Search

Eelamaravar

Eelamaravar

Month

March 2011

வரலாறுகளில் வான்படை கண்ட முதல் தமிழன் நாள்

http://puliveeram.files.wordpress.com/2008/09/1195275806_eelamheros_com_well1.jpg



தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படைப்பலத்தில் தரைப்படை, கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக வான்படை என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள் இந்த நாள்.

இந் நாள் அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான ஒரு மரபுவழி குண்டு வீச்சு தாக்குதலுடன் தமது முதலாவது வான் தாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்திய நாள் இன்று…!!

வான்புலிகள் (Tamileelam Air Force – TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு.

வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், ‘வானோடி’ என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர். வான்புலிகள் வரலாறு 85, 86 காலப் பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்கதொடங்கி விட்டார்கள்.

செப்டம்பர் 27, 1998 – 1998ம் ஆண்டு மாவீரர்தின உரையின்போது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் வான்புலிப் படைப்பிரிவு தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அந்நிகழ்வின்போது வான்புலிகளுக்கு சொந்தமான வான்கலத்திலிருந்து பூக்கள் தூவப்பட்டதாக நேரில்பார்த்தவர்களுடைய அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

*2000 – ‘வான்புலிகள் ஆண்டு’ என தமிழீழ விடுதலைப்புலிகளால் அறிவிக்கப்பட்டது*









கேணல் சங்கர் என்று அழைக்கப்பட்ட வித்தியாலிங்கம் சொர்னலிங்கம் தலைமையில் வான்புலிகள் பிரிவுதொடங்கப்பட்டது. டிசம்பர் 2001 அவர் கொல்லப்படும் வரை வான்புலிகள் பிரிவின் தலைவராக செயற்பட்டார்.

ஜனவரி 26, 2005 – இரணைமடு விமான ஓடுதளம் பற்றிய இலங்கை இராணுவ அறிக்கை

ஆகஸ்டு 11, 2006 – யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி வான்படைத்தளம் (இலங்கை இராணுவத்தினருக்கு சொந்தமானது) வான்புலிகளால் வான்கலங்களை பயன்படுத்தித் தாக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற ஊகங்களை உருவாக்கும்படியான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மார்ச் 26, 2007 – அதிகாரப்பூர்வமாக விடுதலைப்புலிகளால் உரிமை ஏற்கப்பட்ட முதலாவது வான் புலித் தாக்குதல் 26 மார்ச் 2007 இல் இலங்கை கட்டுநாயகா விமானப்படைத்தளத்தின் மீது நடத்தப்பட்டது.

26 ஏப்ரல் 24, 2007: பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தின.

ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ளகொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய்குதங்களையும் குண்டு வீசி தாக்கின.

ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய்குதங்களையும் குண்டு வீசி தாக்கின.

அக்டோபர் 22, 2007 – எல்லாளன் நடவடிக்கை 2007: அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது அதிகாலை வான், மற்றும் தரை என நடத்திய இரு முனைத் தாக்குதலில் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டு 13 படையினர்கொல்லப்பட்டனர்.

வான்புலிகள் நடத்திய தாக்குதல், வெளியிடப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவை அடிப்படையில் புலிகளிடம் 2-5 இலகுதர வான்கலங்கள் உண்டு எனக்கருதப்படுகிறது.

இவை செக் நாட்டு இசட்-143 வகை விமானங்களாக இருக்கலாம் என்று இலங்கை அரசு கருதுகின்றது. இவை தவிர வான்புலிகளிடம் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய பிற வான்கலங்களும், உலங்குவானூர்திகளும் இருக்கலாம்.

முதல் தாக்குதலில் வான்கலங்களேடு பொருத்தப்பட்ட சில இணைப்புப் பாகங்கள், விமான ஓட்டிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலத்திரனிய குண்டு விடுவி மற்றும் குண்டுகள் ஆகியவை உள்ளூர் தயாரிப்புக்கள்.

இவை விமானங்கள் பற்றிய தொழில்நுட்ப வளம் புலிகளிடம் இருப்பதைக் காட்டுகின்றது. கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது வீசப்பட்ட 4 குண்டுகளில் 1 வெடிக்கவில்லை. வெடிக்காத ஒன்றை ஆராய்ந்த இலங்கை அரச தரப்பினர் இவற்றில் பல நூற்றுக்கணக்கான உருக்கு உருளைகள் கொண்ட உள்ளூர்த் தயாரிப்பென சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் இராணுவப் புலனாய்வு ஆசிரியர் இக்பால் அத்காஸ் தெரிவித்தார்.

வான்கலத்தை இரவில் ஓட்டிச் சென்று ஓர் இலக்கை அழிக்கும் திறன் இலகுவில் பெறக்கூடிய செயற்திறன் இல்லை. மாறாக, நீண்ட கால படிப்பறிவும், பட்டறிவும் தேவை. வான்புலிகளின் இத்திறன் கட்டுனாயக்க விமானத் தளத் தாக்குதலுக்கு அடுத்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது

தொடக்கத்தில், வான்புலிகள் யப்பானிய கமிகாச போன்று தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தலாம் என்று இராணுவ ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் தமது முதல் தாக்குதலில் இரவில் சென்று ஒரு இலக்கைதாக்கி மீண்டதன் மூலம் இவர்களின் தாக்குதல் திறனும் முறையும் தற்கொலைத் தாக்குதல்களாக மட்டுமே அமையும் என்ற கருத்தை பொய்ப்பித்துள்ளது.

விமானம் வாங்குவதில் இருக்கும் செலவு, விமான ஓட்டிகளாக பயிற்சி பெறுவதில் இருக்கும் சிரமம் ஆகியவற்றைகருத்தில் கொண்டு தற்கொலைத் தாக்குதல்கள் கடைசி கட்ட நடவடிக்கைகளாகவே இடம்பெறலாம் என்று தற்போது கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் பிளிற்ஸ்கிறீக் முறையான தாக்குதல் நடவடிக்கைகளிலும் வான்புலிகள் ஈடுபடலாம் என்று கருதப்படுகின்றது.

வான்புலிகளின் தோற்றத்துக்கு தலைமை ஏற்றவராக கருதப்படும் கேணல் சங்கர் “சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்தார். அதன் பின்னர் கனடா சென்றஅவர், அங்கு ஏர் கனடா விமான நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றியுள்ளார்.”

வான்புலிகள் பிரான்சிலும் ஐக்கிய இராச்சியத்திலும் ஓட்டுனர் பயிற்சியைப் பெற்றிருக்கலாம் என்று பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அதாஸ் “Intelligence sources” முன்வைத்து கருத்து தெரிவித்திருக்கின்றார்.

இந்த தொழில் நுட்பத்தை மலேசியாவில் இலங்கைத் தமிழ் பின்புலத்தைக் கொண்டவரால் இயக்கப்படும் ஒருவிமான பராமரிப்புப் பயிற்சி கல்லூரியிலும் விடுதலைப் புலிகள் பெற்றிருக்கலாம் என கருத்துப்பட The Island பத்திரிகையும் Asia Tribune தகவல்கள் வெளியிட்டுள்ளன.

கடற்கரும்புலிகள் கப்டன் கலைவள்ளி ,மேஜர் நாவலன் ,மேஜர் தமிழ்மாறன்,கப்டன் வானதி ஆகியோரின் 14 ம் ஆண்டு வீரவணக்க நாள்

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும் எதிரியுடன் களமாடத்துடித்த கடற்கரும்புலிகள்.


கப்டன் கலைவள்ளி ,மேஜர் நாவலன் ,மேஜர் தமிழ்மாறன் , கப்டன் வானதி ஆகிய எங்கள் வீரவேங்கைகள் எங்கள் தலைவனின் வழிகாட்டலில் 24.03.1997 அன்று எதிரியின் கடற்கலம் ஒன்று முல்லைத்தீவை நோக்கி வந்த அந்த கடற்கலத்தை தாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.

மேயர் தமிழ்மாறன்

கப்டன் வானதி

மேயர் நாவலன்

கப்டன் கலைவள்ளி

எதிரியின் கடற்கலத்தை எதிர்பார்த்து கடற் புலிகளுடன் காத்திருந்து கடலில் சண்டையிட்டு எதிரியின் கடற்கலத்தை சேதமாக்கி தமிழீழ வீரத்தின் வரலாற்று சொந்தமாக வீரமரணம் அடைந்தார்கள்.


இந்த மாவீரச் செல்வங்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

கரும்புலி மேஜர் தனுசன் ,கரும்புலி மேஜர் சுதாஜினி வீரவணக்கம்



திருகோணமலையில் நாளும் துயரச் செய்தியோடு விடியும் கிராமங்களில் ஒன்றில்தான் தனுசன் பிறந்தான். நாளுக்கு நாள் சுற்றிவளைப்புக்கள், கைதுகள், சித்திரவதைகள் என்று அந்த ஊரிற்கே பழகிப்போன அவலங்கள் அது.

நித்தம் ஒரு வீட்டில் ஒப்பாரி கேட்கும். சின்ன வயதில் காயங்கள் மேல் காயங்களாக அவனில் பதிந்த காட்சிகள் ஒவ்வொன்றும் மாறாத தளும்பாக என்றும் அவனின் நினைவில் இருந்தன. அந்த நினைவுகளிலிருந்து அவன் தன்னை மீட்டுக்கொள்ள முடியாதவனாய் அலைந்தான். அவன் சிந்திக்கத் தொடங்கியபோது அந்த நாட்கள் மிகக் கொடுமையானதாக இருந்தன. என்றாலும் அவனால் அம்மாவை மீறி எதையுமே செய்ய முடியாதவனாய் மனசிற்குள்ளேயே அடக்கிக் கொண்டான்.

அம்மாவிற்குத் தெரியாது மௌனமாய் ஒரு எரிமலை குமுறிக் கொள்வது. அவள் பாவம். எப்போதும் பிள்ளைகளுக்காகவே தன்னை தேய்ப்பதில் திருப்தி கண்டுகொண்டிருந்தாள். அவளைப் பொறுத்தவரை தன் எல்லாச் செல்வங்களும் தன்கூடவே இருந்துவிட வேண்டும் என்றதுதான் ஆசை.

”என்ர குஞ்சுகள் எல்லாம் என் னோடயே இருக்கவேணும்” என்று அவள் அணைக்கிறபோது, அவளின் மனதிற்கள் ஓராயிரம் கனவுகள் சிறகு விரிக்கும். அவளைப் பொறுத்தவரையில் தன்னைவிட்டு பிள்ளைகள் பிரிந்துவிடக் கூடாது என்ற நினைப்பு மட்டுமே இருந்தது.

“அண்ணா ஊருக்குவாற இயக்க அண்ணாக்களோட கதைக்கிறான்” என்று அவளின் சின்னமகன் வேர்க்ககளைக்க ஓடிவந்து சொல்லுகின்ற பொழுதெல்லாம் அவள் பெரிதாகப் பதறுவதில்லை. “அவன் என்னை விட்டுட்டு போகமாட்டான்.” என்று பிள்ளை மேல் அவள் வைத்த பாசத்தினாலும் நம்பிக்கையாலும் தம்பியை அமைதிப்படுத்துவாள்.


அவளைப் பொறுத்தவரை இப்போதும் அவன் சின்னப் பிள்ளையே. ஆனால், அவனின் செயற்பாடுகளோ வேறுவிதமாய் இருந்தது.

ஒழித்து ஒழித்து வரும் போராளிகளுக்கு சாப்பாட்டுப் பொதி எடுத்துச் சென்று கொடுப்பது, அவர்கள் ஊருக் குள் சேகரித்த அரிசி, பருப்புகளை சுமந்துகொண்டு அவர்களின் முகாம் வரை செல்வது, அவர்கள் வீதி கடக்க வேவுபார்ப்பது என்று அவனது ஒவ்வொரு செயற்பாடும் பெரிதாக, தேவையானதாக இருந்தது.

ஊருக்குள் சிறு காக்காய் குருவிக்குக் கூட இவனின் செய்கை எதுவும் புரியாது. மிக அமைதியானவன். அம்மா மீதும், சொந்தங்கள் மீதும், ஊரின் மீதும் அவனது உறவு வலுப்பெற வலுப்பெற அவனது போராட்டச் சிந்தனைகள் தீவிரமானது.

அவனது அப்பா, மரங்களை அறுத்துச் சீவி வியர்வை சிந்தும் தச்சுத் தொழிலாளி. அவரைச் சுற்றி வளைப்பொன்றில் இராணுவம் கைது செய்து கொண்டுபோனது. தங்கரா சாவை பிடிச்சுக்கொண்டு போட்டாங்களாம் என்ற சேதி அந்த ஊருக்கு வழமையான ஒன்றாய் போனாலும் அவனின் வீட்டில் அது பெரும் இடியானது. அன்றாடம் உழைத்து சரா சரியாக வாழ்ந்துகொண்டிருக்கும் எளிமையான குடும்பம் இந்தத் திடீர் இழப்பால் அவதியுற்றது.

வீட்டிலே அவனையும் தம்பி யையும் வைத்துக்கொண்டு அந்தச் சீருடையணிந்த மிருகங்களிடம் அம்மா இரந்து கேட்டபோதுகூட அவைகள் இரங்கவில்லை. அவளது கண்ணீரைப் போலவே கெஞ்சுதலும் வீணாய் சிந்தப்பட்டது.
தேசியத் தலைவர் அவர்களுடன் கரும்புலி மேஜர் தனுசன்

அப்பாவைக் கொண்டுசென்று விட்டார்கள். உதைத்து அப்பாவை றக்கில் ஏற்றிய காட்சி கண் முன்னே நடந்ததால் சித்திரவதைகள் எப்பிடி இருக் கும்…. மனசு நினைவிழந் தது. அன்றிலிருந்து அந்த வீட்டில் நேரத்திற்கு அடுப்பு புகையவில்லை. அம்மா பிள்ளைகளோடு அவர்க ளின் முகாம்களுக்கு அப் பாவை விசாரித்து அலைந் தாள். எங்கேயும் இல்லை.

ஒவ்வொரு முகாம் வாசலாய் ஏறி இறங்குகின்ற அவர்களின் நம்பிக்கை இப்போதும் அப்பா இருக்கின்றார் என்றதுதான். அது உண்மையானபோது சந்தோசப்பட முடியவில்லை. அப்பா வெளவால் போல தலைகீழாக தூங்கிக்கொண்டிருந்தார். அடிகாயங்களில் இருந்து இரத்தம் கசிந்து காய்ந்து போயிருந்தது. அந்த வதைமுகாமின் சின்ன இடை வெளிக்குள்ளால் இது மட்டுமே அவ னுக்குத் தெரிந்தது. அவன் அழுதான். அப்போது சின்னப் பெடியன்.

சிறிது நாட்களில் அப்பா வந்துவிட்டார். ஆனால் அப்பாவின் இயல்புநிலை இன்னும் வந்துசேர வில்லை. முன்போல வேலைசெய்ய இயலாமல் அவரின் உடல் அடி காயங்களால் நோய்வாய்ப்பட்டிருந்தது. “அம்மாவைப் பார்க்க அண்ணாக்கள் இருக்கிறார்கள். தம்பியும் வளர்ந்து அவனும் பார்ப்பான்தானே.”
அவன் இயக்கத்திற்கு புறப்படத் தயாரான போது இப்படித்தான் அம்மாக்காக அழும் மனசை திடப்படுத்திக் கொண் டான். போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ளவே அவனொரு போராட்டம் நடத்தவேண்டியிருந்தது. எந்த நாளும் கண்ணில் படுமளவிற்கு அங்கே போராளிகள் திரிவதில்லை. எப்பவாவது இடையிடையே அங்கே உலாவும் அவனிற்குத் தெரிந்த போரா ளிகளைக் கூட சில நாட்களாகக் காண வில்லை. அவனின் காத்திருப்பு பொறு மையின் எல்லைவரை கொண்டு சென் றது. அவனும் அவனோடு இன்னும் இருவரும் போராட்டத்தில் இணை வதற்காக ஊரின் ஒதுக்குப்புறத்தில் காட்டிற்குள் தெரிந்த போராளிகளின் பாசறை ஒன்றிற்குச் செல்வதற்கு புறப் பட்டார்கள். நீண்டதூரப் பயணம். இடையிடையே பயணத்தைக் குறுக் கிட்டு மூர்க்கத்தனமாக ஓடும் ஆறுகள். எல்லாம் சலிப்பில்லாமல் கடந்துவந்து அந்த காட்டுப் பாசறையில் தன்னைப் போராளியாக்கினான். ஏற்கனவே அப்பாவின் உடல்நிலையால் உடைந்து போயிருந்த அம்மாவிற்கு இவ னின் பிரிவு தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. அவள் எதிர் பார்க்கவே இல்லை இப்படி ஒரு பிரிவை. நாளும் நாளும் அம்மா தூஙகாமலேயே பிள்ளை வருவான் என்று விழித்திருந்தாள்.

எதை எதையோ வெல்லாம் நினைத்து மனதை வருத் திக் கொண்டிருந்தாள். ஒவ்வோரு நாளி லும் அவளின் செயற்பாடுகளில் ஒவ் வொன்று குறைந்தது. தன் கருமங் களை கவனிக்காமலேயே ஏதோ மனநோய் பிடித்தவளாய் அலைந் தாள். மகன் வருவான், வரு வான் என்றே சொல்லிக்கொண்டிருந்தாள். பொன்னம்மான் பயிற்சிப் பாச றையில் பயிற்சி முடித்து பாசறை விட்டு வெளியே வந்தபோது அவனிற் கும் அம்மாவின் சேதி அதிர்ச்சியாய் த்தான் இருந்தது.

“என்ர குஞ்சுகளெல்லாம் என் னோடையே இருக்கவேணும்” கட்டிப் பிடிச்சுக்கொண்டு அடிக்கடி அம்மா சொல்வது நினைவில் பாரமானது. ஆனால் ஓடிச்சென்று பார்க்கும் சந்தர்ப்பம் இருக்கவில்லை. வன்னிநோக்கி அவர்கள் வந்து பல மாதங்கள் ஆகியிருந்தது.

அவன் கிராமத்திற்குச் சென்று அம்மாவோடு சும்மா இருந்தால் இவனிற்கு பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது. அம்மாமீது வைத்திருந்த பாசத்தை அடக்கி வீரமாக்கிக்கொண்டு அவன் நினைத்துவந்த காரியத்தைச் செய்துகொண்டிருந்தான்.

சாள்ஸ் அன் ரனி படையணியில்தான் அவனது பணிகள் அனைத்தும் ஆரம்பமானது. வன்னியில் முக்கிய ஒருசில தாக்குதல்களிற்குச் சென்றுவந்த பின் லெப். கேணல் ராகவண்ணையுடன் கட்டளை மையத்தில் அவனது போராட்டப்பணி தொடர்ந்தன.

அறிக்கை எழுதுவது, ஆயுத விபரம் எடுப்பது என்று களத்தினில் நிகழும் மாற்றங்களையும் இழப்புக் களையும் வெற்றிகளையும் ஆவணமாக்கும் முக்கியமான பணியது. அங்கேதான் ஆரம்பப் பயிற்சி முகாமிலேயே உறவான உறவொன்று தொடர்ந்துகொண்டே வந்தது.

பிரிவு என்பதில் நொந்துபோயிருந்தவனிற்கு அரவணைக்க அன்புசெய்ய சகோதரன் மாருதியனின் பாசமிருந்தது. முதலில் அவனுடனான பாசம் பின் அவர்களின் வீடுவரை சென்றது. அந்த வீடு, அம்மா, அப்பா சகோதரிகள் எல்லாம் அவனின் நெருங்கிய உறவுகளானது. தனுசனின் வீட்டார் அவனிற்கு கடிதம் அனுப்புவதென்றால் அங்கே தான் அனுப்புவார்கள். மாருதியன் தனக்கு உடுப்பெடுத்தால், தனுசனுக்கும் சேர்த்தே எடுப்பான்.

இப்படி அவனின் உறவுகள் வலுப்பெற்றுக் கொண்டிருக்க உள்ளத்தில் இழப்புக்கள் உருவாகிக்கொண்டிருந்தன. வீரச்சாவு விபரம் எழுதி அவனது கை வைரம் பெற்றது. அதுவும் அவனோடு கூட இருந்தவர்கள், ஒன்றாய் பழகியவர்கள். ஒவ்வொரு போராள யின் பெயர்களும் நாளும் அவனின் மனதிற்குள் பெரும் எரிமலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தன.

இந்த நாட்களில்தான் அவனிற்குள் கரும்புலியாகச் செல்லவேண்டும் என்று முடிவெடுத்தான். தனது மனதிற்குள் இருந்தவற்றை தலைவனிற்கு எழுதி அனுமதி கேட்டான். அவன் போராட்டத்தில் இணைவதற்கு நிகழ்த்திய மனப் போராட்டங்களைப்போல கரும்புலி அணிக்கான அனுமதி கேட்டு காத்திருக்கும் நாட்கள் கடுமையானதாக இருந்தது. எந்த விடயத்திலும் அவன் கூடவே திரிந்து, என்ன செய்தாலும் அவனைப் போலவே செய்யும் மாருதியன் அப்போதுதான் தனுசனின் பிரிவை எதிர்கொண்டான்.

அன்று கரும்புலிகள் அணியில் இணைந்துகொள்வதறகு அனுமதி வந்தவர்களை எற்றிச் செல்வதற்கு வாகனம் வந்துநின்றது. பிரியப்போகும் அந்த இறுதி நிமிடங்களை ஒரே இடத்திலிருந்து சந்திக்கும் சக்தி இருவருக்கும் இருக்கவில்லை.

தனுசன் புறப்படப்போகின்றான் என்றதும் மாருதியன் முகாமைவிட்டு வெளியே சென்றான். முகாமில் இருந்து பிரிவதற்கான நிமிடங்கள் விரைவாகக் கழிந்தன. மாருதியன் அந்த வாகனம் புறப்பட்டிருக்கும் என்ற கணிப்பீட்டில் அந்த முகாம் வந்தபோது வாகனம் இன்னும் புறப்படவில்லை. அவன் எந்த நேரத்தில் நிற்கக் கூடாது என நினைத்தானோ அது நிகழ்ந்துவிட்டது. வாகனத்தை விட்டு தனுசன் வேகமாக இறங்கினான். இறதியாக அந்த இணைவில் அவர்கள் பேசிக்கொள்ள வார்த்தைகள் இருக்கவில்லை. கண்ணீர்தான் கதைத்துக் கொண்டது.

தனுசனின் வாழ்வில் அடுத்தடுத்து பிரிவுச் சுமைகள் பாரமாய் கனத்தன. அந்தச் சுமைகளோடும் தாயகக்கனவை முதன்மையாக்கிக்கொண்டான். கரும்புலிகள் அணிக்குள் அவன் சேர்ந்திருந்தபோது அவனிற்கு மாருதியன் வீரச்சாவு என்ற சேதி வந்தது.

மீண்டும் மீண்டும் அவனின் மனதில் ஏற்பட்ட இழப்புக்கள் அவனை இன்னும் இன்னும் வேகமாக்கியது. கரும்புலிகள் அணிப் பயிற்சி முடிந்தபோது ஓயாத அலைகள் மூன்றிற்கான ஆரம்ப ஏற்பாடுகள் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஓயாத அலைகள் வன்னியின் சமர்முனையில் உக்கிரமானபோது அவனும் கரும்புலிகள் அணியின் ஒரு அணிக்கு பொறுப்பாகச் சென்றான். இராணுவப் பிரதேசத்திற் குள்ளேயே தங்கி அவனிற்கும் அவனது சொத்துக்களிற்கும் இழப்புக்களை ஏற்படுத்துவதற்காக பைகளில் உணவுகளோடு பெரும் சுமைகளைச் சுமந்து கொண்டு இரவுபகல் நித்திரையில்லாது ஓய்வில்லாது தங்களிடம் இந்த தேசம் எதிர்பார்த்ததை செய்து முடித்திருந்தார்கள்.

அதேபோலதான் வட போர் முனையில் ஓயாத அலைகள் அடிக்க ஆரம்பித்தபோது ஆனையிறவு களத்தினுள் இராணுவத்தின் சில செயற்பாடுகளை முடக்கி வைத்திருப்பதில் அவனின் பங்களிப்பும் இருந்தது.

அந்தத் தாக்குதலிற்காய் அவன் செல்கின்றபோது லேசான காய்ச்சல் அவனது உடற் சுகயீனத்தினை காரணம் காட்டி அந்தத் தாக்குதலில் அவன் பங்குபற்றும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அவன் கேட்பதாக இல்லை. அவனும் செல்லப் போவதாக பிடிவாதம் பிடித்தான். அனுமதி பெறும் மட்டும் ஓயவில்லை. அதன் பின்னே திருப்தி.

தாக்குதலிற்காக நகர்ந்து தண்ணீரைக் கடக்கின்றபோது அவனின் உடல் குளிரால் நடுங்கத் தொடங்கியது. அவனின் மனது மட்டும் வைரமாய் இருந்தது. பொதிகளோடு நீந்துவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்த இன்னொரு தோழனிற்கு உதவி செய்து அவனையும் அழைத்துச் செல்லும் மனத்திடம் அவனிடம் இருந்தது.

தாக்குதலிற்காகச் சென்று இடையில் வேறு வேலைக்காக இருவர் அவர்களை விட்டுப் பிரிந்து சென்ற போது அவர்களோடு இவர்களிற்கான உணவுப் பொதிகளும் சென்றுவிட்டது. திரும்பிவந்து எடுப்பதற்கோ வேறு எவர் மூலமாவது பெற்றுக்கொள்ள முடியாத சூழல். அவர்கள் இராணுவப் பிரதேசத்திற்குள் நுழைந்துவிட்டார்கள்.

இனி வெளியே வருவதென்றால் அவர்கள் தங்களிற்கான பணியினை முடித்துத்தான் வருவார்கள். சாப்பாட்டுப் பொதி இல்லாதபோதும் அவர்கள் தங்களிற்கான இலக்கு நோக்கிச் சென்றார்கள். அவர்களிற்கான பணியை முடித்தபோது பெரிதும் சோர்வுற்றுப் போயிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் தங்கள் பணி முடிந்தது என்ற திருப்தியோடிருந்தார்கள்.

அதேபோலவே பளைப்பகுதியில் அமைந்திருக் கும் ஆட்லறித் தளம்மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்ட போது தனுசனும் ஓர் அணியோடு தெரிவு செய்யப்பட்டிருந்தான்.

26.03.2000 நள்ளிரவு பளை ஆட்டிலறித் தளப்பகுதி பெரும் வெடிச்சத்தங்களினால் அதிர்ந்து கொண்டிருந்தது. ஆட்டிலறிகளும் எறிகணைகளும் வெடித்துச் சிதறி எரிவது அந்த ஆட்லறித்தளம் நிர்மூலமாகி விட்ட சேதியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தது. வானளாவ பரவிக் கொண்டிருந்த தீச்சுவாலைகளின் பிரகாசம் கரும்புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் வானத்தில் பிரதிபலிக்கும்படி செய்து கொண்டிருந்தன.

அந்த வீரமிகு சாதனையை நிகழ்த்தி விட்டு காவியமாகினர் இரண்டு கருவேங்கைகள். கரும்புலி மேஜர் தனுசன, அவனோடு
கரும்புலி மேஜர் சுதாஜினி.

தனுசன், அவன் சுமைமீது சுமை வந்தபோதும் சோராது நடந்தவன். தினம்தோறும் வானில் வீரவரலாறு எழுதி நெருப்பாற்றைக் கடந்தவன்.

தேசத்தின் விடியலுக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த எங்கள் மாவீர செல்வங்களுக்கும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

லெப் கேணல் வானதி /கிருபா 02 ம் ஆண்டு வீரவணக்கம்

லெப்.கேணல் கிருபா /வானதி

நித்தியகரன் – மாலதி
21 / 03 / 2009

விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் ,,மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம் ,,ஆனாலும் மறைமுக கரும்புலிகள் ,,,போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும்,,,தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது

தாயக களங்களில் சமர்களிலெல்லாம் போராளிகளின் தன்னலமற்ற செயற்பாடுகளே வெற்றிகளை எமதாக்கியது ..குடும்ப வாழ்வில் இணைந்த பெண் போராளிகளாயினும் போராட்ட வாழ்வின் முன்னுதாரணங்களாக மேஜர் நிர்மலா ,,லெப் கேணல் கமலி ,,மேஜர் சுடரேந்தி ,,லெப் கேணல் வரதா ,,கேணல் தமிழ் செல்வி,, லெப் கேணல் இசைப்பிரியா ஆகியோரின் வரிசையில் லெப் கேணல் வானதி /கிருபா ம் இணைந்து கொண்டாள். ஆம் குடும்ப சுமைகளை தாங்கும் குடும்பத்தலைவிகளாகவும் ,,,தாயக சுமைகளை தாங்கும் வீராங்கனைகளாகவும் போராடும் வாழ்வின் ஆதாரங்களாக மனதின் துணிவு எங்கிருந்துதான் கிடைக்க பெற்றது இவர்களிடம்…..!!!!!!!!

லெப் கேணல் வானதி /கிருபா

சிறுத்தை படையணியின் இரண்டாவது பயிற்சி முகாமிலே பயிற்சிகளை நிறைவு செய்தவள் லெப் கேணல் கிருபா/ வானதி. ஆரம்ப காலம் முதல் லெப் கேணல் சுதந்திராவின் வழிகாட்டலில் சிறுத்தை படையணிகளால் நடாத்தபட்ட பாரிய வலிந்த தாக்குதல்கள் ,,ஊடுருவி தாக்குதல்கள் ,,வேவு நடவடிக்கைகள் போன்றவற்றில் மிகவும் திறமையாக செயற்பட்டாள்

கவிதை ,,கட்டுரை ,,நாடகங்களென இவளது திறமைகள் வெளிவந்து கொண்டிருந்தது . அமைதியான சுபாபத்திற்கு சொந்தகாரி இவள். ஆனாலும் போராளிகளின் மத்தியில் கல, கலப்பாகவும் போராளிகளை மகிழ்வித்த வண்ணமிருப்பாள்.

பல சமர்களில் விழுப்புண்களை ஏற்ற உடலுடன் தொடர்ந்தும் களப்பணிகளில் இவளது பயணம் தொடர்ந்தது. சிறுத்தை படையணியினை சோதியா படையணியுடன் இணைத்து வலிந்த தாக்குதல் நடவடிக்கைகான பயிற்சி நடவடிக்கைகள் ,,,மாதிரி பயிற்சி நடவடிக்கைகள்களை தானே முன்னின்று சமருக்கான வெற்றிக்கு வழிசமைத்தாள் ..

மேஜர் சோதியா படையணியில் கேணல் துர்க்கா அவர்களின் நிர்வாக பொறுப்பாளாராக பல ஆண்டுகள் பல புரிந்தாள். சமாதான காலத்தின் போது யாழ் மாவட்டத்திற்க்கு அரசியல் பணிக்காக தெரிவு செய்ய பட்ட சோதியா படையணி போராளிகளிற்க்கு பொறுப்பாளாராக நியமிக்கபட்டாள். சமாதான காலமென்றாலும் பல புல்லுருவிகளின் செயற்பாடுகள் ,,இராணுவ புலனாய்வாளர்களின் ஊடுருவல் முயற்சிகளிலிருந்து பெண் போராளிகளை காக்கும் பணி இவளின் முதன்மை செயற்பாடாகவிருந்தது

2005 ம் ஆண்டு காலப்பகுதியில் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய தான் வாழ்க்கை துணைவராக நேசித்த புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான வினோதன் எனும் போராளியை கரம் பிடித்து திருமணபந்தத்தில் இணைந்துகொண்டாள். திருமணபந்தத்தில் இணைந்துகொண்ட போதிலும் தனது கள செயற்பாட்டில் எவ்வேளையிலும் பின் நிற்காது தொடர்ந்தும் சமர்களிலும் ..நிர்வாக செயற்பாடுகளிலும் முன்னுதாரணமாக செயற்ப்பட்டாள். 2006 ம் ஆண்டு பண்ணரசன் எனும் குழந்தைக்கு தாயான போதும் , அவளது செயற்பாடு தொடர்ந்த வண்ணமிருந்தது..

இறுதி சமர் வன்னியெங்கும் வியாபித்த போதும் ,, குடும்ப வாழ்வும் ,,களமுனை வாழ்வுமாக இவளது பயணம் தொடர்ந்தது ..தான் வளர்த்து விட்ட தோழிகளின் இழப்புக்கள் ,,மக்களின் கொடூர மரணங்கள் ,,தொடர் விமான தாக்குதல்கள் ,, இடப்பெயர்வின் அவலங்கள் ,,மனதினை தாக்கிய போதும் கூட தனது குடும்பம் ,,தனது குழந்தையென வாழாது தாயகத்தை நேசித்தாள் .துணைவன் ஒரு சமர் களத்தில் ,,இவளோ எதிரியின் வரவை எதிர் பார்த்து வேறொரு சமர் களத்தில் இவர்களின் குழந்தை செல்வமோ உறவினர்கள், நண்பர்களின் பராமரிப்பில் மாதமொருமுறை ஒரு சில மணித்துளிகளே குடும்பங்களுடனான சந்த்திப்புக்கள் இப்படியாக தான் இறுதி யுத்த நேரங்களில் போராளிக்குடும்பங்களின் வாழ்விருந்தது. அதற்க்கு மேலாக எதிரி மீதான தாக்குதல் களங்களேயே அதிகம் நேசித்தனர்.. .இறுதி யுத்தத்தில் குடும்பங்களாகவே எதிரி மீதான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்க்கொண்டதை கண்டது வன்னி மண் .

21 / 03 / 2009 அன்று தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்கான திட்டமிடல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை எதிரியின் எறிகணை வீச்சொன்றில் இம் மண்ணை முத்தமிட்டாள் லெப் கேணல் வானதி / கிருபா

விடுதலைக்காய்
வீச்சாகி -நின்றவள்
களங்களிலே
கனலாகி நின்றவள்
சிறுத்தையணியில்
சீற்றமுடன் பகையளித்தவள்
சோதியா படையணியின்
சோதியாய் நின்றவள்
கனவுகள் தாங்கி
நினைவெல்லாம் நடப்போம்.

– ஈழமதி-

வெளித்தெரியா வெள்ளிகள் – 01


இதுவொரு காலத்தின் பதிவு. ஆங்கிலத்தில் நூலாக வெளிவரவிருக்கின்ற இப்பதிவின் தமிழ்ப்பதிப்பு தொடராக ஈழநேசனில் வெளிவருகின்றது.

தமிழீழ விடுதலைக்காக புறப்பட்ட ஒருவனின் வாழ்க்கையோடு பயணிக்கும் இப்பதிவு – ஒரு சிறுமுயற்சியே. தாயகத்தமிழர்களின் வேதனைகளும் வலிகளும் அவர்களது தியாகப்பயணமும் இன்னும் தொடரும் நிலையில் வெளிவருகின்ற தொடர்பதிவு இதுவாகும். தமிழிலக்கிய பரப்பில் ஈழத்துபோராட்ட இலக்கியமும் முக்கியமானது என்ற வகையில் இதனை வெளியிடுகின்றோம்.

——————————————————

”அம்மா நான் ஒருக்கா லைப்ரரிக்கு போட்டுவாறன்” எனச்சொன்ன கீதன் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட ஆயத்தமானான்.

”ஒரே வெயிலாக்கிடக்கு இப்ப என்ன அவசரம்” என்ற அம்மாவின் குரலுக்கு ”இல்லை பேப்பர் பாத்திட்டு வாறன்” என்றவன் சைக்கிளுக்கு காற்று இருக்கின்றதா எனப்பார்த்தான்.

”கொண்ணை இப்பதானே பேப்பர் வாங்கிக்கொண்டுவந்தவன்”.

”இல்லை நேற்றைய பேப்பர் ஒருக்கா பார்க்கவேணும். உடன வந்திடுவன்” என்று சொல்லியவாறே சைக்கிளில் ஏறிவிட்டான்.

”சரி அப்ப வரக்க, கடையில் சீனி அரை கிலோ வாங்கிக்கொண்டு வா. தேத்தண்ணி போடுறதுக்கு கூடு ஒண்டும் இல்ல” என அம்மா அவனது கையில் காசை திணித்தபோது, ”இல்லை பின்னேரம் வாங்கலாம்” எனச் சொல்லியவாறே சென்றான்.

அப்பிடி என்ன அவசரமாய் போறான் என நினைத்தவள், பின்னால கூப்பிடக்கூடாது என நினைத்தாள் போலும் பேசாமல் இருந்துவிட்டாள். அவனோடு இனிப்பேச பல வருடங்கள் ஆகும் என்பதை அவள் அன்று அறிந்திருப்பாளா?

——————————-

அப்போது யாழ்குடாநாடு போர் மேகம் சூழ்ந்திருந்த நேரம். யாழ் குடாநாட்டின் தீவுப்பகுதிகளை கைப்பற்றிய இராணுவத்தினர் யாழ் குடாநாட்டை முழுமையாக கைப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

குடாநாட்டிற்கான வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதுடன் போக்குவரத்து பாதைகளும் முடக்கப்பட்டுவிட்டன. இப்போது பலாலி பெருந்தளத்திலிருந்து இராணுவத்தினர் முன்னேறிக்கொண்டிருந்தார்கள்.

பாதுகாப்பான இடங்கள் எதுவும் இருக்கவில்லை. நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது குண்டுவீச்சு விமானங்கள் பதிந்தபோதும் அத்தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அவ்வளவு பெருந்தொகையில் மக்கள் குவிந்திருந்தார்கள். வீதிகள் நிரம்பியிருந்தன. ஆனாலும் அந்தக்கொடிய விமானங்கள் 200 இற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொன்றுபோட்டிருந்தது.

இனி ஒன்றும் செய்யமுடியாது என்பது தெரிந்து, ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தாம் வாழ்ந்த அம்மண்ணிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தார்கள். இவனது நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு திசையில் பிரிந்து எங்கே சென்றார்கள் என்பது தெரியவில்லை.

பக்கத்துவீட்டு வேலி தங்கட காணிக்குள் சாய்ந்துவிட்டது என்பதற்காகவே வழக்கு போட்ட மக்கள் – தங்கள் மண்ணே பறிபோகின்றது என்று தெரிந்தும் ஒன்றும் செய்யமுடியாதவர்களாக வெளியேறிக்கொண்டிருந்தார்கள்.

———————–

வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இவனுக்கு முன்னால் ஒரு தெரிவே இருந்தது. அந்த வழியில் பயணிக்க கீதன் முடிவெடுத்திருந்தான். ஒன்றன்பின் ஒன்றாக படகுகள் இணைக்கப்பட்டு ஏறக்குறைய நானூறு பேர் பயணித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களின் அப்போதைய பயணத்தைப்போலவே தொடரப்போவதும் பெரும் சவாலானதுதான் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

கடற்பயணத்தை பாதுகாப்பதற்காக ”எங்கட பெடியள்” நிற்கிறார்கள் என்ற பாதுகாப்புடன் அப்பாதையால் மக்களும் பயணித்துக்கொண்டிருந்தார்கள்.

அந்தப்பாதையை காத்துநின்ற அந்த வீரர்கள் பற்றியும் அவன் அறிந்திருந்தான். ஆனால் தன்னோடு பயணிக்கும் தோழர்களும் அவ்வாறு தற்கொடையாளர்கள் ஆவார்கள் என்பது அப்போது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.

அது யாழ்குடாநாட்டை வன்னி பெருநிலத்திலிருந்து பிரித்த கடல் நீரேரி. அப்பாதையால் பயணிக்கும் எவரும் படையினரால் குறிவைக்கப்படுவார்கள். ஆனால் அவர்களை காப்பதற்காக காவல்தெய்வங்கள் கண்ணயராமல் கடலினில் நிற்பார்கள்.

அக்கடற்பாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக படையினர் மேற்கொண்ட ஒவ்வொரு கொடுமைகளும் அதனை எதிர்த்து அவர்கள் செய்த தியாகங்களும் மக்கள் மத்தியில் இனம்புரியாத தேசிய உணர்வை வளரச்செய்தது.

——————————————

அம்மா அப்பா சகோதரர்கள் என அவர்கள் ஒன்றாக வாழ்ந்த காலங்கள் குறைவு. சிறுவயதிலே தொடர்ந்த இடப்பெயர்வுகள் அவனது குடும்பத்தையும் சிதறச்செய்தது. அதனால்தான் சேர்ந்திருந்த அந்தக்காலங்கள் காணாமல்போய்விடக்கூடாது என்ற எண்ணம் அவனிடம் இருந்தது. ஆனால் அவர்கள் அவனை விட்டு பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக தனது கடமையை அவன் உணர்ந்திருந்தான் போலும்.

காலைப்பயிற்சிகள் கடுமையாக இருக்கும். வெள்ளிக்கிழமை என்றால் இன்னும் கடுமையானதாக இருக்கும். காலையில் ஏழு மணிக்கு எழும்பியவனுக்கு பயிற்சிக்காலங்களில் நாலரை மணிக்கு ஊதும் விசில் பழகிப்போனது ஆச்சரியமானதுதான்.

போராட்டம் கடுமையானது. அதற்கு துணிவு தந்திரம் கடும்பயிற்சி தேவை. பயிற்சி ஆசிரியர்கள் திரும்ப திரும்ப கூறுவார்கள். அதனால்தானோ என்னவோ தன்னை மாற்றிக்கொள்ள அவன் விரும்பினான்.

இப்போது அவனாகவே கடுமையான சூழலில் வாழ விரும்பினான். காலையில் அகவணக்கம் செய்யும்போது திலீபனை பூபதி அம்மாவை கிட்டண்ணைாவை மனதில் நினைந்துகொள்வான். அவர்களை போன்ற உறுதியுடன் தானும் பயணிக்கவேண்டும என திடம்கொள்வான்.

காலை தொடக்கம் இரவு வரை கடும்பயிற்சி. இரவுகளில் தொடரும் உடனடி காப்பு பயிற்சி.

தன்னோடு நின்ற பல தோழர்கள் எவ்வளவு கடினப்பட்டு இதனை செய்கின்றார்கள் என்று எண்ணும்போது தானும் தனது பங்கை நிறைவுசெய்துவிடவேண்டும் என்ற துடிப்பு அவனிடம் இருந்தது.

—————————-

மேஜர் ரஜீவன் அண்ணா தான் பயிற்சிமுகாம் பொறுப்பாளர். அமைதியான அந்த உருவத்திற்குள் அடங்கியிருந்த ஆளுமையை கண்டு பலதடவை வியந்திருக்கின்றான்.

பொதுவாழ்வுக்காக அர்ப்பணித்தவர்களின் வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமானது என்பதை அவரோடு பழகினாலே அறிந்துகொள்ளமுடியும்.

போராளிகள் உண்மையானவர்களாகவும் நம்பிக்கையானவர்களாகவும் சமூகசிந்தனையுடையவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துவார்.

அவர் ஆனையிறவு ஆகாய கடல் வெளி சமரில் காயமடைந்திருந்தார். அதன் பின்னர் நிர்வாகப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். யாழ்குடாநாடு முழுவதுமாக அரசபடைகளால் கைப்பற்றப்பட்ட நிலையில் அங்கு சென்று சண்டை செய்யப்போவதாக கேட்டு தலைவருக்கு கடிதம் எழுதுவார்.

அவ்வாறு அனுமதிபெற்று யாழ்ப்பாணம் சென்று நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது – மாவீரர் நாளில் துயிலுமில்லத்தில் விளக்கேற்றவேண்டும் என்ற துடிப்போடு சென்று விளக்கேற்றிவிட்டு திரும்பிவரும்வழியில் வீரச்சாவடைந்திருந்தார்.

——————

கீதனது பயிற்சி முகாமில்தான் லெப்கேணல் சுபேசன் அண்ணனின் அணியும் தங்கி விசேட பயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் கரும்புலிகள் அணியை சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து அவர்களை நேரடியாகவே முதற்தடவையாக கண்டபோது தியாகத்தின் உச்சங்களின் முகங்களை தரிசித்தான்.

அவர்கள் ஆங்கில படங்களில் வருவது போன்றமாதிரியான பயிற்சிகளிலேதான் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். ஏழுபேர் கொண்ட அணியாக மட்டுமே அவர்களது பயிற்சி போய்க்கொண்டிருந்தது.

கீதனுடன் ஏறக்குறைய முன்னூறு பேரளவில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பயிற்சிகள் தொடக்கநிலைபயிற்சிகளாக மட்டுமே அவை அமைந்திருந்தன.

சிறப்பு பயிற்சிகள் பெற்றுக்கொண்டிருந்த சுபேசன் அண்ணனின் அணியோ எங்கோ விமானதளத்தை தாக்குவதற்கான பயிற்சிகளை பெற்றுக்கொண்டிருந்தார்கள். அது பலாலியா கல்குடாவா அல்லது திருமலையா என யோசித்துக்கொண்டிருப்பான். அப்போது கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் பற்றி யோசிக்கமுடியாத காலம்.

ஆனால் பின்வந்த நாட்களில் ஆட்லறிதளம் ஒன்றை தாக்குவற்கான பயிற்சியாக மாற்றம் பெற்றது. அவர்களது பயிற்சிகள் அனைத்தும் ஒத்திகை பயிற்சிகளாகவே இருந்ததன. ஆனால் காலவோட்டத்தில் தாக்குதல் திட்டங்கள் மாறி இடங்கள் மாறிக்கொண்டேயிருக்கும்.

இவ்வாறு இலக்குகள் மாறி இடங்கள் மாறிக்கொண்டிருந்த போதிலும் தங்கள் விடுதலைக்கான விலையை மாற்றாமல் உறுதியாக நின்ற இவர்கள் சுமார் ஆறுவருட காத்திருப்புக்கு பின்னர் ஆனையிறவில் மூச்சடங்கிப்போனார்கள்.

ஓரு கணத்திலே வெடித்துப்போகின்ற இவர்களின் இறுதிக்கணங்களை – காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத்தன்மையை – அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக்கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

”நான் கம்பிவேலியை உடைக்க வெடிக்கிறன். அந்தப்பாதையால் போய் நீங்கள் முதலாவது காவலரணில வெடியுங்கோ. மற்ற ஆட்கள் ஆட்லறியை வெடிக்கவைக்கலாம்” என தாங்களே திட்டமிட்டுகொள்ளும் இவர்களுக்குள் உள்ளே புகுந்துகொண்ட அந்த மனவுறுதி எப்படி அவர்களுக்கு உருவானது.


ஆனையிறவு ஆட்லறி தாக்குதலுக்காக திட்டமிட்டுக்கொண்டிருக்கும்போது வரைபடத்தின்மீது இருந்துகொண்டு ”நான் இந்த பிப்ரி கலிபரை விடமாட்டன். அதை உடைக்கமுதல் அதை எடுத்து அவனுக்கே திருப்பி அடிப்பன்” மேஜர் ஆஷா சொன்னபோது அவனால் அவர்களை புரிந்துகொள்ளமுடியவில்லை.

வெடிப்பது சார்ஜரை இழுப்பது என இயல்பாக சொல்லும் இவர்கள் தங்கள் உயிரை பற்றி ஒருகணமேனும் சிந்திப்பதில்லை. ஏனென்றால் தாங்கள் வீரச்சாவு அடைவதற்கு முன்னர் எத்தனை எதிரிகளை கொன்றோம் எத்தனை எதிரியின் போர்த்தளபாடங்களை அழித்தோம் என்பதில்தான் அவர்கள் இலக்கு இருந்தது. அவர்களுக்குள் புதைந்திருந்த அந்த ஆன்மஉறுதியை கண்டு இவன் மெய்சிலிர்த்துப்போனான்.

———————————————–

யாழ் குடாநாடு இடப்பெயர்வின்போது வன்னிப்பெருநிலம் எங்கும் ஓலைக்குடிசைகளே நிரம்பிநின்றன. அடுத்தடுத்த இடப்பெயர்வுகளே எம்மக்களின் வாழ்வை அவலநிலைக்கு கொண்டுசென்றது.

ஓலைக்குடிசைகளில் ஆங்காங்கே தெரியும் உறவுகளை காணும்போது இவர்களுக்காக என்றாலும் நாம் போராடவேண்டும் என்ற உறுதி இன்னும் அதிகரிக்கும்.

ஆறு மணிக்குப்பின்னர் வீதியை மறித்து படுத்திருக்கும் அந்த ஊர் மாடுகள் வாகனங்களுக்கு வழிவிடாமல் தங்கள் பாட்டில் படுத்திருக்கும். இரவு வந்துவிட்டால் தங்களுக்கே வீதி சொந்தம் என எண்ணுகின்றன போலும்.

மாடுகளை பொதுவாக ஐந்தறிவுள்ள பிராணிகள் என சொல்ல கேள்விபட்டிருக்கின்றான். ஆனால் அவற்றுக்குள்ளே இருக்கின்ற ஒட்டுறவை கண்டு பிரமித்துப்போயிருக்கின்றான்.

ஒரு தடவை வழங்கல் சாப்பாடு சலித்துப்போன நிலையில் மாடு அடிப்போம் என கீதனுடன் இன்னும் மூன்றுபேர் வவுனியாவின் எல்லைப்புற கிராமம் ஒன்றுக்கு சென்றார்கள்.

அங்கு காட்டெருமைகள் என்று சொல்லக்கூடிய மாதிரி ஊர்மாடுகள் காடு ஏறி வாழ்ந்துவந்த நேரம் அது. ஒரு கூட்டம் மாடுகளை கண்டு அவற்றில் ஒரு நாம்பன் மாட்டை குறிவைத்து சுட்டான் கீதன். ”கீதன் நீ பக்கத்தில் நிண்ட மாட்டை சுட இந்த மாட்டுக்கு பட்டுட்டுதடா” என வேந்தன் நக்கலடித்தான்.

வேந்தன் எப்பவுமே கலகலவென்று எதையாவது சொல்லி மற்றவர்களை சிரிக்கவைத்துக்கொண்டிருப்பான். மேடைநிகழ்ச்சிகளில் எப்போதும் அவன் வந்ததாகவே ஞாபகம். அவனோடு சம்பந்தப்பட்ட இன்னொரு நிகழ்வை பின்னொரு பொழுதில் பார்ப்போம்.

அந்த மாடு சூடுபட்டு கீழே விழப்போனபோது ஒரு கணம் கிலி கொண்ட மாடுகள் சுதாகரித்து – கீழே விழுந்த மாட்டை கீழே விழாமல் தள்ளிக்கொண்டு செல்லமுயற்சித்தன. அதுமுடியாமல் போகவே அந்த மாட்டை விட்டுவிட்டு மற்றையவை காட்டுக்குள் ஓடின.

அதுவரை நாளும் மாடுகள் தானே நினைத்தவனுக்கு அந்நிகழ்ச்சி நெகிழ்ச்சியை உருவாக்கியது. மிருகங்களுக்குள் இருக்கும் அன்னியோன்னியம் கூட மனிதர்களுக்குள் இல்லாமல் போய்விடுகின்றதே.

இன்னும் வரும்…..

– ஈழச்செல்வன்

லெப். கேணல் ரவி வீரவணக்கம்


வன்னிமண்ணில் குமாரவேல் தம்பதியரின் புதல்வனாய் அவதரித்த லெப்.கேணல் ரவி 1986ம் ஆண்டு தம்மை முழுமையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் இரவீந்திரகுமார். விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து கொண்ட ஆரம்ப காலங்களில் லெப்.கேணல் ரவியவர்கள் வன்னியின் மூத்த தளபதி மாவீரர் மேஜர் பசிலனுடன் இணைந்து சிங்கள இராணுவத்திற்கெதிராக முனைப்பான தாக்குதல்களை மேற்கொண்டு, வன்னி மண்ணை சூறையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கினார்.

அமைதிகாக்கவென வந்து எம்மண்ணில் அவலத்தை விதைத்த ராஜீவின் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக உறுதியான எதிர்ப்புச்சமர் புரிந்தார். உலகின் நான்காவது பெரிய பலம் வாய்ந்த இராணுவத்தின் ஆயுதங்கள் பலவற்றையும் கைப்பற்றி எமது படைபலத்தை பெருக்கிச் சாதனை படைத்தார்.

மீளவும் 1990ன் நடுப்பகுதியில் இரண்டாம் கட்டம் மாங்குளம் தளங்களைத் தாக்கி அழித்த நடவடிக்கைகளிலும் காத்திரமான பங்கை வகித்தார். சிறீலங்கா முப்படைகளும் இணைந்து நடத்திய பலவேகய-2 இராணுவ நடவடிக்கையின் போது வெட்டவெளிகளிலும், உவர்நிலங்களிலும் நின்று முதன்மையாகச் சமராடினார். எதிரிக்குச் சாதகமான நிலப்பரப்பில் மனஉறுதி ஒன்றையே காப்பரணாக வைத்து ரவியவர்கள் களமாடிகொண்டிருக்கையில் எதிரியின் துப்பாக்கிச் சூடுபட்டு கையில் விழுப்புண்ணடைந்தார்.

1993ல் ஒப்பறேசன் யாழ் தேவி நடவடிக்கையின் போது இடம் பெற்ற டாங்கிகள் தகர்ப்பினை முன்னின்று வழிநடத்தினார். தமிழீழ விடுதலை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படையியல் நடவடிக்கைகளில் ஒன்றான பூநகரி படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின் போது வன்னி மாவட்ட படையணிகளின் இரண்டாவது பொறுப்பாளனாக க் கடமையாற்றினார். திறம்பட போராளிகளை வழிநடத்தி தவளை நடவடிக்கையின் வெற்றிக்கு வலுச்சேர்த்தார்.

பூநகரிப் படைத்தளத் தாக்குதலின் பின்னர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் லெப்.கேணல் ரவி வன்னி மாவட்ட சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் சிறப்புத் தளபதியாக இருந்த வேளையில் வவுனியா புறநகர்ப் பகுதியில் சிங்களப் படையின் பவள் கவசவாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறிப்பிடத்தக்க தாக்குதலாகும்.

எண்ணற்ற தாக்குதல்கள், எண்ணிறைந்த வெற்றிகள் என சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருந்த சிறப்புத் தளபதி தாக்குதலொன்றிற்கான ஒத்திகை ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அவ்வேளையில் 17-03-1994 அன்று இடம்பெற்ற வெடிவிபத்து வன்னியின் சிறப்புத்தளபதி லெ.கேணல் ரவியோடு, கப்டன் சேந்தனையும் வன்னித் தாயின் மடியில் உறங்க வைத்துவிட்டது. உயிர் உடலில் இருக்கும் வரையும் தாயக மீட்பு ஒன்றையே சிந்தையாகக் கொண்டு சுழன்ற மறவன் லெப்.கேணல் ரவி ஆவர்.

மூலம் – எரிமலை

கரும்புலி மேஜர் டாம்போ வீரவணக்கம்


1991.03.19
1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:
சிலாபத்துறை இராணுவ முகாம்மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென தீர்மானக்கப்பட்டது.

“அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்” இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது. தாக்குதலுக்கான நாள் வந்தது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக்குதலுக்காக, வெடி மருந்து நிரப்பிய வண்டியை ஓட்டிச் செல்வது டாம்போதான் எனத் தீர்மானிக்கப்பட்டது.

சண்டை தொடங்கி சிறிது நேரத்திற்குள்ளேயே படை முகாமின் கணிசமான பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. குறித்த நேரத்தில் கொண்டச்சி வீதி வழியாக வெடிமருந்து வண்டியை கொண்டு செல்வதற்கு வசதியாக போராளிகள் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டாம்போ அந்த இறுதி நேரத்திற் கூட எந்தவித படபடப்புமின்றி காயமடைந்த போராளிகளுக்கு மருந்து கட்டுவதிலும், பிற உதவிகள் செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். “எல்லாம் சரி. சக்கை வண்டியை அனுப்பலாம்” களத்தில் கட்டளை பிறக்கிறது. என்னால முடிஞ்ச அளவு முகாமின்ர உள்ளுக்க போய் மோதுறதுதான் என்ர நோக்கம்” சொல்லி விட்டு டாம்போ வாகனத்தில் ஏறத் தயாராகிறான். பக்கத்தில் நின்ற தோழனைக் கட்டியணைத்து முத்தமிடுகின்றான். “நானும் கொஞ்சதூரம் வாறன்” நண்பன் கூற, “வேண்டாம், ஏதும் தவறெண்டாலும் ஏன் வீணா எல்லாரும் சாவான்”

கூறிவிட்டு, வெடிமருந்து வண்டியை எடுத்துக் கொண்டு விரைகிறான் டாம்போ. எதிரியின் ஒருமித்த தாக்குதல் டாம்போவின் வாகனம் நோக்கி திரும்புகிறது. இலக்கை அடையுமுன்னரே அந்தக் கரும்புலி வண்டி வெடித்து சிதறுகிறது.

மன்னார் நாச்சிக்குடா மண்ணில் 17.08.1967 இல் காசிப்பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்த தயாபரன்தான், 1986 களின் நடுப்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைத்துக் கொண்டான். எதிரிகளுடனான மோதலொன்றில் காலில் காயமடைந்தபின் தமிழ்நாட்டிற்கு போக வேண்டியேற்பட்டது டாம்போவுக்கு. அங்கு ஏனைய தோழர்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாம்போ காலப்போக்கில் வவுனியா சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அங்கு நடந்த சிறையுடைப்பில் டாம்போவும் வெளியேறினான். பின்னர் தன்னை கரும்புலிகள் அணியில் இணைத்து, இயக்க வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தான். பல வழிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்திய டாம்போவிடம் விஞ்சி நின்றது, வாகனத்தை இலாவகமாக ஓட்டும் சாரதித் திறமையே.

கரும்புலியாய் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு டாம்போ தன் கிராமத்திற்குச் சென்றான். தன் தாய், தந்தையுடன் மகிழ்ச்சியாய் இருந்தான். தாயைக் கட்டியணைத்துக் கொஞ்சினான். அவனது செயற்பாடுகள் தாய்க்கு விசித்திரமாக இருந்தது. சிரித்தாள். அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது, மகன் சாவுக்கு திகதி குறித்துவிட்டான் என்று. தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பாசறைக்குச் சென்றான் டாம்போ. புதிய போராளிகளுடன் மகிழ்ச்சியாக இருந்தான். தான் கரும்புலியாகப் போவதாக அவர்களுக்கு கூறினான். “டாம்போ அண்ணை பகிடி விடுகிறார்” என்று எல்லோரும் சிரித்தார்கள். இரவு ஏனைய போராளிகளுடன் தானும் வேட்டைக்குச் சென்றான். யார்தான் நம்புவார்கள் இவன் நாளைக்கே காற்றோடு கரைந்து விடுவானென்று…. மறுநாள் காலை, அதே முகாமில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த தனது சொந்த தம்பியை அழைத்தான்.

“நான் போறன், வருவனோ தெரியாது” என்றான் டாம்போ. தம்பிக்கு எதுவுமே புரியவில்லை. அண்ணனை மரியாதையுடன் பார்த்தபடி அவ்விடத்திலிருந்து விலகுகிறான். டாம்போவும் தன் இறுதிப் பயணமாய் பாசறையை விட்டு வெளியேறுகிறான் பாசறையின் வாசலில் நின்று திரும்பி சில நிமிடங்கள் பாசறையையே பார்க்கிறான். சில தோழர்கள் கையசைக்கின்றனர். அவனும் கையசைத்துச் செல்கிறான். அவனது பாதத்தின் சுவடுகளைத் தாங்கிக் கொண்டிருந்த மண் நிச்சயம் மகிழ்வு கொண்டிருக்கும்.

டாம்போ, நீ சென்ற பாதையில் எத்தனை எத்தனை போராளிகள்… அவர்களில் மட்டுமல்ல, ஈழத்தின் காற்றில் கூட நீயும், நீ சொன்னவைகளும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றன – அந்தப் பெருமரத்தின் அடியில் இருந்து கொண்டு, நீ சொன்ன உன் சோகம் ததும்பும் குடும்ப வாழ்வும், கரும்புலியாய் ஆனபின் கொண்ட மன நிறைவும்…. நினைத்துப்பார்க்கிறோம்….

“வீட்டில் நான்தான் மூத்த பிள்ளை, இரண்டு தம்பிகளுக்கு பிறகு கடைக்குட்டியா தங்கச்சி பிறந்தாள். என்ர சின்ன வயதிலேயே அப்பாவுக்கு ஏலாமல் போட்டுது. அம்மாதான் கூலி செய்து எங்களை வளத்தவா. நானும் வளந்தாப் பிறகு அம்மாவுக்கு கொஞ்சம் உதவி செய்தன். தம்பி தங்கச்சி நல்லாப் படிக்க வேணும்மெண்டு ஆசைப்பட்டேன். எங்கட வீட்ட எல்லாரும் தங்கச்சியிலதான் உயிர். அவளின்ர சாமத்திய வீட்டுக்கு சொந்தக்காரர் எல்லாருக்கும் சொல்லி, எங்கட வசதிக்கேற்ற மாதிரி பெரிசாச் செய்தம். ஆனா… சாமத்திய வீடு நடந்து பத்தாம் நாள் தம்பிக்கும், தங்கச்சிக்கும் சும்மா ஒரு சின்ன சண்டை. அதால அம்மா தம்பிக்கு அடிச்சுப் போட்டா. தன்னாலதான் அண்ணாவுக்கு அடி விழுந்ததெண்டு நினைச்சு, எங்கட ஆசைத் தங்கச்சி நஞ்சு குடித்து செத்துப்போயிட்டாள்.

இதுக்குப் பிறகு ஒரு நாள் பயணம் போன தம்பியை நேவிக்காரர் பிடிச்சவங்களாம். அதுக்குப் பிறகு அவன் எங்க எண்டே தெரியாது. உயிரோட இருக்கிறானோ, இல்லையோ எண்டே தெரியாது. தங்கச்சி செத்து ஒரு மாதத்துக்கு முதலே மற்ற தம்பி இயக்கத்துக்கு வந்திட்டான். எங்கட குடும்ப நிலவரத்தை அறிஞ்ச சுபன் அண்ணை தம்பியை வீட்டை போகச் சொல்லியும் அவன் போகேல்ல, பிறகு இஞ்ச இந்தக் காம்பிலதான் ஓடித்திரியிறான். நான் தான் ஏத்தியந்து இந்தக் காம்பில விட்டனான்.

நான் கரும்புலியாப் போகப்போறேன் எண்டு தம்பிக்குச் சொல்லிப்போட்டன். ஒருக்கா என்ர முகத்தைப் பார்த்திட்டு பிறகு எங்கயோ பார்த்தான்.

நான் உண்மையாச் சொல்லுறன்ரா, இப்படியொரு நிறைவான சாவு எல்லாருக்கும் வராது…

ஆம்! நீ சொன்னது இன்னும் தெளிவாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

– கதிரவன் –

லெப்.கேணல் ஜொனி வீரவணக்கம்


அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி. கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதனிலைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல். ஜொனி பேச்சுவார்த்தைக்கென இந்திய இராணுவத்தால் அழைத்து வரப்பட்டு வஞ்சகமாக 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி முல்லைத்தீவு தேவிபுர பகுதியில் வைத்து சுடப்பட்டு வீரச்சாவடைந்தார்.

1980களில் யாழ்க் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கிட்டண்ணாவால் கொண்டு வரப்பட்டது. அதற்கு கிட்டண்ணாவால் சிறீலங்காப் படைக ளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க பல தாக்குதல்களில் ஜொனி முன்னின்று சமராடினார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் வந்த போது கிட்டண்ணாவுடன் தமிழகம் சென்றார். இந்திய இராணுவத்துடனான புலிகளின் போர் தொடங்கியது. கிட்டண்ணாவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அது சம்பந்தமாக மேலதிக முடிவுகளை எடுப்பதற்கு கிட்டண்ணா லெப்.கேணல் ஜொனியை சமாதானத்து}துவராக தேசியத் தலைவரைச் சந்திப்பதற்கு அனுப்பினார். இவர் மூலம் தேசியத் தலைவரின் இருப்பிடத்தை மோப்பம் பிடிக்கும் முயற்சியில் இந்தியப் படைகளும், தேசவிரோத சக்திகளும் ஈடுபட்டன. அது சாத்தியப்படாத நிலையில் ஜொனியை நயவஞ்சகமாகக் கொன்றனர்.

தாயகத்தையும் தேசியத் தலைவரையும் ஆழமாக நேசித்து இன்னுயிரை நீத்த இவ்வீரவேங்கையின் பன்னிரண்டாம் ஆண்டு நிலைவலைகளை நெஞ்சிலிருத்தி தாயக விடுதலைக்கு விரைந்து செயலாற்றுவோம்.

ஜொனியை இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி?
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் வரலாற்றுத்துறை பொறுப்பாளருமான யோகரட்ணம் என்ற யோகி விளக்குகிறார்.

இந்தியாவிலிருந்து சமாதான தூதுவராக அழைத்து வரப்பட்டு திரும்பிச் செல்லுகையில் நயவஞ்சகமாக, மூத்த தளபதி லெப். கேணல் ஜொனியை இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் வரலாற்றுத்துறை பொறுப்பாளருமான யோகரட்ணம் என்ற யோகி விளக்கியுள்ளார்.

16.03.2006 அன்று லெப்.கேணல் ஜொனி அவர்களின் 18 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி “புலிகளின் குரல்” வானொலியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுத்துறைப் பொறுப்பாளர் திரு. யோகரத்தினம் யோகி ஆற்றிய நினைவுரை:

அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.

கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர்.

பருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார். பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார்.

சிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே இணைய முற்பட்டபோது அவரது பெற்றோர் விரும்பாததால் கொழும்பில் படிக்க வைக்கப்பட்டார்.

ஆனால் 1983 ஆம் ஆண்டில் சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து போராட்டத்தில் இணைந்து கொண்டார். அக்கால கட்டத்தில் இந்தியா அதன் நலன்சார்ந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய அமைப்புகளுக்கு பயிற்சியைத் தர முன்வந்தது.

விடுதலைப் புலிகளின் 200 பேருக்கு 2 பிரிவுகளாகப் பயிற்சி அளித்தது. இந்தப் பயிற்சிக்காக ஜொனி இந்தியா சென்ற போது அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. தொலைத் தொடர்புத்துறையில் பயிற்சி பெற்று நாடு திரும்பினார்.

மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றினார். அப்போது யாழ். குடாநாடு கட்டுப்பாட்டில் இல்லை. படையினர் எந்தநேரமும் எங்கும் செல்லலாம் என்ற நிலை இருந்தது.

ஒருமுறை வல்வெட்டித்துறை கெருடாவிவிலில் ஜொனியை படையினர் சுற்றிவளைத்து அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர். அப்போது தனது கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேஜர் வாசுவும் ஜொனியும் படையினரை எங்கேயாவது தாக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்தனர். கைக்குண்டுகளோடு படையினரைத் தேடித் திரிந்தனர். இவர்களை வளர்த்து விடுவதில் கேணல் கிட்டு பெரிய பங்காற்றினார். மேலும் ஜொனியை தனக்கு அடுத்த நிலை தளபதியாகவும் உருவாக்கி வைத்திருந்தார்.

படைநிலைகளைப் போய்ப் பார்ப்பது, போராளிகளைச் சந்திப்பது, களநிலைகளை அறிவது, போராளிகளின் நலன் பேணுவது, பயிற்சி வழங்குவது, புதிய புதிய படைக்கட்டமைப்பை உருவாக்க ஊக்கப்படுத்துதல், எமது கட்டமைப்புகளாக அப்போது இருந்த தும்பு தொழிற்சாலை, வெடிபொருள் உற்பத்திசாலை ஆகியவற்றை நேரில் பார்வையிடுவது என்று ஜொனி பல பணிகளைச் செய்து வந்தார்.

ஜொனியைப் பொறுத்தவரை யாழ். குடாநாட்டில் அவருக்கு ஒவ்வொரு இடமும் தெளிவாகத் தெரியும். எல்லா இடம் பற்றியும் அவர் தரவுகளை வைத்திருந்தார். பொதுவாக கேணல் கிட்டு இல்லாத போது யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதல்களை ஜொனி வழிநடத்தினார். அந்தத் தாக்குதல்களில் கலந்து கொண்டார்.

10.4.85 யாழ்ப்பாணம் காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான வேவை ஜொனியும் லெப். வாசனும் செய்தனர்.

19.12.84 ஆம் ஆண்டு தெல்லிப்பழை கட்டுவன் வீதியில் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியவர் லெப். வாசன். இதில் கேணல் ஆரியப்பெருமா, 8 சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர்.

ஒருபுறம் சதுப்புநிலத்தையும் யாழ்ப்பாண டச்சுக் கோட்டையையும் மற்றொரு புறம் துரையப்பா விளையாட்டரங்க முன்புற பரந்தவெளி மைதானத்தையும் கொண்டிருந்தது சிறிலங்கா காவல்துறை. கோட்டையிலிருந்தும் அதற்கு இலகுவாக உதவி கிடைக்கக்கூடியதாக இருந்தது.

அதைத் தவிர்த்து நூறு அடி தொலைவில் குருநகர் முகாம் இருந்தது. கோட்டை, குருநகர், யாழ். காவல்துறை மூன்றும் ஒன்றுக்கொன்று தேவையான போது உதவிகளைப் பெறுகின்ற வகையில்தான் இருந்தது. அத்துடன் இந்த யாழ்ப்பாண காவல்துறை பலப்படுத்தப்பட்டிருந்தது. அகழிகள் வெட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. அதைச் சுற்றி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. நடுவிலே 60 அடி உயர பாதுகாப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு இரவும் பகலும் காவல் காக்கப்பட்டது.

ஆனால் காவல்துறை மீது வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அதை கைப்பற்றினர். இதற்கு ஜொனி மற்றும் வாசனின் பங்களிப்பு அளப்பரியது.

காவல்துறை கைப்பற்றப்பட்ட பின்னர் குருநகர் முகாம் மூடப்பட்டது. காவல்துறை கைப்பற்றப்பட்ட பின்னர்தான் யாழ்ப்பாணம் படிப்படியாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஒருமுறை கைக்குண்டு வெடித்தபோதும் கட்டுவன் சமரிலும் இந்தியப் படையுடன் சுதுமலையில் நடந்த தாக்குதலின் போது பாரூக் என்ற பெயரிலுமாக 3 முறை விழுப்புண் பெற்றவர் ஜொனி.

கட்டுவன் தாக்குதலின் போது நெற்றியின் உள்சென்ற ரவை காதின் வழியே வெளிவந்தது. அதனால் நெற்றியில் அவருக்கு மென்மையான தோலாக இருந்தது.

இந்தியாவுடனான சண்டையில் காயம்பட்ட பின்னர் அவர் இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். ஆனால் 1987 இல் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழம் திரும்பிய போது ஜொனியின் ஆற்றலைக் கண்டு அவருக்கு 90 பேர் கொண்ட அணியைத் தந்து ஒரு தாக்குதல் அணியாகப் பயிற்சி தந்து தாக்குதலில் ஈடுபடும்படி பணித்திருந்தார். முதன் முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தாக்குதல் அணியாகக்கூட அது இருக்கலாம்.

இந்த அணியிலே சிலரை அச்சுவேலிக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு தாக்குதலை மேற்கொண்டு 6 படையினரைக் கொன்று அங்கிருந்த படைக்கலன்களை ஜொனி கைப்பற்றி வந்தார்.

அதன் பின்பு அவர் இந்தியா சென்றுவிட்டார். இந்தியாவுடனான எங்கள் போர் வெடித்த போது ஜொனி இந்தியாவிலே இருந்தார்.

ஜொனி அங்கே இருந்தபோது மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்திய அரசு கொடுத்துவந்தது. மிக விரைவிலே நாங்கள் புலிகளை அழித்துவிடுவோம்- தேசியத் தலைவரைக் கைது செய்வோம் அல்லது கொல்வோம்- அருகாமையில் சென்றுவிட்டோம்- நாளை பிடித்துவிடுவோம் என்றெல்லாம் பொய்களைக் கூறிக் கொண்டு இருந்தனர். ஆனாலும் அவர்கள் எட்டிய தொலைவில் இல்லைதான். மிக அருகாமையில்தான் இருந்தனர்.

தேசியத் தலைவரைப் பொறுத்தவரை இந்தப் போராட்டத்தை எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதில்லை உறுதியோடுதான் இருந்தார்.

தான் இந்தப் போராட்டத்திலே கொல்லப்பட்டால் தன்னை தீருவிலிலே கொண்டு போய் எரிக்கும்படியும் போராளிகளுக்குக் கூறியிருந்தார். நானிருக்கும் வரை இந்தப் போராட்டத்தை நடத்துவேன். எனக்குப் பின்னால் வருகிற தலைவர்கள் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இந்தியா கொலை செய்தபோது தேசியத் தலைவர்கள் மிகவும் ஆத்திரமடைந்து இருந்தார். அவர்கள் உயிரைத் தற்கொடையாக அளித்து வீரச்சாவைத் தழுவியபோது திட்டமிட்டு ஏமாற்றி கொலை செய்ததாக மிகவும் கோபத்தோடு இருந்தார் தலைவர்.

அவர் உறுதியாக இருந்ததை அவருடன் இருந்தவர்கள் அறிவார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவித அச்சத்தோடு இருந்தார்கள். தேசியத் தலைவர் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். எனவே இந்தியா சொல்கிறபடி ஒரு சில படைக்கலங்களைத் தந்தாவது சமாதானத்தை நாங்கள் பேசலாம் என்று அவர்கள் எண்ணினார். இந்த வகையில் கேணல் கிட்டுவை ஜொனியை ஒரு சமாதானத் தூதுவனாக இந்தியா அனுப்பி வைத்தார்.

நெடுங்கேணியில் இந்திய வானூர்தியில் வந்திறங்கி அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைக்கு அழைத்து வரப்பட்டார்.

மணலாற்றுக் காட்டிலிருந்து என்னை ஜொனியை அழைத்துவர தலைவர் அனுப்பினார். மேஜர் தங்கேசுடன் நான் அவரை விசுவமடுவில் சந்தித்தேன்.

இரண்டு நாட்கள் நான் ஜொனியுடன் விசுவமடுவில் இருந்தேன். அப்போது ஜொனி, தலைவரின் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து வரப்போகிறது. எனவே நீங்கள் ஏதோ ஒருவகையில் சமாதானத்தைப் பேசி அதன்பிறகு ஒரு நிலை எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருக்கு இங்குள்ள நிலைமைகளைச் சொன்ன போது, சாமதானம் ஏற்பட சாகுவரை உண்ணாவிரதப் போராட்டத்தை இந்தியாவில் நடத்துவேன் என்றும் ஜொனி கூறினார். பிறகு நான் ஒரு இழுபறியுடன்தான் மேஜர் தங்கேசுடன் புறப்பட்டோம். போகின்ற வழியில் இந்த இந்த இடங்களைச் சுட்டிக்காட்டி அங்கு இந்திய பாசறைகள் அமைக்கும், அங்கு உங்கு சுற்றி வளைக்கும் உணவுப் பிரச்சனை வரும்- தண்ணீர் பிரச்சனை வரும் என்றெல்லாம் கூறினார். அவர் கூறியதுபோல் பின்னர் இந்தியப் படை அந்த அந்த இடங்களில் எல்லாம் பாசறைகள் அமைத்தது உண்மைதான்.

நான் அவரைக் கூட்டிச் செல்லும்போது, “தலைவரைச் சந்தித்து பெரும்பாலும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்- சொல்வீர்களா என்று தெரியவில்லை- இருந்தாலும் சொல்லுங்கள்” என்று சொன்னேன்.

நாங்கள் பாசறையை அடைந்த போது இரவு 11.30 மணி இருக்கும். அவர் உறங்கிக் கொண்டிருந்தார். வாசலில் ஜொனியைப் பற்றி சொன்னேன். காலையிலே சந்திக்கிறேன் என்று மெதுவாகத்தான் சொன்னேன். அப்போது தலைவர் உள்ளிருந்து கேட்டார், ஜொனி வந்தாச்சா? யோகி வந்துள்ளாரா? என்று.

அந்தக் காலகட்டத்தில் மெல்லிய சப்தத்திற்கு கூட விழித்து விழிப்பாக இருப்பார். அதேபோல் யாராவது காட்டைவிட்டு வெளியே போய்விட்டால் எப்போதும் விழிப்பாக இருக்கிற பழக்கம் உண்டு. அந்த வகையில் உறங்கிக் கொண்டிருந்தபோதும் தலைவர் விழிப்பாகத்தான் இருந்தார்.

தலைவருடன் 2, 3 நாட்கள் ஜொனி இருந்தார். கதிரை, மேசை எல்லாம் அப்போது இல்லை. பாயைப் போட்டுக் கொண்டு தரையில்தான் இருப்போம். சப்பாணி கட்டிக் கொண்டு தலைவருக்கு முன்னாள் ஜொனி பேசிக் கொண்டிருந்தார். நாங்களும் பலருமாக அந்த இடத்துக்குச் சென்று வருவதுண்டு.

பின்னர் ஜொனி அங்கிருந்து இந்தியா செல்ல ஆயத்தமாக இருந்தபோது சூட்டி என்பவர் அழைத்துச் செல்வதாக இருந்தது. அப்போது ஜொனியை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று கேட்டேன், “என்ன நடந்தது? எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டீர்களா?” என்று கேட்டேன். அவர் வாயைப் பொத்திக் கொண்டு சொன்னார்..”எதுவுமே கதைக்காதீங்க.. நான் ஒன்றுமே கதைக்கலை. அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்” என்றார். “என்ன முடிவு?” என்று கேட்டேன்.

தலைவர் கூறினார், “இந்திய படை அழைத்துதான் இங்கு வந்ததாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் திரும்பிப் போய்விட்டு தலைமறைவாகி இங்கே வாருங்கள். பெரிய பயிற்சி முகாமுக்கு பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. யாழ். குடாவை கைப்பற்ற வேண்டியுள்ளது. அதைச் செய்வதற்கான ஆயத்தத்துடன் வாருங்கள்” என்றார். “நான் போகிறேன். திரும்பி அந்த ஆயத்தங்களோடுதான் வருவேன்” என்றார் ஜொனி.

இடையிலேயே ஒரு தளம்பல் நிலையில் ஜொனி இருந்தபோதும் இங்கே தலைவரைச் சந்தித்த போது மிக உறுதியோடு மீண்டும் சென்று இங்கே திரும்பி பெரிய அளவில் பயிற்சிகளை தந்து போராளிகளை வளர்த்து யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றுவதற்கான நம்பிக்கையோடுதான் சென்றார்.

ஆனால் அவர் செல்லும்போது தேராவிலுக்கு அண்மையில் இந்தியப் படையின் சுற்றி வளைப்பில் அவர் கொல்லப்பட்டார். மிகப் பெரிய சிறந்த பண்பான உயர்ந்த ஒரு போராளியை நாங்கள் இழந்தோம்.

அவரைப் பொறுத்தவரை யாழ். குடாநாடு என்பது அவருக்கு வீடு போல். எல்லா இடமும் அவருக்குத் தெரியும். 1983 ஆம் ஆண்டிலிருந்து அவர் வீரச்சாவடைகின்ற வரை அவரது பங்களிப்பு இருந்தது.

போராளிகளால் மட்டுமல்ல- பொதுமக்களாலும் மதிக்கப்படுகிற ஒரு மனிதனாக ஜொனி வாழ்ந்தார்.

இத்தனை திறமைகொண்ட சிறந்த வீரனை நாங்கள் இழந்து நின்றோம். இருந்தபோதும் எங்கள் போராட்டம் தொடருகின்றது. அவர்களை நினைவு கூருவது எல்லாமே அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும் என்பதை நினைவூட்டவே என்றார் யோகி.

போராட்ட கலைஞன் லெப். கேணல் சங்கர்


தாயகத்தின் கலையுலகில் குறிப்பாக வன்னியில் நன்கு அறியப்பட்டவர் லெப்.கேணல் சங்கர். மிகக் கம்பீரமான குரல் வளம் கொண்ட சங்கர் பதினைந்து ஆண்டுகளுக்கு கூடிய காலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு தன்னை முழுமையாக இணைத்துப் பயணித்தவர்.

கலைத்துறை சார்ந்த செயற்பாடுகளில் கூடுதல் பங்குவகித்த சங்கர் ஆரம்பத்தில் முல்லைத்தீவு மாவட்ட கலைபண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளராக நன்கு அறியப்பட்டவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பக்கங்களில் கலைத் துறை அம்சங்களுடன் கூடுதலான அல்லது பிரிக்கப்பட முடியாத ஒரு அம்சம் தெருவெளி நாடக நிகழ்வுகளாகும். இந்த நாடக நிகழ்வுகளினை வன்னியில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த முக்கியமானவர்களில் லெப்.கேணல் சங்கர் அவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளைக் கிராமத்தினைச் சேர்ந்த திரு சங்கர் தெருவெளி நாடகக் கலைஞர்கள் பலரது தோற்றத்திற்கும் அவர்களது வளர்ச்சிக்கும் மிக முக்கியமானவராக விளங்கியவர். இவரது தேடல் ஊடாக வெளிவந்தவர்களில் பலர் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்ட பெருமைக்குரியவர்களாக மாறியிருந்தனர். என்பது அவரது ஆளுமைக்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். மிகக் குறைந்த வயதில் தாயகத்தின் கலை உலகில் தனக்கென இடம் பிடித்த கப்டன் குட்டிக்கண்ணன் வெளிவரவும் அந்தக் கலைஞனது கலையுலக வாழ்வின் ஆரம்ப அடித்தளங்களை இட்டபெருமையும் லெப்.கேணல் சங்கர் அவர்களையே சாரும்.

தெருவெளி நாடகங்கள் வன்னிப்பெருநிலத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் போராட்டகால நிகழ்வுகளையும் கருத்துக்களையும் பரப்பக்கூடிய எளிமையான ஊடகமாக இருந்தது. வன்னியின் மூலைமுடுக்குகள் எல்லாம் விரைந்துசென்ற கலைஞர்கள் விடுதலைப் போராட்ட பயணத்தில் தமது பங்களிப்பை சிறப்போடு செய்திருந்தார்கள்.

இதேபோன்று தெருவெளிக் கலைஞர்களின் முழுமையான பங்களிப்புடன் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட போர்ப்பறை, வெற்றி முரசு ஆகிய பாடல் இறுவட்டுக்கள் உருவாக்கத்திலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. போர்ப்பறை இறுவட்டில் அவரது குரலில் அறிமுகம் இடம்பெற்றுள்ளது.

ஆரம்பம் முதல் இறுதிவரையில் வன்னியில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாயும் புலி பண்டாரவன்னியன் நாடகத்தில் பண்டாரவன்னியன் கதாபாத்திரத்தை தானே ஏற்று நாடகத்தில் பாத்திரமாகவே வாழ்ந்து காட்டும் சிறப்புடையவர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திரைப்பட உருவாக்கல் பிரிவின் பொறுப்பாளராக கடமை ஏற்றதன் பின்னர் நிதர்சனம் நிறுவனத்துடன் இணைந்து பெருமளவான குறும்படங்களை வெளியிடுவதற்கு கடுமையாக உழைத்தார்.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலையூடான பணியினை முன்னெடுத்த லெப்.கேணல் சங்கர் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் என்ற கிராமத்தில் 14.03.2009 அன்று களப் பணியில் ஈடுபட்டிருந்த போது வீரச்சாவை எய்தினார்.

இன்னமும் நீண்ட வரலாற்றுப் பக்கங்களைக் கொண்ட லெப்.கேணல் சங்கர் வாழ்வோடும் கலையோடும் விடுதலைப் போரோடும் தன்னை இணைத்துக் கொண்டு வீழ்ந்த போதிலும் அம் மாவீரனது நினைவுகளுடன் பயணிப்போம்…

————————————–

தெருவெளி கலைஞர்களின் உருவாக்கத்தில் உருவான போர்ப்பறை மற்றும் வெற்றிமுரசு இறுவட்டின் பாடல்கள் சிலவற்றை இங்கு கேட்கலாம்

போர்ப்பறை அறிமுகம்

அடிபணிந்து வாழ்வதோ

வெற்றிமுரசு இங்கு முழங்கட்டும்

புலியாட்டம் ஆடு

டப்பாங்கூத்து பாட்டுத்தான்

Up ↑