Search

Eelamaravar

Eelamaravar

Month

September 2010

லெப்.கேணல் நரேஸ், லெப்.கேணல் ரதன் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள்


சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட யாழ்.தேவி படைநடவடிக்கையில் கிளாலி நோக்கிய முன்நகர்விற்கு எதிரான முறியடிப்புச் சமரில் 29.09.1993 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நரேஸ்(நாயகம்) உட்பட் மாவீரர்களினது 17ம் ஆண்டு நினைவு நாளும்


29.09.2006 அன்று யாழ். தீவகக்கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் ரதன்(பொன்முடி) அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.

மாவீரர் மேஜர் இனிதன் 3 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்


வடமுனையில் சிறப்புடன் செயற்பட்டவர் மேஜர் இனிதன்.. மேஜர் இனிதன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி மாவட்டத்தை நிலையான முகவரியாககொண்ட புண்ணியமூர்த்தி பிரதீபன் என்ற மாவீரனின் மூன்றாம் ஆண்டு வீரவணக்கநாள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.

வடபேர்முனையில் பிரிகேடியர் தீபன் அவர்களின் கட்டளையின் கீழ் சிறப்புற செயற்பட்டு பலகளங்களை கண்ட மேஜர் இனிதன் 2007.09.27 அன்று முகம்மாலையில் சிறீலங்காப்படையினரின் படைநகர்விற்கு எதிரான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.

ஓயாத அலைகள் 2இல் வீரகாவியமான மாவீரர்களின் வீரவணக்க நாள்

27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள் 2 படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.






இவ்வெற்றிச் சமரில் முக்கிய பங்கேற்று ஊடறுப்பு அணி ஒன்றின் தலைவியாகச் சென்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் செல்வி, லெப்.கேணல் ஞானி போர்முனையில் தாம் நின்றிருந்த இடம் மீது செல் போடுங்கோ !!

எங்களைப் பார்க்க வேண்டம் எனக் கூறி எதிரிக்கு பேரழிவை ஏற்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தவர்கள் !!!!


லெப்.கேணல்கள் சித்தார்த்தன்(சித்தா), செல்வி(றியன்சி), ஞானி, ஈஸ்வரகாந்தன், காந்தசீலன், விசு, மைந்தன், மணிமேகலன் உட்பட 400 வரையான மாவீரர்கள் கிளிநொச்சி மண்ணை மீட்பதற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கினர்.


27.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் நிசாந்தன் அவர்களி்ன் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.


26.09.2006 அன்று திருகோணமலை மாவட்டம் இலுப்பைக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சுரேஸ் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.

தியாக தீபம் திலீபன் , கேணல் சங்கர் நினைவு சுமர்ந்து


“தியாகி திலீபன்சொன்ன- செய்தி என்ன? “இந்த இனம்- இந்தத் தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் அது போராடும். புல்லையும் எடுத்து அது போராடும். அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது!. பேரம் பேசாது-விட்டுக் கொடுக்காது. ஆயுதம் இல்லாவிட்டாலும்-உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது! அது தொடர்ந்து போராடும். தன்னுடைய விடுதலைக்காக-நியாயத்திற்காக- நீதிக்காக-அது எந்த சக்தியையும் எதிர்த்துப் போராடும்.”

” தியாகி திலீபன் ஒரு இலட்சிய நெருப்புதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

வீரவரலாற்று பின்ணணி காணொளியில்



தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே

தேசியத் தலைவர் பிரபாகரனின் உரை திலீபனின் வீரச்சாவின் பின் 26-09-1987-காணொளி


வீரவரலாற்று பின்ணணியும் உரையும் காணொளியில்

தாயக விடுதலைக்காக தம்முயிர் தந்த இம் மாவீரரை வணங்கி அவர்கள் நினைவாக இவ் ஆவணப்பதிவுகளை இற்றைப்படுத்திக்கொள்ளுகின்றோம்

மூத்த தளபதி கேணல் சங்கர்

வைத்திலிங்கம் சொர்ணலிங்கம்
26-09-2001

தியாகி திலீபனின் பதின்நான்காம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்காக ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்தது. ஈழ விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

வீரவரலாற்று பின்ணணி காணொளியில்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் மூத்த தளபதியுமான கேணல் சங்கர் அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வுகள் வன்னிப் பகுதிகளில் பெரும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றன. வியாழக்கிழமை மாலை முல்தைததீவு மாவட்டம் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற இறுதிக்கிரியைகளில்; விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கலந்துகொண்டு தனது இறுதி வணக்கத்தை செலுத்திக்கொண்டார். இயக்க உறுப்பினர்கள், தளபதிகள், பொறுப்பாளர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்; இராணுவ மரியாதைகளுடன் நடைபெற்று இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர் என வன்னித் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் ஏற்றிவைக்க, கேணல் சங்கருக்கான ஈகைச்சுடரினை அவரின் துணைவியார் ஏற்றிவைத்து மலர்மாலை அணிவித்தார். தொடர்ந்து தலைமை உரையினை முள்ளியவளை பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. முகுந்தன் வழங்கினார். தொடர்ந்து வீரவணக்க உரையினை தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை அவர்கள் வழங்கினார்.

’20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களுடன் உற்ற நண்பனாக இருந்து, இந்திய இலங்கை இராணுவங்களுக்கெதிரான அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கெடுத்த இந்த வீரத்தளபதியின் இறுதி நிகழ்விலே பங்கெடுத்திருக்கின்ற நாங்கள் அனைவரும், அவர்களுடைய குடும்பத்தினருடன் இந்நிகழ்வைப் பகிர்ந்து கொள்கின்றோம்.


‘1981ஆம் ஆண்டின் ஆரம்பத்திலே தனது சகோதரன் சித்தார்த்தன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே தலைவர் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட சங்கர் அவர்கள் 1983இல் தலைவரோடு முழுமையாக இணைந்துகொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை சகல நடவடிக்கைகளிலும் பங்கெடுத்தவர் இவர். இவரின் சகோதரன் சித்தார்த்தன் 1986 இல் நாவற்குழி இராணுவ முகாமைத் தாக்கி அழிக்கின்ற முயற்சியில் பென்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவருடைய அடுத்த சகோதரன், இந்தியாவில் இருந்து தமிழீழம் வந்துகொண்டிருந்தபோது, இந்தியாவினதும் இலங்கையினதும் துரோகத்தனத்தால் குமரப்பா புலேந்திரன் அவர்களோடு கப்டன் கரனாக சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தார்.

அவரின் இரு சகோதரர்கள் 2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர். மற்றொரு சகோதரன் கொழும்பில் தமிழீழ துரோகக் கும்பல்களினால் அழிக்கப்பட்டார். இப்படியாக இன்று இந்தக் குடும்பம் இந்த விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழுமையாக இழந்து நிற்கின்றது.

‘இந்திய இராணுவம் இங்கே வந்தபோதுகூட மணலாறு காட்டுப்பகுதியில் தலைவர் செயற்பட்ட காலங்களிலெல்லாம் அவரோடு நண்பனுமாய் சகோதரனுமாய் மட்டுமல்லாது அவரின் உறுதுணையாகவும் நின்றவர். காட்டில் இருந்த காலங்களில்கூட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் பல ஆண் பெண் போராளிகளுக்கு போர் நுட்பங்களையும், போர்க்கருவிகளையும் பயிற்றுவித்த சிறந்த ஆசான்.

‘இந்திய இராணுவம் வெளியேற்றப்பட்ட காலப்பகுதியில் தலைவரின் எண்ணத்திற்கு புதுவடிவம் கொடுத்து கடற்புறா என்ற பெயரில் கடற்புலி அமைப்பொன்றை உருவாக்கியவர். முதன்முதலில் பாரிய கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதலுக்காக கொலின்ஸ், காந்தரூபன், வினோத் ஆகிய கடற்கரும்புலிகளை வழிநடத்தி வெற்றிகரமாக அத்தாக்குதலை மேற்கொண்டவர்.

‘ஓயாத அலைகள் ஒன்று, இரண்டு, மூன்று இப்படியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடக்கின்ற யுத்தங்களின் போது தலைவருடன் கூட நின்று இராணுவ அசைவுகள் போராளிகளின் செயற்பாடுகள் யாவற்றையும் கவனித்து தெளிவுபடுத்தி வெற்றிப்பாதையில் கொண்டுநடத்திய இந்த வீரத்தளபதி இப்போது எங்களோடு இல்லை. தமிழீழத்தினுடைய பல பிரதேசங்களை எமது ஆளுகைக்குள் கொண்டு வந்திருக்கின்ற இந்தக் காலப்பகுதியில் எதிரியின் ஊடுருவல் நடவடிக்கையால் இவர் அழிக்கப்பட்டிருக்கின்றார்.

’20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ மக்களாகிய உங்களுக்காக, காடுகளில் நீரின்றி உணவின்றி உழைத்து இந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வளர்த்தவர் இன்று எதிரியின் ஊடுருவல் அணியால் அழிக்கப்பட்டுள்ளார். சிறீலங்கா இராணுவம் 3 ஆண்டுகளாக பகுதி பகுதியாக ஆக்கிரமித்த பெரும் நிலப்பகுதியை மூன்றே நாட்களில் மீட்டெடுத்துள்ள இந்தக் காலகட்டத்தில் இப்படியான நிகழ்வுகள் இனிமேலும் தொடரக்கூடாது.

எமது விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையும் தலைவரைப் பொறுத்தவரையும் இது ஒரு பெரும் இழப்பு. இந்த நிகழ்வு தமிழீழத்திற்கே ஒரு சோக நிகழ்வு. விடுதலைப் போராட்டம் இலக்கை நோக்கி வீறுநடைபோடும் நேரத்தில் இவ்வாறான சோக நிகழ்வுகள் இனியும் ஏற்படாமல் விரைந்து இலக்கை அடைய உங்களால் ஆன பங்களிப்பை கேட்டுக்கொள்கின்றேன்” என்று துயரமயமாக நின்ற தமிழீழ மக்களிடம் வேண்டுகோள் விடுத்து தனது வீரவணக்க உரையை நிறைவுசெய்துகொண்டார்.

இவருடைய இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் செல்வி சாம்பவி அவர்களின் உரை:

‘எல்லாவற்றிலுமே பங்கெடுத்து எல்லாவற்றிலுமே பங்குகொண்டு தன்னுடன் கூடிக்கழிக்கும் உற்ற நண்பனை இன்று தலைவர் பிரிந்திருக்கின்றார். ஆனால் எங்களுடைய சங்கர் அண்ணாவைப் பொறுத்தவரையில் இவ்விடுதலை இயக்கத்தில் நாங்கள் அனைவருமே அவருக்கு குழந்தைகள் போன்றவர்கள் தான். அவர் ஒவ்வொரு போராளிகளையும் அணுகுகின்ற விதம் பழகும் விதம் அறிவுரைகள் சொல்லிக்கொடுக்கும் விதம் வித்தியாசமானது. நாங்கள் சங்கர் அண்ணா என்ற பெயரை அவரை அறியும் முன்பே அறிந்திருக்கின்றோம். எப்படியென்றால் இந்திய இராணுவ காலத்தில் மணலாறில் எங்களுடைய தேசியத் தலைவர் இருந்த காலத்தில் அவரது நிழலாக இருந்தவர் சங்கர் அண்ணா.

அக்கால கட்டத்தில்தான் எமது அமைப்பில் பெருமளவான பெண் போராளிகள் இணைந்து தலைவருக்கருகில் பயிற்சிப்பாசறை அமைத்து பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த காலகட்டம். பெண்களுக்கு காடு புதிது. காட்டிலும் பயிற்சி காவற்கடமை எல்லாமே புதிது. எல்லாவற்றையுமே பயின்று கொண்டிருந்த அந்தக்காலகட்டத்தில் நாங்கள் போக வேண்டிய திசை எது, இடம் எது எமக்கு முன்னால் இருக்கும் மரம் எது, பக்கத்தில் இருக்கும் மரத்தின் இலை எது, விலங்குகளின் அடியைக்காட்டி அவ்விலங்கு எது என அனைத்தையும் அப்போராளிகளுக்கு அணுவணுவாக கற்றுக்கொடுப்பதுடன், அவர்கள் விடும் குறும்புகள் சிறு தவறுகளை தலைவரிடம் மிகவும் வெளிப்படையாகவே கூறுவார்.

இதனால் எங்களுடைய பெண் போராளிகள் இவரைக் கண்டாலே ஓடி ஒளித்துக்கொள்ளும் அளவுக்கு அவர்களுடன் மிகவும் பாசமாகவும், கண்டிப்பாகவும் பழகி ஓர் தந்தையைப்போல பல சந்தர்ப்பங்களில் ஓர் தாயைப்போல எங்களுடைய போராளிகளை வளர்த்துவிட்ட பெருவிருட்சம். இன்று பல போராளிகளின் மக்களின் கண்கள் கண்ணீர் வடிக்கின்றன. நெஞ்சு கனத்துக்கொண்டிருக்கின்றது.

‘நாங்கள் தமிழர்கள், நாங்கள் விடுதலைப் புலிகள், எங்கள் கண்களில் இருந்து வழிவது நிச்சயம் வெறும் கண்ணீராக இருக்காது. எங்கள் நெஞ்சங்களில் கனப்பது நிச்சயம் வெறும் சோகமாக மட்டும் இருக்காது. இதற்கான பதிலை எதிரி நிச்சயம் எதிர்கொள்வான். எங்கள் தளபதியின் ஆத்மார்த்தமான அந்த இலக்கினை நாங்கள் விரைவில் அடைவோம்.

அதற்காக இன்னும் எத்தனை எத்தனை இலைகளும் கிளைகளும் முறிந்து விழுந்தாலும், அதனை எதிர்கொள்ள இந்த மண் தயாராகவே இருக்கின்றது. இழப்புகள் என்றும் எம்மைத் துவளச்செய்துவிடாது. தூக்கி நிமிர்த்துவதும் இலக்கை நோக்கி பாயச்செய்வதும் எங்கள் மாவீரர்களின் அந்த ஆன்மாவின் பாடல்தான். இன்று வித்துடலாக உறங்கிக்கொண்டிருக்கும் எங்கள் தளபதியின் வித்துடல் மீது ஆணையாக, நாங்கள் அவர் காட்டித்தந்த பாதையில் உறுதியுடனும், திடமுடனும் விரைந்துசெல்வோம்.

அவர் எந்த இலட்சியத்திற்காக இருபது வருடங்களாக உழைத்தாரோ அந்த இலட்சியத்தை மிக குறுகிய காலத்தில் ஈடேற்றுவோம். இன்று எமது கண்களில் வடிந்துகொண்டிருப்பது வெறும் கண்ணீர் அல்ல நெருப்பு நதி” என்று தெரிவித்தார்

வேரில் விழுந்த மழை தியாகதீபம் திலீபன்-காணொளி

வேரில் விழுந்த மழை என்ற காணொளியை தியாகதீபம் திலீபனின் 23ம் ஆண்டு நினைவாக வெளியீட்டுள்ளோம்

———
வீரவரலாற்று பின்ணணியும் உரையும் காணொளியில்

தியாக தீபம் திலீபன் பாடல்

தேசியத் தலைவர் பிரபாகரனின் உரை திலீபனின் வீரச்சாவின் பின் 26-09-1987-காணொளி

லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள்


25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்கள் உட்பட்ட மாவீரர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீர மறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

வீரமரணம் 25-09-1992

லெப்டினட் கேணல் சுபன் மன்னார் மாவட்டத்தின் விசேடதளபதியாக ஆனி 1989ல் சுபன் பொறுப்பேற்றுக் கொண்டார் அதற்கு முன் மன்னார் மாவட்டத் தளபதியாக லெப். கேணல். விக்டர் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே பல தாக்குதல்களில் பங்குகொண்ட சுபன் அவர்கள், சிலாபத்துறை முகாம் தகர்ப்பு தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடைபெற்ற தாக்குதலிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும், நானாட்டான் வங்காலை வீதியில் ரோந்துப் படையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலிலும், கொக்குப்படையான் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும், ஆனையிறவு இராணுவ முகாம் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்தவர் ஆவார், இறுதியாக 25.09.92அன்று, பூநகரியில், பள்ளிக்குடா இராணுவமுகாம் மீதான தாக்குதலில், இரண்டு சிறீலங்கா இராணுவ மினிமுகாங்கள், 62 காவலரண்களை தகர்த்தெறிந்த வீரப்போரில் லெப். கேணல் சுபன், மேலும் 5 போராளிகளும் வீரச்சாவை தழுவிக்கொண்டனர்.


நாங்கள் ஒரு தேசிய இனம். எங்களுக்கானது எமது தேசம். அத்தேசத்தில் சுபீட்சான, சுதந்திரமானதொரு வாழ்வு வேண்டும். காலம் காலமாய் அடக்குமுறைக் கரங்களுக்குள் நசிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்ததுபோதும் என எண்ணிய காலத்திலிருந்து விடுதலைக்கான கோரிக்கைகள், உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் என்று அகிம்சை வழிப் பாதைகள் வலிமையாய் ஆயுதங்களால் அடக்கப்பட்டு எங்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டு மூச்சிடாது திணறியபோது அந்த ஆதிக்கக் கரங்களின் கோரப் பிடிகளை உடைத்தெறிய எழுந்த தமிமீழ மக்கள் இன்று ஆயுதம் ஏந்தி ஒரு மாபெரும் போராட்டத்திற்குள் விடுதலைக்கான தடைகளை ஒவ்வொன்றாய் அகற்றி வருகின்றனர்

1983ல் திருநெல்வேலியில் வழிமறித்துத் தாக்கும் யுத்தத்துடன் அனேக இளைஞர்கள் படிப்டியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு போராளிகளாக மாறிக்கொண்டிருந்தனர். இராணுவமும் அரசும் தமிழீழ மக்களின் உரிமைகள் அத்தனையையும் ஒவ்வொன்றாய் பறித்தன. தமீழத்தின் அத்தனை தெருக்களிலும் இராணுவம் கால்பதித்துக் கொண்டிருந்தது, இவர்களைக்கண்டு நெஞ்சு கொதித் தெழுந்தவர்களில் ஒருவராய் சுபன் (சுந்தரலிங்கம்) 1984ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

‘சுபன்’

தமிழீழத்தில், மன்னார் மாவட்டத்தில், கள்ளியடி என்னும் கிராமத்தில் 1965ம் ஆண்டு, ஆடி மாதம், 21ம் திகதி பிறந்தார். விநாசித்தம்பிக்கும், மகிளம்மாவிற்கும் அன்பு மகனாக, பன்னிரண்டு சகோதரரிடையே இவர் பிறந்தார். கள்ளியடியில் தனது ஆரம்பக்கல்வியை தொடங்கி, பின் அயல்கிராமத்திலுள்ள மகாவித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

இவருக்கு பெற்றோர் இட்டபெயர், சுந்தரலிங்கம். அன்பொழுக அழைக்கும் பெயர் மணியம். விடுதலை வீரனாய், விடுதலைப் புலிகளின் முகாமில் அவர் பெற்ற பெயர் சுபன்.

1984ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில், ஆயுதப் போராளியாக தன்னை இணைத்துக்கொண்ட சுபன், இந்தியாவில் தனது ஆயுதப் பயிற்சியையும், பின்னர் விசேடகொமாண்டோப் பயிற்சியையும் முடித்து, தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலனாக கடமையாற்றினார். பின்னர் களத்தில் போரிடுவதற்காய் தமிழீழம் வந்தார். தனது சொந்த இடமான மன்னாரிலேயே அப்போதைய மன்னர்ர் மாவட்டத் தளபதியான விக்டருடன் தோளோடுதோள் நின்று போராடினார்.

சமாதானக் கொடியேற்றிவந்த இந்திய இராணுவத்தினருடன் கடுமையான போராட்டம் நடாத்த வேண்டியிருந்த காலத்தில் மிகவும் திறமையாகப் போராடி பல களங்களில் வெற்றிவாகை சூடி 1989ம் ஆண்டு மன்னார் மாவட்டத்தின் விசேட தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். பல தாக்குதல்களில் பங்கு கொண்ட சுபன் சிலாபத்துறை முகாம் தாக்குதலிலும், மன்னர் பழைய பாலத்தில் நடந்த தாக்குதல்களிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்ததுடன் இரண்டு மினி முகாம்களையும், 62 காவலரண்களையும் தகர்த்து பெரும்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட மன்னார் பூநகரி தாக்குதலில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார்.

நன்றி எரிமலை

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 12 ம் நாள்(26-09-1987) நல்லூரில் தீபம் அணைந்தது


1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன்

உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீழாத் துயரில் ஆழ்த்தினான்.


உலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்தில் உச்சக்கட்டமான நீராகாரம் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு உயிர் துறந்த திலீபன் வரலாற்றில் தனிஇடம் பெற்று விட்டான்.

உயிர் துறந்த பின்னும் கூட மக்களுக்கு பயன்பட எண்ணியதால் தான் இறந்ததும் தனது உடலை யாழ் மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்ற அவனது இறுதி விருப்பத்தின் பேரில் வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலை அம்மன் கோவில் முன்னறிலில் திரண்டடிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் செப்ரெம்பர் மாதம் 28ம் திகதி விடுதலைப்புலிகளினால் யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீட வைத்திய கலாநிதி சிவராஜாவிடம் திலீபனது உடல் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

தமது இறுதி அஞ்சலியை செலுத்தக் கூடியிருந்த மக்களில் பலர் துன்பம் தாழாது மயங்கி விழுந்தனர் சோக ஒலி தமிழீழம் எங்கும் எதிரொலித்தது.


வீரவரலாற்று பின்ணணியும் உரையும் காணொளியில்

Up ↑