருள்புரியும் ஆண்டவன் வாழும் கோயில் என்பது அதற்குரிய அனைத்து தேவைகளையும் தன்னகத்தே பூர்திசெய்யும் வல்லமை கொண்டதாக இருக்கவேண்டும். அதுவே பூரணமான கோயிலாகும். அதற்கேற்பவே வாலாம்பிகா சமோத ஸ்ரீவைத்தீஸ்வரர் கோயிலை அமைத்தவர் பெரியவர் வெங்கடாசலம்பிள்ளை அவர்கள்.

கடல்வணிகனாய்ப் பிறந்து கடலோடியாய் வாழ்ந்த போதும் கோவிலின் தேவைக்கான நெல்லைத்தானே உற்பத்தி செய்துகொண்டார். கோயிலிற்கு அருகாமையில் இருந்த தீருவில் வயலில் சிவன்கோவிலைச் சார்ந்தவர்;களினால் உற்பத்தி செய்யப்படும் நெல் விளைச்சலின் நடைபெறும் கதிர்அறுப்பென்பது பெரும் திருவிழாவாக அக்காலத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. ஒவ்வொரு தைப்பொங்கலிற்கு அடுத்தநாள் கோவிலில்இருந்து வயலிற்குசெல்லும் மாணிக்கவாசகப் பெருமான் கதிர்அறுப்பில் ஈடுபடுவார். நாள்முழுக்க அறுவடைசெய்தபின் அறுவடை செய்த நெல்லுடன் பிற்பகலில் மாணிக்கவாசகப்பெருமான் கோவிலுக்குத்திரும்புவார் ‘புதிர்எடுத்தல்’ என்னும் பெயரில் பெரியவர்; வெங்கடாசலாம்பிள்ளையால் நடத்தப்பெற்று வந்த இந்தநிகழ்வும் திருவிழாவும்; திரு.சபாரத்தினம் எசமான் காலம்வரையில் கொண்டாடப்பட்டதெனினும் பின்பு ஏனோ கைவிடப்பட்டுவிட்டது.

தனது தந்தையின் கனவையும் ஊர்மக்களின் தேவைகளையும் நாடிப்பிடித்தறிந்த வெங்கடாசலம்பிள்ளையவர்கள் ஆகமவிதிக்கமைய சிவன்ஆலயம் அமைத்ததுடன் தனது சமூகக்கடமை முடிந்துவிட்டது என எண்ணாமல் வல்வெட்டித்துறை மக்கள் தொடர்ந்து ஆசாரசீலராய் இருக்கவும் வாழவும் வழிவகுத்தார். பத்தென்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் 1867ம் ஆண்டில் சிவன் கோவில் நிர்மாணம் தெடங்கியதுடன் சிவபூமியாக விளங்கிய வல்n;வட்டித்துறையில் சிவனின் வாகனமானதும் சைவமக்களின் பூசைக்கேற்றதுமான ‘கோமாதா’ என அழைக்கப்பட்ட பசுவதையை முற்றுமுழுதாக தடைசெய்தார். சமூகத்தில் தனக்கிருந்த ‘எசமான்’; என்னும் தலைமைப்பதவியின் பெயரால் பொதுமக்களிடம் எந்தவித கண்டிப்பையும் காட்டாத பெரியவர் உணவுக்;காக மாடுவெட்டுவதற்கு தன்னுடைய கடும் எதிர்ப்பைக் காட்டி அதனை மறுத்தார். இதன்காரணமாக பசுவதையை தடுக்காத கத்தோலிக்கதேவாலயத்தை (புனிதசெபஸ்தியர் தேவாலயம்) ஆங்கிலேயஅரசுடன் இணைந்து நிர்மாணிக்கமுற்பட்ட குடும்ப உறவினரான வயித்தியாம்பிள்ளை லோப்புப்பிள்ளையை ஊரைவிட்டு வெளியேற்றிய இவரின் கண்டிப்பு காலத்தால் அழிக்கமுடியாதது. அன்று முதல் இன்றுவரை வல்வெட்டித்துறையில் இறைச்சிக்காக மாடு வெட்டப்படுவதில்லை.

பர்மாவிலும் இந்தியாவின் பலபகுதிகளிலம் இருந்து வல்வை மக்களினால் கப்பலில் கொண்டு வரப்படும் அரிசி தேங்காய் மற்றும் சிறுதானி;யங்கள் என்பனவற்றைக் கொள்வனவு செய்யவரும் பல ஊர் வியாபாரிகளும் உள்ளூர் மீனவர்களினால் பிடிக்கப்படும் மீன்களை வாங்கவரும் சிறுவியாபாரிகளும் கலந்து வல்வெட்டித்துறையில் தங்கமுற்படுவதால் ஏற்படும் பல் சமூகக்கலாச்சாரம் தான் நேசித்த தனித்துவம்மிக்க குடும்பமான ஆன வல்வெட்டித்துறையில் எதிற்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்னும் தீர்க்கதரிசனத்தில் வியாபார நோக்கமாகவோ அல்லது வேறெந்த காரணங்களுக்காகவோ வல்வெட்டித்துறைக்குள் எவர் வந்தாலும் இரவுப்பொழுதுக்கு முன் ஊரைவிட்டு போய்விட வேண்டும் என்பதிலும் சமூகத்தலைவரான பெரியவர் வெங்கடாசலம்பிள்ளை எந்த சமரசத்தையும் ஏற்றக்கொள்ளவில்லை. ஊருக்குள் ஏற்படும் எப்பிணக்குகளையும் ஊரவர்களே தீர்த்துக்கொள்ளும் விதியினையும் வல்வைச் சமூகத்தில் இவரே ஆழவேரூன்றியுள்ளார்; என அறியமுடிகின்றது. இதன் காரணமாகவே வல்வெட்டித்துறை மக்கள் என்பது பல்லின சமூகம் அல்லது ஓரு சமூகம் என்றில்லாமல் ஒரு குடும்பம் என்பதே ஒரு ஊராக இன்றுவரை நின்று நிலவுகிறது (இதனால்தான் வல்வெட்டித்துறை என்னும் ஒரு குடும்பத்தில் இருந்து வந்து உலகத்தமிழரையே ‘தமிழ்த்தேசியம்’ என்னும் ஒரு கொடியில் இணைத்த பெரும்;தலைமையை நாம் காணமுடிந்தது)

சமூகம் அல்ல ஒருகுடும்பம் என்னும் நிலையில் காணப்படும் வல்வெட்டித்துறைக்கான தலைமைப்பதவியினை எவ்விதசலனமுமின்றி இவர்முன்னெடுத்தார். அதேவேளை 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஈழத்தமிழரின் அரசியல் வழிகாட்டலிலும் இவரின் முன்னெடுப்பு குறி;ப்பிடக்கூடியதாகவே இருந்துள்ளது. இவ்வகையில் 1879இல் சட்டநிரூபணசபையின் கௌரவஉறுப்பினரான முத்துக்குமாரசாமியின மறைவின் பின்னர் அவரது பதவிநிலைக்கான வெற்றிடத்திற்கான போட்டியில் கத்தோலிக்கரான ‘கிறிஸ்தோபர் பிறிற்ரோவிற்கு’ இவர் வழங்கிநின்ற உறுதியான ஆதரவைக்குறிப்பிடலாம். தேசாதிபதியின் நியமனத்தின்மூலம் நியமிக்கப்படும் உறுப்பினராக பொதுசேவையில் நீண்டஅனுபவமும் பிரபல சமூக சேவையாளராகவும் ஒரு மாவட்டநீதிபதியாகவும் அறியப்பட்ட கத்தோலிக்கரான பிறிற்றோவை நியமிப்பதன் மூலம் இலங்கைத்தமிழரிடையே மதரீதியான காழ்ப்புணர்வை தவிர்ப்பதுடன் மக்களிடையேயான ஒற்றுமையும் அவர்களிற்கான சேவையும் பூரணமாக்கப்படும் என இவர் நம்பினார். அதற்காக வல்வெட்டித்துறைக்கு வெளியிலும் பாரியபிரச்சாரங்;களை இவர் மேற்க்கொண்டார் என அறியமுடிகின்றது. (இலங்கையில் தமிழர்இ பக்கம் 464) எனினும் அப்போட்டியில் ‘சைவவேளாளர்’ என்னும் கோசத்தினை முன்னிறுத்திய ஆறுமுகநாவலரி;ன் அதீதபிரச்சாரத்தினால் பொன்னம்பலம் இராமநாதன் எனும் உயர்குடிவேளாளரே தேசாதிபதியால் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவரும் தனது பதவிக்காலம் முழுமையுமே தனக்காகவும் கொழும்பை மையமாகக்கொண்ட தன்னைப்போன்ற உயர்குடிகளான தமிழர்கள் மற்றும் சிங்களவர்களிற்காகவுமே குரல்கொடுத்து வந்துள்ளார். தனது சொந்தஇனமான ஈழத்தமிழரின் அரசியல்அபிலாசைகளிலோ அல்லது பொருளாதார அபிவிருத்திகளிலோ எவ்விதஆர்வத்தையும் காட்டாத அவர் தனது தனிப்பட்ட நலனிற்காகவும் பெயரிற்காகவும் ஆங்கிலஅரசை அதிகம் எதிர்பார்த்ததாக பேராசிரியர் வில்சன் கூறுகின்றார். இராமநாதன் தனது ‘சேர்’ பட்டத்திற்காக அக்காலத்தில் தேசாதிபதியாக இருந்த ளசை.யசவாரச புழசனழn மூலம் ஆங்கிலஅரசை வேண்டிக் கொண்டதையும் திரு.வில்சன் வெளிக்கொணாந்தார். (ய.த.றடைளழn 2000.ழி.உவை. pய46) படித்தவர் களிற்கே வாக்குரிமை என சாதாரணமக்களிற்குமான சர்வஜன வாக்குரிமையை அன்று மறுத்த சேர் பொன். இராமநாதனின் செயலின் மூலமே அவரின் உண்மைத்தன்மையை யாரும் உணர்ந்து கொள்ளலாம். தமது இனத்தையும் மொழியையம் சிந்திக்கமறுத்த இராமநாதன் போன்ற ஆரம்பகாலஅரசியல்வாதிகளின் வழிகாட்டலினாலேயே இன்றும் ஈழத்தமிழினம் அழிவுகளைச் சந்தித்து வருகின்றது. இவ்வகை அரசியல்வாதிகளிற்கு எதிராக 130 வருடங்களிற்கு முன்பே போர்க்கொடி தூக்கிய திரு.வெங்கடாசலம்பிள்ளையின் அரசியல் தீர்கதரிசனமும் போர்க்குணமும் ஆச்சரியயப்படத்தக்கது அல்ல என்பதை அவரின் வழிவந்த வரலாறு நமக்கு உணர்த்தி நிற்கின்றது. இவ்வகையில் வல்வெட்டித்துறையின் சமூகமட்டத்தில் மட்டுமல்லாது ஈழத்தமிழருக் கான அரசியல் அரங்கிலும் போராடிய தமிழ்த்தேசியவாதி யாகவே இவரை நாம் பார்க்கலாம். இன்றுவரை ஆறுமுகநாவலரையும் சேர்.பொன். இராமநாதனையம் வல்வெட்டித்துறை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கும் வெறுப்பதற்கும் ஆறுமுகநாவலரின் சிலைகூட வல்வெட்டித்துறை வீதியால் வரமுடியாமல் திருப்பி அனுப்பப்பட்டமைக்கும் ‘பெரியவர்’ வெங்கடாசலம்பிள்ளை அன்றுகாட்டிய வழியே காரணமாயிற்று.

தான் வாழும் போது மட்டுமல்லாமல் தான் வாழ்ந்த காலத்தின் பின்னும் ஒருசமூகத்தினை சீரானபாதையில் எதிர்காலவாழ்க்கைக்கு வழிகாட்டுவது என்பது இலகுவானதல்ல. ஓரிருவருடங்கள் அல்ல 100 வருடங்களுக்கு மேல் நீண்ட தான்…… தனதுசமூகம்…… என்னும் அவருடைய நேரிய பாதை என்பது அவருக்கு முன்பிருந்ததைவிட அவரது சமகாலத்தைவிட அவருக்குப்பின் எமதுமண்ணிற்கு அதிஉயர்ந்த பெரும் கௌரவத்தை பெற்றுக்கொடுத்தது என்றால் மிகையாகாது. அதனால் தான் 1822ம் ஆண்டில் அவதரித்த அவரின் வாழ்க்கையை இன்றும் நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம்.

பெரியவர் தான் தேடிய சொத்துக்களையும் நிலபுலங்களையும் தான் கட்டிய கோவிலின் பெயரில் எழுதிவைத்து அக்கோயிலானது எக்காலத்திலும் நெறிபிரளாது இருப்பதற்காக அதன் நிர்வாகத்தை மட்டுமே தொடரும் தனது ஆண்சந்ததிக்காக எழுதிவைத்தார். இதன்மூலம் பல ஏக்கர்நிலங்கள் பின்வந்தகாலங்களில் இவரது பரம்பரையினருக்கு பயன்பட்டதைவிட ‘கோயில்க்;காணி’ என்னும் பெயரில் யார்? யாரோ? என சமூகத்தின் பலதரப்பட்வர்களுக்கும் பயன்பட்டன. 1956ம் ஆண்டில் முல்லைத்தீவில் நீரில்மூழ்கிய நிலையில் இருந்த ஆங்கிலேயக் கப்பலான ‘மiபெ ழுகு யவடயவiஉ’ கப்பலை வாங்கிய காலத்தில் ஆங்கிலேய அரசினரிடமிருந்து இவரால் விலைக்குவாங்கப்பட்டிருந்த வற்றாப்பளைமுதல் இரட்டைவாய்க்கால் வரையிலான நந்திக் கடலின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் இருந்த காணிகளும் தென்னந்தோப்புகளும் என 90 ஏக்கர் வரையானநிலங்களில் பலவும் பின்வந்தகாலங்களில் உரிமைகேரப்படாத நிலையில் பின்வந்த அரசாங்கங்களினாலும் தனியார்களினாலும் சுவீகாரப்படுத்தப்பட்டமை தனக்கெனவாழாது பிறருக்கென வாழ்ந்த இவரின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டான உதாரணமாகலாம்?

தனதுநீண்ட நெடுங்கனவை 1883இல் நிறைவேற்றியதுடன் நில்லாமல் தொடர்;ந்தும் கப்பல்கள் மூலம் கடல்வணிகம் புரிந்த இவரின் கப்பல்களில் ஒன்றைப்பற்றிய சிறுகுறிப்பொன்று பின்வருமாறு 18.அயசஉh.1892 வுhந டிசபை யுnயெடயஉhஉhநஅல டீநடழபெiபெ வுசைரஅயni pநசயைவாயஅடில யு றுநயடவால அநசஉhயவெ ழக எயடஎநவவiவாரசயi. ஊயியணைநன ழகக அயனெயவைiஎர in வாந ழககiபெ. என 1923 வெளியிடப்பட்ட ழேவநள ழn துயககயெ என்னும் நூலில் பக்கம் 55 இல் காணப்படுகின்றது. இக்குறிப்பின் மூலம் தனது இறுதிக்காலம் வரை கடல்வழி வணிகம் புரிந்தவராக இவரை நாம் அறியக்கூடியதாக உள்ளது. ஏனெனில் அக்கோவிலின் திருப்பணியிலேயே தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த ‘பெரியவர்’ திரு.வெங்கடாசலம்பிள்ளை அவர்கள் நந்தன ஆண்டு ஐப்பசிமாதம் 11ம் நாள் அதாவது 24.10.1892 ஆங்கிலநாளில் தன்பூதவுடல் நீங்கி புகழுடன் இறைவன் திருப்பாதம் அடைந்தார்.

‘குடிதழிஇக் கோலோச்சு மாநிலமன்னன்
அடிதழிஇ நிற்குமுலகு’

என்னும் திருவள்ளுவரின் வாக்கிற்கமைய வல்வெட்டித்துறையில் வாழ்ந்து ‘திசையெலாமிசை பரப்பிய திருமேனியார் வெங்கடாசலமெனும் பெரியதம்பியார்’ (ழேவநள ழn துயககயெ பக்கம் 321) எனப்புகழப்பட்டு அவர் வாழ்ந்திருந்தபோது மட்டுமல்லாமல் அவர் வாழ்ந்து நூறாண்டுகள் கடந்தபின்னும் அவர் பெயரையும் அவர் வழியையும் அவர் வழிவந்தவர்களையும் இந்த உலகம் அன்போடு ஆதரித்து நிற்பது தொடரும் புதியவரலாறாகும்.

வல்வெட்டித்துறையின் ‘சமூகத்தலைவராக’ விளங்கிய வெங்கடாசலம்பிள்ளையின் சொந்த நிலத்திலேயே (கரையா(ர்)முள்ளிவாய்கால்) அவர் வழியில் வந்து ஈழத்தமிழினத்தின் ‘தேசியத் தலைவராக’ உயர்ந்த வேலுப்பிள்ளை பிரபாகரனது புகழுடலையும் கண்டெடுத்தது என இலங்கைஅரசு கூறமுற்பட்டது எதன் தொடர்ச்சி?…… வரலாறுகள் மீண்டும் மீண்டும் வரும் என்பதற்கு இவர்களின் வாழ்க்கையே சாட்சி!……

ஆய்வும் ஆக்கமும்; ‘தமிழ்நீ.’பொன்.சிவகுமாரன்

************

சிவமயம்

வல்வைச் சிவன்கோவிற் திருவேங்கடாசலப்பிள்ளை
பேரிற் சரமகவி
(1822 – 1892)
யாழ்ப்பாணம் உடுப்பிட்டி சுப்பிரமணியசுவாமி
தொண்டராகிய ஸ்ரீ அ.சிவசம்புப்புலவரவர்களாலியற்றப்பட்டவை.

வெண்பா

சேக்கிழா ரில்லைச் செழுங்கம்ப நாடனிலை
மீக்கிளார் பாவாணரிலை வேறரன்றா – ணோர்க்குந்
திருவேங்கடாசலப் பேர்ச்செல்வனியல் பாவிற்
றருவேங்கொ லம்ம தனித்து.

செந்திருவாழ் மார்பத் திருவேங்கடாசலமா
லைந்துமுகன் பொற்புரத்தி லன்பொடுற்றா – னந்தனயாண்
டைப்பசியிற் பன்னொன் றரத்தனன்றில் சுக்கிலமேற்
றப்படையாப் பஞ்சமியிற் றான்.

கலிவெண்பா

சீர்பூத்த செங்கமலச் செல்வி திருமுகமாய்ப்
பார்பூத்த பல்வளமும் பல்கிமிகும் – பேர்பூத்த
வல்வைத் திருப்பதியின் மாதவன்போல் வாழ்;வுகந்த
செல்வத் திருமேனிச் செம்மலணி – வில்வைத்த
காமர்நுதன் மாதருக்கோர் கட்டளையாய்க் கற்பிய
லேமமுறச் சாலிக்கிசைப்பவளாய் – மீமருவும்
வண்ண மனைவிளக்கா மாதேவி யானகுணப்
பெண்ணரசி யோடு பெரும்பகலாய்க் – கண்ணுதலோன்
வேதச் சிலம்படியில் வீழ்ந்தொழியா மெய்ப்பத்தி
போதவரம் வேண்டிப் புலனடக்கி – யேதமறுஞ்
சித்திரபானுத் தனுவிற் சேராறிற் சீவன்போர்
சுத்தமுறும் பூருவப்பாற் றோய்ந்தசட்டி – யுத்தமமெய்த்
திட்பமறை யாகமமுஞ் செய்யவற முந்தழைக்கப்
பெட்புமிகப் பெற்ற பிறைக்கொழுந்து – விட்புலமான்
வேந்தனிகர் குழந்தைவேற்பிள்ளை முன்னாகச்
சாந்தமுறுஞ் சீராமசாமி பின்னாக – மாந்தரங்க
மைந்த ரெழுவர்களு மாமகளி ரொன்பதின்மருந்
துணைமை யாக வுடனுதித்தோ – னிந்திரையொத்
தாவியொன்றாய்க் காயமிரண் டானவருள் வள்ளியம்மைத்
தேவியொடு வாழ்விற் றிருந்தவைகி – மேவிறுசீர்
மேதகுவேற்பிள்ளை திருமேனிநம்பி முன்னான
காதலரோ ரெண்மருடன் கற்றவர்க – ளோதுமிய
லென்பவற்றிற் றாழ்வொன்று மெய்தாத சேயிழையா
ரொன்பதின்மர்த் தந்த மகிழ்வும்பரான் – வன்புமிகக்
காணுமொரு பன்னிரண்டு கப்பலமைத் தில்லமெல்லா
நீணிதி வெற்பாக நிரப்பினோன் – காணிகளாய்ப்
பண்டுள்ள பின்னீட்டப் பட்டவற்றி லெஞ்ஞான்றுந்
தண்டுறா தெய்துந் தனிவளத்தான் – றிண்டிறல்சேர்
காவலரும் வாழ்த்திக் கவினுறு நல்லாசனத்தின்
மேவவைத்துப் பாராட்டு மேதகையோன் – னேவர்களும்
பேணு முலகுடையாபிள்ளையார் கோவிலைமே
னாணினைவிற் பாலிய நாணாட்கொண்டோன் – சேணமர்வோ
ரன்னமடப் பூசிக்க வாயிழையார் வைகவுண்ண
வென்னமர போர்க்கு மியலிடங்க – டுன்னியிடச்
சாகர தீரத்துத் தட முல்லைத்தீவினெடி
தாகு மடமொன்றியற்றி யாயிடையி – னீகமொடு
பன்னந்தோ வாத படுகர்களுங் கூவல்களுந்
தென்னந்தோப் புந்தந்த சீராளன் – முன்னந்தோன்
நூரினிடைக் குளங்களோடைவகை கூவல்பல
நேரின் மடங்களி ணிரப்பினோன் – றாரவகத்
தைந்து முகனாறு முகத்தம்மான் புராணங்கள்
சந்ததமு மாய்ந்துருகுஞ் சால்பினோன் – சிந்தைசுடும்
வெய்ய சினங்கணமும் வேண்டாமென் றோங்குகுணச்
சையமிசை நின்றோர்க்குஞ் சாற்றினோ – னுய்யுநெறிப்
புண்ணியங்களெல்லாம் புரிந்து மவைதானொன்றும்
பண்ணினேனென்று சொலாப் பண்பினோ – னுண்ணெகிழ்வி
னாவலழுக் காறுவினை யத்தனைக்கு மூலமென
யாவருக்கு நாளு மினிதுரைத்தோன் – றீவளர்வின்
வெம்பசிமே லெய்தினுமவ் வேளை யலர்ந்தசுக
வம்புயப்போ தைச்சிரிக்கு மானனத்தா – னம்பிலந்தோ
ராவிருத்தர் பாலரநாதர் பி;;;;;;;ணியோர் துறந்தோர்
பாவைய ரென்றின்னோரைப் பாலித்தோ – னாவலுறத்
தென்புலத்தார் பாசனத்தார் தெய்வம் விருந்தினரை
யின்பு உலவாமற்புரந்த வீகையினான் – மன்புனையுங்
கூவல் குளங்கேணி மடங்கோவிலமைப் பார்பிறர்க்கும்
யுhவை யெனினும் பிறழாதீந்தவன்பன் – றாவகலும்
வேலை யெவற்றெவற்றும் வித்தகரு முண்ணாணச்
சாலவ வைமுழுதுந் தான்புரிந்தோன் – வேலையிடை
யாண்ட புரண்ட கப்பலற்றமற யந்திரத்தின்
மீண்டெழுமா செய்த விரகினோன் – சேண்டிகழு
மங்களவாரம் வெள்ளி வாரத்தி னொந்தாரை
யெங்குமெங்குங் கடயன்ன மீந்திட்டோன் – பொங்குமய
னேருங் கருப்பிலு முன்னின்றபடி யன்னமுடற்
கோர மறயார்க்குங் குழைந்தளித்தோ – னேரியலு
மாடை பலவு மளியொடு தீபாவலியில்
வாடுநர்க் கெல்லாமீந்த வண்மையினான்
னீடுசுவையான சுகநீர்ப்பந்த லாதீண்டு குற்றிவழி
மேனிழலார் தாருவிரவவைத்தோ – னீனமிலாச்
சத்திய மெய்ஞ்ஞானத்தகைய சிவமந்திரத்துச்
சித்தி யறாத செபத்தினா – னத்தியுரி
யண்டர்பிரான் கண்ணிலடைந்து பவங்கழுவுங்
கண்டிகை மாமாலைதிகழ் கந்தரத்தான் – பண்டைய
மும்மலமுஞ் சுட்டெரித்து முற்றுயிர்க்கு மோக்கவின்பச்
செம்மைதரு நீறொளிர் மெய்த்தேகினா – னம்மையருண்
மேலார் கதையமுத வெள்ள முறப்பருகிக்
காலாறா யாறொழுக்குங் கண்ணிணையான் – பாலாகு
மெத்தகையார் மாட்டு மிதைய நெகிழ்ந்துரைக்குந்
தித்திப் பறாததண்ணென் றேமொழியா – னெத்திசையுஞ்
சொற் பெரியதம்பியெனத் தொன்றுதொட்ட காரணமா
நற்பெயரே யாகு நவிலநின்றோன் – மற்பொலிதோட்
கோலவரிச் சந்திரனாங் கோமானோ டுண்மைக்கு
ஞாலமித ரேதரமாய் நாட்டவுற்றோன் – மேலறன்சே
யேய்ந்த பொறைய னெனும்பேர் புனைந்துரையா
வாய்ந்தெதிர் நல்லோர்புகலற் காம்பொறையன் – வாய்ந்தபுகழ்
துன்னு திருத்தொண்டத் தொகைப் பதிகத்தான்றவர்கண்
முன்னிருந்தாற் சேர்க்கு முறைத்தொண்டன் – பின்னவரப்
பாலுமடிச் சார்ந்தவெனப் பன்னியுள மெய்க்குழுவிற்
கோலமுதற் றொண்டனெனக் கொள்ளநின்றோன் – வாலியசீர்
மேத்தியவான் சைவநெறி மெய்கண்டோர் பூத்தினந்தூ
யாத்தனென வேத்தியிடு மற்புதத்தோன் – சூர்த்தவிட
மையுலாங் கண்டன் மணிக்கோவிற் றொண்டுஞற்றி
வெய்யிலாற் கன்றியிடு மெய்யினான் – மையலற
வேன்ற வடக்காமரம் வைத்தேற்ற கல்லுத்தூண் சுமந்து
தோன் றுதிரக்காயமறாத் தோட்டுணையா – னான்றவன்
பினென்;றும் பெருங்கல்லினங்கள் புரட்டித்தகர்த்துக்
கன்றுந் தழும்பு கிளர் கைம்மலரான் – குன்றரிய
செல்வவுடை வேடங்கடீர்ந்து திறற் கூலியாட்
கொல்வதுடுத்துத் தொண்டுஞற்றினோன் – சில்வரிய
வண்டாலு மாலைமுடி மன்னவரோர் மூவர்களுங்
கண்டாலு முட்கிக் கருத்தயர – விண்டாவிக்
கானடர்ந்து நீண்டகன்ற கற்பாறை வன்னிலத்தை
மானமறாக் கூலிவினை மாக்களொடு – தானுமொரு
கூலித் தலைவனாய்க் கோரமுறும் வெய்யில்பனி
யாலித் திறத்துக் கயராமன் – மேலைக்க
ணாற்றிவைத்த நல்லவினை யாங்கெதிர்ந்து நன்றூக்கக்
கூற்றுதைத் தான் றுய்யவருள் கூட்டிவிடத் – தேற்றமுட
னாறாமல் வேலை யகோராத் திரம்புரிந்து
மாறா மருதநில மாண்பாக்கி – நூறான்றேர்
சிற்பர்களைச் சோதிடரைச் செய்ய குரவர்களை
யற்புடன் கூய்க் கோவிற் கடியிட்டுப் – பொற்பு
பெறச்செய்து முடித்துத் திருக்கூவல் வீதிமதி
லெய்து பிறவு மினிதமைத்து – மெய்தழுவ
வெண்ணுஞ் சுபானுவினி லேற்றி லிருபத்தேழின்
மண்ணுறுமா னந்தவனமென்னும் – புண்ணியமார்
காசிலிங்கந் தாபித்துக் காணு மபிஷேகமுடன்
பூசை வகையும் புரிவித்துக் – காசினியில்
வந்தவர வொக்க மகோற்சவமுஞ் செய்வித்து
முந்து பரமானந்த மூழ்கினோன் – கந்தியுடன்
வாழைசுவைக் கன்னல்கிளர்மா மாதுளம்வருக்கை
தாழை பிறவுந் தழைக்கவைத்தோன் – சூழமலர்
சாருமணி நந்தன வனத்தை விண்ணவர்காப்
பாருமிது வென்றெவரும் பண்ணவைத்தோன் – மாரி முன்னோன்
கோவிற்கிலந் திருத்திக் குன்றாவதிபதியாய்
மேவிப் புரந்த விதியினோன் – றீவியதே
னிஞ்சி பற்பஞ் சிந்தூர மெண்ணெயொடு மாத்திரைக
ணெஞ்சுவந்து நோய்க்கு நெடிதளித்தோன் – விஞ்சியசீர்த்
தென்னிலங்கைக்கோ விந்தியாவுக்குந் தாதாவா
யன்னையாய் வீற்றிருந்த வாக்கத்;தா – னன்னயஞ்செய்
திங்கிருந்த வாண்டோ ரெழுபதினு முற்றகவாய்ப்
பிங்கலன்போ லுற்ற பெரும்பிரபு – துங்கமிகுஞ்
சீலத் துணைவர்மக்கள் செல்வமுதல் யாவினுந்தன்
போலத் திகழமகிழ் பூத்திருந்தோன் – சாலுநிதி
மாணிமிருஞ் சைவம் வழிவழியா யோம்பிவரு
மேணிமிருந் தொல்குடிச்சீ ரேற்றத்தான் – பூணுமுந்நூல்
வேதியரில் லங்களினு மேலாஞ் சுசிகுலவி
மாதுகிள ரின்ப மனைச்;சிறப்போன் – சோதியயிற்
சேந்தனுக் குள்ளான திருவேங்கடாசலப்பேர்
வாய்ந்த சனக மகராஜன் – பாந்தடலைத்
தாங்குசக வாழ்வைத் தணந்து சுகவாழ்வடைந்தா
னோங்கு சிவபுரத்தி லுற்று.

கலித்துறை

திருகற்ற சிந்தைத் திருவேங்கடாசலச் செல்வன்பொற்பூந்
தருகற் பகத்தனி நாட்டினைக்காத்தருள் சண்முகத்தெம்
முருகற் பயந்தவன் கோவிலுக்காக முழுமனத்தி
னொருகற் றகர்த்ததற் குப்போது மோமுற் றுலகமுமே. (1)

ஏதுசெய்தான் புண்ணியம் வேங்கடாசல வேந்தலென்போர்
சாதுக ளல்லர் தவத்தின ரல்லர் மெய்ச்சைவரல்லர்
காதுகண் ணற்றழுக் காற்றழன் மூளக் கருத்துநொந்து
தீது நினைந்தறஞ் செய்வாரை யௌ;ளுந் திருடர்களே. (2)

பனித்தாழ் தரங்கம் பரவை யுடுத்த படியவர்க்கு
நுனித்தா யிரஞ்சொல்ல வேண்டுவதோ செம்பொனோன்கிரியைக்
குனித்தானை யேத்துந் திருவேங்கடாசலக் கோனிங்கில
னினித்தான் றெரிந்திடு நல்லோரில்லாத விருந்துயரே. (3)

பெரியாரென் றேவரு மேத்துஞ் சிறப்புப் பெயரதனுக்
குரியாரை வல்வைத் திருவேங்கடாசல வுத்தமரைத்
தெரியா தவருள ரோவுள ரேலவர் செய்யகதிர்
விரியா தவனையுந் தாந்தெரி யாரெனு மேதினியே. (4)

அற்பமுற் றாலும் பொருளெவர் மாட்டிலு மாழியெனத்
தற்ப நிரம்பிடு மேசற்று மன்னது சார்ந்திலது
வெற்பன செல்வத் திருவேங்கடாசல வேந்தனிடைக்
கற்பக லாப்பெரி யாரெனு முண்மைக்குக் காட்டொன்றிதே. (5)

வெள்ளத் திரவியம் பெற்றுஞ் செருக்கற்ற மேன்மையையோ
வள்ளற் றகைமையை யோவேங்க டாசல மாபிரபு
கொள்ளைக் கருணையையோ குறையாத குணக்குன்றையோ
வுள்ளப் பொறுமையை யோபெரி தென்ன வுரைப்பதுவே. (6)

வென்று புலனைந்துந் தீர்ந்தார்க்குங் கோபம் விடுநெறியை
நன்று தெரிக்குந் திருவேங்கடாசல நம்பிபொன்னார்
மன்று ணடிக்குஞ் சிவபெருமான் பொன் மலரடிக்கீ
ழென்று மிருக்க விறந்தா னெனச் சொல்வதென்னுலகே. (7)

மடங்காட்டு மம்பொற் சிவாலயங் காட்டும் வனசமலர்த்
தடங்காட்டுங் காட்டிடுங் கடவல்கள் காட்டுஞ் சலப்பந்தர்கள்
படங்காட்டும் பன்னக வேணிப் பிரானைப் பணிந்துநெஞ்சி
னிடங்காட்டும் பத்தித் திருவேங்கடாசல வேந்தலையே. (8)

பேர்செய்த புண்ணிய மெல்லாஞ்செய் தான்பொற் பிறங்கலினை
நேர்செய்த மாநிதி பெற்றுஞ் செருக்கினை நீங்கிநின்றான்
கார்செய்த வண்கைத் திருவேங்கடாசலக் காவலன்போ
லார்செய்தனர் புண்ணியஞ்செய் தடங்க வருந்தவமே. (9)

எண்ணிய வெண்ணிய யாவர்க்கு மீந்திடு மீகையுட
னண்ணிய செல்வத் திருவேங்கடாசல நம்பியவ
மண்ணியல் சைவத் தமிழ்நாடு தோறும் வழங்கிவந்த
புண்ணிய முற்றுற மாண்ட தென்றாய்ந்து புகலுதுமே. (10)

தேவி னுணர்த்த முடியவொண் ணாதெனிற் செந்தமிழோர்
பாவி னுணர்த்த முடியவற் றோவெண் பருப்பதநேர்
சேவி லிவருஞ் சிவனம்மை யோடு திகழ்ந்திடும்பொற்
கோவி லுணர்த்துந் திருவேங்கடாசலக் கோன்றன்மையே. (11)

துறந்தார் பரவும் பொறைவேங்க டாசலத் தூயனைப்போற்
பிறந்தாரு மில்லை யறத்தொகை யாவையும் பேணச்செய்து
சிறந்தாரு மில்லைச் சுகபோக நெஞ்சுறத் தேங்கநுகர்ந்
திறந்தாரு மில்லை யிதுபோற் பெருந்தவம் யார்க்குள்ளதே. (12)

மேதா வியர்பர வும்வேங்கடாசல வேந்தனரன்
பாதார விந்த நிழலின்ப மேவிடப் பல்லுயிர்;தாந்
தாதா வெனவுமெய்த் தாதை யெனவுந் தகுங்கருணை
மாதா வெனவு மினியாரை யேத்து மனமகிழ்ந்தே. (13)

தாமங்கொண் டார்சடைச் சங்கர னாலையந் தன்னுடைய
வேமங்கொண் டாற்றியமால் வேங்கடாசல னென்ற திரு
நாமங்கொண் டான்முயன் மாதவந் தான்முன்னை நாளில் வைப்புச்
சேமங்கொண் டாலையஞ் செய்தர் தவத்தினிற் சீர்பெற்றதே. (14)

கற்றார் கவிபுனையும் வேங்கடாசலக் காவலனுட்
பற்றாய் முயலு முயற்சிக்கெல் லாமுடன் பாடெய்திய
பெற்றாரை யில்லுக் கினியாளை மக்களைப் பின்னவரை
யுற்றாரை யுற்றது மந்நாட்டவத்தி லொருதவமே. (15)

இலங்கா புரமெனுஞ் சிங்கார வேம விரவிமுடித்
துலங்கா டகமணித் தூண்டா விளக்கெனச் சொல்லுவமோ
தலங்கா முறுமிரு கைப்பாரி சாத தருவென்பமோ
விலங்காத வாய்மைத் திருவேங்கடாசல வேந்தனையே. (16)

தரவுக் கொச்சகக் கலிப்பா

தக்கசிவ பத்தி தழைந்த பொறைமுதலா
மிக்ககுணம் புண்ணியங்கண் மெய் வேங்கடாசலனோ
டொக்கவுடன்; சங்கரனாரூர் புகத்தன்னந்தனியாப்
புக்கனனென் றாரோ புகன்றார் புலமிலரே. (1)

வெண்ணீ றழியாத மெய் வேங்கடசலமா
லெண்ணீடு சங்கரனூ ரெய்தவரு மூரெல்லா
முண்ணீடு துன்பினா லோவென்றழ நிறைந்த
கண்ணீரே மாசு கழுவிடுமா றானதுவே. (2)

மெய்வேர்வை யற்று விழியிருளற் றச்சமொரீஇ
யைவே தனையற் றருள் வேங்கடாசலமால்
செவ்வேல னத்தன் சிவபுரத்து வாழ்வடைந்தா
னெவ்வேலையும் புண்ணியம்புரிந்த பேறிதுவே. (3)

ஆங்காரங் கோப மழுக்காறின் னாமொழிதாந்
தீங்காவ வென்றெவர்க்குந் தேற்றியக மும்புறமு
நீங்காத சுத்த நிலைநின்ற நின்பெருமை
யீங்கா ரறியா ரெழில் வேங்கடாசலனே. (4)

தாயையொத்த நின்னிற்; றழைத்திருந்த பல்லுயிர்கள்
பேயையொத்து வாடுவதுன் பேரருளுக் கேற்றதுவோ
வேயையொத்த தோளுமையாண்; மென்முலைப்பாலுண்ட செவ்வாய்ச்
சேயைவத்த சித்தத் திருவேங்கடாசலனே. (5)

உள்ளும் புறமு மொருங்கொத்து வெங்கபடக்
கள்ளம் படையாக் கன வேங்கடாசலனே
வெள்ளம் படர்சடையோன் மெய்க்கணங்க ணின்னெதிர்ந்துன்
றெள்ளும் புகழ்பரவிச் செங்கைதொழீஇச் சூழ்ந்தனரோ. (6)

கண்ணருணோக் கான்மந்த காசத்தாற் காமர்முகத்
தண்ணளியா லின்மொழியாற் றாழ்நடையால் வான்கொடையால்
மண்ணகமுற் றாண்ட வர வேங்கடாசலன்போல்
விண்ணவரை யோகியரை வேறுளரைக் கேட்டிலமே. (7)

மக்கட் டுணைவர் மனை மற்றெவருஞ் சூழ்ந்தேங்கி
யொக்க வழும்போது முளங்கலக்க மெய்தாமற்
பக்குவமாந் துய்யவருட் பாத்தேனீ யார்ந்தது தான்
தக்கதெனக் கண்டேந் தனி வேங்கடாசலனே. (8)

பாரியருண் மக்கடுணைப் பாலார் கிளைகடமை
நாரியலுஞ் சேம்பிலையி னாரமெனக் கொள்ளலையே
லாரியனே மாவேங்க டாசலனே நின்னுடைய
பேரியலுஞ் செல்வமெலாம் பிஞ்ஞகனுக் கீயாயே. (9)

தாடலைக் கூட்டந்தெரிந்தோர் தம்முளம்வாழ் சங்கரனா
ராடலைப்பா ராட்டு மருள்வேங்க டாசலன்போ
னீடலைக்கார் கோணிலத்து நேயமுற்றெம் போலியர்கள்
பாடலைக்கேட் டார்தான் பரிசிலினி யீவாரே. (10)

ஆசிரியவிருத்தம்

உரையேறு பரசிவப் பிரணீத நிகமாக
மோக்தமெய்ச் சைவசமையத்
துயர்வேறு பதிபாச பசுலட் சணத்திற
முளங்கொளவி னாயயோகி
விரையேறு நந்தன வனங்கூவல் கேணிகுளம்
விதியேறு மடமாலயம்
விழைவுறத் தந்தவதி பிரபல்ய மாராஜன்
விரிவுறுஷா மாபூஷணன்
திரையேறு பரவைக் கணித்துறு சிவேதையிற்
றிகழ்வல்வை நகரவாசன்
றிருவேங்க டாசலப் பெரியதம் பிப்பெயர்த்
தீனரட் சகதயாளு
தரையேறு சாதுசன சங்கமேத் தும்புகழ்
சமாப்தமு மளந்துபுகலச்
சதுர்முகப் பிரமற்கு மரிதெனி லியற்கவிஞர்
சாற்றவெழு மாறென்னையே.

தேசத்தின் குரல் பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை

tselvan and bala_swiss_20_02_05_01லண்டனில் புதன்கிழமை, 20 டிசெம்பர் 2006 நடைபெற்ற “தேசத்தின் குரல்” பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே தமிழீழத் தாயகத்திலிருந்து செய்மதியூடாக சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை:

ஈழத்தின் சுயமரியாதைச் சுடரொளியை அணையாமல் பாதுகாத்தவர் என பாலா அண்ணனுக்கு அவர் வழங்கிய கௌரவம் மொத்த தமிழினத்தின் சுயமரியாதை எது என்பதை உலகறிய வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதையிட்டு நாம் நிறைவடைகிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அகிலம் எங்கும் பரந்திருக்கும் தமிழினத்திற்கு சுதந்திர தமிழீழத்தைச் சுட்டிநின்ற கலங்கரை விளக்கொன்றை நாம் இழந்துவிட்டோம். இழப்பின் ஆறாத சுவடை தாங்கி உலகத் தமிழினமே துயரக்கடலில் மூழ்கியுள்ளது. விடுதலை இயக்கம் என்ற பெரும் குடும்பத்தின் மூத்த தலைமகனான “தேசத்தின் குரல்” பாலா அண்ணாவின் இழப்பு என்பது எவராலும் நம்ப முடியாததும் இலகுவில் ஏற்றுக்கொள்ள முடியாததுமே.

தனக்குச் சாவு நிகழப்போகும் தருணம் அறிந்திருந்தும் இம்மியளவும் கலக்கமின்றி தயக்கமின்றி இறுதிவரை உறுதியோடு இலட்சியம் பேசியவர் பாலா அண்ணா. “சாவைச் சந்திப்பதற்கு மனிதன் துணிய வேண்டும், அந்தத் துணிவிலும் தெளிவிலும் விழிப்பிலுமே மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக்கப்படுகிறது, நிறைவானதாக்கப்படுகிறது” என தானே குறிப்பிட்டதற்கு அமைவாக பாலா அண்ணா வாழ்வை அர்த்தமுள்ளதாக்கினார். அவரது தெளிவிலும் விழிப்பிலும் சுதந்திர தமிழீழம் நோக்கிய பாதை சுடர்விட்டுப் பிரகாசித்தது. எமது இனத்துடன், இனத்துயர் துடைக்க எழுந்த புரட்சிகர அமைப்புடனும் அதன் தலைமையுடனும் பின்னிப் பிணைந்த அவருடைய வாழ்க்கையும் தத்துவ விசாரணைகளும் விடுதலை பற்றிய புதிய அர்த்தத்தை உலகுக்கு எடுத்தியம்பியது.

எமது தேசியத் தலைவருடன் பாலா அண்ணைக்கு ஏற்பட்ட உறவு தமிழ்த் தேசிய விடுதலைத் தேரின் சக்கரங்களில் ஒன்றாகி அது உலகு எங்கெனும் உலவிவர பேருதவி புரிந்தது. அந்த விடுதலைப் பயணத்தில் சக பயணியாகவும் அவர் வீற்றிருந்தார். தேசியத் தலைவரின் உற்ற நண்பனாக, விடுதலை அமைப்பின் மூத்த அரசியல் ஆசானாக புதிய உலக ஒழுங்கிற்கு ஏற்ப தாயகத்திலே எமது தலைமையினால் எடுக்கப்படும் இராஜதந்திர திருப்புமுனைகள் நிரம்பிய முடிவுகளை அரசியல் விற்பன்னத்துடனும் சாணக்கியத்துடனும் நெறிப்படுத்தி வெளிக்கொணரும் இராஜதந்திரியாக அவர் விளங்கினார். பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட பாலா அண்ணாவின் உறவை “காலத்தால் கனிந்து வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு” என்கிறார் தேசியத் தலைவர்.

எமது விடுதலைப் போராட்டம் அதனது புற அகக் காரணிகளினால் வனையப்பட்டு ஆயுதப் போராட்டமாக உருவெடுத்த காலத்தில் பாலா அண்ணா தன்னையும் இந்தப் போராட்டத்தில் பங்காளி ஆக்கினார். மேலைத்தேச, கீழைத்தேச தத்துவங்கள், மானுட வளர்ச்சி பற்றியதான ஆய்வு உலகிற்கும் தனது இன விடுதலைப் போராட்ட களத்திற்குமிடையே எதனைத் தேர்வு செய்வது என்ற நிலை வந்தபோது கேள்விகளின்றியே இன விடுதலையை பற்றிக் கொண்டார். அத்துடன் தெளிவான அரசியல் தரிசனமும் உருப்படியான செயற் திட்டமும் இல்லாத அப்போதைய தமிழ் தலைவர்களின் வீண் போக்கினால் தனது இனத்தின் உயரிய அபிலாசைகள், மானுட விழுமியங்கள் சிதைக்கப்படுவதை அவர் பொறுத்துக் கொள்ளவில்லை. மூன்று தசாப்தத்திற்கு மேலாக பயனின்றி கடைப்பிடித்து வந்த சாத்வீக அரசியல் அணுகுமுறை சாத்தியமற்றது என்பதனை உணர்ந்து அதனையே சகலருக்கும் உணரச் செய்து, ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சிகர இயக்கத்திற்கு துணையாகி நின்றார். இதுவே காலத்தினால் கனிந்து வந்த உறவு என்கிறார் எமது தேசியத் தலைவர்.

விடுதலைப் புலிகள் அமைப்பானது தமிழீழ மக்களின் சுதந்திர இயக்கம். தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு உயிர்மூச்சாகவும் உந்து சக்தியாகவும் அது செயற்பட்டு வருகின்றது. ஒரு தேச விடுதலை இயக்கம் என்ற ரீதியில் ஒரு அரசியல் சக்தியாகவும், அதேவேளை ஒரு வலுமிக்க போரியல் சக்தியாகவும் விடுதலைப் போரை முன்னெடுத்து வருகின்றது. ஒரு உறுதியான கட்டுப்பாடு மிக்க தலைமை, ஒரு தெளிவான நீதியான அரசியல் இலட்சியம். நீண்டகால வளர்ச்சியில் முதிர்ச்சி பெற்ற போராட்ட வரலாற்று அனுபவம், பரந்துபட்ட பொதுசனத்தின் பலமிக்க ஆதரவு இத்தனை பண்புகளையும் உடையது எமது விடுதலை இயக்கம் என முத்தாய்ப்பு வைத்ததுடன் அதனை சர்வதேசத்திற்கும் எடுத்துச் சொல்வதில் பாலா அண்ணா அயராது இயங்கினார். அதற்காக இறுதி மூச்சுவரை அவர் உழைத்தார்.

விவாத அரங்குகள், பேருரைகள், பேச்சுவார்த்தை மேசைகள், சர்வதேச மாநாட்டு அரங்குகள் என எங்கும் பாலா அண்ணையினது திண்மையான குரல் ஓங்கி ஒலித்திருக்கின்றது. அத்தனையும் எமது இனத்தின ஆன்ம வலிகளைப் பற்றியதாகவே ஒலித்தன. விடுதலை இயக்கங்களையும், விடுதலைப் போராட்டங்களையும் அவற்றின் தன்மையுணராது பயங்கரவாதம் என பச்சை குத்திப் பார்க்க முயலும் கொடூரமான உலகமொன்றை எதிர்த்து அவர் போராடினார். அந்தப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை போராடினார். தமிழரின் தேசிய இன விடுதலையின் அவசியம் பற்றியும் அதற்கான நீதியான போராட்ட வழிமுறை பற்றியும் அதன் நியாயத்தன்மை பற்றியும் ஓயும் வரை அவரது வாய் உரைத்துக் கொண்டேயிருந்தது.

விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்ற ஆரம்ப காலம் தொட்டு எமது தேசியத் தலைவரோடு கூடியிருந்து அனைத்து சோதனைகளையும் வலிகளையும் தாங்கி, சவால்களுக்கும் சங்கடங்களுக்கும் முகங்கொடுத்து செயற்பட்ட பாலா அண்ணாவின் பிரிவு உலகத் தமிழினத்தையே கலங்க வைத்திருக்கின்றது. அவரது பிரிவின் துயர் சர்வ உலகிற்கும் ஏற்படுத்தியிருக்கும் வேதனை அவர் வரித்துக்கொண்ட இலட்சியத்தின் பாற்பட்டதாகும். அவர் நேசித்த நெறிப்படுத்திய இன விடுதலை என்ற காலக்கனியே உலகத் தமிழினத்தின் வேண்டுகையாகவும் இருக்கின்றது. பூமிப் பந்தின் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் கேட்கும் துயர மொழிகள் பாலா அண்ணையின் ஆத்ம தரிசனமான “தமிழீழ விடுதலை” என்பதனையே உரைத்து உறுதிப்படுத்தி நிற்கின்றது. அன்னாரின் மறைவு குறித்து கேட்கின்ற அத்தனை குரல்களும் தமிழின விடுதலைக்கான குரல்களே என்பதனை மறுப்பதற்கு எவருமில்லை. அவர் மீதான நேசிப்பு என்பது அவருடைய நேசிப்புக்கள் மீதானவையே. அந்த வகையில் பிரிவு குறித்து அகிலம் எழுப்பிய குரல்கள் துயரக் கடலிலே மூழ்கியிருக்கும் எம்மக்களுக்கும் மண்ணுக்கும் பெரும் ஆறுதலுக்கும் உற்சாகத்திற்கும் வழி காட்டியிருக்கின்றது.

bala praba tselvan

அந்த வகையில் மதிப்புக்குரிய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தேசத்தின் குரலுக்கு தனது இரங்கல் செய்தியை முதலில் தெரிவித்திருந்தார். தாய்த் தமிழகத்திலிருந்து உடனேயே ஒலித்த அவர் குரலுக்கு எமது அமைப்பின் சார்பில், தேசியத் தலைமையின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஈழத்தின் சுயமரியாதைச் சுடரொளியை அணையாமல் பாதுகாத்தவர் என பாலா அண்ணனுக்கு அவர் வழங்கிய கௌரவம் மொத்த தமிழினத்தின் சுயமரியாதை எது என்பதை உலகறிய வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதையிட்டு நாம் நிறைவடைகிறோம். தமிழகத்திலிருந்து அனுதாபங்களைத் தெரிவித்த ஏனைய தமிழக தலைவர்களுக்கும், தமிழினப் பற்றாளர்களுக்கும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கும், கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், ஏனைய கலைஞர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறிலங்காவிலிருந்து “தேசத்தின் குரல்” பாலா அண்ணாவின் மறைவுக்கு அனுதாபங்களைத் தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும், தமிழ் விடுதலைப் பற்றாளர்களுக்கும் எமது அமைப்பினதும் தலைமையினதும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

எமது இன விடுதலையை மூச்சாகக் கொண்ட பாலா அண்ணனின் இழப்புக் குறித்து கவலை தெரிவித்த நோர்வே நாட்டினுடைய தூதுவர்களுக்கும், அமைச்சர்களுக்கும். அரசியல் பிரமுகர்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும். “அன்ரன் பாலசிங்கம் என்ற மனிதர் உண்மைக்காக உழைத்தவர். எப்போதும் உண்மையே பேசியவர். எந்தக் காரணத்திற்காகவும் அவர் பொய் கூறியதில்லை” என கௌரவ அமைச்சர் எரிக் சூல்கெய்ம் அனுதாபச் செய்தி வழங்கினார். அவர் குறிப்பிட்ட பாலா அண்ணணின் உண்மைக்கான உழைப்பு என்பது தமிழீழ விடுதலைக்கானதே. உண்மையான நீதியான நியாயமான கோரிக்கைகளோடு சுதந்திரத்திற்காக போராடும் ஒரு போராட்ட அமைப்பின் தலைமகனாக பாலா அண்ணன் இருந்திருக்கிறார் என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பது அவரின் அத்ம தாகத்திற்கு நிச்சயம் நீர் வார்க்கும்.

“தேசத்தின் குரல்” பாலா அண்ணையின் மறைவு குறித்து துயரக்குரல் எழுப்பிய உலகத் தமிழினத்திற்கு எமது அமைப்பினதும் தேசியத் தலைமையினதும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் இலட்சியமான உரிமைப் போராட்டத்திற்கு பின்னால் உலகத் தமிழினமே அணிதிரண்டு ஒருங்கிணைந்து எழுப்பிய குரலாக இது சர்வதேசமும் ஒலிக்குமென நம்புகின்றோம். தமிழ் தேசிய விடுதலை ஒன்றே உலகத் தமிழினத்தின் ஏகோபித்த அபிலாசை என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ளும். தேசத்தின் குரல் பாலா அண்ணையின் ஆத்ம தரிசிப்பு மிக விரைவில் நிறைவேறும்.

“தேசத்தின் குரல்” பாலா அண்ணையின் பின்னால் எல்லாமுமாக நின்ற உழைத்து இன்று அவரது பிரிவினால் துயருற்றிருக்கும் அடேல் அன்ரி அவர்களோடு எமது கவலைகளை பகிர்ந்துகொள்கிறோம். பாலாண்ணையின் நீண்ட தேசப்பணிக்கு பலமாகவும் இயங்கு சக்தியாகவும் இருந்தவர் இவரே. உடலின் நோயுடனேயே உலவிய தேசத்தின் குரலுக்கு நல்ல துணைவி என்பதற்கப்பால் ஒரு தாதியாகவும், தாயாகவும் இருந்து கவனித்தவர் அவர். இன்று நேறறு என்றில்லாமல் மூன்று தசாப்த காலமும் விடுதலைப் பணிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றியவர். தனது இலட்சிய புருசனாக பாலா அண்ணாவை அடைந்து உலகியல் வாழ்வியல் அனுபவங்களை தத்துவங்களில் தோய்த்து பருகும் பெரும் பேறு பெற்ற அடேல் அன்ரிக்கு எமது தேசத்தின் சார்பாகவும் தலைமையின் சார்பாகவும் ஆறுதலையும் பெரு நன்றியையும் செலுத்தும் பொறுப்புமிக்கவராகின்றோம். தொடர்ந்தும் எமது விடுதலைப் பயணத்தை தலை மகன், தேசத்தின் குரலின் ஆசீர்வதிப்புடன் முன்னெடுப்போம்.

நன்றி

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.

 

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வீரவரலாறு- காணொளிகள்

Anton balasingam

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவில்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவில்

தேசத்தின் குரல் தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு –  தேசியத் தலைவரின் அறிக்கை


தலைமைச்செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
2006-12-14

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது. துரதிஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம்பெற்றுள்ள எமது விடுதலைப்போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.

பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம்புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்துகொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது.

பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல்உபாதைகளால் வருந்தியபோதும், தளர்ந்துபோகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.

எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.

ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து தேசத்தின் குரல் என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்

***
Pictures-தேசத்தின் குரல்/anton balasingam

****

வீரவரலாறு காணொளி

  1. மரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல்
  2.  வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் அன்ரன் பாலசிங்கம்
  3. என்றும் ஒளி வீசும் தத்துவ விளக்கு! வழிகாட்டிய விழிச்சுடர் அன்ரன் பாலசிங்கம்!
  4. “தேசியத்தின் குரல்” கலாநிதி அன்டன் பாலசிங்கம் 4ம் ஆண்டு வீரவணக்கம்
  5. சபைகளை வென்ற சாணக்கியன் தேசத்தின் குரல் -புதுவையின் குரலில்
  6. இன்றைய தருணத்தில் தேவைப்படுகின்ற ‘தேசத்தின் குரல்’
  7. தேசத்தின் குரலுக்கு வீர வணக்கம்

—————————————————-

 Dr. Balasingham Last Speech at Alexandra Palace London

 

பாலா அண்ணா!

மூன்று தசாப்தங்களாக எங்களின் இலக்குக்கும் சர்வதேச செல்நெறிக்கும் இடையேயான இடைவெளியில் போர்புரிந்த போர் வீரன் பாலா அண்ணா போய்விட்டார்!

தமிழீழ விடுதலைப் போரின் மொழிக்கும் – சர்வதேச உறவாடலுக்கும் வடிவம் கொடுத்த தேசியதலைவர் பிரபாகரனின் மூத்த தோழன் பாலா அண்ணாவை சாவு பிரித்துவிட்டது!

தன்னுடலால் அழிந்து – அழியாத தமிழீழ விடுதலை வரலாற்றில் பாலா அண்ணா இடம்பிடித்துவிட்டார்.

சாவும் – இழப்பும் தமிழீழ மக்களின் சமகால வரலாற்றில் செறிவான தினசரி நிகழ்வாகியுள்ள போதும் இந்த மனிதரின் சாவு இதயத்தினுள் ஒரு இடைவெளியினை ஏற்படுத்துகின்றது.

மூன்று தசாப்தங்களாக எங்கள் தேசிய விடுதலை இலட்சியத்திற்கு உழைத்தவர்!
மூன்று தசாப்தங்களாக எங்கள் தேசியத்தின் குரலாகப் பேசியவர்!
மூன்று தசாப்தங்களாக எங்கள் தலைவரின் சகாவாக வாழ்ந்தவர்!
மூன்று தசாப்தங்களாக எங்களின் இலக்குக்கும் சர்வதேச செல்நெறிக்கும் இடையேயான இடைவெளியில் போர்புரிந்தவர்!
மூன்று தசாப்தங்களாக எழுத்தால் எங்களை புதுப்பித்தவர்!
மூன்று தசாப்தங்களாக பேச்சால் எங்களை உயிர்ப்பித்தவர்!

இந்தகைய மூன்று தாசாப்த சரித்திரத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை எங்களிமிருந்து இயற்கை பறித்த உண்மையை ஏற்றுக் கொள்ள இதயம் தயங்குகின்றது.

தமிழர் விடுதலைப் போரிற்கு பாலா அண்ணரின் பங்களிப்பு என்ன என்ற கேள்வி அர்த்தமற்றது. ஏனெனில் அவர் விடுதலைப் போரிற்குள் முழுமையாக வாழந்தவர் என்பதில் அனைத்துமே அடங்கிவிடுகின்றது. ஆனாலும்;, பாலா அண்ணா என்றால் அவரது ஆழமான எழுத்தும் – நிறைவான பேச்சுமே எங்கள் நினைவில் பதிவாகியுள்ளது.

தமிழர் விடுதலை இயக்கத்தின் தத்துவப் பேராசானாக அனைவராலும் அவர் மதிக்கப்பட்டார். தமிழீழ தேசிய விடுதலை தொடர்பாக 1970களில் எழுத ஆரம்பித்தார். தேசிய சுயநிர்ணய உரிமை தொடர்பான அனைத்துலக விவாதப் தேடலுக்குள் தமிழீழ விடுதலையின் நியாயங்களை இணைத்து விவாதித்தார். தமிழீழ விடுதலைப் போரின் நியாயங்களுக்குள் நிலவிய உலக முற்போக்கு விசையின் கூறுகளை எடுத்து விளக்கினார் சிங்கள அடக்குமுறையினுள் பொதிந்து கிடந்த வெறுக்கத்தக்க பெருந்தேசியவாத இருளை சுட்டிக்காட்டினார்.

தனது இயல்பான – செழுமையான அரசியல் மொழியூடாக போராளிகளையும், மக்களையும் தேசத்தையும் அரசியல் வழியில் பயிற்றுவித்தார். தேசிய மாவீரர் நாளில் தேசிய தலைவர் ஆற்றும் உரையின் விரிவாக்கவுரையை சுமார் 5 வருடங்களாக தொடர்ந்து இலண்டனில் மேற்கொண்ட போது மற்றுமொரு புதிய தளத்திற்கு புலிகள் இயக்கத்தின் புலத்து அரசியல் தொடர்பாடலை நகர்த்தினாhர்.

விடுதலைப் போராட்ட அரசியலும், சர்வதேச இராஐதந்திரத்திற்கும் இடையேயுள்ள இடைவெளியினை அளந்து – அளந்து கடந்து செல்ல பாலா அண்ணா கடுமையாக உழைத்தார்.

அமெரிக்க வெளிவிவகார பிரதியமைச்சர் றிச்சட் ஆமிர்ரெஐ;, பிரித்தானிய சர்வதேச உதவிகளுக்கான அமைச்சர் உட்பட பலர் முன்னே நோர்வே ஒஸ்லோ கொடைவழங்கும் நாடுகளுக்கான சிறப்பு மாநாட்டில் பாலா அண்ணாவின் இந்த சூட்சுமத்தின் அளவீடு வெளிப்படையாவே இருந்தது. சிங்களம் எங்களுக்கு ஏற்படுத்திய பேரழிவை அவர் பட்டியலிட்டு, விடுதலைப் போரின் நியாயங்களையும், தர்க்க விளக்கங்களையும் இராஐதந்திர வரம்புகளை மீறாது பாலா அண்ணா வெளிப்படுத்திய போது அது வரலாற்றில் எமக்கான குரலாகவும் – மைல்கல்லாக அமைந்தது.

பாலா அண்ணாவின் பயணத்தில் எதிர்ப்பட்ட முக்கிய பதிவுகள் தமிழீழ விடுதலையின் முக்கிய பதிவுகளாகவும் உள்ளன.

திம்புவில் இந்தியா தனது நலன்களை மட்டும் பேச முயன்ற போது எதிர்த்து நின்று தமிழீழ மக்களின் நியாயத்தினைப் பேசிய குற்றத்திற்காகப் புலிகளை தண்டிக்க விரும்பிய இந்திய மத்தியஅரசு 1985ல் பாலா அண்ணரை நாடு கடத்தியது.

இந்தியா இராணுவத்தின் கோரப் பிடியில் தமிழீழ தேசம் தள்ளாடிய போது சிறீலங்காவுடன் புலிகள் மேற்கொண்ட சாதுரியமான இராஐதந்திர ஆட்டத்தினை நேர்த்தியாக முன்னெடுத்து – 1990ல் இந்தியாவினை நேரடியான இராணுவ முரண்பாட்டிலிருந்து விலக்கிய நுட்பமான நடவடிக்கையிலும் பாலா அண்ணார் இருந்தார்.

பின்னர் சந்திரிகா அம்மையார் சர்வதேச சக்திகளின் ஆதரவுடன் நடாத்திய போர் தோற்ற போது, தமிழர்கள் ஈட்டிய வெற்றியிலிருந்து அதே சர்வதேச சக்திகளுடனான தொடர்பாடலை பாலா அண்ணா 2002 முதல் மேற்கொண்டார். கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஏற்றுக்கொள்ளும் சர்வதேச ஏற்றுக்கொள்கையுடன் கூடிய போர்நிறுத்த உடன்பாட்டினை புலிகள் தரப்பில் நின்று வரைவதில் பாலா அண்ணாவின் பங்கே முக்கியமாகவிருந்தது இருந்தது என முன்னாள் சனதிபதி சந்திரிகா முதல் விமல்வீரவம்ச வரை குத்திமுழங்கும் போது பாலா அண்ணரின் இயல்பான நக்கல் சிரிப்பில் ஒரு வியூக சிந்தனை இருந்தது.

பாலா அண்ணா வெறுமனே அரசியல் சிந்தனைகளை மட்டும் கொண்ட விடுதலைப் போரளியல்ல. அவர் மனித வாழ்வின் பல்வேறு வி;டயங்களையும் அலசிப் பேசும் அலாதியான சிந்தனையாளன். இந்திய சிந்தனையாளர் கிருஸ்ணமூர்த்தி தொட்டு பலவித வாழ்வியல் சிந்தனையாளர்களைப் பற்றிப் பேசினார் – எழுதினார். சிறந்த இலக்கியங்களைப் வாசித்தார் – விவாதித்தார். கவிதைகளை இரசித்தார். நிறைய புதியபுதிய எழுத்துக்களை வாசித்து காலத்துடன் தன்னைப் புதுப்பித்து – நடைபயில வைத்தார்.

தனக்கு சாவு நிச்சயம் என்பதை உணர்ந்த காலத்தில் கூட அவர் மக்களிற்கு இன்னமும் விடிவு கிட்டவில்லையே என்கின்ற ஏக்கத்துடன்தான் நாள்களை கடத்தினார். இறப்பதற்கு முன்னர் பாலா அண்ணர் தனது மரணத்தை பின்வருமாறு வர்ணித்தார்: ‘’18000 மேற்பட்ட போராளிகளினை சந்திக்கும் பயணத்தில் உள்ளேன்’’

இன்று எங்கள் மாவீரர்கள் பாலா அண்ணரை ஆரத்தழுவி வரவேற்று அவரது சிந்தனை அனுபவங்களை அவருக்கேயுரிய செழுமையான மொழியில் கேட்கையில் நாங்கள் அவரது மரணம் தந்த துன்பத்தினுள் வெறுமையாகி நிற்கின்றோம்.

பாலா அண்ணாவின் வாழ்வும் – தேடலும் சத்தியவேட்கை நிரம்பியது. மக்களையும் – மண்ணையும் நேசித்த மனிதனின் தேடலாகவும் வாழ்வாகவும் அது இருந்தது. அந்த மக்களின் வாழ்வை மீட்பதும் வாழ்விப்பதுதே பாலா அண்ணரின் இறுதி நினைவுக்கு நாங்கள் செய்யும் நினைவு வணக்கமாக இருக்கட்டும்.

பாலா அண்ணா! – Nathan, Geneva, 14 December 2006

———————–

தேசத்தின் குரல் இரங்கல் செய்திகள்

வீரவணக்கம்: மார்கழி மாதம் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். டிசம்பர் மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

31-12-2008 பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் வீரவணக்கம்

31-12-2008 அன்று கிளிநொச்சி மற்றும் பரந்தன் இறுதிச் சண்டைகளின் போது . தற்காப்பு அணிகளை நிறுத்தியே சண்டை நடந்தது . இந்த தற்காப்பு சண்டையின் போது கடந்த 31 ஆம் திகதி பரந்தன் பகுதியில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ஈழப்பிரியன் வீரகாவியம் ஆனார் .

***

30.12.2000 லெப்.கேணல் நம்பியின் வீரவணக்க நாள்

மணலாறு கோட்டத்தில் 30.12.2000 அன்று தவறுதலாக இடம்பெற்ற வெடி விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் நம்பி (துசி) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

*****

28.12.1994 -தளபதி லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்

28.12.1994 அன்று பூமாஞ்சோலை படைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட போராளிகள்

**

26.12.2007-லெப்.கேணல் நிலவன் வீரவணக்கம்

கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப்.கேணல் நிலவன் அவர்களின்  வீரவணக்க நாள் (26.12.2007)

ஆறடி உயரம், ஒருமுறை பார்த்தால் மறுமுறை பேசத் தூண்டும் எடுப்பான தோற்றம். கள்ளம் கபடமற்ற அவன் சிரிப்பு. அரசியல் தெளிவு மிக்க அவன் பேச்சு, படையியல் காய் நகர்த்தலில் அவனுக்கிருந்த திறன், மக்களுக்குள் இறங்கி அவர்களின் வாழ்வியலை உயர்த்த அவன் உழைத்த உழைப்பு என எல்லாவற்றிலும் என்றும் மறக்க முடியாத ஒருவன் தான் நிலவன்.

***

25 .12.2005மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் வீரவணக்கம்

நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மனைவியுட்பட மேலும் எழுவர் காயமடைந்தனர். இவர் தீவிர விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று அறியப்படுபவர்

***

24.12.1987 எம்.ஜி. இராமச்சந்திரன் நினைவு நாள்

தமிழக முதல்வர் எம்ஜிஆருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே இருந்த பிணைப்பு மற்றும் ஈழப் போராட்டத்துக்கு எம்ஜிஆர் அளித்த நிபந்தனையற்ற வெளிப்படையான ஆதரவு போன்றவை உலகமறிந்தது.

**

 24. 12. 1997 லெப்.கேணல் அப்பையா அண்ணை வீரவணக்கம்


எமது இயக்கத்தின் மூத்த அங்கத்தவர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது இன்றுவரை எமது தேசம் தவித்திருந்தது.

****

22.11.2006 நாட்டுப்பற்றாளர் வி.நவரத்தினம் வீரவணக்கம்


வி.நவரத்தினம் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” விருது தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 22.11.2006அன்று இழந்துவிட்டது. அமரர் வி. நவரத்தினம் அவர்கள் அற்புதமான இலட்சியவாதியாகத் திகழ்ந்தார். தான் அணைத்துக்கொண்ட இலட்சியத்திற்காக நூற்றாண்டொன்று முழுவதும் தனது வாழ்வை அர்ப்பணித்தார்.

***

16.12.2011 நாட்டுப்பற்றாளர் அன்டனி பிரான்சிஸ் சந்தியோகு

https://i0.wp.com/www.sangathie.com/uploads/images/2011/12/Mama%20New%20Big.jpg

30 வருடங்களுக்கும் மேலாக தாயக விடுதலைப் போராட்டத்திற்கு தனது முழு அர்ப்பணிப்பையும் கொடுத்தவர் தான் காலஞ்சென்ற ஊடக இல்லத் தலைவர் நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் சந்தியோகு.ஒவ்வொரு கணமும் தாயக சிந்தனையோடு விடுதலை உணர்வோடு சொல்லுக்கு முன்னர் செயலில் தனது தாயக கடமையை காட்டிய உயிர் இன்று துயில் கொள்கின்றது.

*****

 15.12.2011

15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் திருச்சியில் தீக்குளித்து ஈகைச்சாவடைந்தார்.

*****

14.12.2006 தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்  நினைவில்

எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.

லெப்.கேணல் முரளி உட்பட்ட 18 மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்

 

14.12.1999 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதியில் ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முரளி உட்பட்ட 14 மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு இன்றாகும்.

*****

13.12.1999  லெப்.கேணல் சிவமோகன் உட்பட்ட 15 மாவீரர்களின் வீரவணக்க நாள்

13.12.1999 அன்று ஓயாத அலைகள் 3 தொடர் நடவடிக்கையின் போது யாழ். குடா நாட்டில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சிவமோகன் உட்பட்ட 14 வீரவேங்கைளின்  நினைவு நாள் இன்றாகும்.

***

12.12.1999-“ஓயாத அலைகள் – 3” நடவடிக்கையில் காவியமான லெப். கேணல் குமணன் உட்பட்ட 10 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள்

12.12.1999 அன்று ஒயாத அலைகள் – 3 நடவடிக்கையின்போது பூநகரி, இயக்கச்சி, வடமராட்சி ஒல்லன்காடு மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய பகுதிகளில் 10 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

Lt.Col.Kumanan

 

****

11.12.2001லெப்.கேணல் மனோஜ் வீரவணக்க நாள்

பாலத்தோப்பூர் சிறிலங்கா படை முகாம் தாக்குதலில் லெப்.கேணல் மனோஜ் (பாலசிங்கம் வந்தகுமார் – உவர்மலை. திருகோணமலை), மேஜர் குமாரவேல் (செல்வராசா ஆனந்தன் – மாமாங்கம், மட்டக்களப்பு), லெப். கலைமதி (செல்வநாயகம் தர்சினி – மூதூர், திருகோணமலை). 2ம் லெப்.தேவன் (கென்றி செபஸ்ரியான் – மூதூர், திருகோணமலை) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

லெப்.கேணல் மறவனின் 8ம் ஆண்டு நினைவு நாள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சாவினை அணைத்துக் கொண்ட கடற்புலிகளின் முதன்மை உறுப்பினரான லெப்.கேணல் மறவன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

11.12.2004 அன்று முல்லை மாவட்டத்தில் சுகவீனம் காரணமாக லெப்.கேணல் மறவன் (எலியாஸ்பிள்ளை ஸ்ரனிலோஸ் – தாழையடி, யாழ்ப்பாணம்)

என்ற போராளி சாவினை அணைத்துக் கொண்டார்.

***

10.12.1988 -யாழ். மாவட்டத் தளபதி லெப்.கேணல் மதியின் 24ம் ஆண்டு நினைவு நாள்

திருநெல்வேலிப் பகுதியில் இந்தியப் படையினரின் சுற்றிவளைப்பின்போது தன்னைத்தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட யாழ். மாவட்டத் தளபதி லெப்.கேணல் மதியின் 24ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

10.12.1988 அன்று யாழ். திருநெல்வேலிப் பகுதியில் இந்தியப் படையினர் மற்றும் தேசவிரோதிகளால் சுற்றிவளைக்கப்பட்டபோது தன்னைத்தானே சுட்டு யாழ்.மாவட்டத் தளபதி லெப்.கேணல் மதி (சுப்பிரமணியம் பாலச்சந்திரன் – மல்லாகம், யாழ்ப்பாணம்)
என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

***

08.12.1999முல்லைக் கடலில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்

08.12.1999 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக கடற்புலிகள் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகினை இடைமறித்து மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் கார்வண்ணன், மேஜர் யாழ்வேந்தன், மேஜர் இசைக்கோன் மற்றும் கப்டன் கானவன் ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

***

06.12.2001 -தளபதி லெப்.கேணல் எழிலவன் வீரவணக்க நாள்

03.12.2007லெப்.கேணல் வரதன்

03.12.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் வரதன்(றொனி/சாமி) அவர்களின் வீரவணக்க நாள்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். மார்கழி மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

 

Up ↑