Search

Eelamaravar

Eelamaravar

Month

March 2012

தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றிய 25 குறிப்புகள்

மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும்.தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா… ! தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன் 30ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

01.அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை.பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி’என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். “போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்” என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, “எடுத்தால் எங்கே வைப்பது” என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க… அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின்‘ஏழு தலைமுறைகள்’. அதில்‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்’ என்ற வரிகளை அடிக்கோடுபோட்டுவைத்திருந்தார்!

05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06.”ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?” என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன்சொன்னது, “யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.”

07.”பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை” என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர்,நகை அணிவதில்லை!

09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது’ என்பது அவரது அறிவுரை!

10.ஒவ்வொரு நவம்பர் மாதமும்25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார்.26 அவரதுபிறந்த நாள்.27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்;வரலாறு எனது வழிகாட்டி’ என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு64 வீரத் தழும்புகள் உண்டு’ என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

13.ஆறு கோடியே43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன்.”தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்” என்பார்!

16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்றுபிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ்பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம்,காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாகஅமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்’ என்றார் பிரபாகரன்!

20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், “நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னையாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!”

23.”ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாதஎன்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?”என்றுஅடக்க மாகச் சொல்வார்!

24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக்கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்’என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்….

கரும்புலி மேஜர் ஆந்திரா வீரவணக்கம்



அவள் குறும்புக்காரி ஏதாவது கதை சொல்லி மற்றவர்களை கொல்லெனச் சிரிக்கவைத்துவிடுவாள். சின்ன வயதில் சைக்கிள் ஓடப்பழகிய ஆரம்ப நாட்களில் இவளுக்குச் சைக்கிள் ஓடப்பழக்கியது அண்ணன்தான். மண் ஒழுங்கைகள் எல்லாம் அவன் சைக்கிளைப் பிடிக்க அவள் ஓடுவாள். ஒவ்வொரு அடிதூரம் போகவும் அவன் கையை விட்டுவிடுவானோ என்ற பயத்தில் திரும்பித் திரும்பிப் பார்ப்பாள்.

“நேர அந்த வீட்டைப்பார்… நேர அந்த வீட்டைப்பார்” என்று அண்ணன் அடிக்கடி கத்துவான். அவள் தயங்கித் தயங்கி நேரே பார்த்து ஓட முயன்றாள். அவன் கையை விட்டுவிடுவான். அண்ணன் பிடித்திருக்கிறான் என்று நினைத்தபோது ஓடியவள் திரும்பிப் பார்த்து அண்ணன் இல்லை என்றதும் அந்த இடத்திலேயே விழுந்து விடுவாள். இப்படி தத்தித் தத்தி ஓடிய சைக்கிள் வீட்டிற்கு கிட்டவுள்ள கடைக்குப் போகத்தொடங்கியது. வேலிப் பூவரசில் பிடித்து ஆரம்பமாகும் சைக்கிள் கடைக்குமுன் ஏற்றம் ஒன்றில் வேகம் குறைய குதிப்பாள். அந்த இடத்தில் ஆக்கள் நின்றுவிட்டால் சற்றுத் தூரம்சென்று வரும் மணலுக்குள் புதையவிட்டு வேகம் குறைத்து இறங்குவாள். அங்கிருந்து உருட்டியபடி கடைக்கு வந்துசேருவாள். கடையின் ஏற்றத்தடியில் இருந்து புறப்பட்டால் வேலிப் பூவரச மரத்தைப் பிடித்து நிறுத்துவாள். இப்படி அவள் தன் சைக்கிள் ஓடும் முயற்சியைக் கைவிடாமலும் உற்சாகம் குன்றாதும் தொடர்ந்தும் செய்துகொண்டேயிருந்தாள்.


இவளின் தோற்றத்தைப் பார்க்கும் யாரும் அத்தனை குறும்பு செய்வாள் என்று நினைக்கமாட்டார்கள். பாட்டியின் வளவுக்குள் களவாக இளநீர் பிடுங்கவென்று திட்டம் போட்டால் பாட்டியை சமாளிப்பது இவள்தான். பாட்டியிடம் பழைய கதை கேட்டு தலை நுணாவச்செய்து மடியில் படுக்க ஆசையென்று இவள் பாட்டியின் கவனத்தைத் திருப்ப அண்ணன் இளநீர் பிடுங்கி மறைத்துவிட்டு சத்தம் இல்லாது சமிக்கை கொடுப்பான். இவளும் இரகசியமாய் போய் இளநீர் குடிப்பதில் பங்கெடுப்பாள். ஒருநாள் இளநீர் வெட்ட ஆரம்பிக்கின்றபோது அண்ணனின் கையில் மாறி வெட்டிவிட்டாள்.

இரத்தம் பெருக திட்டமெல்லாம் பிழைத்துப் போய்விட்டது. பிறகென்ன திரும்பவும் பாட்டியிடம்தான் ஓடிவரவேண்டியிருந்தது. அப்பா கடற்தொழிலுக்குச் சென்றுவரும் காசில் அன்றாடப் பொழுதுகள் வறுமை இல்லாமல் கழிந்துகொண்டிருந்தன. இவள்தான் மூத்தபிள்ளை. இவளுக்குப்பின் இன்னும் இரண்டு தங்கைகள் சின்னக் குடும்பந்தான். ஆனாலும் சில நாட்கள் பசியோடும் கழிக்கவேண்டியிருந்தது. வீட்டின் முழுச் சக்தியாக உழைத்துக்கொண்டிருந்த அப்பா திடீரென்று ஒருநாள் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அப்பாவின் சாவோடு அம்மாவின் பூவும் பொட்டுமல்ல எந்நேரமும் முகத்தில் தவழ்ந்த புன்னகையும்தான் உதிர்ந்துபோனது. வீட்டு நிலைமை நாளுக்கு நாள் மோசமானது. வானம் கண்விழிக்க முன்னமே அம்மா கண்விழித்து எழத்தொடங்கினாள். வீட்டுக்குள் முடங்கிக்கொண்டு படுத்திருக்கும் மூன்று பிள்ளைச் செல்வங்களையும் கண்வளரும் கற்பனையோடு பார்ப்பாள். பின் தனது வேலைகளைச் சுறுசுறுப்பாக ஆரம்பிப்பாள். அரைகுறைத் தூக்கத்தில் இருக்கும் பிள்ளைகளிற்கு அம்மா பாத்திரம் தேய்க்கும் சத்தமோ அல்லது வீடு கூட்டும் சத்தமோ மங்கலாகக் காதில்விழும். எழுந்துவந்து உதவிசெய்ய நினைத்தாலும் அம்மா விடமாட்டாள்.

“நீங்கள் படிச்சு நல்ல வேலை பார்க்கவேணும் போங்க… இதை நான் செய்யிறன்”. படித்து பயனுள்ளவளாகி இந்த மண்ணுக்குச் சேவைசெய்யும் ஒரு தாதியாக வரவேண்டும் என்ற ஆசையோடு அவள் வளரத்தொடங்கினாள். அம்மா எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வயல் வேலைக்குப் போவாள். அங்கே சேற்றுக்குள்ளும் உச்சி வெயிலுக்குள்ளும் நின்று வேர்க்கக் களைக்க வேலைசெய்து வாட்டமாய் வீடு திரும்புவாள். வீடு வந்தாலும் மறுபடியும் வீட்டுவேலைகள் எல்லாவற்றையும் அவளே கவனிக்க வேண்டியிருந்தது. நாளுக்கு நாள் அம்மா மெலியத் தொடங்கினாள். உருகி உருகி எலும்புகள் வெளியே தெரியும் அளவிற்கு வந்துவிட்டன. கன்னக்குழியும் ஆழமாகிக்கொண்டு போனது. எல்லாரும் சொன்னார்கள் வறுமையால்த்தான் இப்படியென்று. ஆனால் யாரினது கண்ணிலும் படாது பொல்லாத நோயொன்று அவளை மெல்ல மெல்லமாகத் தின்றுகொண்டிருந்தது.

களைப்பும் சோர்வும் அவளை இயலாமைக்குள் தள்ளினாலும் தன் சத்திக்கு மீறியதாய் உழைப்பைத் தொடர்ந்தாள். ஒருநாள் அவளைவிட நோய் வலுக்காட்டியது. படுத்த பாயிலிருந்து எழும்ப முடியாமலே அம்மா கிடந்தாள்… பதறி அடித்துக்கொண்டு மருதங்கேணி சின்ன மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றவேளை அங்கு இயலாது என்று கைவிரித்து விட்டார்கள். யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டாள். அங்கேயும் சிறிதுகாலம் கழிந்தது. ஷஇதயத்தில் ஓட்டை. இஞ்ச வைத்தியம் செய்வதென்றால் நிறையக் காசு தேவைப்படும் வைத்தியர் சொன்னபோது அது அவர்களின் குடும்பப் பொருளாதாரத்திற்கு ஒத்து வராததாகவே இருந்தது. அம்மா இன்னும் சிறிதுகாலமே உயிர்வாழ்வாள் என்று தெரிந்த பின்பும் வீட்டுக்கு அழைத்துவந்து எல்லோராலும் அழத்தான் முடிந்தது. வீட்டில் இவ்வளவு ஒரு சோகம் இருந்தாலும் நாட்டு நிலைமை பற்றியே சிந்திக்கும் அவளது எண்ணம் உயர்வானது.

தான் சுகவாழ்வில் இருந்துகொண்டு மற்றவர்கள் சோகத்தில் பங்கெடுப்பதிலும் தானே தன் சோகத்தைச் சுமக்கமுடியாமல் தள்ளாடுகின்றபோதும் மற்றவர்கள் சோகத்திற்குத் தோள்கொடுக்க நினைப்பதும் அதற்காக எத்தனை இடர்களையும் ஏற்கத் துணிவதும் எவ்வளவு மேலானது. சிறிலங்கா இராணுவம் ஒப்பறேசன் ஷயாழ்தேவி நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. அந்தக் கிராமமே தற்காலிகமாக இடமாற்றம் செய்துகொண்டது. அந்த வெடியோசைகள்தான் அவளின் இதயத்தை மெல்லமெல்ல வைரமான சிற்பமாகப் பொழியத் தொடங்கியது. வேகமாக தான் போராடப் போகவேண்டுமென்ற தேவையை உணர்த்தியது. அம்மா பாவம் அவளால் மகளின் மாற்றத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஷஇண்டைக்கு எனக்கு மீன்கறி காச்சித் தரவேணும் என்று வழமைக்கு மாறாய் அடம்பிடித்தபோதும் ஷஉங்கன்ர கையால தீத்திவிடுங்கோ என்று செல்லம் பொழிந்தபோதும் அவள் தன்னைவிட்டுப் பிரிந்து போகப்போகிறாள் என்று அம்மா நினைத்திருக்கவில்லை. ஆனால் சுதர்சினிக்கு (ஆந்திரா) தெரியும் தான் அம்மாவை விட்டுப் பிரிந்து போகப்போகிறேன் என்று.

06.10.1993ஆம் ஆண்டு. ஒரு மாலைவேளை அவள் எல்லோருடனும் இருந்து விடைபெற்று அருகில் இருந்த போராளிகளின் பாசறை ஒன்றில் சேர்ந்துகொள்கிறாள். அதற்குப் பின் நீண்டகாலம் அம்மாவை அவள் காணவேயில்லை. அடிப்படை இராணுவப் பயிற்சிகள் கூட இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. புதிய போராளிகள் எல்லோரையும் ஒன்றாக்கி அவர்களது பொறுப்பாளர் கதைத்தபோது ஷஇதுக்குள்ள யார் கரும்புலி? என்று கேட்டார். உடனே இவள் எழுந்துவிட்டாள்! இவளின் சிறிய தோற்றமும் எழுந்து நின்ற விதமும் அனைவரது பார்வையையும் இவள் பக்கம் திருப்பியது. ஒருகணம் அமைதி நிலவிக்கொண்டிருந்தது. மறுகணம் அவளைப் பார்த்து எல்லோரும் சிரிக்கத் தொடங்கினார்கள்.

அவளிற்கு அவர்கள்மேல் ஆத்திரமும் கோபமும்தான் வந்தது. எதுவும் பேசாமல் மௌனமாக நின்றாள். அடிப்படை இராணுவப் பயிற்சிகள் ஆரம்பமானது. நீண்டதூரம் வேகமாக ஓடக்கூடியவள் பயிற்சிகளில் சிறந்து விளங்கினாள்.

அடிப்படைப் பயிற்சிகள் முடிய சிறுத்தை சிறப்புப் படையணிக்குச் சென்றாள். அங்கே சிறப்புப் பயிற்சியும் வெடிமருந்து பற்றிய கல்வியும் கற்றாள். அங்கிருந்து முல்லைத்தீவுச் சண்டைக்குச் சென்றவள் மீண்டும் சிறுத்தை அணியில் இணைந்துகொண்டாள். முல்லைத்தீவுச் சண்டையில் பட்ட சிறுகாயம் மருத்துவமனையில் சிறிதுகாலம் ஓய்வில் நின்றாள். இந்த நாட்களில்தான் நினைவுகள் அவளை சிறிது சிறிதாய் சித்திரவதை செய்தன.

கொக்குத் தொடுவாய் சண்டைக்கு அணிகள் புறப்பட்டபோது முகாமின் வாசல் காவல்கடமையில் நின்றது இவள்தான். அணி சென்றபோது இவள்தான் முகாமின் தடை திறந்து வழியனுப்பிவைத்தது. அவர்கள் கையசைத்து ஷஅண்ண எதிர்பார்க்கிறதைச் செய்துபோட்டு வருவம் என்று கூறிவிட்டுப் போனவர்கள் போனவர்கள்தான். வித்துடலாகப் பேழையில் வந்தார்கள். அதுவும்… நினைவுகள் அவளை ஆக்கிரமிக்கின்றபோதும் அவற்றைக் கலைத்துவிட நினைத்து வேறு எதையாவது சிந்திப்பாள். ஆனால் நினைவுகளோ அவளை நிழல்களைப்போல பின்தொடரும். இந்த நினைவுகளின் வேதனைதான் அவளிற்குப் பெரும் சுமையாக இருந்தது. அதுவே அவளின் இலட்சியத்திற்கு வலுச்சேர்த்தது.

அவள் இயக்கத்தில் இணைந்து பல வருடங்களின் பின் இயக்கவேலை காரணமாக ஒருநாள் வீதியால் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகச் சந்தித்த கச்சான்காறி அம்மாதான் என்று அடையாளம் கண்டபோதும்… இவ்வளவு நேரமும் வியாபாரம் செய்து பெற்ற சிறுதொகைச் சில்லறைக் காசையும் கைச்செலவுக்கென்று அம்மா கைக்குள் திணித்தபோதும்… அதை வேண்டினால் வீட்டில் இரண்டு தங்கைகளும் பட்டினிகிடக்க வேண்டிவரும் என்று அழுதபோதும்… நெஞ்சுக்குள் எவ்வளவோ ஏக்கங்கள் எழத்தான் செய்தன. ஆனால் அது குறுகிய வட்டத்திற்குள் நின்று சிந்திப்பதைப்போல அவளின் குற்ற உணர்வு உணர்த்தியது. இந்த உணர்வு பிறர் நேசத்தின் உச்சத்திலேயே உருவாகமுடியும்.

மற்றவர்களிற்காக வாழ்வதிலும் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக சாவைச் சுமக்கத் துணிந்த கரும்புலியல்லவா அவள்? கரும்புலி அணியிலிருந்த ஒவ்வொரு நாளிலுமே தான் இலக்கை தகர்க்கப்போகும் நாளை எண்ணிக்கொண்டேயிருந்தாள். இவளிற்கு இருந்த வயிற்றுப்புண் காரணமாக கடுமையான பயிற்சிகள் செய்வது கடினமானதாக இருந்தாலும் அவள் ஒருநாள் கூட ஓய்வறியாள். காய்ச்சல் என்றோ உடற்சோர்வென்றோ பயிற்சிகளில் இருந்து நின்றது கிடையாது.

“என்ர கையால சாஜ் கட்டி நான் ஆட்டியைக் கட்டிப்பிடித்தபடி ஆட்டியை வெடிக்க வைக்கவேணும் (சாஜ் – முக்கிய இலக்குகளை அழிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வெடிமருந்துப் பொதிகள்) என்று அடிக்கடி தோழர்களிடம் சொல்லிக்கொள்வாள்.

பயிற்சி முடிந்து ஓய்வான பொழுதுகளில் பூக்களைப் பறித்துவந்து முகாமில் அலங்கார வேலைகள் செய்வாள். ஒரு நாளைக்கு ஒரு மாதிரியான அலங்காரம் அப்படிச் செய்வதில் அவளுக்குத் தனிப் பிடிப்பு. சிலவேளை கறி சமைப்பாள். ஏனைய போராளிகளையும் அழைத்து தான் சமைத்த உணவைத் தானே பரிமாறி அவற்றின் சுவையெப்படி என்று அறிவதில் ஆர்வம் காட்டுவாள்.

இவளிற்கு மீன் குழம்பு என்றால் மிகவும் விருப்பம். அந்தக் கறியை மிகவும் சுவைபடச் சமைப்பாள். ஆந்திரா சண்டைக்குப் போய்விட்டாள். எவ்வளவு துடியாட்டமும் தான் நினைத்ததைச் செய்துவிடவேண்டும் என்பதில் ஆர்வமும் கொண்டவள். எப்பொழுதும் அவள் நினைத்தவற்றையே செய்துமுடிக்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்தவள். தன் இறுதி மூச்சிலும் தேசத்திற்குத் தேவையான வெற்றியை நிலைநாட்டிவிட்டு வீரகாவியமாகிவிட்டாள்.

31.03.2000 அன்று ஆனையிறவுத் தளத்தினைக் கைப்பற்றும் சமரிற்கு வலுச்சேர்ப்பதற்காய் தாமரைக்குளப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆட்லறி தளத்தினுள் நுழைந்து நான்கு ஆட்லறிகளைத் தகர்த்தெறிவதற்கு வழியமைத்துவிட்டு வெற்றியோடு திரும்பிக்கொண்டிருந்தவேளை இடையிலேயே இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேருக்கு நேரான மோதலில் வீரச்சாவடைகின்றாள். தேசத்தின் அழியாத வரலாறாய் காலம் இவளது பெயரையும் குறித்து வைத்திருக்கும்.

கேணல் இளங்கீரன் வீரவணக்கம்

வன்னியில் நடைபெற்று வரும் சமரில் 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார்.

சேட்டன் என அழைக்கப்படும் கேணல் இளங்கீரன் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நீண்டகாலம் இம்ரான்-பாண்டியன் படையணியில் பணியாற்றியவர். நிறையச் சமர்க்களங்களைச் சந்தித்தவர். லெப்.கேணல் அக்பரின் தலைமையில் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணி செயற்பட்ட காலத்தில் அவ்வணியின் தாக்குதற் தளபதிகளுள் ஒருவராகப் பணியாற்றியவர்.

ஓயாத அலைகள் – 3 இன்போது குடாரப்பில் தரையிறங்கிய புலியணிகள் இத்தாவிலில் பிரிகேடியர் பால்றாச்சின் தலைமையில் சண்டையிட்டபோது விக்ரர் கவச எதிர்ப்பு அணியையும் சமர்க்களத்தின் ஒரு பகுதியையும் வழிநடத்தியவர் இளங்கீரன்.

இவர் எல்லாளன் வீரகாவிய திரைப்படத்திலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

மாமனிதர் ஜெயக்குமார் வீரவணக்கம்

வீழ்ந்துபோன பெருவிருட்சம் மாமனிதர் ஜெயக்குமார்

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு மேற்குலக நாடுகளிலிருந்து கொண்டு வலுச்சேர்த்தவர்களில் மிக முக்கியமானவராக திகழ்ந்த மாமனிதர் தில்லை ஜெயக்குமார்

இவரைப்பற்றி அதிகம்பேர் அறிந்திருக்க மாட்டீர்கள். சாவுச் செய்தியையும் அதைத்தொடர்ந்த நிகழ்வுகளையும் தவிர்த்து இவர் பெயரைக்கூடக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

29.03.2007 அன்று வியாழக்கிழமை அதிகாலை திரு. தில்லை ஜெயக்குமார் அவர்கள் மெல்பேணில் அவரது வீட்டில் தனது 56 ஆவது வயதில் அகால மரணமடைந்தார். இறப்பின்பின் தமிழீழத் தேசியத்தலைவரால் தமிழீழத்தின் அதியுயர் விருதான ‘மாமனிதர்’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

தனது இருபதுகளில் இங்கிலாந்து சென்று பொறியியற்றுறை உட்பட்ட பட்டப்படிப்புக்களை நிறைவுசெய்து தாயகம் திரும்பினார். பின் 1982 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தார். அதன்பின் நிரந்தரமாக அவுஸ்திரேலியாவில் தங்கிவிட்டார். 1984 இல் திருமணம் முடித்தார். மகனொருவர் இருக்கிறார்.

அவுஸ்திரேலியாவிலிருந்த ஈழத்தமிழர்களை ஒருங்கிணைப்பதிலும், ஈழப்போராட்டத்தோடு மக்களை ஒன்றிக்க வைப்பதிலும் அயராது உழைத்து உறுதியான கட்டமைப்பொன்றை அவுஸ்திரேலியாவில் ஏற்படுத்தினார். எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து பல்வேறு அமைப்புக்களை உருவாக்கி, ஏற்கனவே இருந்த அமைப்புக்களை ஒருகுடையின்கீழ் ஒருங்கமைத்து, சாகும்வரை அயராது உழைத்தவர் இவர். அவுஸ்திரேலியா மட்டுமன்றி நியூசிலாந்து உட்பட்ட தென்துருவ நாடுகள் அனைத்திலும் தமிழர் அமைப்புக்களின் உருவாக்கத்துக்கும் அவற்றின் ஈழப்போராட்டச் செயற்பாட்டுக்கும் அடித்தளமிட்டவர் இவரே. இன்று தென்துருவப் பகுதியில் ஈழத்தவரின் அரசியல் அமைப்புக்கள் வலுவாகவும் செயற்றிறன் மிக்கனவாகவும் இருக்கிறதென்றால் முப்பது வருடங்களுக்கு முன்பிருந்து திரு. தில்லை ஜெயக்குமார் அவர்களின் அயராத உழைப்பிலும் வழிகாட்டலிலும் வந்த வளர்ச்சியே.

மற்றநாடுகளின் புலம்பெயர்ந்தவர்களோடு ஒப்பிடும்போது தென்துருவ ஈழத்தவர்களின் புலப்பெயர்வு வித்தியாசமானது. தொடக்கத்தில் அகதிகளாக இடம்பெயர்ந்தவர்கள் இருக்கவில்லை. படித்த, மேல்தட்டு வர்க்க யாழ்ப்பாணத்தவர்களே பெரும்பாலானவர்கள். அதுவும் இனப்பிரச்சினை கூர்மையடைய முன்பே புலம்பெயர்ந்தவர்கள் பலர். பின்னர்தான் படிப்படியாக – அதுவும் மற்றநாடுகளோடு ஒப்பீட்டளவில் மிகக்குறைவாக ஈழஅகதிகள் தென்துருவத்துக்குப் புலம்பெயர்ந்தனர். எண்பதுகளின் தொடக்கத்தில் இப்பகுதியில் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டுவதில் இருந்திருக்கக்கூடிய சிக்கலை, கடினத்தன்மையை இலகுவாகப் புரிந்துகொள்ளலாம். அந்தநேரத்திலும் சரி இப்போதும் சரி அவுஸ்திரேலியாவில் சிங்களவர்களே பெரும்பான்மையாக உள்ளநிலையில், அதுவும் ஜே.வி.பியின் தீவிர ஆதரவுத்தளமாக இருக்கும் நிலையில், அரசியல் மட்டத்தில் மிகநெருக்கமான தொடர்புகளையும் பரப்புரைகளையும் சிங்களவர் பேணிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இவை மிகப்பெரிய சிக்கலுக்குரிய விடயம்தான். ஆனாலும் திரு. ஜெயக்குமார் அவர்கள் திறமையாக அதைச்செய்தார். கல்விச் சமூகத்தை ஈழப்போராட்டத்துக்கு உறுதுணையாக்கினார்.

பல்கலைக்கழகமொன்றில் முழுநேர விரிவுரையாளராகத் தொழில்புரிந்தார். அதைவிட ஈழப்போராட்டத்துக்கான தனக்குரிய பணியை மேலதிகமாகச் செயதார். அவுஸ்திரேலியா என்று எடுத்துக்கொண்டாலே ஒவ்வொரு மாநிலத்துக்குமான பயணத்தூரம் மிகமிக அதிகம். அதைவிட நியூசிலாந்து, பீஜி, மொறீசியஸ, மலேசியா என்று தனது பணிக்குரிய இடங்கள் அனைத்துக்கும் இடைவிடாது பயணம்செய்து தன்பணியைச் சிறப்புற ஆற்றினார். பயண அலைச்சல்களிலேயே அவர் பலநாட்களைக் கழித்தார்.

2004 ஆம் ஆண்டு ஆசியாவைத் தாக்கிய ஆழிப்பேரலையில் தமிழீழமும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டது. உலகத்தின் கண்களிலிருந்து மறைக்கப்பட்ட பகுதியாக அது இருந்தது. சரியான முறையில் உலக உதவிகள் சென்று சேரவில்லை. தமிழீழம், ஆழிப்பேரலை அனர்த்தத்திலிருந்து மீண்டது அதன் தளத்திலும் புலத்திலிருமிருந்த தமிழர்களால்தான். அந்த அனர்த்த நிவாரணப்பணியில் முக்கிய பாத்திரம் திரு. ஜெயக்குமார் அவர்களுக்குமுண்டு.

ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்தபோது திரு ஜெயக்குமார் அவர்கள் தாயகத்தில்தான் நின்றார். உடனடியாகவே களத்திலிருந்து துரிதமாகச் செயற்பட்டார். துருவப் பகுதியிலிருந்து மருத்துவ உதவி, தொண்டர் சேவை, பொருளுதவி என்பவற்றைத் திரட்டி தாயகம் அனுப்ப ஏற்பாடுகள் செய்தார். அனைவரையும் ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்தி உதவிகளை உரியமுறையில் விரைவாகக் கிடைக்கும்டி நடவடிக்கையெடுத்தார். அவரின் வழிகாட்டலிலும் ஒருங்கிணைப்பிலும் ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப்பணிகளின் ஒருபகுதி சிறப்பாக நடைபெற்றது.யுத்தநிறுத்த ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலத்தில் புலம்பெயர்ந்தவர்கள் பலர் தாயகப்பகுதியில் தமது புலமையைப் பகிர்ந்திருந்தனர். நுட்பியல் கற்கை நெறிகளில் பல்வேறு நாடுகளில் இருந்தும் புலம்பெயர்ந்த புலமையாளர்கள் கலந்துகொண்டு கற்பித்தார்கள். அவ்வகையில் தென்துருவ நாடுகளில் இருந்தும் கணிசமான பங்களிப்பு வழங்கப்பட்டது. திரு. ஜெயக்குமார் அவர்கள் இவற்றை ஒருங்கிணைத்துச் சரிவரச் செய்திருந்தார். பலநவீன நுட்பங்களைத் தாயகத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்த்ததில் பெரும்பங்காற்றினார். (காகம் இருக்கப் பனங்காய் விழுந்த கதையாக, இவர்தான் புலிகளுக்கு விமானத்தைக் கொண்டுபோய்க் கொடுத்தார் என்று ஏசியா ரிபியூன் உட்பட்ட புலியெதிர்த்தரப்பு இப்போது புலம்பிக்கொண்டிருப்பது வேறுகதை)தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் இவர்மேல் எவ்வளவு பாசமும் நம்பிக்கையும் வைத்திருந்தார் எனபதை இவரின் இறப்பின் பின்னான கதைகளில் இருந்து அறிந்துகொள்ள முடியும். இவரது இறுதி வணக்க நிகழ்வில் அரசியற்றுறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் வன்னியிலிருந்து வழங்கிய இரங்கலுரையை ஒளிபரப்பினார்கள். அவற்றில் திரு ஜெயக்குமார் அவர்களின் இழப்பு அவர்களிடத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகளை உணரமுடிந்தது.

திரு. ஜெயக்குமார் அவர்கள் ஓர் இசைக்கலைஞனும்கூட. எண்பதுகளின் தொடக்கத்தில் “மெல்பேண் மெல்லிசைக்குழு” என்ற பேரில் ஈழத்து இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கிய இசைக்குழுவில் திரு. ஜெயக்குமார் அவர்கள் கிட்டார் வாத்தியக்கலைஞராகப் பங்காற்றினார். (ஆட்கள் மாறிவந்தாலும் இக்குழு இப்போதும் செயற்றிறனுடனுள்ளது).

திரு. ஜெயக்குமார் அவர்களின் வாழ்வில் சகமனிதர்களுக்கு இணையாக நீங்கா இடம்பெற்றவை மீன்கள்.

மீன்வளர்ப்புப் பைத்தியம் என்றே சொல்வார்கள். தனது நாலாவது வயதில் ஹோர்லிக்ஸ் போத்தலொன்றில் மீன் வளர்த்தது தொடக்கம் இறக்கும்வரை மீன்கள்! மீன்கள்! மீன்கள்! என்றே வாழ்ந்தார்.

இவருக்கு நெருங்கியவர்களின் கூற்றுப்படி யாழ்ப்பாணத்தில் தனது பாடசாலைக் காலத்தில் ஐந்து மீன்தொட்டிகள் வைத்திருந்தவர், இங்கிலாந்தில் பொறியியற்றுறையில் பட்டப்படிப்பு முடித்துத் தாயகம் திரும்பும்போது முப்பது மீன்தொட்டிகளில் பல அபூர்வ வகை மீன்களை வளர்த்துவந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். மெல்பேணில் அவரது இறுதிக்காலம்வரை மீன்கள் வளர்த்து வந்தார்.

சிறந்த நிர்வாகி. அதிர்ந்து பேசாதவர். எந்நேரமும் ஒரு புன்சிரிப்போடுதான் அவரைப்பார்க்கலாம். பிரச்சினைகளை, கவலைகளை, அழுத்தங்களை வேறுயாருக்கும் காட்டிக்கொண்டதில்லை. ஈழப்போராட்ட அரசியலில் இயல்பாகவே எதிர்த்தரப்பினரிடமிருந்து வரக்கூடிய எதிர்ப்புக்கள், கேலிகள், ஆத்திரமூட்டும் செயற்பாடுகள், விமர்சனங்கள் என்பவற்றைப் பொறுமையாகவே எதிர்கொண்டார். எச்சந்தர்ப்பத்திலும் ஆத்திரப்பட்டோ நிதானமிழந்தோ செயற்பட்டதில்லை.

மிகநேர்மையான நல்லமனிதனை, சிறந்த நிர்வாகியை, கடுமையான உழைப்பாளியை, தென்துருவத்தில் ஈழப்போராட்ட அரசியற் செயற்பாட்டுக்கு அத்திவாரமிட்டவரை, அதைத் திறமையாகக் கட்டியெழுப்பியவரை இன்று ஈழத்தமிழினம் இழந்துநிற்கிறது. ஈழப்போராட்டத்தின் புலம்பெயர்தமிழர் செயற்பாட்டுக்கான அத்தியாயத்தில் மாமனிதர் திரு. தில்லை ஜெயக்குமார் அவர்களுக்கு என்றுமே நீங்கா இடமுண்டு.

3 ம் ஆண்டு வீரவணக்கங்கள்

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடகப் பணிகளை திறம்படச் செய்த லெப்.கேணல் சிறீ

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடக மற்றும் தகவல் ஆவணப்படுத்தல் பணிகளையும் திறம்படச் செய்து வந்த லெப்.கேணல் சிறீ அல்லது குமரச்செல்வன் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக விடுதலைப் போராட்டப் பணியை ஆற்றிவந்த லெப். கேணல் சிறீ, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் தகவல் மொழிபெயர்ப்பு ஆவணப்பகுதியில் பொறுப்பாளராக செயற்பட்டு வந்தார்.

இதன் ஊடாக ஊடகப் பணியினை திறம்பட செய்து வந்த இவர், அனைத்துலக உடகவியலாளர்களின் அறிமுகங்களையும் தொடர்புகளையும் ஏற்படுத்தினார்.

அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் அறிவியல் மேம்பாட்டுக்கான தகவல்களையும் ஆவணங்களையும் சேகரித்து விடுதலைப் புலிகளின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ஆவணப்படுத்தி வந்துள்ளார்.

மேலும், சிறந்த விளையாட்டு வீரராகவும் விளங்கினார். குறிப்பாக துடுப்பாட்டத்தில் இவர் சிறந்து விளங்கினார்.

இதே காலப் பகுதியில் வன்னிப் பகுதியில் நடந்த மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான துடுப்பாட்ட சுற்றுப் போட்டிகளில் இவர் சிறப்பாக செயற்பட்டு வந்தார்.

யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான இவர், தனது இருபதாண்டு காலத்தில் தாயக விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கான பக்கங்களில் தனது பணியை தனித்தன்மையுடன் சிறப்பாக செய்து வந்தார்.

சிவானந்தராஜா சஞ்சீவன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

தாயக விடுதலைப் போராட்டத்தில் எதிரியின் வல்வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான களத்தில் லெப். கேணல் சிறீ தனது இன்னுயிரை ஈர்ந்தார்.

————————–
விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலி-ஒளிபரப்புத் தொழில்நுட்பவியலாளர் லெப்.கேணல் மதியழகன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலிபரப்புத் தொழில்நுட்பவியலாரும் அறிவிப்பாளரும் ஊடகவியலாருமான மதி என்று அழைக்கப்படும் லெப்.கேணல் மதியழகன் வீரச்சாவடைந்துள்ளார்.

லெப். கேணல் மதியழகன் மின்னியல் நுண் தொழில்நுட்பத்தில் மிகவும் திறமையானவராகச் செயற்பட்டார்.

புலிகளின் குரலில் முதன்மை ஒலிபரப்பு மையத்தின் ஒலிபரப்புத் தொழில்நுட்பத்தையும் தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் ஒளிரபரப்புத் தொழில்நுட்பத்தையும் திறம்படச்செய்தவரும் இவர் ஆவார்.

அத்துடன் செய்மதி தொடர்புகள், செய்மதி வழியிலான ஒலி, ஒளிபரப்புத் தொழில்நுட்பத்தையும் இவர் திறம்பட நெறிப்படுத்தினார்.

ஊடகத்துறையில் மிக நுட்பமான தொழில்நுட்பவியலாளரான லெப். கேணல் மதியழகன், சிறிலங்கா படையினருக்கு எதிரான களத்தில் எதிரியுடன் மோதி வீரச்சாவடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும் திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்ட இவரின் இயற்பெயர் ச.கிருபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

———————————


————————————————

போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி


வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றிய போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி வீரச்சாவடைந்துள்ளார்.

சிறிலங்கா அரசின் பயங்கரவாத படைகள் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் வருகின்றனர்.

இந்த மக்களுக்கான சிகிச்சைப் பணிகளை முதன்மையாகச் செய்து கொண்டிருந்த நிலையில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் லெப். கேணல் கமலினி வீரச்சாவடைந்துள்ளார்.

ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலில் விழுப்புண்பட்ட இவர், விடுதலைப் புலிகளின் மருத்துவ பிரிவில் இணைந்து மருத்துவ கல்வி கற்று மருத்துவர் ஆனார்.

மக்களுக்கான மருத்துவ பணிகளில் இவர் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்டார்.

நான்காம் ஈழப் போரில் மடு தொடங்கி சகல பகுதிகளிலும் மக்களுக்கான மருத்துவ சேவையினை போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி செய்து வந்தார்.

————————-

02-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச் சாவடைந்துள்ளார்.
வீரவேங்கை புயலவன் (நவராசா விஜயகுமார், மட்டு மாவட்டம்) என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார்

03-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச் சாவடைந்துள்ளார்.

கப்டன் பாவலன் (தேவராசா துஸ்யந்தன், யாழ். மாவட் டம்) என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார்.
05-02-2009 அன்று இரண்டு போராளி கள் வீரச்சாவடைந்துள்ளனர்.

கப்டன் கோதைச்சீரன் (குலசிங்கம் வசந்தகுமார், கண்ணன் கோவில் அருகாமை, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி)

மேஜர் சுதர்மினா (சிவராஜலிங்கம் சிவமதி, வற்றாப்பளை, முள்ளியவளை, முல்லைத்தீவு, த.மு: கணேஸ் திட்டம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு) ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்களாவர்.

07-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

லெப். வினோதினி (நற்குணம் ஜெயந்தி, மட்டு, மாவட்டம்) என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார்











22.01.2009
லெப்.இன்பரன் (சிவபாதம் பிரதீபன், வன்னிய சிங்கம் வீதி, ஆனந்தபுரம், கிளிநொச்சி. த.மு.4ஆம் முகாம் ஷஆ|பகுதி தேவிபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.)என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார்.
25.01.2009
லெப்.அருள்க்கீரன் (யோகநாதன் றொபேட் ரொசான்,இல.325, கரியாலை நாகபடுவான், முழங்காவில், கிளிநொச்சி. த.மு.சுதந் திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்;தீவு.)
2ஆம் லெப்.அறிவுமறவன் (சண்முகநாதன் ஜீவகரன், குரவில் உடையார்கட்டு தெற்கு, முல்லைத் தீவு.)
லெப்.கேணல் சாந்தகுமார் (சிறிரங்கநாதன் கேதீஸ், யாழ். மாவட்டம், த.மு.உயிலங்குளம் வீதி, துணுக்காய், முல்லைத்தீவு. வே.மு. உடையார்கட்டு வடக்கு, முல்லைத் தீவு.)
லெப்.மகான் (பிரபாகரன் ஜெயந்தன், யாழ். மாவட்டம். த.மு.சுதந்திரபுரம், உடை யார்கட்டு, முல்லைத்தீவு.)ஆகிய போராளிகளே வீரச்சா வடைந்தவர்களாவர்.
26.01.2009
கப்டன் தணிகைவேல் (நடராசா உதயகுமார், திருமலை மாவட்டம். த.மு.இளங்கோ குடியிருப்பு, மூங்கிலாறு, உடையார்கட்டு, முல் லைத்தீவு.)
2ஆம் லெப்.இன்குயில் (பூலோகசிங்கம் தர்சினி, வவுனியா மாவட்டம். த.மு.சின்னடம்பன், நெடுங் கேணி, வவுனியா.)
லெப்.கேணல் கோபி (திருநாவுக்கரசு சதீஸ்குமார், யாழ். மாவட்டம். த.மு.இல.16ஃ02, விசுவமடு, முல்லைத்தீவு, வே.மு.சுதந்திரபுரம் பாட சாலை, உடையார்கட்டு, முல்லைத் தீவு.)
வீரவேங்கை கயலேந்தி (மரியதாஸ் மரியநேசன், மன்னார் மாவட்டம். த.மு.மாயவனூர், வட்டக் கச்சி, கிளிநொச்சி.)
லெப்.நிதன் (வல்லிபுரம் ரஜீவ், யாழ்.மாவட்டம். த.மு.12ஆம் கட்டை, விசுவமடு, முல் லைத்தீவு.)ஆகிய போராளிகளே வீரச்சா வடைந்தவர்களாவர்.

07.02.2009

கப்டன் குலவிழி (கங்கேஸ்வரன் யசோதினி, யாழ். மாவட்டம்.) என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார்.
08.02.2009
மேஜர் தளிர் (குலசேகரம் குலமதி, யாழ்.மாவட் டம். த.மு.1ஆம், வட்டாரம், புதுக்குடி யிருப்பு, முல்லைத்தீவு.)
மேஜர் கயல்குன்றன் (பேதுரு இருதயராஜ், மன்னார் மாவட்டம்.)ஆகிய போராளிகளே வீரச்சா வடைந்தவர்களாவர்.
09.02.2009
மேஜர் வசந்தி (வீரன் மோகனாதேவி, இல.341, 6ஆம் யுனிற், தருமபுரம், கிளிநொச்சி.)
லெப்.உலகரசன்(மரியதாஸ் அமலராஜ், இல.38, அண்ணாவீதி, ஆனந்தபுரம், கிளி நொச்சி.)

01-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

கப்டன் செஞ்சுடர் (இராசலிங்கம் வேலுகோபால், இல: 80, 155ஆம் கட்டை, கிருஸ்ணபுரம், கிளி நொச்சி) என்ற போராளியே வீரச் சாவடைந்துள்ளவராவார்.

02-02-2009 அன்று நான்கு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

வீரவேங்கை எல்லாளன் (வேலாயுதம் சுதர்சன், யாழ். மாவட்டம், த.மு: ஆ. பகுதி, தேவிபுரம், புதுக்குடி யிருப்பு, முல்லைத்தீவு)

லெப். அலைமதி (அமிர்தலிங்கம் ஜெயதாசன், திரு கோணமலை மாவட்டம், த.மு: பொன்நகர் மேற்கு, கரைதுறைப்பற்று, புதுக்குடி யிருப்பு, முல்லைத்தீவு, வேறு முகவரி: 200 வீட்டுத் திட்டம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)

கப்டன் இளங்குமரன் (யோகப்பிரகாசம் திவாகரன், திருகோணமலை மாவட்டம், த.மு: வசந்தம் குடியிருப்பு, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)

கப்டன் அஞ்சிக்குமரன் (ஏகாம்பரநாதன் கோகுலன், மட்டு. மாவட்டம்) ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்களாவர்.
03-02-2009 அன்று ஏழு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

கப்டன் மெய்யப்பன் (சிவசுப்பிரமணியம் வேலுகாசன், இல: 9802, திருவையாறு, கிளிநொச்சி)

லெப். கலைஒளி (விஜயரத்தினம் தட்சாஜெனனி, யாழ். மாவட்டம், த.மு: றெட்பானா, விசுவமடு, முல்லைத்தீவு)

மேஜர் சிந்துக்குமரன் – வேலன் (முத்துலிங்கம் அரியநாயகம், மட்டு, மாவட்டம்)

லெப். கேணல் மயூரதன் (செபஸ்ரியான் அரியநாயகம், மன்னார் மாவட்டம், த.மு: இரத்தினபுரம், கிளி நொச்சி, வேறு முகவரி சுதந்திரபுரம் உடையார்கட்டு;, முல்லைத்தீவு)

வீரவேங்கை மருதன் (ஆறுமுகம் தவகரன், முப்பெரும் தேவியார் கோவில், முன்பாக, உடையார்கட்டு, முல்லைத்தீவு)

கப்டன் அறிவு (ஆதிராம்பிள்ளை தேவநாயகம், பிரமந்தனாறு, விசுவமடு, முல்லைத்தீவு)

கப்டன் திருமாள் (மகாதேவன் பிரபாகர், திருமலை மாவட்டம், த.மு: ரகு திட்டம், சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு)

ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்துள்ளவர்களாவர்.
03-02-2009 அன்று தலைமைக்காவலர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

தலைமைக்காவலர் பார்த்தீபன் (உதயகுமார் பார்த்தீபன், இல: 481, 10 யூனிற், தருமபுரம், கிளிநொச்சி, த.மு: சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு) என்ற தலைமைக்காவலரே வீரச்சாவடைந் துள்ளவராவார்.
04-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.
மேஜர் கிருபன் (அத்தோனிப்பிள்ளை ஜெயசீலன், 08ஆம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, த.மு: செம்மலை குன்று, இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு) என்ற போராளியே வீரச்சாவடைந்துள்ள வராவார்.

04-02-2009 அன்று கடற்கரும்புலி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.
கடற்கரும்புலி மேஜர் செஞ்சுடர் (தர்மலிங்கம் சயந்தினி, யாழ். மாவட்டம், த.மு: செந்தமிழ் பல்பொருள் வாணிபம், நாச்சிக்குடா, முழங்காவில், கிளிநொச்சி) என்ற கடற்கரும்புலியே வீரச்சாவடைந்துள்ளவராவார்.
இம் மாவீரர்களுக்கு வீரவணக்கம்

வரலாறுகளில் வான்படை கண்ட முதல் தமிழன் நாள்


தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படைப்பலத்தில் தரைப்படை, கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக வான்படை என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள் இந்த நாள்.

இந் நாள் அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான ஒரு மரபுவழி குண்டு வீச்சு தாக்குதலுடன் தமது முதலாவது வான் தாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்திய நாள் [ மார்ச் 26, 2007 ] இன்று…!!

வான்புலிகள் (Tamileelam Air Force – TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு.

வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், ‘வானோடி’ என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர். வான்புலிகள் வரலாறு 85, 86 காலப் பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்கதொடங்கி விட்டார்கள்.

செப்டம்பர் 27, 1998 – 1998ம் ஆண்டு மாவீரர்தின உரையின்போது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் வான்புலிப் படைப்பிரிவு தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அந்நிகழ்வின்போது வான்புலிகளுக்கு சொந்தமான வான்கலத்திலிருந்து பூக்கள் தூவப்பட்டதாக நேரில்பார்த்தவர்களுடைய அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வான்புலிகள்  விக்கிப்பீடியாவில் இருந்து.

http://ta.wikipedia.org

*2000 – ‘வான்புலிகள் ஆண்டு’ என தமிழீழ விடுதலைப்புலிகளால் அறிவிக்கப்பட்டது*

——————-

புலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்


விடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்கள் வன்னி வான்பரப்பில் முதல் முதல் பறப்பில் ஈடுபடும் போது எமது தேசிய தலைவர் அவர்களால் பார்வையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.

பின்னர் அவை தாக்குதலுக்காக புலிகளால் மாற்றி வடிவமைக்கப்பட்டது. கமபிளக் எனப்படும் வரி நிறம் பூசப்பட்டு தாக்குதலுக்கு தயாரானது.

தென்னிலங்கையில் சுமார் 7 முறை பறப்பில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக வன்னி திரும்பிய இவ் விமானங்கள், உலகின் முதல் முதல் விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்றின் வான்படை என்ற புகழைப் பெற்றது. கடைசி நேரத் தாக்குதலில் இவ்விரு விமானங்களும் சிங்கள இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

பறப்பில் ஈடுபட்டிருக்கும் விமானங்களை பொட்டுஅம்மான், கேணல் ஜெயம், கேணல் விதுஷா, காஸ்ரோ பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் கேணல் தீபன் ஆகியோர் முறையே பார்வையிடுகின்றனர்,

மற்றும் பொட்டுஅம்மானையும், தமிழ்ச்செல்வன் அவர்களையும் விமானிகள் ஏற்றி பறப்பில் ஈடுபட்டுள்ளதையும் காணலாம்.

———-


 

கேணல் சங்கர் என்று அழைக்கப்பட்ட வித்தியாலிங்கம் சொர்னலிங்கம் தலைமையில் வான்புலிகள் பிரிவுதொடங்கப்பட்டது. டிசம்பர் 2001 அவர் கொல்லப்படும் வரை வான்புலிகள் பிரிவின் தலைவராக செயற்பட்டார்.

ஜனவரி 26, 2005 – இரணைமடு விமான ஓடுதளம் பற்றிய இலங்கை இராணுவ அறிக்கை

ஆகஸ்டு 11, 2006 – யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி வான்படைத்தளம் (இலங்கை இராணுவத்தினருக்கு சொந்தமானது) வான்புலிகளால் வான்கலங்களை பயன்படுத்தித் தாக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற ஊகங்களை உருவாக்கும்படியான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மார்ச் 26, 2007 – அதிகாரப்பூர்வமாக விடுதலைப்புலிகளால் உரிமை ஏற்கப்பட்ட முதலாவது வான் புலித் தாக்குதல் 26 மார்ச் 2007 இல் இலங்கை கட்டுநாயகா விமானப்படைத்தளத்தின் மீது நடத்தப்பட்டது.

26 ஏப்ரல் 24, 2007: பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தின.

ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ளகொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய்குதங்களையும் குண்டு வீசி தாக்கின.

ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய்குதங்களையும் குண்டு வீசி தாக்கின.

அக்டோபர் 22, 2007 – எல்லாளன் நடவடிக்கை 2007: அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது அதிகாலை வான், மற்றும் தரை என நடத்திய இரு முனைத் தாக்குதலில் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டு 13 படையினர்கொல்லப்பட்டனர்.

வான்புலிகள் நடத்திய தாக்குதல், வெளியிடப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவை அடிப்படையில் புலிகளிடம் 2-5 இலகுதர வான்கலங்கள் உண்டு எனக்கருதப்படுகிறது.

இவை செக் நாட்டு இசட்-143 வகை விமானங்களாக இருக்கலாம் என்று இலங்கை அரசு கருதுகின்றது. இவை தவிர வான்புலிகளிடம் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய பிற வான்கலங்களும், உலங்குவானூர்திகளும் இருக்கலாம்.

முதல் தாக்குதலில் வான்கலங்களேடு பொருத்தப்பட்ட சில இணைப்புப் பாகங்கள், விமான ஓட்டிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலத்திரனிய குண்டு விடுவி மற்றும் குண்டுகள் ஆகியவை உள்ளூர் தயாரிப்புக்கள்.

இவை விமானங்கள் பற்றிய தொழில்நுட்ப வளம் புலிகளிடம் இருப்பதைக் காட்டுகின்றது. கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது வீசப்பட்ட 4 குண்டுகளில் 1 வெடிக்கவில்லை. வெடிக்காத ஒன்றை ஆராய்ந்த இலங்கை அரச தரப்பினர் இவற்றில் பல நூற்றுக்கணக்கான உருக்கு உருளைகள் கொண்ட உள்ளூர்த் தயாரிப்பென சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் இராணுவப் புலனாய்வு ஆசிரியர் இக்பால் அத்காஸ் தெரிவித்தார்.

வான்கலத்தை இரவில் ஓட்டிச் சென்று ஓர் இலக்கை அழிக்கும் திறன் இலகுவில் பெறக்கூடிய செயற்திறன் இல்லை. மாறாக, நீண்ட கால படிப்பறிவும், பட்டறிவும் தேவை. வான்புலிகளின் இத்திறன் கட்டுனாயக்க விமானத் தளத் தாக்குதலுக்கு அடுத்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது

தொடக்கத்தில், வான்புலிகள் யப்பானிய கமிகாச போன்று தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தலாம் என்று இராணுவ ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் தமது முதல் தாக்குதலில் இரவில் சென்று ஒரு இலக்கைதாக்கி மீண்டதன் மூலம் இவர்களின் தாக்குதல் திறனும் முறையும் தற்கொலைத் தாக்குதல்களாக மட்டுமே அமையும் என்ற கருத்தை பொய்ப்பித்துள்ளது.

விமானம் வாங்குவதில் இருக்கும் செலவு, விமான ஓட்டிகளாக பயிற்சி பெறுவதில் இருக்கும் சிரமம் ஆகியவற்றைகருத்தில் கொண்டு தற்கொலைத் தாக்குதல்கள் கடைசி கட்ட நடவடிக்கைகளாகவே இடம்பெறலாம் என்று தற்போது கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் பிளிற்ஸ்கிறீக் முறையான தாக்குதல் நடவடிக்கைகளிலும் வான்புலிகள் ஈடுபடலாம் என்று கருதப்படுகின்றது.

வான்புலிகளின் தோற்றத்துக்கு தலைமை ஏற்றவராக கருதப்படும் கேணல் சங்கர் “சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்தார். அதன் பின்னர் கனடா சென்றஅவர், அங்கு ஏர் கனடா விமான நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றியுள்ளார்.”

வான்புலிகள் பிரான்சிலும் ஐக்கிய இராச்சியத்திலும் ஓட்டுனர் பயிற்சியைப் பெற்றிருக்கலாம் என்று பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அதாஸ் “Intelligence sources” முன்வைத்து கருத்து தெரிவித்திருக்கின்றார்.

இந்த தொழில் நுட்பத்தை மலேசியாவில் இலங்கைத் தமிழ் பின்புலத்தைக் கொண்டவரால் இயக்கப்படும் ஒருவிமான பராமரிப்புப் பயிற்சி கல்லூரியிலும் விடுதலைப் புலிகள் பெற்றிருக்கலாம் என கருத்துப்பட The Island பத்திரிகையும் Asia Tribune தகவல்கள் வெளியிட்டுள்ளன.





————————

Tigers confirm Air wing

[TamilNet, Friday, 27 November 1998, 15:55 GMT]
The Voice of Tigers (VoT) radio said in its night broadcast today that aircraft of the Air Tigers sprinkled flowers on the LTTE’s Heroes’ memorials in the Vanni this evening during the Maaveerar day ceremonies.

The radio did not specify the number of aircraft which flew today or whether they were helicopters or fixed wing planes.

The announcement comes after weeks of speculation that the Liberation Tigers had established an air wing, following press reports that unidentified aircraft had been spotted in the Vanni.

Despite denials by the Sri Lankan Deputy Defence Minister that the reports were untrue, defence analysts said there was credible evidence that the Tigers were in possession of at least one aircraft.

Chronology:

Related Articles:
02.11.08   LTTE planes drew Indian embassy gunfire as Rajapaksa moved t..
01.11.08   LTTE leader decorates Tiger airmen, heroes of Vavuniyaa miss..
29.10.08   Turbines damaged in TAF airstrike on power plant, one killed
28.10.08   Tigers launch airstrike in Mannaar, Colombo
09.09.08   Indian radar operators wounded in Vanni SF HQ
09.09.08   Vanni SF HQ attacked
27.08.08   Airstrike targeted SLN Eastern HQ – LTTE
01.11.07   Pirapaharan decorates LTTE heroes of Anuradhapura
27.10.07   Did LTTE plane down SLAF helicopter?
27.10.07   Anuradhapura losses worse than Katunayake’s – Athas
23.10.07   Key spy plane amongst SLAF’s $40m losses – reports
22.10.07   Tigers claim Anuradhapura air base attack success, say 8 air..
21.10.07   Tigers launch air, ground attack on Anuradhapura air base
02.05.07   Tiger planes hit Sri Lanka economy
28.04.07   Air Tigers attack 2 targets in Colombo – LTTE
24.04.07   Barrage of gunfire as Tiger aircrafts complete bombing raid,..
23.04.07   Tiger aircrafts bomb Palaali military base
26.03.07   LTTE releases photographs of air mission
11.08.06   Tiger aircraft rockets Palaly base, curfew in Jaffna
27.11.98   Tigers confirm Air wing

கடற்கரும்புலிகள் மேஜர் நாவலன் , தமிழ்மாறன்,கப்டன் வானதி , கலைவள்ளி வீரவணக்க நாள்

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும் எதிரியுடன் களமாடத்துடித்த கடற்கரும்புலிகள்.

கப்டன் கலைவள்ளி ,மேஜர் நாவலன் ,மேஜர் தமிழ்மாறன் , கப்டன் வானதி ஆகிய எங்கள் வீரவேங்கைகள் எங்கள் தலைவனின் வழிகாட்டலில் 24.03.1997 அன்று எதிரியின் கடற்கலம் ஒன்று முல்லைத்தீவை நோக்கி வந்த அந்த கடற்கலத்தை தாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.

எதிரியின் கடற்கலத்தை எதிர்பார்த்து கடற் புலிகளுடன் காத்திருந்து கடலில் சண்டையிட்டு எதிரியின் கடற்கலத்தை சேதமாக்கி தமிழீழ வீரத்தின் வரலாற்று சொந்தமாக வீரமரணம் அடைந்தார்கள்.

இந்த மாவீரச் செல்வங்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

கரும்புலிகள் மேஜர் தனுசன் ,மேஜர் சுதாஜினி வீரவணக்கம்


திருகோணமலையில் நாளும் துயரச் செய்தியோடு விடியும் கிராமங்களில் ஒன்றில்தான் தனுசன் பிறந்தான். நாளுக்கு நாள் சுற்றிவளைப்புக்கள், கைதுகள், சித்திரவதைகள் என்று அந்த ஊரிற்கே பழகிப்போன அவலங்கள் அது.

நித்தம் ஒரு வீட்டில் ஒப்பாரி கேட்கும். சின்ன வயதில் காயங்கள் மேல் காயங்களாக அவனில் பதிந்த காட்சிகள் ஒவ்வொன்றும் மாறாத தளும்பாக என்றும் அவனின் நினைவில் இருந்தன. அந்த நினைவுகளிலிருந்து அவன் தன்னை மீட்டுக்கொள்ள முடியாதவனாய் அலைந்தான். அவன் சிந்திக்கத் தொடங்கியபோது அந்த நாட்கள் மிகக் கொடுமையானதாக இருந்தன. என்றாலும் அவனால் அம்மாவை மீறி எதையுமே செய்ய முடியாதவனாய் மனசிற்குள்ளேயே அடக்கிக் கொண்டான்.

அம்மாவிற்குத் தெரியாது மௌனமாய் ஒரு எரிமலை குமுறிக் கொள்வது. அவள் பாவம். எப்போதும் பிள்ளைகளுக்காகவே தன்னை தேய்ப்பதில் திருப்தி கண்டுகொண்டிருந்தாள். அவளைப் பொறுத்தவரை தன் எல்லாச் செல்வங்களும் தன்கூடவே இருந்துவிட வேண்டும் என்றதுதான் ஆசை.

”என்ர குஞ்சுகள் எல்லாம் என் னோடயே இருக்கவேணும்” என்று அவள் அணைக்கிறபோது, அவளின் மனதிற்கள் ஓராயிரம் கனவுகள் சிறகு விரிக்கும். அவளைப் பொறுத்தவரையில் தன்னைவிட்டு பிள்ளைகள் பிரிந்துவிடக் கூடாது என்ற நினைப்பு மட்டுமே இருந்தது.

“அண்ணா ஊருக்குவாற இயக்க அண்ணாக்களோட கதைக்கிறான்” என்று அவளின் சின்னமகன் வேர்க்ககளைக்க ஓடிவந்து சொல்லுகின்ற பொழுதெல்லாம் அவள் பெரிதாகப் பதறுவதில்லை. “அவன் என்னை விட்டுட்டு போகமாட்டான்.” என்று பிள்ளை மேல் அவள் வைத்த பாசத்தினாலும் நம்பிக்கையாலும் தம்பியை அமைதிப்படுத்துவாள்.


அவளைப் பொறுத்தவரை இப்போதும் அவன் சின்னப் பிள்ளையே. ஆனால், அவனின் செயற்பாடுகளோ வேறுவிதமாய் இருந்தது.

ஒழித்து ஒழித்து வரும் போராளிகளுக்கு சாப்பாட்டுப் பொதி எடுத்துச் சென்று கொடுப்பது, அவர்கள் ஊருக் குள் சேகரித்த அரிசி, பருப்புகளை சுமந்துகொண்டு அவர்களின் முகாம் வரை செல்வது, அவர்கள் வீதி கடக்க வேவுபார்ப்பது என்று அவனது ஒவ்வொரு செயற்பாடும் பெரிதாக, தேவையானதாக இருந்தது.

ஊருக்குள் சிறு காக்காய் குருவிக்குக் கூட இவனின் செய்கை எதுவும் புரியாது. மிக அமைதியானவன். அம்மா மீதும், சொந்தங்கள் மீதும், ஊரின் மீதும் அவனது உறவு வலுப்பெற வலுப்பெற அவனது போராட்டச் சிந்தனைகள் தீவிரமானது.

அவனது அப்பா, மரங்களை அறுத்துச் சீவி வியர்வை சிந்தும் தச்சுத் தொழிலாளி. அவரைச் சுற்றி வளைப்பொன்றில் இராணுவம் கைது செய்து கொண்டுபோனது. தங்கரா சாவை பிடிச்சுக்கொண்டு போட்டாங்களாம் என்ற சேதி அந்த ஊருக்கு வழமையான ஒன்றாய் போனாலும் அவனின் வீட்டில் அது பெரும் இடியானது. அன்றாடம் உழைத்து சரா சரியாக வாழ்ந்துகொண்டிருக்கும் எளிமையான குடும்பம் இந்தத் திடீர் இழப்பால் அவதியுற்றது.

வீட்டிலே அவனையும் தம்பி யையும் வைத்துக்கொண்டு அந்தச் சீருடையணிந்த மிருகங்களிடம் அம்மா இரந்து கேட்டபோதுகூட அவைகள் இரங்கவில்லை. அவளது கண்ணீரைப் போலவே கெஞ்சுதலும் வீணாய் சிந்தப்பட்டது.
தேசியத் தலைவர் அவர்களுடன் கரும்புலி மேஜர் தனுசன்
அப்பாவைக் கொண்டுசென்று விட்டார்கள். உதைத்து அப்பாவை றக்கில் ஏற்றிய காட்சி கண் முன்னே நடந்ததால் சித்திரவதைகள் எப்பிடி இருக் கும்…. மனசு நினைவிழந் தது. அன்றிலிருந்து அந்த வீட்டில் நேரத்திற்கு அடுப்பு புகையவில்லை. அம்மா பிள்ளைகளோடு அவர்க ளின் முகாம்களுக்கு அப் பாவை விசாரித்து அலைந் தாள். எங்கேயும் இல்லை.

ஒவ்வொரு முகாம் வாசலாய் ஏறி இறங்குகின்ற அவர்களின் நம்பிக்கை இப்போதும் அப்பா இருக்கின்றார் என்றதுதான். அது உண்மையானபோது சந்தோசப்பட முடியவில்லை. அப்பா வெளவால் போல தலைகீழாக தூங்கிக்கொண்டிருந்தார். அடிகாயங்களில் இருந்து இரத்தம் கசிந்து காய்ந்து போயிருந்தது. அந்த வதைமுகாமின் சின்ன இடை வெளிக்குள்ளால் இது மட்டுமே அவ னுக்குத் தெரிந்தது. அவன் அழுதான். அப்போது சின்னப் பெடியன்.

சிறிது நாட்களில் அப்பா வந்துவிட்டார். ஆனால் அப்பாவின் இயல்புநிலை இன்னும் வந்துசேர வில்லை. முன்போல வேலைசெய்ய இயலாமல் அவரின் உடல் அடி காயங்களால் நோய்வாய்ப்பட்டிருந்தது. “அம்மாவைப் பார்க்க அண்ணாக்கள் இருக்கிறார்கள். தம்பியும் வளர்ந்து அவனும் பார்ப்பான்தானே.”
அவன் இயக்கத்திற்கு புறப்படத் தயாரான போது இப்படித்தான் அம்மாக்காக அழும் மனசை திடப்படுத்திக் கொண் டான். போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ளவே அவனொரு போராட்டம் நடத்தவேண்டியிருந்தது. எந்த நாளும் கண்ணில் படுமளவிற்கு அங்கே போராளிகள் திரிவதில்லை. எப்பவாவது இடையிடையே அங்கே உலாவும் அவனிற்குத் தெரிந்த போரா ளிகளைக் கூட சில நாட்களாகக் காண வில்லை. அவனின் காத்திருப்பு பொறு மையின் எல்லைவரை கொண்டு சென் றது. அவனும் அவனோடு இன்னும் இருவரும் போராட்டத்தில் இணை வதற்காக ஊரின் ஒதுக்குப்புறத்தில் காட்டிற்குள் தெரிந்த போராளிகளின் பாசறை ஒன்றிற்குச் செல்வதற்கு புறப் பட்டார்கள். நீண்டதூரப் பயணம். இடையிடையே பயணத்தைக் குறுக் கிட்டு மூர்க்கத்தனமாக ஓடும் ஆறுகள். எல்லாம் சலிப்பில்லாமல் கடந்துவந்து அந்த காட்டுப் பாசறையில் தன்னைப் போராளியாக்கினான். ஏற்கனவே அப்பாவின் உடல்நிலையால் உடைந்து போயிருந்த அம்மாவிற்கு இவ னின் பிரிவு தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. அவள் எதிர் பார்க்கவே இல்லை இப்படி ஒரு பிரிவை. நாளும் நாளும் அம்மா தூஙகாமலேயே பிள்ளை வருவான் என்று விழித்திருந்தாள்.

எதை எதையோ வெல்லாம் நினைத்து மனதை வருத் திக் கொண்டிருந்தாள். ஒவ்வோரு நாளி லும் அவளின் செயற்பாடுகளில் ஒவ் வொன்று குறைந்தது. தன் கருமங் களை கவனிக்காமலேயே ஏதோ மனநோய் பிடித்தவளாய் அலைந் தாள். மகன் வருவான், வரு வான் என்றே சொல்லிக்கொண்டிருந்தாள். பொன்னம்மான் பயிற்சிப் பாச றையில் பயிற்சி முடித்து பாசறை விட்டு வெளியே வந்தபோது அவனிற் கும் அம்மாவின் சேதி அதிர்ச்சியாய் த்தான் இருந்தது.

“என்ர குஞ்சுகளெல்லாம் என் னோடையே இருக்கவேணும்” கட்டிப் பிடிச்சுக்கொண்டு அடிக்கடி அம்மா சொல்வது நினைவில் பாரமானது. ஆனால் ஓடிச்சென்று பார்க்கும் சந்தர்ப்பம் இருக்கவில்லை. வன்னிநோக்கி அவர்கள் வந்து பல மாதங்கள் ஆகியிருந்தது.

அவன் கிராமத்திற்குச் சென்று அம்மாவோடு சும்மா இருந்தால் இவனிற்கு பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது. அம்மாமீது வைத்திருந்த பாசத்தை அடக்கி வீரமாக்கிக்கொண்டு அவன் நினைத்துவந்த காரியத்தைச் செய்துகொண்டிருந்தான்.

சாள்ஸ் அன் ரனி படையணியில்தான் அவனது பணிகள் அனைத்தும் ஆரம்பமானது. வன்னியில் முக்கிய ஒருசில தாக்குதல்களிற்குச் சென்றுவந்த பின் லெப். கேணல் ராகவண்ணையுடன் கட்டளை மையத்தில் அவனது போராட்டப்பணி தொடர்ந்தன.

அறிக்கை எழுதுவது, ஆயுத விபரம் எடுப்பது என்று களத்தினில் நிகழும் மாற்றங்களையும் இழப்புக் களையும் வெற்றிகளையும் ஆவணமாக்கும் முக்கியமான பணியது. அங்கேதான் ஆரம்பப் பயிற்சி முகாமிலேயே உறவான உறவொன்று தொடர்ந்துகொண்டே வந்தது.

பிரிவு என்பதில் நொந்துபோயிருந்தவனிற்கு அரவணைக்க அன்புசெய்ய சகோதரன் மாருதியனின் பாசமிருந்தது. முதலில் அவனுடனான பாசம் பின் அவர்களின் வீடுவரை சென்றது. அந்த வீடு, அம்மா, அப்பா சகோதரிகள் எல்லாம் அவனின் நெருங்கிய உறவுகளானது. தனுசனின் வீட்டார் அவனிற்கு கடிதம் அனுப்புவதென்றால் அங்கே தான் அனுப்புவார்கள். மாருதியன் தனக்கு உடுப்பெடுத்தால், தனுசனுக்கும் சேர்த்தே எடுப்பான்.

இப்படி அவனின் உறவுகள் வலுப்பெற்றுக் கொண்டிருக்க உள்ளத்தில் இழப்புக்கள் உருவாகிக்கொண்டிருந்தன. வீரச்சாவு விபரம் எழுதி அவனது கை வைரம் பெற்றது. அதுவும் அவனோடு கூட இருந்தவர்கள், ஒன்றாய் பழகியவர்கள். ஒவ்வொரு போராள யின் பெயர்களும் நாளும் அவனின் மனதிற்குள் பெரும் எரிமலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தன.

இந்த நாட்களில்தான் அவனிற்குள் கரும்புலியாகச் செல்லவேண்டும் என்று முடிவெடுத்தான். தனது மனதிற்குள் இருந்தவற்றை தலைவனிற்கு எழுதி அனுமதி கேட்டான். அவன் போராட்டத்தில் இணைவதற்கு நிகழ்த்திய மனப் போராட்டங்களைப்போல கரும்புலி அணிக்கான அனுமதி கேட்டு காத்திருக்கும் நாட்கள் கடுமையானதாக இருந்தது. எந்த விடயத்திலும் அவன் கூடவே திரிந்து, என்ன செய்தாலும் அவனைப் போலவே செய்யும் மாருதியன் அப்போதுதான் தனுசனின் பிரிவை எதிர்கொண்டான்.

அன்று கரும்புலிகள் அணியில் இணைந்துகொள்வதறகு அனுமதி வந்தவர்களை எற்றிச் செல்வதற்கு வாகனம் வந்துநின்றது. பிரியப்போகும் அந்த இறுதி நிமிடங்களை ஒரே இடத்திலிருந்து சந்திக்கும் சக்தி இருவருக்கும் இருக்கவில்லை.

தனுசன் புறப்படப்போகின்றான் என்றதும் மாருதியன் முகாமைவிட்டு வெளியே சென்றான். முகாமில் இருந்து பிரிவதற்கான நிமிடங்கள் விரைவாகக் கழிந்தன. மாருதியன் அந்த வாகனம் புறப்பட்டிருக்கும் என்ற கணிப்பீட்டில் அந்த முகாம் வந்தபோது வாகனம் இன்னும் புறப்படவில்லை. அவன் எந்த நேரத்தில் நிற்கக் கூடாது என நினைத்தானோ அது நிகழ்ந்துவிட்டது. வாகனத்தை விட்டு தனுசன் வேகமாக இறங்கினான். இறதியாக அந்த இணைவில் அவர்கள் பேசிக்கொள்ள வார்த்தைகள் இருக்கவில்லை. கண்ணீர்தான் கதைத்துக் கொண்டது.

தனுசனின் வாழ்வில் அடுத்தடுத்து பிரிவுச் சுமைகள் பாரமாய் கனத்தன. அந்தச் சுமைகளோடும் தாயகக்கனவை முதன்மையாக்கிக்கொண்டான். கரும்புலிகள் அணிக்குள் அவன் சேர்ந்திருந்தபோது அவனிற்கு மாருதியன் வீரச்சாவு என்ற சேதி வந்தது.

மீண்டும் மீண்டும் அவனின் மனதில் ஏற்பட்ட இழப்புக்கள் அவனை இன்னும் இன்னும் வேகமாக்கியது. கரும்புலிகள் அணிப் பயிற்சி முடிந்தபோது ஓயாத அலைகள் மூன்றிற்கான ஆரம்ப ஏற்பாடுகள் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஓயாத அலைகள் வன்னியின் சமர்முனையில் உக்கிரமானபோது அவனும் கரும்புலிகள் அணியின் ஒரு அணிக்கு பொறுப்பாகச் சென்றான். இராணுவப் பிரதேசத்திற் குள்ளேயே தங்கி அவனிற்கும் அவனது சொத்துக்களிற்கும் இழப்புக்களை ஏற்படுத்துவதற்காக பைகளில் உணவுகளோடு பெரும் சுமைகளைச் சுமந்து கொண்டு இரவுபகல் நித்திரையில்லாது ஓய்வில்லாது தங்களிடம் இந்த தேசம் எதிர்பார்த்ததை செய்து முடித்திருந்தார்கள்.

அதேபோலதான் வட போர் முனையில் ஓயாத அலைகள் அடிக்க ஆரம்பித்தபோது ஆனையிறவு களத்தினுள் இராணுவத்தின் சில செயற்பாடுகளை முடக்கி வைத்திருப்பதில் அவனின் பங்களிப்பும் இருந்தது.

அந்தத் தாக்குதலிற்காய் அவன் செல்கின்றபோது லேசான காய்ச்சல் அவனது உடற் சுகயீனத்தினை காரணம் காட்டி அந்தத் தாக்குதலில் அவன் பங்குபற்றும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அவன் கேட்பதாக இல்லை. அவனும் செல்லப் போவதாக பிடிவாதம் பிடித்தான். அனுமதி பெறும் மட்டும் ஓயவில்லை. அதன் பின்னே திருப்தி.

தாக்குதலிற்காக நகர்ந்து தண்ணீரைக் கடக்கின்றபோது அவனின் உடல் குளிரால் நடுங்கத் தொடங்கியது. அவனின் மனது மட்டும் வைரமாய் இருந்தது. பொதிகளோடு நீந்துவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்த இன்னொரு தோழனிற்கு உதவி செய்து அவனையும் அழைத்துச் செல்லும் மனத்திடம் அவனிடம் இருந்தது.

தாக்குதலிற்காகச் சென்று இடையில் வேறு வேலைக்காக இருவர் அவர்களை விட்டுப் பிரிந்து சென்ற போது அவர்களோடு இவர்களிற்கான உணவுப் பொதிகளும் சென்றுவிட்டது. திரும்பிவந்து எடுப்பதற்கோ வேறு எவர் மூலமாவது பெற்றுக்கொள்ள முடியாத சூழல். அவர்கள் இராணுவப் பிரதேசத்திற்குள் நுழைந்துவிட்டார்கள்.

இனி வெளியே வருவதென்றால் அவர்கள் தங்களிற்கான பணியினை முடித்துத்தான் வருவார்கள். சாப்பாட்டுப் பொதி இல்லாதபோதும் அவர்கள் தங்களிற்கான இலக்கு நோக்கிச் சென்றார்கள். அவர்களிற்கான பணியை முடித்தபோது பெரிதும் சோர்வுற்றுப் போயிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் தங்கள் பணி முடிந்தது என்ற திருப்தியோடிருந்தார்கள்.

அதேபோலவே பளைப்பகுதியில் அமைந்திருக் கும் ஆட்லறித் தளம்மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்ட போது தனுசனும் ஓர் அணியோடு தெரிவு செய்யப்பட்டிருந்தான்.

26.03.2000 நள்ளிரவு பளை ஆட்டிலறித் தளப்பகுதி பெரும் வெடிச்சத்தங்களினால் அதிர்ந்து கொண்டிருந்தது. ஆட்டிலறிகளும் எறிகணைகளும் வெடித்துச் சிதறி எரிவது அந்த ஆட்லறித்தளம் நிர்மூலமாகி விட்ட சேதியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தது. வானளாவ பரவிக் கொண்டிருந்த தீச்சுவாலைகளின் பிரகாசம் கரும்புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் வானத்தில் பிரதிபலிக்கும்படி செய்து கொண்டிருந்தன.

அந்த வீரமிகு சாதனையை நிகழ்த்தி விட்டு காவியமாகினர் இரண்டு கருவேங்கைகள். கரும்புலி மேஜர் தனுசன, அவனோடு
கரும்புலி மேஜர் சுதாஜினி.

தனுசன், அவன் சுமைமீது சுமை வந்தபோதும் சோராது நடந்தவன். தினம்தோறும் வானில் வீரவரலாறு எழுதி நெருப்பாற்றைக் கடந்தவன்.

தேசத்தின் விடியலுக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த எங்கள் மாவீர செல்வங்களுக்கும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

லெப் கேணல் வானதி /கிருபா வீரவணக்கம்

லெப்.கேணல் கிருபா /வானதி

நித்தியகரன் – மாலதி
21 / 03 / 2009

விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் ,,மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம் ,,ஆனாலும் மறைமுக கரும்புலிகள் ,,,போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும்,,,தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது

தாயக களங்களில் சமர்களிலெல்லாம் போராளிகளின் தன்னலமற்ற செயற்பாடுகளே வெற்றிகளை எமதாக்கியது ..குடும்ப வாழ்வில் இணைந்த பெண் போராளிகளாயினும் போராட்ட வாழ்வின் முன்னுதாரணங்களாக மேஜர் நிர்மலா ,,லெப் கேணல் கமலி ,,மேஜர் சுடரேந்தி ,,லெப் கேணல் வரதா ,,கேணல் தமிழ் செல்வி,, லெப் கேணல் இசைப்பிரியா ஆகியோரின் வரிசையில் லெப் கேணல் வானதி /கிருபா ம் இணைந்து கொண்டாள். ஆம் குடும்ப சுமைகளை தாங்கும் குடும்பத்தலைவிகளாகவும் ,,,தாயக சுமைகளை தாங்கும் வீராங்கனைகளாகவும் போராடும் வாழ்வின் ஆதாரங்களாக மனதின் துணிவு எங்கிருந்துதான் கிடைக்க பெற்றது இவர்களிடம்…..!!!!!!!!

லெப் கேணல் வானதி /கிருபா

சிறுத்தை படையணியின் இரண்டாவது பயிற்சி முகாமிலே பயிற்சிகளை நிறைவு செய்தவள் லெப் கேணல் கிருபா/ வானதி. ஆரம்ப காலம் முதல் லெப் கேணல் சுதந்திராவின் வழிகாட்டலில் சிறுத்தை படையணிகளால் நடாத்தபட்ட பாரிய வலிந்த தாக்குதல்கள் ,,ஊடுருவி தாக்குதல்கள் ,,வேவு நடவடிக்கைகள் போன்றவற்றில் மிகவும் திறமையாக செயற்பட்டாள்

கவிதை ,,கட்டுரை ,,நாடகங்களென இவளது திறமைகள் வெளிவந்து கொண்டிருந்தது . அமைதியான சுபாபத்திற்கு சொந்தகாரி இவள். ஆனாலும் போராளிகளின் மத்தியில் கல, கலப்பாகவும் போராளிகளை மகிழ்வித்த வண்ணமிருப்பாள்.

பல சமர்களில் விழுப்புண்களை ஏற்ற உடலுடன் தொடர்ந்தும் களப்பணிகளில் இவளது பயணம் தொடர்ந்தது. சிறுத்தை படையணியினை சோதியா படையணியுடன் இணைத்து வலிந்த தாக்குதல் நடவடிக்கைகான பயிற்சி நடவடிக்கைகள் ,,,மாதிரி பயிற்சி நடவடிக்கைகள்களை தானே முன்னின்று சமருக்கான வெற்றிக்கு வழிசமைத்தாள் ..

மேஜர் சோதியா படையணியில் கேணல் துர்க்கா அவர்களின் நிர்வாக பொறுப்பாளாராக பல ஆண்டுகள் பல புரிந்தாள். சமாதான காலத்தின் போது யாழ் மாவட்டத்திற்க்கு அரசியல் பணிக்காக தெரிவு செய்ய பட்ட சோதியா படையணி போராளிகளிற்க்கு பொறுப்பாளாராக நியமிக்கபட்டாள். சமாதான காலமென்றாலும் பல புல்லுருவிகளின் செயற்பாடுகள் ,,இராணுவ புலனாய்வாளர்களின் ஊடுருவல் முயற்சிகளிலிருந்து பெண் போராளிகளை காக்கும் பணி இவளின் முதன்மை செயற்பாடாகவிருந்தது

2005 ம் ஆண்டு காலப்பகுதியில் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய தான் வாழ்க்கை துணைவராக நேசித்த புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான வினோதன் எனும் போராளியை கரம் பிடித்து திருமணபந்தத்தில் இணைந்துகொண்டாள். திருமணபந்தத்தில் இணைந்துகொண்ட போதிலும் தனது கள செயற்பாட்டில் எவ்வேளையிலும் பின் நிற்காது தொடர்ந்தும் சமர்களிலும் ..நிர்வாக செயற்பாடுகளிலும் முன்னுதாரணமாக செயற்ப்பட்டாள். 2006 ம் ஆண்டு பண்ணரசன் எனும் குழந்தைக்கு தாயான போதும் , அவளது செயற்பாடு தொடர்ந்த வண்ணமிருந்தது..

இறுதி சமர் வன்னியெங்கும் வியாபித்த போதும் ,, குடும்ப வாழ்வும் ,,களமுனை வாழ்வுமாக இவளது பயணம் தொடர்ந்தது ..தான் வளர்த்து விட்ட தோழிகளின் இழப்புக்கள் ,,மக்களின் கொடூர மரணங்கள் ,,தொடர் விமான தாக்குதல்கள் ,, இடப்பெயர்வின் அவலங்கள் ,,மனதினை தாக்கிய போதும் கூட தனது குடும்பம் ,,தனது குழந்தையென வாழாது தாயகத்தை நேசித்தாள் .துணைவன் ஒரு சமர் களத்தில் ,,இவளோ எதிரியின் வரவை எதிர் பார்த்து வேறொரு சமர் களத்தில் இவர்களின் குழந்தை செல்வமோ உறவினர்கள், நண்பர்களின் பராமரிப்பில் மாதமொருமுறை ஒரு சில மணித்துளிகளே குடும்பங்களுடனான சந்த்திப்புக்கள் இப்படியாக தான் இறுதி யுத்த நேரங்களில் போராளிக்குடும்பங்களின் வாழ்விருந்தது. அதற்க்கு மேலாக எதிரி மீதான தாக்குதல் களங்களேயே அதிகம் நேசித்தனர்.. .இறுதி யுத்தத்தில் குடும்பங்களாகவே எதிரி மீதான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்க்கொண்டதை கண்டது வன்னி மண் .

21 / 03 / 2009 அன்று தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்கான திட்டமிடல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை எதிரியின் எறிகணை வீச்சொன்றில் இம் மண்ணை முத்தமிட்டாள் லெப் கேணல் வானதி / கிருபா

விடுதலைக்காய்
வீச்சாகி -நின்றவள்
களங்களிலே
கனலாகி நின்றவள்
சிறுத்தையணியில்
சீற்றமுடன் பகையளித்தவள்
சோதியா படையணியின்
சோதியாய் நின்றவள்
கனவுகள் தாங்கி
நினைவெல்லாம் நடப்போம்.

– ஈழமதி-

Up ↑