Search

Eelamaravar

Eelamaravar

Month

June 2012

கடற்புலிகளின் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் ,மேஜர் தசரதன் வீரவணக்க நாள்

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் 29.06.2001 அன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் முதன்மைத் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

கடற்புலிகளின் தொடக்க காலம் முதலே கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப்.கேணல் கங்கையமரன், கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடாத்தியவர்.

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த லெப்.கேணல் கங்கையமரன், 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு ஊடுருவியிருந்த சிறிலங்கா படையினரின் ஆழஊடுருவித் தாக்கும் படைப்பிரிவினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

இத்தாக்குதலின்போது மேஜர் தசரதன் (தசா) (சந்திரன் சுபாகரன் – கீரிமலை, யாழ்ப்பாணம்) என்ற போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.

கடற்கரும்புலி மேஜர் பாலன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் வீரவணக்க நாள்

திருமலைக் கடற்பரப்பில் 28.06.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற படகு விபத்தின்போது, வீரச்சாவைத் தழுவிய ஆறு மாவீரர்களினதும் இதன்போது படையினரால் கைது செய்யப்பட்டு, தற்கொடை செய்த கடற்கரும்புலி மேஜர் பாலனினதும் வீரவணக்க நாள் இன்றாகும்.

தென்தமிழீழத்திலிருந்து போராளிகள் படகுகள் மூலம் வன்னிக்கு வந்து கொண்டிருந்தபோது, சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டது. இதன்போது ஒரு விபத்திற்குள்ளாது. படகு விபத்தைத் தொடர்ந்து நீந்திக் கரையையடைந்த கடற்கரும்புலி மேஜர் பாலன் மயங்கிய நிலையில் படையினரால் கைது செய்யப்பட்டார்.

படையினரின் தடுப்பில் இருந்த இவர் தன்னிடமுள்ள போராட்ட இரகசியங்களைப் படையிரினர் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக தனது நாக்கினை பற்களினால் தறித்துக் கொண்டார்.

பின்னர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தன்னை படுக்க வைக்கப்பட்டிருந்த கட்டிலில் தொடர்ச்சியாக தனது தலையை மோதி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

இவருடன் பயணித்து படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் விபரம்:

கப்டன் தும்பன் (இளையதம்பி லிங்கேஸ்வரன் – யாழ்ப்பாணம்)

கப்டன் மேனகன் (குலவீரசுந்தரம் குலசேகரம் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் உத்தமன் (பொன்னுத்துரை அருமைத்துரை – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சுந்தரவதனி (கதிர்காமர் ஜெயவதனி – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் ஆதனா (செல்வரத்தினம் சந்திரமலர் – ஜெயபுரம், கிளிநொச்சி)

வீரவேங்கை ஆபனா (தேவரத்தினம் சந்திரமலர் – ஜெயபுரம் கிளிநொச்சி)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்து நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.

கடற்கரும்புலி மேஜர் பாலன் தொடர்பான பதிவு

போராட்ட வரலாறுகளில் சில வீரமரணங்கள் வரலாற்று பக்கங்களில் ஆச்சரியத்தை கொடுப்பவை.அப்படி ஒரு பக்கத்தில் தனக்கான பதிவை இட்டுசென்ற ஒரு போராளி பற்றிய பதிவு இது.

யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமாகி போனது இந்த பதிவு .

எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் புலிகள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருப்பதன் காரணம் கூட இது தான்.

அப்படியாக இருந்தும் எதிரியிடம் சரணடைந்தும் பிடிபட்ட சம்பவங்களும் இருக்கத்தான் செய்கின்றன். அவற்றில் சில தவிர்க்கமுடியாத களசூழலில் எடுக்கப்படுவதுடன். சில இராஜதந்திர நகர்வுகளுக்காகவும் எடுக்கப்படுவதுண்டு. இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான்.

1997 ஆணி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் சில போராளிகள் வருகிறார்கள்.கடமை நிமித்தம் இடம்பெறும் சாதாரண படகு பயணங்கள் போல தான் இதுவும் இருந்தது.

அதுவும் இது ஒரு இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற ஒரு சாதாரண பயணம். பயணத்தின் போது எமது படகு திருகோணமலை துறைமுகத்தை தாண்டி நகரும்போது எதிரியின் கண்காணிப்பில அகப்பட்டுவிடாது அவனது கண்களில் மண்ணைத்துாவி தப்பி வருவதும் உண்டு.

சிலவேளைகளில் அவனது கைகளில் சிக்கி களமுனை ஒன்றை அங்கு திறந்தே மேற்கொண்டு நகரும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. இன்றும் அப்படி தான் அந்த கண்காணிப்பு எல்லையை தொட்டநேரம் எமது படகு எதிரியின் விசைப்படகின் கண்களுக்குள் அகப்பட்டுவிட, அது அவனது மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி படகு சேதமடைகிறது.

அதில வந்த போராளிகள் கடலில் குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். எல்லோரும் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்துவிட்டனர். அதில் ஒருவன் தான் இந்த பாலன். கடற்கரும்புலி அணியைச் சேர்ந்தவன். ஒரு நடவடிக்கை நிமித்தம் இவனது நகர்வு அங்கு இடம்பெற்றிருந்தது.

இரவிரவாக நீண்டதூரம் நீந்தி “இறக்ககண்டி” எனுமிடத்திற் கரைசேர்கிறான் பாலன். விடிந்துவிட்டது. கரையில் சோர்வினால் மயங்கிப்போன நிலையில் சிலரால் காட்டிக் கொடுக்கப்பட்டு இராணுவத்தாற் கைதாகிறான். காட்டிக் கொடுப்புகளால் போராட்டம் பல அழிவுகளை சந்தித்தது போன்றே இங்கும் இவனது கைதும் இடம்பெற்றது.

இராணுவ முகாமில் கண்விழித்த பாலனுக்கு அப்போதுதான் தாம் கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கழுத்தில் குப்பியில்லை. எதிரியிடம் அகப்பட்டு விட்டோம். மேற்கொண்டு அவனது சிந்தனைகள் பலவாறு சுழன்றடித்தது.

என்ன செய்வது,என்னை விசாரணைக்கு உடபடுத்தும் பட்சத்தில் அது நிச்சயம் சித்திரவதையாக இருக்கப்போவது உறுதி. அதில் இரகசியங்கள் வெளியேிடப்படாது காப்பாற்றப்பட வேண்டும். என்னை தவிர்த்து இந்த நடவடிக்கைக்கு வேறு ஒருவனாவது பயன்படலாம் அல்லவா. இப்படியாக அவனது சிந்தனைகள் பலவாறு சிந்திக்க தொடங்கியது.

அதுவும் பாலன் கடற்கரும்புலி அணியாதலால் நிறைய விசயங்கள் தெரிந்திருந்தான்.தன்னிடம் இருந்து இரகசியங்கள் வெளியேறாது இருப்பதானால் தன்னை தானே அழித்து கொள்ளவேண்டும்.

இங்கு தன்னை மாய்த்துக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று முயன்றான். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தான் அவன். இன்னும் சிறிது நேரத்தில் ‘விசாரணை’ தொடங்கப் போகிறது. எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த நேரத்தில் தான் அவன் அந்த அசாதாரணமான முடிவையெடுத்தான்.

“தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான்” . நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான் அவன்.

மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். இன்னும் தனக்கான ஆபத்து விட்டுவிடவில்லை என்பதும் எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான்.

ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். பலவாறு முயற்சித்து முயற்சித்து இறுதியில் தான் அவன் அந்த முடிவையெடுத்தான்.

நினைத்தும் பார்க்க முடியாதது அது. “ தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி, தன்னுடைய மண்டையுடைத்து தனக்கான தற்கொடை மரணத்தை அவன் அங்கு தேடிக்கொண்டான்.

ஒரு மோதலுக்குப் பின்னும் சாகும்வரை தொடர்ந்து தன் தலையைக் கட்டிலின்மேல் மோதுமளவுக்கு அவனுக்குத் துணிவும் வைராக்கியமும் இருந்தது, ஒரு துளி நீர் கூட வாயில் வைக்காமல் 12 நாட்கள் இருந்து அணுவணுவாகச் தன்னைத்தானே சாகடித்த திலீபனைப் போல. (பாலனது இயற்பெயர்கூட திலீபன் தான்.) அவனது வீரமரணமும் போராட்ட வரலாற்றில் ஒரு தனி பதிவாக ஆகிப்போனது.

மண்டைதீவு படைத்தள தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் சூட்டி உட்பட்ட 8 மாவீரர்களின் வீரவணக்க நாள்

28.06.1995 அன்று மண்டைதீவு படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சூட்டி உட்பட்ட 8 மாவீரர்களின்  வீரவணக்க நாள் இன்றாகும்.

தேசியத் தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் கடற்புலிகளின் துணையுடன் மண்டைதீவில் தரையிறங்கிய விடுதலைப் புலிகளின் படையணிகள் அங்கிருந்த சிறிலங்கா படைத்தளத்தைத் குறுகிய நேரத்தில் தாக்கியழித்து சிறிலங்கா படையினருக்கு பேரிழப்பை ஏற்படுத்தினர்.

300ற்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பல நூறு படையினர் படுகாயமடைந்த இத்தாக்குதலின்போது பெருமளவான ஆயுத தளபாடங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

இவ்வெற்றிகரத் தாக்குதலின்போது

லெப்.கேணல் சூட்டி (தம்பிமுத்து கோவிந்தராஜன் – அம்பாறை)
மேஜர் தமிழ்மாறன் (கஜேந்திரன்) (அரசரட்ணம் பாலகிருஸ்ணன் – தோப்பூர், திருகோணமலை)
கப்டன் மாறன் (குணநாயகம் குலேந்திரன் – அல்வாய், யாழ்ப்பாணம்)
கப்டன் எழிற்செல்வன் (ஜவான்) (செல்லப்பு தயாபரன் – புத்தூர், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அகிலன் (அருச்சுனன் சிவரதன் – பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் உதயா (கந்தையா சித்திரகுமாரி – கண்டி, சிறிலங்கா)
2ம் லெப்டினன்ட் இசையழகன் (கிறிஸ்ரி) (கந்தையா கணேசமுர்த்தி – வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை பாமினி (சின்னவன் நகுலேஸ்வரி – புத்தூர், யாழ்ப்பாணம்)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் கில்மன் வீரவணக்க நாள்

திருகோணமலை மாவட்டத்தில் 28.06.1995 அன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் காந்தன் (கில்மன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின்  வீரவணக்க நாள் இன்றாகும்.

திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆளுகையை வலுப்படுத்தும் நோக்கில் 1995ம் ஆண்டில் சாள்ஸ் அன்ரனி படையணி லெப்.கேணல் கில்மன் தலைமையில் தேசியத் தலைவர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டது.

பல்வேறு நெருக்கடிகளிற்கு மத்தியில் காட்டுப்பகுதிகளில் வலுவான தளங்களையமைத்துடன் சிறிலங்கா படையினர் மீதும் பல அதிடித் தாக்குதல்களை நடாத்தப்பட்டு சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் சாள்ஸ் அன்ரனி படையினரால் ஏற்படுத்தப்பட்டது.

காட்டுப்பகுதியில் நிலை கொண்டிருந்த விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்காக சிறிலங்கா படை உயர் தளபதிகளின் திட்டமிடலில் ”ராமசக்தி – 03” பெயரில் திரியாய் காட்டுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கை விடுதலைப் புலிகள் தரப்பில் இழப்புக்கள் ஏதுமின்றி முறியடிக்கப்பட்டது.

அந்நடவடிக்கையை வழிநடாத்திய கேணல் காமினி பெர்னாண்டோ உட்பட பல படையினர் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்துமிருந்தனர். இதனைத் தொடர்ந்து சிறிலங்கா படையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகள் அனைத்து சாள்ஸ் அன்ரனி படையணியால் முறியடிக்கப்பட்டன.

படை நடவடிக்கை முறியடிப்பு, வலிந்த தாக்குதல் நடவடிக்கையென அனைத்தையும் வெற்றிகரமாக வழிநடாத்திய தளபதி லெப்.கேணல் கில்மன் திருமலை மாவட்டத்தில் இழக்கப்பட்டு வந்த விடுதலைப் புலிகளின் ஆளுகையை வலுப்படுத்தியதுடன் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேலும் விரிவடையாது படையினர் மீதான தாக்குதல்கள் மூலம் கட்டுப்படுத்தினார்.

இந்நிலையில் 28.06.1995 அன்று திருமலை முதன்மைச் சாலையில் வைத்து சிறிலங்கா படை உயர் தளபதி ஒருவர் மீதான பதுங்கித் தாக்குதலுக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கு ஏற்பட்ட வெடிவிபத்தில் மேலும் இரு போராளிகளுடன் லெப்.கேணல் கில்மன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

லெப்.கேணல் கில்மன் தமிழீழ விடுதலைப் புலிகளின் புகழ்பூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் தீபன் அவர்களின் உடன்பிறப்பு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

லெப்.கேணல் கில்மன் அவர்களுடன் இவ்வெடிவிபத்தில்,

மேஜர் வரன் (கலைவாணன்) (நாகராசா தவரத்தினராசா – முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு)

லெப்டினன்ட் அன்பன் (அழகன்) (நடராசா சிறிக்குமார் – செட்டிக்குளம், வவுனியா)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.

ரணகோச நடவடிக்கை முறியடிப்பில் காவியமான 75 மாவீரர்களின் வீரவணக்க நாள்

26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் “ரணகோச” நடவடிக்கை மூலம் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முற்றுகைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் ஐயன் மற்றும் லெப்.கேணல் தணிகைச்செல்வி உட்பட்ட 75 மாவீரர்களின்  நினைவு நாள் இன்றாகும்.

தம்மைச் சுற்றிவளைத்து சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த பாரிய முற்றுகை நடவடிக்கையை எதிர்த்து தீரமுடன் களமாடிய விடுதலைப் புலிகளின் படையணிகள் பல மணிநேரச் சமரின் பின் படை முற்றுகையை முறியடித்தனர்.

இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பலநூறுபேர் படுகாயமடைந்தனர்.

சிறிலங்கா படையினரின் இந்த வல்வளைப்பு முயற்சிக்கு எதிராக தீரமுடன் களமாடி 75 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு

லெப்.கேணல் ஐயன் (சூரியகாந்தி உதயசூரியன் – யாழ்ப்பாணம்)
லெப்.கேணல் தணிகைச்செல்வி (சுப்பிரமணியம் சத்தியதேவி – யாழ்ப்பாணம்)
மேஜர் தேன்மொழி (டிலானி) (தில்லைநாயகம் யூடிஸ்ராதிலகம் – யாழ்ப்பாணம்)
மேஜர் யாழிசை (பரராஜசிங்கம் மங்கையற்கரசி – யாழ்ப்பாணம்)
மேஜர் கலைமகள் (இராமலிங்கம் பிருந்தா – யாழ்ப்பாணம்)
மேஜர் ராஜன் (மரியநேசன் அன்ரூமாட்டின் – யாழ்ப்பாணம்)
மேஜர் செழியன் (கிருஸ்ணபிள்ளை சத்தியநாதன் – யாழ்ப்பாணம்)
மேஜர் வதனன் (சபாரத்தினம் சந்திரகுமார் – வவுனியா)
கப்டன் பைந்தமிழினி (நாகலிஙகம் மாலாதேவி – முல்லைத்தீவு)
கப்டன் ரஜனி (கந்தையா மஞ்சுளாதேவி – யாழ்ப்பாணம்)
கப்டன் யசோ (வேலு ராஜலக்சுமி – யாழ்ப்பாணம்)
கப்டன் மென்குழலி (அமுதம்) (தங்கவேலு புஸ்பலதா – முல்லைத்தீவு)
கப்டன் சுதன் (நாதன் சண்முகவரதன் – யாழ்ப்பாணம்)
கப்டன் செல்வந்தன் (இசிதோர் யூலியஸ் – மன்னார்)
கப்டன் ரஜீவன் (வெள்ளைச்சாமி நாகராசா – வவுனியா)
கப்டன் காவினியன் (கலைமேகன்) (இராசரத்தினம் ரஜிந்தன் – யாழ்ப்பாணம்)
கப்டன் கனகசுந்தரம் (கனகராஜ்) (வேலுப்பிள்ளை விமலேஸ்வரன் – மட்டக்களப்பு)
கப்டன் தமிழேந்தி (வில்லியம் றொசான் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் குமாரன் (இராசு தனபாலசிங்கம் – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் சாந்தி (கிருஸ்ணசாமி சசிரேகா – கிளிநொச்சி)
லெப்டினன்ட் கலா (எழிலரசி) (வேலாயும் லீலாதேவி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் சதா (செல்வராசா சிவமலர் – வவுனியா)
லெப்டினன்ட் உசா (திருச்செல்வம் நிரோயினி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கீதாஞ்சலி (வீரசிங்கம் கவிதா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இளங்கோவன் (சிவராசா விக்கினேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் மருதநம்பி (கிருஸ்ணமூர்த்தி வதனரூபன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் புரட்சிக்காவலன் (பாலசுப்பிரமணியம் ராஜகௌசர் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சிறிகுந்தன் (தங்கராசா இராசேந்திரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் இசைவாணி (ஈழரசி) (மரியதாஸ் தேவஅருள்ரஞ்சிதமலர் – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் வாணி (மகேஸ்வரன் யசோதரை – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் கலைச்செல்வி (முத்துச்சாமி ரஜினா – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அன்பினி (கோபாலரத்தினம் உதயவாணி – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் கண்ணகி (எட்மன் மோகனா – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் சுவர்ணா (பாடினி) (பொன்னையா தனலட்சுமி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் பிரியங்கா (வனஜா) (சுந்தரலிங்கம் சுலக்சனா – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அன்பழகி (சண்முககேசரம்பிள்ளை யாழினி – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் சிறிபரன் (கந்தையா ஞானப்பிரகாசம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அகப்பாலவன் (கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் அகலையன் (யோகராசா யோகேஸ்வரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் புரட்சிநெறியன் (சின்னத்துரை சத்திவேல் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சொக்கன் (பூவண்ணன் சாந்தன் – மன்னார்)
வீரவேங்கை கதிர்நிலவன் (கிருஸ்ணசாமி மாரியப்பன் – வவுனியா)
வீரவேங்கை சிந்துஜா (ஏபிரகாம் பிலோமினா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை நிரோயினி (பெனடிக்ற் ஜஸ்மின் – கிளிநொச்சி)
வீரவேங்கை கோமளா (தவசி தவப்புதல்வி – முல்லைத்தீவு)
வீரவேங்கை இசைவாணி (சிவஞானசுந்தரம் சிவாஜினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தமிழரசி (ஐயாத்துரை யோகேஸ்வரி – முல்லைத்தீவு)
வீரவேங்கை அருணா (தியாகினி) (மயில்வாகனம் பிரியதர்சினி – கிளிநொச்சி)
வீரவேங்கை வித்தியா (பெருமாள் நாகேஸ்வரி – வவுனியா)
வீரவேங்கை பாமா (கவி) (பாலசிங்கம் சிவராணி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பாமகள் (சுடரவள்) (சிவசுப்பிரமணியம் சந்திரமதி – மன்னார்)
வீரவேங்கை இன்விழி (வடிவேல் சிவனேஸ்வரி – கிளிநொச்சி)
வீரவேங்கை சுடரொளி (அஞ்சப்பு சிவகுலரஞ்சினி – கிளிநொச்சி)
வீரவேங்கை மாங்குயில் (மிர்ணா) (செல்வன் ரஜனி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மலரினி (அமுதினி) (ஆறுமுகம் யோகேஸ்வரி – முல்லைத்தீவு)
வீரவேங்கை காந்தி (சிற்றம்பபலம் புனிதமலர் – முல்லைத்தீவு)
வீரவேங்கை யாழினி (சிந்துஜா) (செல்லத்துரை காந்தரூபி – முல்லைத்தீவு)
வீரவேங்கை புலிமகள் (செல்லத்துரை சுரேக்கா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கலையரசி (இளவரசி) (வைத்தியலிங்கம் மிதுலா – மன்னார்)
வீரவேங்கை வினிதா (தவராசா றஜிதா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பவப்பிரியா (பரஞ்சோதி சிவதர்சினி – மட்டக்களப்பு)
வீரவேங்கை மித்திரா (கவி) (இராசநாயகம் மரியகுணகுந்தா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை இசைவேங்கை (யேசுராசா மேரிதயானி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ரூபிகா (மகாதேவன் ஜீவந்தினி – முல்லைத்தீவு)
வீரவேங்கை கலைச்செல்வி (சுதா) (டேவிற் மேரிசுகிதா – முல்லைத்தீவு)
வீரவேங்கை அருமைநிலா (சிவராசா சிவறஞ்சினி – முல்லைத்தீவு)
வீரவேங்கை சாளினி (சாளி) (குருசாமி தயாளினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ஜெயகீதா (முருகேசு பிறேமலதா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வசந்தி (அப்துல்கரீம் கற்பகரூபவதி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அகநிலா (வல்லிபுரம் யோகராணி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை உதயா (சோமசுந்தரம் கவிதா – திருகோணமலை)
வீரவேங்கை திருமலர் (வேலுப்பிள்ளை சிவமலர் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சாவித்திரி (இளவரசி (வைத்தியலிங்கம் தவமதி – முல்லைத்தீவு)
வீரவேங்கை தவநிதா (சியாமளா) (நாகராசா இசையரசி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அருமலர் (தவராசா தயானா – முல்லைத்தீவு)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

உகண கப்பல் மீதான தாக்குதல் கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள்

[maj_santhana2.jpg]

[maj_santhana.gif]26- 06- 2000

அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது, தனது நீண்டநாள் கனவு, இலட்சியம் இம்முறை எந்தத் தடையும் இன்றி வெற்றியடையும் என்று. அந்த நம்பிக்கையின் நிறைவோடு தன்னைப் பெற்றவளை, தன் உறவுகளை இறுதியாக ஒரு தடவை பார்த்துவிட்டு வருவதற்காய் வீடு செல்கிறாள்.“அடிக்கடி வீட்டை வா மோனை” என்று கூறிய தன் தாயிடம் சொல்கிறாள் “கிட்டடியில வந்திடுவன் அம்மா” அவள் கூறியதன் அர்த்தம் புரியாது கண்ணீரோடு கட்டியணைத்து முத்தமிட்டு விடைகொடுக்கின்றாள் அந்தத் தாய். இன்னும் சில நாட்களில் நிழற்படமாகத்தான் தன் மகள் தன்னிடம் வரப்போகிறாள் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை அத்தாயுள்ளம்.

ஒல்லியான தோற்றம், எப்போதும் முகத்தில் இனிய புன்னகை இவள்தான் மேஜர் சந்தனா. தனது இனத்தின் விடுதலை வேண்டிப் போராடப் புறப்பட்ட ஆயிரம் ஆயிரம் வீராங்கனைகளில் இவளும் ஒருத்தி. மகளிர் படையணியில் இருந்து 1995ஆம் ஆண்டு தலைவரின் அனுமதியுடன், கரும்புலிக் கனவுகளுடன் தன்னை கடற்புலிகளின் அணியில் இணைத்துக்கொண்டாள். கரும்புலி அணிகளுக்கான விசேட பயிற்சிகளை முடித்துக் கொண்டு எதிரியின் இலக்குகளைத் தேடத் தொடங்கினாள். எதிரியின் அதிஸ்ரம், அவள் வெடி மருந்து நிரம்பிய படகுடன் கடலில் இறங்கும் போதெல்லாம் அவன் தப்பிப் பிழைத்துச் சென்றுகொண்டிருந்தான். சந்தனா கூட அடிக்கடி கூறுவாள் “என்ர படகு கடலுக்க நிக்குதெண்டு நேவிக்காரனுக்குக்கூடத் தெரியும் அதுதான் உயரவாப் போறான்” என்று.

தன் நகைச்சுவைப் பேச்சால் அனைவரது உள்ளங்களிலும் குடிகொண்டிருந்த சந்தனா, தன் இறுதிக் கணங்கள் வரைகூட எந்தவித மாற்றங்களுமின்றி அதே சிரிப்பு, அதே நகைச்சுவைப் பேச்சு என கலகலப்பாகவே இருந்தாள். அவளது இறுதித் தாக்குதலுக்காக படகை கடலில் இறக்கும் போது தன் சக போராளியிடம் தனது புதிய காலணியை கழற்றிக் கொடுத்து விட்டு “நான் திரும்பி வரமாட்டன்” இதை நீ வைச்சிரு என்று கூறிவிட்டு மறுநிமிடமே தனது குறும்புத் தனத்துடன் சொன்னாள் “திரும்பி வந்தா குறைநினைக்காமல் கழட்டித் தா” என்று. அந்த இறுதிக் கணப்பொழுதிற்கூட மற்றவர்களைச் சிரிக்க வைத்து மகிழ்ந்தாள் சந்தனா.

26- 06- 2000 அன்று யாழ் குடா படைகளுக்குரிய ஆயுதங்கள், வெடிபொருட்கள், உணவுப் பொருட்கள் என்பவற்றை ஏற்றிக்கொண்டு கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி வந்துகொண்டிருந்தது ‘உகண’ கப்பல். கடற்புலிகளது சண்டைப்படகுகளும், கரும்புலிப்படகுகளும் கடலில் களமிறங்கின. கடற்படையின் இரு பீரங்கிப் படகுகள் மற்றும் 6 டோராப் படகுகள் சகிதம் பாதுகாப்பாக வந்தது ‘உகண’ கப்பல். பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து 55 கடல்மைல் தொலைவில் வைத்து கடற் புலிகளால் வழிமறிக்கப்பட்டு கடும் சமர் வெடித்தது. சமர் நடுவே லாவகமாக உள் நுழைந்த கரும்புலிப் படகுகள் உகண கப்பலுடன் மோதி வெடிக்க, உகண முற்றாக எரிந்து கடலில் மூழ்கியது. 10 கடற்படையினர் பலியாக கடற்படையினரின் டோராவும் சேதமாகிப்போனது.

மேஜர் சந்தனாவுடன், கடற்கரும்புலிகளான லெப். கேணல் ஞானக்குமார். மேஜர் சூரன், மேஜர் நல்லப்பன், கப்டன் இளமதி, கப்டன் பாமினி ஆகிய 5 காவிய நாயகர்களும் கடலில் சங்கமமாகினர்.


photo190photo193
photo194
photo195
photo191
photo192

*****************
2 ம் லெப்.வனஜா/பிரியங்கா அவர்களின் வீரவணக்க நாள்

26 .06 .1999 ம் ஆண்டு மன்னார் பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய வல்வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது வீரச்சாவினை தழுவிக்கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவற்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துகின்றோம்.

பெரியமடு ஊடறுப்புத்தாக்குதலில் வீரச்சாவடைந்த 84 மாவீரர்களின் வீரவணக்க நாள்

பெரியமடுப் பகுதியில் 24.06.1997 அன்று ஜெயசிக்குறு நடடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 2வது ஊடறுப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தனம்(ஐங்கரன்) உட்பட்ட 84 மாவீரர்களினதும் நினைவு நாள் இன்றாகும்.

இதேநாளில் ஜெயசிக்குறு படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில்களில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மேலும் 9 மாவீரர்களினதும் 15ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

ஜெயசிக்குறு படைநடவடிக்கை மூலம் முன்னேறி பெரியமடுப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினரால் அமைக்கப்பட்டிருந்த ஆட்டிலறி, மோட்டார் ஏவுதளங்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் படையணிகளால் 24.06.1997 அன்று ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது.

இத்தாக்குதலில் பல நூற்றுக் கணக்கான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் படுகாயமடைந்தனர். இதன்போது 120மி.மீ ஆட்டிலறி பீரங்கி உட்பட பெருமளவான ஆயுத தளபாடங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

இந்த வெற்றிகரத் தாக்குதலில் லெப்.கேணல் தனம் அவர்களுடன் 83 போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.

இதேநாளில் வவுனியா மாவட்டம் புளியங்குளம், பகுதியிலும் பனிக்கநீராவியடிப் பகுதியிலும் ஜெயசிக்குறு படையினருடன் இடம்பெற்ற எதிர்பாராத மோதல்களில் 9 போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கம்.

பெரியமடு ஆட்டிலறி – மோட்டார் ஏவுதளங்கள் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின் விபரங்கள்.

லெப்.கேணல் தனம் (ஐங்கரன்), நாகலிங்கம் யோகராஜ், கேப்பாப்புலவு, முல்லைத்தீவு

மேஜர் சிவதீபன் (திருமகன்), பாக்கியராஜா புலேந்திரராஜா கதிரவெளி, மட்டக்களப்பு

மேஜர் துளசி (இராமலிங்கம் குகபாலிகா) காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்

மேஜர் ரதி (சாமித்தம்பி தேவி) சந்திவெளி, மட்டக்களப்பு

மேஜர் இந்திரா (இராமு சித்திராதேவி) இறம்பைக்குளம், வவுனியா

மேஜர் கோகுலநாதன் (சாந்தன்), சூசையா பயஸ், கல்லடி, மட்டக்களப்பு

மேஜர் விமல் (நிமல்) பத்திநாதன்பீரிஸ் விமல்பீரிஸ், பேசாலை, மன்னார்

மேஜர் விவேகன் (சந்திரபிரபா) யோகராசா தில்லைநாதன், பெரியபேரதீவு, மட்டக்களப்பு

மேஜர் ஈழமூர்த்தி (வரதராஜ்) அன்பழகன் துஸ்யந்தன் , செங்கலடி, மட்டக்களப்பு

கப்டன் அன்பரசி (இராஜரட்ணம் ரஜனி) மானிப்பாய், யாழ்ப்பாணம்

கப்டன் பவளம் (விக்னேஸ்வரராஜா கேமலதா), மானிப்பாய், யாழ்ப்பாணம்

கப்டன் இந்திராணி (கந்தையா புஸ்பராணி ), புளியங்குளம், வவுனியா

கப்டன் அறிவுமாறன் (அரி) (கந்தையா சுதாகரன்), தர்மபுரம், கிளிநொச்சி

கப்டன் பெரியதம்பி (முகுந்தன்) தியாகரராஜா நிதிராஜா, அல்வாய், யாழ்ப்பாணம்

கப்டன் பரமலிங்கம் (நடராஜா ராஜரஞ்சித்) , பொத்துவில், அம்பாறை

கப்டன் பூலோகன் ( இராமநாதன் பரமசிவம்) கொடிகாமம், யாழ்ப்பாணம்

கப்டன் ஜெயச்சந்திரன் (சிதம்பரப்பிள்ளை சிவநாதன்), மாங்குளம், முல்லைத்தீவு

கப்டன் அனார்தன் (சுஜி) நாகமணி கோபாலரத்தினம், கோவில்போரதீவு, மட்டக்களப்பு

கப்டன் லீலாகரன் (ரவி) செல்வராசா ரவீந்திரன், வெல்லாவெளி, மட்டக்களப்பு

கப்டன் மதனரூபன் (சோமசுந்தரம் இசைச்செல்வன்), கல்லடி, மட்டக்களப்பு

கப்டன் புதியவள் (லோகிதாஸ் சாந்தமீனா), மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்

கப்டன் அன்பு (தங்கராசா மகேஸ்வரி) உருத்திரபுரம், கிளிநொச்சி

கப்டன் நித்திலா (சுபைதா), ( கனகலிங்கம் தர்சனி), அரியாலை, யாழ்ப்பாணம்

கப்டன் தமயா ( விஸ்வலிங்கம் சித்திராதேவி) ,முத்தையன்கட்டு, முல்லைத்தீவு

கப்டன் கலை (இரத்தினம் ராஜகுமாரி), சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்

கப்டன் திவ்யா ( இராமலிங்கம் தேவகி), பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் கீர்த்திராஜ், (யோகநாதன் புஸ்பநாதன்), கொம்மாதுறை, மட்டக்களப்பு

லெப்டினன்ட் சுரேஸ் (சுந்தரலிங்கம் சந்திரசேகர்), செங்கலடி, மட்டக்களப்பு

லெப்டினன்ட் சக்கரபாண்டி (நிதர்சராஜ்), வீரக்குட்டி பிரகலாதன், கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு

லெப்டினன்ட் கேதீஸ்வரராஜ் (குமாரசாமி குலசிங்கம் ) மட்டக்களப்பு

லெப்டினன்ட் உதயமூர்த்தி (நாகையா அசோக்குமார் ), மட்டக்களப்பு

லெப்டினன்ட் உதயவன் (குகராசா ரவீந்திராஜா), பெரியபோரதீவு, மட்டக்களப்பு

லெப்டினன்ட் கனகமுகன் (கோபாலசிங்கம் நிர்மலன்), மட்டக்களப்பு

லெப்டினன்ட் பௌணராஜ் ( சீனித்தம்பி ஜெகன்), ஏறாவூர், மட்டக்களப்பு

லெப்டினன்ட் பொன்னப்பன் (நாகமணி கேந்திரமூர்த்தி), காக்காச்சிவெட்டை, மட்டக்களப்பு

லெப்டினன்ட் கமண்டலன் (நடராசா யோகராசா), ஏறாவூர், மட்டக்களப்பு

லெப்டினன்ட் (பரமேஸ் கவிதா ), கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு

லெப்டினன்ட் ஆரணி ( கறுப்பையா அமுதவல்லி ) பெரியகுளம், வவுனியா

லெப்டினன்ட் நிரஞ்சனா (சின்னையா லோஜினி), சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் நித்தியா (திரவியம் அமுதினி), கோப்பாய், யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் யோகமதி (ஜெயமதி) இரத்தினம் வதனி, அச்சுவேலி, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் நந்தா (கணபதிப்பிள்ளை குலரஞ்சிதம்), வேலணை, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் சுயந்தன் ( பழனியாண்டி சங்கர்), புளியங்குளம், வவுனியா

லெப்டினன்ட் ஈழவண்ணன் (கேசவன் வாமதேவன்), மாத்தளை, கண்டி

லெப்டினன்ட் ஈழமாறன் (செல்வன் செல்வச்சந்திரன்), தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் மித்திரன் (செல்லத்துரை சுரேஸ்குமார்), மூதூர், திருகோணமலை

லெப்டினன்ட் இயல்வாணன் (தியாகராசா சிறிகாந்தன்), இரத்தினபுரம், கிளிநொச்சி

லெப்டினன்ட் ஈசன் (வேலு ரவி), நொச்சிக்குளம், வவுனியா

லெப்டினன்ட் அப்பன் (காந்தி) முருகுப்பிள்ளை சிறிபஞ்சநாதன், சித்தங்கேணி, யாழ்ப்பாணம்,

லெப்டினன்ட் சிவநேசன் (சிவகணேசன்) பொன்னுத்துரை கிருபாகரன், சுழிபுரம், யாழ்ப்பாணம்

2ம் லெப்டினன்ட் இசைமொழி, சித்திரவேல் மோகன், கதிரவெளி, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் குமரலிங்கம், தங்கராசா சிவலிங்கம், கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் கதிரன் (உருத்திரமூர்த்தி கரிகாலன்), கொக்குவில், மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் ரஜனி (ராஜன்) கணேஸ் புனிதரூபன், இருதயபுரம், மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் தர்மதேவன் (கந்தசாமி சசிகரன்), செங்கலடி, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் புவிதாசன் (ஆறுமுகம் ரஞ்சன்), வாழைச்சேனை, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் திருமேனி (மகேசன் ரஜினிகாந்), நாவலடி, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் குருகுலன் (நல்லதம்பி பாஸ்குமாரன்), கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் வரோதயன் ( மோகனசுந்தரம் தேவராஜ் ), ஆரையம்பதி, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் ஜெயப்பிரியா (நித்தியானந்தன் செல்வானந்தி), நல்லூர், யாழ்ப்பாணம்

2ம் லெப்டினன்ட் பரிமளா ( அழகுதுரை கோமதி), சம்பூர், திருகோணமலை

2ம் லெப்டினன்ட் யாழமுது (யாழரசி) கடம்பேஸ்ரன் வசந்தமலர், ஜெயந்திநகர், கிளிநொச்சி

2ம் லெப்டினன்ட் ஈழநிலா ( ஐயாத்துரை றேணுகாதேவி), ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு

2ம் லெப்டினன்ட் இளம்பிறை ( சிவலிங்கம் மகேந்திரன்), கொம்மாதுறை, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் குலோத்துங்கன் (கனகலிங்கம் சுலேந்திரகுமார்), திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

2ம் லெப்டினன்ட் சரவணன் (சுப்பிரமணியம் கருணாகரன்), திருகோணமலை

வீரவேங்கை ஜெயாதுயிலன்( இராஜகோபால் கரிகிஸ்ணன்) திருக்கோவில், அம்பாறை

வீரவேங்கை சகாதேவன்( ஏரம்புமூர்த்தி மேகநாதன்) பேத்தாளை, மட்டக்களப்பு

வீரவேங்கை ஜெயானந்தன் (சித்திரவேல் ஜெயக்குமார்), வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரவேங்கை இன்பன் (நவரட்ணம் சுபானந்தம்), கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரவேங்கை நீலரட்ணம் ( விநாயகப்பிள்ளை யோகராசா), கிரான், மட்டக்களப்பு

வீரவேங்கை லோகதாசன் (கண்ணப்பன் சந்திரமோகன்), செங்கலடி, மட்டக்களப்பு

வீரவேங்கை வேணுகோபன் (வல்லிபுரம் குணரட்ணம்), தாளங்குடா, மட்டக்களப்பு

வீரவேங்கை சண்முகதாஸ் ( ஐயாத்துரை சந்திரகுமார்), கரடியனாறு, மட்டக்களப்பு

வீரவேங்கை நன்மாறன் ( பொன்னுத்துரை யமுனாநந்தன்), வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரவேங்கை ரட்ணேஸ்வரன் ( யோகராசா செந்தில்நாதன் ), பெரியபோரதீவு, மட்டக்களப்பு

வீரவேங்கை சுபத்தனன் (இளையதம்பி விநாசித்தம்பி), வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரவேங்கை முரளீஸ்வரன் (இராசசிங்கம் பவளசிங்கம் ) களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு

வீரவேங்கை சம்மந்தக்குமார் (பொன்னம்பலம் சிவகுமார்), கன்னங்குடா, மட்டக்களப்பு

வீரவேங்கை வசந்தா (முத்துரட்ணம் ரஜனி) மூதூர், திருகோணமலை

வீரவேங்கை திருச்செல்வி (சண்முகராசா ரமா), முத்தையன்கட்டு, முல்லைத்தீவு

வீரவேங்கை செம்பருத்தி (கௌரியாப்பிள்ளை அருள்ரஞ்சனி), கட்டைக்காடு, யாழ்ப்பாணம்

வீரவேங்கை இன்னழகன் (சின்னராசா சிவசண்முகம்), புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

இதேநாள் பனிக்கநீராவியடிப் பகுதியில் ஜெயசிக்குறு படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிய மாவீரரின் விபரம்.

மேஜர் தயாபரன் (கதிர்வேல் கிருஸ்ணகுமார்) உருத்திரபுரம், கிளிநொச்சி

புளியங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின் விபரங்கள்.

மேஜர் சிவகுரு சந்திரன் அருளாநந்தன், மானிப்பாய், யாழ்ப்பாணம்

கப்டன் சிந்தையன், செல்லையா சௌந்தரராஜா கிரான், மட்டக்களப்பு

கப்டன் புயல்வீரன் நித்தியானந்தன் பிரபுகாந்தன், இணுவில், யாழ்ப்பாணம்

கப்டன் கஜமுகி (மதி) மயில்வாகனம் கீதாஞ்சலி, பொக்கணை, முல்லைத்தீவு

கப்டன் தமிழினி (வர்ணா) அந்தோனிப்பிள்ளை ஆனந்தி, செட்டிகுளம், வவுனியா

கப்டன் தேவகி( சின்னராசா பத்மராணி ), யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் பவளராணி ( கனகரத்தினம் கலாநிதி), அல்வாய், யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் காங்கேசன் ( செல்லத்துரை சுரேஸ்குமார்) ,விசுவமடு, முல்லைத்தீவு

ஆயுதப்போரின் ஆரம்பநாட்களும், போராட்ட முன்னோடிகளும் – பகுதி 2

ஆயுதப்போரின் ஆரம்பநாட்களும், போராட்ட முன்னோடிகளும் பகுதி 1

பொலிஸ் உளவாளியாகவும் அன்று சிங்கள அரசின் அடிவருடியாகவும் காணப்பட்ட நல்லூர் பாரளுமன்ற உறுப்பினரான அருளம்பலத்தின் ஏவலனாகவும் செயற்பட்ட தாடித்தங்கராசாவின் மீது மேற்க்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் தமிழின விடுதலைப்போராட்ட வரலாற்றில் இனத்துரோகிகள் மற்றும் காட்டிக்கோடுப்போர் மீதான முதலாவது நேரடித்தாக்குதலாக வரலாற்றில் தன்னைப்பதிவு செய்துகொண்டது. அத்துடன் எமதுசமூகத்தில் கட்டற்று உலவிய தாடித்தங்கராசா போன்ற ஏனைய சமூகவிரோதிகளை இத்தாக்குதல் உயிர்ப்பயத்தில் ஆழ்ந்திவிடவே வீறுகொண்ட போராளிகள் தமது அடுத்தகட்ட முயற்சியை ஆரம்பித்தனர்.

* 1971இல் கோண்டாவிலுக்கு சென்று தாடித்தங்கராசாவை தாக்குவது கடினமென கருதப்பட்டபோதும் காலமாற்றத்தின் விரைவான வளர்சியினால் இறுதியாக 04.01.1978 கோண்டாவிலில் தாடித்தங்கராசா அவரது சொந்தவீட்டில் வைத்தே நடேசுதாசன் குட்டிமணி தங்கத்துரை என்போரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அல்பிரட் துரையப்பா தாடித்தங்கராசா எனத்தொடர்ந்த போராளிகளின் தாக்குதல்கள் சிங்கள அரசபடைகளிற்கு எதிரான தாக்குதல்களாக மாற்றக்கூடிய உத்வேகத்தை கொடுக்கும் நிகழ்வுகள் தென்னிலங்கையிலும் 1971 மார்ச் ஏப்ரல் மாதங்களில்  உருவாகியிருந்தன. 1971 மார்ச் 8 ந்திகதி கொழும்பில் இருந்த அமெரிக்க தூதரகத்தை ஜேவிபியினர் குண்டு வீசித்தாக்கினர். இதனால் ஆத்திரம்கொண்ட சிறிமாவோஅரசு ஜேவிபி யினரை தடைசெய்ததுடன் நாட்டில் அவசரகால நிலையினையும் பிரகடனப்படுத்தினர். அத்துடன் ஜேவிபி உடன் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் சிங்கள இளைஞர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்களும் கைதுசெய்யப்பட்ட நிலையில் பேராதனைப் பல்கலைக் கழக வளாகத்தில் பாரியகுண்டொன்று வெடித்து பெரும் சேதமும் ஏற்பட்டது. இதன் தொடராக தீவுமுழுவதும் பெரும்குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டன. இவ்விடைக்காலத்தில்தான் முன்கூறிய இரண்டு தாக்குதல் முயற்சிகளும் யாழ்ப்பாணத்தில் அரங்கேறின. முயற்சி என்னும்வகையில் இவைகள் வெற்றியான போதும் இரண்டு நிகழ்வுகளிலும் குறிப்பிட்ட இலக்குகளுக்கு ஆளானவர்கள் உயிருடன் தப்பியிருந்தனர். இந்நிலையில் எதையும் மிகநுணுக்கமாக சிந்திக்கும் தங்கத்துரை தமது அடுத்தகட்ட நகர்வினை காலத்துடன் இணைந்து செயற்படுத்த ஆரம்பித்தார்.

ஜேவிபியினரின் அமெரிக்கதூதரக தாக்குதல் முயற்சியின் சிலநாட்களின் பின் 1971 மார்ச் 12 ந்திகதி அம்பாறை மாவட்ட உகணை யில் அதன் தலைவர் ரோகணவிஜயவீரா கைதுசெய்யப்பட்டார். இச்சம்பவத் தினைத் தொடர்ந்து ஆத்திரம் கொண்ட ஜேவிபியினரால் தாக்குதல்கள் எக்கணமும் நிகழ்த்தப்படலாம் எனும் பரபரப்பான சூழ்நிலை எங்கும் காணப்பட்டது. இத்தகைய நேரத்திலேயே சிங்கள ஆயுதப்படைகளை தாக்குவது என்ற தனது நெடுநாளைய கனவை செயலாக்க தங்கத்துரை தீர்மானித்தார். எனினும் முழுமையான ஒருகாவல்நிலையத்தை உடனடியாக தாக்குவதற்கு வேண்டிய ஆட்பலமோ ஆயுதபலமோ அற்றநிலையில் வீதிரோந்து வரும் சிங்களப் படைகளை தாக்குவது என முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் எவ்வித நேரக்கட்டுப்பாடுமின்றி நினைத்தநேரத்தில் எல்லாம் திடீர்திடீர் என்று தமது காவல்நிலையங்களை விட்டு பொலிஸார் வெளியேறுவதால் திட்டமிட்டு நேரம்பார்த்து அவர்களைத் தாக்குவது கடினமானது எனப்புரிந்து கொண்டார். ஆனால் இராணுவமோ ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பலாலி இராணுமுகாமிற்கும் வல்வெட்டித்துறை இராணுவ முகாமிற்கும் சென்றுவருவது அன்றாட நிகழ்சியாதலால் அத்தகைய நேரம் ஒன்றில் அவர்களின் ஜீப்பினைத் தாக்குவது என முடிவெடுத்தார்.

1971 ஏப்ரல் மாதம் 05 ந்தாம் திகதி அதிகாலை 5மணிக்கு வெள்ளவாயா பொலிஸ்நிலையம் ஜேவிபியினரால் தாக்கப்பட்டதை தொடர்ந்து நாடுமுழுக்க பதட்டநிலைமை அதிகரித்தது. காவல்நிலையங்கள் யாவும் உசார்படுத்தப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டன. ஏனைய பொலிஸ் நிலையங்களும் எந்நேரத்திலும் தாக்கப்படலாம் என்னும் நிலையில் அன்று மாலை 6மணிக்கு நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படும் என இலங்கை வானொலி மணிக்கொரு தடவை அறிவித்து மேலும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இவ்வாறு கொந்தளிப்பான நிலமையில் அன்று நண்பகல் 12 மணிக்கே முழுமையான ஊரடங்கு உத்தரவு அமுலிற்கு வந்தது. எனினும் தென்னிலங்கை எங்கனும் பதட்டமும் பயப்பிராந்தியும் நிலவியநிலையில் மாலை 6 மணிக்கு பின்பு உசார்படுத்தப்பட்ட 94 பொலிஸ் நிலையங்கள் தொடற்சியாக தாக்கப்பட்டன. ஆனாலும் யாழ்ப்பாணத்தில் அன்று இரவு முற்றவெளி மைதானத்தில் பொலிசாரின் விசேடஅனுமதியுடன் திருமறைக் கலாமன்றத்தின் ‘திருப்பாடுகளின் காட்சி’ நாடக நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வாணவேடிக்கைகளும் வெடிச்சத்தங்களும் கேட்டவண்ணமே யிருந்தன. யாழ்ப்பாணத்தில் இருந்த பொலிசார் அவ்வளவு நம்பிக்கை யோடிருந்தனர்.

ஜேவிபியினரின் இடதுசாரிக் கொள்கையானது சீனா மற்றும் வடகொரியா சார்பானதாக இருந்ததனால் அவர்கள் முதலாளித்துவ இந்தியாவை முழுமையான பகைநாடாகவே கருதினர். இதன்காரணமாக தமக்குமத்தியில் குறிப்பாக மலையகத்தில் வாழ்ந்த தோட்டத்தொழிலாளரான ‘இந்திய வம்சாவழித்தமிழரை அதே தேயிலைச்செடிகளிற்கு பசளையா க்குவோம்’ என இனவிரோத கருத்துக்களை ஆரம்பமுதலே கூறிவந்தனர். ரோகண விஜயவீரா உட்பட அன்றைய அதன்தலைவர்கள் பலரும் தமது கருத்தரங்குகளில் இதனைக்கூறி தமது புதியஉறுப்பினர்களான இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடமும் இந்தியவிரோதத்தை வளர்த்துவந்தனர். இதன் காரணமாக ஜேவிபியினர்க்கு தெரிந்ததெல்லாம் தமிழ்பேசுவோர் எல்லாம் இந்தியர் என்பதேயாகும். இதன்காரணமாக எந்தத்தமிழரையும் அவர்கள் அன்று தம்முடன் இணைத்துக் கொள்ளவில்லை. இந்நிலையிலேயே முற்றுமுழுத் தமிழ்ப்பிரதேசமான யாழ்ப்பாணத்தில் நடந்த சமயசம்பந்தமான விழாவிற்கு அனுமதி வழங்குகின்ற அளவிற்கு அன்றைய வடமாகாண பொலிஸ் அதிபரான திரு.இரா.சுந்தரலிங்கம் நம்பிக்கையுடன் இருந்தார்.

ஆனாலும் யாரும் எதிர்பாராதநிலையில் இரவு 11.30மணியளவில் யாழ்ப்பாணகோட்டை ஜேவிபியினரால் தாக்கப்பட்டது. நிமால்வசந் என்பவரின் தலைமையில் முன்வாசல் வழியாகவும் பேர்ட்டிரஞ்சித் என்பவரின் குழுவினர் பின்புறமாகவும் கோட்டையைத் தாக்கினர். அவர்கள் சிங்களத்தில் ‘விஜயவீரா நீ எங்கிருக்கின்றாய் நாங்கள் உன்னை மீட்க வந்திருக்கின் றோம்’எனச் சத்தமிட்டபடி கோட்டைக்கதவுகளிற்கு அண்மையில் தாக்கியபடி அக்கதவை உடைக்க முற்பட்டனர். ஆனாலும் வலிமைவாய்ந்த அக்கதவுகளை அவர்களால் ஏதும் செய்யமுடியவில்லை. இந்நிலையில் கோட்டையின் சிறைச்சாலை அதிகாரியாக கடமையாற்றிய தங்கராசா என்பவர் எக்காரணம் கொண்டும் சிறைச்சாலைக்கதவுகளை திறக்கக்கூ டாதென ஏனைய அதிகாரிகட்கும் ஊழியர்களிற்கும் உத்தரவிட்டதுடன் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு நிலமையை விளக்கி உதவியைக் கோரினார். உடனேயே இன்ஸ்பெக்டர் செல்வராசா என்பவரின் தலைமையில் வந்த பொலிசார் இடம்வலம் தெரியாமல் தடுமாறிநின்ற பல ஜேவிபி யினரை சுட்டுக்கொன்று 20பேர்வரை கைதுசெய்தனர். அதேநேரம் யாழ் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலும் முறியடிக்கப்பட்டிருந்தது. தென்னிலங்கையில் ஏப்ரல் 5 — 23ந்திகதிவரை நீடித்த ஜேவிபியினரின் தாக்குதல்கள் வெறுமனே ஒரு மணிநேரத்திலேயே யாழ்ப்பாணத்தில் பொலிசாரினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. (1.ஈழத்தமிழர்எழுச்சி பக்கம் 100—108 எஸ்.எம்.கார்மேகம் 2..ரோகணவிஜய வீராவும் சிறை அதிகாரி தங்கராசாவும். கட்டுரை வீரகேசரி வாரவெளியீடு 09.04.2006)

1971 ஏப்ரல் 05ந்திகதி இரவு 11.30 க்கு கேட்க ஆரம்பித்த துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டுச்சத்தங்கள் அடுத்த ஒருமணி நேரத்தி லேயே அடக்கப்பட்டு விட்டன. எனினும் 06ந்திகதி காலையிலேயே யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் இச்செய்தி பரவி பெரும்பரபரப்பிற்குள்ளா கியது. ‘யாழ்ப்பாணத்தில் சேகுவரா’ என்னும் செய்தியுடன் உண்மையும் பொய்யுமாய் வதந்திகள் உலவியவேளையில் தங்கத்துரையும் குட்டிமணியும் அச்செய்திக்கு புதியவடிவம் கொடுத்து செயலாற்ற ஆரம்பித்தனர். குண்டுகள் செய்வதற்கான இரசாயனப்பொருட்களை  கொள்வனவு செய்யும் பெரியசோதி தியே அவைகளை பாதுகாத்தும் வைத்திருந்தார். இதன்காரணமாக 07ந் திகதி அதிகாலையிலேயே குட்டிமணி நெடியகாட்டில் இருந்த பெரிய சோதியிடம் சென்று அவைகளைப் பெற்றுக்கொண்டாh.

வயதின் அடிப்படையில் பெரியசோதி ஏனையோரை விட மூத்தவராக காணப்பட்டதினால் இவரே இக்குழுவின் தலைவராகவும் விளங்கினார். எனினும் அன்றைய அவரது சீரற்றஉடல்நிலையால் குட்டி மணியிடம் வெடிபொருட்களை கையளித்துவிட்டு அவர் வீட்டிலேயே இருக்கநேர்ந்தது. மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் என்னும் குறியீட்டுப்பெயர் மூலம் இவர்களால் அழைக்கப்பட்ட இந்த இரசாயனப்பொருட்களை நடேசுதாசன் சின்னச்சோதி என்போர் நெல்லியடியில் அமைந்திருந்த ‘மகாத்மா’ திரையரங்கிற்கு அண்மையில் வீட்டுடன்கூடிய கடையொன்றி லேயே வழமையாக கொள்வனவு செய்வர். ஆனால் பெரியசோதி இவைகளை யாழ் குருநகரில் இருந்த கடையொன்றிலேயே கொள்வனவு செய்பவர் என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

பெரியசோதியிடம் பெற்றுக்கொண்ட வெடிபெருட்களை தொண்டைமானாறு வீரமாகாளியம்மன் கோயிலிற்கு அண்மையில் இருந்த தங்கத்துரை வீட்டில் வைத்துவிட்டு குண்டு தயாரிப்பதற்கான ஏனையவேலைகளை கவனித்தனர். மீண்டும் ஊரடங்குசட்டம் ஆரம்பிக்கும் மாலை 06மணிக்கு முன்பாகவே தங்கத்துரை வீட்டில்கூடிய தங்கத்துரை குட்டிமணி சின்னச்சோதி ஞான லிங்கம் மற்றும் இவர்கள் எல்லோரிலும் இளையவரும் பிரபாகரனின் வகுப்புத் தோழனுமான சரத்சந்திரன் என்போரும் ஊரடங்குச்சட்டம் அமுலாகிய பின்னர் தமது அடுத்தகட்ட நகர்வை ஆரம்பித்தனர்.

இரவு 06 மணிக்குப்பின் ஏற்பட்ட ஆள்அரவமற்ற நேரத்தின் பின்பும் இருட்டும்வரை காத்திருந்து தங்கத்துரை வீட்டின் அருகாமையில் அமைந்திருந்த தோட்டவெளிகளினூடாக நடந்து தொண்டைமானாறு வீரகத்தி ப்பிள்ளை மகாவித்தியாலயத்தை அடைந்தனர். சித்திரைமாதம் நீண்ட பகற்பொழுதை கொண்டிருப்பதால் இரவு என்பது மாலை ஆறுமணிக்கல்ல இதற்கும் பின்பாக 7.30 –8.00 ஆரம்பமாகி விடிகாலை 5.00 மணிக்கே வெளிச்சம் பரவிவிடும் மாதமாகும்.

ஆள்நடமாற்றமற்று இருட்டான பொழுதிலும் ஏற்கெனவே அச்சூழுலுக்கு நன்கு பரிச்சயப்பட்ட இவர்கள் எவ்விதபதட்டமுமின்றி தாக்குதலுக்கான கைக்குண்டுகளை தயாரிக்க முற்பட்டனர். அதிபரின் அறைக்கு அருகாமையில் இருந்த சிறிய ஆய்வுகூடத்தினுள் குண்டு தயாரிக்கும் தமது முயற்சியினை ஆரம்பித்தனர்.

ஏற்கெனவே பலகுண்டுகளை தயாரித்து அனுபவப்பட்டவர்கள் என்பதனால் எந்தவித பதட்டமுமின்றி குண்டு தயாரிக்கும் வேலை ஆரம்பமானது. யார் எதைச்செய்வது என்ற கேள்விக்கு இடமின்றி தரையில் உட்கார்ந்து சின்னச்சோதி குண்டினை உருவாக்கினார்.ழூ1 ஏனையவர்கள் அவருக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியவாறு நின்றனர். சிறியஇரும்பு ஆணிகள் பீங்கான்ஓட்டுச் சிதறல்கள் மற்றும் வெடிக்கவைக்கும் இராசயனப்பொருட்கள் என்பவற்றை மிகநேர்த்தியாக ஒன்றுடன் ஒன்றிணை த்து அவர் குண்டினை தயாரித்த முடிக்கவும் அதுவரையில் அச்சிறிய அறையில் மிகநெருக்கமாக நின்ற தமது ஆசுவாசத்தை தீர்த்து நல்லகாற்று வாங்குவதற்காக ஒவ்வொருவராக வெளியே வரமுயன்றனர்.

வருணகுலத்தான்

தொடரும்….

இறுதி வரை சிங்களத்தின் கைகளில் விழாத முகமாலை! புலிகளின் போர்த் தந்திரோபாயம்!

ஈழப் போராட்ட வரலாற்றில் இறுதிவரை முக்கிய போர் முனையாக அமைந்த முகமாலை போர் முனையில் தமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்ட போர் யுக்திகள் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களிடமிருந்து செய்திகள் கசிந்துள்ளன.

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், வெடிபொருட்கள் அனைத்தும் அதி சக்தி வாய்ந்தவையாக உள்ளன. இதனால் புலிகளின் ஆயுத தயாரிப்பு பலம் குறித்தும் மேற்படி நிறுவனங்கள் தமது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளன.

இலங்கையிலேயே அதிகூடிய வெடிபொருட்கள் முகமாலையிலேயே புதைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரும் புலிகளும் தமது முன்னரங்குகளில் சரிக்குச் சரி சமானமானளவு வெடிபொருட்களை இங்கே புதைத்துள்ளனர்.

இதில் புலிகளின் வெடிபொருட்கள் மிகச் சக்தி வாய்ந்தவையாக இருப்பதுடன் அவை மிக நுட்பமான வகையில் புதைக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி கண்ணிவெடியகற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

65ஆயிரத்து 610 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடைய இலங்கையில் முகமாலை 14 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. இங்கு இதுவரை 7500 சதுர மீற்றர் பரப்பளவிலேயே வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களாகின்ற நிலையில் இதுவரை முதலாவது முன்னரங்கிலேயே வெடிபொருட்கள் அகற்றப்பட்டிருக்கின்றன.

இரண்டாவது முன்னரங்கில் வெடிபொருட்களை அகற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அது முடிவடைய இரண்டு வருடங்களாகுமென்று மேற்படி மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

முகமாலையில் ஒட்டுமொத்தமாக வெடிபொருட்களை அகற்றுவதற்கு இன்னும் 7 ஆண்டுகள் ஆகுமென்றும் மேற்படி நிறுவனங்களின் அதிகாரிகள் மதிப்பிட்டிருக்கின்றனர்.

முகமாலையில் வெடிபொருட்களை அகற்றும் பணி மிக ஆபத்து நிறைந்ததாகவும் மிகவும் சவாலானாதாக உள்ளதென்றும் மேற்படி கண்ணிவெடியகற்றும் பிரிவினர் கூறுகின்றனர்.

விடுதலைப் புலிகள் தமக்கேயுரிய போரியல் உத்தி முறைகளைப் பயன்படுத்தி நன்கு திட்டமிட்டு இங்கு வெடிபொருட்களைப் புதைத்துள்ளனர்.

மேலும் தங்களாலேயே தயாரிக்கப்பட்ட ஜொனி மிதிவெடி, தாங்கி எதிர்ப்புக் கண்ணிவெடிகள் மற்றும் அதிக இழப்புக்களை ஏற்படுத்தக்கூடிய பொறி வெடிகள், அமுக்க வெடிகள் போன்ற அதி சக்தி வாய்ந்த வெடிபொருட்களையும் அவர்கள் இங்கே புதைத்திருக்கிறார்கள்.

அவர்களால் புதைக்கப்பட்ட இந்த வெடிபொருட்களை அவர்களாலேயே அன்றி வேறெவராலும் இலகுவில் எடுக்க முடியாது. இதனால் மிகவும் கவனமான முறையிலேயே இந்த வெடிபொருட்கள் அகற்றும் பணியைத் தாங்கள் முன்னெடுப்பதாகவும் மேற்படி கண்ணிவெடியகற்றும் நிறுவன அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் முள்ளிவாய்க்காலைப் போன்று உலகில் யாரும் அறிந்திராத இடமாக இருந்த முகமாலை 4 ஆம் கட்ட ஈழப் போராட்டத்தின் பின்னரே உலகின் பார்வையைப் பெற்ற இடமாக மாறியது.

இதற்குக் காரணம் புலிகளின் போர்த் தந்திரோபாயம். 4 ஆம் கட்ட ஈழப் போரின் போது இறுதிவரை சிங்களப் படைகளுக்கும் சிங்கள அரசுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய இடம் முகமாலை.

முகமாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீரமிகு தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறியது சிங்கள இராணுவம். முகமாலையை உடைத்துக்கொண்டு முன்னேறினால் ஆனையிறவைக் கைப்பற்றி நேரே கிளிநொச்சிக்குச் சென்று அதையும் கைப்பற்றலாம் என்று சிங்கள இராணுவம் திட்டம் வகுத்தது.

இதற்காக பல உத்திகள் கையாளப்பட்டும் எதுவும் வெற்றியளிக்காததால் சிங்களம் நாட்டின் சகல வளங்களையும் ஒன்று திரட்டி பல்லாயிரக்கணக்கான படையினரைக் குவித்து முகமாலையை உடைப்பதற்குப் பல முறை முயன்றும் சிங்கள அரசுக்கும் படையினருக்கும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

பல முறை இராணுவம் கடும் சமரிட்டு புலிகளின் முன்னரங்குகளை நெருங்கிய போதிலும் புலிகள் மிக வீராவேசத்துடன் போரிட்டு சில மணித்துளிகளிலேயே இராணுவத்தை மீண்டும் முன்னைய இடங்களுக்கு விரட்டியடித்த சம்பவங்கள் முகமாலையில் இடம்பெற்றன.

முகமாலை எதிரியிடம் வீழ்ந்தால் ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு என்பன ஒவ்வொன்றாக எதிரியிடம் வீழும் என்பது புலிகளுக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது. இதனால் தலைவர் பிரபாகரன் அவர்கள் வட போர் முனைக் கட்டளைத் தளபதியான கேணல் தீபன் அவர்களின் தலைமையில் போராளிகளை முகமாலையில் நிறுத்தினார்.

இறுதிப் போர் நெருங்கி வந்த போது கூட கேணல் தீபன் அவர்கள் முகமாலையை இராணுவத்திடம் கைவிடவில்லை. யுத்தம் நெருங்கி வந்த பின்னர் தேசியத் தலைவரின் கட்டளையின் பேரிலேயே தீபனும் போராளிகளும் முகமாலையை விட்டுத் தாங்களாகவே விலகிச் சென்றனர்.

அந்த இடத்தை விட்டுச் செல்வதற்கு மனமில்லாமல் மிகுந்த கவலையோடு தலைவரின் கட்டளைக்காக தளபதி தீபன் அவர்களும் போராளிகளும் பாதுகாப்பாக வெளியேறியதாக அங்கு சமரிட்ட போராளிகள் இன்றுவரை கூறுகின்றனர்.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரமும் அவர்களின் போரியல் உத்தி முறைகளும் மிகச் சிறப்பானவை என்றும் எவராலுமே புலிகளின் வீரத்தை விஞ்ச முடியாதென்றும் காலம் காலமாக கூறப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது சர்வதேச மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் நிறுவனங்களும் புலிகளின் போரியல் உத்திகளைப் பார்த்து வியப்பும் ஆச்சரியமும் அடைந்துள்ளன.

வீரமணி

Up ↑