இராணுவத்தில் பெண்கள் – உடற் பலமும் மன பலமும் உள்ள பெண்களால் இராணுவ சேவையில் ஆண்களைப் போல் செயற்பட முடியும் அரசியலிலும் ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற நிலை.

பெண்களும் சாதிக்க பிறந்தவர்கள் என்பது வரலாற்றுச் செய்தி. சுவீடன் நாட்டு உடற் கூறியல் விஞ்ஞானி டாக்டர் லென்னார்ட் லெவி செய்த ஆய்வில் பெண்களின் தாக்குப் பிடிக்கும் வலு பற்றிய திறன் கூறும் தகவல் வெளிவந்துள்ளது அவர் தனது ஆய்வுக்கு 20க்கும் 45க்கும் இடைப்பட்ட வயதினரான 32 பெண்களையும் அதேயளவு ஆண்களையும் தெரிவு செய்தார்

கப்டன் கோபி நினைவில் மாலதி படையணி

இரு பாலாரும் நல்ல உடற் கட்டமைப்பு, ஆரோக்கியம், கல்வித் தகமை, வேறுபட்ட நிலமைகளைச் சமாளிக்கும் வலு உள்ளவர்களாக இருப்பதை உறுதி செய்து கொண்டார் அவர் ஒரு உடல் உளப் பயிற்சித் திட்டத்தை வகுத்தார் தெரிவு செய்த ஆண் பெண் இரு பாலாரையும் அந்தப் பயிற்சித் திட்டத்திற்கு உட்படுத்தினார்.

அவர் நடத்திய பரிசோதனை 72 மணி நேரம் நீடித்தது சோதனையின் போது பெண்கள் சொற்ப நேரம் ஓய்வு எடுத்தார்கள் ஆண்கள் அதிக நேரம் ஓய்வு எடுத்ததோடு சோர்ந்தும் காணப்பட்டார்கள் உளவியல் பயிற்சியில் ஆண் பெண் இரு பாலாரும் சமவலுவுடன் காணப்பட்டனர் அமெரிக்க இராணுவத்தில் பெண்கள் பெண் இராணுவத்தினர் உடலமைப்பு, உடற்பலம், நோய் எதரிப்பு பற்றிய ஆய்வுகள் அமெரிக்க இராணுவ மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டன. ஆண் பெண் இரு பாலாருக்கும் இடையில் உடலமைப்பு வேறுபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஒரு சராசரி பெண்ணின் உயரம் ஒரு சராசரி ஆணின் உயரத்திலும் பார்க்க குறைவாக இருந்தது பொதுவாகப் பெண் இராணுவத்தினரின் உயரம் அண் இராணுவத்தினரின்உயரத்திலும் பார்க்க குறைவாக இருக்கிறது. பெண்களின் தோளில் இருந்து இடுப்பு வரையான எலும்புகள் ஆண்களின் அதே பகுதி எலும்புகளிலும் பார்க்கப் பலம் குறைந்தவையாகவும் உள்ளன. முதுகு மற்றும் முதுகுத் தண்டு உபாதைகள் பெண்களைக் கூடுதலாகத் தாக்குகின்றன.

ஆண் பெண் இரு பாலாருக்கும் இடுப்புப் பகுதியில் 7 எலும்புகள் மாத்திரம் இருக்கின்றன.


பெண்களுக்கு மாத்திரம் பிரத்தியோகமாக மகப்பேற்று உறுப்புக்கள் உள்ளன. சிசு வெளியேறும் போது இடுப்பு எலும்புகள் விரிந்து கொடுக்கின்றன ஆண்களுக்கு அவற்றிற்கு இடமில்லை களமுனையில் போராடும் பெண்களுக்கு கூடுதலாக எலும்பு முறிவுகள் ஏற்படுகின்றன சராசரிப் பெண்களின் எலும்புகளின் தன்மை வித்தியாசமானது.

மாத விடாய் நின்ற வயது பெண் போராளிகளின் எலும்பு முறிவு விகிதம் அதிகளவில் உயர்ந்துள்ளது. மன வலிமையைப் பொறுத்தளவில் பெண் இராணுவத்தினர் ஆண்களிலும் கூடிய மனவலுடன் இருக்கின்றனர். இது அவர்களுடைய உடற் குறைபாடுகளை நிவர்த்தி செய்கின்றது. இவ்வாறு ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஆண்களின் இராணுவ அணியில் பெண்கள் ஆண்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் அணியில் பெண் இராணுவத்தினர் ஒரு அங்கமாக இடம்பெறுகின்றனர் இது மேற்கு நாடுகளில் இன்று வரை காணப்படும் வழமை ஆண்களின் கட்டமைப்பில் அங்கம் வகித்தவாறு அதியுயர் கட்டளைப் பதவிக்கு உயர்ந்த பெண்களை மேற்கின் முப்படைகளிலும் காணலாம்.

தரைக் கரும்புலிகள் அணி

உளவுப் பணி, இரகசிய சேவை என்பனவற்றில் பெண்கள் தமது அசாத்திய திறமையை நிரூபித்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து, பிரான்சு நாட்டு இளம் பெண்கள் எதிரி நாட்டுக்குள் புகுந்து தகவல் திரட்டியுள்ளனர். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகம்

ஐர்மன் படைகளுக்கும் ருஷ்யப் படைகளுக்கும் ஸ்ராலின்கிராட் போர்களத்தில் நடந்த சமரில் கல்லூரி மாணவிகள் பங்களிப்புச் செய்து வீர வரலாறாகி உள்ளனர் தாயகத்திற்கு ஆபத்து போரிட வாரீர் என்ற குரல் கேட்டதும் ருஷ்ய மருத்துவக் கல்லூரி மாணவிகள் களத்திற்குச் சென்றனர்.

விமான எதிர்ப்பு பீரங்கிகளை இரவு பகல் பாரது இந்த மாணவிகள் இயக்கி உள்ளனர் காயம் பட்ட ஆண்படையினருக்கு இரத்த தானம் செய்வதில் பெண்கள் முன்னணி இடம் வகித்தனர் படுகாயம் அடைந்த ருஷ்யப் படையினரைப் போர் களத்தில் இருந்து காவிக் கொண்டு வரம் பணியிலம் இளம் பெண்கள் ஈடுபட்டனர்.

ஸ்ராலின்கிராட் போர்களத்தில் இறந்தவர்களின் பெயர்ப் பட்டியல் ஸ்ராலின் கிராட் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது சாவடைந்த பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் தொகையை எட்டுமளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது. தமக்கெனத் தனி அணியில் இயங்கும் பெண் போராளிகள் தனித்துவமான பல போரியல் அம்சங்களுடன் திகழும் தனிப் பெண் போரணிகள் இரண்டை தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர்.

சோதியா படையணி, மாலதி படையணி, என்ற பெயர் பெற்ற இரண்டும் வீரச்சாவடைந்த பெண் போராளிகளின் பெயரால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இதில் மாலதி என்பார் களத்தில் வீழ்ந்த முதற் பெண் போராளி என்பது குறிப்பிடத்தக்கது. ஆண் தலைமையின்றிச் சுயமாகப் பெண் தலைமையில் இயங்கும் பிறிதோர் படையணியை வேறேங்கேணும் காணமுடியாது.

தரைக் கரும்புலிகள் அணி

மாலதி படையணி எண்ணிக்கையில் மிகப் பெரியது சுயமாக இயங்கும் கட்டளைக் கட்டமைப்பை அது கொண்டிருந்தது (Command Structure) இந்தப் படையணிக்கான நிதி ஒதுக்கீடு ஆண்கள் படையணியிலும் கூடியது நிதி அறிக்கைப்படி பெண் போராளிகளுக்கான செலவினங்கள் அவர்களுடைய விசேட தேவைகள் கருதி மிகக் கூடுதலானது.
2ம் லெப் மாலதி படையணி
மருத்துவப் பிரிவு, ஆயுதக் களஞ்சியப் பிரிவு, பயிற்சிப் பிரிவு, உளவுப் பிரிவு, அரசியல் கல்விப் பிரிவு உள்ளடங்கலான பல கட்டமைப்புப் பிரிவுகளை இரு படையணிகளும் கொண்டிருந்தன. இரு படையணிகளும் இரு பிரிகேடியர்கள் தரப் பெண் அதிகாரிகள் தலைமையில் இயங்கின

நவீன போரியல் கல்விக்கு இப்படையணிகள் பற்றிய விரிவான வரலாற்று ஆய்வு அடிப்படையாக அமையும்.