Search

Eelamaravar

Eelamaravar

Month

February 2010

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 21

தமிழ் மக்களை ஆழ்ந்த சேகத்தில் ஆழ்திய நிகழ்வாக விடுதலைப் புலிகளின் சிறப்புத் தளபதியான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரச்சாவு நிகழ்வு அன்று வன்னியில் நிகழ்ந்தது. உண்மையில் போராளிகள், தமிழ் மக்கள் மனங்களில் மட்டுமல்ல, சிங்களப் படைகளினதும், படைத்தளபதிகளினதும், ஆட்சியாளர்கினதும் மனங்களில் எல்லாம் நிறைந்திருந்தவர் தளபதி பால்ராஜ்.

தொடர்பு பட்டவை
பிரிகேடியர் பால்ராஜ்!

Page 23

ஓயாத அலைகள் – 3 பகுதி 3

ஓயாத அலைகள் -3. பகுதி -1.,
ஓயாத அலைகள் -3. பகுதி 2.மாதிரி இராணுவ முகாமை அமைத்துவிட்டு அவர்கள் மீளவும் கடற்பயிற்சியைத் தொடரவென கள்ளப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள். கரைச்சிக் குடியிருப்பில் தங்கியிருந்த கரும்புலி அணி சிங்கபுர ஆட்லறித் தகர்ப்புக்கான பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கியது. இப்பயிற்சி பற்றி இத்தொடரின் முதலாவது அங்கத்தில் சற்று விரிவாகப் பார்த்திருந்தோம்.

இந்தத் தாக்குதலுக்கான தயாரிப்பிலும் பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தது கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதி. இதில் கரும்புலி மேஜர் செங்கதிர் வாணன், பின்னாளில் கடலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி லெப்.கேணல் நரேஷ், கரும்புலி மேஜர் அருளன், கரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் சிறிவாணி, கரும்புலி மேஜர் ஆந்திரா ஆகியோர் உட்பட வேறும் சிலர் இருந்தனர். இந்த நடவடிக்கைக்காக அப்போது பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூன்றாவது தொகுதியிலிருந்தும் சிலர் அழைக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக அச்சண்டைக்கென தெரிவு செய்யப்பட்டிருந்த இரண்டு பி.கே. எல்.எம்.ஜி இயக்குநர்களான கரும்புலி மேஜர் ஆதித்தன், பின்னாளில் கடலில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் நித்தி ஆகியோர் மூன்றாம் தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

மூன்று அணிகளாக உட்புகுந்து நடத்தும் இத்தாக்குதலை அருளன் நேரடியாகக் களத்தில் நின்று வழிநடத்துவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. அம்முகாமிலிருந்து ஆறு ஆட்லறிகளும் தகர்க்கப்பட வேண்டுமென்பது தான் இலக்கு. இலக்கு நிறைவடைந்தால் மீதமுள்ளோர் பாதுகாப்பாகத் தளம் திரும்ப வேண்டுமென்பதும் திட்டமாக இருந்தது. வேவுத் தரவுகளின்படி முகாம் மாதிரி அமைக்கப்பட்டு பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதேவேளை கரும்புலிகள் அணியினரும் வேவு அணியினரும் இணைந்து தொடர்ந்தும் வேவுப்பணியில் ஈடுபட்டுக்கொண்டுமிருந்தனர்.

இந்நிலையில் அந்தப் பயிற்சித்திட்டத்தில் இணையும்படி எனக்கு அறிவுறுத்தப்பட்டது. கள்ளப்பாட்டில் கடற்பயிற்சியில் இருந்த அணிகளிடமிருந்து விடைபெற்று கரைச்சிக் குடியிருப்புக்கு நகர்ந்தேன். அங்கிருந்தபடியே சசிக்குமார் மாஸ்டரோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன். இரவு முழுவதும் பயிற்சி; அதிகாலையில் வீடுவந்து சேர்வோம்.

நீரொழுக்கு நடவடிக்கைகள்

அது 1999 ஆம் ஆண்டின் ஐப்பசி மாதம். அந்த நேரத்தில் போர்க்களம் சற்று அமைதியாக இருந்தது. வன்னியின் நீண்ட முன்னரங்கில் பலமுனைகளிலும் முயன்று இடங்களைக் கைப்பற்ற முடியாமல் சிறிலங்கா இராணுவம் முடங்கியிருந்தது. சிலமாதங்கள் அமைதிக்குப் பின்னர் எதிரிநீரொழுக்கு’ (Water-shed) என்ற பெயரில் அடுத்தடுத்து இரண்டு முன்னேற்ற நடவடிக்கைகளைச் செய்தான். இப்போது எதிரி தனது மூலோபாயத்தை மாற்றியிருந்தான். அதாவது வழமையான முறைகளில் சண்டைபிடிக்காமல் கடுமையான தாக்குதலை நடத்தி புலிகளுக்கு இயன்றவரை உயிரிழப்பை ஏற்படுத்துவதும் பின்னர், பழைய நிலைகளுக்குப் பின்வாங்கிச் செல்வதும் என்பதே இந்தப் புதிய திட்டமாக இருந்தது. ‘வசந்த பெரேராஎன்ற இராணுவத் தளபதியின் நேரடி வழிநடத்தலில் இந்தநீரொழுக்கு -1, 2’ ஆகிய இரு நடவடிக்கைகளும் நடத்தப்பட்டன.எதிரி நினைத்தது போல் பெரிய வெற்றியாகவே இவை இரண்டும் அமைந்திருந்தன. மிகக்குறுகிய அகலத்தில் (அண்ணளவாக இரு கிலோமீற்றர்கள்) புலிகளின் காவலரண் வரிசைமீதும் பின்தளங்கள் மீதும் சரமாரியான ஆட்லறித் தாக்குதலை நடத்திவிட்டு முன்னேறிச்சென்று சடலங்களைக் கைப்பற்றிக் கொண்டு பின்வாங்கிச் செல்வதே இந்தத் திட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட தந்திரம். அதுவரை எதிரி பயன்படுத்தியிராத அளவுக்கு ஆட்லறி எறிகணைகள் இந்நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான எறிகணைகள் இடைவெளியின்றி மிகக்குறுகிய இடத்தின் மீது ஏவப்பட்டன. ஒருமணி நேரம் நடத்தப்படும் இத்தாக்குதலின் பின்னர் எதிரியணிகள் முன்னேறிச் சென்று காவலரண்களைக் கைப்பற்றும். வீரச்சாவடைந்த போராளிகளின் உடல்களையும் ஆயுத தளபாடங்களையும் தூக்கிக் கொண்டு, காவலரண்களையும் அழித்துவிட்டு எதிரியணிகள் தாமாகவே தளம் திரும்பிவிடும்.

இந்த இரு நடவடிக்கைகளிலும் மாலதி படையணியே தாக்குதலுக்கு உள்ளானது. இயக்கம் இதுவரை எதிர்கொள்ளாத அளவுக்கு ஆட்லறி மழை பொழியப்பட்டது. இரண்டு நடவடிக்கைகளிலும் ஐம்பது வரையான போராளிகளின் உடல்கள் சிறிலங்காப் படையினரால் கைப்பற்றப்பட்டுச் செல்லப்பட்டன. வழமையாகவே போராளிகளின் உடல்கள் எதிரியால் கைப்பற்றப்படுவது ஈழப்போராட்டத்தில் சகிக்க முடியாத தோல்வியாகக் கருதப்பட்டு வந்தது. இந்தப் புது நடவடிக்கையால் போராளிகள் உண்மையில் குழம்பித்தான் போனார்கள். மீட்பு நடவடிக்கைக்கோ தாக்குதலுக்கோ மேலதிக அணிகள் நகர முடியாதளவுக்கு எறிகணை வீச்சு மட்டுமல்லாமல், மிக விரைவாகவே எதிரி தமது தளத்துக்குப் பின்வாங்கிச் செல்வதும் குழப்பமாக இருந்தது.

நீரொழுக்கு -1’ நடவடிக்கை 14/10/1999 அன்று நடத்தப்பட்டது. இதில் நாற்பதிற்கும் மேற்பட்ட பெண் போராளிகள் வீரச்சாவடைந்தனர்; 32 வித்துடல்கள் எதிரியால் கைப்பற்றப்பட்டு சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இயக்கத்திடம் கையளிக்கப்பட்டன. இந்த முதலாவது நடவடிக்கையில் இயக்கத்தின் ஆட்லறி நிலையும் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் ஆட்லறிக்குச் சேதமில்லை எனினும் எறிகணைக் களஞ்சியம் தீப்பற்றியதுடன் இரு போராளிகள் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். ‘நீரொழுக்கு -2’ நடவடிக்கையிலும் நாற்பது வரையான பெண் போராளிகள் வீரச்சாவடைந்தனர். 28/10/1999 அன்று நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 28 வித்துடல்கள் எதிரியால் எடுத்துச் செல்லப்பட்டு சர்வதேசச் செஞ்சிலுசைச் சங்கம் மூலம் இயக்கத்திடம் கையளிக்கப்பட்டன.

இரண்டு கிழமைகளுக்குள் அடுத்தடுத்து அம்பகாமம் பகுதியில் நிகழ்த்தப்பட்ட இந்த இரு நடவடிக்கையாலும் ஒருவித அதிர்ச்சி பரவியிருந்தது. இதேபோன்று தொடர்ந்தும் பல தாக்குதல்கள் அடுத்தடுத்து நடத்தப்படப் போகின்றன என்பதும் தெளிவாகத் தெரிந்திருந்தது. எதிரி உச்சக்கட்ட உளவியற் போரைத் தொடுத்திருந்தான். வன்னியில் பெரும்பாலான மக்களும்குறிப்பாக எதிரியின் முன்னணி நிலைகளுக்குக் கிட்டவாக வாழ்ந்த மக்கள் நம்பிக்கையிழந்திருந்தனர். இரண்டொரு நாட்களில் தமது இடங்களை இராணுவம் கைப்பற்றிவிடுமென்று அவர்கள் நம்பினார்கள். களமுனையிலிருந்த போராளிகளுக்கும் குழப்பமாகவே இருந்தது. இந்தப் புது முயற்சியை எப்படி எதிர்கொள்வதென்பது பெரிய புதிராகவே இருந்தது. இன்னும் ஒரு கிழமைக்குள் அடுத்தகட்ட நடவடிக்கையையும் எதிரி முன்னெடுப்பான் என்பதை அனைவரும் விளங்கிவைத்திருந்தனர்.

கரும்புலிகளின் புதிய திட்டம்

இந்நிலையில், நீரொழுக்கு -1 நடவடிக்கையின் பின்னர் சிங்கபுர ஆட்லறித் தகர்ப்புக்கான பயிற்சித் திட்டம் சூடு பிடித்தது. இந்தத் தாக்குதலுக்கான தேவை இப்போது அவசரமாகவும் அவசியமாகவுமிருந்தது. ஆகக் கடைசிக்கட்ட வேவுக்காக இளம்புலி அண்ணனோடு கரும்புலிப் போராளிகள் சிலர் சிங்கபுர போயிருந்த நிலையில் மிகுதிப்பேரோடு இறுதிக்கட்டப் பயிற்சி நடந்து கொண்டிருந்தது.இதேவேளை முல்லைத்தீவுச் சந்தியிலிருந்து கடற்கரை செல்லும் பாதையில் விடுதலைப் புலிகளின் இன்னோர் அணியும் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தது. லெப்.கேணல் தூயவன் (யாழ்ப்பாணம் செல்லும் வழியில் நீரில் மூழ்கிச் சாவடைந்தார்) தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடவடிக்கையில் ஈடுபடும் அரசியற்றுறையைச் சேர்ந்த அணியே அது. வசந்தன் மாஸ்டர் தலைமையில் (எல்லாளன் படத்தில் பயிற்சி ஆசிரியராக வருபவர்; வன்னியில் நிகழ்ந்த இறுதிநேரப் போரில் முக்கிய பங்காற்றி வீரச்சாவடைந்தார்; இவரைப் பற்றித் தனியே எழுதப்பட வேண்டும்) அங்கே பயிற்சி நடந்துகொண்டிருந்தது. அந்தப் பயற்சித் திட்டத்திலும் இடையிடையே கலந்துகொள்ள வேண்டிய நிலை எனக்கிருந்தது.

இந்நிலையில் 27/10/1999 அன்று காலை எட்டு மணியிருக்கும். அன்று அதிகாலை முடித்த பயிற்சியின் அசதியில் மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அன்றைய இரவுதான் இறுதியான மாதிரிச் சண்டைப்பயிற்சி என்பதால் அதற்கான ஆயத்தங்களில் நானும் சசிக்குமார் மாஸ்டரும் ஈடுபட்டிருந்தோம். திடீரென்று பார்த்தால் கள்ளப்பாட்டிலிருந்த அணிகளெல்லாம் இங்கே வந்துகொண்டிருந்தார்கள். இங்கு வருவதற்கு அவர்களுக்கு அனுமதியில்லையென்பதால் ஓடிச்சென்று மறித்து விசாரித்தால் அவர்களுக்கு அப்படித்தான் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது சைக்கிளில் எழில் வந்துகொண்டிருந்தார். எழில், இம்ரான்பாண்டியன் படையணியில் வழிகாட்டிப் பயிற்சி நெறிக்குப் பொறுப்பாக இருந்தார்.

மாஸ்டர், கடாபி அண்ணையும் வந்துகொண்டிருக்கிறார். இவையளைப் பாத்து எங்கயாவது இருக்கவிடுவம். அவர் வந்து கதைப்பார்’ – இது எழில்.

கடற்பயிற்சியிலிருந்து வந்திருந்த அணிகளை முன்வீட்டில் இருத்தினோம். சற்று நேரத்தில் கடாபி அண்ணை வந்துவிட்டார். எழிலோடும் சசிக்குமார் மாஸ்டரோடும் தனியே கதைத்தபின் கடற்பயிற்சியிலிருந்து வந்திருந்த அணிகளோடு கதைத்தார்.

இன்றோடு உங்களுக்குரிய கரும்புலிகளுக்கான அடிப்படைப் பயிற்சிகள் முடிவடைந்து விட்டன. இப்போது நீங்கள் அனைவரும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மிக அவசரமாக நாங்கள் ஒரு தாக்குதலை சிறிலங்கா அரச படைகளுக்கு எதிராகச் செய்தாக வேண்டும். நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. போராட்டப் பாதையில் தடைக்கற்களை உடைக்கும் கடமை கரும்புலிகளுடையது. அவ்வகையில் இப்போது உங்களுக்கான நேரம். உங்கள் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும். இரண்டொரு நாட்களுள் நாங்கள் தாக்குதலுக்காகச் செல்ல வேண்டும். ஓய்வுக்கான நேரமின்றி பயிற்சிகள் வழங்கப்படும். அனைத்தையும் தாக்குப்பிடித்துத் தேறுங்கள், வெல்லுங்கள்என்பதே அவரின் சுருக்கப் பேச்சாக இருந்தது.

ஏற்கனவே சிங்கபுர மீதான தாக்குதலுக்கெனப் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்த இரண்டாம் தொகுதிக் கரும்புலி அணியும் தற்போது கடற்பயிற்சியிலிருந்து வந்திருந்த மூன்றாம் தொகுதி கரும்புலிகள் அணியும் எதிரெதிர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டிருந்த போதும் இவர்கள் யாரும் மற்ற அணியினருடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை. கடாபி அண்ணன் வந்த கணத்திலிருந்து அனைத்தும் துரித கதியில் நடக்கத் தொடங்கின. அவர் நவீனவகை GPS கருவிகளைக் கொண்டுவந்திருந்தார். இயக்கத்தில் தொன்னூறுகளின் தொடக்கத்திலிருந்தே GPS பயன்படுத்தப்பட்டு வந்திருந்தாலும் இப்போது உலகில் சந்தைக்கு வந்திருக்கும் ஆகப்பிந்திய வடிவத்தையே கடாபி அண்ணன் கொண்டு வந்திருந்தார். ‘XL 2000’ என்ற பெயரில் வந்த அவ்வடிவம் அதுவரை இயக்கத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த வடிவங்களை விட மிகமிகத் துல்லியமானது; மேம்பட்ட பல வசதிகளைக் கொண்டிருந்தது.

அந்த GPS கருவி தொடர்பான விளக்கத்தையும் பயற்சியையும் வழங்குவதற்கு எழில் வந்திருந்தார். கரும்புலி அணியிலிருந்து ஐந்துபேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு GPS பயிற்சி வழங்கப்பட்டது. ஏனைய அனைவருக்கும் ஆட்லறிப் பயிற்சி வழங்கப்பட்டது. ஆம்! அன்று அதிகாலையே நாங்கள் தங்கியிருந்த வீட்டின் பின்பக்கம் 85 mm ஆட்லறி (புளுக்குணாவ முகாமில் கைப்பற்றப்பட்டது) கொண்டுவரப்பட்டிருந்தது. யாருக்கும் முழுமையான திட்டம் சொல்லப்பட்டிருக்கவில்லை.அன்று 27 ஆம் திகதி பகல் முழுவதும் ஆட்லறிப் பயிற்சியும் GPS பயிற்சியுமே நடந்து கொண்டிருந்தன. நீரொழுக்கு -1 நடவடிக்கையில் எமது ஆட்லறி நிலை தாக்கப்பட்டது பற்றியும் ஆட்லறிப் பயிற்சி வழங்க வந்திருந்தவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். மறுவளத்தில் தெரிவு செய்யப்பட்ட ஐவருக்கும் GPS பயிற்சியை எழில் கொடுத்துக் கொண்டிருந்தார். அன்றிரவு நடக்க இருந்த சிங்கபுர மாதிரி முகாம் பயற்சியை நிறுத்தும்படியும், இதுவரையான பயிற்சியோடேயே முகாமைத் தாக்கலாமென்றும் காடபி அண்ணன் சொல்லியிருந்தார். ஆனால் தாக்குதலணியினர் அதை நம்பவில்லை. ஏற்கனவே சிலதடவைகள் இப்படி இடைநிறுத்தப்பட்டது போல்தான் இந்தமுறையில் இடைநிறுத்தப்படுகிறது என்று ஊகித்திருந்தனர். அத்தோடு மூன்றாம் தொகுதியினர் அவசர அவசரமாக வரவழைக்கப்பட்டு ஓய்வின்றி பயிற்சிகள் வழங்கப்படுவதிலிருந்து ஏதோ வித்தியாசமாக நடக்கிறதென்று அவர்கள் கருதியிருந்தனர்.

இயக்கத்தின் ஆட்லறியை எதிரி தாக்கியதற்குப் பழிவாங்கும் முகமாக எதிரியின் ஆட்லறிகள் சிலவற்றை உடனடியாகத் தாக்கியழிக்க இயக்கம் முடிவெடுத்துள்ளது என்ற கதை மூன்றாம் தொகுதியினரிடம் பரவியிருந்தது. ஏற்கனவே, ஆட்லறிகளைத் தகர்க்கத்தான் இரண்டாம் தொகுதியினர் மாதக்கணக்கில் முயன்றுகொண்டிருக்கிறார்கள் என்ற விடயம் அவர்களுக்குத் தெரியாது. இரண்டு அணியினரின் பயிற்சிகளையும் தெரிந்த எமக்கோ இன்னும் குழப்பம் தான். ஒரே நேரத்தில் பல ஆட்லறித் தளங்களை இயக்கம் தாக்கப் போகிறதா? இல்லாவிட்டால் இப்படிப் பெருந்தொகையானோர் ஈடுபடுத்தப்பட வேண்டிய தேவையில்லையே? இப்படி அதிகம் யோசித்துக் கொண்டிருக்க உண்மையில் எமக்கு நேரமிருக்கவில்லை. அவ்வளவுக்கு வேலை தலைக்குமேல் நிறைந்திருந்தது.

27 ஆம் திகதி முழுமையாகவும் பயிற்சியோடே கழிந்த நிலையில் 28 ஆம் திகதி விடிந்தது. அன்று நகர்வுப் பயற்சியும், ஆட்லறிச் சூட்டுப் பயிற்சியும் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. மிக அலைச்சல் மிகுந்த நாளாக அன்றைய நாள் இருந்தது. மறுபக்கத்தில் அம்பகாமத்தில் நீரொழுக்கு -2 நடந்ததும் அன்றுதான். அன்றைய நடவடிக்கை வன்னியில் பெரிய கிலேசத்தை உண்டுபண்ணியது.

தொடரும்.

மேஜர் பாவலன்


தவராஜா அஜந்தன் (மேஜர் பாவலன்)
தாயின் மடியில் :-17.04.1980
மண்ணின் மடியில் :- 01.02.2009

1992 ஆம் ஆண்டுக் காலப்பகுதி சூழ்நிலை காரணமாக யாழ் மண்ணிலிருந்து வன்னி மண்நோக்கிய எனது பயணமானது நிரந்தரமாகியது. முன்பும் கூட வன்னிமண் நோக்கிய பயணங்கள் பல இடம் பெற்றாலும் இப்பயணம் ஏனோ நிரந்தரமாகிவிட்டது. இந்தக்காலப்பகுதியில் தான் அஜந்தனுடைய (பாவலன்) நட்பு எனக்குக் கிடைத்தது. அந்தக்காலப்பகுதியில் நான் வவுனிக்குளம் பகுதியில் உள்ள பாலிநகர் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கச் சென்றவேளை அவன் கொல்லவிளாங்குளம் பகுதியிலிருந்து அங்கு கல்விகற்க வந்திருந்தான்.

7ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய நமது நட்பு போர்க்களம் வரை தொடர்ந்தது. அவன் படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி திறமையாகவே செயற்படக் கூடியவன். குறிப்பான நன்றாகப் பாடுகின்ற தன்மை அவனிடம் கூடிப்பிறந்தது எனலாம். அவன் பாடினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். எமது பள்ளி நினைவுகளை மீட்டுவதற்கு சந்தர்ப்பம் இதுவல்ல என நினைக்கின்றேன். நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது தாய்ச்சமர்க்கெல்லாம் தலையாக விளங்கியதும் ஆசியாவில் மிக நீண்டது என வரலாறுகளில் பதியப்பட்ட இராணுவ நடவடிக்கையான ஜயசுக்குறூய் இராணுவ நடவடிக்கை 1997 மே 13ஆம் திகதி தொடங்கப்பட்டது. இதனால் தமிழரின் நிலங்கள் பல விழுங்கப்பட்டு வன்னியினுடைய ஏறக்குறைய அரைவாசிக்கும் மேற்பட்ட இடம் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் சென்று கொண்டிருந்த வேளையில் தான் ஜயசுக்குறூ நடவடிக்கைக்கு எதிரான விடுதலைப்புலிகளின் சமர் வலுவடைந்தது.

அந்த நேரத்தில் தான் காலம் என்னையும் ஒரு போராளியாக்கியது. ஆசிய வரலாற்றிலேயே மிக நீண்ட ஒரு யுத்தத்தினை உலகம் வியக்கும் வண்ணம் மரபு வழியாக வாசல்கள் யாவும் அடைக்கப்பட்ட வன்னியிலிருந்து புலிகள் கொண்டு எதிர் கொண்டனர். வன்னியின் நுழைவாயிலாக விளங்குகின்ற ஏ9 வீதியூடாக ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலுக்கு புலிகள் கடும் எதிர்ப்பினை காட்டினார்கள். அதாவது முகாம் வடிவிலான காவலரண்களை அமைத்து படையினரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தத் தொடங்கினர். குறிப்பாக புளியங்குளத்தைத் தாண்ட முடியாது படையினர் தினறியபோதுதான் படையினர் இரகசியமாக டொலர்பாம், நெடுங்கேணி, குழவிசுட்டான், கோடாலிக்கல், வாவெட்டிமலை, கருப்பட்டமுறிப்பு, ஆகிய இடங்களைத் தாண்டி அம்பகாமம் வரை வந்து நின்றனர்.

அதேவேளை மன்னார்மாவட்டத்திலும் ஏற்கனவே எடிபல இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட பகுதியூடாக பள்ளமடு, பெரியமடு, பாலம்பிட்டி, பனங்காமம், மூன்றுமுறிப்பு என்று தனது நில ஆக்கிரமிப்புத் திட்டத்தை விஸ்தரித்திருந்தனர். இதனால் மன்னாரிலிருந்து செம்மலை, அளம்பில் வரையான கிட்டத்தட்ட 132 மைல் நீளத்திற்கு தொடர் காவலரண்களை அமைத்துப் புலிகள் படையினரின் முன்னேற்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தியிருந்தனர். குறிப்பாக நூறு மீற்றர் தூரத்திற்கு மூன்று காவலரண்கள் என அமைக்கப்பட்டு ஒவ்வொரு காவலரணிலும் இரண்டு போராளிகள் வீதம் காவலிருந்தனர்.

இங்கு ஒரு விடயத்தை நான் குறிப்பிட்டாக வேண்டும். மன்னாரில் இருந்து மூன்றுமுறிப்பு வரை இடம் பெற்ற இராணுவ நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு பொறுப்பாக பிரிகேடியர் ஜெயம் அண்ணா அவர்களும், மூன்றுமுறிப்பிலிருந்து – வன்னிவிளாங்குளம் வரையான முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு பொறுப்பாக லெப்.கேணல் வீமன் அண்ணா அவர்களும், வன்னிவிளாங்குளத்திலிருந்து அம்பகாமம் வரையான களமுனைக்குப் பொறுப்பாக துரோகி கருணாவும், லெ.கேணல் ராபெட்டும் நியமிக்கப்பட்டிருந்தனர் இருந்தனர். முக்கியமாக ஜயசிக்குறூய் நடவடிக்கையின் ஆரம்பத்திலிருந்து ஏ9 வீதியினைக் குறுக்கறுத்து அமைக்கப்பட்ட இராணுவத்தடுப்பு வேலிகளுக்கு லெப். கேணல் ராபெட் அவர்களே பொறுப்பாக இருந்தார். ஆனால் மாங்குளப்பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்புச் சமர்களின் கட்டளைத் தளபதியாகவும், கிழக்கு மாகாணத்திலிருந்து வன்னி வந்து களமாடிய போராளிகளின் கட்டளைத் தளபதியாகவுமே துரோகி கருணா இருந்தான்.

ஆனால் பின்நாட்களில் தான் ஜயசிக்குறூய் இராணுவ நடவடிக்கையின் ஒட்டுமொத்த கட்டளைத்தளபதியாக தானே இருந்ததாக தம்பட்டமடித்தான். அந்த நேரத்தில் விடுதலைப்புலிகளும் எந்தவிதமான மறுப்பறிக்கைகளையும் தெரிவிக்கவில்லை. காரணம் கருணாவின் கருத்துக்கு பதிலளித்து அவனை ஒரு முக்கியப்படுத்த விரும்பவில்லை. அடுத்து அம்பகாமத்திலிருந்து – ஒட்டுசுட்டான் வரையான களமுனைக்குப் பொறுப்பாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் அன்ரன் மாஸ்ரர் அவர்களும், பிரிகேடியர் விதுசா அக்கா அவர்களும், தலைமைவகிக்க. ஒட்டுசுட்டானிலிருந்து – செம்மலை, அளம்பில் வரையான களமுனைக்கு பொறுப்பாக கேணல் லோரன்ஸ் அண்ணா அவர்களும், ஒட்டுமொத்த ஜயசிக்குறூய் இராணுவநடவடிக்கையின் கட்டளைத் தளபதியாக போரியல் ஆசான் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களும் இருந்தனர்.

இது தான் ஜயசிக்குறூய் களமுனையை விடுதலைப்புலிகள் எதிர்கொண்ட விதம். அத்துடன் கிளிநொச்சி 55 கட்டை வரை முன்னேறிய இராணுவத்தினரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கு பிரிகேடியர் தீபன் அண்ணா அவர்களும், சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைத்தளபதிகளான லெப்.கேணல் ராஜசிங்கன் அண்ணா, லெப் கேணல் ராகவன் அண்ணா ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த நிலையில் தான் அம்பகாமத்தில் (பழைய கண்டிவீதி) இராணுவத்தின் முன்னேற்றம் உக்கிரமடைந்தது. காரணம் ஏற்கனவே கிளிநொச்சியில் இராணுவம் நிலைகொண்டிருந்தது. ஆகவே அம்பகாமம் வரை வந்த படையினர் எப்பாடு பட்டாவது பழைய கண்டிவீதியூடாக பாதையைத் திறந்துவிடத் துடித்தனர். ஆரம்பத்தில் இந்தக் களமுனையில் மாலதி படையணியினரே நின்றிருந்தனர். குறிப்பாக இரண்டு களமுனைகளினூடாகவே படையினரின் முன்னேற்றம் உக்கிரமாக இருந்தது.

ஒன்று ஏ9 வீதி மற்றையது அம்பகாமம் பழைய கண்டிவீதி. மாங்குளம் களமுனையால் நகரமுடியாது என உணர்ந்த படையினர். அம்பகாமம் பகுதியூடாக எப்பாடுபட்டாவது நகர வேண்டும் என பகீரதப் பிரயர்தனம் செய்தனர். ஆகவே இந்தக் களமுனைக்கு உடனடியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணிகள் நகர்த்தப்பட்டனர். ஆகவே நானும் அந்தக் களமுனைக்கு நகர்ந்து களப்பணிகளை ஆற்றிய காலத்தில்தான் ஜயசிக்குறூய் களமுனையின் வெற்றிவிழா நாளும் வந்தது. அதாவது 13.05.98 அந்த நேரத்தில் தான் வன்னி இரண்டு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று மேற்கு வன்னி, இரண்டாவது கிழக்கு வன்னி. மேற்கு வன்னிக்கு பிரிகேடியர் தீபன் அண்ணாவும், கிழக்கு வன்னிக்கு பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களும் கட்டளைத் தளபதிகளாகச் செயற்பட்டனர். அந்தவகையில் நான் ஜயசிக்குறூய் வெற்றி விழாவினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு மேற்கு வன்னிக்கு அதாவது மல்லாவிப் பகுதிக்கு அனுப்பப்பட்டேன்.

அந்த நாளும் வந்தது. அன்று மல்லாவியிலிருந்து தமிழீழ தேசியக் கொடி மக்களால் வீதி வழியே ஏந்திச் செல்லப்பட்டு கண்டி வீதியிலே ஏ9 கண்டிவீதியில் உள்ள பழையமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக அப்போதைய மாங்குளம் களமுனைத் தளபதியாக இருந்த துரோகி கருணாவிடம் கொடுக்கப்பட்டது. இதன் போது பாவலன் (அஜந்தன்) ஒரு உரையொன்றை நிகழ்தியிருந்தான். அதில் அவன் வெகுவிரைவில் “களமுனைப் போராளிகளுக்கு மாணவர்கள் வந்து தோள் கொடுப்பார்கள்; “என்று கூறியிருந்தான். அப்போது அவன் கூறியதை ஒரு வாரத்தில் நிறைவேற்றியிருந்தான். அவன் தன்னை ஒரு போராளியாக மாற்றியிருந்தான். தனது அஜந்தன் என்ற பெயரை பாவலனாக மாற்றிக்கொண்டு சாள்ஸ் அன்ரனிசிறப்புப் படைப் போராளியாக அம்பகாமம் களமுனைக்கு வந்து சேர்ந்தான்…..

பாவலன் அம்பகாமம் களமுனைக்கு வந்த நேரத்தில் நான் காவலரண்களில் கடமை புரியும் களமுனைப் போராளிகளுக்கும் பின்தளத்திற்குமான இணைப்பாளராகச் செயற்பட்டுக் கொண்டிருந்தேன். அவனை நான் அம்பகாமத்தில் சந்திப்பேன் என்று கனவிலும் கூட நம்பவில்லை. பள்ளிப்பருவத்தில் ஒன்றான நண்பர்கள் பகைவிரட்டவும் ஒன்றானோம். களமுனைக்கு வந்த பாவலனை அம்பகாமம் கட்டளைத்தளபதி அன்ரன் மாஸ்ரர் அவர்கள் என்னுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ளுமாறு பணித்திருந்தார். எனவே நாம் இருவரும் இணைந்து களப்பணிகளை ஆற்றிக் கொண்டிருந்தோம்.

இதில் சில விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். நாங்கள் இருவரும் களமுனையிலுள்ள போராளிகளுக்கும் பின்தளப் பகுதிகளுக்குமான இணைப்பாளர்களாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தோம். குறிப்பாக அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் பின்தளப்பகுதியிலிருந்து முன் காவலரணுக்குச் சென்றுவிடுவோம். இதில் பல ஆபத்துக்கள் இருந்தன. அதாவது முன்களமுனையில் உள்ள போராளிகளை விட பின்தளப்பகுதிகளைக் குறிவைத்தே படையினர் தாக்குதல்களை மேற்கொள்வார்கள். இதில் மோட்டார் படையணிகளின் நிலைகள், மற்றும் பின்தள முகாம்கள் என்பன இராணுவ வேவு அணிகளினால் பல தாக்கப்பட்டிருந்தன. ஏனெனில் பின்தளத்தைச் சிதைத்தால் இலகுவாக தாங்கள் முன்னேறிவிடலாம் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

பொதுவாக பதுங்கியிருக்கும் வேவு அணியினரின் தாக்குதலில் பல போராளிகள் வீரச்சாவடைந்தும் இருந்தனர். அப்படிப்பட்ட ஒரு தாக்குதலில் நானும் பாவலனும் சிக்கியிருந்தோம். 16.08.98 அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரம் ஐந்து மணியைத் தாண்டி விடிந்துகொண்டிருந்தது. களமுனையில் பல பணிகள் இருந்தமையால் அன்று விடிவதற்கு முன்னமே நாங்கள் இருவரும் சென்று கொண்டிருந்தோம். எங்களின் முகாமிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் சென்றால் தான் முன்னணிக் காவலரண்களை அடைய முடியும். ஆனால் வேகமாக நகரவும் முடியாது. அடர்ந்த காடு என்பதனால் மிகநிதானமாக மெதுவாகவே நடந்து சென்றோம். திடீரென ஏதோ இனம்புரியாத சந்தேகம் எம்மிடையே எழுந்தமையால் இருவரும் நிலையெடுத்துத் தயாரானோம். நாம் சந்தேகப்பட்டது சரியாகியது.

அங்கு ஊடுருவியிருந்த வேவு அணி ஒன்று தளம் திரும்பிக் கொண்டிருந்தது, அந்த நேரத்தில் நான் பாவலனைப் பார்க்க அவனது துப்பாக்கி முழங்கியது. உண்மையில் இருவரும் எப்படிச் சண்டை செய்தோம் என்று தெரியவில்லை. அத்துடன் பின்தளப்பகுதியில் இராணுவம் ஊடுருவி விட்டது என நினைத்த காவலரண் போராளிகள் தாக்குதலை இராணுவ நிலைகள் நோக்கி தொடுக்க பின்தளப்பகுதியில் இருந்த மோட்டார் அணிகள் களமுனைநோக்கி இராணுவம் என நினைத்து மோட்டார் தாக்குதலை இராணுவ சூனியப்பகுதி நோக்கி நடாத்தினர். ஆனால் தாக்குதல் நடைபெற்ற எமது பகுதிகளுக்கு உடனடியாக மேலதிக படையணிகள் வரமுடியவில்லை. காரணம் எங்களால் அவர்களுடனான தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதனால் நாம் இருவரும் மட்டுமே சண்டையை நடத்தி முடித்தோம்.

அன்றுதான் பாவலனின் சண்டை வலுவையும், அவனிடமிருந்த ஓர்மத்தையும் பார்த்தேன். அந்த அதிகாலையில் நடந்த சண்டையில் 6 இராணுவத்தினர் கொல்லப்பட ஒருவன் காயமடைந்த நிலையில் உயிருடன் பிடிபட்டான். இதுவே பாவலன் கண்ட முதலாவது சண்டையாகும் இந்தச் சண்டை முடிந்த அன்று நள்ளிரவு அதாவது 17.08.98 திங்கட்கிழமை எனது வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்று நடைபெற்றது. அதாவது அன்று நள்ளிரவு 1 மணியிருக்கும் திடீரென்று ஒரு எல்ஃப் ரக வாகனம் ஒன்று நாங்கள் இருந்த பின்தளப்பகுதிக்கு வந்து நின்றது. அதில் வந்தவர்கள் உடனடியாக அந்த வாகனத்தில் ஏறுமாறு கேட்க பாவலன் என்முகத்தைப் பார்த்து “எங்கை மச்சான் சண்டைக்கோ” என்றான். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. “ஓம்போல” என்று சொல்லிவிட்டு வாகனத்தில் ஏறினேன்.

வாகனம் வேகமாக சென்றது அது சென்ற பாதை எனக்கு பரீட்சயம் என்பதால் அது அம்பகாமத்தின் பின்தளத்திலுள்ள குறிஞ்சி முகாமுக்கு செல்கிறது என உணர்ந்தேன். வாகனம் சடாரென குறிஞ்சி முகாமிலிருந்து 200 மீற்றர் தொலைவில் நின்றது. அப்போது அங்கு பல போராளிகள் மரத்தோடு மரமாக நின்றிருந்தனர். உடனே பாவலன் மச்சான் மீற்றிங் போலகிடக்கு என்றான். அப்போது நான் தாக்குதலுக்கான திட்டம் சொல்லப் போயினம் என்று சொல்லிக் கொண்டு முன் பதுங்குகழியடியைத் தாண்டினேன். அப்போது “என்னப்பன் எப்பிடிஇருக்கிறியள்டா.” என்ற சொல் என் செவிகளுக்குள் நுழைந்தது. சட்டெனத் திரும்பினேன். அந்த இருளில் பிரகாசமாகத் தெரிந்த அந்தச் சூரியதேவனின் குரலது. ஆம் எல்லோரும் காணத்துடிக்கும் எம் தேசியத் தலைவரின் குரல். ஓடிச் சென்று கட்டியணைக்க வேண்டும் போலிருந்தது.

எனது சந்தோசத்திற்கு அளவேயில்லை. அத்துடன் தேசியத் தலைவருடன் கேணல் ராஜூ அண்ணா, பிரிகேடியர் பால்ராஜ், பிரிகேடியர் தீபன் அண்ணா ஆகியோரும் வருகை தந்திருந்தனர். உணவுண்டபின் தேசியத்தலைவர் எம்மைப் பார்த்து “யாரப்பன் நேற்று வேவு அணியோடை சண்டைபிடிச்ச பிடிச்சது…” என்று சொல்லி முடிப்பதற்குள் நானும் பாவலனும் கையை உயத்திவிட்டோம். பின் எங்களை அழைத்து எங்கள் இருவர் தோள்களிலும் தனது கையைப்போட்டு தோழமை கொண்டாடி எங்களை வாழ்தியதை என்ன வார்த்தைகள் இல்லை. “பல போராளிகள் அண்ணையை காணாமல் வீரச்சாவடைய நான் வந்து ஒரு கிழமைக்குள்ளே அண்ணையைக் கண்டுட்டன்டா” எண்டு பாவலன் அடிக்கடி சொல்லுவான். துரதிஸ்ட வசமாக 20.08.98 நடந்த சண்டையில் நான் படுகாயமடைந்து களமுனையிலிருந்து அகற்றப்பட்டேன்.

அப்போது நான் எதிர்பார்க்கவில்லை. நான் களமுனையிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படப் போகின்றேன் என்று. நான் களமுனையிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக அகற்றப்பட்ட பின் பாவலனே எனது பணிகளையும் சேர்த்துப் பார்த்திருந்தான். நான் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயம் எனக்கு ஒரு மடலை அனுப்பியிருந்தான். அதில் “டேய் நீசுமந்த அந்த இலட்சியத்தை நான் சேர்த்துச் சுமக்கின்றேன். கெதியாய் வா. ரெண்டுபேரும் சேர்ந்து முதன் முதல் 6 ஆமியைக் கொண்டது பொல் 600 பேரைக் கொல்லுவம்டா. டேய் நான் நினைச்சண்டா நீ செத்திட்டாய் எண்டு. நீ விரைவில் சுகமாகி சண்டைக்கு என்னோடை வர ஈழத்தாயைப் பிரார்த்திக்கின்றேன். அன்புடன் – தமிழ்த்தாய் மகன் பாவலன் (அஜந்தன்) என்று எழுதியிருந்தது.

எனக்கு அழுகை வந்தது. இருந்தும் என்ன செய்வது இருவரும் இணைந்து பணியாற்ற கடைசிவரை முடியவில்லை. ஜெயசிக்குறூய் சண்டைக்கெதிராக விடுதலைப் புலிகள் தொடுத்த ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையின் போது இவனின் பங்கு முக்கிய மானது. அத்துடன் ஆனையிறவுத் தளம் தாக்கியழிப்பதற்காக பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா தலைமையில் இத்தாவிலில் விடுதலைப்புலிகள் தரையிறங்கிய போதும் இவன் முக்கிய பங்காற்றினான். குறிப்பாக இத்தாவிலில் தரையிறங்கிய பால்ராஜ் அண்ணாவுடன் சென்ற லெப்.கேணல் ராஜசிங்கன், கேணல் நகுலன் ஆகியோருடன் சென்று தலையிறங்கியவன் பாவலன். ஒரு கட்டத்தில் இராணுவம் பால்ராஜ் அண்ணா அவர்களை நெருங்கிய வேளையில் அதைத்தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியைச் சேர்ந்த தென்னவன், கேணல் நகுலன் ஆகியோருடன் இணைந்து பாவலன் தொடராக 9 மணிநேரச் சண்டையில் ஈடுபட்டு தேசியத் தலைவரிடம் பாராட்டுக்களைப் பெற்றான்.

இதன்போது இவனின் சகோதரி ஒன்றையும் பளைப் பகுதியில் நடந்த ஓயாத அலைகள் -03 நடவடிக்கையின் போது நாட்டிற்காக இழந்தான். அதன் பின்னர் இடம் பெற்ற தீச்சுவாலை நடவடிக்கையில் காயமடைந்தான். பின்னர் சமாதான முயற்சியி;ன் போது விடுதலைப்புலிகள் யாழ் சென்ற போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் அரசியல் துறையில் இணைக்கப்பட்டு அவர்களுடன் சென்று பணியாற்றினான். இந்தக் காலத்தில் தான் சந்தர்ப்பம் காரணமாக நான் புலம் பெயர் நாடொன்றுக்கு வந்திருந்தேன். அங்கு வந்தபின்னும் அவனது தொடர்பு மீண்டும் எனக்குக் கிடைத்தது. பின்னர் சமாதான முயற்சி முறிவடைந்த பின்னர். வன்னி திரும்பி சாள்ஸ் அன்ரனிச் சிறப்புப் படையின் அரசியல்ப் பொறுப்பாளராகச் செயற்பட்டான். இந்தக் காலத்தில்தான் வன்னிமீதான இறுதிக்கட்ட யுத்தம் தொடங்கியது. இந்த யுத்தத்தின் போது மடு களமுனைக்குப் பொறுப்பாக அனுப்பப்பட்ட பாவலன். 2008 மே மாதம் பண்டிவிரிச்சான் களமுனையில் காயமடைந்தான்.

இதனால் இவனது வலது கால் பாதம் பலத்த சேதம் அடைந்தது. சிறிதுகால மருத்துவ ஓய்வுகளின் பின் மீண்டும் தாயகத்துக்கான தன்பணியைத் தொடர்ந்தான். இந்த நேரத்தில் தான் வன்னி மேற்கின் பெரும்பாகம் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் விழுங்கப்பட மக்கள் அனைவரும் வன்னி கிழக்கை நோக்கி நகர்ந்த போது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அம்மக்களின் தேவைகளை நிறைவேற்றுதற் பொருட்டு பாவலனை நியமித்திருந்தார். பின்னர் வன்னியின் சுருக்கு இறுகிய போது பாவலன் முகமாலை களமுனையில் எல்லைக்கல்லாக நின்றான். பின்னர் முகமாலைப் பகுதியை விட்டு புலிகள் பின்வாங்கிய போது விசுவமடு சென்று மக்களின் பணிகளை மேற்கொண்டவன். இதன் போது எனக்கு மீண்டும் அவனது தொடர்பு கிடைத்தது. அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக எனக்கு அடிக்கடி கூறுவான். குறிப்பாக மக்கள் படும் அவலங்கள் அவனை வாட்டியது.

இருந்தும் காலத்தின் கட்டாயம் அவனை மீண்டும் களமுனைக்கு செல்ல தூண்டியது. அவன் களமுனைக்கு செல்வதற்கு ஒரு சில நாட்கள் முன்பு (25.01.09) என்னுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தான். அதன்போது அவனிடம் நான் ஜனவரி 31ஆம் திகதி லண்டனில் மாபெரும் கண்டணப் பேரணி நடைபெற இருப்பதாகக் கூறினேன். அதற்கு அவன் களமுனையின் யதார்த்த நிலைமை எதிர்கால செயற்பாடுகள் ஆகியன பற்றி விரிவாகக் கதைத்ததான். அதில் அவன் இறுதியாகப் பேசிய வார்த்தைகள் என் மனதை இன்னும் வாட்டிநிற்கின்றன. “மச்சான் நான் சண்டைக்குப் போறன். ஆனால் திரும்பி வரமாட்டன். ஏனெண்டால் நிலைமை மோசமடா. இனி நீங்களும் தான் ஏதாவது செய்யவேணும். அண்ணையைக் காப்பாற்றோணும் அவருக்கு ஒண்டும் நடக்ககூடாது.

நாங்கள் இல்லாட்டிக்கும் அண்ணைக்கு நீங்கள் துணையாக நின்று தமிழீழ இலட்சியத்தை வெறெடுக்ககோணும் மச்சான். கால் ஒண்டு துண்டாய் ஏலாது முடிந்தால் கரும்புலியாகப் போகலாம் இவங்கள் விடுறாங்கள் இல்லை. சரி மைச்சான் நான் வைக்கிறன். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.” என்று அவன் கூறி முடிப்பதற்குள் எனது கண்கள் கனத்துவிட்டன. அன்று தான் இறுதியாக அவனுடைய குரலைக் கேட்டேன். அதுவும் தொடர்புகள் பலதடவை துண்டிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டு பல சிரமங்களின் மத்தியில் அவனுடன் கதைத்தேன். இதன் பின் பாவலன் களமுனை நோக்கி (01.02.09) நகர்ந்து கொண்டிருந்தபோது எங்கோ இருந்து காலன் வடிவில் வந்த எறிகணை அவனது கழுத்துப்பகுதியைப் பதம்பார்க்க அவன் மேஜர் பாவலனாக எம்மனங்களில் வாழ ஆரம்பித்தான்.

அது மட்டுமல்ல அவன் ஒரு சிறந்த கலைஞனும் கூட தமிழீழப்பாடகர்கள் வசீகரன், நிரோஜன் அவர்கள் பாடிய “ஈரவிழி மூடும் போது ஏனம்மா கண்ணீர்க் கோடு என்ற பாடல்வரிகளுக்கு கதாபாத்திரமாக நடித்து ஒளிவடிவம் கொடுத்தவன் பாவலன்.

இன்று அந்த மாவீரனைப் போல் கிட்டத்தட்ட 37,000 மாவீரர்களது வரலாறும் வித்தியாசமானது. கொள்கை உணர்வு மிக்கது. இந்த மாவீரர்களின் நினைவு நாளில் உங்கள் கல்லறைகளில் எங்களால் தீபங்கள் ஏற்றமுடியாது. உங்கள் கல்லறைகளையும் எங்களால் காண முடியாது. அதுவரை ஒவ்வொரு ஈழத்தமிழர் மனங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள். என்று தாயகம் மீளுகின்றதோ அன்று உங்கள் கல்லறைகள் மீது தீபம் எரியும்.

ஓயாத அலைகள் -3. பகுதி 2.

இது 1999 ஆம் ஆண்டின் புரட்டாசி மாதம். கரும்புலிகள் அணியின் மூன்றாம் தொகுதியும் அதற்குரிய நிர்வாகமும் வேறோர் இடத்திலிருந்து கடற்பயிற்சிக்காக முல்லைத்தீவின் கள்ளப்பாடு என்ற கடற்கரைக் கிராமத்துக்கு நகர்ந்திருந்தது. இங்கே கரும்புலிகள் அணி எனப்படுவது தரைக் கரும்புலிகள் அணியைக் குறிக்கும். பொதுவாக கடற்கரும்புலிகளை ‘கடற்கரும்புலிகள்’ என்றும், தாயகப்பகுதிக்கு வெளியேயோ உள்ளேயோ இயக்கத்தால் உரிமை கோரப்படாத தற்கொடைத் தாக்குதல் நடத்தும் அணியை ‘மறைமுகக் கரும்புலிகள்’ என்றும், மற்றவர்களை ‘கரும்புலிகள்’ என்றும் அழைப்பதுண்டு. இந்தத் தரைக்கரும்புலிகள் அணி இம்ரான்-பாண்டியன் படையணியின் நிர்வாகத்தின் கீழ் ஓரணியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது.

கரும்புலி அணியில் இணைய விரும்பும் போராளிகள் தேசியத் தலைவருக்குத் தமது விருப்பைத் தெரிவித்துக் கடிதம் எழுதுவார்கள். பலர் விடாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள். அக்கடிதத்துக்கான பதில் தலைவரிடமிருந்து அனுப்பப்படும். அதில் பெரும்பாலும் ‘உரிய நேரம் வரும்போது நீங்கள் கரும்புலி அணியில் இணைத்துக்கொள்ளப்படுவீர்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். சிலருக்கு அவர் கரும்புலியாக இணைத்துக் கொள்ளப்பட மாட்டார் என்ற பதிலும் அதற்குரிய விளக்கத்தோடு அனுப்பி வைக்கப்படுவதுண்டு. ஏற்கனவே சகோதரர் யாராவது கரும்புலியாக இருந்தால், கரும்புலியாகச் செயற்படுவதற்குரிய உடற்றகமை இல்லாதிருந்தால் போன்ற காரணங்களுக்கான அந்த வாய்ப்பு மறுக்கப்படும். கரும்புலியாக விருப்புக் கடிதமெழுதி அச்சந்தர்ப்பம் கிடைக்காமலேயே நூற்றுக்கணக்கான போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

கரும்புலி அணியொன்று உருவாக்கப்படும்போது எற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தவர்களுள் குறிப்பிட்டளவானோர் மட்டும் தெரிவு செய்யப்படுவார்கள். வரிசையில் காத்திருக்கும் நூற்றுக்கணக்கானோரில் நாற்பது அல்லது ஐம்பது பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்கள் இப்போதும் கரும்புலி அணியில் இணையும் அவாவோடு உள்ளனரா என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். வெவ்வேறு படையணிகள், துறைகள், பிரிவுகளிலிருந்து கரும்புலிகளாகத் தெரிவு செய்யப்படுபவர்கள் முதலில் தேர்வுப்பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சிறப்புப் பயிற்சியெடுப்பதற்கான அடிப்படைத் தகமைகளுக்கான தேர்வில் தேறுபவர்கள் அதன்பின்னர் கரும்புலிகளுக்கான சிறப்புப் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்வுப் பயிற்சியில் தேறாதவர்கள் அணியில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள். கரும்புலிகளுக்கான சிறப்புப் பயிற்சிநெறியை நிறைவுசெய்த பின்னரே நடவடிக்கைக்கு அனுப்பப்படுவார்கள். கரும்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் களத்தில் வீழும்வரை பயிற்சியோடுதான் நாட்கள் கழியும். நடவடிக்கை… பயிற்சி…. மீண்டும் நடவடிக்கை… மீண்டும் பயிற்சி என்று இந்தச் சுழற்சி தொடர்ந்து கொண்டிருக்கும்.

arulan

மீண்டும் கள்ளப்பாட்டுக் கடற்கரைக்கு வருவோம். இப்போது கரும்புலிகள் அணியின் மூன்றாவது தொகுதி சிறப்புப் பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. சிறப்புப்பயிற்சியின் இறுதிக்கட்டமாக கடற்பயிற்சிக்காக கள்ளப்பாட்டுக்கு வந்திருந்தது அவ்வணி. கரும்புலிகள் அணிக்குரிய கடற்பயிற்சிக்கான பொறுப்பை பின்னாளில் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கோகுலன் (கடற்சிறுத்தைகள் அணியில் இருந்தவர்) ஏற்று வழங்கிக் கொண்டிருந்தார். அவரோடு சின்னக்கண்ணன், புவனா என்று கடற்புலிப் போராளிகள் இருவரும் இணைந்து கடற்பயிற்சி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஆண், பெண் இருபாலாரும் சேர்ந்து 30 வரையானவர்கள் இக்கடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதிக்கும் மூன்றாவது தொகுதிக்கும் பயிற்சி ஆசிரியராகக் கடமையாற்றிய அருளன் இந்தத் தொகுதிக்கான கடற்பயிற்சி முடிந்ததும் அவரின் நீண்டகால விருப்புக்கிணங்க கரும்புலியாக இணைத்துக் கொள்ளப்படுவாரென்றும் அவர் இரண்டாம் தொகுதியோடு இணைந்து செயற்படலாமென்றும் தலைவரால் உறுதியளிக்கப்பட்டிருந்தது. இந்தக் கடற்பயிற்சியை விரைவாகவும் சரியாகவும் முடித்துவிட வேண்டுமென்ற அவாவோடு அருளன் செயற்பட்டுக்கொண்டிருந்தார்.

அருளனைப் பற்றி சிறிதாவது சொல்லியாக வேண்டும். இம்ரான்-பாண்டியன் படையணியின் கெனடி-1 தொடக்கப்பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படைப் பயிற்சியை முடித்தபின் தொடர்ந்தும் இம்ரான்-பாண்டியன் படையணியில் செயற்பட்டவர். மேஜர் மாதவன் (2000 ஆம் ஆண்டு ஓயாத அலைகள் -3 இன் யாழ்ப்பாணம் மீதான புலிகளின் படையெடுப்புக் காலத்தில் தனங்கிளப்பில் வீரச்சாவடைந்தவர். சிறந்த பாடகன், கவிஞன், எழுத்தாளன் என்று பன்முகத் திறமைவாய்ந்த போராளி) கரும்புலிகள் அணிக்கான பொறுப்பாளனாயும் பயிற்சியாளனாயும் இருந்த காலத்தில் அருளனும் கரும்புலிகள் அணிக்கான பயிற்சியாளருள் ஒருவராய் இணைந்து கொண்டார்.

இந்தக் காலப்பகுதியில் கரும்புலிகளின் பயிற்சிப் பாசறை சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சுக்கு இலக்காகியது. அதில் அருளன் மிகக்கடுமையான காயத்துக்குள்ளானார். வயிற்றுப்பகுதியில் மிகநீளமான காயம். மிகக்கடுமையான நிலையிலிருந்து ஒருவாறு காயம் மாறி மீண்டும் பயிற்சியாசிரியனாக தனது பணியைத் தொடர்ந்தார். ஆனாலும் அந்தக் காயத்தின் தாக்கத்திலிருந்து இறுதிவரை அவரால் மீளமுடியவில்லை. தனது வேதனை, இயலாமை அனைத்தையும் பொறுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு – குறிப்பாக பொறுப்பாளர்களுக்கும் பயிற்சியெடுக்கும் போராளிகளுக்கும் – அவை தெரியாமல் மறைத்தபடி தனது கடமையைத் தொடர்ந்தார். அவரது எண்ணம் முழுவதும் இந்த மூன்றாம் தொகுதிக்கான பயிற்சியை சிறப்பாக முடித்துவிட்டு கரும்புலியாக இணைந்து செயற்பட வேண்டுமென்பதிலேயே இருந்தது.

இந்தக் கடற்பயிற்சியிலும் அருளனால் முழுமையாக ஈடுபட முடியவில்லை. அதுவும் நீச்சல் என்பது வயிற்றுத் தசைகளுக்கு அதிக வேலை கொடுக்கும் ஒரு பயிற்சி. ஐந்து, ஆறு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக மிதக்கவோ நீந்தவோ வேண்டிய பயிற்சியும் இதில் உள்ளடக்கியிருந்தது. அருளனால் எவ்விதத்திலும் அதற்கு ஈடுகொடுக்க முடியாது. ஆனாலும் தனது எல்லையையும் தாண்டி அருளன் அப்பயிற்சியில் ஈடுபட்டார். ஒருவித வெறியோடுதான் அந்தக் கடற்பயிற்சியில் அருளன் ஈடுபட்டிருந்தார். அனால் அருளனை அதிகம் சோதிக்க வேண்டிய தேவையில்லாமல் உடனடியாகவே அருளனுக்கான பணி வந்து சேர்ந்தது. ‘சிங்க புர’ ஆட்லறித்தளம் மீதான தாக்குதல் முழுவதற்கும் தலைமைதாங்கிச் செல்லும் பொறுப்பு அருளனுக்கு வழங்கப்பட்டு அவர் கடற்பயிற்சியிலிருந்து நிறுத்தப்பட்டு கரைச்சிக்குடியிருப்பில் தங்கியிருந்த மற்றக் கரும்புலி அணியோடு இணைக்கப்பட்டார்.

நீச்சற் பயிற்சிக்கு வருவோம். கரும்புலிகள் அணியின் மூன்றாம் தொகுதியில் இருந்தவர்களுள் சிலர் ஏற்கனவே மிக நன்றாக நீந்தக் கூடியவர்கள்; சிலருக்கு அறவே நீச்சல் தெரியாது. மகளிர் அணியில் சசி, சுதாஜினி போன்றவர்கள் (கரும்புலி மேஜர் சசி நெடுங்கேணியிலும், கரும்புலி மேஜர் சுதாஜனி பளை ஆட்லறித் தகர்ப்பிலும் வீரச்சாவடைந்தனர்) மிகநன்றாக நீந்துவார்கள். அவர்கள் இருவரும் மாலதி படையணியின் சிறப்பு அதிரடிப்படை அணியொன்று உருவாக்கப்பட்டபோது அதில் பயிற்சியெடுத்திருந்தவர்கள். சசி நீந்துவதைப் பார்க்க வியப்பாக இருக்கும். தாங்கள் ஊரிலேயே பெரிய நீச்சற்காரர்கள் என்று கதைவிட்டுக் கொண்டிருந்தவர்கள் பலர் வாய்பொத்தியிருக்க வேண்டிய நிலை வந்தது சசியால்தான். குறுந்தூர வேக நீச்சலென்றாலும் சரிதான், ஐந்து கடல்மைல் தூரநீச்சல் என்றாலும் சரிதான், ஆண்களின் முன்னணிக் குழுவோடு நீந்தக் கூடியராக சசி இருந்தார்.

sasi

காலை, மாலை என்று ஒருநாளில் இருதடவைகள் கடற்பயிற்சி நடைபெறும். நீச்சலில் அடிப்படையே தெரியாதவர்களை கோகுலன் மாஸ்டர் பொறுப்பெடுத்துப் பழக்கினார். மிக அழகாக நீச்சற்கலையைச் சொல்லித் தருவார். இயக்கத்தில் நீச்சற் பயிற்சிக்குரிய ஆசிரியர்கள் என்றுவந்தால் போராளிகளுக்கு முதலில் நினைவுக்கு வருவது இவராகத்தான் இருக்கும். 2002 இல் யுத்தநிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தகையோடு பிரிகேடியர் பால்றாஜ் தலைமையில் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியொன்று நாயாற்றில் தொடங்கப்பட்டது. நூற்றுக்குமதிகமான போராளிகள் பங்குகொண்ட அந்தப் பயிற்சிப் பாசறையில் கடற்பயிற்சியும் இணைக்கப்பட்டிருந்தது. அங்கும் அப்பயிற்சியைப் பொறுப்பெடுத்துத் திறம்பட முடித்தவர் இதே கோகுலன் மாஸ்டர்தான்.

கரும்புலிகள் அணிக்கான கடற்பயிற்சி அதிகாலை மூன்றுமணிக்கெல்லாம் தொடங்கிவிடும். கரைக்கு வர ஐந்து, ஆறு மணித்தியாலங்கள் கூட ஆகலாம். பிறகு மீளவும் மாலையில் பயிற்சி தொடங்கும். இடைப்பட்ட நேரம் பெரும்பாலும் நித்திரையோடுதான் போகும். கடற்பயிற்சிக் களைப்பும், கடற்காத்தும் சேர்ந்து சொர்க்கத்துக்குக் கொண்டு போகும்.

கடற்பயிற்சிக் காலத்தில் அங்கு நடந்த சுவாரசியங்களுள் ஒன்று உணவு வழங்கல். சிலாவத்தையிலிருக்கும் ஒரு தோட்டத்தில்தான் நிர்வாகம் இயங்கிவந்தது. அங்கிருந்துதான் கரைச்சிக் குடியிருப்பிலிருக்கும் அணிக்கும், கள்ளப்பாட்டிலிருக்கும் அணிக்கும் உணவு வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஓர் ஒற்றை மாட்டுவண்டிலில் உணவு வந்து போகும். கடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அணிக்கான உணவு வழங்கலில்தான் சிக்கல் வந்து சேர்ந்தது.

மகளிர் பக்கத்தில் சிக்கல் இருக்கவில்லை. ஆனால் ஆண் போராளிகள் பக்கத்தில் அவித்துக் கொட்டக் கொட்ட அது காணாமற் போய்க்கொண்டேயிருந்தது. கடற்பயிற்சி முடித்துக் கரைதொடும்போது புகையத் தொடங்கும் வயிறு எளிதில் அடங்கிவிடாது. போராளிகளுக்குத் தீனிபோட்டு நிர்வாகத்தால் கட்டுப்படியாகவில்லை. அப்போது ஒரு போராளிக்கான ஒருநேர உணவுக்காக வழங்கற் பகுதியால் ஒதுக்கப்பட்டிருந்த மாவின் நிறை 250 கிராம். ஆனால் இப்போது 500 கிராம் மா கூடப் போதுமானதாக இருக்கவில்லை. அவ்வளவுக்குப் போராளிகள் விழுங்கித் தள்ளினார்கள். தமக்கான மேலதிக உணவுத் தேவைபற்றி வழங்கற்பிரிவிடம் பேசியபோது, அவர்கள் நம்பாமல் தாம் நேரில் வந்து சோதிக்க வேண்டுமென்று சொல்லி ஒருநாட்காலை நேரிலே வந்து போராளிகள் உண்பதைப் பார்த்துப் போனார்கள்.

‘குமரன், அதுசரி, இன்னும் எவ்வளவு காலம் உந்தக் கடற்பயிற்சி இருக்கு?’

‘எல்லாரும் அஞ்சு கடல்மைல் முடிக்க வேணும். பிறகு வெயிற்றோட நீந்தப் பழக்க வேணும். பலன்சில நிண்டு சுடப்பழக்க வேணும், சுழியோடப் பழக்கோணும்…. எப்படியும் ஒரு மாசமாகுமெண்டு நினைக்கிறன்’

‘என்ன பகிடியே விடுறியள்? உவங்களுக்கு ஒருமாசம் சாப்பாடு போட நாங்கள் ஏதேன் கப்பலெல்லோ கடத்த வேணும்?’ – பகிடியாகவே சொல்லிவிட்டுப் போனார் வழங்கற்பகுதியிலிருந்து வந்த பொறுப்பாளர்.

கள்ளப்பாடு மிகமிகச் சிறிய கிராமம். மிகமிக அன்பான மக்கள். நாங்கள் இருந்த இடத்தில் பொதுமக்களின் வாடி ஒன்றிருந்தது. மாலையில் கரைசேரும் படகிலிருந்து எமக்கு ஒரு திருக்கை மீன் அன்றாடம் தந்துகொண்டிருந்தார்கள் அம்மக்கள். றீகஜீவன் (கரும்புலி மேஜர் றீகஜீவன் ஓயாத அலைகள் – 3 இல் யாழ்ப்பாணத்தில் ஒரு நடவடிக்கையின் போது வீரச்சாவு) செய்யும் திருக்கைப் புட்டுக்காக நாங்கள் காத்திருப்போம். பசி அடங்காவிட்டால் தென்னம்பாளையோடு கடற்கரைக்குக் கிளம்பிவிடுவான் றீகஜீவன், அவனோடு நாங்களும். கரையிலோடும் நண்டுகளை அடித்து சுட்டுச் சாப்பிடுவோம். என்னதான் இரகசியமாக, நடுச்சாமத்தில் இதைச் செய்தாலும் மறுநாட்காலை மகளிர் அணி தொடக்கம் கிராமம் முழுவதும் கேட்கும் ‘என்ன.. ராத்திரி பீ-நண்டு சுட்டுச் சாப்பிட்டனியள் போலகிடக்கு?…’ ஒருகட்டத்தில், நடுச்சாமத்தில் நண்டுசுடும் மணத்திலிருந்து தப்ப நினைத்தோ என்னவோ இரண்டு திருக்கைகளைத் தரத் தொடங்கினார்கள் அம்மக்கள்.

இடையில் ஒருநாள் கடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களை வேலைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக் கட்டடத்தை அண்டிய பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். வடலியோலைகள், உடைந்த ஓடுகள், தகரங்கள், பனங்குற்றிகளைக் கொண்டு ஓர் இராணுவ முகாமின் மாதிரி அமைக்கும் வேலை அது. அந்நடவடிக்கைக்கான அணியினரில் சிலர் வேவு நடவடிக்கையிலும் ஏனையோர் பயிற்சிக்கான அயத்தப்பணியிலும் நின்ற காரணத்தால் மற்ற அணியைக் கொண்டே மாதிரி அமைக்கப்பட்டது. கரைச்சிக் குடியிருப்பும் கள்ளப்பாடும் ஒரு கிலோமீற்றர் இடைவெளியில் இருந்தும்கூட இரு அணிகளுக்குமிடையில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. ஒருவரையொருவர் சந்திக்கவோ கதைக்கவோ சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. மாதிரி இராணுவத் தளத்தை வைத்துக்கொண்டு ஏதோவோர் ஆட்லறித் தளம் மீதான தாக்குதலுக்கான பயிற்சி நடக்கப் போகிறதென்ற அளவில் கடற்பயிற்சி அணி ஊகித்திருந்தது.

தொடரும்…

மொழி காத்த தலைவன்

மாந்த குல வாழ்வில் மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் அவனுக்கான நிலத்தை அவன் வரையறுத்துக் கொண்டான். அந்த நிலம் அவன் வாழ்வோடு ஒன்றி ஒவ்வொரு அசைவிலும் அந்த நிலம் அவனோடு பேசியது. அந்த நிலத்திலிருந்து அவன் அவனுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டான். அதுவே அவனுக்கு உயிராதாரமாய் இருந்தது. அந்த மண்ணுக்கு நன்றியுடையவனாக அவன் வாழ்ந்து வந்தான். எந்த நிலையிலும் சொந்த மண்ணிற்கு துரோகம் இழைக்கக்கூடாது என்பதிலே அவன் தெளிவாக இருந்தான்.

ஆகவே, உறவைப்போல அந்த மண்ணையும் அவன் உறங்காமல் காத்தான். உயிர்போல் நேசித்தான். காரணம் அவன் வாழ்ந்த மண் என்பது அவன் மூதாதையரை உருவாக்கிய மண். தமது மூதாதையர் அந்த மண்ணிலேதான் வாழ்ந்து களித்து, சிரித்து இவனை படைத்துவிட்டு அந்த மண்ணிற்கே உரமாகி போனார்கள். ஆகவே தமது மூதாதையரின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு இன்னமும் நினைவாய் இருக்கிறது.

தமது மூதாதையரின் பண்பாடு, கலாச்சாரம், இலக்கியம், பழக்க வழக்கங்கள் அதைவிட மேலாக அவர்கள் விட்டுச் சென்ற மொழி அவனை அந்த மண்ணைவிட்டு பிரிக்க முடியாமல் செய்கிறது.ஆகவே அந்த மண் என்பது அவன் உயிர்வலி. அந்த மண் என்பது அவனின் உணவாதாரம். அந்த மண் என்பது அவனின் வாழ்வு. அவனின் இலக்கியம். அவன் வாழும் கலாச்சாரம். இது வாழ்ந்து முடித்த புத்தகம் மட்டுமல்ல. வாசித்து வாசித்து தமது வருங்காலத்திற்கு விட்டுச் செல்லக்கூடிய ஒரு பெரும் பொக்கிஷம். ஆகவேதான் மண்ணை நேசிப்பது என்பது மனிதனுக்குள் ஒரு சிறப்பு வாய்ந்த அசைக்க முடியாத, விட்டுக் கொடுக்க முடியாத பேராற்றலாய் உரைந்து போயிருக்கிறது. அவன் வாழ்வு அந்த மண்ணிலேதான் செதுக்கப்பட்டது. அந்த மண்ணில் வீசும் காற்று இவன் மொழியை சுமந்து கொண்டு சுற்றி சுற்றி அவனுடைய காதிலே பாடல்களாக, இசையாக மொழிமாற்றம் செய்து இவனை மகிழ்விக்கிறது.

அந்த காற்று சுமந்து செல்லும் இசையிலே இனிமை இருக்கிறது, காதல் இருக்கிறது, கருணை இருக்கிறது, அன்பு இருக்கிறது, தாலாட்டு இருக்கிறது, இறுதியாக ஒப்பாரியும் இருக்கிறது. ஆகவேதான் ஒப்பற்ற அந்த மண்ணை அவன் ஒருபோதும் மறக்க முடியாதவனாக மாறிப் போகிறான். தமக்கு தீங்கு வந்தபோதிலும்கூட தாங்கிக்கொள்ளும் அவன் தன் மண்ணுக்கு தீங்கு என்றவுடன் வீரிட்டு எழுகிறான். தன் மண்ணுக்கு கலங்கம் என்றவுடன் கனலாகிறான். காரணம் அந்த மண் அவனைக் காத்த மண். அவனை வாழ வைத்த மண். இனியும் வாழ வைக்கப்போகும் மண்.

ஆகவே ஒவ்வொரு இனமும் தன் மண்ணை நேசிப்பது என்பது தன் வாழ்வை சுவாசிப்பதற்கு சமமானது. மண் என்பது ஏதோ உயிரற்ற பொருளல்ல. அது நம்மோடு பேசும். நம்மோடு சிரிக்கும். நம்மோடு அழும். நம்மை கரம்பிடித்து அழைத்துச் செல்லும். நம்மை தாங்கிக் கொள்ளும். நம்மை சுமந்துக் கொள்ளும். ஆகவே மண் நம்முடைய மறுஉயிர். மண் நம்முடைய உணவு. மண் நமது முகம். மண் என்பது நமது மறுபரிசீலனை. நமது பிள்ளைகளுக்கு நாம் பதிவு செய்து வைக்கும் பரிசுப்பொருள்.

ஆகவேதான் மண்ணுக்கான போராட்டம் என்பது இந்த பூமிப்பந்தில் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் பெரும் பலம் படைத்த கொள்ளைக்காரர்கள் பிற மண்ணை சூறையாட தாம் நடத்தும் சமருக்கு எதிர்ச்சமர் புரிந்து நம்மை பலியாக்கிக் கொள்ள மண்ணின் மைந்தர்கள் களம் காண்கிறார்கள். ஏதோ அந்த மண் இன்றோடு அவர்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்காக அல்ல. அது தமது தலைமுறைத் தலைமுறையாய் தம்மை அடையாளப்படுத்தும் என்பதற்காக.

சிலபேர் தமிழீழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக ஏன் விட்டுக் கொடுத்துப்போகலாமே. அரசியலில் சில சலுகைகளை பெற்றுக் கொண்டு ஒத்து வாழலாமே என்றெல்லாம் பேசுகிறார்கள். அவர்களுக்கு நம்முடைய பதில் ஒன்றுதான். உயிரை கொடுக்கலாம், ஆனால் மானத்தை இழக்க முடியாது. மானம் என்பது உயிரை விட மேலானது. இது ஒரு காரணமாக இருந்தாலும் மேலும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு இனத்திற்கான அடையளம் என்பது அந்த இனம் பேசும் மொழி. மொழியை இழப்பது என்பது உயிரை இழப்பதற்கு சமமானது.

இன்று உலகில் பேசப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான மொழிகள் அழிந்து விட்டது. நூற்றுக்கணக்கான மொழிகள் அழிந்து கொண்டிருக்கின்றன. இந்த மொழிகள் அழிவதற்கு காரணம் என்ன என்று ஆழ்ந்து யோசித்தோமேயானால் அவர்கள் தமது மொழி அடையாளமான மொழியை தாங்கிக் கொண்டிருந்த, மொழியை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த, மொழியை பதிவு செய்து வைத்துக் கொண்டிருந்த தமது சொந்த மண்ணை இழந்தார்கள்.இப்போது அந்த மண்ணோடு அவர்கள் பேசிய மொழியும் புதைந்து போனது. வாழ்பவர்கள் மட்டும் பேசினார்கள். தமது பிள்ளைகள் வந்தவர்களின் மொழியை பேசினார்கள். ஆகவே தம் மூதாதையரின் மொழி என்னதென்று அவர்களுக்கு தெரியாமலேயே போனது.

தமக்கான மொழி அடையாளத்தை மட்டுமல்ல, இன அடையாளத்தையும் அவர்கள் இழந்து விட்டார்கள். ஆகவேதான் அந்த மொழியோடு சேர்ந்து அவனின் இனமும் அழிந்தது. அந்த மொழியோடு சேர்ந்து அவன் இலக்கியமும் அழிந்தது. அந்த மொழியோடு சேர்ந்து அவனின் கலாச்சாரம் அழிந்தது. நாளடைவில் அவனே அழிந்து போனான். அவனுக்கென்று ஒரு அடையாளம் இல்லாமலேயே போனது. நாளைய வரலாற்றில் அவனைப்பற்றி வாசிக்க யாரும் இல்லை. அவனைப் பற்றி யோசிக்க எவரும் இல்லை. அவனை யாரென்று யாருக்கும் தெரியாது.

ஆனால் தமிழ் அப்படிப்பட்டதா? கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன்தோன்றிய மூத்தக்குடி அல்லவா? அதை எப்படி இழப்பது? அதை காப்பது நமது கடமையல்லவா? ஆகவேதான் தாய் தமிழகத்தில் மொழி இழந்து, மொழிக்கான அடையாளத்தை இழந்துக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் தமிழீழத்தில் ஒரு மாவீரன் தோன்றினான். இனி உலகு உள்ள நாள்வரை தமிழுக்கென்று ஒரு அடையாளத்தை அவன் தக்க வைத்தான். தமிழினத்தின் முகவரியை அவன் உலகெங்கும் அனுப்பினான்.

இனி எந்த காலத்திலும் தமிழ், தமிழினம், தமிழ்மொழி சிதைவுக்கு சிறிதும் இடம் இருக்காது. இதை ஏழு கோடி மக்களுக்கு மேல் வாழும் தமிழ்நாடு செய்யாத நிலை இருக்கும்போது சில லட்சம் மக்கள் மட்டுமே வாழும் தமிழீழம் செய்து முடித்தது. காரணம் அவர்கள் தம் இனத்தின் அடையாத்தைக் காக்க தமது உயிரை துச்சமென மதித்தார்கள். பாரதிதாசன் சொல்வாரே ‘எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்களினம் என்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் திணை அளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் எனக்கு திருநாள்’ என. அந்த புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளை அவர்கள் முற்றிலுமாய் உள்வாங்கி களத்திற்கு வந்தார்கள்.

தமக்கான ஒரு நாடு இருந்தால்தான் நமக்கான மொழியை காக்க முடியும் என்பதை அந்த மாபெரும் தலைவன் முற்றிலுமாய் உணர்ந்திருந்தான். இந்த 21ஆம் நூற்றாண்டில் ஈடுஇணையற்ற அறிவியல் சாதனங்களை மொழி போராட்டத்திற்கு பயன்படுத்தத் தொடங்கினான். இனம் காக்கும் போருக்கு உயிரை பலியாக்கும் தற்கொலையாளர்களை தந்துதவினான். ஒவ்வொரு உயிரின் இழப்பிலிருந்தும் ஓராயிரம் தமிழ் ஓசை உலகை சூழ்ந்தது. ஒவ்வொரு களபலியிலும் தமிழ் இனத்தின் அடையாளம் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.தனக்கென ஒரு மண் தேவையா? என்று மானங்கெட்டவர்களும், மதிக்கெட்டவர்களும் மாறி மாறி பேசுகிறார்கள்.

ஒருவேளை தமிழ்நாடு தனிநாடாய் இருந்திருக்குமேயானால் இங்கிருந்து இப்போதிருக்கும் நிலை இருந்திருக்குமா? இங்கு நமக்கான மொழி அடையாளம் இருக்கிறதா? தமிழ் பேச மக்கள் இருக்கிறார்களா? நமக்கான தமிழ் கல்வி இருக்கிறதா? கலப்பின மொழியாக அல்லவா தமிழ் மொழி மாறிவிட்டது. நமக்கான மொழி, நமது உயிராதாரம், நமது அடையாளம் என்ற உணர்வு யாரிடமாவது உயிரோட்டமாக காணப்படுகிறதா? வீதியெங்கும் ஆங்கிலப் பள்ளிகளும், ஆங்கில மோகமும் நம்முடைய தமிழ் மொழி சிதைவிற்கு பெரும் காரணமாகி விட்டதே. அதை மாற்றுவதற்கான மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு அடிப்படை முயற்சியைக் கூட நம்முடைய தமிழ் தலைவர்கள் செய்யாமல் அவர்கள் தேசிய இனத்தின் அடையாளத்தை அழித்துக் கொண்டிருக்கும் தமிழ் துரோகிகளாக மாறிவிட்டார்களே! இதை நம்மால் மறுக்க முடியுமா? மறக்க முடியுமா?

ஆகவேதான் நமக்கு கிடைத்த ஒரு சிறு பயணப்பாதையை நாம் எந்த நேரத்திலும் இழக்கக் கூடாது.இதை புரிந்து கொள்ளும்போது நமக்கு தமிழீழத்தின் கட்டாயம் புரியும். நம்முடைய தமிழ் மண்ணின் அவசியம், நமக்கான ஒரு நிலம் தேவை என்பதற்கான அடிப்படை தன்மைகள் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ஆகவே நாம் தமிழீழத்தை ஆதரிப்பதென்பது நமது மொழியை ஆதரிப்பது. தமிழீழ மண்ணை மீட்டெடுப்பதென்பது நம்முடைய வருங்காலத்தின் அடையாளத்தை மீட்டெடுப்பது. தமிழீழத்தின் போராட்டத்தை ஆதரிப்பதென்பது நம்மையே நாம் ஆதரித்துக் கொள்வது. ஆகவே தமிழ் துரோகிகளின் கூட்டத்திற்கெதிராக ஒரு மண்ணின் அடையாளத்தை எத்தனை எத்தனை மரணங்கள் வந்தாலும் அத்தனை மரணங்களையும் மரணிக்க வைத்து ஒரு மறப் போராட்டத்தை அற தன்மையோடு அகிலத்திற்கே அறிவித்துக் கொண்டிருக்கும் மொழி காக்கும் அந்த தலைவனை இனம் காக்கும் அந்த தலைவனை நாம் ஆதரித்தே தீர வேண்டும்.

அத்தலைவனை ஆதரிக்கும்போது ஏற்படும் துயர்களை நாம் தூசாக கருதவேண்டும். அத்தலைவனை ஆதரிக்கும்போது இன்னல் நமக்கு ஏற்படும் என்றால் அது இனிதே என்பதை நாம் உணர வேண்டும். காரணம் அத்தலைவன் நமக்கான தலைவனல்ல. நம் எதிர்கால தலைமுறைக்கும் தலைவன். தமிழ் மொழியை காப்பதற்காக, இன அடையாளத்தை மீட்பதற்காக களம் கண்ட தலைவன். பெரும் ஆற்றல் வாய்ந்த படைகட்டி அதிலிருந்து பணம் ஈட்டி தமது குடும்பத்திற்கு சொத்து சேர்க்கும் தன்னல தலைவனல்ல நாம் பெற்றிருக்கும் தலைவன். அவனைப் பெறுவதற்கு நாம் பெரும் பேறு பெற்றிருக்கிறோம். ஆகவேதான் ஒரு மொழி அழியும் காலத்திலே அதை மீட்பதற்காக அவன் இயற்கையாக தோன்றியிருக்கின்றான்.

எந்த ஒரு போராட்டக் காலமும் அதற்கான தலைவர்களை தாமகத்தான் தோற்றுவிக்கும். தலைவர்களை மனிதர்கள் உருவாக்க முடியாது. வரலாறு தான் தலைவர்களை உருவாக்கி படைத்தளிக்கும். நம்முடைய புலிநிகர் தலைவனும் அப்படி படைத்தளிக்கப்பட்ட ஆற்றல் வாய்ந்தவன். ஆகவேதான் வெறும் இந்தியர்கள் வாழ்கிறார்கள் என்ற நிலை மாறி தமிழர்கள் வாழ்கிறார்கள் என்கின்ற வரலாற்று வரிகளை உருவாக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வாழ்ந்த தமிழ் மொழிக்கு புதிய அடையாளத்தை உருவாக்கித் தந்தான். இப்போது நமக்குப் புரிகிறது. அந்த தலைவனின் போராட்டம் என்பது அந்த மண்ணை மீட்டெடுக்க வேண்டும் என்பது தமிழீழ களம் அமைத்தது தன்னலத்திற்காக அல்ல. இந்த போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்களை கள பலியாக்கியது ஏதோ போர் வெறியால் அல்ல. அது நமது மொழியை காப்பதற்கான போராட்டம். நம்முடைய இன அடையாளத்தை காப்பதற்கான போராட்டம்.

தமது மொழியை எந்த அளவிற்கு அவன் நேசித்தானோ, அதே அளவிற்கு அவன் அந்நிய மொழியையும் ஆழமாய் நேசித்தான். எந்த நிலையிலும் தான் எதிர்க்கும் அடக்குமுறையாளர்களுக்கெதிராக சமர் புரிந்தானே ஒழிய, அந்த இனத்தின் அடையாளத்தையோ, அந்த இன கலாச்சாரத்தையோ, பண்பாடு பழக்க வழக்கங்களையோ, அவர்கள் வாழ்க்கை முறைகளையோ எந்த நிலையிலும் எக்காரணம் கொண்டும் அவன் எதிர்த்தது கிடையாது. இதுவே அவன் தமது தாய்மொழியை எந்த அளவிற்கு நேசித்தான் என்பதை நமக்கு அடையாளம் காட்டுகிறது. தமது மொழியை நேசிக்கும்போதுதான் நாம் அந்நிய மொழியை நேசிக்கத் தொடங்குவோம். அந்நிய மொழியை நசுக்கும்போது நம்மை அறியாமலேயே நாம் நம் மொழியை நசுக்கி சிதைவடையச் செய்து விடுவோம் என்பதை அந்த தலைவன் உணர்ந்திருந்தான்.

ஆக இந்த மண்ணை நேசிப்பதென்பது தமது மொழியை காப்பதற்கான அடையாளம் என்பதை நாம் புரிந்து கொள்ளவே உயிர்பலி தந்து மண்ணை காக்கும் போராட்டத்தை அந்த மாபெரும் தலைவன் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றான். மண்ணை காப்போம், மொழியை காப்போம், இனத்தைக் காப்போம், நமக்கான ஒரு தாயகம் அமையும் வரை இடைவிடாது சமர்செய்வோம். அது நமது இழப்பிற்குப் பின் நம்முடைய சந்ததிக்கு மகிழ்ச்சியைத்தரும். அந்த மொழி காத்த தலைவனின் வழி நின்று வாழ்வோம்.

-கண்மணி-

ஈழம்வெப் இணையத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்

கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே

உயிரைக் கொடுத்தவர்களின் உயிர்ப்பு நினைவுகளோடு…

சுவிசில்,பிரித்தானியாவில் முருகதாசனின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நெஞ்சினில் சுமந்து…

  • ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு சுவிசில் ஜெனிவா நகரில் அவர் தீக்குளித்த ஐ.நா.சபை முன்பாக நேற்று 13.02.2010 அன்று பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெற்றது. இதேவேளை லண்டனிலும், தியாகி முருகதாசன் நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
  • இலங்கை அரசு ஈழத்தில் நடாத்திய போரினால் ஏற்பட்ட தமிழின அழிப்பைக் கண்டு கொதித்தெழுந்த வ.முருகதாஸ் லண்டனிலிருந்து சென்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா தலமையகத்திற்கு முன்பாக தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்தி மாபெரும் தியாகம் புரிந்த ஓராண்டு நினைவு நாளான நேற்று (12-02-2010) லண்டனில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது.

அத்தோடு தாயக விடுதலைக்காகவும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காகவும் வீரத்தமிழன் முத்துக்குமார் தொடக்கம் ஈகைப்பேரொளி முருகதாசன் வரையிலான பத்தொன்பது தியாகிகளுக்கும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

முதல் ஈகைச்சுடரினை ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் தந்தையார் அவர்கள் ஏற்றிவைக்க மீதி பதினெட்டு தியாகிகளுக்கும் ஐரோப்பா வாழ் இளையோர்கள் சுடரினை ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து மலர்வணக்கமும் நடைபெற்றது.

ஈகைப்பேரொளி முருகதாசன் இறுதியாக தீயிட்டு மடிந்த இடத்தில் அவருக்கான நினைவுதூபி வைக்கப்பட்டு வணக்கம்செலுத்தப்பட்டது.

கடும் குளிருக்கு மத்தியிலும் கலந்து கொண்ட மக்கள் கண்களில் கண்ணீர் மல்க அவர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

மற்றும் புலம்பெயர் தேசங்களில் இருந்து வருகைதந்த இளையோர் யேர்மன், பிரெஞ், ஆங்கில மொழிகளில் தற்போதைய தமிழர் அடக்குமுறைகள் பற்றியும் ஈகைப்பேரொளிகளின் தியாகங்கள் பற்றியும் எடுத்துக்கூறியிருந்தனர்


லண்டனில், தியாகி முருகதாசன் கல்லறையில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு

இலங்கை அரசு ஈழத்தில் நடாத்திய போரினால் ஏற்பட்ட தமிழின அழிப்பைக் கண்டு கொதித்தெழுந்த வ.முருகதாஸ் லண்டனிலிருந்து சென்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா தலமையகத்திற்கு முன்பாக தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்தி மாபெரும் தியாகம் புரிந்த ஓராண்டு நினைவு நாளான நேற்று (12-02-2010) லண்டனில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது.

இலண்டனில், நேற்று முந்தினம் முருகதாசனின் கல்லறையில் கூடிய பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரும், ஈழத்தில் சிங்கள பேரினவாத அரசு நடத்திய தமிழினத்தின் இனப்படுகொலைக்கு, சர்வதேச நீதி விசாரணை கிடைக்கும்வரை போராட உறுதி பூண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

ஈழத்தில் நடைபெற்ற நான்காம் போரினில் 20க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகள் இலங்கையோடு இணைந்து கொண்டு நடத்திய தமிழின அழிப்பைக் கண்டு உலகமெல்லாம் பரவி வாழும் தமிழர்கள் கொதித்தெழுந்தனர். போர்நிறுத்தம் கோரி புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் அபயக்குரல் எழுப்பினர். அகிம்சை முறையில் உண்ணாவிரதம் இருந்தனர்.

தாய்த் தமிழகத்தில் மாணவர்கள் கல்லூரியை மூடிவிட்டு தெருவில் இறங்கி போராடினர். தமிழ் சமுதாயம் மனிதசங்கிலி கோர்த்து ஈழத்தில் தமிழ் மக்களுக்கெதிரானப் போரை நிறுத்தக்கோரி ஆர்ப்பரித்தனர்.

ஆனால், சிங்கள பேரினவாத அரசை தடுப்பதற்கு உலக நாடுகள் செவிசாய்க்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையும் அதன் அங்கத்தினர் நாடுகளும் அப்பாவித் தமிழ் மக்களின் படுகொலையை அலட்சியப்படுத்தின. வெகுண்டு எழுந்தனர் தமிழ் இளைஞர்கள்.

இந்திய அரசையும் சர்வதேச நாடுகளையும் ஈழத்தில் நடக்கும் தமிழினப் படுகொலையை நிறுத்தக்கோரி, தங்களது தேக்கு மர உடலை தாங்களே தீமூட்டி தீக்கிரயாகினார்கள்.

முத்துக்குமார் தொடங்கி முருகதாசன் வரை தமிழகம், மலேசியா மற்றும் பிரித்தானியா வரை வாழும் 19 வீரமிக்க தமிழ் இளைஞர்கள் தமிழின படுகொலையை நிறுத்தக்கோரி தங்களது உயிரைக் காணிக்கையாக்கினார்கள்.

அப்பாவித் தமிழ் மக்களின் இனஅழி;ப்பை தடுக்க இயலாத ஐ.நா.சபைக்கு முன்பாக உயிர்க்கொடை கொடுத்த, முருகதாசனின் தியாகம் உலகம் முழுவதையுமே உலுக்கிய ஒரு சக்தியாக மாறியதோடல்லாது, இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் தமிழீழத்தில் புரிந்த கொடுமைகளை, தமிழின அழிப்பை, இனப்படுகொலையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

முருகதாசன் உடல் எரிந்திருக்கலாம். ஆனால் அம்மாவீரனது உயிரும் உணர்வுகளும் உலகம் முழுதும் வாழும் ஒன்பது கோடித் தமிழர்களது ஒவ்வொரு நெஞ்சத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. முத்துக்குமார் முதல் முருகதாசன் வரை செய்த உயிர்த்தியாகமானது இன்று உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தியிருக்கிறது.

தேசியத் தலைவன் மீதும் கொடியின் மீதும் ஆணையிட்டு உறுதி எடுக்கின்றோம், எந்த இடர் வரினும் ஈழம் வெல்லும் வரை புலத்தில் ஓயமாட்டோம்

மாபெரும் இயங்கு சக்தியாக நின்று இன்றும், நாளையும், என்றும் எம்மையும், எமது தேசிய விடுதலைப் போராட்டத்தையும் வழிநடத்திச் செல்லும் எங்கள் தேசியத்தின் ஆத்மா தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீதும், எமது தாய்மண்ணாகிய தமிழீழத் தாயகம் மீதும், தமிழ் மொழி மீதும், எமது தேசியக் கொடி மீதும் ஆணையிட்டு, பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றுகின்றோம்: என ஜநா முன்றலில் நடைபெற்ற விடுதலைத் தீ பேரெழுச்சி நிகழ்வில் உலகத் தமிழ் இளையோர் போர்முழக்கம் செய்து உறுதிப்பிரமானம் எடுத்துள்ளனர்.

தாயக விடுதலைக்காய் தம்முயிரை தற்கொடையாக்கித் தந்த முருகதாசன் உள்ளிட்ட இன்னுயிர்த்தியாகிகளின் நினைவுப் பேரெழுச்சி நிகழ்வில் இவ் உறுதிப் பிரமானதை முன்மொழிந்த உலகத் தமிழ் இளையோர் எந்த இடர்வரினும் இலட்சியப்போர் வெல்லும்வரை ஓயமாட்டோம் என உலகுக்கு இடித்துரைத்துள்ளனர்.

  • கடும் குளிரையும் பொருட்படுத்தாது ஜநா முன்றலில் ஒன்றுதிரண்ட தமிழினம் ஈழ விடுதலைக்காய் தம்முயிரை ஈகம் செய்தவரை இறுதிவரை மறவோம் என்ற நெஞ்சார்ந்த உணர்வோடு வெளியிட்ட விடுதலைத் தீ தீர்மானம் வருமாறு

தமிழீழத் தனியரசை நோக்கிய எமது பயணத்தில்…..

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தமிழீழத் தனியரசு என்ற இலட்சிய வேட்கையுடன் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் விடுதலைத் தீமூட்டித் தன்னுயிரை ஆகுதியாக்கிய ஈகப்பேரொளி – முருகதாசன் மீதும், தமது உயிரை வேலியாக்கி களமாடி வீர காவியமாகிய மாவீரர்களின் ஈகவரலாறு மீதும், தாய் மண்ணை இறுதிவரை நேசித்து மானச்சாவெய்திய எமது மக்கள் மீதும், மாபெரும் இயங்கு சக்தியாக நின்று இன்றும், நாளையும், என்றும் எம்மையும், எமது தேசிய விடுதலைப் போராட்டத்தையும் வழிநடத்திச் செல்லும் எங்கள் தேசியத்தின் ஆத்மா – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீதும், எமது தாய்மண்ணாகிய தமிழீழத் தாயகம் மீதும், தமிழ் மொழி மீதும், எமது தேசியக் கொடி மீதும் ஆணையிட்டு, பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றுகின்றோம்: என ஜநா முன்றலில் நடைபெற்ற விடுதலைத் தீ பேரெழுச்சி நிகழ்வில் உலகத் தமிழ் இளையோர் போர்முழக்கம் செய்து உறுதிப்பிரமானம் எடுத்துள்ளனர்.

  • ஈழத்தமிழர்கள் என்ற தேசிய அடையாளத்தைக் கொண்ட தமிழீழக் குடிமக்களாகிய நாம், எமது பாரம்பரிய – வரலாற்றுத் தாயகமாக விளங்கும் தமிழீழ மண்ணில், எமக்கே உரித்தான தன்னாட்சியுரிமையின் அடிப்படையில், சுதந்திரமும் இறையாண்மையும் பொருந்திய தமிழீழத் தனியரசை நிறுவுவதில் அசையாத உறுதியும், தணியாத வேட்டையும் கொண்டுள்ளோம் என்பதை உலக சமூகத்திற்கு இடித்துரைக்கின்றோம்.
  • வரலாற்றுக்கு முந்திய காலம்தொட்டு அரசும், கொடியும், கொற்றமும் கொண்டு ஈழத்தீவில் ஆட்சிசெய்த நாம், எமது தாயக பூமியாகிய தமிழீழ மண்ணில் மீண்டும் சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவி எமது இறையாண்மையை நிலைநாட்டுவதில் உறுதிபூண்டுள்ளோம்.
  • எத்தனை இடர்களை எதிர்கொண்டாலும், எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும், எத்தனை இழப்புக்களுக்கு ஆளானாலும், எமது இலட்சியத்தில் இருந்து விலகமாட்டோம் என்றும் இத்தருணத்தில் நாம் உறுதிகொள்கின்றோம்.

எமது இவ் இலட்சிய உறுதி மொழியினூடாக ஜநா உட்பட சர்வதேச சமூகத்துக்கும் உடனடிக் கவனத்துக்கான சில வேண்டுதல்களையும் விடுக்கின்றோம்.

அவையாவன:

  • தேசிய இனமாக விளங்கும் எமது அரசியல் அபிலாசைகளைப் புரிந்துகொண்டு, எமக்கேயுரித்தான எமது தாயக பூமியில் நாமே எம்மை ஆட்சிசெய்வதற்கும், தேசிய அரசுகளின் சமூகத்தில் எமது தமிழீழ தேசமும் இணைந்து கொள்வதற்குத் தேவையான அனைத்துலக அங்கீகாரத்தையும், இராசரீக உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு, ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கும், உலக சமூகத்திற்கும் நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.
  • தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான மக்களாணை வாக்கெடுப்புக்களை நாம் நிகழ்த்துவதற்கு தாராண்மை – சனநாயக நல்லாட்சி கொண்ட மேற்குலக தேசங்கள் இடமளித்து ஒத்துழைப்பு வழங்கியமை போன்று, எமது தமிழீழ தாயக பூமியில் எமது உறவுகளும் நிகழ்த்துவதற்கு வழிவகைசெய்து, தமது அரசியல் தலைவிதியை அவர்களே தீர்மானிப்பதற்கான அரசியல் இடைவெளியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஐக்கிய நாடுகள் மன்றத்திடமும், உலக சமூகத்திடமும் நாம் கோருகின்றோம்.

எமது இந்தக் கோரிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு ஏதுவாக:

  • தமிழீழ தாயக பூமியை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள அந்நிய ஆயுதப் படைகளை உடனடியாகவும், நிரந்தரமாகவும் வெளியேற்றுவதற்கும்;
  • தமது சொந்த நிலங்களில் எமது உறவுகளை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்கும்;
  • நவநாகரீக உலகின் மனச்சாட்சிக்குப் பெரும் கேடாக விளங்கும் வதைமுகாம்களை நிரந்தரமாக இழுத்து மூடுவதற்கும்;
  • எமது தாயக பூமியில் சிங்கள அந்நியக் குடியேற்றங்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கும்;
  • எமது மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்புப் பொறிமுறைகளை எமது தாயக பூமியில் ஏற்படுத்துவதற்கும்;
  • எமது மக்களின் மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கும்;
  • எமது மக்களை மனிதநேய உதவிகள் சென்றடைவதற்கும்;
  • மூன்று தசாப்தகால இடைவெளியில் இரண்டரை இலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்றுகுவித்து இருபத்தோராம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனவழித்தொழிப்பையும், இனப்படுகொலையையும், இனச்சுத்திகரிப்பையும் அரங்கேற்றிய சிறீலங்கா அரசையும், அதன் ஆட்சியாளர்களையும், ஆயுதப் படைகளையும், நீதியின் முன்னிறுத்துவதற்கும்;
  • சிறீலங்கா அரசு மீதும், அதன் ஆட்சியாளர்கள் மீதும், ஆயுதப் படைகள் மீதும் இனவழித்தொழிப்பு, போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றம் போன்ற சட்டபூர்வத் தளங்களில் பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கும்;

விரைவாகவும், காலம் தாழ்த்தாதும், காத்திரமான முறையிலும் நடவடிக்கை எடுக்குமாறு உலக சமூகத்திற்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.

  • விடுதலை கிட்டும் வரை எமது விடுதலைத் தீ அணையாது! தனியரசை நிறுவும் வரை எமது சுதந்திரத் தாகம் தணியாது!

”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் கோசம் எம் உயிரிலும் மேலானது என்ற போர் பரணியோடு பிரகடனம் செயல்லுருப்பெற்றது.

CNN Documentary about V-Murugathasan

லெப். கேணல் பொன்னம்மான்: எம்மை வழிநடத்தியவன் “இன்று எம்மோடு இல்லை”..

ஈழ விடுதலைப்போரின் ஈடிணையில்லா வீரம்

யாழ்ப்பாணம் யோகரத்தினம் குகன் என அறியப்பட்டு பொன்னன் எனப் புகழப்பட்டு அவன் வல்லமையினால் அரவணைப்பினால் அம்மான் என மகுடம் சூட்டப்பட்ட விழுதெறிந்த வீரம் தான் எங்கள் நினைவில் என்றும் வாழும் லெப்.கேணல் பொன்னம்மான். இந்த உன்னத வேங்கையின் உயிர்தியாகத்தை எமக்கு கற்பிதமாக்கியவர் கேணல் திலீபன் அவர்கள்…

அவரின் நினைவலைகளை லெப்.கேணல் பொன்னம்மான் 23-12-1956 14-02-1987 நினைவு நாளாகிய இன்று மீள் பதிவு செய்கின்றோம்.

மேஜர் கேடில்ஸ் ( திலீபன்), கப்டன் வாசு (சுதாகர்), லெப். சித்தாத்தர் (வசீகரன்), 2ம்லெப். பரன் (அர்ச்சுணன்), வீரவேங்கைகளான யோகேஸ்(பாலன்), கவர்(நகுலேஸ்வரன்), அக்பர் (லோகநாதன்), குமணன்(மோகனலிங்கம்), தேவன்(வசந்தகுமார்)

எமது இயக்கத்தின் முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான்

தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா….

என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது.

எமது இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய சோகத்தை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும்.

ஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாக, தந்தையாக, அண்ணனாக, அம்மானாக, நின்ற பொன்னம்மானே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே சந்தோசம் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

  • எமது இயக்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான். எழுபதுகளின் நடுப்பகுதியில் எமது தலைவருடன் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது. போர்ப்பயிற்சிகள் இந்தியாவில் ஆரம்பமாகின. அங்கு நடந்த முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் பயிற்சியின் போதே சகவீரர்களை எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் இருந்தனர். பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார். உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம்.

வெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் ஆக்கியிருந்தார். பேராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள் சாத்தியமற்றதாக இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார். இந்தியாவில் 2000இற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி இராணுவத் தொழில்நுட்பத் வளர்ச்சிக்கும் முக்கிய காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார்.

பெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை. யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்த கிட்டண்ணாவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். இராணுவ முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி. சுற்றிவர நூறு யாருக்கும் மேலாக ஒரே வெளிப் பிரதேசம். வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய அபாயம் இருந்தது. இராணுவ முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர்.

அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் சிரமத்துக்குரியதும் எமது வீரர்கள் தரப்பில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி. எனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உடபுகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது. தினமும் அந்த இராணுவ முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு பவுசர் செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி: சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டு இருந்தது. எனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின. பழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கஸ்டமான விடயமாக இருந்தது.

பொன்னம்மான் பற்றி தலைவர் பிரபாகரன்

அதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது. இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள். புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரித்தோம்.

ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே அனுமதிப்பார்கள். இத்தனை சிரமங்களின் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள். பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் கேடில்ஸ்தான். கேடில்ஸ் அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பளராக விளங்கியவன். மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, இராணுவ முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானித்து வைத்திருந்தான். கேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள்.

அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். அவர் பொன்னம்மானின் உறவினருங்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து விமானமொன்றைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். முழுவதுமாக தன்னை இயக்கத்துடனேயே இணைத்துக் கொண்டவர்.

14-2-87 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கெரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் தோழர்களுக்கு உசிதமாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் இராணுவ ஹெலிகொப்டர்களும், குண்டு வீச்சு விமானங்களும் தகவல் பெற்று எம்மைத் தாக்கத் தொடங்கலாம். பகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டடித்துவிடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும்.

முதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது. அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டண்ணாவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய லொறிகள் தயார்ப்படுத்தப்பட்டன. முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் லொறிகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். லொறியின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பவன் உட்புகும் போது ரொக்கட்டால் வாயில் காவல அரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது.

நேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டண்ணா தாக்குதலை நடத்துவதற்காக, சகலருடனும் வாக்கிடோக்கியில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்திருந்தார்.

கிட்டண்ணா ஐந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்து கொண்டிருந்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிட்டண்ணா ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்… மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி, வியப்பு, சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம். கிட்டண்ணா பொன்னம்மானை வாக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்தார்: பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் தூசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது. அவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் தூரத்தில் லொறி நின்றது. லொறிக்குள் பார்த்தபோது ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை.

பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறினார்கள். பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்த, அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடியவகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர் மறைந்து விட்டார்.

முகாம்கங்களில் கலைநிகழ்ச்சிகளை வைப்பித்தும், குறும்புகள் செய்தும், நடித்தும், சிரிக்க வைத்து, எந்த நேரமும் சந்தோசத்தைக் குடிகொள்ள வைத்திருக்கும் அந்த மனிதன் இன்று இல்லை. “அம்மான் ஒரு பாட்டுப் பாடுங்கோ” என்று தோழர்கள் அடம் பிடிப்பதும் அவர் எப்போதும் தோழர்களுக்காய் பாடிக் காட்டும் அந்தப் பாட்டும் நினைவில் நனைய கண்கள் பனிக்கின்றன. ஈரமான இதயம் சுமந்த மனிதர்களின் நண்பனாய், தந்தையாய், தனையனாய், தாயாய், எல்லாமுமாய் நின்ற எங்கள் அம்மானிடம் வளர்ந்த எத்தனையோ தோழர்கள் இன்றும் அவரது கனவைச் சுமந்தபடி மண்ணில் நிற்கிறார்கள்.

நிச்சயம் இவன் வீரன் விழுதெறியும்…..

முதலாம் ஆண்டு வீரவணக்கங்கள்

நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி லெப்.கேணல் வான்மீகி / கனி

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் கருணைநாதன்


தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் இசையரசன்
தமிழீழப் பாடகர் இசையரசனின் நினைவுகளோடு……….

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் உலகச்சேந்தன்
————
வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்: கப்டன் நெடுஞ்செழியன் வீரச்சாவு
——————–

நாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி
ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக விடுதலைப் புலிகளால் மதிப்பளிப்பு

#featured {display:none;} #main-wrapper { float: left; width: 618px; margin:10px 0 0 8px; padding:10px; display: inline; background:#ffffff; border: 1px solid #d8e1f0; } .post { width:618px; padding: 0px; margin: 0px auto; line-height: 1.4em; overflow:hidden; } .postbox { padding: 0px; border: none; } .post h3 { letter-spacing: -1px; font-size: 1.5em; color: #4169E1; font-weight: normal; } .post-body { height:100%; } sathiyamoorthy

———————


வர்ணகுலசிங்கம் முருகதாசன்

Up ↑