Search

Eelamaravar

Eelamaravar

Month

October 2012

லெப்.கேணல் நெடுங்கீரன் ,கப்டன் நிசாரின் வீரவணக்க நாள்

01.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நெடுங்கீரன்(நவம்) அவர்களின் 5ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

31.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கப்டன் நிசாரின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

மாவீரன் பண்டாரவன்னியனின் 209 ஆவது நினைவுநாள்

முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் வீர மறவர்கள்தான்.

வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள் என நாம் குறிப்பிடும் ஒல்லாந்தர்கள். 1782-ல் வன்னியை கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “ஒல்லாந்தர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை” என்று. ஒல்லாந்தர் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டார வன்னியன்.

முல்லைத்தீவில் நின்று பண்டார வன்னியனின் வரலாற்றுத் தோளுரசியதில் மேலும் ஓர் முக்கிய செய்தியுண்டு. ஆங்கிலேய மேலாதிக்கத்திற்கெதிராய் பண்டார வன்னியன் நடத்திய கலகத்தின் உச்சம் எதுவென்றால் ஆங்கில வெள்ளையர்களின் முல்லைத்தீவு கோட்டையை அவன் முற்றாகத் தாக்கியழித்து நிர்மூலம் செய்ததுதான் அது. அதே முல்லைத்தீவில் முப்பதாண்டு கால போராட்டம் சாதித்த தமிழருக்கான ராணுவ வளங்கள் யாவும் தகர்ந்துபோய்க் கிடந்த ஓர் தருணத்தில் பண்டார வன்னியனின் வீரத்தை சமகாலத் தோழமைக்கு குறியீடாய் நிறுத்த நிச்சயம் காரணம் இல்லாமல் இருந்திருக்காது.

*****

பண்டாரவன்னியன் முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையிலுள்ள 2000 சதுரமைல் நிலபரப்பை ஆட்சி செய்து வந்தான். அமைச்சராக தனது தம்பி கயிலாய வன்னியனையும், தளபதியாக கடைசி சகோதரன் பெரிய மைனரையும் கொண்ட குழுவையும் அமைத்து அரசமைப்பை பேணி வந்தான்.

அவனது ஒரே சகோதரி பெயர் நல்ல நாச்சாள். அவளுக்கு கலைகள் கற்பிக்கும் அவை புலவன் மீது காதல் கொண்டான். அதே நேரத்தில் வன்னிநிலத்தில் ஆண்டு வந்த இன்னொரு குறுநில மன்னாக காக்கை வன்னியன் அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். அதற்காக பலமுறை பண்டார வன்னியனிடம் ஓலை அனுப்பிய போதும் அவன் அதற்கு சம்மதிக்கவில்லை.

ஒரு முறை நந்தவனத்ததில் நாச்சியாள் புலவரிடம் காதல் கொண்டிருக்க கண்ட காக்கை வன்னியன் புலவரிடம் சண்டைக்கு போக புலவர் வாள் சண்டையிட்டு நையப்புடைத்து அனூப்புகிறான். இந்த சம்பவத்தால் புலவன் அரச பரம்பரையில் வந்தவனென்பதை அறிந்து கொள்கிறான். இதனால் அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறான்.

இது ஒரு புறமிருக்க.. வன்னிநிலப்பரப்பில் பண்டாரவன்னியன் திறை செலுத்தமறுத்த காரணத்தினால் படையெடுத்து வந்து வெற்றி காண முடியாமால் வெள்ளையர்கள் புறமுதுகாட்டி பின் வாங்கினர். தனிப்பட்ட காரணத்தினால் பண்டரவன்னியன் மேல் ஆத்திரம் கொண்ட காக்கைவன்னியன் வெள்ளை தேசாதிபதியுடன் கூட்டு சேர்கிறான். பல முறை படையெடுத்து வெள்ளையர் தோல்வி அடைகின்றனர். அத்தருணத்தில் காக்கை வன்னியன் பண்டரா வன்னியனை தந்திரமாகத்தான் வெல்லலாமென்று ஆலோசனை கூறுகிறான். அந்த திட்டத்தின் ஒரு அங்கமாக தான் தவறை திருந்தி விட்டதாக நாடகமாடி பண்டராவன்னியனிடம் வருகிறான். தம்பிமார்களான மந்திரியும் தளபதியும் காக்கைவன்னியனை சேர்க்கவேண்டாமென்ற ஆலோசனையையும்மீறி மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் அவனை சேர்த்துக்கொள்கிறான். ஆனால் தருணங்களை காத்திருந்து தருணங்கள் வர நம்பவைத்து தனிய கூட்டிவந்து ஒட்டு சுட்டான் என்னுமிடத்தில் வைத்து வெள்ளையரின் படைகளிடம் தந்திரமாக அகப்படவைக்கிறான் இந்த காக்கை வனனியன்.

இன்றும் நம்பி ஏமாற்றுவர்களை நீ காக்கை வன்னியன் பரம்பரையோ என்று ஈழத்தில் கேட்கும் வழக்கு உள்ளது..

இந்த கூத்தில் ஓரிரு சம்பவங்களை பார்க்கலாம்…

தம்பி பெரியமைனர்— “அண்ணா நமது வன்னி நாட்டைக்கைப்பற்று நோக்கம் அந்த வெள்ளைக்கார கும்பலுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் நமது சகோதரர்களாகிய சிங்களவர் வாழும் கண்டிப் பிரதேசத்தை கைப்பற்ற பெரும்படைகளை அநுப்பியிருக்கிறார்கள். இந்தச்சந்தர்ப்பத்தில் சிங்களமக்களுக்கு துணையாகவும் ஆங்கிலேயருக்கு எதிராகவும் வீறு கொண்டு சீறியெழும் எங்கள் படைகளை அனுப்பிவைத்தால் நன்மையாக இருக்கும்.”

பண்டரா வன்னியன்: “ஆகா நல்லது தம்பி கைலாயா உமது யோசனை என் தம்பி கைலாய வன்னியன்.”

“அண்ணா கண்டிக்கு நமது படைகளை அநுப்புவதால் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று சிங்களமக்களை காப்பற்ற உதவி புரிந்ததாக இருக்கும். அடுத்தது இந்த சந்தர்பத்தில் நமது படை பலத்தை வெள்ளையருக்கு காட்டகூடியதாயிருக்கும். சுணங்கமால் நமது படைகளை கண்டிக்கு அனுப்புதல் நலம்.”

பண்டாரவன்னியன்: “தம்பி பெரியமைனர் நமது நாட்டில் விளைகின்ற ஏலம் கறுவா கராம்பு முதலிய திரவியங்களை கொள்ளையடித்து வயிறு வளர்க்கும் வெள்ளைக்கார கும்பலுக்கு இடம்கொடுக்கலாகாது. எமது உடன் பிறப்பாகிய சிங்களமக்களையும் கண்டி நாட்டையும் காப்பற்றியாக வேண்டும். எனவே தயங்காது நமது படைகளைக் கண்டிக்கு ஆயுத்தம் செய்வாயாக…”

கட்டப்பொம்மன் பாணியில் தேசாதிபதியுடனானn சந்திப்பிலிருந்து ஒரு பகுதி

தேசாதிபதி: வன்னியர் வேந்தே நாங்கள் பரஸ்பர அன்பு கொண்டாடி தங்களுடன் சிநேகதர்களாக நடக்க ஆசைப்படுகிறோம்.

பண்டாரவன்னியன்: அதற்க்கு எந்தவித தடையுமில்லை

தேசாதிபதி: நாங்கள் காக்கை வன்னியனிடமிருந்து கரிகட்டுமூலையையும் முல்லைத்தீவையும் பெற்றுக்கொண்டோம். பண்டராவன்னியன்:அதனால் என்ன காக்கைவன்னியன் கொடை வள்ளல். தருமபூபதி பாரிக்கும் அடுத்தவன், இல்லாதருக்கு உள்ளதை கொடுத்தான். இதில் என்ன அதிசயம்

தேசாதிபதி:அதிசியம் இல்லாமலில்லை யாழ்ப்பாண நாடும் வன்னிபிரதேசத்தில் ஒருபகுதியும் எமது ஆங்கில ஆட்சிக்குட்பட்டது என்பது கருத்து. நீங்கள் மாத்திரம் தனித்து வாழ்வதில் அர்த்தமில்லை. பண்டராவன்னியன்:அப்படியானால் அந்த அர்த்தத்துக்கு பயன் சொல்லிகொடுக்கவா அழைத்தீர்கள். தேசாதிபதி:அப்பிடியில்லை பணிந்து வாழ்ந்தால் பலனுண்டு பண்டராவன்னியன்:பணிந்து வாழ்தல் எங்கள் பரம்பரையிலையே கிடையாது..

தோசாதிபதி:ஆணவமாக பேசினால் ஆபத்து நேரிடும். பண்டரா வன்னியன்: ஆபத்து உங்களைத்தான் நாடி வருகின்றது என்னையில்லை

தேசாதிபதி:வாயை அடக்கி பேசு பண்..வன்னியன்:ஆண்டவனுக்கு அஞ்சாத பண்டரானா ஆங்கிலனுக்கு அடங்க போகிறான் தே–பதி:வாயை பெரும் அழிவை தேடப் போகிறீர் பண்-வன்னி: அதற்க்காக நீங்கள் ஏன் முதலை கண்ணீர் வடிக்கிறீர் தேசாதிபதி:ஆங்கிலையரை பகைத்தால் பண்டரா:அழிவென்று சொல்லுகிறீர்கள் அதற்க்கு அஞ்சுபவனல்ல நான் தேசா:பாம்புடன் விளையாடுகிறீர் பண்டரா:பாம்புக்கும் பருந்தாயிருப்பேனன்றி விருந்தாயிருக்கமாட்டன்.

****

மாவீரன் பண்டாரவன்னியனின் 209 ஆவது நினைவுநாள் இன்றாகும். ஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்.

வெள்ளையரிற்கு அடிபயணியாது வன்னிராச்சியத்தை ஆண்டு வந்ததான். முல்லைத்தீவு கோட்டையில் வெள்ளையா்களிடம் இருந்து மீட்டு பிரங்கிகளை கைப்பற்றிய முதல் மன்னன் கற்பூரபுல் வெளியில் ஒரே வாழ்வீச்சில் 60 பேரை கான்ற வரலாற்று நாயகன்தான் பண்டாரவன்னியன்.

வன்னிராச்சியத்தில் தோற்கடிக்கப்படாத மன்னாக திகழ்ந்த பண்டாரவன்னியன் காக்கவன்னியனின் காட்டிக்கொடுப்பினால் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்கினால் தேற்கடிக்கப்பட்டதன் நினைவுநாள் இன்றாகும்.

வன்னியில் ஒட்டிசுட்டானில் உள்ள கைச்சிலைமடு என்னும் இடத்தில் வைத்து பண்டாரவன்னியன் வெள்ளையா்களினால் தோற்கடிக்கப்பட்டான். இதன் நினைவாக கற்சிலைமடுப்பகுதியில் பண்டாரவன்னியனிற்கு நினைவுச்சினை அமைக்கப்பட்டது. பின்னா் அது ஸ்ரீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவன்னியனின் 209ஆம் ஆண்டு நினைவுநாளில் இன்று வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

பண்டாரவன்னியன் நினைவு நடுகல் அழிப்பு

மாவீரன் பண்டாரவன்னியனின் 207 ஆவது நினைவுநாள் இன்றாகும். ஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து
பண்டாரவன்னியன்.

வெள்ளையரிற்கு அடிபயணியாது வன்னிராச்சியத்தை ஆண்டு வந்ததான். முல்லைத்தீவு கோட்டையில் வெள்ளையா்களிடம் இருந்து மீட்டு பிரங்கிகளை கைப்பற்றிய முதல் மன்னன் கற்பூரபுல் வெளியில் ஒரே வாழ்வீச்சில் 60 பேரை கான்ற வரலாற்று நாயகன்தான் பண்டாரவன்னியன்.வன்னிராச்சியத்தில் தோற்கடிக்கப்படாத மன்னாக திகழ்ந்த பண்டாரவன்னியன் காக்கவன்னியனின் காட்டிக்கொடுப்பினால் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்கினால் தேற்கடிக்கப்பட்டதன் நினைவுநாள் இன்றாகும்.

வன்னியில் ஒட்டிசுட்டானில் உள்ள கைச்சிலைமடு என்னும் இடத்தில் வைத்து பண்டாரவன்னியன் வெள்ளையா்களினால் தோற்கடிக்கப்பட்டான். இதன் நினைவாக கற்சிலைமடுப்பகுதியில் பண்டாரவன்னியனிற்கு நினைவுச்சினை அமைக்கப்பட்டது. பின்னா் அது ஸ்ரீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவன்னியனின் 209ஆம் ஆண்டு நினைவுநாளில் இன்று வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வவுனியா கச்சேரியின் முன்பாக உள்ள பண்டாரவன்னியன் சிலை.

***

மாவீரன் பண்டாரவன்னியனன் !

மாவீரன் பண்டாரவன்னியனின் 209 ஆவது நினைவுநாள் 2012ம் இவ் வருடம் ஐப்பசி மாதம் 31 ம் திகதி.
ஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்.

வெள்ளையரிற்கு அடிபயணியாது வன்னிராச்சியத்தை ஆண்டு வந்ததான். முல்லைத்தீவு கோட்டையில் வெள்ளையா்களிடம் இருந்து மீட்டு பிரங்கிகளை கைப்பற்றிய முதல் மன்னன் கற்பூரபுல் வெளியில் ஒரே வாழ்வீச்சில் 60 பேரை கான்ற வரலாற்று நாயகன்தான் பண்டாரவன்னியன்.

வன்னிராச்சியத்தில் தோற்கடிக்கப்படாத மன்னாக திகழ்ந்த பண்டாரவன்னியன் காக்கவன்னியனின் காட்டிக்கொடுப்பினால் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்கினால் தேற்கடிக்கப்பட்டதன் நினைவுநாள் இன்றாகும்.

வன்னியில் ஒட்டிசுட்டானில் உள்ள கைச்சிலைமடு என்னும் இடத்தில் வைத்து பண்டாரவன்னியன் வெள்ளையா்களினால் தோற்கடிக்கப்பட்டான். இதன் நினைவாக கற்சிலைமடுப்பகுதியில் பண்டாரவன்னியனிற்கு நினைவுச்சினை அமைக்கப்பட்டது. பின்னா் அது ஸ்ரீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவன்னியனின் 209ம் ஆண்டு நினைவு நாளுக்கு நாட்கள் மிக இருந்தாலும் என்றுமே அவ் மகா வீரனுக்கு நாம் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வோம் .

pandaravanniyan

‘வெள்ளையர்களை எதிர்த்து ‘பாயும் புலி’ பண்டாரவன்னியன் வீரப்போர்’

இலங்கையில், வெள்ளையர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தவன், பண்டாரகவன்னியன்.

தமிழ்நாட்டில், வெள்ளையர்களை எதிர்த்து இறுதிமூச்சு உள்ளவரை போராடியவன் வீரபாண்டிய கட்டபொம்மன். அவனைப்போல, இலங்கையில் வெள்ளையரை எதிர்த்தவன் ‘பாயும் புலி’ பண்டாரகவன்னியன். முழுப்பெயர் குலசேகர வைரமுத்து பண்டாரகவன்னியன்.

” தமிழர் ஆட்சி “

யாழ்ப்பாணத்தை ஒட்டிய வன்னிப்பிரதேசத்தை பண்டாரகவன்னியன் ஆண்டு வந்தான்.

வடக்கே யாழ்ப்பாணம் பரவைக்கடலையும், தெற்கே அருவிஆற்றையும், மேற்கே மன்னார் மாவட்டத்தையும், கிழக்கே திரிகோணமலையையும் எல்லையாகக் கொண்டது வன்னி ராஜ்ஜியம்.

பண்டாரகவன்னியனும், கண்டி தமிழ் மன்னன் விக்கிரம ராசசிங்கனும் நெருங்கிய நண்பர்கள்.

டச்சுக்காரர்களை விரட்டிவிட்டு, இலங்கையில் பல இடங்களை கைப்பற்றிக்கொண்ட வெள்ளையர்கள், பண்டாரகவன்னியனிடம் கப்பம் (வரிப்பணம்) கேட்டனர்.

தமிழ்நாட்டில், வெள்ளையருக்கு வரி கொடுக்க வீரபாண்டிய கட்டபொம்மன் மறுத்தது போல், பண்டாரகவன்னியனும் கப்பம் கட்ட மறுத்தான். கப்பம் கேட்டு வந்த வெள்ளையனை விரட்டி அடித்தான்.

வெள்ளையர்கள் விடவில்லை. 1797 -ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி எல்லிஸ் டொய்லி என்ற தளபதியை பண்டாரகவன்னியரிடம் அனுப்பி, கிஸ்தியை வசூலித்து வருமாறு கூறினார்கள்.

” வெட்டி வீழ்த்தினான் “

வெள்ளையர்கள் மீண்டும் மீண்டும் ஆட்களை அனுப்பி கப்பம் கேட்டதால், பண்டாரகவன்னியன் வெகுண்டான். எல்லிஸ் டொய்லி என்ற அந்த வெள்ளைக்கார தளபதியை வாளால் வெட்டி வீழ்த்தினான்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், வெள்ளையர்கள் கடும் கோபம் கொண்டனர். படைகளை திரட்டிக் கொண்டு, பண்டாரகவன்னியன் மீது போர் தொடுத்தனர்.

கற்பூரப்புல் என்ற இடத்தில் இருதரப்பு படைகளும் மோதின. பண்டாரகவன்னியன் ஆவேசத்துடன் வீரப்போர் புரிந்து, பல வெள்ளைக்கார வீரர்களை வீழ்த்தினான்.

தமிழ் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், வெள்ளையர் படை புறமுதுகிட்டு ஓடியது.

” மீண்டும் போர் “

ஆங்கிலேயர்கள், எப்படியாவது பண்டாரகவன்னியனை தோற்கடித்து விடவேண்டும் என்று பெரும் படை திரட்டினர். இதைத் தெரிந்து கொண்ட பண்டாரகவன்னியன், ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு கோட்டையை, 1803-ம் ஆண்டில் தாக்கினான். காப்டன் ரிபேக் தலைமையில் இருந்த வெள்ளையர் படைகளுக்கும், பண்டாரகவன்னியன் படைகளுக்கும் கடும் போர் நடந்தது. பண்டாரகவன்னியன் வெற்றி பெற்றான். வெள்ளையர் படை பின்வாங்கி ஓடியது.

” மும்முனைத் தாக்குதல் “

வெள்ளையர் பண்டாரகவன்னியனை எதிர்க்க புதிய வியூகம் வகுத்தனர். யாழ்பாணம், மன்னார், திரிகோணமலை என்ற மூன்று இடங்களில் இருந்தும் வெள்ளையர்கள் ஒரே நேரத்தில் படையெடுத்துச் சென்று, பண்டாரகவன்னியனை தாக்கினர்.

வெள்ளையர்களின் படைகளுடன் ஒப்பிடும் போது, பண்டாரகவன்னியனின் படை மிகச் சிறியது. இருப்பினும், அஞ்சாமல் வீரப்போர் புரிந்தான்.

போரில் பண்டாரகவன்னியன் படுகாயம் அடைந்தான். அவனுடைய வீரர்கள், பனங்காமம் என்ற இடத்துக்கு பண்டாரகவன்னியனை தூக்கிச் சென்றனர். சிகிச்சை அளித்து குணப்படுத்த எவ்வளவோ முயன்றும் பலன் இல்லை.

1803-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பண்டாரக வன்னியன் உயிர் பிரிந்தது.

பண்டாரகவன்னியன் மாண்ட இடத்தில் ஒரு நடு கல் உள்ளது. அதில், “இந்த இடத்தில் பண்டாரகவன்னியனை கேப்டன் வான் டெரிபெர்க் தோற்கடித்தான்” என்று குறிப்பிட்டுள்ளது.

வெள்ளையர்கள் எழுதிய வரலாற்றில், பண்டாரகவன்னியனை ஒரு ‘கொள்ளைக்காரன்’ என்றே குறிப்பிடுகின்றனர்.

*****

வீரம் செறிந்த வன்னி – வன்னியின் வரலாறு !

வெட்டி நாறி மலையை, வெட்டி நாறி விகாரையாக மாற்ற யாரோ அண்மையில் முயற்சி செய்திருந்தனர்.  வன்னி என்றதும் எம் இயதக் கதவுகளைத் தட்டித் திறப்பது வீரம்.

ஒல்லாந்தர் கோட்டைகளை வென்று, வாட்கொடி ஏற்றி, எந்த ஏகாதிபத்திற்கும் அடிபணியாது பீரங்கிகளுக்கெதிராக. வாட்களை ஏந்திப் போராடி வீர மரணமடைந்த மாவீரன் பண்டாரவன்னியனின் வீரம், அவன் தன் மறவைக் கேட்டு நஞ்சை உண்டு மடிந்த காதலி குருவிச்சி நாச்சியின் வீரம் அறுவர் சேர்ந்து ஆண்ட வன்னி வள நாட்டை அவர்கள் அறுவரும் தமிழ் நாட்டிற்கு தலயாத்திரை சென்ற போது, கைப்பற்றப் போர்தொடுத்த அரசனிற்கு எதிராக அவ் அறுவர் துணவியரும் பணிப்பெண் ஒருவருமாக எழுவரும் ஆண்வேடமிட்டு போர்கோலம் ப10ண்டு களம் சென்று சமராடிய வீரம் என்பது போன்ற வரலாறுகளைக் கொண்டிருக்கும் வன்னி மண் தன்னகத்தே பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட வரலாறுகளைக் சொல்லக்கூடிய பல பொக்கிஷங்களையும் கொண்டுள்ளது என்பது யாவருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை.

எனவே யாவரும் அவற்றைத்தெரிந்து கொள்வதன் மூலம் இனிவரும் காலங்களில் பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட வரலாறுகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற அவாவிலேயே இக் கட்டுரையை எழுத விழைந்துள்ளேன். வன்னி மண்ணில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் கண்ணி வெடிகளும் தோட்டாக்களுமே பதில் சொல்லிக் கொண்டிருக்கும். இன்றைய நிலையில் இக் கட்டுரை தேவையான என நீங்கள் கேட்கலாம். இன்றைய சூழ்நிலையில் இத்தகைய ஆய்வுகள் சாத்தியப்படாத ஒன்றாக உள்ள போதிலும் இனிவரும் காலங்களில் அது சாத்தியப்படலாம். அப்படியான ஒரு சூழ்நிலை உருவாகும் போது அவ்வரலாறுகளை வெளிக் கொண்டு வர விளையும் சமகால புத்திஜிவிகளிற்கு முன்பு கண்டறியப்பட்ட சில தகவல்களைக் கடத்துவதே எனது நோக்கமாகும். இதில் வரும் எந்தக் தகவலும் என்னால் கண்டறியப்பட்டவை அல்ல.

இதை உனது சொந்தக் கட்டுரை என்பதை விட பல்வேறு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்த, பல்வேறு ஆசிரியர்களினதும், தொல்பொருள் ஆய்வாளர்களினதும் கட்டுரைகளின் தொகுப்பு என்று சொல்வதே சரியாக இருக்கும்.
வன்னி மண் இன்று வடபுலத்தே ஆனையிறவையும் தென்புலத்தே அனுராதபுரத்தையும் கிழக்கு மேற்குத் திசைகளில் இந்து சமுத்திரத்தையும் எல்லைகளாகக் கொண்ட நிலப் பரப்பாகச் (வவுனியா, மன்னார் , முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள்) சுருங்கி விட்ட போதிலும், முன்பொரு காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும் கண்டிக்கும் இடையே உள்ள நாடு வன்னி வள நாடு என வழங்கப்பட்டது. கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு, கொட்டியாரம், யால பாலுகமும் மேற்கேயுள்ள புத்தளம் முதலியனவும் முற்காலத்தில் வன்னி நாட்டைச் சேர்ந்திருந்தன. பின்னர் டச்சுக்காரர் காலத்தில் வன்னியின் தெற்கு எல்லையாக அரிப்பு ஆறும், காலு ஆறும் இருந்தன. இப்படியாக, வளம் கொழித்து விளங்கிய வன்னி நாடு இன்று தன் பெரும் பகுதியை காடுகளுக்குள் தொலைத்து விட்டு, சோகங்களையே சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. பட்டினிச் சாவுகளும் அங்கு பாதம் பதிக்கத் தொடங்கி விட்டன. ஆனால் ஈழத்தின் உணவுக் களஞ்சியம் எனப் போற்றப்படும் செந்நெற் களனியாக விளங்கிய வன்னி மண் மீண்டும் செழிக்க வேண்டும்.

முதற்கண் வன்னி என்ற பெயர் வந்ததற்கான காரணத்தை நோக்கி அப்பாற் செல்வது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
வன்னி என்றால் நெருப்பு எவனும் பொருள் தமிழ் இலக்கியங்களில் வழங்கி வருகிறது. எனவே வன்னியர்கள் அக்கினி குலத்தின் வழிவந்தவர்கள் என்ற கூற்று ஏற்றுக் கொள்ளத்தக்கது. அந்த வன்னியர்கள் வாழ்ந்த, வாழ்கின்ற மண் வன்னி என்றழைக்கப்பட்டது.

எவருக்கும் அடங்கிப் போகாத குணமும் இரத்தத்தில் ஊறிய வீரமும் கொண்டவர்கனே வன்னியர்களாவர் இனி வடக்கே யாழ்ப்பாண மன்னர்க்கோ தெற்கே அனுராதபுர மன்னர்களான வன்னியர் தம் குடியிருப்புக்கள் கட்டு (இன்று முத்தையன் கட்டாக மருவி விட்டது) முன்பொரு காலத்தில் இராசதானியாக விளங்கியதா என்பதற்கு விடைகாண முனைந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். கே. இந்திரபால தலைமையிலான குழுவினர் 1973ம் ஆண்டளவில் ஆராய்ச்சி மூலம் பெற்றுக் கொண்ட தொல்பொருள் சான்றுகள் பற்றிப் பார்ப்போம்.

டாக்டர். கே. இந்திரபால, முள்ளியவளை ஆசிரியர் சி. கன்னையன், வே. சுப்பிரமணியம் (முல்லைமணி) க.கனகையா, மாமுலையைச் சேர்ந்த க.தவராசா ஊஞ்சாற் கட்டியைச் சேர்ந்த சி. கணேசபிள்ளை, கோரமோட்டையைச் சேர்ந்த க.ஜெயக்கொடி ஆகியோரைக் கொண்ட குழுவினர், நெடுங்கேணி, பட்டாடை பிரிந்த குளம், கோரமோட்டை, வெடுக்கு நாறி மலை, வெடிவிச்ச கல்லு, முத்தரையன் கட்டு ஆகிய இடங்களில் அடர் காடுகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் சாசனங்கள், கட்டிட அழிபாடுகள் ஆகியவற்றை ஆராய்ப்பட்டது. வெடிவிச்ச கல்லிலே பாறை ஒன்றில் பொறிக்கப்பட்டிருக்கும் கி.பி முதலாம் நு}ற்றாண்டைச் சேர்ந்த சாசனம் ஒன்றும் ஆராய்பட்டது. இவை எல்லாவற்றிற்கும் முற்பட்ட சாசனங்கள் வெடுக்கு நாறி மலையிலுள்ள குகைகளில் காணப்பட்டன. இவை இரண்டாயிரத்து இருநு}று ஆண்டுகளிற்கு முற்பட்டவை. இக்குகைகளில் மூன்று கல்வெட்டுக்களும் காணப்பட்டன. முத்தரையன் கட்டிலே கி.பி ஒன்பதாம் நு}ற்றாண்டைக் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் அகழ்ந்து வெளிப்படுத்தப்பட்டது.|| எனவும் கூறும் டாக்டர். இந்திரபால தாம் முத்தரையன் கட்டுக் காட்டில் கண்ட அரண்மனையைப் பற்றிப் பின்வருமாறு விபரிக்கின்றார்.

~~முத்தரையன் கட்டியே ஆராயப்பட்ட கட்டிட அழிபாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும், வியப்ப10ட்டுவனவாகவும், காணப்பட்டன. அது ஒரு பெரிய அரண்மனை கருங்கற்களினாலான் உயரமான சுற்று மதிலையும் அதனைச் சுற்றி ஆழமான அகழியையும் கொண்ட விசாலமான அரண்மனையாக அது காணப்பட்டது. அரண்மனை மத்தியில் நல்ல நிலையிலுள்ள சீராகச் செதுக்கப்பட்ட வாசல்கள் கதவுகள் காணப்பட்டன. அத்துடன் மன்னர்கள் பயன்படுத்திய பெரிய கல்லாசனம் ஒன்றும் உடையாது பேணப்பட்டு இருக்கின்றது.||

இந்த அழிபாடுகளை நோக்குமிடத்து முத்தரையன் கட்டு ஒரு காலத்தில் ஓர் இராசதானியாக விளங்கியிருக்க வேண்டும் என்று கூறக் கூடியதாக உள்ளது. எனினும் அதன் பிறகு இது சம்பந்தமாக செய்திகள் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. நாட்டுப் பிரச்சினை காரணமாக அவ்வாராய்ச்சிகள் தடைப்பட்டிருக்கலாம். இனி, வெட்டு நாறி மலையில் ஆராய்ச்சியை மேற்கொண்ட விதி துருவசங்கரி எனும் ஆராய்ச்சியாளர். எழுதியுள்ளதைப் பார்ப்போம். அவர் அதை ஓர் நேரடி விபரிப்பாகத் தந்துள்ளார். அதனை சில சுருக்கங்களுடன் தருகிறேன்.

~~பெரிய கல்லுருண்டைகள், அதனிடையே படிகள் போன்று இயற்கையாக அமைந்த அமைப்புக்கள் அதன் உதவியுடன் எட்டுப் பத்து அடிகள் ஏறியிருப்போட். எம் முன்னே மூன்று பெரியபாரிய செவ்வக அமைப்புடைய கற்குற்றிகள், அவற்றில் இரண்டு உயர்ந்து ஒன்றிற்கொன்று சமாந்தரமாகவும், குறுகியது இவ்விரண்டையும் தொடுத்தாற் போல் குறுக்கே செங்குத்தாக இருந்தது. அம்மாதிரியான பாரிய கற்கள் அவ்வட்டாரத்தில் எவ்விடத்திலும் இல்லை. குறுக்கே கிடந்த கல் கிட்டத்தட்ட 40 அடிஅகலமும். 20 அடி உயரமும் இருக்கும். அக்கல்லு வழமையாக படம் எடுக்கும் நாகத்தின் தலையைப் போல் குடையப் பெற்று மழையின் போது வடிந்து வரும் நீர் எங்கே குகைக்குள் போய்விடுமோ என்ற அச்சத்தின் நிமித்தம் குகை வாசலைச் சுற்றி விளிம்பு அமைக்கப்பட்டிருந்தது. குகை வாசலில் ஏதோ புரியாத எழுத்துக்கள், இவை எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு என்னுடைய குறிப்பேட்டில் எழுத்துக் கொண்டு என்னுடைய குறிப்பேட்டில் எழுத்துக்களின் மாதிரியை பதிவு செய்து கொண்டேன்.

பின் நீண்ட ஒரு தடியினால் குகைச் சுவர் வழியாக அதன் அடியைக் கிண்டினேன். கூட வந்த எல்லோரும் அதிசயித்தனர். அங்கே சலசலவென நீரின் சத்தம். திரும்பத் திரும்ப சோதித்துப் பார்த்தேன். அது நீரினால் நனைந்திருந்தது. இப்போது புரிந்தது அது மழை நீரைச் சேமிப்பதற்கான அமைப்பு என்று. கல்லில் விழும் மழைத்துளிகள் படமெடுத்த பாம்பின் அமைப்பின் மூலம் சேர்க்கப்பட்டு வடிந்து கீழே உள்ள நீர்த்தொட்டியில் சேமிக்கப்படுகிறது. அப்படியாயின் முன்பு கூறியது என்ன? விளிம்பு அமைக்கப்பட்டு நீர் உள்ளே வடியாமல் அமைக்கப்பட்டது. எப்படியாக முடியும்? ரொம்ப நல்ல கேள்வி. நீங்களும் என்னுடன் சேர்ந்து உசாராகிவிட்டீர்கள். பாறை செவ்வகவடிவம் அதன் மேற்பரப்பில் து}சு முதலியன அடைவதற்கு சாத்தியம் உண்டு.
அங்கே சில தாவரங்கள் கூட முளைத்திருக்கின்றன. அதனைப் பின்னர் ஆராய்வோம். அப்படியாயின் பாறை உச்சியில் விழும் நீர் வடியும் போது மண், சருகுகள் போன்றவற்றை அள்ளி சேமிப்பறைக்குள் கொண்டு வந்து சேர்த்து விடுமல்லாவா, இதைத் தடுப்பதற்கு செங்குத்தாக அன்றேல் கிட்டத்தட்ட செங்குத்தாக அதாவது து}சுகள். குப்பைகள் சேராத இடத்தில் விழும் மழைநீர் மட்டுமே சேமிப்பறைக்குள் கொண்டு வந்து சேர்த்து விடுமல்லவா, இதைத் தடுப்பதற்கு செங்குத்தாக அன்றேல் கிட்டத்தட்ட செங்குத்தாக அதாவது து}சுகள். குப்பைகள் சேராத இடத்தில் விழும் மழைநீர் மட்டுமே சேமிக்கப்படுகிறது. நில நீர் இல்லாத இடங்களில், ஆறு, குளங்கள் இல்லாத இடங்களில் குடிநீரைச் சேமிக்கும் பழக்கம் இலங்கை ஆதிக்குடிகளிடம் இருந்திருக்கிறது என்பதில் எள்ளளவிலும் ஐயமில்லை. பின், பாறையைச் சுற்றி வந்தோம் படமெடுக்கும் நாகத்தின் தலையமைப்பைக் கொண்ட குகையின் பின்புறத்தே பற்றுவாரிக்ள விடக்கூடிய தரைமேலே ஒரு பக்கம் திறந்த மண்டபம். பக்கவாட்டில் இருந்த ஒன்றுக்கொன்று சமாந்தரமாகக் கிடக்கும் செவ்வகப் பாறைகள் உள்ளே வளைந்து ஒன்றையொன்று முட்டத்துடித்துக் கொண்டிருந்தன.

மண்டபத்தினுள் இருந்து மேலே அண்ணாந்துபார்த்தால் ஒன்று, ஒன்றரையடி அகலத்தில் அறுபது அடி நீளத்தில் இரு சமாந்தரக் கோடுகளின் வழியாக நீல வானம் தெரிந்தது. அப்போது மழை சற்று பலமாகப் பெய்யத் தொடங்கியிருந்தது. இருப்பினும் எங்கள் மேனியில் ஒரு துளி கூட நீர் படவில்லை. ஆனால் மழைநீர், வளைந்த கற்பாறைகளின் சுவர் வழியாக வழிந்து மண்டத்தின் தரையை அடைந்தது. எல்லாம் ஒரே விந்தையாக இருந்தது. மண்டபத்தின் மூடிய பகுதியில் தான் மூன்றாவது பாரிய கல் அடைத்துக் கொண்டிருந்தது. அதன் மத்தியில் இருந்தது சற்று வலது கைப்புறமாக இரண்டரை அடி விட்டத்தில் சீரற்ற உருவில் வழி ஒன்று இருந்தது. அதனு}டே எட்டிப் பார்த்தேன். அங்கு இருட்டு நிரம்பியிருந்தது. நீண்ட தடியை அவ்வழியினு}டாக விட்டு உள்ளே சகல திசைகளிலும் அசைத்துப் பார்த்தேன். உள்ளே எல்லாத் திசைகளிலும் பத்து அடிக்கும் மேலாகவே குகையின் விஸ்தீரணம் இருந்தது. குகை தரைமட்டத்திற்கு ஆயத்தமானார். ஆனால் நான் அவரைத் தடுத்து விட்டேன்.

எங்களிடம் டோர்ச் லைட்டோ, ஏன் கேவலம் ஒரு தீப்பந்தமோ இருக்கவில்லை. இப்படியான குகைக்குள் காபனீரொட்சைட்டின் செறிவு அதிகமாக இருக்கும். அது உயிராபத்தை விளைவிக்கக் கூடியது எவ்வித தற்காப்பு வழிகளும் இல்லாமல் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அறிவற்ற செயலாகும்.

மண்டபத்திற்கு வெளியே சிறிய கற்களால் ஓட்டுச் சல்லிகளாலும் ஆன சிறிய மேடை அதை ஒரிரு காட்டு மரங்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தன. அதில் குரங்குக் கூட்டங்கள் தாவி விளையாடிக் கொண்டிருந்தன. கீழே கரடி எச்சங்கள் மூக்கை அரித்தது. ஆதிகாலமட்பாண்டத் துண்டுகள் அங்கும் இங்குமாக வெளியே தலை நீட்டிக் கொண்டிருந்தன. அவற்றைக் குழப்பவோ அன்றேல் கிண்டி எடுக்கவோ நான் விரும்பவில்லை. தகுந்த முறையில் புதைபொருளாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற முடிவோடு அவ்விடத்தை விட்டு அகன்று, மீண்டும் குகையின் முன்பக்கம் வந்து ஆராய்ந்தோம். குகையின் இடப்புறத்தில் அதாவது இரண்டு பாறைகள் சந்திக்கும் இடத்தில் இருந்த இடைவெளியில் சிக்கிக் கிடந்த மண்ணில் முளைத்து சிறு மரமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது ஆலமரமொன்று. அதன் வேர்கள் கல்லின் இடுக்கின் ஊடாக தரையை எட்டிப் பிடிக்க துடித்துக் கொண்டிருந்தது. அதனைப் பிடித்து ஏறி நாம் எல்லோரும் பாறையின் உச்சியினை அடைந்தோம். அங்கே ஒரு பீடம்,  அப்பீடத்தின் வெடிப்புகளில் ஓர் இரு நாகதாளி மரங்கள் ஆளவு உயரத்திற்கு வளர்ந்திருந்தன. அங்கே ஓர் பத்தடி உயரமுள்ள கற்று}ண் நிலைக்குத்தாக இருந்தது. இத்து}ணானது எதோடும் பொருத்தப்படாமல் சுகந்திரமாக இருந்தது. அத்து}ணில் எந்த விதமான குறியீடுகளும் காணப்படாத போதிலும், அவை எகிப்திய நாட்டில் காணப்படும் கற்று}ண்களை ஒத்திருந்தன. இது மட்டுமல்ல அங்கே யாரோ விகாரை கட்ட எடுத்த முயற்சியை பறை சாற்று முகமாக அண்மையில் குவிக்கப்பட்ட சிறு கற்களும் சலித்த மணல் குவியலும் விகாரையின் கோபுரத்திற்கு தேவையான வட்டக் கற்களும் கிடந்தன.

ஆத்திரம் மீறிக் கொண்டு வந்தது. வெட்டி நாறி மலையை, வெட்டி நாறி விகாரையாக மாற்ற யாரோ அண்மையில் முயற்சி செய்திருந்தனர். அவ்வளவு து}ரம் மதவெறி இலங்கையரை ஆட்டிப் படைக்கிறதா?  வெட்டி நாறி மலையின் மூன்று பாறைகளும் மனிதனின் படைப்பல்ல! இயற்கையாய் அமைந்தனவே. வடக்கு சமதரையின் முடியில் இப்படியான கனக்குற்றி வடிவில் கற்பாறைகள் உண்டு (மகா இலுப்பள்ளம்) இப்படி இயற்கையாக அமைந்த கோடிக்கணக்கான ஆண்டுகள் வயதுடைய இடங்கள் எப்படி பௌத்த சின்னமாக முடியும்? இயற்கையான அவ்விடத்தை ஆதிக் குடிகள், தமது இருப்பிடமாக்கிக் கொண்டார்கள். அங்கு எவ்வித மத வழிபாட்டுக்குரிய சின்னங்கள் கூட இல்லை. அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகளின் தெய்வவமாகப் பகலில் தெரியும் சூரியன் விளங்கியிருக்கலாம்|| (சூரியனுக்கு கோவில் கட்டி வழிபடும் வழக்கம் மிக அரிதாகவே பழங்குடிகளிடம் இருந்து வந்திருக்கின்றது என்பதற்கு போதிய ஆதாரங்கள் உண்டு). என மேலும் கட்டுரையை யாழ்ப்பாண தொல்பொருள்கள் நோக்கி நகர்த்திச் செல்கிறார். ஆசிரியர். ஆனாலும் எனது கட்டுரைத் தலையங்கத்திற்கு உட்பட்டு இத்துடன் அவர் கட்டுரையை நிறுத்திக் கொள்கிறேன்.

அடுத்து வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த நெடுங்கேணியிலுள்ள வெடிவைத்த கல்லு (வெடிவிச்ச கல்லு) என்னும் விவசாயத் குடிமக்கள் வாழ்கின்ற புராதன கிராமத்தில் உள்ள ஆதி முத்துமாரியம்மன் ஆலயத்தின் பாழ்ங்கிணறு ஒன்றை ஆழமாக்க முற்பட்ட போது. 1980ம் ஆண்டளவில் பெரும் பிரியத்தனத்தின் பின் வெளியே எடுக்கப்பட்ட இரண்டடி நீளமும் ஒன்றேமுக்கால் அடி அகலமும் உள்ள கல் உள்ளடக்கிய ஒரு அடி உயரமான முத்துமாரியம்மனின் பாதவிம்பம் பதிந்த, இயந்திரம் பொதித்த பாதார விம்பம் மேலும் ஒரு வரலாறு சொல்லக் கூடிய தரும் பொருளாகத் திகழ்கிறது. இது வன்னியர் ஆட்சிக் காலத்தில் சிறப்புடன் மிளிர்ந்த ஆலயத்தினதாகும். இச்சிலை அவ்வாலயத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இவை யாவும் அறியப்பட்ட தொல்பொருட்களே இவற்றை விடவும் வேறும் வரலாற்றுச் சான்றுகளாக விளங்கக் கூடிய தொல்பொருட்கள் வன்னி மண்ணில் இருக்கலாம். அவையாவும் சமாதானம் ஏற்படும் ஒரு நாளில் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். அவை மூலம் எமது வரலாற்றுப் பாதைகளிலுள்ள வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

நன்றி: யோகநாதன் திலீபன் – விடுகை வருடம், பொறியியல் பீடம்

**********

பண்டார வன்னியன் !வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக இந்த மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன்தான் பண்டாரவன்னியன்.

செவிவழிக் கதைகளுடன் கலந்து சொல்லப்பட்டு வந்த பண்டாரவன்னியனின் வீரவரலாற்றை ஆவண நிரூபணங்கள் கொண்ட உண்மை வரலாறாக ஆக்கும் முயற்சி என்பது காலத்தின் தேவையாகும்.

இந்த வரலாற்றுத் தேவையை நிறைவேற்றும் பணியினை முல்லைத்தீவு மாவட்ட பண்டாரவன்னியன் அறங்காவல் கழகம் தனது கடமையாக எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது.

வரலாறு என்பது ஒரு இனத்தின் உயிரைப் போன்றது. வரலாறு ஆவணப்படுத்தாவிடின் குறித்த இனம் அடையாளம் தெரியாதபடி கால ஓட்டத்தில் அழிந்துவிடும். இதனால்தான் ஆக்கிரமித்த இனத்தின் வரலாற்றை அழித்து விடுவதில் ஆக்கிரமிப்பாளர்கள் கவனம் எடுக்கின்றனர்.

தமிழரின் வரலாற்றை அழித்து விடுவதில் சிங்களப் பேரினவாதிகள் பகீரத முயற்சிகள் எடுப்பதும் நாம் அறிந்தே தமிழரின் வாழ்விடங்களின் தொன்மைப் பெயர்களை அழித்து சிங்களப் பெயர்கள் சூட்டுவதும், தமிழரின் ஆவணக் காப்பகங்கள், நூலகங்களை எரித்து அழிப்பதும் தமிழரின் வரலாற்றை தமிழ் மாணவர்களின் பாடநூல்களில் இருந்து விலக்குவதும் என்று தமிழரின் வரலாற்றை அழிக்க சிங்களப் பேரினவாதிகள் முயற்சித்தபடியுள்ளனர்.

இதனை முறியடித்து தமிழரின் வரலாற்றை எமது சந்ததியினர் அறியும் வகையில் நூலுருவாக்கிப் பரப்புவது தமிழ் அறிஞர்களின் வரலாற்றக் கடமையாகும். ஆங்கிலேயரின் ஆயுத பலத்திற்கு அஞ்சாமல் விடுதலை உணர்வுடன் போரிட்டவன்தான் மாவீரன் பண்டாரவன்னியன்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வீரத்துடன் அந்நியரை எதிர்த்துப் போராடிய அந்த மாவீரனது கதைகள் எம்மைப் பெருமை கொள்ள வைக்கின்றன. அந்தப்போர்கள் நடந்த ஊர்களின் பெயர்களை உச்சரிக்கும் போது மனதில் உணர்வெழுச்சி பொங்குகின்றது.

இதற்கெல்லாம் வரலாற்று உணர்வுதான் காரணம். வரலாற்று உணர்வென்பது மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு இனம் தனது மண்ணின் பெருமைகளை உயர்விலை கொடுத்துக் காப்பதற்கும், வளர்ப்பதற்கும் இந்த வரலாற்று உணர்வுதான் காரணமாக இருக்கின்றது.

பண்டாரவன்னியன் போன்று இந்த மண்ணின் வீரப்புதல்வர்களது, வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அந்த வீரவரலாறுகள் எமது எதிர்காலச் சந்ததிக்கு விடுதலையுணர்வை ஊட்டிக்கொண்டே இருக்கும்.

” பண்டாரவன்னியன் ”

துரோகிகளைச் சந்திக்க நேர்ந்த அந்த தூயவனுக்கு நல்ல நண்பர்களும் இல்லாமலில்லை. கி.பி. 1815-ம் ஆண்டு வரையில் கண்டியை ஆட்சி செய்து ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்து வேலூர் சிறையில் பதினாறு ஆண்டுக்காலம் அடைக்கப்பட்டு அந்தச் சிறையிலேயே உயிர்நீத்த கண்ணுசாமி என்ற விக்ரம ராஜ சிங்கன், பண்டாரக வன்னியனின் உயிர்த்தோழனாவான்.

எல்லை பிரிப்பு

காட்டிக் கொடுப்போரால் மனம் நொந்த அந்த மாத்தமிழனின் எரிமலை இதயத்தை சிறிது மாற்றியமைத்து, அவன் இளைப்பாறும் குளிர் தருவாக குருவிச்சி நாச்சியார் என்னும் கோதையொருத்தியும் இருந்தாள்!

மனஉறுதியின் அடிப்படையில் கட்டப்பட்ட அந்தக் காதல் மாளிகை, ஒரு வைராக்கிய மாளிகை! தியாக மாளிகை!

போர்வாளைத் தனது கொடியின் சின்னமாகக் கொண்டு – புலியெனப் பாய்ந்து களம் பல கண்ட – பண்டாரக வன்னியனின் உருவமோ;

உயர்ந்த தோற்றம்! விரிந்த மார்பு! ஒடுங்கிய இடை! பரந்த நெற்றி! உரமேறிய தோள்கள்!

கூரிய பார்வை! அந்தத் தீரனின் அஞ்சாநெஞ்ச வாழ்க்கையின் அடிச்சுவட்டில் விளைந்த வீரமண்ணின் தீரர்களையும், வீரர்களையும், தியாகிகளையும் அவர்களின் சரிதங்களையும் முத்தாரமாகக் கோத்து நான் வழங்கிய அந்தப் போர்க் காதையின் முடிவை எவ்வாறு தீட்டியுள்ளேன் என்பதைப் படித்துப் பார்த்தால் – இதோ படித்துத்தான் பாருங்களேன்!

குருவி நாச்சியார் சற்று குழப்பமடைந்தாள். பண்டாரக வன்னியன் எதிரியிடம் தோல்வியுற்று, அவனிடம் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு, அவன் கூடாரத்தில் அமர்ந்து விருந்து அருந்துகின்றான் என்று வெள்ளையர் தளபதி எட்வர்ட் என்பவன் கூறியதைக் கேட்டு, குருவி நாச்சியார் குழப்பமடைந்தாள். ஆனால் ஒன்று – ஆங்கிலேயப் படையினரின் நவீன போர்க் கருவிகளுக்கு மத்தியில் அப்படியொரு தோல்வி பண்டாரகனுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதையும் அவளால் முழுமையாக மறுக்கமுடியவில்லை.

எனவே “சரி வருகிறேன்!” என்று கூறிக் கொண்டே வாளை உறையில் போட்டுக்கொண்டு குருவிச்சி நாச்சியார் எட்வர்டைப் பின் தொடர்ந்தாள்; பண்டாரகனை சந்திக்க!

எட்வர்டைச் சேர்ந்த இரு வீரர்களும், குருவிச்சியின் இரு வீரர்களும் முல்லைத் தீவு அரண்மனையின் முகப்பிலேயிருந்து அந்த இருவரின் பின்னால் தொடர்ந்து சென்றார்கள். ஆறு குதிரைகளும், முல்லைத் தீவின் தெருக்கள் பலவற்றைக் கடந்து நீண்ட குறுகிய சாலையொன்றில் போய்க் கொண்டிருந்தபோது எதிரில் ஒரு குதிரையில் ஓர் ஆங்கிலேய வீரன் மிக வேகமாக வந்து எட்வர்டின் முன்னால் குதிரையை நிறுத்தினான்.

எட்வர்ட், அந்த வீரனை இறுமாப்புடன் நோக்கி “என்ன?” என்றான்.

அந்த வீரன், ஒரு கடிதச் சுருளை எட்வர்டின் கையில் கொடுத்தான். எட்வர்ட், அந்த மடலைப் பரபரப்புடன் படித்துப் பார்த்தான் மனதுக்குள்ளாகவே!

“அன்புள்ள எட்வர்ட்! பண்டாரக வன்னியன், அவனது படை வீரர்கள் ஐம்பது பேருடன் ஓட்டுச் சுட்டான் பகுதியில் நெடுங்காணி சாலையருகே நமது படைகளால் வளைக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டு விட்டான். நண்பா! நீ உடனே பனங்காமம் சென்று அங்கே மிக ஆவேசமாக நம்மை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கும் குருவிச்சி நாச்சியாரைத் தோற்கடித்தாக வேண்டும் – இங்கனம் வான்ட்ரி பெர்க்” எனக் கடிதம் பேசிற்று!

எட்வர்ட், மனதுக்குள் மகிழ்ந்து கொண்டான்! பனங்காமம் செல்லும் வேலையில்லாமலேயே குருவிச்சியை ஏமாற்றி அழைத்துப் போகிறோமே என்ற எக்களிப்பால் அவன், தன்னைத் தானே புகழ்ந்து கொண்டான். குருவிச்சி எதுவும் நினைத்து விடக் கூடாதே என்பதற்காக அவளைப் பார்த்து புன்னகை புரிந்தவாறு “நீ முதலில் கேட்டாயே, கூடாரம் எங்கே இருக்கிறது என்று – இந்தக் கடிதத்தில் அந்த விபரம் வந்திருக்கிறது” என்றான் எட்வர்ட்!

“எங்கே இருக்கிறது?” என்றாள் குருவிச்சி

“ஓட்டுசுட்டான் பகுதி நெடுங்கேணிச் சாலையருகில் இருக்கிறதாம்!”

கடிதத்தைச் சுருட்டி, அதைக் கொண்டு வந்த வீரனிடமே எட்வர்ட் வீசி எறிந்தான். அந்த வீரன் அதை லாவகமாகப் பிடித்துக் கொண்டான்.
பண்டார வன்னியன் சொன்ன ஆறுதல்…

உயர்ந்த மரங்கள் அடர்ந்த தோப்பு. அந்தத் தோப்புக்குள்ளே ஒரு கூடாரம். கூடாரத்தையொட்டியுள்ள மரங்கள் ஒவ்வொன்றிலும் முல்லைத்தீவின் வீரன் ஒருவன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறான். அப்படி ஐம்பது வீரர்கள் கட்டப்பட்டிருக்கிறார்கள். அவர் களுக்கு நடுவே ஒரு பெரிய வலுவான மரத்தில் சங்கிலியால் கட்டுண்டு பண்டாரக வன்னியன்.

அந்தக் கொடுமையான காட்சியைப் பார்த்ததும் குருவிச்சி, தன்னை மறந்து ஓடிப்போய் பண்டாரகனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கோவெனக் கதறிவிட்டாள். அவளது கூந்தலைக் கோதிவிட்டவாறு, பண்டாரகன் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

“கவலைப்படாதே! இந்தத் தோப்பில் களைப்பாறிக் கொண்டிருந்த எங்களைத் திடீரெனச் சூழ்ந்து கொண்டு வென்று விட்டதாக ஆர்ப்பாட்டம் புரிகிறார்கள்.”

பண்டாரகன் புலியாக உறுமினான்!

“இவர்களுடன் நீங்கள் உடன்பாடு செய்து கொண்டதாகக் கூறி என்னை அழைத்து வந்தார்களே!”

“உடன்பாடா? இலங்கை மண்ணையும் தமிழ் ஈழத்தையும் அந்நியராம் ஆங்கிலேயர்க்கு அடிமையாக்க ஒரு உடன்பாடா? அதற்கு இந்த உயிர் உள்ளவரையில் என் தலை அசையுமென நீ நம்புகிறாயா?”

குருவிச்சி பேசாமல் நின்றாள். ஏதோ தீர்க்கமாக சிந்தித்தாள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாக வான்ட்ரி பெர்க்கையும், எட்வர்ட்டையும் பார்த்துச் சொன்னாள்.

“அவர் அப்படித்தான் பேசுவார் – ஆனால் நான் அவரை என் வழிக்குக் கொண்டு வர முடியும் – உங்களோடு இதுவரை உடன்பாடு செய்து கொள்ளாவிட்டாலும், இனி ஒரு உடன்பாடு செய்துகொள்ள நான் தயார்! இவரும் என் பேச்சைத் தட்டமாட்டார்!”

என்று கூறிக்கொண்டே குருவிச்சி, பண்டாரகனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டியபடி, “என் பேச்சைத் தட்டக்கூடாது! என்ன சரிதானா?” என்று கேட்டாள். பண்டாரகன் குருவிச்சியின் மனதைப் புரிந்து கொண்டு மௌனமாக நின்றான்.

“மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி! காலமெல்லாம் ஆங்கிலேயருடன் போரிட்டு நாங்கள் களைத்துப் போய்விட்டோம். எங்களின் பழைய படைக் கருவிகள் அற்புதமானவை! ஆற்றல் வாய்ந்தவை! ஆயினும் உங்களின் நவீன ஆயுதங்கள் முன்னால் அவை நிற்க முடியவில்லை! ஆயுதங்களின்றியே நாங்கள் பல சாகசங்களைச் செய்யக் கூடியவர்கள்! வாளையும், ஈட்டியையும் வைத்துக் கொண்டே இந்த வையகம் விளங்கும் சாதனைகளைச் செய்வோம்!”

என்று குருவிச்சி பேசிக் கொண்டிருக்கும்பொழுதே, வான்ட்ரி பெர்க் குறுக்கிட்டு,

“வாளையும் ஈட்டியையும் வைத்துக் கொண்டு அப்படியென்ன வையம் புகழக்கூடிய சாதனைகளைச் செய்வீர்கள்?”

என்று வியப்புடன் கேட்டான்.

ஈட்டியும் வாளும் என்ன செய்யும்?

“எங்கள் வீரர்கள் ஐம்பது பேரை இரு பிரிவாகப் பிரித்து இருபுறமும் நிறுத்துவோம். அவர்கள் கைகளில் வாட்கள் இருக்கும். நான் என் தலையின் மீது ஈட்டியால் குத்தப்பட்ட ஒரு பெரிய பழத்தை வைத்துக்கொண்டு நடுவில் நிற்பேன். எங்கள் ஐம்பது வீரர்களும் எதிரும் புதிருமாக வாளுடன் பாய்ந்து யாருக்கும் ஒரு காயமில்லாமல் என் தலையில் ஈட்டி முனையில் உள்ள பழத்தை ஐம்பது துண்டுகளாக ஒரே வெட்டில் வெட்டுவார்கள். ஒரே ஒரு பழத்துண்டு மட்டும் ஈட்டியுடன் என் தலைமீது எஞ்சியிருக்கும்.”

குருவிச்சி இதைச் சொன்னவுடன், “அப்படியா?” என்ற கேள்வியுடன் வான்ட்ரி பெர்க், வீரர்களைப் பார்த்து “ஏய்! பண்டாரக வன்னியனைத் தவிர மற்றவர்களை அவிழ்த்து விடுங்கள்! அந்த அதிசய சாதனையை அவர்கள் நிகழ்த்தட்டும் பார்க்கலாம்” என ஆணையிட்டான்.

“பண்டாரகனைத் தவிர” என்றதும் குருவிச்சிக்குப் பெரும் ஏமாற்றம்தான்! ஆனாலும் சமாளித்துக் கொண்டாள்.

பெரிய பழமொன்றை ஈட்டியில் பொருத்தி, தன் தலை மீது வைத்துக் கொண்டு நடுவில் நின்றாள். பண்டாரகனைத் தவிர கட்டவிழ்த்து விடப்பட்ட முல்லைத் தீவின் வீரர்கள் ஒரு பக்கத்துக்கு இருபத்தைந்து பேராக வாட்களுடன் குதிரைகளில் அமர்ந்திருந்தனர்.

“உம்! பாயலாம்!” என்று குருவிச்சி தனது கையை ஓங்கித் தட்டியதுதான் தாமதம். அந்த ஐம்பது வீரர்களும் அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேய வீரர்களுடன் மோதினர். பெரும் அமளிக்கிடையே பண்டாரக வன்னியனின் கட்டுக்கள் களையப்பட்டன. பண்டாரகன், பாயும் புலியாகவே ஒரு குதிரையிலேறி எட்வர்டைக் குத்திச் சாய்த்தான். நூற்றுக்கணக்கான ஆங்கிலேய வீரர்களின் உடல்கள் துண்டு துண்டுகளாகச் சிதறின.

கீழே சாய்ந்த எட்வர்டு, மரண மூச்சு விட்டுக்கொண்டே தனது துப்பாக்கியைத் தூக்கினான். துப்பாக்கிக் குண்டு, குருவிச்சியின் நெற்றிப் பொட்டை நோக்கிப் பாய்ந்தது. அதற்குள் அவளைத் தூக்கிக் கொண்டு போகப் பண்டாரக வன்னியன் குதிரையுடன் அவளிடம் பாய்ந்தான். ஆனால் அதற்குள் துப்பாக்கிக் குண்டுகள் அவள் உயிரைக் குடித்துவிட்டன.

‘காட்டுக்குள் போகும்’ வரலாறு…

அவள் மூச்சு நின்றுபோனது தெரியாமலே குதிரை மீது அவளை அணைத்தவாறு பண்டாரக வன்னியன், ஆங்கிலேயரிடமிருந்து தப்பிவிட்டான். எஞ்சிய அவனது வீரர்களும் அவனைப் பின் தொடர்ந்தனர்.

மணக்கோலம் பூண்டு வாழ்வின் சுவை அறியத் துடித்தவள் – இலட்சியத் திருவிளக்காய் – அணைந்தும் அணையாத தியாகச் சுடர்விளக்காய் – பிணக்கோலம் பூண்டு, பண்டாரகனின் மடியில் படுத்துக் கொண்டு – அவனது இறுக்கமான தழுவலுடன் குதிரையில் வேக வேகமாகப் போய்க் கொண்டிருந்தாள்.

அவள் உயிருடனிருப்பதாகவே கருதிக்கொண்டு அவனும், அவனைப் பின்தொடர்ந்த தமிழ் வீரர்களும் காட்டுப் பாதையில் நெடுந்தூரம் சென்று கொண்டிருந்தனர்.

காட்டுப் பாதையில் சென்று அவர்கள் அன்று காட்டிய பாதை வீரமறவர்களின் பாதை! பண்டாரக வன்னியன் ஒருவனல்ல; அவனைப் போல பலர்; உறுதியும் வாய்மை ஒளியும் உணர்வும் கொண்டவர்கள் தோன்றிட – அந்த மாவீரனின் வரலாறு பயன்படத் தவறவில்லை. எனவே அது வாழும் வரலாறு!”

*********

ஆவணி   25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள் !

ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.

இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். ஆவணி   25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது.

முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டபின் 1997 ஆம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவுநாள் ஆவணி  25 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டது.

ஆவணி  25 இற்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு?

அந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது.

வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்தநாள்தான் ஆவணி 25.

பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூர்கின்றோம்.

 

 

மேஜர். பிரான்சிஸ் வீரவணக்க நாள்

விடுதலை ஒளியாக,தமிழர் அரசியல் வானில் மேஜர். பிரான்சிஸ். கல்லாறு மண் ஈன்ற வீரப்புதல்வன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பமும், விடுதலைப் போராட்ட எழுச்சியும் 1978 ஆண்டிலும், 1980 களிலும் தீவிரமடைந்திருந்தன…..

…இவ்வெழுச்சியில் தமிழ் இளைஞர் பேரவையின் செயல்பாட்டிலிருந்த பலரும் இணைந்ததன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் பல்வேறு மட்டத்திலும் ஆதரவும், அனுசரணையும் இருந்ததைக் குறிப்பிடக் கூடியதாகவுள்ளது. ஏனெனில் இவ்விளைஞர்களின் நேர்மையும், புரட்சிகரப் பார்வையும், இனத்தின் மீதிருந்த பற்றும் அளவிட முடியாதளவு மிகுந்திருந்ததைக் காணக் கூடியதாகவும் இருந்தது.

தமிழர் வரலாற்றில் புதிய அத்தியாயமொன்று காலம்பிந்தி எழுதப்படுவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எழுச்சியும், விடுதலைக்கான போரும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததோ அந்த வகையில் இயக்கத்தின் உறுப்பினர்களாகச் செயல்பட்ட போராளிகளின் செயல்பாடுகளும் கணக்கிட முடியாதளவுமிருந்தன.

காலத்தால் அழியாத விடுதலைக்கான போர்க்காவியம் ஒன்று உலகத்தில் எழுதப்பட்டு இனிவரும் காலங்களில் தேசிய இனங்களின் விடுதலையில் முக்கியமாக எடுத்துக் கொள்ளக்கூடிய நிலையில் போராட்ட பாரம்பரியத்தை ஏற்படுத்திய விடுதலைப் புலிகள் இயக்கமும், போராளிகளும் என்றும் நினைவு கூரப்படும் நிலையில் எதிர்பார்க்கமுடிகின்றது.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் அரசியல்துறைப் பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ் (சடாச்சரபவன்) 1985 ம் ஆண்டு காலப்பகுதியில் தளபதி அருணா அவர்களினால் நிருவாக ஒழுங்கமைப்பில் இந்தப் பொறுப்பு பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இப் பொறுப்புக்கான பணியமர்த்தலில் தேசியத் தலைவர் அவர்களின் விருப்பமும் தளபதிக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

“அரசியல்” என்ற சொல்லின் அர்த்தம் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கமான விடுதலைப் புலிகளின் கொள்கையில் மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் இலட்சியப்பற்றுடன் கூடிய உணர்வுகள் உணர்த்தப்பட்டு மக்களை அணிதிரட்டி விடுதலையை பெற்றுக்கொள்வதே என்பதாகும். இந்த வகையில் நாடு கடந்த சித்தாந்தங்களுக்கப்பால் தமிழ்த் தேசிய இனத்தின் இலக்கண வாழ்வையும், மண்ணின் மகிமையையும், பொருண்மியப் பண்பாட்டையும் உட்படுத்தியதான உண்மையின் வெளிப்பாடாக அரசியலும், அதுசார்ந்த வேலைகளும் அமைந்ததாக இருந்தன. தாய் மொழி, மொழி இலக்கியம், பண்பாடு, நில உரிமை போன்றவைகள் குறையாமல் மக்கள் வழி நடத்தப்படுவது எமக்கான அரசியல் என இனங்காணப்பட்டிருந்தன.இந்த வகையில் எமக்கேற்ற பொருளாதார அமைப்பு உருவாக்கப்படும் என்ற நிலையும் அடிப்படையாக விளங்கியது. ஊடகத்துறையிலும் எமது இனத்தின் தனித்துவம் வெளிப்படுத்தப்பட்டதான வகையில் உண்மையும், நேர்மையும், நீதியான கோரிக்கைகளும் உள்வாங்கப்பட்டதாக வெளியீடுகளும், பத்திரிகைகளும், வெளிவந்தவண்ணம் அரசியல் வேலையும் தொடர்ந்திருந்தன.

அரசியல் வேலைகளில் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்து தலைவரின் நம்பிக்கையையும் பெற்றுக்கொண்ட பிரான்சிஸ் மட்டக்களப்பு நகரத்தில் கல்விமான்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் ஆதரவையையும், பத்திரிகையாளர்களின் புரிந்துணர்தலையும் பெற்றுக்கொண்டார்.1980 களில் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை வரலாற்றில் எழுச்சியுற்ற காலம் தொடங்கியது என்பதனால் ஒவ்வொருவரும் தாம் இருந்த நிலையில் தமது கடமையை வரலாற்றில் செய்வதற்கு பிரான்சிஸ் அவர்களின் அரசியல் வேலை உறுதுணையாக அமைந்தன.

மட்டக்களப்பில் வண பிதா சந்திரா பெர்னாண்டோ, தமிழர் ஆசிரியசங்கத் தலைவர் வணசிங்கா அதிபர், 1980 களில் பிரபல்ய பத்திரிகையாளரும், மாவீரருமான கப்டன்.நித்தி, சட்டத்தரணியும் மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சங்கச்சம்மேளனச் செயலாளரும் மாவீரருமான மேஜர். வேணுதாஸ் ஆகியோர் விடுதலைப் புலிகளின்பால் ஈர்க்கப்பட்டு, ஆதரவு வழங்கிய நிலையில் தமிழ் மக்களின் தேசிய விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகள் மிளிர்வதற்கு பிரான்சிஸ் மட்டக்களப்பில் செய்த அரசியல் வேலை காரணமாக அமைந்ததைக் குறிப்பிட முடிகின்றது. ஓரு பண்பான, மக்களை மதித்திருந்த சிறந்த தேசிய விடுதலை வாதியான பிரான்சிஸ் அவர்களின் அரசியல் வேலையில் மாவட்ட மக்களின் ஆதரவு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு வெகுவாகக் கிடைத்திருந்தன.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான யோகன் குறிப்பிட்ட தொகைப்போராளிகளுடன் படைத்துறைப்பயிற்சி பெறுவதற்கு இந்தியா சென்ற வேளையில் மாவட்டத்திற்க்கான விடுதலைப் புலிகளின் தொடர்பாளராக சடாச்சரபவன் என்ற பிரான்சிஸ் செயல்பட்டிருந்தார். படைத்துறைப் பயிற்சிக்காக சென்றவர்களில் சிலர் பிரான்சிஸ் அவர்களினால் இணைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கோட்டைக்கல்லாறு மட்டு – கல்முனை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்வியாளர்கள் பலரை உருவாக்கிய ஊராகும். இவ்வூருக்கு அருகாமையில் அமைந்துள்ள பெரியகல்லாறு, ஒந்தாட்சிமடம் ஊர் களை இணைப்பதற்கு அமைக்கப்பட்ட கல்லாறு மதகு மட்டக்களப்பு வாவியையும், கடலையும் இணைக்கும் தொடுபாலமாகும். மார்க்கழியில் பெய்கின்ற மழையினால் பொங்கி எழும்வெள்ளம் குழாய் மூலமாகவும், சாலை மேலாகவும் பாய்ந்து செல்வதற்கேற்ற விதத்தில் அமைக்கப்பட்டிருப்பது அடையாளப் படுத்தப்பட்ட பெயரொன்றை அவ்வூர்களுக்கு வழங்கியுள்ளது.

கல்வியாறு என்று சொல்லுமளவுக்கு கல்வியில் உயர்ந்த நிலையில் மாவட்டத்தில் விளங்குகின்ற இவ் வூரில் ஒரு அண்ணனுக்குத் தம்பியாக சடாச்சரபவான் 26.05.1960 அன்று பிறந்தார். இவருடைய அண்ணன் சரவணபவான் தமிழ் இளைஞர் பேரவையில் செயல்பட்டு 1988 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு இணைந்து செயலாற்றினார்.இரண்டு மகன்களைப் பெற்றெடுத்த இராசையா சின்னமணி தம்பதியினர் தாய் மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்காகவும் தம் மக்களை அர்ப்பணித்தனர்.

ஆரம்பக் கல்வியை கோட்டைக்கல்லாறு பள்ளிக்கூடத்தில் மேற்கொண்டதன் பின்பு உயர் கல்வியை மட்டக்களப்பு கோட்டமுனை மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தார். க. பொ. த சாதாரண பரீட்சையில் ஆறு பாடங்களில் அதி விசேட சித்தி பெற்று புத்திசாலி மாணவர்களில் ஒருவராக உயர்தரக் கல்வியைத் தொடர்ந்து அம்பாறை ஹாடி தேசிய தொழில்நுட்பக்கல்லூரியில் Diploma in Civil Engineering பயின்று கொண்டிருக்கும்போது விடுதலைப் போராட்டத்தின்பால் எண்ணங்களைத் திருப்பினார்.

இத் தருணத்தில் இவருடைய அண்ணன் சரவணபவன் விடுதைலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலருடன் தொடர்வுகளை வைத்திருந்தார். இதனைப் பயன்படுத்தி பிரான்சிஸ் இணைப்பை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளின் உறுப்பினரானார். 1982 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தொடர்பு பிரான்சிஸ் அவர்களுக்கு கிடைத்திருந்தது. அக்காலத்தில் இயக்கத்தின் தொடர்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராமு என்பவர் செயல்பட்டிருந்தார். மிகவும் இரகசியமான முறையில் இயக்கத்தின் நடவடிக்கைகள் இருந்ததனால் தனக்குத் தெரிந்த படித்தவர்கள் மட்டத் தொடர்புகளை பிரான்சிஸ் சரியாகப் பயன்படுத்தியிருந்தார். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எழுத்தாளர்கள்,பத்திரிகையாளர்கள்,கல்வியாளர்கள், வணக்கத்திற்குரியவர்கள் ஆகியோரின் தொடர்புகளும் உதவிகளும் இயக்கத்திற்கு கிடைத்திருந்தன.

விடுதலைப் போராட்டம் ஒன்றுக்கான பண்பட்ட அரசியல் வேலையை செய்வதில் பிரான்சிஸ் அவர்களின் எண்ணங்கள் முற்போக்கானதாகவும், உணர்வுமிக்கதாகவும் அமைந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பேரூந்தில் பயணித்து இயக்கத்திற்கான தொடர்புகளிலும் அரசியல் வேலைகளிலும் ஈடுபட்டார். தனியொருவராக மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டமெங்கும் அரசியல் வேலைகளில் ஈடுபட்டு பல போராளிகளை இயக்கத்திற்கு சேர்த்தும் பாமரமக்களுக்கு தெளிவுபடுத்தியும் படித்தவர்களுடான தொடர்பை நெருக்கமாகவும் பேணினார். இவ்வாறு தனது இளவயதில் அறிவுத்திறனுடன் அரசியலையும் கலந்து தமிழர் விடுதலையில் தெளிவான கொள்கையையும், தலைமையையும் தெரிந்து ஏற்றுக்கொண்டு கள வேளையில் திறம்பட செயலாற்றினார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பொறுத்தமட்டில் இலங்கைத்தீவில் தமிழர் தாயகத்தின் விடுதலை ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் மூலமே சாத்தியமாகும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தனர். இதனால் ஆயுதப் போராட்டத்தை முன்னிறுத்திய வகையில் அரசியல் துறையின் உருவாக்கத்திற்கும் அதன் மூலம் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு மாபெரும் சக்தியாக வளர்த்தெடுப்பதென்பதும் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அரசியல் இயக்க மூலம் நிருவாகங்களை விரிவு படுத்துவதும் மக்களுக்கான சேவைகளை போராளிகளின் மூலம் வழங்குவதும், அதன் மூலம் மாபெரும் அரசியல் விடுதலை இயக்கத்தைக் கட்டிவளர்ப்பது என்பதில் பிற் காலத்தில் வெற்றியும் கண்டிருந்தனர். தங்களின் வாழ்வுக்கும், விடுதலைக்கும் அளப்பரிய அர்ப்பணிப்புகளை வழங்கத் தயாரான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பின்னால் மக்கள் அணிதிரண்டதையும் காணக்கூடியதாகயிருந்தது.

1984 ம் ஆண்டு முற்பகுதியில் படைத்துறை பயிற்சிக்குச் சென்ற போராளிகளில் சிலர் தாயகம் திரும்பியிருந்தனர். இப்போராளிகளின் வருகை இயக்கத்தின் செயல்பாட்டில் சிறு சிறு மாற்றத்தை மாவட்ட வேலைத் திட்டங்களில் ஏற்படுத்தின. யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக பசீர் என்பவர் வந்திருந்தார். இவருடைய தொடர்பிலும் பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலை மக்கள் மத்தியில் உணர்வுள்ளவர்களையும், பற்றுள்ளவர்களையும், படித்தவர்களையும் போராட்டத்திசையில் பயணிக்கவைக்க வேண்டுமென்பதாகும். இதில் பிரான்சிஸ் அவர்கள் வெற்றியும் கண்டதனால் மட்டக்களப்பு நகரத்தில் முக்கியமானவர்களில் பலர் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மனப்பூர்வமான ஆதரவை வழங்கியிருந்தனர். மக்களும் விடுதலைப் புலிகள் பின்னால் அணி திரளத்தொடங்கினார்.

மட்டக்களப்புச்சிறைச்சாலை உடைப்பும், அரசியல் கைதிகள் வெளியேற்றமும், தமிழ் மக்கள் இன எழுச்சியிலிருந்தபோது நடந்திருந்தன. இதில் குறிப்பிடத்தக்க ஒரு சில அரசியல் கைதிகள் வெளியேறமுடியாமல் இருந்தனர். இவர்களை வெளியில் கொண்டுவருவதற்கான ஒரு நடவடிக்கையை விடுதலைப் புலிகள் திட்டமிட்டனர். இதில் பிரான்சிஸ், பசிர், சிவம்அண்ணன், அம்பாறை மாவட்ட தளபதி டேவிட், கண்ணன் ஆகியோருடன் ஆதரவான மக்களில் சிலரும் ஈடுபட்டனர். வண.பிதா சிங்கராயர் அவர்களையும், நிர்மலா நித்தியானந்தன் அவர்களையும் வெளியில் கொண்டுவரும் நடவடிக்கையில் வண.பிதா சிங்கராயர் விரும்பாததால் நிர்மலா நித்தியானந்தன் அவர்களை மாத்திரம் 1984.06.10 அன்று மீட்டெடுத்து திரும்பியிருந்தனர். பிரான்சிஸ் அவர்களின் முதல் நடவடிக்கையாக இது அமைந்திருந்திருந்தது. நிர்மலா நித்தியானந்தன் அவர்களும் பாதுகாப்பாக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

பிரான்சிஸ் அவர்களின் புனிதமான விடுதலைப் பயணத்தில் இரண்டாவது தாக்குதல் 22.09.1984 ம் ஆண்டு களுவாஞ்சிக்குடி சிங்களக் காவல் நிலைய அழிப்பாக அமைந்திருந்தது. குறிப்பிட்ட சில போராளிகள் கலந்து கொண்ட இத் தாக்குதலின் பின்பு பிரான்சிஸ் அவர்கள் நோயுற்ற நிலையில் காணப்பட்டார். விழுப்புண்ணடைந்த போராளிகளுடன் மறைவிடத்திலிருந்து மருத்துவசிகிச்சையும் பெற்றுக்கொண்டார். இதனைத் தொடந்து 02 .09 .1985 அன்று தளபதி அருணாவின் தலைமையில் நடந்த ஏறாவூர் சிங்கள காவல் நிலையத் தாக்குதலில் முன்னணிப் போராளிகளில் ஒருவராக களமிறங்கினார்.

பிரான்சிஸ் அவர்கள் பங்குகொண்ட அடுத்த தாக்குதல் அம்பாறை மாவட்டத்தில் தம்பட்டை என்னுமிடத்தில் நடந்தது. தம்பட்டை ஊர் பொத்துவில் என்னுமிடத்திற்கு செல்லுகின்ற சாலையில் கடற்கரையை அண்டியுள்ள அழகிய ஊராகும். கிழக்குக் கடற்கரையின் அழகில் மிதந்து கிடக்கும் தமிழ் ஊர்களில் அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் வரையிலான வட்டம் முழுவதும் தமிழர் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கின்றன இயற்கையுடன் இணைந்துள்ள வனப்புமிக்க இடங்களாகும். தம்பட்டையைத் தாண்டிய திருக்கோயில் தமிழர் வரலாற்றில் இதிகாசங்களுடன் ஒட்டிய சரித்திரம் சொல்லும் தமிழர் தாயகமாகும். தமிழர் பண்பாட்டுடன், தமிழர் அடையாளத்தைத் தொட்டுக்காட்டுகின்ற இவ்வூர்கள் என்றும் எம்மூராகவே இருக்க வேண்டும் என்று தமிழுணர்வுள்ள ஒவ்வொருவரின் மனதில் ஆழமாக பதிந்துள்ள அழிக்கமுடியாத உறுதியாகும். தென்றலாக தவழ்ந்து வரும் கடல் காற்று தொட்டு அசைந்தாடும் தென்னை ஓலை இசையில் எழுகின்ற இதமான உணர்வில் சிறுகுடிசைகளில் வாழ்கின்ற மக்கள் என்றும் இது சொந்தமண்ணாக இருக்க வேண்டுமென எண்ணி வாழ்கின்றனர். இந்த ஊரில் 1985 ஆண்டு சிங்கள ரோந்துப் படைக்கெதிரான தாக்குதல் தளபதி அருணாவின் வழிநடத்தலில் அம்பாறை மாவட்ட தளபதி டேவிட் அவர்களின் தலைமையில் நடந்தது. அக்காலத்தில் பாரிய தாக்குதலாகவும், சிங்கள படைகளை அச்சமூட்டும் தாக்குதலாகவும் இது அமைந்திருந்தது. தளபதி சொர்ணம் அவர்களின் ஆர் . பி. ஜி .உந்துகணைத்தாக்குதலில் கவாசவாகனம் தாக்கப்பட்டு இயங்க முடியாத நிலையில் பல படையினரும் அழிக்கப்பட்டனர்.

குறிப்பிட்ட சில மணித்தியாலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இப் பகுதியை மீட்பதற்கு கடல் வழியைப் பயன்படுத்துமளவுக்கு சிங்களப்படை நெருக்கடியைச் சந்தித்த தாக்குதலாகும். போராளிகளின் உறுதியான போர் நடவடிக்கையைத் தெரியப்படுத்தும் தாக்குதலாகவும் அக்காலத்தில் வெளிப்படுத்தப்பட்டன. இத் தாக்குதலில் பிரான்சிஸ் அவர்களும் முன்னணிப் போராளியாக களத்தில் பங்குகொண்டார்.தளபதி அருணாவின் விருப்பத்திற்குரிய போராளிகளில் பிரான்சிஸ் அவர்களும் ஒருவர் என்பதையும் அறியமுடிந்தது. ஏனெனில் பிரான்சிஸ் அவர்களின் உணர்வும், உறுதியும் தளபதி அருணாவையும் கவர்ந்திருந்தது. போராளி நசார் அவர்களும், ஒரு ஆதரவாளரும் இத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்திருந்தனர். தம்பட்டைத் தாக்குதல் மட் – அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் போராளிகளின் எழுச்சியை சிங்கள அரசுக்கும், சிங்களப் படைகளுக்கும் தெரியப்படுத்தியிருந்தன.

1987 ம் ஆண்டு யூலை இலங்கை – இந்திய ஒப்பந்தமும் அதனைத் தொடர்ந்த இந்தியப் படையினர் வருகையும் விடுதலைப்புலிகளுடான அவர்களின் உறவும், மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்திலிருந்து தளபதிகளையும், பொறுப்பாளர்களையும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லும் இந்தியப்படையினரின் செயல்பாட்டில் இந்தியப் படையினரின் உலங்கு வானூர்தி பயன்படுத்தப்பட்டிருந்தன.விடுதலைப்புலிகளின் இந்தியப் படையினருடனான இணைப்பாளராக தளபதி குமரப்பா தலைவரின் பணிப்பில் செயல்பட்டிருந்தார். இவருடன் மட்டக்களப்புக்கு வந்திறங்கிய உலங்கு வானூர்தியில் அழைத்துச் சென்றவர்களில் மட்டக்களப்பு அம்பாறை அரசியல் துறைப் பொறுப்பாளரான பிரான்சிஸ் அவர்களும் அடங்கியிருந்தார்.ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், இவ்வாறானவர்கள் யாழ்ப்பாணம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.தலைவரின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பான சந்திப்புக்காகவும், யாழ்ப்பாணம் சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற தலைவர் அவர்களின் மக்கள் மத்தியிலான கொள்கை விளக்கவுரைக் கூட்டத்திற்காகவும் சென்றிருந்தனர். இந்தியப்படையினருடான உறவைப் பேணும் நிலையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் இலட்சியத்தை அடைந்து கொள்வதென்ற அடிப்படையில் அனைத்தும் நடந்தேறின. இலட்சியம் என்பதில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடமில்லையென்றும் போராட்ட வடிவம் மாறலாம் என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தன. இலட்சியத்தில் என்றும் உறுதியானவர்களாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என்பதை அன்று அனைத்துதரப்பினரும் ஏற்றுக்கொண்டிருந்தனர். அதுதான் எமது மக்களுக்கு தேவையாகவுமிருந்தது. போராட்ட உணர்வு மழுங்கடிக்கப்படுவதும், மக்கள் அடக்கப்படுவதும் விடுதலைப் போராட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை விடுதலைப் புலிகளும் நன்கு அறிந்திருந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்குத் திரும்பிய பிரான்சிஸ் போர் நிறுத்தத்தம், இந்தியப் படையினரின் பிரசின்னம் இவற்றுக்கு மத்தியில் மக்களுக்கான அரசியல் வேலைகளில் மூழு வீச்சாக ஈடுபட்டார். ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் விதத்தில் விரைவு நிலையை ஏற்படுத்தும் நோக்கில் தெளிவுபடுத்தும் மக்கள் போராட்டம் தமிழீழத் தாயகமெங்கும் ஆரம்பமானதையும் இச்சந்தர்ப்பத்தில் எமது உரிமையை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற உறுதிநிலையும் மக்களிடத்தில் காணப்பட்டன.

சிங்களப்படையினர் தமிழீழ மண்ணில் நிருவாகத்தில் ஈடுபடுவதையும் விடுதலைப் புலிகளும், மக்களும் விரும்பவில்லை. இதனால் மட்டக்களப்பில் நடந்த சம்பவம் ஒன்றில் சிங்களக்காவல்துறையினரின் நிருவாகத் தலையீட்டை மக்கள் எதிர்த்து நகரத்தின் காந்தி சிலை அருகாமையில் திரண்டபோது தளபதி பொட்டம்மான், பிரான்சிஸ் உட்பட்ட போராளிகளும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர். தளபதி பொட்டம்மானின் ஆலோசனையில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பிரான்சிஸ் கருத்துக்களைப் பகிர எண்ணிய வேளையில் தரையில் நிற்பதைவிட உயரத்தில் நின்று கூறுவது பொருத்தமாகயிருக்குமென்பதால் ஒரு மகளூர்ந்து மேல் ஏறி நின்று மிகவும் சாதாரணமாக, மக்களுக்கு புரியக்கூடியவகையில் சுதுமலையில் தலைவர் கூறிய போராட்ட வடிவமாற்றத்தை திரண்டிருந்த மக்கள் மூலமாக அறியமுடிகின்றது என்பதையும் தனது கருத்துக்களின் மூலமாக தெளிவுபடுத்தி, தனது போராளி அரசியல் வேலையை மக்களுக்கு வெளிப்படுத்தினார். அரசியல் என்றால் எவ்வாறான வேலை என்பதை அனைத்துத்தரப்பினருக்கு ஒரு சிறு நிகழ்வு மூலமாக புரியவைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தாயகமெங்கும் மக்களின் விழிப்புப் போராட்டங்கள் உரிமையை உணர்த்தி நடத்தப்படுவதற்கு விடுதலைப் புலிகளின் அரசியல் வேலை எழுச்சியாக அமைந்திருந்தன. அடிப்படைக் கோரிக்கைககளை வலியுறுத்தி யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திலீபன் அவர்களின் சாகும்வரை உண்ணாவிரதத்தைக்தொடர்ந்து ஏனைய மாவட்டங்களிலும் உண்ணாவிரத அறவழிப் போராட்டம் நடத்தப்பட்டன. மட்டக்களப்பில் முற்றவெளியில் மதன் என்கின்ற போராளி உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார்.

இவருடைய அரசியல் வேலையின் வெளிப்பாடாக மட்டக்களப்பு மக்கள் குழு இயக்கத்திற்கு அனைத்து வழிகளிலும் ஆதரவை வழங்கி, செயல்பாட்டின் வழியில் ஒன்றிணைந்து இயங்கினார். இது மட்டுமல்லாமல் மாவட்ட தொழிற்சங்க சம்மேளனத்தை உருவாக்குவதிலும், அதன் செயல்பாட்டுக்கும் தன்னாலான உதவிகளையும் புரிந்திருந்தார். இச்சங்கத்தின் தலைவராக மக்கள் குழுத் தலைவர் வண. பிதா சந்திரா பெர்னாண்டோ அவர்களின் சகோதரர் பெர்னாண்டோ அவர்களும், சட்டத்தரணியும் பிற் காலத்தில் மாவீரருமான பொன். வேணுதாஸ் பொதுச் செயலாளராகவும் பணிபுரிந்து விடுதலை இயக்கமொன்றின் அரசியல் வேலையில் மக்களை இணைத்துச்செல்லும், விடுதலைப்பாதையையும் உருவாக்கியிருந்தார்கள். அரசியல் என்று எழுந்தவர்கள் எல்லாம் அடிப்படையை புரிந்துகொள்ளத் தவறிய நிலையில் விடுதலைப்புலிகளின் அரசியல் நடவடிக்கைகள் ஆர்ப்பாட்டமில்லாது அமைதியாக மக்களை அணிதிரட்டி சென்றதைப்பார்க்கமுடிந்தது. அது மட்டுமல்லாது அன்னையர் முன்னணி என்ற ஒரு மக்கள் அமைப்பையும் உருவாக்கி அவர்கள் மூலமாக மக்கள் போராட்டத்தையும் வெளிப்படுத்துவதற்கு பிரான்சிஸ் அவர்களின் அரசியல் வேலை வழிசமைத்திருந்தது. இம் முன்னணியின் ஆலோசகராக வங்கி மேலாளர் கிங்ஸ்லி இராசநாயகம் செயல்பட்டிருந்தார். இந்தியப் படையினரால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பிற்காலத்தில் 2004 ம் ஆண்டு சிங்களப் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு தெரிவானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் மண்ணை விட்டு துரத்தப்படுவதும், மண்ணைவிட்டு வெளியேறுவதும் நடந்துகொண்டிருக்கையில் மண்ணுக்காக, மண்ணில் வீழ்ந்தவர்களின் இலட்சிய வேட்கை தணியாது செல்கின்றது. ஏனெனில் இன்னும் எமது மண்ணில் தன்மானமுள்ள தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதுதான் உண்மையாகும். தன் இரத்த உடன்பிறந்தவர்களின் சந்ததி இல்லாத நிலையில் உறவோடு அமைந்த எதிர்காலச்சந்ததி தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோள் தன்னலமற்ற இச்சகோதரர்களை தமிழ் நலன் கருதி தற்கொடை செய்யவைத்துள்ளது. அண்ணன் சரவணபவான் தமிழ் இளைஞர் பேரவையில் செயலாற்றியபோதும் எழுதுனராக மாவட்ட அரச செயலகத்தில் பணியாற்றியிருந்தார். 1988 ம் ஆண்டு இந்தியப்படையினருடன் சேர்ந்து இயங்கிய E . P .R .L .F என்ற தமிழ் தேசிய விடுதலைக்கு எதிரானவர்களால் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தலைத் தொடர்ந்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்குச் சென்றார். இவருடன் சித்திரவதைப்படுகொலையிலிருந்து கடைசி வேளையில் தப்பிய பத்திரிகையாளர் நித்தி அவர்களும் சென்றிருந்தார். இருவருடைய எண்ணங்களும் ஒன்றாகவே இருந்ததனால் மட்டக்களப்பு காடுகளுக்குள் மறைந்திருந்த விடுதலைப் புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி உறுப்பினராக விடுதலைப்பணியில் இறங்கினார்கள்.

சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்த காலமாகையால் சரவணபவான் அவர்களின் பணி கொழும்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் கொழும்பில் வைத்து இரண்டு ஆதரவாளர்களுடன் சிங்களப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டு காணமல்போனார். மிகவும் தீவிரபற்றாளரான சரவணபவான் தனது விடுதலைப் பயணத்தில் தன்னை இழந்து தமிழீழ விடுதலைக்கு பலம் சேர்க்கும் நேர்த்தியான உறுதிமிக்க முடிவுகளையும் எடுத்திருந்தார். இதனால் இவருடைய இழப்பு இயக்கத்திற்கும், விடுதலைக்காக காத்திருக்கும் மக்களுக்கும் ஈடுசெய்யமுடியாததாகவிருந்தன.

போராளி வாழ்க்கைக்குள் புகுந்த இவர்கள் புனிதமான கடமையை வாழும் வரை நிறைவாக செய்திருந்தனர். இருப்பவர்கள் வரலாறு தேடும்போது நடந்து வந்தபாதையையும் திரும்பிப் பார்க்கவேண்டும் அது நேர்த்தியானதாக இருந்ததா என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும். கால மாறுபாட்டில் கடந்து வந்த பாதையில் கறைபடிந்த தேசிய விரோதங்களை செய்து விட்டு பதவியை எண்ணி தேசியத்தைக் காத்தவர்கள் போல் மக்கள் முன் வருவதை மக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

விடுதலைப் போராளிகளின், மக்களின் இழப்புகளுக்கு மத்தியில் எமது மக்கள் உரிமைக்காக, தொடர்ந்தும் பயணிப்பதில் விடுதலைப் புலிப்போராளிகளுக்கு துணையாக நின்றனர். இலட்சியத்தை நோக்கிய போராட்டத்தில் இந்தியப் படையினருடனான மோதல் ஏற்பட்டபோது துணிந்து களமிறங்கி உறுதியுடன் செயல்பட்டனர். இந்த நிலையில் இந்தியப் படையினரும் விடுதலைப் போராளிகளை அழிப்பதற்காக தமிழ்க்குழுக்களையும் தாய் மண்ணில் ஊக்குவித்தனர். EPRLF,TELO ,ENDLF போன்ற இயக்கத்தினரின் குழுக்கள் அராஜகங்களை கட்டவிழ்த்துவிட்டதனால் தமிழ் மக்கள், போராளிகள் தேடி தேடிப் படுகொலை செயப்பட்டனர். ராசிக், ரெட்ணம் , ஜனா, போன்ற நூற்றுக் காணக்கானவர்கள் இத் தேசிய விரோதப்போக்குகளில் ஈடுபட்டதைக் காணமுடிந்தது.

தற்போது தமிழ்த்தேசியத் கூட்டமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டச் செயலகம் என துரைரத்தினம் என்பவரின் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள வீட்டில் அரங்கேறிய படுகொலைகள் எண்ணிலடங்கதவையாகும். விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும், சுகுணா என்ற ஒரு தமிழ்ப்பெண்ணையும் கைது செய்து சித்திரவதை செய்ததில் ரெட்ணம் என்பவரின் பங்கு இருந்திருக்கக் கூடும் எனவும் நம்பமுடிந்தது. ஏனெனில் இவரும் அந்த வீட்டில்தான் வசித்து வந்திருந்தார்.

இவர்களை விடுதலை செய்யுமாறு மாவட்ட மக்கள் குழு இந்தியப் படையினரிடம் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து சுகுணா என்ற தமிழ்ப் பெண் மாத்திரம் விடுதலைப் செயப்பட்டார்.அந்த இஸ்லாமியப் பெண் அநியாயமாக கொல்லப்பட்டதனால் எந்தவித தகவலும் இல்லாமல் போயிருந்தது.

நெருக்கடியான நிலையில் போராளிகள் இலட்சியப் பயணத்தில் உறுதியாகயிருந்தனர். தாயக விடுதலை என்ற குறிக்கோளில் இழப்புக்களையெல்லாம் இனத்தின் விடுதலைக்கான வெற்றியின் படிக்கட்டுக்களாக எண்ணி எந்தச் சவாலையும், எதிர் கொண்டனர். தங்கள் வாழ்வையும், வளத்தையும், எண்ணிச்செயல்படுகின்ற இயக்கங்கள், மற்றும் அதுசார்ந்த உறுப்பினர்கள் போராளிகளுக்கெதிராகச் செயல்படுகின்ற வேளையில் விடுதலைப் புலிப்போராளிகள் மாத்திரம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் பிரான்சிஸ் மக்களின் ஆதரவோடு தேசிய விரோதிகளின் பலமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாவட்டத்தின் ஊர்களின் மறைவிடங்களில் இருந்து கொண்டு போராட்டப் பணியை மேற்கொண்டிருந்தார்.

நீண்ட நாட்களுக்குப்பின் 31.09.1988 அன்று தான் பிறந்த ஊரான கோட்டைக்கல்லாறு சென்று உறவுகளோடும், ஊர் மக்களோடும் எண்ணங்களை பகிர்ந்து இதமான, புரியாத மகிழ்வான உணர்வில் தங்கியிருந்தவேளையில் இந்தியப் படையினரை அழைத்துக்கொண்டு EPRLF தேசவிரோதிகள் ஊரை சுற்றி வளைத்துத் தேடுதல் நடத்தினர். பிரான்சிஸ் ஊரில் நிற்பதை அறிந்துகொண்டதன்பேரில் இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றிருக்கவேண்டும். வீட்டுக்குள் மறைந்திருந்த பிரான்சிஸ் தேச விரோதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.தான் பிறந்த மண்ணில், தனது இறுதி விடுதலைப் பயணமும் அமைய வேண்டுமென்ற நியதி பிரான்சிஸ் அவர்களை சொந்த ஊரை நோக்கி அழைத்திருக்கவேண்டும். தாய் நாட்டின் விடுதலைக்காக நீண்ட பயணத்தில் இணைந்திருந்த பிரான்சிஸ் தனது வரலாற்றுக் கடமையை முடித்து தாயின் மடியில் விழி மூடினார்.அக்காலத்தில் வாழ்ந்த பொதுநலம் சார்ந்த அனைவரும் விடுதலைப் புலிப்போரளிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள் வீரமும், தன்மானமிக்க இவர்கள் தமிழரின் வரலாற்றைத் திரும்பவும் கொண்டுவந்திருக்கிறார்கள்.என்ற பெருமிதம் தமிழ் மக்களிடத்தில் மிகுந்திருந்தது. தமிழ்த் தேசிய உணர்வோடு பத்திரிகையாளர்களும் அக்காலத்தில் செயல்பட்டிருந்தனர்.

2004 ம் ஆண்டு மட்டக்களப்பில் ஏற்பட்ட துரோகத்தனமும், அதன் பிரதிபலனும் சில பத்திரிக்கையாளர்களையும் அரசியல்வாதிகளையும் தேசிய உணர்வுக்குள் உள்வாங்கிய போதும் அனைத்துப் பத்திரிகையாளர்களும், அரசியல் வாதிகளும் இணைந்திருக்கவில்லை. இதில் சிலர் எதிர்கால பதவியை எண்ணி தேசிய உணர்வாளர்களுடன் ஓட்டிக்கொண்டிருப்பதையும், எண்ணம் நிறைவேற தங்கள் சுயரூபத்தை மீண்டும் வெளிக்காட்டுவார்கள் என்பதும் எதிர்பார்ப்பாகும். மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் எந்தத்துறையில் பணியாற்றிய போதும் தமிழ்த் தேசிய உணர்வுகள் உள்ளடக்கப்பட்டவர்கள் அமைதியாக வாழும் நிலையில் எட்டு வருடங்களுக்குள் உட்பட்ட காலத்தில் வரலாறும், போராட்ட பாரம்பரியமும் புரியாமல் தமிழ்த் தேசியம்பற்றி பேசுபவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டிய நிலையில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். எது நடந்தாலும், உண்மையும் நேர்மையும், உணர்வுகளும் என்றும் அழியாது. போராளி வாழ்க்கை என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள் விடுதலைப் புலிகள் அதனால் தங்கள் வீரச்சாவுகளை விருப்போடு ஏற்றுக்கொண்டனர். போராளி அரசியல்வேறு, பாராளுமன்ற அரசியல்வேறு என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும். இவற்றின் அர்த்தத்தை புரிந்து கொண்டால் எமக்குள் இருக்கின்ற குழப்பநிலை அற்றுவிடும்.

தாயை இழந்த போதும் இரண்டு மகன்களையும் பெற்றெடுத்து வளர்த்து அழகு பார்த்து வாழும் வரை நல்லவர்களாக வாழவேண்டும் என்று எண்ணிய தந்தை குறுகிய காலத்தில் இவர்களின் வீரச்சாவை எண்ணிக் கலங்கிய போதும் நினைத்த மாதிரி உயர்ந்த கொள்கையில் நல்லவர்களாக வாழ்ந்து, வீழ்ந்த தமது புதல்வர்களை எண்ணி பெருமிதம் கொண்டிருந்தார். வரலாறும், எதிர்காலமும் இச்சகோதரர்களை எம் மத்தியில் வாழவைக்கும், மறக்காமல் காலம் காலமாக நினைவு கூரும். தம்மை இழந்து தமிழை வாழவைத்த இக் குடும்பத்தின் வாழ்க்கை எதிர்காலத்தில் எல்லோருக்கும் பாடமாக அமையட்டும். சொந்த மண்ணில், சொந்த மக்களினால் பிரான்சிஸ் அவர்களின் வித்துடல் விதைக்கப்பட்டது. தனது தம்பியின் உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்த அண்ணன் சரவணபவான் வந்தபோது தேச விரோதிகள் அவ்விடத்திற்கு வந்து துப்பாக்கியால் சுட்டதும் தப்பியோடும் அளவுக்கு தேச விரோதிகளின் ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டித்தனம் வெளிப்பட்டதையும் பார்க்க முடிந்தது.

இந்தியப்படையினர் எம் மண்ணை விட்டு வெளியேறியபோது தேசவிரோதிகளை விரட்டியடிக்கும்பணியில் விடுதலைப் புலிகள் வீறு கொண்டெழுந்து அம்பறையிலிருந்து ஆரம்பித்து துரத்தியடித்து வந்தனர். அம்பாறை மாவட்டத் தளபதி அன்ரனி தலைமையிலான படையணி கல்லாறு மண்ணை மிதித்தபோது மேஜர். பிரான்சிஸ் அவர்களின் வீரச்சாவு அன்ரனியின் நினைவுக்கு வந்தது. உடன் பிரான்சிஸ் அவர்களின் தந்தையை அழைத்து உடல் விதைக்கப்பட்ட இடத்திற்குச் சென்று ஆயுதத்தைக் கீழே வைத்து வீர வணக்கம் செலுத்தினார். தேச விரோதிகளால் வீரச்சாவடைந்த பிரான்சிஸ் அவர்களின் நினைவில் மண்ணைவிட்டு தேசிய விரோதிகளை முற்றாக விரட்டும் பணியில் மேலும் தீவிரமானார். மேஜர். அன்ரனி அவர்களைப் பற்றி அடுத்த தொடர்களில் விரிவாகப்பார்ப்போம்.

எத்தனை எதிர்ப்புக்களையும், இழப்புக்களையும் எமது போராளிகள் சந்தித்தனர்.

அத்தனை எதிர்ப்புக்களையும், வீரத்துடனும், அர்ப்பணிப்புடனும் எதிர்கொண்டு இலட்சியத்தை நோக்கி உறுதியுடன் பயணித்தனர்.

சாவு ஒரு நாள் வரும், அச்சாவு எமது மக்களின் விடிவுக்காக அமைந்துவிடட்டும்.

விடியலை நோக்கிய எமது மக்களின் பயணம் தொடரட்டும்.

மாவீரரின் வரலாறு, தமிழ் மக்களின் நீண்ட வரலாற்றோடு இணைந்துவிட்டது, அதில் பவான் சகோதரர்களின் வரலாறும் பதியப்படட்டும்.

அடுத்த தொடரில் ………..

என்றும் எழுகதிர்.
paramathevaranjan@yahoo.com

“துன்கிந்த” கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்

30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
யாழ். வலிகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் 30.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அகிலா, லெப்.கேணல் உருத்திரா(உருத்திரன்) ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவு நாளும்,


30.10.2006 அன்று மட்டு மாவட்டம் வாகரைப் பகுதியில் அரவம் தீண்டியதனால் சாவடைந்த லெப்.கேணல் வரதா(ஆதி) அவர்களின் 6ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

அளவெட்டியில் படைநிலைகளிற்குள் ஊடுருவித் தாக்குதல் 12 கரும்புலிகள் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்

29.10.1995 அன்று அளவெட்டியில் அமைந்திருந்த சிறிலங்கா படை நிலைகளிற்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 11 கரும்புலி வீரர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

11.10.2006 அன்று முகமாலைப் பகுதியில் இராணுவத்துடனான முறியடிப்புச்சமரில் விழுப்புண் அடைந்து 29.10.2006 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் வீரவேங்கை தாமரைச்செல்வி அவர்களின் 5 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் .

29.10.1999 அன்று முல்லை மாவட்டம் ஒட்டு சுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பௌத்திரன், மணலாற்றுப் பகுதியில் இதே நாள் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் ஆகியோரின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் உட்பட்ட மாவீரர்களின் நாள்

முல்லைத்தீவில் காவியமான கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி, திருகோணமலையில் காவியமான கப்டன் அகத்தியன், கப்டன் நீலவாணன், 2ம் லெப். பூவிழி ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

23.09.2001 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்வேளை 26.10.2001 அன்று

கடற்புலிகளின் மகளீர் படையணி துணைத் தளபதி
கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி
(சின்னப்பு நந்தினி – செம்பியன்பற்று, யாழ்ப்பாணம்)

என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

இதேநாள் திருகோணமலை மாவட்டம் உப்பாறு பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை தாக்குதவற்காக வந்த படையினரை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது

கப்டன் அகத்தியன்
(துரைசிங்கம் நகுலேந்திரன் – மல்லிகைத்தீவு, மூதூர், திருகோணமலை)

கப்டன் நீலவாணன்
(சுப்பிரமணியம் ராஜிக்கண்ணன் – இறால்குழி, மூதூர், திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் பூவிழி
(கணபதிப்பிள்ளை றோகினி – கடற்கரைச்சேனை, மூதூர், திருகோணமலை)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் 16ம் ஆண்டு நினைவு நாளும்,

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்

கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி

தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள் எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று.

“இந்த வாறன். இந்தா வாறன்” உயர் அலை வரிசைத்தாளத்தில் எங்களுக்கு நம்பிக்கையூட்டி, “விடாமல் அடியுங்கோ” என்று கட்டடையிட்டு எங்களின் படகுகளுக்கு தனது படகைக் கொண்டு வந்து காப்பிட்டு, பகைக் கலத்தோடு சண்டை பிடித்து எங்களுக்கு இழப்புகளின்றி கரையேற்றிய அந்த செயல்காரியின் துணிச்சலை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது.

சண்டைகளைப் போலத்தான் அல்பா நிர்வாகத்திலும் தனக்கென ஒரு அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தவள். இயல்பாகவே பெண்கள் என்றால் சமூகத்தில் அவர்களுக்கென்று ஓர் பதிவிருந்தது. அதை அவர்கள் மீறுவதைத் தடுக்குமுகமாக பல கருத்துக்கள் ஒரு திராளாய் உருவாக்கப்பட்டும் இருந்தது. காலகாலமாய் அந்தச் சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் அக்கட்டுடைத்து வெளிவரும் போது சில தயக்கங்களும் அவர்கள் கூடவே வந்து விட கடலிலும் அதே நிலைதான்.

தலைவர் அவர்களின் ஆழ் நுண்ணிய பார்வையால் உருவாக்கப்பட்ட கடற்புலி மகளீர் அணியின் செயற்பாடுகள் விரிவு படுத்தபடுகின்றன. ஆனால் அதே வேளை எம்மில் பலர் “பெண்கள் கடலில் இயந்திரத் திருத்தினராக போக முடியாது” எனக் கூறப்போனவர்களும் கடலிற்குப் புதியவர்கள் என்பதனால் திறமையாகச் செயற்பட முடியாமல் போக, இக் கூற்று எல்லோரிலும் படிய முயற்சித்துக் கொண்டிருக்க அல்பா விடவில்லை.

சூசை அண்ணாவோடு கதைத்து அவர்கள் எதில் தெளிவில்லாமல் இருக்கிறார்களோ அதை வகுப்புக்கள் மூலமாகத் தெளிவாக்கி, திரும்பவும் அவர்களைக் கடலில் இறக்கி தன்னோடும் கூட்டிக் கொண்டுபோய் பெண்களால் எதுவும் சாதிக்க முடியும் என்ற உண்மையை உணரவைக்கும்வரை அல்பா ஓய்ந்ததேயில்லை. இன்று திறமைமிக்கவர்களாகவும் அனுபவம் வாய்ந்தவர்களுமான பல இயந்திர திருத்துனர்களாக பெண் போராளிகள், “அல்பாக்கா இருந்திருந்தால் நாங்கள் இன்னும் எவ்வளவு சாதிச்சிருப்பம்” என்று சொல்லுமளவிற்கு அல்பா அவர்களோடு வாழ்ந்திருக்கிறாள்.

“அல்பாக்கா ஆசைப்படுகிற மாதிரி எல்லா நிலைகளிலும் நாங்கள் கடலில் வளரவேணும்.” கண்களில் நீர் தேங்க கடலில் செயல்களினூடே வளர்ந்து வரும் இளைய போராளியின் குரலிது.

இந்தக் காலம் அமது தலைவர் அவர்களால் நல்லெண்ண அடிப்படையில் ஒருதலைப் பட்ச்சமான யுத்த நிறுத்தம் நடைமுறைப் படுத்தப்பட்டு இருந்தது. பகைவனைப் போலவே எமது தேவைகளும் உள்ளதால் நாங்களும் கடலோடிக் கொண்ருந்தோம்.

முல்லைத் தீவியிற்குயரே எதிரியின் டோறாவிற்கு எதிரே எங்களது விநியோகப் படகுகள் மாட்டுப்பட்டு விட்டன. நாங்கள் யுத்த நிறுத்தத்தை நடைமுறைப் படுத்திய போது அரச படைகள் எங்களைத் தாக்கினால் எங்களால் முறியடிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப்டும் என்றும் அறிக்கை விடப்பட்டிருந்தது. எங்களின் பாதை வழியே எங்களது படகுகள் வரமுற்பட்டுக் கொண்டிருந்தன. பகைக் கலங்கள் விடவில்லை. கலைத்துக் கலைத்துச் சுட்டன.

முறியடிப்புத் நடாத்தத் தொடங்கினோம். முறையான போடு, ஒரு டோறா தாண்டு மற்றைய டோறாவை எதிரி கட்டியிழுத்துக் கொண்டு போனான் தாண்டு போகுமளவிற்கு.

இந்தச் சண்டையில் அல்பா நின்றாள். எங்களது படகுகளைக் கரைக்கு வரவிடாமல் வரித்துக் கட்டிக் கொண்டு நின்ற எதிரிக்கு, இது எங்கள் கடல் என்று சொல்லாமல் செயலில்க் காட்டியவாறு:

“அமுதசுரபி தன்னம்பிக்கைக்கு எடுத்துக் காட்டு. அவருக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும் சிக்கலில்லாமல் நிறைவேற்றிப் போடுவார்.” அமுதசுரபியைப் பற்றி கடற்புலிகளின் மகளீர் விசேட தளபதி விடுதலையின் மனப்பதிவிது.


முல்லைத்தீவிற்குயர நடந்த சண்டையொன்று அல்பாவின் சண்டை ஆளுமைகளாத் தெளிவாக இனங்காட்டியது. சிக்கலான அந்தச் சண்டையில் கூட அல்பா நிதானமாகச் செயற்பட்டு, பாரிய இழப்புக்கள் ஏற்படாமல்ச் செய்தவர். விழுப்புண்ணடைந்த பின்பும் கூட, போராளிகளைப் பத்திரமாகக் கரையேற்றியவள்.

அல்பாவின் கடற் சமர்க் களங்கள் எப்படி விரிவடைந்தனவோ அதைப் போலத்தான் அவளது ஆளுமைகளும் புத்துயிர்ப்பாகிக் கொண்டிருந்தன. எங்களது கடற்பலத்தையும் யாழ். குடாநாட்டிற்கான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியம்பும் களமாக பருத்தித்துறைக்குயர ‘பிறைற் ஓவ் சவுத்’ என்ற கப்பலை வழிமறிக்கும் சண்டை திட்டமிடப்பட்டது. இங்கும் அல்பா நின்றாள். ஒழுங்காக விழுப்புண் மாறாத நிலையிலும் கூட சண்டை பிடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இந்தக் களமுனைக்கான பயிற்சி ஆரம்பமாகியிருந்த வேளை பெண் போராளிகளின் சூட்டு வலு காணாது என்ற போது அல்பா அப்போராளிகளோடு ஒன்றாகக் கடலிற்குள் போனாள். இரவு பகல் பாராது ஒன்றாய் நின்று அவர்களை குறி தவறாது சூட்டார்களாய் மாற்றும் மட்டும் ஒழுங்காகச் சாப்பிடவோ நித்திரை கொள்ளவோ குளிக்வோ இல்லை. எங்களைப் பற்றி எல்லா நிலைகளிலும் ஒருவரும் குறை கண்டு பிடிக்கக் கூடாது எனச் சொல்லியே அவர்களை உயிரப்பாக்கினாள்.

அல்பாவை நாங்கள் ஒருபோதும் பொறுப்பாளராய் கட்டளை அதிகாரியாய் பார்த்ததேயில்லை. எந்தப் பணியில் என்றாலும் தானும் ஒரு ஆளாய் பங்கெடுத்துக் கொண்டேயிருப்பாள்.

நாள் நேரம் எதற்குயர எத்தனை படகுகள் வழிமறித்து ‘பிறைற் ஒவ் சவுத்’ என்ற கப்பலோடு டோறாவையும் தாக்குவது என்ற திட்டங்களும் விளங்கப்படுத்தப் பட்டு படகுகளும் கடலில் இறக்கப்பட்டாயிற்று. எப்போதும் போலவே அல்பா இங்கு வழிப்பாக இருந்தாள். கண்மை மூடியவாறு படுத்திருக்கும் அல்பா, சாதனங்கள் கூப்பிட்டால் எழும்பிக் கதைப்பாள்.

சண்டை முடிந்து வந்த பின்புதான் தெரிந்தது அவள் நித்திரை கொள்ளவில்லை என்று. அவள் கண்களை மூடிக் கொண்டு எதிரிப் படகை எப்படித் தாக்கியழிப்பது எனறும், எதிரிப் படகை எப்படி வழி நடத்துவது என்பதைப் பற்றியும்தான் யோசித்துக் கொண்டிருந்ததாகக் கூறினாள்.

‘பிறைற் ஒவ் சவுத்’ மயிரிழையில் உயிர் தப்பியது பற்றி அவள் வேதனைப் பட்டாள். டோறா தாண்டது காணாது. அடுதத சண்டையில் இதை விட இன்னும் நிறையச் செய்ய வேணும். இது அவளது கனவு. தான் போய்ப் பிடித்த சண்டைகளின் பிழை சரிகளை ஆராய்ந்து அடுத்த சண்டைக்கு தன்னைத் தயார்படுத்தி விடும் சண்டைக் காரி அவள்.

கடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை அவர்கள் அல்பாவைப் பற்றி நினைவுப் பதிவினை எடுத்துரைக்கையில், “அமுதசுரபியைக் கூப்பிட்டு ஒரு வேலையையோ அல்லது ஒரு பொறுப்பையோ எடுத்து நடத்தும்படி கூறினால், அவரால் செய்ய இயலுமென்றால் உடனே ஓமென்று சொல்லிப் பொறுப்பெடுத்து நடத்துவார். அப்படி அந்த வேலை எதுவும் சிக்கல் என்றால் அதற்கான காரணத்தைக் கூறி அதில் தேர்ச்சியடைந்து விட்டு குறுகிய காலத்தினுள்ளே சொன்ன வேலையைப் பொறுப்பெடுத்து திறமையாகச் செய்வார்.”

எவ்வளவு அற்புதமான செயலுக்குரிய போராளியை நாங்கள் இழந்து விட்டோம் என்ற உணர்வு எப்போதும் நம் மனங்களை அரித்துக் கொண்டேயிருக்கிறது.

வருண கிரண நடவடிக்கையால் பகைவன் கடலை இறுக்கிய காலம். எங்களது கடலாதிக்கத்தை பகைவனுக்கு உணர்த்த நாங்கள் வாய்ப்புப் பார்த்திருந்த வேளை…

கடலிலும் நிறம் மாறி உயரக் கடலேறிய நுரை கக்கிக் கொண்டிருந்த காலம். 23-09-2001 முல்லைக் கடலில் எம் தரப்பு வழித்திருந்தது பகைக்கல நகர்வைக் கண்காணத்தவாறு.

பொருது களம் தொடங்கி சொற்ப பொழுதுகள்… பகைவனின் வலிமை அகன்று கொள்ள, எமது படகிற்குப் பாரிய சேதம். இயந்திரங்கள் வெடிபட்ட அசைய மறுக்க, படகை; கைவிட வேண்டிய நிலை.

எதிரிக்கு படகு என்றால் அது பொருள்தான். ஆனால் அது எங்களுக்கோ உயிர். உணர்வும் சதையும், குருதியுமாய் எம் தோழர், தோழிகள் வாழ்ந்த கருவறை. வாய்ப்பேச்சின்றி எமை அரவணைக்கும் தாய். எப்படி அதை எம் கண்ணெதிரே தீ மூட்ட முடியும். அல்பா துடித்துப் போனாள். எப்பாடு பட்டாவது படகைக் கரைக்குக் கொண்டு போகவேண்டும். எங்களத படகுகளின் எண்ணிக்கையோ ஐந்து விரல்களுக்குள்ளடங்க, அவனது படகோ இரட்டைத் தானத்திலிருந்தது.

மனோதிடம் உருக் கொள்ள அல்பாவின் கட்டளைப் படி அவளது படகோடு செயலிழந்த படகு தொடுக்கப்பட்டு அதை அவள் இழுக்கத் தொடங்கினாள். ஏற்கனவே கடல் நிலைமையோ மோசம். இன்னுமொரு படகைக் கட்டியிழுப்பதால் வேகமோ குறைவு. இமைத்துளியில் அண்மிக்கும் எதிரியின் படகைத் திருப்பித்தாக்க தொடுவையைக் கழற்றிவிட்டு அல்பாவின் படகு சண்டை பிடிக்கப் போய்விடும். தூர உதிரிப்படகு வந்து அந்தப் படகை தொடுக்கத் தொடங்க எதிரி கிட்ட வந்து விடுவான். திரும்பவும் போய் அடித்துவிட்டு வந்து படகை நூறு மீற்றர் தொடுத்துக் கொண்டு வந்த பிறகு கிட்ட வாற எதிரிக்குப் போய் நெருப்படி கொடுத்துவிட்டு வந்த அன்று அவ்வளவு இடர் நிறைந்த களத்தில்க் கூட அல்பா பதற்றப்படவில்லை நிதானமாய் கரைக்கு நிலைப்பாட்டை அறிவித்து, அந்தப் படகை கைவிடாமல் கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும் இறுதிவரை அவள் நிலை குலையவில்லை.

ஆனால் அவளது மனத்திண்மை எதிரியின் ரவைக்குப் பொறுக்கவில்லைப் போலும். எங்கிருந்தோ வந்த வயிற்றைக் கிழித்து கொண்டு நின்று போனது.

அல்பா இப்போது மருத்துவமனையில். போய் வருபவர்களிடம் எல்லாம் தன் வேதனையைப் புறக்கணித்தவாறு சண்டை நிலைப் பாட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். “படகுகள் எல்லாம் கரைக்கு வந்திட்டுதோ…? படகில் நிக்கிற ஆருக்கும் என்ன பிரச்சினையோ…?” இது தான் அல்பாவின் இறுத்திக் கணங்கள் வரை ஒலித்துக் கொண்டிருந்தது.

மாதம் ஒன்றானது மருத்துவ உலகிற்குச் சவால் விட்டாவாறு அல்பா. நாங்கள் போகும் போது புன்னகை உதிர்க்கும் அல்பாவிற்கு இனி ஒரு பிரச்சினையும் இல்லை என்று நாங்கள் நம்பினோம்.

அவள் காயம் மாறி அவள் இல்லாது நடந்த சண்டையின் சரி பிழைகள் கதைக்க அடுத்த கட்ட மகளீரின் வளர்ச்சி பற்றி திட்டம் போட, புதியவர்களைப்; படகில் ஏற்றுவது பற்றி விதாதிக்க, துணைத் தளபதியாய் பொறுப்பேற்கப் போகும் அல்பாவை வாழ்த்தவென பல மனங்கள் தங்களிற்குள்ளேயே பல சிந்தனைத் துளிகளை வைத்திருக்க எதையும் கேட்காமல், எம் கனவுச் சிறகுகளைப் பிடுங்கியவாறு அந்தச் செய்தி 26-10-2001 அன்று எம் செவிகளுக்குள்ளே அறைந்தது. அல்பா, எங்களது கடற்புலி மகளீர் பிரிவின் வாடை வெள்ளியாய், காலமெல்லாம் பலரை வளர்த்தெடுக்கும் தளபதியாய், ஆளுமையானதொரு கட்டளை அதிகாரியாய் உலாவி எம் சுமைகளுக்குத் தோள் கொடுப்பாயெனக் காந்திருந்த நீயோ கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியாக எம் மனங்களோடு கலந்து போனாய்…

கடற்கரும்புலிகள் மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்

25.10.1995 அன்று வீரச்சாவடைந்த மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் அவர்களின் 17 ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் 25.10.1995 அன்று திருகோணமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினை மூழ்கடித்து வீரச்சாவடைந்த மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் ஆகிய வீர மறவர்களின் 17ம் ஆண்டு வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.

25.10.1995 அன்று திருகோணமலை துறைமுக நுழைவாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான “டோறா” அதிவேக பீரங்கிப் படகினைத் தகர்த்து மூழகடித்து

கடற்கரும்புலி மேஜர் தில்லையன் (நளினன்)
(தெய்வேந்திரன் யோகேஸ்வரன் – மூதூர், திருகோணமலை)

கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் (பெரியதம்பி)
(கந்தசாமி கோபாலகிருஸ்ணன் – காரைநகர், யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மதன்
(நாகராசா குகதாசன் – விநாயகபுரம், அம்பாறை)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதே நாள் வவுனியா கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான மோதலின்போது

மேஜர் திருமகன் (விஜேய்)
(நவரட்ணராஜா நாகராசா – யாழ்ப்பாணம்)

என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

**
வவுனியாவில் காவியமான கப்டன் லோறன்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 27ம் ஆண்டு நினைவு நாள்

பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தாயகத்திற்கான பயணத்தினை நிறைவு செய்து தமிழகம் திரும்பும்வேளை அவரை மன்னார் வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று விட்டு தளம் திரும்பும்வேளை வவுனியாவில் இடம்பெற்ற மோதலில் காவியமான நான்கு மாவீரர்களின் 27ம் ஆண்டு நினைவு நாள்
இன்றாகும்.

தாயகத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் திரு. நெடுமாறன் ஐயா அவர்கள் தனது பயணத்தினை நிறைவு செய்து வன்னித் தளத்திலிருந்து தமிழகம் திரும்பியவேளை அவரை பாதுகாப்பாக மன்னாருக்கு அழைத்துச் சென்று தளபதி விக்ரர் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தளம் திரும்பி வரும் வழியில் வவுனியா மாவட்டம் ஓமந்தை கொக்குவெளியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து மேற்கொண்ட தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு:

கப்டன் லோறன்ஸ்
(மருதலிங்கம் சிவலிங்கம் – கொக்குத்தொடுவாய், மணலாறு)

லெப்டினன்ட் சபா
(கந்தையா சிவமூர்த்தி – கொக்குத்தொடுவாய், மணலாறு.)

2ம் லெப்டினன்ட் லலித்
(நடேசு இராஜேந்திரன் – முள்ளியவளை, முல்லைத்தீவு.)

2ம் லெப்டினன்ட் ஜீவன் (குதிரைவீரன்)
(தம்பிஐயா இரத்தினசாமி – முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்)

தமிழீழ தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

ஓயாத அலைகள் – 4 நாகர்கோவில் தாக்குதலில் வீரகாவியமான கரும்புலிகள் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்


“ஓயாத அலைகள் – 4” நடவடிக்கையில் காவியமான கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன், கப்டன் சரத்பாபு ஆகியோரினதும், மட்டக்களப்பில் காவியமான லெப். அருள்மதன் என்ற மாவீரரினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

24.10.200 அன்று “ஓயாத அலைகள் – 4” நடவடிக்கைக்கு வலுச்சேர்ப்பதற்காக நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கை ஒன்றின்போது

கரும்புலி மேஜர் சோபிதன்
(துரைச்சாமி ஜீவகணபதி – மூன்றுமுறிப்பு, வவுனியா)

கரும்புலி மேஜர் வர்மன் (மேனவன்)
(வடிவேல் தங்கத்துரை – களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)

கரும்புலி கப்டன் சந்திரபாபு
(குமரப்போடி லிங்கராசா – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)

ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதேநாள் மட்டக்களப்பு காமினிபுரம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில்

லெப்டினன்ட் அருள்மதன்
(வேலுப்பிள்ளை ஜீவராஜ் – மாணிக்கமடு, அம்பாறை)

என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். 

தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

Up ↑