மட்டக்களப்பு ஆயித்தியமலைப் பிரதேசத்வீரச்சாவைத் தழுவிய எமது வீர மறவர்களுக்கு வீரவணக்கங்கள்தில் விடுதலைப் புலிகள் போராளிகளுக்கும், சிறிலங்கா படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 5 போராளிகள் வீரச்சாவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முன்னரே சுற்றிவளைத்து பதுங்கியிருந்த படையினருக்கும், புலிகளுக்கும் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மோதலிலேயே 5 போராளிகளும் உயிரிழந்ததாக மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த 5 போராளிகளுக்கும் விடுதலைப்புலிகள் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் சடலங்கள், ஆயுதங்கள் என்பன படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவர்கள் ரோகிதன், கண்ணன், வன்னியன், புலிதரன், பிரியன் ஆகியோர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீரச்சாவைத் தழுவிய எமது வீர மறவர்களுக்கு வீரவணக்கங்கள்
மருத்துவமனை மீதான சிறீலங்கா படையினரது எறிகணைத் தாக்குதலில் சாவைத் தழுவிக்கொண்ட கந்தசாமி தருமகுலசிங்கம், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 7:00 மணியளவில் சிறீலங்கா படையினரால் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தனர்.
இதன்போது மருத்துவமனையின் நிருவாக அலுவலர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
நாட்டுப்பற்றாளர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் இறுதியாக கடந்த 8ஆம் நாள் முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனை பற்றி புலம்பெயர் மக்களுக்கு காணாளி வழியாக தகவல்களை வழங்கியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
09.05.2009 அன்று சிறிலங்கா அரச படைகளின் எறிகணைவீச்சில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஈழத் தமிழர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான கணேஷ் மாமா சாவடைந்துள்ளார். ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் கடந்த சனிக்கிழமை சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில் பலியானார்.
இதன்போது 3000ற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலையானது குறிப்பிடத்தக்கது.
Recent Comments