Search

Eelamaravar

Eelamaravar

Month

July 2012

மேஜர் சிட்டு வீரவணக்கம்

ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 15 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.

தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான “கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?” என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை.

“கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்”

போராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார்.

விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ‘உயிர்ப்பூ’.
இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.
ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.

“சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்”
சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.


கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடல் . ‘சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்’ என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.

தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசை நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.

‘சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்?’
என்றுமக்கள் பேசிக்கொண்டார்கள்.

[அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல ‘தெருக்கூத்து’ எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவதைத் தவிர்த்தனர். அனேகமாக ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது.]

சிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள்.

01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது. அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.

“சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை” என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.

மேஜர் சிட்டுவின் பதிவு காணொளி

இன்று மேஜர் சிட்டு அவர்கள் வீரச்சாவடைந்த நாள். தமிழீழ எழுச்சிப் பாடல்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய இம்மாவீரன் 01.08.1997 அன்று ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.

இவர் பாடிய அனைத்துமே அருமையான பாடல்கள். என்றாலும் ‘உயிர்ப்பூ’ படத்தில் இவர் பாடிய ‘சின்னச் சின்னக் கண்ணில்’ என்ற பாடல் அனைவரையும் உருக்கியது. தனியே பாடலைக் கேட்பதைவிட படத்தோடு பார்த்தால் அப்பாடலின் முழு அனுபவத்தையும் பெற முடியும்.

அப்படத்தில் மூத்த பிள்ளை (நகுலன்) ஊர்ப்பெண்ணொருத்தியின் தண்ணீர்க்குடத்தை விளையாட்டுத் தனமாக உடைத்ததால் தந்தையால் வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்ட தம்பி, தமையனை நினைத்து நொடித்துப்போகிறான். ஒரு குந்தில் இருந்து கொண்டு தமையன் (நகுலன்) தம்பியை நினைத்துப்பாடும் பாடல் தான் இது.

சிட்டுவின் குரல் அழகாக இழைந்தோடும். அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட தமையன், தம்பி இருவரின் நடிப்பும் பாடலுக்கு மேலும் மெருகூட்டும். அந்த நகுலன் பற்றியும் சிறிது சொல்ல வேண்டும்.

அந்தப் படத்தின் கதையின்படி, எந்தப்பொறுப்புமற்றுச் சுற்றித் திரியும் மூத்தபிள்ளை தான் நகுலன். ஒரு நேரத்தில் உணர்ந்து கடற்றொழிலுக்குச் செல்கிறான். தன் தம்பியை சிங்களக் கடற்படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுக்கிறான். பின்னொரு நாள் தந்தையையும் அவ்வாறே கண்ணெதிரில் பலிகொடுக்கிறான். பின் போராட்டத்திலிணைந்து ஒரு கட்டத்தில் கரும்புலியாக எதிரியின் கப்பலை மோதி அழிக்கிறான்.

இதுதான் அடிப்படைக்கதை. இதில் நகுலன் நடிக்கும்போதே போராளி. பின்னொரு நாளில் அப்படத்தில் நடந்தது போலவே சம்பவம் நடந்தது. ஆம் ‘உயிர்ப்பூ’ படத்தில் இறுதியாக கரும்புலியாக எதிரியின் கப்பலைத் தகர்ப்பதாய் நடித்த அதே நகுலன், புல்மோட்டைக் கடற்பரப்பில் எதிரியின் டோறாப் பீரங்கிப்படகொன்றைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் நகுலனாக வீரச்சாவடைந்தான்.

போர்க்குயில்களாய்ப் பாடித்திரிந்த மேஜர் சிட்டு, மேஜர் மாதவன் போன்றோர் (இன்னும் பலர்) களத்திலேயே சமரிட்டு வீரச்சாவடைந்தனர். அப்படியே நகுலனும் நடிகனாகவே இருந்துவிடவில்லை.maj chiddu

இறுவெட்டு : மேஜர் சிட்டு அவர்கள் பாடிய பாடல்கள்.

தேசக்காற்றில்

அங்கயற்கண்ணிக்கு ஆயிரம்

சின்ன சின்ன கண்ணில்

எங்கே எங்கே வேங்கைகள்

கடலிடை ரதிசும்

கடலில் அலை

கண்ணீரில் காவியங்கள்

குருதி சொரிந்து

மழை மேகம்

மூசும் அலை ஏறி

நீலக் கடல் ஏறி

நெஞ்சிலே இரத்தம்

நிறை குடத்தை

படகு ஓட்டிகளே

உருவேதும் தெரியாது

உன்னத விடுதலை

தளராத துணிவோடு

விழியில் சொரியும் நிலவுகள்

வெண்ணிலவும் சாய்ந்து

சோலையில் பாடும்

சிறகு முளைத்த

வெள்ளி நிலா விளக்கேற்றும்

வாழ்த்துக்கள் நெஞ்சங்களே

சாவினைத் தோள்மீது

புலி ஒரு காலமும்

வருவாய் வருவாய்

வருக எங்கள் மக்களே

பகை விளையாடிடும்

பன்னாட்டு கடற்பரப்பி​ல் காவியமான 4 கடற்கரும்பு​லிகளின் வீரவணக்க நாள்

30.07.2003 அன்று பன்னாட்டுக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் முருகேசன், மேஜர் இசைநிலவன், மேஜர் புகழினி மற்றும் மேஜர் தனிச்சுடர் ஆகியோரின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

பன்னாட்டுக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்தவேளை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட படகு விபத்தின்போது,

கடற்கரும்புலி லெப்.கேணல் முருகேசன் (கில்லரி) (கணேசன் சிவகுருநாதன் – ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி மேஜர் இசைநிலவன் (மதிவண்ணன்) (கந்தசாமி தனேந்திரன் – காரைநகர், யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி மேஜர் புகழினி (விஜயராணி வடிவேல் – மூதூர், திருகோணமலை)

கடற்கரும்புலி மேஜர் தனிச்சுடர் (பூவிழி) (இராசலிங்கம் மலர்விழி – பூநகரி, கிளிநொச்சி)

ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 2

போராட்டமுன்னோடிகள் மற்றும் மாணவர்பேரவை என்பவற்றுடன் இணைந்து பெற்றுக்கொண்ட நடைமுறை அனுபவங்களின் ஊடாக இடையின்றி இயங்கக்கூடிய போராட்டக்குழுவை உருவாக்கி ஈழத்தமிழர்களின் உரிமைகளிற்கான ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடிntடுத்தார். இந்த நோக்கத்தில் 1975மார்ச்மாதத்தில் நடைபெறும் கச்சதீவு உற்சவநாளினூடாக இலங்கை திரும்பியிருந்தார்.

1974காலப்பகுதியில் கைக்குண்டுகள் செய்வதிலும் துப்பாக்கிகள் சேகரிப் பதிலும் ஆர்வம்கொண்ட கலாபதிகுழுவினரைப்பற்றி சென்னையில் வாழ்ந்தகாலத்தில் அறிந்துகொண்டார். தனது அறைநண்பனும் ‘பந்தடியாதோர் சங்கம்’  என்னும் கழகத்தில் கலாபதியுடன் இணைந்திருந்த குலேந்திரசிகாமணி கூறிய விபரங்களின் அடிப்படையில் கலாபதியையும் நண்பனையும் தொடர்புகொண்டு அவர்களை தன்னுடன் இணைப்பதன் மூலம் ஈழத்தமிழரின் உரிமைகளிற்காகவும் விடுiலைக்காகவும் இடைவிடாது சலிப்பின்றி போராடக்கூடிய புதியபோராளிக் குழுவை உருவாக்கமுடியும் எனநம்பினார். ஆனால் தானே ஊருக்குள் சென்று கலாபதியையோ அல்லது வேறு யாரையுமோ சந்திப்பது தன்னைப்பற்றித் தெரிந்த ஏனையவர்களிற்கு தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்திவிடும் என்பதை புரிந்து கொண்டார்;. இதனால 1973இல் கெருடாவில் புதுவீட்டுச்சந்தியில் குட்டிமணியின் நண்பன இராசா எனஅழைக்கப்பட்ட பரமேஸ்வரனின் வீட்டில்;; தான் தலைமறைவாக  இருந்தகாலத்தில் தன்னுடன் நட்புடன் பழகிய நாதனை கலாபதியுடன் தொடர்பு ஏற்படுத்தும் கருவியாக பயன்படுத்திஇருந்தார்.;

கச்சதீவு உற்ச்சவநாளில் புனிதஅந்தோனியார்

ஆனால் முன்பின் அறிமுகமற்ற நிலையில் கலாபதியை அடையாளம் தெரியாமல் வேறு யாரையும் நாதன் அணுகி விடக்கூடாது என்பதற்காக முன்எச்சரிக்கையாக கலாபதி மற்றும் நண்பனுடைய பெயர்களை எழுதிச்செல்லுமாறு கூறியிருந்தார் கலாபதிகுழுவினரை பெறுத்தவரையில் கலாபதியின்தந்தை வெடிபொருட்களை கையாள்வதிலும் கைக்குண்டு களத்தயாரிப்பதிலும் நிபுணத்துவம் வாயந்;த ‘மில்கார பாலசுப்பிரமணியமா கும்’. இதன்மூலம் தந்தையிடமிருந்து சிறுவயதிலேயே அவ்வித்தைகளை கலாபதியும் சகோதரர்களும் கற்றுக்கொண்டிருந்தனர். ஒருமுறை இவர்களால் விளையாட்டாக தயாரிக்கப்பட்டு வீட்டுஅலுமாரியின்கீழ் குண்டொன்று  வைக்கப்பட்டிருந்தது. வீட்டைப் பெருக்கிக்கொண்டிருந்த இவர்களது தாயாரின் துடைப்பத்தில் தட்டுப்பட்டு அதுவெடித்ததனால் தாயார்தனது வலதுகையில் நான்கு விரல்களினை இழந்திருந்தார். இவ்வாறு வெடிமருந்துகளை கையாள்வதில் நன்கு பரிச்சயமுள்ளவராகவே கலாபதி எப்பொழுதும் காணப்பட்டார். இவரிடம் காணப்பட்ட இத்தகைய தொழில் நுட்பஇரகசியமும் இவைகளின் மீதான இவருடைய தீராதகாதலும் பொதுவாகவே அன்றைய வல்வெட்டித்துறை இளைஞர்களிடையே ஏற்படும் சிங்களப்படையினரை தாக்கவேண்டும் என்ற உணர்விற்கு வடிகாலாய் அமைந்தது.

கலாபதியும் அவருடைய பாடசாலைத்தோழர்கள் சிலரும் குறிப்பாக இவருடையவீட்டிற்கு அருகாமையில் வசித்து வந்தவர்களான 1986இல் கடற்படையி னருடனான மோதலில் வீரமரணமடைந்த ‘ரகீம்’ என அழைக்கப்பட்ட வா.த. கிருஸ்ணமூர்த்தியும் மற்றைய பெயர்குறிப்பிடாத நண்பனும் சின்னச்சோதி நடேசுதாஸன்குழுவினரால் மோகனிடம் ஒப்படைத்துசெல்லப்பட்ட கைத்துப்பாக்கியை பெற்றுக்கொண்டதுடன் அதற்கான குண்டுகளை தாமே தயாரித்து ஊறணி பொலிகண்டிக்கு இடைப்பட்ட கடற்கரையோரம் நடமாடும் இராணுவத்தி னரைத்தாக்கும் முயற்சியில் ஒருநாள்முழுக்க காத்திருந்து அன்று இராணுவம் வராமையால் ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர். இதுபோலவே அந்நாட்களில் வல்வெட்டித்துறை தெணியம்பையில் வாழ்ந்திருந்த சிவநேசன் என்ற சிதம்பராக் கல்லூரி அதிபர் கல்விஅமைச்சின் செயலாளர் ‘துடாவை’i யை அழைத்து தேனீர்விருந்து வைக்கமுயன்றார். இதன்காரணமாக அவரது வீட்டிற்கு குண்டு வீசப்பட்டது. இச்சம்பவத்திலும் இக்குழுவினரின் பெயரே அன்றுபிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. இதுபோலவே தியாகி பொன். சிவகுமா ரனும் தனது ஆயுதத்தேவையைமுன்னிட்டு தனதுநண்பன் பட்டுமூலம் இவர்களை ஒருமுறை அணுகியிருநதார்.

இந்தநிலையிலேயே குலம் மூலம் இவர்களின் செயல்களையும் இவர்களின் எதிர்காலஎண்ணங்களையும் புரிந்துகொண்ட தம்பி எனும் பிரபாகரனும் தொடர்ந்து சலிப்பின்றி போராடக்கூடிய  குழுவைப்பற்றி சிந்தித்தபோதே இவர்களை உள்வாங்கி ஈழத்தமிழருக்கான  ஆயுதப் போராட்டக்குழுவை உருவாக்கமுடியும் என நம்பியிருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே கலாபதியும் நண்பனும் பிரபாகரனின் தலைமையில் இணைந்து செயலாற்றமுன்வந்தனர். அக்கணத்திலேயே அதாவது 1975 சித்திரை மாதம் பிரபாகரனின் தலைமையில் முதன்முதலாக ‘புதிய தமிழ்ப்புலிகள்’ இயக்கம் தனது வரலாற்றுப்பிறப்பை எடுத்தது.  அதுவரை ‘தம்பி’ என அழைக்கப்பட்டுவந்த பிரபாகரனும் ‘தலைவர்’ பிரபாகரனாக அன்று முதல் மாற்றமடைந்தார்.  கருத்துநிலையில் இருந்த தமிழ்ஈழத்தை களத்தில் காணும் முனைப்புடனும் பெருநம்பிக்கையுடனும் இவர்கள் தமது அடுத்தகட்ட நகர்வினைத் தொடங்கினர்.  இவ்வாறு தலைவர் பிரபாகரனினால் தேர்ந்தெடுக்கப்பட்டு சேர்த்துக் கொள்ளப்பட்ட முதலாவது போராளியாக கலாபதி தமிழீழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் குறிக்கப்படுகின்றார்.

1975  ஏப்ரலில் கலாபதியையும் நண்பனையும் தன்னுடன் இணைத்து புதியபுலிகள் இயக்கத்தை உருவாக்கிய தலைவர்பிரபாகரன்  அன்றுமுதல்   ஈழத் தமிழர்களின் ஆயதப்போராட்டத்தை தலைமையேற்றுக்கொண்டார். பத்துவருடத்தில்; 1985 ஏப்ரலில்; தளபதி கிட்;டு நடத்;திய யாழ் பொலிஸ் நிலைய தாக்குதல் மற்றும் மாத்தையாவினால் மேற்கொள்ளப்பட்ட கிளிநொச்சி பொலிஸ்நிலைய முற்றுகை என்பவற்றுடன் யாழ்ப்பாணக்குடாநாட்டின் பெரும்பகுதிகளையும் வன்னிப்பெரு நிலத்தின் பலபகுதிகளையும் தமது இறமையுள்ள தளப்பிரதேசமாக பிரபாகரன்; தலைமையிலான விடுதலைப்புலிகள் மீட்டெடுத்துக்கொண்டமை ஈழத்தமிழரின் வரலாற்றில் பெரும்சாதனையாக என்றும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஒருபோராட்டக்குழுவானது வளர்ச்சிகண்டு பல்கிப்பெருமளவிலான போராளி களை உள்வாங்கும்பொழுது தலைமையின் அல்லது தளபதியினுடைய கட்டளை க்கு கீழ்படியும் இராணுவமனநிலையுள்ள போராளிகளை பயிற்;சியின் மூலம்  உருவாக்கமுடியும். ஆனால் புனிதஇலட்சியத்தை வரித்துக்கொண்டு சகல வளங்களும் நிரம்பிய ஒருஅரசிற்கெதிராக போராடமுற்படும் ஒரு தனியான முதன் நிலைப்போராளி தன்போன்ற அல்லது தன்னுடன் மனமிசைந்து இயங்கக்கூடிய இரண்டாவதுநபரை தேடிக்கொள்வது மிகமிக கடினமானதாகும். முன்அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து  இது எப்பொழுதும் சாத்தியமாவதில்லை. தன்னைச்சூழ இருக்கும் நண்பர்களிடமிருந்தோ அல்லது  உறவினரிடமிருந்தே இவ்வரியசெயலை செய்ய முடியும். ஏனெனில் தான் சொல்வதை செய்யக்கூடியவராகவும் இன்னும் கூறினால் தன்மனதின் எண்ணவோட்டங்களை புரிந்துகொண்டு அதற்கு இசைந்து செயலாற்றக்கூடியவராகவும் இரண்டாம்நபர் அமையவேண்டும்.

1987இல் முதன்முறையாக சுதுமலை பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக மக்கள்முன் தோன்றிய மண்ணின் மைந்தர்களான தேசியதலைவர் பிரபாகரன் தானைத்தளபதிகளான கிட்டு ரகு குமரப்பா திலீபன் போன்றோர்

இவ்வாறுசரியாக அமைந்தாலே செயல்ரீதியாக போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தமுடியும். இவ்வகையில் தலைவர் பிரபாகரனது தெரிவானதுமிகச்சரியானதாகவேஅமைந்தது வரலாறுகண்டஉண்மையாகும்’

இதன்பின் தொடர்ந்துவந்த சிலவாரங்கள் இவ்வாறான பலசந்திப்புகள் வல்வெட்டித்துறை சிவன்கோவில் தெற்குவீதியிலும் தீருவில் வயலோ ரங்களிலும் நெற்கொழுமைதானத்திலும் இவைகளின் அயலிலும் தொடர்ந்தன.  இவ்வாறு சந்திக்கும்நேரங்களில் புதிய போராளிக்குழுவை அமைப்பதிலும் அதன் எதிர்கால செயற்திட்டங்களை வகுப்பதிலும் தனது பேரவாவை வெளிப்படுத்தியதுடன் அதற்கான பெயரையும் பெயருக்கான காரணத்தையும் இவர்களிற்கு தலைவர் விளக்கமாக கூறிவரலானார்.

கலாபதி குழுவினரிடமிருந்த  கைத்துப்பாக்கி போலவே தலைவர்பிரபாகரன் தனது தற்பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியும் அதிஸ்டவசமாக 4.05இலக்க வகையைச் சேர்ந்திருந்தது.  இதனால் கலாபதியால் கட்டப்பெற்ற துப்பாக்கிக் குண்டுகளை அதற்கும் பாவிக்கக்கூடியதாகவிருந்தது. அத்துப்பாக்கி மூலம் வல்வெட்டித்துறை ஊரிக்காட்டின் பின்புறம் மக்கள் நடமாட்டமற்றிருந்த இடத்திலிருந்த பனையொன்றில் சந்தர்பம் கிடைக்கும் நேரங்களில்  துப்பாக்கிசுடும் பயிற்சியினையும் இவர்கள் மேற்கொண்டனர். தனது முதலாவது குறி பலரால் குறிவைக்கப்பட்டும் சிங்களஅரசின் ஆதரவா ளராகவும் அமைப்பாளராகவும் தொடர்ந்து செயற்படும் ‘அல்பிரட்துரையப்பா’ என்பதனையும் இக்காலங்களில்  அடிக்கடி பிரபாகரன் வலியுறுத்தினார்.

அத்துடன் தான் அறிந்த காலம் முதல் எதையாவது செய்து கொண்டிருக்கும் செட்டியையும் இணைத்து தமது கட்டதாக்குதல் நகர்வினை விரைவில் முன்னெடுப்பதாகவும் கூறினார்.

அவர்கூறியது போலவே தலைவரும் கலாபதியும் ஏப்ரல்மாதஇறுதியில் சுதுமலைக்கு சென்று செட்டியின்நண்பனான’பற்றிக்’உடையவீட்டில் தலைமறைவாக இருந்த செட்டியுடன் தமதுஅடுத்தகட்ட நகர்வினைப்பற்றி விவாதித்தனர். அன்று அவர்களிலிருந்த சூழ்நிலையில் நிதிஎன்பதே எல்லாவற்றிற்கும் அடிப்படையானது என்பதை புரிந்துகொண்டனர். ஏனெனில் நிதி இருந்தாலே தமது எதிர்காலத் தேவைக்கான ஆயுதங்களை கொள்வனவு செய்யமுடியும் என்பதை பர்pபூரணமாக உணர்ந்துகொண்டனர். இதனால் தமது முதலாவது செயல்முறையாக நிதித் தேவையினை பூர்த்திசெய்யும் வழிவகைகளைப்பற்றி ஆராயமுற்பட்டனர். இறுதியில் உடனடி நிதித்தேவைக்காக அளவெட்டி பலநோக்குகூட்டுறவுச் சங்கத்தின் நிதியைப்பறித்தெடுக்கலாம் என முடிவாயிற்று. எனினும் தலைவர் பிரபாகரனின் முதன்நிலைக்குறியான துரையப்பாவை தொடர்ந்து கண்காணிக்கவும் முயன்றனர்.

தொடரும்……
வருணகுலத்தான்

‘வருணகுலத்தான் பார்வையில்’ தொடரும் இக்கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களினால் படைக்கப்பட்டதுடன்,  2002ல்  தலைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டவையாகும்.

லெப்.கேணல் அருணசீலன் – 2ம் லெப்.புஸ்பா​னந்தன் ஆகியோரின் வீரவணக்க நாள்


29.07.2001 அன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அருணசீலன் மற்றும் 2ம் லெப். புஸ்பானந்தன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

29.07.2001 அன்று திருக்கோவில் பகுதியில் எதிர்பாராத விதமாக சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில்

லெப்.கேணல் அருணசீலன் (கவாஸ்கர்) (மாணிக்கம் ரவிக்குமார் – பாண்டிருப்பு,

மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் புஸ்பானந்தன் (தட்சணாமூர்த்தி தவநேசன் – தம்பிலுவில், அம்பாறை)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞசில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் வீரவணக்க நாள்


28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த ஐந்து படைத் தளங்களையும் அழித்தொழிப்பதற்காக 28.07.1995 அன்று விடுதலைப் புலிகளால் கடும் தாக்குதல் நடாத்தப்பட்டது. எனினும் சில காட்டிக்கொடுப்புகளால் இத்திட்டம் வெற்றியளிக்காதபோதும் படைத்தளத்திற்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா படைகளின் இரு ஆட்டிலறிப் பீரங்கள் உட்பட பெருமளவு படைக்கலங்களை அழித்திருந்தனர்.

நுற்றிற்கும் மேற்பட்ட பெண் போராளிகள் உட்பட 180 வரையான விடுதலைப் புலிகள் இத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழத் தாயகத்தை சிறிலங்கா படைகளின் வல்வளைப்பிலிருந்து விடுவிப்பதற்காக தம்மை ஆகுதியாக்கிய இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

ஆனையிறவு தடைமுகாம் மீதான தாக்குதலில் காவியமான லெப்.கேணல் சரா உள்ளிட்ட 69 மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்

ஆனையிறவு படைத்தளம் மீதான ஆகாய கடல்வெளி நடவடிக்கையின்போது தடைமுகாம் மீதான இரண்டாவது தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய லெப். கேணல் சரா உட்பட்ட 69 மாவீரர்களினதும், இதேநாளில் வாகரையில் வீரச்சாவைத் தழுவிய வீரவேங்கை விவே என்ற மாவீரரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

ஆகாய கடல்வெளி நடவடிக்கையின்போது 11.07.1991 அன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வெற்றிக் கொள்ளப்படாதிருந்த தடைமுகாம் மீது 27.07.1991 இரண்டாவது தடவையாக விடுதலைப் புலிகளால் பாரிய தாக்குதல் தொடுக்கப்பட்டது.

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடாத்தப்பட்ட இந்த தாக்குதலில் சிறிலங்கா படையினர் பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இந்த நடவடிக்கையின்போது படைத்தளம் நோக்கி முன்னகர்ந்த போராளிகளிற்கு காப்பாக விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட கவச ஊர்தி ஒன்று பயன்படுத்தப்பட்டது.

எனினும், இக்கவச ஊர்தி படையினரின் எறிகணை வீச்சில் சிக்கிக் கொண்டபோது இதனை ஓட்டிச் சென்ற தளபதி லெப். கேணல் சரா மற்றும் மேஜர் குகதாஸ் ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இவர்களுடன் முதல் நாள் தாக்குலில் 67 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இம்மாவீரர்களினதும், இதேநாளில் மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட வீரவேங்கை விவே (பெர்னாண்டோ உதயராஜ் – மட்டக்களப்பு) என்ற மாவீரரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் வியடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

ஆனையிறவு படைத்தளத்தின் தடைமுகாம் மீதான இரண்டாவது தாக்குதலில் முதல்நாள் வீரச்சாவைத் தழுவிய 69 மாவீரர்களினதும் விபரம் வருமாறு:

லெப்.கேணல் சரா (சின்னத்துரை ஜீவராசா – யாழ்ப்பாணம்)

********

மேஜர் குகதாஸ் (இராசரத்தினம் இராஜேந்திரன் – யாழ்ப்பாணம்)

மேஜர் சொனி (சிவஞானசுந்தரம் அசோகன் – யாழ்ப்பாணம்)

கப்டன் நிறையன் (இராமமூர்த்தி விதுரன் – மட்டக்களப்பு)

கப்டன் ரகீம் (ஜசாக்டொனால்ட் வீரபாகு – யாழ்ப்பாணம்)

கப்டன் நிதி (இரத்தினம் இலங்கேஸ்வரன் – யாழ்ப்பாணம்)

கப்டன் கீர்த்தி (வீரப்பாபிள்ளை கனகேஸ்வரன் – யாழ்ப்பாணம்)

கப்டன் அல்பேட் (கந்தசாமி வன்னியசிங்கம் – யாழ்ப்பாணம்)

கப்டன் சௌகான் (சிவானந்தன் ஜோய்அன்ரனி – யாழ்ப்பாணம்)

கப்டன் சிவம் (பவான்) (திருப்பரங்கிரிநாதன் நெல்லைநாதன் – யாழ்ப்பாணம்)

கப்டன் சத்தியராஜ் (கந்தையா சத்தியசீலன் – திருகோணமலை)

கப்டன் வினோத் (கனகராசா பிரபாகரன் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் வர்மன் (பாஸ்கரமூர்த்தி சுந்தரமூர்த்தி – மட்டக்களப்பு)

லெப்டினன்ட் சபா (மாரிமுத்து பத்மநாதன் – மட்டக்களப்பு)

லெப்டினன்ட் உமாசங்கர் (ரவி) (சின்னமணி சென்சியஸ் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் நிமலேந்திரன் (பிரசன்னா) (தங்கவேல் செந்தில்குமரன் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சத்தியகுமார் (பொன்னையா சிவனேசராசா – மட்டக்களப்பு)

லெப்டினன்ட் அன்பு (பாலச்சந்திரன் றமணன் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் வினோத் (தர்மலிங்கம் தயாளன் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் பாரதி (நவரட்ணம் கோபாலாப்பிள்ளை – மட்டக்களப்பு)

லெப்டினன்ட் கேசியன் (கேசவன்) (பரஞ்சோதிநாதன் நியூற்றன்பிரான்சிஸ் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் நெல்சா (சின்னக்குட்டி சரோசினிதேவி – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் குட்டி (செபஸ்தியம்மா அலோசியஸ் – மன்னார்)

2ம் லெப்டினன்ட் மதனா (சிவமலர் தளையசிங்கம் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மெடினா (மெடோனா) (செல்வராணி மாயழகன் – கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் வதனி (ஹென்சி பத்திநாதன் – மன்னார்)

2ம் லெப்டினன்ட் ஜசீரிமா (சிவலோஜினி சிவானந்தையர் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சுந்தரி (சுஜந்தா தேவநாயகம் – திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் இளவரசி (சிவப்பிரகாசம் சந்திரபவானி – முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் காந்தன் (டானியேல் ராஜ்குமார் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் வாணன் (குமார்) (நடேசு ஜெயக்குமார் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மயில்வாகனம் (சின்னத்தம்பி சுந்தரலிங்கம் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் ஜெயந்திரன் (ஜெயச்சந்திரன்) (கந்தப்பர் தவராசா – மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் அல்பேட் (நடராசா கலைச்செல்வன் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் நளினன் (நாகராசா சிவகுமார் – மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் நிதி (செல்வநயினார் சுந்தர்ராஜன் – திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் விக்கி (இரத்தினம் சாந்தவேல் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் கஜன் (கோபாலப்பிள்ளை புஸ்பராசா – திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் நிருபன் (வேலாயுதம் பாலச்சந்திரன் – திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் ஆனந்தன் (கந்தசாமித்துரை ராஜவேல் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை திசைவீரன் (சற்குருநாதன் சற்குணபேசன் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ரகீம் (சகீம்) (நாகலிங்கம் ஜேகதாஸ் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை திகில் (தங்கையா சேரன் – கிளிநொச்சி)

வீரவேங்கை வேலுப்பிள்ளை (யூனியன் கந்தையா கந்தசாமி – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கிர்மானி (ஜோன்எட்வேட் கெனடி – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பவா (கதிரித்தம்பி கணேசலிஙகம் – கிளிநொச்சி)

வீரவேங்கை பீலிக்ஸ் (அருளானந்தம் ரொனால்ட்ஆனந்த் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ராஜன் (குமாரசாமி குணராசா – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வரதன் (வரதராஜன்) (மாசிலாமணி மகேந்திரன் – மட்டக்களப்பு)

வீரவேங்கை ஆனந்தபாபு (தங்கராசா நடராசா – மட்டக்களப்பு)

வீரவேங்கை புரூஸ்லி (மூர்த்தி) (சீவரத்தினம் சின்னவன் – மட்டக்களப்பு)

வீரவேங்கை கரன் (வேலாயுதம் சிவனையா – திருகோணமலை)

வீரவேங்கை மொரார்ஜி (அரசரட்ணம் அரவிந்தன் – திருகோணமலை)

வீரவேங்கை பிருந்தன் (சின்னராசா ஜெராட்திலகர் – மன்னார்)

வீரவேங்கை கில்பேட் (ஞானராசா ஞானதீபன் – மன்னார்)

வீரவேங்கை கார்த்திகா (மேரிகலிஸ்ரா சூசைப்பிள்ளை – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பிரதீபா (ஜெயந்தி பெரியதம்பி – முல்லைத்தீவு)

வீரவேங்கை அன்பினி (சிவனடி விஜிதா – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சிகிலா (ரங்சினி நடராசா – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தங்கமணி (புஸ்பகலா நடராசா – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை டட்லியா (வரலட்சுமி தேவசிகாமணி – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை யாழ்மொழி (விஜயலதா பாக்கியநாதன் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சுனித்தா (குஸ்மாவதி கருணாகரன் – திருகோணமலை)

வீரவேங்கை ஜஸ்மின் (செல்வமலர் கோபாலப்பிள்ளை – திருகோணமலை)

வீரவேங்கை காயத்திரி (சந்திரசேகரம் உமாதேவி – முல்லைத்தீவு)

வீரவேங்கை நிசா (சதாசிவம் சுமதி – அம்பாறை)

வீரவேங்கை காண்டீபனி (சுகந்தினி வேலாயுதம் – கிளிநொச்சி)

வீரவேங்கை சசீந்தா (சூரியகுமாரி சுப்பிரமணியம் – வவுனியா)

வீரவேங்கை சுகந்தினி (யோகா கணபதிப்பிள்ளை – வவுனியா)

2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகள் வீரவணக்க நாள்


2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்


கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.


கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிகள் வந்து பார்க்கும் பொழுது பூங்காவில் எவரும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாக்குதலின் பின்னணி.

இத்தாக்குதலினை வடிவமைத்தவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர்.

2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 8.30 14 கரும்புலிகள் உறுப்பினர்கள் ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடினர்.

2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 9:45 மணியிலிருந்து 11:15 அப்பகுதியில் மின்சார சேவை தடைப்பட்டது.

2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் தொடங்கப்பட்டது.

2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை படைத்தளத்தில் இருந்த 21 படை விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் அழிக்கப்பட்டன.

2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை தாக்குதல் நீடிக்கப்பட்டது.

தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் இலங்கை அரசின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் 14 என்று கூறப்பட்டது.

விடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வப் பத்திரிக்கையான ஈழநாதத்தின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது.

ஈழநாதத்தின் வெளியீடு:

முற்றிலுமாக அழிக்கப்பட்டவை

 • இரண்டு எ (A) – 340 – 300 பயணிகள் விமானங்கள்
 • ஒரு எ (A) – 330 -200 பயணிகள் விமானம்
 • நான்கு கிபிர் போர் விமானங்கள்
 • மூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள்
 • இரண்டு எம்.ஜ.ஜி (MIG) – 27 ஜெட் போர் விமானங்கள்
 • இரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி
 • இரண்டு வி.வி.ஜ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி
 • இரண்டு எம்.ஜ (MI) -17 உலங்கு வானூர்தி
 • மூன்று K-8

சேதப்படுத்தப்பட்டவை

 • இரண்டு – A-320 பயணிகள் விமானங்கள்
 • ஒரு – A-340 பயணிகள் விமானம்
 • ஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்
 • ஒரு எம்.ஜ (Mi) -24 உலங்கு வானூர்தி
 • ஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி
 • நான்கு கிபிர் போர் விமானங்கள்

விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.

இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

[col_charles_200.jpg]

கட்டுநாயக்கா திட்டமிடல் கேணல் சார்ள்ஸ்

காலநதி ஓட்டத்தில் கரைந்திட முடியாதகாவியபெரு வரலாறு கேணல் சாள்ஸ்.

————————

தாக்குதல் பாடல் காணொளியில்

கரும்புலிகள் தினத்தில் தலைவர் நினைவுப் பகிர்வு–காணொளி
——————–
தன் மக்கள் மீது குண்டு வீசிய இரும்புப் பறவைகள் அவற்றின் இருப்பிடத்தில் வைத்து தகர்த்தெறிந்து விட்டு மீளாத் துயிலும் கொள்ளும் கருவேங்கை


On Tuesday, July 23, 2001 at 3:30am, a strike team consisting of fourteen members of the Liberation Tigers of Tamil Eelam infiltrated the Katunayake Airbase and commenced a 10 hour assault on the Sri Lankan Air Force. This battle caused the largest amount of financial loss to the Sri Lankan Army in the 18 years of the Tamil Eelam separatist conflict.

The total financial loss was estimated by the Sri Lankan government to be $375 million USD. The meticulously planned attack by the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) targeted SriLanka Airlines aircraft parked on the apron and another foreign-owned cargo plane was spared. When the battle was over 14 members of the LTTE, 7 soldiers of the Sri Lankan Air Force had been killed.

There were no civilian casualties. The confidence of the Sri Lankan military had been shattered. Planning the Attack Katunayake attack was conceptualized by LTTE leader Velupillai Prabakharan. The blueprint for the attack and training program for the operation was prepared by Prabakharan in association with Intelligence Chief Pottu Amman, Anti Aircraft and Air Wing head Shankar and Deputy Military Commander Balraj. The LTTE had already stalemated the Sri Lankan Army and Sri Lankan Navy.

————
எம் மக்களை கொன்றொழித்த சிங்களத்தின் பல வான்கலங்களைத் தன் தோழர்களுடன் தகர்த்தழித்து மீளாத் துயிலில் உறங்கும் கரிய வேங்கை


எம் மக்களை கொன்றொழித்த சிங்களத்தின் பல வான்கலங்களைத் தன் தோழர்களுடன் தகர்த்தழித்து மீளாத் துயிலில் உறங்கும் கரிய வேங்கை

The LTTE in the past had been successful in using Anti Aircraft guns and Surface to Air missiles in shooting down a few Sri Lankan Air Force planes. However the Sri Lankan Air Force had continued to upgrade their Air capabilities. Sri Lanka had purchased Israeli built Kfir bombers and Russian MIG-27 jet fighters with anti-missile defence systems.

Sri Lankan Air Force had also received training in the operation of these aircraft from Israeli and Ukrainian pilots based in Sri Lanka. The LTTE had conducted two attacks on the Sri Lankan Air Force in the early 1990s. The first inside the China Bay Airbase in Trincomalee destroyed two planes and three helicopters. The second inside the Palay Airbase in Jaffna destroyed one helicopter.

There was also an attack against Katunayake Airbase in which a taxi with explosives packed inside secret compartments was detected. Sri Lanka also maintains Airbases in Ratmalana, Anuradhapura, Trincomalee, Vavuniya and Palaly. The Katunayake Airbase Complex The Sri Lanka Air Force base at Katunayake, 35 km north of the capital, is the most important and the biggest airbase in the country.

Adjoining the airbase is the Bandaranaike International Airport, Sri Lanka’s only civilian airport, and its only air link to the outside world, besides being the ‘hub’ of the international operations of Sri Lankan Airlines. Together, the two constitute the most highly guarded facility in all of Sri Lanka. The complex has 90 sentry points around it, and over 500 men guarding it.

The Katunayaka Airbase / Bandaranaike International Airport is unique in that it hosts Sri Lanka’s largest military airbase alongside a major international airport. This is somewhat unusual because a clear distinction is usually maintained between civilian and military installations in the interests of civilians, particularly in times of war. Since the LTTE has been scrupulously in avoiding any harm for befalling foreigners as far as possible, it was calculated that the Tigers would not dare attack Katunayake. “Ten Squadron” Bombing Runs Sri Lanka had newly assembled an aerial bombardment fleet known as “Ten Squadron”.

It consisted of thirteen Kfirs and eight MIG-27s. Katunayake that had the most suitable infrastructure in terms of tarmac and runway facility for smooth multi-level take offs and landings for these aircraft, particularly the supersonic MIGs and Kfirs. Though the Katunayake attack had been put together in the year 2000 the LTTE had refrained from implementation because the LTTE had been observing a unilateral ceasefire. The Kumaratunga regime rejected the LTTEs peace offer and pursued war. It launched operation ‘Agni Kheela’ on April 24 which ended in failure. The turning point came when the government embarked on a massive bombing spree in the North on June 30, under the flimsy pretext that it was necessary to preempt an offensive planned by the Tigers to retake Jaffna. The LTTE denied this vehemently and issued a statement on July 2, warning the government that it must bear the consequences for the unwarranted air raids.

The LTTE Leopards The LTTE has assembled and trained a team consisting mainly of its elite commando unit known as “Chiruthaigal” or leopards to prepare for the attack. The Katunayake attack team consisted of some members of the anti aircraft and air wing and intelligence operatives. All of them had taken the Black Tiger oath and were willing to die. Models replicating the Katunayake complex were constructed and utilized for mock attack practices. Intelligence gathering about the Katunayake Airbase Complex had been going on for over a year.

The LTTE had operatives perform reconnaissance missions posing as travelers and visitors. This was made possible because the civilian BIA was in the same complex. An intelligence operative had rented out a house in the Katunayake area for a long time and mapped out the location. Members of the LTTE who were former employees of the Sri Lankan Air Force or Air Lanka also provided input. The LTTE’s intelligence bureau also succeeded in purchasing maps and blue prints from two middle ranking Air Force officers for a hefty amount. Both of these Air Force officers were Sinhalese. Primary Target Katunayake Airbase The LTTE intended to prevent civilian causalities. The Airport building was not to be attacked at any cost. Also the Air force base was to be attacked first so that civilians in the Airport could have adequate time to ensure their safety. A simultaneous attack on both targets was ruled out. The bulk of the assault team was transported by sea to the Western coast. Some guerrillas traveled by road and arrived in Colombo. The awesome arsenal required for the operation was also ferried by sea and lodged in a safe house off the western seaboard.சிங்களத்து வான்படையின் வை-8 வானூர்தி கரிய வேங்கள் மூட்டிய தீயில் சாம்பலாய் கிடக்கிறது

By July 22, most members of the assault squad had assembled at a safe house in the interior of Gampaha district. The arms and ammunition necessary was also collected. The 21 member assault squad led by a senior leader addressed as “Amman” by the team clambered aboard a 36 seater luxury bus to take on a highly fortified airbase in the heart of Sinhala country. Preliminary maneuvers however were on. Intelligence operatives and advance scouts preceded the assault team to conduct reconnaissance missions.

கரிய வேங்களினால் அழிக்கப்பட்ட சிங்கள அரசின் போக்குவரத்து வானூர்தி

கரிய வேங்களினால் அழிக்கப்பட்ட சிங்கள அரசின் போக்குவரத்து வானூர்தி

These Tigers generally unarmed would most likely have traveled in singles or pairs to avoid attention. It is now understood that some came by road transport to the Katunayake Airport area while others took the train to Kurana situated between Katunayake and Negombo. Once the environment was monitored and risk factors measured, signals to go on with the mission were given the assault team through cellular phones. The luxury bus with tinted glass windows and curtains bore the name “Rosa”. It had a “Matara” destination board. The upper portion was brownish and lower portion grayish in colour. The bus was seen in Kadhirana and Kurana areas near the railway station after dusk. Though this was Black July and members of the security forces were on extra alert, the LTTE bus managed to pass though numerous check points mostly likely by bribing security officials. Picnic at Raja Fernando Playground The luxury bus was parked at the Raja Fernando playground in Kurana after 8:30 pm. The occupants got out, removed their footwear, stretched their legs and began consuming dinner. Most of them knew that this was going to be their last meal on earth. They ate out of food parcels and also had chocolate slabs and biscuit packets. Cans of soft drinks were also taken. The neighbourhood where the playground was situated was not densely populated, but several passersby took notice of the vehicle and men.

Some thought they were security personnel in civils as lilting Sinhala music was playing on a cassette player. A few who inquired were told in perfect Sinhala that they had come to Katunayake to bid farewell to friends departing to the middle east, and were now camping out in picnic style at the playground for the night. They would do some sight-seeing the following day and then depart to Matara. Many bought this explanation. A few like Xavier Dayananda Fernando, a resident of the area were suspicious. They informed Air Force personnel of their suspicion. But there was no immediate response. The usual power cuts in the area to conserve electricity was from 9:45 pm to 11:15 pm. When it ensued slightly earlier than usual that night, everything was pitch dark. The assault squad hastily finished their meal, changed into uniforms (mostly air force type with a few combat fatigues) and started out on their destination. In the hurry at least twelve pairs of footwear were left behind. Some were removed by residents later. The luxury bus dropped off the squad at the rail track in Kadirana area. The Tigers then used the overwhelming darkness as cover and started to walk on the rail track towards Katunayake airport.

They were also carrying several heavy sacks of armaments and equipment. The bus then sped off. The sacks were heavy with G-3 general purpose machine guns, T-56 assault rifles, 40 mm grenade launchers, Rocket Propelled grenade RPG launchers, shoulder fired disposable LAW, Light anti tank weapons, LMG light machine guns, packets of plastic explosives, magnetic devices with timers to affix explosives onto targets, detonators, mortars, shells, grenades, spare ammunition and night vision equipment comprised the heavy lethal cargo carried by the Tigers. Entering the Airbase Meanwhile some Air force personnel came to the playground after electricity supply was resumed to check out the “picnickers”. There were none. Empty soft drink cans, food parcel remains and biscuit and chocolate wrappers were strewn around. The Air force personnel did not suspect anything and told the residents who complained that the “picnickers” must have left after their “bajaw” and returned. This was a security lapse with grave consequences. The Tiger squad reached a point about 400 metres from the outer fence behind the Air base. There was an open stretch of land between the fence and the outskirts of the coconut grove that was a “no go zone’ as it was heavily mined. Also the fence was too was electronically activated and could electrocute intruders.

There was however a drainage canal that was partly sub – terranean. This was to prevent flooding of the runways and tarmac during rainy season. The water flowed through to a nearby marshy lagoon. It was stone dry now. The Tigers now began to crawl through this drainage canal towards the base. The advance column infiltrated the outer limits of the base through the canal and deactivated the electronic fence. The barbed wire was then cut systematically. Thereafter the entire team with their weapons and equipment got inside the base perimeter. The next step was to fix explosives to the three transformers.

தமது பணியை முடித்து தம்மை அழித்துக் கொண்ட கரிய வேங்கைகள் கைவிட்ட பொருட்களை வேடிக்கை பார்க்கும் சிங்களப் படையினர்

The Tigers had accurate maps and diagrams of the installation and knew exactly where everything was. Some Tigers also moved towards the hangars and prepared to explode the aircraft within. At 3:15AM a single subdued shot was fired by one of the Tigers. Air force sentries heard it and were puzzled but did not react sharply. It is presumed that the shot was some form of signal to the squad which divided itself into three main groups.

The electric transformers were blown up in rapid succession from 3:30 to 3:35AM. The Air base was enveloped in darkness. The Air force did not suspect anything at even this stage. Along with electricity board men attempts were on to check out and restore powers supply again. There were 350 Air force personnel of all categories in the base at the time of attack. While total darkness reigned the Tiger squad moved out in three directions. One went clandestinely to the Airport terminal and climbed on top of the control tower roof.

One went inside the hangar premises and started implanting explosives. The third went towards the tarmac and commenced affixing explosives. Explosions Then a Fire Fight The first explosion took place at 3.50 am. It occurred where the helicopters were parked. With the first explosion the Tigers started breaking out and advancing. The sentry positions were taken one after another. Prior knowledge of where each and every point was situated helped the LTTE to move systematically. The Tigers concentrated initially on targeting the base and next moved to the passenger aircraft in the airport.

The Tiger groups then subdivided themselves into two formations with one exploding the aircraft intermittently and the other providing cover fire. The three Tigers on top of the control tower used the strategically vantage point to obtain an aerial overview of the entire complex and engage in firing. Segments of the Air Force were pinned down by these marksmen. Later they kept security force formations trying to advance at bay through firing. In the final stages, these gunners targeted aircraft on the tarmac with heavy weapons successfully.

Even as fighting broke out the civilian authorities got alerted. 22 flights were scheduled to land an take off from midnight to noon on Tuesday 24th. Only five were over when the attack began. Passengers were off loaded, outgoing flights cancelled and incoming ones diverted. There was however mass panic and pandemonium. Employees and officials simply ran. Passengers and tourists were greatly frightened and terrorised. A foreigner described the scene aptly to a foreign news agency by saying the Sri Lankan Airport staff including security men were “flapping about like headless chickens”.

The long battle went on from 3:50 to 8:30 am. The tide began to turn against the Tigers after a specialised commando unit of the rapid deployment force arrived on the scene. The security forces who were utterly confused in the dark, began to get their act together after first light at the crack of dawn. The Tigers also began to run out of ammunition and also get tired. Even as a few Tigers made tactical withdrawals from the scene according to a set game plan, the others began to fall one by one. At least one Tiger was blown up with an exploding aircraft while some others were shot dead.

A few committed suicide after they ran out of firepower or when surrounded. The Sri Lankan commandoes used tear gas to immobilise two of the three Tigers at the control tower . The third apparently was missing. One of the guerrillas was found near the cooling plant on the roof and the other in the baggage sorting section. The two had taken their lives. 14 Tigers Dead Fourteen Tigers lay dead when the fighting was over. One body was shattered to bits in the explosion.

Five of the thirteen had taken their own lives. The others had been shot dead by the security forces. A lot of empty firearms and launchers were recovered. Ten security personnel two from the army and eight from the air force were killed. 19 airmen and 5 soldiers were injured. A handful of civilians had got injured of whom only two were admitted to hospital. These were an Ukrainian flight engineer and a Rupavahini cameraman were injured. At least seven Tigers are said to have escaped.

An intensive search has been launched to in the Kurana area to flush out Tigers suspected to be hiding in the area. An island wide hunt was launched for the luxury bus with several false alarms. True to form, more than 50 Tamils have been arrested as suspects so far. In a bid to impress the nation and the world the government ordered retaliatory bombing raids in the North-East using two K-firs and two MIG – 27’s.

A four member commission has been appointed to inquire into the incident and identify security lapses. The government has estimated the initial damage cost at 539.3 million US dollars. In rupees it could be nearly 50 billion. The adverse impact on tourism, foreign investment and foreign employment will be tremendous. Finally what was the extent of the destruction caused?

The government has given certain figures but LTTE sources dispute them. The “Eelanatham” published by the LTTE at Skanthapuram in the Tiger controlled area of Kilinochchi district has in a special issue of July 26th claimed that the number of aircraft affected in the attack were exactly double that of the official figures provided by the state. The newspaper however has not quoted the LTTE on this but has made this claim on the basis of information supplied by knowledgeable sources in Colombo.

SLAF Losses The Tigers have not issued any statement on the Katunayake attack so far, although Tamil journals published in Sri Lanka and abroad have given wide prominence to the incident. Since the “Eelanatham” is directly controlled by the LTTE it is surmised that the relevant news story is endorsed and approved by the LTTE hierarchy. According to the “Eelanatham” 28 aircraft have been destroyed or damaged and not 14 as stated by government circles. Of these 18 are completely destroyed while 10 are substantially damaged. The destroyed 18 aircraft are as according to the newspaper three Airbuses ( 2 A – 340 – 300’s and one A – 330 -200), four K-fir bombers, three K – 8 trainer planes, two Mig – 27 jet fighters, Two MI -17 helicopter gunship , two bell 412 helicopters and two VVIP 412 helicopters. Eelanatham has also said that the 10 damaged aircraft are another three Airbuses (two A 320’s and one A -330) four K-fir bombers, one MI – 24 helicopter, One Antonov transport plane and one Bell 412 helicopter. The Eelanatham claim contrasts sharply with that of Colombo’s figures according to which eleven aircraft are destroyed and three damaged.

The official breakdown of those destroyed are three airbuses, three K-8 trainer planes, two K- fir bombers, one MIG-27 jetfighter and two MI-17 helicopter gunships. Three airbuses are damaged. According to the Eelanatham the losses incurred by the Air Force has reduced its bombing capability by 45 %. The newly formed “Ten Squadron” fleet utilised for bombing has lost two out of eight MIG – 27’s and four out of thirteen K-firs. In addition four K’firs are decommissioned due to damage. The Wanni newspaper has also stated that severe infrastructural destruction has also been done. It says that the special bombing storage facility used to keep lethal high explosive bombs was blown up along with the contents inside. The Arms warehouse cum ammunition dump within the airbase has also been demolished totally said the newspaper.

Also the fuel storage tank for the Air Base as well as three oil tankers have been destroyed. The “Eelanatham” has charged the government of trying to suppress the real facts about the attack to prevent erosion of international confidence in the regime and also because of fears that the Sinhala public would agitate against the government, blaming it for the colossal losses incurred. Only time will reveal which version of the destruction caused is correct. PTA Arrested Tamils Released The Attorney General on February 21, 2002 directed the Negombo Magistrate to release all the thirty-two Tamils arrested and remanded in connection with the attack on Sri Lanka Air Force head quarters at Katunayake on July 24, 2001. All the suspects have been detained at Kalutara prisons under the Prevention of Terrorism Act.

http://www.kuttimani.com/2008/06/katunayake-airbase-attack.html
————————————————————-
Tension after dawn raid

[TamilNet, Tuesday, 24 July 2001, 08:47 GMT]

Thirteen air crafts including two Kfir jet fighters, one MI-24 Helicopter gun ship and one MIG-27- jet fighter were destroyed in the predawn attack on the Katunayake air base, about 35 km. north of Colombo, by members of the Liberation Tigers, according to official military sources in Colombo.

Three military trainee planes and five civilian jets were also among the destroyed air crafts.

Military sources in Colombo said several ammunition dumps and oil storage were also destroyed.

They said 12 attackers and 4 Air Force personnel have been killed. Nineteen air force personnel were also wounded.

24_07_01_airbase_attack_2.jpg

Residents living close to the air base said large explosions rocked the area and gun battle continued for nearly four hours.

Sri Lankan military authorities have declared an indefinite curfew in several areas in the Negombo district. “The activities of the International airport have been temporarily suspended” a government special communiqué said this morning.

The temporary closure of the international airport has been notified to international airlines, according to the Director of Civil Aviation, Lal Liayanarachchi.

24_07_01_airbase_attack_1.jpg

Katunayake, Negombo, Minuwangoda, Divulapitiya, Seeduwa and Jaela police areas are now under curfew, security sources said.

Meanwhile no one is allowed to enter Colombo harbour Tuesday morning as a precautionary measure, following the attack on Katunayake said sources.

President Ms Chandrika Kumaratunge Tuesday morning held an emergency meeting with chiefs of three armed forces and the Inspector General of Police following the attack.

Earlier the Deputy Minister of Defense General Anuruddha Ratwatte inspected the airforce base accompanied by the Defense Ministry Secretary Chandrananda de Silva, President’s Secretary K. Balapatepandi, chiefs of three armed forces and the Inspector General of Police

Chronology:

மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்

23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி – கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர்.

1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள்.

நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை. வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை. இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர்.

செல்லக்கிளி அம்மான் பற்றி தேசியத் தலைவர் காணொளி


முன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர். கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை. வெடிமருந்து தயார்படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும். என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி. அதன்பின் கிடங்குவெட்டி, (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல) இவற்றையும விட தாக்குதலின் போது சண்டையும் போடவேண்டும்.

எமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு ட்ரக் வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல். எனவே யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில், கண்ணிவெடிபுதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம். அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு வோக்கிரோக்கி. அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும்.

விக்ரரும் செல்லக்கிளியும் அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது. கண்ணிவெடியை புதைத்துக் கொண்டிருக்கையில் விக்ரர் விலகி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான். சுவர் அவனை விட உயரமாக இருக்க பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக்கொண்டு அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான். துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும், துப்பாகியை இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான்.


தம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப்பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கையில் வோக்கி செல்லக்கிளியை கூப்பிடுகின்றது.

செல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான். அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்கவைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான்.

வெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர் ”அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ”” என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில், வோக்கி மீண்டும் அலறியது.

“அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான். முன்னால் ஜீப், பின்னால் ட்ரக்” என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

ஜீப்பை எம்மிடம் வரவிட்டு, பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால் தாக்கி அதில் தப்புபவர்களைச் சுடுவதாக எமது திட்டம். ட்ரக் வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரையும் தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர். வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. நான் எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம். அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன். அடுத்து ட்ரக். மெல்ல வந்து கொண்டிருக்கின்றன.

நாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டுவிடுகிறது. எமக்கு அதிர்ச்சி. ஏன் அப்படி நடந்தது? சிந்திக்க நேரமில்லை. உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை விளக்கவில்லை. சண்டை முடிந்தபோது அவனை நாம் இழந்துவிட்டோம்.

சிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத்தொடங்கினோம். ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே பின்னால் நடப்பவை எடக’கும’ எமக்குத் தெரியவில்லை. எனது G3யால் இரு விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்த சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம்.

ஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உன்ளே இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் அருந்து ஓடிவருவது தெரிய அவனைக் குறிவைத்து விசையை அழுத்த. சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான். அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான். இன்னுமொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனைத் திருப்பிச் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை. மற்றும் தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை. அவன் ஓடிவிட ஜீப்புக்குக் கிட்டே ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளைச் சுட்டான் துப்பாக்கி திடீரென்று நின்றுவிட்டது. விக்ரருக்கு விளங்கிவிட்டது. போடப்பட்ட குண்டுகள் தீர்ந்துவிட்டது. குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தைமாற்றி மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த ட்ரக் வண்டியின் சாரதி வெடி வெடித்ததைப் பார்த்தான். அவன் உடல் சில்லிட்டது. பெரிய வெளிச்சத்தையும், ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும் கண்ட சாரதி தன்னை அறியாமலே பிரேக்கை இறுக அமத்தினான். ஏன் பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறி நின்றான் என்றே கூறலாம்.

ட்ரக் பிரேக் போட்டு நின்றதும் ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் தம் துப்பாக்கியை தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர்.

தம்பி இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே குந்தியிருக்க, இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகிறது. சிறிதாக நிமிர்ந்து பார்க்கையில் ஜீப் வண்டி கண்ணி வெடியை நெருங்கிக் கொண்டிருக்க ட்ரக் அவருக்கு 20 யார் தூரத்தில் சென்றுகொண்டிருக்க கண்ணிவெடி வெடித்தது. ட்ரக் அவருக்கு மிகக் கிட்ட கையில் எட்டிப்பிடிக்குமாப் போல் துரத்தில் பிரேக் போட்டதால் குலுங்கி நிற்க தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய G3 வெடிக்கத்தொடங்கியது.

ட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் G3 வெடிக்கத் தொடங்கியது. G3 யிலிருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்குத் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக விழுத்தத்தொடங்கியது.

சற்றும் எதிர்பாரமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது.

ஆனால், இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழுவெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்னமயாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த 9 இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது.

ட்ரக் மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச் சுடமுடிகிறது. வெடியன் அதிர்வில் தெரு விளக்குகள் அணைந்துவிட்ட பொழுதிலும் மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக அபாயகரமான நிலை அவருக்கு. இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் தம்பி மிகக் கிட்டே நிற்கிறார். எதிர்பாராமல் இத்தாக்குதலில் மிக அபாயத்தின் எல்லையில் தம்பிதான் நிற்கிறார். ஆனால் தனது ஆளுமையால், ஆற்றலால் வரிசையாக இராணுவத்தினரை விழுத்தி வந்த போதிலும் இரண்டு சாதுரியமான இராணுவத்தினர் ட்றக்கிலிருந்து கீழே சில்லுக்குள் புகுந்துகொண்டு, மறைந்திருந்து தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள். தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன. இத்துடன் ட்றக்கின் முன்புறத்தில் இருந்தவர்களும் கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் G3 இவர்களையும் நோக்கி முழங்குகிறது.

இதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால் தம்பிக்கு உதவிக்கு எவரும் இல்லை நாம் எமது திட்டத்தின் படி ஜீப்பை முன்னே விட்டு ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்ததோம். அத்திட்டத்தின்படி தம்பியை மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம். ஆனால் இப்போ தனியாகவே ட்றக்கை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தம்பி தள்ளப்பட்டு விட்டார். இதே நேரம் ஜுப்பை நோக்கி சுட்டுக்கொண்டிருந்த விக்ரர் தனக்கு 20 யார் பின்னே ட்ரக் நிற்பதையும் அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத் துப்பாக்கியை ட்றக்கை நோக்கி திருப்பினான். ட்றக்கின் முன் கண்ணாடிகள் சிதறுகின்றன. கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீளவரிசையாகச் சுட்டான்.

அப்பொதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது தனது இருக்கையிலேயே ஸ்ரேறிங்கில் சாய்ந்து வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை விட்டிருந்தான்.

விக்ரரின் இடத்திலிருந்து சற்று முன்னோக்கி எதிரில் இருந்த ஒழுங்கையிலிருந்து ‘”பசீர் காக்கா”” றிப்பீட்டரால் ஜீப்பை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார். றிப்பீட்டரில் தோட்டாக்கள் முடியும்போது அதை மாற்றித் திருப்பித் தாக்கும் படி செல்லி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார் காக்காவின் அருகிலிருந்த அப்பையா அண்ணை. அப்போழுது ஒழுங்கையை நோக்கி ஒருவன் S.M.G உடன் ஓடி வந்தான். ‘சுடு” என்ற அப்பையா அண்ணை உடனே ‘கவனம் எங்கட பெடியளோ தெரியாது பார்த்துச் சுடு” என்றார். றிப்பீட்டர் சத்தம் ஓய வந்தவன் பிணமாகச் சரிந்தான். அவனது S.M.Gயை அப்பையா அண்ணை ஓடிவந்து எடுத்துக்கொண்டார். இவனே ரோந்துப் பிரிவுக்கு தலைமை தாங்கிய லெப்ரினன்ட் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். அவனது விசேட இராணுவப் பட்டிகள் அதை உறுதிப்படுத்தின.

இதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து ரஞ்சனையும் இன்னொரு போரளியையும் ”தம்பியிடம் ஓடு” என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர்.

ஆனால் ரஞ்சனும் சக போராளியும் தம்பியை நோக்கி சென்றடைந்த போது ட்றக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு G3 ஓயவைத்துவிட்டது.

சாதாரணமாக எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்து விட்டு அமைதியாக வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து முடிந்த ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார் தம்பி.

மதிலேறிக்குதித்த ரஞ்சனும் மற்றைய போரளியும் ஆயுதத்தோடு ஒரு நபர் இருப்பதைக் கண்டு ஆயுதத்தைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து ”யாரது”” என்று முன்னே வந்தனர்.

”அது நான்ராப்பா”” என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி இங்கே எல்லாம் முடிந்தது. உங்கடை பக்கம் எப்படி என்றார். ”அண்ணை எங்கடை பக்கம் பிரச்சினையில்லை”” என்றார் ரஞ்சன்.

”இங்கையும் எல்லாம் முடிந்து விட்டது, ஆனால், எனக்கு சற்று முன்பாக எதிரேயிருந்த புலேந்திரனையும் சந்தோசத்தையும் காணவில்லை, வா பார்ப்போம்”” என்றவாறு தன் பிரியத்திற்குரிய பG3யை தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி.

மதிலேறிக் குதிப்பதற்குமுன் ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின் அனுமதியைப் பெற்று எதற்கும் முன்னெச்செரிக்கையாக ஓர் குண்டை வீசினான். குண்டு ட்ரக்கின் கீழ் விழுந்து வெடித்து எரிபொருள் தாங்கியை உடைத்தது.

இதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத் தாண்டி புலேந்திரன் சந்தோசத்தின் இடத்தையடைந்தான். அங்கு புலேந்திரன் சந்தோசத்தைக் காணவில்லை. ‘எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்” எனக் கட்டளையிட்டார் தம்பி. மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த மற்ற வீரன் தம்பியைப் பார்த்து ”அண்ணா அவன் அனுங்குகிறான்.” மீண்டும் ஒருமுறை முழங்கிய G3 அவனின் அனுங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இதன் பின் ட்ரக்கை நெருங்கி ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர். தம்பி எதற்கும் என்று வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை G3ஆல் எழுதிவைத்தார். Gயின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது.

இதே நேரம் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவவீரனை இன்னோர் போரளி துரத்திச் சென்று சுட்டான். ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு பொன்னம்மானும் நானும் என்னுடைய போரளிகளும் ட்ரக்கை நோக்கி நடு றோட்டால் ஓடினோம்.

”கரையால் வாருங்கள்”” என்ற குரல் எம்மை வரவேற்றது. எல்லோரும் தம்பியை சூழ்ந்துகொண்டு மகிழ்சி ஆரவாரம் செய்து கொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத் தொடங்கினோம். இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன் இறந்து கிடந்த இராணுவத்தினரின் ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ட்ரக்கின் கீழே இறந்து கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களை தேடி எடுத்துக்கொண்டான்.

இத் தாக்குதல் இரவு நேரமாதலால் எம்மையும் இராணுவத்தினரையும் பேறுபிரிக்க நாம் ஹெல்மெட்டைத் தான் குறியீடாகப் பாவித்தோம். எனவே ஹெல்மெட்டுடன் ஓர் உருவம் நகர்வதைக்கண்ட தம்பி உடனடியாக துப்பாக்கியை தயார்நிலைக்கு கொண்டு வந்து ”யாரது” என்று வினவ அம்மான் ”அது நான் தம்பி” என்றவாறு தனது தவறை உணர்ந்து ஹெல்மெட்டைக் கழற்றினார்.

பொன்னம்மானை செல்லமாக கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி பணிக்க ”அம்மானைக் காணவில்லை”” என்று விக்ரர் கத்தினான். விக்ரரும் புலேந்திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். ”டேய் அம்மானுக்கு வெடி விழுந்திட்டுது” என்ற விக்ரரின் குரல் எங்கும் எதிரேலித்தது. எல்லோரும் அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன்.

வானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்துவிட்டது.

லிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான்.

வான் புறப்படத் தொடங்க மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத் தெரிவித்தது. எமக்கு செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும் சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த வான் எமது முகாம் நோக்கி பறந்தது.

– அன்புடன் கிட்டு –

லெப் .செல்லக்கிளி, லெப்.சீலன்

முல்லைத்தள மீட்பின் போது காவியமான கடற்கரும்புலிகள் மிதுபாலன் – சயந்தன் வீரவணக்கநாள்

முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையில் 21.07.1996 அன்று வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் உட்பட்ட 12 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கை தொடங்கப்பட்டு படைத்தளத்தின் பெரும்பகுதி மீட்கப்பட்ட நிலையில் இந்நடவடிக்கையை முறியடிக்கவும், இழந்த தளத்தை மீளக் கைப்பற்றவும் சிறிலங்கா கடற்படையினரால் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட படையினரால் முல்லைத்தீவு தளம் நோக்கி பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க மேலதிக தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைக் கலங்கள் மீது கடற்புலிகளால் கடுமையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.

21.07.1996 அன்று 600 படையினருடன் அலம்பில் கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தரையிறங்கு கலத்தினை இலக்கு வைத்து கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் ஆகியோரால் தாக்குதல் நடாத்தப்பட்டது.

கரும்புலிப் படகு தரையிறங்கு கலத்தினை நெருங்கி வருவதை கண்டுகொண்ட சிறிலங்கா கடற்படையினர் ஒரு சேர கடற்கரும்புலிகளின் படகின் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர். கடற்படையின் தாக்குதலில் சிக்காதவாறு கடற்கரும்புலிகள் தமது படகினை செலுத்தி தரையிறங்கு கலத்தினை நெருங்கியவேளை எதிர்பாராதவிதமாக படகு வெடித்துச் சிதறியது.

இதனால் குறித்த தரையிறங்கு கலமும் அதில் சென்ற 600 படையினரும் மயிரிழையில் உயிர் தப்பினர்.

இக்கடற்சமர், அலம்பிலிருந்து முன்னகர்ந்த படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதல் உட்பட ஓயாத அலைகள் – 1 நடவடிக்கையில் 21.07.1996 அன்று,

கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் (வேதாரணியம் ஜெயக்காந்தன் – சங்கத்தானை, யாழ்ப்பாணம்)
கடற்கரும்புலி கப்டன் சயந்தன் (தம்பிப்பிள்ளை துரைரத்தினம் – அக்கரைப்பற்று, அம்பாறை)
மேஜர் யோகேஸ் (பூரணம் நவரட்ணகாந்தன் – கும்புறுப்பிட்டி, திருகோணமலை)
கப்டன் காயத்திரி (தர்மலிங்கம் விஜிதா – குமுழமுனை, முல்லைத்தீவு)
கப்டன் முகிலன் (மித்தன்) (ஆறுமுகம் தர்மலிங்கம் – கரடியனாறு, மட்டக்களப்பு)
கப்டன் பழனிமுத்து (அருளானந்தம் விமலதாஸ் – தாளையடி, யாழ்ப்பாணம்)
கப்டன் மறைமலை (சிற்றம்பலம் ஈழத்துநாதன் – திருகோணமலை)
லெப்டினன்ட் வைகை (முத்திராமநாதன் தவக்கொடி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஓவியா (செபஸ்ரியான்பிள்ளை பத்மசகாயகுனேந்தினி – சேந்தான்குளம், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இசையரசி (ஜோர்ச் ரூபினா – மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் இசைப்பிரியன் (சாமித்தம்பி கணேசமூர்த்தி – அக்கரைப்பற்று , அம்பாறை)
வீரவேங்கை புகழன் (கந்தசாமி சிவபாலன் கிரான், மட்டக்களப்பு)

ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதேநாளில் அம்பாறை மாவட்டம் பன்னலகமவில் அமைந்திருந்த தமது முகாமிலிருந்து மாந்தோட்டம் நோக்கி சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலின்போது,

மேஜர் ஜெமினிக்கணேசன் (அலன்) ஆறுமுகம் சிவகுமார் – கல்முனை, அம்பாறை) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடிலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

Up ↑