Search

Eelamaravar

Eelamaravar

Month

November 2011

பிரபாகரன் வரலாற்றைப் படைத்தவன்

உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான இறைமையைப் பேணி தம்மைத் தாமே ஆண்டும் நிர்வகித்தும் தனித்துவமான பண்பாட்டைப் பேணியும் வந்த தமிழினம் ஆதிமுதல் வாழ்ந்துவந்த நிலப்பகுதிகளில் இலங்கைத்தீவும் ஒன்று.

காலச்சூழலில் அன்னியப் படையெடுப்புக்களால் தமிழரின் இறைமை பறிபோகத் தொடங்கியது. பேரரசுகள், சிற்றரசுகள் என அனைத்தும் படிப்படியாக வீழத் தொடங்கின. இறுதியில் தமிழினம் முழுமையாகவே ஆட்சிப்பரப்பற்ற நிலையில் வீழ்ந்துபோனது. இலங்கைத்தீவிலும் தமிழரின் இராசதானிகள் முழுமையாக வீழ்ச்சியடைந்தன.

பெருமையும் புகழும் கொண்ட தமிழினம் ஒடுங்கிப்போயிருந்தது. கேட்பாரற்ற நிலையில் தமிழினத்தின் மீதான அடக்குமுறைகள் அன்னியரால் கட்டவிழ்த்து விடப்பட்டன. குறிப்பாக இலங்கைத்தீவிலே தமிழினத்தின் மீதான கொடூர இனவழிப்பு பெருகிவந்தது. சொல்லொணாத் துன்பதுயரங்களைச் சுமந்துகொண்டு வாய்மூடி அழுதுகொண்டிருந்தது தமிழினம். வன்முறைவழியற்ற போராட்டங்கள் அனைத்தும் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டும் இனப்படுகொலைகள் பல்கிப்பெருகிக் கொண்டும் இருந்தன. கேட்க நாதியற்ற நிலையில் முனகிக்கொண்டிருந்த தமிழினத்திலிருந்து இளையதலைமுறையொன்று வீறோடு போராடப் புறப்பட்டது.

கோபாவேசத்தோடு திருப்பித் தாக்கத் தொடங்கிய இளைய தலைமுறையில் முகிழ்த்த முத்துத்தான் எமது தேசியத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன்.

வன்முறை வழியிலான போராட்டம் முனைப்புப் பெறத்தொடங்கியபோதே களத்திற் குதித்த பால்யவயதுப் பிரபாகரன், தூரநோக்கோடு நெறிப்படுத்தப்பட்ட தாக்குதல்களை தொடர்வதில் திட்டமிட்டுச் செயற்பட்டார். தனது செயற்பாடுகள் மூலம் மிகமிக இளம்வயதிலேயே மற்றவர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். தொடக்க காலத்திலேயே அவரோடு போராட்டத்தில் இணைந்தவர்கள் அனைவரும் அவரைவிட வயதில் மூத்தவர்களாயிருந்துங்கூட ‘தம்பி’ என்ற வாஞ்சையோடு அழைத்தபடி அவரது தலைமையை ஏற்றுச் செயற்பட்டார்கள்.

அன்று பதின்மவயதிலேயே இயல்பாகத் தலைமைத்துவத்தை வெளிக்காட்டிய தலைவர், பின்னர் உலகமே வியக்கும் ஒப்பற்ற ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டிவளர்த்து, போரியல் சாதனைகளை நிகழ்த்தி தமிழினத்தின் புதைந்துபோன வீரத்தையும் பெருமையையும் உலகறியச் செய்தார். தமிழீழ விடுதலைப்போராட்டமும் விடுதலைப்புலிகள் அமைப்பும் எதிர்கொண்ட சவால்கள் அபரிதமானவை. மீளவேமுடியாத பலபொறிகளில் சிக்கி மீண்டு வந்தது மட்டுமன்றி புதிய உத்வேகத்தோடு போராட்டத்தைத் தொடர்ந்தது இயக்கம். இவையனைத்தும் தலைவரின் நுட்பமான தலைமைத்துவத்தாலும் விடாப்பிடியான முயற்சியாலுமே சாத்தியமானது.

எத்தனை பெரிய இடரோ சவாலோ வந்தபோதும் துணிந்து எதிர்த்து நின்று சாதித்தவர் எமது தலைவர். எல்லாவற்றையும் பேசித்தீர்ப்போம் எனக்கூறி இந்தியாவுக்கு அழைத்து, அங்கு வீட்டுக்காவலில் வைத்து, தமது விருப்புக்கு ஏற்ப செயற்படும்படி தலைவர் வற்புறுத்தப்பட்டபோதுங்கூட அதற்கு அடிபணியாமல் தீர்க்கமாகவும் மூர்க்கமாகவும் எதிர்த்து நின்றார்.

தமிழர்களுடைய விடுதலைப்போராட்டத்தின் அடிப்படை யதார்த்த நிலைகளைப் புரிந்துகொள்ளாமல், பதவி ஆசைகளைக் காட்டி, போராட்டத்தின் அடித்தளத்தையே சிதைக்க முற்பட்டபோதெல்லாம், எவ்வித சஞ்சலமுமின்றி அவற்றைப் புறந்தள்ளிப் போராட்டத்தைத் தொடர்ந்தார். உயிர்ப்பயத்தை ஏற்படுத்தியோ ஆசைகளைக்காட்டியோ வழிக்குக் கொண்டுவர முடியாத தனிப்பெருந்தலைவனைப் பெற்ற எமது இனம் பெருமைக்குரியதே.

செயலென்று இறங்கிவிட்டால் அதில் வெற்றிவெற எவ்வழியிலும் மூர்க்கமாக முயல்வது தலைவர் பிரபாகரன் அவர்களின் இயல்பு. ஈழப்போராட்ட வரலாற்றில் உலகமே வியக்கும் எத்தனையோ சாதனைகளும் அற்புதங்களும் நிகழ்த்தப்பட்டதன் பின்னணியில் தலைவரின் இந்த விடாமுயற்சியே உள்ளது.

பொறுப்பாளர்களுடன் நடந்த சந்திப்பொன்றில் ‘முடியாதென்று முடங்கிவிடாமல் சாத்தியமான அனைத்து வழிகளிலும் முயல வேண்டும். வானில் வைத்து மிகையொலி(கிபிர்) விமானங்களை வீழ்த்த முடியவில்லையென்றால் அவை தரையிறங்கும் இடத்தைத் தேடிச்சென்றாவது அவற்றை அழிக்க முயலவேண்டும்’ என அறிவுறுத்தினார் தலைவர். தொடர்ந்த சில மாதங்களுள் கட்டுநாயக்கா விமானத்தளத்தில் பல மிகையொலி விமானங்கள் அழிக்கப்பட்ட சாதனை நிகழ்ந்தேறியது.

எமது தேசியத்தலைவர் தூய்மையான போர்வீரனாகவே வாழ்ந்தார். ஒரு போர்வீரன் கைக்கொள்ள வேண்டிய பண்புகளில் எதிரியை மதிப்பதும் மிகமுக்கிமானது. களத்தில் வீழ்ந்த எதிரிப்படை வீரர்களின் உடல்களை உரிய மரியாதையோடு எதிர்த்தரப்பிடம் ஒப்படைக்க முயல்வதும், அவற்றை ஏற்கமறுக்கும் பட்சத்தில் உரிய இராணுவ மரியாதையோடு அவற்றைத் தகனம் செய்வதும் எமது போராட்டத்தில் தலைவர் கட்டிக்காத்த மரபு. ஆனால் எதிரிகள் எமது போராளிகளின் உடல்களை எவ்வளவுதூரம் சீரழித்தார்கள், துயிலுமில்லங்களைத் துவம்சம் செய்தார்கள் என்பதை வரலாறு சொல்லும். இருந்தும்கூட எதிரியை மதிக்கும் பண்பையும் மரபையும் எமது தலைவர் இறுதிவரை பேணியே வந்தார்.

மிகவும் இறுக்கமான, கட்டுக்கோப்பான ஓர் இயக்கத்தை வழிநடத்திக்கொண்டு, தீவிரமான போரை நடத்திக்கொண்டிருந்துங்கூட எமது தலைவர் மிக மிருதுவான, அன்பான மனிதராகவே திகழ்ந்தார். சில சமயங்களில் அவர் தனது பாதுகாப்பைக்கூடக் கவனத்திலெடுக்காமலே செயற்பட்டார். அவரின் இப்பக்கத்தை விளக்க ஏராளம் நிகழ்வுகள் வரலாற்றிலுண்டு என்றாலுங்கூட இங்கே ஒரு சிறுதுளி விவரிக்கப்படுகிறது.

ஒருமுறை போராளிகளுடனான சந்திப்பொன்றுக்காக வாகனத்தில் விரைந்து சென்றுகொண்டிருந்த தலைவர் உடையார்கட்டுப் பகுதியில் வீதிக்கரையில் பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு தாயையும் வாகன வசதிகளற்ற நிலையில் அங்கலாய்த்துக் கொண்டிருந்த அவரது உறவினரையும் கண்டுவிடுகிறார். உடனடியாகவே தனது வாகனத்தை நிறுத்தி, தனது மெய்க்காப்பாளர் மூலம் என்ன ஏதென்று விசாரித்தறிந்துவிட்டு தான் இறங்கிநின்றுகொண்டு உடனடியாகவே தனது வாகனத்தில் அத்தாயை மருத்துவமனை கொண்டு செல்லும்படி கட்டளையிட்டார். இதற்குள் தலைவரின் பாதுகாப்பணியின் பொறுப்பாளர் இன்னொரு வாகனத்தை வரவழைத்து அத்தாயை மருத்துவமனையில் சேர்க்கும் ஏற்பாட்டைச் செய்தார். அத்தாய் மருத்துவமனையிற் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்ட செய்தியை உறுதிப்படுத்தியபின்னரே போராளிகளுடனான சந்திப்பைத் தொடங்கினார்.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இனத்தின் பெருமையையும் வீரத்தையும் மரபையும் பேணுவதில் அதிகளவு அக்கறை செலுத்தினார். இனத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியைப் பேணுவதிலும், தமிழரின் வீரமரபைத் தொடர்வதிலும், வீர உணர்வைத் தமிழரிடம் தக்கவைத்திருக்க வேண்டுமென்பதிலும் அதுதான் எமது இனத்திற்கான விடிவைப் பெற்றுத்தரும் என்பதிலும் அசையா உறுதியோடு இருந்தார்.

அதனாற்றான் விடுதலைப்புலிகள் அமைப்பில் உயரிய கட்டுக்கோப்புக்களையும், எதிரியிடத்தில் உயிருடன் பிடிபடாமை, போராளிகளின் வித்துடல்கள் எதிரியிடம் சிக்கவிடாமை, ஆயுதங்களைக் கைவிடாமை போன்ற மரபுகளையும் இறுக்கமாகப் பேணிவந்தார். இந்த மரபுகளும் கட்டுக்கோப்பும்தான் உலகிலேயே தனித்துவமான விடுதலை இயக்கமாக விடுதலைப்புலிகள் அமைப்பை மிளிர வைத்தன; வெற்றிகளை ஈட்டித்தந்தன; உறுதிகுலையாமல் இயக்கத்தை வளர்த்தன.

தமிழ்வீரத்திற்கு இலக்கணம் வகுப்பது போல, தான் மட்டுமன்றி தனது பிள்ளைகளான சார்ல்ஸ் அன்ரனியும் துவாரகாவும் நேரடியாகவே போராளிகளோடு போராளிகளாக களத்தில் நின்று எதிரியுடன் சமராடியதும் வரலாற்றின் புதிய பக்கங்களே.

2006 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து முன்னேறி வன்னியை சுற்றிவளைக்கும் இராணுவத்தினரின் திட்டத்தை முன்கூட்டியே அறிந்து, பாரிய அளவில் விடுதலைப்புலிகள் சேனை யாழ்குடாநாடு நோக்கி படைநடவடிக்கை எடுத்தது. அதற்குப் பலம் சேர்க்கும் நோக்கில் கடற்புலிகளின் 65 சண்டைப்படகுகள் அடங்கிய 13 படகுத்தொகுதிகள் காங்கேசன்துறை நோக்கிச்சென்றன. ஆனால் எதிரியோ முன்னாயத்தமாக இன்னொரு திட்டத்தைத் தீட்டி கடற்புலிகளின் அனைத்துப்படகுகளையும் சக்கரவியூகத்தில் சுற்றிவளைத்துவிட்டான்.

சாதாரணமான சுற்றிவளைப்புக்கள் கடற்புலிகளுக்கு சிறுபிள்ளை விளையாட்டுப் போன்றது. உடைத்துக்கொண்டு வெளியேறி விடுவார்கள். ஆனால் இந்தச்சுற்றிவளைப்பை உடைப்பது கடினம் என்பது கடற்புலிகளின் தளபதிக்குத் தெரிகின்றது. கடற்கரும்புலிகள் முன்னேசென்று உடைத்துபாதை அமைத்து வெளியேறுவதற்கு களத்தளபதி கடற்புலிகளின் சிறப்புத்தளபதியிடம் அனுமதி கேட்கின்றார். அவ்வாறு உடைத்துவெளியேறுவதும் ஆபத்தானது என்பது தெரிந்த சிறப்புத்தளபதிக்கோ என்ன முடிவெடுப்பது என்ற குழப்பம். படைநடவடிக்கையை ஒருங்கிணைத்த பொட்டம்மானோ அத்தனை போராளிகளின் ஆபத்தான நிலைமை தெரிந்து தலைவருக்குத் தெரியப்படுத்துகின்றார்.

நேரடியாகவே கட்டளைநிலையத்திற்கு வருகைதந்த தலைவர் ராடார் திரை ஊடாக களநிலையை அவதானிக்கின்றார். பொறியில் சிக்கிய அணியொன்றை மீட்பதற்கு உடனடியாகவே ஒவ்வொரு படகையும் ஒன்றன்பின் ஒன்றாக நேர்கோட்டு வியூகத்துக்கு வருமாறு கட்டளையிடும்படி பணித்தார். யாருமே நினைத்துப்பார்க்க முடியாத ஒரு வியூகம். புதிய வியூகத்திற்கு மாறிய கடற்புலிகளின் நகர்வைக் கண்டு சிறிலங்காக் கடற்படை திடீரெனப் பின்வாங்கி வழிவிடும் முடிவை எடுத்தது. சிறுசண்டையுமின்றி அனைத்துப் படகுகளும் பாதுகாப்பாக எதிரியின் சுற்றிவளைப்புக்குள்ளிருந்து வெளியேறின.

மாறிய களநிலைமையைக் கண்டு அனைவருக்குமே அதிர்ச்சி. சிறப்புத்தளபதி சூசை அவர்களும், படைநடவடிக்கை ஒருங்கிணைப்புத் தளபதி பொட்டம்மான அவர்களும் ”தலைவர் எண்டா தலைவர் தான்ரா” என தமது போராளிகளுக்குப் பெருமையுடன் கூறினார்கள். இதுதான் எமது தலைவனின் போர்க்கலை.

தமிழரின் வீரமரபைப் பேணுவதன் ஓர் அடையாளமாகத்தான் மாவீரர்நாளை மிகுந்த எழுச்சிகரமான நிகழ்வாக ஒவ்வோராண்டும் நினைவுகொள்ளும் நடைமுறையைத் தலைவர் கொண்டுவந்தார். ஆண்டுக்கு ஒரேயொரு முறை இயக்கத்தின் கொள்கை விளக்கத்தை வெளியிடும் நாளாக அந்நாளைத் தேர்ந்தெடுத்துச் சிறப்பித்தார். எமது பண்டைய வீரவரலாறு தான் இன்று எமது இனவிடுதலைப் போராட்டத்துக்கான உந்துசக்தியென்பதையும், இந்த மரபுத்தொடர்ச்சி இருக்கும்வரைதான் எமது இனம் பெருமையோடும் இறைமையோடும் வாழமுடியுமென்பதையும் அடிக்கடி சொல்லிக்கொள்வார். பண்டாரவன்னியனின் போராட்டக் குணமும் வீரவரலாறுமே தனக்கான முன்னுதாரணமென்பதையும் எமது வரலாறு இனிவருந் தலைமுறைகளின் முன்னுதாரணமாக அமையவேண்டுமென்பதையும் தீர்க்கமாகச் சொல்லுவார்.

1999 இன் முற்பகுதியில் துருக்கியை எதிர்த்துப் போராடிய குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவர் ஒசாலான் (Öcalan) வேற்று நாடொன்றில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு துருக்கிக்குக் கொண்டு செல்லப்படுகிறார். குர்திஸ் விடுதலை இயக்கத்துக்கும் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கும் மானசீகமான உறவு நீண்டகாலமாகவே இருந்துவருகின்றது. தலைவர் பிரபாகரனுக்கும் அவ்விடுதலைப் போராட்டத்தின்பாலும் அவ்வியக்கத்தின்பாலும் தீவிர அக்கறை இருந்துவந்தது. ஒசாலான் நீண்டகாலமாகவே வெளிநாடுகளில் தங்கியிருந்தபடியே போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். இறுதிக்காலத்தில் அவர் தங்கியிருப்பதற்கான அனுமதியை எல்லா நாடுகளும் தவிர்த்த நிலையில் வேண்டப்படாத விருந்தாளியாய் ஒவ்வொரு நாடாகப் பந்தாடப்பட்டு இறுதியில் நைரோபி விமானநிலையத்தில் வைத்துப் பிடித்துச் செல்லப்பட்டார்.

அச்சம்பவத்தைச் செய்தியில் கேள்விப்பட்ட தேசியத் தலைவர் (வெரித்தாஸ், பிபிசி – தமிழோசை, ஐபிசி ஆகிய வானொலி நிகழ்ச்சிகளை அவர் ஒருநாட்கூட தவறவிட்டதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் கேட்கமுடியாமற் போனால் ஒலிப்பதிவு செய்து நேரம்கிடைக்கும்போது கேட்பது தலைவரின் வழக்கம்) எரிச்சலும் கோபமும் கொள்கிறார். மிகுந்த விசனத்தோடு ஒசாலான் மீது காட்டமான விமர்சனத்தை வைக்கிறார்.

‘வெற்றி தோல்வியை விட பெருமையையும் வீரமரபையும் காப்பாற்ற வேண்டும். அதுவே தலைவன் ஒருவனின் தலையாய கடமை.’ என்பதே தலைவரது ஆதங்கமாக இருந்தது. எமது தலைவரின் அந்த தீர்க்கமும் மூர்க்கமுமே எமதினத்தின் தனித்துவமாக விளங்குகிறது; விடுதலைப் புலிகள் அமைப்பின் பெருமையாகவும் திகழ்கின்றது.

தனியே சிறிலங்கா அரசு என்ற ஒற்றை அரசு மட்டுமல்ல, அலையலையாய்த் திரண்ட வல்லாதிக்கங்களின் ஒட்டுமொத்த பலத்திற்கும் எதிராகப் போராடியபோதும், தளராமல் உறுதியோடு போராட முடிவெடுத்த தலைவர் அவர்கள் ”விடுதலைபோராட்டத்தில் ஒருவேளை நாங்கள் தோற்றுப்போகலாம். ஆனால் நாங்கள் விட்டுச்செல்லும் வாள், ‘கூர்மையானதாக’ விட்டுச்செல்லவேண்டும்.” என முள்ளிவாய்க்கால் இறுதிகட்ட போரின் நாட்களில் சொன்னார். “ஒரு காலத்தில் பண்டாரவன்னியன் இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடினான். அவன் காட்டிய வழியில் நாங்கள் போரிடுகின்றோம். எங்களால் முடியாவிட்டால் நாளை இன்னொரு சந்ததி வரும். அது எமது போராட்டத்தினைத் தொடர்ந்து கொண்டுசெல்லும்.” எனச் சொன்னார்.

இப்படி எத்தனையோ நெருக்கடிகளுக்குள் வாழ்ந்தபோதும் திடமான முடிவு எடுத்துச் செயற்படும் தலைவனைப் பெற்ற எமது இனம், அவரின் வழிகாட்டலில் நிச்சயம் ஒருநாள் விடுதலைபெறும். உலக அரங்கில் தனது பெருமையை நிலைநாட்டும். அதற்காக நாம் ஒவ்வொருவரும் அயராது உழைக்க வேண்டும்.

(அவுஸ்திரேலியாவில் மாவீரர் நாளையொட்டி வெளியிடப்பட்ட காந்தள் 2011 என்ற மாவீரர் நாள் வணக்கமலரில் வெளியானது)

Leader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம்

**

மேலும்

பிரபாகரன் எனும் ஒற்றை மனிதனே தமிழ் இனம் முழுவதற்குமான ஒரே முகவரி

இப்போதும் எல்லோரும் ஏதோ ஒரு தத்துவவரிகளுக்குள்ளாகவே அவரது வரலாற்றையும்,அவரது பயணத்தையும் நோக்கி,நுணுகப்பார்த்து தங்கள் தங்களது தராசுகளில் நிறுத்து முடிவுகளை அவசரகதியில் எடுத்து ஏமாறுகிறார்கள்.

ஆனாலும் கோடிக்கணக்கான மனிதர்களால் மிகவும் ஆழமான உணர்வுகளால் எந்தவொரு பிரதியுபகாரமும் நினைக்கப்படாமல் நேசிக்கப்படும் ஒரு அதிமானுடனாக அவர் இன்னும் கருதப்படுவதற்கு பின்னால் அவரின் ஒப்பற்ற ஆளுமையும்,தான் நேசித்த இலட்சியத்துக்காக எத்தகைய இடர்கள்வரினும் தொடரும் ஓர்மமும் நிறைந்தே காணப்படுகின்றது.

இதோ,அவருடைய ஐம்பத்திஆறாவது பிறந்ததினமும் வந்துவிட்டது.மிகவும் இருள் சூழ்ந்த ஒரு குழப்பம்நிறைந்த பொழுதில் அந்த மனிதனின் பிறந்தநாள் வந்துள்ளது.

வேறு எப்போதையும்விட இப்போதுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற அந்த மனிதனின் தேவையும்,அவரின் வரலாற்று மீளுகையும் முழு தமிழர்களாலும்
எதிர்பார்க்கப்படுகின்றது.

எல்லாப்பலங்களையும் இழந்து நாம் நின்றிருக்கும் இந்தபொழுதிலும் அந்த ஒற்றை மனிதன் வந்துவிட்டால் அனைத்தையும் மீளக்கட்டி அமைத்து எம்மை நிமிரச்செய்துவிடுவான் என்ற முழுமக்களின் நம்பிக்கைதான்

அந்த தலைவனின் நாற்பது ஆண்டுகால போராட்டவரலாறு.

ஆறுகோடி தமிழர்கள் இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம்இனம் முழுவதற்குமான ஒரே முகவரியாகவும்,எல்லாத்தளைகளையும் அறுத்தெறிந்து நாம் எழுவதற்கான ஒரே பிடிமானமாகவும் எந்தவொரு பாசாங்கும் இன்றி மிக இயல்பாகவே எல்லோராலும் நம்பப்படுகின்றார்.

இன்றும் அந்த ஒற்றை மனிதனின் ஒரு சிறு குரல் வந்தாலேபோதும் இந்த இனத்துக்கு இப்போது நடந்துகொண்டிருக்கின்ற அனைத்து அநீதிகளும்,அவமானப்படுத்தல்களும் ஒரு கணத்தில் மறைந்துவிடும் என்ற நம்பிக்கையே எமது மக்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இப்படிநினைப்பது சரியா,பிழையா என்பதற்கு அப்பால் இப்படியான நம்பிக்கையை ஒரு முழுமக்கள்கூட்டமும் ஒருமித்துநினைக்கிறார்கள்.அதுவே மிக உண்மை.

ஒரு தேசியஇனம் முழுமையினதும் எதிர்பார்ப்பும் அதுதான்.இந்த எதிர்பார்ப்பு என்பது நேர்மையாகவும்,முழுத்தூய்மையாகவும் தான் நேசித்த மக்களுக்காகவும்,இலட்சியத்துக்காகவும் போராடிய அந்த மனிதனின் வரலாற்றிலிருந்தே பிறப்பிக்கப்படுகின்றது.

ஏறத்தாழ நாற்பது வருடங்களாகிறது தேசியதலைவர் விடுதலைப்போராட்டத்துக்காக புறப்பட்டு.இந்த நாற்பது வருடங்களாக அவரை தொட்டும்,உரசியும்,சுற்றிவளைத்தும் மரணம் பின் தொடர்ந்தபடியே இருக்க அவர் போராட்டத்தை முன்னகர்த்தியபடியே இருந்தார்.மரணத்தை அவர் ஒரு பொருட்டாக நினைத்ததும் இல்லை.

போராட்டவாழ்வுக்கும் மரணத்துக்குமான இடைவெளி மிகமிக மெல்லிய நூலிழை போன்றது என்பதை அவர் மிகத்துல்லியமாய புரிந்திருந்தார்.ஒரு போராளிக்கு ஆக்கிரமிப்பாளனிடம் இருந்து ஒரு துப்பாக்கிச்சன்னமோ,ஒரு குண்டின் வெடித்த சிதறலோ எப்போதும் உயிர்குடிக்க காத்திருக்கும் என்பதும் அவருக்கு தெரியும்.

78ம் ஆண்டின் பெப்ரவரிமாதம் 5ம்திகதி திருநெல்வேலியில் இருந்த சிறீலங்காவின் மக்கள்வங்கிக்குள் பகலில் உள்நுழைந்து போராட்டத்தேவைக்கான பணத்தை பறித்தெடுக்கும் முயற்சிக்கு செல்வதற்கு முன்னர் தனது தோழனும் தன்னுடன் முதலில் இணைந்தவருமான கலாபதியிடம் ‘இந்த தாக்குதலில் தனக்கு ஏதும் நடந்தால்க்கூட,சோர்வின்றி போராட்டத்தை தொடரவேண்டும்’ என்று நிதானமாக கூறிச்செல்லக் கூடிய அளவுக்கு அவருக்கு போராட்டவாழ்வின் நிலையாமை தெளிவாகப் புரிந்திருந்தது.

இரண்டாவதாக அவர் போராட்டத்தின் இயல்புவிதியை எந்தவொரு கடினமான சொற்களுக்குள்ளாகவோ,அந்நிய மேற்கோள்களுக்குள்ளாகவோ எடுத்துக்கொள்ளாமல் மிகவும் இயல்பான புரிதலுக்குள்ளாகவே விளங்கிக்கொண்டிருந்தார்.

தனிஒருவனாக அவர் போராடபுறப்பட்டபோது அவருக்கு முன்பாக பெரும் பாதை ஒன்று நீண்டுநின்றது.எந்தவொரு திசைகாட்டலும் இல்லாத அந்த பாதையில் தனியனாக அவர் இறங்கினார்.சிறுகச்சிறுக கூட்டினார்.

பெருமக்கள் எழவேண்டுமானால் முதலில் அவர்களுக்கு விடுதலையின்பேரிலும்,போராட்டத்தின்மீதும் நம்பிக்கை வரவேண்டும் என்பதை தெரிந்துகொண்டார்.

அடக்கப்பட்டமக்கள் நம்பிக்கை கொண்டு எழுவதும்,ஆளும் ஆக்கிமிப்பாளர்கள் அந்த மக்களின் நம்பிக்கையை நசுக்குவதுமான இரண்டு எதிர்எதிர் வினைகள்
தான் விடுதலைப்போராட்டம் என்பது.தேசியத்தலைவர் இந்த கோட்பாட்டை ஆழமாகப்புரிந்துகொண்டார்.அதிலும் தனக்குள் மிகஆழமான நம்பிக்கையைஅவர் வளர்த்திருந்தார்.

இந்த நம்பிக்கையானது விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதலான துரையப்பா அழிப்பின்போதே அவரில் தொடங்கிவிட்டிருந்தது.1975ல் அந்த தாக்குதலுக்காக அவர் ஒரு வெள்ளை வேட்டியுடனும்,வெள்ளை சேர்ட்டுடனும் வல்வெட்டித்துறையிலிருந்து தனது நண்பனையும்
அழைத்துக்கொண்டு சென்றபோது அவருக்கு பொன்னாலை வரதராஜப்பெருமாள்கோவில் அதற்குமுன்னர் ஒருபோதும் தெரிந்திராத இடமாகவே இருந்தது.அதற்கு முன்னரே அந்த இடத்தை தெரிந்துகொண்ட வேறு இரு நண்பர்களின் தகவலினதும்,குறிப்புகளினதும் அடிப்படையிலேயே அந்த இடத்துக்கு ஏதோ ஒரு நம்பிக்கையுடன் சென்றார்

தனக்குள் வளர்த்துக்கொண்ட உறுதியான நம்பிக்கையை தனது தோழர்களிடமும்,அவர்களில் இருந்து திரளான மக்களிடமும் பெரும் தீயாக எழுப்பலாம் என அவர் உண்மையாக நம்பினார்.

விளைவுகளை ஏற்படுத்துவதும்,விளைவுகளில் இருந்து எழுச்சியையும்,எதிரிக்கு வீழ்ச்சியை ஏற்படுத்துவதுமே அவரின் போரியல்.75ம்ஆண்டு பொன்னாலையில்
துரையப்பாவை வீழ்த்தியதிலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் விமானப் புடைவரை எல்லாமே எமது மக்களின் விடுதலையின் மீதான நம்பிக்கையை
கட்டியெழுப்புவதற்கான பொறிமுறைகளாகவே அவரால் நகர்த்தப்பட்டது.

இந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவே ஒவ்வொரு தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டன.அதற்காகவே போரியல்கட்டுமானங்கள் எழுப்பப்பட்டன.அரசியல்பிரிவுகள் அமைக்கப்பட்டன.தமிழீழம் என்ற கருத்தை எமது மக்களுள் பற்ற வைத்துதனை ஒரு சக்தியாக எழுப்புவதில் அவர் ஓயாது செயற்பட்டார்.

ஒரு இனம் பலநூற்றாண்டு பரிணாமத்தில் அடையும் விழிப்புணர்வையும் விடுதலையின் மீதான நம்பிக்கையையும் அவர் வெறும் நாற்பது ஆண்டுகால போராட்டத்தில் தனது ஓய்வற்ற போராட்டத்தினூடாக ஏற்படுத்திவிட்டார்.

இனி,

முழுவிடுதலையை தமிழினம் அடையும் வரைக்கும் அவரின் பயணம் என்றும் தொடரும்.இந்தப் பயணத்தின் முன்னால் செல்லும் பாதை காட்டியாகவே அவர் இன்னும் தொடர்ந்துகொண்டு இருக்கிறார்.அவர் சோர்வும்,விரக்தியும் அடைந்து ஓய்ந்திருந்தபொழுதுகள் அவரின் போராட்ட வரலாற்றில் இருந்ததில்லை.

அவருக்குள் இருக்கும் ஆன்மஉறுதியும்,மாவீரர்களின் இலட்சியநெருப்பும் அவரை முன் நடத்தியபடியே இருக்கும்.அவரின் வழிகாட்டலில் எழுவது மட்டுமே அந்த ஓய்வற்ற தலைவனுக்கு எங்களின் பிறந்ததின செய்தியாக இருக்கும்.

ச.ச.முத்து

தனியனாக நின்று தணலேற்றிய தலைவனின் தூரப்பார்வை..

இன்றைய மாவீரர் நாள்கூட இதற்கு முந்திய மாவீரர்நாட்களை விட வித்தியாசமாகிவிட்டது அதிசயம்தான். இந்த நாளை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்ற கேள்விக்கு விடை தேடும் புதியதொரு சவாலுடன் இந்த நாள் மறுபடியும் எம் கண்முன் மலர்ந்திருக்கிறது.

ஒவ்வொரு மாவீரர் நாள் வந்தாலும் சிங்கள தேசம் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கும். பலாலி முகாமில் இருந்து பனாகொட முகாம்வரை ” எங்கு விடியப்போகிறதோ..? ஐயோ..! எப்படி விடியப்போகிறதோ..? ” என்று சிங்கள இனவாதத்திற்கு கெடிக்கலக்கத்துடன் விடிவதுதான் மாவீரர் தினத்தின் விடியலாக இருந்தது.

அது அன்று ஆனால் இன்று காலம் மாறியிருக்கிறது.. ஆனால் சவால் மாறவில்லை..

” புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் இந்த நாட்டில் 24 மணி நேரத்தில் சமாதானம் மலர்ந்துவிடும்..” என்றான் சிங்கள இனவாதி ஜே.ஆர்.

இன்று..

ஆயுதங்கள் மௌனித்துக் கிடக்கின்றன.. சிங்களவன் சத்தமில்லாமல் மாவீரர் துயிலும் இல்லங்களை இடித்துக் கொண்டிருக்கிறான்.. பிரபாகரன் வீட்டை இடித்துக்கொட்டி, அவன் வீட்டுக்கு அருகில் இருந்த ஆலமரத்தைத் தறித்து புத்தவிகாரையும், புனித வெள்ளரசு மரமும் வைக்க துடித்துக் கொண்டிருக்கிறான்.

ஆயுதங்களை போடுங்கள் என்று சொன்ன அயலில் உள்ள அறிவிலிகள் எல்லாம் அவனோடு சேர்ந்து கும்மாளமடிக்கின்றன… மாவீரனோ துயிலிடமும் இல்லாமல் தூபியும் இல்லாமல் துன்மார்க்கர் கூட்டத்திடையே துறவியாகி நிற்கிறான்.

அடடா அன்று..

கங்கை கொண்டான் சோழன், இமயத்தில் புலிக்கொடி பதித்தான் நம் இராஜேந்திரன், கனகவிசயர் தலையில் கல்லெடுத்து கண்ணகிக்கு சிலை வைத்தான் சேரன் செங்குட்டுவன் என்று திரைக்கதை எழுதிய தமிழக வீரர்கள் வன்னியில் நடப்பதைப் பார்த்துவிட்டு திரை மூடி இருந்தார்கள். இவர்கள் எமக்கு தொப்புள் கொடி உறவுகள் என்றார்கள் சில வெத்து வேட்டு தமிழர்கள்… மாவீரன் மௌனமாகவே அந்தத் திரைப்படத்தையும் வீர வசனங்களையும் பார்த்துச் சிரித்தான்.

பயங்கரவாத பட்டியலிட்ட உலகம் புதுமாத்தளனையும், முள்ளிவாய்க்காலையும் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு வாரத்தில் 140.000 பேர் கொன்று குவிக்கப்பட்டபோது.. பெண்கள் நிர்வாணமாக்கி கடித்துக் குதறி ஓநாய்கள் தின்பது போல தின்னப்பட்டபோது தன் பட்டியலை அது சரி பார்த்துக் கொண்டிருந்தது..

தண்டனை வழங்கப்படாத இந்தக் குற்றங்களுக்கு நீதிகேட்க.. அதைத் தடுக்க வக்கற்ற.. உலக சமுதாயம் பயங்கரவாத பட்டியலில் தன் பெயரையும் சேர்த்துக்கொண்ட அவலத்தையும் மாவீரன் பார்த்துக் கொண்டிருந்தான் மௌனமாக..

நச்சுப் புகை அடித்து நம் வீரர்கள் கொல்லப்பட்டபோது.. போர் விதிகள் மீறப்பட்டபோது.. உலகத்தின் அதி நவீன சற்லைற்றுக்களால் அவதானிக்கப்பட்டு எதிரிக்கு தகவல் கொடுக்கப்பட்டபோது.. புலிகளின் ஆயுதக்கப்பல்கள் ஒவ்வொன்றாக மூழ்கடிக்கப்பட்டபோது.. வெள்ளைக் கொடியுடன் வந்தவன் வெட்டி வீழ்த்தப்பட்டபோது.. சற்லைற்றுக்களால் பார்த்து உலக நாகரிகம் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வெட்கங்கெட்டவர்களின் நாடுகளின் பட்டியலிலா தமிழீழ தேசமும் இடம் பெறப்போகிறது.. மாவீரன் முதல் தடவையாக வெட்கப்பட்டான்.

பின்பொருநாள்..

சனல் 4 தணலாக வெளிவந்தது, ஐ.நாவின் அறிக்கை வந்தது, நோர்வேயின் குற்ற ஒப்புதல் வந்தது.. அநீதியில் இருந்து தப்பிக்கொள்ள துடிக்கும் அந்த உலக அவலங்களை எல்லாம். மாவீரன் பார்த்து காறித் துப்பினான்.

” வந்த பின் அறிக்கை விடும் பேடிகள் அல்லடா நாம் வருமுன் காப்பதற்காக அவன் போராடிய வீரர்..! ” என்று சொல்லாமல் சொன்னான். உலகை எதிர்த்து தன்னந்தனியனாகப் போராடினான், தன்மானத்துடன் தூய தமிழ்க் காற்று வெளியில் கலந்தான் – அவன் மாவீரன். அவன் வாழ்விலும் அர்த்தமுண்டு.. அவன் இறப்பிலும் அர்த்தமுண்டு..!https://i0.wp.com/www.alaikal.com/news/wp-content/uploads/mv-flash1.jpg

மாவீரன் என்பவன் ஒருவனல்ல.. இலட்சக்கணக்கான தமிழர்கள் உயிர் கொடுத்த தமிழ் மான ஈகம்..! வீரம்..! ஆதித் தமிழன் போற்றிய அகில உலக நாகரிகம் ! அதற்கு வடிவம் கிடையாது.. அதற்கு தூபியும் கிடையாது, தூண்களும் கிடையாது..

பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழன் வடித்த தன்மான வீர இலட்சிய வடிவம் அது..

புறநானூற்றில் வரும் புகழ் வீரனெல்லாம் தூபிக்குள்ளா இருக்கிறான்..? மாவீரனுக்கு துயிலிடம் கிடையாது.. ஏனென்றால் அவன் துயில்வதில்லை.. எதிரியிடம் தண்ணீரும் வாங்கிக் குடிக்க மறுத்து, மானத்திற்காக உயிர்விட்ட சங்கத்தமிழ் வீரனுக்கு எதிரி மாநில ஆட்சியை கொடுத்தால் வாங்குவானா..? ஒப்பிட்டுப்பார்…!

மாவீரர்நாளை இன்று போட்டிக்கு நடத்துகிறான் தமிழன் என்று கூறி தமிழ் மானத்தை குலைக்க முயல்வோரையும் மாவீரன் பார்க்கிறான்..

போட்டிக்கு நடாத்துகிறான் என்று ஒருவனை ஒருவன் கொச்சைப் படுத்தினால் நம்மை நாமே அழிக்கும் நாசமே மீண்டும் மிஞ்சும்… போட்டிக்கு நடத்தவில்லை அவன் போட்டி போட்டு நடாத்துகிறான்.. அவன் வாழ்க..! என்று திருப்பிப் போடு.. எல்லாவற்றையும் மறந்துவிட்டு, மாவீரனுக்காக நீயும் ஒரு மலரெடுத்துப் போடு.

மாவீரர் சமாதிகளை இடிப்பவனை மட்டுமல்ல.. அதை இடிக்காமல் இடிப்பவர்களையும் மாவீரன் அறிவான்…

அவன் அறியாதது எதுவும் இல்லை..

எல்லோரையும்… எல்லாவற்றையும் அறிந்தவன் மாவீரன்..

அதனால்தான்..

எல்லோரையும் தள்ளி நிற்கும்படி கூறிவிட்டு தன்னந் தனியனாக வந்து தன் மாவீரத் தம்பியரின் ஈகச் சுடரில் தனி ஒருவனாக நின்று தணலேற்றினான் பிரபாகரன்..

கடுகளவும் கறைபடியாத காந்த நெருப்பு…!

அவன் ஏற்றிய நெருப்பின் ஒளிக்கு முன்னால் போலிகள் எல்லாமே பொசுங்குவதே வரலாறு..

உலக நாகரிகத்தில் ஏற்றப்பட்ட முதல் தமிழ் விளக்கை இன்றுவரை அணையவிடாது காத்த அந்த வீரத் தமிழ் மறவருக்கு இதயத்தால் அஞ்சலிகள்..

எமக்கு செய்த இழி செயலை எம் எதிரிக்குக்கூட செய்ய மாட்டோம்.. செய்தால் எங்கள் வீரம் அக்கணமே செத்துவிடும் என்று உலகுக்கு சொல்லி உயிர் கொடுத்த மாவீரனுக்கு முன்னால் மாபெரும் உலகமே தலை சாய்த்து நிற்கிறது.

உழுத்துப் போன உலகத்தை உதறிவிட்டு தனியனாக தம்பிகளுக்கு விளக்கேற்றிய தம்பி பிரபா நீ வாழ்க..!!

அலைகள் 27.11.2011

அவர்களுக்கு என்ன சொல்லி வரப்போகின்றோம்!

இதோ மாவீரர்நாளும் வந்துவிட்டது. மிகநீண்ட மாவீரர் பட்டியல் விரிந்து கிடக்கிறது. தெரிந்த தெரியாத பெயர்கள் என்றும். ஆண்கள், பெண்கள் என்ற பெயர்கள். உடல் சிதறும் கணம் தெரிந்தும் நிதானத்துடன் நடந்து இலக்கை நெருங்கி காற்றுடன் கலந்தவர்கள், கடலின் ஆழத்துள் நீள்துயில் கொள்பவர்கள், வானத்தில் வல்லமை நிகழ்த்திடும் பொழுதில் கரைந்தவர்கள்.என்று ஐம்பெரும் பூதங்களுக்குள்ளும் கலந்தவர்களாக என்று ஆயிரம் விதமான அர்ப்பணிப்புகளின் பெயர்கள். எங்கள் தேசப் புதல்வர்களின் பெயர்கள். என்ன செய்யப்போகின்றோம் இந்த மாவீரர்நாளிலும்…?இந்த மாவீரர்நாளிலும் போய்நின்று மனம்உருகி பூதூவுவோம்.

வீழ்வதற்கு தயாராக நிற்கும் கண்ணீர்த்துளிகளுடன் எங்கள் தேசத்துச் செல்வங்களை நினைத்து கைகூப்பி தொழுவோம். நெஞ்சுருகுவோம். மணியடித்து எழுந்துவரும் மாவீரர் பாடல் ‘ஒளியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீதும் உறுதி’ பாடலுக்கு எல்லோரும் ஒன்றுகூடி தீபம் ஏற்றி நிற்போம்.
இத்தனையும் நிச்சயமாக செய்தே ஆகவேண்டும்தான். எங்களுக்காக தங்களையே அர்ப்பணித்து மரணித்த எம் மாவீரர்களுக்கான நன்றியாக இத்தனையும் செய்தே ஆகவேண்டும். ஆனால் அதன் பின்னர்…..?இத்தனையும் செய்துவிட்டு வீடு திரும்பி எல்லா நினைவுகளையும் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் இயந்திர வாழ்வினுள் கரைந்துவிடப் போகின்றோமா?

ஏதோ ஒரு சடங்குக்காக போய் மலர்தூவி வந்துவிட்டால் மட்டுமே போதுமா? போன மாவீரர் நாள் இதோ முந்தாநாள்தான் வந்துபோனது போல கண்ணுக்குள் நிற்கிறது. போன மாவீரர் நாளில் தூவிவிட்டுவந்த கார்த்திகைப் பூவின் வாசம் இன்னும் கைகளுக்குள் மணக்கிறது.

போன மாவீரர் நாளிலும் போனோம், வந்தோம். ஒரு வருடமாகிப் போகிறது. மாவீரரின் கனவை நனவாக்க என்ன செய்தோம் இந்த ஒரு வருடத்தில்…?எம் நெஞ்சைத்தொட்டு பதில் கேட்டால் வெறுமைதான் பதிலாக எழுகிறது.

இம்முறையும் அவ்வாறே போய்வந்து பூத்தூவி, பாப்புனைந்து மீண்டும் அடுத்த வருட மாவீரர் நாளில் சந்திப்பதாக சொல்லி வர போகின்றோமா??மாவீரர் நாள்! சொல்லும்போதே நெஞ்சு விம்மவில்லையா. இதயத்துக்குள் சுடர் ஒன்று எரியும் உணர்வு மேலிடவில்லையா.. ஒவ்வாருவராக கண்களுக்குள் மாவீரர் நினைவு வந்து போகவில்லையா…

எத்தனை உயரிய தியாகங்களின் கூட்டு நினைவு நாள் இது. எத்தனைவிதமான அர்ப்பணங்கள். சுற்றிவர எதிரி சூழ்ந்துநின்ற போதிலும் காயமடைந்த தன்னை சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு தப்பும்படி இறுதி நேரத்து வேண்டுகோள் விடுத்து வீரச்சாவு கண்டவர்கள், அதனையே நிறைவேற்ற தயங்கிய தோழனிடம் தன்னைச் சுட்டுவிட்டு தப்பும்படி உத்தரவிட்டு மரணத்தை ஏற்றுக்கொண்டவர்கள்,

எதிரிக்கு தனது முகம் தெரிந்துவிட்டால் நடக்க திட்டமிட்டு இருக்கும் செயல்பாடுகள் முடங்கிவிடும் என்பதால் கொழுந்துவிட்டெரியும் தீக்குள் தமது முகம் கருக்கி மரணித்தவர்கள்,
ஆயுதமும் சயனைட்டும் இல்லாத ஒருபொழுதில் தப்பிக்க இனி சந்தர்ப்பம் ஏதும் இல்லையென்று நிச்சயமாக தெரிந்துகொண்டு மரக்கிளையிலும்,சுவரிலும்,மருத்துவமனைக்கட்டிலிலும் தமது தலைகளை பலம்கொண்டு மோதி மரணத்தை ஏற்ற வேங்கைகள்,
கடற்பயணங்களின்போது வெடித்த படகுகளில் இருந்து தான்மட்டும் நீந்தி தப்பிக்காமல் நீந்ததெரியாத தோழனையும் காப்பாற்ற இறுதிவரை முயற்சித்து அவனுடனேயே கடலுடன் சங்கமமானவர்கள்,

வல்லாதிக்க கடற்படை சுற்றிவர நின்று சரணடை என்று எக்காளமிட்டபோது அவன் முன்னாலேயே கப்பலை குண்டுவைத்து தகர்த்து தீயுடன் கருகியவர்கள்,

சிறியதோ பெரியதோ எதுவாகினும் அது எதிரியின் காவலரண் ஆகின் அதனை மீட்கும் முயற்சியில் வெட்டவெளியில் குண்டுமழைக்குள்ளாக இரத்தக்குளியல் செய்தவர்கள்,
தப்பி ஓடும் எதிரிகள் அனைவரையும் அழிப்பதற்காக தான் இருக்கும் இடத்தையே குறிவைத்து எறிகணைகளை வீசும்படி கூறிவிட்டு போய்விட்டவர்கள்….

இப்படி..இப்படியாக வார்த்தைகளாலும் வர்ணிப்புகளாலும் கூறிவிடமுடியாத ஈகங்களை நினைந்து வணங்கி துதிக்கும் நாள் இது. இது வெறுமனே ஒரு திகதி அல்ல. விடுதலைக்காக ஒரு இனம் செய்துவிட்ட அளப்பெரும் தியாகங்களின் மொத்த நினைவு.
விடுதலைக்காக இந்த இனத்தின் மனிதர்கள் தமது இனிய உயிரையும் அர்ப்பணிக்க எழுந்து நின்றார்கள் என்பதன் ஒரே நிரூபணம் மாவீரர் நாள்.

பேதங்களும் கூறுகளும் நிறைந்த தமிழர் தாயகத்தின் ஒருமுனையில் இருந்து மறுமுனை வரை ஒரே தலைமையின் கீழ் விடுதலைக்காக உயிரையும் தியாகம் தரத்தயாராக ஆயிரமாயிரமாய் தமிழினம் திரண்டது என்ற வரலாற்றுப் பதிவுதான் மாவீரர் நாள்.

எப்படியான ஒரு பொழுதில் இம்முறை மாவீரர் நாள் வந்துள்ளது. மிகவும் ஒரு அவலமான ஒரு பொழுது எங்கள் இனத்துக்கு இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

எங்களின் தாய்மண் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தனது தேசிய அடையாளத்தை இழந்து குறுகிக்கொண்டிருக்கிறது.
பாரம்பரிய தமிழர்நிலம் என்ற தேசியக்கூறு மிகவும் கெட்டித்தனமாக சிங்களத்தால் அழிக்கப்பட்டு வருகிறது.
எமது மக்கள் ஒருவகையான பேரின இராணுவ மேலாண்மைக்குள் முடக்கப்பட்டு இருக்கிறார்கள். அப்படியான வாழ்வே அவர்களுக்கு பழக்கமான ஒன்றாக ஆக்கப்பட்டும் வருகின்றது.பெருமரத்தை பற்றிப்படர்ந்து சுற்றி வளரும் சிறுகொடிகள் போல எம் இனம் ஆக்கப்பட்டு வருகிறது.

எல்லாவற்றிலும் மேலாக எங்கும் வறுமையே கோலோச்சுகிறது.
குழந்தைகளுக்கு வயிறார உணவு கொடுக்கவும் முடியாத ஏக்கத்தில் பெற்றோர் பேதலித்து போயிருக்கிறார்கள்.

அன்றாட உழைப்புகள் ஏதுமில்லாமல் கையேந்தும் நிலையில் எம் இனம் வீதியில் நிற்கிறது.இப்படியான ஒரு கொடும்துயரப் பொழுதில்தான் மாவீரர் நாள் வந்திருக்கிறது.

இந்த மக்களின் நிம்மதியான சுபீட்சமான வாழ்வுக்காகவே மாவீரர்கள் தங்களையே ஆகுதி ஆக்கினார்கள்.
மாவீரர்களை வணங்கிவிட்டு அவர்கள் நேசித்த இந்த மக்களை மறந்துவிடப் போகின்றோமா? மாவீரர்கள் எம்மிடம் எதிர்பார்த்தது எது?

மாவீரன் ஒவ்வொருவனும் வீழும்போதும் அவனது கனவும், அவனது விருப்பமும், அவனது எதிர்பார்ப்பும் ஒன்றே ஒன்றுதான். தாங்கள் நெஞ்சுக்குள் தாங்கி போரிட்ட இலட்சியக்கனவை வென்றெடுக்க நாளை நாம் ஒன்றாக கூடுவோம் என்பதுதான்.
எதிரியும் எதிரிக்கு முண்டு கொடுத்த சக்திகளும் எம்மை வென்றது ஒன்றும் பெரிதல்ல. ஆனால் இத்தனை அழிவுக்கு பின்னரும் நாம் ஒன்றுபடாமல் சிதறிப்போய் நிற்கிறோமே அதுதான் மோசமானது.
இந்த மாவீரர் தினத்துடன் அனைவரும் ஒன்றிணையும் சபதம் ஓங்கி ஒலிக்கவேண்டும்.

நாம் எதிரிக்கு எதிராக ஒன்றானோம் என்ற சேதி தாயகத்தின் காற்றில் கலந்து மாவீரர் காதுகளில் போய் விழவேண்டும்.
எங்களிடம் இருக்கும் ஒரே அரசியலும் மாவீரர் நாள்தான். இந்த இனத்திடம் எஞ்சி இருக்கும் ஒற்றை ஆயுதமும் மாவீரர் நாள்தான்.
வெறும் சம்பிரதாயமான நினைவாக நின்று திரும்பாமல் மனங்களுக்குள் உறுதி எடுப்போம்.

விடுதலைப்போரின் விழுக்காயங்களாக வறுமையுடன் அல்லல்படும் போராளிக் குடும்பங்களையும் சிறையில் வாடும் எம் உறவுகளையும் கைதூக்கி விடுவோம் என்றும், மாவீரர் கண்ட கனவான சுதந்திரவாழ்வை பெற்றுத்தர ஓயாது செயற்படுவோம் என்றும் உறுதிகொள்வோம்.-
– ச.ச.முத்து

தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே

நவம்பர் 27

(மாவீரர் நாள்)

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

இன்று வணக்கத்துக்குரிய நாள்.

சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத்தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள்.

இன்றைய நன்னாளில், அந்த மகத்தான மனிதப் பிறவிகளின் நினைவாக நாம் ஏற்றும் தீபங்களில், அந்த அக்கினி நாக்குகளின் அபூர்வ நடனத்தில், எமது மாவீரர்களின் சுதந்திரத் தாகம் அணையாத சுடராக ஒளிவிட்டு எரிவதை நாம் எமது நெஞ்சில் நினைவு கொள்வோமாக.

சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.

(2005)

மாவீரர்கள் அபூர்வ மனிதர்கள்

எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இழப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்கு சக்தியாக அமைந்துவிட்டது.

இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள். சுதந்திரச் சிற்பிகள். எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, கௌரவத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்ல. அவன் ஒரு இலட்சியவாதி. ஒரு உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன். தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன். மற்றவர்களின் விடிவுக்காக, விமோசனத்திற்காக வாழ்பவன். சுயநலமற்ற, பற்றற்ற அவனது வாழ்க்கை உன்னதமானது. அர்த்தமானது. சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறான். எனவே, விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள். அசாதாரணமான பிறவிகள்.

ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வு அல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்¬. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சியத் தீ என்றுமே அணைந்து
விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கிறது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டி எழுப்பி விடுகிறது.

(1990)

தமிழன்னையின் கருவூலத்தில் மாவீரர்கள்

எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள். உயர்ந்து நிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்.

தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது, முற்றுப்பெறுகிறது. ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்
கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.

(2006)

மாவீரர்கள் வணங்கா மன்னர்கள்

எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். எதிரிக்குத் தலைவணங்காத வணங்கா மன்னர்கள். எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனிதமலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்து நிற்கின்றனர்.

ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.

(2007)

சிங்களத்தின் கனவு நிச்சயம் கலையும்

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை. எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக, கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவருகிறது. எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளிகொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாளச் சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது. தீராத ஆசை கொண்டு நிற்கிறது. மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன.

ஆசையின் பிடியிலிருந்து மீட்சிபெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபடமுடியாது. மண்ணாசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டிவந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.

(2008)

அடிபணிவு என்ற பேச்சுக்கு இடமில்லை

இராணுவ அடக்குமுறை என்ற அணுகுமுறை மூலம் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதை சிங்கள அரசு இன்னும் தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. இராணுவ மேலாதிக்கத்தை எட்டிப் பிடிக்க வேண்டும் என்ற ஆதிக்க வெறி இன்னும் சிங்கள ஆளும் வர்க்கத்திடமிருந்து அகன்று போனதாகத் தெரியவில்லை.

இராணுவ ஆதிக்கத்திற்கும், அழுத்தத்திற்கும் புலிகள் இயக்கம் என்றுமே விட்டுக்கொடுத்ததேயில்லை. கொண்ட கொள்கையில் நாம் என்றுமே வளைந்து கொடுத்ததில்லை. எமது இயக்கத்தின் இந்த உறுதிப்பாட்டை உலகத்தின் மிகப்பெரிய இராணுவமே பரீட்சித்துப் பார்த்து தோல்வி கண்டது. சிங்கள இராணுவமும் இந்த வரலாற்றுத் தவறை சந்திக்கத்தான் நேரிடும்.

(1991)

நாம் போர்வெறியர்கள் அல்ல

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம். எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சியவல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம்.

அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களையெல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம். பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களையெல்லாம் தனித்துநின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.

சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமைகொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண். பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண். வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண். இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழவிரும்புகிறோம். ஆங்கிலேயக் காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடிவருகிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டுவந்திருக்கிறது.

ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், சனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்
முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்கமுனைந்தது. அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்கமுடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.

சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு
செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது. தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது.

நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர். அதேநேரம் நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களிற் பேச்சுக்களிற் பங்குபற்றிவந்திருக்கிறோம். எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்டபோதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவவழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.

(2008)

வல்லரசுகளின் எதிர்மறையான தலையீடு

எமது பிராந்தியத்திலே உலகப் பெருவல்லரசுகளின் இராணுவ, பொருளாதார, கேந்திர நலன்கள் புதைந்து கிடப்பதை நாம் நன்கு அறிவோம். அந்த நலன்களை முன்னெடுக்க உலக வல்லரசுகள் முனைப்புடன் முயற்சிப்பதையும் நாம் விளங்கிக்கொள்கிறோம்.

இதற்கு இலங்கைத்தீவில் நெருக்கடிநிலை நீங்கி, சமாதானமும் நிலையான நல்லாட்சியும் தோன்ற அனைத்துலக நாடுகள் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதேநேரம் பேரினவாதச் சிங்கள அரசு உலகநாடுகளின் நலன்களையும் அவை எமது பிராந்தியத்திற் பதிந்திருப்பதையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது. போலியான, பொய்யான பரப்புரைகள் வாயிலாக உலக நாடுகளைத் தமது வஞ்சக வலைக்குள் வீழ்த்தி, தமிழரது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் திருப்பிவிடுகின்ற கைங்கரியத்தைச் செய்துவருகிறது.

சிங்கள அரசின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து, உலகநாடுகள் எமது பிரச்சினையில் எதிர்மறையான தலையீடுகளைச் செய்வதுதான் எமக்கும் எமது மக்களுக்கும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

(2007)

குறிவைக்கப்படும் புலம்பெயர் தமிழர்கள்

இவற்றுக்கும் மேலாக, புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம்பொருந்திய சக்தியாக நின்று, தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டிவருவதையும் சிங்களத் தேசத்தாற் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குட்சிக்கி, எம்மக்கள் அழிந்துவருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க, புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டு வருவதையும் சிங்களப் பேரினவாதத்தாற் சகிக்கமுடியவில்லை.

எனவேதான், புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை உடைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிடச் சிங்களப் பேரினவாதம் தீவிரமாக முயற்சித்துவருகிறது. இந்த அநியாயத்திற்குச் சில உலக நாடுகளும் துணைபோகின்றன. எம்மக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசியற் சட்டங்களுக்கு அமைவாக, நீதி தவறாது மேற்கொள்ளும் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானச் செயற்பாடுகளையும் படுபாதகமான குற்றவியற் செயல்களாக இந்நாடுகள் காட்டிவருகின்றன.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து, சிறைகளிலே அடைத்து, அவமானப்படுத்தியிருக்கின்றன. நீதி கேட்டு, நியாயம் கோரி எம்மக்கள் நடாத்திய போராட்டங்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தியிருக்கின்றன.

(2007)

முடிவில்லாத துன்பியல் நாடகம்

முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப் பிரச்சினை தொடர்கிறது. எமது பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆளும்கட்சி முயற்சிப்பதும் எதிர்க்கட்சி எதிர்ப்பதும் பின்பு எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறி மீண்டும் அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்தச் சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியிற் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகிறது. இலங்கையில் மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் இரு பெரும் சிங்கள அரசியற் கட்சிகளுமே தமிழர்களுக்கு விரோதமான இந்த விபரீத நாடகத்தின் இயக்குனர்கள். இந்த இனவாத நாடகத்தின் கதாநாயகர்கள் காலத்திற்குக்காலம் மாறியபோதும் கதையின் கருப்பொருள் மாறவேயில்லை. தற்போது கொழும்பில் உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடியும் இந்த அபத்த நாடகத்தின் அப்பட்டமான வெளிப்பாடுதான்.

தமிழர்களைப் பகடைக் காய்களாகப் பாவித்து ஆடப்படும் இந்த சதுரங்க விளையாட்டின் எதிர்விளைவாக எத்தனையோ சமரச முயற்சிகள் பாழடிக்கப்பட்டன. எத்தனையோ பேச்சுவார்த்தைகள் முறிந்து போயின. எத்தனையோ உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்டன. எத்தனையோ ஒப்பந்தங்கள் செயலிழந்து செத்துப் போயின. இதனால் தமிழரின் பிரச்சினை தீர்வின்றித் தொடர்கிறது. காலத்தால் மோசமாகித் தமிழரின் அவல வாழ்க்கை தொடர்கிறது.

(2003)

நிறைவேற்றப்படாத மாவீரர்களின் கனவு

தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சர்வதேச மயப்படுத்தி, உலகத்தின் கவனத்தை எம்மீது திருப்பினோம். எனினும் எமது மாவீரர் கண்ட கனவு இன்னும் நிறைவுபெறவில்லை.

எமது தாயக மண் இன்னும் முழுமையாக விடுதலைபெறவில்லை. எமது மக்கள் இன்னும் பூரண சுதந்திரம் அடைந்துவிடவில்லை. தமிழீழத்தின் தொன்மைவாய்ந்த, வரலாற்றுப் புகழ்மிக்க நகரங்களும் பட்டினங்களும் அங்கு வாழ்ந்து வரும் எமது மக்களும் இன்னும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பிடியிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைபட்டு, நசிபட்டு, மிதிபட்டு வாழ்கிறார்கள். தமது சொந்த மண்ணிலிருந்து வேர் அறுபட்டு இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர், தாம் பிறந்து வாழ்ந்த நிலங்களுக்குத் திரும்ப முடியாது அகதி முகாம்களில் அல்லற்படுகிறார்கள்.

எமது மக்களின் துயரும் துன்பமும் தொடர்கிறது. தேச விடுதலை என்ற எமது இலட்சியம், எமது மாவீரர்கள் கனவுகண்ட அந்த சத்திய இலட்சியம் இன்னும் நிறைவுபெறவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு ஓர் இக்கட்டான, சிக்கலான சூழ்நிலையை நாம் இன்று எதிர்கொண்டு நிற்கின்றோம். போருமின்றி, நிலையான சமாதானமுமின்றி, இயல்பு நிலையுமின்றி, இடைக்காலத் தீர்வுமின்றி, இனப் பிரச்சினைக்கு முடிவுமின்றி, நாம் ஒரு அரசியல் வெறுமைக்குள் வாழ்ந்து வருகின்றோம். இந்த அரசியற் சூனிய நிலை நீடித்தால், அது எமது இலட்சியப் போராட்டத்திற்குப் பெரும் பங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பது திண்ணம்.

மூன்று தசாப்தங்களாக முடிவின்றித் தொடர்ந்து ஆயுதப் போருக்கு நாம் ஓய்வுகொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் அமைதிகாத்த இக் கால விரிப்பில், சமாதான வழிமூலமாகத் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண எம்மாலான சகல முயற்சிகளையும், நேர்மையுடனும் உறுதிப்பாட்டுடனும் நாம் மேற்கொண்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

…இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்க முடியாது. சிங்கள தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டும் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்காலச் சுபீட்சமின்றி சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்தும் வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம்.

(2004)

தமிழீழ தாயகம் அடிப்படையானது

எந்தவோர் அரசியற் தீர்வுத் திட்டத்திற்கும் தமிழரின் தாயகம் அடிப்படையானது. தமிழரின் நிலமானது தமிழரின் தேசிய வாழ்விற்கும் தேசிய தனித்துவத்திற்கும் ஆதாரமானது. தமிழர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவரும் தாயக நிலத்தை அங்கீகரிக்காத எந்தவொரு திட்டமும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது.

(1998)

நாம் எதற்காகப் போராடுகின்றோம்?

நாம் எதனைக் கேட்கின்றோம்? எதற்காக நாம் போராடி வருகின்றோம்? நாம் எமது மண்ணில், வரலாற்று ரீதியாக எமக்குச் சொந்தமான நிலத்தில், நாம் பிறந்து வாழ்ந்த எமது தாயகப் பூமியில், நாம் நிம்மதியாக, கௌரவமாக, எவரது தலையீடுகளுமின்றிச் சுதந்திரமாக வாழ்வதற்கு விரும்புகின்றோம்.

நாமும் மனிதர்கள். மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கொண்ட ஒரு மனித சமூகம். தனித்துவமான மொழியையும், பண்பாட்டு வாழ்வையும், வரலாற்றையும் கொண்ட ஒரு தனித்துவமான இனத்தைச் சேர்ந்த மனிதர்கள் நாம். எம்மை ஒரு மனித சமூகமாக, தனித்துவப் பண்புகளைக் கொண்ட மக்களாக ஏற்குமாறு கேட்கிறோம். எமது அரசியல் வாழ்வை நாமே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை எமக்குண்டு. இந்த உரிமையின் அடிப்படையில் நாமே எம்மை ஆளும்வகையில் ஒரு ஆட்சிமுறையை அமைத்து வாழவே நாம் விரும்புகிறோம்.

(1997)

மகாவம்ச மனவுலகில் சிங்களம்

சிங்களத் தேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில், அந்தப் புராணக் கருத்துலகிற் புதைந்துபோய்க் கிடக்கிறது. இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையிற் சிங்களமக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள். அடிமனதில் ஆழமாக உறைந்து, அசைவற்றதாக இறுகிப்போன இந்தப் புராணக் கருத்து நிலையிலிருந்து சிங்களத் தேசம் விடுபடப் போவதில்லை.

இந்தக் கருத்தியற் குருட்டுத்தனத்தால் இலங்கைத் தீவின் உண்மை வரலாற்றையும் அங்கு நிலவும் சமுதாய மெய்நிலைகளையும் சிங்கள மக்களாலும் அவர்களது அரசியல், மதத் தலைமைகளாலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தைத் தாயகத் தேசமாகக் கொண்டு, தமிழீழ மக்கள் என்ற வரலாற்றுத் தொன்மைமிக்க ஓர் இனம் இருப்பதையும் அவர்கள் ஒரு தனித்துவத் தேசமாக வாழ்ந்து வருவதையும் அவர்களுக்கு அடிப்படையான அரசியல் உரிமைகள், சுதந்திரங்கள் உள்ளன என்
பதையும் சிங்களவராற் புரிந்துகொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை.

தமிழரது இருப்பு நிலைபற்றிய உண்மையைக் கிரகித்து, அவர்களது அரசியல் அபிலாசைகளைப் புரிந்துகொள்ளச் சிங்களத்தேசம் மறுத்து வருவதாலேயே தமிழ்மக்களது தேசிய இனப்பிரச்சினை தீர்வின்றி, முடிவின்றிச் சிக்கலடைந்து இழுபட்டு வருகிறது.

சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள – பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்துபோகவில்லை.

மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது. தென்னிலங்கை அரசியற் களத்தில் அதன் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. இப்படியான புறநிலையில், தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்குச் சிங்களத் தேசத்திலிருந்து ஒரு நீதியான, நியாயமான தீர்வு கிட்டுமென அன்றும் சரி, இன்றும் சரி, நாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. எமக்கே உரித்தான எமது அடிப்படை உரிமைகளை நாமாகவே போராடி வென்றெடுக்க வேண்டுமே தவிர, சிங்கள அரசியல்வாதிகளின் காருணியத்தில் பெற்றுக்கொள்ளலாம் என நாம் என்றுமே கருதியதில்லை.

இதுவே, அன்றும் இன்றும் எமது விடுதலை இயக்கத்தின் உறுதியான இலட்சியமாக இருந்து வருகிறது.

(2005)

தமிழீழத் தனியரசே ஒரே தீர்வு

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் ஒரு நியாயமான தீர்வை ஒருபோதும் முன்வைக்கப்போவதில்லை என்பது இன்று வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. எத்தனை ஆண்டுகள் கடந்துசென்றாலும் எத்தனை யுகங்கள் ஓடி மறைந்தாலும் சிங்களத் தேசத்தில் மனமாற்றம் நிகழப்போவதில்லை என்பதும் தமிழருக்கு நீதிகிடைக்கப்போவதில்லை என்பதும் இன்று தெட்டத்தெளிவாகியிருக்கிறது.

எனவே, நடக்கமுடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, தொடர்ந்தும் அதே பழைய பாதையில் நடைபோட இனியும் நாம் தயாரில்லை. எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளவும் நாம் விரும்பவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்துவைத்திருக்கிறது.

எனவே, இந்த விடுதலைப் பாதையிற் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவுசெய்திருக்கிறோம். எமது அரசியற் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகிறோம்.

உலகத் தமிழினத்தின் எழுச்சி

தமிழினம் விடுதலைப் பாதையில் வீறுகொண்டெழுந்திருக்கின்ற இந்தப் பெருமைமிகுந்த வரலாற்றுக் காலகட்டத்தில் உலகத்தமிழினத்தின் உதவியையும் பேராதரவையும் நாம் வேண்டிநிற்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்திலே எமது புலம்பெயர்ந்த உறவுகள் காலங்காலமாக விடுதலைப் போராட்டத்திற்குச் செய்துவரும் பெரும் பங்களிப்பிற்கும் உதவிகளுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்தும், உங்கள் தார்மீகக் கடமையை ஆற்றுமாறு வேண்டுகிறேன். இதேபோன்று எமக்காக உணர்வுபூர்வமாக உரிமைக்குரல் கொடுத்துவரும் தமிழக உறவுகளுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதோடு எமது தமிழீழத் தனியரசு நோக்கிய போராட்டத்திற்கு தொடர்ந்தும் நல்லாதரவும் உதவியும் வழங்கி, எமக்குப் பக்கபலமாகச் செயற்படுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டுகிறேன்.

(2006)

இலட்சியத்தை நிச்சயம் அடைவோம்

இன்று உலகம் மாறி வருகிறது. உலக ஒழுங்கும் மாறி வருகிறது. உலக நாடுகளின் உறவுகளும் மாறி வருகின்றன. மனித சமுதாயம் முன்னென்றும் காணாத புதிய சவால்களுக்கு முகம் கொடுத்து நிற்கின்றது. இன்றைய உலக நிதர்சனத்தை, அதன் யதார்த்தப் புறநிலைகளை நாம் உதாசீனம் செய்ய முடியாது. இன்றைய காலத்தையும், இக் காலத்தில் கட்டவிழும் சூழலையும் நாம் ஆழமாகப் புரிந்து, காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப, எமது விடுதலைப் பாதையை செப்பனிடுவது அவசியம். இன்றைய காலத்தின் தேவை அது. உலகப் போக்குடன் முரண்படாது, உலக வரலாற்றின் ஓட்டத்திற்கு இசைவாக, நாமும் எமது போராட்ட வரலாற்றை முன்னகர்த்திச் செல்வதே விவேகமானது. இன்றைய வரலாற்றின் கட்டாயமும் அதுவே.

…அமைதி வழியில், மென்முறை தழுவி, நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் நாம் எமது போராட்ட இலட்சியத்தை அடைய முயன்று வருகின்றோம். காலத்திற்கு ஏற்ப, வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய, எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை.

சத்தியத்தின் சாட்சியாக நின்று, எமது மாவீரர்களின் தியாக வரலாறு எமக்கு வழிகாட்டும். அந்த சத்தியத்தின் வழியில் சென்று, நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்பது உறுதி.

(2002)

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று மாவீரர் நாள்.
தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள்.

ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள்.

கனவுகளைச் சுமந்தவர்கள் வழியில் நடப்போம்…

வரலாற்றின் இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மாவீரர் தின ஏற்பாடுகள் புலம்பெயர்ந்த மண்ணில் பலத்த நெருக்கடியை சந்தித்துள்ளது. உலக நாடுகளில் ஏற்பாடாகியுள்ள மாவீரர் தின நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்காக சிறீலங்கா புலனாய்வுத்துறையின் மிகப்பயிற்றப்பட்டவர்கள் பல்வேறு வேடங்களில் வெளிநாடுகளுக்கு குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து இயங்கும் சிங்கள ஊடகங்கள் தமிழர்களை அச்சுறுத்துகின்றன.

-தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே-

தமிழர் தாயகத்தில் அனைத்து மாவீரர் இல்லங்களையும் சிதைத்தழித்துள்ள சிங்கள தேசம், தங்கள் சொந்த உறவுகளுக்காக ஒரு தீபத்தையும் அங்குள்ள மக்கள் ஏற்றிவிடாதவாறு தனது ஆயுதப் படையை முழுமையாகக் கண்காணிப்பில் களமிறக்கியுள்ளது. இந்த நிலையில் வழமைபோன்று புலம்பெயர்ந்த மக்கள் எழுச்சியோடு நினைவுகொள்ளும் மாவீரர் நாளையும் குழப்பி அதனைச் செயலிழக்க வைக்கும் பாரிய சதித்திட்டத்துடன், ஒரு கட்டத்தில் அதனை முழுமையாக இல்லாமல் செய்யும் நீண்டதூர நோக்கத்துடன் மிகத்தீவிரமாக, அதுவும் வெளிப்படையாகவே சிங்களம் இப்போது களமிறங்கியிருக்கின்றது.
மாவீரர் தினம் என்ற பெயரில் நிதிவசூலிப்பில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஈடுபடுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டைச் சுமத்தி இதனைத் தடுத்து நிறுத்த முனைந்தது சிங்கள தேசம். அது முடியாமல்போகவே, தனது கையில் அகப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் சிலரையும், விடுதலைக்கு ஆதரவானவர்கள் என வேசம் போட்டு தமிழ் மக்கள் மத்தியில் உலாவருகின்ற சில நரிகளையும் ஒன்றாக்கி இப்போது களமிறக்கி விட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் கடந்த கால கட்டுப்பாடு, நடைமுறைகளுக்கு முற்றிலும் முரணாக, பொறுப்புக்களை தங்களுக்கு தாங்களே எடுத்துக்கொண்டு களமிறங்கியுள்ள இவர்கள், மாவீரர் தின ஏற்பாடுகளில் கலந்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கையை சிதைக்கும் நடவடிக்கையில் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

தாயகத்தில் விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்கள் இயங்கிவந்த காலங்களில் மாவீரர் தின ஏற்பாடுகளை முன்னெடுத்து வந்தவர்களே, இப்போதும் அதனைத் தொடர்ந்துகொண்டு இருக்கின்றார்கள். முள்ளிவாய்க்கால் இனப்பேரழிவு இடம்பெற்று முடிந்ததன் பின்னர் வந்துபோன கடந்த இரண்டு மாவீரர் நிகழ்வுகளையும் வழமைபோன்று அவர்களே நடத்தியும் முடித்துள்ளார்கள்.

இந்த நிலையில் தற்போது மாவீரர் நாளை நடத்தும் உரிமையை கையிலெடுக்கத் துடிக்கும் இந்தப் புதியவர்கள் யார்? எதற்காக இத்தனை குழப்பங்களையும் இவர்கள் வேண்டுமென்றே ஏற்படுத்துகின்றார்கள் என்ற கேள்வி பரவலாகவே எழுந்துள்ளது. தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான மாவீரர் நாளை, ஏதோ நிதி வசூலிப்பதற்காக நடத்தப்படும் நிகழ்வுபோலவும், வசூலிக்கப்படும் நிதிக்கு தாங்கள் கணக்கு காண்பிக்கப்போவதாகவும் இவர்கள் கூறிவருவதானது, சிறீலங்காவின் குற்றச்சாட்டிற்கும் இவர்களின் கருத்திற்கும் இடையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்பதையே உணர்த்தி வருகின்றது.

தாயகத்தில் மாவீரர் நிகழ்வுகளை அழித்துவிட்ட மமதையில் நிற்கும் சிங்கள தேசம், புலம்பெயர்ந்த தமிழர்களையும் வெற்றிகொள்ள நினைக்கின்றது. பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலேயே மாவீரர் தின நிகழ்வுகளில் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்று திரண்டு இந்த உலகத்திற்கு தமிழர்களின் ஒற்றுமையையும், எழுச்சியையும் மீண்டும் மீண்டும் அடையாளப்படுத்தி வருகின்றார்கள்.

எனவே, குறிப்பாக இந்த நாடுகளில் ஒன்றுதிரண்டு எழுச்சி கொள்ளும் தமிழினத்தை முதலில் அடக்கிவிடத் துடிக்கின்றது சிங்களம். அதனால்தான், இந்த மூன்று நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகளை குழப்பும் நடவடிக்கைகள் மிக அதிகளவில் ஈடுபட்டுள்ளதை உணரமுடியும்.

சிங்கள தேசத்தின் மிகப்பெரும் திட்டமிடல் இது. தமிழினத்தின் தேசிய எழுச்சியை அழிக்கும் இன்னொரு முள்ளிவாய்க்கால் திட்டம் என்றே கொள்ளலாம். இதற்கும் தமிழ் மக்கள் நாம் பலிக்கடா ஆவோமா? ஏன்? எதற்கு? யார்? எப்படி?… என்ற கேள்விகளை தங்களுக்குள் தாங்களே எழுப்பி மக்கள்தான் சரியான முடிவுகளை எடுக்கவேண்டும்.
தமிழினம் எழுச்சி கொள்ளவேண்டும், அதன் மூலம் தமிழினம் விடுதலை பெறவேண்டும் என்பதுதான் தியாகி திலீபன் முதல் மண்ணுக்காக விதையாகி வீழ்ந்த ஒவ்வொரு மாவீரனும் கண்ட கனவு. எங்களுக்கான கனவுகளைச் சுமந்து, தலைவன் காட்டிய வழியில் உறுதி தளராது நம்பிக்கையோடு நடந்தவர்கள் எங்கள் மாவீரர்கள். அவர்களின் வழியில் நடப்பதுவே நாங்கள் அவர்களுக்கு வழங்கும் கௌரவமாக, நன்றிக்கடனாக எங்கள் கடமையாக இருக்கமுடியும்.

– ஈழமுரசு

 

நமது மாவீரர்கள் நினைவாக ……..Fallen in the cause of the free‏

நமது மாவீரர்கள் நினைவாக ……..

நவெம்பர் 27ஆம் திகதி நாம் நமது மதிப்புக்குரிய மாவீரர்களை நினைவு கூர்கிறோம். சென்ற மே மாதப் பேரழிவின் பின்பாக வரும் மாவீரர்நாள் என்பதினால் அது நமது தேசம், இனம் தழுவிய சோகதினமாகவும் அமைகிறது. ஈழத்தமிழர்கள் பெரிய இழப்புகளைச் சந்தித்தபோது எங்களுக்கு தம் ஆதரவை வழங்குவதற்காக உயிர்த்தியாகம் செய்த தமிழகஉறவுகள் முத்துக்குமரன்,ரவிச்சந்திரன்,தமிழ்வேந்தன், சிவப்பிரகாசம் …..

போன்றோர்,ஜெனிவாவில் உயிர்த்தியாகம் செய்த இங்கிலாந்துத் தமிழர் முருகதாசன் என்போரின் தியாகவேள்விகளால் இந்த மாவீரர்நாள் உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் எல்லோருக்குமுரிய நினைவுநாளாகவும்,வழிபாட்டுநாளாகவும் உயர்வும் ஏற்றமும் பெறுவது விசேட கவனிப்புக்குரியது.

உலகெங்கும் கொண்டாடப்பெறும் தமிழரின் மாவீரர்நாள் என்றதும் அண்மையில் மேற்குநாடுகள் சிறப்பாகக் கொண்டாடிய நவெம்பர் 11 நினைவுநாள் பற்றிய எண்ணங்கள் மேலெழும்புகின்றன.மேற்குநாட்டினர் முதலாவது உலகப்போரிலிருந்து அதன்பின்பாக இடம்பெற்ற எல்லாப்போர்களிலும் உயிர்நீத்த தமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக அந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.

தலைவர்களும் மக்களும் ஒன்றாகக்கூடி மறைந்த வீரர்களுக்கு,அவர்களின் உயிர்த்தியாகங்களுக்கு மதிப்பளித்து நன்றிசெலுத்தும் அவர்களின் மரபை,சிறப்பை அது காட்டுகிறது. ஆனால் நம்மிடம் அந்த மரபு இன்னும் உறுதியானவகையில் ஏற்படுத்தப்படவில்லை..இதற்கு என்ன காரணம்?

ஏன் நாம் ஆளப்படுவோராக,அடிமைகளாக,அகதிகளாக அலைந்து திரிகிறோம்?

இந்த மேற்குநாடுகளுக்கு வந்துள்ள நாங்களாவது நமது கண்களை அகலத்திறந்து நாம் புலம்பெயர்ந்த நாடுகளில் நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது?

ஏன் அவை அப்படி நடக்கின்றன என்று ஆராய்கிறோமா?

அவற்றிலிருந்து ஏதாவது பாடங்களைப் படித்துக் கொள்கிறோமா?

இவைபற்றி நாம் சிந்தித்து நம்வாழ்வில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தாலொழிய நமக்கு விடுதலையோ விமோசனமோ கிடைக்காது.

நமது இலங்கை,இந்தியா போன்ற நாடுகளை முன்பு ஆண்ட இங்கிலாந்துதேசம் அதன் பரப்பைப்போல் நூற்றியிருபத்தைந்து[125] மடங்கான பரப்புடைய பிரித்தானியப்பேரரசைக் கட்டி ஆண்டது என்பது நமக்குத் தெரியுமா? ஐக்கிய அமெரிக்கஅரசு, கனடா போன்ற வட அமெரிக்க நாடுகளும் சிறிய இங்கிலாந்தின் ஆட்சியில் இருந்தன என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.”An oak planted in a flowerpot” [ பூத்தொட்டியில் நடப்பட்ட ஆலமரம்] என அது வர்ணிக்கப்பட்டது.

இத்தகைய சிறப்பை ஆங்கிலேயர்கள் அடைவதற்கு அவர்களிடம் காணப்பட்ட தீவிரமானதேசப்பற்று,வீரம் மிகுந்த தன்னம்பிக்கை என்பவையே காரணமாகும்.

நம்மிடம் நமது அடிமைமோகம், குறுகியசுயநலம்,பொறாமை என்பன நீங்கி தேசப்பற்று,மானஉணர்வு,தன்னம்பிக்கை,ஒற்றுமை என்பன எப்போது வரும்?

அப்போதுதான் போர்க்குணமும் வீரமும் மிகுந்த மறவர்களாக, நாம் நமது மாவீரர்களை நமது மதிப்புக்குரிய காவல்தெய்வங்களாக வாழ்த்தி வழிபடும் வழக்கமுடையவர்களாவோம்.

உலகம் வியக்கும் மிகப்பெரிய பிரித்தானியப்பேரரசை உருவாக்கி ஆண்ட ஆங்கிலேயர்கள் அதற்குக் காரணமாக இருந்த தமது வீரப்புதல்வர்களைஎப்படிப்போற்றினார்கள், மதிப்பளித்தார்கள் என்பது நமக்கு ஒரு முன்மாதிரியாக,வழிகாட்டியாக அமையும். காலத்தால் அழியாத,எங்கும் எடுத்துச்செல்லக்கூடிய,உயிர்ப்பும்,உணர்வும் கொண்ட நினைவுச்சின்னங்களாக,ஆங்கிலக்கவிஞர்கள் பல கவிதைகளை ஆக்கியுள்ளார்கள்.வீரத்திற்குக் காட்டும் பெருமதிப்பை வெளிப்படுத்துவதாக அவைகள் அமைந்துள்ளன.அவற்றுள் தெரிந்தெடுத்த சில கவிதைகளையும்,சில அழகான வரிகளையும் கீழே பார்ப்போம்.

With proud thanksgiving,a mother for her children,
England mourns for her dead across the sea.
Flesh of her flesh they were,spirit of her spirit,
Fallen in the cause of the free.
…………………..
They shall grow not old,as we that are left grow old:
Age shall not weary them,nor the years condemn.
At the going down of the sun and in the morning
We will remember them.
…………..
But where our desires are and our hopes profound,
Felt as a well-spring that is hidden from sight,
To the innermost heart of their own land they are known
As the stars are known to the night;
As the stars that shall be bright when we are dust,
Moving in marches upon the heavenly plain,
As the stars that are starry in the time of our darkness,
To the end,to the end,they remain.
— ‘For the Fallen’ by Laurence Binyon[1628 – 1688].

கடல் கடந்து சென்று உயிர்நீத்த தன் பிள்ளைகளுக்காக இங்கிலாந்துமாதா அஞ்சலி செலுத்துகிறாள்.அவர்களுக்கு பெருமிதத்துடன் நன்றி செலுத்துகிறாள்.விடுதலைக்காக வீழ்ந்துபட்ட அவர்கள், இங்கிலாந்துமாதாவின் சதையின் சதையாக,ஆத்மாவின் ஆத்மாவாக இருப்பவர்கள்.இங்கு எஞ்சியிருக்கும் நாம் வயதுபோய் முதுமையடைவதுபோல் அவர்கள் முதுமையடைவதில்லை;காலத்தால் அவர்களை மங்கவைக்கமுடியாது.ஆண்டுகள் பல சென்றாலும் அவர்கள் அழிவதில்லை;கதிரவன் மறையும்போதும் காலை புலரும்போதும் நாங்கள் அவர்களை நினைப்போம்.

எமது ஆசைகள்,ஆழமான ஆர்வங்கள், கண்ணுக்குத்தெரியாத ஊற்றுப்போன்று உணரப்படுவது போல்,இரவுக்குத்தெரிந்த அதன் நட்சத்திரங்களைப்போல்,அவர்கள் தங்கள் தாய்நாட்டின் அந்தராத்மவுக்கு அறிமுகமானவர்கள்;

நாம் மரணித்து மண்ணாகும்போதும் நட்சத்திரங்களாகப் பிரகாசிப்பவர்கள்,சுவர்க்கவெளியில் அணிவகுத்துச் செல்பவர்கள்,எமக்கு இருளான காலத்திலும் விண்மீன்களாக ஒளிர்பவர்கள், அந்த இறுதி முடிவு காலம்வரை அவர்கள் நிலைத்திருப்பார்கள்.

Here dead lie we because we did not choose
To live and shame the land from which we sprung.
Life,to be sure,is nothing much to lose;
But young men think it is,and we were young.
— ‘Here dead lie we because we did not choose’
by A.E.Housman [1859 – 1936].

நாம் பிறந்த தாய்மண்ணுக்கு தலைக்குனிவு ஏற்படுத்தி வாழவிரும்பாததால் இங்கு இறந்தவர்களாகிக் கிடக்கிறோம்.உயிரை இழப்பதென்பது,நிச்சயமாக,பெரிய விடயமல்ல,ஆனால் இளம்வயதினர் அதனைப் பெரிய விடயமாகக் கருதுகிறார்கள் நாங்களும் இளம் வயதினர்தான்.

In our heart of hearts believing
Victory crowns the just,
And that braggarts must
Surely bite the dust,
Press we to the field ungrieving,
In our heart of hearts believing
Victory crowns the just.
Hence the faith and fire within us
Men who march away.
— ‘Men who march away’ by Thomas Hardy [1840 – 1928]

நீதி வெல்லுமென இதயத்தின் இதயத்தில் நாங்கள் நம்பினோம்;வீண்பெருமை பேசுபவர்கள் மண்கவ்வுவார்கள் எனக்கருதி கவலையின்றிக் களத்தில் நாம் முன்சென்றோம். நீதிவெல்லுமென இதயத்தின் ஆழத்தில் நாம் நம்பினோம்;அந்த நம்பிக்கையும் நெருப்பும் எம்முள் எரிந்துகொண்டிருந்ததால் அணிவகுத்து முன்னேறினோம் நாம்.

When the blast of war blows in our ears
Then imitate the action of the tiger;
Stiffen the sinews,summon up the blood,
Disguise fair nature with hard-favoured rage;
Then lend the eye a terrible aspect;
…………….
On,on you noble English,
Whose blood is fet from fathers of war-proof-
Fathers that,like so many Alexanders,
……………..
Dishonour not your mothers; now attest
That those whom you called fathers did beget you!
— ‘Henry V’ by William Shakespeare [1564 – 1616]

உலகப்புகழ்பெற்ற ஆங்கில நாடகாசிரியர்,கவிஞர் ஷேக்ஸ்பியரின் தெரிந்தெடுத்த சில வரிகள் இவை: போர்முரசின் ஒலி நம் காதில் வீழ்ந்ததும் புலிபோல் செயற்படுங்கள்;உடம்பில் முறுக்கு ஏறட்டும்;இரத்தம் கொதிக்கட்டும்;சாந்தகுணம் மறைந்து சீறும்சினம் வெளிப்படட்டும்;பின் கண்களில் கொடுமை கொப்பளிக்கட்டும்;

பெருமகனான ஆங்கிலேயனே,தொடர்ந்து முன்னேசெல்,போருக்கு அஞசாத தந்தையரின் இரத்தம் கொண்டவனே,பல அலெக்சாண்டரைப் போன்ற தந்தையர்களைப்பெற்றவர்களே;
உங்கள் தாய்க்கு தலைக்குனிவை ஏற்படுத்தாதீர்கள்,யாரைத் தந்தை என்று அழைத்தீரோ அவரின் பிள்ளை என்பதை நிலைநிறுத்துங்கள்.

முழுமையான பாடலில் இதுபோன்ற வீர உணர்வை ஊட்டும் பலவரிகள் நிறைந்துள்ளன.விரிவஞ்சி சிலவற்றை மட்டுமே தந்துள்ளேன்.

To every man upon this earth
Death cometh soon or late.
And how can man die better
Than facing fearful odds,
For the ashes of his fathers,
And the temples of his Gods,
………………….
For Romans in Rome’s quarrel
Spared neither land nor gold,
Nor son nor wife,nor limb nor life,
In the brave days of old.
–‘Horatius’ by Lord Macaulay [1800 – 1859]

எல்லாமனிதருக்கும் இறப்பு இன்றோ நாளையோ வரும்;அச்சமூட்டும் தடைகளையும் எதிர்த்து மரணிப்பதைவிட மேலானது எது? நம் தந்தையர்களின் சாம்பலையும் நம் ஆண்டவனின் ஆலயங்களையும் பேண அதைச்செய்வோம்.

வீரம் மிகுந்த அந்தக்காலத்தில் உரோமாபுரிக்கான போரில் ரோமர்கள்,காணிநிலத்தையோ,பொன்னையோ,மகனையோ,மனைவியையோ, உடலையோ,உயிரையோ ஒருபொருட்டாகக் கருதுவதில்லை.

We are the Dead. Short days ago
We lived,felt dawn,saw sun set glow,
Loved and were loved,and now we lie
In Flanders fields.
Take up our quarrel with the foe:
To you from failing hands we throw
The torch;be yours to hold it high.
If ye break faith with us who die
We shall not sleep,
— ‘In Flanders fields’ by John McCrae [1872 – 1918]

நாங்கள்தான் அந்த இறந்தவர்கள்; சில நாட்கள் முன்பாக நாங்கள் உயிருடன் இருந்தோம்;சூரிய உதயத்தை உணர்ந்தோம்;மறையும் சூரியனின் வண்ணம் பார்த்தோம்;நேசித்தோம்,நேசிக்கப்பட்டோம்;

இப்போதோ இந்தக் களத்தில் இறந்துகிடக்கிறோம். எதிரியுடன் எங்கள் போரைத்தொடருங்கள்;சோர்ந்திடும் கைகளால் இந்தச்சுடரை உங்களிடம் ஒப்படைக்கிறோம்;அதனைத் தூக்கிப் பிடிப்பது உங்கள் கடன்; இறந்த எங்களுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்தால் எங்களால் நிம்மதியாகத் தூங்கமுடியாது.

If I should die,think only this of me:
That there’s some corner of a foreign field
That is forever England.There shall be
In that rich earth a richer dust concealed;
A dust whom England bore,shaped,made aware,
Gave,once,her flowers to love,her ways to roam,
A body of England’s,breathing English air
Washed by the rivers,blessed by suns of home.
— ‘The Soldier’ by Rupert Brooke [1887 – 1915]

[Rupert Brooke was educated at Rugby and King’s College’
Cambridge;Fellow of his College;Brilliant Undergraduate
with Patriotism and anxious to die for his country;
Died while in Service;Only 28 years old.]

நான் இறந்தால் என்னைப்பற்றி இதைமட்டும் நினைவிலிருத்துங்கள்; அந்நியநாட்டின் ஏதோ ஒரு மூலை –அது எப்போதும் இங்கிலாந்திற்கே உரியது; அந்தச் சிறப்பான நிலத்தில் அதைவிடச் சிறப்பான சாம்பல் மறைந்துள்ளது;இங்கிலாந்து பெற்றுப்பேணி உருவாக்கி உணர்வூட்டிய சாம்பல் அது

இங்கிலாந்தின் மலர்களை நேசித்தவன்,அதன் தெருக்களில் அலைந்து திரிந்தவன்;இங்கிலாந்துக்குரிய உடம்பு,அதன் காற்றைச் சுவாசித்தவன்;அதன் ஆறுகளில் நீராடியவன்,அதன் சூரிய ஒளியில் காயும் பேறுபெற்றவன்.

இக்கவிஞர் முதலாவது உலகப்போரில் இறந்தவர். 28வயதுவரை மட்டுமே வாழ்ந்தவர்.மேலே குறிக்கப்பட்டுள்ளவாறு கல்வியில் மிகுந்த சிறப்புடன் விளங்கியவர்.

இவரைப்போன்றே Robert Palmer என்ற கவிஞரும் முதலாம் உலகப்போரில் இறந்தவர்;கல்வியில் மிகச்சிறப்பாக விளங்கியவர். Robert Palmer[1888 – 1916] died in action.RP won Scholarship to University College,Oxford;A First in Honours,Deeply Religious;
President,Oxford Union,University Church Union;Second son of the Second Earl of Selborne.

கல்வியில் சிறந்த இவர்கள் தம் தாய்நாட்டிற்காக,அதன் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயங்காத இளைஞர்கள்.வசதியான உயர்குடும்பத்தில் பிறந்தபோதும் தேசப்பற்று மிக்கவர்கள்.அதனாலேயே அவர்கள் ஆள்பவர்களாக,ஆதிக்கம் செலுத்துபவர்களாக விளங்குகிறார்கள்.

How many men of England died
To prove they were not dead.
–‘For a War Memorial’ by G.K.Chesterton [1874 -1936].

அழகான இருவரிகள்;இங்கிலாந்து மக்கள் வீரமற்ற நடைப்பிணங்களல்ல என நிரூபிக்க எத்தனை வீரர்கள் உயிரை இழந்தனர்? என்று வினவுகிறார் கவிஞர்.அதாவது அந்தச்சமூகம் உயிருடன் — உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை நிரூபிக்க தமது உயிரைக் கொடுத்தவர்கள் அவர்கள் எனப் புகழ்கிறார்.

எமது மாவீரர்களும் தமிழீழம் உயிருடன்,உயிர்ப்புடன்,வீர, மானஉணர்வுடன்,விடுதலை வேட்கையுடன் உள்ளது என்பதை நிரூபிக்க உயிர்த்தியாகம் செய்தவர்கள்.

What though the field be lost?
All is not lost; th’ unconquerable Will,
And study of revenge,immortal hate,
And courage never to submit or yield;
And what is else not to be overcome?
— ‘Paradise Lost’ by John Milton [1608 – 1674]

நிலத்தை இழந்துவிட்டால் என்ன? எல்லாமே இழக்கப்படவில்லை; வெல்லமுடியாத நெஞ்சுரம் [மன உறுதி], பழிவாங்கும் பண்பு, அழியாத பகைமை, பணிவோ விட்டுக்கொடுப்போ இல்லாத வீரம்,என்பவை வழியாக வேறு எவற்றைத்தான் வென்றடையமுடியாது?

சிறந்த கவிஞரான மில்டனின் இந்தக்கூற்று பெரிய இழப்பைச் சந்தித்துள்ள நமக்கு ஆறுதலும் தேறுதலும் தருவதாகும். நம்மவர்கள் தமது சோர்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு,அமைப்புரீதியாக ஒன்றுபட்டு நெஞ்சுரத்துடன்,உறுதியும் உரமும் கொண்டவர்களாக உழைப்பின் நாம் மீண்டும் எழுச்சி பெறலாம். நமது மாவீரர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய பெரிய அஞ்சலி, நன்றிக்கடன் அதுவேயாகும்.

நமது எதிர்காலச்சுபீட்சமும்,விடுதலையும் அவற்றிலேயே தங்கியுள்ளன.அந்த 125மடங்கான பிரித்தானியப் பேரரசைக் கட்டி ஆண்ட ஆங்கிலேயர்கள் எப்படி வீரத்தைப் போற்றினார்கள்,தமது மாவீரர்களுக்கு மதிப்புக்கொடுத்தார்கள் என்பது நமக்கு சிறந்த முன்மாதிரியாக அமையட்டும்.காலையும் மாலையும் பிறபொழுதிலும் அவர்களை மனதில் நினைந்து நினைந்து அதன்மூலம் நமக்கும், நமது இளம்தலைமுறையினருக்கும் வீர உணர்வையும்,விடுதலைஉணர்வையும் ஊட்டுவோம்.

எமது மாவீரர்நாளின் போது, ஆங்கிலக்கவிஞர்கள் வீரத்தை,வீரர்களை எப்படிப் புகழ்ந்துள்ளார்கள் என்பதைப் பார்ப்போம்.ஆங்கிலக்கவிதைகள்,அவற்றின் தமிழ்வடிவம் இரண்டும் இடம்பெறுவதால் நீளமாக அமைவது தவிர்க்கமுடியாதது.அவர்களின் கருத்துகள் சில உங்கள் உள்ளங்களையும் தொடலாம்,உணர்வூட்டலாம். இதன் பிரதியை அறிமுகமான அனைவருக்கும் அனுப்புங்கள்.சங்கிலித்தொடர் போன்று இந்த கருத்துப்பரப்பல் தொடர்ந்து செல்லட்டும்.

மாவீரர் நாள் கையேடு

http://www.scribd.com/doc/44107320/Maaveerar-day-catalog

1989ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட மாவீரர் நாள் 1990 ம் ஆண்டு தமிழீழ மக்களால் இயன்றளவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நினைவு கூரப்பட்டது. மாவீரர் நாள் ஒரு சோக நிகழ்வு அல்ல அது ஒரு தேசத்தின் மலரும் நினைவுகள் எங்கள் விரர்களை போற்றும் நிகழ்வு, எம் தேசத்தை காக்க புறப்படுவதற்காக ஆயிரம் ஆயிரம் போராளிகளால் உறுதி எடுக்கப்படும் நிகழ்வு என தேசியத்தலைவரால் கூறப்பட்டது. அந்த வகையில் எங்கள் காவல் தெய்வங்களுக்காக புதிய கல்லறை தோட்டங்களை நிறுவி, அதனுள்ளே அவர்களை உறங்கவைத்து, அழகு பார்த்து அவர்கள் மீது உறுதியெடுத்து, அவர்கள் நினைவுகளை சுமந்து மக்களும் போராளிகளும் பயணிப்பதற்கான ஆலயமாக துயிலும் இல்லங்கள் உருவெடுத்தன.

1990 ம் ஆண்டின் இறுதி பகுதியில் துயிலும் இல்ல கட்டுமானங்கள் தொடங்கினாலும் 1991 ம் ஆண்டு முற்பகுதியில் பிரபல வரைபட கலைஞர் (பிரித்தானியா, மத்திய கிழக்கு , இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட ஒரு நாட்டு பற்றாளர் தாயகத்திற்கு வந்து தேசிய தலைவரின் சிந்தனைக்கு அமைவாக துயிலும் இல்லத்தினை வரைந்து மாதிரி செய்து கொண்டிருந்தார் அதன் படி கட்டுமான பணிகளை போராளிகள் மக்கள் என அனைவரும் ஆரம்பித்தனர்.

இந்த கலைஞருக்கு கொடுத்த வேலை பிடித்து போக தனது வெளி நாட்டு வாழ்க்கையினை கைவிட்டு இதே வேலையில் ஊறிவிட்டார். கிளினொச்சி இராணுவத்தினரால் இந்த வருடம் கைப்பற்றப்படும் வரை அவர் தாயகத்தில்தான் இருந்தார் என்பதனை நாம் கட்டாயம் நினைவு படுத்தவேண்டும்.

இவ்வாறு தமிழீழ காவல்தெய்வங்களுக்காக அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட இல்லங்களில் ஏற்கனவே சண்டை நடந்த இடங்களில் புதைக்கப்பட்ட மாவீரர்களை அகழ்ந்தெடுத்து புதிய இல்லங்களுக்கு கொண்டுவரும் முடிவுகளும் எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்திய இராணுவ காலப்பகுதியில் சண்டைகளில் மாண்டுபோன, அந்த இடங்களிலேயே புதைக்கப்பட்ட மாவீரர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கோப்பாய், வடமராட்சி, மற்றும் வன்னி ஆகிய இடங்களில் துயிலும் இல்லங்களுக்கு கொண்டுவரப்பட்டனர்.

ஆரம்பத்தில்பிராந்தியங்களுக்கு ஒரு துயிலும் இல்லமாக இருந்து பின்னர் மாவட்டங்களுக்கு ஒன்று என விஸ்தரிக்கப்பட்டது அதன் பின்னர் மேலும் பல இல்லங்கள் பிரதேச ரீதியாக அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 1989 அம் ஆண்டு மாவீரர் நாளில் நினைவு கூரப்பட்ட 1657 மாவீரர்களது வித்துடல்களை துயிலும் இல்லங்களுக்கு கொண்டுவரும் பணிகள் 1991 இல் தொடங்கப்பட்டாலும் 2005 அம் ஆண்டுவரை அவை முற்றாக இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு 1991 ம் ஆண்டு யாழ் குடா நாடு எங்கும் எழிச்சிகோலமாக இருந்த இந்த நாட்களில் துயிலும் இல்ல பாடலாக “ மொழியாகி எங்கள் மூச்சாகி…….. என தொடங்கி தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தணப் பேழைகளே” என்ற பாடல் புதுவை இரத்தினதுரை அவரின் கவிகளில் இசைவாணர் கண்ணனால் இசையூட்டப்பட்ட பாடல் அறிமுகம் செய்யப்பட்டது. மேஜர் சிட்டு, கனிமொழி, வர்ண ராமேஸ்வரன் ஆகியோர் அதனை பாடியிருந்தனர். அன்று தொடக்கம் இந்த பாடல் ஒவ்வொரு மாவீரன் விதக்கப்படும் போதும் இசைக்கப்படும் எனப்து குறிப்பிடதக்கது.

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! – இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் – உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் – எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

தமிழர்களை தலை நிமிர்த்திய தலைவன் பிரபாகரன் காணொளி


தேசியத் தலைவரின் 50வது அகவையை ஒட்டி நிதர்சனத்தினால் தயாரிக்கப்பட்ட தமிழர்களின் நிமிர்வு முழுமையான காணொளி

பிரபல தமிழ் உணர்வாளர்களின் செவ்விகளோடு

Up ↑