Search

Eelamaravar

Eelamaravar

Month

March 2010

22 ம் ஆண்டு வீரவணக்கம்


கப்டன் நிசார்


1ம் ஆண்டு வீரவணக்கம்


லெப்.கேணல் கிருபா /வானதி

கேணல் இளங்கீரன் 1ம் ஆண்டு வீரவணக்கம்



வன்னியில் நடைபெற்று வரும் சமரில் 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார்.

சேட்டன் என அழைக்கப்படும் கேணல் இளங்கீரன் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நீண்டகாலம் இம்ரான்-பாண்டியன் படையணியில் பணியாற்றியவர். நிறையச் சமர்க்களங்களைச் சந்தித்தவர். லெப்.கேணல் அக்பரின் தலைமையில் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணி செயற்பட்ட காலத்தில் அவ்வணியின் தாக்குதற் தளபதிகளுள் ஒருவராகப் பணியாற்றியவர்.

ஓயாத அலைகள் – 3 இன்போது குடாரப்பில் தரையிறங்கிய புலியணிகள் இத்தாவிலில் பிரிகேடியர் பால்றாச்சின் தலைமையில் சண்டையிட்டபோது விக்ரர் கவச எதிர்ப்பு அணியையும் சமர்க்களத்தின் ஒரு பகுதியையும் வழிநடத்தியவர் இளங்கீரன்.

ஊடகப்போராளிகள் லெப்.கேணல் சிறீ ,லெப்.கேணல் மதியழகன் 1ம் ஆண்டு வீரவணக்கம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடகப் பணிகளை திறம்படச் செய்த லெப்.கேணல் சிறீ

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடக மற்றும் தகவல் ஆவணப்படுத்தல் பணிகளையும் திறம்படச் செய்து வந்த லெப்.கேணல் சிறீ அல்லது குமரச்செல்வன் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக விடுதலைப் போராட்டப் பணியை ஆற்றிவந்த லெப். கேணல் சிறீ, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் தகவல் மொழிபெயர்ப்பு ஆவணப்பகுதியில் பொறுப்பாளராக செயற்பட்டு வந்தார்.

இதன் ஊடாக ஊடகப் பணியினை திறம்பட செய்து வந்த இவர், அனைத்துலக உடகவியலாளர்களின் அறிமுகங்களையும் தொடர்புகளையும் ஏற்படுத்தினார்.

அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் அறிவியல் மேம்பாட்டுக்கான தகவல்களையும் ஆவணங்களையும் சேகரித்து விடுதலைப் புலிகளின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ஆவணப்படுத்தி வந்துள்ளார்.

மேலும், சிறந்த விளையாட்டு வீரராகவும் விளங்கினார். குறிப்பாக துடுப்பாட்டத்தில் இவர் சிறந்து விளங்கினார்.

இதே காலப் பகுதியில் வன்னிப் பகுதியில் நடந்த மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான துடுப்பாட்ட சுற்றுப் போட்டிகளில் இவர் சிறப்பாக செயற்பட்டு வந்தார்.

யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான இவர், தனது இருபதாண்டு காலத்தில் தாயக விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கான பக்கங்களில் தனது பணியை தனித்தன்மையுடன் சிறப்பாக செய்து வந்தார்.

சிவானந்தராஜா சஞ்சீவன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

தாயக விடுதலைப் போராட்டத்தில் எதிரியின் வல்வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான களத்தில் லெப். கேணல் சிறீ தனது இன்னுயிரை ஈர்ந்தார்.

————————–
விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலி-ஒளிபரப்புத் தொழில்நுட்பவியலாளர் வீரச்சாவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலிபரப்புத் தொழில்நுட்பவியலாரும் அறிவிப்பாளரும் ஊடகவியலாருமான மதி என்று அழைக்கப்படும் லெப்.கேணல் மதியழகன் வீரச்சாவடைந்துள்ளார்.

லெப். கேணல் மதியழகன் மின்னியல் நுண் தொழில்நுட்பத்தில் மிகவும் திறமையானவராகச் செயற்பட்டார்.

புலிகளின் குரலில் முதன்மை ஒலிபரப்பு மையத்தின் ஒலிபரப்புத் தொழில்நுட்பத்தையும் தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் ஒளிரபரப்புத் தொழில்நுட்பத்தையும் திறம்படச்செய்தவரும் இவர் ஆவார்.

அத்துடன் செய்மதி தொடர்புகள், செய்மதி வழியிலான ஒலி, ஒளிபரப்புத் தொழில்நுட்பத்தையும் இவர் திறம்பட நெறிப்படுத்தினார்.

ஊடகத்துறையில் மிக நுட்பமான தொழில்நுட்பவியலாளரான லெப். கேணல் மதியழகன், சிறிலங்கா படையினருக்கு எதிரான களத்தில் எதிரியுடன் மோதி வீரச்சாவடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும் திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்ட இவரின் இயற்பெயர் ச.கிருபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

———————————


போராட்ட கலைஞன் லெப். கேணல் சங்கர்

lt-col-sankarதாயகத்தின் கலையுலகில் குறிப்பாக வன்னியில் நன்கு அறியப்பட்டவர் லெப்.கேணல் சங்கர். மிகக் கம்பீரமான குரல் வளம் கொண்ட சங்கர் பதினைந்து ஆண்டுகளுக்கு கூடிய காலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு தன்னை முழுமையாக இணைத்துப் பயணித்தவர்.

கலைத்துறை சார்ந்த செயற்பாடுகளில் கூடுதல் பங்குவகித்த சங்கர் ஆரம்பத்தில் முல்லைத்தீவு மாவட்ட கலைபண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளராக நன்கு அறியப்பட்டவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பக்கங்களில் கலைத் துறை அம்சங்களுடன் கூடுதலான அல்லது பிரிக்கப்பட முடியாத ஒரு அம்சம் தெருவெளி நாடக நிகழ்வுகளாகும். இந்த நாடக நிகழ்வுகளினை வன்னியில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த முக்கியமானவர்களில் லெப்.கேணல் சங்கர் அவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளைக் கிராமத்தினைச் சேர்ந்த திரு சங்கர் தெருவெளி நாடகக் கலைஞர்கள் பலரது தோற்றத்திற்கும் அவர்களது வளர்ச்சிக்கும் மிக முக்கியமானவராக விளங்கியவர். இவரது தேடல் ஊடாக வெளிவந்தவர்களில் பலர் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்ட பெருமைக்குரியவர்களாக மாறியிருந்தனர். என்பது அவரது ஆளுமைக்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். மிகக் குறைந்த வயதில் தாயகத்தின் கலை உலகில் தனக்கென இடம் பிடித்த கப்டன் குட்டிக்கண்ணன் வெளிவரவும் அந்தக் கலைஞனது கலையுலக வாழ்வின் ஆரம்ப அடித்தளங்களை இட்டபெருமையும் லெப்.கேணல் சங்கர் அவர்களையே சாரும்.

தெருவெளி நாடகங்கள் வன்னிப்பெருநிலத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் போராட்டகால நிகழ்வுகளையும் கருத்துக்களையும் பரப்பக்கூடிய எளிமையான ஊடகமாக இருந்தது. வன்னியின் மூலைமுடுக்குகள் எல்லாம் விரைந்துசென்ற கலைஞர்கள் விடுதலைப் போராட்ட பயணத்தில் தமது பங்களிப்பை சிறப்போடு செய்திருந்தார்கள்.

இதேபோன்று தெருவெளிக் கலைஞர்களின் முழுமையான பங்களிப்புடன் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட போர்ப்பறை, வெற்றி முரசு ஆகிய பாடல் இறுவட்டுக்கள் உருவாக்கத்திலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. போர்ப்பறை இறுவட்டில் அவரது குரலில் அறிமுகம் இடம்பெற்றுள்ளது.

ஆரம்பம் முதல் இறுதிவரையில் வன்னியில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாயும் புலி பண்டாரவன்னியன் நாடகத்தில் பண்டாரவன்னியன் கதாபாத்திரத்தை தானே ஏற்று நாடகத்தில் பாத்திரமாகவே வாழ்ந்து காட்டும் சிறப்புடையவர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திரைப்பட உருவாக்கல் பிரிவின் பொறுப்பாளராக கடமை ஏற்றதன் பின்னர் நிதர்சனம் நிறுவனத்துடன் இணைந்து பெருமளவான குறும்படங்களை வெளியிடுவதற்கு கடுமையாக உழைத்தார்.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலையூடான பணியினை முன்னெடுத்த லெப்.கேணல் சங்கர் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் என்ற கிராமத்தில் 14.03.2009 அன்று களப் பணியில் ஈடுபட்டிருந்த போது வீரச்சாவை எய்தினார்.

இன்னமும் நீண்ட வரலாற்றுப் பக்கங்களைக் கொண்ட லெப்.கேணல் சங்கர் வாழ்வோடும் கலையோடும் விடுதலைப் போரோடும் தன்னை இணைத்துக் கொண்டு வீழ்ந்த போதிலும் அம் மாவீரனது நினைவுகளுடன் பயணிப்போம்…

——————————————————————————————————————————-

தெருவெளி கலைஞர்களின் உருவாக்கத்தில் உருவான போர்ப்பறை மற்றும் வெற்றிமுரசு இறுவட்டின் பாடல்கள் சிலவற்றை இங்கு கேட்கலாம்

போர்ப்பறை அறிமுகம்

அடிபணிந்து வாழ்வதோ

வெற்றிமுரசு இங்கு முழங்கட்டும்

புலியாட்டம் ஆடு

டப்பாங்கூத்து பாட்டுத்தான்

மருத்துவர் லெப்.கேணல் கமலினி 1ம் ஆண்டு வீரவணக்கம்

போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி


வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றிய போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி வீரச்சாவடைந்துள்ளார்.

சிறிலங்கா அரசின் பயங்கரவாத படைகள் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் வருகின்றனர்.

இந்த மக்களுக்கான சிகிச்சைப் பணிகளை முதன்மையாகச் செய்து கொண்டிருந்த நிலையில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் லெப். கேணல் கமலினி வீரச்சாவடைந்துள்ளார்.

ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலில் விழுப்புண்பட்ட இவர், விடுதலைப் புலிகளின் மருத்துவ பிரிவில் இணைந்து மருத்துவ கல்வி கற்று மருத்துவர் ஆனார்.

மக்களுக்கான மருத்துவ பணிகளில் இவர் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்டார்.

நான்காம் ஈழப் போரில் மடு தொடங்கி சகல பகுதிகளிலும் மக்களுக்கான மருத்துவ சேவையினை போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி செய்து வந்தார்.
————————-

02-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச் சாவடைந்துள்ளார்.
வீரவேங்கை புயலவன் (நவராசா விஜயகுமார், மட்டு மாவட்டம்) என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார்

03-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச் சாவடைந்துள்ளார்.

கப்டன் பாவலன் (தேவராசா துஸ்யந்தன், யாழ். மாவட் டம்) என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார்.
05-02-2009 அன்று இரண்டு போராளி கள் வீரச்சாவடைந்துள்ளனர்.

கப்டன் கோதைச்சீரன் (குலசிங்கம் வசந்தகுமார், கண்ணன் கோவில் அருகாமை, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி)

மேஜர் சுதர்மினா (சிவராஜலிங்கம் சிவமதி, வற்றாப்பளை, முள்ளியவளை, முல்லைத்தீவு, த.மு: கணேஸ் திட்டம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு) ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்களாவர்.

07-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

லெப். வினோதினி (நற்குணம் ஜெயந்தி, மட்டு, மாவட்டம்) என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார்



இம்மாவீரர்களுக்குத் தமிழீழ விடு தலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துகின்றனர்.

1 ம் ஆண்டு வீரவணக்கங்கள்

01-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

கப்டன் செஞ்சுடர் (இராசலிங்கம் வேலுகோபால், இல: 80, 155ஆம் கட்டை, கிருஸ்ணபுரம், கிளி நொச்சி) என்ற போராளியே வீரச் சாவடைந்துள்ளவராவார்.

02-02-2009 அன்று நான்கு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
வீரவேங்கை எல்லாளன் (வேலாயுதம் சுதர்சன், யாழ். மாவட்டம், த.மு: ஆ. பகுதி, தேவிபுரம், புதுக்குடி யிருப்பு, முல்லைத்தீவு)

லெப். அலைமதி (அமிர்தலிங்கம் ஜெயதாசன், திரு கோணமலை மாவட்டம், த.மு: பொன்நகர் மேற்கு, கரைதுறைப்பற்று, புதுக்குடி யிருப்பு, முல்லைத்தீவு, வேறு முகவரி: 200 வீட்டுத் திட்டம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)

கப்டன் இளங்குமரன் (யோகப்பிரகாசம் திவாகரன், திருகோணமலை மாவட்டம், த.மு: வசந்தம் குடியிருப்பு, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)

கப்டன் அஞ்சிக்குமரன் (ஏகாம்பரநாதன் கோகுலன், மட்டு. மாவட்டம்) ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்களாவர்.
03-02-2009 அன்று ஏழு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

கப்டன் மெய்யப்பன் (சிவசுப்பிரமணியம் வேலுகாசன், இல: 9802, திருவையாறு, கிளிநொச்சி)

லெப். கலைஒளி (விஜயரத்தினம் தட்சாஜெனனி, யாழ். மாவட்டம், த.மு: றெட்பானா, விசுவமடு, முல்லைத்தீவு)

மேஜர் சிந்துக்குமரன் – வேலன் (முத்துலிங்கம் அரியநாயகம், மட்டு, மாவட்டம்)

லெப். கேணல் மயூரதன் (செபஸ்ரியான் அரியநாயகம், மன்னார் மாவட்டம், த.மு: இரத்தினபுரம், கிளி நொச்சி, வேறு முகவரி சுதந்திரபுரம் உடையார்கட்டு;, முல்லைத்தீவு)

வீரவேங்கை மருதன் (ஆறுமுகம் தவகரன், முப்பெரும் தேவியார் கோவில், முன்பாக, உடையார்கட்டு, முல்லைத்தீவு)

கப்டன் அறிவு (ஆதிராம்பிள்ளை தேவநாயகம், பிரமந்தனாறு, விசுவமடு, முல்லைத்தீவு)

கப்டன் திருமாள் (மகாதேவன் பிரபாகர், திருமலை மாவட்டம், த.மு: ரகு திட்டம், சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு)

ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்துள்ளவர்களாவர்.
03-02-2009 அன்று தலைமைக்காவலர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

தலைமைக்காவலர் பார்த்தீபன் (உதயகுமார் பார்த்தீபன், இல: 481, 10 யூனிற், தருமபுரம், கிளிநொச்சி, த.மு: சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு) என்ற தலைமைக்காவலரே வீரச்சாவடைந் துள்ளவராவார்.
04-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.
மேஜர் கிருபன் (அத்தோனிப்பிள்ளை ஜெயசீலன், 08ஆம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, த.மு: செம்மலை குன்று, இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு) என்ற போராளியே வீரச்சாவடைந்துள்ள வராவார்.

04-02-2009 அன்று கடற்கரும்புலி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.
கடற்கரும்புலி மேஜர் செஞ்சுடர் (தர்மலிங்கம் சயந்தினி, யாழ். மாவட்டம், த.மு: செந்தமிழ் பல்பொருள் வாணிபம், நாச்சிக்குடா, முழங்காவில், கிளிநொச்சி) என்ற கடற்கரும்புலியே வீரச்சாவடைந்துள்ளவராவார்.
இம்மாவீரர்களுக்குத் தமிழீழ விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துகின்றனர்.





2ம் ஆண்டு வீரவணக்கம் 2ம் லெப் கார்முகில்

2ம் லெப்டினன்ட் கார்முகில் அல்லது வடிவழகி(விஸ்வசந்திரன் நவநீதா)

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த விஸ்வசந்திரன் தம்பதிகளின் இரண்டாவது புதல்வியான நவநீதா மண் மீட்புப் போரில் வீரச்சாவடைந்த இரண்டாமாண்டு நினைவு தினம் கடந்த வாரம் அனுட்டிக்க‌ப்பட்டது.

1 ம் ஆண்டு வீரவணக்கங்கள்



08-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.


மேஜர் முல்லைமணி / ஜெகன்(ராஜகோபால் ஜெகதீஸ்வரன், பழைய வாடியடி, புளியங்குளம், வவுனியா, த.மு: முள்ளிவாய்க்கால் மேற்கு, முல்லைத்தீவு) என்ற போராளியே வீரச்சாவடைந்தவராவார்.

09-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.
கப்டன் நாயகன் (யோகவேல் ஜெகதீஸ்வரன், ஊற்றுப்புலம், கோணாவில், கிளிநொச்சி) என்ற போராளியே வீரச்சாவடைந்தவராவார்.
10-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

கப்டன் இசைநிலவு (புலேந்திரன் துஸ்யந்தன், யாழ். மாவட்டம்) என்ற போராளியே வீரச்சாவடைந்தவராவார்.
27-01-2009 அன்று எட்டுப் போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

லெப். மாங்கனி (ஜெயக்குமார் சிந்துஜா, உண்ணாப்புலவு, முல்லைத்தீவு, த.மு: மாத்தளன், முல்லைத்தீவு)
மேஜர் சத்தியன் (நல்லையா காண்டிபன் – மட்டு மாவட்டம்)

மேஜர் சமணன் (அழகையா ஜெயராஜ், யாழ். மாவட்டம், 156ஆம் கட்டை, தொண்டமான்நகர், கிளிநொச்சி, த.மு: வாகீசன் வீதி, சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு)
2ஆம் லெப். தமிழ்க்கோடன் (நவரத்தினம் நவநீதன், யாழ். மாவட்டம், வேறு முகவரி, பாரதிபுரம், றெட்பானா, விசுவமடு, த.மு: கணேஸ் திட்டம் ஷஅ| பகுதி தேவிபுரம்)
வீரவேங்கை ஆழிக்குமரன் (செல்வராசா சசிக்குமார் – யாழ். மாவட்டம், த.மு: இடைத்தங்கல் முகாம், அம்பலவன்பொக்கணை, முல்லைத்தீவு)
லெப். இன்பத்தமிழ் (சின்னராசா விக்னேஸ்வரன் – யாழ். மாவட்டம், த.மு: இல: 03, புத்துவெட்டுவான், மல்லாவி, முல்லைத்தீவு, வேறு முகவரி, சுதந்திரபுரம் கொலனி, உடையார்கட்டு)

2ஆம் லெப். துளசி (ராமு புவனேஸ்வரன், த.மு: மலையாளபுரம் பாரதிபுரம், கிளிநொச்சி, வேறு முகவரி, இருட்டுமடு வீதி, சுதந்திரபுரம் உடையார்கட்டு)

வீரவேங்கை சங்கீதன் (வேலாயுதம் கனகதாஸ், வவுனியா மாவட்டம், த.மு: உடையார்கட்டு தெற்கு, உடையார்கட்டு)
ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்களாவர்.

26-01-2009 அன்று போராளிகள் நான்கு பேர் வீரச்சாவடைந்துள்ளனர்.

மேஜர் மதிமாறன்/ஈழக்கடல் (மகேந்திரன் திலீபன்/தினேஸ், மன்னார் மாவட்டம், வேறு முகவரி, அ| பகுதி தேவிபுரம், த.மு: உடையார்கட்டு வடக்கு, முல்லைத்தீவு)
வீரவேங்கை மலரவன் (செல்வராசா கவிதாஸ் – யாழ். மாவட்டம், த.மு: செடோ நிறுவனம் அருகாமை மூங்கிலாறு, உடையார்கட்டு, முல்லைத்தீவு)

2ஆம் லெப். நவநீதன்(அழகுப்பொடி சோமசுந்தரம், மட்டு மாவட்டம், த.மு: 02ஆம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு)
கப்டன் அறிவாளன்(முத்தையா ஜெனந்தகுமார், யாழ். மாவட்டம், த.மு: முப்பெரும் தேவியார் கோவிலடி, சுதந்திரபுரம், உடையார்கட்டு)
ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்களாவர். இம்மாவீர்களுக்குத் தமிழீழ விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துகின்றனர்.

Up ↑