Search

Eelamaravar

Eelamaravar

Month

November 2012

தமிழர்களுக்கு இனி தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும் சொன்னது பிரபாகரன் அல்ல.

வேலுப்பிள்ளை பிரபாகரன் –தமிழீழம் என்றொரு பிரதேசம் (26.11.2012)

“தமிழர்களுக்கு இனி தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும்” என்று தீர்மானமாய் சொன்னது பிரபாகரன் அல்ல.

இதன் வித்து இலங்கை என்ற நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவானது. தமிழர்களில் முதல் தலைமுறை தலைவரான அருணாச்சலம் உருவாக்கியது ஆகும்.

அவர் தனி ஈழம் என்று தான் தொடக்கத்தில் சொன்னார். அதுவே தமிழீழம் என்று பின்னால் மாறியது.

அருணாச்சலம் படித்தவர், பண்பாளர், சட்ட மேதை ஆனால் வெகுஜன ஆதரவு பூஜ்யம். அவர் வாழ்ந்த வாழ்க்கை முழுக்க கொழும்புவிலும் மேல்தட்டு மக்களுடன் இருந்த காரணத்தால் கடைசி வரைக்கும் மக்கள் ஆதரவென்பது அவருக்கு எட்டாக்கனியாக இருந்தது. இறுதியில் அவர் கொள்கைகளும் கொலையாகி வெகுஜன ஆதரவு இல்லாமல் மறைந்தும் போனது.

அருணாச்சலம் முதன் முதலாக உருவாக்கிய இலங்கை தேசிய காங்கிரஸ் சிங்களர்களின் கைக்கு போன போதே அச்சத்துடன் எதிர்காலத்தில் இனி சிங்களர்களுடன் தமிழினம் சேர்ந்து வாழ முடியாது என்றார். அப்போது இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு கால் நூற்றாண்டு காலம் இருந்தது. அவராலும் முடியாமல் அவர் சகோதரர் இராமநாதன் முயற்சியும் தோல்வியாகி கைகள் மாறி கடைசியில் 1972 ஆம் ஆண்டில் செல்வநாயகம் மனம் நொந்து போய் சொல்லும் அளவிற்கு வந்து நின்றது. இதையே பிரபாகரன் உரத்துச் சொன்ன போது மற்றவர்களால் வினோதமாக பார்க்கப்பட்டது.

சர்வதேச அரசியல் புரியாமல் இதென்ன அடம் என்பதாக இன்று வரைக்கும் பேசப்படுகிறது. அருணாச்சலம் புத்தியால் ஜெயிக்க முடியாமல் செல்வநாயகம் சக்தியாலும் வெல்ல முடியாமல் கடைசியில் பிரபாகரன் பலத்தாலும் வெல்ல முடியாமல் கலவரங்களும், யுத்தங்களும் தொடர்ச்சியாக வந்து மொத்த தமிழர்களின் உயிரும் உடைமையும் இழந்து இன்று நாங்களும் வாழ்ந்தால் போதும் என்கிற அளவிற்கு வந்து நிற்கின்றது.

இதுவே இன்று இலங்கையில் உயிர்பிழைத்தவர்கள் நான் தமிழர் என்று சொல்ல பயந்து வாழும் நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. தொடக்க காலத்தில் அருணாச்சலமும், இவர் சகோதரர் இராமநாதனும் எழுதியுள்ள புத்தகங்கள் தமிழர்களுக்கு மட்டுமல்ல இன்று வரைக்கும் சிங்களர்களுக்கே பாடபுத்தகங்கள்.

சிங்களர்களுக்கு அரசியலை கற்றுக்கொடுத்தவர்கள் மறைந்து கிடைத்து இருக்க வேண்டிய மரியாதையின்றி இறந்தும் போனார்கள்.

இவர்களிடம் கற்று கொண்ட மாணவர்கள் ஆட்சியாளர்களாகவும் மாறி சிங்கள இனவாதத்தின் ராஜாவாகவும் மாறிப் போனது சரித்திர ஆச்சரியங்கள்.

தங்களுக்கு சிறப்பாக கற்றுக்கொடுத்தவர்களின் பெயர்களை இன்று அவலமாய் வந்து நின்ற தமிழர்களுக்கு உருவாக்கப்பட்ட திறந்த வெளி முகாம்க்கு சூட்டப்படும் நன்றிக்கடனையையும் தீர்த்துள்ளார்கள். வாழ்ந்து சென்ற தமிழ் தலைவர்களின் அதிர்ஷ்டம் அவ்வளவு தான்.

அருணாச்சலம் முகாம், இராமநாதன் முகாம், ஆனந்த குமாரசாமி முகாம் என்று உருவாக்கப்பட்டது. மொத்த இலங்கை மக்களும் நினைவில் கொள்ளத்தக்க வகையில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கைப் பெயர்கள் இன்று நிர்க்கதியாய் நிற்பவர்கள் வாழ்க்கை உதவியாய் உள்ளது என்பது பெரும் சரித்திர சோகம்.

பிரபாகரன் இவர்களைப் போல படித்தவரோ, பட்டம் வாங்கியவரோ அல்லது புத்தகங்கள் எழுதியவரோ அல்ல. அத்தி பூத்தாற் போல கொடுத்த ஊடக பேட்டிகளும் வருடந்தோறும் உரையாற்றிய மாவீரர் தின பேச்சுகளுமே அவரைப் பற்றி அவரின் கொள்கைகளையும் நம்மால் ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடியும்.

போர் வெறியர்,மன நோயாளி,புதிய தலைமுறைக்கு பயங்கரவாதத்தை கற்றுக்கொடுத்தவர், உலகத்திற்கு மனித வெடிகுண்டு என்பதை அறிமுகம் செய்தவர் என்று சொல்லப்படுவரின் நியாய வாதங்கள் எதுவும் இன்று எவர் காதிலும் போய் விழாது.

பிரபாகரன் செய்த சாதனைகள் ஒவ்வொன்றும் இவருக்கு முந்தைய தலைமுறை தலைவர்கள் எவரும் செய்யாதது மட்டுமல்ல. நினைத்தே பார்க்க முடியாதது.

அவர்கள் ஜனநாயகம் காட்டிய வழியில் சென்று தங்களை நம்பியிருந்த வழிகாட்டாமல் மறைந்தவர்கள். இவரோ தான் கொண்ட கொள்கை சரி என்று நம்பி அதையே செய்தும் காட்டியவர். தன்னுடைய தன்னம்பிக்கை மட்டுமே வழி காட்டும் என்று கடைசிவரையிலும் கொண்ட கொள்கையில் பிடிவாதமாய் உறுதியாய் நின்றவர்

அரசியல் தெரியாதவர் என்று சொல்லப்படுபவர்கள் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளை படித்துப் பார்த்தாலே அவர் தன் வாழ்நாளில் நம்பிக்கைகளும், அவமானங்களுக்கும் இடையே போராடிப் பார்த்த அத்தனை நிகழ்வுகளையும் நமக்கு புரியவைக்கும். பிரபாகரன் உருவாக்கிய தமிழீழத்தின் சமூக கட்டமைப்பு வெளி உலகத்தால் அதிகம் பார்க்கப்படாத பார்வைகள்.,

நான்கு புறமும் நீர் என்பதான தீவில் எட்டு புறமும் எதிரிகளாக இருந்தவர்களுடன் வாழ்ந்தவர் உருவாக்கிய ஒவ்வொன்றும் கடைசியில் அவரைப் போலவே இன்று கேள்விக்குறியாய் சூன்யத்தில் நிற்கிறது?

1985 ஆம் ஆண்டு தமிழர் புனர்வாழ்வு கழகம் தொடங்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலைமைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கும், சொந்த இடங்களை விட்டு விட்டு வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கும், அகதி முகாமில் ஆதரவற்று இருந்தவர்களுக்கும், தற்காலிக குடிசைகளிலும் இருந்தவர்களை இனம் கண்டு அவர்களை அரவணைத்து வாழ்க்கை கொடுப்பது இதன் கடமையாக இருந்தது. இதன் உருவாக்கத்திறகு முன்னதாக புலிகளின் ஊடகப்பிரிவு செயல்படத் தொடங்கியது.

முதலில் வானொலியில் ஆரம்பித்து இறுதியில் தொலைக்காட்சி சேவை வரைக்கும் கொண்டு வந்தார்கள். மிகுதியான பால் உணர்வை தூண்டும் காட்சிகளை தணிக்கை செய்யப்பட்டு அத்துடன் செய்தி அறிக்கைகள், நடப்பு நிகழ்வுகளை துல்லியமாக காட்டும் அளவிற்கு கடைசி வரைக்கும் தொடர்ந்து தமிழீழத்தில் ஒலிபரப்பு சேவை நடத்தப்பட்டது. இந்திய அமைதிப்படை உள்ளே நுழைந்த போது முதலில் தாக்கப்பட்டது இந்த வானொலி சேவையே ஆகும்.

யுத்தத்தினால் பெற்றோரை, பாதுகாவலர்களை இழந்த பெண் பிள்ளைகளின் பராமரிப்புக்காக செஞ்சோலை சிறுவர் இல்லம். 1991 இல் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து போரில் பெற்றோரை இழந்த ஆண் பிள்ளைகளை பாதுகாக்க 1993 ஆம் ஆண்டு. காந்த ரூபன் அறிவுச்சோலை தொடங்கப்பட்டது. வெற்றிமனை என்ற அமைப்பின் மூலம் நடந்த போர்கள் மூலம் கண் முன்னால் உறவுகளை பறி கொடுத்து அடைந்த மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மனநிலை பாதிக்கப்பட்ட வர்களுக்கும் உயரிய சிகிச்சை அளித்து அவர்களை பராமரித்து மறுவாழ்வு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

மூதாளர் பேணகம் என்ற அமைப்பின் மூலம் போரினால் தமது பிள்கைளை இழந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட முதியோரையும், சொந்த பந்தம் இல்லாமல் இருப்பவர்களையும், உறவினர்கள் இருந்தும் கைவிடப்பட்ட முதியோர்களையும் பாதுகாக்க உருவாக்கப்பட்டது 1992 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பின் மூலம் தமிழர்களின் தமிழ் மொழியையும் அழிந்து கொண்டுருக்கும் கலை மற்றும் பண்பாடுகளையும் மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்டது.

தியாகி திலீபன் மருத்துவ சேவையின் மூலம் அரசாங்கம் உருவாக்கிய தடைகளை மீறி ஒவ்வொரு கால கட்டத்திலும் உருவாக்கிய மருத்துவமனைகள் மூலம் அத்யாவஸ்யமான மருந்துப் பொருட்களை வரவழைத்தும், பயிற்சியளிக்கப்பட்ட போராளிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. தமிழீழ படைத்துறைப் பள்ளியின் மூலம் வளர்ந்து கொண்டுருக்கும் இளையர் கூட்டம் போரினால் அவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது.

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகமும், இதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு தமிழீழ சட்டக் கல்லூரி உருவாக்கப்பட்டது. இதே ஆண்டில் பொதுக்கல்வி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களைப் பாராட்டி வருடந்தோறும் பரிசு வழங்க தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை தொடங்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு தமிழீழத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக வேளாண்மையும் கைத்தொழிலையும் உருவாக்கி சிறப்பானவர்களுக்கு பரிசு கொடுத்து சிறப்பிக்க உருவாக்கப்பட்டது. .

மக்களின் வங்கி சேவைக்காக தமிழீழ வைப்பகம் சட்டத் தேவைகளுக்காக தமிழீழ நீதி நிர்வாகத்துறை, நகர் நிர்வாகத்திற்காக தமிழீழ காவல் துறை இது போக மாணவர்களுக்கென்று விளையாட்டுத் துறையும் தொடங்கப்பட்டது. மொத்தத்தில் தமிழீழ பகுதிகளில் வாழ்ந்த மக்களின் பொருளாதார சமூக கட்டமைப்புத் துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

பிரபாகரன் உரையாற்றிய மாவீரர் உரைகள் என்பது பல விதங்களில் பயன் உள்ளதாக இருந்தது. போரில் இறந்த வீரர்களுக்கு கௌரவம் செலுத்தும் விதமாக அதே சமயத்தில் தமிழ் மக்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கத்தையும், சர்வதேச சமூகத்திற்கு புலிகள் இயக்கம் விடுக்கும் கோரிக்கை என்பதாக பல தளங்களில் விவாதப் பொருளாக அணைவராலும் உற்று கவனிக்கக் கூடிய வகையில் இருந்தது.

பிரபாகரனின் நோக்கத்தையும் விருப்பத்தையும் தனிப்பட்ட கொள்கைகளையும் புரிந்து கொள்வதாகவும் இருந்தது.

சங்கர் இறந்த தினமாக நவம்பர் 27 என்பதை கணக்கில் கொண்டு மாவீரர் தினம் என்று உருவாக்கப்பட்டு முதன் முதலாக இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து கடைசிகட்ட உக்கிர தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது இனம் தெரியாத அடர்ந்த காட்டில் இருந்து கொண்டு உரையாற்றிய பிரபாகரனின் உரை என்பது 2008 வரைக்கும் 19 வருடங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அதே தினத்தில் ஒலிபரப்பப்பட்டது.

உலக ஊடகங்களும், உலகத்தமிழர்களும் ஏன் சிங்கள ஆட்சியாளர்களுமே இதை வைத்து தான் புலிகளின் அடுத்த கட்ட நகர்வை புரிந்து கொள்ளும் அளவிற்கு இருந்தது.

மொத்த 19 வருட உரைகளின் மூலம் நம்பிக்கைகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையே போராட்டங்களும், ஒவ்வொரு கால கட்டத்திலும் தான் மாறத் தயாராய் இருந்த போதும் மதிக்காத சிங்கள ஆட்சியாளர்களின் மேல் இருந்த அவநம்பிக்கையின் ஊசலாட்டத்தையும் நமக்கு பல விதமாக புரிய வைக்கின்றது. பிரபாகரன் முதல் மாவீரர் உரை தொடங்கிய போது புலிகளின் அதிகாரப்பூர்வமான இறந்தவர்களின் எண்ணிக்கை 1207 பேர்கள்.. இதுவே 19 வருடங்களுக்குப் பிறகு 17,903 பேர்கள் இறந்ததாக மாவீரர் தின உரையில் குறிப்பிட்டார்.

“ஓர் இனத்தை பொறுத்தவரையிலும் வீரர்களை, பெண்களை, அறிவாளிகளையும் மதிக்காத இனம் காட்டுமிராண்டியாக அழிந்து விடும். எமது இயக்கத்தில் இப்போது வீரர்களுக்கு பஞ்சமாக இருக்கிறது. எமது போராளிகளை நினைவு கூறும் தினத்தை ஒரே நாளில் வைப்பதால் வீரச்சாவு அடைந்த மேல்மட்ட தலைவர்கள் முதல் அடிப்படையான வீரர்களை வரை ஒரே மாதிரி நினைவு கொள்ளப்படுகிறார்கள். காலப்போக்கில் குறிப்பிட்ட சில சில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த மரியாதை சிலருக்கு மட்டும் போவதை தடுப்பதற்காக இதை வருடந்தோறும் கொண்டாடப் போகிறோம்.”

“நான் உயிருக்கு உயிராய் நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் விழ்ந்த போதெல்லாம் எனது இதய்ம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புகள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டி இருக்கின்றன”

“நாம் இனத்துவேசிகள் அல்லர். போர்வெறி கொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாவோ விரோதிகளாகவே கருதவில்லை. நாம் சிங்கள தேசத்தை அங்கீகரிக்கின்றோம். சிங்களப் பண்பாட்டை கௌரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில் அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை”.

“நாம் எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு தேசிய மக்களினம் என்ற அந்தஸ்துடன் நிம்தியாக சுதந்திரமாக கௌரவமாக வாழ விரும்புகிறோம். எம்மை நிம்மதியாக வாழவிடுங்கள் என்பது தான் எமது மக்களின் எளிமையான அரசியல் அபிலாஷைகள். இந்த நியாயமான நீதியான நாகரிகமான எமது மக்களின் வேண்டுகொளை சிங்கள அரசு எப்போது அங்கீகரிகரிக்கின்றதோ அப்போதுதான் ஒரு நிரந்தர சமாதானமும் தீர்வும் ஏற்பட வாய்ப்பு உண்டு.”

“ஆயுத பலத்தால் தமிழீனத்தை அடக்கி ஆள வேண்டும் என்றும், சிங்கள பௌத்த பேரின வாதத்தின் ஆதிக்க மனோநிலையில் சிறிதளவேனும் மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. இனத்துவேச அரசியல் சேற்றில் சிங்கள தேசம் மூழ்கிக் கிடக்கும் வரை தமிழரின் தேசிய அபிலாசைகள் பூர்த்தியாகது. நீதியான நியாயமான அரசியல் தீர்வை நாம் சிங்கள ஆளும் வார்க்கத்திடம் இருந்தது எதிர்பார்கக முடியாது.”

“மனித நீதி எனும் அச்சில் இவ்வுலகம் சுழவில்லை என்பதை நாம் அறிவோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கள் பக்கமுள்ள நியாயங்களை முன் வைக்கிறது. இவ்வுலகில் ஓழுங்கு அமைப்பை பொருளாதார மற்றும் வணிக நலன்களே தீர்மானிக்கின்றன. இன்றோ சார் நீதியிலோ மக்களின் உரிமை சார்ந்தோ நிற்கவில்லை.

நாடுகளுக்கிடையேயான சர்வதேச உறவுகளும் அரசியல் நெறிகளும் இத்தகைய நல்களைச் சார்ந்தே தீர்மானிக்கபடுகின்றன. எனவே எங்களது அறம் சார்ந்த நியாயங்கள் உடனடியாக சர்வதேச சமகத்தான் அங்கிகரிக்கபடும் என் எதிர் பார்க்க முடியாது. ஆனால் அதே நேரம் அந்த அங்கீகாரத்திற்காக போராடியே ஆக வேண்டும். உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.”

“சமாதானத்திற்கான போர் என்றும் தமிழரை விடுதலை செய்யும் படையெடுப்பு என்றும் பரப்புரை செய்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்புப் போர் தமிழரின் அமைதியக் குலைத்து தமிழரை அகதிகளாக்கி தமிழரை அடிமைகளாக்கி தமிழரின் சமூக பொருளாதார வாழ்வைச் சீரழித்து தமிழருக்கும் என்றுமில்லாத பெரும் அவலத்தை கொடுத்து இருக்கிறது.

சமாதானத் தத்துவம் பேசி உலகத்தை ஏமாற்றிய போதும் இது தமிழருக்கு எதிரான போர் என்பதை அரசு நடையில் காட்டியுள்ளது. இராணுவ ஆட்சி நடைபெறும் தமிழ் பகுதிகளில் மிக மோசமான ஒரு இன அழிப்புக் கொள்கை மறைமுகமாக செயற்படுகிறது என்பதையே இது காட்டுகிறது.”

“நாம் சமாதானத்திற்கான விரோதிகள் அல்லர். அன்றி சமாதான வழியில் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எதிரானவர்களும் அல்லர். தாம் வேண்டுவது உண்மையான சமாதானத்தையே. எமது மக்கள் எமது மண்ணில் நிம்மதியாக சுதந்திரமாக அந்நியத் தலையீட இன்றி அமைதியாக வாழ்ந்து தமிழ் அரசியல் வாழ்வைத் தாமே தீர்மானிக்ககூடிய உண்மையான கொளரவமான நிரந்தரமான சமாதானத்தையே நாம் விரும்புகின்றோம். இந்த சமாதான வாழ்க்வை தமிழருக்கு வழங்க சிங்கள பெயத்த பேரினவாத சக்திகள் இனங்குமா என்பது சந்தேகத்திற்கு உரியதே.”

“தமிழரின் தாயகம், தமிழரின் தேசியம், தமிழரின் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை அங்கீகரித்து அவற்றின் அடிப்படையில் ஒரு அரசியற் தீர்வுத் திட்டம் வகுப்பட வேண்டுமென்ற நாம் திம்புக் காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறோம்.”

“சிங்களம் ஒரு பெளத்த நாடு. அன்பையும் அறத்தையும் ஆன்மீக ஞானத்தையும் போதித்த காருணிய மகானை வழிபடும் தேசம். தர்மத்தின் தத்துவத்தில் தழைத்த பௌத்த சமகத்தில் இனக்குரோதமும் போர் வெறியும் விஸ்வரூபம் பெற்று நிற்பது எமக்கு வியப்பாக இருக்கிறது. தமிழர் தேசம் போதையும் வன்முறையையும் விரும்பவில்லை. அமைதி வழியில் அகிம்சை வழியில் தர்மத்தை வேண்டி நின்ற எமது மக்கள் மீது வன்முறைத் திணித்தவர்கள் யார்?

நாம் எமது உயிரையும் உடைமையும் பாதுகாக்க ஆயுதமேந்தி போராட வேண்டிய நிர்பபந்த சூழ்நிலையை உருவாக்கிய விட்டவர்கள் யார்? சிங்கள பௌத்த தீவிரவாதமே தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி தேச சுதந்திர போராட்டத்தில் குதிக்க வைத்தது.”

“ஆட்பலம், ஆயுதபலம், இராணுவ பலம், மக்கள் பலம் என்கிற ரீதியில் சகல பலத்தோடு நாம் வலுப்பெற்று நின்ற போதும் எமது தாயகத்தை மீட்டெடுக்கும் போதிய சக்தி இருந்த போதும் நாம் சமாதான பாதையை கைவிடவில்லை. உயிர் அழிவையும் இரத்தக் களரியையும் தவிர்த்து சமாதான வழியில் நாகரிகமான முறையில் தமிழரின் சிக்கலை தீர்ககவே நாம் விரும்புகிறோம்.”

“தமிழர் தாயகத்தில் அமைதி நிலை தோன்றினாலும் இயல்புநிலை தோன்றவில்லை. உயர் பாதுகாப்பு வளையங்கள் என்ற போர்வையில் எமது மக்களின் வாழ்விடங்களை சமூக பொருளாதர பண்பாட்டு மையங்களை சிங்கள ஆயுதப் படைகள் ஆக்கிரமித்து நிற்கின்றன. சிறிய அளவிலான புவியற் பரப்பில் குடிசன நெரிசலும் கொண்ட யாழ்பாணக் குடாநாட்டை 40 000 படைகள் ஆக்ரமித்து நிற்கின்றனர். எமது மக்கள் தமது இயல்பபு வாழ்க்கை நடத்த முடியாதவாறு மூச்சுத் திணறும் ஆக்கிரமிப்பு என்றுமே பதட்ட நிலையைத்தான உருவாக்குகின்றது.”.

“பேச்சு வார்த்தைகளின் தொடக்கத்திலேயே எமது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை ஆரம்பித்தலேயே தீர்த்து விட வேண்டும் என்பதே எங்கள் தலையாய கோரிக்ககை.”

“முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப் பிரச்சனை தொடர்கிறது. எமது பிரச்சினைக்குத் தீர்வு காண ஆளும் கட்சி முயற்சிப்பதும் எதிர்ககட்சி எதிர்பபதும் பின்பு எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக மாறி மீண்டு அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்த சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகிறது.”

“இடைக்கால தீர்வுமின்றி நிரந்தர தீர்வுமின்றி நிலையான அமைதியும் இல்லாமல் நிம்மதியான வாழ்வும் இன்றி நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்க முடியாது. சிங்கள தேசமானது தமிழனத்தை அரவணைத்து இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம் அரவணைத்து இணைத்து வாழவும் விருப்பமில்லை. அதே சமயம் பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை.

இரண்டுங் கெட்டான் நிலையில் வீடின்றி விடுதலையின்றி எதிர்காலச் சுபிட்சமின்றி சூனியமாக அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழ முடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லை கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்து விட்டோம்.”

“பண்டைய இதிகாசங்கள் புனைந்து விட்ட புரளிகளால் சிங்கள இனம் வழி தவறி சென்று கொண்டுருக்கிறது. தொடர்ந்தும் பேரினவாதச் சகதிக்குள் வீழ்ந்து கிடக்ககிறது. இதனால் சிங்கள பௌத்த பேரினவாதம் இன்றோரு தேசியச் சித்தாந்தமாக சிங்கள தேசத்தில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த கருத்தாக்கம் பாடசாலைகள் பல்கலைக்கழங்களில் இருந்தும் பத்திரிக்கை துறை வரை ஊடுருவி நிற்கிறது. மாணவர்களோ, புத்திஜீவிகளோ, எழுத்தாளர்களோ அரசியல்வாதிகளோ சுயமாகச் சிந்திக்க முடியாதபடி சிங்கள மூலத்தை இந்த கருத்தாக்கம் சிறைப்பிடித்து வைத்து இருக்கிறது. பௌத்த பேரினவாதக் கருத்துக்கள் சிங்கள மனிதனின் மன அமைப்பின் ஆழத்தில் அழியாத கோடுகளாக பொறித்து விடப்பட்டு இருக்கின்றன. இதனால் சிங்கள தேசம் போர் வெறி பிடித்து போர் முரசு கொட்டுகிறது.”

“பௌத்தம் ஒர் ஆழமான ஆன்மிகத் தரிசனம். அன்பையும் அறத்தையும் ஆசைகள் அற்ற பற்றற்ற வாழ்வையும் தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மிகத் தத்துவம். இந்த தார்மீக நெறியை 2000 ஆண்டுகளுக்கு மேல் கடைபிடிப்பதாக கூறிக்கொள்ளும் சிங்களம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இனவாத விசத்தினுள் மூழ்கிக் கிடக்கிறது. சிங்கள இனவாத விசம் இன்று மிருகத்தனமாக வன்முறையாகக் கோரத்தாண்வம் ஆடுகிறது.

60 ஆண்டுகளாக வன்முறையற்ற அகிம்ச வழியிலும் ஆயுதவழியிலும் தமிழர் நீதிகேட்ட சிங்கள உலகிலே சிறிதும் மனமாற்றம் நிகழவில்லை. எத்தனையோ இழப்புகள், அழிவுகள், எண்ணற்ற உயிர்பலிகள் நிகழ்ந்த போதும் சிங்கள தேசம் மனம் திருந்தவில்லை. இதற்கு சர்வதேச சமூகத்தின் பொருளாதார இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டு கொடுப்புகளும் ஒரு பக்கச் சார்பாக தலையீடுகளும் தான் காரணம்.”

“எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர் கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திரத்திற்காக போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.”

“எங்கள் காலத்தில் எங்கள் லட்சியத்தை அடைந்து விடுவோம் என்பதைவிட நியாயமான தீர்வுகள் எட்டப்படாதவரைக்கும் இந்த போராட்டம் அடுத்து வருபவர்கள் முன்னெடுத்து செல்வார்கள்.”

தமிழீழம் பிரபாகரன் கதையா? என்று நான் எழுதியதில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி இது.

வேலுப்பிள்ளை பிரபாகரன் பேசிய மாவீரர் உரைகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பட்ட கட்டுரை இது.

பிரபாரகன் குறித்து அவரின் தனிப்பட்ட கொள்கைகள் குறித்து கடந்து வந்து பாதைகளில் பெற்ற அனுபவங்களின் தொகுப்புக்கு இங்கே சொடுக்கவும்.

வருடந்தோறும் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த தினமான (26 நவம்பர்) இந்த நாளில் வெளியிடப்படும் மீள் பதிவு இது.

 ஜோதிஜி திருப்பூர்

உலகின் பல நாடுகளில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள் தொகுப்புக்கள்








உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள்

“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” -தலைவர் வே.பிரபாகரன்

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மயிரிழை வேகமெடுத்துள்ளது. சோகநதிகளாய் தமிழர் கண்ணீரும் சேர்ந்து பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஆறறோரத்து அகதிமுகாம்கள், வயல்மேட்டின் புற்றுப்பிட்டிகள், வீதியோரங்களென விரிந்திருக்கும் இடப்பெயர்வின் துயர வாழ்வுக்குள்ளும் ஏதோ ஒரு திடமான நம்பிக்கை…மாவீரர் நாள் வரலாறும் தேசியத் தலைவர் பிரபாகரனும்

“எங்களுருக்கு மீண்டும் செல்வோம்” “அந்த மகிழ்வான வாழ்வுகையில் கிட்டும்” “நாங்கள் கொடுத்திருக்கும் விலை கொஞ்சநஞ்சமல்ல.” “போட்ட முதலை செலவாய் எண்ணிவிட முடியாது அறுவடை எடுத்துத்தான் ஆகவேண்டுமென்ற கட்டாயம் எங்களுக்கு…” என்ற உண்ணத்து நம்பிக்கைகளும் உணர்வுகளும் எம்மை வலுவாகவே பற்றி நிற்கின்றன.

இந்தநிலையில் உணர்வுகளில் உறுதி ஏற்றிக்கொள்வதற்காய் எம்முன்னே விரிகிறது இன்றைய நாள் கார்த்திகை 27, மாவீரர்களுக்காய் எடுக்கப்படுகின்ற பெருவிழா அல்ல, அவர்கள் நினைவிடயங்களின் முன்னே உறுதி ஏற்றிக்கொள்கின்ற உன்னத நாள் எங்கள் நம்பிக்கைகளின் மகத்துவங்களாய் மண்ணில் உறங்கும் மானிட தெய்வங்களுடன் மனம்விட்டுப் பேசும் உயிர்ப்புநாள், இந்த நாளுக்காக இன்று தமிழர் மனங்கள் மனமுருகி நின்கின்றன.

மாவீரர் நினைவுகளை கார்த்திகைப் பூ அணிந்து நினைவுகூருவோம் (காணொளி)

சிங்களப் பேரினவாத இனமொன்றினால் அதன் அரச இயந்திரத்தாலும் சிறுபான்மைத் தமிழினம் அழிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தவிர்க்க முடியாத தெரிவாய் ஆயுதத்தைக் கொண்டு அழிப்பவனை அழிக்கும் எமது விடுதலைப்போராட்டம் தொடங்கியது. படைவளம், படைப்பலம் கொண்ட ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராய் ஒரு சில உணர்வுள்ள தமிழ் இளையோரால் தொடங்கப்பட்டதே இந்த விடுதலைப்போராட்டம், ஆட்பல ஆயுதப்பல ஒப்பீடுகளுக்கு அப்பால் எந்தவகைத் தியாகத்தையும் செய்யத்துணிந்தெழுந்த போராளிகளின் மனபலம் தனிப்பெரும் சக்தியாகவே தமிழரைக் காத்து நின்றது. அந்தக் காப்பு சகத்திகளின் சாட்சியாக 22000 இற்கு அதிக மாவீரர்களை இந்த மண்ணிலே விதைத்து இன்று உறுதிபெற்று நிற்கின்றோம்.[Maveerar%20008.jpg]

ஒவ்வொரு மாவீரரின் உயிர்த்தியாகமும் ஒரே இலட்சியத்தைக் கொண்டதெனினும் அவர்களின் தியாகவடிவங்கள் தனித்துவமானவை.”எனது மரணத்தின் பின்னால் இந்த மண் மகிழ்வான வாழ்வைப்பெறும் என்ற நம்பிக்கையில் போகிறேன்” என சொல்லிப்போன கரும் புலி மாவீரர்களினதும் “எனது வித்துடலைத் தாண்டித்தான் எதிரி எம் மண்ணை ஆக்கிரமிக்கமுடியும்” என இறுதிவரை உறுதியுடன் போரிட்டு வீழ்ந்த மாவீரர்களினதும், தாய் மண்ணின் இரகசியத்தைக் காப்பதற்காய் கடலிலும் தரையிலுமாக தம்மைத்தாமே மாய்த்துக்கொண்ட மாவீரர்களும் என மாவீரர்களின் தியாகப்பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை.

அந்த அத்தனை மாவீரர்களினதும் வீரச்சாவு நிகழ்ந்த நாட்களும் வேறுபாட்டவை. எனினும் ஓரே இலட்சியத்திற்காய் விதையாகிப்போன மாவீரர்களை நினைவுகொள்ள கார்த்திகை 27ஐ தெரிவுசெய்த சம்பவமும் எமது விடுதலைப்போராட்டத்தில் தனிப்பதிவாய் அமைந்தது.ஒரு சில போராளிகளாய் உருவாகி பரந்திருக்கின்ற எதிரிகளின் கண்களில் மண்ணைத் திருக்கின்ற எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவி போராட்டப் பாதையை செப்பனிட்ட காலமது. அந்தக் காலப்பகுதியில் தான் விடுதலைப்போரின் முதல் வித்தொன்று 1982.11.27 அன்று லெப்.சங்கராக வீழ்ந்தது.

[Maveerar%20Kallarai.jpg]

லெப்.சங்கரின் பின்னால் பலவடிவங்களில் மாவீரர்களின் தியாகப் பயணங்கள் பதிவாகி வருகின்றன. இலட்சியத்தில் மாற்றம்பெறுகின்ற எமது விடுதலைப்போரின் ஒவ்வொரு மாற்றங்களிலும் வித்தியாசமான தியாக வடிவங்கள் பிரசவித்திருக்கின்றன. 1987 ஆம் ஆண்டு யாழ்குடா வடமராட்சியை முற்றுமுழுதாய் ஆக்கிரமித்துவிடவேண்டுமென்ற துடிப்புடன் படைநடவடிக்கையை மூர்க்கமாக முன்னெடுத்த சிங்களப் படைகளுக்கு கரும்புலி கப்டன் மில்லர் நெல்லியடி மத்திய மகாவித்தியாலய படைமுகாமில் கொடுத்த கரும்புலித் தாக்குதல் அன்றைய கால சூழ்நிலையே மாற்றிப்போடும் அளவிற்கு வீரப்பதிவு ஒன்றை எமது போராட்டத்திற்கு தந்திருந்தது.

அந்த ஒரு மாவீரனின் உயிர்க்கொடை சிங்கள தேசத்தின் அத்தனை வீரிய இராணுவ மமதையையும் ஒரே நொடியில் அதலாபாதாளத்தில் வீழ்த்தியது. அந்த மாற்றத்தால் அப்போதைய ஜெ.ஆர்.அரசு இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றிற்கு செல்லவேண்டி கட்டாயம் வந்தது என்பது வரலாறு.

அதன்பின் இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஒன்று உருவாக அமைதிப்படை என்ற பேரில் இந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் வந்திறங்கியது. தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கு வழிகோலாத அந்த ஒப்பந்தம்குறித்தும், இங்குவந்திறங்கிய அமைதிப்படையின் சுயவடிவம் குறித்தும் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தியாகவேண்டிய தருணமது. அமைதிப்பேச்சுக்கள் உடன்பாடு நிர்ப்பந்தங்களென அமைந்த அந்த சூழலில் பொதிந்துகிடக்கும் பின்னிலை அபாயங்கள் தமிழ்மக்களுக்கு சாதகமற்றதாகவே இருந்தது.

[01122008%2002.jpg]

இந்நிலையில் இந்திய அரசின் உண்மைத்தோற்றத்தையும் தமிழீழ பகுதி எங்கும் ஆயுதங்களுகடன் குவிந்து கிடக்கும் இராணுவப் பிரசன்னத்தையும் வெளிச்சம் போட்டுக்காட்டும்தருணத்திற்காய் எமது ஆயுதம் தாங்கிய விடுதலைப்போராட்டம் அன்று அகிம்சைப் போராட்டம் ஒன்றை நடத்தவேண்டியதாயிற்று. நல்லூர் கந்தன் முன்றலில் லெப்.கேணல் திலீபன் தமிழ்மக்களின் பிரச்சினைத் தீர்விற்கான ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாநோன்பை தொடக்கினான்.

இலட்சக்கணக்கில் மக்கள் கண்ணீருடன் திரண்டிருந்த 12 நாட்கள் தொடர்ந்த அந்த அகிம்சைப் போருக்கு இந்தியா இறுதிவரை செவிசாய்க்கவில்லை. அந்த மக்கள் முன்னிலையிலேயே அந்த அகிம்சை நெருப்பு அணைந்துபோனது. ஆனால் தமிழர் மனங்களில் இலட்சிய நெருப்பு வேகமெடுத்தது. அந்தத் தியாக மரணம் எமது விடுதலைப்போராட்ட வீரர்கள், வல்லரசு ஒன்றுடன் பொருதும் மனஉறுதியை பெற்றுத்தந்தது. அச்சம்பவத்திற்குப் பின்னே இடம்பெற்ற இந்திய இராணுவத்துடனான மோதல் எமது விடுதலைப்போராட்டத்தின் முதல் பெண் மாவீரரை இந்த மண்ணில் விதையாக்கியது.

மாவீரர் நாள் வரலாறும் துயிலும் இல்லங்களும் தொகுப்பு காணொளி

பெண் அடிமைத்தனத்தில் கட்டுண்டு கிடந்த எமது சமூக அமைப்பிலிருந்து போராடும் திறன்கொண்ட வல்லமைபடைத்த பெண்களை உருவாக்கிய வரலாற்றுக்கு சான்றாய் 10.10.1987 அன்று இந்திய இராணுவத்துடனான மோதலின்போது 02 ஆம் லெப்.மாலதி என்ற முதல்பெண் மாவீரர் தன் உயிரை ஈந்து வரலாற்றில் பதிவானாள். இவ்வாறாக எமது மாவீரர்களின் வீர தியாகப் பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை, அந்தவகையில் தமீழ விடுதலைப்புலிகள் என்ற போராளிக்கட்டமைப்பிற்கு அப்பால் மக்கள் படைக்கட்டுமானத்தால் எழுச்சிகொணட, எல்லைப்படை , சிறப்பு எல்லைப்படை, போர் உதவிப்படை, துணைப்படை போன்றவற்றின் ஊடாகவும் எமதுவிடுதலைப்போராட்டத்தின் மாவீரர் பதிவுகள் நீள்கின்றன.

[Maveerar%20007.jpg]

அவை தவிர சிறப்புப்படை, காவல்துறை படைக@டாகவும் தமதுஉயிர்களைத் தியாகம் செய்து மாவீரர்களாய் உறங்கும் மகத்துவங்களையும் இந்த மண்பெற்றிருக்கிறது. இந்த அத்தனை மாவீரர்களுக்கும் தனிச் சிறப்பான பக்கங்கள் உண்டு. ஒவ்வொரு மாவீரர் குறித்த பதிவுகளையும் நாம் வரலாறாய் பார்கின்ற இச்சந்தர்ப்பத்தில் தாயகம் கடந்து எங்கெங்கோவெல்லாம் சென்று சாதனை படைத்துவிட்டு சரித்திரமாய் உறங்கும் முகம் காட்டா கரும்புலி மாவீரர்களின் தியாகங்கள்உச்சத்தைத் தொட்டு நிற்கின்றன.

சாதனைகளை மட்டுமே எமக்காய் சாற்றிவிட்டு சாதனைகளை மட்டுமே எமக்காய் சாற்றிவிட்டு சந்தனப்பேழையும் காணாது முகம்மறைத்து, முகவரி மறைத்து வெடியாகிப்போன அந்த மாவீரர்களின் தியாகம் பற்றியும் அவர்களின் உணர்வுகள் பற்றியும் யாரும் மதிப்பீடு செய்துவிட முடியாது.இவ்வாறாக இந்த மண்ணிற்காய் விதையாகிப்போன பல்லாயிரம் மாவீரர்களின் நினைவிடத்தின் முன்னின்று நாம் எதைப் பேசப்போகின்றோம்.

எதை நினைத்து சுடர் ஏற்றப்போகின்றோமென்ற கேள்விகளுக்கு விடைகாணவேண்டியவர்களாக நாமே உள்ளோம்இத்தனை விதைப்புகளுக்குமான அறுவடை எமக்கானது மட்டுமே. அந்த அறுவடையை நாம்தான் பெற்றாகவேண்டுமென்ற உறுதிப்பாடை ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் எடுத்தாகவேண்டும். இதுவே அந்த மாவீரர்களின் இலட்சியக்கனவை நிறைவேற்ற உதவும்.

ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு.

ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.

 

Thayaga Kanavudan Maaveerar day song-தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே

ஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கிடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழீழ மக்கள் மண்ணின் விடிவிற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை எழிற்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள் குடும்பத்தினரை போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டும், நடுகற்கள் நாட்டப்பட்டும் வழிபாடியற்றப்படுகின்றது.

மாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றிமதிப்பளிக்கப்படுகின்றனர்.

உலகிலே எங்குமே மாவீரர் நாள் நிகழ்வுகள் போல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள், அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ, நடைபெறுவதாகவோ வரலாறுகள் இல்லை.

மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்-மாவீரர் நாள் கையேடு

1989ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் நாளை மாவீரர் நாளாகவும் 1990ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள் வரை மாவீரர் எழுச்சியாகவும்(வாரமாகவும்) தமிழீழ மக்கள் எழுச்சி நிகழ்வாக நடைபெற்று வந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 1995ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25ஆம் நாள் முதல் 27ஆம் நாள்வரை மூன்று நாட்களில் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

மதிப்பிற்குரியவர்களே!  இங்கே விதைக்கப்பட்டிருப்பவைகள் எமது மண்ணின் வீரவித்துக்கள். உங்கள் பாதங்களை மெதுவாக பதியுங்கள்

“நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்…” Velupillai Pirabaharan on மாவீரர்


“1995ம் ஆண்டு யாழ்ப்பாண இடப்பெயர்வுக்குப் பின்னர் சிறிலங்காப்படையினர் இங்கே உறங்கிய எம் மாவீரச் செல்வங்களின் கல்லறைகளை சிதைத்து அழித்தனர். அந்த கல்லறைச் சிதைவுகள் இங்கே சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. சில நொடிப்பொழுதுகள் சிரம் தாழ்த்துவோம்.”

தேசியக் கொடிப்பாடல் காணொளி

மாவீரர் நாள் வரலாற்றுப் பதிவுகள்

  1. மாவீரர் நாள் கையேடு
  2. தமிழீழத்தின் முதல் வித்து லெப். சங்கர்-காணொளி
  3. தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் உரைகள் 1989 – 2008
  4. காவல் தெய்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் மாவீரர் வாரம்
  5. புதை குழியில் இருந்து புதிய விதைகுழிகளுக்கு சென்ற மாவீரர்கள்
  6. தேசியக் கொடிப்பாடல் காணொளி
  7. சிந்திய குருதி சந்ததிக்கானது- காணொளி
  8. தமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை
  9. விடுதலைப்புலிகள் பத்திரிகைகளின் தொகுப்பு
  10. சமர்க்களப் படபிடிப்பு நாயகர்கள் காணொளி
  11. மாவீரர் நாள் வரலாறும் துயிலும் இல்லங்களும் தொகுப்பு காணொளி
  12. அவர்களுக்கு என்ன சொல்லி வரப்போகின்றோம்!
  13. கனவுகளைச் சுமந்தவர்கள் வழியில் நடப்போம்…
  14. நமது மாவீரர்கள் நினைவாக ……..Fallen in the cause of the free‏
  15. மாவீரர்களின் கனவுகளை மனதோடு சுமந்திருப்போம்…
  16. கார்த்திகை மாதம் மாவீரர் காலம்
  17. கல்லறைகள் கருத்தரிக்கும் “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்”
  18. உலகத் தமிழர் வரலாற்றில் மாவீரர்கள்
  19. Tamil Eelam heroes memorial houses-துயிலும் இல்லங்கள்
  20. மாவீரர் துயிலும் இல்லங்களை மனங்களில் குடிவைப்போம் -காணொளி
  21. ஈழப் போராட்டத்தில் பெண் புலிகள்
  22. பொப்பி மலரும் காந்தள் மலரும் ஒரு நோக்கு!
  23. உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள்
  24. தமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்
  25. முதல் மாவீரர் 1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விபரம் காணொளி
  26. மாவீரர் நாள் வரலாறும் தேசியத் தலைவர் பிரபாகரனும் காணொளியில்
  27. மாவீரர் உலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்…..
  28. உரிமையோடு சுடரேற்றி உறுதிஎடுக்கும் மாவீரர் நாள்
  29. 31.10.2008 வரை வீரச்சாவைத்தழுவிகொண்ட மாவீரர் தொகை
  30. மாவீரர் நினைவுகளை கார்த்திகைப் பூ அணிந்து கனடாத் தமிழர் நினைவுகூரல் – காணொளி.
  31. இணையத்தில் மாவீரரை வழிபட மாவீரர் இல்லம்

தேசியத்தலைவரின் பிறந்த தின வாழ்த்து பதிவுகள், பாடல்கள்

காணொளிகள்

****
தமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் போராளியாக செயற்படுவதையிட்டுப் பெருமை அடைகிறேன்! -கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை, 27 November 2004

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கீழ் ஒரு போராளியாக, பொறுப்பாளராக, தளபதியாக இருந்து செயற்படுவதை இட்டு நான் பெருமை அடைகிறேன். தவறான கருத்துக்களைப் பரப்பி மக்களைக் குழப்பும் உளவியல் போரை நடத்த சிங்கள அரசாங்கம் முனைகிறது. எனவே நாம் அவர்களின் உளவியல் போரை முறியடிக்க வேண்டும். எனவே மக்கள் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற் படைத் தளபதி கேணல் சூசை அவர்கள் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கும் தேசியத்தலைவர் அவர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடும் மனக்கசப்பும் இருப்பதாக சில பத்திரிகைகளும் ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இது சம்பந்தமாக தங்களின் கருத்தை இவ்விடத்தில் கூறிக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். என வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக நடைபெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றுகையில் மாவீரர்களின் பெற்றோர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை அவர்கள் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், எனக்கும் தலைவர் அவர்களுக்கும் இடையில் பிரச்சினை என்று வெளியாகிய இந்தச் செய்தியானது சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்ற ஒரு உளவியல் போர். சமாதான காலத்தில் இப்படியான உளவியல் போர்களை அடிக்கடி இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் இப்படியான உளவியல் போரை 1998 ஆம் ஆண்டு இந்திய அரசு கூட நடத்தி வந்திருந்தது. இது உங்கள் அனைவருக்கும் தெரியும். ?தலைவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு? இப்படியான கட்டுக்கதையை சிறிலங்கா அரச படைகள் மட்டும் செய்யவில்லை.

இந்த நாட்டினுடைய சனாதிபதி சந்திரிகா கூட இந்தியா சென்றிருந்த போது இந்துப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் சூசை சிகிச்சைக்காச் செல்லவில்லை அவர் விடுதலைப்புலிகளின் தலைவருடன் முரண்பட்டுத்தான் வெளிநாட்டுக்குப் போனவர். அங்கே புலிகளின் போராட்டத்தின் மூத்த நலன் விரும்பிகளின் வற்புறுத்தலின் காரணமாகத் தான் மீண்டும் வன்னிக்குத் திரும்பி வந்தார் எனக் கூறியிருந்தார். ஆனால் நான் வெளிநாடு சென்றது சிகிச்சைக்காகத் தான். இது தான் உண்மை. நான் சிகிச்சைக்காகத் தான் போனேன். சிகிச்சை பெற்றேன்.இப்போதும் சிகிச்சை பெற்று வருகிறேன்.

தலைவருக்கும் எனக்கும் இடையில் முரண்பாடு என அரசாங்கம் உளவியல் போரை தொடங்கியதன் காரணம் எங்கள் தலைவர் தமிழீழ கடற்படையை கட்டி எழுப்புவதற்காக கிட்டத்தட்ட 300 கோடி ரூபாவை ஒதுக்கியிருக்கிறார். இந்தப் பணத்தை புலம் பெயர்ந்து வாழ்கின்ற எங்கள் மக்களிடம் கேட்டிருக்கிறார் என்ற தகவல் ஒருவழியாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு சென்றடைய அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் இந்தக் கதையை சிறிலங்கா அரசாங்கம் பரப்பியது. உண்மையில் தலைவருடன் சமகாலத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதனால் தலைவரைப் பற்றி முழுமையாகத் தெரிவதற்கு வாய்ப்பில்லை.

உண்மையில் தலைவருக்குக் கீழ் இருந்து ஒரு போராளியாக, பொறுப்பாளராக, தளபதியாக செயற்படுவதை இpட்டு நான் பெருமை அடைகிறேன். எங்களுடைய தலைவர் தமிழ் மக்களுக்கான விடுதலைப் பாதையை சீரான பாதையில் நடத்திச் செல்கின்ற ஒரு அச்சாணியாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர். நான் அவரிடத்தில் மதிப்பையையும், மரியாதையையும் வைத்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கம் எம்மீது ஒரு பெரும் உளவியல் போரை நடத்துகிறது. இதன் மூலம் மக்களிடத்தில் ஒரு பெரும் குழப்பத்தை உண்டு பண்ணிவிடலாம் என நினைக்கிறது. இன்று இவர்கள் தமது கோர முகத்தை வல்வெட்டித்துறையிலும் நிகழ்த்தி இருக்கிறது. எமது விடுதலைப் போராட்டத்தில் பல கட்டங்களையும் போராடித் தாண்டி வந்து இன்று இந்த நிலையை நான் அடைவதற்கு எங்கள் தலைவர் அவர்களின் வளர்ப்புத் தான் காரணம்.

1985 ஆம் ஆண்டு வெற்றிலைக் கேணிக் கடலில் நாம் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கடற்படை எம்மைத் தாக்கியது. நாங்கள் பின் வாங்கினோம். பத்து ஆண்டுகளின் பி;ன்னர் தலைவரது நேர்த்தியான வழிகாட்டலில் அதே கடற்படையை நாம் விரட்டி அடிக்கிறோம்.

இன்று கருணா என்ற நச்சு விதை எங்கள் போராட்டத்தில் போட்டுவிட்டது. இதனை அரசு தூக்கி வைத்து ஆடிக் கொண்டிருக்கிறது. இதனை எல்லாம் தூக்கி எறியுங்கள். இவர்களின் பேச்சை ஏற்றுக் கொண்டால் தான் அவர்கள் உளவியல் போரில் வெற்றி அடைவார்கள். நீங்கள் அதனைக் கருத்தில் எடுக்காது வீட்டீர்கள் என்றால் உளவியல் போரிலும் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள். அன்பான மக்களே, நாங்கள் அவர்களை நிழல் யுத்தத்தில் எப்படித் தோற்கடித்தோம். அதே போல உளவியல் யுத்தத்திலும் நாங்கள் தோற்கடிப்போம். அதற்காக நீங்கள் அவர்களின் கருத்துக்களை நம்பாதீர்கள். இது தான் இதற்கான ஒரேவழி.

நாங்கள் ஒரு மரபுவழி இராணுவம். ஒரு இராணுவத்தின் தளபதிகள் எங்கேயும் எப்போதும் மாற்றப்படலாம். மரபுவழி இராணுவமாக நாங்கள் பரிணாமம் பெற்றது தான் இதன் காரணம். உங்கள் பிள்ளைகள் எம்மை மரபு வழிப்படையாக உயர்த்தி இருக்கிறார்கள். இந்தக் கட்டமைப்பில் இத்தகைய மாற்றங்கள் நிச்சயம் நடைபெறும். இவை குழப்பத்திற்குரிய காரணங்கள் அல்ல. எனவே நீங்கள் குழம்ப வேண்டாம். ஒன்றிணைந்து அவர்களின் உளவியல் போரையும் முறியடிப்போம் எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி: ஈழநாதம் 26-11-2004

***

ஆற்றல் மிகு அற்புதமான தலைவர் பிரபாகரன் -பிரிகேடியர் தீபன்

தமிழீழத் தேசியத்தலைவரின் ஜம்பதாவது அகவையொட்டி பிரிகேடியர் தீபன் அவர்களால் 2004ம் ஆண்டு உலகத்தமிழர் பத்திரிகைக்காக எழுதப்பட்டது

எனது பொறுப்பாளர் தலைவரைச் சந்திக்க அவரது வடமராட்சிப் பாசறைக்குச் சென்றபோது நானும் வேறு போராளிகள் சிலரும் அவருடன் சென்றோம். உள்ளே தலைவருடன் அவர் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தார். பகற் சாப்பாட்டு நேரம் வந்தது. தலைவரது பாசறைப் போராளிகளுள் ஒருவர் உணவுக்காக எங்களை அழைத்தார். நாங்கள் உண்ண ஆரம்பித்தவுடன் அந்த மேசைக்குத் தலைவர் வந்தார். எல்லோரது உணவுத்தட்டுக்களையும் பார்த்துக்கொண்டு வந்தவர், என்னைச் சுட்டிக்காட்டி “இந்தத்தம்பிக்கு மீன் பொரியல் வைக்கவில்லை” என்று சொன்னார். பரிமாறும்போது அது தவறவிடப்பட்டதை நான் கவனிக்கவில்லை.

26 November 2004 தமிழீழ விடுதலைப் போராட்டமும் தேசியத் தலைவரின் 50ஆவது அகவையும் விவரணச்சித்திரம் வெளியீடு

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 50ஆவது அகவையையொட்டி, ‘தலைநிமிர்வு” என்னும் பெயரிலான, “தமிழீழ விடுதலைப் போராட்டமும், தேசியத் தலைவரின் 50ஆவது அகவையும்” என்னும் விவரணச் சித்தரம் ஒன்று வெளியிட்டுவைக்கப்படவுள்ளது.

நிதர்சனம் வெளியீடாக வெளிவரவுள்ள இந்த விவரணச் சித்திரம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஐம்பதாண்டு வரலாற்றையும், தேசியத் தலைவர் பிரபாகரனின் 50 ஆண்டுகால வரலாற்றையும் ஒருசேர விபரிப்பதாக அமைந்துள்ளது.
இதில், தேசியத் தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும், தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும், பல்வேறு முக்கியஸ்தர்களும் தெரிவிக்கும் வாழ்த்துச் செய்திகளும் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையைச் சேர்ந்த கலைஞர்களான, தர்மசிறி பண்டாரநாயகா, அசோகா கந்தகம, பிரசன்ன விதானகே, றோகித பாஷண ஆகியோருடன், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பெரியசாமி சந்திரசேகரன், மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோருடைய வாழ்த்துச் செய்திகளும் இந்த விவரணச் சித்திரத்தில் இடம்பெறுகின்றன.

இவர்களுடன், மாவீரர் கப்டன் மில்லரின் தாயார், மாவீரர்களான இரண்டாம் லெப்ரினன்ட் மாலதி, லெப்ரினன்ட் கேணல் விக்டர் ஆகியோரின் தந்தையர், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் மோகனதாஸ், யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியை மனோன்மணி சண்முகதாஸ், தேசியத் தலைவரின் ஆசிரியர்களுள் ஒருவரான வேணுகோபால் ஆகியோருடைய வாழ்த்துச் செய்திகளும் இதில் இடம்பெறுகின்றன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வை.கோபாலசாமி, பட்டாளி மக்கள் கட்சியைச் சேர்;ந்த இராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த திருமாவளவன், நெடுமாறன், இயக்குனர் சீமான், கவிஞர் காசி ஆனந்தன், மறுவன்புலவூர் சச்சிதானந்தன், மணியரசன், தியாகு ஆகியோருடைய வாழ்த்துச் செய்திகளும், கருத்துக்களும் இந்த விவரணச் சித்திரத்தில் இடம்பெறுவதாகவும் நிதர்சனம் வெளியீட்டகத்தினர் விடுத்த செய்திக்குறிப்பொன்றில் தரிவிக்கப்பட்டுள்ளது.

நிதர்சனம் வெளியீடாக, தேசியத் தலைவர் பிரபாகரனின் 50ஆவது பிறந்ததினமான இன்று 26ஆம் திகதி வெளியிடப்படவுள்ள இந்த விவரணச் சித்திரம், சுமார் ஒன்றரைமணிநேர நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் வே.பிரபாகரன் வரலாற்றுப் பதிவுகள்

வரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம்


“பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்” வரலாற்றின் ஓர் உண்மை

***********************************

விடுதலைப்பேரொளி ,தலைவர் பிரபாகரன் பற்றிய முழுமையான விபரணம்

viduthalaiperoli-history of prabakaran

Prabhakaran a Leader for All Season -Book

Prabhakaran a Leader for all Season front

 

***

தலைவர் பிரபாகரன் குமுதம் தொடர் 1-12

களங்கள் -1. ஓயாத அலைகள் மூன்று.

Kallangl-1இத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமே இப்பகுதி பயணிக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எதிர்பாராத விதமாய் மழை தூறத் தொடங்கியது. தூக்கக் கூடியவற்றைத் தூக்கிக்கொண்டு ஏனையவற்றை பொலித்தீன் பைகளால் மூடிவிட்டு அருகிலிருந்த தட்டியொன்றின் கீழ் எல்லோரும் ஓடி ஒதுங்கினோம். மழை பலப்பதற்கான அறிகுறிகள் இல்லை. வானம் நன்கு வெளித்திருந்தது.

‘சே! பயிற்சியை முடிச்சிட்டு வேளைக்குப் போய்ப் படுப்பமெண்டா கோதாரிவிழுந்த மழை குழப்புது’ – நித்தி சலித்தான்.

‘மாஸ்டர்! மழை பெலக்காது. தூறலுக்கயே செய்து முடிப்பம். அதுவும் பயிற்சிதானே. சண்ட நேரத்தில மழை தூறினா ஓடிப்போய் தாழ்வாரத்துக்க ஒதுங்கிறதே?’ – மலர்விழி சொன்னாள்.‘இதுக்கயும் உனக்கு நக்கல். எனக்குப் பிரச்சினையில்லை, தூறலுக்க நிண்டு நாளைக்கு நீங்களொராள் தும்மினாலே கடாபியண்ணை என்னைக் கும்மிப் போடுவார்’. – இது சசிக்குமார் மாஸ்டர்.

இறுதியில் மழைத்தொப்பிப் போட்டபடி பயிற்சியைத் தொடர்வதென முடிவாகியது. அணிகள் தமது நகர்வுக்கான தொடக்கப் புள்ளிகளுக்குப் போய் நகரத் தொடங்குகின்றன. வெட்டைக்குள்ளால், பற்றைகளுள்ளால், வடலிக் கூட்டங்களுள்ளால் என்று வெவ்வேறு தரைத் தோற்றங்களுள்ளால் அந்த நள்ளிரவில் அணிகள் இலக்குநோக்கி நகர, இராணுவத்தினராக நியமிக்கப்பட்டவர்கள் நகர்வுகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவொரு மாதிரிப் பயிற்சி. ஆட்லறித்தளம் ஒன்றைத் தாக்கயழிப்பதற்காக கரும்புலிகள் அணி பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறது. லெப்.கேணல் சசிக்குமார் மாஸ்டர் (இவர் இம்ரான் – பாண்டியன் படையணியைச் சேர்ந்த சசிக்குமார்; 2009 இல் வன்னியில் நிகழ்ந்த கடும் போர்க்காலத்தில் வீரச்சாவடைந்தார். வேவுப்பிரிவு, வரைபடப் பிரிவு போன்றவற்றுக்கு வெவ்வேறு காலப்பகுதிகளில் பொறுப்பாயிருந்த மற்ற சசிக்குமார் மாஸ்டரோடு இவரைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.) தலைமையில் இந்தப் பயிற்சித் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.BT1

அப்போது போரினால் சிதைந்துபோய் பயன்படுத்தாமலிருந்த முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக் கட்டடத்தை மையமாக வைத்து இந்த இராணுவ முகாமின் மாதிரிவடிவம் அமைக்கப்பட்டுப் பயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தச் சுற்றாடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு மக்கள் குடியிருப்புக்கள் இல்லை. இரவு, பகல் என்று மாறிமாறி இறுதிக்கட்டப் பயிற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதில் கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதியைச் சேர்ந்தவர்கள் முழுமையாகவும் மூன்றாம் தொகுதியைச் சேர்ந்தவர்களில் நாலைந்து பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளார்கள். தாக்குதல் நடத்தும் அணிகள் இன்னும் முழுமையாக இல்லை. ஏனென்றால் இப்போதும் வேவுக்காக சிலர் உள்ளே சென்றுள்ளார்கள்.

முன்னர் வேவுப்போராளிகள் தகவல்கள் திரட்ட, கரும்புலிகள் தனியே நடவடிக்கை மட்டும் செய்யும் நிலை மாறி, கரும்புலிகளே வேவுப்பணியையும் செய்து நடவடிக்கையையும் செய்யும் நிலை நடைமுறைக்கு வந்திருந்தது. இதில் கரும்புலிகள் தனித்தோ வேவு அணியினருடன் இணைந்தோ இந்த வேவுப்பணியைச் செய்துகொண்டிருந்தார்கள். வேவு நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலிகளும் உள்ளனர்.

இப்போது நடந்து கொண்டிருக்கும் மாதிரித் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களும் மாறிமாறி குறிப்பிட்ட இலக்குக்கு வேவுக்காகாகச் சென்று வந்துகொண்டிருந்தனர். இந்த வேவு நடவடிக்கைக்கு லெப். கேணல் இளம்புலி (முன்னர் மணலாற்று மாவட்டப் படையணியில் இருந்தவர். மிகச்சிறந்த வேவுக்காரன். தனியொருவராக இவர் சாதித்தவை ஈழப்போராட்டத்தில் பொறிக்கப்பட வேண்டியவை. பின்னர் மணலாற்றில் வீரச்சாவடைந்தார்.) பொறுப்பாக இருந்தார். ஒவ்வொரு முறையும் வேவுக்காகச் செல்பவர்களைக் கூட்டிச் சென்றுவருவார். சென்றுவரும் அனைவரும் மிகத் திருப்தியாகவே இருந்தார்கள். தாக்குதல் எந்தவிதச் சிக்கலுமின்றி நூறுவீதமும் வெற்றியாக அமையுமென்பதில் யாருக்கும் சந்தேகமிருக்கவில்லை. ஆட்லறித் தளத்துள் வெற்றிகரமாகப் புகுந்தது மட்டுமன்றி ஆட்லறிகளை மிக நெருக்கமாகவும் சென்று பார்த்து வந்திருந்தார்கள். குறைந்தது மூன்று முறையாவது அடுத்தடுத்து தொடர்ச்சியாக இப்படிப் போய்வந்தது மிக அதிகளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

malarvili

தாக்குதல் இலக்கானது மணலாற்றுக்காட்டுள் அமைந்திருக்கும் ‘பராக்கிரமபுர’ என்ற இராணுவ முகாம். எமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மிக நீண்ட தூரத்தில் இருந்தது அந்த முகாம். மேலும் அப்பகுதிகளில் – ஏன் அதையண்டிய பகுதிகளிற்கூட எமது ஊடுருவற் செயற்பாடுகளோ தாக்குதல்களோ நடந்ததில்லை. எனவே எதிரி மிகமிக அலட்சியமாக இருந்தான். அந்த முகாமின் அரைவட்டப்பகுதி பெண் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது. சிறிலங்கா இராணுவத்தைப் பொறுத்தவரை போர்ப்பகுதிகளிலோ, ஆபத்து ஏற்படுமெனக் கருதும் பகுதிகளிலோ பெண் இராணுவத்தினரைப் பயன்படுத்துவதில்லை. அங்கே நிலைப்படுத்தப்பட்டிருக்கும் ஆட்லறிகளைக் கூட எதிரி பயன்படுத்துவதில்லை. அவை பயன்படுத்தக்கூடிய தூரவீச்சுக்குள்ளும் இருக்கவில்லை. மணலாற்றின் முக்கிய இராணுவத் தளங்களான மண்கிண்டிமலை, கொக்குத்தொடுவாய் போன்ற தளங்கள் தாக்கப்படும்போது அவற்றுக்கான பாதுகாப்புச் சூடுகளை வழங்குவதற்காகவே இந்த ஆட்லறித்தளத்தை இராணுவம் அமைத்திருந்தது.

பாதுகாப்பு விடயத்தில் எதிரி மிக அலட்சியமாக இருந்த, ஆனால் கரும்புலிகள் தமது தாக்குதல் வெற்றியில் நூறு வீதமும் உறுதியாகவிருந்த இந்த முகாம் மீதான தாக்குதல் திட்டம், ஏனோ தெரியவில்லை சிலதடவைகள் இடைநிறுத்தப்பட்டது. பயிற்சிகள் இறுதிக்கட்டத்தையடைந்து எல்லாம் தயாராகும் நேரம் தலைவரிடமிருந்து இடைநிறுத்தச் சொல்லி அறிவித்தல் பிறப்பிக்கப்படும். சிலநாட்களில் மீண்டும் கட்டளை கிடைக்க, ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா எனப்பார்ப்பதற்காக வேவு அணியை அனுப்பிவிட்டு இங்கே பயிற்சி தொடங்கிவிடும். பிறகு மீளவும் திட்டம் பிற்போடப்படும். இப்படி இரண்டு மூன்று தடவை நடந்தது. இவற்றுக்கான காரணம் பின்னர் ஊகிக்கக் கூடியதாக இருந்தது.

இந்த வேவுகள், மாதிரிப் பயிற்சிகள் எல்லாம் நடந்துகொண்டிருந்த காலம் 1999 ஆம் ஆண்டு புரட்டாசி, ஐப்பசி மாதங்களில். அன்றைய நேரத்தில் வன்னியிலிருந்த இராணுவச் சமநிலைபற்றிச் சொல்லியாக வேண்டும். ஜெயசிக்குறு நடவடிக்கையானது கண்டிவீதியில் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றிய நிலையில் நின்றுகொண்டிருந்தது. மேற்கிலே ரணகோச தொடரிலக்கத்தில் நடந்து பள்ளமடுவில் நின்றுகொண்டிருந்தது. வன்னியின் கிழக்கிலே ஒட்டுசுட்டான் சந்தியையும் தாண்டி எதிரி முன்னேறி நின்றிருந்தான்.

நாயாற்றுக் கடற்கரையிலிருந்து வளைந்து வளைந்து செல்லும் இராணுவத்தின் முன்னணிக் காப்பரண் வரிசை, நெடுங்கேணி – ஒட்டுசுட்டான் வீதியைப் பாதுகாத்து, ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியைப் பாதுகாத்து நீண்டுசென்று மேற்குக் கடற்கரை வரை நூற்றுக்கும் அதிகமான கிலோமீற்றர்கள் நீண்டிருந்தது. அதே காப்பரண் வரிசையை மறித்துப் புலிகளும் தமது காப்பரண் வரிசையை அமைத்துச் சண்டையிட்டு வந்தார்கள்.

இந்தக் காலப்பகுதியில் நெடுங்கேணி தொடக்கம் நாயாற்றுக் கடற்கரை வரையான பகுதிகளில் இருதரப்புக்குமிடையே சண்டைகள் நடப்பதில்லை. இப்பகுதிகளில் படையினரின் செறிவும் குறைவாகவே இருந்தது. அப்போது மிகப்பெரிய ஆளணிக் குறைபாட்டை சிறிலங்காப் படைத்தரப்புக் கொண்டிருந்தது. முன்னணிக் காப்பரண்களை விட பின்னணி முகாம்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலேயே அதிக கவனத்தை சிறிலங்காப் படைகள் செலுத்தியிருந்தன. இந்தப் பகுதிகளூடாக புலிகளின் வேவு அணிகள் மிகச் சுலபமாகப் போய்வந்துகொண்டிருந்தன. ‘பராக்கிரமபுர’த்துக்கான வேவும் இவ்வழியேதான் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

பராக்கிரமபுர மீதான தாக்குதல் நடந்தால் மணலாற்றின் முன்னணிக் காப்பரண் வரிசையில் மாற்றங்கள் நடக்கும். இராணுவக் கட்டுப்பாட்டுக் காடுகளுக்குள் புதிதாக தற்காலிக சிறுமுகாம்கள் அமைக்கப்படலாம்; புதிய சுற்றுக்காவல் அணிகள் வருவிக்கப்பட்டு காடுகளில் கண்காணிப்புக்கள் அதிகரிக்கலாம். புதிய சூழலைப் படித்து முடிக்க இயக்கத்துக்கு இன்னும் சிலகாலம் தேவைப்படலாம். இம்முகாம் மீதான தாக்குதல் மட்டுமே இப்போதைக்குப் போதுமென்றால் இவற்றைப் புறக்கணித்து அந்தத் தாக்குதலைச் செய்யலாம். சமீபகாலமாக யுத்தகளம் மந்தமடைந்திருந்தது. இராணுவச் சமநிலையில் தமிழர் தரப்பின் கையை ஒருபடி உயர்த்த இத்தாக்குதல் பெரிதும் தேவைப்பட்டது. இத்திட்டத்தோடு தொடர்புடைய போராளிகள் நூறுவீதமும் வெற்றி உறுதியான இந்த நடவடிக்கையைப் பெரிதும் எதிர்பார்த்தார்கள். இது பிற்போடப்பட்டுக் கொண்டிருந்த காரணத்தை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

ஆனால் தலைவருக்கோ இத்திட்டம் மட்டுமே மூளையில் இருக்கவில்லை. மணலாற்றுக்காட்டில் எதிரியின் அந்த இலகுத்தன்மை அவருக்குத் தேவையாக இருந்தது. அதில் கல்லெறிந்து குழப்ப அவர் விரும்பவில்லை. ஆனாலும் பராக்கிரமபுர மீதான தாக்குதல் திட்டத்தையும் முழுமையாகக் கைவிடவில்லை.

தொடரும்…

இளந்தீரன்

ஈழநேசன்

யார் இந்த பருதி

மரணத்தை நேசித்தபடியே எதிரிக்கு சிம்ம சொர்பணமாய்!

2009 மே 17 ம் திகதிக்கு பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருந்த மக்களை அவர்களின் மனச்சிறையில் இருந்து விடுவித்து எம்மால் விடுதலையை அடைய முடியும் என்ற போர்க்குணத்தை ஏற்படுத்திய பெருவீரனக திகழ்ந்தவன் தான் தளபதி பருதி..

அமைதியான ஒரு முகம்
அனைவரையும் அரவணைக்கும் பண்பு
கொள்கையில் பற்று
கோபத்திலும் தாய்மை உணர்வு
இலட்சியத்தில் உறுதி
இறுதிவரை தாயக விடுதலைக்கான பணி,
இதுவே இவனது அடையாளம்………….!

1983-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் விடுதலைக்காக தம்மை அர்பணிக்கத்துணிந்த இளைஞர்களுள் பருதியும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த திருநெல்வேலி தாக்குதலின் விளைவாக விடுதலையில் தன்னை அர்பணித்த மனிதன் தான் பரிதி என்கின்ற மாவீரன்.

அன்று 80 களில் தமிழர் தாயகத்தில் இன அழிப்பு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதிந்திருந்த நேரம். எமது இயக்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் எமது இயக்கம் வாழ்ந்த காலங்களில் எமது போராளிகளுக்குப் பெரும் பலமாக இருந்து செயற்பட்டவர்.

அன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட்ட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டவர். அன்றைய நாட்களில், விடுதலை வெறிபிடித்த எமது போராளிகளினிடையே கடமை உணர்வை மட்டுமே கருத்தாகக் கொண்டு, சிங்களப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி எமது தலைவர் உட்பட்ட ஆரம்பகாலப் போராளிகளைக் காத்து வந்தார். தாக்குதல்கள் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நகர்வுகளுக்குத் தேவையான பொருட்களை மக்களிடமிருந்து ஒழுங்கு செய்து, எவரும் சந்தேகம் கொள்ளாதவாறு போராளிகளுக்குரிய தங்ககங்களை ஒழுங்கு செய்வதென அன்றைய காலங்களில் முக்கியத்துவமான பணிகளை முன்னின்று செய்து முடிக்கும் செயல் வீரனாகத் திகழ்ந்தார்.

1983-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் விடுதலைக்காக தம்மை அர்பணிக்கத்துணிந்த இளைஞர்களுள் பருதியும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த திருநெல்வேலி தாக்குதலின் விளைவாக விடுதலையில் தன்னை அர்பணித்த மனிதன் தான் பரிதி என்கின்ற மாவீரன்.

எமது போராட்டத்தின் ஆரம்ப காலப் பகுதியில் தாயகத்தில் களப்பணி புரிந்த பருதி அதன் பின்னான காலங்களில் இந்தியாவிற்குப் பயிற்சிக்குச் சென்ற போராளிகளுடன் ஒருவராக இணைந்திருந்தார். இந்திய மண்ணில் அவர் பெற்ற பாசறைப் பயிற்சிகள் பின்னாளில் போர்களத்தில் எதிரியை துவம்சம் செய்வதிலும் , போராளிகளை உருவாக்குவதற்கும் பெரிதும் துணை புரிந்ததோடு மட்டுமல்லாமல், பரிதியையும் சிறந்த போர்வீரனாகவும் அடையாளம் காட்டியது.

போர்களப்பாசறைகளில், படை நடத்துவதில் வல்லமை பொருந்திய பருதி விழுப்புண் அடைந்ததன் விளைவாக களமுனையில் எந்தப் பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது. என்றாலும் அவரது இலட்சியப் பற்று காரணமாக எமது வரலாற்றுப் பெருமைக்குரியவராய் அவர் இருந்தார். அவரது அந்த அர்ப்பணிப்புத்தான், அவரை புலத்திலும் விடுதலைக்குப் பணியாற்றுவதற்கான காரணியாக அமைந்தது.

இலட்சியப் பயணத்தை புலத்திலும் எதிரி முடக்க நினைத்தபோது வீறுகொண்ட வேங்கையாக எழுந்த பருதி போர்க்குணம் மிக்க புலம்பெயர் தமிழரை ஒருங்கிணைத்து விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் அயராத பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்பட்டார்.

மலையளவு சுமைகளையும் கடுகளவாய் ஆக்கி எதிரிக்கு சிம்ம சொர்பணமாய் திகழ்ந்த இவன் மீது எதிரி மேற்கண்ட புலனாய்வு நடவடிக்கைகள் , கொலைவெறித் தாக்குதல்கள் என்று, தொடர்ந்த போதும் மரணத்தை நேசித்தபடியே மக்களுக்கான மகத்தான பணிகளை மேற்கொண்டவண்ணமே இருந்தார்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல என முழுக்கமிட்டபடியே உலகத் தமிழினத்தை ஒருங்கிணைத்து எதிரிக்கு தக்க பதிலடி கொடுப்போம் என சொல்லால் மட்டுமல்ல செயலாலும் உறுதியுடன் செயற்பட்ட பருதி அவ்வப்போது கொலைவெறி கொண்டலையும் கொடியவரின் வன்முறைகளை உடலாலும் உள்ளத்தாலும் எதிர்கொண்டபடியே செயலாற்றினார்.

“ஆங்கிலக் கல்வியின் விளைவுகளால் புத்தகப் படிப்பை புலமையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் ஒன்றில், யார் புத்திஜீவி என்பது பற்றிய மயக்கம் இன்னமும் பலரிடையே உள்ளது. அவர்கள் தம் மனச் சிறையில் இருந்து வெளியேறும்வரை உண்மையான புத்திஜீவிகளை இனம் காணமாட்டார்கள். மனித வரலாற்றில் பெரும் மாற்றங்கள், பாய்ச்சல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றின் பின்னால் உள்ள ஆளுமைமிக்க, ஆற்றல்மிக்க மனிதர்களைச் சந்திக்கின்றோம். தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருக்கும் சூழலில் மக்களை அவர்களின் மனச்சிறையில் இருந்து விடுவிக்க எம்மால் முடியும் என்ற போர்க்குணத்தை ஏற்படுத்தியது பருதி போன்றவர்களின் தியாகம் மிக்க செயற்பாடுகள் என்றால் மிகையாகாது. முள்ளிவாய்க்காலின் பின்னரான அண்மைய நிகழ்ச்சிகளால் மனம் ஒடிந்து வாழும் தமிழ்ச் சமுதாயம் இவை பற்றி சிந்தித்து, பேசி, செயல்படும் காலமிது…” என அடிக்கடி விவதித்து தேசிய விடுதலைப் போரின் எழுச்சிக்கு உரமூட்டிய ஓர் உன்னதமான செயல்வீரன் தான் பருதி..

இத்தாலிய நாட்டின் புகழ் பெற்ற புரட்சிகர தத்துவ ஞானியும் ,புத்திஜீவியுமான அன்ரோனியொ கிறாம்சி ( Antonio Gramsci -1889-1937) அறிவுலகம் அதிகாரவர்க்கத்துடன் கைகோர்ப்பதைக் கண்டித்தவன். அதற்காகச் சிறைவாசத்தை அனுபவித்தவன்.

புத்திஜீவி பற்றி கூறிய கிறாம்சி,

“ஒரு புரட்சிகரமான புத்திஜீவி அந்தப் போராட்டத்தின் உள் இருந்து உருவாக வேண்டும். வெளியில் இருந்து திணிக்கப்படக் கூடாது”

என்று கூறினார்.

ஆங்கிலக் கல்வியின் விளைவுகளால் புத்தகப் படிப்பை புலமையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் ஒன்றில், யார் புத்திஜீவி என்பது பற்றிய மயக்கம் இன்னமும் பலரிடையே உள்ளது. அவர்கள் தம் மனச் சிறையில் இருந்து வெளியேறும்வரை உண்மையான புத்திஜீவிகளை இனம் காணமாட்டார்கள்.

மனித வரலாற்றில் பெரும் மாற்றங்கள், பாய்ச்சல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றின் பின்னால் உள்ள ஆளுமைமிக்க , ஆற்றல்மிக்க மனிதர்களைச் நாம் சந்திக்கின்றோம்.

ஊர் வாழ உறவு வாழ
உற்றம் சுற்றம் உரிமையோடு வாழ
வீரமறவர்களாக வேங்கையின் மைந்தனாக
மானிடத்தின் அதி உச்ச ஈகமாக

எதிரிகளின் தமிழின அழிப்பு கூட்டுச்சதியில்
நெருப்பாற்றிலும் துரோகத்தனங்களையும்
எதிர் கொண்டு எம் மறவர் நிற்க,

2009 மே 17 ம் திகதிக்கு பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருந்த மக்களை அவர்களின் மனச்சிறையில் இருந்து விடுவித்து எம்மால் விடுதலையை அடைய முடியும் என்ற போர்க்குணத்தை ஏற்படுத்திய பெருவீரனக திகழ்ந்தவன் தான் தளபதி பருதி..

அண்மைய நிகழ்ச்சிகளால் மனம் ஒடிந்து வாழும் தமிழ்ச் சமுதாயம் இவை பற்றி சிந்தித்து, பேசி, செயல்படும் காலமிது. என அரசியல் சிந்தனையை ஊட்டிய உன்னதமான தலைவனாய் தேசிய விடுதலைக்காக நாடோடியாக செயல்பட்ட செயல் வீரந்தான் எங்கள் தளபதி. பருதி.. இத்தகைய செயல் வீரனாக செயற்பட்ட எமது இயக்கத்தின் மூத்த அங்கத்தவர்களுள் ஒருவரான பருதி அவர்கள் மீது பாரீஸ் புறநகர் பகுதியில் வைத்து சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகளால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் (08. 12. 2012) ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழ் சமூகத்தை கதிகலங்க வைத்துள்ளது.

பருதியின் இழப்பு ஈழத்தமிழினத்தின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழ்த் தேசியத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடிகின்றனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு பருதியின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப்புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தமிழீழ விடுதலைப்புலிகள் , பருதியின் இழப்பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார்கள். “பருதி நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்” எனக்கூறி தமிழினத்தை ஒரு வீரசபதம் எடுத்துக் கொள்ளும் இனமாக உருவாக்கியுள்ளனர்.

இன்றைய உலகில், 2009 மே 17 க்கு பின் தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் பருதியின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறி வாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் பருதி வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும். அந்த நிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில் கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்கள் என்றால் அது பருதியால் விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன என்றால் மிகையாகாது.

எமது இயக்கம் கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக்கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரன் , இன்று புலம்பெயர்ந்த மண்ணில் தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக் கொண்டேயிருந்தான்.

கடந்த நவம்பர் 8 ஆம் தேதி இரவு படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளருமான கேணல் பரிதி அவர்களுக்கு, இலட்சியப் பயணத்தில் இறுதிவரை நடந்த அன்புத் தோழனுக்கு எங்கள் வீர வணக்கங்கள். ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண்டும் என்பதில் பருதி அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயப் போராட்டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும். அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் ஏராளம். தான் நேசித்த தேசத்தின் மீதும் அந்த மக்களின் மீதும் சிறுவர் நலன்பேணும் திட்டங்கள், கல்வி, அபிவிருத்தி, பொருண்மிய மேம்பாடு, சமூக மேம்பாடு என மக்கள் நலன்பேணும் திட்டங்களில் மாத்திரமன்றி, போர்களத்தில் மாண்டுபோன மாவீரர்களின் குடும்பங்களை பராமரித்தல், சிறையிலிருந்து மீண்ட போராளிகளுக்கு மறுவாழ்வு, மாவீரர்களான தளபதிகளின் குடும்பங்களைப் பொறுப்பெடுத்து வாழ்நாள் பணிசெய்தல் என அவன் காட்டிய அதீத அக்கறையின் பயனாக இன்னும் எம்மண்ணில் இச் செயற்பாடுகள் பெரும் வளர்ச்சி பெற்ற நிலையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக, ஒன்றுபட்ட தமிழினத்தின் எழுச்சியை இவர் கனவாகக் கொண்டிருந்தார். எதிரியின் இறுகிய பிடிக்குள்ளும் நிமிர்ந்து நின்று தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் உணர்வெழுச்சி பருதியின் கனவிற்கு கட்டியம் கூறிநிற்கின்றது.

தமிழர்களுக்கு எதிரான சிங்களத்தின் உண்மை முகத்தை சர்வதேசத்தின் முன் வெளிக் கொணர்ந்து தமிழர் தாயகம் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டு தமிழர்கள் சுதந்திரமாக தமிழர் தாயகத்தில் வாழ்வதற்கு நாம் அர்பணிப்போடு செயற்பட வேண்டும் என்ற வேணவாவும் கனவுமே அவனது சாவுக்கு ஒரு காரணமாக அமைந்தது.

எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் பருதி என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழினத்தின் ஆன்மாவில் அழிக்கமுடியாததோர் இடம் அவருக்கு என்றுமுண்டு. எல்லையற்ற திறமைகளாலும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த உண்மையான பாசத்தினாலும் தமிழினத்தில் நீங்காத நினைவுகளை அவர் பதித்துச் சென்றிருக்கின்றார். இறுதி மூச்சு வரை தமிழினத்தின் தன்மானம் காத்து தமிழினத் தலைவனுக்குப் பெருமையைச் சேர்த்த அந்த ஒப்பற்ற வீரனை எந்நாளும் எவராலும் மறக்கமுடியாது.

எதிரிகளின் சவால்களை எதிர்கொண்டபடியே பணியாற்றிய அவரை இயன்றவரை பேணிப்பாதுகாக்க நாம் முயன்றோம். அதனால்தானோ என்னவோ எதிரியும் அவரது வாழ்வை முடிக்க விரும்பினான் போலும். இப்போது பருதி எங்களுடன் இல்லை. என்றாலும் அவர் எமது புகழ் பூத்த விடுதலை வரலாற்றில் என்றென்றைக்கும் வாழ்வாய்.

விடுதலை நெருப்பாய் கனன்ற வீரனே!
விடிவை நோக்கியே விரைந்த பறவையே!
விழிகள் மீதிலோர் நதியினைத் தந்தாய்.
வீழ்ந்து கதறுமோர் நிலையினைத் தந்தாய்
கயவர் படையினை கலக்கியடித்திடும்,
களத்திலாடியே கருவிகள் மீட்டதும்,

கோட்டையை மறித்தோர் அரணாய் நின்றதும்,
நேற்றுப்போலவே நெஞ்சினில் உள்ளது.
காலையும் மாலையும் கடமையை எண்ணியே,
கண்துயிலாது புலக் களத்தில் திரிந்தாய்!
விழுப்புண் அடைய்தாய் வீரனாய் திரிந்தாய்!

தன்னை இழக்கிலும் தாயகம் இழகிலோன்!
சத்தியம் செய்தாய், சங்கென ஆர்த்தாய்!
சண்டைக்களங்களில் சாதனை புரிந்தாய்!
தாயக மீட்பே குறியெனக் கொண்டாய்!
தன்னையே இன்று தற்கொடை ஈந்தாய்!

இங்கிவர் மேலும் தாக்குதல் புரியலாம்,
இருப்பவர் இன்னும் சூழ்ச்சிகள் செய்யலாம்
இன்னுமோர் எதிரி எதிர்வந்து நிற்கலாம்,
புலத்தினில் தமிழன் எரிந்து கருகலாம். – ஆயினும்

கண் போல நீ காத்த புலக் கட்டமைப்பு இது!
சிந்து குருதியால் நீ சேர்த்த பலமிது!
உந்தன் உறுதியை உயிரிலும் சுமந்தோம்!
பொங்கும் விடுதலைப் போரிலே வெல்வோம்.!

“உயிரைக் கொடுக்கத் தயாராய் இருக்கிறவர்களைத்தான் அவர்கள் வேட்டையாடுகார்கள்”

‘You know, it is those who are prepared to give their lives that they hunt.”

பருதி நீ விடுதலையின் தேரோட்டி…

உன்னோடு எங்கள் இலட்சியம் வெல்வதற்க்காய் இறுதி வரை நடந்தவன்..

2009 மே ற்கு பின்னரான மலை விழுந்த பேரதிர்வில் நீயும் நானும் இருவேறு முனைகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டோம்.

ஆனாலும் ஈழக் குருசேத்திர வீட்மர் தான் எனக்கும் உனக்கும் குருநாதர்.

குருகுலவாசத்தில் உன் உணர்வுகளை சுவாசித்தவன் என்பதனால்,

உன்னை என்னால் மறக்க முடியவில்லை.

பருதி…

பலருக்கு நீ எப்படியோ….. ஆனால்

எனக்கு நீ,

குருசேத்திரக் கர்னன்…

செஞ்சோற்றுக் கடனுக்காய்..

உன்னை வழியனுப்பி வைக்க வார்த்தைகள் வரவில்லை தோழனே………!

இலட்சியப் பயணத்தில் இறுதிவரை நடந்த என் அன்புத் தோழனுக்கு எங்கள் வீர வணக்கங்கள்.

என்றும் நினைவுகளுடன்…….

– கிருஸ்ணா அம்பலவாணர் –

இன்போ தமிழ்

வே. பிரபாகரன் எழுதி இயக்கிய மர்மமனிதன் நாடகத்தில் ஒலித்த சிரிப்பு..

piraba1

வே. பிரபாகரன் எழுதி இயக்கிய மர்மமனிதன் நாடகத்தில் ஒலித்த சிரிப்பு..

நாடகத்திலே நான் கண்ட சிரிப்புக்களை பதிவு செய்து செல்லும் இந்தத் தொடரில் இந்த வாரம் தமிழீழத் தேசியத் தலைவர் எழுதிய ஒரேயொரு நாடகமான மர்மமனிதன் இடம் பெறுகிறது.

இது சிரிப்பு நாடகமா..? இல்லை..! இந்தச் சிரிப்பு வேடிக்கைச் சிரிப்பல்ல உலகத்தைத் துறந்த சித்தர்கள் இந்த உலகத்தைப் பார்த்து சிரித்ததுபோன்ற ஓர் ஆழமான சிரிப்பு..! ஒரு மாபெரும் கலைஞனின் ஞானச் சிரிப்பு..!

நேரமிருந்தால்…

அவர் 2008 ல் பேசிய மாவீரர்நாள் உரையை மறுபடியும் ஒரு தடவை ஓடவிட்டுப்பாருங்கள்…

” இவ்வளவு உலக நாடுகள்.. இந்த சின்னஞ்சிறிய போராட்டத்திற்கு எதிராக இப்படி அணிவகுத்து நிற்கின்றனவே..? ” என்று கேட்டுவிட்டு அவர் மெல்லச் சிரிக்கும் சில நொடிகள் அங்கே தோன்றி மறையும்..

பலர் அந்த மாவீரர்நாள் உரையை அக்குவேறு ஆணி வேறாகப் போட்டு பிளந்து என்ன சொல்லியிருக்கிறார் என்று தேடினார்கள்… ஆனால் யாருமே தேடாத அந்த மர்மச் சிரிப்பிற்குள்தான் அவர் எடுக்கப்போகும் அடுத்த முடிவு மறைந்து கிடந்தது..

உலகத்தின் இராஜதந்திரங்களை எல்லாம் தோற்கடித்த.. இறுதியில் ஐ.நா சபையே தனது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டிய ஒரு மாபெரும் துறவுக்கான முடிவை அவர் எடுத்துவிட்டார் என்ற செய்தி அந்த ஞானச் சிரிப்பிற்குள்தான் குதிர்ந்து கிடந்தது..

அந்த மர்மச் சிரிப்பின் ஆழத்தை அறிய வேண்டுமானால் அறுபதுகளின் கடைசியில் வல்வை சிதம்பராக்கல்லூரியின் வகுப்பறையொன்றுக்குள் நாம் நுழைய வேண்டும்.

காலப் புத்தகத்தின் ஏடுகளை பின்புறமாகத் தட்டுகிறேன்.. இதோ அந்த வகுப்பறை..

அந்த வகுப்பறை சாதாரண வகுப்பறையல்ல.. உலக நாடுகளே வருடந்தோறும் கார்த்திகை 27 அவரின் மாவீரர் நாள் உரையைக் கேட்பதற்காகக் காத்துக் கிடந்ததே.. அந்த உரைகளை உருவாக்கிய உலைக்களமே அதுதான்.

அன்று பிரபாகரன் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார், அதிர்ஷ்டவசமாக அவருடன் நானும் படித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது வரலாற்று மேதை இளவாலை க.புவனசுந்தரம் எமது வகுப்பாசிரியராக இருந்தார், அவர் மேற்பார்வையில் ஒவ்வொரு வாரமும் பாடசாலையில் இலக்கிய மன்றக் கூட்டம் நடைபெறும்.

மாணவர்கள் தமது பல்வேறு கலைத்திறன்களைக் காட்டும் மேடையாக அது அமைந்திருக்கும், அந்த இலக்கிய மன்றத்தின் பத்திராதிபராக இருந்தவரே பிரபாகரன்.

அவர் ஒருவருக்கு மட்டுமே ஒவ்வொரு வாரமும் மேடையில் தோன்றி உரைகளை வாசிக்கும் அரிய வாய்ப்பைக் காலம் வழங்கியிருந்தது.

நாம் எழுதிக் கொடுக்கும் ஆக்கங்களை திருத்தி செப்பனிட்டு, அத்தோடு பல அரிய நூல்களில் இருந்து திரட்டிய தகவல்களையும் ஒழுங்குபட தொகுத்து வாரம்தோறும் வாசிப்பார்.

அந்த வாசிப்பே நமக்கு அறிவின் கதவுகளை திறக்கும் சிந்தனை ஊற்றுக்களாக இருந்தாலும், அந்தப் பத்திராதிபர் பதவி உலகப் புகழ் பெறும் ஒரு பணிக்கான ஒத்திகை என்பதை அன்று என்னால் புரிய முடியவில்லை.

அக்காலத்திலேதான் பிரபாகரன் நாடகம் ஒன்றை எழுதி, நடித்து, இயக்கும் முயற்சிக்குள் இறங்குகிறார்..

” மர்ம மனிதன்..! ” இதுதான் நாடகத்தின் பெயர்..

அந்தக் கதையின் உள்ளோட்டமே அவர் போராட்டத்தின் நிழல் என்பதை அப்போது அறிந்தவர் எவரும் இல்லை.

பிரபாகரன் ஒரு மர்மமான முடிவை எடுக்கப் போகிறார், முள்ளிவாய்க்காலில் என்ன நடக்கப்போகிறது, எங்கிருந்து பிரச்சனை ஆரம்பமாகப் போகிறது என்பதையெல்லாம் அவருடைய உள்ளம் அன்றே ஒரு நாடகப் பிரதியாகப் பதிவு செய்திருப்பதுதான் நம்பமுடியாத புதுமை.

ஒரு துப்பாக்கியுடன் ஆரம்பித்த போராட்டம் முதற்கொண்டு, கடந்த 2009 மே 17 வரை அவருடைய வாழ்க்கையின் நகர்வைக் கூர்ந்து அவதானித்தால் அந்த நாடகம் அவருடைய வாழ்வின் நெக்கட்டிப் பிரதிபோல ஒளிர்வதைக் காணலாம்.

ஒருவர் உண்மைக்குண்மையாக மனம் உருகி எழுதிய நாடகப்பிரதிகளே அவருடைய உண்மையான ஜாதகக் குறிப்பாக இருக்கும், அதுவே அவருடைய டி.என்.ஏ என்னும் மரபணுவின் அசல் பிரதி போலவும் இருக்கும் என்பதற்கு சேக்ஷ்பியரின் நாடகப் பிரதிகள் ஒரு சான்று என்று கூறுவார்கள், அதையே பிரபாகரனின் மர்ம மனிதனில் காண்கிறேன்.

அந்த நாடகத்தின் பிரச்சனைகள் ஒரு மோதிரத்தை எடுத்துச் சென்று துப்பாக்கி தூக்குவதில் இருந்து ஆரம்பிக்கும்..

பின்னாளில் அவர் தன் தாயாரின் காப்பை எடுத்துக் கொண்டு துப்பாக்கி வேண்ட சென்ற சம்பவம்போல அந்த மோதிரத்தில் இருந்தே கதை சூல் கொள்ளும்.

மோதிரத்தில் இருந்து புறப்பட்டு படிப்படியாக அது உக்கிரமடைந்து பெரும் போராக மாற்றமடையும்.., சிதம்பராக்கல்லூரி மைதானத்தில் ஒத்திகை நடந்தபோது எனக்கு சிறிய பாத்திரத்தைத் தந்து மூன்றாவது காட்சியோடு கதையில் இருந்து வெளியேறும்படி கூறிவிட்டார்.

மற்றய அனைவரும் அந்த புயலில் சிக்குப்பட்டு போராடிக் கொண்டிருப்பார்கள்.

கடைசிக்காட்சியானது பெரும் துப்பாக்கிச் சண்டையை கொண்டிருந்தது, அன்று நாங்கள் முள்ளிவாய்க்காலிலும், புதுமாத்தளனிலும் பார்த்தது போல அதுவும் பெரும் அவலமான காட்சியாகும், நாடக மேடையே இரத்தக் காடாகக் கிடந்தது.

நாடக முடிவில் மயான அமைதி… வகுப்பறையே உறைந்து கிடந்தது,

நாடகத்தில் பங்கேற்ற அனைவருமே கொத்துக் கொத்தாக இறந்து கிடந்தார்கள், துப்பாக்கி தூக்கி அடிபடாமல் வெளியேறிய பாத்திரமான நான் அந்தக் கதையின் முடிவு பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.

அழிந்துவிடக்கூடாத அந்தப் பொக்கிஷத்தை காலம் எனது மூளையில் பதிவு செய்து கொண்டிருந்தது..

கலவரத்துடன் புவனசுந்தரம் மாஸ்டரின் முகத்தைப் பார்த்தேன்.. அவர் நாடியில் கை வைத்தபடி இருந்தார்… அவருடைய முகத்தில் ஈயாடவில்லை.

கடைசிக்காட்சியில் எல்லோருமே இறந்துவிட்டார்கள்… அப்படியானால் மர்ம மனிதன் என்பதன் பொருள்தான் என்ன..? முடிவில் பிரபாகரன் எதைச் சொல்ல வருகிறார்..?.

இறந்து கிடந்தவர்களில் பிரபாகரனைத் தேடிப்பார்க்கிறேன்.. கண்கள் நான்கு பக்கங்களும் சுழலுகிறது.. எங்குமே அவரைக் காணவில்லை..

அவர் இறந்துவிட்டாரா…? இல்லை உயிருடன் இருக்கிறாரா…? நாடகமே முடிவடைந்துவிடும்.

அந்த மனிதன் மர்மமானவன் அவன் இறந்தானா இருக்கிறானா என்பதை யாராலும் சொல்ல முடியாது என்பதுதான் நாடகத்தின் முடிவு.

அவரோடு சேர்ந்தவர்கள் எல்லாம் இறந்துகிடப்பதால் அவரும் இறந்துவிட்டார் என்று பாமர ரசிகர்கள் நினைத்துக் கொண்டார்கள்… இல்லை இறக்கவில்லை அந்த வீரன் தப்பிவிட்டான் என்று சிந்தனைத் திறன் மிக்கோர் கூறிக்கொண்டார்கள்…

இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு பிரபாகரன் தனது நாடகத்தின் மூலமாக தந்த பதில் மௌனம்..! பின் ஒரு சிரிப்பு…! அவ்வளவுதான்…

அன்று காற்றில் கரைந்த அந்தச் சிரிப்பின் தொனிதான் 2008 நவம்பர் மாவீரர் நாள் உரையிலும் தெரிந்தது..

நாடக முடிவில் எவராலும் கண்டு பிடிக்க முடியாத ஒரு முடிவை வைத்துவிட்டு சிரித்த அவருடைய சிரிப்பையும், மாவீரர்நாள் உரையில் சிரித்த சிரிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால்…

உரைகளைவிட உன்னதமானதும் உள்ளர்த்தம் நிறைந்ததுமாக இருப்பது அவர் சிரித்த சிரிப்பே என்பது தெரியவரும்…

ஒரு சிரிப்பால் அவர் இந்த உலகத்தையே வேரோடு பிடுங்கிய் புரட்டிப் போடப் போகிறார் என்பதை பரிதாபத்திற்குரிய உலக இராஜதந்திரிகளால் அன்று புரிய முடியவில்லை..

ஆம்…!

பிரபாகரன் இருக்கிறாரா… இல்லையா… உலக அரங்கில் இன்று இதுதான் விலை மதிக்க முடியாத ஜாக்பாட் கேள்வி..

அந்த மர்ம மனிதன் நாடகத்தின் கடைசிச் சிரிப்பொலியை இப்போது மீண்டும் எனது நினைவுகளில் றீ வைன்ட் பண்ணி உருள விடுகிறேன்…

நீலக்கடல் அலையே என் நெஞ்சின் அலைகளடி என்ற பாரதி பாடல்போல அந்த மர்மமான சிரிப்போசை என் காதுகளுக்குள் மெல்லென அலையோசை போல உருண்டு கொண்டிருக்கிறது.

முப்பது நிமிடங்கள் கொண்ட மர்மமனிதன் என்ற நாடகக் கருவின் விரிவுபடுத்தப்பட்ட வடிவம்தான் முப்பது வருடங்கள் கொண்ட விடுதலைப் போராட்டம் என்ற தகவலை மனது சிறைப்பிடித்து வருகிறது..

ஒரு சிரிப்பு 36 உலக நாடுகளை வன்னிக்குள் முகாமிட வைத்தது..

எரிக் சோல்கெய்ம் போன்றவர்களையே கோபத்தில் எகிறிக் குதிக்க வைத்தது.. பிரபாகரன் மீது குற்றம் சுமத்துமளவுக்கு அவரையே நிலை தடுமாற வைத்தது..

இன்று ஐ.நா சபையே குற்றம் புரிந்துவிட்டதாக ஒப்புக் கொண்டு அறிக்கை விட்டுள்ளதென்றால் அந்த நாடகக் கலைஞனின் சிரிப்பின் விலையை மதிப்பிட இந்த உலகில் யாரால் முடியும்..?

” அப்படியானால் அந்த நாடக முடிவு போல ஒரு பேரழிவுதான் இந்தப் போராட்டத்தின் முடிவா..? ” இப்படியொரு கேள்வி உங்கள் உள்ளத்தில் எழுவது தெரிகிறது..

அழிவும் அவலங்களும் வரலாம், ஆனால் எந்தச் சதிகாரரும் தப்பிவிட முடியாது… வெற்றி பெறவும் முடியாது.. போராட்டம் தொடரும் என்பதே அவரின் சிந்தனை… அந்தச் சிரிப்பின் சாராம்சம்..

எண்ணங்களை மேலும் ஒரு படி மேலே நகர்த்தி சிந்திக்கிறேன்..

அனுராதபுரத்தில் இருந்து 44 வருடங்கள் ஆட்சி செய்த எல்லாளன் மரணத்தின் பின் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட பேரழிவுகளுக்கான பதிலடிதான் அவருடைய காலத்தில் விழுந்திருக்கிறது என்ற எண்ணத்திற்கும் இதற்கும் தொடர்புண்டா..?

எல்லாளனின் 44 வருட காலமும் பிரபாகரன் போராட்டத்தை நடாத்திய 30 ஆண்டு காலமும், அவர் போராட்டத்திற்குத் தயாரான 14 வருடங்களையும் சேர்த்தால் அதுவும் 44 வருடங்களே..

இது மட்டுமா…

அதோ அனுராதபுரத்தின் எல்லாளன் சமாதியில் மினுக்கிட்டு எரிகிறதே.. ஒரு விளக்கு.. அந்த எல்லாளன் சமாதிக்கு அருகில் கருவுற்றவரே பிரபாகரன்…

இப்படி எண்ண அலைகள் ஓயாத அலைகளாக பீறிட்டுப் பாய்கின்றன..

ஆம்..!

அந்தப் பிரவாக நதிக்கு ஏது மரணம்.. அது பல்லாயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டே இருக்கும் ஓயாத தமிழ்ப் பேரலை..

இப்படி…

மர்ம மனிதன் என்ற ஒரு நாடகத்தில் கேட்ட சிரிப்பொலி என் உள்ளத்தில் பல்வேறு சம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றெடுக்க வைக்கிறது..

இத்தனை சம்பவங்களையும் நினைவுக்குள் அடைகாத்து எழுத வரம் தந்த நாடகத்தாயை வணங்கி, இந்தப் பிரதியை இணையத்தாயின் காலடியில் வைக்கிறேன்..

இன்று வெற்றிச் சிரிப்பு சிரிப்போர் அவருடைய சிரிப்பே ஒரு நாடகம் என்பதை அறிய அதிக நாட்கள் இல்லை..

ஏனென்றால் அது சாதாரண சிரிப்பல்ல நம்ப முடியாத நாடகச் சிரிப்பு…

கி.செ.துரை 19.11.2012

தொடர்ந்தும் வரும்…

Up ↑