About national leader v.prabaharan 1- jegath gespar
leader v.prabaharan 2- jegath gespar
leader v.prabaharan 1- jegath ges
ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்
ஆயினும் போரது நீறும், புலி
ஆடும் கொடி நிலம் ஆறும்.
பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
பாசறை ஆயிரம் தோன்றும், கருப்
பைகளும் ஆயுதம் ஏந்தும்.
மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை
மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த
சிங்கள கூட்டங்கள் ஓடும்.
-இணையத்தில் இன்று காலை நான் கண்ட கவிதை இது. எழுதியவர் புதுவை இரத்தினதுரையாக இருக்க லாம். படித்துச் சிலிர்த்து நின்ற வேளை தொலைபேசி அழைப்பொன்று வந் தது. கடந்த நான்கு நாட்களாய் தொலைபேசிய அந்த முக்கியமான வரை தொடர்பு கொள்ள நூறு முறையேனும் முயன்று மனக் களைப்புற்றிருந்தேன். களநிலை பற்றின பொய்யும் புனைவுமிலா உண்மையை தரவல்ல நிலையில் உள்ளவர் அவர். வானகத்தின் தூதுவன் நேரிடை வந்தது போல வந்தது அந்த அழைப்பு. அவர் சொன்னார்: “”கவலை ஏதும் வேண்டாம். தலைவர் பாதுகாப்பாக உள்ளார். அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக உறுதி செய்யப்பட்டபின் உலகோடு அவர் பேசு வார்”. தமிழீழ எல்லைகளின் காவலன் நல் லூர் முருகனும் எனது லூர்து மாதாவும் துணையிருந்தார்கள். படித்த கவிதை சந்தம் கட்டி என் மனதில் பாடலாய் துள்ள லாயிற்று. “பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில் பாசறை ஆயிரம் தோன்றும், கருப்பை களும் ஆயுதம் ஏந்தும்’.
எட்டு பத்து ஆண்டுகளுக்கு முன் இதே புதுவை ரத்தினதுரை எழுதிய கவிதையின் மறக்க முடியாத சில வரிகள் நினைவு வெளியில் கை வீசி நடந்தன.
“”வா பகையே… வா…
வந்தெம் நெஞ்சேறி மிதி.
பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.
வேரைத் தழித்து வீழ்த்து.
ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்
நினைவில் கொள்!”
புதுவை ரத்தினதுரையின் கவிதைகள்பால் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது 1995-ம் ஆண்டு. அதிபர் சந்திரிகா குமார துங்கே யுத்த வெறி கொண்டு முப்படைகளையும் அவிழ்த்து விட்டு யாழ்ப்பாணத்தை சிறைப்படுத்திய காலம். யாழ்ப்பாணத்தில் சிங்க முத்திரை பொறித்த சிங்களக் கொடியை ஏற்ற அன்றைய ராணுவ அமைச்சர் அனுருத்த ரத்வத்தே வந்தார். அக்கொடியை சுமந்து வந்தது யாழ்ப்பாணத்து மேயராக இருந்த தமிழர். பெயர் மறந்துவிட்டேன். வடதமிழீழத்து இதயமாம் யாழ்ப்பாணத்திற்கு சிங்கக் கொடி சுமந்து வந்த மேயர் மீது புதுவைக்குச் சீற்றம். நீண்ட கவிதையொன்று எழுதியிருந்தார். இரண்டு வரிகள் மட்டும் அடித்த ஆணிபோல் நினைவில் பதிந்து நிற்கின்றன.
“”மேயர் அவர்களே
நீவிர் சிங்கக் கொடியை சுமந்து வந்தபோது
மின்னும் ஜரிகை கரை கொண்ட
பட்டு வேஷ்டி கட்டி வந்ததாய் அறிந்தேன்.
கக்கூஸ் வாளிக்கு தங்க முலாம் பூசுவதில்லையே?!
-அறுபதாயிரத்திற்கும் மேலான அப்பாவித் தமிழ் உயிர்களை கொன்றழித்து, இரண்டரை லட்சம் பேரை சொந்த மண்ணில் அகதிகளாக்கி, முப்பதாண்டு கால விடுதலைப் போராட்டத்தை நீசத்தனமாய் நிர்மூலம் செய்த ராஜபக்சே கும்பலுக்கு வன்னிப்பரப்பில் சிங் கக் கொடி தூக்க நாக்கை தொங்கவிட்டுக் காத்திருக்கும் ஆனந்தசங்கரி வகையறாக்கள் ஒரு கணம் நினைவுக்கு வந்தபோது புதுவையின் கவிதையும் உடன் சேர்ந்து வந்தது. “”கக்கூஸ் வாளிகளுக்கு தங்க முலாம் பூசுவதில்லையே…?! ராஜபக்சேக்களுக்கு லாவணி பாடும் ஆனந்த சங்கரிகளே இருக்கிறவரை ஏதேனும் நாற்காலியில் இருந்துவிட் டுப் போங்கள். தங்க முலாம் பூசிய கக்கூஸ் வாளிகளுக்கும் கருணை செய்து ஓய்வூதியம் தர வேலுப்பிள்ளை பிரபாகரன் விரைவில் வருவான். உங்களுக்காக வரவில்லையென்றாலும் முல்லைத்தீவு முற்றுகையின் கடைசி நாள் நடந்த மன்னிக்க முடியா துரோகத்திற்கு நீதி செய்யவேனும் அவன் வருவான்.
கடைசி நாளில் -அதாவது கடந்த சனிக்கிழமை நடந்தது இதுதான். வேலுப்பிள்ளை பிரபாகரனும் எதிர்காலத்தில் போராட்டத்தையும் இயக்கத்தையும் மீள் கட்டமைப்பு செய்வதற்கு முக்கியமானவர்களான சில தளபதியர்களும் பாதுகாப்பாக அகன்றபின் களத்தின் இறுக்கம் தணிகிறது. கை ஒடிந்து, கால் முறிந்து, உடலின் சில பகுதிகள் சிதைந்து ரத்தம் வழிந்தே பாதி செத்துப் போன சுமார் 12,000 அப்பாவி மக்களையும், அவ்வாறே காயமுற்ற சுமார் 3,000 போராளிகளையும் எப்படியேனும் அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவினை விடுதலைப்புலிகள் எடுக்கி றார்கள். கடற் புலித் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டு காயமுற்ற மக்களையேனும் பாதுகாப்பாய் வெளியேற்ற 48 மணி நேர சண்டை நிறுத்தம் வேண்டுகிறார்.
மதுரை தமிழரோ உணர்வாளர் சுப.வீ. என்ற சுப.வீரபாண்டியன் அவர்களை மன்றாட சுப.வீ. அவர் கள் கனிமொழி அவர்களின் கருணையை கேட்கிறார். கனிமொழி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஒருவரோடு பேச “அதிகாரப்பூர்வமற்ற’, ஆனால் யதார்த்த மான முடிவொன்று தரப்பட்டது. “”விடுதலைப் புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாபன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக உள்ளோம் என்ற முடிவினை எழுத்துப் பூர்வமாய் தொலைநகல் (எஆல) வழி உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவையெல்லாம் இந்தியா பார்த்துக் கொள்ளும்”. இரவு 10 மணி ஆயிற்று. இந்தக் கட்டத்தில் நானும் இணைந்தேன். லண்டனிலுள்ள எனது நண்பர்கள் மூலம் செல்வராஜா பத்மநாபன் அவர்களுக்கு தகவல் சொல்லப்பட அவரும் மின்னல் வேகத்தில் இயங்கினார். “”இந்தியாவிடமே நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம். அது சாத்தியமில்லையென்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்” என்ற முடிவை விடுதலைப் புலிகள் இரவு 11.50-க்குத் தெரிவித்தார்கள். கனிமொழி தயக்கத்துடன் காங்கிரஸ் பெரியவரை தொடர்பு கொள்ள அவரும் விழித்தே இருந்தார். “”கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது” என்கிறார் அப்பெரியவர்.
மக்களை காக்க வேண்டி இலங்கை ராணு வத்திடமே ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவினை சனி நள்ளிரவு புலிகள் எடுத்தார்கள். ஞாயிறு காலை கொழும்பு இந்திய தூத ரகத்தின் உதவியுடன் இலங்கைத் தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் கஜன் பொன்னம்பலம் ராஜபக்சேவோடு பேச்சுவார்த்தை கள் நடத்த முடிவொன்று ஏற்படுகிறது. “முல் லைத்தீவு களத்தில் நிற்கும் புலிகளின் தளபதிகள் வெள் ளைக்கொடி பிடித் துக் கொண்டு இலங் கை தளபதிகளிடம் வரட்டும். ஆயுதங் களை ஒப்படைப்பது, காயமுற்றோரை அப்புறப்படுத்துவது தொடர்பான நடைமுறை ஒழுங்குகளை அவர்களே கலந்து பேசி முடிவு செய்யட்டும்’ என்பதாக அந்த ஏற்பாடு.
இம்முடிவினை ராஜபக்சே அலுவலகம் ராணுவத் தலைமைக்கும், முல்லைத் தீவு கட்டளைத் தளபதிகளுக்கும் அறிவிக்கிறது. இந்த ஏற்பாடுகள் முடியவே ஞாயிறு இரவாகி விடுகிறது.
ராஜபக்சேவுடன் நடந்த விவாதங்களையும் முடிவுகளையும் கஜன் என்ற கஜேந்திரன் பொன்னம்பலம்… செல்வராஜா பத்மநாபனுக்குத் தெரிவிக்க முல்லைத்தீவு களத்தில் நின்ற விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனுடன் இவற்றை திங்கள் அதிகாலை 2.30 மணிக்கு விவாதிக்கிறார் பத்மநாபன். யுத்தம் 500 மீட்டர் அருகில் வந்த போதும் கூட உலகோடு உரையாடும் செயற் கோள் வசதிகளை விடுதலைப்புலிகள் கொண்டிருந்தார்கள் என்பது ஒரு ராணுவ அரசியல் இயக்கமாக எத்துணை ஆழமாக வளர்ந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றாகத் தெரிந்தது. விடிந்ததும் நடேசன், சிறப்புத் தளபதி ரமேஷ் -இவர் முன்பு கருணாவின் துணை தளபதியாக இருந்தவர், புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் மூவரும் வெள்ளைக் கொடி ஏந்தி சிங்களத் தளபதியர்களை சந்திக்கச் செல்வ தாய் ஏற்பாடு.
வெடிபொருள் புகை கவிந்த முல்லைத் தீவு பரப்பு விடிந்தது. வெள்ளைக் கொடி ஏந்தி மூவரும் நடந்தார்கள். சிங்களத் தளபதியர்களின் கூடாரம் அருகே வந்தார்கள். ஏன், என்னவென்ற பேச்சின்றி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பின்னர்தான் தெரிய வந்தது அவர்களைச் சுட்டுக் கொல்லும் உத்தரவை ராஜபக்சேவின் சகோதரனும் ராணுவ அமைச்சருமான கோத்தபய்யா ராஜபக்சே பிறப்பித்திருந்த சதி.
வெள்ளைக் கொடியேந்தி சரணடையவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ வருகிறவர்களுக்குத் தீங்கிழைப்பது யுத்தக் குற்றம். அனைத்துலக சட்டதிட்டங்கள் இதனை கடுமையாக வலியுறுத்துகின்றன. ஆனால் சிங்கள இனவெறி பிடித்தாடும் கோத்தபய்யாவை பொறுத்தவரை தமிழருக்காகப் பேச எவருமே உயிரோடு இருக்கக்கூடாது. நடேசனும், புலித்தேவனும் சரணடைந்து கைது செய்யப்பட்டாலும் அவர்கள் யுத்தக் கைதிகளாகவே நடத்தப்பட வேண்டும். நாளை அனைத்துலக ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் போது புலிகள் தரப்பிலும் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென உலக நாடுகள் நிச்சயம் வலியுறுத்தும். அத்தகு சூழலில் தகுதியோடு தமிழரை பிரதிநிதித்துவப்படுத்த எவருமே இருக்கக்கூடா தென்பதுதான் கோத்தபய்யாவின் கணக்கு. முக்கிய செய்தி என்னவென்றால் இந்தியா சொல் வதையோ, அண்ணன் ராஜபக்சே சொல்வதையோ கேட்பதற்கு கோத்தபய்யா தயாராக இல்லை என்பதுதான்.
கொடுமை அத்தோடு முடியவில்லை காயமுற்று பாதி உயிரோடு முனகிக் கிடந்த பத்தாயிரத்திற்கும் மேலான அப்பாவி மக்களை புல்டோசர்கள், செயின் புளக்-கள் ஏற்றிக் கொன்றுவிட்டு ஆதாரங் கள் ஏதுமின்றி அதிநவீன ரசாயனக் கலவைகள் ஊற்றி எரித்திருக்கிறார் கள். அவ்வாறே காய முற்றிருந்த சுமார் 3,000 போராளிகளையும் கரு ணை இரக்கமின்றி சுட்டுக் கொன்று வெறி தீர்த்திருக்கிறார்கள். வேறெதற் கும் இல்லையெனினும் கோத்தபய்யாவிற்கு நீதி சொல்லவேனும் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவான், நிச்சயமாய் வருவான்.
மரணத்தின் நிழலில் வளர்ந்த அதீதப் பிறவி பிரபாகரன். மாத்தையா அவரது வாகனத்திற்கு அடியிலேயே வெடிகுண்டு பொருத்தினார். ஆனால் வெடிக்கவில்லை. ஏன் வெடிக்கவில்லை என்பதற்கு மனித அறிவு சார்ந்த விளக்கம் எதுவுமில்லை. சாவகச்சேரி நகர் வளைவு திறக்கும் நிகழ்வின் போது அவரோடு மூத்த தளபதிகள் யாவரதும் கதை முடிக்க மாத்தையா ஏற்பாடு செய்திருந் தார்.
விழாவுக்குப் புறப்படும் போது மோசமான வயிற்று நோவு வர விழாவிற்கு அவர் வரவில்லை. வந்திருந்தால் அன்றே அவர் வரலாறு முடிந்திருக்கும். திருநெல்வேலி தாக்குதலின் போது அவரது துப்பாக்கியில் ரவை தீர்கிறது. குனிந்து ரவை நிரப்புகிறார். புறத்தே மின்னல் தெரிகிறது. சக தோழர்களின் பறக்கிற ரவைகள் என நினைக்கிறார். காலையில் பார்த்தால் தான் குனிந்தபோதுதான் நின்ற இடத்திலேயே எதிரியின் ரவைகள் பாய்ந்து வந்திருக்கின்றன. அக்கணம் குனிந்திராவிட்டால் அன்றே அவர் முடிந்திருப்பார்.
“”கடவுள் காத்து வருகிறார் எனக் கருதலாமா?” என 2002-ல் அவரிடம் கேட்டேன்.
“”இன்னும் நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறதென இயற்கை நினைக்கிறது போலும்”
என்றார்.
தமிழர்களே, நண்பர்களே, முல்லைத்தீவில் கதை முடிய வில்லை. புதிய கதை தொடங்குகிறது. உலகத் தமிழினம் இனி நடக்கப் போவது புதிய தடங்களில்.
(நினைவுகள் சுழலும்)

காரணம் எதுவும் கூறாமல் காலம் சில களங்களை தன் போக்கில் உருவாக்கிவிட்டுப் போகிறது. இரு கட்டுரைகளோடு நிறைவுற்றிருக்க வேண்டிய இத்தொடர் முப்பது இதழ்கள் கடந்தும் வளர்கிறது. உள்ளபடியே, உண்மையான உணர்வாளர் களின் திருப்பள்ளியாகவும், பொய்மைகளை எதிர்கொள் ளும் போர்க்களமாகவும் தன்னையே தருவித்து நக்கீரன், தகர்ந்துபோன தமிழர் நம்பிக்கைகள் முற்றிலுமாய் பட்டுப் போகாமல் உயிர்நீர் ஊற்றி வருகிறதென்பதே உண்மை.
முல்லைத்தீவு வெற்றிக்குப்பின் தறிகெட்டு ஆடிய சிங்களப் பேரினவாதத்தின் இரைச்சல் எதிர்பார்த்ததை விட வேகமாகவே சுரத்து குறைந்துவிட்டதாக கொழும் பிலிருந்து வரும் நம்பகமான செய்திகள் கூறுகின்றன. விடுதலைப்புலிகள் வெற்றிகளின் உச்சத்தில் நின்ற நாட்களில் கூட இல்லாத “தமிழ் இனப் பேரெழுச்சி’ உலகெங்கும் கண்ணுக்குப் புலப்படாத மின் ஆற்றல் போல் உருவாகி வருகிறது. யதார்த்தத்தில் எவரும் அறி விக்காமலேயே ஐந்தாவது ஈழப்போர் ஆரம்பித்து விட்டது. மகாத்மா காந்தியும், நெல்சன் மண்டேலாவும் வென்றது உண்மையென்றால் இந்தப் போர் தமிழ் ஈழம் காணாமல் ஓயாது. ஆனால் தமிழரிடையே இன்று எழுந்துள்ள இவ்வுணர்வெழுச்சியை மழுங்கடிக்கும் அழுக்கான திரைமறைவு செய்மதி யுத்தமொன்றை இலங்கை அரசு தொடங்கியுள்ளது.
இந்த யுத்தத்திற்கு மும்முனை இலக்கு கள். ஒன்று தமிழர்களுக்குள் -குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குள் பிளவுகளை கூர்மைப்படுத்துவது, இரண் டாவது உளப்பரப்பில் தமிழீழ விடுதலைப் போராட்டம் மீது தமிழ் மக்கள் வனைந் திருக்கும் பெருமதிப்பை குலைத்து தமிழ் தேசிய உணர்வெழுச்சியை பலவீனப்படுத்து வது. மூன்றாவது மரண முகாம்களில் வாடும் மூன்று லட்சம் அப்பாவித் தமிழர் மீதான நமது கூர்த்த கவனத்தையும், இன அழித்தல் குற்றச்சாட்டில் நாம் செலுத்தும் உறுதியான செயற்பாட்டையும் திசை திருப்புவது.
“பிரபாகரன் பொட்டு அம்மானால் சுட்டுக் கொல்லப்பட்டாரா?’ “பொட்டு அம்மான் ராணுவப் பிடியில் இருக்கிறார்’, “பிரபாகரன் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப் பட்டு கோடாரியால் தலையில் வெட்டப் பட்டார்’ பிரபாகரனது கண்களுக்கு முன் அவ ரது அன்பு மகன் சார்லஸ் ஆன்டணி கொடு மையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப் பட்டார்” என்றெல்லாம் வரத் தொடங்கியிருக் கிற செய்திகள் இந்த அழுக்கு யுத்தத்தின் அருவருப்பான உத்திகள்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது இருப்பினை குறித்து விவாதித்த காலத்தை நாம் கடந்து விட்டோம். அதைச்சுற்றிய கேள்வி களுக்கான பதிலை காலம் எப் போது வேண்டுமானாலும் தரட்டும். நமது இலட்சியமோ தலைவனோடு களமாடிய ஆயிரமாயிரம் தியாகக் கண்மணிகளின் கனவான தமிழ் ஈழம். அத்தோடு இன அழித்தல் செய்த பாவிகளுக்கு நாம் வழங்க வேண்டிய நீதி. இவைதான் இன்றைய கருத்தாகவும், கவனமாகவும் இருத்தல் வேண்டும்.
2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை சந்தித்தபோது, “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா?” எனக் கேட்டேன். இக் கேள்விக்குப் பதில் சொன்னபோது இனம் புரியாததோர் சாந்தம் அவர் முகத்தில் படர்ந்ததை இப்போதும் என்னால் நினைவுபடுத்த முடிகிறது.
“”அதற்குரிய வயதாகிறபோது அம்முடிவை அவர்களே எடுப்பார்கள்” என்று கூறிய அவர், “”உண்மையில் இயக்கத்தின் எல்லா போராளிகளை யும் என் சொந்த பிள்ளைகளைப் போலவே நான் உணர்ந்து நடத்தி வருகிறேன். போராளிகளுக்கும், என் பிள்ளைகளுக்குமிடையே நான் எவ்வித வேறுபாட்டையும் பார்ப்பதில்லை”
என்றார். உள்ளுணர்வுக்குப் பிடிபடும் தூயதோர் நேர்மை அவர் பதில் கூறுகையிலேயே என் மனதில் பதிந்ததை இன்றும் மறவாது பாதுகாத்து வைத்துள்ளேன்.
அவரது அன்பு மகன் 24 வயதே ஆன சார்லஸ் ஆன்டணி மே 18-ந் தேதியன்று களத்தில் வீரமரணம் அடைந்தார். மகள் துவாரகா வெளி நாட்டிற்கு பாதுகாப்பாக சென்று விட்டதாகத்தான் முதலில் செய்திகள் வந்தன. அண்மையில் கிடைத்துள்ள செய்திகளின்படி, 22 வயதே ஆன அவரது ஆசை மகள் துவாரகா வும் அதே மே-18-ம் தேதி யன்று களத்தில் வீர மரணம் அடைந்த சூழலை அறிந்த போது வேத னையில் விம்முவதா, பெருமிதத்தில் சிலிர்ப்பதா என்று தெரியாமல் தவித்து நின்றேன்.
சார்லஸ் ஆன்டணி என தன் முதல் குழந்தைக்கு பிரபாகரன் பெயர் சூட்ட காரணங்கள் உண்டு. 1983 ஏப்ரல் வரை இந்தியாவில் பிரபா கரனோடு இருந்த அவரின் நம்பிக் கைக்கும் நேசத்திற்குமுரிய மூத்த போராளி சார்லஸ் ஆன்டணி. இந்தியாவிலிருந்து தமிழீழம் திரும்பிய பின் ராணுவத்துடன் நடந்த மோதலில் சார்லஸுக்கு காலில் குண்டடி பட்டுவிடுகிறது. தப்பி ஓட முடியாத நிலை. அது புலிகளிடம் ஆயுதங்கள் அதிகமாக இல்லாத காலம். தன் சக போராளி களிடம் “”என்னை சுட்டுக்கொன்றுவிட்டு ஆயுதத்தைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுங்கள்” என ஓர் தளபதியாக உத்தரவிட்டு வீரமரணம் தழுவிய நாயகன் சார்லஸ் ஆன்டணி. அவனது நினைவாகவே தன் மகனுக்கும் அப்பெயரை சூட்டினார் பிரபாகரன்.
தலைவனின் மகனென்று ஒருபோதும் தன்னை காட்டிக் கொள்ளாத குழந்தை சார்லஸ் ஆன்டணி. படித்தது யாழ்ப்பாணம் செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில். படிப்பில் படு கெட்டிக் காரன், பண்பில் அப்படியொரு பணிவும் சாந்தமும் உடையவன் என கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பலரிடத்தும் சிலாகித்ததாகக் கேட்டிருக்கிறேன். வருவதும் போவதும் எவருக் கும் பெரிதாகத் தெரியாமல் யாழ்ப் பாணத்தின் ஒரு சாதாரண மாணவ னாகவே சார்லஸ் ஆன்டனி அப்பள்ளியில் படித்திருக்கிறார். அவர் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டதும் வன் னிக் காடுகளில் தானேயன்றி வெளிநாட்டில் அல்ல.
உண்மையில் சார்லஸ் சண்டைக் களத்திற்குரிய பிள் ளையே அல்ல அது ஒரு சாக்லெட் குழந்தை என்றே அவரைப்பற்றி நான் உரையாடிய அத்தனை தளபதிகளும் கூறினர். தலைவரின் முதல்மகன் என்ப தால் தளபதிமார் அத்தனை பேருக்கும் சார்லஸ் செல்லம். தலைவர் முகாமில் இருக் கிறவரை பயிற்சிகளில் ஈடுபடுத்திவிட்டு தலைவர் வாகனத்தில் ஏறியதுமே “நீ போய் படுத்துக்கோ தம்பி’ என்று அனுப்பிவைக்கும் தளபதிமார் தான் சார்லசுக்கு அதிகம். எவரையும் காயப்படுத்தாத, எவரிடமும் ஆணவமோ அதிகாரமோ காட்டாத, எல்லோரிடத்தும் “அப்பா, மாமா, அண்ணே… என்று குழைந்து திரியும் குழந்தை என்றே நான் பேசிய அத்தனைபேரும் சார்லஸை கொண்டாடினார்கள்.
துவாரகா அமைதியான பிள்ளை. தெய்வீக ரோஜாபோல் எப்போதும் கள்ளமில்லா வெள்ளை முகம். “எனது தேவதை இந்தப் பிள்ளை’ என கடவுளே கனிந்துருகக்கூடிய அன்புள்ளம் கொண்ட அருட்கொழுந்து துவாரகா என்கிறார்கள்.
அயர்லாந்து டப்ளின் நகரில் மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு, அங்கே தங்கி விடாமல் தமிழீழ மண்ணுக்குத் திரும்பி “மாலதி படையணி’யில் நின்று களமாடியது.
முல்லைத்தீவு இறுதி முற்றுகையின்போதும் கலங்காத காரிகையாய் அதே மாலதிப் படையணியில் முன்னணிப் போராளியாய் நின்று களமாடிய என் இனத்தின் காவியம் துவாரகா. எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன. எங்கள் ப்ரியமான சிறு தெய்வங்களில் ஒன்றாகிவிட்ட துவாரகா… எவருக்கும் தெரியாமல் வன்னிக் காடுகளுக்குள் பூக்கள் மலரும் காலம்வரை… முல்லைத்தீவு கடல்வெளியில் மௌனமாய் காற்றுவீசும் காலம்வரை உன் நினைவுகளும் உயிராய்… உணர்வாய் அவற்றையும் கடந்த தெய்வீகத் தேடலாய் எம்மிடையே நிற்கும்.
உண்மையில் கிளிநொச்சி விழுந்தபின் சார்லஸ் சிறப்பு அதிரடிப் பிரிவொன்றின் அங்கமாய் புலமொட்டை காட்டுப் பகுதிக்குள்தான் நகர்ந்து நின்றிருக்கிறார். ஆனால் முல்லைத்தீவு முற்றுகை இறுகிக்கொண்டே வர, விடுதலைப் போராட்டம் பாதுகாக் கப்படவேண்டுமென்றால் தலைவர் களத்தைவிட்டு அகலவேண்டுமென்று தளபதியர்கள் முடிவெடுத்தபோது அதை ஏற்க மறுத்தார் பிரபாகரன். என்னை நம்பி வந்த மக்களையும் போராளிகளையும் விட்டுவிட்டு நகரமாட்டேன் என்பதில் பிடிவாதமாயிருந்திருக்கிறார்.
ஆனால் அகன்றே தீரவேண்டுமென தளபதியர்கள் வற்புறுத்தியபோது சார்லஸ் காட்டுக்குள் நிற்கிறான்.
“”தன்னையும் மகனையும் காப் பாற்றிக்கொண்டு “போராளிகளையும் மக்க ளையும் அழிவுக்குக் கொடுத்தான்’ என்ற வரலாற்றுப் பழி என்னைச் சேரவிடமாட்டேன்” என்றிருக்கிறார். “”அப்படியானால் சார்லஸை களத்திற்கு அழைத்து வருகிறோம்” என்று தளபதியர் உறுதி கூறிய பின்னரே முல்லைத்தீவை விட்டு அகலும் முடிவினை பரிசீலிப்பதற்கு ஒத்துக்கொண்டிருக் கிறார் பிரபாகரன். எளிய மொழியில் சொல்வதானால் விடுதலைப் போராட்டத்தை பாதுகாக்க வேண்டி தந்தையிடமே அவரது அன்பு மகனின் உயிரை தளபதியர் விலைபேசினார்கள் என்பதே உண்மை.
தமிழுலகே, இப்படியோர் அப்பழுக்கில்லா உன்னதம் உலகில் வேறெந்த விடுதலை இயக்கமும் கண்டிருக்க வில்லையென உரத்துச் சொல், மதர்ப்புடன் பெருமிதம் கொள்.
மே 18. அதிகாலை 2 மணிக்கு முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தம் தொடங்கியது. சிறப்பு படையணியில் சார்லஸும், மாலதி படையணியில் துவாரகாவும் நின்று களமாடினார்கள்.
காலை 10 மணியளவில் சார்லஸும் 10.40 மணியளவில் துவாரகாவும் வீரமரணம் தழுவினர். 12 மணியளவில் செயற்கைக்கோள் தொலைபேசியில் தனக்கு நம்பிக்கையான ஒருவரிடம் பேசிய பிரபாகரன், “”என்ட ரெண்டு பிள்ளையளையும் தமிழீழ மண்ணுக்காய் கொடுத்திட் டேனப்பா…” என்றிருக்கிறார்.
விடுதலைக்காய் வீட்டுக்கொரு பிள்ளையைத் தாருங்கள் என்று வேண்டிய தலைவன், தனது பிள்ளைகள் இரண்டை தியாக வேள்விக்குத் தந்த வரலாறு புனிதமாய், காவியமாய், வேதமாய், எமது வரலாற்றின் முடிவிலா காலங்களுக்கும் உயிர்த்துடிப்புடனும் தலைமுறைகள் மெய்சிலிர்க்கும் ஆன்மீகப் பரவசமாயும் தொடரும்.
(நினைவுகள் சுழலும்)
3 comments:
தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே!
எங்கே, எங்கே
ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்!
விடுதலைப் போராளிகளுக்கு வீர வணக்கம்!
கடந்த இதழ் படித்துவிட்டு தொலைபேசியில் கதறி அழுதவர் பலர். நா தழுதழுத்து விம்மியவர் பலர். அரசு, தனியார் துறைகளில் உயர்பதவி வகிப்போர் கூட “இப்படி நாமெல்லாம் கையாலாகாத வர்களாகிவிட்டோமே, நம் கண்ணெதிரே ஒரு இனத்தை, விடுதலைப் போராட்டத்தை அழித்து விட்டார்களே’ என்று கலங்கினர். நடு வயதுத் தாய் ஒருவர் என் அலுவலகம் தேடி வந்தார். வயது 48, வசிப்பது வளசரவாக்கம் என்றார். “மீண்டும் போராட்டம் துளிர்க்குமெனில் நானும் போராளியாக விரும்புகிறேன், வழி சொல்வீர்களா?’ என்று கேட்டார். சிங்கப்பூரிலிருந்து ஆதிகேசவன் “”தமிழர்கள் நாம் தோற்றுவிட்டோமே ஐயா…” என குரல் குறுகி அங்கலாய்த்தார்.
அழுவோம். கதறுவோம். உறக்கமின்றிப் புரள்வோம். அங்கலாய்த்துத் தவிப்போம். உள்ளுக்குள் குமுறுவோம். நம்மவரின் பேரழிவை சிங்களவர்கள் நாடெங்கும் கொண்டாடினரென்றால் குறைந்தபட்சம் கதறி அழும் உரிமையினையேனும் நாம் கொள்வோம். காயமுற்ற பத்தாயிரம்பேர் புல்டோசர்களால் ஏற்றிக் கொல்லப்பட்ட போதும், கடைசி நாளில் இருபதாயிரம் பேர் உயிரோடு புதைக்கப்பட்டபோதும், நாம் வெறு மனேதான் இருந்தோம். நினைத்தின்று அழுவோம். ஆயினும் அழுகையின் நிறைவில் உறுதியொன்று பிறந்திட வேண்டும். குறைந்தபட்சம் இன்று வதை முகாம்களில் நடைபிணங்களாய் உயிர் வாடும் மூன்று லட்சம் தமிழருக்கான குரலாய் எழுந்திடும் உறுதி. அவர்களுக்காய் களமிறங்கிப் போராடும் உறுதி.
அழுக்குப் படிந்து நம் உடலோடு ஒட்டிவிட்ட ஆடையொன்றை களைந்தெறியும் காலம் இது. ஈழத்தமிழ் மக்களின் போராட்டம் பயங்கரவாதம் என உலக, இந்திய ஊடகங்களும் சில அரசியற்கட்சிகளும் செய்த தொடர் பிரச்சாரம் நமக்குள்ளேயே அச்சம், தயக்கம், குற்ற உணர்வு மூன்றையும் உருவாக்கி செயல்பட முடியா நிலையில் வைத்திருந்தது. அதுதான் அந்த அழுக்கு ஆடை. களைந்தெறிவோம். ஈவிரக்கமின்றி இறுதி நாட்களில் மட்டுமே நாற்பதாயிரம் தமிழர்களை கொன்றழித்த இலங்கை அரசுதான் நிஜமான பயங்கரவாதி என்று முழங்குவோம். அம்மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றினை நமது பொது வரலாறாக சுவீகரிப்போம்.
இங்கு செய்யப்படும் பதிவுகள் யாவுமே அம்மக்களின் அனுபவங்களை நம் அனைவரதுமான பொது வரலாறாய் ஆக்குகின்ற நோக்குடன்தான் செய்யப்படுகிறது. மீண்டும் 2002-ல் நான் கண்ட கிளிநொச்சிக்கே செல்கிறேன். “”ஓயாத அலைகள்” யுத்தத்தின்போது உன்மத்தமான சண்டைகள் நடந்த பளை பகுதியை பார்க்க வேண்டுமெனச் சென்றேன். “நெடுஞ்சாலையை விட்டு கீழிறங்காதீர்கள்’ என வாகன ஓட்டுநர் எச்சரித்தார். கந்தக நிலம் போல் காட்சி தந்தது. எங்கும் ராணுவத்தால் கண்ணி வெடிகள் விதைக்கப்பட்டிருப்பதாகவும் அனைத்தையும் அகற்றி முடிக்க ஈராண்டுகளேனும் ஆகும் எனவும் சொன்னார்.
பளை பகுதி தமிழீழப் பரப்பின் தென்னைக் களஞ்சியம் என வருணிக்கப்படுவதுண்டு. எனது கண்களுக்குத் தெரிந்தவரை சுமார் நாற்பதாயிரம் தென்னை மரங்கள் தலை இழந்து மூளியாய் நின்றன. இலங்கை ராணுவத்தின் எறிகணை வீச்சில் முகடு முகம் இழந்த மரங்கள் என வாகன ஓட்டுநர் கூறினார். சந்திரிகா அம்மையார் காலத்திலேயே அத்துணை மூர்க்கத்தனமான எறிகணை வீச்சு நடந்ததென்றால் ராஜபக்சே-கோத்தபய்யா சகோதரர்களின் காலத்தில் முல்லைத்தீவு மக்கள் மீதான எறிகணை வீச்சு எப்படி இருந்திருக்கு மென எண்ணிப் பாருங்கள்.
பளை பகுதியில் மனம் கனத்து போரின் கோர வடுக்களை பார்த்து நின்றவேளை இரு சக்கர ஊர்தியில் ஒருவர் கம்பீரமாக வந்தார். பெயர் இளந்திரை யன். போராளி என அறிமுகம் செய்து கொண்டார். அருகில் பார்க்கத்தான் தெரிந்தது அவருக்கு ஒரு கால் இல் லையென்பது. செயற்கை மரக்கால் பொருத்தியிருந் தார். இதே பளை பகுதியில் நடந்த சண்டையில்தான் கால் இழந்தாராம். நான் வேரித்தாஸ் வானொலி ஃபாதர் ஜெகத் என்றதுமே இடைவெளி அகன்று நீண்ட நாள் நண்பரைப் போல் உரையாடினார்.
போராட்ட வாழ் வின், யுத்த களத்தின் எத்தனையோ அனுபவங் களை வீதியோரமாக நின்று கொண்டே விவரித் தார் இளந்திரையன். அவற்றுள் ஒன்று மறக்க முடியாதது. சக போராளி ஒருவர் வீர மரணம் அடைந்துவிட்ட செய்தியை அவரது வீட்டாருக்குச் சொல்வதற்காக இளந்திரையனும் வேறு நான்கைந்து போராளிகளும் சென்றிருக்கிறார்கள். செய்தியை சொன்னதுமே உணர்ச்சி வெடித்து அழுத குடும்பத்தினர் புலிகள் இயக்கத்தை திட்டி, செய்தி சொல்லச் சென்ற இவர்களையும் அடித்திருக்கிறார்கள். இத்தகு தருணங்களில் உயிருக்கு ஆபத்து என்றால்கூட போராளிகள் திருப்பித் தாக்கவோ, கடும் சொற்களால் பதில் சொல்லவோ கூடா தென்பது விடுதலைப் புலிகள் இயக்க விதி முறையாம். இறந்த போராளியோ வீட்டாரின் விருப்பமும் அனுமதியும் இன்றி இயக்கத்தில் இணைந்தவர் போலிருக்கிறது. அதனால்தான் அவர்களுக்கு இவ்வளவு ஆத்திரம். அடி தாங்க முடியாமல் போனபோது இளந்திரை யன் சொன்னாராம், “”உங்களுக்கு ஆத்திரம் தீருமட்டும் எங்களெ அடியுங்கோ… ஆனா ஒன்று… நாங்களும் போராளிகள். இன்றோ, நாளையோ, நாலு வருஷம் கழிச்சோ எங்கட மரணச் செய்தியெ சொல்ல நாலு போராளி கள் எங்கட வீடுகளுக்கும் போவினும். எங்க ளுக்கும் தாய், தகப்பன் சொந்தங்களெல்லாம் உண்டு. அவையளுக்கும் இப்பிடித்தான் ஒருவேளை கோபம் வரும். அதனாலெ நீங்க ஆத்திரம் தீருமட்டும் அடியுங்கோ” என்றி ருக்கிறார். இதைக் கேட்டதுமே அதுவரை நேரம் அடித்தவர்கள் போராளிகளை கட்டிப்பிடித்து கதறி மன்னிப்புக் கேட்டிருக் கிறார்கள்.
பிரபாகரன் அவர்களுடனான எனது நேர்காணலின் போது நான் கேட்ட முக்கியமானதொரு கேள்வி: “”சிங்கள மக்களை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள், அவர்கள் சிறந்து வாழ வாழ்த்துவீர்களா?” அதற்கு அவர் தந்த பதில்: “”தமிழ் மக்களாகிய எங்களை அடித்து அடித்து சிங்களவர்கள் களைத்துப் போய்விட்டார்கள். தமிழ் மக்களோ அடி வாங்கி வாங்கி களைத்திருக்கிறார்கள். எனவே அடித்தும் களைக்காமல், அடி வாங்கியும் களைத்துப் போகாமல் சமாதானமாகப் பிரிந்து வாழ்வது இருவருக்குமே நல்லது. மற்றபடி தமிழ் மக்கள் எவ்வாறு சிறந்து வாழவேண்டு மென்று ஆசைப்படுகிறேனோ அவ்வாறே சிங்கள மக்களும் சிறக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்” என்றார்.
எத்தனையோ போராளிகளிடம் நான் அப்போது உரையாடினேன். நான் புனிதமாய் நம்பும் சகலவற்றின் மேலும் சாட்சியாய் சொல்கிறேன்… ஒரு போராளி கூட சிங்கள மக்கள் மீது வெறுப்பு கூறவில்லை. தமிழ் ஈழம், தமிழ் மக்கள் மீதான ஆர்வமும் அன்பும் ஒவ்வொரு போராளியின் உணர்வுகளிலும் உரையாடல்களிலும் பற்றி எரிந்ததைத்தான் பதிவு செய்ய முடிந்ததேயல்லாமல், சிங்கள மக்களை அழிக்க வேண் டும் என்ற உணர்வோட்டத்தை என்னால் அவதானிக்கவே முடியவில்லை. “”ஏன் சிங்களவன் தமிழ் மக்களை அழிக்க வேண்டி வரிந்து கட்டுகிறான்?” என்ற கேள்வியைத்தான் அநேகம் போராளிகள் கேட்டனர். ஆ.இரகு பதி என்ற போராளி 1999-ம் ஆண்டு எழுதிய கடிதம் அவர்களின் பொதுவான உளப்பாங்கிற்கு ஓர் உதாரணமாய் இருந்தது. இதோ அக்கடிதம்:
“”இம்மடலை நான் எழுதும் இடம் கிளிநொச்சி. ஆம்! இந்நகர் இப்போது எமது கையில். இந்நகரை மீட்க பலநூறு போராளிகளை இழந்துள்ளோம். ஆனால் இறுதியில் நாம் வென்றோம். இச்சமரில் கொல்லப்பட்ட இலங்கை ராணுவத் தினரின் உடல்களை கண்டபின் எமக்கிருந்த ஆவேச உணர்ச்சி மறைந்துவிட்டது. நான் சொன்னால் நம்பமாட்டீர்கள். உண்மையில் பரிதாபமே பிறந்தது. ஓர் ராணுவ வீரன். முப்பது வயதிருக்கும். காயமடைந்த நிலையில் கதறிக் கொண்டிருந்தான். நாங்கள் அவனை மீட்டு கள மருத்துவ இடத்திற்கு தூக்கிச் சென்றோம். அவன் தனக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும், எப்படியாவது தன்னை காப்பாற்றுமாறும் அழுதான். நாங்களும் எப்படியாவது அவனை காப்பாற்ற வேண்டுமென்று வெறியோடு இயங்கினோம். 700 மீட்டர் தூக்கிச் சென்றிருப்போம். அவனது பேச்சைக் காணவில்லை. பரிசோதித்தபோது இறந்திருந்தான். பாவமாக இருந்தது. அவனது இளம் மனைவியும் இரு பிள்ளைகளும் என்ன பாடுபடப் போகிறார்களோ என்று எமது மனம் கவலையடைந்தது”.
களத்தில் கை, கால் இழந்து, உடலெங்கும் வீரத் தழும்புகள் கொண்டிருந்த போராளிகளிடத்துக் கூட வெறுப்பினை என்னால் பார்க்க முடிய வில்லையென்பது உண்மையிலேயே வியப்பா யிருந்தது. வள்ளுவப் பெருந்தகை சொன்னதோர் பேருண்மை புரிந்தது: “”அறத்திற்கே அன்பு சார்பென்பர் அறியார்: மறத்திற்கும் அஃதே துணை”. அறம் மட்டுமே அன்பு நிலை சார்ந்ததென நாம் நினைக்கிறோம் – ஆனால் வீரமும் அன்புநிலை சார்ந்ததுதான் என்பதற்குச் சுடர்விடும் முன்னுதாரணங்களாய் அவர்களைக் கண்டேன். அறம் மறுக்கப்பட்டதால் மறம் தரித்தவர்கள் அவர்கள். மறம் தரித்தபோதிலும் எதிரியின் மீது தனிப்பட்ட வெறுப்பினை வளர்க்காதவர்கள். இவர்களைத்தான் உலகம் பயங்கரவாதிகள் என்றது.
எல்லோரும் துரோகம் செய்தும், பழி வாங்கியும் தீர்த்துவிட்டார்கள். நாமேனும் அவர்களது நினைவுகளை புனிதமுடன் சுவீகரிப்போம். எனது வானொலி நாட்களில் தமிழகத்திலிருந்து வரும் ஈழ விடுதலை ஆதரவுக் கடிதங்களை ஒலிபரப்புவதுண்டு. அதற்கு ஒரு போராளி எழுதிய கடிதம் நம்மிடமிருந்து அவர்கள் என்ன எதிர்பார்த்தார்கள் என்பதற்கான பதிவு. இதோ அக்கடிதம்: “”இரத்தமும் தசையும் ஒன்றாய் கலந்த சகதிக்குள் இன்று உரிமைக்காகப் போராடுகின்ற என் போன்ற போராளிகளின் மனதில், நாம் உலகத்தாரால் புறக்கணிக்கப்பட்டவர்களல்ல… எமக்குத் தோள் தர மனிதம் இன்னமும் வாழ்கிறதென்ற உணர்வினை தமிழகத்து உறவுகள் எழுதும் கடிதங்கள் தருகின்றன. போராளியான பின்னரும் கூட எனது தாயார் என்னைப் பார்க்க வருகையில் சிற்றுண்டிப் பொதிகளை என் கையில் கொடுத்துவிட்டு முத்தமிட்டு கண்ணீர் மல்கப் பிரியும் வேளை எனது கண்கள் என் கட்டுப்பாட்டை இழக்கும். இனிமேல் என் அன்புத்தாயை உயிருடன் பார்ப்பேனா? அல்லது எனது உயிரற்ற உடலையாவது என் தாய் காண்பாரா?
அது பரவாயில்லை. என் மண்ணில் இன்று எனக்கு ஏராளம் உறவுகள். அவர்களது அன்பு தரும் நிறைவே போதும். ஆனால் எமது மக்களின் துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொள்ள இந்த உலகில் யாருமே இல்லை என்கின்ற உணர்வு இப்போது எம்மிடம் இல்லை, ஏனென்றால் தமிழகத்து உறவுகள் எம்மீது காட்டும் பரிவு” -நம்மை அவர்கள் நம்பினார்கள். இப்போதும் கூட நம்புகிறார்கள்.
(நினைவுகள் சுழலும்)
மறப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை? 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது.
“”உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?” அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்:
“”என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!”
வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக் கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத இயற்கையின் நியதி இது. ஆம், வலியது வாழும். போரின் கொடுமையோ அதனிலும் பெரிது. வெற்றி பெற்றவன் அனைத்தையும் எடுத்துக் கொள்வான், வரலாறு உட்பட. தோற்றுப் போனவன் தலைகுனிந்து குறுகி நிற்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனும், தமிழீழ விடுதலைப்புலிகளும் விட்ட பிழைகளையும், செய்த தவறுகளையும்தான் இனி பலரும் அதிகமாகப் பேசப்புறப்படுவார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தவறிழைக்காத தேவ தூதர்கள் இல்லைதான். அவர்கள் செய்த குற்றங்களை, குற்றமென்று உரைக்கும் ஒழுக்க நிலை நமக்கு இருந்தால் மட்டுமே அவர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட் டத்தை போற்றி, தொடர்ந்து அப்போராட்டத்தின் அரசியல் இலக்குகளை அம்மக்களுக்கு உறுதி செய்யும் செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள முடியும். மாற்றுக் கருத்துடைய பலரை அரசியல் களத்திலிருந்து அகற்றியது, உலக அளவிலான அரசியல் தலைமைத் துவங்களை உருவாக்காதது, “போர் வெற்றி’ தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளை மக்களிடையே உருவாக்கி தங்களை மக்களின் “பந்தயக் குதிரைகளாக’ நிறுத்தி -மக்களை அரசியல்மயப்படுத்த தவறியது, ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தப் பட்டது -அல்லது சம்பந்தப்படவில்லை யென்றால் அதனை சரிவர விளக்காதது… என தமிழீழ விடுதலைப்புலிகள் விட்ட பிழைகள் பல உண்டு. எனினும்
தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லாத தமிழ் வரலாறும், அவர்தம் வரலாற்றோடு தொடர்பற்ற தமிழர் எதிர்கால எழுச்சியும் இல்லை என்பதே நிதர்சனம். தமிழர் வரலாற்றின் அகற்றமுடியா ஆதர்ச மாகவும் வரலாற்றுப் பிரமாண்டமாகவும் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிலைபெற்று விட்டார் என்பதுதான் உண்மை.
எனவேதான் அவரைப் பற்றின சரியான புரிதல் தமிழ் நாட்டுத் தமிழர்களாகிய நமக்கும் முக்கியமானதாகிறது. தமிழர்களாகிய நமது எதிர்கால எழுச்சிக்கும் அது முக்கியம்.

உலகின் ஒரு மூலையில் மிகச்சிறியதோர் தமிழ்க் கூட்டத்திலிருந்து முன்னுதாரணமான தோர் விடுதலைப் போராட்டத்தை கட்டி யெழுப்பியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அந்தப் போராட்டம் நமது இனத்தில் பிறந்த தென்பது, உணர்வுகளைத் தவிர வேறெதுவும் பெரிதாகப் பங்களிக்காத நமக்கும் பெருமையே.
நாற்புறமும் நீர்சூழ்ந்த சிறியதோர் நிலப்பரப்பில், இலங்கையோடு சுற்றியிருக்கும் பெரிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா நாடுகளினது நெருக்குவாரங்களுக்கு ஈடுகொடுத்து, மரபுவழித் தாக்குதல் படை யணிகள், சிறப்புப் படை பிரிவுகள், பீரங்கிப் பிரிவு, கடற்படை, உலக உளவு அமைப்புகள் மெச்சும் மிகத்திறன் கொண்ட புலனாய்வுத் துறை, 70-க்கும் மேலான கப்பல்களை கொண்ட அனைத்துலக ஆயுத கொள்வனவுப் பிரிவு, அரை உரிமை கொண்ட ஒரு செயற்கைக்கோள் -இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் 2002-முதல் ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய துறைசார் அலகுகளுடன் கூடியதோர் நடை முறை அரசை உருவாக்கி பல உலக நாடுகளை விடவும் நேர்த்தியான முறையில் அதனை நிர்வகிக்கும் திறனும், கண்ணியமும், ஒழுக்கமும் கொண்ட நிர்வாக ஏற்பாட்டையும் உருவாக்கி சாதனை செய்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். உலகெங்கும் யூதர்கள் இருந்தாலும் இஸ்ரேல் அவர்களது உரிமை பூமியாய் இருப்பதுபோல் உலகெங்குமுள்ள எட்டு கோடித் தமிழர்கள் தம் இனத்திற்கும் ஒரு நாடு இருக்கிறது என்று பெருமையுடன் பேசும் நிலைக்கு வெகு அருகில் தமிழினத்தை கொண்டு வந்தவர் அவர்.
அவற்றிற்கெல்லாம் மேலாய் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை, இலக்கு நோக்கிய விடாப் பிடியான உறுதியின்மை, அதிகாரவர்க்கத்தை கண்டு அஞ்சுதல் போன்ற குணாதியங்களைக் கொண்ட தமிழ் இனத்தினது மனவெளியில் கண்ணுக்குப் புலப்படாத போராட்டமொன்று நடத்தி, நம்பிக்கை ஊட்டி, துணிவுடன் நிமிர வைத்து, பிறர் வாழ தம் உயிரை மனமுவந்து ஈகம் செய்யும் தலைமுறை ஒன்றினை புடமிட்டு, நானும் பிறந்து பாக்கியம் பெற்ற இத்தமிழினத்தின் சிந்தனை இயக்கத்தையும் போக்கையும் மாற்றியமைத்ததுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த உண்மையான வரலாறு.
முல்லைத்தீவில் பல்லாயிரம் போராளிகளையும், பலநூறு கோடி ரூபாய் பெறுமதியுடைய ஆயுதங்களை யும் முற்றாக இழந்து ராணுவரீதியாய் நிர்மூலமாகி விட்டாலும்கூட -வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த இந்த மகத்தான வரலாற்றையும், கால் நூற்றாண்டிற்கு முன் தமிழர்கள் கற்பனைகூட செய்து பார்த்திராத அரசியல் உச்சநிலைக்கு தமிழினத்தை அவர் அழைத்து வந்துவிட்டதையும் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். ராஜீவ்காந்தி படுகொலையில் அவர் குற்றவாளியென்றால் அவ்வாறே இருக்கட்டும். தீர்ப்பு எழுதப்படட்டும், தண்டனையும் தரப்படட்டும். அதேவேளை சில குற்றங்களையும், சில தவறுகளையும் கடந்து அவர் படைத்த இவ்வரலாற்றி னை பெருமையுடன் சுவீகரித்துக் கொள்ளும் உரிமை தமிழராகிய நமக்கு இல்லையென்று சொல்ல எந்த அரசுக்கும், அதிகார அமைப்புக்கும் உரிமை யில்லை.
தனிப்பட்ட மனிதனாகவும், தன் வாழ்விலும் ஒரு இனத்தின் மாபெரும் நாயகனாகப் போற்றப்படும் இயல்புகள், ஒழுக்கங்கள் கொண்டிருந்தார் அவர் என்பதும் முக்கியமானது. “”தலையை குனியும் நிலையில் இங்கே புலிகள் இல்லையடா, எவனும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா” என அவர்கள் பாடும் பாடல் மிகவும் தகுதி யானதே. “”உலகத் தமிழ் மக்கள் உங்களை தேசியத் தலைவர் எனப் போற்றுகிறார்கள். இத்தகுதியை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?” என்று 2002-ல் நான் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் இவரைப் போலொரு நேர்மை யான தலைவரை நாமறிந்த தமிழர் வரலாறு பெற்றிருக்கவில்லை என்ற உணர்வினை அன்றே என்னுள் உருவாக்கியது.
இதோ அவர் சொன்ன அதே வார்த்தைகள்:
“”என்னை நானே மிகைப்படுத்திக்கொள் ளும் எண்ணம் எனக்குக் குறைவு. இப்படி தகுதியையெல் லாம் அடைய வேண்டு மென நான் உழைத்ததை விட என் இனத்திற்கான கடமையை செய்ய வேண்டும், எனது மக்களின் விடுதலைக்காக நான் அர்ப்பணிப்போடு போராட வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி யிருந்தது. கடமை உணர்வுதான் எனக்கு அதிகம். அதற்கு அப்பால் என்னை நானே பெரிதாக சிந்திக்கிற பழக்கம் எனக்கு இல்லை. என்னோடு கூட நிற்கும் தளபதியர், போராளிகள், அவர்களோடு போராட்ட சவால்களுக்கெல் லாம் ஈடுகொடுக்கும் எமது மக்கள் -எல்லோராலும்தான் போராட்ட சாதனைகள் உருவாக்கப்படுகின்றன”.
தொடர்ந்து நான் கேட்டேன், “”தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே?” -இக்கேள்விக்கு அவர் தந்த பதில் எனது வாழ்வில் பெற்ற நேர்காணல் பதில்களிலெல்லாம் அற்புதமானது.
“”எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள்.
தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்”.
என்னே தெளிவு. என்னே நேர்மை! என்னே தன்னம்பிக்கை!
முல்லைத்தீவு பேரழிவிலிருந்து தங்களையும் விடுதலைப் போராட்டத்தையும் தற்காத்துக்கொள்ள ஒரே ஒரு வாய்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இருந்தது. கடந்த ஜனவரி 24 அன்று வன்னிப்பரப்பிலுள்ள கல்மடு குளத்தை புலிகள் உடைத்துவிட நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பலியான செய்தியை நக்கீரன் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். கல்மடு குளத்தைவிட பன்மடங்கு பெரியது இரனைமடு ஏரி. இரனைமடு ஏரியை உடைத்திருந்தால் ஊழிப்பெருக்குபோல் பெருவெள்ளம் புறப்பட்டு வன்னிப் பரப்பு முழுதையும் விழுங்கி பூநகரி வரையுள்ள மரம், செடி, உயிர் அனைத் தையும் அழித்துத் தீர்த்திருக்கும். மிகக் குறைந்தபட்சம் 40,000 சிங்கள ராணுவத் தினர் செத்து மிதந்திருப்பர். அவர்தம் பல்லாயிரம் கோடி பெறுமதியுடைய ஆயுதங்கள், ராணுவ கட்டுமானங்களும் புதையுண்டு போயிருக்கும். இந்த மரண அடியிலிருந்து அடுத்த பத்து ஆண்டு களுக்கு சிங்கள ராணுவம் எழும்பியிருக் காது.
ராஜபக்சே சகோதரர்களின் அரசிய லும் முடிந்திருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தளபதிகள் இறுதி அஸ்திர மாக இரனைமடு ஏரியை உடைக்கும் ஆலோசனையை முன்வைத்தபோது யோசனைகளுக்கு இடம் கொடுக்காம லேயே பிரபாகரன் சொன்னாராம், “”நீங்க சொல்றது சரிதான். இரனை மடுவெ உடைச்சா சிங்கள ஆர்மிகாரனுக்கு மரண அடி கொடுக்கலாம். ஆனால் வன்னியின்றெ பொருளாதாரமும் அதோட போகும். அடுத்த நூறு ஆண்டுக்கு அந்த மண்வளத் தையும் விவசாய பொருளாதாரத்தையும் ஒருத்தராலயும் மீட்டெடுக்க முடியாது.
நம் வன்னி சனம் எத்தனையோ கஷ் டங்கள்பட்டு விடுதலைப்போராட்டத் தோடு நிக்கிறாங்கள். அந்த சனத்துக்கு நாம் இப்படியொரு துரோகம் செய்ய ஏலாது.” பேரழிவு நெருங்கிவந்த பொழுதில்கூட தனது மக்களின் வாழ்வுக்கான ஆதார வளங்களை அழித்து தன்னையும் இயக்கத்தையும் பாதுகாக்க மறுத்த இந்த மாமனிதனா பயங்கரவாதி? ஐயப்படும் அன்பர் களுக்கும், ஆங்கில ஊடகத்து அந்நியர்களுக்கும் இவற்றையெல் லாம் எடுத்துரையுங்கள். அவர்கள் வனைவு செய்த பயங்கரவாத வர்ணஜாலங்களுக்கு அப்பால் இதயம் கொண்டதொரு மனி தன் பிரபாகரன் என்பதை உரத்துச் சொல்லுங்கள்.
அருட் தந்தை ஜெகத் காஸ்பெர்
நன்றி : நக்கீரன்
காணும் பொழுதெல்லாம் உணர்வாளர்கள் எழுப்பும் கேள்வி, “ஈழம் இனியும் சாத்தியமா?’ தர்மத்தை சூது வெல்லும், தர்மம் மறுபடியும் வெல்லும். ஈழம் வரும்.
கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் மக்கள் சமூகங்களையும் நாகரீக வளர்ச்சியையும் அதிகமாகப் பாதித்தவை போர்களும் நாடு பிடித்தல்களும்தான். வரலாற்றின் மிகப்பெரிய நாடுபிடித்தல், ஐரோப்பிய வெள்ளையர்கள் இன்று லத்தீன் அமெரிக்கா எனப்படும் தென் அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமித்து தம் ஆளுகையின் கீழ் கொண்டு வந்த நிகழ்வு. பூர்வகுடி திராவிடர்களுக்கும் ஐரோப்பிய வெள்ளையர்களுக்கு மிடையான முதல் சந்திப்பும் மோதலும் 1532-ம் ஆண்டு நவம்பர் 16-ம் நாள் இன்றைய பெரு நாட்டிலுள்ள காசமார்கா என்ற இடத்தில் நடந்தது.
தென் அமெரிக்காவில் திராவிடர்கள் வாழ்ந் தார்களா என நீங்கள் கேட்பது புரிகிறது. வெள்ளையர் வருமுன் அங்கு வாழ்ந்தவர்களும் ஆண்டவர் களும் நம்மைப் போன்ற நிறமும் சாயலும் கொண்ட வர்கள். மேற்கத்திய மானுடவியலார்கள் பொதுவாக அவர்களை “பூர்வகுடி இந்தியர்கள்’ என அடை மொழியிட்டுக் குறித்தார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் திராவிட இன குடும்பத்தின் குணாம்சங்கள் கொண்டவர்கள்.
2001-ம் ஆண்டு மெக்சிகோ, கியூபா, உருகுவே, பெரு, பரகுவாய், நிகராகுவா, பிரேசில் நாடுகளுக்கு பயணப்படும் வாய்ப்பு கிடைத்தது. பிரேசிலில் மட்டுமே அமேசான் காடுகள், சவோபவுலோ கடல் என நான்கு மாதம் சுற்றித்திரிந்த அனுபவம் மறக்க முடியாதது. எல்லா இடங்களிலுமே நான் வாய் திறந்து பேசும்வரை என்னை பிரேசில் நாட்டவன் என்றே எல்லோரும் நினைத்தார்கள். நம்மைப் போன்ற நிறமும் உடலாம்சங்களுமுடையோர் அந்நாட்டில் மட்டுமே சுமார் 30 சதம் இருக்கிறார்களாம். கால்பந்து கதாநாயகர்கள் ரொனால்டோ, ரொனால்டிக்ஞோ, பெலே ஆகியோரின் முகங்களைப் பார்த்தாலே நமக்கு இது புரியும். பெலே அவர்கள் விளையாடி வளர்ந்த அரங்கில் அரைமணி நேரம் கால் பந்தாடிய அனுபவம் வாழ்வில் மறக்க முடியாதது.
பிரேசில் நாட்டின் தென்பகுதியிலுள்ள புவாஸ்திகாசு என்ற அருவி அற்புதமானது. புவாஸ்திகாசு என்றால் தமிழில் “”கற்களும் கவிதை பாடும் இடம்” என்று அர்த்தமாம். நாமெல்லாம் சிலாகிக்கும் நயாகராவை விட நான்கு மடங்கேனும் பெரிய அருவி. நீள விரிவு மட்டுமே சுமார் மூன்றரை கி.மீ. இருக்கும். குற்றால நீர்வீழ்ச்சி மூன்றரை கி.மீ. நீளத்திற்கு விழுந்து கொண்டேயிருந்தால் எப்படியிருக்குமென கற்பனை செய்து பாருங்கள்?! ஆனால் எதையும் நன்றாக விற்கத் தெரிந்த வெள்ளையர்கள், நயாகராவை உலகின் பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சியாய் நிலைநிறுத்தி விட்டார்கள்.
இயற்கையோடிணைந்து அறமும் இறையுமாய் இசைபட வாழ்ந்த பூர்வகுடி மக்களை ஈவிரக்கமின்றி கொன்று அழித்துவிட்டு “”கிறிஸ்டபர் கொலம் பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார்” என்று கதை எழுதிய பயங்கரவாதத்தின் மொத்த விலை வர்த்தகர்கள்தானே இந்த வெள்ளையர்கள். நம்மில் பலர் இன்றுவரை கொலம்பஸ் சென்று “கண்டுபிடிப்பதற்கு’ முன் அமெரிக்கா வில் மனித சமூகங்கள் வாழவில்லை என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஐரோப்பிய வெள்ளையர்கள் ஆக்கிரமிப்பதற்கு முன் அமெரிக்காவை ஆண்டவர்கள் “பூர்வகுடி இந்தியர்கள்’, “செவ்விந்தியர்கள்’ என அறியப்படும் திராவிட இனத் தொடர்புடைய மக்கள் என்பது எத்தனைபேருக்குத் தெரியும்? அறிவு மோசடியில் முதலிடம் பெறுவது மதவாதிகளென்றால் அடுத்த இடத்தில் நிற்பது வரலாற்று ஆசிரியர்கள், எழுத்தாளர்கள்.
இந்தியாவில் இடைநிலை, உயர்நிலை பள்ளிக் கல்விக்கான பாடங்கள் எழுதுவோர்கூட இந்த மோசடிக்கு விதிவிலக்கல்ல. முதற்பாடம் “”ஆரியர் வருகை” என்ற தலைப்பிலும் அடுத்த பாடம் “”முகலாயர் படையெடுப்பு” என்றும் இருக்கும். ஆரியர், முகலாயர் இருவருமே கைபர் போலன் கணவாய் வழி நம் நிலம் வந்து ஆக்கிரமித்து வாழ்ந்தவர்கள். ஆனால் வரலாறு எழுதுகையில் ஆரியர்கள் “”வந்தவர்கள்” என்றும் முகலாயர்கள் “”படையெடுத்தவர்கள்” என்றும் படம் விரியும். நுட்பம் புரிகிறதா, உங்களுக்கு? ஆரியர்கள் சாதுக்கள், முகலாயர் சண்டியர்கள் என்ற கற்பிதம் எப்படி ஆரம்பக் கல்வியிலேயே விதைக்கப்படுகிறது.

“இன்கா’ இன பெரும்படையின் தோல் விக்கும் ஸ்பெயின் நாட்டு சிறு குழுவின் வெற்றிக்குமான காரணங்களை ஆய்வதென்றால் அதற்கு மட்டுமே இருபது “மறக்க முடியுமா’ இதழ்கள் தேவைப்படும். மிக முக்கியமான கார ணங்கள் நான்கு. ஸ்பானியர் களிடம் இரும்பு ஆயுதங்கள் இருந்தன. இன்கர்களோ மரம், கல் சார் ஆயுதங்களையே கொண்டிருந்தனர். இரண்டு, ஸ்பானியர்களிடம் குதிரைகள் இருந்தன; ஆதலால் வேகம் சாத்தியப்பட்டது. இன்கர்களோ யானைகள் வைத்திருந்தனர்; குதிரைகள் இல்லை. மூன்று முக்கியமானது. ஸ்பானியர்கள் யுத்தகளத்திற்கான திறன்மிகு “தகவல் பரிமாற்ற முறையை (ஈஞஙஙமசஒஈஆபஒஞச நவநபஊங) கொண்டிருந்தனர். -இன்கர்களிடம் அது இருக்க வில்லை. இறுதியாக இன்கர்படை அத்தகுவல்ப் பாவை கடவு ளாகக் கருதியது. ஸ்பானி யர்கள் முத லில் வீழ்த்தியது கடவுளை. கடவுளே வீழ்ந்துவிட்டா ரென்றால் ஏனையோர் நிற்க முடியுமோ? சிதறுண்டார்கள்.
சுருக்கமான செய்தி இதுதான். புதுமை-நவீனத்துவங்களோடு ஈடுகொடுத்து, ஜனநாயக நம்பிக்கைகளுடன், திறமான தகவல்-செய்தி உத்திகளோடு வேகமும் காட்டி இயங்கினால் 80,000 பேர் கொண்ட படையை அவர்கள் நிலத்திலேயே 168 பேரால் வீழ்த்த முடியும், முடிந்தது. 16-ம் நூற்றாண்டில் பெருநாட்டு காசமார்கா-வில் முடிந்ததென்றால் 21-ம் நூற்றாண்டில் ஏன் கரிப்பட்ட முறிப்பிலும், முல்லைத்தீவிலும் மீண்டும் நடக்கக்கூடாது? நடக்கும்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு அத்தெளிவு இருந்தது.
“”எனது காலத்திலேயே ஈழம் கைகூடும் என்ற நினைப்பில் நான் போராடவில்லை. எனக்குப் பின்னரும் நாற்பது ஆண்டுகள் இளைஞர்கள் போராடி இயங்குவதற்கான ஒழுங்குகளையும் ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறேன்”
என்றார்.
“”தமிழ் ஈழத்திற்கு ஆதரவான உலகப் பொதுக்கருத்து உருவாகுமென நீங்கள் நம்புகிறீர்களா?” என்றேன்.
“”நான் மீண்டும் மீண்டும் ஒன்றை வலியுறுத்துகிறேன். ஒருபோதும் போருக்கு புலிகள் காரணமாய் இருந்ததில்லை. யுத்தம் எம்மீதும் எமது மக்கள் மீதும் திணிக்கப்பட்டது. நாங்களோ, எமது மக்களோ யுத்த வெறி கொண்டவர்களல்ல. சிங்களப் பேரினவாதம்தான் யுத்த வெறிகொண்டு எம் மக்களை நசுக்க வருகிறது. இதனை உலகம் ஒருநாள் புரிந்துகொள்ளும்”
என்றார்.
“”நேரில் பார்க்கவும் பேசவும் அப்படியொரு சாதுவாகத் தெரிகிறீர்கள். உலகமோ உங்களைப் பற்றி கடுமையான பார்வை கொண்டிருக்கிறது. உங்களது உண்மையான ஆளுமையை உலகிற்கு எடுத்துக்கூறும் விளம்பர முயற்சிகளை ஆங்கில ஊடகங்கள் வழி அதற்குரிய நிறுவனங்களைப் பயன்படுத்தி செய்யக்கூடாதா?” என்றேன்.
இக்கேள்விக்குப் பிரபாகரன் அவர்கள் தந்த பதில் காலங்களையெல்லாம் கடந்து நிற்கும். இதுதான் அவரது பதில்:
“”வியாபாரிகளுக்குத்தான் விளம்பரம் வேண்டும். வீரனுக்கல்ல”.
இதனை எழுதுகையில் எழுதுகோலும் தாளும்கூட என்னோடிணைந்து சிலிர்ப்பதாய் உணர்கிறேன். என்னே தெளிவு. என்னே கூர்மை.
“”வியாபாரிக்குத்தான் விளம்பரம் வேண்டும், வீரனுக்கல்ல. தொடர்ந்து கூறினார் : “”எம்மைப் பற்றின தவறான புரிந்துமைகள் நிச்சயம் ஒருநாள் மாறும். ஏனென்றால் தன் பேரினவாத வெறியிலிருந்து சிங்களம் ஒருபோதும் மாறப்போவதில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கொடூர முகத்தை உலகம் நிச்சயம் புரிந்துகொள்கிற காலம் வரும்”
என்றார்.
“”குறைந்த அளவு படையணிகளைக் கொண்டு எப்படி பெரும் சிங்களப்படைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றீர்கள்?” என்றேன்.
“”தொடக்கத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன். இது ஆயுதங்களுக்கும் ஆயுதங்களுக்கும் இடையே நடக்கிற மோதல் அல்ல. தமிழரை அடக்கி அழிக்க நினைக்கிற சிங்களப் பேரினவாதத்திற்கும் அடிமை விலங்குகளை உடைத்து விடுதலை பெறத்துடிக்கும் ஓர் இனத்தின் மன எழுச்சிக்கும் இடையே நடக்கிற போர் இது. ஆயுதங்களுக்கிடையேயான போரென்றால் எப்போதோ எங்கள் கதை முடிந்திருக்கும்.
எதிர்காலத்தில் மீண்டும் போர் தொடங்கி ஆயுதப்போராட்டத்தில் நாங்கள் பின்னடைவு கண்டாலும் கூட, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழரின் வரலாற்றில் அபூர்வமாகத் தொடங்கிவைத்த மன எழுச்சி அடங்காது.
அந்த மன எழுச்சியை எந்தப் படைகளா லும் அடக்கவோ அழிக்கவோ முடியாது. அந்த நம்பிக்கையில் திடமாக நின்றுதான் நான் தமிழீழம் நிச்சயம் ஒருநாள் மலரும் எனவும் நம்புகிறேன்”
என்றார்.
தமிழீழம் வரும். எப்படி?
(நினைவுகள் சுழலும்)
தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் சாவடைந்தார். என்கிற செய்தி கடந்த 20ம் திகதி மாலை புலிகளின் குரல் வானொலியில் அறிவிக்கப்பட்டதும் அதனை நம்புவது கடினமானதாக இருந்தது. அச்செய்தி மக்கள் மனங்களை இடிபோல் தாக்கியது. மக்கள் மீது பற்றும் பாசமும் வைத்திருந்த, மக்களாலும் பேரன்புடன் நேசிக்கப்பட்ட ஒரு தளபதியாக திகழ்ந்தவர் பிரிகேடியர் பால்ராஜ்.
27.11.1965 ஆம் ஆண்டு பிறந்த பால்ராஜ். முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத் தொடுவாயைச் சேர்ந்தவர்.
1984 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளபட்ட பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களில் பங்கேற்றவர். பல வெற்றித்தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர்.தாயகத்தில் ஆக்கிரமிப்புப் படையாக வந்த இந்தியப்படைக்கு சிம்மசொப்பனமாக செயற்பட்டவர். மாங்குளம் படைமுகாம் தாக்கியழிப்பு, ஆனையிறவுத்தளம் மீதான ஆகாய கடல் வெளி நடவடிக்கை, ஓயாத அலைகள்- 01, 02, 03 போன்ற பெரும் தாக்குதல் நடவடிக்கைகளில் பங்காற்றியவர். தாயக நிலப்பரப்புக்களை ஆக்கிரமிக்க சிங்களப்படையினரால் பாரிய அளவில் மேற்கொள்ளபட்ட யாழ்தேவி, ரிவிரச போன்ற படைநடவடிக்கைகளுக்கு எதிரான புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளில் முன்னின்று பங்கேற்றவர்.
விடுதலைப்புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான சாள்ஸ் அன்ரனி படையணியின் முதலாவது தளபதி என்கிற பெருமையும் இவரையே சேரும். எல்லாவற்றிற்கும் மேலாக எந்த மக்களின் விடுதலைக்காக அவர் போராடினாரோ அந்த மக்களை அதிகம் நேசித்தார். களத்தில் போராளிகளை அன்போடு வழிநடத்தினார். ஆகாய கடல் வெளித் தாக்குதல்களின் போது களமுனைகளில் எடுக்கப்பட்ட காணொளி நாடாவைப்பார்த்த போதே அவர் போராளிகளோடு எவ்வாறு பழகுகின்றார், தாக்குதல்களுக்கு போராளிகளை எவ்வாறு தயார்படுத்துகின்றார் என்பதையெல்லாம் நான் கண்டு அதிசயித்தேன். “ஐயா, எல்லாரும் நடவடிக்கைக்கு தயாராக இருங்கோ. கூடிய வரையும் பிரிந்து நின்று அடிபடுங்கோ அப்போது எங்கட இழப்புக்களை குறைக்கலாம். என்னையா, நான் சொன்னது விளங்குது தானே ஐயா?” இப்படித்தான் பிரிகேடியர் பால்ராஜ் போராளிகளுக்கு அறிவுறுத்தல் கொடுப்பார்.
ஒரு தளபதியின் கட்டளைப்போலவே அது அமையாது. தாயின் பரிவு போலவே போராளிகளோடு பழகும் விதம் இருக்கும். அவர் களத்தில் வழங்கும் கட்டளைகளை மறுப்பின்றி போராளிகள் ஏற்பார்கள், அவ்வாறான மந்திர வார்த்தைகள் அவை என அவரோடு களத்தில் செயற்பட்ட போராளிகள் என்னிடம் கூறியமை இப்போது நினைவிற்கு வருகிறது. பிரிகேடியர் பால்ராஜ் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு மக்கள் முன் உரை நிகழ்த்தியிருக்கிறார். களமுனைத் தளபதிகளின் உரைகளை விரும்பி செவிமடுக்கின்ற மக்கள் அவர்கள் உரை நிகழ்த்துகின்ற கூட்டங்கள் நிகழ்வுகளுக்கு ஆர்வத்துடன் செல்வது வழக்கம். பிரிகேடியர் பால்ராஜ் கலந்து கொள்கின்றார் என்றால் மக்கள் அந்நிகழ்விற்கு நீண்ட துரங்களிலிருந்தும் வந்து விடுவார்கள் அப்போதெல்லாம் அவரது உரைகளில், வார்த்தைகளில் மக்கள் மீதான நேசிப்பு துலக்கமாக மின்னும்.
களமுனைத்தகவல்களை, குறிப்பாக சிங்களப்படைகள் ஆக்கிரமித்து முன்னகர முயல்கின்ற பகுதிகளில் நிலைமை என்ன என்பதை அறிந்து கொள்வதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கமானது. தளபதி பால்ராஜ் அங்கு நிற்கிறார் என்ற தகவல் கிடைத்தால் அதுவே மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திவிடும். அந்தளவிற்கு மக்களின் நாயகனாக பிரிகேடியர் பால்ராஜ் திகழ்ந்தார். தாயகத்தில் குறிப்பாக வன்னியில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் காலடி படாத இடங்கள் இல்லை. இனி இந்த மண் அவரது காலடி வருடலுக்காக ஏங்கும்.பிரிகேடியர் பால்ராஜ் குறித்த இக்குறிப்பை நான் எழுதிக்கொண்டிருக்கின்ற வேளையில், அவரது இறுதி வணக்க நிகழ்வுகள் குறித்த தகவல்கள் அறிவிக்கப்படவில்லை. தாயகத்தில் துயரம் கசிந்த வண்ணமிருப்பதைக் காணமுடிகிறது.
ஊரெல்லாம் சோக இசை தவழ்ந்து மக்கள் மனங்களை ஊடுருவுகிறது. பிரிகேடியர் பால்ராஜ் அவர்களது இழப்பை ஏற்றுக்கொள்ள மனங்கள் மறுக்கின்றன. விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவ்வாறான இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை என்பதும், காலம் இடைவெளிகளை நிரப்பும் எனபதும் யதார்த்தமே.ஆனாலும், எங்கள் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இழப்பு எங்கள் மனங்களில் ஏற்படுத்தியுள்ள துயரமும், வெறுமையும் காலத்தால் அழிக்க முடியாத ஒன்றாகி விட்டது.
– வேனில்
பிரிகேடியர் பால்ராஜ் விம்பகம்
ஒருவகையில்இருளின் காலமே நமக்கு நம்பிக்கையாகவும் ஆயிற்று. நக்கீரன் வாசகர்கள்அத்தகு நம்பிக்கையின் குறியீடாக மாறியதையும் வரலாற்றிற்காய் இங்கு பதிவுசெய்ய விழைகிறேன்.
ஈரோட்டிலிருந்துஒரு தாய். நேரில் பார்த்ததில்லை. தொலை பேசினார். நக்கீரன் வாசகர்,””ஈழத்து அகதி, அனாதைக் குழந்தை கள் 20 பேரைத் தாருங்கள், எல்லாம் நான்பொறுப்பேற்கிறேன். மருத்துவம், பொறியியல், வர்த்தக மேலாண்மை… எந்தப்படிப்பென் றாலும் நான் படிக்க வைக்கிறேன்” என்றார். இந்த உரையாடல்நிகழ்ந்தது மே மாத இறுதியில். மீண்டும் தளபதி பால்ராஜ் அவர்களைப்படித்துவிட்டுப் பேசினார்.
இருவாரங்களுக்கு முன். திருச்சியிலிருந்து வந்திறங்கி விமான நிலையத்தை விட்டுவெளியே வந்து கொண்டிருந்தேன். மஞ்சள் மீட்டரும் கறுப்பு நிறமுமான வாடகைவாகன ஓட்டுநர் ஒருவர் வாகனத்தை விட்டிறங்கி ஓடோடி வந்து வணக்கம் சொன்னார்.””தலைவர் இருக்கிறாரில்லெ சார்…?” என்று படபடப்புடன் கேட்டார். நான்பதில் ஏதும் கூறாது நின்றேன். “”சார்… என்னாலெ வாகனம் ஓட்ட முடியும்,வாரம் ஒருநாள் தர முடியும், மாதம் செலவுகள் போக 300 முதல் 500 வரை மிச்சம்பிடித்து தர முடியும்” என்றார். உலகினர் கண்களுக்கு ஏழையாகவும் உணர்வில்மிக்க செல்வம் உடையவராகவும் என் முன் நின்ற இந்த மனிதரின் பெயரைக்கேட்குமுன்னரே காவலர் விசில் அடித்ததால் வாகனத்தை எடுக்க ஓடிவிட்டார்.
நெல்லையிலிருந்தும்ஒரு தாய். ஹோமியோபதி மருத்துவர். “”சோனியாகாந்தியும் ஒரு தாய்தானே. 100பெண்கள் நாங்கள் புதுடில்லி வரை நடந்தே போய் அவரது பாதங்களில் விழுகிறோம்.தண்டித்தது போதும், தாயாகிய நீங்கள் எம் தமிழ் உறவுகளை இனஅழித்தலிலிருந்து காப்பாற்றுங்கள் என மன்றாடுவோம்” என்றார்.
நல்லசிவன்என்ற உணர்வாளர் நெய்வேலி புத்தக விழாவில் நக்கீரன் வெளியிட்ட “வீரம்விளைந்த ஈழம்’ படித்துவிட்டுப் பேசினார். நிறைய படிக்கிறவர், தெளிவானபார்வை களும், உறுதியான நிலைப்பாடு களும் உடையவரென்பதும் தெரிந்தது. “”100புத்தகங்கள் வாங்கி அரசுக் கல்லூரிகளின் தமிழ்த் துறைகளுக்கு அனுப்பிவையுங்கள். அச்செலவினை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றார்.
“வீரம்விளைந்த ஈழம்’ படித்துவிட்டு சராசரி தினம் பத்து பேராவது கடிதம் எழுதுகின்றனர். எல்லா கடிதங்களிலும் இரண்டு விஷயங்கள் இழையோடி நிற்கின்றன. ஏழுகோடி தமிழர்கள் நாம் கையாலாகாதவர்களாய் இருந்துவிட்டோமே என்ற குற்றஉணர்வும், ஏதேனும் செய்ய வேண்டுமென்ற அங்கலாய்ப்பும்.
சென்னையிலுள்ளஸ்ரீலங்காவின் தூதரக அதிகாரிகளும் கூட மிகுந்த உணர்வுக் கொந்தளிப்பிலும்அங்கலாய்ப்பிலும் இருப்பதாக பத்திரிகைத்துறை நண்பர் ஒருவர் கவலையுடன்கூறினார். “”சற்றேறக்குறைய இங்கு எல்லோரையும் சரிக்கட்டி விட்டோம்,நக்கீரனையும் இந்த ஜெகத் கஸ்பரையும் மட்டும் வழிக்குக் கொண்டுவரமுடியவில்லை”யென்ற கோபமாம். “”குறிவைத்து அடித்தால்தான் சரிப்பட்டுவருவார்கள்” என்று சிலுப்பியதாகவும் சொன்னார்.
அவர்களதுவெற்றிப் பிரகடனம் உண்மைதான். சற்றேறக்குறைய இங்கு முக்கியமான பலரையும்அவர்கள் சரிக் கட்டி விட்டார்கள்தான். கடந்த பொங்கல் விழா காலத்தில் லிமெரிடியன் ஐந்து நட்சத்திர விடுதியில் பத்திரிகை துறை யினருக்காய்ஸ்ரீலங்கா தூதரகம் உல்லாச விருந்து வைத்ததும், 24 பேருக்கு தலா ஐந்துசவரன் தங்கச் சங்கிலி வழங்கியதும், தொடர்ந்து மூன்று நாளிதழ்களுக்கு தலாமுப்பது “லேப்-டாப்’ கம்ப்யூட்டர்கள் அன்பளிப்பாக அனுப்பியதும்,தமிழுணர்வின் பாரம்பரியம் கொண்ட ஒரே ஒரு நாளிதழ் மட்டும்அக்கம்ப்யூட்டர்களை ஸ்ரீலங்கா தூதரகத்திற்கே திருப்பி அனுப்பியதும்…இன்னும் யார் யாருக்கு என்னென்ன “சப்ளை அண்ட் சர்வீஸ்’ நடந்ததென்பதும்நமக்குத் தெரியும். இவையும் தெரியும். இதற்கு மேலும் தெரியும்.
“மன்னவனும்,நீயோ, வளநாடும் உனதோ?’ என்று மதர்த்த கம்பனும், “நெற்றிக்கண் திறப்பினும்குற்றம் குற்றமே’ என நிமிர்ந்து நின்ற நக்கீரனும், “தேரா மன்னா செப்புவதுஉடையேன்’
என்று உண்மை முழங்கி காற்சிலம்பை வீசிய கண்ணகியும், “நாம்ஆர்க்கும் குடி அல்லோம்’ என்று முழங்கிய நாயன்மார்களும் பெருமையுடன்உலவித் திரிந்த இப்புனித பூமியில் இன அழித்தலுக்குத் துணை நின்று கூலிபெறும் கூட்டமொன்று வாழ்வது காண நெஞ்சு பொறுக்குதில்லை தான்.
அங்குதுடித்துச் சிதறிய தமிழ் உயிர்களின் மரணப் பழியில் இவர்களுக்கும்தூரத்துப் பங்கு உண்டுதான். துரோகிகள், இழிநிலையோர் ஆனாலும் அவர்கள்இந்நிலத்தவர்கள்- நம் தமிழகத்தவர்கள்.
ஆனால்கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்ரீலங்கா தூதரகம் தனது எல்லைகளை நம் நிலத்தில்தங்கு தடையின்றி மீறி வருவது மட்டுமல்ல -“இங்கு எதுவும் செய்யலாம், எவரும்கேட்கமாட்டார்கள்’ என்ற ஆணவத் திமிரோடு தங்களை நடத்திக் கொண்டு வருகிறது.
நாடுகளுக்கிடையேயானஉறவு ஒழுங்குகளின்படி அவர்கள் இந்திய அரசின் விருந்தினர்களாக இருக்கலாம்.ஆனால் தமிழர்களாகிய நம்மைப் பொறுத்தவரை இன அழித்தல் செய்த ஒரு கொலைகாரக்கும்பலின் பிரதிநிதிகள். இன்னும் 3 லட்சம் தமிழ் மக்களை திறந்த வெளிச்சிறையில் அடைத்து அணு அணுவாகக் கொன்றுவிடும் இரக்கமற்ற ஓர் கூட்டத்தின்ஊதுகுழல்கள். சாமிகளும், ஞானிகளும், ராமர்களும் அவர்களது பந்தியில்அமர்ந்து களிக்கட்டும். தமிழர் களது அழிவில் எப்போதும் களிப்பவர் கள்தான்அவர்கள். ஆனால் மானமுள்ள தமிழர்கள் நிறையபேர் இங்கு மிச்சம்இருக்கிறார்கள் என்பதை மட்டும் அவர்கள் நினைவில் கொள்ளட்டும்.
தி.மு.க.,அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க., ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., சிறுத்தைகள், ச.ம.க., புதிய தமிழகம் என எல்லா கட்சிகளினது தொண்டர்களுமே துன்புறும் ஈழத் தமிழனுக்காய் இதயத்தில் இரத்தம் சிந்தும்ஈரத்தமிழர் களாகவே இருக்கிறார்கள்.
கடந்த புதன் கிழமையன்றுவணக்கத்திற்குரிய மேயர் அவர்களை சந்திக்க மாநகராட்சி அலு வலகம்சென்றிருந்தேன். அமர்வு அரங்கில் கூடிநின்றோர் பலர் தி.மு.க.வின் கட்சிப்பொறுப்புகளில் இருப்பவர்கள். எல்லோரும் நக்கீரன் படிப்பதாகக் கூறினார்கள்.தமது உணர்வுகளை வெளிப்படுத்திய பாங்கு உண்மையிலேயே நெகிழ்ச்சி தந்தது.இப்போதைய போப்பாண்டவருக்கு முன்பிருந்த இரண்டாம் ஜான்பால் ஒரு முறைகுறிப்பிட்டார், “”மனித இதயங்கள் தரையில்லாத பாதாளங்கள் போல. எழுச் சிக்குமுறல்கள் எரிமலையாய் எப்போது வெடிக்குமென எவருக்கும் தெரியாது” என்று.
மதுரையில்கடந்த சனிக்கிழமை நாம் தமிழர் இயக்க கூட்டம் நடந்தது. “முட்கம்பிகளுக்குள்உயிர்வாடும் மூன்று லட்சம் தமிழர்களை விடுதலை செய்’ என்று இயக்குநர்சீமான் முழங்கினார். இருபதாயிரத்திற்கும் மேலான இளைஞர்கள் உணர்வுப்பிழம்பாய் திரண்டிருந்தார்கள்.
கரம்பற்றும் நக்கீரன் வாசகர்கள் எல்லோரும் கேட்பது இரண்டு விஷயங்கள். முதலாவதுதலைவரைப் பற்றியது. இரண்டாவது “”ஈழம் இனி சாத்தியமா?” என்ற கேள்வி. நான்சொல்வது -இன்றில்லா விட்டாலும் என்றேனும் ஒருநாள் நிச்சயம் ஈழம் மலரும்.ஆனால் அதற்கு சில விஷயங்கள் நடந்தாக வேண்டும். அதில் முதலாவது இந்தியாவின்வெளியுறவுக் கொள்கையும், பாதுகாப்புக் கொள்கையும் மாறவேண்டும். அதுநடந்துவிட்டதென்றால் உலக அளவில் ஈழத்திற்கு ஆதரவான கருத்துருவாக்கம் வேகம்பெறும். வேலுப்பிள்ளை பிரபாகரன் இதனைத் தெளிவாக அறிந்திருந்தார். எனதுநேர்காண லின் நிறைவாக அவர் குறிப்பிட்டவை என்றும் மறக்க முடியாதவை:””இந்தியா வேகமாக வளர்ந்துவரும் ஒரு பிராந்திய வல்லரசென்ப தும்,இந்தியாவைக் கடந்து இப்பகுதியில் உலக ஒழுங்கு பெரிதாக மாறுபட்டு இயங்காதென்பதும் எமக்குத் தெரியும். இந்திய அமைதிப்படையின் வருகையும் தொடர்ந்தபல துன்பியல் நிகழ்வுகளும் எமது உறவுகளில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டதோடு, எமது இறுதி இலக்கான ஈழம் அமைவதற்கும் சவாலாக நிற்கிறது.இந்நிலையை மாற்ற நேர்மையோடும் உளப்பூர்வமாகவும் விடுதலைப்புலிகள் இயக்கம்தொடர்ந்து முயற்சித்து வருகிறது” என்றார்.
ஆம்,இந்தியாவின் நிலைப்பாடு முதலில் மாறவேண்டும். எப்படி மாறும்? இதுவிஷயத்தில் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு கருத்தில் இணைவதுஅதற்கான முதற்படி. குறைந்தபட்ச கோரிக்கை யாக 3 லட்சம் மக்களும் உடனடியாகவிடுவிக்கப்பட்டு தங்கள் வாழ் விடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். நிலஉரிமை -கல்வி உரிமை -பண்பாட்டு, மொழி உரிமை -சட்ட -ஒழுங்கு உரிமைஆகியவற்றை உறுதி செய்யும் கூட்டாட்சி அரசியல் சட்ட ஏற்பாடுஆகியவற்றையேனும் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துநடுவணரசுக்கு முன்வைக்கவேண்டும். இத்துணை பேரழிவு நடந்துவிட்ட பின்னரும்ஒருவரையொருவர் இழித்தும் பழித்தும் அரசியல் நடத்தாமல் இணைந்து கோரிக்கைவைத்தால் நடுவணரசு கேட்கும், கேட்டுத்தான் ஆகவேண்டும்.
இரண்டுவாரங்களுக்கு முன் ஞானி என்ற நாடகப் பேர்வழி வாரப்பத்திரிகையொன்றில்””இந்தவார மர்மம்” என தலைப்பிட்டு “”விடுதலைப்புலிகளுக்கும்பிரபாகரனுக்கும் தீவிர கொள்கை பிரச்சாரச் செயலாளராக செயல்படும் பாதிரிகெஜத்கஸ்பரும், புலி எதிர்ப்பை கொள்கை யாகக் கொண்ட மத்திய ஆளுங்கட்சியானகாங்கிரஸ் பிரமுகர் கார்த்திசிதம்பரமும் கஸ்பரின் தமிழ் மையத்தின்நிதிவசூல் நெடும் ஓட்டத்தில் இணைந்து செயல்படுவதன் மர்மம் என்ன?” என்றுகேட்டிருந்தார்.
முற்போக்குமுகம் தரித்து மிக நீண்ட காலம் தமிழர்களை மோசடி செய்த இவருக்கு நான் பதில்சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் கார்த்தி சிதம்பரம் எனக்கு நண்பர் தான்,அவரது தந்தை எனது மதிப்பிற் குரியவர்தான்.
அக்கட்சியின்ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் போன்றோரும் என் மிகுந்தமதிப்பிற்குரியவர்கள்தான். ஒளிந்து மறைப்பதும் நுட்பமாக இயங்குவதும்மோசடிக்காரர்களின் வேலை. நாம் அதைச் செய்யவேண்டிய தில்லை. நமக்கு இன்றுதேவை எல்லோரது நட்பும், ஞானியைப்போன்ற சூத்திரதாரிகளின் கூடாநட்பைதவிர்த்து அத்தனைக் கட்சித் தலைவர்களும் ஈழத்தமிழருக்காய் இணையும் நாள்விரைவாக வர உழைப்பது நம் யாவரதும் கடமை.
ஈழம் மலர வேறென்ன விஷயங்கள் நடக்க வேண்டும்?
(நினைவுகள் சுழலும்)
சம்பவம் நடந்த காலப்பகுதியைப் பற்றிய சுருக்கமான விவரிப்பு:
இது 1998 ஆம் ஆண்டின் தொடக்கப்பகுதி. வன்னியில் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை அமர்க்களமாக நடந்துகொண்டிருந்தது. தொடக்கத்திலேயே எதிரி நெடுங்கேணியைக் கைப்பற்றியிருந்தான். பின் கண்டிவீதி வழியாக நகர்ந்து புளியங்குளத்தைத் தாண்ட முடியாமல் திணறியதால் கண்டிவீதிக்குக் கிழக்குப்புறமாக காடுகளால் முன்னகர்ந்து மாங்குளம் – ஒட்டுசுட்டான் சாலையில் கரிப்பட்டமுறிப்பைக் கைப்பற்றியிருந்தான்.
அதன்பின் சண்டையின்றியே புளியங்குளம், பிறகு கனகராயன் குளம் என்பவற்றைக் கைப்பற்றியநிலையில், மாங்குளத்துக்காகச் சண்டைபிடித்துக் கொண்டிருந்தான். கண்டிவீதி வழியான நகர்வுகள் சரிவராத நிலையில் அவன் மாங்குளத்தைக் கைப்பற்ற கரிப்பட்டமுறிப்பிலிருந்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமிருந்தான்.
மாங்குளம் – ஒட்டுசுட்டான் சாலையில் தனது கட்டுப்பாட்டுப்பகுதியை அதிகரிப்பதற்காக எதிரி கடுமையாகச் சண்டையிட்டான். அதனால் ஒலுமடுப்பகுதியைக் கைப்பற்ற சில எத்தனங்களை சிறிலங்கா அரசபடை செய்தது.
சண்டையென்றால் இறுதிப்போரில் நடந்தது போலில்லை. அப்போதெல்லாம் ஒரு முன்னேற்ற முயற்சி தோல்வியடைந்தால், இராணுவம் போதிய அவகாசமெடுத்துத்தான் அடுத்த முன்னேற்ற முயற்சியைச் செய்யும். அது சிலவேளை ஒருமாதமளவு இடைவெளியாகக்கூட இருக்கும்.
ஜெயசிக்குறு தொடங்கிய சில காலத்திலேயே புலிகள் முறியடிப்புச் சமரில் தேர்ந்தவர்களாகி விட்டார்கள். கனரகப் பீரங்கிகளை ஒருங்கிணைத்து எதிரிக்கு உச்ச இழப்பைக் கொடுப்பதில் புலிகள் வல்லவராய் மாறியிருந்தனர்.
முன்னரண் பகுதியொன்றை உடைத்துக்கொண்டு எதிரி உள்நுழைந்துவிட்டால் புலிகளின் முறியடிப்பு அணிகள் பீரங்கிச் சூட்டாதரவுடன் இழந்த காவலரண்களை ஒவ்வொன்றாகக் கைப்பற்றி மீள இணைப்பை ஏற்படுத்துவதும், பின்னர் உள்நுழைந்திருக்கும் எதிரியணிமீது எறிகணைத் தாக்குதலைச் செய்வதும், தப்பியோடும் இராணுவத்தினரைத் தாக்கியழிப்பதும் அடிப்படைத் தந்திரமாக இருந்தது.
புலிகளின் அதிகரித்த பீரங்கிப் பயன்பாடும் துல்லியமான எறிகணைத் தாக்குதலும் எதிரிக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தியது. முறியடிப்புத் தாக்குதலில் புலிகளின் ஆளிழப்பு வெகுவாகக் குறைந்திருந்தது.
இந்தக் காலகட்டத்தில் சிறிலங்கா இராணுவம் ஒலுமடுவை நோக்கி ஏற்கனவே இரண்டு, மூன்று நகர்வுகளைச் செய்து அவை தோல்வியில் முடிவடைந்திருந்தன. மீண்டும் பெருமெடுப்பில் ஒரு நகர்வைச் செய்ய இராணுவத் தலைமை தீர்மானித்தது.
1998 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் நாள். அன்று அதிகாலை ஐந்து மணியளவில் ஒலுமடுவைக் கைப்பற்றவென இராணுவம் முன்னேறியது. வழமைபோல் சில காப்பரண்களை உடைத்துக்கொண்டு இராணுவம் முன்னேறியது. புலிகள் மீளவும் காப்பரண்களைக் கைப்பற்றி உள்நுழைந்த எதிரியின் தொடர்பைத் துண்டிக்க முற்பட்டனர். அதேநேரம் உள்நுழைந்த படையினர் மீது எறிகணைகளைப் பொழிந்தனர்.
இம்முறை எதிரி அதிகநேரம் முரண்டுபிடிக்கவில்லை. இழக்கப்பட்ட காவலரண்களைப் புலிகளின் முறியடிப்பு அணிகள் முழுமையாக கைப்பற்றி திரும்பிச் செல்ல பாதையில்லாத நிலை வருமுன்பே தன் அணிகளைப் பின்வாங்கத் தொடங்கியது படைத்தரப்பு.
புலிகளின் முறியடிப்பு அணிகளுக்குப் பலத்த எதிர்ப்பைக் கொடுத்து பின்வாங்குவதற்கான பாதையைத் தக்கவைத்துக் கொண்டது இராணுவம். காயப்பட்டவர்களைத் தூக்கிக்கொண்டு சிறிலங்காப் படையினர் தமது நிலைகளுக்குத் திரும்பினர். சண்டை முடிந்தபோது படைத்தரப்பில் 50 பேர் கொல்லப்பட்டிருந்தனர், 300 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். விடுதலைப் புலிகள் தரப்பில் ஆறுபேர் வீரச்சாவடைந்திருந்தனர்.
வீரச்சாவடைந்த ஆறுபேரில் ஒருவனை எனக்குத் தெரியும். அவன் பெயர் மேகநாதன்.
மேகநாதன் சிறுத்தைப் படையணியில் இருந்தான். 1997 இன் தொடக்கத்தில் – தைமாதம் ஒன்பதாம் திகதி ஆனையிறவு மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து – சிறுத்தைப் படையணியின் நூறு பேர் கொண்ட ஓரணி கொஞ்சக்காலம் எங்களோடு நின்றது. அதில் மிகப்பெரும்பான்மையானோர் புதிய போராளிகள். அப்போதுதான் அவனைத் தெரியும். சிறிதுகாலம் எங்களோடு இணைந்து பணியாற்றியபின் மீளவும் அவன் சிறுத்தைப் படையணியிலேயே இயங்கினான். ஒலுமடுவில் மறிப்புச்சமர் செய்துகொண்டிருந்த சண்டையணிகளுள் மேகநாதன் இருந்த அணியும் இருந்தது.
நாங்கள் அப்போது கற்சிலைமடுவில் இருந்தோம். கற்சிலைமடுவென்பது ஒட்டுசுட்டான் – புதுக்குடியிருப்புச் சாலையில் அமைந்திருக்கும் ஓரிடம். அச்சாலையில் ஒட்டுசுட்டானுக்கு அடுத்துவரும் மக்கள் குடியிருப்பு கற்சிலைமடு தான். வன்னியின் மன்னன் பண்டார வன்னியனோடு தொடர்புபட்டு இவ்விடம் கொஞ்சம் பிரபலம்.
அன்று காலையே செய்திகள் வரத் தொடங்கிவிட்டன. இரண்டு தாக்குதல்கள் பற்றிய செய்திகள் வந்தன. ஒலுமடுவில் முன்னேறிய இராணுவம் மீதான முறியடிப்புத் தாக்குதல் ஒரு செய்தி. பருத்தித்துறையில் சிறிலங்காக் கடற்படையினரின் இரு கலங்கள் மீதான தாக்குதல் இன்னொரு செய்தி.
22/02/1998 அதிகாலை இரண்டு மணியளவில் பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து ‘பபதா’, ‘வலம்புரி’ ஆகிய தரையிறக்குக் கலங்கள் மீது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவ்விரு கலங்களும் மூழ்கடிக்கப்பட்டன. ‘பபதா’ கடற்கலம் மீது ஏற்கனவே ஒருமுறை வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு அது சேதமாக்கப்பட்டிருந்தது. பிறகு அது திருத்தப்பட்டுப் பயன்பாட்டில் இருந்தது.
போராளிகளைப் பொறுத்தவரை மிகப்பெரும்பான்மையான தாக்குதல்கள் துக்கமும் மகிழ்ச்சியும் நிரம்பியவை. எதிரியின் இழப்பும் களத்து வெற்றியும் மகிழ்ச்சியென்றால் அதையடைய எமது தரப்பில் ஏற்பட்ட இழப்பு துக்கம் நிறைந்தது. இது போராளிகளுக்கு மட்டுமன்றி போராளிகளைச் சார்ந்த மக்களுக்கும் பொதுவானது.
அன்றைய நாளில் ஒலுமடுச் சண்டையில் மேகநாதன் வீரச்சாவென்ற செய்தி எமக்குக் கிடைத்துவிட்டது. கற்சிலைமடுவை அண்டியே சிறுத்தைப் படையணியின் நிர்வாகம் செயற்பட்டு வந்ததும், நாம் அவர்களோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்ததும் எமக்கு உடனடியாகவே விவரங்கள் கிடைக்க உதவின.
மேகநாதனின் குடும்பம் தற்போது இருப்பது ‘கெருடமடு’ என்ற தகவலும் கிடைத்தது. நானும் இன்னுமிரு போராளிகளும் அன்று பற்பகல் மேகநாதனின் வீட்டுக்குப் போனோம்.
கெருடமடு என்ற இடம்
கற்சிலைமடுவுக்கும் புதுக்குடியிருப்புக்கும் இடையிலுள்ள ஓரிடம். இராமாயணக் கருடனோடு தொடர்புபட்டு ஏதோவொரு கதையுண்டு அவ்விடத்துக்கு. பிரபலமான கோயிலொன்றும் உண்டு. ஒட்டுசுட்டான் – புதுக்குடியிருப்புச் சாலையைப் பேராறு குறுக்கறுத்துப் பாய்வது கெருடமடுவில்தான். ‘பேராற்றுப் பாலம்’ என அழைக்கப்படும் பெரிய பாலமொன்றுண்டு (வன்னியில் இதுமட்டும் தான் பேராற்றுப் பாலமன்று).
பேராற்றுப் பாலத்துக்கு அருகில் ஒட்டுசுட்டான் பக்கமாக இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் குடியிருப்பொன்று அப்போது இருந்தது. கிடுகால் வேயப்பட்ட சிறுகுடிசைகள் வரிசையாக இருக்கும். இங்கிருப்பவர்கள் ஜெயசிக்குறு தொடங்கப்பட்டபின் இடம்பெயர்ந்த மக்கள். இவர்களில் யாருக்கும் இது முதலாவது இடப்பெயர்வன்று. சிலருக்கு இது பத்தாவதாகக் கூட இருக்கலாம்.
இங்கிருப்பவர்களில் பலர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். ஓரிடத்தில் ஓராண்டு கூட வசிக்காமல் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்த பல குடும்பங்களை எனக்குத் தெரியும். இங்கிருக்கும் ஒரு குடிசையொன்றில்தான் மேகநாதனின் குடும்பமும் வசித்து வந்தது. நுட்ப ரீதியில் இதை வீடென்று சொல்ல முடியாதுதான். ஆனால் வசிப்பவர்களுக்கு அது வீடுதான்.
மேநாதனின் வீட்டை நெருங்குகிறோம். நிறையப்பேர் வெளியே இருந்தனர். பந்தல் ஒன்று போடும் முயற்சியில் பலர் ஈடுபட்டிருந்தனர். இப்போது வித்துடல்* வந்திருக்காது. அனேகமாக இரவு வந்து சேரும்.
வீட்டை நெருங்குகையில் கடற்புலிப் போராளிகள் சிலரை அடையாளங் கண்டேன். அவர்களுள் எனக்கு மிக நெருக்கமான பழக்கமுள்ளவர்கள் இருவர் இருந்தனர். ஒருவன் எங்களோடு இருந்து பின்னர் கடற்புலியாகச் சென்றவன். அவர்கள் அங்கிருந்தது எனக்கு அசாதாரணமாகப் பட்டது. பக்கத்து வீடுகளில் ஏதாவது வீரச்சாவோ எனப் பார்க்கிறேன்.
மேகநாதனுக்குக் கடற்புலித் தொடர்பு இருக்கவில்லை. சிலவேளை அவனின் சகோதரர் அல்லது நெருங்கிய உறவினர் யாராவது கடற்புலியாக இருக்கலாம், அவரோடு இவர்களும் வந்திருக்கலாமென்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.
என்னைக் கண்டதும் அவ்விரு கடற்புலிப் போராளிகளும் என்னிடம் வந்தனர். நானே உரையாடலைத் தொடங்கினேன்.
‘என்னடாப்பா, கண்டு கனகாலம். எப்பிடியிருக்கிறியள்? என்ன இஞ்சால் பக்கம்?’
‘நாங்கள் நல்லாயிருக்கிறம். இஞ்சயொரு வீரச்சாவு. அதுதான் வந்தனாங்கள்’.
‘ஓ… நானும் மேகநாதன்ர வீரச்சாவுக்குத்தான் வந்தனான். முந்தி கொஞ்சக்காலம் எங்களோட நிண்டவர். அவரின்ர சொந்தக்காரர் ஆரும் உங்களோட இருக்கினமோ?’
‘இல்லை, நாங்கள் வந்தது வள்ளுவன்ர வீரச்சாவுக்கு. இஞ்ச வந்தப்பிறகுதான் இப்பிடியெண்டு தெரியும்.’
எனக்கு ‘எப்படி’யென்று இன்னும் விளங்கவில்லை. எனது முகத்தைப் பார்த்ததுமே அவர்களுக்கு விளங்கிவிட்டது எனது சிக்கல்.
‘பருத்துறையில விடிய நடந்த சண்டையில வீரச்சாவடைஞ்ச கரும்புலிகளில ஒருத்தன் வள்ளுவன். இஞ்ச வந்தப்பிறகுதான் எங்களுக்குத் தெரியும் தம்பியார் விடிய ஒலுமடுவில வீரச்சாவு எண்டு.’
எனக்குத் தலைசுற்றியது. ‘கூடப் பிறந்த தமையன் தம்பியோ?’
‘ஓம். வள்ளுவன் மூத்த தமையன்.’
இப்படி நடப்பது இதுதான் முதல்முறையோ தெரியவில்லை. ஒரேவீட்டில் இரண்டுபேர், மூன்றுபேர் என்று மாவீரர்கள்* ஆகியிருக்கிறார்கள். ஆனால் ஒரேநாளில் நடந்திருக்கிறதா தெரியவில்லை.
ஒரு வீட்டில் பலர் போராளிகளாயிருப்பதொன்றும் புதிதன்று. ஒருவர் களத்தில் நின்றால் மற்றவர்களைக் களங்களிலிருந்து அப்புறப்படுத்தி பின்தள நிர்வாகங்களில் வைத்திருப்பதுதான் அப்போதைய இயக்க நடைமுறை. ஆனால் இது சற்று வித்தியாசமானது. மேகநாதன் சண்டைக்களத்தில் நின்றிருக்கிறான். ஆனால் தமையன் கடற்கரும்புலி. கடற்கரும்புலியென்றால் களத்தில் நிற்பதாகக் கருதுவதில்லை. பலர் கரும்புலியணியில் இணைந்தபின் பல வருடங்கள்கூட காத்திருந்துள்ளார்கள் தங்கள் இலக்குக்காக.
இது தற்செயலாக நடந்துவிட்ட ஒன்று. அதிகாலை இரண்டுமணிக்கு தமையன் கரும்புலித் தாக்குதல் நடத்தி வீரச்சாவடைய அன்றைய நாளே ஒலுமடுவில் முன்னேறிய படையினருக்கு எதிரான மோதலில் தம்பி வீரச்சாவடைந்து விட்டான்.
அழுகைச் சத்தங்கள் ஏதும் பெரிதாகக் கேட்கவில்லை. அழுது ஓய்ந்துவிட்டதா தெரியவில்லை. இன்றிரவு மேகநாதனின் வித்துடல் கொண்டுவரப்படும்போது நிறையப் பேர் கதறியழுவார்கள். பந்தல் போடப்பட்டுக் கொண்டிருக்குமிடத்தில் குந்தியிருந்த ஒருவரைக் காட்டி அவதான் தாயார் என்றார்கள்.
எட்டத்திலிருந்தே பார்த்தேன். நான் பார்க்கும் போது அவ அழுதுகொண்டிருக்கவில்லை. ஏற்கனவே அழுது ஓய்ந்திருப்பாவோ தெரியவில்லை. ஏதோ யோசித்துக் கொண்டிருப்பது போற்பட்டது.
எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பா?
எவனுக்காக அழுவது என்றா, எவனைப் பற்றி முதலிற் சொல்லி அழுவது என்றா?
===============================
22/02/1998 பருத்தித்துறையில் கடற்கலங்களை மூழ்கடித்த தாக்குதலில் கடற்கரும்புலி மேஜர் வள்ளுவனோடு
கடற்கரும்புலி லெப்.கேணல் கரன்
கடற்கரும்புலி மேஜர் சுலோஜன்
கடற்கரும்புலி மேஜர் தமிழினியன்
கடற்கரும்புலி மேஜர் குமரேஸ்
கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை
கடற்கரும்புலி கப்டன் தமிழன்பன்
கடற்கரும்புலி கப்டன் மேகலா
கடற்கரும்புலி கப்டன் நங்கை
கடற்கரும்புலி கப்டன் வனிதா
கடற்கரும்புலி கப்டன் ஜனார்த்தினி
ஆகிய பதினொரு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். அனைவருக்கும் எமது வீரவணக்கம்.
அன்பு தலைவா
உன் வீரமும், தியாகமும் இந்த உலகில் தமிழ் சமுதாயம் உள்ளவரை உன்னை மறக்காது எந்த தலைவரும் செய்யாத தியாகம் இது, எப்பேர்பட்ட தியாகம் ஏன் கண்கள் குளமாகியது
வளையாபதி பெசன்ட்
POST THIS COMMENT PLS. AS I KNOW BOTH OF THEM.
Rev,
Guess you are exaggerating a bit. Charles didnt know flying. Neither Duwaraga went abroad for studies.
Both did A/Ls to proof that they are tigers kids are not dumb and Charles got Engineering entrance. Duwaraga got 3 Cs. Then Charles joined his dad. Lately, Duwaraga was with her brother.
However,
its TRUE… துவாரகா அமைதியான பிள்ளை. தெய்வீக ரோஜாபோல் எப்போதும் கள்ளமில்லா வெள்ளை முகம். “எனது தேவதை இந்தப் பிள்ளை’ என கடவுளே கனிந்துருகக்கூடிய அன்புள்ளம் கொண்ட அருட்கொழுந்து துவாரகா என்கிறார்கள். She is the best friend I got. She is alive still. My heart says. Also thalaivar is also alive. I know my heart. Anna is dead but 😦 I cant take it. And please lying about them.
//உண்மையில் சார்லஸ் சண்டைக் களத்திற்குரிய பிள் ளையே அல்ல அது ஒரு சாக்லெட் குழந்தை என்றே அவரைப்பற்றி நான் உரையாடிய அத்தனை தளபதிகளும் கூறினர். //
He seemed like a chocolate baby. He is a cute pie. But, very few of us know his true colours. He is just like dad. Very brave and dedicated. Very strong in heart.
//தலைவரின் முதல்மகன் என்பதால் தளபதிமார் அத்தனை பேருக்கும் சார்லஸ் செல்லம். //
Thats true
//தலைவர் முகாமில் இருக் கிறவரை பயிற்சிகளில் ஈடுபடுத்திவிட்டு தலைவர் வாகனத்தில் ஏறியதுமே “நீ போய் படுத்துக்கோ தம்பி’ என்று அனுப்பிவைக்கும் தளபதிமார் தான் சார்லசுக்கு அதிகம். //
NO… He does not go to sleep. He even stay up late nights for centries (Kaval Kadamai at the entrance of the base). He is very stubborn and he wanted every one to treat him like a normal person. He hates when people try to treat him differently. Its unfair to kill him.
//எவரையும் காயப்படுத்தாத, எவரிடமும் ஆணவமோ அதிகாரமோ காட்டாத, எல்லோரிடத்தும் “அப்பா, மாமா, அண்ணே… என்று குழைந்து திரியும் குழந்தை என்றே நான் பேசிய அத்தனைபேரும் சார்லஸை கொண்டாடினார்கள்.//
Yes thats true. Anna is like that only. I miss him. I want anna to wake up and call me. waiting for it
Rev is exaggerating a bit. Thats true. I agree with angelsanna5