தமிழீழ தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதிப்பிள்ளை(பார்வதியம்மா) அவர்கள் இன்று காலை காலமானார் என்பதை மிக மன வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்.கடந்த பல மாதங்களாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தமிழீழத்தாய் இன்று காலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் காலமானார்.
வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இப்புனிதத்தாய் 81வது அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார்.
கடந்த பத்து வருடங்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் மலேசியாவில் சிகிச்சை பெற்றுவந்தார். தனது மேல் சிகிச்சைக்காக இந்தியா வந்த அவரை இந்திய அரசு சிகிச்சைக்கு அனுமதி மறுத்து அவர் வந்த விமானத்திலேயே மலேசியாவிற்கே திருப்பியனுப்பியது.
பின்னர் இந்திய அரசு அவருக்கு நிபந்தனையின் அடிப்படையிலேயே கிகிச்சையளிக்க முன்வந்த போதில் அவரது குடும்பத்தினர் அதற்கு உடன்படாமையாலும் அவரை ஓர் அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதையும் விரும்பவில்லை.
இதனால், பார்வதி அம்மாள் அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்குச் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சற்று உடல் நலம் தேறிய அவர் மீண்டும் வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கே மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
எமது தேசியத் தலைவர் மேதகு திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்தாயார் பார்வதியம்மா இன்று காலை காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் உங்களுக்கு அறியத் தருகின்றோம். வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இப்புனிதத்தாய் 81வது அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார்.
தமிழின விடுதலைப் போரட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்துவளர்த்து ஆளாக்கிய அத் தேசத்தின் மகா அன்னையை உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் அனைவரும் நினைவு கூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
ஈழத்தாயின் பூவுடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அளவில் ஈழமக்களின்அஞ்சலிக்குப்பின்னர் விதைக்கப்படலாம் என தமிழ்த் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பியபின் முதல்வருக்கு தேசியத் தலைவரின் அன்னை எழுதிய கடிதம் பக்கம் இரண்டு – இந்தக் கடிதத்தில்கூட தான் திருப்பி அனுப்பப்பட்டதை தவறாக நினைக்காமல் நீங்கள் நீடுடி வாழவாழ்த்துகின்றேன் என்று வாழ்த்திய மாசற்ற மனம் கொண்ட தாய் இன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
—————–
- பார்வதி அம்மாள்! இது ஒரு தாயின் பெயரல்ல! ஒரு தீயின் பெயர்!
- தேசியத் தலைவரது தாயாரின் புகழுடல் மக்கள் அஞ்சலியுடன் தீயுடன் சங்கமமாகியது
- பூத்த கொடி பூக்களின்றி வதங்கிப் போய்க் கிடக்கிறது
- எமது இனத்தின் விடுதலைக்கான உயிர் மூச்சை வழங்கிய ஈழத்தாயை போற்றி வணங்குவோம்
- தேசத்தின் அன்னை பார்வதி அம்மாக்கு உலக தமிழ் அமைப்புக்களின் இரங்கல் செய்திகள்
- தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார்.
————————–
பாடல்கள்
தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் பாடல்கள்-ஒலிவடிவம்
—————————–
உலைக்களம்
- அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே!
- ஒரு புலி வீரனின் கவித் தீ..
- என் அண்ணனின் தாய் பார்வதியம்மாள்; எனக்கும் தாயானாள்!!
- வீரத்தின் விளை நிலம் விண் நோக்கி போனதுமேன்?
- பார்வதியம்மாள் மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் கவிதை
————-
அம்மா தந்த மன வலிமை! -பிரபாகரன்!
பிப்ரவரி 20-ந் தேதி காலை 6.10-க்கு பார்வதியம்மாளின் இதயத்துடிப்பு நின்று போனது.
தகவல் பரவ… வல்வெட்டித்துறை தொடங்கி தமிழர் வாழும் ஈழப்பகுதிகள் முழுக்க… அங்கங்கே குடியிருப்புகளின் முகப்பிலும் மரக்கிளைகளிலும்… துயர கனத்தோடு கருப்புக்கொடிகள் பறக்க ஆரம்பித்தன. உலக நாடுகள் முழுவதிலும் இருக்கும் தமிழர்கள்… செய்தியறிந்து துயரத்தில் துடித்துப்போனார்கள். புலம் பெயர்ந்த தமிழர்கள்… மெழுகுவர்த்திகள் ஏந்தியபடி அஞ்சலி செய்தனர். தமிழகத்திலும்… இறப்பின் எதிரொலிப்பு பலமாகவே இருந்தது.
பார்வதியம்மாளின் உயிர்பிரிந்த தகவல் சிங்கள அரசின் கவனத்துக்குப் போனதும்…. வல்வெட்டித்துறை முழுக்க ராணுவத்தைக் குவிக்க ஆரம்பித்தது. ஆனால்… கருப்பு பேட்ச் அணிந்தபடி ஈழத்தமிழர்கள் சாரிசாரியாக மருத்துவமனைக்கு வந்து… அஞ்சலி செலுத்தத் தொடங்கினர்.
கடந்த ஓராண்டாய் அம்மையாரை தன் மேற்பார்வையில் பராமரித்துவந்த தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான சிவாஜிலிங்கம்… தனது எண்ணங்களைக் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டார். “”தேசியத் தலைவருக்கு நிகரான மனோதிடம் கொண்டவர் பார்வதியம்மாள். 10 வருடத்துக்கும் மேலாய் பக்கவாதம், கூடவே நீரிழிவு. இதில் அடிக்கடி நினைவு தப்புதல்னு கடைசிக் காலத்தில் சரீர ரீதியாக வதைபட்டுக்கொண்டிருந்தார். இதற்கிடையே அன்புத் துணைவரின் இழப்பு.. அவரைக் கடுமையாகப் பாதித் தது. இந்தநிலை யிலும்… சிங்கள அரசின் கெடு பிடியைக் கண்டு அஞ்சாமல்…. “எண்ட உயிர் என் ஈழமண்ணிலேயே போகட்டும். எண்ட உடம்பும் ஈழ மண்ணிலேயே சாம்பல் ஆகட் டும்’னு சொல்லிக்கிட்டிருந்தார். அவர் ஆசைப்பட்டது போலவே.. ஈழத்திலேயே அவர் உயிர் அடங்கி விட்டது”’என்றவர் ஒரு நிமிடம் கண்களை மூடி கடந்த காலத்துக்குப் போனார்.
“”தேசியத் தலைவர் பிரபா கரன்… தன் மாணவப் பருவத்தி லேயே….. விடுதலைப் போராட் டத்தில் தன்னை ஐக்கியப்படுத் திக்கிட்டவர். அப்பவே.. தன் பெற்றோரைப் பிரிந்த அவர்… ஏறத்தாழ 30 வருடங்கள் கழித்து… அதாவது 2003-ல் யுத்த நிறுத்தம் ஏற்பட்டபோதுதான்… தமிழ்நாட் டில் இருந்த தன் பெற்றோரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை யையும் பார்வதியம்மாளையும் அழைச்சிக்கிட்டார். அந்த முதிய வயதிலும் வெறுமனே இருக்காமல்… போராளிகளின் பிள்ளைகள் படித்த செஞ்சோலைப் பள்ளியை… தலைவரின் மனைவி மதிவதனியோடு சேர்ந்து பார்த்துக்கிட்டாங்க. அந்தப் பிள்ளைகளுக்கு நிறைய வீரக் கதைகளைச் சொல்லிக்கொடுத்துக் கிட்டிருந்தாங்க.
“ஒரு ஆயுதத்தையே பிள்ளையா… கருவில் சுமந்தேனே அதை நினைச்சா… இன்னும் பெருமையா இருக்கு’ன்னு அடிக்கடி தலைவர்கிட்ட சொல்லுவாங்க. அதேபோல் 2009-ல் யுத்தம் தீவிரக் கட்டத்தை அடைந்தபோது… தலைவரின் தளபதிகள்…’அம்மாவையும் அப்பாவையும் ஏதாவது ஒரு நாட்டுக்கு பத்திரமா அனுப்பிடலாம்னு சொன்னபோது…. பார்வதியம்மாள்தான்… “என் மக்களையும் மண்ணையும் விட்டுட்டு உயிர்பிழைச்சிக்கச் சொல்றீங்களா? முடியாது. எது நடந்தாலும்… இந்த மண்ணைவிட்டுப் போகமாட்டேன்’னு அழுத்தமாச் சொல்லிட்டாங்க. இதைக்கேட்ட தலைவர்… “நான் களத்தில் நிற்பதற்குக் காரணமே அம்மா தந்த மனவலிமைதான்’னு சந்தோசப்பட்டார். எல்லாம் முடிந்து…. யுத்தம் நிறுத்தப்பட்டபோது…. மக்களோட மக்களா முகாமுக்கு வந்த பார்வதியம்மாளையும் அவங்க கணவரையும் சிங்கள ராணுவம் தேடிப்பிடித்து… பனருவா தடுப்பு முகாமில் தனித் தனியாக அடைத்து… டார்ச்சர் கொடுத்துச்சு.. உடல் நலிவோடு விசாரணையை எதிர்கொண்ட வேலுப்பிள்ளை… போன ஜனவரியில் இறந்துபோனார்.
இதன்பின்தான் அரசு பார்வதியம்மாளை விடுவித்தது. உடல் குன்றியிருந்த அவங்களை மலேசியாவுக்குக் கொண்டுபோய் சிகிச்சை தந்தோம். மேலதிக சிகிச்சையை தமிழ்நாட்டில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் சொன்னதால்… இந்திய அரசிடம் விசாவை வாங்கினோம். ஒரு பெண் உதவியாளரோடு சென்னை வந்த அந்த தாயை… தன் கருப்புப் பட்டியலில் வைத்திருந்த மத்திய உளவுத்துறை சென்னையில் இறங்க அனுமதிக்காமலே திருப்பி யனுப்பிவிட்டது.
“பார்வதியம்மாளின் குடும்பத்தினர் கேட்டுகொண்டால் அவர் தமிழகத்தில் சிகிச்சைபெற ஏற்பாடு செய்யப்படும்’ என்றார் கலைஞர். இதற்காக பார்வதியம்மாள் நன்றி தெரிவித்து ஒரு கடிதம் கூட கலைஞருக்கு எழுதினார். ஆனால் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னதை… பார்வதியம்மாளின் தன்மானம் ஏற்கவில்லை”’ என்றார் வழிந்த விழிநீரைத் துடைத்தபடியே சிவாஜிலிங்கம்.
பார்வதியம்மாளின் கடைசி நிமிடம் குறித்து நம்மிடம் விவரித்த வல்வெட்டித்துறை அரசு மருத்துவர் மயிலேறும் பெருமாளோ “”உடல்நிலை கொஞ்சம் மோசமானதால் யாழ்ப் பாணம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தேன். கொஞ்சம் உடல்நிலை தேறியதும் இங்கே அனுப்பிவைத்துவிட்டார்கள். அவரது மகள் இருக்கும் கனடாவிற்கோ தமிழகத்திற்கோ அனுப்பிவைத்திருந்தால் பிழைத்திருப்பார்”’என்றார் வருத்தம் இழையோட.
தமிழகத்தில் பார்வதியம்மாள் கணவர் சகிதமாக இருந்தபோது… மூன்று ஆண்டுகள் அவரை பராமரித்த முசிறி டாக்டர் ராஜேந்திரனோ, “”ஈழம் ஈழம் என்று துடித்த இதயம் அவருடையது. தொலைக் காட்சிகளில் எந்த நிகழ்ச்சி யையும் பார்க்காத அவர்… பிரபாகரன் குறித்த செய்திகளை மட்டும் கேட்பார். நக்கீரன் போன்ற பத்திரிகைகளில் ஈழம் குறித்துவரும் செய்திகளைப் படிக்கச்சொல்லி கேட்பார். ஒரு நாள் இங்கு பாத்ரூமில் வழுக்கி விழுந்தபோதுதான்.. அவரைப் பக்கவாதம் பாதித்தது. பிசியோ தெரபி பயிற்சிகளை ஆர்வமாக செய்துகொண்டு…. எழுந்து நடக்கவும் ஆரம்பித்தார். அவரது நம்பிக்கை அழுத்தமான நம்பிக்கை”’என்று முடித்துக் கொண்டார்.
தமிழீழ தேசத்தின் அன் னையான பார்வதியம்மாளின் மரணம்…. உலகத்தமிழர்களை கண்ணீரில் மிதக்க வைத்தி ருக்கிறது.
-இளையசெல்வன், ஜெ.டி.ஆர்
—————–
கலைஞர் அய்யா, ஏன் என்னைத் திருப்பி அனுப்பினார்? – உலுக்கும் பார்வதியம்மாள் கேள்வி
எங்கள் மா தந்தை வேலுப்பிள்ளை இறந்து ஓராண்டுதான் ஆகிறது. இதோ, மா தாயார் பார்வதியம்மாவும் போய்விட்டாரே! என உலகம் முழுதும் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் தமிழ் இன உணர்வாளர்கள்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள், கடந்த 20-ம் தேதி இயற்கை அடைந்துவிட்டார். 80 வயதான அவர், கடைசி காலத்தில் பட்டபாடு
கொஞ்சநஞ்சம் அல்ல.
மருத்துவ சிகிச்சைக்காகக் கடந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி, மலேசியாவுக்கு அனுப்பப்பட்டார். கனடாவில் வசிக்கும் மகள் வினோதினி, உடனிருந்து தாயைக் கவனித்துக்கொண்டார்.
பிறகு, மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் முறையாக விசா பெற்று, சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டார். ஆனால், அவரை விமானத்தைவிட்டு இறங்கவிடாமல், கடந்த ஏப்ரல் 16-ம் தேதி இரவு, பல மணி நேரம் விமானத்திலேயே வைத்திருந்தார்கள். மறுநாள் விடியும் வேளை, அவரை அப்படியே திருப்பிவிட்டனர்.
மலேசியாவில் தொடர்ந்து தங்க முடியாமல், வேறு வழியின்றி இலங்கைக்கே திரும்பி அழைத்துச் செல்லப்பட்டார்.
மறைந்த மூத்த வழக்கறிஞர் கருப்பன் இதை நீதிமன்றத்துக்கு எடுத்துப்போக, இறங்கி வந்தன மத்திய, மாநில அரசுகள். ஆனாலும், பார்வதியம்மாள் தமிழகத்தில் சிகிச்சைக்கு வரலாம். மகள் வீட்டில் தங்கலாம். உறவினர்களைத் தவிர எந்த அரசியல் அமைப்பினரும் அவரைச் சந்திக்கக் கூடாது! என நிபந்தனை போட்டது.
ஒரு கைதியைப்போல அம்மாவுக்கு மருத்துவச் சிகிச்சையா?’ என மான உணர்வு பொங்க மறுத்துவிட்டனர் பிரபாகரனின் உடன்பிறந்தவர்கள். அதனால், பிரபாகரனின் சொந்த ஊர்க்காரரான யாழ்ப்பாண முன்னாள் எம்.பி-யான சிவாஜிலிங்கம், பார்வதியம்மாளின் பராமரிப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
ஒன்றரை ஆண்டுகளாக சொந்த ஊரான வல்வெட்டித்துறை மாவட்ட மருத்துவமனையில், டாக்டர் மயிலேறும் பெருமாள் ஒரு குழந்தையைக் கவனிப்பதுபோல பார்வதியம்மாளைக் கவனித்தார்.
அவ்வப்போது டென்மார்க்கில் இருந்து மூத்த மகன் மனோகரனும், இரண்டு நாளுக்கு ஒரு முறை கனடாவில் இருந்து மகள் வினோதினியும் அம்மாவிடம் தொலைபேசியில் பேசுவார்கள். எத்தனை முறை தொலைபேசியில் பேசினாலும், பிள்ளைகளை நேரில் பார்க்க முடியாமல் துடித்தார் அந்தத் தாய். இந்தக் கவலையால் அவரின் மனதும் உடம்பும் இயங்க மறுத்தன.
படுக்கையிலேயே காலம் தள்ளும் கஷ்டத்தில், படுக்கைப் புண்ணும் வந்து சேர, தலையில் கட்டுப் போடப்பட்டது. புண் ஆறியும், சில வாரங்களாக அவருக்கு குழாய் மூலமே திரவ உணவு செலுத்தப்பட்டது.
கடந்த வாரத்தின் கடைசியில் அவரது உடல், இறுதி ஓய்வுக்கு முந்தைய அமைதிக்கு வந்தது. கடந்த 18, 19 தேதிகளில் உறக்க நிலையிலேயே இருந்தார்.
20-ம் தேதி காலை 6.20 மணிக்கு வழக்கமான பரிசோதனைக்குச் சென்றபோது, அவர் இறந்திருந்ததை டாக்டர் மயிலேறும் பெருமாள் அறிந்தார்.
அம்மாவைப் பராமரிக்கும் அந்த மருத்துவருக்கே இரத்த அழுத்தம் 200-க்கும் மேல் எகிற… அவரே அவசர சிகிச்சை எடுக்கவேண்டிய நிலையிலும், நாம் தொடர்புகொண்டவுடன், விவரங்களைச் சொன்னார்.
ஞாயிறு காலை தாதிமார், அம்மாவுக்குப் பேச்சுமூச்சே இல்லை’ என என்னிடம் ஓடி வந்தார்கள். பரிசோதித்தபோது பார்வதியம்மாள் உயிர் பிரிந்திருந்தது. இது இயற்கை மரணம்தான். இருந்தும், இதை ஓர் ஆண்டோ, இரண்டு ஆண்டுகளோ தள்ளிப்போட்டிருக்கலாம். சொந்த ஊரில் சொந்தங்கள் சூழ இருந்தபோதும், புத்திரசோகத்தால்தான் அவர் இறந்துவிட்டார்! என்றார் டாக்டர்.
முன்னாள் எம்.பி-யான சிவாஜிலிங்கம்,
இறப்புக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அம்மாவைப் பார்த்துவிட்டு வந்தேன். என் பெயரைச் சொல்லி ‘வந்திருக்கிறேன்’ என்றதும் அழுதார். வேறு வேலைகளால் மறுநாள் அங்கு செல்ல வெகுநேரம் ஆகிவிட்டது. மருத்துவமனைக்குச் சென்றும் அம்மா தூங்கிவிட்டதால் திரும்பிவிட்டேன். காலையில் அவர் இறப்புச் செய்தியைக் கேட்டதும் என்னால் தாங்க முடியவில்லை என்றார் சோகத்துடன்.
பார்வதி அம்மாளின் மரணச் செய்தி தெரிந்ததும் சிங்களப் பொலிஸாரும், இராணுவத்தினரும் ஏராளமாக அங்கு குவிக்கப்பட்டனர். அவர்களின் வருகை, அஞ்சலி செலுத்த வந்த மக்களை அச்சுறுத்தியது.
ஞாயிறு மாலை தீருவில் மைதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட பார்வதியம்மாளின் உடல், பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கும் சிங்களப் படையின் அட்டகாசம்…
மருத்துவமனையின் முன்பு சீருடையில் இருந்தவர்கள், தீருவில் மைதானத்தில் சாதாரண உடையில் சுற்றித் திரிந்தார்கள்.
அடக்க முடியாத மனவெழுச்சியில் சிக்கிய மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்த முடியாதபடி அதிக கெடுபிடிகள்.
கடைசியில் திங்கட்கிழமை வரை ஒருவர் ஒருவராகத்தான் அஞ்சலி செலுத்தினர். பிரபாகரனைப் பெற்றெடுத்த காரணத்தால், சொந்த மக்களின் அஞ்சலியைக்கூட பெற்றுக்கொள்ள முடியாதபடி இனவெறிக் கொடுமைக்கு ஆளானது பார்வதி அம்மாளின் சடலமும்!
பார்வதி அம்மாள் கேட்ட ஒரு கேள்வி மட்டும் இன்னும் தொக்கி நிற்கிறது. ”கலைஞர் அய்யா, ஏன் என்னைத் திருப்பி அனுப்பினார்?” – பார்வதி அம்மாளின் இந்தக் கேள்வி மட்டும் உரிய விடை தேடி உலுக்கிக்கொண்டே அலைகிறது… உயிரோடு!
நன்றி: ஜூனியர் விகடன்
“விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்”: வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்
வான்கரும்புலிகளின் தாக்குதல் காணொளி
சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ளனர்.
“தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:
15.02.2009
தமிழீழம்.
எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே!
மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம்.
நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள்.
‘மாவீரன்’ முத்துக்குமார் இட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவியிருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத்தொடங்கியுள்ளது.
எனவே எமது தமிழினத்தின் விடிவிற்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் உலகத்தின் ஐ.நாவின் காதுகளில் விழும்.
மனம் தளரவிடாதீர்கள். தொடர்ச்சியாக போராடுங்கள் தமிழ் மக்களிற்கு விடிவு வரும்.
புலம்பெயர் எமது உறவுகளே!
நீங்கள் செய்த உதவிகளால் தான் எமது போராட்டம் வளர்ச்சியடைந்து நின்றது. அதனை தொடர்ச்சியாக செய்யுங்கள். விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறல்ல. இது மக்கள் போராட்டம் என்று உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள். தினம் தினம் உங்களது உறவுகள் இங்கே கொல்லப்படுகின்றார்கள். அதிலும் கொடுமை இறந்தவரைக்கூட எடுத்து அடக்கஞ் செய்யமுடியவில்லை.
மருந்தில்லை. உணவில்லை. உடையில்லை. உறையுளில்லை. எவ்வளவு கொடுமைகளை சிங்கள இராணுவம் அரசு செய்கின்றது. தமிழரை வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து தமிழினத்தை அழித்து சிங்கள இனத்தை உருவாக்கப்போகின்றது.
வன்னியிலே இருந்து உலக நிறுவனங்களையும் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி எமது மக்களின் அவலம் வெளியே தெரியாவண்ணம் மூடிமறைக்க முயல்கின்றது.
விரைவிலே எமது மக்களிற்கு கொடிய நோய்கள் பரவப்போகின்றது. இவற்றை நீங்கள் உலகத்திற்கு தொடர்ச்சியாக போராடி எடுத்துக்கூறுங்கள். கேளுங்கள் தரப்படும் இல்லாவிட்டால் தட்டுங்கள் திறக்கப்படும்.
அன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே!
உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள்.
எமது மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்.
அதேபோன்று வன்னி மக்களுக்கும் கேணல் ரூபன் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:
15.02.2009
தமிழீழம்.
அன்புள்ள எனது தமிழீழ மக்களே குறிப்பாக வன்னியில் வாழும் மக்களே,
நீங்கள் அனுபவிக்கும் கொடும் வலி கண்டு எனது மனம் குமுறுகிறது, கலங்குகின்றது. எமது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றுதான் எமது தேசியத் தலைவர் போராட்டத்தைத் தொடங்கினார்.
அவ்வேளை நீங்கள் தான் அவரிற்கு உத்வேகம் கொடுத்து ஆதரித்து போராட்டத்திற்கு வலுச்சேர்த்து உங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்து எமது அமைப்பை வளரச் செய்தீர்கள். நாம் காலங்காலமாக வாழ்ந்த மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்பட்டோம். அது தவறா?
உலகத்தில் வாழும் மக்களில் எமது தமிழ் இன மக்களின் உயிர் உயிரில்லையா? எவ்வளவோ நாடுகள் சுதந்திரம் அடைந்ததற்கு காரணமாக இருந்த உலக நாடுகள் எமது தமிழினத்தை மட்டும் சிங்கள தேசம் அழிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதன் காரணம் தான் எனக்குப் புரியவில்லை.
அன்புக்குரிய மக்களே!
எமக்காக தமிழகத்தில் இருக்கும் மக்களும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் உங்களின் விடிவிற்காக தீக்குளிப்புக்களிலும் பல வகையான அகிம்சைப் போராட்டங்களையும் நடத்தி வருவது உங்களிற்கு தெரிந்ததே. அவர்களால் வெளியே இருந்து செய்யக் கூடியதை செய்கின்றார்கள்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களை போராட்டத்தில் இணைத்து உங்கள் விடிவிற்கான இறுதிப்போரில் போராட வேண்டும். தேசியத் தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.
அன்புக்குரிய மக்களே!
எதிரியானவன் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அதாவது படிப்படியாக உங்களை உங்களது இடங்களில் இருந்து இடம்பெயர வைத்து உணவுத்தடை, மருந்துத்தடை போட்டு உங்களின் மேல் குண்டுமழை பொழிந்து தினம் சாவுக்குள் வாழவைத்து, பாதுகாப்பு வலயம் என அறிவித்து அதற்குள் உங்களை விட்டு குண்டுமழை பொழிந்து உங்கள் உறவுகளை கொன்று உங்களை தனது திறந்த சிறைச்சாலைக்கு வரச்செய்கின்றான். ஏன் தெரியுமா?
யூத இனத்தை கிட்லர் பல வதைமுகாம்களை அமைத்து யூத இனத்தை அழித்ததுபோல் மகிந்தவும் உங்களை அழிக்கப்போகின்றான். அது தெரியாமல் நீங்கள் அதற்குள் அகப்படக்கூடாது. கோத்தபாய இராணுவத்திற்கு கூறியிருப்பது தெரியுமா? தமிழரில் பெண்கள் உங்களுக்கு ஆண்கள் கடலிற்கு என்று. அதனடிப்படையில் இங்கிருந்த எத்தனை பெண்கள் கற்பழிக்கப்பட்டு இராணுவ மருத்துவமனைகளில் இராணுவத்தை பராமரிப்பதற்கு விடப்பட்டுள்ளர்கள் என்று தெரியுமா. இதைவிட எவ்வளவோ கொடும் செயல்கள் வெளியே தெரியாவண்ணம் உள்ளது.
அன்புக்குரிய மக்களே!
எமக்கு இந்த இழிவுநிலை தேவையா? நிச்சயமாக இதை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஏனென்றால் அதற்காக தான் நீங்கள் போராடி வருகின்றீர்கள்.
அதற்காக 24,000 மேற்பட்ட மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றீர்கள் இவர்கள் யார் போராளிகளாக பிறந்தவர்களா இல்லை. காலம் தான் போராளிகளாக்கியது. போராளிகள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். யார் உருவாக்கியது.
சிங்கள தேசம் எமக்குரியதை தந்திருந்தால் எமது தேசியத்தலைவர் ஆயுதமேந்த தேவை ஏற்பட்டிருக்காது.
அன்புக்குரிய மக்களே!
நாம் விரும்பியோ விரும்பாமலோ எம்மை போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 வருடங்களாக போராடி உங்களது இறுதி இலட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும் வேளை நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா? உங்கள் விடிவிற்காக நீங்கள்தான் போராட வேண்டும்.
நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது? If we don’t fight for our freedom who else will? வன்னியில் இருக்கும் 250,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமலா இருக்கிறீர்கள்? சிந்தித்து பாருங்கள் 50,000 இளைஞர் யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்திடும்.
அன்புக்குரிய தம்பி, தங்கை அக்கா அண்ணா உறவுகளே!
போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்கின்றது. 1990 ஆம் ஆண்டு 14 வயதில் நான் போராட புறப்பட்டேன். காரணம் இடப்பெயர்வு பாடசாலை இல்லை. நாம் நிம்மதியாக வாழ எமக்கென்று ஒரு தேசம் வேண்டுமென்பதால் நீங்களும் அதேபோல்தான் நினைப்பீர்கள்.
உங்களது வலியை நேரில் தினம் தினம் கண்டு மனம் வெதும்பி குமுறுவதுபோல் இன்னொன்றையும் நினைத்து குமுறுகிறது. நீங்கள் தாங்குகின்ற வலியை உங்களது வயதில் நான் தாங்கவில்லை அப்படியிருந்தும் என்னைப் போராட உந்தியது.
ஆனால் நீங்கள் எவ்வளவோ வலியை ஏற்படுத்திய சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராட ஏன் இன்னும் கிளர்ந்தெழாமல் இருக்கின்றீர்கள் என்பதை நினைக்க நினைக்க மனம் வெதும்புகின்றது.
சிங்கள இராணுவம் ஏற்படுத்திய வலி காணாதா? இன்னும் வலியை ஏற்படுத்தினால் தான் நீங்கள் போராடுவீங்களா?
அன்புக்குரிய மக்களே!
எமது தேசியத் தலைவர் காலத்தில் நீங்கள் சுதந்திரம் அடையாவிட்டால் ஒரு காலமும் நீங்கள் சுதந்திரமாக வாழமாட்டீர்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். தமிழீழ தேசியத் தலைவர் கூறியது போல் ‘ஒரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டமாக- தேசியப் போராட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.’
‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்’ கேட்டோம் தந்தார்களா? இல்லை என்னத்தை தந்தார்கள் தாங்கொணா வலியை தந்தார்கள். அதன்பின்னர் என்னசெய்ய வேண்டும் தட்டுங்கள் நிச்சியமாக திறக்கப்படும்.
அன்புக்குரிய மக்களே!
எல்லோரும் சேர்ந்து ஆயுதம் ஏந்தி விசைவில்லை தட்டுங்கள் நிச்சியமாக சுதந்திரம் கிடைக்கும்.
அன்புக்குரிய மக்களே!
தமிழரிற்கு இருந்த போர்க்குணம் குன்றிவிட்டதா இல்லை. அதை நீங்கள் இன்னும் வெளிக்காட்டவில்லை. அந்தத் தருணம் வந்துவிட்டது. நான் யார்? நாங்கள் யார்? உங்களது பிள்ளைகள் நீங்கள் வளர்த்துவிட்டவர்கள் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து போராடவில்லை.
எனவே அன்புக்குரிய தாய்மாரே! தந்தைமாரே!
எனது குடும்பத்தில் ஒரு மாவீரர் எனது குடும்பத்தில் இரு மாவீரர் என பார்க்காதீர்கள். போராட வலுவுள்ள உங்களது பிள்ளைகளை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இளம் சந்ததிக்கு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். எமக்கென்று ஒரு தேசிய இராணுவத்தை கட்டி எழுப்புங்கள். இந்தப் பூமிப்பந்திலே இருப்பை, பலம் தான் தீர்மானிக்கின்றது.
வலிந்தவன் பிழைப்பான் என்ற தத்துவத்திற்கேற்ப எல்லோரும் சேர்ந்து தேசியத் தலைவரின் கையை பலப்படுத்துங்கள். எம்மிடம் தேவையான ஆயுதம் உள்ளது. மிகுதி எதிரியிடம் உள்ளது. எமக்கு தேவையானது எல்லாம் ஆளணி ஒன்றுதான்.
பல மடங்கு கொண்ட ஆளணியையும் உலக நாடுகள் வழங்கும் இராணுவ தளபாடங்களையும் கொண்டுள்ள சிங்கள இராணுவத்திற்கு எதிராக குறைந்த ஆளணியை வைத்து இரண்டு வருடத்திற்கு மேலாக நாம் போராடுகின்றோம் என்றால் யாரிற்கு வெற்றி நீங்கள் நினைத்துப்பார்த்தீர்களா?
நாங்கள் அழிவது போல் சிங்கள தேசமும் அழிந்துகொண்டுதான் இருக்கின்றது பொருளாதாரத்தில், இந்தத் தருணம் நீங்கள் திரண்டெழுந்து ஓங்கி ஒரு அடி அடித்தால் எழும்ப முடியாமல் சிங்களம் நொருங்கும்.
அன்புக்குரிய இளைஞர் யுவதிகளே!
உங்களிற்கு உங்களது பெற்றோரை பார்க்கும் பொறுப்பு இருக்கு என்பது தெரியும் தாய் தந்தைமாரை காப்பாற்ற வேண்டும் என்றால் தாய்நாட்டை காப்பாற்றினால் தான் முடியும். இது கற்பனையல்ல இதுதான் நிஜம். நாம் எவ்வளவு காலம் சாவிற்குள் வாழ்வது? தினம் தினம் செய்தியில் சிங்கள இராணுவத்தின் எறிகணை வீச்சில் வான் தாக்குதலில் இத்தனைபேர் படுகொலை செய்யப்பட்டு காயப்பட்டுள்ளனர் என்பதை தான் கேட்கின்றோம், பார்க்கின்றோம்.
இவர்களில் அரைவாசிப்பேர் போராட வலுவுள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்கள் அந்த வயதில் இவர்கள் ஏன் அநியாயமாக சாகவேண்டும். செத்தவர்கள் வீதியோரங்களிலும் காணிகளிலும் புதைக்கப்படுகின்றார்கள். ஏன் இந்த அவலம். இவர்கள் எல்லாம் எமது அமைப்பில் இணைந்து ஆயுதம் ஏந்தி இராணுவத்தை கொன்று வீரச்சாவு அடைந்தால் தமிழன் வீரத்தோடு வாழ்ந்தான் அல்லது வீரத்தோடு மடிந்தான் என்று வரலாறு சொல்லும்.
அன்புக்குரிய மக்களே!
சுதந்திரத்திற்கான காலம் கனிந்துகொண்டிருக்கின்றது. வெண்ணை திரண்டுவரும்பொழுது பானையை போட்டு உடைத்துவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தன்நம்பிக்கையாக இருங்கள். உங்களது இன்னல்கள் வலியை கண்டுதான் தலைவர் போராட்டத்தை தொடங்கினார். உங்களிற்கு ஏற்படும் வலியைக் கண்டு அவரது மனம் அப்பொழுதிலிருந்து இப்பொழுதுவரை குமுறிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் எள்ளளவும் குறையவில்லை. நாங்கள் (மாவீரர்கள்) திரும்பத் திரும்ப உங்களிடம் கேட்பது எல்லாம் தலைவரை பாதுகாக்குங்கள். அவரின் கையை பலப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை போராட விடுங்கள். தலைவர் நிச்சியமாக உங்களிற்கு சுதந்திரம் பெற்றுத்தருவார்.
எமக்கும் சிங்கள இராணுவத்திற்கும் தான் யுத்தம் சிங்கள மக்களுக்கல்ல. ஆனால் இராணுவமோ எமது மக்களை குண்டு வீசி கொல்கின்றது. எமக்கும் சிங்கள மக்களை கொல்ல முடியும். சிங்கள மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.
ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும் பொழுது திரும்பத் திரும்ப வலியுறுத்துவது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள் என்று. ஆனால் சிங்கள வான் கழுகுகள் எமது மக்களையும் மருத்துவமனைகளையும் தேடித் தேடி குண்டு போடுகின்றது.
நாம் சிங்கள தேச மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். நாம் எமது மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம்.
அன்புக்குரிய வன்னிவாழ் மக்களே!
நாம் சிங்கத்தின் குகைக்குள் வெடி சுமந்து போகின்றோம். நாம் யார், தமிழன் யார் எனக் காட்டுவோம். நான் எப்பொழுதும் அநியாயமாக சாவதை விரும்பியதில்லை. அந்த வகையில் நான் மாவீரனாக அதிலும் கரும்புலி வீரனாக எனது தாய்நாட்டிற்கும், மக்களிற்கும் பெருமை சேர்ப்பதை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
திலீபன் அண்ணை கூறியது போல்
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் அமையும்”
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழரின் தாகமும் அதுதான்”
இப்படிக்கு,
தம்பி, அண்ணா, மகன், போராளி
இ.ரூபன்.
லெப்டினன்ட் கேணல் தவம்/தவா, மேயர் புகழ்மாறன் ஆகிய வீர மறவர்களின் நினைவு நாள் (17.02.2008)
இதே நாளில் தமிழீழ தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் இந்த வீரமறவர்களுக்கும் எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.
லெப்.கேணல் தவம் .
தவா(நாராயணபிள்ளை முகுந்தன்) திரியாய், திருமலை
பிறப்பு 08.04.1966 -வீரச்சாவு 17. 02.2008
லெப்.கேணல் தவம் உழைப்பையே உயிராக்கி மலையானவன்
மிகவும் அண்மைக்காலத்தில் எம்மை விட்டு நீண்டதூரம் போய்விட்ட எங்கள் அன்பு அண்ணன் லெப்.கேணல் தவம். தவா பற்றிய நினைவுக் குறிப்பை எரிமலையில் எழுதுவதற்காகப் பலரிடம் தகவல் திரட்டச் சென்றிருந்தேன் எமது அமைப்பில் நீண்டகாலம் பணியாற்றிய நிதர்சனத்தின் மதிப்புமிக்க முத்துக்களில் ஒருவரான அவரைப்பற்றித் தேடிச்சென்றபோதுதான் அவர் வெறும் முத்தல்ல ஏராளமான முத்துக்களைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு பெருங்கடல் என்பது புரியவந்தது.
தவா தான் இருக்கும்போது தன்னைப்பற்றிச் சொன்னதுமில்லை. இல்லாத போது அவர் பற்றிக் கூறுவோருக்குப் பஞ்சமுமில்லை. அந்தப் பெருங்கடல் பற்றி அவருடன் சேர்ந்து வாழ்ந்த நினைவுகள் பற்றிப் பலரும் என்னிடம் கூறியவற்றைத் தொகுத்து வழங்குகின்றேன். திருமலையின் திரியாயில் நாராயணபிள்ளை மண இணையர்கட்கு 1966 இல் இரண்டாவது மகனாக முகுந்தன் பிறந்தபோது அந்தக் குடும்பம் நல்ல நிலையில் இருந்தது. தகப்பன் கிராமசேவையாளர் உத்தியோகத்தையும் தாய் ஆசிரியத் தொழிலையும் செய்தனர். முகுந்தனுக்கு ஒரு தமையனும் இரண்டு தங்கைகளும் உள்ளனர்.
திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்விகற்ற நாட்களில் விளையாட்டுக்களில் அவனுக்கு நல்ல ஆர்வம். பாடசாலை மட்டம், கோட்ட மட்டம் என்று பல பரிசில்களையும் தட்டிச் சென்றிருக்கிறான். சிறந்த தடகள வீரனாகவும் (கிறிக்கற்) துடுப்பாட்ட வீரனாகவும் திகழ்ந்தான். க.பொ.த. சாதாரண தரம் முடித்து உயர் தரத்தில் வர்த்தகத்தைத் தெரிவுசெய்து கற்ற முகுந்தனுக்குக் கல்வியைவிடத் தேசமே பெரிதாகத் தெரிந்தது. சிங்கள இனவாதத்தின் முதற்பொறியாக இருந்தது திருமலை. அங்கு சிங்களக் குடியேற்றங்களும் பெருகத்தொடங்க தமிழர் விடுதலைக்கான பயணமும் தீவிரம் பெற்றது. லெப்.கேணல் புலேந்தி அம்மான் திருமலைக்குப் பொறுப்பாகச் செயற்பட்ட காலத்தில் 1985.06.08 அன்று தனது வீடு குறித்த பற்றுக்களைத் தள்ளி விட்டுத் தேசத்திற்காகப் பயணமானான் முகுந்தன்.
திருமலை – 02 பயிற்சி முகாமில் புலேந்தி அம்மானிடம் பயிற்சி பெற்றதன் பின்பு அவனது பெயர் தவம், தவம் பேச்சு வழக்கில் தவா ஆகி நிலைத்துப் போனது. தவா இயக்கத்தில் இணைந்து கொண்ட அதே ஆண்டு 8ம் மாதம் 10ஆம் நாள் பன்குளம் திரியாய் வீதியில் இருந்த கஜூத் தோட்டத்தில் தவாவின் தகப்பன் உட்பட 16பேரைச் சிங்களப் படைகள் சுட்டுக்கொன்றனர். ஏற்கனவே கிராமசேவையாளராக அரச சேவை செய்த அவரைச் சிங்களம் கட்டாயம் கற்றுத் தெரிவாக வேண்டும் என்ற சட்டம் பாதிப்புக்குள்ளாக்கியது. அவரது அரசசேவையைப் பறித்தது. தொடர்ந்து தீவிரம் பெற்ற அரச பயங்கரவாதம் அவரது உயிருக்கு உலைவைத்தது. தவாவுக்கு அதுவாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.
அந்த வலியைச் சுமந்து கொண்டே அவர் விடுதலைக்காகப் பயணித்தார். திருமலைத் தாக்குதலணி வடக்கு நோக்கிப் புறப்பட்டது. அப்போது அவருக்கு அகவை பத்தொன்பது. 1986ல் யாழ்ப்பாணம் சென்ற தவா, அல்பேட் வீட்டில் ஒருவனாகினான். கேணல் கிட்டு யாழ்மாவட்டத் தளபதியாகச் செயற்பட்ட காலம் அது. மதன் வீடு, குப்புவீடு, நம்பர் -3, மெயின் போன்ற நிலையங்களில் ஒன்றான உரும்பிராய், நீர்வேலிப் பகுதியில் அமைந்திருந்த அல்பேட் வீடு சற்றுமாறுபட்டது. அங்குதான் ஆயுதக்களஞ்சியம் , ஆயுதப்பராமரிப்பு, குப்பி அடைத்தல், சக்கைஅடைத்தல் போன்ற வேலைகள் மறைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. தவா அந்தப்பணிகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார்.
ஆயுதம் பற்றியும் வெடிமருந்து பற்றியும் தேவையான அறிவைப் பெற்றிருந்தார். அதுதான் பிற்காலத்தில் திரைப்படத் தயாரிப்புக்களில் அவரை ஒரு வெடிபொருள் நெறியாளராக உருவாக்கிவிட்டது. அந்தக் காலத்தில் ஒரு முகாமின் சகல வேலைகளையும் போராளிகளே மாறி மாறிச் செய்வார்கள். சமையல், துப்பரவு, ஆயுதப் பராமரிப்பு, அன்றாடப் பதிவு என்று இன்றைய நாட்களைவிட எல்லாமே மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. லெப்.கேணல் ஜொனியே இவற்றையெல்லாம் சரிபார்ப்பார். சமையலில் இருந்து சகலவற்றையும் தவாவும் செய்தார். 21.12.1985 அன்று சுதுமலையில் அமைந்திருந்த கேணல் கிட்டுவின் மையத்தளத்தை அழிப்பதற்காகச் சிங்களப் படைகள் மூன்று பெல் வகை உலங்கு வானூர்திகளோடு சுற்றிவளைப்பைச் செய்தன.
அதை முறியடிக்க அல்பேட் முகாமில் இருந்து போராளிகள் சென்றனர். சண்டை முறியடிக்கப்பட்டது. ஆனால் இவர்களின் அணிக்குத் தலைமையேற்றுச் சென்ற மேஜர் அல்பேட் தவாவிற்கு அருகிலே வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இந்தச் சண்டையில் தவா மிகவும் திறமையாகச் செயற்பட்டமைக்காகக் கேணல் கிட்டு உட்பட அனைவராலும் பாராட்டப்பட்டார். அதன் பிறகு 1986 இல் வசாவிளான் பகுதிக் காவல்நிலைகளில் காவலில் ஈடுபட்டார். அங்கு நடைபெற்ற சண்டை ஒன்றில் கையில் சிறு விழுப்புண் இவருக்கு ஏற்பட்டது. இதே ஆண்டு காங்கேசன்துறையில் இருந்த சிங்களப் படைகள் தெல்லிப்பழை ஊடாகப் பெருமெடுப்பில் முன்னேறத் தொடங்கின.
படையினரை வழிமறித்து நடாத்தப்பட்ட சண்டையிலும் தவா பங்கேற்றார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காகத் தவா தமிழகம் சென்றார். அங்கு மூன்று முறை மூல நோய்க்கான அறுவைச் சிகிச்சை இவருக்குச் செய்யப்பட்டது. 1987 இல் அங்கிருந்து திரும்பவும் நாட்டுக்கு வந்த பின்பு புலேந்தி அம்மான் மீண்டும் தவாவைத் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார். மீண்டும் திருமலைத் தாக்குதல் அணியில் இணைந்து கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிப் பணியாற்றிய தவா 1987 இல் மீண்டும் புலேந்தி அம்மானுடன் யாழ் நோக்கிச் செல்கின்றார். 1987 பெப்ரவரி மாதம் கேணல் கிட்டுவின் ஆக்கப்படி நிதர்சனம் நிறுவனம் தொடங்கப்படுகின்றது. இதன் ஒரு பகுதியாக ஒளிபரப்புச் சேவையும் தொடங்கப்படுகின்றது.
தெல்லிப்பழை, புத்தூர், கொக்குவில், வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளில் ஒளிபரப்பு மையங்கள் செயற்படுகின்றன. 1987 காலப்பகுதியில் பரதன் அவர்கள் நிதர்சனத்திற்கு பொறுப்பாக இருந்து செயற்பட்டபோது தவா நிதர்சனத்தோடு இணைந்து கொள்கின்றார். நிதர்சனத்தின் மூத்த போராளிகளில் ஒருவரான கப்டன் தீப் தவாவின் ஊர்க்காரர். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து படப்பிப்புக்களில் ஈடுபடுவார்கள். படப்பிடிப்பில் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தார். பின்னாட்களில் ஒரு ஒளிப்பதிவு வல்லுனராகவே அவர் செயற்பட்டார். தியாகி திலீபனின் உண்ணாநோன்புக் காலத்தில் கப்டன் தீப்புடன் இணைந்து அந்த வரலாற்று நிகழ்வை படப்பிடிப்புச் செய்தார். அமைதிப்படை ஆக்கிரமிப்புப் படையாகியது.
தன்னை வளர்த்த புலேந்தி அம்மானின் இழப்பு தவாவுக்குள் நெருப்பாய் கனன்றது. தொடர்ந்து இந்திய-புலிகள் போர் வெடிக்கின்றது. அந்த நேரம் இந்தியப் படைகளால் ஊடகங்களே முதலில் முடக்கப்படுகின்றன. நிதர்சனமும் தனது உடைமைகளோடு தன்னை உருமறைத்தபடி இந்தியப் படைகளுக்கு எதிராக ஊடகப் போரைத் தொடக்கியது. தென்மராட்சி மீசாலையில் “எம்.ஜி .ஆர். வீடியோ சென்ரர்” என்ற பெயரில் கப்டன் தீப், தவா, பரதன், புதுவை இரத்தினதுரை போன்றவர்கள் ஒளிக்கலையகம் ஒன்றை அமைத்து அதன் மறைவில் வேலைகளைத் தொடர்ந்தனர். பழைய ஆவணங்களைப் பாதுகாப்பது, புதிய விவரணம் ஒன்றைத் தயாரிப்பதற்கான படப்பிடிப்புக்களில் ஈடுபடுவது இவர்களுடைய வேலை.
இந்தியப்படைகளுக்கு முதலில் எம்.ஜி.ஆர் என்ற பெயரில் ஐயப்பாடு இல்லை. கப்டன் தீப், தவா போன்றோர் இந்தியப் படைகளின் நகர்வுகளை மறைமுகமாக இருந்து படம் பிடித்தனர். இந்தியப் படைகள் செய்த படுகொலைகள் பற்றி மக்களிடம் பேட்டிகளை பதிவு செய்தனர். இவர்களது பணிகள் இந்தியப் படைகளின் சந்தேகத்திற்கு இடமாகவே ஆவணங்களை தகுந்தமுறையில் மறைத்துவிட்டு வன்னிநோக்கிப் பயணமாகின்றனர்.”பப்பா அல்பா” என்ற சங்கேதப் பெயருடைய வன்னிக் கானகமுகாம் ஒன்றில்வைத்து நிதர்சனத்தின் பணிகள் தொடர்கின்றன. ஒரு சிறிய கலையகத்தை அமைத்து ஒலிப்பதிவு, படத்தொகுப்பு வேலைகள் தொடங்குகின்றன.
இதுவரை எடுக்கப்பட்ட காட்சிளும் பேட்டிகளும் சேர்க்கப்பட்டு விவரணம் ஒன்று தயாராகின்றது. “இந்திய அரச பயங்கரவாதம் – பாகம் 1, பாகம் 02” என்ற பெயருடைய விவரணம்தான் உலகிற்கு முதன் முதலில் இந்தியப் படைகள் ஈழத்தில் செய்தது என்ன என்பதை தெளிவாக்குகின்றது. இந்த விவரணத் தயாரிப்புக்களை தவா, தீப் ஆகியோர் காட்டுக்குள் இருந்து வெளிவந்து மக்கள் மத்தியில் உள்ள வீடியோக் கடைக்காரர்களை அணுகி சமூக நிகழ்வுகளை படம் பிடிக்கும்போது இந்தியப்படைகளின் காட்சிகளையும் படம்பிடித்துத் தருமாறு கேட்டு அக்காட்சிகளைப் பெற்று விவரணத்தில் இணைத்தனர்.
அந்தச் சந்தர்ப்பம்தான் வன்னி எங்கிலும் வீடியோக் கடைக்காரர்களையும் மக்களையும் தவாவிடம் நெருங்கவைத்தது. தவாவிற்குத் தெரியாத வீடியோ. நிழற்படக் கடைக்காரர்கள் இல்லை என்னும் அளவிற்கு அந்த உறவு வலுப்பட்டது. தவாவிற்குத் தெரியாத ஊர்களும் இல்லை. அவரை அறியாத மக்களும் இல்லை. “கானகத்தில் ஒரு நாள்” சிலநூற்றுக்கணக்கான போராளிகளின் காட்டுவாழ்க்கை பற்றிய செய்திகளை எடுத்துக் காட்டிய படம். தவாதான் இதற்கும் படப்பிடிப்பு. இந்தக்காலத்தில்தான் ஒட்டுசுட்டான் கோயில் திருவிழாவில் ஒரு அருமையான பாடகரை ஒரு வீடியோ ஒளிநாடா மூலம் தவா இனம் கண்டார்.
உடனே புதுவை அண்ணரிடம் உங்களுக்கேற்ற பாடகர் ஒருவர் இருக்கிறார் எனச்சொல்லி வைத்தார். இந்தியப் படைகள் புறப்பட்ட கையோடு கண்ணாடிச் சந்திரனும் தவாவும் சென்று அந்தப் பாடகரிடம் தொடர்புபட்டு கலை, பண்பாட்டுக் கழகத்துடன் இணைக்கின்றனர். அவர் பாடகர் சாந்தனாக தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமாகக் காரணமானதும் தவாதான். இந்தியப் படைகள் தமிழீழத்தில் இருந்து தோல்வியுடன் புறப்பட புலிகள் கானகத்தில் இருந்து வெளிவருகின்றனர். அந்தக் காலப்பகுதியில் தேனிசை செல்லப்பா குழுவினர் தமிழகத்தில் இருந்து ஈழம் வருகின்றனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் இருந்த கவின் கலைக் கல்லூரியில் இருந்து தவா உட்பட பல போராளிகள் தேனிசை செல்லப்பா குழுவினரோடு புறப்படுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து அம்பாறை வரை 21 இடங்களில் தேனிசை செல்லப்பாவின் தாயகப்பாடல்கள் மேடை நிகழ்ச்சிகளாக நடைபெறுகின்றன. அந்த நிகழ்ச்சிக்கான மேடையமைப்பு ஒளியமைப்பு, படப்பிடிப்பு, உணவு உபசரிப்பு, பாதுகாப்பு உட்படப் பலவேலைகளின் பின்னணியாகத் தவா உள்ளிட்ட ஒருசிலர்தான் பணியாற்றினார்கள். இன்னவேலையென்றில்லாமல் எல்லாவற்றையுமே இழுத்துப் போட்டுக் கொண்டு இடைவெளி நிரப்பி, ஆளில்லை என்று திக்கு முக்காடும் நேரங்களில் அந்த இடைவெளிகளை நிரப்பி, கடின உழைப்பின் போதும் கலகலப்போடு உலவி தவா இந்த விடுதலைப் பயணத்தோடு இரண்டறக் கலந்திருந்தார்.
தேனிசை செல்லப்பாவின் நிகழ்ச்சி திரியாயில் நடந்த போதுதான் தவாவின் தாயார் தவாவை நீண்ட நாட்களுக்குப் பிறகு காண்கிறார். அதுவரை இது தனது சொந்த ஊரென்று தவா மூச்சுக்கூட விடவில்லை. தாயைக் கண்ட நிறைவோடு அவரது பயணம் தொடங்குகின்றது. 1990 இற்குப் பிறகு சிங்களப் படைகளின் வல்வளைப்பு தவாவின் உறவுகளை ஊரைவிட்டே ஏதிலிகளாக்கி அனுப்புகின்றது. 1990-1991 வரை தவா கலை, பண்பாட்டுக் கழகப் பணிகளோடு இணைந்திருந்தார். அக்காலத்தில் “இந்த மண் எங்களின் சொந்த மண்” , “வேங்கைகளின் விடுதலை வேதம்” “யாகராகம்,” “நெய்தல்” உட்பட ஆறு பாடல் ஒலிநாடாக்கள் தமிழோசை கலையகத்தால் கலைபண்பாட்டுக்கழக வெளியீடுகளாக வெளிவந்தன.
இந்தப் பாடல் ஒலி நாடக்களின் தயாரிப்பில் பல்வேறுபட்ட வேலைகளோடு தவா இணைந்திருந்தார். அப்போது கலை, பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் பத்து நாட்கள் முத்தமிழ்விழா நடத்தப்பட்டது. அதன் சிறப்பான ஆற்றுகைக்கும் தவாவினது உழைப்பு பலம் சேர்த்தது. மின் பிறப்பாக்கியிலிருந்து மேடைகட்டுதல், கலைஞர்களை ஏற்றியிறக்குதல், மக்கள் தொடர்பு, வரவேற்பு என்று தவா அனைத்து வேலைகளின் முதுகெலும்பாக நின்றார். கலை, பண்பாட்டுக் கழகத்துடனான அவரது தொடர்பு வெளிச்சம் இதழின் நூறாவது இதழ் வெளியீட்டு விழாவரை தொடர்ந்தது. எந்தப் பணி என்றாலும் களமுனைப் படப்பிடிப்புக்களைச் செய்ய அவர் தவறவேயில்லை. 1990 களில் நடந்த பல சண்டைகளுக்குத் தவாதான் படப்பிடிப்பு.
கோட்டை, மாங்குளம், கொக்காவில் போன்றவை மிகமுக்கியமானவை. 1991 இன் பின்னர் நிதர்சனத்தோடு மீண்டும் இணைந்த தவா வன்னிப்பகுதிப் படப்பிடிப்புக்குப் பொறுப்பாகத் தனது பணியைத் தொடர்ந்தார். வன்னியில் தொடக்கத்தில் தவாவுக்கென்றொரு முகாம் இருந்ததில்லை ஆனால் தவாவைத் தெரியாத வீடுகளே இல்லை. சொந்த ஊர்ப் போராளிகளுக்கே தெரியாத இடங்கள் தவாவிற்கு நன்கு அறிமுகமாகியிருந்தன. வன்னி வாழ்க்கையில் மக்களின் எழுச்சி நிகழ்வுகள், குண்டு வீச்சுக்கள். போராளிகளின் பயிற்சி முகாம் படப்பிடிப்புக்கள், அடையாள அட்டைப் படம் எடுத்தல், விளையாட்டுக்கள் என்று அனைத்தையுமே தவா படம்பிடித்தார். காலப் போக்கில் அவருக்குதவியாக பல புதிய போராளிகள் வந்திணைய அவர்களையும் பயிற்றுவித்தார்.
வன்னியில் இருந்த காலத்தில்தான் கரும்புலி போர்க் உடனான நட்பு இவருக்குக் கிடைக்கின்றது. போர்க் கொண்டுசென்ற வெடிக்கும் ஊர்திக்குரிய பயிற்சி ஒத்திகை நடக்கின்றது. தவாவும் படப்பிடிப்புச் செய்தபடி அருகில்நிற்கிறார். மாங்குளம் முகாம் மீதான தாக்குதலில் போர்க் வெடிக்கப்போகும் நேரத்திற்குச் சற்று முன்னர் போர்க்குடன் அமர்ந்திருந்து ஒன்றாகப் பகிடிவிட்டு, ஒன்றாகச் சாப்பிட்டு, அவர் போய் வெடித்த பிறகு அந்தத் தாக்குதலின் பதிவுகளைச் செய்து, விமானக் குண்டுவீச்சுக்களில் மாட்டுப்பட்டுத் தப்பிவந்து, வீரச்சாவுகளுக்குச் சென்று என்று ஓடியோடி உழைத்தார்.
மாங்குளம் சண்டைமுடிய அத்தாக்குதலின் வரைபடத்தையும் சிலமுக்கிய குறிப்புக்களையும் அன்றிரவே யாழ்ப்பாணத்திலமைந்திருந்த தலைமை அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும் என்றகட்டளை கிடைக்கிறது. கூடநின்ற தவாவின் தோழன் நாளை விடியக் கொண்டுசெல்வோம் என்று கூறுகின்றார். ஏற்கனவே மூன்று நாட்கள் தூக்கமில்லை. ஆனாலும் தவா “இல்லையில்லை இன்றிரவே அனுப்ப வேண்டும்”; எனச்சொல்லி கடின பாதைகளால் உந்துருளியில் சென்று கடல் கடந்து யாழ். சென்று உரிய பணியை நிறைவேற்றினார். அலுப்புச் சலிப்பில்லாமல் பணியாற்ற அவருக்கு நிகர் எவரும் இருந்ததில்லை. யார் எது கேட்டாலும் தவா இல்லை என்று சொன்னதில்லை.
எங்கிருந்தாவது பெற்று உரிய நேரத்திற்கு உரிய பொருளைக் கொடுத்துவிடுவார். யு1, யு5, துஏஊ, ஆளு-1, ஆ-4, ஆ7, ஆ1000, ஆ3000, ஆ450, ஆ9000 என்று பழைய, தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்துக் கமரா வகைகளுமே தவாவுக்கு நன்கு பழக்கம். கமராமீது அவருக்கு அன்பு இருந்தாலும் ஆயுதம் மீதுதான் அவருக்குக் காதல் இருந்தது. குறிபார்த்துச் சுடுவதில் தவா மிகவும் கெட்டிக்காரன். 1987 இல் இருந்து 2006 முகமாலைக்களம் வரை தவா நிற்காத சண்டைக்களங்களே இல்லையெனலாம்.
சண்டைக்களங்களுக்கு கமராவுடன் போகும் தவா பின்னர் துவக்கெடுத்து ஆமிக்குச் சுடுவதும் காயப்பட்டவர்களைத் தூக்குவதுமாக மாறிவிடுவார். இப்படித்தான் முல்லைத்தீவுச் சண்டையில் நிற்கும்போது தவாவுக்கு நன்கு அறிமுகமான தவாவிடம் படப்பிடிப்பு பயிற்சிபெற்ற பெண்போராளி சண்டைசெய்து கொண்டிருக்கும்போது தவாவுக்கு முன்னே விழுப்புண்படுகின்றார். தவா அவரைத் தூக்கிக்கொண்டு 750 மீற்றர் தூரம் ஓடிச்சென்று காவு வண்டியில் ஏற்றிவிட்டு வந்தே மீதிப் பணி தொடர்ந்தார். சண்டைப் படப்பிடிப்புச் செய்ய அவருடன் பல போராளிகள் நின்றாலும் சண்டை நடக்கும் போது அவர் முகாமில் நிற்கமாட்டார்.
படப்பிடிப்பில் ஈடுபட்டவர்களுக்கு உதவிபுரிய, மின்கலத்துக்கு மின்னேற்றிக் கொடுக்க என்று களமுனைக்கு விரைந்துவிடுவார். இப்படித்தான் முல்லைத்தீவுச் சண்டையில் ஒரு பெண் போராளி படப்பிடிப்புச் செய்து கொண்டிருந்தார். தவாவுக்கு அகவையிலும், அனுபவத்திலும் அவர் மிகவும் சிறியவர். அவரிடம் “தங்கச்சி உந்தக் கமராவைத்தாங்கோ படமெடுத்துப்போட்டுத் தாறன்” என்று தவா கேட்க, தவாவைப் பற்றி அதிகம் தெரியாத அவரோ “நான்தான் இங்க ஒரு கிழமையாக நிண்டு படமெடுக்கிறன். கமராவைத் தரமாட்டன். வேணுமென்றால் நீங்கள் லைற் பிடியுங்கோ நான் படமெடுக்கிறன்” என்று கூறத் தவா அவர் படமெடுத்து அவ்விடம் விட்டு அகலும்வரை லைற்பிடித்து உதவி செய்தார்.
பின்னாட்களில் தவாபற்றி அறிந்து அந்த நிகழ்வுக்காக அந்தப் பெண்போராளி வருந்தியபோதும் தவா சங்கடப்படவேயில்லை. பெரியவராயிருந்தாலும் தவா தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுவதில்லை. அவரவருக்கேற்ற வகையில் தவா தன்னை மாற்றியமைத்துக் கொள்வார். நிதர்சனத்தின் வெளியீடுகளில் ஒன்றான ஒளிவீச்சு சஞ்சிகை உருவாக்கத்திற்கான அடித்தளத்தை மாமனிதர் சச்சிதானந்தம் (ஞானதரன்) அவர்களுடன் இணைந்து தவா போட்டிருந்தார். 1993 மேயில் அது தன் முதல் இதழை வெளியிட்டது. அதற்குமுன்னரே தவாவும், திரு.சச்சியும் இணைந்து 91,92 காலப்பகுதியில் அந்த இதழைத் தயாரித்து விட்டனர்.
அந்த இதழின் தொழில்நுட்பத்தில் இருந்த குறைபாடு காரணமாக அது 1993 இலேயே மீண்டும் திருத்தமாகத் தயாரிக்கப்பட்டது. இந்த ஒளிவீச்சு சஞ்சிகை 100 ஐத்தாண்டித் தனது இதழ்களைவெளியிட்டது. அது தொடங்கப்பட்டதிலிருந்து இறுதி இதழ்வரை, அது பின்னர் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியாகப் பரிணாம வளர்ச்சியடைந்ததுவரை தவா உடனிருந்து தனது உழைப்பை ஊற்றியிருந்தார். ஒளிவீச்சு தயாரிப்பில் செய்திப்படப்பிடிப்பு மிகமுக்கியமான ஒன்று. வன்னிக்கு எல்லாரும் இடம்பெயர்ந்த பின்னர் தொழில்நுட்பக் கோளாறுகள் நடுவில் கலையகம் இல்லாத இக்கட்டுக்குள் இச்செய்திப் படப்பிடிப்பை செய்வது மிகவும் கடினமாக இருந்தது.
இதன் படப்பிடிப்புக்கு ஒளியமைப்பைச் சரியாகச் செய்வது நாட்கணக்கில் இழுபட்டது. இன்று சரிவராவிட்டால் நாளை, நாளை சரிவராவிடில் மறுநாள் என்று அந்த வேலை நீண்ட போதும் தவாதான் பொறுமையாக இருந்து அந்த ஒளியமைப்புச் சரியாகும் வரை இடத்தை மாற்றி மாற்றி விளக்குகளை அமைத்து அந்தப்பணியை சரியாக்கித் தருவார். ஒளிவீச்சுத் தயாரிப்பின் போதுதான் எழில் தவாவுக்கு அறிமுகமானார். போராளியாகவும் செய்தி வாசிப்பாளராகவும் இருந்த அந்தப் பெண்ணைத் தவாவுக்கு மிகவும் பிடித்துப் போனது. 1995 பெப்ரவரி மாதம் தவாவுக்கும் எழிலுக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பயனாக இரண்டு பிள்ளைகள்.
தவாவைப் போலவே அவரது குடும்பமும், போராளிகளின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்தது. தவா நீண்ட நாட்கள் வீடு செல்லாத போதெல்லாம் வீட்டைத் தனியே நிர்வகித்து விடுதலைப் போருக்கு உறுதுணையாயிருந்தார் தவாவின் மனைவி. தொடர்ந்த காலங்களில் தவாவின் மைத்துனர்கள் இருவர் போராடச் சென்று மாவீரரானார்கள். இருபத்து மூன்று வருடகாலப் போராட்ட வாழ்க்கையில் தவா தனது குடும்பத்தோடு ஒன்றாக இருந்த நாட்களை எண்ணிவிடலாம். தான் திருமணம் செய்தவர் என்றோ, தனக்கு குடும்பம் இருக்கிறது என்றோ அவர் நினைத்ததில்லை. இயக்கம் எங்கு போகச் சொல்கிறதோ அங்கு போய் எதைச் செய்யச் சொல்கிறதோ அதைச் செய்து ஒரு செயல்திறனுள்ள முழுமையான போராளியாகவே அவர் இறுதி நாட்கள் வரை வாழ்ந்தார்.
எதிரி விமானங்களின் குண்டு வீச்சுக்கள,; மக்களின் இடர்பாடான இடப்பெயர்வுகள் தவாவைப் பொறுத்தவரை தாங்க முடியாத துயரமான நிகழ்வுகள். நவாலி சென். பீற்றேர்ஸ் தேவாலயப் படுகொலையின் போதும், யாழ. வலிகாம இடப்பெயர்வின் போதும் கையில் கமராவோடு அவர் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார். அந்த வேளைகளில் படப்பிடிப்பைத் திடீரென்று பிறர் பொறுப்பில் விட்டுவிட்டுத் துன்பப்படும் மக்களுக்கு உதவிபுரியத் தவா போய்விட்டார். நிதர்சனம் நிறவனத்தாலும் திரைப்பட உருவாக்கப் பிரிவாலும் தயாரிக்கப்பட்ட குறும்படங்கள், முழுநீளப்படங்கள் அனைத்திலுமே தவாவின் உழைப்பு இருந்தது. தன்னை ஒரு நடிகனாக அவர் என்றும் நினைத்ததேயில்லை.
இந்தப் பாத்திரத்துக்குத் தவாதான் பொருத்தம் என்று இயக்குநர் தீர்மானித்தபோது தவா மறுப்புக் கூறுவதில்லை. வழமையாக எந்த வேலைப் பொறுப்பைக் கொடுத்தாலும் தான் ஏற்றுக்கொண்டு செய்ததைப் போல் நடிப்பையும் ஈடுபாட்டோடுதான் அவர் செய்தார். “இன்னும் ஒரு நாடு”, “முற்றுகை”, “விடுதலைமூச்சு” ஆகிய படங்களில் இப்படித்தான் அவர் சிறப்பாகப் பங்கேற்று நடித்திருந்தார். இன்னும் ஒரு நாடு படத்தின் பின்பு பலர் அவரைக் “கிண்ணி” என்றே அழைத்தார்கள். கிண்ணியின் அம்மாவுடனான அன்பும் அவருக்கு என்றுமே இருந்தது. இளமைக்காலப் போராட்ட நாட்களில் வெடிபொருளில் அவருக்கிருந்த பரிச்சயம் திரைப்படத் தயாரிப்பில் அவருக்குக் கைகொடுத்தது.
எந்தப் படமாக இருந்தாலும் அதை எவர் தயாரித்தாலும் தவாதான் அதன் வெடிபொருள் கையாளலைச் செய்வார். ஏற்கனவே வெளியான உலகின் சண்டைப் படங்களில் வெடிபொருட்களை எவ்வாறு கையாண்டார்கள் என்ற பொறிமுறையைச் சொல்லித்தருவதற்கு எவரும் இல்லை. கேட்டுப் பெறுவதற்கும் வாய்ப்புக்கள் இல்லை. இங்குள்ள வளங்களை வைத்துக் கொண்டு கற்பனையையும் ஒருங்கிணைத்துச் செயற்படுவதே பொருத்தமாக இருந்தது. தவாதான் இந்த விடயத்தில் தமிழீழத்தின் முன்னோடி. ஒரே காட்சியில் சுடுவதும், அது படுவதும் தெரியவேண்டும் என்பதற்காக வாயு ரவையைத் தெரியுசெய்து அதுவும் தொடர் சூடாகச் சுடப்பட வேண்டும் என்பதற்காக வாயுரவைத் தயாரிப்பின்போதே சில ஏற்பாடுகளைச் செய்து வெற்றிபெற்றார்.
படப்பிடிப்புக்காக படைக்கலம் சார்ந்த பல ஏற்பாடுகளைச் செய்து திரைப்படங்களின் வெற்றிகளுக்கு வழிகோலினார். ஜெயசிக்குறுக் காலம் இயக்கத்தின் நெருக்கடிக்காலங்களில் ஒன்று. படப்பிடிப்புக்கென களமுனைக்கு அனுப்பப்படும் போராளிகள் ஒவ்வொருவராக விழுந்து கொண்டிருந்தனர். விழுப்புண் அல்லது வீரச்சாவு. அந்த நேரங்களில் தனது அன்புக்குரியவர்களின் இழப்பு தவாவை வெகுவாகப் பாதித்தது. தானே நேரில் சென்று களக்காட்சிகளைப் பதிவு செய்தார். ஜெயசிக்குறுவில் வீரச்சாவடைந்த கப்டன் ஜீவனுக்கு உறவினர்கள் அருகில் இல்லை. தவா தனது வீட்டிலேயே ஜீவனின் இறுதி நிகழ்வுகளைச் செய்துமுடித்தார். “ஜெயசிக்குறு எதிர்ச்சமர்” பற்றிய விவரணத்தயாரிப்பு ஜெயசிக்குறு சமரைப் போலவே நீண்டதாக இருந்தது.
களத்தில் நின்ற ஏராளமான போராளிகளினதும் களமுனைத் தளபதிகளினதும் பேட்டிகள் களமுனையில் வைத்தே ஒளிப்பதிவு செய்யப்பட்டன. தவாதான் நேரில் நின்று அனைத்தையும் ஒழுங்குபடுத்திப் படப்பிடிப்பைச் செய்தார். சமாதான காலத்தில் ஒருசில நாட்கள் திரைப்பட உருவாக்கப்பிரிவிற்கான உயர்தொழில்நுட்ப வலுக்கொண்ட நவீன டிஜிற்றல் கமராவைக் கொள்வனவு செய்ய தவா உட்பட மூன்றுபேர் இங்கிருந்து வெளிநாடு ஒன்றுக்குச் சென்றனர். கமராவின் தயாரிப்பாளர்கள் அதற்கான ஒரு மாதப் பயிற்சியை வழங்கிய பின்னர் தேர்வு வைத்து அதில் தேறிய பின்னரே கமராவை உரியவர்களிடம் கையளிப்பார்கள்.
ஆனால் தவாவின் திறமையும் சென்றவர்களின் திறமையும் கமராவின் தயாரிப்பாளர்களுக்கு வியப்பைத் தந்தது. போய்வர இரண்டு நாட்கள் பயிற்சிக்கு ஐந்து நாட்கள் என்று ஒரு கிழமைக்குள்ளேயே அந்த அலுவலை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டு ஊர்வந்து சேர்ந்தார்கள். புதிய கமராவின் பெறுமதி அரியது. தவா பயிற்றுவிக்க ஏனையவர்கள் அதைக் கற்றுக்கொள்ள முழுநீளத் திரைப்படத்தின் உருவாக்கத்தில் அது முதன்மையாய் இருந்தது. இன்னமும் இருக்கின்றது. தவாவிடம் படப்பிடிப்புப் பயிற்சி பெற்று ஏராளமான ஆண், பெண் போராளிகள் வெளியேறியிருக்கின்றனர். அவர்களிடம் ஒரு ஆசிரியரைப் போல அவர் என்றும் பழகுவது கிடையாது.
எந்தப் பெரிய சிக்கலாயிருந்தாலும் போராளிகள் மனத்தாங்கலோடு அந்தச் சிக்கல்களைத் தவாவிடம் கொண்டு வருவர். படப்பிடிப்புத் துறையில் ஏற்படுகின்ற அனைத்துச் சிக்கல்களையுமே அவர் சிறிதாக நினைப்பார். உடனடியாக அப்பிரச்சினைகளுக்கான தீர்வைத் தவா தேடிக்கொடுப்பார். அவர் நிற்கும் இடத்தில் கலகலப்புக்கு என்றும் குறைவிருக்காது. அது அனல் பறக்கும் சண்டைக்களமாக இருந்தாலும் சரி, வியர்வை வழிந்தோடும் கடின வேலையென்றாலும் சரி அங்கு நடு நாயகனாக அவரே விளங்குவார். “தவாண்ணை வந்தால் எல்லா வேலையும் தானாக நடக்கும்.
எந்த வேலை என்றாலும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். யாரையாவது இதைச்செய், அதைச்செய் என்று கூறிவிட்டு அவர் இருக்க மாட்டார். அவரே முன்னின்று செய்வார். நாங்களும் இயல்பாக வேலையில் இறங்கி விடுவோம்” என்று சொல்கிறார்கள் தவா வளர்த்த போராளிகள். அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதை ஒரு தலையாய கடமையாகவே அவர் கைக்கொள்ளுவார். இழப்பு வீடெனில் தோரணங்கட்டுவதிலிருந்து பாடை சுமப்பதுவரை, திருமணங்கள் எனில் பந்தல் போடுவதிலிருந்து உணவு பரிமாறுவது வரை பொறுப்புணர்வோடு பங்கெடுப்பார். அமைப்பின் முக்கிய தளபதி ஒருவருக்குத் திருமணம்.
திருமணத்தில் படப்பிடிப்பிலிருந்து உணவு பரிமாறுவதுவரை தவா ஓடி ஓடித் திரிந்தார். மணவிழாவுக்கு எதிர்பார்த்ததைவிடக் கூடுதலானோர் வந்திருந்தனர். உணவு பரிமாறுவதுதான் சிக்கல். ஒருமாதிரி வந்தவர்கள் எல்லோருக்கும் உணவு கொடுத்தாகிவிட்டது. திருமணத்தை ஒழுங்குபடுத்தியவர்கள் பலருக்குச் சரியான பசி. அன்று மதியத்திலிருந்து அவர்களுக்குச் சாப்பாடு இல்லை. நேரம் இரவு ஒன்பதைத் தாண்டிவிட்டது. கடைக்குச் சென்று உணவும் பெறமுடியாது. தவாவுக்கு எங்கிருந்துதான் அந்த அறிவு வந்ததோ தெரியாது. நிறை குடத்தில் வைத்திருந்த தேங்காயை உடைத்து, பரப்பி வைத்திருந்த அரிசியைக் கொறித்து வாழைப்பழத்துடன் தானும் சாப்பிட்டு இருந்தவர்கட்கும் கொடுத்து அன்றைய பொழுதைச் சமாளித்தேவிட்டார்.
வழமையாகத் தவாவுக்கு உணவு நேரத்துக்கு உண்ணவேண்டும். சுவைத்தும் ருசித்தும் சாப்பிடக்கூடியவர் அவர். ஆனாலும், படப்பிடிப்பு நடைபெறும் நாட்களில் நடிக்கவந்தவர்கள், படப்பிடிப்பில் ஈடுபட்டவர்கள், உதவியாளர்கள் என்று அனைவருக்கும் கொடுத்தபின்பு இறுதியாகச் சாப்பிடுபவர் தவாவாகத்தான் இருக்கும். சாப்பாடு இல்லையெனில் பட்டினி; அல்லது சமாளிப்பு. வாகனம் ஓடுவது தவாவுக்கு ஒரு கலை, அது எந்த ஊர்தி என்றாலும், யாருடையதாக இருந்தாலும் ஒருதடவை ஓடிப்பார்த்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அவருக்கென்று ஒரு உந்துருளி இருக்கும.; வேலைக்காக வெளியில் செல்லும் யாராவது அதைக் கேட்டால்; கொடுத்துவிட்டு, நடந்தும் தன்பணி தொடர்வார்.
தவாவிடம் பெறுமதியான ஒரு பொருள் இருக்கின்றதெனில் பெடியளுக்குச் சந்தோசமாக இருக்கும். யாராவது ஒருவர் சிறிது நாட்களின் பின்னர் “தவாண்ணை அதைத் தாங்கோ” என வாங்கிவிடுவார். நிரந்தரமாக அவரிடம் எதுவுமே இருந்ததில்லை. அவரிடம் இருந்ததெல்லாம் அனைவருக்கும் சொந்தம். பதவியையும் பொறுப்புக்களையும் விரும்பாமல் ஒரு தொண்டனாகவே, ஒரு தொழிலாளியாகவே வாழ நினைத்தார். அதன்படி வாழ்ந்தார் தவா. அவரது மனதுக்குள் போராளிகள், பணியாளர்கள் என்ற வேறுபாடு ஒருபோதும் இருந்ததில்லை. கர்வமோ தலைக்கனமோ தலைதூக்கியதில்லை. இறுதியாக, “எல்லாளன்” நடவடிக்கையை வரலாறாக்கும் முழுநீளத் திரைப்படத்தின் தயாரிப்புவேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது.
தவாதான் அனைத்து வேலைகளுக்குமான முதுகெலும்பு. அகவையின் அடிப்படையில் ஓரளவு தெளிவாகக் காணப்பட்ட தவாவின் தோற்றம் ஒரு பொடியனைப்போல் உருமாறி இருந்தது. “தவாண்ணையைப் பார்க்க இப்பதான் வடிவாயிருக்குது” பலர் கூற புன்னகைத்தபடி கடமையில் இறங்குகிறார். பெப்ரவரிமாதம் 13ம் நாள் நிதர்சனத்தோடு மிக நெருக்கமாகவிருந்த செட்டி அம்மா குடும்பத்தில் இரண்டாவதாகவும் ஒருவீரச்சாவு நிகழ்ந்தது. மேஜர் செட்டியின் தமையன் லெப்.கேணல் புகழ்மாறன் – மன்னார்க் களமுனைக்குச் சென்று வித்துடலாக வீடு வந்திருந்தார். திரைப்படப் படப்பிடிப்பில் இருந்த தவா அனைத்தையும் விட்டுவிட்டுச் செட்டியம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.
அங்கு சகல ஒத்துழைப்புக்களையும் செய்து, வித்துடலைத் தூக்கிச் சுமந்து துயிலுமில்லம்வரை கொண்டுசென்று இறுதி நிகழ்வில் பங்கேற்றுவிட்டுத்தான் மறுவேலை பார்த்தார். பலர் அங்குதான் அவரை இறுதியாகக் கண்டார்கள் – மனைவியின் தாயார் உட்பட. வீட்டில் மனைவி, பிள்ளைகளுக்குக் காய்ச்சல் என்ற செய்தியை மாமி அவரிடம் கூறினார். தவா வீடுபோய் ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. அடுத்த ஞாயிறு வருவதாகக் கூறி மாமியாரை அனுப்பிவிட்டு தவா படப்பிடிப்புப் பணிகளில் இறங்கிவிட்டார். அவர்சொன்ன ஞாயிற்றுக் கிழமை தவா வீடு சென்றார் வித்துடலாக. பெப்ரவரி 17ஆம் நாளிரவு, களமுனை ஒன்றில் திரைப்படத்தின் காட்சிகளைப் பதிவு செய்துவிட்டு, அடுத்தநாட் காலை படப்பிடிப்புக்கான ஒழுங்குகளையும் ஏற்பாடு செய்துவிட்டு இரவு 10.00 மணிக்குத் தங்குமிடம் வந்துசேர்ந்தார்.
களமுனைக்கு அருகில் என்பதால் எதிரியின் எறிகணைகளுக்குப் பாதுகாப்பாக அனைவரையும் பதுங்குகுழிக்குள் இறங்கிப் படுக்கச் செய்துவிட்டு ஒரு சிலருடன் மேலே உறங்கிய தவா, மீண்டும் எழுந்திருக்கவே இல்லை. அவருடன் மேஜர் புகழ்மாறன், போர் உதவிப்படைவீரர்களான நிதர்சனப் பணியாளர்கள் ரவி, அகிலன் ஆகியோரும் மண்ணின் மடியில் இரண்டறக் கலந்தனர். ஒருநாளும் ஓய்ந்திருக்காத, உழைப்பு அன்றி உறங்கிக் கிடக்காத தவாவை வித்துடலாக உறக்கத்திற் பார்த்த அனைவருக்குமே நெஞ்சம் பதறித்துடித்தது. 23 வருடங்களாக விடுதலைப் போராட்டத்தின் நகர்வுகளில் சலிப்பின்றி, களைப்பின்றி ஓயாது சுழன்ற அந்தப் புயல் ஓய்ந்துபோய்க் கிடந்தது. 1987 இல் இருந்து உயிர் பிரியும் வரை படப்பிடிப்பையே பணியாகச்செய்து, அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் பதிவு செய்து,
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர்நாள் உரைகள். சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பின் முக்கிய நிகழ்வுகள். பேச்சு வார்த்தைகள். சமர்க்களப் படப்பிடிப்புக்கள்தமிழீழ விமானப்படைதொடர்பான ஆரம்பகாலப் பதிவுகள். ஒளிவீச்சு வீடியோ சஞ்சிகை உருவாக்கம். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் முதன்மைப் படப்பிடிப்புகள், அரங்க நிகழ்வுகள். தமிழீழத் திரைப்படங்களின் உருவாக்கம்.
என்று அயராது உழைத்தவரை ஒரே நாளில் இழந்துவிட்டோம். இப்போதுஞ்சரி, எப்போதும் தவாவைத் தெரிந்தவர்கள் அனைவருக்குமே ஒருவிடயம் புரியவில்லை. தூக்கிச் சுமந்து அவரது உடலை விதைத்தாகிவிட்டது. அவரது 45ம் நினைவு நாளும் நடந்து முடிந்துவிட்டது. தவா எங்கே என்ற கேள்விக்கு அவர் எங்கேயோ அலுவலாகப் போய்விட்டார், வருவார் என்றுதான் நினைப்பில் இருக்கிறது: தவா நிரந்தரமாகப் பிரிந்துவிட்டார் என்பதை யாருமே நம்பத்தயாராக இல்லை. அவரை யாரும் மறக்கவும் இல்லை; தம்நினைப்பிலிருந்து அழிக்கவும் இல்லை. அவரைப் பற்றிய குறிப்புக்களை எழுதி முடியப்போவதும் இல்லை.
ஒரு மலையை அளந்தது போல அவரது வரலாற்றில் ஒருசிறு துளியைத்தான் இங்கு பதிவுசெய்திருக்கின்றேன். பாரதியாரின் பாட்டில் சேவகனாக வரும் கண்ணனைப் போலவே பலரும் தவாவை எண்ணி உறவு கொண்டாடுகின்றனர். விடுதலைப் போரின் ஆழமான வேர்களுக்கு ஒரு சேவகனாகவே இருந்து நீருற்றிச் சென்ற அவரைப்போல் ஒருவர் இனிப் பிறந்துதான் வரவேண்டும். ஆயினும் அவரது கடமைகள் ஓயப்போவதில்லை. அவர் உருவாக்கிய போராளிகள் அந்தப் பணியைத் தொடர்ந்து செய்வார்கள். தமிழீழத்தைப் பற்றிய செய்திகளைக் காட்சிப்புலத்தின் ஊடாக அறிந்து கொள்ளும் ஒவ்வொருவருமே தவாவின் உழைப்பை நன்கு உணர்ந்து கொள்வார்கள்.
-அம்புலி
தகவல்:- கவிஞர் புதுவை இரத்தினதுரை, கார்த்திக் மாஸ்ரர், ராஜா, சிவகுமார், பிரதீப், சிறி, திலகன், நகுலன், ஏரம்பு, சேரன், சாரதா, தமிழவள் மற்றும் நிதர்சனப் போராளிகள்.
லெப்.கேணல் தவம் – மேஜர் புகழ்மாறன்
நிதர்சன நிறுவனத்தின் முதன்மைப் படப்பிடிப்பாளர் லெப்.கேணல் தவம் மற்றும் மேஜர் புகழ்மாறன் ஆகியோரின் வீரவணக்க நிகழ்வு
தமிழீழ நிதிப் பொறுப்பாளர்
(சபாரத்தினம் செல்லத்துரை)
யாழ் மாவட்டம்
10.03.1950 – 10.03.2009
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர் .
10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்.
படைத்துறைச்செயலர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவின் வீரவணக்க நாள்.
பிரிகேடியர் தமிழேந்தி, தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம், (15.02.1950 – 10.03.2009). தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர். 10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்து விடுதலைக்காக உழைத்து அனைவராலும் தமிழேந்தி அப்பா என அழைக்கப்படும் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் முன்றாம் ஆண்டு 10.03.2011 இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிப்பிரிவு பொறுப்பாளராக செயற்பட்டு விடுதலைப்போராட்டத்திற்காக தாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் நிதியினை பெற்றுக்கொள்ளும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார். தாயகத்தில் பால்வேறு துறைகளை உருவாக்கி ஒருநாட்டின் அராசங்கத்தின் வருமானங்கள் எவ்வழிகளில் பெற்றுக்கொள்ளலாமோ அவ்வாறு பலவழிகளில் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
இதற்காக பல பிரிவுகளை உருவாக்கி பண்ணைகளை உருவாக்கி, தொழில்சாலைகளை உருவாக்கி மற்றும் விவசாய செய்கையினை மேற்கொண்டு விடுதலைப்போராட்டத்திற்காக வருமானங்களை ஈட்டிக்கொண்டிருந்தார்.
மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டமைப்பின் தளஅமைப்பு வேலைகள் உள்ளிட்ட கட்டுமான வேலைகள் அனைத்தினையும் ஒழுங்குபடுத்தி மேற்கொண்டார். சமாதான காலப்பகுதியில் தமிழ் மொழியில் பற்றுக்கொண்டு அனைத்து நிர்வாக கட்டமைப்புக்களிலும் தமிழ் பெயர்சூட்டி தமிழினை வளர்க்க பெரும்பாடுபட்டார்.
பல போராளிகளுக்கு தமிழ் மொழி ஊடாக பல திட்டங்களையும் தமிழின் வரலாற்றினையும் கற்றுக்கொள்ள பல முனைப்புக்களுடன் செயற்பாட்டார். தாயகத்தில் போர் உக்கிரம்பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை செயலாளராக மாற்றம் பெற்று விடுதலைப்போராட்டத்திற்கான அடுத்தகட்ட பணியினை மேற்கொண்டார்.
இந்த காலகட்டப்பகுதியில் களத்தில் நிற்க்கும் போராளிகளையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டமைப்பினையும் சீர்செய்து போராளிகளின் செயற்பாட்டினை கண்டு படைத்துறை ரீதியிலான பல வளர்ச்சிகளுக்கு தமிழீழ தேசியத்தலைவர் அருகில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்தார்.
இன்நிலையில் சிறீலங்காப்படையினரின் போர் உக்கிரம் பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் 10.03.2009 அன்று புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் சிறீலங்காப்படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரவரலாறானார்.
Recent Comments