தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்

‘விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம்’ என ஒன்று ஒருபோதும் வரப்போவதேயில்லை”:இந்திய இதழிடம் நடேசன் திட்டவட்டமாக தெரிவிப்பு

“தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலகட்டம் (Post-LTTE Scenario) என ஒன்று ஒருபோதுமே வரப்போவதில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், “இவ்வாறான காலம் ஒன்று வரும் எனக் காத்திருந்து – காலத்தை வீணடித்து, மனித உயிர்களை அழிக்காமல், தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையையும், தமிழர் தாயகத்தையும் அங்கீகரித்து அவர்களுடைய அரசியல் விருப்புக்களை நிறைவேற்றுவதில் கவனத்தைச் செலுத்துங்கள்” என உலக சமூகத்தையும், இந்தியாவையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘தெஹெல்கா’ இதழின் ஊடகவியலாளர் பி.சி.வினோஜ்குமாருக்கு பா.நடேசன் அளித்த சிறப்பு நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு:

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம் (Post-LTTE Scenario), என பல நோக்கர்கள் ஏற்கனவே கூறத் தொடங்கியிருப்பது பற்றி..?

இங்கு நான் ஒரு விடயத்தைத் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம் (Post-LTTE Scenario) என்று ஒன்று இருக்கப்போவதேயில்லை. தமிழர்கள் அனைவருடைய அறிவிலும், உணர்விலும் சுதந்திரத்திற்கும், சுயரியாதைக்குமான தாகம் தான் குடிகொண்டுள்ளது என்பதை உலகம் முழுவதிலும் உங்களால் பார்க்க முடியும்.

தமது அரசியல் விருப்புக்களை அடைவதற்கான ஒரு வழிமுறையாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தமிழர்கள் கருதுகின்றனர். அவர்களுடைய விடுதலைப் போராளிகள் என்ற முறையில், அவர்களது உரிமைகளை எந்தவகையிலும் விட்டுக்கொடுக்காமல் – கடந்த 35 வருட காலத்துக்கும் மேலாக அவர்களது போராட்டத்தை தலைமையேற்று நடாத்தி வருவதன் மூலமே இந்தப் பொறுப்பு நிலையை நாம் பெற்றிருக்கின்றோம்.

போர்க் களங்களில் பின்னடைவுகளும், முன்னேற்றங்களும் தவிர்க்க முடியாதவை. இறுதியாக நாம் எதனை அடைகின்றோம் என்பதுதான் முக்கியமானது. விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம் ஒன்று வரும் எனக் காத்திருந்து காலத்தை வீணாக்குவதற்குப் பதிலாக, எமது மக்களுடைய சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகத்துக்கான போராட்டத்தை அங்கீகரித்து, அவர்களுடைய அரசியல் விருப்புக்களை நிறைவேற்றுவதில் தமது கவனத்தைச் செலுத்துமாறு அனைத்துலக சமூகத்தையும் இந்தியாவையும் நான் கேட்டுக்கொள்கின்றேன். ஏனென்றால், விடுதலைப் புலிகளுக்குப் பின்னான கால கட்டம் என ஒன்று ஒருபோதும் வரப்போவதில்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிப்பதற்கு சிறிலங்காப் படைகள் முயற்சி செய்வதாக வெளியான செய்திகள் தொடர்பில் அவரின் (பிரபாகரனின்) பிரதிபலிப்புக்கள் எவ்வாறு உள்ளன?

இந்தச் செய்திகளைப் பார்த்து அவர் சிரிக்கின்றார்.

ஈழத்தை அடைய முடியும் என பிரபாகரன் இப்போதும் நம்புகின்றாரா?

அவர் அவ்வாறு நம்பவில்லை என்றால், இந்தப் போராட்டத்தை அவர் எப்போதோ கைவிட்டிருப்பார்.

விடுதலைப் புலிகளுடனான இந்த போரில் சிறிலங்கா படையினருடன் இந்தியப் படையினரும் இணைந்து போர் புரிகின்றனரா?

சிறிலங்கா மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் மிக உயர்ந்த மட்டத்தில் இராணுவம் சார்ந்த ஒத்துழைப்பு இருக்கின்றது என்பதை என்னால் சொல்ல முடியும்.

பொதுமக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் பயன்படுத்துகின்றார்கள் என்பதையிட்டு உங்களுடைய பதில் என்ன?

சிறிலங்கா அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் தம் மீது பிரயோகிக்கப்படுகின்றமை பற்றி தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். அவ்வாறு ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் அந்த அரசாங்கத்தின் கைகளில் அகப்பட அவர்கள் விரும்பாத நிலையில் இங்கு வாழும் மக்களை போருக்குள் ‘சிக்குண்டவர்கள்’ என்றோ அல்லது ‘மனித கேடங்கள்’ என்றோ குறிப்பிடுவது பொருத்தமற்றது.

மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புக்கள் இந்தப் பகுதிக்கு வந்து மக்களுடைய விருப்பம் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும்.

போர் நிறுத்தம் ஒன்றுக்குத் தயாராக இருப்பதாக நீங்கள் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றீர்கள். இது உங்களுடைய பலவீனத்தின் அடையாளமா?

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை போரை சிறிலங்கா அரசாங்கம் தீவிரப்படுத்தியிருப்பதால்தான் நாம் போர் நிறுத்தம் ஒன்றை நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கும், மக்கள் இப்போது தாம் வசிக்கும் பகுதிகளிலேயே அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அவர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கும் போர் நிறுத்தம் ஒன்று அவசியமாகும்.

அனைத்துலக சமூகத்துக்கான உங்களுடைய கோரிக்கை என்ன?

அப்பாவிச் சிறுவர்கள், தாய்மார் மற்றும் பெரியவர்கள் சிறிலங்கா ஆயுதப் படைகளால் நாளாந்தம் படுகொலை செய்யப்படுகின்றனர். அதனால் தான் ஒரு போர் நிறுத்தத்தை நோக்கி சிறிலங்கா அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டிய அவசர தேவை உள்ளது.

‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்ற பெயரில் தமிழ் மக்களை வேரறுக்க சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுடன் இணைந்து போக வேண்டாம் என அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம். இந்த போரை உடனடியாக நிறுத்தி, தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு, பேச்சுவார்த்தை ஒன்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

**********

**********
பா. நடேசன் புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியவையை வெளியிட்டது பிபிசி

விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் திரு பா. நடேசன் , சமாதான செயலக பணிப்பாளர் திரு.புலித்தேவன் ஆகியோர் வெள்ளைக்கொடியுடன் சரண்டைந்த போது அவர்களை கோத்தபாய சுட்டுக்கொல்லுமாறு பணித்தார். சவேந்திர சில்வா தலைமையிலான சிங்களப் படைகள் சுட்டுக்கொன்றனர். ஆனால் சிங்களம் இதனை மூடிமறைத்து வருகின்றது. கடந்த 22 ஆம் திகதி சிரியாவில் கொல்லப்பட்ட போர்க்கால ஊடகவியலாளர் மாரி கொல்வின் முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் விடுதலைப்புலிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். சரண்டைந்தவர்கள் கொல்லப்பட்ட தினத்தில் பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷ்ய செய்தியாளரிடம் பேசியிருந்த மாரி கொல்வின், விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவது பற்றி நான்கு நாட்களாக பேச்சு நடந்ததிருந்ததாகக் கூறினார்.

ஒலிவடிவத்தை செவிமடுக்க இங்கு அழுத்தவும் வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி சரணடையும் நடேசன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சர்வதேச சட்ட நியமங்களின் படியே நடத்தப்படுவார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சந்திரநேரு சந்திரகாந்தன் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உத்தரவாதம் அளித்திருந்ததாகவும் மாரி கொல்வின் தெரிவித்திருந்தார்.
‘சர்வதேசம் அறிந்திருந்தது’

இலங்கை அரசு வெளியிட்ட படங்கள்

கொலை செய்யப்பட்ட நடேசன் மற்றும் புலித்தேவன் இறுதித் தருணத்தில் (2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி அதிகாலை, 1 மணி 6 நிமிடங்கள்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனுடன் தொடர்பு கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், ‘நாங்கள் முடிந்தளவுக்கு வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி செல்கிறோம்’ என்று கூறியிருந்ததாக மாரி கொல்வின் பிபிசி செய்தியாளரிடம் கூறியிருந்தார்.இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவது பற்றி அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பிரமுகர்கள் மற்றும் ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் அறிந்திருந்ததாக மாரி கொல்வின் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளைக் கொடியை பிடித்தபடி சரணடைவோர் தொடர்பில் மூன்றாம் தரப்பு மேற்பார்வை அவசியப்படாது என்று ஜனாதிபதி பாதுகாப்பு உத்தரவாதம் அளித்திருந்ததை ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியாரும் தன்னிடம் கூறியதாக மாரி கொல்வின் மேலும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இவை எல்லாம் நடந்த பின்னர் நம்பியாரை நீங்கள் தொடர்பு கொண்டிருந்தீர்களா எனக் கேட்டபோது இல்லை என பதிலளித்த மாரி கொல்வின் விடுதலைப்புலிகள் ( திரு.நடேசன், திரு புலித்தேவன்) சரணடைவது தொடர்பில் நான்கு நாட்களாக சர்வதேசத்துடன் தொடர்பில் இருந்து பேசியவண்ணம் இருந்ததாகவும் கூறியுள்ளார். அமெரிக்கா, பிரிட்டன் , ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த விடுதலைப்புலிகள் இறுதி நேரத்தில் எல்லோரும் அறிந்திருக்கும் வகையிலேயே கொல்லபப்ட்டுள்ளார்கள் எனவும் கூறியிருந்தார். சிறிலங்கா அரசின் உத்தரவாதத்தினை நம்பாது மூன்றாம் தரப்பு ஒன்று இருந்திருக்குமானால் சரண்டைந்தவர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் எனவும் குற்றம் சாட்டியிருந்தார் மாரி கொல்வின் .பிபிசி.

********

interviewed LTTE Political Chief Mr. P. Nadesan December 20th, 2008


We encourage all readership and party cadre especially to pay close attention to the following interview with Mr. P. Nadesan, the Political Bureau Chief of the Liberation Tigers of Tamil Eelam (LTTE.) LTTE continues to wage a heroic armed struggle under the leadership of the military genius V. Prabhakaran, which serves as a continuing testament to the fact that the unleashed creativity of the people in armed struggle with the full support of the people and under wise leadership is an unbeatable force in revolution, which can serve to frustrate even the most entrenched oppressor forces. All glories to the historic struggle of the Tamil people against Singhalese oppression under the vanguard leadership of the Liberation Tigers of Tamil Eelam and Prabhakaran! – RPP Central Committee, December 20th, 2008

Mr.P.Nadesan, the Political Bureau Chief of LTTE is a long time member of the Liberation Tigers Movement and one who has participated on behalf of the Tamils in the peace talks with the Sri Lankan Government. He is also the person who organized the Tamil Eelam Police Force and functioned as its chief until 2007 November. The co-editor of Nilavaram, Mr.Shan Thavarajah, recently interviewed mr.Nadesan the Political Bureau Chief.

Interviewed by Nilavaram co-editor Mr.Shan Thavarajah

Q. The siege on Kilinochchi has tightened. The Singhalese have sworn to capture Kilinochchi. In this context, the Liberation Tigers say they would save Kilinochchi at all costs. How is the real situation at the war fronts?

A. Two Regiments of the special divisions are engaged in the onslaught to capture Kilinochchi. Because of this, war is going on daily in many fronts on the west of Kilinochchi. The Tigers are fighting the Singhalese Army with courage, to foil their efforts. The Singhalese Generals though gave so far two ultimatum to capture Kilinochchi, have not won yet. The Singhalese Army is facing heavy loss of lives in their fight for Kilinochchi. Tigers are using new strategies and techniques in their war to protect Kilinochchi.

Q. As the war gains in intensity, the agonies of the internally displaced people have increased to serious levels. The Government while asking them to come over to Vavuniya, carries a propaganda war against the LTTE, as preventing the people to move into Vavuniya and is responsible for the displaced people not moving into Vavuniya.

A. When the Singhalese Army invades, it is usual for the people to move into the areas under the control of the Tigers and seek protection. The same thing is happening now. The care the Singhalese Government shows to the Tamil people is like the story of the wolf caring the sheep. The Singhalese Government is calling the people to its area with plans for racial annihilation and social degradation, thereby to destroy the freedom struggle. People want to live in the areas under the control of the LTTE, no matter how many times be it. People on their own refuse such requests by the Government.

Q. With the war intensified, expectations of peace talks have gone beyond one’s reach. At the same time, there are news of some elements with blessings of some of the western countries are trying some political moves with out LTTE participation. What do you think about this?

A. Some forces like to enjoy a cruel feeling of separating the LTTE from the Tamil people. All that can only be sheer fancy. The main leadership of the Tamils is the LTTE and the Tamils nave proven this through many election processes. It is ridiculous for some anti Tamil National personals to imagine as the Leaders of the Tamils. LTTE is not prepared to pay any attention to such persons.

Q. Sri Lankan Government is continually committing war crimes. Even recently, it has bombed the camps of the internally displaced persons. What is the reason the international community is still taking the side of the Singhalese in spite of all these injustice?

A. Some countries are helping the Singhalese Government in its Genocide of the Tamil people, as we all now know. The Tamil people are worried and angry over these countries, which help the Sri Lankan Government to carry on its war of Genocide against all norms of justice, fairness and dignity. This is due to believing the false propagandas against our freedom struggle and the LTTE by the Singhalese Government as true. and acting one sided. We have repeatedly requested world governments about this. Some countries have listened to us and stopped Military assistance to the Sri Lankan Government. However, some countries have fallen prey to the Singhalese Government’s manipulations and help it in the Genocide War of the Tamils.

Q. National Leader in his National Heroes’ Day speech said,” The Dreams of the Singhalese of military victories will definitely be wiped out “. What does it mean?

A. The dream of a military win of the Singhalese is its inborn quality. It is a fact that after a military win, to float in that dream and then to wake up with a military defeat, has been its experience. Now again, it is in the midst of such a dream. We will give the right reply at the right time to its military stubbornness.

Q. The recent popular resurgence of the Tamils of Tamil Nadu is very encouraging. How the new trends you think, will accelerate the liberation of the Tamils?

A. The support of the Tamil Nadu Tamils is a very important factor for the Eelam Tamils struggle for freedom. The feeling that we are not alone, and the world Tamil community is behind us can give us a new impetus and encouragement. The racial consciousness of the Tamil Nadu Tamils has raised fears among the Singhalese. The feelings of Tamil Nadu Tamils can help in drawing the world political opinion towards our side. The all-party resolution passed by the Tamil Nadu Assembly has to be viewed as recognition of our fight for liberation.

Q. It appears that the LTTE is more interested in establishing good relationship with India. At the same time, some comment this as a sign of weakness how?

A. The relationship between the Eelam Tamils and India is a Historical one. In between, this was severed by the machinations of the Singhalese. External forces are again building up on both sides towards the restoration of the relationship. The Singhalese racists do not wish to see this, so they feel satisfied by demeaning these efforts.

Q. The recent terrorist attacks in Mumbai have caused some changes in its political atmosphere. More repercussions expected in the future. How do these changes will affect the Tamil National struggle for freedom, do you expect in the new changed atmosphere?

A. We strongly condemn the bomb attacks in Mumbai. It is an attempt to disrupt the security of India. The Indian Intelligence Agencies have identified the persons and the Governments behind these bomb attacks as proof of some enemy nations having their hands in it. Sri Lankan Government maintains relationship with these enemy nations, and the Indian Diplomats are well aware of that. The Tamil Nation is fighting against a war of Genocide. This is a liberation struggle of the oppressed and the suppressed people, who have been for ages subjugated. It is a historical fact that such struggles are normal. In Tamil Eelam our fight is for the welfare of the Tamil Eelam people.

Q. What are the damages the recent heavy floods in Wanni have created?, and what is the condition of the people affected by it ?

A. This time the floods have almost created damages comparable to that of the Tsunami. The situation is far more serious in Wanni. Many of them displaced from their homes already. Approximately 80 % of the people in Wanni, are affected by the floods. The Singhalese Government has not allowed any distress assistance to these people. The floods have subsided, but our movement has to provide assistance to relieve the distressed, while at the same time fighting the war forced on us. It is only our units engaged in the relief activities.

Q. The Government says that food convoys go to Wanni regularly. However, according to news we get, people are facing death out of starvation. Is there enough foodstuffs in fact ? Have the items collected and sent by Tamil Nadu arrived there ?

A. The Government is strictly enforcing an economic embargo preventing the flow of food, medicines, including agricultural and fishing materials. As a result, there is a severe scarcity for food, fuel and medicines .As the Singhalese Government has expelled world aid agencies, the pressure has increased. The Singhalese Government neither sends nor allows world aid agencies to send. A part of the Tamil Nadu aid items have arrived. Now there is a very serious food shortage in Wanni. There is a possibility of the conditions worsening still further.

Q. One can observe a depressive mood prevailing among the people here concerning the conditions prevailing in Tamil Elam. What would you like to tell to such people?

A. Depression is a feeling rooted from distrust. Distrust comes from not analyzing the conditions properly. It is true there is a military pressure in our motherland. Nevertheless, it is not correct to believe that we cannot overcome this. We have faced far more great pressures in the past and have overcome all. We will break the present obstacle and win. People living overseas should continue their support to the war more enthusiastically, as usual. Your financial support is in fact our backbone. In the international scene, you do your propaganda work more effectively. Very soon, we can enjoy the victory.

Q. In what way do you expect the people overseas can provide help to reduce the burdens of the Internally displaced people of Wanni ?

A. Our main task now is to build houses and to provide food and medicines. Health care of pregnant women and infants is also a paramount need. To do this, large sums of money is required. This can only be provided by our people overseas. Already you are doing these things. Your relatives in motherland expect you to continue with more vigour.