அம்பாறையில் காவியமான அம்பாறை மாவட்டத் தளபதி லெப்.கேணல் ரஞ்சன் உட்பட்ட 8 மாவீரர்களினதும், யாழ். மாவட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய இரு மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

27.08.1995 அன்று அம்பாறை மாவட்டம் வம்மியடிக்குளம் பகுதியில் சிறலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய

அம்பாறை மாவட்டத் தளபதி லெப்.கேணல் மாருதியன் (ரஞ்சன்) (செல்லத்துரை பிரபாகரன் – தம்புலுவில், அம்பாறை)

கப்டன் கமால் (கந்தையா செல்வராசா – அம்பாறை)

கப்டன் மதனமோகன் (கிறிஸ்ரி) (செல்லத்துரை நாகேந்திரன் – கோமாரி, அம்பாறை)

லெப்டினன்ட் நவரங்கன் (நிசாந்தன்) (கிருஸ்ணபிள்ளை ராஜமோகன் – தம்புலுவில், அம்பாறை)

2ம் லெப்டினன்ட் அறிவொளி (பீதாம்பாரம் ரவிச்சந்திரன் – கன்னங்குடா, மட்டக்களப்பு)

வீரவேங்கை இந்திரன் (செல்லையா ராஜீ – பொத்துவில், அம்பாறை)

வீரவேங்கை லிங்கேஸ்வரன் (தில்லையன் சிவராஜா – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)

ஆகிய மாவீரர்களினதும்,

அம்பாறை மாவட்டத்தில் சுகவீனம் காரணமாக சாவினை அணைத்துக் கொண்ட

2ம் லெப்டினன்ட் சுரேந்திரன் (காதர்) (நாகப்பன் விஸ்வநாதன் – குருக்கள்மடம், மட்டக்களப்பு)

என்ற மாவீரரினதும்

யாழ். மாவட்டம் அச்சுவேலிப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிய

லெப்டினன்ட் அக்காச்சி (அப்துல்லா) (செல்வரத்தினம் குமரசீலன் – சுண்ணாகம், யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் தில்லைநாதன் (நல்லதம்பி நகுலேஸ்வரன் – கொடிகாமம், யாழ்ப்பாணம்)

ஆகிய மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.