Search

Eelamaravar

Eelamaravar

Month

January 2012

எரிந்துபோகாத எழுத்துக்கள் முத்துக்கு​மாரனின் நினைவாக

சிங்களபேரினவாதப்படைகளும் அதன் கூட்டு சக்தியான வல்லாதிக்கமும் கிளிநொச்சியை கைப்பற்றி சாளையை நோக்கி இனப்படுகொலையை நடாத்தியபடியே,

எங்களின் ரத்தஉறவுகளை சிதறடித்தபடியே முன்னேறிவந்த ஒரு பொழுது அது. மரணவலயத்தை நோக்கி எமது மக்கள் கூட்டம கூட்டமாக நகர்ந்துகொண்டிருந்த நேரம்அது. தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்டிருந்த ஒரே காரணத்துக்காக அடக்கப்பட்டு உரிமைமறுக்கப்பட்ட தேசியஇனமொன்றின் உன்னதமான விடுதலைப்போராட்டம் உலகின் கண்களுக்கு முன்னாலேயே கருவறுக்கப்பட்டுக் கொண்டிருந்த பொழுதும் அதுதான். வன்னிப்பெருநிலத்தின் ஒரு சிறுநிலத்துண்டில் சின்னஞ்சிறுசுகளும், குழந்தைகளும், பெண்களும், முதியோரும் ஆக்கிரமிப்புப்படைகளின் குண்டுவீச்சுக்களால் உடல் சிதறி வீழ்ந்துகொண்டிருந்த காட்சிகளை தமிழகத்தின் முக்கிய தொலைக்காட்சிகளான கலைஞர், ஜெயா, சண் தொலைக்காட்சிகள் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்து எமது தொப்புக்கொடி உறவுகளுக்கு உண்மையை மூடிமறைத்துநின்ற ஒரு சதிப்பொழுது அது. எப்போதும் போன்ற ஒரு இரைச்சல்நாள் அன்றும் சென்னையில். எல்லோருக்கும் ஏதேதோ அலுவல்கள், வேலைகள். யாரையும் பெரிதாக ஈழத்தின் படுகொலைகள் சுட்டதாய் தெரியவில்லை.

மத்தியஅரசின் நிர்வாக அலகு ஒன்றின் உயர்அலுவலகமான ‘சாஸ்திரிபவனுக்குள்’ நுழையும் அந்த இளைஞன் மிகப்பெரிய பெற்றோல்கான் ஒன்றை காவியபடியும், கைகளில் சில காகிததுண்டுகளுடன் வருகிறான். யாருக்கும் யாரையும் நின்று நிதானித்தது கவனிக்கமுடியாத அந்த இயந்திர நகர்வுப்பொழுதில் மிகநிதானமாக தன்மீது எரிபொருளை ஊற்றிவிட்டு தீமூடடிக் கொள்கிறான். எரியும் எல்லோரும் பெற்றோலை தம்மீது தெளித்தபின்னரே தீ மூடடிக்கொள்வதே வழமையாக இருந்தபோது இவன் பெற்றோலில் குளித்தபின்னரே தீ ஏற்றிக்கொள்கிறான். தீயுடன் அவன் அந்த இடம் எங்கும் ஓடிஓடி இறுதியில் தீதின்ற உடலுடன் நிலத்தில் வீழ்ந்துபடுகிறான். அவனின் உடலைச் சுற்றி வரவும் ஏதேதோ எழுதப்பட்ட காகிதங்கள். மிகமோசமாக அறுபதுவீதமான தீக்காயத்துக்கு உள்ளாகும் மனிதர்களே ஓரிரண்டு நாட்கள் உயிரோடு இருந்தே உயிர்துறக்கும் வழமைக்குமாறாக முத்துக்குமாரன் எரிந்த 45 நிமிடத்துக்குள் விழிமூடிப்போகின்றான்.

எல்லோருக்கும் அது வழமையானதொரு தீக்குளிப்பாகவே தெரிந்தது அவனின்
கடைசிக்கடிதத்தை படிக்கும் வரைக்கும். அதைப்படித்த பொழுதில் தீ ஒரு அற்புதமான அறிவாளனை தின்றுதீய்த்துவிட்டது என்று எல்லோரும் திகைத்துநின்றனர். எவ்வளவு நிதானமானவன் முத்துக்குமாரன். அவனின் கடிதத்தின் எந்த இடத்திலும் தனது தியாகத்தை ஏற்றிச்சொல்லும் வசனங்களோ, தனது சுய தகனத்தின் வலிகளை சொல்லும் சொற்களோ இருந்திருக்கவில்லை. அவனின் கடிதத்தின் தலைப்பே உலகத்தை நோக்கியும், ஆதிக்கசக்திகளை நோக்கியும் வீசிய நெருப்புக்கேள்வியாகவே இருந்தது. ‘விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ்சாதியை’ என்ற தலைப்பே அவனின் ஆதங்கத்தினதும், ஆத்திரத்தினதும் ஒட்டுமொத்தமாய் இருந்தது. அவனது கடிதம் எல்லாத்தரப்பினரையும் நோக்கிய அறைகூவலாகவும், அவர்களுக்கான செய்திகளாகவும், அவர்களுக்கான வேண்டுகொள்களாகவும் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

அன்பார்ந்த எழைக்கும் தமிழ்மக்களே என்று கூவும்கடிதம் அதன் பின்னர். பட்டினிப்போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே இன்று நீண்டு, தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் வெளிமாநிலங்களை சேர்ந்த சகோதரர்களே.. என்றும் தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் இளைஞர்களே..! என்று தொடர்கிறது.. அதன் பின்னர் எங்கள் மக்களை நோக்கிய அறைகூவலாக களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதலைப்புலிகளே… என்றும் எழுதுகிறான். இறுதியான சர்வதேச சமூகத்தை விழித்து.. ’அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகககுரிய ஒபாமாவே’ என்று முடிக்கிறான். நம்பிக்கைக்குரிய ஒபாமா என்ற சொற்றொடர் மிகமுதிர்ந்த ஒரு ராஜதந்திரியின் வாசகம் போலவே அமைத்திருந்த முத்துக்குமாரனின் ஆற்றல் வியப்புக்குரியது.

ஒரு மௌனத்தின் மூலமே ஒரு பெரும் விடுதலைப்போராட்டமும், ஒரு தேசிய இனமும் படுகொலை செய்யப்படுகிறது. இந்த மௌனம் எங்கும் நிறைந்திருக்கிறது. இந்த மௌனத்தை உடைத்து உண்மையை வெளிக்கொண்டுவரும் கேள்வியே முத்துக்குமாரனின் கடிதத்தின் முதலாவது பந்தியில் எட்டிநிற்கிறது. ‘சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.அதை தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்தப் பதிலும் இல்லாமல் கள்ளமௌனம் சாதிக்கிறது இந்தியஏகாதிபத்தியம்’ என்ற முத்துக்குமாரனின் வாசகத்தில் ‘கள்ளமௌனம்’ என்ற வசனத்தின் பின்னால் உள்ள அர்த்தங்களை இனி வரும் ஏதோ ஒரு காலத்தில் உலகம் உணரத்தான் போகின்றது.

எல்லாவற்றையும் நடாத்திக்கொண்டே அமைதிக்காக ஓடித்திரிவதுபோல சிவசங்கர்மேனனையும், பிரணாப்பையும் முன்னிறுத்தி நாடகமாடிக்கொண்டே இனப்படுகொலையை கண்டிக்காமல் காத்துவந்த ‘கள்ளமௌனம்’ ஒருநாளில் கிழியும். அத்துடன் அதே வரியில் முத்துக்குமாரன் இந்தியஏகாதிபத்தியம்’ என்ற வசனத்தையும் மிகஇயல்பாகவே புகுத்தி அவர்களின் மேலாதிக்க எண்ணத்தை உடைத்து எறிகின்றான் தன் கடிதத்தில். இந்தியவலல்லாதிக்கத்தின் தமிழ்நாட்டு ஏஜென்ட் கருணாநிதி மீது முத்துக்குமாரனின் கோபம் வலுவானது. கலைஞரா? என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கும் கருணாநிதி பற்றிய பந்தி அவரை ஒரு மிகமோசமான ஏமாற்று அரசியல்வாதியாக தோலுரித்துக்காட்டியது. ராஜினாமா, சட்டமன்றத்தில் தீர்மானம் என்றும் குறுகியநேர உண்ணாவிரதம் என்றும் ஏமாற்றிய கபடமான கருணாநிதியை பற்றிய முத்துக்குமாரனின் கணிப்பும், கருத்தும் ஆழமான உணர்வுகொண்ட தமிழன் ஒருவனின் ஆதங்கம்.

இன்னொரு விடயத்திலும் மிகவும் தெளிவாகவே முத்துக்குமாரன் தனது பார்வையை கொண்டிருந்தது தெரிகிறது. அதுதான் போராட்டத்தின் பலன்! தமிழ்நாட்டு அரசியலில் போராட்டத்தின் பலன்கள் எப்போதும் ஆட்சிஅதிகாரத்து அரசியல்வாதிகளால் திருடப்பட்டே வந்திருக்கினறது. அதையே முத்துக்குமாரனும் தனது கடிதத்தில் ‘உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்’ என்று எழுதி போராடும் சக்திகளுக்கு உணர்வூட்டுகிறான். உண்மையான போராட்டத்தை திசைதிருப்புவதற்காகவே மகஜர்வழங்கல், மனுக்கொடுத்தல் என்று வழிகாட்டிய கலைஞர் கடிதம் எழுதுவதையும் ஒரு போராட்டமுறையாக சொல்வதை மறுதலித்து முத்துக்குமாரன் இன்னுமொரு இடத்தில் அக்கடிதத்தில் எழுதுகிறான் ‘ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது.

அந்த மரபை அடித்து உடையுங்கள்.மனுக்கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும் அவனை நம்பாதீர்கள். உண்ணாவிரதத்தை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம்காணுங்கள்’ என்று. அழிந்துகொண்டிருக்கும் தமிழினத்தையும், சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் காப்பாற்றும் மிக அவசரம் அவனது கடிதத்தின் ஒவ்வொரு வசனத்திலும் உள்உறைந்து நிற்கிறது. அதனால்தான் களம்காணும்படி எல்லோரையும் அழைத்தான் அந்த மாவீரன். இந்த இனஅழிப்புக்கு எதிராக அனைத்து இந்தியமக்களையும் போராட்டத்தில் இறங்க கோரும் மரணசாசனமாகவே முத்துக்குமாரனின் கடிதம் இருக்கின்றது.

அசாமில் விடுதலைப்போராட்டத்தை ஒடுக்கும் போர்வையில் அப்பாவிப் பெண்கள்மீதான பாலியல்வன்முறைக்காக குரல்தரும் முத்துக்குமாரன் பிறிதொரு இடத்தில் இந்தியாவின் வட-கிழக்கு மாநில விடுதலைப்போராளிகள் மீதான ராணுவ வன்முறைக்காகவும் கவலை கொள்கிறது. இப்படி எல்லாவற்றுக்குள்ளாகவும் நிதானமாகவும்,ஆணித்தரமாகவும் புகுந்து செல்லும் முத்துக்குமாரனின் இறுதிக்கடிதம் இறுதியில் தமிழ்நாட்டில் அடைக்கலம்
கோரியிருக்கும் சிங்களதம்பதிகளுக்காகவும் கண்ணீர்விடுகிறது. எத்தனை முறை படித்தாலும் புதிது புதிதாக ஏதோ அர்த்தங்களும், அதனூடான செய்திகளும், எங்கள் ஆன்மத்தை கேள்விகளால் குடைகிறது. என்னைப் பொறுத்தவரையில் எங்களின் தேசியதலைவரின் சிந்தனைமொழிகளுக்கு அடுத்ததாக தமிழினம் முழுவதும் தங்கள் இதயத்தில் செதுக்கிவைக்க வேண்டியதும், மனதினுள் உள்வாங்கியே தீரவேண்டியதுமான ஒரு சாசனம் அது.

முத்துக்குமாரன் வெறுமனே தனது ஆதங்கங்களையும், வெறுப்பையும், கோபத்தையும் எழுதிவைத்துச் சென்றவன் அல்ல. இனிவரும் காலங்களிலும் ஒரு போராட்டம் என்பது எப்படி தமிழ்நாட்டுத்தெருக்களில் நடாத்தப்படவேண்டும் என்றும், ஓய்வே இல்லாத முயற்சியாக தமிழ்இனம் போராடியே தீரவேண்டும் என்றும் தெளிவாகவே சொல்லிக்கொண்டே இருக்கும் பட்டயம்தான் முத்துக்குமாரனின் இறுதிக்கடிதம். இது இறுதிக்கடிதம் என்பது அல்ல. இந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வசனத்துக்கும் இன்று இல்லாது விட்டாலும் என்றாவது ஒருநாள் தமிழ்நாட்டின் மக்கள் புதுவிளக்கம் தருவார்கள். முத்துக்குமாரன் எரிந்து சாம்பலாகி முடிந்துவிட்டான். ஆனால் அவனது கடிதம் மீண்டும் மீண்டும் எங்கள் மனதோடு பேசும். எல்லோரினதும் மனச்சாட்சியை அது தொட்டும், துருவியும் உலுப்பும். தமிழீழ விடுதலைக்கானதும், தமிழின விடுதலைக்கானதுமான ஒரு ஒப்பற்ற ஆயுதம்தான் முத்துக்குமாரனின் இறுதிக்கடிதம். எங்கள் எல்லோருடனும் தோழனாகவும், சகோதரனாகவும், உறவினனாகவும், வழிகாட்டியாகவும் தோழமையுடன் பேசும் இந்தக்கடிதத்தின் எழுத்துக்களை எழுதியவன் இல்லாமல் போய்விட்டான்.

ஆனால் அந்த எழுத்துக்கள் எந்த நெருப்பிலும் எரியாதவை. அந்த எழுத்துக்களே நெருப்புக்கள்தான். காலம்பல கடந்தாலும் அவை ஆதிக்க முகமூடியை அறுத்தெறிந்து விடுதலைக்கான வழியை அமைக்க ஒளிகாட்டும் முத்துக்குமாரனை போலவே ஈழத்தில் நடந்த தமிழினஅழிப்பை தடுத்துநிறுத்தவென தீயுடன் சங்கமித்த அனைத்து ஈகியர்களையும் என்றென்றும் நினைவில் வைப்போம்.

– ச.ச.முத்து

ஈழம் காக்க ஈகம் செய்த ஈகியர்கள் வீரவணக்கம்

 

கு.முத்துக்குமார்

2009 சனவரி 29 ஆம் நாள் முத்துக்குமார் என்ற பத்திரிகையாளர், திரைத்துறை தொழில்நுட்பவியலாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு முன்னால், ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்து தமது உயிரை மாய்த்துக் கொண்டார். முன்னதாக தமது இறுதி அறிக்கையை அங்குக் கூடியிருந்தோரிடையே வழங்கினார். அது அவரது ஆழ்ந்த அரசியல் அறிவையும், கொள்கை உறுதியையும் பறைசாற்றியது. அவருக்கு வயது 26 சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள கொழுவைநல்லூர். சென்னை அருகே கொளத்தூரில் அவரது சகோதரி தமிழரசியின் வீட்டில் தங்கிப் பணி செய்தார்..

ஈழத் தமிழர்களுக்காக தனது உயிரை தற்கொடையாக்கிய வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழ மக்கள் நடாத்தி வரும் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் சிங்கள அரச படைகளின் கொடூரமான தமிழின அழிப்புப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஏழு கோடி தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முகமாக தீக்குளித்து தனது இன்னுயிரை அர்ப்பணித்த வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ மக்கள் சார்பிலும், எமது விடுதலை இயக்கத்தின் சார்பிலும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

உலகத் தமிழினத்தின் வரலாற்றில் அன்புத் தம்பி முத்துக்குமாருக்கு என்றுமே அழியாத இடம் உண்டு.அன்புத் தம்பியின் குடும்பத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழீழ மக்களுக்கான ஏழு கோடி தமிழக உடன்பிறப்புக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டி நிற்கின்றன. உங்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு உலகத் தமிழினத்தின் வரலாற்றில் குறிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே தனித்துவமான இடம் உண்டு.

எமது மக்கள் சிங்கள அரசின் கொடுமையான இன அழிப்புப் போருக்கு முகம் கொடுத்து நிற்கும் இவ்வேளையில் உங்களின் எழுச்சி கண்டு மன ஆறுதலும் உற்சாகமும் அடைகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்துக்குமார் பெயரின் இணையம்
http://www.muthukumar.in/home.php
——————————————————————–

————————————————————————-

மூவர் உயிரைக் காக்க இளம்பெண் செங்கொடி தீக்குளித்து மரணம்!

காஞ்சிபுரம், ஆக.29,2011

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் உயிரைக் காப்பாற்றக் கோரி, காஞ்சீபுரத்தில் செங்கொடி (வயது 21) என்ற இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு, ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்ட கருணை மனுக்கள் நிராரிக்கப்பட்டு, செப்டம்பர் 9-ம் தேதி என தூக்கிலிடுவதற்கான நாளும் குறிக்கப்பட்டது.

இந்தத் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு கட்சிகளாலும், அமைப்புகளாலும் போராட்டம் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மூவரின் உயிர் காக்கக் கோரி இளம்பெண் ஒருவர் தனதுயிரை மாய்த்துக்கொண்டது, தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்துக்குமார் வழியில்…

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். இவருடய மகள் செங்கொடி, காஞ்சிபுரம் ‘மக்கள் மன்றம்’ என்ற அமைப்பில் இணைந்து பல்வேறு சமூகப் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், காஞ்சீபுரத்தில் நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் மக்கள் மன்றம் அமைப்பின் சார்பில் அவர் பங்கேற்றார்.

இதன் தொடர்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் வந்தார். ஒரு கைப்பையுடன் வந்த செங்கொடி, அதில் வைத்திருந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை வெளியே எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியுற்ற அப்பகுதி மக்கள், ஓடி வந்து உடனடியாக தீயை அணைத்தனர்; 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை மீட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பினர். ஆனால், வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட செங்கொடியின் கைப்பையில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில்,

தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.

–  இப்படிக்கு தோழர் செங்கொடி

இவ்வாறு அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

—————————————————————————-

———-

முருகதாசன்


சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009 பிப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் லண்டனைச் சேர்ந்த ஈழத்தமிழரான துன்னாலை வர்ணகுலசிங்கம் முருகதாசன் என்ற 27 வயது இளைஞர் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார். 7 பக்கங்களுக்கு “உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு ஈகப்பேரொளி முருகதாசன் தீக்குளித்தார். முத்துக்குமாரின் இறுதி அறிக்கை போலவே, இதுவும் ஆழமான கருத்துகளை வெளிப்படுத்தியது.

முருகதாசன் எழுதிய மரண சாசனம்

—————-

பள்ளப்பட்டி ரவி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் சனவரி 31 2009, சனிக்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நகரின் பேருந்து நிலையம் அருகில் தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னரும் பலனின்றி பிப்ரவரி2, 2009 அன்று மரணமடைந்தார்.

——————————————
சீர்காழி இரவிச்சந்திரன்

சீர்காழி காங்கிரஸ் கட்சியின் நகரச் செயலர் இரவிச்சந்திரன் 2009 பிப்ரவரி 7 அன்று அதிகாலை 1.30 மணியளவில் உடலில் தீயைப் பற்ற வைத்துக் கொண்டு, தமிழ் வாழ்க….. தமிழீழம் வெல்க…… ராஜபக்சே ஒழிக….. காங்கிரஸ் ஒழிக…….. எனக் குரல் கொடுத்துக் கொண்டே தம்மைத் தாமே எரித்துக் கொண்டார். அன்று மாலை 4 மணியளவில் அவர் மருத்துவமனையில் இறந்தார்.
ஈழத்தமிழருக்காக தீக்குளித்து மாண்ட சீர்காழி இரவிச்சந்திரனின் இறுதி மடல்

தமிழ்நாடு நாகை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில், ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறு கோரி தீக்குளித்த காங்கிரஸ் கட்சியின் நகரச் செயலரான “வீரத் தமிழ் மகன்” ரவிச்சந்திரன் 07/02/09 மாலை உயிரிழந்தார்.

தீக்குளிப்பதற்கு முன்பு தனது இல்லத்தில் இரு பக்கம் கடிதம் எழுதி வைத்திருந்தார். இறுதி மடலில் எழுதப்பட்டிருந்ததாவது,என் பெயர் எஸ். இரவிச்சந்திரன். த.பெ. சுந்திரமூர்த்தி, 1 ஏ, பிடாரி தெரு, சீர்காழி.

தமிழ் ஈழத்தை காப்பாற்றுவோம். தமிழர்களை தலை நிமிரச்செய்வோம். தமிழனை வாழ வைப்போம்.

என்றும் அன்புடன் ரவிச்சந்திரன்..

ஈழத்தமிழர் வாழ வழிசெய்யாத இந்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். மானங்கெட்ட தமிழக அரசே என் உயிர் துறந்தால் தரமுடியுமா? என் அருமை தமிழர்களே..

இலங்கை அரசே என் உயிர் தருகிறேன். போரை நிறுத்த வேண்டும் என்று எழுதியிருந்தார்

07/02/09 சனிக்கிழமை அதிகாலை 1:00 மணியளவில் “வீரத் தமிழ் மகன்” ரவிச்சந்திரன் தனது தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

உடலில் தீ எரிந்துகொண்டிருக்கும் போது, “தமிழ் வாழ்க!… தமிழீழம் வெல்க!… காங்கிரஸ் ஒழிக!… ராஜபக்ச ஒழிக!… என ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டே எரிந்திருக்கிறார் .

அவரின் பெற்றோர் உடனேயே தீயை அணைத்ததுடன், உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர் “வீரத் தமிழ் மகன்” ரவிச்சந்திரனை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சீர்காழி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த “வீரத் தமிழ் மகன்” ரவிச்சந்திரன் –
தமிழீழம் வெல்க!
தமிழ் வாழ்க!
தமிழ் மக்களை காப்பாற்றுங்க!
ராஜபக்ச ஒழிக!
காங்கிரஸ் ஒழிக!
போரை நிறுத்துங்கள்!
என வலியின் வேதனையிலும் முழக்கமிட்டார்.

சீர்காழி அரசு மருத்துவமனையில் முதல் கட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக மருத்துவத்துக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மாலை 3:45 நிமிடமளவில் “வீரத் தமிழ் மகன்” ரவிச்சந்திரன் உயிரிழந்தார்.

மறுநாள் 08/02/09 , அவரின் இறுதி சடங்கில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டு வீர வணக்கம் செய்தனர்.

——————————————
அமரேசன்

சென்னை வண்ணாரப்பேட்டை நமச்சிவாயம் தெருவைச் சேர்ந்தவர் அமரேசன் (வயது 65). இவர் 2009 பிப்ரவரி 8 அன்று, சுங்கச்சாவடி பேருந்து நிலையம் எதிரில் தனது உடலில் மண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அமரேசன் உயிரிழந்து விட்டார்.

—————————————
ஜோதி என்கிற தமிழ்வேந்தன்

கடலூர் குழந்தை காலனியை சேர்ந்தவர் ஜோதி என்கிற தமிழ்வேந்தன் 2009 பிப்ரவரி 18, மதியம் 2.30 மணியளவில் கடலூர் நீதிமன்ற அலுவலகத்துக்குள் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியபடியே தீக்குளித்தார். கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் தமிழ் வேந்தன். சிகிச்சை பலனின்றி இரவு 1.20 மணியளவில் மருத்துவமனையில் மரணமானார்.

———————————————
சிவப்பிரகாசம்

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்; தமிழர்கள் நலம் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி சார்பில் பிப்ரவரி 21, 2009 மாலை சென்னை, மாவட்ட தலைநகர்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் இளைஞர் சங்கிலி போராட்டம் இடம்பெற்றது. அப்போது, செல்லம்மாள் கல்லூரி அருகே நின்றிருந்த தரமணி மகாத்மா காந்தி நகர் வினைதீர்த்த விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (55) என்பவர் 2 லிட்டர் பெட்ரோலை எடுத்து வந்து தன் மீது ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டார். காவல்துறையினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் அவர் பிப்ரவரி 22 இல் உயிரிழந்தார்.

——————————————————
கோகுலகிருஷ்ணன்

சிவகாசி ஆணையூர் பஞ்சாயத்து அய்யம்பட்டியைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (வயது 55), பிப்ரவரி 25 2009 காலையில் திமுக கொடி, மண்ணெண்ணெய் கேன், கடிதம் சகிதம் கையில் வைத்துக்கொண்டு விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்கப் போகிறேன் என்று குரல் கொடுத்தபடியே மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு தீ பற்ற வைத்துக்கொண்டு தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார். இலங்கையைச் சேர்ந்தவரான கோகுலரத்தினம் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு எதிலியாக வந்து, பின்னர், இந்தியக் குடியுரிமை பெற்று அரசு சார்பில் சிவகாசி அடுத்த ஆனையூர் காந்திநகரில் உள்ள சிலோன் குடியிருப்பில் வாழ்ந்து வந்தார்.

—————————————-
சீனிவாசன்

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான கூலித் தொழிலாளி சீனிவாசன். இலங்கையில் நடந்து வரும் போரில் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றக்கோரி பிப்ரவரி 26 2009, இரவு 10.50 மணியளவில் தனது வீட்டருகே இருந்த தே.மு.தி.க. கொடி கம்பத்துக்கு அருகில் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மார்ச் 2, 2009 அன்று மாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

————————————————
சதாசிவம் சிறீதர்

சென்னை ஓட்டேரி கே.எம். தோட்டம் 9 ஆவது தெருவில் வாழ்ந்து வந்த சதாசிவம் சிறீதர்(எழில்வளவன்) (வயது 33), 99 ஆவது வட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தவர். இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்துச் சென்னையில் மார்ச் 4 2009 அன்று, தீக்குளித்த சீறிதரன் மருத்துவ சிகிச்சை பலனின்றி மார்ச் 5 அன்று உயிரிழந்தார்.

——————————————————–
நாகலிங்கம் ஆனந்த்

கடலூர் அருகே உள்ள அன்னவள்ளியை சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் ஆனந்த்(23). விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டரான இவர் ஈழத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி 2009 மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்தார். புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மார்ச் 17 செவ்வாய் காலை உயிரிழந்தார்.

————————————————————-
இராசசேகர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டுநாகலேரியை சேர்ந்தவர் இராசசேகர் (வயது 24). பா.ம.க.வைச் சேர்ந்த இவர் மார்ச் 15 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் தனது வீட்டு வாசலில் முன்பாக உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இராஜசேகர் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மார்ச் 17 செவ்வாய் காலை இவர் உயிரிழந்தார்.

————————————————————–
பாலசுந்தரம்

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்களம் பகவான் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். மார்ச் 22, 2009, மதியம் 12 மணியளவில், தனது வீட்டிற்கு வெளியே மண்ணெண்ணெய்யை தனது மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

————————————————————–
மாரிமுத்து

விருதுநகர் மாவட்டம், சிவகாசி காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 62). காங்கிரஸ் தொண்டரான இவர், ‘இலங்கைத் தமிழர்களை சோனியாகாந்தி காப்பாற்ற வேண்டும்’ என்று கடிதம் எழுதி வைத்து விட்டு, மார்ச் 22 2009 இரவு, வீட்டு வாசலில் உள்ள காங்கிரஸ் கொடிக்கம்பத்தின் முன்பு நின்று கொண்டிருந்தபோது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

—————————————————-
சிவானந்தன்

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்தன் (வயது 46), சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வாயில் அருகே ஏப்ரல் 17, 2009 இரவு இலங்கையில், இராணுவத்தின் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என முழக்கங்கள் எழுப்பியவாறு தன் மீது மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இவர் தமிழர் தேசிய இயக்கத் தொண்டராவார்.

—————————————————
சுப்பிரமணி

ஈழத்தமிழர்களை காக்கக் கோரி பண்ருட்டியைச் சேர்ந்த அதிமுக தொண்டரான சுப்பிரமணி (வயது 43). ஏப்ரல் 23 2009 அன்று கொளத்தூர் பாளையம் என்ற இடத்தில் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுகிறேன் என்று தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

——————————————————
ராஜா

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி 2009 பிப்ரவரி 7 மலேசியவில், இலங்கை தமிழ் இளைஞர் ராஜா (வயது27) என்பவர் தீக்குளித்து இறந்தார். ராஜா தீக்குளித்த இடத்தில் பெரிய டைரி, பணப்பை, தீப்பெட்டி ஆகியவை கிடந்தது. அந்த டைரியில் ராஜா உருக்கமான கடிதம் ஒன்றை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு எழுதி இருந்தார். அதில் இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம், உடனடி பேச்சு வார்த்தை மூலம் அப்பாவி தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ அமெரிக்காவின் புதிய அதிபர் ஓபாமா உடனே இலங்கை செல்ல வேண்டும். அவருடன் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், நார்வே சமாதான தூதர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் செல்லவேண்டும். என்றும் எழுதப்பட்டிருந்தன.

———————————————————–
அப்துல் ரவூப்

இந்த ஈகியர்களுக்கு முன்பாகவே ஈழத்தமிழருக்காக தீக்குளித்து உயிர் ஈகம் செய்தவர் அப்துல் ரவூப்.

ஈழத்தில் தமிழர்களைக் கொன்றழிக்கும் சிங்களநாட்டின் சிங்களக் கால்பந்து அணியினரைத் தமிழ்நாட்டில் விளையாட அனுமதித்ததைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக் குடிக்காடு அப்துல் ரவூப் 1995 டிசம்பர் 14ஆம் நாள் தீக்குளித்து மாண்டார்.

—————————

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1991 காணொளியில்

லெப்.கேணல்கள் காவியா, மதி உட்பட்ட 70 மாவீரர்களின் வீரவணக்க நாள்

விடுதலைப் புலிகளால் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் 16.01.2001 அன்று வடபோர்முனையில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நடவடிக்கைக்கு எதிரான தற்காப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல்கள் மதி(சுஜித்திரா) மற்றும் காவியா(ஜெசிமா) உட்பட்ட மாவீரர்களின்  நினைவு வணக்க நாள் இன்றாகும்.


நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட அமைதி நடவடிக்கைகளிற்காக நல்லெண்ண நடவடிக்கையாக ஒரு தலைப்பட்சமாக விடுதலைப் புலிகளால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் விடுதலைப் புலிகளின் நல்லெண்ண நடவடிக்கையை புறம் தள்ளி 16.01.2001 அன்று சிறிலங்கா படையினரால் வட போர்முனையில் கிளாலி – எழுதுமட்டுவாள் ஊடாக பாரிய படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இப்படை நடவடிக்கைக்கு எதிராக சனவரி 16 – 17 வரை விடுதலைப் புலிகளின் படையணிகள் தீரமுடன் போரிட்டு படைநடவடிக்கையைத் தடுத்து நிறுத்தினர்.

இத்தற்காப்புச் சமரில் லெப்.கேணல்கள் மதி(சுஜித்திரா) மற்றும் காவியா(ஜெசிமா) உட்பட 70 வரையான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

கேணல் கிட்டு அவர்களின் அழகான ஆளுமை

“ஒரு சுதந்திரவீரனுக்குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடமிருந்தன”

“அதனால் அவன் ஒரு அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந்தான்.போராடினான்”

“போர்க்களத்தில் வீரனாகவும்பொதுமக்களின் தோழனாகவும் எங்கும் எல்லாவற்றிலும் எல்லோரிடமும் அவனது ஆளுமையின்வீச்சு நிறைந்திருந்தது”

“கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.”

“நீண்ட ஓய்வில்லாதபுயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு அவன்”

“நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக தளபதியாக நான் அவனை நேசித்தேன்.”

“எனது சுமைகளை தாங்கும் இலட்சியதோழனாக நான் அவனை நேசித்தேன்.இது சாதாரண மனித பாசத்துக்கு அப்பாற்பட்டது”

“அதுவும் ஆன்மாவை உலுப்பிவிடும் ஒரு உணர்வுப் பூகம்பத்தை மனிதமொழியில் விபரிக்கமுடியாது”

“அவனது மறைவு எனது ஆன்மாவை பிழிந்தஒரு சோகநிகழ்வு. அதனை சொற்களால் வார்த்துவிட முடியாது”

1993ம் ஆண்டு ஜனவரி 16ம்நாள் வங்கக்கடலில் கிட்டு வீரகாவியமானபோது தேசியத்தலைவரால் விடுக்கப்பட்ட செய்தியில் இருந்த மிகமுக்கியமான வாக்கியங்கள்தான் மேலே உள்ளவை.

தேசியத்தலைவர் சொல்லி இருப்பதுபோல கிட்டுவின் வரலாறு என்பது சொற்களால் வார்த்து முழுமையாக வெளிக்காட்டிவிட கூடியது அல்ல.

தமிழீழத்தினது மட்டும் அல்லாமல் முழுஉலக தமிழினத்தின் ஆன்மாவாக தேசியத்தலைவரே விளங்குகிறார்.அவரது ஆன்மாவையே பிழிந்ததாக கிட்டுவின் இழப்பு இருந்திருக்கிறது என்றால் அவருக்குள் எவ்வளவு தூரம் ஆழமாக அவன் பதியம் போட்டு இருந்திருக்கிறான்.

மனிதமொழியில் கூறப்பட்டிருந்த உறவுமுறைக்கெல்லாம் அப்பாற்பட்டதான அந்த உறவு எப்படி பிணைந்தது…?இன்றும்கூட தாண்டிச் செல்லவும் இட்டு நிரப்பவும் முடியாத பெரும் இடைவெளியாகவே அவனின் இடம் இருக்கின்றது.

ஒரு இனத்தின் விடுதலைக்கான களப்பயணத்தில் அவன் வகித்த காலத்தின் பதிவு பாத்திரம் எத்தகையது என்று பார்க்கும்போதுதான் கிட்டுவின் வரலாறு வியப்புடன் விரிகிறது.

அவனது வரலாறு முழுதும் ஆளுமையின் வீச்சும் அற்புதமான அறிவுத்தேடலும் மண்டியிடாத வீரமும் கட்டுக்குலையாத உறுதியும் நிறைந்தே இருக்கின்றது.

போராட்டத்துக்காக அவன் வந்தபோது இத்தனை ஆளுமை நிறைந்தவனாகவோ இத்தனை அற்புதங்கள் நிகழ்த்தக்கூடியவனாக இருந்தான் என்று எந்த தேவதையும் அசரீரி ஒலிக்கவில்லை. அவன் போராட்டத்தின் ஊடாகவே கற்றான்.

போராட்டத்தை அவன் செதுக்கியபோது தானும் சேர்ந்தே சுயமாக செதுக்கப்பட்டான். அதுவே அவனை வரலாற்றின் உச்சமாக கொண்டும் சென்றது.

அவன் அதுவரை வாழ்ந்திருந்த வாழ்வுக்கும் அவன் விடுதலைப் போராட்டத்துக்கு என்று புறப்பட்டு அண்ணையிடம் வந்த பின்னர் வாழ்ந்த வாழ்வுக்கும் உள்ள வித்தியாசம் மிகமிக பெரியது.

நடுத்தர குடும்பங்களைவிட வசதியான வாழ்வு எந்நேரமும் இவனில் செல்லம் கொஞ்சும் பாசமுள்ள அம்மா அன்பான மூத்த சகோதரன் என்றிருந்த குடும்பம் அவனது. சாப்பாடு கொஞ்சம் நேரம் பிந்தியதற்கே தாயுடன் கோபித்து கொள்ளும் இவனே பயிற்சிக்களத்தில் 1020 பேருக்கு சமைத்து உணவு பரிமாறுபவனாக தானாக ஏற்று வேலைசெய்யும் போதுதான் இவனின் விடுதலைக்காக எதையும் எந்த வேலையையும் செய்ய தயங்காத குணம் தெரிந்தது.

விடுதலைப்புலிகளின் முதலாவது ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சி முகாம் 1979ல் மாங்குளம் பண்ணையில் தலைவரின் நேரடி கண்காணிப்பில் ஆரம்பமானபோது யார் சமையல் என்ற தலைவரின் கேள்விக்கு பதிலாக தானே முன்வந்து அந்தவேலையை செய்ய ஆரம்பித்தில் இருந்து இறுதிநேரத்தில் வங்கக்கடலில் நின்றதுவரை அவன் எந்தவேலையையும் விடுதலைக்காக செய்வதில் பின்னின்றது இல்லை.

79ல் மட்டும் அல்லாமல் 1983லும் இவனே பயிற்சி முகாம் சமையல். 83ல் கிட்டு அமைப்பின் ஒரு முக்கிய உறுப்பினன். தலைவருக்கு அடுத்த வரிசையில் ஐந்துபேரில் ஒருவனாக இருந்தவன்.

அப்படி இருந்தும் 1983ல் புதியவர்களான பொட்டு விக்ரர் லிங்கம் போன்றவர்களுக்கான பயிற்சி முகாமில் யார் சமைப்பது என்ற கேள்விக்கும் தானே முன்வந்து சமையல் பகுதியின் பொறுப்பை ஏற்கிறான்.

பயிற்சிக்கு வந்த புதிய உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது அங்கு கிட்டு சமையல் வேலையில் நின்றதை பார்க்க. அவர்கள் அந்த பயிற்சியில் கற்ற எல்லாவற்றையும்விட கிட்டுவை பார்த்து கற்றுக்கொண்டது ‘விடுதலைக்காக என்ன வேலை என்றாலும் அதை முழுமனதுடன் செய்யவேண்டும்’ என்பதாகும்.

விடுதலைக்கான களத்தில் சுதந்திர போராட்ட அமைப்பில் என்ன வேலை என்றாலும் அது விடுதலைக்கானதுதான் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். விடுதலைக்கான களவேலையில் இன்ன வேலைதான் செய்வேன் என்று முடிவெடுத்து வருபவன் போராளி அல்ல என்பது இவனின் கருத்தாக இருந்தது.

அதற்காக எல்லா வேலைகளையும் செய்தான்.முழுமனதுடன். விடுதலைக்காக என்னவெல்லாம் செய்யமுடிமோ அவ்வளவற்றையும் தனது வாழ்நாள் முழுதும் தேடிதேடி கொண்டே இருந்தவன் கிட்டு.

81, 82களில் தலைவருடன் போய் தமிழகத்தில் நிற்கவேண்டிய ஒரு தேவை ஒன்று ஏற்பட்டபோது அதற்கும் போனான். அங்கும் போய் சும்மா நிற்காமல் அந்த நாட்களையும் விடுதலைக்கான ஏதாவது ஒன்றுக்கு பயன்செய்ய விரும்பினான். என்றாவது ஒருநாள் விடுதலைப் போராட்டம் வளர்ச்சி அடையும்போது அதற்கு தேவையான புகைப்பட நுணுக்கங்களையும் புதிய வர்ண அச்சு முறையாக அப்போது இருந்த லித்தோ அச்சுமுறையையும் தலைவரின் அனுமதியுடன் மதுரையில் படித்தான்.

அடுத்தவேளை சாப்பாட்டிற்கே சிரமமான அந்த மதுரை நாட்களில் இதனை படிக்கவேண்டும் என்றும் அதனை விடுதலைப் போராட்டத்துக்கு என்றாவது ஒருநாள் பாவிக்க முடியும் என்றும் இவன் சிந்தித்தது இன்றும் அதிசமாகவே இருக்கிறது.

இந்த தேடலும் தமிழீழ விடுதலையை பெற்றுவிடுவதற்கு தேவையான அனைத்தையும் தேடி தேடி எமது இனத்துக்கு பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற துடிப்பும்தான் கிட்டுவின் மிகப்பெரிய வேலையாக காலகாலமாக இருந்திருக்கிறது.

இந்த தேடலானது அவன் அமைப்பில் இணைந்த 1979ல் மாங்குளம் பண்ணையில் பழைய .38 ரவைகளுக்கு மீள்பாவிப்புக்கு மருந்திடும் நுணுக்கம் கற்றுக்கொண்டது முதல் அவனின் இறுதிநாட்களில் 90களின் ஆரம்பத்தில் விடுதலைக்கான அங்கீகாரத்துக்கான ஒரு பெரிய முயற்சியில் தென்அமெரிக்காவின் மெக்ஸிக்கோ நாட்டில் நின்றபோது அந்த ஊன்று கோலுடன் அலைந்து அந்த மக்களின் இசை நுணுக்கமும் சித்திரங்களும் பற்றியும் தேடவைத்தது.

இந்த உணர்வுதான் அவனை எப்போதும் முன்னோக்கி சிந்திக்க வைத்தது. ஒரு விடுதலைப் போராட்டத்தின் மிகமுக்கியமான கட்டமாக நிலமீட்பு அமைகிறது.அந்த வகையில் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பின்னர் தமிழர்களின் நிலப்பகுதி ஒன்று எந்தவித இடையூறும் இன்றி தமிழர்களால் ஆளுப்படும் நிலையை ஏற்படுத்தியவன் அவன்.

1985 ஏப்ரல்மாதம் யாழ் காவல்நிலையம் மீதான தாக்குதலை கிட்டு தலையேற்று நடாத்தி முடித்த கையோடு அதன்பின் வந்த நாட்களில் யாழ்மண்ணில் சிங்களபடைகளின் குறுக்கும் நெடுக்குமான ரோந்துகள் இல்லாமல் போகிறது. இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிபோனது. மீட்கப்பட்ட முதல் தமிழ்மண்ணை கிட்டு தமிழர் வரலாற்றில் காட்டுகிறான்.

இந்த நிகழ்வானது மிகவும் பாரிய அளவில் விடுதலைப்போராளிகளுக்கு மனஉறுதியையும் தமிழ்மக்களுக்கு விடுதலைப் போராட்டத்தின்மீது உரம்மிக்க நம்பிக்கையையும் கொடுக்கிறது.

மிகமிக குறைந்த அளவிலான போராளிகளையும் குறைந்த சு10ட்டுதிறன்கொண்ட ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு இதனை சாதித்ததில் கிட்டு என்ற தளபதியின் பங்கு பாரியது.

யாழ்மாவட்டத்தில் அமைந்திருந்த சிங்கள முகாம்களில் இருந்து தினமும் வெளியேற முயற்சித்த படையினரை மறித்து திரும்பஅனுப்பும் களத்தில் எங்கெங்கும் கிட்டு நின்றதானது போராளிகளுக்கு பலமடங்கு வீரியத்தை தந்தது.

யாழ்மண் விடுதலைப்போராளிகள் வசம் வந்துவிட்டதுடன் கிட்டு திருப்தி கொள்ளவில்லை.

எந்த இராணுவ வெற்றியையும் அரசியல்ஆக்குவதன் முலமே எமது மக்களுக்கான விழிப்புணர்வை கொண்டுவரலாம் என்பதால் இராணுவ ரோந்துகள் இல்லாத யாழ்மண்ணில் மக்கள்நீதி மன்றங்களையும் இணக்கசபைகளையும் சுயதொழில் ஊக்குவிப்புகளையும் இன்னும் பல கட்டமைப்புகளை நிறுவினான்.

அரசியல் வகுப்புகளையும் தெரு நாடகங்களையும் நடாத்தி எமது மக்களுக்குள் விடுதலை கனலை ஏற்றுவதில் உழைத்தவன் அவன்.

யாழ்மாவட்டத்தில் முகாம்களுக்குள் இராணுவம் அடைபட்டதை வைத்தே ஒரு பெரிய இராசதந்திர நகர்வையும் விடுதலைப் போராட்டம் பற்றிய ஒரு பெருமிதமான பார்வையையும் கொடுப்பதற்காக அருணாவையும் காமினியையும் மீட்டு சிங்களதேசத்துடன் ஒரு கைதிகள் பரிமாற்றத்தை அழகாக செய்துகாட்டிய இராசதந்திர மேதை அவன்.

எல்லா ஆளுமைகளும் அவனுக்குள் ஒரு இரவில் வந்து குடியேறியவை அல்ல. அவன் அதற்காக நடாத்திய தேடல்கள் மிகஅதிகம். அதனால்தான் ஒரு ஆற்றல்மிக்க போர்வீரனாக இருந்த அவனால் ஒரு வரலாற்றுத்திருப்பத்தை ஏற்படுத்திய தளபதியாகவும் மாற முடிந்தது.

அதனால்தான் அவனால் ஒரு சிறந்த ஓவியனாகவும் மிகச்சிறந்த புகைப்படம் பிடிப்பவனாகவும் ஊடகங்களை நடாத்தும் தனித்திறமை மிக்கவனாகவும் மிகமிக இலகுவாக பயிற்சிகளில் விளக்கம் தரக்கூடிய பயிற்சியாளனாக என்று அத்தனை ஆளுமைகளையும் பெற்றுக்கொள்ள முடிந்தது.

அவன் விடுதலைக்காகவே இவை அனைத்தையும் செய்தான்.ஒரு இரவில் அவன் வீட்டை விட்டு வெளியேறிய 1978ல் இருந்து அவன் வீரச்சாவடைந்த 1993வரை தாயகத்தின்பரப்பு எங்கும் அதன் பின்னர் தமிழகத்திலும் இந்தியாவிலும் அதற்கு பின்னர் இங்கிலாந்திலும் அங்கிருந்து புறப்பட்டு ஐரோப்பிய நாடெங்கும் திரிந்தபோதிலும் ஒரு பொழுதில் விடுதலைக்காக உலகின் இன்னொரு முனையில் மெக்சிக்கோவில் போய்நின்றபோதிலும் அவன் விடுதலைக்காகவே வாழ்ந்தான்-போரிட்டான்-அலைந்தான்-கற்றான்-பயிற்றுவித்தான் எல்லாமே.

இறுதியில் விடுதலையின்மீது கொண்ட அதிஉச்சமான விருப்பை வெளிக்காட்டவும் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் விடுதலை மீதான இலட்சிய உறுதியை சொல்லவும் தன்னை தீக்குள் ஜோதி ஆக்கினான்.

அவனதும் அவனுடன் வங்கக்கடலில் ஆகுதி ஆகிய ஒன்பது மாவீரர்களின் நினைவு என்றென்றும் அந்த அலையின் மீது மிதந்தபடியே இருக்கும். எங்கள் கரையையும் அவை வந்துவந்து தொட்டுப்போகும். எங்கள் நினைவுகளை போலவே…

ச.ச.முத்து

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1990 காணொளியில்

கேணல் கிட்டு வீரவணக்கம்

எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு புகழ் ஈட்டியவர்

“என் ஆன்மாவை பிழிந்த ஓர் சோக நிகழ்வு அதை சொற்களால் வர்ணிக்க முடியாதென்பது” தலைவர் மொழிந்தவை.

“மனதின் ஆழத்து உள்ளுணர்வுகளை வார்த்தையில் சித்தரிப்பது கடினம். அதுவும் ஆன்மாவை உலுப்பி விடும் ஒரு உணர்வுப் பூகம்பத்தை மனித மொழிகளில் விபரிக்க முடியாது.எனது அன்புத்தம்பி கிட்டுவின் இழப்பும் அப்படித்தான். அவனது மறைவு எனது ஆன்மாவைப் பிழிந்த சோக நிகழ்வு. அதனை சொற்களால் வார்த்து விடமுடியாது.”

kiddannaa
“நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக தளபதியாக எனது சுமைகளைத் தாங்கும் இலட்சியத் தோழனாக அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத்துக்கு அப்பாலானது. ஒரே இலடசியப் பற்றுணர்வில் ஒன்றித்த போராட்ட வாழ்வில் நாம்பகிர்ந்து கொண்ட அனுபவத்தில், ஒருவரை ஒருவர் ஆழமாக இனம் கண்ட புரிந்துணர்வில், வேரூன்றி வளர்ந்த நேயமிது.”

“அவனில் ஓர் அபூர்வம் இருந்ததை நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். அது அவனது அழகான ஆளுமையாக வளர்ந்தது. ஒரு சுதந்திர வீரனுக்குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடமிருந்தன. அதனால் அவன் ஓர் அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந்தான் போராடினான். அனைத்து மக்களது இதயங்களையும் கவர்ந்தான். போர்க் களத்தில் வீரனாகவும் பொதுமக்களின் தோழனாகவும் எங்கும் எல்லாவற்றிலும் எல்லோரிடமும், அவனது ஆளுமையின் வீச்சு நிறைந்திருந்தது.”

“கிட்டு ஒரு தனி மனித சரித்திரம். நீண்ட, ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு. வங்கக் கடலில் பூகம்பமாக அவனது ஆன்மா பிழந்தது. அதன் அதிர்வலையால் எமது தேசமே விழித்துக்கொண்டது. கிட்டு நீசாகவில்லை. புதிய மூச்சாகப் பிறந்திருக்கிறாய்.”

என்று விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், கேணல் கிட்டு மறைந்த போது விடுத்த இரங்கல் செய்தி, எமது இதயத்தை அப்படியே ஆட்கொண்டுள்ளது. தலைவரின் விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக விளங்கிய ஒவ்வொரு தளபதிகளின் மறைவை ஒட்டியும் அவர் கூறிய கூற்றுக்கள் எம் உள்ளத்தைத் தொடுபவையாகும்.
kiddannaa
கிட்டு அவர்கள் 1961ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி தோன்றினார். அவர் மறைந்தது 1993 ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் திகதி. எனவே அவர் இவ்வுலகில் வாழ்ந்தது மிகக் குறுகிய காலமென்பதை நினைவு கொள்ள வேண்டும். தேன்கலந்த வாசகம் தந்த வான்கலந்த மாணிக்கவாசகரின் வாழ்வு முப்பத்தி இரண்டுதான். தன்னை தமிழ் ஞானசம்பந்தரென்று ஐம்பது இடங்களில் கூறி நாளும் தமிழ் பரப்பிய தமிழ் ஞானசம்பந்தரின் வாழ்வு பதினாறுதான். ஆர்மூண்டு பதினெட்டில் நம்பியாரூரன் வாழ்வு முற்றுப் பெற்றது. இரக்கத்தில் உருவான யேசுகிறிஸ்து வாழ்ந்தது 33 ஆண்டுகள் தான். அவரின் முதல் 30 ஆண்டுகள் எவ்விதம் அமைந்திருந்ததென்பது உலகம் அறியாது. ஆனால் இறுதி 3 ஆண்டுகள் உலக வரலாற்றை மாற்றியது. அத்வைத வேதாந்தத்தை தந்த சங்கராச்சாரியார் வாழ்வு 33 ஐத் தாண்டவில்லை. மாவீரர் அலெக்சாண்டரின் வாழ்வு 33 ஆண்டுகளுடன் முடிவுற்றது. இப்படி குறுகிய காலம் வாழ்ந்தும் உலக வரலாற்றை மாற்றியமைத்தவர்கள் உண்டு. அந்த வரிசையில் 33 ஆண்டுவாழ்ந்த கிட்டுவின் வாழ்வும் ஈழத் தமிழினத்தின் விடுதலை வரலாற்றில் தனியிடம் பெறுகிறது. நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதல்ல முக்கியம் எப்படி வாழ்கிறோம் என்பது தான் முக்கியம். வாழ்வகத்தைக் காத்து வண்டதமிழை வாழ்வித் வன்னியசிங்கம் அவர்களின் வாழ்வு 48ஐத் தாண்ட மறுத்து முற்றுப்பெற்றது. ஆனால் அவர் மறைந்து ஆண்டுகள் பல உருண்டு ஓடிய நிலையிலும் அவர் நம் நெஞ்சை விட்டு அகலமறுக்கிறார். தமிழுக்கும் தமிழனுக்கும் தொண்டு செய்வோன் சாவதில்லை என்பதற்கமைய மறைந்த வன்னியரையும் மறைந்த தளபதி கேணல் கிட்டுவையும் நினைவு கொள்கிறோம்.

தலைவரைப் போற்றும் தளபதி

தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரன் அவர்கள் எவ்வளவு தூரம் உணர்ந்து கிட்டுக்கு மதிப்பு வழங்ககினாரோ அவ்வளவு தூரம் தலைவர் பிராபகரன் பெருமையை உணர்ந்தவர் கேணல் கிட்டு அவர்கள். இதோ தலைவர் பற்றி அவர் மொழிந்தவை. “எமது தலைவர் பிரபாகரன் விடுதலைப்வ்புலிகளின் இயகத்தின் தலைவர் மட்டுமல்ல அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஒரு தேசிய இனத்தின் தலைவர். இன்று விடுதலைக்காக தம்மை தியாகம் செய்யத்தயாராக நிற்கும் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் எமது ஆதரவாளர்களுக்கு மட்டும் தலைவரல்ல. எம்மீது அதிருப்த்தி கொண்டவர்களுக்கு எம்மை எதிர்ப்பவர்களுக்கும் அவர் தலைவர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தப்புச் செய்தவன் செய்யாதவன் என அனைவருக்கும் அவர்தான் தந்தை. பாதிக்கப்பட்டவனும் படோடாபமாக வாழ்பவனுக்கும் அவர்தான் தந்தை. போராட்டப்பணி குறித்து அவரது அபிப்பிராயம் அவரது முழுமையான அர்பணிப்புக்கு வெளிச்சமிடுகிறது. போராளிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பணி பெரிது. சுமையும் பெரிதுதான். ஆனால் நாம் அதை விருப்பத்துடன் தான் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

kiddannaa
எதிரிக்கு எதிராக போராட வேண்டிய நிலையில் நாட்டை நிர்வகிக்கும் பணிகளும் எம்மீதே சுமத்தப்பட்டிருக்கிறது. இதுமிகப்பெரும் சுமைதான் ஆனால் இதை விருப்பத்துடன் சுமக்கிறோம்” என்று போராட்டம் பற்றி ஏற்றமுடன் எடுத்துரைத்த கிட்டு அவர்கள் போராட்டம் வெற்றிபெற அறிவாளிகளையும் புத்தி ஜீவிகளையும் எவ்விதம் உள்வாங்க வேண்டுமென்பதை அவர் கூறும் கூற்றுக்கள் அவரின் பரந்த உள்ளத்திற்கு தலைசிறந்த எடுத்துக்காட்டு.

அறிவாளிகளை உள்வாங்க விரும்பியவர் கிட்டு

இதோ அவர் மொழிந்தவை. “புத்தி ஜீவிகளை ஒன்று சேர்த்து சிந்தனைத் தடாகமொன்றை உருவாக்க வேண்டும். போராட்டத்தில் அரசியல் ராஜதந்திர நகர்வுகள் போன்ற விடயங்களில் நல்ல கருத்துகள் தேவையாக உள்ளது. இக்கருத்துக்கள் சரியான தகைமையும் கல்வியும் உள்ளவரிடமிருந்து வழங்கப்பட வேண்டும். தேவை படும் நேரத்தில் மாத்திரம் அவர்களை அணுகும் போது அவர்கள் எமது நிலைமைகளை சரியாக புரிந்து கொள்ளாதவர்களாக இருப்பார்கள். எனவே எமது போராட்டப் பாதையில் அவர்களை இணைத்துக்கொண்டு செல்வதன் மூலமே புத்தி ஜீவிகளை சரியான பாதைக்கு கொண்டு செல்லமுடியும்.”

சுருங்க கூறின் போராடுகின்ற போது துணிவை பெரிதும் போற்றிய கிட்டு அவர்கள் போராட்டத்தில் நாம் வெற்றிபெற அறிஞர்களின் அறிவுரைகளை அவர் என்றும் புறக்கணித்ததில்லை. பின் புலத்தில் அவர்களின் துணையை அவர் நாடி நின்றார். இயக்கம் செய்யும் ஒவ்வொரு விடயமும் திட்டமிட்டு செயற்பட வேண்டும். திறந்த மனத்துடன் அமைந்த கருத்துப் பரிமாற்றத்தின் மூலமே சிறந்த திட்டங்களைப் பெற முடியும் என்று கூறியவர் கிட்டு அவர்கள். புகைப்படத்துறையிலும் அவர் புகழ்பெற்று விளங்கியவர். புகைப்படங்கள் ஊடாக எங்கள் போராட்டத்தை ஆவணப்படுத்த வேண்டுமென அவருக்கிருந்த ஆர்வத்தை எளிதில் எடுத்தியம்பிட முடியாது.

நரசிம்மராவின் நயவஞ்சகம்

இந்தியத் துணைக்கண்டத்தில் இந்திரா காந்தியின் ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக விளங்கியவர் பி.வி.நரசிம்மராவ் அவர்கள். நான் இந்திரா காந்தியைச் சந்தித்ததையடுத்து நரசிம்மராவைச் சந்தித்த போது (1983 ஓகஸ்ட் 19) அவர் கூறியவை என் நினைவலையில் இன்றும் மோதுகிறது. “ இந்திய விடுதலை வரலாற்றில் காந்தி அடிகளின் பங்கை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் ஆயுதம் தாங்கி போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், லாய் பட்ராய், பகவத்சிங், வ.உ.சிதம்பரம்பிள்ளை, போன்றோர் ஆயுதம்தாங்கி போரிட்டதை நாம் மறுக்கவில்லை. இந்தியவிடுதலை வரலாற்றில் அவர்கள் ஆற்றிய பங்கு மிகப்பெரிது. அதுபோன்றே உங்கள் விடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் தாங்கிப் போராடும் போராளிகளை பெரிதும் மதிக்கிறேன் எனக் கூறியவர்தான் நரசிம்மராவ். ஆனால் நரசிம்மராவ் இந்திய துணைக்கண்டத்தில் தலைமையமைச்சராக பதவியேற்ற காலகட்டத்தில்தான் 1993ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் திகதி இந்திய நீரலையிலோ அல்லது இலங்கை நீரலையிலோ நிற்காது அனைத்துலக நீரலையில் கிட்டுவின் கப்பல் நின்ற போது இந்தக்கப்பலை இந்தியத் துணைக்கணடத்துக்கு இழுத்துச் செல்ல இந்திய அரசு முனைந்த போது கேண்ல் கிட்டுவும் அவரது தோழர்கள் மேஜர் வேலையன் (சந்திரலிங்கம் சந்திரவேல்), கப்டன் குணசீலன், கப்டன் ரோசன்(ரட்ணசிங்கம் அருணராசா), கப்டன் நாயகம் (சிவலிங்கம் கேசவன்), கப்டன் ஜீவா( நடராஜா ஜீவராஜ்), லெப்டினன் நல்லவன் (சிவஞானசுந்தரம் ரமேஷ்) லெப்டினன் அமுதன் ( அலோஷன்; ஜோன்சன்) தூயவன் (மாகாலிங்கம் ஜெயலிங்கம்) ஆகியோரும் கிட்டுவுடன் சேரந்து எம் இயக்கத்தின் இரகசியங்களை இந்திய உளவுப்படைக்கு வெளியிட விரும்பாத நிலையில் தம்மை மாய்த்துக்கொண்டனர்.

அவர்கள் செய்தது தற்கொலையல்ல. அது தற்கொடையாகும். இது கிட்டுவின் தியாகத்தைமட்டுமல்ல அவரின் தோழர்களின் தியாகத்தையும் உலகுக்கு பறைசாற்றுகிறது. இந்திராகாந்தியின் ஆட்சியில் போராளிகளை போற்றிய நரசிம்மராவ் தலைமை அமைச்சராக பதவி ஏற்ற நிலையில் இப்போராளிகளின் சாவுக்கு காரணமாக அமைந்தார். இது இந்தியாவின் வஞ்சனைக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டு. நமது போராளிகள் அனைத்துலக நீரலையில்தான் இருந்தார்கள் என்று காலம் தாழ்த்திய நிலையில் விசாகப்பட்டினம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. மறைந்தும் மறையாத எம் கிட்டுவையும் தோழர்களையும் நாம் நினைவு கொள்வோமாக. இவர்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டிய தியாகிகள். தமிழ்நாட்டில் தளபதி கிட்டு அவர்களுக்கும் எமக்கும் இடையே நிலவிய நெருக்கமான உறவையும் பரிமாறப்பட்ட கருத்துக்களையும் ராஜதந்திர நோக்குடன் இங்கு பரிமாறவில்லை. பின்பு அவை தேவையொட்டி கூறப்படும்.

மா.க.ஈழவேந்தன்
————-


தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்

இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

———————

கேணல் கிட்டு காணொளிகள்

வரலாற்றுப் பிண்ணனி

தளராத துணிவோடு களமாடினாய் -கிட்டு பாடல்

போர்க்கைதிகள் விடுவிப்பு

கைக்குண்டுத்தாக்குதலில் கால் இழந்தபின்னர் மக்கள் முன்தோன்றி பேச்சு

சுதுமலையில் கேணல் கிட்டு அவர்களின் பேச்சு

வைகோவுடன் கேணல் கிட்டு அவர்கள்

கேணல் கிட்டு – கேடயமாய் காத்த எம்மக்களே பாடல் காணொலியில்

கேணல் கிட்டு – வன்னிக்காட்டில் தமிழீழ தேசிய தலைவருடன் – I

கேணல் கிட்டு – வன்னிக்காட்டில் தமிழீழ தேசிய தலைவருடன் – II

கேணல் கிட்டு பற்றி தளபதி பொட்டு

கேணல் கிட்டு பற்றி தளபதி சூசை

லெப்.கேணல் குட்டிசிறி வீரவணக்கம்


lt.co.kuddysri-லெப்.கேணல் குட்டிசிறி

லெப் கேணல் குட்டிசிறி படையணி


லெப் கேணல் குட்டிசிறி படையணி

http://aruchuna.net/

தமிழீழ தேசியத் தலைவரின் முதல் மாவீரர் நாள் உரை 1989 காணொளியில்

Up ↑