தமிழீழக் கடற்பரப்பில் காவியமான லெப்.கேணல் அண்ணாச்சி உட்பட்ட 9 மாவீரர்களினதும், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காவியமான இரு மாவீரர்களினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
01.10.1999 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் அண்ணாச்சி அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
லெப்.கேணல் அண்ணாச்சி (சிறி)
(காங்கேயமூர்த்தி கருணாநிதி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
மேஜர் குகராஜ் (சிலம்பரசன்)
(ஜோன்பீற்றர் தார்ற்றியாஸ் – குடத்தனை, யாழ்ப்பாணம்)
மேஜர் ராகினி
(பாலசிங்கம் பிரபா – தாளையடி, யாழ்ப்பாணம்)
கப்டன் கோபி (நகையன்)
(கோபாலராசா ரமேஸ்கண்ணா – கரவெட்டி, யாழ்ப்பாணம்)
கப்டன் செந்தமிழ்நம்பி
(இராசையா பிரபாகரன் – நீர்வேலி, யாழ்ப்பாணம்)
கப்டன் எழில்அழகன்
(சோமசுந்தரம் கமல்ராஜ் – மூதூர், திருகோணமலை)
கப்டன் குறிஞ்சிக்கண்ணன் (வாசன்)
(கோணேஸ்வரலிங்கம் மணிவண்ணன் – பொலிகண்டி, யாழ்ப்பாணம்)
கப்டன் கோவலன்
(நடராசா இந்துக்குமார் – புத்தூர், யாழ்ப்பாணம்)
கப்டன் தமிழ்க்கன்னி
(சூசைப்பிள்ளை மேரிகொன்சியா – முள்ளியான், யாழ்ப்பாணம்)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இதே நாள் மட்டக்களப்பு மாவட்டம் நொச்சிமுனைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில்
கப்டன் அருச்சுனன்
(சிவநேசராசா செல்வகுமார் – நாவற்காடு, மட்டக்களப்பு)
கிளிநொச்சி மாவட்டம் சுட்டதீவு பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில்
வீரவேங்கை மாதுமை
(ஈஸ்வரராசா பிரதீபா – கரடியானாறு, மட்டக்களப்பு)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
அல்பிரட் தங்கராசா துரையப்பா ஈழத்தமிழர்களின் வரலாற்றில் அழிக்கமுடியாத பெயர். தமிழ்ஈழத்தின் கலாச்சார தலைநகரான யாழ்ப்பாணநகரத்தினை நவீனமயப்படுத்துவதிலும் அழகுபடுத்துவதிலும் முழுப்பங்கினை வகித்தவர். யாழ்ப்பாணநகரத்தின் பல இடங்களிலும் காணப்படும் தமிழ்ச்சான்றோர்களின் அழகுமிகு சிலைகளும் நகரத்தின் நடுவே உயர்ந்து நிற்கும் திராவிட சிற்பக்கலையுடன் கூடிய நவீனசந்தைக் கட்டிடம் உட்பட யாழ்ப்பாணத்தின் பொதுவிளையாட்டரங்கான ‘யாழ் துரையப்பா ஸ்ரேடியம்’ மற்றும் திறந்தவெளி அரங்கு என்பவற்றை நிர்மாணித்த பெருமைக்குரிய நகரமுதல்வர் இவரேயாவர். அத்துடன் வரலாற்றுசிறப்புமிக்க யாழ்ப்பாண பொதுநூலகத்தை முதன்முதல் திறந்துவைத்த முதல்வரும் இவர்தான். இவருடைய காலத்தில் தான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்பட்டமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
1960 மார்ச் மற்றும் யூலை மாதங்களில் நடந்த பொதுத்தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டு தமிழ்க்காங்கிரஸ் தலைவரான ஜி.ஜி எனப்பட்ட காங்கேசர் பொன்னம்பலத்தை தோற்கடித்து யாழ்ப்பாண தொகுதியின் பாராளுமன்றஉறுப்பினராக பதவி வகித்தவர். இளம்சட்டத்தரணியான இவர் சுயேட்சையாக போட்டியிட்டே இராணிவழக்குரைஞரும் மிகப்புகழ்பெற்ற குற்றவியல் சட்டத்தரணியுமான ஜி.ஜி.பொன்னம்பலத்தை மட்டுமல்ல அன்று வீசிய தமிழரசுக்கட்சி அலையிலும் அதன்வேட்பாளரான கதிரவேற்பிள்ளையையும் ஒருங்கே தோற்க்கடித்த தனிநபர் என்ற பெருமைக்குரியவர். துரையப்பாவின் மனைவி ஜி.ஜி. பொன்னம்பலத்தின் மருமகள் என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
1960 மார்ச் 19 இல் முதன்முதலாக யாழ்ப்பாணத்தொகுதியின் சுயேட்சை வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்ட இவர் அன்று சிறுபான்மை பலத்துடன் இருந்த டட்லிசெனநாயக்காவின் ஜக்கியதேசியக்கட்சிக்கு ஆதரவுவழங்கினார். இதன்மூலம் மார்ச்23 ஜக்கிய தேசியக்கட்சியை ஆளுங்கட்சியாகவும் டட்லிசெனநாயக்காவை பிரதமராக்கவும் வழிவகுத்தார். அதாவது தனது ஒற்றைவாக்கினாலே ஒரு அரசாங்கத்தையே அமைக்க முன நின்ற King Maker இவர் என அன்று போற்றப்பட்டார். ஆனால் அடுத்த மாதமே 1960 ஏப்ரல் 22ந் திகதி நடைபெற்ற டட்லி செனநாயக்காவின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் சிம்மாசனப் பிரசங்கத்தின்போது தமிழரசுக்கட்சியுடன் இணைந்து டட்லியின் அரசுக்கெதிராக வாக்களித்தார். இதன்மூலம் டட்லி அரசாங்கத்தை தோற்க்கடிக்க இவரும் காரணமானார். மீண்டும் 1960 யூலைமாதம் நடந்த 5வது பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும் இரண்டாவது முறையாக வெற்றிபெற்றார். இம்முறை முதன்முறையாக அரசியலுக்கு வந்தவர்தான் பண்டாரநாயக்காவின் விதவை மனைவியான ஸ்ரீறிமாவே பண்டாரநாயக்கா ஆவர். 1960யூலையில் உலகின் முதலாவது பெண் பிரதமராக ஸ்ரீறிமாவோ பண்டாரநாயக்கா பதவியேற்றுக்கொண்டார். அன்று ஸ்ரீறிமாவோவிற்கு தனதுஆதரவை வழங்கியதன் மூலம் அவரது நண்பராகவும் அவரது தீவிரவிசுவாசியாகவும் துரையப்பா மாறினார். 1961இல் தமிழினத்தின் பெயரால் தமிழரசுக்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட யாழ்கச்சேரி சத்தியாக்கிரக போராட்டத்திலும் தனதுதொண்டர்களுடன் இவர் கலந்துகொண்டார்.
1960 யூலை முதல் 1975 யூலை 27இல் தான் இறக்கும்வரை அக்கட்சி யினதும் ஸ்ரீறிமாவோவினது உண்மையான தோழமையுடன் அவரின் ஆதரவாளராக விளங்கினார். இந்நிலையில் 1970மே மாதம் 27ந்திகதி நடந்த 7வது பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் மீண்டும் சுயேட்சையாக போட்டியிட்டார். எனினும் வெறுமனே இரட்டை இலக்கமான 56 வாக்குகள் வித்தியாசத்தில் அன்றைய தமிழரசுக்கட்சி வேட்பாளரான F.X.மார்ட்டினிடம் வெற்றிவாய்பை இழந்தார். எனினும் பிரதானவேட்பாளரும் தன்னுடன் தீராப்பகை கொண்டிருந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தைவிட ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று மீண்டும் தனது மக்கள் ஆதரவினை நிருபித்தார்.
1970மே பொதுத்தேர்தல் யாழ்ப்பாணதொகுதி முடிவுகள்
வாக்காளர்தொகை 34.865
கு.ஓ.மார்ட்டின் (தமிழரசுக்கட்சி) 8848
அல்பிரட் துரையப்பா (சுயேட்சை) 8792
ஜி.ஜி.பொன்னம்பலம் (தமிழ்க்காங்கிரஸ்) 7222
மொத்தவாக்குகள் 24.938
மேலதிகவாக்குகள் 756
இந்துப்பல்கலைக்கழகத்திற்காக வாதாடிய ஜி.ஜி.பொன்னம்பலத்திற்கு எதிராக கத்தோலிக்கரான மார்ட்டினை நிறுத்துவதன் மூலம் 1965 – 1970இல் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய திரு.ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வாக்குகளை மதரீதியாக பிரிக்கவும் 1960 – 1965வரை பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய திரு.அல்பிரட்துரையப்பாவின் வெற்றிவாய்பை தடுக்கவும் என இரட்டைநோக்குடன் தமிழரசுக்கட்சி முற்பட்டது. இதற்காக யாழ்ப்பாணத்தில் என்றுமேயில்லாத மதரீதியானதும் சமூகரீதியுமான காழ்ப்புணர்வுகளை மார்ட்டினின் நியமனம் மூலம் அம்மக்களிடையே ஏற்படுத்த முயன்றது. இதற்கான விலையை அடுத்துவந்த ஒருவருடத்திலேயே அவர்கள் கொடுக்கநேர்ந்தது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அமைத்த குடியரசு அரசியல் நிர்ணயசபையை தமிழரசுக்கட்சியின் தீர்மானத்திற்கமைய பகிஸ்கரிக்கமறுத்த F.X.மார்ட்டினை 15.7.1971இல் இவர்களே கட்சியை விட்டு வெளியேற்ற நேர்ந்தது. வேலியில்போன ஓணானை மடியில் கட்டிய கதையாக இச்செய்தி அன்று வர்ணிக்கப்பட்டது.
இதே மார்ட்டின் 1972மே22இல் ஸ்ரீலங்காவின் முதலாவது குடியரசு அரசியல்அமைப்புக்கு ஆதரவளித்த தமிழ்க்காங்கிரஸ் கட்சியின் நல்லூர் அருளம்பலம் வட்டுக்கோட்டை தியாகராசா யாழ்ப்பாண நியமனஉறுப்பினர் MC சுப்பிரமணியம் நியமனஉறுப்பினர் குமாரசூரியர் மட்டக்களப்பு இரண்டாவது உறுப்பினர் இராஜன்செல்வநாயகம் என்பவர்களுடன் இணைந்ததன் மூலம் தமிழரசுக்கட்சியின் முகத்தில் கரிபூசினார். இவர்களிற்கு எதிராக துரோகிப்பட்டங்களை சூட்டிய அன்றைய தமிழரசுக்கட்சி பாராளு மன்ற உறுப்பினர்களும் மேற்படி அரசியலமைப்பிற்கு ஆதரவாக பின்நாட்களில் சத்தியப்பிரமாணம் எடுத்து பாராளுமன்றம் சென்றமை ஈழத்தமிழர்க ளின் வரலாற்றில் நாம்காணும் மாபெரும் துரோகத்தனமாகும்.
1974இல் யாழ்ப்பாணபல்கலைக்கழக திறப்புவிழாவில்
அல்பிரட்துரையப்பாவும் ஸ்ரீறிமாவோபண்டாரநாயக்காவும்
1970பொதுத்தேர்தலில்; தனது பதவியை மயிரிழையில் தவறவிட்ட துரையப்பா உடனடியாக கிடைத்த சந்தர்ப்பத்தில் யாழ் மாநகரசபை நிர்வாகசபை உறுப்பினரானார். அப்பொழுது முதல்வராகவிருந்த திரு நாகராஜா முன்னால் முதல்வாரன துரைராசாவுடனான போட்டியினால்; தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் தனக்கிருந்த பொதுமக்கள மற்றும் ஏனையமாநகரசபை உறுப்பினர்களின் பலத்த ஆதரவுடன் 22.04.1971 யாழ்மாநகர முதல்வரானார். இவ்வாறு யாழ்ப்பாண மாநகர முதல்வராக இவர் பதவியேற்றதும் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் யாழ்ப்பாண மாநகரம் மிளிர்ந்துகொண்டது.
இக்காலத்தில்தான் ‘சைக்கிள்பிறக்கிராசி’ என பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்ட இவர் காலைமுதல் நண்பகல்வரை யாழ் நீதிமன்றத்தில் ஏழைமக்களிற்காக இலவசமாக வழக்காடுவதிலும் பிற்பகலில் மாநகரசபை மேயருக்கான தனது கடமைகளையும் மேற்கொள்ளலானார். வீதியோரங்களில் நிறுத்தப்படும் வாகனங் களிற்கான கட்டணம் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் அறவிடப்பட்டது இக்காலத்தில்தான். இதன்பின்பே கொழும்பிலும் இம்முறை அமுலிற்குவந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் மாநகரசபைக்கான வருமானத்தை சமயோசிதமாக உயர்த்திய இவர் மறுபுறம் யாழ்நகரை அழகுபடுத்துவதிலும் அதிககரிசனை காட்டினார்.
இவருடைய அன்றைய நிர்வாகத்திறனை பின்னையநாட்களில் SMG என அழைக்கப்பட்ட பத்திரிகையாசிரியரான கோபாலரத்தினம் தனது அனுபவங்களினை தொகுத்து எழுதிய ‘பத்திரிகைத்துறையில் அரை நூற்றாண்டு’ என்னும் நுலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘அல்பிரட் தங்கராசா துரையப்பா கெட்டிக்காரமேயர் என்று பெயர்எடுத்தவர். இவரையார் பாராளுமன்றம் போவதற்கு தேர்தலில் போட்டியிடச்சொன்னார்கள் என யாழ்ப்பாணமக்களே பேசிக்கொண்ட காலமுமிருந்தது.’ இவ்வாறு வசீகரமுள்ள யாழ்ப்பாண மேயராகவே இவர் அன்று விளங்கினார். இக்காலத்தில் யாழ் கூட்டுறவு சங்கத்தலைவராகவும் துரையப்பா பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்மூலம் யாழ்ப்பாணநகரத்தின் இருபெரும் பதவிகளை சமகாலத்தில் வகிக்கும் வாய்ப்பைப்பெற்றார். எனினும் சாதாரணமனிதரும் அணுகக்கூடிய சாமானிய மனிதராகவே இவர் நடந்தகொண்டார். இதனால் யாழ்நகரத்தில் வசித்த மக்களின் அபிமானத்தைப்பெற்ற மக்கள்மேயராக இவர் அன்று விளங்கினார். இவர் சுடப்பட்டார் என அறிந்தவுடன் ஆவேசத்துடன் யாழ் வைத்திசாலையை முற்றுகையிட்ட மக்களின்மூலம் இவரது மக்கள்அதரவு பகிரங்கமானது.
யாழ்மாநகரமேயர் என்கிற வகையிலும் தனிப்பட்டமுறையிலும் பல சிறப்புகளுடன் நடமாடிய துரையப்பா இரண்டுபாரம்பரிய தமிழ்க்கட்சிகளின் இடைவிடாத நெருக்குதல் காரணமாக புகலிடம்தேடியோ அல்லது தனது விசுவாசமான நட்பு பெற்றுக்கொண்ட அரசியல் அதிகாரத்தில் நம்பிக்கை வைத்தோ ஸ்ரீறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளராகினார். அன்றைய தபால்தந்திஅமைச்சர் செல்லையாகுமாரசூரியருடன் போட்டி போட்டுக் கோண்டு அக்கட்சியை யாழ்ப்பாணத்தில் வளர்ப்பதில் அதிககரிசனை காட்டினார்;. தன்னை எவ்விதகட்சி அடிப்படையுமில்லாமல் பாராளுமன்றஉறுப்பினராகவும் மாநகரசபை உறுப்பின ராகவும் சுயேட்சையாகவே மக்கள் தெரிவுசெய்தனர். என்பதை மறந்து தமிழர்விரோத செயல்களினை முன்னிறுத்திய இனவாத ஸ்ரீறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு இவர் வழங்கியஆதரவு பெரும்பாலான தமிழ்மக்களின் சீற்றத்திற்குள்ளாகியது. நகரமுதல்வர் அல்லது கட்சியின் நீண்டகால ஆதரவாளர் என்பதால் ஸ்ரீறிமாவோவின் அரசாங்ககட்சியுடனும் அதன் உயர்மட்டத் தலைவர்களுடனான இவருடைய தொடர்புகளும் இவ்வாறான செயல்களும்; சாதாரணமானவையே. ஆனால் இவரோ மேயர் என்ற பதவியை ஏற்பதற்கு முன்பிருந்தே கொழும்பிலிருந்து வரும் மந்திரிகளையும் அதிகாரிகளையும் இவற்றிற்கு மேலாக திருப்திப்படுத்தமுற்பட்டார். இதற்காக குறிப்பிட்ட சிலநடனதாரகைகளையும் பயன்படுத்த முற்ப்பட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. இதனைவிட இவரது சகஉறுப்பினர்களில் ஒருவர் யாழ் நகரசண்டியனாகவும் தன்னினச்சேர்க்கையாளராகவும் யாழ்ப்பாண மக்களால் இனம் காணப்பட்டார்.
1970 தேர்தல்காலங்களில்; தன்னை இடைவிடாது தாக்கிய தமிழரசுக் கட்சியின் சுதந்திரன் பத்திரிகையை பழிதீர்கமுயன்றார். தமிழரசுக்கட்சியின் தலைசிறந்த பேச்சாளராக விளங்கி கருத்துவேற்றுமை கொண்டு அதிலிருந்து விலகிய புதுமைலோலன் என்ற கந்தசாமியை ஆசிரியராகக் கொண்டு ‘அலையோசை’ பத்திரிகையை வெளியிடலானார். இதன்மூலம் தமிழரசுக் கட்சியினரையும் குறிப்பாககூறினால் தனிப்பட்டரீதியில் அதன் தளபதியென புகழ்ந்துரைக்கப்பட்ட அமிர்தலிங்கத்தையும் அவர் குடும்பஉறுப்பினர்க ளையும் இப்பத்திரிகை தரம்தாழ்ந்து தாக்கியதாக இன்றும் பலர் கூறுகின்றனர்.
தமிழ்மாணவரின் உயர்கல்வியினை சிதைக்கும்நோக்கில் இனரீதியான தரப்படுத்தல்கொள்கையினை சட்டமாக்கியது ஸ்ரீறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகும். அக்கட்சிக்கு தீவிரஆதரவளித்தமை ஒருபுறமும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் குந்தகம் விளைவித்து அதன்மூலம் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தமுற்பட்டமையும் இவர்மீதான குற்றச்சாட்டு களாகியது. இக்காரணிகளால் தமிழ்மொழி அல்லது தமிழர் எனும் இனப்பற்றின் ஊடாக தமிழ் மாணவருக்கு எதிரான தரப்படுத்தல் கண்டு உருவாகிய தீவிரவாத அமைப்பான தமிழ்மாணவர் பேரவையின் முதன் நிலைக்குறியாக துரையப்பா இனம்காணப்பட்டார். இதன்காரணமாக 1971மார்ச் அவருடைய காரிலும் 1972ஆகஸ்டில் அவருடையகாணிவேலும் 1972 டிசம்பரில் கொய்யாத் தோட்டவீட்டிலுமாக மாணவர்பேரவையினரால் அவர் குறிவைக்கப்பட்டார். இத்தனை குண்டுத்தாக்குதலிலும் அதிஸ்டவசமாக உயிhதப்பிக்கொண்டார். எனினும் தனதுநிலையை மாற்றிக் கொள்ளாமல் மேலும் மேலும் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கான தனது ஆதரவை நல்கிவந்தார்.
1973 மார்ச் 12இல் சத்தியசீலனின் கைதுடன் ஓய்விற்குவந்த மாணவர்பேரவையின் செயற்பாடுகளின் பின் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்ப்பாணக்கிளை அலுவலகத்;தை அன்றைய சுகாதாரஅமைச்சரும் அப்புத்தளை பாராளுமன்ற உறுப்பினரான W.A.P ஆரியதாஸாவினை அழைத்து திறந்துவைத்தார். இதன்மூலம் தனது சிங்கள அரசவிசுவாசத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார். 1974 ஜனவரி 10ந்திகதி இரவு தமிழாராய்சி மகாநாட்டில் சிங்கள இனவெறியன் சந்திரசேகரா என்ற பொலிஸ் அதிகாரியின் தான் தோன்றித்தனமான செயற்பாட்டினால் விளைந்த அசம்பாவிதங்களிற்கு இவர் துணைபோனதாக பரவலாக குற்றம்சாட்டப்பட்டது. மேற்படிகாரணிகளால் துரையப்பா அழிக்கப்படவேண்டியவர் என்பது பெரும்பான்மையான குடாநாட்டுமக்களினது விருப்பமாகியது.சந்திரசேகரா யாழப்பாணத் தைவிட்டு மாறிச்சென்றிருந்த நிலையில்; 1975 மார்ச்சில் இல் ஈழம் திரும்பியிருந்த தலைவர் பிரபாகரன் எண்ணத்தில் உதித்த கருதுகோளான ‘எதிரியைவிட துரோகியே ஆபத்தானவன்’ என்பதற்கிணங்க யாழ்ப்பாண மேயராகவும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளராகவும் விளங்கிய துரையப்பாவின் வாழ்வு ‘வல்வெட்டித்துறை’ யில் இருந்து வந்த இருவரினால் முடித்துவைக்கப்பட்டது.
இவ்வாறே தமிழ்ஈழ விடுதலைப் போராட்டவரலாற்றில் ‘துரையப்பாவின் முடிவு’ முதன்மையாகியது.
‘வருணகுலத்தான் பார்வையில்’ தொடரும் இக்கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களினால் படைக்கப்பட்டதுடன், 2002ல் தலைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டவையாகும்.
-வருணகுலத்தான்
யாழ்தேவி நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான லெப்.கேணல் நரேஸ் உட்பட்ட 80 மாவீரர்களினதும் அச்சுவேலி மற்றும் மட்டக்களப்பில் காவியமான ஏழு மாவீரர்களினதும் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தென்மராட்சிப் பகுதிகளை வல்வளைக்கும் நோக்குடன் ஆனையிறவிலிருந்து சிறிலங்கா படைகளால் “யாழ்தேவி” என்ற குறியீட்டுப் பெயருடன் தொடங்கப்பட்ட படைநடவடிக்கைக்கு எதிராக புலோப்பளைப் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் இப்படை நடவடிக்கையை வழிநடாத்திய சரத் பொன்சேகா உட்பட இரு நூறு படையினர் படுகாயமடைந்தனர்.
படையினரின் இரு முதன்மைப் போர் டாங்கிகள் தாக்கியழிக்கப்பட்டன. பெருமளவான ஆயுதங்கள், வெடிபொருட்கள் என்பன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.
இந்த முறியடிப்புத் தாக்குதலில் கிளிநொச்சி கோட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் நரேஸ் உட்பட 80 போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.
அவர்களின் விபரம் வருமாறு
லெப்.கேணல் நாயகன் (நரேஸ்) (சிங்கராசா அருள்நாயகம் – முல்லைத்தீவு)
மேஜர் துஸ்யந்தன் (தர்மலிங்கம் ஜெயக்குமார் – முல்லைத்தீவு)
மேஜர் உதயகுமார் (கிச்சான்) (சீமான்பிள்ளை கிறிஸ்ரி – மன்னார்)
மேஜர் செந்தில் (அந்தோனிப்பிள்ளை பத்மநாதன் – மன்னார்)
மேஜர் செல்வம் (சோமு முருகேஸ் – மன்னார்)
மேஜர் யாழிசை (மனோ) (திருலோகசிங்கம் செல்வராணி – யாழ்ப்பாணம்)
மேஜர் சுகன்யா (நடராசா சுபாசினி – யாழ்ப்பாணம்)
மேஜர் செந்தூரன் (பிறேம்நாத்) (சிதம்பரப்பிள்ளை சிவரூபன் – யாழ்ப்பாணம்)
மேஜர் குமரன் (மணியம் சிறிசிவநாதன் – யாழ்ப்பாணம்)
கப்டன் நகுலன் (நாகமணி கேதீஸ்வரன் – மன்னார்)
கப்டன் உதயசீலன் (டென்சன்) (கணபதிப்பிள்ளை ஜெகதீஸ்வரன் – மன்னார்)
கப்டன் பொன்னன் (சிறிகாந்தன்) (நாகலிங்கம் சுரேந்திரன் – மட்டக்களப்பு)
கப்டன் மருத்துவன் (லுக்காஸ்) (சாமுவேல் செல்வானந்தன் – மன்னார்)
கப்டன் கருணா (சர்மிளன்) (அருள்நேசன் கின்சிலி – மன்னார்)
கப்டன் கல்யாணி (தர்மலிங்கம் ரேணுகாதேவி – திருகோணமலை)
கப்டன் அன்பழகி (அபி) (சபாபதி இலட்சுமி – திருகோணமலை)
கப்டன் குயிலி (சுதா) (இராசேந்திரம் இன்பவதினி – மட்டக்களப்பு)
கப்டன் சேரன் (ஈசன்) (நடராஜா சர்வேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் பிரதீபன் (கந்தசாமி மகிந்தன் – யாழ்ப்பாணம்)
கப்டன் சுதர்சன் (செல்லத்துரை ஜெயசீலன் – திருகோணமலை)
கப்டன் சத்தியன் (சிவஞானம் ரமேஸ் – முல்லைத்தீவு)
கப்டன் தமிழ்மறவன் (கல்கத்) (ஆறுமுகம் காண்டீபன் – முல்லைத்தீவு)
கப்டன் முகிலன் (வினோ) (சூரியகாந்தி சதாசிவம் – வவுனியா)
கப்டன் கதிர் (கீதன்) (இராமையா பாஸ்கரன் – திருகோணமலை)
கப்டன் மோகனரூபன் (சாந்தன்) (தங்கவேல் ராதாமோகன் – யாழ்ப்பாணம்)
கப்டன் செந்தூரன் (புலோமின்) (மரியாம்பிள்ளை கமிலன் – மன்னார்)
கப்டன் செம்பிறை (சௌமி) (வல்லிபுரம் நளினி – வவுனியா)
கப்டன் வினோதன் (நாகலிங்கம் உதயகுமார் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் சசிதரன் (வேலாயுதம் மகேந்திரன் – வவுனியா)
லெப்டினன்ட் மகேந்திரன் (மகேஸ்) (கந்தப்பிள்ளை விஜிதரன் – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் சீலன் (சலீம்) (தர்மகுலசிங்கம் சுந்தரராஜன் – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் சங்கர் (கனகரத்தினம் கனகலிங்கம் – வவுனியா)
லெப்டினன்ட் ஒப்பிலாமணி (சிவராஜ்) (அந்தோனிப்பிள்ளை செல்லத்துரை – புத்தளம்)
லெப்டினன்ட் செல்வன் (கனகரட்ணம் ஜீவரட்ணம் – அவிசாவளை)
லெப்டினன்ட் கில்மன் (கிருஸ்ணசாமி சின்னவன் – கண்டி)
லெப்டினன்ட் விந்தன் (கந்தையா சிவரூபன் – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் சிவனேசன் (ஆறுமுகம் பிரதீபன் – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் சிவம் (செல்வம் ரவி – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் உமா (அந்தோனிப்பிள்ளை தேவமேகன் – வவுனியா)
லெப்டினன்ட் குமணன் (செல்வரட்ணம் குணரட்ணம் – மன்னார்)
லெப்டினன்ட் தம்பித்துரை (தாசன் அன்ரன் – மன்னார்)
லெப்டினன்ட் சிவன் (பாக்கியராஜா மங்களேஸ்வரன் – மன்னார்)
லெப்டினன்ட் சிவானந்தன் (அந்தோனி யூட் – மன்னார்)
லெப்டினன்ட் தாரகா (இராமசாமி சந்திரா – வவுனியா)
லெப்டினன்ட் கார்வண்ணன் (ரகுநாதன்) (குணரட்ணம் குணராஜ் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இளமுருகன் (ஐயாத்துரை அன்பழகன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஈகவரசன் (தியாகு) (இராசேந்திரன் யோகநாதன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஐயாத்துரை(நியூட்டன்) (வன்னியசிங்கம் விஜயகுமார் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சந்திரன் (அருளப்பு பிலிப்சாள்ஸ் – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் திருவள்ளுவன் (ரகீம்) (சுப்பிரமணியம் கணேசமூர்த்தி – வவுனியா)
2ம் லெப்டினன்ட் நவீனன் (செல்வராசா செல்வேஸ்வரன் – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் மதியழகன் (பசுபதிப்பிள்ளை தயாரஞ்சீதன் – வவுனியா)
2ம் லெப்டினன்ட் நம்பியாண்டான் (செல்லத்துரை பிரபாகரன் – வவுனியா)
2ம் லெப்டினன்ட் அரவிந்தன் (செந்தமிழ்) (வெற்றிவேல் ஞானசேகரம் – வவுனியா)
2ம் லெப்டினன்ட் களப்பாடி (செல்லத்துரை புனிதகுமார் – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் நீதிதேவன் (ஆணுப்பிள்ளை ரகு – மன்னார்)
2ம் லெப்டினன்ட் வேல்விழி (அபிசா) (சூசைகுருஸ் லெனிஸ்கொலஸ்ரிக்கா – மன்னார்)
2ம் லெப்டினன்ட் செல்வம் (தனா) (கிறிஸ்.ரீன் செல்வராணி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சசி (சண்முகநாதன் வசந்தலாவேணி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் வாசுகி (குருசுமுத்து தேவதிரவியம் – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் சீத்தாலட்சுமி (சுப்பன் முனியம்மா – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் காரணி (துரைச்சாமி லலிதாதேவி – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் மிதுலா (கணபதிப்பிள்ளை மாரிமுத்து – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் நரேந்தினி (அப்பாசாமி அன்னலட்சுமி – கிளிநொச்சி)
வீரவேங்கை வீரபாண்டியன் (கந்தசாமி இந்திரகுமார் – முல்லைத்தீவு)
வீரவேங்கை முருகவேல் (பெருமாள் கண்ணன் – கிளிநொச்சி)
வீரவேங்கை சுரேஸ்குமார் (கதிரேசு சசிக்குமார் – கிளிநொச்சி)
வீரவேங்கை செல்வநந்தினி (செல்வராசா சகுந்தலாதேவி – திருகோணமலை)
வீரவேங்கை வெங்கடேஸ்வரன் (வடிவேல் சிவகுமார் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கிட்ணகுமார் (செல்வராஜா சந்திரகுமார் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ஜெயமதி (கணபதிபிள்ளை சறோசா – கிளிநொச்சி)
வீரவேங்கை ஜெனார்த்தினி (சீனிவாசகம் குணவதி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தட்சாயினி (சங்கரப்பிள்ளை விக்கினேஸ்வரி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை எழிலருவி (அருள்தாஸ் புஸ்பமலர் – கிளிநொச்சி)
வீரவேங்கை திருமலர் (யோகராசா கமலேஸ்வரி – திருகோணமலை)
வீரவேங்கை சுரபி (முத்துக்குமார் மோகனராணி – கிளிநொச்சி)
வீரவேங்கை துவாரகா (நல்லதம்பி கமலா – மட்டக்களப்பு)
வீரவேங்கை ரமணி (ஞானப்பிரகாசம் பெனடேற் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கவிமலர் (நல்லையா சத்தியகலா – கிளிநொச்சி)
வீரவேங்கை நவம் (முனீஸ்வரன் தவசீலன் – வவுனியா)
29.09.2006 அன்று யாழ். தீவகக்கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் ரதன்(பொன்முடி) அவர்களின் 6ம் ஆண்டு நினைவு நாளும்
இதேநாள் அச்சுவேலி பகுதியூடாக முன்னகர முயன்ற படையினருடனான மோதலில்
2ம் லெப்டினன்ட் இன்பன் (கிட்ணன் ரவிச்சந்திரன் – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் தமிழ்க்கொடி (சிவபாலன்) (பாலசிங்கம் (பக்கிரி) மகேந்திரன் – கண்டி)
வீரவேங்கை சதானந்தன் (சதா) (சின்னத்தம்பி சந்திரவடிவேல் – முல்லைத்தீவு)
வீரவேங்கை பானுதேவன் (முத்தையா சிவகுமார் – வவுனியா)
மட்டக்களப்பு மாவட்டம் மின்வெட்டிகங்கைப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில்
லெப்டினன்ட் புவனேசலிங்கம் (கணபதிப்பிள்ளை வன்னியசிங்கம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் ஜேசுதாஸ் (தாமோதரம்பிள்ளை நல்லதம்பி – மட்டக்களப்பு)
வீரவேங்கை மனோஜன் (சிவச்சந்திரன் யோகநாதன் – மட்டக்களப்பு)
ஆகிய போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையின்போது 2ம் நாள் சமரில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த 102 மாவீரர்களினதும் முல்லை மாவட்டத்தில் காவியமான வீரவேங்கை செங்கதிரோன் என்ற மாவீரரினதும் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
கிளிநொச்சிப் படைத்தளம் மீதான ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையின் வெற்றிக்கு வழியமைத்து 400 வரையான மாவீரர்கள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.
இவர்களில் 28.09.1998 அன்று 2ம் நாள் சமரில் 102 போர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
அம் மாவீரர்களின் விபரம் வருமாறு
மேஜர் தென்றல் (நாகமணி வாசுகி – மட்டக்களப்பு)
கப்டன் உசா (முத்துச்சாமி மாலினி – திருகோணமலை)
கப்டன் தமிழரசி (தம்பிராசா சோபா – யாழ்ப்பாணம்)
கப்டன் ஆசா (சண்முராசா இந்திரஜீவிதா – கிளிநொச்சி)
கப்டன் சுருளினி (சிவகுரு புவனேஸ்வரி – யாழ்ப்பாணம்)
கப்டன் ஜெனனி (தவராசா காஞ்சனா – யாழ்ப்பாணம்)
கப்டன் தமிழ்மகள் (இராஜகோபால் தர்மவதி – கிளிநொச்சி)
கப்டன் பாலப்பிரியா (இளையபெருமாள் சரோஜா – திருகோணமலை)
கப்டன் மதுவந்தி (சூசைப்பிள்ளை ரஜனி – முல்லைத்தீவு)
கப்டன் காந்திமதி (நிரோஜா) (செல்லர் தனலட்சுமி – யாழ்ப்பாணம்)
கப்டன் சசிவர்ணா (தர்மலிங்கம் பவளராணி – கிளிநொச்சி)
கப்டன் இனியவன் (யோகராசா தினேஸ்குமார் – மன்னார்)
கப்டன் சயந்தன் (முருகப்பன்) (சின்னத்தம்பி சிறீஸ்கந்தராசா – வவுனியா)
கப்டன் பார்த்தீபனா (இலக்கணா) (பேரம்பலம் மிருணாளினி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் கனிமயில் (தர்மலிங்கம் அதிமலாதேவி – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் தயாளினி (சிதம்பரநாதன் நிராகினி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கரிகாலினி (உசாலினி) (வசந்தகுமாரன் செல்வகுமாரி – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் பூங்கதிர் (நல்லநாதன் கயழ்விழி – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் கலையூரன் (ஈழப்பிரியன்) (செல்வநாதன் செல்வரூபன் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் அஞ்சலி (தம்பிராசா குமுதா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இன்பமருகன் (பூபதி) (இராமச்சந்திரன் ரகு – கிளிநொச்சி)
லெப்டினன்ட் மதுரா (கணபதிப்பிள்ளை ஜெயந்தினி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கலையரசி (செல்லப்பிள்ளை சூரியகலா – திருகோணமலை)
லெப்டினன்ட் சுதா (இரத்தினம் துஸ்யந்தி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கௌசினி (செல்வராசா சிவனேந்திரராணி – வவுனியா)
லெப்டினன்ட் சுபாகரி (பெருமாள் ரஞ்சினி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் இன்பம் (பரஞ்சோதி நந்தினி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் தயானி (இருமாண்டி யோகேஸ்வரி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் கனிமதி (தேவதாஸ் மரிஸ்டெலா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இளந்தேவி (நாகேஸ்வரன் தாரணி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கலைக்காவலன் (குகன்) (மகேந்திரன் முகுந்தகுமார் முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் செல்வமதி (செல்லத்தம்பி சுகந்தினி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மோகன் (சுடரேசன்) (கோபால் புஸ்பாகரன் – இரத்தினபுரி)
2ம் லெப்டினன்ட் தர்மிகா (முல்லை) (முத்தையா ஜெயந்திமலர் – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் கோணேஸ் (சின்னத்துரை அருமைமலர் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் பூரணி (யேசுராசா செல்வராணி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் மனைமயில் (கறுப்பையா வசந்தகுமாரி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் ஈகைமதி (சின்னத்தம்பி திலகவதி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சுசீலா (இராமநாதன் திருச்செல்வி – கண்டி)
2ம் லெப்டினன்ட் நிதர்சனா (இரத்தினகுமார் சர்மினி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சந்தனா (வானதி) (இராசரத்தினம் வனஜா – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் தமிழ்ச்செல்வி (கார்த்திகா) (கதிரவேலு ஜெயராதா – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் குணாளினி (கணேஸ் பன்னீர்ச்செல்வி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் பொன்முடி (பழனியாண்டி சாந்தினி – கண்டி)
2ம் லெப்டினன்ட் நல்லவள் (இராஜகோபால் ரமணி – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் இன்செல்வன் (அமிர்தநாதன் சகாயசீலி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் அகரவல்லி (இராமச்சந்திரன் மனோகரி – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் பூபாலினி (கோபாலப்பிள்ளை ஆனந்தகுமாரி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் பூங்குழலி (கறுப்பையா யோகேஸ்வரி – கிளிநொச்சி)
வீரவேங்கை தணிகை (செல்வராசா சயந்தினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அழமதி (தேவகி) (பெருமாள் சைலாதேவி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தமிழ்க்குயில் (பாபு புஸ்பராணி – முல்லைத்தீவு)
வீரவேங்கை வெண்மதி (அகவிழி) (சோமசேகரம் திலகேஸ்வரி – வவுனியா)
வீரவேங்கை இளையவள் (சுப்பிரமணியம் விக்கினேஸ்வரி – கொழும்பு)
வீரவேங்கை வெண்மதி (கார்த்திகேசு இந்துராணி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை நிறஞ்சனா (சிவசாமி அமலாவதி – கிளிநொச்சி)
வீரவேங்கை கேடயன் (மறைமகன்) (யோசப் கோபிநாத் – கிளிநொச்சி)
வீரவேங்கை தமிழவள் (மரியதாஸ் மேரிக்குயின் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை நித்தியகல்யாணி (கார்த்திகேசு சியாமினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சாந்தன் (இராமலிஙகம் ஜெயசீலன் – முல்லைத்தீவு)
வீரவேங்கை இளநங்கை (முத்துலிங்கம் ஜெயசிறி – முல்லைத்தீவு)
வீரவேங்கை யாழிசை (பாக்கியம் இலங்கேஸ்வரி – வவுனியா)
வீரவேங்கை இன்னரசி (செல்வம்) (பரமேஸ்வரன் சுகந்தராணி – கிளிநொச்சி)
வீரவேங்கை நல்லரசி (ஈழமதி) (சிவபாலசேகரம் றூபிகா – கிளிநொச்சி)
வீரவேங்கை புரட்சிக்கலை (ஆண்டி கமலினி – வவுனியா)
வீரவேங்கை அமுதநகை (பாலச்சந்திரன் மாலினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அகன்பூ (கந்தையா மதீபா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அகவாணி (சிறிதரன் காந்திமதி – திருகோணமலை)
வீரவேங்கை அருட்செல்வி (மனுவேற்பிள்ளை ஞானறஞ்சினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அகக்கதிர் (இராமகுமார் கலைவாணி – கிளிநொச்சி)
வீரவேங்கை அமுதமதி (சரவணபவான் நளாயினி – கிளிநொச்சி)
வீரவேங்கை அலைச்சிட்டு (பசுவர் ரஜனிக்காந்தா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ஈழநிலா (துரைச்சாமி விஜயலலிதா – கிளிநொச்சி)
வீரவேங்கை அகரக்கனி (கார்த்திகேசு இந்துமதி – முல்லைத்தீவு)
வீரவேங்கை வைகை (இராஜகோபால் சுவேந்திராதேவி – வவுனியா)
வீரவேங்கை இளங்குயில் (செபஸ்ரியாம்பிள்ளை மேரிகலிஸ்ரா – முல்லைத்தீவு)
வீரவேங்கை குயிலி (வல்லிபுரம் இராசரூபினி – முல்லைத்தீவு)
வீரவேங்கை சுடர்த்தமிழ் (பொன்னுத்துரை தயாளினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சேந்தினி (சண்முகம் சுகிர்தா – வவுனியா)
வீரவேங்கை சுடர்மொழி (பாலகிருஸ்ணன் சிவராணி – வவுனியா)
வீரவேங்கை பேரழகி (ராதை) (பழனியப்பன் சந்திராதேவி – வவுனியா)
வீரவேங்கை எழில் (சேனாதிராசா கனகேஸ்வரி – வவுனியா)
வீரவேங்கை புகழருவி (மரியநாயகம் சுதர்சினி – முல்லைத்தீவு)
வீரவேங்கை வெற்றிமகள் (சின்னத்தம்பி ஆனந்தி – முல்லைத்தீவு)
வீரவேங்கை தகைநலா (தங்கராசா செல்வகுமாரி – கொழும்பு)
வீரவேங்கை புகழரசி (கிருஸ்ணன் கலைவாணி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கதிர்மதி (நடராசா தர்மினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை நிலைவாணி (தவராசா வெனிஸ்ரலா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கலையமுது (செல்லையா பாமினி – வவுனியா)
வீரவேங்கை அருந்ததி (இரங்கசாமி புஸ்பராணி – முல்லைத்தீவு)
வீரவேங்கை வண்ணமதி (செல்வராசா சித்திராதேவி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கலையரசி (நாகரத்தினம் கமலாவதி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை குணாளினி (கமலநாதன் சங்கீதா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை முகுந்தா (தேவராசா சியாமளா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை செம்பருத்தி (ஜெயபாலசிங்கம் ராஜினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை நிலமகள் (கந்தையா ரஞ்சினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அகநிலா (நல்லையா கிருஸ்ணவேணி – கிளிநொச்சி)
வீரவேங்கை அருள்மேரி (அந்தோனிபிரான்சிஸ் கலையரசி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மலர்மதி (அழகு விஜயகுமாரி – கிளிநொச்சி)
வீரவேங்கை கோலமதி (இராசரட்ணம் ஜெயப்பிரியா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கண்ணகி (வான்மதி) (பெரியசாமி சசிகலா – முல்லைத்தீவு)
வீரவேங்கை அறிவுமலர் (மேரிபாலன் நிர்மலா – முல்லைத்தீவு)
இம் மாவீரர்களினதும் இதேநாள் முல்லை மாவட்டத்தில் சுகவீனம் காரணமாகச் சாவினை அணைத்துக் கொண்ட
வீரவேங்கை செங்கதிரோன் (செந்தூரன்) (ஜெயானந்தன் சுதன் – யாழ்ப்பாணம்)
என்ற மாவீரரினதும் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
கிளிநொச்சி படைத்தளம் தாக்கியழிக்கப்பட்ட ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையில் காவியமான 293 மாவீரர்களின் 14ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.
27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது “ஓயாத அலைகள் 2” படை நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின்போது 2000 வரையான படையினர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் படுகாயமடைந்தனர். பெருமளவான போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், படை ஊர்திகள் என்பன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.
கிளிநொச்சிப் பகுதி சிறிலங்கா படைகளின் வல்வளைப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட “ஓயாத அலைகள் – 2” நடவடிக்கையின் வெற்றிக்காக 400 வரையான போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.
இவ்வெற்றிச் சமரில் முக்கிய பங்கேற்று ஊடறுப்பு அணி ஒன்றின் தலைவியாகச் சென்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் செல்வி, லெப்.கேணல் ஞானி போர்முனையில் தாம் நின்றிருந்த இடம் மீது செல் போடுங்கோ !!
எங்களைப் பார்க்க வேண்டம் எனக் கூறி எதிரிக்கு பேரழிவை ஏற்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தவர்கள் !!!!
லெப்.கேணல்கள் சித்தார்த்தன்(சித்தா), செல்வி(றியன்சி), ஞானி, ஈஸ்வரகாந்தன், காந்தசீலன், விசு, மைந்தன், மணிமேகலன் உட்பட 400 வரையான மாவீரர்கள் கிளிநொச்சி மண்ணை மீட்பதற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கினர்.
27.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் நிசாந்தன் அவர்களி்ன் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
26.09.2006 அன்று திருகோணமலை மாவட்டம் இலுப்பைக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சுரேஸ் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.
27.09.1998 அன்று ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையின் முதல் நாள் சமரில் வீரச்சாதை் தழுவிய 293 மாவீரர்களின் விபரம் வருமாறு
லெப்.கேணல் மணிமேகலன் (முரளி) (துரைசாமி நாகராசா – பதுளை)
லெப்.கேணல் ஞானி (பேரின்பநாயகம் சூரியகுமாரி – மட்டக்களப்பு)
லெப்.கேணல் சித்தாத்தன் (கந்தசாமி கலைநேசன் – மட்டக்களப்பு)
லெப்.கேணல் ஈஸ்வரகாந்தன் (காளியன்) (பொன்னம்பலம் ஜீவரட்ணம் – பதுளை)
லெப்.கேணல் காந்தசீலன் (ஜெனா) (நடேசன் ஜெயந்தன் – யாழ்ப்பாணம்)
லெப்.கேணல் மைந்தன் (கோபி) (செல்லையா ரவீந்திரன் – முல்லைத்தீவு)
லெப்.கேணல் விசு (அருமை) (நடராசா குகேந்திரன் – யாழ்ப்பாணம்)
லெப்.கேணல் செல்வி (றியன்சி) (சிவஞானம் ஜெனிற்றா – மன்னார்)
மேஜர் விமலச்சந்திரன் (அஜித்) (சிங்கராசா நிமால் – மட்டக்களப்பு)
மேஜர் குணசீலன் (சீலன்) (பொன்னுச்சாமி கணேஸ்நாதன் – மட்டக்களப்பு)
மேஜர் மயூரன் (லோகன்) (வீரக்குட்டி பேரின்பநாதன் – அம்பாறை)
மேஜர் கேதீஸ் (பார்த்தீபராஜ்) (கைலாயப்பிள்ளை உதயகுமார் – மட்டக்களப்பு)
மேஜர் சூரியவதி (வைத்தியநாதன் வசந்தகலா – யாழ்ப்பாணம்)
மேஜர் சிவாநந்தினி (சிவசுந்தரம் திருமகள் – யாழ்ப்பாணம்)
மேஜர் இளங்கீரன் (குணா) (பிரான்சிஸ் சேவியர்டனிஸ்ரன் விஜயகுமார் – யாழ்ப்பாணம்)
மேஜர் செழியன் (அருணா) (பாப்பா) (குணசிங்கம் சிவகுருநாதன் – யாழ்ப்பாணம்)
மேஜர் சிவமோகன் (மகேந்தி) (எழிலன்) (முத்துசாமி ரமேஸ்குமார் – வவுனியா)
மேஜர் கைலை (சின்னத்துரை பாஸ்கரன் – முல்லைத்தீவு)
மேஜர் ரவிசங்கர் (தணிகாசலம்) (செல்வரத்தினம் மணிமாறன் – யாழ்ப்பாணம்)
மேஜர் பிரியக்கோன் (திருஞானச்செல்வன் நற்குணராஜ் – மன்னார்)
மேஜர் அன்பன் (அக்பர்) (அருளம்பலம் சிவகுமார் – யாழ்ப்பாணம்)
மேஜர் நந்தினி (கிருஸ்ணப்பிள்ளை கமலாதேவி – மட்டக்களப்பு)
மேஜர் வானதி (வான்மதி) (மாதவன் தர்மபுத்திரி – வவுனியா)
மேஜர் கனிபா (இராசமாணிக்கம் சகாயலுட்ஸ் – மட்டக்களப்பு)
மேஜர் இசையமுது (நவரத்தினராசா நளாயினி – யாழ்ப்பாணம்)
கப்டன் மணிவண்ணன் (கணபதிப்பிள்ளை இலங்கேஸ்வரன் – மட்டக்களப்பு)
கப்டன் தமிழ்ச்செல்வன் (தேவா) (பேரின்பம் ரவி – மட்டக்களப்பு)
கப்டன் நல்லையா (ஆபிரகாம் லவன் – மட்டக்களப்பு)
கப்டன் தமிழ்முதல்வன் (சங்கரப்பிள்ளை நவேந்திரன் – மட்டக்களப்பு)
கப்டன் புஸ்பலிங்கம் புஸ்பராஜ் (றைமன் சுரேஸ் – அம்பாறை)
கப்டன் மலையூரான் (நாகராஜா முருகமூர்த்தி – அம்பாறை)
கப்டன் மேகன் (அருச்சுணன் தயானந்தன் – அம்பாறை)
கப்டன் துளசிதரன் (பொடியப்பு கிருஸ்ணகுமார் – மட்டக்களப்பு)
கப்டன் வேல்விழி (விக்கினேஸ்வரமூர்த்தி யமுனா – யாழ்ப்பாணம்)
கப்டன் பூங்குழலி (பூங்குயில்) (பார்வதி தங்கராசா – வவுனியா)
கப்டன் பவான் (திருஞானசம்பந்தர் சிவரூபன் – யாழ்ப்பாணம்)
கப்டன் அழகன் (அருளம்பலம் கேதீஸ்வரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் ரவிக்குமார் (சடாசிவம் சசிக்குமார் – யாழ்ப்பாணம்)
கப்டன் தமிழமுதினி (சிவராசா சிவானி – வவுனியா)
கப்டன் கார்த்திகா (கறுப்பையா புஸ்பவதி – மாத்தளை)
கப்டன் நிருபா (வினி) (மகாதேவன் தர்சினி – யாழ்ப்பாணம்)
கப்டன் அன்பரசன் (சதாசிவம் சந்திரகுமார் – மட்டக்களப்பு)
கப்டன் கலையரசன் (சிங்கராசா எட்வேட்ராசா – யாழ்ப்பாணம்)
கப்டன் தமிழ்வாணி (சிவகுருநாதன் துஸ்யந்தி – யாழ்ப்பாணம்)
கப்டன் பூங்கொடி (சிவபாதசுந்தரம் சிவநிதி – முல்லைத்தீவு)
கப்டன் கார்வண்ணன் (சுந்தரம்பிள்ளை மோகனராசா – திருகோணமலை)
கப்டன் புவனேந்திரன் (மான்பாலன்) (சுந்தரம் விக்கினேஸ்வரன் – திருகோணமலை)
கப்டன் மாதவன் (தம்பிராசா ரவீந்திரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் புயல்வேந்தன் (செல்வரத்தினம் முகுந்தன் – கிளிநொச்சி)
கப்டன் இயல்வாணன் (தமிழவன்) (அந்தோணி பாலச்சந்திரன் – முல்லைத்தீவு)
கப்டன் புவிரஞ்சன் (பழனியாண்டி நவநீதன் – கிளிநொச்சி)
கப்டன் தர்சன் (அருள்நம்பி) (அங்கசாமி பாஸ்கரன் – முல்லைத்தீவு)
கப்டன் வித்தி (முருகேசு நித்தியானந்தன் – திருகோணமலை)
கப்டன் இதயன் (ஆறுமுகம் சந்திரன் – கிளிநொச்சி)
கப்டன் பகீரதன் (கோபாலகிருஸ்ணன் சந்திரன் – கிளிநொச்சி)
கப்டன் புரட்சிமாறன் (பேரின்பநாயகம் சிறிரஞ்சன் – யாழ்ப்பாணம்)
கப்டன் வைகறை (நாதன் கஜேந்தினி – யாழ்ப்பாணம்)
கப்டன் பூங்கோதை (தேவகுலசிங்கம் இன்பராணி – யாழ்ப்பாணம்)
கப்டன் உதயராணி (கந்தசாமி ராஜினி – யாழ்ப்பாணம்)
கப்டன் சுதாகர் (சுதாகரன்) (கனகையா விஜயகுமார் – மட்டக்களப்பு)
கப்டன் மித்திரா (இராசரத்தினம் பரிமளா – திருகோணமலை)
கப்டன் நிரோசா (நாகராசா வில்வராணி – திருகோணமலை)
கப்டன் தில்லை (சூசை சரோஜினிதேவி – முல்லைத்தீவு)
கப்டன் வானதி (வாழக்கை) (இராசதுரை நித்தியா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தூயோன் (குழந்தைவேல் சிறிகுமார் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் துலங்கநாதன் (மயில்வாகனம் ரவி – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் இளவரசன் (யோசப்) (சூசைப்பிள்ளை நிக்சன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் லதன் (சிவலிங்கம் தங்கமயில் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் வீரத்தேவன் (தணிகாசலம் கங்காதரன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் கிரிதரன் (விஸ்வலிங்கம் பாக்கியராஜா – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் கற்கடகன் (திருமேணி உதயகுமார் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் இறையன் (வேலாயுதம் தெய்வேந்திரன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் நிதாம்பன் (கந்தப்பன் லிங்கநாதன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் உமாசங்கர் (செபஸ்ரியான்சில்வா ரொனி – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் தர்சனன் (சண்முகராசா கோவிந்தசாமி – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் அழகுராஜ் (மயில்வாகனம் லோகதாசன் – அம்பாறை)
லெப்டினன்ட் பவானி (செல்லத்தம்பி கலா – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் பாணுகாந்தன் (குமாரசாமி புவனேசகுமார் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் தீயரசன் (நல்லதம்பி சுந்தரராசா – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் கபிலா (கந்தசாமி நாகசோதி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அரசி (வேலாயுதப்பிள்ளை ஜீவகி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பெருமதன் (ஆனந்தன்) (கந்தசாமி ஜெகதீஸ்வரன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் வைதேகி (சோமசுந்தரம் சியாமளா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அருந்ததி (இராமநாதப்பிள்ளை திலகேஸ்வரி – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் கோதை (தளையசிங்கம் நந்தினி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் அழகுநிலா (இதயா) (கஜேந்தினி சிவலிங்கம் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இசைச்சிட்டு (பாலசுந்தரம் சுந்தரேஸ்வரி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பூநிலா (மரியதாஸ் ஜெனிற்றா – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் எழிலரசி (கொன்சி) (வைத்திலிங்கம் சிவபாக்கியம் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தமிழ்நிலவன் (செல்வராசா சிறிதரன் – திருகோணமலை)
லெப்டினன்ட் தென்னரசன் (சோமலிங்கம் சந்திரமோகன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் குருபரன் (ஆசீர்வாதம் ஸ்ரனிஸ்லாஸ் – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் பைந்தமிழ் (பற்பதலிங்கம் கோமளேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் நிலவன் (ஆளுடைநம்பி) (திருநாவுக்கரசு ரமேஸ்குமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் மணியரசன் (யோகேந்திரன் சசிகரன் – திருகோணமலை)
லெப்டினன்ட் சிவவதனி (கந்தசாமி துஸ்யந்தி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தேன்கவி (வேலன் விமலேஸ்வரி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தர்மசீலன் (மருதமுத்து சிவானந்தம் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் வந்தனா (வேலுப்பிள்ளை மாதரசி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கவியரசன் (அரசரட்ணம் சிறிகரன் – திருகோணமலை)
லெப்டினன்ட் புகழொளி (நேசரட்ணம் ராஜ்மோகன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கோமகள் (ஆசைப்பிள்ளை சசிகலா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் மகிழினி (தர்மலிங்கம் சுபாஜினி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பாமினி (நாகராசா கலாராணி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் நகுலா (நாகராசா சுதாஜினி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் உதயபாரதி (சிவலிங்கநாதன் சிவகுமாரி – வவுனியா)
லெப்டினன்ட் பழநிதி (பவளநிதி) (கனகசபை சுஜீபா – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் நித்திலன் (செபமாலைமுத்து விஜயகுமார் – மன்னார்)
லெப்டினன்ட் முத்தழகன் (வேலுப்பிள்ளை தவராசா – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் சுமன் (முத்தமிழன்) (தனபாலசிங்கம் சிவறஞ்சன் – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் இராவணன் (கோவிந்தசாமி மோதிலால்நேரு – வவுனியா)
லெப்டினன்ட் பரதன் (பாலசிங்கம் சயந்தன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தென்றல்வாணன் (பிரான்ஸ் ஸ்ரான்லி – வவுனியா)
லெப்டினன்ட் சுடர்வண்ணன் (ஆறுமுகம் சிவகரன் – திருகோணமலை)
லெப்டினன்ட் புண்ணியசீலன் (இராசேந்திரம் சேதுபாலன் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் ரகு (குகன்) (சுப்பிரமணியம் சிவரூபன் – வவுனியா)
லெப்டினன்ட் தர்மன் (தருமன்) (தம்பிராசா கருணகுமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தீச்செல்வம்(சீர்ச்செல்வம்) (பூபாலசிங்கம் சூரியகுமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் வசந்தராஜன் (சின்னமணி சிவகுமார் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் துலாகதன் (மயில்வாகனம் ரவி – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் அருள்நிதி (இளையதம்பி குமார் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் ஆத்திசூடி (சுந்தரலிங்கம் புஸ்பேந்திரன் – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் செங்குட்டுவன் (தம்பையா இராசேந்திரம் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பன்னீர் (சிவகுமார் புருசோத்தமன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பாமதி (விஜயரட்ணம் சத்தியப்பிரியா – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் இளவரசன் (வன்னியசிங்கம் ராசா – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் லாவன்னியன் (கிருபரத்தினம் கோணேசகிரி – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சுடேஸ்கரன் (செல்லத்துரை மகேந்திரராஜா – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் முத்திசையன் (வைரமுத்து சிவஞானம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சபேசன் (நாகராசா வசந்தராசா – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் மணிநாதன் (தம்பியப்பா நாகையா – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் தோன்றல் (கிருஸ்ணசாமி விநாயகமூர்த்தி – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் பூமகள் (புனிதநாதன் இராஜேஸ்வரி – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் உதயா (அழகுராசா புனிதவதி – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சுபா (தம்பிப்பிள்ளை இதயா – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அரசலா (கந்தசாமி பவானி – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் இளையவன் (ஜயாத்துரை சசிகலா – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சுகந்தா (தங்கா) (சின்னத்தம்பி குட்டி – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் தில்லைமணி (ஆறுமுகம் இலங்கேஸ்வரி – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் அரசி (ஆறுமுகம் ஜெயச்சித்திரா – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் பூங்காயினி (நடராசா இந்திரா – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் நிலவுமதி (கனகசபை இராஜயோகம் – வவுனியா)
2ம் லெப்டினன்ட் நிலவள் (சிவலிங்கம் சிறிரஜனி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் தில்லைமயில் (இதழி) (கந்தசாமி புனிதமலர் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கயல்நிலா (விவேகானந்தராசா யோகேஸ்வரி – மாத்தளை)
2ம் லெப்டினன்ட் ஆர்விழி (சுரபி) (முத்துலிங்கம் ஜெனிற்றா – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் தகைமகள் (முருகேசு வனிதாஅறிவுமளர் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கவியரசன் (சுப்பிரமணியம் சுமித்திரன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் காவியா (இராமச்சந்திரன் சந்திரகுமாரி – கொழும்பு)
2ம் லெப்டினன்ட் தீபா (இராசு ஜெயலட்சுமி – வவுனியா)
2ம் லெப்டினன்ட் நிலவன் (வரதன்) (இராமச்சந்திரன் ரமேஸ் – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் தமிழ்மாறன் (தோமஸ் ஜெராட் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சேரக்கொடி (சாமித்தம்பி ஜீவராசா – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் ரவிக்கா (இரத்தினம் ஜெகதினி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மகிழா (தம்பிஐயா உதயராணி – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் மன்மதன் (தங்கவேல் நகுலேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கவிஞன் (சிவபாலன் சிவகுமார் – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் சசிகலா (வேலு ஜனகேசரி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் குணா (கதிர்காமபோடியார் மதுரைமீனாட்சி – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் குழலினி (ரஜனி) (தர்மராசா அஜந்தா – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் பொய்கை (சுந்தரலிங்கம் சுபாசினி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அரசன்பன் (செல்வன் யோகதேவன் – மன்னார்)
2ம் லெப்டினன்ட் இன்பமலர் (அன்னலிங்கம் புவனலோஜினி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் அருட்சுடர் (முருகேசு சங்கீதா – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் அங்கவை (ஆதித்தா) (சிவானந்தராசா நவந்தினி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் கோமகள் (இராமநாதன் மகேஸ்வரி – வவுனியா)
2ம் லெப்டினன்ட் பவானி (குணநாதன் செல்வி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கலைவதனி (முருகையா ஜெயந்தினி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் நிலமகள் (றோசா) (குகநாததாசன் பிறேமிளா – வவுனியா)
2ம் லெப்டினன்ட் கலாவதி (ராணி) (செல்வநாயகம் சாந்தமலர் – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் ஜெயப்பிரியா (சிவநாதன் சுந்தரலட்சுமி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் ஈழவண்ணன் (துரைராசா கயந்தன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் வீமன் (செபநாயகம் மனோகர் – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் பொன்னிலவன் (புலிராஜ்) (கணபதிப்பிள்ளை மாணிக்கலிங்கம் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் இளந்தகை (பாலசிங்கம் பாலச்சந்திரன் – வவுனியா)
2ம் லெப்டினன்ட் வீரச்சோழன் (செல்லத்துரை சத்தியநாதன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் வெற்றிமாறன் (செல்லையா யோகேஸ்வரன் – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் ரகுவரன் (சரவணன்) (பாலகுலேந்திரன் குகதாஸ் – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் சீலன் (பற்குணன் சுகுணன் – வவுனியா)
2ம் லெப்டினன்ட் உணர்வீரன் (முருகையா சுபாஸ்கரன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கிருபா (பெருமாள் பத்மாதேவி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் மணியானன் (கணபதிப்பிள்ளை பகீரதன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் குட்டிமோகன் (செபஸ்.ரீயான் ஜேசுதாசன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் விஸ்வநாதன் (வடிவேல் மோகன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சிறிவித்தியன் (சுப்பிரமணியம் வேலாயுதம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் நிதராஜ் (அருளானந்தம் அருட்குமார் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் லவனராஜன் (நடராசா கணேஸ் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் நீலதனு (சிவலிங்கம் குயிலவன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அருச்சுனபாலன் (நீலன் மீஸ்மன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் தரன் (கதிர்காமத்தமபி வசந்தன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் பொய்கைமாறன் (கணபதிப்பிள்ளை முருகுப்பிள்ளை – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் புகழேந்தி (இராமலிங்கம் தமிழ்ரூபன் – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் வீகன் (நவரத்தினம் விஜயகுமார் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் நடேசன் (சோமசுந்தரம் அருளானந்தம் – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் அருஞ்சுடர் (நவரத்தினம் மனோகரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் ரூபலிங்கம் (சின்னையா அமிர்தலிங்கம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் கட்சிதன் (பூபாலப்பிள்ளை உமாகாந்தன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை சிறிவேந்தன் (கனகசபாபதி சிறீஸ்கந்தராசா – மட்டக்களப்பு)
வீரவேங்கை அருள்விழியன் (மயில்வாகனம் நாகராசா – மட்டக்களப்பு)
வீரவேங்கை வர்ணமேனன் (வேதாரணியம் ஜெயகோபால் – மட்டக்களப்பு)
வீரவேங்கை செங்கீதன் (முருகுப்பிள்ளை இந்திரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை றீகவரன் (நவரத்தினம் நிமலானந்தன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை பூங்கீதன் (சின்னத்தம்பி சந்திரசேகர் – மட்டக்களப்பு)
வீரவேங்கை காந்தனன் (சிவலி ரமேஸ் – மட்டக்களப்பு)
வீரவேங்கை பஞசவர்ணன் (தேவராசா லூக்காஸ் – மட்டக்களப்பு)
வீரவேங்கை டிசாந்தன் (நாகராசா குமார் – அம்பாறை)
வீரவேங்கை ஜீவதன் (கனகசபை கிருபா – மட்டக்களப்பு)
வீரவேங்கை மகரந்தன் (விஸ்வலிங்கம் ரதிகுலராஜா – மட்டக்களப்பு)
வீரவேங்கை தேவகாந்தன் (மனோகரன் மெல்றோய் – மட்டக்களப்பு)
வீரவேங்கை பாலகிரியன் (குஞ்சுத்தம்பி பிரசாந் – அம்பாறை)
வீரவேங்கை சனாசன் (சிவலிங்கம் கேதீஸ்வரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை முனீஸ்வரன் (பூபாலப்பிள்ளை ரவீந்திரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை ஞானகாந்தன் (பெரியான் கணேசமூர்த்தி – மட்டக்களப்பு)
வீரவேங்கை யாழ்தேவன் (காந்தராஜ்) (ஆறுமுகம உதயன் – அம்பாறை)
வீரவேங்கை சரத்குமார் (மயில்வாகனம் ரவி – மட்டக்களப்பு)
வீரவேங்கை குன்றக்குமரன் (நந்தாகரன்) (சின்னத்தம்பி அமிர்தலிங்கம் – மட்டக்களப்பு)
வீரவேங்கை சுதர்மணி (சுதர்மன்) (வடிவேல் நகுல்ராஜ் – அம்பாறை)
வீரவேங்கை அகல்விழியன் (சிவநாதப்பிள்ளை குமார் – அம்பாறை)
வீரவேங்கை சுமணதாசன் (மார்க்கண்டு ரதீஸ்குமார் – அம்பாறை)
வீரவேங்கை மாவியன் (பொன்னையா தயானந்தன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை ஞானிதன் (பரிசுதன்) (வீரசிங்கம் சிவநாதன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை திவ்வியவர்ணன் (திவ்வியன்) (சாமித்தம்பி காண்டீபன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை மணிக்குமார் (பொன்னுத்துரை மகேந்திரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை மணிசாந்தன் (கந்தசாமி நடேசமூர்த்தி – மட்டக்களப்பு)
வீரவேங்கை சிவகீர்த்தி (தம்பிப்பிள்ளை மோகன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை ஜெயசுந்தரம் (சிவசோதி ரூபசிங்கம் – மட்டக்களப்பு)
வீரவேங்கை இளமாறன் (நல்லதம்பி யோகநாதன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை துசிநந்தன் (கணேசன் மகேந்திரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை அகிலன் (காத்தமுத்து இராசு – மட்டக்களப்பு)
வீரவேங்கை கலைமருதம் (சண்முகம் சதீஸ் – மட்டக்களப்பு)
வீரவேங்கை கலைநிலவன் (நவரத்தினம் மேகராசா – மட்டக்களப்பு)
வீரவேங்கை கன்னியழகன் (குமாரநாயகம் மணிவண்ணன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை காரரசன் (செல்வராசா சுரேஸ் – மட்டக்களப்பு)
வீரவேங்கை குலச்செல்வன் (அழகையா அருள்நாதன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை வான்முகி (றைமன் ஜெகன் – அம்பாறை)
வீரவேங்கை காவல்விழியன் (ரதிகரன் கண்ணன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை ஈகைக்கதிர் (அருணகிரி தயாபரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை காந்தரூபி (சந்தோசம் தயாராணி – மட்டக்களப்பு)
வீரவேங்கை தேனிலா (செல்வம் இராஜேஸ்வரி – மட்டக்களப்பு)
வீரவேங்கை அமரதீபன் (தம்பிப்பிள்ளை கோபாலகிருஸ்ணன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை குணாளினி (சந்திரக்குட்டி நிமாலினி – மட்டக்களப்பு)
வீரவேங்கை சுகி (முருகுப்பிள்ளை ரஞ்சினி – மட்டக்களப்பு)
வீரவேங்கை வதனி (மாசிலாமணி குகணலோஜினி – மட்டக்களப்பு)
வீரவேங்கை அமுதினி (இராமசாமி சுமதி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அனந்தா (சுப்பிரமணியம் நிர்மலா – மட்டக்களப்பு)
வீரவேங்கை கீதா (தர்மலிங்கம் பாணுமதி – மட்டக்களப்பு)
வீரவேங்கை மரைச்சுடர் (சர்மிலா) (சபாரத்தினம் இராசமலர் – வவுனியா)
வீரவேங்கை மகேந்தினி (செல்லத்துரை வசந்தி – முல்லைத்தீவு)
வீரவேங்கை முத்தழகி (மாணிக்கம் சுசீலாதேவி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மதுரா (ஆசைமயில்) (சீனித்தப்பி பூங்கௌரி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தமிழினி (குமாரதாஸ் சுமித்திரா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சாந்தரசி (சுந்தரம் சொர்ணம் – கண்டி)
வீரவேங்கை அன்பு (அலோசியஸ் அலெக்ஸ் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தமிழ்கிருபா (கோணேசலிங்கம் மோகராசா – திருகோணமலை)
வீரவேங்கை தமிழ்வளவன் (சுந்தரம் கிருஸ்ணராஜ் – வவுனியா)
வீரவேங்கை சுதா (ரவீந்திரன் நடேஸ்வரி – கிளிநொச்சி)
வீரவேங்கை இளநிலா (விநாயகமூர்த்தி விமலேஸ்வரி – முல்லைத்தீவு)
வீரவேங்கை வீரத்தமிழன் (வைத்திலிங்கம் ஜெயபாலன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கவிமலர் (யோகதாஸ் நளினிசர்மிலா – முல்லைத்தீவு)
வீரவேங்கை தமிழ்நிலா (நடேசன் சுரேசினி – கிளிநொச்சி)
வீரவேங்கை இன்பநிலா (முகுந்தா) (தேவராசா புஸ்பலதா – கிளிநொச்சி)
வீரவேங்கை செல்வா (சீனித்தம்பி நாகேஸ்வரி – மட்டக்களப்பு)
வீரவேங்கை முகிலா (பிறேமலதா) (கந்தன் சித்திரா – வவுனியா)
வீரவேங்கை யாழ்பாடினி (யோன்பிள்ளை அனுஸ்ரெலா – முல்லைத்தீவு)
வீரவேங்கை கலைநங்கை (தங்கராசா அகிலேஸ்வரி – வவுனியா)
வீரவேங்கை ஞானவதி (நடராசா சந்திரகுமாரி – முல்லைத்தீவு)
வீரவேங்கை பவானி (இலட்சுமணன் நகுலேஸ்வரி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை புரட்சிமதி (செல்வராசா சுகேந்திரன் – கொழும்பு)
வீரவேங்கை சத்தியா (அப்புத்துரை கெங்காதேவி – முல்லைத்தீவு)
வீரவேங்கை திகழ்மதி (குமுதா) (பாஸ்கரன் சுபாஜினி – முல்லைத்தீவு)
வீரவேங்கை அகிலன் (செல்லத்துரை சிவகாந்தன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை புகழ்மாறன் (தர்மலிங்கம் பத்மலோஜன் – திருகோணமலை)
வீரவேங்கை சபாபதி (ஆதிரன்) (பாலசுந்தரம் மதிராஜ் – மட்டக்களப்பு)
வீரவேங்கை இசைக்குகன் (பபில் சுதாகரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை துவாரகன் (நல்லதம்பி சந்திரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை இதரன் (சிவமாலை மத்தேயூ – மட்டக்களப்பு)
வீரவேங்கை கோமகன் (உதயகுமார் ரஜனிகாந் – மட்டக்களப்பு)
வீரவேங்கை குருதேவன் (வீரசிங்கம் விநாயகமூர்த்தி – மட்டக்களப்பு)
வீரவேங்கை நதிசான் (தம்பிப்பிள்ளை யோகராசா – அம்பாறை)
வீரவேங்கை அச்சணன் (அந்தோணி நிக்லஸ் – மட்டக்களப்பு)
வீரவேங்கை வவிதரன் (யோகரட்ணம் கமலநாதன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை லிங்ககீதன் (குமாரியன் தம்பிமுத்து – மட்டக்களப்பு)
வீரவேங்கை கமலசுதன் (பாபு யோஸ்கரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை குயில்வரன் (முத்துலிங்கம் அமிர்தலிங்கம் – மட்டக்களப்பு)
வீரவேங்கை ரூபரதன் (திருவாசகம் விஸ்ணுமூர்த்தி – அம்பாறை)
வீரவேங்கை நவச்சந்திரன் (புஸ்பராசா விக்கினேஸ்வரன் – கிளிநொச்சி)
வீரவேங்கை ஆழிவண்ணன் (கந்தையா சுதாகர் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை இயலியன் (சின்னையா வரதன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை விடுதலைவீரன் (பத்மநாதன் சதீஸ்வரன் – முல்லைத்தீவு)
வீரவேங்கை மதிவாணன் (இராசையா விஜயகுமார் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தேவநம்பி (கதிரவேல் தியாகராசா – வவுனியா)
வீரவேங்கை வைகைமாறன் (கதிரவேல் கலைச்செலவன் – கண்டி)
வீரவேங்கை நிமலினி (தில்லையம்பலம் இராஜேஸ்வரி – மட்டக்களப்பு)
******************************
மேஜர் இனிதன் 5 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்
வடமுனையில் சிறப்புடன் செயற்பட்டவர் மேஜர் இனிதன்.. மேஜர் இனிதன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி மாவட்டத்தை நிலையான முகவரியாககொண்ட புண்ணியமூர்த்தி பிரதீபன்
வடபேர்முனையில் பிரிகேடியர் தீபன் அவர்களின் கட்டளையின் கீழ் சிறப்புற செயற்பட்டு பலகளங்களை கண்ட மேஜர் இனிதன் 2007.09.27 அன்று முகம்மாலையில் சிறீலங்காப்படையினரின் படைநகர்விற்கு எதிரான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
திலீபன் மரணித்து இருபத்தைந்து வருடங்களாகிறது. என்ன கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் தண்ணீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தானோ அதே கோரிக்கைகளே இன்னும் நிறைவேற்றப்படாமல் அப்படியே தொடர்வதுதான் வேடிக்கை.
கோரிக்கைகளை முன்வைப்பதும் வேண்டுகோள்களை விடுப்பதும் ஒருபோதும் மகாவம்சத்து கனவுகளை ஊடறுத்து பேரினவாதத்தின் காதுகளில் போய்சேரப்போவதில்லை என்பதே வரலாறு தரும் பாடமாகும்.
ஒற்றை ஆட்சிக்குள் ஏதாவது ஒரு தீர்வுக்குள் முடங்கிப் போய்விடுங்கள் என்று வகுப்பு நடாத்தும் இந்திய வல்லாதிக்கமும் திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற விருப்பமோ நடவடிக்கையோ எதுவுமே எடுக்காமல் திலீபன் என்ற அந்த அற்புதமானுடன் மெதுமெதுவாக நீருமின்றி சாவதை வேடிக்கை பார்த்தார்கள் என்பதே இன்னும் ஒரு வரலாற்றுப் பாடமாகும்.
இத்தனைக்கும் திலீபன் ஒன்றும் ஈழத்தை பிரித்து தாருங்கள் என்றோ வடக்கு-கிழக்கை தனியான ஒரு தேசமாக அங்கீகரியுங்கள் என்றோ கேட்டு உண்ணாவிரதம் இருக்கவில்லை.
அவன் சார்ந்திருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை முன்னிலைப்படுத்தும் எந்தவொரு கோரிக்கைகளும் அவனின் உண்ணாவிரதத்தில் இருந்திருக்கவில்லை.
திலீபனின் கோரிக்கைகள் மிகமிக சாதாரணமானவை. மிகவும் இயல்பானவை. தமிழ் மக்களின் அன்றாடவாழ்வை இயல்புநிலைக்கு திருப்பும்படியே அவனின் கோரிக்கைகள் இருந்திருந்தன. இத்தகைய ஒரு நிலையியே திலீபனின் நினைவுகளை மீட்டும் ஒரு இருபத்தைந்தாவது ஆண்டு வந்துள்ளது.
இதனை போன்றதொரு பொழுதிலேயே திலீபனின் போராட்டமும் நிகழ்த்தப்பட்டது.ஆயுதங்கள் தற்காலிகமாக மௌனமாக்கப்பட்டிருந்த காலமது. ஆயுதங்கள் இல்லாமலேயே சமராட வேண்டி இருந்த நேரமும் அதுவே. அதற்காகவே திலீப வேள்வி தொடங்கியது.
தனித் தமிழீழம், சமஸ்டி, சுயாட்சி போன்ற எந்தவொரு ஆட்சி அதிகார கோரிக்கைகளும் இன்றி மிகவும் இயல்பான கோரிக்கைகளுடனேயே திலீபன் உண்ணாவிரத மேடை ஏறினான். ஒப்பந்த்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்வதற்காக அவன் மானுட வரலாற்றில் அதுவரை காணப்பட்டிராத ஈகத்தை நடாத்தவேண்டி இருந்தது.
தண்ணீரும் அருந்தாமல் இருக்கப்போகும் உண்ணாவிரதம் எத்தகைய வலிகளை தரும் என்பதை தெரிந்துகொண்டே உண்ணாவிரதமேடைக்கு வந்து அமர்ந்தவன் திலீபன்.
1.பயங்கரவாததடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட அனைத்து தமிழ்கைதிகளும் உ;னடியாகவே விடுதலைசெய்யப்படவேண்டும்.
2.புனர்வாழ்வுதிட்டம் என்ற பெயரில் தமிழ்ப்பகுதிகளில் திட்டமிட்டமுறையில் நடைபெறும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
3.வடக்கு-கிழக்கு இடைக்காலஅரசு அமையும்வரை ‘புனர்வாழ்வுதிட்டங்கள்’ என்ற பெயரில் நடைபெறும் இத்தகைய செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும்.
4.வடக்கு-கிழக்கில் புதிதாக சிங்கள காவல் நிலையங்களும், இராணுவ முகாம்களும் அமைப்பது உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
5.சிறீலங்காப் படையினரும், காவல்துறையினரும் முகாமிட்டிருக்கும் பாடசாலைகளில் இருந்து உடனடியாக விலகிக்கொள்வதுடன், சிறீலங்காப் படைகளால் தமிழ் கிராமங்களுக்கு அருகில் உள்ள சிங்கள கிராமங்களின் ஊர்காவல் படையினருக்கு வழங்கிய ஆயுங்களை இந்தியா களைய வேண்டும்.
இவையே திலீபனின் கோரிக்கைகள்.
இந்தக் கோரிக்கைகளுக்காகவே ஒரு உன்னதமான இளைஞன் ஒரு சொட்டு தண்ணீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து இருபத்தைந்து வருடங்கள் உருண்டோடிப் போய்விட்டது.
இந்த இருபத்தைந்து வருடங்களில் உலகம் எவ்வளவோ விடயங்களில் மிகமிக முன்னேறிவந்துவிட்டது. தகவல், தொழில்நுட்பம், வாழ்வியல், அறிவியல், ஆற்றல், நாகரீகம் என்று எல்லாவற்றிலும் இந்த இருபத்தைந்து வருடங்களில் பெருத்த பாய்ச்சலும், முன்னகர்வும் கண்டடைந்துள்ளது.
ஆயினும் திலீபனின் கோரிக்கைகள் மட்டும் அப்படியே இன்றுவரை நிறைவேற்றப்படாமலேயே நங்கூரமிட்டு அப்படியே தொடர்வது முழுமானுடத்துக்கே அவலமானது.
இன்றும் பாடசாலைகளிலும், பொது இடங்களில் இராணுவம், இன்றும் இராணுவ முகாம்களுக்காக நிலங்களை அபகரிப்பதும் தொடர்கிறது. இன்றும் பயங்கரவாதத் தடை சட்டத்தின்கீழ் வகைதொகையற்ற கைதுகள், தடுத்து வைப்புகள், இன்றும் புனர்வாழ்வுத் திட்டங்கள் என்ற போர்வையிலும் மீள்குடியேற்றங்கள் என்ற போர்வைக்குள்ளாகவும் நடைபெறும் சிங்களக் குடியேற்றங்கள்…
எல்லாம் இன்றும் அப்படியே அதே அடக்குமுறை வடிவத்துடனுயே தொடர்கிறது. பஞ்ச சீலமும், நான்கு வேதங்களும், தத்துவங்களும், அகிம்சையும் தங்களிடமிருந்தே ஆரம்பித்ததாக கர்வம் கொண்டிருந்த பாரதத்தின் உச்ச அரசில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு இதுதான் ‘அகிம்சையின் விஸ்பரூபம்’ என்ற பாடம் சொல்லித் தந்தவன் எங்கள் திலீபன்.
திலீபன் வென்றான்,தோற்றான் என்பது அல்ல முக்கியம்.அவன் தன் காலத்தில் இவைகளை முன்னிறுத்தி தனது உயிரையும் தந்து போராடினான் அதுதான் முக்கியம்.
மிகவும் நுணுக்கமாக கவனித்தால் திலீபனின் போராட்டம் எத்தகைய வரலாற்றுதடையை நீக்கி அந்த நேரத்து போராட்ட நகர்வுக்கு உதவி இருப்பதை பார்க்கலாம்.
விடுதலைப் போராட்டத்தை நசுக்கி எறிவதற்காக ஒப்பந்த போர்வைக்குள் பிராந்திய வல்லாதிக்கமும் பேரினவாதமும் செய்துகொண்ட சதிதிட்டத்தின் உண்மை உருவத்தை முகமூடி கிழித்துக்காட்ட திலீபனின் உண்ணாவிரதம் ஒரு போராட்ட முறையாக இருந்தது.
திலீபன் என்பது என்றும் தொடரும் ஒரு போர்முறையே ஆகும்.அது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக மட்டும் அல்லாமல் இன்றும் ஒரு வழிமுறையாகவே தொடரக்கூடியது.
இதுவே திலீபனின் சாகாத ஈகத்தின் தன்மைஆகும்.
உரிமைகளும், விடுதலையும் கிட்டும் வரைக்கும் மானுடம் அனைத்து வழிகளிலும் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும். அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக தொடர்ந்தும் எதிர்வினையை ஆற்றிக்கொண்டே இருக்கும். இதுவே உயிரினங்களின் வாழ்வுக்கான போராட்டமாகவும் இருந்துவந்து கொண்டிருக்கிறது.
ஒரு வழி அடைக்கப்படும்போது இன்னொரு வழியை தேர்ந்தெடுத்து அதனூடாக தனது உரிமைகளை பெற்றுக்கொள்ள போராடும் ஒரு வழிமுறையையே திலீபன் காட்டிச்சென்றுள்ளான்.
இதோ இன்றும் குளிர் அடர்ந்த தெருக்களில் ஏதோ ஒரு உரிமைக் கோரிக்கையுடன் நடந்து பெருந்தூரங்களை கடக்கிறார்களே எங்கள் உறவுகள் அவர்களில் திலீபனின் போர்முறை படிந்திருக்கிறது.
தாயகத்தில் எழும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், எப்போதோ எழும் ஒற்றை எதிர்ப்பு குரல்களில் எல்லாம் திலீபனின் போர்முறையே தொடர்கிறது.
ஆம்,திலீபன் என்பது வெறும் பெயர் அல்ல. திலீபன் என்பது இடைவெளியின்றித் தொடரும் போர்முறை ஆகும்.
– ச.ச.முத்து
“தியாகி திலீபன்சொன்ன- செய்தி என்ன? “இந்த இனம்- இந்தத் தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் அது போராடும். புல்லையும் எடுத்து அது போராடும். அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது!. பேரம் பேசாது-விட்டுக் கொடுக்காது. ஆயுதம் இல்லாவிட்டாலும்-உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது! அது தொடர்ந்து போராடும். தன்னுடைய விடுதலைக்காக-நியாயத்திற்காக- நீதிக்காக-அது எந்த சக்தியையும் எதிர்த்துப் போராடும்.”
*************************************
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன்
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 12 ம் நாள்
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் பதினோராம் நாள்
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் பத்தாம் நாள்
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஒன்பதாம் நாள்
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் எட்டாம் நாள்
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஏழாம் நாள்
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஆறாம் நாள்
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஐந்தாம் நாள்
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் நான்காம் நாள்
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் மூன்றாம் நாள்
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் இரண்டாம் நாள்
- தியாக தீபம் திலீபன் – முதலாம் நாள்
- தியாக தீபம் திலீபனின் நினைவலைகள்
**************
வான்படை தளபதி கேணல் சங்கர்
தியாகி திலீபன் ஒரு இலட்சிய நெருப்புதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.
வான்படை தளபதி கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம்
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்
(பார்த்திபன் இராசையா – ஊரெழு, யாழ்ப்பாணம்)
அன்னை மடியில் – 27.11.1963
மண்ணின் மடியில் – 26.9.1987
தான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னதமான தியாக த்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத் தான் திலீபன் செய்திருக்கிறான்
தியாகி லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இவர் பாரதப் படைகளுக்கெதிராக நீராகாரம் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீரச் சாவடைந்தவர்.
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.
ஐந்து அம்சக் கோரிக்கை
1-மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2-சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3-அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4-ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5-தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.


- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 12 ம் நாள்(26-09-19…
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் பதினோராம் நாள் (25-…
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் பத்தாம் நாள்(24-09-…
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஒன்பதாம் நாள்(23-09…
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் எட்டாம் நாள்(22-09-…
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஏழாம் நாள்(21-09-19…
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஆறாம் நாள்(20-09-19…
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஐந்தாம் நாள்(19-09-…
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் நான்காம் நாள்(18-09…
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் மூன்றாம் நாள்(17-09…
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் இரண்டாம் நாள் நினைவ…
- தியாக தீபம் திலீபன் – முதலாம் நாள் நினைவலைகள்
தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு – திலீபன்!
தேசியத்தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடு – திலீபன்!
தியாகி தீலீபனின் தியாக வரலாறு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு குறியீடாக விளங்குவதோடு மட்டுமல்லாது, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாக விளங்கி வருகின்றது. இந்த முக்கிய விடயங்களைச் சற்று ஆழமாக அணுகித் தர்க்கிப்பதானது, தியாகி திலீபனின் இருபதாவது ஆண்டு நினைவு தினத்திற்குப் பொருத்தமானதாக அமையும் என்று நாம் நம்புகின்றோம்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய எழுச்சி கொண்டதும், வளர்ச்சி கண்டதும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால்தான்! இங்கே தமிழீழத் தேசியத் தலைவருக்கு இருக்கிற இயல்பு என்னவென்றால், அடக்குமுறைகளுக்கு – அவை எவ்வளவுதான் பெரிதாக, பிரமாண்டமாக இருந்தாலும் – விட்டுக் கொடுப்பதில்லை. எவ்வளவுதான் பாரிய இழப்புக்களைச் சந்தித்தாலும், தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைகளுக்கு அடிபணிவதில்லை என்பது தேசியத் தலைவரின் அடிப்படை இயல்பாகும்!.
இந்த இயல்புத் தன்மைதான் தமிழீழத் தேசியத் தலைவரையும் சாகும்வரை உண்ணாவிரதமிருக்க, முன்னர் தூண்டியது. 1986 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தின் போது, இந்தியாவில் தமிழ்நாட்டிலிருந்த தலைவர் பிரபாகரன் அவர்களின் தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை இந்திய அரசு பறிமுதல் செய்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராகத் தலைவர் கடும் சினம் கொண்டார். இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு போராட்ட வடிவமாக, சாகும் வரையிலான உண்ணா நோன்பைத் தேசியத் தலைவர் பிரபாகரன் உடனே ஆரம்பித்தார். இந்தச் சாகும் வரையிலான உண்ணா நோன்பு ஒரு போராட்ட வடிவமாகத் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் எமது தேசியத் தலைவரால்தான் முதன்முதலில் செய்யப்பட்டது.
அப்போது நடைபெற்ற சில விடயங்களை, எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்;.
தண்ணீர்கூட அருந்தாத, சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தலைவர் பிரபாகரன் அவர்கள், எந்தவிதமான முன்னறிவித்தலும் இல்லாமல், உடனேயே ஆரம்பித்து விட்டார். இந்த உண்ணா நோன்புப் போராட்டத்தை ஒருநாள் கழித்த பின்னர் ஆரம்பிக்கும்படி இயக்கப் போராளிகளும், பிரமுகர்களும் தலைவர் பிரபாகரனை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். ‘அந்த ஒருநாள் அவகாசத்தில் தமிழக அரசிற்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகுசன ஊடகங்களுக்கும், தமிழக மக்களுக்கும் உங்களது சாகும் வரையிலான உண்ணா நோன்பை அறிவித்து விடலாம். அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய உண்ணா நோன்பை ஆரம்பிக்கலாமே” – என்றுகூட அவர்கள் தலைவரிடம் வாதிட்டார்கள். அந்த ஆலோசனையைத் திட்டவட்டமாக மறுத்துவிட்ட தமிழீழத் தேசியத் தலைவர் கூறிய பதில் இதுதான்:
‘இல்லை! நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம்! எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம், இந்த வினாடியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல், சாகும் வரையிலான என்னுடைய உண்ணாவிரதத்தை ஆரம்பித்துவிட்டேன். இந்திய அரசு தான் பறித்தெடுத்த தொலைத்தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை மீண்டும் திருப்பித் தரும் வரைக்கும் அல்லது என்னுடைய உயிர் போகும் வரைக்கும் எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்!”.
ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசு பணிந்தது. தான் பறித்தெடுத்த தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றைத் தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அரசு கொண்டு வந்து தந்தது. தலைவர் தன்னுடைய உண்ணா நோன்பை முடித்தார்.
தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைக்குப் பணிவதில்லை என்கின்ற தேசியத் தலைவரின் இயல்பின் வெளிப்பாடுதான் திலீபனிடமும் உள்ளுர படிந்திருந்தது. தேசியத் தலைவர் தானே முன்னின்று வழிகாட்டிய பாதையில், திலீபன் பின் தொடர்ந்து போராடினான். திலீபனின் இந்த உண்ணா நோன்புப் போராட்டம், தமிழீழத் தேசியத் தலைவரின்; இயல்பையும் குறியிட்டுத்தான் நிற்கின்றது!
இந்த இலட்சிய உறுதிதான், தியாகி திலீபனிடமும் படிந்திருந்தது. தனது தலைவன் முன்னோடியாக நின்று வழிகாட்டிப் போராடியதை, அவன் அடுத்த ஆண்டில் – 1987ல் – நடாத்தினான். ‘ஒரு சொட்டுத் தண்ண்Pர் அருந்தாமல், நான் எனது உண்ணா நோன்பை ஆரம்பிக்கப் போகின்றேன்” – என்று திலீபன் அறிவித்தபோது தலைவர் பிரபாகரன் திலீபனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். ‘தண்ணீரையாவது குடித்து உண்ணாவிரதத்தைத் தொடரலாம்”- என்று தலைவர் பிரபாகரன் திலீபனைக் கேட்டுக்கொண்டார்.
ஆனால் திலீபனோ, தலைவரிடமே பதில் கேள்வி ஒன்றைக் கேட்டான். ‘அண்ணா, ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லையே? நீங்களும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல்தானே சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தீர்கள். என்னை மட்டும் ஏன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றீPர்கள்?”
அத்தகைய ஒரு தலைமை! இத்தகைய ஒரு தியாகி!.
உயர்ந்தவர்களிடம் மட்டுமே காணக்கூடிய இலட்சிய உறுதி அது!
இவ்வாறு, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாகத்தான் தியாகி திலீபன் விளங்கினான்.
ஈழம் எம் நாடெனும் போதினிலே
ஒரு ஈகம் பிறக்குது வாழ்வினிலே
திலீபன் தந்த இவ் உணர்வினிலே
தாகம் வளருது நாட்டினிலே
வேகம் கொண்டதோர் பிள்ளையவன்
வேதனை வேள்வியில் உயிர் எறிந்தான்
தாகம் தமிழீழம் ஒன்றே என்று
மோகம் கொண்டு தன் உடல் தகித்தான்
அந்நியர் காலடி எம் மண்ணில்
ஆக்கமாய் என்றுமே ஆகாது-எனப்
புண்ணியவான் இவன் கூறிவட்டு
புதுமைப் புரட்சியில் விழி சாய்த்தான்.
தொட்டு நாம் மேடையில் ஏற்றி விட்டோம்
உடல் கெட்டவன் பாடையில் இறங்கிவந்தான்
பட்டறிவு இதுவும் போதாதா
நம் மக்களும் முழுதாய் இணைவதற்கு
கட்டையிலே அவன் போனாலும்
வெட்டையிலே உண்மை எடுத்துரைத்தான்
பட்டை யடித்த பாரதப் படையினரின்
கொட்டமடக்கிட வழி சமைத்தான்.
நெட்ட நெடுந்தூரம் இல்லை ஐயா- வெகு
கிட்டடியில் எம் வெற்றி வரும்.
கொட்டமடித்தவர் எல்லோரும்-எம்
காலடி தொட்டிடும் வேளை வரும்
தீட்சண்யன்
15.9.94
Recent Comments